All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முரண்பாடே காதலாய்

Status
Not open for further replies.

Thoshi

You are more powerful than you know😊❤
முன்னோட்டம் 1

சின்னம்பாளையம் :

எப்போதோ ஒன்றிரண்டு முறை மட்டுமே ஆள்நடமாட்டம் இருக்கும் அந்த பகுதியின் அமைதி , இன்றைய அம்மாவாசை இருளுடன் இணைந்து அவ்விடத்தில் ஒருவித திகில் உணர்வை வியாபித்திருந்தது .
போனால்போனதென்று அத்தெருவின் மூலையில் அரசாங்கம் , ஒரே ஒரு மின்கம்பத்தை நிறுவியிருக்க.... அதுவும் இப்போவோ அப்பவோ நான் உயிர்விட போகிறேன் என சொல்வது போல் விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தது .

வீடுகள் அடுத்தடுத்து இருந்தாலும் ஒவ்வொரு வீடும் மிகப்பெரியதாததில் , ஒரு வீட்டில் நடக்கும் விஷயங்கள், மற்றும் சத்தங்கள் அடுத்த வீட்டிற்கு செல்லாதவாறு இருக்க,
அவ்ஊரையே சுற்றிச்சுற்றி வந்த அவ்வுருவத்தின் கண்கள் வீடுகளின் இத்தகைய அமைப்பை கண்டு நெருப்பாய் தகித்தது .

நெருப்பை கக்கும் கண்களுடன் மரத்தின் அருகில் காத்திருந்தது அவ்வுருவம் . ஆம் , அவ்வுருவத்தின் கண்கள் பக்கத்திலிருந்த வீட்டையும் , இருளில் முழ்கிருந்த தெருவையும் மாற்றிமாற்றி வட்டமிட்டதில் ...எவருக்கோ காத்திருப்பது போல் தான் தோன்றியது .

அவ்வுருவத்தின் உதடுகள் கிழிந்து ரத்தம் கசிந்தவாறு இருக்க, அதில் சிறிது சிறிதாய் புன்னகை மலர்ந்து ஆ ஆ ஆ என ஆக்ரோஷமாய் கத்த .....சரியாய் அந்நொடி அவ்வீட்டின் முன் வந்து நின்றது நீல நிற மாருதி.

அவ்வுருவத்தின் ஆக்ரோஷ கத்தலோ கேட்பவரை நடுங்க செய்வதாய் இருக்க, மாருதியில் வந்தவர்களோ போதையின்பிடியில் இருந்ததில் அச்சத்தம் அவர்களின் செவியை தீண்டாமலே காற்றில் கலந்தது.

காரை வீட்டினுள் சென்று நிறுத்திய இருவரும் கதவை திறந்து உள் செல்ல அவர்களை தொடர்ந்து அந்த உருவமும் அவ்வீட்டினுள் நுழைந்தது .

போதையின் பிடியில் இருந்த இருவரில் ஒருவன் ," மச்சான் இன்னிக்கு ரொம்ப சீக்கிரம் வந்துட்டோமே டா ....போர் அடிக்குமே " என புலம்ப ,

அவனை கண்டு விஷமமாய் நகைத்த மற்றொருவன் , " அப்போ விளையாடலாமாடா " என கேட்டு தனது கைபேசியை அவனிடம் தூக்கி போட்டான் .

அவனின் கைபேசியில் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டு வந்தவனின் கண்கள் ஓரிடத்தில் பளிச்சிட , எட்டிப்பார்த்த மற்றவனும் , "ஹாஹா... உன் ரசனையே தனி மச்சான் " என சிலாகித்து கைபேசியை வாங்கியவன் , ஒரு எண்ணை அதில் அழுத்தி அப்பக்கம் எடுக்க காத்திருந்தான் .

அப்பக்கம் எடுத்ததும் , " ம்ம்ம் நான் தான்... உடனே நான் அனுப்புற அட்ரெஸ்க்கு வா ".

...............

" ஹாஹா ...நான் வரியா , இல்லையானே கேக்கலயே ...நீ வர இல்லனா என்ன ஆகும்னு தெரியும்ல " என அழுத்தி சொல்லியவன் போனை அணைத்துவிட்டான்.

இதைஎல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவ்வுருவத்தின் கண்களின் சிவப்பு நிறம் , ரத்தத்தின் நிறத்துடன் போட்டிபோட்டது .

சிறிது நேரத்தில் அவ்வீட்டை விட்டு வெளிவந்த அவ்வுருவம் , எதிரில் சுற்றும்முற்றும் பார்த்தவாறு வந்தவரை கண்டு சட்டென்று அவர்முன் சென்று நிற்க ......

அவ்விடத்தின் இருளோ... அல்ல மனதில் இருந்த பயமோ... அல்ல இவ்வுருவத்தின் விகார தோற்றமோ எதிரில் வந்தவர் பயத்தில் அலறியவாறு மயங்கிவிழுந்தார் .

அதை வெற்றியின் மிதப்பில் பார்த்துகொண்டிருந்த அவ்வுருவம் சிறிது சிறிதாய் எதிரில் வந்தவரை போல் உருமாறியது .

---------------------------------------------

போதையின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இறந்து கிடந்த வாலிபர்கள் என கொட்டை எழுத்தில் போட்டிருந்த செய்தித்தாளை வாசித்தவன் , அதில் இருந்த இருவரின் புகைப்படத்தை கண்டு கோபத்துடன் அதை கசக்கி எறிந்தான் .

தனது கைபேசியை எடுத்து எவருக்கோ அழைக்க ,அப்பக்கம் எடுக்கப்படாததில் அதுவும் செய்தித்தாளுக்கு துணையாய் அதன் அருகில் சென்று விழுந்தது .



- காதலாகும் ...
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
முன்னோட்டம் 2 :

அது ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் உபயோகத்திலிருந்த அறை .அதனுள் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டே ஒருவித திகிலை பரப்பிகொண்டிருந்தது.
அந்த அறையினுள் நுழைந்த அவளின் மனம் பயத்தில் படபடத்தாலும்,தனக்கு வேண்டியது அங்குதான் உள்ளது என்ற உள்ளுணர்வின் உந்துதலில் கைகளால் துலாவியபடியே அவ்வறையினுள் நுழைந்தாள் .

அவளை வரவேற்பதுபோல் மெல்லியதாய் தழுவிசென்றது எங்கிருந்தோ வந்த லேசான காற்று .

அது ஒரு நீண்ட... அகலம் குறைவான அறை, ஒருபுறம் முழுக்க ஆளுயரக் கண்ணாடிகள் அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருக்க அதன் முன் ஒரு தடுப்புச்சுவர் இருந்தது.

இவை எதுவும் அவ்வறையின் இருட்டில் அவளின் கண்களுக்கு புலப்படாமல் போக, கைகளை அங்கும் இங்கும் துழாவியபடியே சென்றாள்.

தான் தேடி வந்தது தென்படாமல் போக சுவற்றில் ஒவ்வொரு இடமாய் தடவிபார்க்க ஆரம்பித்து அவ்வறையின் பாதிதூரத்திற்கு வந்தபிறகும் அவளின் கண்கள் இருட்டில் பழகாமல் இருக்க உள்ளுக்குள் பயம் அதிகரித்ததால் நெற்றியிலிருந்து வடிந்த வியர்வை காதோரமாய் ஓடிமறைந்தது .

தான் துடைப்பதற்குமுன்பே வியர்வை மறைந்ததில் ஆச்சர்யம் கொண்டு சுற்றும்முற்றும் பார்க்க மிகவும் மெல்லியதாய் மட்டுமே அவ்வறையினுள் காற்று ஆக்கிரமித்திருந்தது .

"இங்க காற்றே இருக்காதுன்னு சொல்லிருந்தாங்களே" என யோசித்தவள் மூளையில் தான் வந்த வழி பளிச்சிட அவ்வழியில் காற்றுவருவதாய் நினைத்துகொண்டாள்.

அவ்வறையினுள் காற்றே நுழையமுடியாது எனும்பொழுது தனக்கு எவ்வாறு வழிகிடைத்தது என்பதை யோசிக்கமறந்துதான் போனது அவளின் மூளை . ஒருவேளை எவரேனும் அதை மறக்கச்செய்தனரோ ??

என்னசெய்வது என அவள் குழம்ப இதற்க்குள் கண்கள் பழகியிருந்ததோ ? சற்றே அவ்வறையை பார்க்க முடிய, எதிரே அவ்வறையின் ஓரம் ஓர் இடம் மட்டும் இன்னும் கும்மிருட்டுக்குள் இருந்தது.

தடதடக்கும் நெஞ்சின் மேல் கை வைத்து மெதுமெதுவாய் அருகில் சென்றாள். அருகே செல்லச்செல்ல, அவ்வறையின் நீளம் அவளை உள்வாங்க, தனியொரு இடத்தில் அதிலும் இருட்டில் இருக்கும் வேளையில் இயல்பாய் மனதை தன்வசம் இழுக்கும் அச்சம் என்னும் கொடிய நோய் அவளையும் மெல்ல மெல்ல தன்னுள் இழுத்துகொண்டது.

அவ்வளவுதான் இன்னும் இரண்டு அடி வைத்தால் போதும் அந்த நீண்ட அறையின் மூலையில் அவள் இருப்பாள் .

நெற்றியில் வழியும் வியர்வையை இம்முறை வேகமாய் கரம் கொண்டு துடைத்தாலும், அருவி நீர் விடாமல் கொட்டிவது போல் வழிந்துகொண்டே இருந்தது .

அம்மூலையின் அருகில் சென்ற பின்னும் எதுவும் தெரியாமல் போக, மெதுவாய் மெதுமெதுவாய் தன் வலது கையை தூக்கினாள் அந்த மூலையில் துலாவ.

அந்த அழகான விரல்களோ காற்றில் படபடக்கும் காகிதமாய் தடதடத்தது. தடதடக்கும் விரல்களை ஒருமுறை இறுக்க மூடியவள் ஆழமூச்செடுத்தாள் .

சற்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் மிக வேகமாய் கையை கொண்டு சுவற்றில் துளாவபோக இத்தனை நேரம் மிக லேசாய் வருடி சென்ற காற்றுகூட விடுப்பு எடுத்துச் சென்றது போல் மூச்சு விட முடியாமல் திணற, அடுத்த நொடி பலமான சத்தத்துடன் காற்று அவளை புயலை போல் மோதி சென்றதில் தடுமாறி கைகளை அச்சுவற்றில் ஊன்ற , அம்மூலை சுவரும் அவளை விழாமல் தாங்கி நின்றது .


அந்த மூலையில் எவரும் இல்லாததை உணர்ந்தவள் திடிரென வீசிய காற்றுக்கு காரணம் என்ன ? என அறிய திரும்பினாள்.

தான் நுழைந்த வழி மிக தொலைவில் தெரிய ,மிக மிக நீண்ட அவ்வறையின் இந்த கடைசி மூலையில் இருப்பவளின் கண்களோ பயத்தில் சிறிதாய் கலங்க அரம்பித்திருந்தது .

ஏதோ ஒரு வேகத்தில் வந்து விட்டாலும் இப்பொழுது மீண்டுமாய் அவ்வறையை கடக்க வேண்டும் என்றெண்ணும் போழுதே இதயம் வெடித்து விடுமோ என்பது போல் வேகம் கூடியது .

இரு கைகளையும் நெஞ்சின் மேல்வைத்து இறுக்கிக்கொண்டவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க , அவளின் கவனம் முழுவதும் முன்னே இருந்ததில் பின்புறம் நடந்ததை உணராமல்போனவள் தன் கைகளில் ஏற்பட்டிருந்த தடயத்தையும் கவனிக்காமல் போனாள்.

அவள் தடுமாறிவிழுந்தநொடி , அக்கும்மிருட்டு அவளை தன்னுள் புதைத்து பின் , அவள் திரும்பிய நொடி குமிருட்டு மறைந்து மற்ற இடங்களை போலவே சாதாரணமாய் மாறியிருந்தது .

அவள் சில அடிகள் எடுத்துவைத்திருக்க ,அவளை தொடர்ந்து அக்கும்மிருட்டும் நகர்ந்து வந்தது.

'ஹாஹாஹாஹாஹா "

பயத்துடன் சென்று கொண்டிருந்தவள் ,திடுமென எழுந்த சத்தத்தில் தூக்கிவாரிப் போட நெஞ்சின் மேல் இருந்த கைகள் நழுவி தட்டென்று எதன் மேலோ மோதியது.

இப்பொழுது அந்த சத்தமும் சட்டென்று நிற்க காற்றும் உடன் நின்றிருந்தது . அச்சத்தம் திடுமென எழுந்ததிலே வந்த பயத்தை விட ,

தான் விழுந்தநொடியே சட்டென்று நின்று அமைதியானதுதான் பயத்தை அதிகமாக்கியது.

தன் கை எதன் மேல் மோதியது என குனிந்து பார்க்க அது அவளின் இடுப்பளவு உயரத்தில் இருக்கும் சுவர் என்பதை உணர்ந்தாள் .
அச்சுவரை பற்றிக் கொண்டு நடப்பது சற்று இலகுவாயிருக்கும் என்ற எண்ணம் தோன்ற அந்த சுவற்றில் ஒரு கையால் பிடித்து தடவிகொண்டே ஒவ்வொரு அடியாய் கடந்தாள்.

அறையை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடக்க, அக்கும்மிருட்டும் அவளை சுற்றி வந்துகொண்டே இருக்க , அவ்வளவு நேரம் வெறுமையாய் இருந்த அச்சுவரில் இன்னும் இரண்டடியில் இவள் கை தழுவ போகும் இடத்தில் மெதுமெதுவாக அந்த பக்கமிருந்து ஒரு கை அச்சுவரை தழுவியது .


அவளின் கை அந்த கையின் அருகில் வந்த நொடி வேகமாய் அதனை இழுத்து தன் கைக்குள் அடக்கியது .

திடுமென ஏதோ இழுத்ததில் பயந்து போனவள் கண்களை திறக்க எதிரில் தெரிந்ததை கண்டவள் "ஆஆஆஆ" என்றலறியவாறு விழ அவளை இழுத்த அக்கரமே அவளை தாங்கிப்பிடித்தது .

கண்களை மூடுமுன் தன்னை உடலில்லாமல் ஒரே ஒரு கரம் மட்டும் தாங்குவதை கண்டவள் மீண்டுமாய் தன் முன் பார்த்ததில் மயக்கமானாள்.

தொடர்ச்சியாய் அடுக்கப்பட்டிருந்த அக்கண்ணாடிகள் அனைத்திலும் விகாராமாய் தெரிந்தது அவ்வுருவம் .

ஒன்றில் உடலில் எலும்புகள் எதுவுமில்லாமல் தோல்மட்டுமாய் ,

ஒன்றில் எலும்புகள் மட்டுமாய்,

ஒன்றில் பாதி உடலுடன் ,

ஒன்றில் ரத்தத்தில் குளித்தவுடலுடன் ,

என ஒவ்வொன்றிலும் ஒருவிதமாய் இருந்த அவ்வுருவங்களின் எதிலும் வலக்கரம் காணாமல் இருக்க ,

அக்கரமோ அவளை அங்கு தனியாய் சுமந்திருந்தது .

- காதலாகும்....

.
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
ஹாய் டியர்ஸ் ...இன்னொரு கதையா நீ போய் ஒன்ன முடி மொதல்லன்னு சொல்றது கேக்குது ஹீஹீ கதையை மட்டும் ரெசெர்வ் பண்ணிட்டு ஓடிற்றேன் பீளிச்சுசு ...

எப்படியும் , பாவா முடிச்சதுக்கு அப்றம் தான் இந்த கதை ஓகே வா டியர்ஸ் .
ரைட்டு அப்போ நீ போய்ட்டு ரெண்டு வருஷம் அப்றம் தான் வருவேன்னு யாரோ மைன்ட் வாய்ஸ்ல சொல்றது எனக்கு கேட்டுடுச்சி கேட்டுடிச்சி..

அவ்ளோ லேட் ஆக்காம சீக்கிரமே இந்த கதைல உங்கள சந்திக்க வருவேன் டியர்ஸ். இப்போ முன்னோட்டம் எப்படி இருக்குனு ஒரு நாலு வார்த்தை இங்க சொல்லிட்டு போங்க டியர்ஸ்...

 

Thoshi

You are more powerful than you know😊❤
முன்னோட்டம் 3:

"டேய் சந்திராதித்யா! எங்க போற ? இன்னிக்கு பௌர்ணமி நம்ப வெளியில போனா ஆபத்து தெரியும்ல" என அவனின் நண்பன் எச்சரிக்க,

அதையும் மீறி "எனக்கு இருட்டினா ரொம்பபப பயமா இருக்கும் ...நீ ...நீ... என் கூடவே இருக்கியா" என முகத்தை சுருக்கியவாறு கேட்ட தன்னவளின் முகம் மனதில் தோன்றியதில் தன் கன்னம் குழிய சிரித்தான் .

அவனின் அச்சிரிப்பை எதிரில் நின்று இருந்த நண்பனும் ரசித்து பார்த்து, "ஆனாலும் நீ இம்புட்டு அழகா இருந்திருக்க வேண்டாம்டா... அதிலும் ஆணா இருந்திருக்க வேண்டாம்,ம்ம்ம்ம் என்னாலயே முடியலையே" என மயங்குவது போல் நடித்தவன் தொடர்ந்து,

"இந்த சிரிப்பு நம்ம உலகத்துல எந்த ராணிக்கு கொடுத்து வச்சிருக்கோ" என விளையாட்டாய் பெருமூச்சு விட்டான்.

எதிரில் இருந்த சந்திராதித்யனுக்கு தான் அது விளையாட்டாய் தோன்றாமல் போனது. "என்னோட ராணி எந்த உலகத்தில் இருந்தாலும் எனக்கு ராணிதான்" என்றவாறு அவ்விடம் விட்டு சென்றான்.

" இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? நானுமே நம்ம உலகத்து ராணினுதான சொன்னேன் . ஏதோ தப்பா சொன்னாப்ல பேசிட்டு போறான்.ம்ம்ம்ம்ம் இன்னைக்கு நேத்தா இப்படி பலவருசமாவே இவன் இப்படி முரணா தான திரியுறான் "என புலம்பியவாறே தன் வழி சென்றான் அவனின் நண்பன்.

++++++++++++++++++++++++++++++++++++++++

அவ்விடம் முழுக்க இருட்டாய் இருக்க, அதில் அங்கிருந்த ஒற்றை ஜன்னலும் அவளின் பார்வைக்கு அகப்படாமல் போனது.

இருட்டில் பயத்தை கட்டுப்படுத்த தன் இரு கைகளையும் மார்போடு அணைத்தவாறு இருந்தாள் அவள் ...அவள் அனகா, அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்... துயரங்களை இதுவரை கண்டிராத சின்னஞ்சிறு பறவை அவள் .

அந்த இருட்டில்பார்வையை துளாவ விட்டிருந்தவளின் காலில் எதுவோ இடற பயத்தில் கத்தபோனாள்.

அதற்குள் அவளின் வாயை ஒரு கரம் பொத்த, அதில் அதிர்ந்து அவள் திரும்பினாள்.

அவளின் வாயை பொத்திய கையை விலக்காமலே, மற்றொரு கரத்தில் இருந்த லைட்டரை ஒளிரவைத்தான் அவன்...அவன் சந்திராதித்யன், தன் பெயரைப் போலவே தன் வாழ்வில் அனைத்தையும் முரண்பாடுடன் கடந்துகொண்டிருப்பவன் .

அந்தச் சிறு வெளிச்சத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களில் காதல் கசிய பார்த்தவாறு நின்றிருந்தனர்.

++++++++++++++++++++++++++++++++++++++++

நேரம் நள்ளிரவிற்கு மேல் சென்றிருக்க, அங்கு தரையில் அவன் கழட்டி தந்த சட்டையை இறுக்கியவாறு படுத்திருந்தாள் அனகா.
அவளின் அருகே அவளின் மேல் படாமல் சற்று நெருங்கிய நிலையில் உறக்கத்தில் இருந்தான் சந்திராதித்யன்.

உறங்கும் பொழுதும் ஒருவித கம்பீரத்துடன் உறங்கும் அவனின் முரண்பாடை பார்க்க காற்றும் ஆசை கொண்டதோ என்னவோ , வேகமாய் வீச ஆரம்பித்தது.

அதன் வேகத்தில் சரியாய் பூட்ட படாமல் இருந்த அந்த ஒற்றை ஜன்னலும் திறந்துகொள்ள, அதன் வழியில் காற்று மட்டுமின்றி ... முழு பூரண நிலவொளியும் அங்கு நுழைந்தது.

அதன் ஒளி சயனித்து இருந்தவர்களின் மேல் படர, அனகா அதை உணர்ந்ததாளோ சிறு சிரிப்புடன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

அருகிலிருந்த சந்திராதித்யன் உடலிலோ, அவ்வொளி படர்ந்ததில் சிறிது சிறிதாய் மாற்றம் ஏற்பட்டது.

காற்றும் , நிலவும் ஜோடி போட்டுக் கொண்டு அவனின் முரண்பாடான காதலை கண்டுகொண்ட மிதப்புடன் மீண்டும் பார்வையிட அங்கு இருந்தது ,

சிறு குழந்தை என சிரித்தவாறு உறங்கும் அனகாவும், அவளின் அருகில் இச்சாதாரி நாகமாய் மாறி இருந்த சந்திராதித்யனும்.



முரண்பாடும் காதல் முரண்பாடுதான் காதல் முரண்பாடே காதல்...!!!

-காதலாகும்
 

Thoshi

You are more powerful than you know😊❤
மனிதனின் மூளையும் மனமும் ஒன்றுக்கொன்று முரண்தானோ ??
பலவருடம் பழகியவரை கூட சுலபமாய் மூளையது மறந்துவிட ,
ஒரு சிறு சந்திப்பினில் உயிர் தீண்டியவரை மறக்க முடியாமல் மறுகி தவிக்கிறது
மனமது...!!!



அத்தியாயம் 1 :


" முரண்பாடுன்றது நம்முடைய வாழ்க்கையிலே ரொம்பவே சகஜமான ஒரு விஷயம் . ஏன் , நம்ம தினமும் சுவாசிக்கிற அந்த காற்று பல நேரம் தென்றலா நம்பள தீண்டி சென்றாலும் சில நேரத்தில் முரண்பட்டு புயலா நம்பள தாக்குறதில்லையா ? இன்னும் சொல்ல போனா இந்த உலகத்துல எல்லோராலும் அதிகமா உணரப்படுற, ரசிக்கிற ஒரு விஷயம்னா அது 'ஒரு தலை காதல்'னு சொல்லலாம். அப்படி எல்லோராலும் ரசிக்கப்படற ஒருதலை காதல்ல, காதலை சொல்லமுடியாம தவிக்கும்போது இதயத்துல முள் தைப்பது போல் வலியை கொடுக்கும் அதே காதல் தான் நம்ப காதலிக்கிறவங்க நம்பள ஓரவிழியால பார்த்தா கூட சும்மா ஜிவ்வுனு பறக்க வச்சி 'என்ன பீலிங்டா இது'னு ஆனந்தத்தோட முரண்படும் . சரி நான் ஏன் இப்போ முரண்பாடு பற்றி முழங்கிட்டு இருக்கேனு உங்களுக்கு ஒரே குழப்பமா இருக்கா? எல்லாத்துக்குமே ஒரு காரணம் இருக்கு நண்பா .சரி! இதுக்குமேல இழுத்தா எல்லோரும் என்னை போட்டுத்தள்ள நேரடியா கட்டையோட வந்தாலும் வந்துருவிங்க... சோ !! நான் நேரடியா விஷயத்துக்கு வந்துடுறேன் .நம்ப சேனல்ல வரும் வெள்ளிகிழமைல இருந்து இரவு ஏழு மணிக்கு "முரண்பாடுகளை தேடி" னு புது நிகழ்ச்சி ஒளிபரப்பாகபோகுது மக்களே. மத்த எல்லா நிகழ்ச்சிபோலவே இந்த நிகழ்ச்சியும் உங்கள நிச்சயம் கவரும்னு என்னால ஆணித்தரமா சொல்லமுடியும் .இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமா கொண்டுபோக உங்களோட ஆதரவை எப்பவும் போல எங்களுக்கு சிறப்பா கொடுப்பீங்கனு நம்பிக்கையோட இப்போ கிளம்பறேன் மீண்டும் நாளை மாலை நாலு மணிக்கு "இது செம்ம பீலிங் மச்சி" ஷோல நம்ப மீட் பண்ணி இன்னும் நிறைய பேசலாம் . அதுவரைக்கும் உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் மித்ரன் " என பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏற்ப தன் முகம் மற்றும் உடல் மொழியினை மாற்றியவன் , தான் இத்தனை நேரம் மக்களுடன் தொடர்பிலிருந்த அந்த ரெகார்டிங் அறையிலிருந்து வெளிவந்தான்.

அவனின் இத்தனை நேர பேச்சை போலவே துள்ளலுடன் வெளிவந்தவனின் வயது 27 என்றாலும் அவனின் தோற்றமோ கல்லூரி மாணவன் போல தோன்ற செய்யும்.
எப்பொழுதும் புன்னகையுடனும் , உற்சாகத்துடனும் வளையவருபவன் தன் பெயரை போலவே தான் சந்ததிக்கும் அனைவரையும் நட்புடன் கடப்பவன் .கடற்பாறையை முழுங்கியதை போல கடினமுடன் திரிபவர்களை கூட தன்னிடம் பேசும் வேளையில் புன்னைகை புரியவைக்கும் வித்தகன் .

அவ்வறையில் இருந்து வெளியே வந்தவனை கண்ட மற்றவர்கள்,

"எப்பவும்போல கலக்கிட்டீங்க மித்ரன்" எனவும் ,

"உன்னோட ஷோ -க்குனு தனி போலோவெர்ஸ் இருக்காங்க மச்சி"என்றும்

"அந்த முரண்பாடுகளை தேடி நிகழ்ச்சிக்கு கன்டென்ட் பண்றது யாருனு இன்னும் சொல்லலையே பாஸ் " என்றும்

" இது உண்மையாவே நம்ப சேனல்க்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் மித்ரன் சார், எப்படி கொண்டு போகப்போறிங்க " என வாழ்த்துக்களும் கூடவே கேள்விகளும் வரிசையாய் வர அனைத்திற்கும் தனது வழக்கமான புன்னகையை மட்டும் பதிலளித்தவன் அடுத்த பத்து நிமிடங்களில் மற்ற வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு தனது பைக்கில் அங்கிருந்து கிளம்பிவிட்டான் .


தி லிட்டில் பேலஸ்:

அந்த அப்பார்ட்மெண்டின் பார்க்கிங்கில் தன் வண்டியை விட்டு வந்தவன், அங்கிருந்த வாட்ச்மேனிடம் " கதிரேசன்னா! சாப்பிட்டாச்சா ?" என விசாரிக்க,

"அதெல்லாம் சின்ன பாப்பா சரியான நேரத்துக்கு குடுத்து விட்டாங்க தம்பி" என்றவர் தொடர்ந்து,

"ஏன் தம்பி சின்ன பாப்பா எதுனா தப்பு பண்ணி நீங்க திட்டிபுட்டிங்களா? பாவம்! புள்ள முகமே வாடிப்போய் இருந்துச்சு தம்பி " என இந்த இரண்டு வருடத்தில் இவரையும் தன் குடும்பத்தில் ஒரு அங்கமாக எண்ணி அவர்கள் உணவளித்து வரும் பாசத்தில் கேட்டார்.

"அண்ணா இது உங்களுக்கே நியாயமா இருக்கா? நானாவது அவளை திட்றதாவது? நா திட்டணும்னு நினைச்சாலே என் சங்கறுத்துறமாட்டாளா அந்த கேடி" என சிரித்தவன் அவரிடம் விடைபெற்று மூன்றாவது தளத்தில் இருக்கும் வீட்டிற்கு செல்ல லிப்டை நோக்கி சென்றான்.

சென்றவன் பாதியில் திரும்பி வந்து " கதிரேசன்னா! போனவாட்டி நீங்க சொந்த ஊர் போனப்போ உங்களுக்கு பதிலா ஒருத்தர இங்க வேலைக்கு விட்டிங்களா அவர் இப்போ என்ன பன்றார் ?" என கேட்க,

"அவர் இப்போ ஊர்ல சும்மா தான் தம்பி இருக்கார் . எனக்கு சின்னதுல இருந்தே ரொம்ப வேண்டியவர் நான் வேலைல சேர்ந்ததுல இருந்தே எங்கனா போகணும்னா எனக்கு பதிலா அவர தான் விட்டுட்டுப்போவேன் ... ரொம்ப நல்ல மனுஷன் தம்பி . அவருக்கு பணம் குடுத்தாலும் இப்டி வெளிஊர்க்கு வந்துபோறது ஒரு மாற்றமா இருக்கும்ல " என்றார்.

"சரிங்கண்ணா , அப்படின்ன அவர
நாளைக்கே கிளம்பி வர சொல்றிங்களா ?"

"என்னாச்சி தம்பி! எதுனா வேலை இருக்கா. சொல்லுங்க தம்பி என்னால முடிஞ்சா நானே செய்யுறேன் ",

"அண்ணா!! வேலையே உங்களுக்கு தான் " என கண்ணடித்தவன்,

" இன்னும் ரெண்டு நாள்ல ஒரு ப்ராஜெக்ட் விஷயமா நானும் உங்க சின்ன பாப்பாவும் வேற ஊருக்கு போகபோறோம்னா . இந்தவாட்டி அங்கிளால வரமுடியாம ஆகிடிச்சி .. ஆனா தெரியாத ஊருக்கு எங்களை தனியா அனுப்பவும் பயம். இப்போ நீங்க எங்க கூட வரீங்கனு சொன்னா அவருக்கும் கொஞ்சம் நிம்மதி எங்களுக்கும் நல்லா இருக்கும் " என்றவன் தொடர்ந்து ,

"என்னணா இவன் பாட்டுக்கு நம்பகிட்ட வரிங்களானு கூட கேக்காமலே கிளம்பறோம்னு சொல்றானேன்னு யோசிக்கறீங்களா ?"

"அய்யோ! தம்பி ....என்ன நீங்க இப்படிலாம் பேசிகிட்டு . என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தனா நினைச்சி பாத்துட்டிருக்கிங்க ... இப்போகூட எனக்கு அந்த உரிமைல கூப்புட்றாப்ல தான் இருக்கு. எப்போ என்னனு சொல்லுங்க தம்பி ,வந்துடறேன். நாளைக்கே இந்த வேலைக்கு ஊர்லருந்து அவர வரவச்சிட்றேன் " என்றார்.

சிறிதுநேரம் வேலையை பற்றியும் , பயணத்தை பற்றியும் அவரிடம் பேசியவன் ஊரின் பெயரை சொல்லாமலே அங்கிருந்து நகர அவனை அழைத்த கதிரேசன்,

"மித்ரன் தம்பி ! நம்ப எந்த ஊருக்கு போறோம்னு சொல்லவே இல்லையே" என கேட்க ,

"ஸ்ஸ்ஸ்ஸ் ...முக்கியமானதையே விட்டுட்டானா " என சிரித்தவன் ,

"￰பொள்ளாச்சி பக்கம் இருக்க சின்னாம்பாளையம் -ன்ற கிராமம்ணா " என சொல்லி சென்றான்.

--------------------------------------------------------------------------------



சின்னம்பாளையம் :


எப்போதோ ஒன்றிரண்டு முறை மட்டுமே ஆள்நடமாட்டம் இருக்கும் அந்த பகுதியின் அமைதி , இன்றைய அம்மாவாசை இருளுடன் இணைந்து அவ்விடத்தில் ஒருவித திகில் உணர்வை வியாபித்திருந்தது .

போனால்போனதென்று அத்தெருவின் மூலையில் அரசாங்கம் , ஒரே ஒரு மின்கம்பத்தை நிறுவியிருக்க.... அதுவும் இப்போவோ அப்பவோ நான் உயிர்விட போகிறேன் என சொல்வது போல் விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தது .


வீடுகள் அடுத்தடுத்து இருந்தாலும் ஒவ்வொரு வீடும் மிகப்பெரியதாததில் , ஒரு வீட்டில் நடக்கும் விஷயங்கள், மற்றும் சத்தங்கள் அடுத்த வீட்டிற்க்கு செல்லாதவாறு இருக்க,

அவ்ஊரையே சுற்றிச்சுற்றி வந்த அவ்வுருவத்தின் கண்கள் வீடுகளின் இத்தகைய அமைப்பை கண்டு நெருப்பாய் தகித்தது .


நெருப்பை கக்கும் கண்களுடன் மரத்தின் அருகில் காத்திருந்தது அவ்வுருவம் . ஆம் , அவ்வுருவத்தின் கண்கள் பக்கத்திலிருந்த வீட்டையும் , இருளில் முழ்கிருந்த தெருவையும் மாற்றிமாற்றி வட்டமிட்டதில் ...எவருக்கோ காத்திருப்பது போல் தான் தோன்றியது .


அவ்வுருவத்தின் உதடுகள் கிழிந்து ரத்தம் கசிந்தவாறு இருக்க, அதில் சிறிது சிறிதாய் புன்னகை மலர்ந்து "ஆ ஆ ஆ" என ஆக்ரோஷமாய் கத்த .....சரியாய் அந்நொடி அவ்வீட்டின் முன் வந்து நின்றது நீல நிற மாருதி.


அவ்வுருவத்தின் ஆக்ரோஷ கத்தலோ கேட்பவரை நடுங்க செய்வதாய் இருக்க, மாருதியில் வந்தவர்களோ போதையின்பிடியில் இருந்ததில் அச்சத்தம் அவர்களின் செவியை தீண்டாமலே காற்றில் கலந்து மறைந்தது .

காரை வீட்டினுள் சென்று நிறுத்திய இருவரும் கதவை திறந்து உள் செல்ல அவர்களை தொடர்ந்து அந்த உருவமும் அவ்வீட்டினுள் நுழைந்தது .


போதையின் பிடியில் இருந்த இருவரில் ஒருவன் ," மச்சான்!!! இன்னிக்கு ரொம்ப சீக்கிரம் வந்துட்டோமே டா ....போர் அடிக்குமே " என புலம்ப ,


அவனை கண்டு விஷமமாய் நகைத்த மற்றொருவன் , " அப்போ விளையாடலாமாடா " என கேட்டு தனது கைபேசியை அவனிடம் தூக்கி போட்டான் .


அவனின் கைபேசியில் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டு வந்தவனின் கண்கள் ஓரிடத்தில் பளிச்சிட , எட்டிப்பார்த்த மற்றவனும் , "ஹாஹா... !!! உன் ரசனையே தனி மச்சான் " என சிலாகித்து கைபேசியை வாங்கியவன் , ஒரு எண்ணை அதில் அழுத்தி அப்பக்கம் எடுக்க காத்திருந்தான் .


அப்பக்கம் எடுத்ததும் , " ம்ம்ம் !! நான் தான்... உடனே நான் அனுப்புற அட்ரெஸ்க்கு வா ".

"..............."

" ஹாஹா ...!!! நீ வரியா இல்லையானே நான் கேக்கலயே ...நீ வந்துதான் ஆகணும் இல்லனா என்ன ஆகும்னு தெரியும்ல?? " என அழுத்தி சொல்லியவன் போனை அணைத்துவிட்டான்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவ்வுருவத்தின் கண்களின் சிவப்பு நிறம் , ரத்தத்தின் நிறத்துடன் போட்டிபோட தொடங்கியது.

மணித்துளிகள் சில கடக்க அவ்வீட்டை விட்டு வெளிவந்த அவ்வுருவம் , எதிரில் சுற்றும்முற்றும் பார்த்தவாறு வந்தவரை கண்டு சட்டென்று அவர்முன் சென்று நின்றது.

அவ்விடத்தின் இருளோ... அல்ல... மனதில் இருந்த பயமோ... அல்ல... இவ்வுருவத்தின் விகார தோற்றமோ... அல்ல...அனைத்தும் சேர்ந்தோ எதிரில் வந்தவர் பயத்தில் அலறியவாறு மயங்கிவிழுந்தார் .


அதை வெற்றியின் மிதப்பில் பார்த்துகொண்டிருந்த அவ்வுருவத்தின் தோற்றம் சிறிது சிறிதாய் எதிரில் வந்தவரை போல் மாறியது .


மறுநாள் காலை செய்தித்தாளில் , " போதையின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு இறந்துகிடந்த வாலிபர்கள் " என்னும் செய்தியை தொடர்ந்து அந்த இருவரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.


தி லிட்டில் பேலஸ்:

தூக்கத்திலிருந்த மித்ரன் தன்மேல் எதுவோ விழுந்ததில் எழுந்து தன்முன்னால் இருந்தவளை கண்டவன், அவள் எறிந்திருந்த செய்தித்தாளை பக்கத்து சோபாவில் போட்டு மீண்டும் படுத்து விட்ட தூக்கத்தை தொடர,

"எரும எரும!!! எழுந்துதொலடா" என அவனை உலுக்கினாள் யஷி ....யஷி விஸ்வநாத் ....'மை' சேனலின் சொந்தக்காரர் விஸ்வநாத்'ன் ஒரே மகள்....மித்ரனின் மாமன் மகள்.

"டேய் !!!எந்திரிடா பக்கி, நான்தான் சொன்னேன்ல அந்த ஊரு வேணாம்னு பாரு இப்போ அங்க ரெண்டு கொலை வேற நடந்துருக்கு . நான் கண்டிப்பா அந்த ஊருக்கு வரமாட்டேன்டா " என சொல்ல,.

"கொலை "என்ற வார்த்தையில் விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்த மித்ரன் பட்டென்று எழுந்து உட்கார ,

இதுவரை அமைதியாய் இவர்களை பார்த்தவாறு மற்றொரு சோபாவில் அமர்ந்திருந்த விஸ்வநாத், தன் வாயருகே கொண்டுசென்ற காபி கோப்பையை பாதியில் நிறுத்தி தன் மகளை பார்த்தார் .

இருவரின் அதிர்ந்த முகத்தையும் பார்த்தவள், " என்ன ...என்ன? எதுக்கு இப்போ இரண்டு பேரும் இப்படி முழிக்கிறீங்க?"

அவளின் கேள்வியை கண்டுகொள்ளாத விஸ்வநாத் , கோப்பையை முன்னிருந்த மோடாவில் வைத்துவிட்டு செய்தித்தாளை எடுத்து அவள் சொன்ன செய்தியை ஆராய்ந்தார் .

அவர் அதை படிக்கும் வேளையில் அவரையும் அச்செய்திதாளையும் ஒருவித படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மித்ரன் ,

அவர் செய்தித்தாளை வைத்துவிட்டு "யஷிமா!!! என்னடா?? ஏதோ ரெண்டு பேரு தண்ணியடிச்சிட்டு ஒருத்தர்கொருத்தர் அடிச்சிக்கிட்டு செத்துருக்காங்க அத போய் கொலைன்னு சொல்ற" என கேட்ட பின்பே இத்தனை நேரம் இழுத்து பிடித்திருந்த மூச்சை விட்டான்.

" அடிங்கு ....!!! உன்னால தூக்கமே போச்சி பிசாசு " என அவளை பார்த்து முணுமுணுத்த மித்ரன் ,

"அங்கிள் ...!! நான் போய் உங்க ரூம்ல என் தூக்கத்தை தொடர போறேன் , ப்ளீஸ் !!! ஒரு பத்து மணி போல எழுப்பிவிடுங்களேன்...நாங்க கிளம்பறதுக்கு தேவையானதை கொஞ்சம் ரெடி பண்ணனும் " என்றவன் , தன்னிடம் ஏதோ பேசவந்தவளை கண்டுகொள்ளாமல் அறைக்குள் சென்று கதவடைத்து நிம்மதி பெருமூச்செய்தினான்.


"அப்பா..!!! அந்த எரும மனசுல என்ன நினைச்சிட்டிருக்கான் ? நான் ஒருத்தி இங்க இல்லவே இல்லன்ற மாதிரி கண்டுக்காம போறான்" என கோபமாய் கத்திய யக்ஷி ,

"அப்பா ...!! ப்ளீஸ் அப்பா !! அவன் தான் நான் சொல்ற எதையும் நம்ப மாட்டான் , நீங்களாவது கேளுங்கபா...இது...இது..கொலைதான் பா ..அந்த ஊர் வேணாம்பா. நான் போகமாட்டேன் ...அவனையும் போகவேணாம்னு சொல்லுங்கபா " என கெஞ்ச,

" யஷிமா, என்னடா !! அப்பா உன்ன நம்பாம இருப்பனா? ஆனா நீ ஏற்கனவே சில தடவை இப்படி சொன்னப்போ நம்ப மித்து அதை எவ்வளவு விசாரிச்சு பார்த்தும் அதுலாம் கொலைதான்னு சந்தேகம் வரமாதிரி கூட எதும் கிடைக்கலையேடா" என்றவர் தொடர்ந்து,

" இங்கபாருடாமா இது நம்ப மித்துவோட கரியர்ல ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட். அவன் நினைச்சிருந்தா வேற யாரை வேணும்னா இதுல சேர்த்தீர்களாம் ஆனா அவன் அப்படி பண்ணலையே? எப்பவும் அவன் உன்ன தனியாவிட்டத்துமில்ல. இப்போ உன்னோட முறை , நீதான்டாமா இதுல அவனுக்கு துணையா இருக்கணும்." என புரிய வைக்க ,

"ஆனா அப்பா...பா ...இந்த ப்ராஜெக்ட் எதை பத்தினு உங்களுக்கு தெரியும்ல ...பா...பாம்பு பா...இ...இச்...இச்சாதாரி " என சொல்லும்போதே வார்த்தைகள் தந்தியடித்தது.... கண்களில் பயம் அப்பட்டமாய் வெளிப்பட தொடர்ந்தவள் ,

" இச்சாதாரி பாம்புகள் மனித உருவெடுக்கக்கூடியதுபா ...அதுமட்டுமில்லாம அது யாரையாவது பழிவாங்கணும்னு முடிவுபண்ணிட்டா அவங்களை மொத்தமா அழிக்காம விடாது " என சொல்லியவளின் தேகம் நடுங்கியது .

அவளை ஆதரவாய் அணைத்தவர், " டேய் கண்ணம்மா..!!! அது எல்லாம் வெறும் கட்டுகதை டா. நீ எப்பவோ படிச்ச புக்ஸ் , அப்றம் டீவில காட்டப்பட்ட சினிமா இதெல்லாம் பார்த்து நீயா உன் மனசுல நினைச்சிக்கிட்டது .அது அந்தந்த கதைகளோடு சுவாரஸ்யத்தை கூட்டுறத்துக்காக சேர்க்கப்பட்டதுடாமா. நம்ப சேனல் ஷோவ்ஸ்ல நம்ப பண்ணமாட்டோமா அதே தான்டா , நீ எதையும் யோசிக்காத... நம்ப மித்ரன மட்டும் யோசி அவனுக்காக இத பண்ணுடாமா "

மகளின் முகம் இன்னும் தெளிவடையாமல் இருக்க தொடர்ந்து,

"யஷிக்குட்டி !! உங்கபேரலாம் இன்னும் அழகா மாத்திக்கிட்டு நம்ப சேனல்ல வேலை பாக்குறதே உன்னோட மித்ரனுக்கு உன்னால முடிஞ்ச உதவிய செய்யணும்னு தான? இது அவனுக்கு ரொம்பவே ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் , இத்தனை நாள் உனக்கு துணையா எல்லாத்துலயும் நின்னவனுக்கு இப்போ உன்னோட துணை தேவைப்படுத்துடா நீ யோசிச்சி சொல்லு" என மகளின் மனதில் அழுத்தமாய் பதியவைத்தார்.

"மை டிவி" இது விஸ்வநாத்தின் தந்தை யஷ்வேந்தர் ஆரம்பித்தது . அவருக்கடுத்து அப்பொறுப்பை விஸ்வநாத் சிறப்பாய் செய்துவந்தார்.


அவர் என்னத்தான் சேனலை வெற்றிகரமாய் கொண்டுசென்றாலும் , முதல் ஐந்து சேனல்களில் ஒன்றாய் 'மை டிவி' யை சேர்த்த பெருமை மித்ரனையே சேரும். ஐந்து சேனல்களில் ஒன்றாய் இருப்பதை முதலாம் இடத்திற்க்கு கொண்டுவருவதே மித்ரனின் கனவு... அவனின் சிறுவயது முதலான ஆசையும் அதுவே.

இதற்காகவவே படித்தவன் தங்களின் சேனலின் பல ஷோக்களை இயக்கினாலும் , மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க விருப்பம் கொண்டு ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறான் .

இத்தனை ஆசை இத்துறையின் மேல் இருப்பினும் நடுவில் சில நாட்கள் இவை எது பற்றியும் சிந்திக்காமல் "யஷி" மட்டுமே தன் சுவாசமாய் எண்ணி கழிந்த அவனின் நாட்களும் இருக்கின்றன .

அதற்காகவே அவனுக்கு துணையாய் என்றும் இருக்க விரும்பியவள் அவனின் பெயருடன் தன் பெயரை இணைத்து "மித்ரயஷி" என்னும் பெயரில் அவர்களின் சேனலில் இணைந்தவள் இதுவரை அவன் செய்துவந்த அனைத்து ப்ராஜெக்ட்களிலும் தன்னால் முடிந்ததை செய்திருந்தாள்.

கொஞ்சகொஞ்சமாய் அவளின் மனம் இப்பயணத்திற்கு தயாராக , வழக்கம் போல் இரவு முழுக்க தூங்காமல் முழித்திருந்ததில் இப்பொழுது அவள் கண்கள் தானாய் தூக்கத்தை தேட, மித்ரன் எழுந்து சென்றதால் காலியான அச்சோபாவில் தலை சாய்த்தாள் .

அவளின் தலையை கோதிய விஸ்வநாத் , அவள் முகத்தில் யோசனை சுருக்கல்கள் நீங்கி அமைதியாய் உறங்க ஆரம்பித்ததில் மகள் நிச்சயம் இதில் மித்ரனுக்கு துணையிருப்பாள் என நம்பிக்கை தோன்ற புன்னகையுடன் தங்கள் அன்றாட வேலைகளை கவனிக்க உள்ளே சென்றார்.

அவர் தலை கோதலை நிறுத்தி நகர்ந்திருக்க, யஷியிடம் சிறு சிணுங்கல் வெளிப்பட்டு தூக்கம் கலையபோக அதை கலையவிடாமால் வலிமையான ஒரு கரம் அவளின் தலையை ஆசையாய் கோத தொடங்கியது.

முன்ப விட இக்கோதலின் மென்மை பாதுகாப்பானதாகவும், தனக்கு உரியனதாகவும் தோன்ற கலைய ஆரம்பித்த தூக்கத்தை உதட்டில் நிலைத்த புன்சிரிப்புடன் தொடர்ந்தாள் யஷி.

அவ்வறையின் அமைதியில் " என்கிட்டே வருவதற்க்கு எதுக்குடி உனக்கு இவ்வளவு அடம் ? என்னை பார்க்கணும்னு உனக்கு தோணவே இல்லையா ? " என காற்றோடு கலந்து அக்குரல் மெதுவாய் ஏக்கத்துடன் ஒலிக்க ,

" யாரது " என்ற யோசனையுடன் முன்னறைக்கு வந்த விஸ்வநாத் அங்கு கண்ட காட்சியில் ரத்தம் உறைய நின்றார் .

உருவமில்லாமல் ஒரே ஒரு கரம் மட்டும் காற்றில் அசைந்தவாறு தன் மகளின் தலை கோத யஷியோ மென்னகையுடன் உறங்கிக்கொண்டிருந்தாள்.
(மித்ரன் - நண்பன் ; யஷி - வெற்றி )


-காதலாகும் ...






Drop ur comments in tis friends:
 

Thoshi

You are more powerful than you know😊❤
காதல் என்பதே
முரண் தானோ??
பயத்தின் நிழல்கூட தீண்டாதவனையும்,
தன் ஒருநிமிட மௌனத்தில்
பயம்கொள்ள செய்கிறாள்
மங்கையவள் ...!!!


அத்தியாயம் 2 :



வடக்காலத்தூர் :
அக்காட்டினில் இருந்து மிகுந்த தொலைவில் தெரியும் மக்கள் நடமாட்டத்தை கண்களில் ஆசை வழிய பார்த்தபடி இருந்தாள் சந்திரிகா . காட்டின் ஓரத்தில் இருந்த அம்மரத்தின் கிளையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவளின் கருங்கூந்தல் மயிலின் தோகை போல் அக்கிளையின் பக்கவாட்டில் விரிந்திருக்க , கண்களில் வெளிப்பட்ட ஆசையில் அவளின் கண்களின் கரும்பாவைகள் இரண்டும் வைரமாய் ஜொலித்தது .

"சந்திரிகா" என தன் தாய் அழைக்கும் குரலை உணர்ந்தவள் ,

" ஈசனே! இந்த அம்மா எப்படி தான் நான் மனிதர்களை பார்ப்பதை உணர்கிறார்களோ! மிக சரியாய் அழைத்துவிடுகிறார் " என மனதினுள் புலம்பியவள் விரைவாக தன்னுருவான பாம்பின் உடலுக்கு மாறியவாறு கிளைகளிலிருந்து ஊர்ந்து இறங்கி, வேகவேகமாய் தங்கள் இருப்பிடம் நோக்கி விரைந்தாள் .

￰வடகாலத்தூரில் உள்ள அக்காட்டுப்பகுதியின் மத்தியில் ஏறத்தாழ மண்ணிற்க்குள்ளே உள்ளது " சந்திரமதி " என்னும் அவளின் ஊர்.

"நூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆயுளுடன் , மூவுலகையும் ஆளும் ￰எம்பெருமான் பரமேஷ்வரரை மட்டுமே துணையாய் எண்ணி வாழும் பல நூறு இச்சாதாரி நாகங்களின் இருப்பிடமே அந்த "சந்திரமதி".

மனிதர்கள் அக்காட்டுப்பக்கம் வந்து சில நூறு ஆண்டுகள் கடந்திருக்க , அங்கு வாழும் இளம் இச்சாதாரி நாகங்களுக்கு மனிதர்கள் மற்றும் அவர்களின் குணநலன்கள் பற்றி கடுகளவு கூட அறியப்படாமலே இருந்தது .

அதற்க்கு நேர்மாறாய் மூத்த தலைமுறை , மனித குலத்தை தான் தங்கள் இனத்தின் முதல் எதிரியாய் கருதியது. அவர்களின் கண்களில் அகப்பட்டுவிடக் கூடாதென்பதற்காகவே இளைய தலைமுறை இச்சாதாரிகளுக்கு "சந்திரமதி" -யை விட்டு வெளியில் செல்வதற்கு தடை விதித்திருக்கிறது .

வெளியில் செல்லவேண்டுமென்றால் அது அக்காட்டின் இறுதியில் இருக்கும் மலையின் மேல் அமைந்துள்ள தங்களின் குலம் காப்பவரான "புற்றீஸ்வரர்"- ரின் ஆலயத்திற்கு மட்டுமே செல்ல அனுமதி உண்டு."

பல இச்சாதாரிகள் வாழும் சந்திரமதியின் இன்றைய ராணி "சிந்திரை" தான் அழைத்த￰ பின்பும் வராத தன் மகளை எண்ணி வழக்கம்போல் மனம் பதைத்த வேளையில் அவரின் முன் வந்து நின்றாள் "சந்திரிகா" .

அவளை கண்டவரின் கண்கள் கோபத்தில் பொன்னிறமாக மாற, " எங்கு சென்றிருந்தாய் சந்திரிகா " என அன்னையாய் மட்டுமில்லாமல் ராணி என்னும் கம்பீரத்துடன் கேட்டதில்,

" அம்மா...!! நான் இன்று எம்பெருமான் பரமேஸ்வரரின் ஆலயம் சென்றிருந்தேன். வரும் வழியில் மிகவும் களைப்பாக இருக்கவே அங்கிருந்த மரத்தின் கிளையில் ஓய்வெடுத்தேன்" என ஏதும் அறியா பெண் போல் சொல்ல,

ராணி என்றால் அவ்வளவு இலகுவாய் ஏமாறுபவராய் என்ன? அவர்களின் ஒட்டுமொத்த இச்சாதாரிகள் இனத்தையே இத்தனை ஆண்டுகளாய் கட்டுக்கோப்பாய் வைத்து வருபவருக்கு தன் மகளின் கண்களில் மறைந்திருக்கும் பொய்யை அறியமுடியாமல் போகுமா என்ன?.

அதுவுமில்லாமல் கடந்த சில நாட்களாகவே சந்திரிகாவின் பார்வை மனிதர்களை ஆசையுடன் தொட்டுவருவதை உணர்ந்திருந்த சிந்திரை , " போதும் உனது பொய்கள்....நான் சொல்வதை கேளடி!! மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் சந்திரிகா . நம் இனத்தவரின் முக்கிய எதிரியே அவர்கள் தான்.மனிதர்களின் கண்களில் நாம் தென்பட்டோமானால் அது நமது உயிருக்கு மட்டுமில்லாமல் அதை தொடர்ந்து நம்மினத்திர்கே ஆபத்தாய் தான் முடியும் " என தன்னால் முடிந்தவரை தன் மகளின் மனிதர்களின் மேலான ஈடுபாட்டை கலையமுற்பட்டார் .

தனது அன்னையின் வார்த்தைகளை லட்சியம் செய்யாத சந்திரிகா,"அம்மா!! இதை சொல்லத்தான் என்னை அழைத்தீர்களா ?" என சிறு முகசுளிப்புடன் வினவ , அவளின் புரிந்துகொள்ள விரும்பா பாவனையில் மீண்டுமாய் அவளிடம் பேசவிளைந்த சிந்திரையை தடுத்தது, அவரின் கணவரும் அவர்கள் இனத்தின் இன்றைய ராஜாவுமாகிய "நாக புத்திரர்" -ரின் குரல்.

"சிந்திரை!! இன்று நாம் பூஜைக்கு செல்ல வேண்டும் என்பதை மறந்தாயா என்ன? பூஜைக்கு ஆயத்தம் செய்யும் வேளையில் தாயும் மகளும் என்ன வழக்காடி கொண்டிருக்கிறீர்கள்" என கேட்டுக்கொண்டே வந்த நாக புத்திரர்... ராஜாவிற்கே உரிய ஆளுமையுடனும், ராஜாநாகத்திற்க்கு மட்டுமே இருக்கும் சில சக்திகளின் விளைவால் முகத்தில் ஏற்பட்ட பொலிவுடனும் காணப்பெற்றார்.

பொதுவாக இச்சாதாரி நாகங்கள் ,தாங்கள் நினைத்த தோற்றத்திற்கு நினைத்த நேரத்தில் உருமாறும் சக்தி கொண்டவை. ராஜநாகமோ உருமாறும் சக்தி மட்டுமின்றி எவ்வுயிரனத்தையும் வசியபடுத்தும் சக்தியையும் கொண்டது.

நாகங்களுக்கே உரித்தான விஷத்தன்மை இச்சாதாரிகளுக்கு பலமடங்காய் இருந்தபோதும் , விஷ மூச்சுக்காற்றை வெளியிடும் ஆற்றல் ராஜநாகத்திற்கே உரியது .

தங்கள் குலத்தை பொறுப்புடன் ஆண்டு எத்துயரத்திலும் அவர்களின் நலம் காக்கும் மனோபலம் வாய்க்கப்பெறுவரை ராஜநாகமாய் தேர்ந்தெடுப்பது , மூவுலகின் நாகங்கள் அனைத்திற்கும் முதன்மையானவராய்..... இந்த உலகையே தன் தலை மேல் வைத்து காத்துவருவதாய் நம்பப்படும் "ஆதிசேஷரே "என நாககுலமக்கள் முழுமனதாய் நம்புகின்றனர் .

"ஆதிசேஷர் " எவர் ஒருவரை தேர்ந்தெடுகிறாரோ அவர் பிறக்கும்பொழுதே ஈசனின் ஆசியில் ராஜநாகத்திற்கு உரிய சக்திகளுடனே பிறக்க , அவர் வளர வளர அச்சக்திகளும் அவருடன் சேர்ந்து மெருகேறுகிறது.

இச்சக்திகளை கொண்டே தங்கள் குலத்தின் அரசரை கண்டுக்கொள்கிறார்கள் இச்சாதாரி நாகங்கள்.

பல ஆயிரம் தலைமுறைக்கு முந்தைய அவர்கள் இனத்தவர்கள் ஏகப்பட்ட துயரங்களை தாண்டி தங்களின் விஷங்களையெல்லாம் பல ஆண்டுகளாய் ஒன்றாய் திரட்டி சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்ததின் விளைவாய் நூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆயுளையும் , உருமாறும் வரத்தையும் பெற்றிருந்தனர்.

ஆயினும் சில ஆண்டுகளில் அந்தணர் ஒருவரின் சாபத்தால் பௌர்ணமி தினங்களில் இச்சாதாரி நாகங்கள் தங்களின் முழுசக்தியையும் இழந்துவிடுவது வழக்கமாகியது.

ஆதலால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மலை மேல் உள்ள "புற்றீஸ்வர்"- ன் ஆலயத்திற்கு சென்று தங்கள் குலம் காப்பவரான ஈசனிடம் அடைக்கலம் தேடுவது சந்திரமதியினரின் வழக்கம் .

சந்திரமதியினர் பௌர்ணமி நாட்களில் சூரியன் மேற்கில் மறைய தொடங்கும் முன்பே "புற்றீஸ்வரர்" ஆலயம் சென்று பரமனே தங்களின் துணை என இரவு முழுக்க அவருக்கு அபிஷேகம் , ஆரத்தி , நடனம் என அவ்விரவை கழிப்பார்கள் .

இன்றும் அத்தகைய முழு பௌர்ணமி நாட்களில் ஒன்றாகும். அதற்கு ஆலயம் செல்ல ஏற்பாடு செய்ய சொல்லும் பொருட்டே ராஜநாகமான "நாகபுத்திரர்" வந்தது.

தந்தையின் கேள்வியை கேட்ட " சந்திரிகா" தனது தாயின் அறிவுரையில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பாய் இதை பயன்படுத்தி, " நானும் அதைத்தான் கூற வந்தேன் தந்தையே! நேரமாகிற்று நான் சென்று பூஜைக்குத் தயாராகுகிறேன்" என அவ்விடத்தை விட்டு செல்ல ,

அவளை தடுத்த நாகபுத்திரர் , " உன் தமையன் எங்கே அம்மா? அவனிடம் இன்றாவது நம்முடன் இணைந்து ஆலயம் வரச்சொல். நம்மினத்தில் அவன் மட்டும் எப்பொழுதும் முரண்பட்டே நிற்பது ஏன் என்று அறியேன்!!?? அவன் வருங்காலத்தில் ராஜநாகமாய் மாறும் சக்தியை வாய்க்கப்பெற்றுள்ளபோது இவ்வாறு நடப்பது சரியல்ல" என தான் ராஜாவாய் இருந்தும் தன் மகனே தங்கள் குலத்தின் பல கட்டுகளை மீறுவதை அறிந்திருந்ததால் யோசனையாய் சொல்ல,

"அவ்வாறெல்லாம் இல்லை அரசே! நமது மகன் தங்களின் மகள் போல் அல்ல, அவன் நம்குலத்தின் மேல் அதீத பற்றுள்ளவன். எப்பொழுதும் நம்மவர்களின் நலம் மற்றும் எம்பெருமானின் சிந்தனைகள்தான் அவன் மனதில் ஓடும். நமக்குப் பிறகு நம் மக்களை பாதுகாத்து அவர்களை நன்முறையில் ஆளும் புத்திக்கூர்மை மற்றும் மனோபலத்தை எம்பெருமான் ஈசன் நம் மகன்"சந்திராதித்யன்"-க்கு நிறைவாய் அளித்துள்ளார் " என தாய்க்கே உரிய பூரிப்புடன் மகனைப் பற்றி தன் கணவரிடமே எடுத்துரைத்தார் சிந்திரை.

அவர் பேச்சிற்கிடையில் தந்தையிடம் தன்னை குறை கூறினாலும் அவரை தொடர்ந்து சந்திரிகாவும், " ஆமாம் தந்தையே! அண்ணன் தங்களை விடவும் புத்திசாலியானவன். எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச் சரியாக அறிந்து இருப்பவன்" என தன்னுடன் பிறந்தவன் மேல் பாசம் பொங்க சொன்னாள் சந்திரிகா.

சந்திராதித்யன் - நாகபுத்திரர் மற்றும் சந்திரையின் மூத்த மகன் , பிறக்கும்பொழுதே ராஜநாகத்திற்கு உரித்தான சக்திகளை கொண்டு பிறந்ததில் அவர்கள் குலமே ராஜபுத்திரற்கு அடுத்து தங்களை காக்க போவது அவனே என்னும் எண்ணத்துடன் சிறுவயதுமுதலே அவனை மரியாதையுடனும் பக்தியுடனும் நடத்தினர் .

இளைய இச்சாதாரிகளுக்கு சந்திராதித்யனின் சொல்லே வேதவாக்கு . ஆனால் அவனோ பிறந்தபொழுதினில் இருந்து ஒவ்வொரு செயலிலும் மற்றவர்களுடன் முரண்பட்டே நின்றான்.

மனைவி மற்றும் மகள் இருவரும் மாற்றி மாற்றி தன் மகனின் புகழ்பாட அதில் உதட்டில் நிறைந்த புன்னகையுடன் இருவரையும் கண்ட நாகபுத்திரர் , " சரி தான்! இப்பொழுது அவன் எங்கிருக்கிறான் என இருவரில் ஒருவர் சொல்லுங்கள் பார்ப்போம் " என கேட்க, தாயும் மகளும் பதில் அறியாமல் முழித்தனர்.

மகளை தேடும் முதலே மகனை தேடிவிட்டிருந்தார் சிந்திரை. அவர் தேடலுக்கு கிடைத்த விடை அவன் சந்திரமதியில் மட்டுமல்லாமல் இந்த காட்டில் எங்குமே இல்லை என்பதுதான்.

ஆனால் அதை நாகபுத்திரரிடம் சொல்லவிடாமால் அவரின் மகன் மீதான பாசம் தடுத்தது .

தன்னுடன் சேர்ந்து தாயும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியதில் தன் அண்ணன் எங்கு சென்றிருக்கக்கூடும் என அறிந்த சந்திரிகாவின் கண்கள் இரண்டும் பளபளத்தது பின்னால் நடக்கப்போவதை அறியாமல்.

------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த காட்டினில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளது அச்சிறைச்சாலை. .

அங்கிருக்கும் பாதிக்கும் மேலானோர் தாங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்பது போல் இல்லாமல் தங்கள் பண பலத்தையும், ஆள் பலத்தையும் பயன்படுத்தி காவலர்களை தங்கள் வசம் கொண்டு விருந்தினரின் வீட்டுக்கு சென்றது போல் நாட்களை கழித்து கொண்டிருந்திருந்தனர்.

அவர்களின் ஆர்ப்பாட்டத்தால் அச்சிறைச்சாலை கட்சி அலுவலகம் போல் ஆர்ப்பாட்டத்துடன் இருக்க, ஒரேஒரு அறை மட்டும் அமைதியாக இருந்தது .

அவ்வறையினுள் ஒருவன் மட்டுமே இருந்தான் . அவன் இச்சிறைச்சாலைக்கு வந்து இரு வாரங்கள் மட்டுமே கடந்திருந்தது.

அவனுடன் தண்டனை பெற்ற மூவரில் ஒருவன் வேறு சிறைக்கு அனுப்பப்பட , மற்ற இருவரும் இதே சிறைச்சாலையில் வேறுவேறு அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த இரண்டு வாரங்களில் , அவர்கள் இருவருமே ஒருவரை அடுத்து ஒருவர் என சிறைக்குள்ளே தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்க , அடுத்து தான் தானோ என்னும் அச்சம் அவனின் மனதை சூழ்ந்திருந்தது .

ஆம் ! அச்சம் தான், அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என அனைவரும் சொன்னபோதும் இவன் அவர்களை அறிந்தவன் ஆகிற்றே, அவர்கள் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்க்கு கோழைகள் அல்லவே.

போலீசாரே அடித்து கொலை செய்து பின் அதை தற்கொலை என மாற்றிவிட்டதாகவே அவனின் மனதில் தோன்றியது.

இவ்வாறு தோன்றிய பின் கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு என்ன நேருமோ என்னும் பயத்துடனே கடந்தான்.

அதிலும் இன்று மற்றொரு கொலை சம்பந்தமாக அவனை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஒருவர் வருவதாக சொல்லப்பட்டதில் இருந்து "இது வெறும் விசாரணை தானா ? இல்லை தன்னை கொள்வதற்கான சதி திட்டமா ?" என புரியாமல் வியர்வை வழிந்தோட அறையின் மூலையிலே வருபவரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்.

நேரம் மதியம் இரண்டை கடந்திருக்க அச்சிறைச்சாலையின் முன் வந்துநின்றது காவல்துறையின் நான்கு சக்கர வாகனம். அதிலிருந்து ஆணுக்கான சராசரி உயரத்துடன், காவல்துறையினர்க்கே உரிய முறுக்கேறிய உடலும் கூர்மையான கண்களுமாய் இறங்கினான் அவன்.

அப்பொழுது மதிய உணவு நேரம் கடந்திருக்க, சிறைச்சாலை உணவு போல் இல்லாமல் அரசியல்வாதி ஒருவர் உள்ளிருப்பால் ..அவரின் பணபலத்தில் விருந்துணவே கொடுக்கப்பட்டதில் ...அனைவரும் நிறைவாய் உண்ட மயக்கத்தில் இருக்க சிறைச்சாலையே தற்பொழுது மிகவும் அமைதியாய் இருந்தது .

சரசரவென வேகநடையுடன் உள்நுழைந்தவன், அங்கிருந்த காவலர்கள் கூட எவர் வரபோகின்றனர் என்ற அலட்சியத்துடன் அவரவர் இடங்களில் கண்ணயர்ந்திருப்பதை கண்டு, அங்கு கம்பியில் மாட்டப்பட்டிருந்த சிறைகளின் சாவிகள் அடங்கிய சாவிக்கொத்தை மெதுவாய் எடுத்தான் .

அவன் மெதுவாய் எடுத்தபோதும் சாவிக்கொத்து ஒலிஎழுப்பிட அங்கு நாற்காலியில் தூங்கிகொண்டிருந்த சிறை அதிகாரி சிறிதாய் கண்விழித்து எதிரில் இருப்பவனை கண்டு வேகமாய் எழுந்து " குட் அப்டர்நூன் சார் " தூக்கம் முழுதாய் கலையாமல் சல்யூட் வைத்தார் .

அவரின் முன் நின்றவனோ தனது தொப்பியை இடது கையின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு சற்றே சாய்வாய் அதை மாற்றி வேறோருபுறம் திரும்பியவன் , ஒரு தலையசைப்புடன் " நான் செல் நம்பர் 109 ல இருக்குறவன விசாரிச்சிட்டு வரேன்" என சொல்லி விரைவாய் அங்கிருந்து நகர்ந்தான் .

அவன் நகர்ந்த பின்பு ,தூக்கம் கலையாததில் அந்த அதிகாரி மீண்டுமாய் தூங்க தொடங்கினான்.

அச்சிறை அறையின் மூலையில் காலையிலிருந்து உணவு உண்ணகூட செல்லாமல் பயத்துடன் அமர்ந்திருந்தவனை கண்ட அவனின் கண்கள் இரண்டும் செங்கனல்களை கக்கியது .

தன்முன் வந்து நின்ற காவல் உடையை கண்டபின் இன்னும் பயத்துடன் சுவற்றுடன் ஒட்டிக்கொண்டான் அக்கைதி .

அதை பார்த்து ஏதோ ஒருவிதத்தில் நிறைவாய் உணர்ந்தவன் , ஒவ்வொரு அடியையும் மெதுவாய் எடுத்து வைத்து அவனை நோக்கி செல்ல ,

அவனின் கண்கள் வெளிப்படுத்திய வித்தியாசமான பாவனையை கண்ட அக்கைதி மாயைக்குட்டப்பட்டதை போல் வேகமாய் எழுந்தவன் இவனை தாண்டிச் சென்று அங்கிருந்த சிறைகம்பிகளில் தன் நெற்றியை முட்டிக்கொள்ள தொடங்கினான்.

மண்டை சற்று பிளந்து ரத்தம் வழிந்தோடிய போதும் நிறுத்தாதவன் , கண்கள் மயக்கத்தில் சொக்க ஆரம்பித்தபின்பே தன் நிலை உணர்ந்தது போல் அதிர்ந்து விலகினான்.

அத்தனை நேரம் அவனை பின் இருந்து பார்த்து கொண்டிருந்தவன், அக்கைதி தன் செயலை நிறுத்தியதில் சிறு புன்னகையுடன் அவனின் அருகில் வந்து அவனை அணைத்துப்பிடித்தான்.

அவன் அணைத்ததும் அதிர்ந்த அக்கைதி இவனை விலக்க போராடி முடியாமல் போக திகிலுடன் , " என்ன... என்...ன" என்று பேச ஆரம்பித்தவனின் வார்த்தையை "ஆ.....ஹக்க்..." என்பதுடன் நிறுத்தியது அவனின் அடிவயிற்றில் குத்தப்பட்ட அச்சிறு கத்தி.

கண்ணின் கருமணி இரண்டும் வெளியில் வரும் அளவிற்கு அக்கைதி எதிரில் இருப்பவனை பயத்துடன் பார்க்க அவனை அணைத்துப் பிடித்திருந்தவனோ சிறு குச்சியால் மண்ணில் கோலமிடுவது போல அவனின் அடிவயிற்றில் அக்கத்தியால் கோலமிட்டுக் கொண்டிருந்தான்.

உடலில் இருந்து ரத்தம் அளவுக்கதிகமாய் வெளிவருது தெரிந்தும், கத்த கூட முடியாமல் அவனை கட்டிப் போட்டிருந்தது எதிரிலிருந்தவனின் கண்கள் .

வாய்விட்டு வலியை சொல்லகூட முடியாமல் அவனின் ஒவ்வொரு அணுவும் முழுதாய் வலியை அனுபவித்தபின்பே அவனின் உயிர் சிறிது சிறிதாய் பிரிய , அதை கண்களிலோ முகத்திலோ உணர்வுகள் எதுவுமின்றி வெறித்த எதிரிலிருந்தவன் , அவனின் இறந்த உடலை தூக்கி தோளில் போட்டு கொண்டு வெளியேறினான்.

அவன் அங்கிருந்து வெளியேறும் நொடியில் தன் தூக்கம் மீண்டுமாய் கலைந்து எழுந்த சிறை அதிகாரி இவனை கண்டுவிட்டவர், " என்ன சார் ...விசாரிச்சிட்டீங்களா?" என கேட்டவரின் கேள்வி அவன் தோளில் தொங்கி கொண்டிருப்பவனின் நிலையை கண்டு அலறலாய் மாறபோக,

அவன் தனது தொப்பியை சற்று விலக்கி அவரை ஆழப்பார்த்தான். இதுவரை கருப்பு நிறத்தில் இருந்த அவனின் கண்களின் கருமணிகள் பச்சை நிறமாக மாற எதிரிலிருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்தையும் மறந்து தூக்கத்தில் ஆழ்ந்தார் .

அவன் அங்கிருந்து வெளியேறிய சில மணி நேரங்களில் எல்லாம் அச் சிறைச்சாலையின் தொலைபேசி ஒலிக்க தொடங்கியது.
கஷ்டபட்டு கண்களை திறந்த அந்த அதிகாரி
அதை எடுத்துப் பேசிவிட்டு வைத்தபின் , "என்னாச்சி ?கண்ணு ரெண்டும் இப்படி சொக்குது !" என மனதில் நினைத்தவாரே ,

அங்கிருந்த மற்றோரு காவலரிடம், " அந்த 109 செல்- ல இருக்குறவனை பார்க்க வருவதாய் சொன்ன இன்ஸ்பெக்டர் சார் வேறொரு இடத்திற்குச் போறதுனால நாளைக்கு வாறாராம் " என்றவர் தொடர்ந்து,

" இவர் வராருனு அவன் காலைல இருந்து அந்த மூலையிலையே உட்காந்திருந்தான் . நான் போய் அவனை பாத்துட்டு வரேன் " என தூக்கத்தில் சொக்கும் கண்களை கசக்கியபடியே சென்றார்.

சிறிது நேரத்திலெல்லாம் 109-ம் எண் சிறையில் இருந்த கைதி தப்பிவிட்டான் என்னும் செய்தியில் அச்சிறைச்சாலையே அல்லல்கோலப்பட்டது .

--------------------------------------------------------------------------------

காற்று மிகவேகமாய் வீசிக்கொண்டிருக்க அதற்க்கு போட்டியாய் வேகத்துடன் சென்றுகொண்டிருந்தது அவ்வாகனம் .

வயிற்றின் குடல் முழுவதும் வெளிவந்திருக்க, உடை முழுதும் ரத்தத்தில் தோய்ந்திருக்க பின் சீட்டில் அகோரமாய் இருந்த அவ்வுடலின் மேல் ஒரு போர்வையை போட்டு மறைத்தவன் , முன் திரும்பி தன் பக்கவாட்டில் அமர்ந்திருந்தவளை கண்டு "நீ யார் ? உன் பெயர் என்ன? இங்க எப்படி வந்த? " என வினவினான்.

அவளோ பதில் சொல்ல முடியாமல் உதடுகளை பிதுக்கிவிட்டு , " உன் பெயர் என்ன ?" என்று பதிலுக்கு கேட்க,

அவளை தன் பச்சை நிற கண்களால் சுவாரஸ்யமாய் பார்த்தவனின் இதழ்கள் இயல்பாய் சிரித்ததில், கன்னங்களில் ஆழமாய் குழிவிழ... அச்சிரிப்புடனே , " சந்திராதித்யன் " என்றான்

-காதலாகும்



Drop ur comments in this friends

 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
காதலது
இரு உடல்களுக்கான உணர்ச்சிகளின்
அங்கமல்ல ,
அது ...
இருஉயிர்களின்
உணர்வுகளுக்கான
சங்கமம்..!!



அத்தியாயம் 3 :


"பாதி வழியில் இருக்கிறோம் ஸ்ரீ! இன்னும் ஒரு மூணு,நாளு மணி நேரத்தில் ஊர் வந்துரும்னு நினைக்கிறேன் ."

"........"

"இல்ல ஸ்ரீ ! நம்ப முன்னாடி முடிவு பண்ணமாதிரியே தான் எல்லாம் பண்ணலாம் . மொதல்ல "இச்சாதாரிகள் பத்தி மக்களோட அபிப்பிராயம் என்ன? இச்சாதாரிகள் - னு உண்மையாவே இருக்கா இல்லையா ? இருக்குனு சொன்னா அத நம்புறதுக்கான சான்று என்ன ? இப்படி கேள்விகள்ன்னு ஒரு எபிசொட் பண்ணலாம் .அடுத்து போன வாரம் "இச்சாதாரிகள் வரலாறு" னு ஒரு குறும்படம் எடுத்தோம்ல அதையும் சேர்த்து ஒரு ரெண்டு, மூணு எபிசொட் நீ டைரக்ட் பண்ணிடு , மீதி நாங்க இங்க கண்டுபிடிக்கிறது வச்சி பார்த்துக்கலாம் " என தனது உதவியாளன் மற்றும் நண்பனான "ஸ்ரீ" -க்கு கைப்பேசியில் இவன் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியவைகளை விளக்கிக்கொண்டிருந்தான் மித்ரன் .

தன் பேச்சிற்க்கு ஏற்ப தலையையும், கைகளையும் அசைத்தபடி இருந்தவனின் கண்களோ, நொடிக்கொருதரம் பின்இருக்கையில், சிறுபறவை தன் இறக்கைகளை சுருட்டிக்கொண்டு இருப்பதுபோல் தன் கைகளால் இரண்டு கால்களையும் இறுக்கிப்பிடித்தபடி உறங்கும் "யஷி"யை கண்டபடி இருந்தது.

"தி லிட்டில் பேலஸ்" -ன் வாட்ச்மேன் "கதிரேசன்" இவர்களுக்கு ஓட்டுனராய் மாறியிருக்க , மித்ரன் முன்னிருக்கையில் அவரின் அருகில் அமர்ந்திருந்தான் . ஆளரவம் இல்லாததால் கார் வேகமா சென்றுகொண்டிருந்ததில், திறந்திருந்த சன்னலின் வழியே காற்று உள்நுழைந்து அவனின் சற்று நீண்ட கேசத்துடன் விளையாடியது.

அதன் விளையாட்டை தடுப்பது போல் இடது கையில் கைப்பேசியை வைத்திருந்தவன் , வலது கையால் தன் சிகையை கோதியபடியே முன்னிருக்கும் கண்ணாடியில் பார்த்தவனின் கண்களோ பின்னிருக்கையில் ஏதோ ஓர் வித்தியாசத்தை உணர்ந்தது .

கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாலும் அவனது மூளை "அங்கிருக்கும் வித்தியாசம் என்ன ?" என யோசிக்க அவனின் யோசனைக்கு உதவும் நோக்கத்திலோ என்னவோ காற்றின் வேகம் அதிகரித்தது.

காற்று பலமாக வீசியதால் அப்பக்கம் பேசுவது தெளிவாக கேட்காமல் கைப்பேசியை வலது கைக்கு மாற்றியவன் நன்றாக பின்புறம் திரும்ப அவ்வித்தியாசம் என்ன என்பதை கண்டுகொண்டான்.

பின்னிருக்கையின் சன்னல்களும் திறந்தே இருந்தாலும் அங்கு காற்றின் வேகம் இங்கு இருப்பது போல் இல்லையோ என தோன்ற செய்தது அவன் முகத்தில் மெல்லியதாய் வருடி சென்ற குளிர் காற்று.

"ஸ்ரீ ! நான் உன்னை கொஞ்ச நேரத்தில் கூப்புட்றேன் " என கைப்பேசியை அணைத்தவன் ,

"கதிரேசன்ணா ! கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க " என்றான்.

அவன் சொன்னது போல் உடனே ஓர் ஓரமாய் நிறுத்தியவர் , அவன் கதவை திறந்து இறங்குவதை கண்டு,"என்ன தம்பி! என்னாச்சு ? "என கேட்க,
பின்பக்க கதவை திறந்து ஏறியவன், உறங்கிக்கொண்டிருக்கும் 'யஷி'-ன் தலையை எடுத்து தன் மடிமீது வைத்தபடி ,

"ஒண்ணுமில்லை -ணா , இப்போ வண்டிய எடுங்க " என சொல்ல, கண்களோ தங்களை சுற்றி எதையோ தேடியது.

அவன் நினைவில் காலையில் தூங்கி எழுந்தவுடன் விஸ்வநாதன் தான் பார்த்ததாக சொல்லியதை பற்றி தான் தோன்றியது .

அப்பொழுது அவர் மகளை பிரியப்போகும் எண்ணத்தில் விளைந்த பிரம்மையாய் அதை எண்ணியவன் அவரின் பயத்தை போக்குவதற்காக ஏதேதோ சொல்லி சமாளித்திருந்தான்.

இப்போது அதை எண்ணி, ஒருவேளை அது உண்மையாய் இருந்தால் என்ன செய்வது ? என குழம்பியது .

ஏனெனில் அவன் பின்புறம் ஏறும்பொழுதே சற்று குளிர்ச்சியாய் தழுவிச் செல்லும் காற்றை அவன் உடலும், மிக மிக மெல்லியதான நறுமணத்தை அவனின் நாசியும் உணர்ந்திருந்தது .

அதில் , அவன் நெஞ்சம் கலங்க தொடங்க தன் மடியில் படுத்திருந்த யஷியின் தலையை தன் வயிற்றோடு சேர்த்து இறுக்கமாய் அணைத்துகொண்டான்.

அவனின் அச்செயல் , " என்ன நடந்தாலும் உன்னை விடமாட்டேன் ...என்றும் உன்னை என்னுள் வைத்து பாதுகாப்பேன்" என்பது போல் இருக்க, அவனின் செயலைக் கண்ட காற்றோடு கலந்த அவ்வுருவம் மெதுவாய் தனக்குள் சிரித்துக் கொண்டது.

அதன் எதிரொலியாக காற்று சிலுசிலுவென ஓசை எழுப்ப... அதை கேட்ட மித்ரனோ கேட்காதவரே கண்களை இறுக்கமாய் மூடி பின்இருக்கையில் தலை சாய்த்தவன், இன்னும் இறுக்கமாய் அவளின் தலையை தன்னுடன் அணைத்துக்கொண்டான்.

காற்றோடு கலந்த அவ்வுருவம் சிறிது நேரம் இருவரையும் சுத்தியபடி இருந்து பின் எதையோ எண்ணி நிறைவுடன் அங்கிருந்து மறைந்தது .


------------------------------------------------------------------------------------------------------------------------

"போதையின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இறந்து கிடந்த வாலிபர்கள் " என காலையில் யஷி காட்டிய அதே செய்தியை படித்துக்கொண்டிருந்தான் ஒருவன்.

கல்லூரி முடித்து சிறிது நாட்கள் தான் ஆகி இருக்கும்போல் , தாடி மீசை எல்லாம் முழுதாய் வழித்து பார்ப்பதற்கு சிறுபையன் போல் இருந்தான்.

செய்தித்தாளை வாசித்தவன் , அதில் இருந்த இருவரின் புகைப்படத்தை கண்டு கோபத்துடன் அதை கசக்கி எறிந்தபடி
தனது கைபேசியை எடுத்தவன், எவருக்கோ அழைக்க அப்பக்கம் எடுக்கப்படவில்லை .

சிறிது நேரம் முயற்சித்தவன் தன் முயற்சி வெற்றிபெறாததில் அதையும் தூக்கி எறிய அது செய்தித்தாளுக்கு துணையாய் அதன் அருகில் சென்று விழுந்தது .

அவ்வறை சற்று இருட்டாக இருக்க, கோபத்தில் கொதித்து கொண்டிருந்தவன் அவ்வறையின் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க தொடங்க, அவனின் மூளை வேகவேகமாய் என்ன நடந்திருக்கும் என யோசிக்க தொடங்கியது .


எத்தனை விதமாய் யோசித்தும் அவர்கள் இருவரும் அடித்து கொண்டு இறந்தார்கள் என்பதை அவனின் மூளை நம்ப மறுத்தது .

கோபம் அடங்குவது போல் இல்லாததால் நடந்துகொண்டிருந்தவன் அங்கிருந்த மோடாவில் அமர்ந்து தன் கைகளை கோர்த்து கட்டைவிரல் இரண்டையும் புருவமத்தியில் வைத்து சற்று நேரம் மூச்சை ஆழமாய் உள்இழுத்து தன்னை கட்டு படுத்தத் துவங்கினான் .

சிறிது நேரத்தில் மனம் ஓர் நிலைக்கு வர எழுந்து சென்று சற்று நிதானமாய் யோசித்தவனின் கண்கள் இப்பிரச்சனையின் ஓர் முடிச்சை அவிழ்க்கும் வழியை கண்டுகொண்டதில் மின்ன , அவ்வறையின் மூலையில் இருந்த அலமாரியை திறந்தவன், அதிலிருந்தவற்றை கலைத்து புரட்டி எதையோ தேடினான்.

சற்றுநேரத்தில் அவன் தேடியது கிடைக்க அதை எடுத்தவன் அதை பிரித்தபடி நின்றஇடத்திலே அமர்ந்துவிட்டான்.
அது அவனின் பலதொழில்கள் மற்றும் அதில் சம்பந்த பட்டிருப்பவர்களின் விவரங்கள் அடங்கிய குறிப்பு .

பொதுவாய் அவன் இவற்றை எல்லாம் கணிணி மற்றும் வேறு சில முறையில் பதித்து வைத்திருந்தாலும் முக்கியமான சிலவற்றை குறிப்பெடுத்து வைப்பது அவனின் பழக்கம் .

அவன் விஞ்ஞானத்தின் ஆபத்தை முழுதாய் அறிந்தவனாகிற்றே ஆதலாலே இத்தகைய பழக்கம் .

இது போலான சம்பவம் முதல் அல்லது இரண்டாம் முறை என்றால் இதை பெரியதாய் அல்ல சிறியதாய் கூட எண்ணியிருக்க மாட்டான் . ஏன் ! முதல் மூன்று சம்பவங்கள் வரைக்கும் இவனின் கீழ் இருப்பவர்கள் அதை இவனின் காதிற்கு வராமல் தான் பார்த்துக்கொண்டனர் . ஆயினும் அதை அறியாமல் இருந்தால் அப்பெரும் ஆபத்தான தொழில் சாம்ராஜ்யத்தில் அவனால் இவ்வளவு நாட்கள் நீடித்திருக்க முடிந்திருக்காதே .

அனைத்தையும் அறிந்தே இருந்தவன், எவர் தம்மை நெருங்கமுடியும் இது சாதாரண சம்பவம் எனும் அலட்சியத்துடன் கடந்திருந்தான் .

ஆனால் நான்காம் சம்பவம் இவன் இருந்த இடத்தினிலே நடைபெற சற்று திகைத்தவன் யோசிக்க ஆரம்பித்தான் .

ஆனால் அவன் யோசித்து சுதாரிப்பதற்குள்ளாகவே , அடுத்தடுத்து ஒவ்வொருவூரிலும் அவனின் ஆட்கள் சாகத்தொடங்கி இருந்தனர் .

இந்த இருவரின் இறப்பு கிட்டத்தட்ட 15- வது .சாவென்பது இவர்களின் தொழிலில் சகஜமான ஒன்று தான் . ஆதலால் இது அனைத்துமே இயல்பாய் நடந்தவை என அவனின் மூளை சொன்னாலும் அதை ஒத்துக்கொள்ளமுடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது .

இத்தனை நாட்கள் எவ்வெவ்வாறோ முயன்றும் ஒன்றும் அறியமுடியாமல் போக இன்று புதிதாய் ஓர் வழி தோன்றியதில், இந்த குறிப்பை எடுத்தவனுக்கு இறந்தவர்கள் யார் யாரென சரியாய் அறிய வேண்டியிருக்க , "ஜான்" என்று தன் வலக்கரமாய் செயல்படுபவனை கூப்பிட்டான் .

அவன் கூப்பிடாமல் அவன் அறைக்குள் நுழைய எவருக்கும் அனுமதி இல்லாததால், அச்செய்தித்தாளை அவனிடம் கொண்டுவந்து தந்த பொழுதினில் இருந்து அவனின் அழைப்பிற்காய் வாயிலிலே நின்றுகொண்டிருந்த " ஜான் " அவன் அழைத்த மறுநொடி அவனின் முன் நின்றிருந்தான்.

அவனை கண்டவன் "ஜான்! இதுவரைக்கும் நம்ப ஆட்கள் யார் யார் இறந்துருக்காங்க என்ற முழுவிபரமும் எனக்கு வேணும் . எவ்வளவு நேரம் ஆகும் உனக்கு " என வினவ ,

அவனின் முகத்தை வைத்தே அதன் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்தவன் " ரெண்டு நிமிஷம் போதும் பாஸ்" என்றவன் எதிரிலிருப்பவனின் கேள்வியான பாவனையில்,

" நீங்க வழக்கமா எல்லாத்தையும் குறிப்பெடுத்து வைக்கிறது நல்லதுன்னு சொல்லுவிங்க பாஸ், அதுதான் இதையும் ஒரு குறிப்பா எடுத்துவச்சிருக்கேன் என்றவன் ,

வெளியே சென்று அவன் சொன்னது போலவே இரண்டு நிமிடங்களில் வந்தவன் , ஒரு சில காகிதங்கள் அடங்கிய குறிப்பை அவனால் "பாஸ்" என அழைக்கப்பட்டவனிடம் கொடுத்தான் .

அதை வாங்கியவனின் உள் ஏதோ ஓர் குரல், "அங்கு செல் அங்கு செல்" என அச்செய்தியை வாசித்த நொடி முதல் சொல்லிகொண்டே இருக்க அதில் தனது உள்மனதின் தேடலுக்கான விடை அங்கிருக்குமோ என சிந்தித்தவன் ,

" ஜான் ! நம்ப நாளைக்கு காலையில் சின்னம்பாளையத்துக்கு போறோம் , தேவையானது எல்லாம் பார்த்துக்கோ " என சொல்லி அத்துடன் பேச்சை முடித்தவன்,

மற்றவன் வெளியேறும் வரை பொறுத்திருந்து பின் அவன் கொண்டுவந்து தந்த குறிப்பையும் தான் முதலில் எடுத்துவைத்த குறிப்பையும் மாற்றி மாற்றி புரட்டி , தனக்கு தோன்றுவதையெல்லாம் வேறொரு காகிதத்தில் எழுத ஆரம்பிக்க காற்று அங்கு சற்று சீறலாய் வீசத்தொடங்கியது .


---------------------------------------------------------------------------------

சின்னம்பாளையம் :

இருள் என்னும் போர்வையை போற்றியபடி உறங்கிக்கொண்டிருந்த பூமியழகியை தன் செங்கதிர்கள் கொண்டு எழுப்பத் துவங்கினான் ஆதவன் .

அந்த சிவப்புநிற படுக்கையில் வெள்ளை நிற முழு உடையில் , விரிந்திருந்த கூந்தல் முகத்தினில் தவழ உடலை குறுக்கி கொண்டு உறங்கிக்கொண்டிருந்த "யஷி" -யின் அறை சன்னலின் வழியே நுழைந்தது அந்நாகம் .

கட்டிலின் அருகே நின்றவாறு சிறிது நேரம் தன் கண்களை விரித்து அவளை பார்த்தபடி நின்ற அது மெதுவாய் அக்கட்டிலில் ஏற துவங்கியது .


அவளின் காலருகில் சென்ற அந்நாகம் சிறிதுநேரம் பொறுத்து பின் மெதுமெதுவாக அவள் மேல் படர்ந்து அவளின் உடலை சுற்றத்துவங்க , முதலில் சிறிதாய் இருந்த நாகமோ தற்பொழுது அவளின் உடலையே மொத்தமாய் தன்னுள் சுருட்டிக்கொள்ளும் அளவிற்கு பெரியதாய் மாறியது.

தன்னை எதுவோ இறுக்குவது போல் தோன்ற தூக்கத்திலே சிணுங்கியவள் , சிறிதாய் கண்களை திறந்தாள் .

கண்விழித்தவள் ஏதோ ஓர் நாகம் தன்னை சுற்றி கொண்டிருந்ததில் அதிர்ந்து, மீண்டுமாக கைகளால் கண்களை மூடி பயத்தில் கத்த போக , அந்நொடியில் பாம்பின் உருவம் ஆண்மகனின் உருவமாய் மாறியது.

தன்முன் பயத்தில் கண்மூடிருந்தவளின் கைகளை விலக்கியவன் "பேபிமா" என வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பது போல் மெதுவாய் அழைத்தான் .

யஷி அவன் குரலில் இருந்த மென்மையில் அதிர்ந்து வேகமாய் கண்களை திறக்க ,

அங்கு நாகத்திற்கு பதில் ஆண்மைக்கான முழு இலக்கணத்துடன் கண்களாலே அவளை வசியம் செய்துவிடுவதை போல் நின்றவனை கண்டு அதிர்ச்சியில் தானாய் அவள் வாயை பிளக்க , சிறு சிரிப்புடன் அதை அழகாய் தன் வழியில் மூடசெய்தான் .

ஓர் நொடி அவனின் செயலில் கரைந்தவளோ சட்டென்று தெளிந்து, நாகத்தின் நினைவில் தன் முழுபலத்தை பிரயோகித்து அவனை தள்ளியபடி எழ அக்கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தாள்.


விழுந்தவள் கண்களை திறக்க , அத்தனை நேரம் மங்கலாய் இருந்த அறை தற்பொழுது நல்ல வெளிச்சத்துடன் இருந்ததில் குழம்பியவள் சற்றுமுன் நடந்ததை நினைத்து வேகமா திரும்பி கட்டிலைப் பார்க்க அந்த கருப்பு வண்ண கட்டில் இவள் உருண்டு புரண்டிருந்ததில் அலங்கோலமாய் காட்சியளித்தது .

அதை கண்டவள் கலைந்திருந்த தன் கூந்தலை ஒதுக்கியபடி, "என்ன இது கட்டில் கருப்பு கலர்ல இருக்கு கொஞ்சம் முன்ன சிவப்பு கலர்ல தான இருந்துச்சி " என யோசித்தவளிற்கு புரிந்தது இதுவரை தான் கண்டதனைத்தும் கனவு என்று .

"சே ! என்ன கனவுடா இது ? இதுக்குத்தான் நான் இந்தமாதிரி ஆராய்ச்சிக்குலாம் வரமாட்டேன்னு சொன்னேன் யார்னா என் பேச்சை கேட்டாங்களா ? அதும் பாம்பை பார்த்தாலே பத்தூரு தள்ளி நிக்குற என்னைய "இச்சாதாரி" எப்படி எப்படி "இச்சாதாரி" பாம்ப பத்தி ஆராய்ச்சி பண்ண வந்தே ஆகணும்னு தூக்கிட்டு வந்துட்டான் அந்த தடியன் . எருமமாடு ! " என தான் கண்ட கனவிற்கு கூட மித்ரனை காரணாமாக்கிய யஷி வாயில் வந்தபடி அவனை திட்டிகொண்டே அனைத்தும் செய்துமுடித்தாள்.

குளித்துமுடித்து அறையை விட்டு வெளியே வந்தவள் எதிரிலிருந்த அறையை கண்டவுடன் , "இவன் இன்னும் எழுந்துக்கலை போல " என நினைத்தவள் ,

கண்ட கனவின் விளைவால் " எல்லாம் இவனால் தான இருடா வரேன்" என்று வேகமாய் சென்று கதவை தட்டப்போக இவளின் நல்ல நேரமோ அல்ல அவனின் கெட்ட நேரமோ கதவின் தாள் போட அவன் மறந்திருக்க , அவள் கைவைத்த நொடி கதவு திறந்திருந்தது .

கட்டிலில் சிறிதாய் வாயை பிளந்தபடி அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேகமாய் சென்று வேண்டுமென்றே கட்டிலில் குதித்து அவனின் மேல் அமர்ந்தவள் அவனின் முடியை தன் கைகளுக்குள் சுருட்டி ,

"பக்கி பக்கி எரும மாடு எழுந்துருடா, வரமாட்டேன்னு சொன்னவளை எங்க அப்பாவ ஏதேதோ பேசவச்சி என்னைய வரவச்சவன் , நேத்து வண்டி ஏறுனது தொடங்கி கொஞ்சமாச்சும் என்னைய கண்டுகிட்டியா ?? மவனே ! இங்க ஒருத்தி கண்ட கனவையும் கண்டு பயத்துல முழிச்சிட்டு இருக்கேன், நீ என்னனா வாய பிளந்து தூங்கிட்டிருக்க ! யாரோடடா கனவுல டூயட் பாடிட்டு இருக்க எழுந்து தொலடா எரும" என பேச்சிற்கு ஏற்ப தன் கைக்குள் சிக்கிருக்கும் அவனின் முடியை ஆட்ட,


அவள் குதித்ததிலே விழித்திருந்த மித்ரன் அவள் முடியை பிடித்து ஆட்டியதால் வலியில், "ஆஆஆ...விடுடி...அம்மா...வலிக்குதுடி ..விடுடி ..விடுடி பாப்பா....ஆஆ" என கத்த துவங்கினான் .

அவன் கத்தலை வழக்கம் போல் குறும்பு வழிய பார்த்திருந்தவள், வலியில் இருக்கும்பொழுதும் அவனின் அவளுக்கான அழைப்பில் மென்மை இருக்க ....

அதே போல் மென்மையை கனவில் அழைத்தவனின் குரலிலும் இருந்ததை அவளின் மனம் எடுத்துரைத்ததில் அவளின் பிடி சற்று தளர அதில் அவளின் பிடியிலிருந்து விலகிய மித்ரன் அவளிடமிருந்து தப்பிக்க வேகமாய் பாத்ரூமினுள் சென்று கதவை அடைத்துக்கொண்டான் .

அதை கூட உணராமல் கனவில் வந்தவனின் குரல் மென்மையில் லயிக்கத் தொடங்கினாள் யஷி.



-காதலாகும்...



Drop ur comments in this friends
 
Status
Not open for further replies.
Top