All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முரண்பாடே காதலாய்

Status
Not open for further replies.

Thoshi

You are more powerful than you know😊❤
கடலிலிருந்த நீர்த்துளி முரண்பட்டு மேகம்தனில் காதல் கொண்டு ஆவியாகி ..
மனம் நிறைய ஆசையுடன் மென்மையாய்
தன்னவளான மேக அழகியுடன் கூடிக்களிக்கும் நேரம்தனில் காற்று வேகமாய் வீசி மேக அழகியை நிலைகுலைய செய்ய ...
தன்னவளை முழுதாய் ஆளும் முன்னே நீர்த் துளி அது ..
பிரிந்து மீண்டுமாய் கடல் நோக்கி விழுந்தது மழைதுளியாய்...!!!



அத்தியாயம் 13:


மித்ரனின் அதிர்ந்த முகத்தில் அவனின் அருகில் வந்து தோள் தொட்டு கலைத்தவர் , "ஆமா மித்ரா ! இது யஷியோட நாட்குறிப்பு தான்" என்றார்.


"ஆனா அங்கிள்...! இது எப்படி..? எனக்கு புரியலை அங்கிள் ?? அவ என்கிட்ட இதுவரைக்கும் எதையும் மறைச்சதில்லையே " என தவித்தான் .


" மறைச்சதில்லை தான் மித்ரா..! ஆனா அவளுக்கே அந்த விஷயம் தெரியாதுன்ற போது அவளால உன்கிட்ட எப்படி சொல்லி இருக்க முடியும் ??" என்றவர் தொடர்ந்து ,


"உனக்கு தெரியும்ல மித்ரா ...போனவருஷத்துல யஷி இந்தியா வந்த ரெண்டு மாசத்துக்கு பிறகு காணாம போனது."


"ஒப்கோர்ஸ் அங்கிள்...! நான் உடனே இந்தியா வந்து, எவ்வளவோ தேடியும் ரெண்டு மாசம் போனதுக்கு அப்றம் தான யஷி நம்மளுக்கு கிடைச்சா ....அதும் அவளோட பாதி நினைவுகளை தொலைச்சிட்டு ..."


யஷி வெளியே சென்றதை அறியாமல் இருவரும் ஒருவருடத்திற்கு முந்தைய கதைகளை பேச , அங்கு மயங்கியவளை தன் கைகளில் ஏந்திக்கொண்ட சந்திராதித்யனின் நினைவுகள் தன்னவளுடன் கழித்த நாட்களுக்கு பயணித்தது .


ஒருவருடம் முன்பு :


நாட்கள் வேகமாய் கடந்திருக்க இப்பொழுதெல்லாம் அனகா ,சந்திராதித்யனை பார்ப்பதே அரிதாய் இருந்தது.


சூரியன் மறைந்து வெகு நேரத்திற்கு பின்பே குகைவீட்டிற்கு வருபவன் சிறிது நேரத்திலே உறங்க ஆரம்பித்துவிடுவான்.


மீண்டும் காலையில் இவள் கண்விழிக்கும்போதே அவன் விடைபெற தயாராய் இருப்பான். இவன் சென்ற சிறிது நேரம் கழித்து சந்திரிக்கா வந்துவிட , அந்நாள் முழுதும் அவளுடனே கழியும் .


தன் அண்ணணின் பார்வை அனகாவின் மேல் படியும் விதத்திலேயே அவனின் மனம் அறிந்த சந்திரிக்காவிற்கு , இது எவ்வாறு சாத்தியம் ஆகும் என தெரியவில்லை.


ஆனால் அண்ணனின் நடவடிக்கையில் ஓர் வேளை அவன் அனகாவுடனே சென்றுவிட நினைத்திருக்கிறானோ..? அதனால் தான் இம்முறையும் பௌர்ணமி பூஜையை தவிர்த்தானோ ?? என்ற சந்தேகம் வேறு எழுந்தது .


தொடர்ந்து நான்காம் முறை பௌர்ணமி பூஜையை தவிர்த்தால் அவர் அன்று இருக்கும் தோற்றத்திலே பதினைந்து நாட்கள் இருக்கக்கூடும் . அதில் அவர்கள் அனைத்து சக்தியும் இழந்து இருக்கும் தோற்றத்துக்கு ஏற்றபடியே வாழ்வர் . பதினைந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் இச்சாதாரியாய் மாறினாலும் பழைய சக்திகள் கிடைக்காமல் போகும்.


அடுத்தமுறை அவன் பௌர்ணமி பூஜையை தவிர்த்து மனித உருவில் அவ்விரவை கழித்தான் எனில் அவன் சாதாரண மனிதனாக மாறிவிடுவான் . பின் பதினைந்து நாட்களுக்கு பிறகும் அவன் மனிதனகாவே வாழ விரும்பினால் அதை ஈசன் அன்றி எவராலும் மாற்ற முடியாது .


இவ்வாறு யோசிக்கும் பொழுதே அவளின் மனம் துக்கத்தில் ஆழ, அண்ணனின் விருப்பம் அதுதான் எனில் இவளால் எதுவும் செய்யஇயலாதே .


இவ்வாறு யோசித்த நாள்தொட்டு அண்ணணின் வாழ்விற்கு உதவும் பொருட்டு... அனகாவிடம் சந்திராதித்யனை பற்றியே அதிகம் பேசினாள், அவள் பல வருடங்களாகவே அவனை தன் மனதில் சுமப்பதை அறியாமல்.


சந்திராதித்யன் தான் அனகாவிடம் "சாப்பிட்டுவிட்டாயா , உறங்கு , நான் சென்று வருகிறேன் " என இந்த மூன்று வார்த்தைகளை தாண்டி எதுவும் பேசுவதில்லையே.


அதனால் அனகாவும் சந்திராதித்யனை பற்றிய பேச்சுகளை ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருந்தாள்.


இவ்வாறு இருக்கையில் இரண்டு நாட்களாய் இவள் கண்விழிக்கும் வேளையில் கூட அவன் அங்கிருப்பதில்லை . இன்னும் சில நாட்களில் தான் சென்றாகவேண்டும் எனும் பொழுது ..இவன் இவ்வாறு இருப்பது அவளின் காதல் மனதை வருத்தியது .


இன்றும் அவன் சென்றிருப்பான் என்ற எண்ணத்தில் மனம் சோர விருப்பமே இல்லாமல் எழுந்தமர்ந்தவளின் கண்களில் நீண்டநாட்களுக்கு பிறகான தன்னை ரசிக்கும் பார்வையுடன் அமர்ந்திருந்த சந்திராதித்யன் விழுந்தான் .


கனவோ என தோன்ற கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தவளின் முகத்தின் அருகில் நெருக்கமாய் அவனின் முகம் இருக்க அவனின் மூச்சுக்காற்று அவளின் மேனி தீண்டியது .


அதில் இயல்பாய் அவளின் இமைகள் மூடிக்கொள்ள அவளின் மோனநிலை கண்ட சந்திராதித்யனுக்கு கன்னம் குழிந்தது.


சில நொடிகளுக்கு பின் இமைகளை திறந்த அனகா , அவனின் கன்னக்குழியில் தன் விரலால் தீண்டினாள்.


"குழியா...!" என்று கிறக்கமாக அழைத்தவள் ," இந்த பச்சை நிற கண்கள் இப்போ பாக்குற மாதிரியே இனி எப்போதும் இதே காதலோடு என்னை பார்க்குமா ??" என தான் அன்று காதலை சொன்னபிறகும் பதில்சொல்லாமல் விழிமொழியில் காதல் பேசியவனிடம் வாய்மொழியை எதிர்பார்த்தது அவளின் காதல் மனம் .


அவளின் எதிர்பார்ப்பை புரிந்து .. அவளின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல், " இன்று ஆலயம் செல்ல வேண்டும் அனகா ..! சென்று தயாராகி வா " என்றவன் ,


"அன்று மயங்கி இருந்த உன்னோடு , அருகில் இருந்த உனது பையையும் எடுத்து வந்தபொழுது உன்னை பற்றி அறிந்துகொள்ள ஏதேனும் இருக்குமா என தேடும் வேளையில் ,ஓர் நாட்குறிப்பு எழுதப்படாமல் இருப்பதை கண்டேன் ...அதை என்னிடம் தரமுடியுமா ??" எனக் கேட்டான்.


"நான் என் காதலை சொல்லி என்னையே தரேன்னு சொல்றேன்...இந்த பச்சை கண்ணன் இப்போதான் டைரிய கேக்குறான் . இதுல தூய தமிழ் வேற ...ஷப்ப்பா ...!இவனை வச்சிக்கிட்டு என்ன பண்ணபோறானோ !!" என புலம்பியபடியே அவன் கேட்டதை கொடுத்தவள் அவனை முறைத்து வைத்தாள்.


அவளின் முறைப்பில் அவனுக்கு சிரிப்பு வர அவளை இம்சிக்கும் கன்னக்குழி சிரிப்பை சிந்தியவன் ...அவளின் புலம்பலை கேட்டது போல் காட்டிக்கொள்ளாமல் ,


"நான் இங்கே அமர்ந்திருக்கிறேன் ...நீ தயாராகிய பின் நாம் ஆலயம் செல்வோம் " என்றவன் அந்த நாட்குறிப்புடன் அமர்ந்துவிட்டான்.


--------------------------------------------------------------------------------


புற்றீஸ்வரரின் ஆலயம்:


"எங்களின் குலம் காக்கும் எம்பெருமான் ஈசனாகிய உங்களை சாட்சியாய் கொண்டு இன்று இவளை நான் மணமுடிக்க போகிறேன். தங்களின் சித்தமின்றி இங்கு ஓர் அணுவும் அசையாது என்பதை நான் அறிவேன். எங்களின் பிறப்பு வேறுவேறு இனத்தாயினும் இருவரின் மனமும் இன்று ஒன்றாகியதும் தங்களின் சித்தமே. இன்று இவளின் கை பற்ற போகும் நான், எங்களின் வாழ்வின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பற்றிய இவளின் கைகளை விடாமல் இருப்பேன் என தங்களின் மேல் ஆணையிடுகிறேன் "


-என தங்களின் முன் அமைதியின் ஸ்வரூபமாய் இயற்கையின் லயிப்பில் வீற்றிருந்த புற்றீஸ்வரிடம் மேல் ஆணையிட்டவன் , கழுத்தில் இருந்த செயினை கழட்டி தன் பக்கவாட்டில் நின்றிருந்த அனகாவின் கழுத்தில் போட்டான்.


அவளின் கையை இறுக்க பற்றியவன் அவளின் முகத்தை பற்றி தன் முகம் காண செய்து ,


"நீர் , நெருப்பு , காற்று , பூமி , ஆகாயம் என இங்கு நம்மை சுற்றி இருக்கும் ஐம்பூதங்களின் சாட்சியாய் ...இந்த ஜென்மம் மட்டுமின்றி இனி நான் எடுக்கும் அத்தனை ஜென்மங்களிலும் உன் காதலை மட்டுமே தேடி , உன் ஒருவளை மட்டுமே சேர்வேன் என நாம் கொண்ட காதலின் மேல் ஆணையிட்டு கூறுகிறேன் " என்றான்.


தான் வாய்விட்டு கேட்டும் அவன் பதிலளிக்காததில் ..."தன் காதல் வெறும் கானாலோ?? அவன் என்னை காதலிக்கவில்லையோ?? அவனின் விழிகளில் தான் கண்ட காதலனைத்தும் தன் கற்பனை தானோ??" என்பதை ஏற்கமுடியாமல் மனம் முழுக்க காயத்துடன் ஆலயத்திற்கு வந்தவள் அவனின் இத்தனை நேர பேச்சில் தனது காதலுக்கான பதில் கிடைத்ததில் வாயடைத்து நின்றாள்.


எத்தனை வருடமாய் அவனை காதலிக்கிறாய் என அவளிடம் கேட்டாள் அவளின் தலை தெரியாது என்றே ஆடும் . எப்பொழுது என்றெல்லாம் வரையறுக்க முடியாமல் முதல் முதலாய் அவனை கண்ட நொடிமுதல் அவளின் வாழ்க்கையில் அவனும் ஓர் அங்கமாகி விட்டிருந்தான் .


இனி ஜென்மஜென்மமாய் இந்த பந்தம் தொடரும் என சொல்லாமல் சொல்லியவனின் மேல் அவளின் நேசம் கட்டுக்கடங்காமல் பொங்கி வழிந்தது .


தாங்கள் இருப்பது ஆலயம் என்பதையும் மறந்த அனகா, பாய்ந்து சந்திராதித்யனை கட்டிக்கொண்டாள் .


அதில் தடுமாறியவன் இருவரும் விழுமுன் காலை ஊன்றி சமன்செய்து , " அனகா...! நாம் இருப்பது பரமேஸ்வரரின் ஆலயம் " என்றவனின் குரலும் அவளின் அருகாமையை விரும்பியதில் மெதுவாகவே வெளிவந்தது .


அவன் ஐம்பூதங்களின் சாட்சியாய் என கூறும் வேளையிலே அங்கு வந்துவிட்ட சந்திரிகா , அடுத்து அவன் கூறியதில் உறைந்திருந்தவள் இப்பொழுது உணர்வு வர , "அண்ணா தாங்கள் என்ன கூறினீர்கள் ?? இவர்களை தாங்கள் மணமுடித்துவிட்டீர்களா என்ன??" என அதிர்ந்தாள் .


தங்கையின் வரவை எதிர்பார்த்திருந்த சந்திராதித்யனும் பதட்டம் எதுவும் இன்றி , "ஆம் சந்திரிக்கா..! நாங்கள் நாளை விடியலில் அனகாவின் இருப்பிடத்திற்கு செல்ல உள்ளோம். பரம்பொருள் பரமேஸ்வரரிடமே எங்களின் காதலை ஒப்புவித்து, அவரின் ஆசியுடனே இங்கிருந்து செல்ல விளைந்தேன் " என்றவன் தனது முடிவை உறுதியாய் சொன்னான்.


அவனின் முடிவை ஏற்கனவே யூகித்திருந்ததால் அண்ணனின் மகிழ்வான வாழ்வே தனது நிம்மதி என எண்ணிக்கொண்டவள் , அவனின் முடிவை ஏற்றுக்கொள்வது போல் புன்னகைத்தாள் .


அங்கு ஒருவிதமான அமைதி தவழ அதை கலைக்க விரும்பிய சந்திரிக்கா , " அண்ணா ...! இது உனது கழுத்தில் இருந்த சங்கிலி அல்லவா ?? இது வேறொருவர் உனக்கு அளித்ததுதானே ...இதை எதற்காக இவர்களுக்கு அணிவித்தாய் ??" என்று இச்சாதாரி நாகங்களின் இனத்திற்க்கே ராஜாவாக வேண்டியவன் , தனது மனைவிக்கு அடுத்தவரின் உடமையை அளிக்கும் அளவிற்கு ஒன்றும் அற்றவனாகிவிட்டானா தன் அண்ணன் எனும் ஆதங்கத்துடன் கேட்டாள்.


அப்பொழுதுதான் அவன் அணிவித்த சங்கிலியை பார்த்த அனகா , சந்திரிகா கேட்ட அதே கேள்விகளை கண்களில் தாங்கியபடி சந்திராதித்யனை நிமிர்ந்து பார்த்தாள்.


கண்கள் கலங்க தொண்டையை செருமிக் கொண்டவன், " இது ...இது என் உடன்பிறவா தங்கையின் ஆசை ....அவள் அணிந்திருந்த சங்கிலியை நான் அணிந்திருந்ததுடன் ஒன்றாய் மாற்றியவள் , என்னவள் என்னை தேடிவரும் தருணத்தில் அவளிற்கு இதை அணிவித்து மனைவியாய் ஏற்கவேண்டும் என்பது அவளது இ....இறுதி...ஆசை " என்றவனின் கரங்கள் பற்றிருந்த அனகாவின் கைகளை மேலும் இறுக்கியது .


அவனின் கரத்தின் மேல் தன் மற்றொரு கரத்தை வைத்தவள்... சிறு தயக்கத்துடன் , "டாமினி...டாமினி..க்கு என்ன ஆச்சி ??" எனக் கேட்டாள்.


அவன் தாடை இறுக பற்களை கடித்தவன் மௌனமாய் இருக்க , " எனக்கு புரியுதுங்க உங்களோட வலி ...ஆனா சின்னவயசுல இருந்து கூடவே இருந்தவ திடிர்னு ஒருநாள்ல மொத்தமா விட்டு போனதுமில்லாம , அதுக்கு காரணமும் தெரியாம நான் தவிச்சது ரொம்ப அதிகம்ங்க...சொல்லுங்க ...அவளுக்கு என்னாச்சி ப்ளீஸ் சொல்லுங்க " என கண்ணீர் ததும்ப அவனை உலுக்கினாள் .


"சொல்லு சொல்லு என்றால் என்ன சொல்வது ?" என அவளின் கைகளை உதறியபடி ஆவேசமாய் கத்தியவன் ,


"சிறுவயது தொட்டே பார்க்கும் வேளைதனில் அனைத்திலும் இதழ்களில் சிரிப்புடனே பார்த்தவளை ...அந்த சிரிக்கும் இதழ்கள் இருந்த அடையாளம் தெரியாமல் கிழிந்து , பாசத்துடன் பார்க்கும் கண்கள் இறப்பை வேண்டி யாசகத்தை சுமந்தபடி ,பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்தால் உடலின் ஒவ்வொரு அணுவும் வலியை உணர்ந்தபடி புயலில் சிக்கிய சிறு கொடியாய் என் கண்முன்னே முழுதாய் சிதைந்து போய் படுத்திருந்தவளின் நிலையை எவ்வாறு சொல்ல சொல்கிறாய் "


அவன் சொல்லியதில் அதிர்ந்து வாய்பொத்தி சிலையாய் சமைந்தவள் , "யார் ..?? யார் செய்தது ?" என தடுமாற ,


இக்கேள்வியில் அவனின் கண்களிலும் கண்ணீர் பெருகெடுக்க "யாரா?? ஆ...ஆறு பேர் .." என்றவன் "ஆஆஆ" என இயலாமையில் கத்தியபடி இடதுகையை அருகிலிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான் .


"அய்யோ... ...டாமினி...!" என இப்பொழுது வாய்விட்டே கதறிய அனகா ,


"யாருங்க....?? எப்படிங்க எப்படிங்க அவளுக்கு இப்படி நடக்கலாம்??? .ஒரே பொண்ணுன்னு வலினா என்னனு கூட அவளுக்கு தெரியாத மாதிரி அங்கிளுயும் , ஆண்டியும் அவளை பார்த்து பார்த்து வளர்த்தாங்கங்க...அவ எப்படி...எப்படி தங்கிகிட்டா...என்னால நினைச்சிக்கூட பார்க்க முடிலையே...அவளுக்காக நம்ப எத்தனையோ பேர் இருந்தும் அவளுக்கு எப்படி இப்படி நடந்துச்சு .அய்யோ...! அவ தனியா அவங்க கிட்ட மாட்டி அந்த சித்திரவதை எல்லாம் எப்படி தாங்கிகிட்டா...நரகத்தை அனுபவிச்சிருப்பாளே " என கதறித்துடித்தவளை தடுக்கமுடியாமல் சந்திராதியானும் அன்று மருத்துவமனையில் டாமினியின் நிலை கண்டதை எண்ணி புழுவாய்த் துடித்தான் .


இருவரின் நிலை கண்ட சந்திரிக்காவிற்கும் மனம் கலங்கி இதுவரை பார்த்தே அறியாத டாமினிக்காய் கண்ணீர் சிந்தினாள்.


அண்ணன் சொன்னதை கேட்டவளிற்கு , அவனின் உடன்பிறவா தங்கைக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டும் இந்த ஒருவருடமாய் அவன் அமைதியாய் இருந்தான் என்பதை நம்ப முடியாதவள் , " அண்ணா ...! அந்த ஆறு பேரோட உயிரும் துடித்துடிக்க வச்சி தான பறிச்ச??" எனக் கேட்டாள்.


அவளின் கேள்வியில், தங்கை தன் செயல்களை எப்பொழுதும் சரியாய் கணிப்பதை எண்ணி அவ்வேளையிலும் மனதில் மெச்சிக்கொண்டவன் தன் அழுகையை நிறுத்தி புருவம் சுருங்க ," அன்னிக்கு ...ந...நம்ப வந்த வண்டில இ....இரு ...இருந்தது..??" என அனகா விடை அறிந்தே கேட்க,


"ஆமாம்" என கண்களை மூடித் திறந்தவன் , சந்திரிகாவின் கேள்விக்கு பதில் சொல்வது போல் அவளின் புறம் திரும்பியவன் ,


"எப்படி சந்திரிகா ??? எப்படி என் தாயின் வயிற்றில் பிறக்காத போதிலும் "அண்ணா" என்று உரிமையுடன் அழைத்து என் வாழ்வின் வானவில்லாய் தோன்றி மறைந்தவளின் மரணத்திற்கு எவ்வாறு நான் பதில் செய்யாமல் இருப்பேன்??? என்றவன் தொடர்ந்து,


"சிறு கொடியில் பூக்கும் பூ தன்னை சுற்றிலும் மணம் பரப்பி அவ்விடத்தை ஆள்வது போல் .....சிறுபிள்ளைபோல் எப்பொழுதும் சிரித்துக்கொண்டு ... மென்மையாய் தன்னை சுற்றியிருப்பவர்களின் மனங்களை அன்பால் ஆண்டவளை தங்களின் அந்த நிமிட சுகத்திற்காய் கால்களில் போட்டு மிதித்து கசக்கியவர்களுக்கு மனிதர்களின் சட்டம் வழங்கிய தண்டனை வெறும் தூக்கு " என்றவனின் இதழ்கள் கேலியாய் வளைந்தது .


அவனின் கேலிக்கு பதில் எவ்வாறு அளிப்பது ??


கரு சுமக்கும் நாள் தொட்டு ஒவ்வொரு நிமிடமும் , ஆசைஆசையாய் காத்திருக்கும் பெற்றோரிடம் ..சிறு மொட்டாய் பெண்ணவள் பிறக்க, அந்நொடி தொட்டு சிறு தூசும் அவளின் மேனி தீண்டாமல் அன்னை தன் அணைப்பில் தாங்கிக்கொள்ள... பிறந்த பெண்ணவளை இரண்டாம் தாயாய் கருதும் தந்தை அவள் ஒருவளை மட்டும் தன் உலகமாய் கொண்டு பார்த்து பார்த்து அனைத்தும் செய்து ... மகள் பருவம் அடைந்தபின்பும் சிறுகுழந்தையாகவே வலி என்பதை அறியாமல் வளர்க்க ... யார் என்றே தெரியாத கேவலம் சதைக்கு நாக்கை தொங்கபோட்டுக்கிட்டு அலையுற ******பரதேசி நாயுங்க வெறும் உடல் சுகத்துக்காக பெத்தவங்க பொத்தி பொத்தி பாதுகாத்த பொக்கிஷத்தை களவாடி சித்திரவதை செய்ஞ்சி , வலினா என்னனே தெரியாதவளுக்கு நகரத்தையே கண்ணு முன்னாடி காட்டுவானுங்க ...ஆனா இவனுங்களுக்கு தண்டனை வெறும் தூக்கு ...அதும் ஆதாரத்தோடு நிரூபிச்சா மட்டுமே , அதும் உடனே நடக்கும்னு நம்ப கனவில்கூட தப்பா நினைச்சிடக் கூடாது .


அது போல் தான் டாமினியின் வீட்டினர் தங்களின் மகளிர்க்கான நியாயத்தை தேடி சட்டத்திடம் செல்ல அதுவோ அந்த நியாயத்தை குற்றவாளிகளிடம் விலை பேசிக்கொண்டிருந்தது .


கேலியாய் உதடுகளை வளைத்த சந்திராதித்யன் , "அந்த நாய்ங்களுக்கு அன்னிக்கு நடந்தது வெறும் அரைமணி நேர சுகமா இருக்கலாம்...ஆனா பாதி உசுரோட கிட்டத்தட்ட பதினோரு நாள் தோல் எல்லாம் கிழிஞ்சி ...வாழவும் முடியாம சாகவும் முடியாம தவிச்ச டாமினிக்கு அது நரகம் ...அவகூடவே இருந்தும் அவ வலிக்குதுன்னு வாய் திறந்து கூட சொல்லமுடியுமா துடிக்குற அப்போல்லாம் அவளுக்கு நரகத்தை காமிச்சவங்களுக்கு நான் நரகத்தை காட்டணும் நினைச்சேன் ..... டாமினி நம்பள விட்டு போன அடுத்த நாள்ல இருந்து அவனுங்க ஒவ்வொருத்தனையும் அடுத்தடுத்து என்னோட சக்திகளை வச்சி துடிதுடிக்க வச்சி கொன்னேன் . முதல் நாலு பேர கொன்னுட்டு அவங்களா தூக்கு போட்டுக்கிட்ட மாதிரி வெளியுலகத்துக்கு காட்டினேன் ..அன்னிக்கு உன்னை கூட்டிட்டு வந்தப்போ வண்டில இருந்தது அஞ்சாவது ஆளோட பிணம் தான். அவனை தூக்குல தொங்க வெக்கமுடியாம போனதுல மலைல இருக்க பருந்துகளுக்கு இரையாய் மாத்திட்டேன். "


- என அனைத்தும் சொன்னவன் கொலைகாரனாக தோன்றாமல் , அசுரர்களை வதம் செய்யும் கடவுளின் அவதாரமாய் தோன்றினான் அனகாவின் கண்களுக்கு .


அண்ணனின் செயலில் சந்திரிகா ஒரு பெண்ணாய் ...இப்படி ஒருவனுடன் பிறந்ததற்கு பெருமை பட , அவன் சொல்லியதில் அனகாவிற்கு ஓர் சந்தேகம் தோன்றியது.


"ஆ..ஆறு பேர்னு சொன்னிங்க ...இன்னும் ஒருத்தன் என்ன ஆ...ஆ...னா...ன் ??" எனக் கேட்டவளின் கேள்வி சந்திராதித்யனின் முகம் ரத்த சிவப்பாய் மாறி கண்கள் கனலானதில் வார்த்தைகள் தடுமாறி தந்தியடித்தது .


ஏற்கனவே அழுதழுது சோர்ந்திருந்தவள் , இவனின் திடீர் மாற்றத்தில் தடுமாறி ஓரடி பின் வைத்து சரிய போக ,அதை பார்த்த சந்திரிகா அவளை தங்குவதற்குள் அனகாவை தன் வலக்கரத்தில் வளைத்து தன்னுடன் அணைத்துக்கொண்டான் சந்திராதித்யன் .


அவளை அணைத்தபோதும் தன் கோபத்தை கொஞ்சமும் குறைத்துக் கொள்ளாதவன் ...பற்களை கடித்தபடி , " சந்திரிகா ...! நீ அடிக்கடி சொல்வாய் அல்லவா மனிதர்கள் மிகவும் அன்பானவர்கள் என்று.. ஒரு பெண்ணை கூட்டாய் சேர்ந்து தங்களின் கீழ்த்தரமான எண்ணத்திற்கு பொறியாய் ஆக்கும் பொழுது தெரியாத அந்த **** வனின் வயது ...அவன் செஞ்சதுக்கு தண்டனை குடுக்குறப்போ சட்டத்தை மதிக்கிறவங்க கண்ல பட்டு ...அன்பு பெருக்கெடுத்ததுல அவன் பால்குடிக்குற குழந்தை , அதுனால அவனுக்கு தூக்குலாம் இல்லனு மூணு வருஷம் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளில இருக்கணும்னு முதல் நாள் கேஸ் அப்போவே சொல்லிட்டாங்க "


மனிதர்களுடன் பல வருடங்களாய் தொடர்பிலிருந்த சந்திராதித்யன் கோபத்தில் பேசிய வார்த்தைகள் பாதிக்கு மேல் சந்திரிகாவிற்கு புரிந்திருக்கவில்லை .


இப்பொழுதும் அவன் சொன்னது புரியாமல், "அந்த ஆறாவது நபர் என்ன ஆனான் ??" என்ற கேள்வியுடன் அனகாவை பார்த்தாள்.


" நீ அறியமாட்டாய் சந்திரிகா..! இந்திய சட்டப்படி ஒருவன் எந்த குற்றம் செய்திருப்பினும்.. அவனின் வயது பதினெட்டின் கீழ் இருப்பின் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளி என்னும் இடத்திற்க்கே அனுப்புவார்கள் " என அவ்வேதனையிலும் சந்திரிகாவிற்கு புரியும்படி விளக்க ,


அவள் சொல்லியதில் வியந்த சந்திரிகா , " அவ்வாறெனில் அவர்களுக்கு தண்டனை என்று எதுவுமில்லையா ??இது எவ்வாறு சரி ஆகும்" எனக் கேட்டாள் .


"அது தான் மனிதர்களின் சட்டம் சந்திரிகா. இதில் இன்னும் சிறப்பானது தண்டனை பெற்றவனை ஜாமீன் என்ற பெயரில் வெளிவிடுவது " என குறுக்கிட்ட சந்திராதித்யன் ,


"ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்த அறுவருக்கும் தண்டனை ஒன்று தான். அவன் இறப்பு என்கையால் நேர வேண்டும் என்றுதான் அவனுக்கு அந்த ஜாமீன் கிடைத்திருக்கிறது .இதுவே ஈசனின் சித்தம் போலும் "என்றவனை குறுக்கிட்டு ,


"என்ன சொல்கிறீர்கள் " என அனகாவும், சந்திரிகாவும் ஒரே நேரத்தில் கேட்டனர்.


"இன்று இரவு அவனுக்கான இறுதிநாள் என நான் தீர்ப்பெழுதி விட்டேன். அதை செய்தும் முடிப்பேன் " என சூளுரைத்தவன், தன் கைக்குள் இருந்தவளிடம் ,


"அனகா ...! நான் உன்னிடம் முழுதாய் என்னை ஒப்படைக்கவே எண்ணுகிறேன் ..நாளை முதல் என் ஒவ்வொரு செயல்களும் உன்னை பொறுத்தே உனக்காகவே அமையுமடி ...! அதனால் தான் நான் இத்தனை நாள் உன்னை விட்டு விலகி சென்றேன் .இன்று ஒரு நாள் உன்னை பிரிந்து செல்ல எனக்கு அனுமதி அளி.. இன்று அவனுக்கு தண்டனை அளித்த மறுநொடி நான் உன்னிடம் வந்துவிடுவேன் அனகா ..! இப்பொழுது எனக்கு விடை கொடு " என தான் செய்யபோகும் காரியத்தில் மிகவும் உறுதியுடன் கேட்டான்.


காதலை சொல்லி கைப்பிடித்த நொடியில் ஆரம்பித்து அடுத்தடுத்து அறிந்துகொண்ட விஷயங்களில் மனம் நிலைகொள்ளாமல் அலைபுற , அவன் விடைகொடுக்க சொல்லி கேட்ட நொடி அவளின் மனம் தடத்தடத்தது .


அவனுடன் மீண்டும் இணைவதற்கு நெடுநாள் ஆகும் என்பதாக ஓர் எண்ணம் தோன்ற , தன்னை தன் கைவளைக்குள் வைத்திருந்தவனை தன்னால் முடிந்தவரை இறுக கட்டிக்கொண்டாள் .


**************************************************



இரவு மணி பதினொன்றை கடந்திருக்கும் வேளை :


"நாம் இவ்வாறு அண்ணனிடம் தெரிவிக்காமல் ...அவர் சம்மதம் இல்லாமல் இவ்வளவு தொலைவு வந்தது தவறாகும் அனகா." என சுற்றிலும் கவிழ்ந்திருக்கும் இருட்டு பழகியது தான் எனினும் இதுவரை வந்திடாத மனிதர்களின் உலகில் நுழைந்ததில் சந்திரிகாவின் மனதை பயம் கவ்விக்கொண்டது .


"உனக்கு சொன்னா புரியாது சந்திரிகா...! உங்க அண்ணன் கிளம்பியதுல இருந்தே என் மனசு ஏதோ தப்பு நடக்கபோறதா பதறுது ...அதுதான் உங்க அண்ணன் நம்ப கிட்ட சொன்ன ஊருக்கே கிளம்பலாம்னு பார்த்தா என்னை தனியா விட முடியாதுனு நீயும் கூட வந்துட்ட "


-என இனி நிகழப்போகும் விபரீதங்களை அறியாமல் அவர்களின் பாதுகாப்பு கவசமாய் இருந்த அக்காட்டை விட்டு வெளியேறி நீண்டதூரம் வந்திருந்தனர் .


"ஆஆ....! என்னால இனி முடியாது அனகா..! என்னால நடக்கமுடியலை " எங்கு சென்றாலும் ￰ஊர்ந்தே சென்றிருந்த சந்திரிகா ...நடந்ததே அனகாவுடன் இருந்த வேளைகளில் தான் ...அவ்வாறு இருக்கையில் இவ்வளவு தொலைவு நடந்ததில் அவள் சோர்ந்துவிட்டாள்.


அவளின் சோர்வை கண்ட அனகா , அவ்வழியில் ஏதேனும் வண்டி வருகிறதா என பார்த்தாள்.


சிறிது நேரத்திலே ஓர் மாருதி வேகமாய் வர ..பாதையின் நடுவில் சென்று நின்றவள் வண்டியை நிறுத்தும்படி கைகளை ஆட்டினாள் .


அவள் செய்வதை கண்ட சந்திரிகா , "என்ன செய்கிறாய் அனகா??" என கேட்டபடி அவளை தொடர போக... அவ்வழியில் ஓர் கீரி பாய்ந்தோட அச்சத்தில் அலறியபடி பாதையிலிருந்து ஒதுங்கி அங்கு ஓரமாய் இருந்த மரத்தின் பின் ஒழிந்தாள்.


இவளின் சத்தத்தில் திரும்பிய அனகா , இவளின் செய்கையில் புருவம் சுருங்க , " சந்திரி்கா...!" என அழைக்க போனாள்.


அதற்குள் அவளின் அருகில் அந்த மாருதி வந்திருந்த... அதன் பின்னிருக்கையிலிருந்த ஒருவனின் கரம் அவளின் வாயை பொத்தி அவளை காருக்குள் இழுத்துப்போட கார் வேகம் எடுத்தது.


கண் இமைக்கும் நொடியில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க சந்திரி்கா செய்வதறியாது நின்றிருந்தாள் .


அதே நேரம் அதே ஊரின் மற்றோரு மூலையில் இருந்த இடத்தில் நீண்ட நேரமாய் காத்திருந்த சந்திராதித்யன் , அவன் தேடிவந்தவனின் சுவடே அங்கு இல்லாததில் ..." இப்பொழுது என்ன செய்வது " என குழம்ப ஆரம்பித்தவனின் மனம் கரணம் இல்லாமல் வேதனையில் ஆழ்ந்தது .


அனகாவிற்கு ஏதோ ஆபத்து என்று தோன்ற விரைவாய் அவளை பார்க்கவேண்டுமென நினைத்தவன்.. நொடியில் நாகத்தின் உருவிற்கு மாறி வேகவேகமாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தான் தன்னவளை தேடி.


மனம் முழுக்க அவளின் முகமும் , அவளுடன் கழித்த நொடிகளுமே மாறிமாறித் தோன்ற தவிப்புடன் விரைவாய் சென்றுக் கொண்டிருந்தவனை தடுத்து நிறுத்தியது ஒரு பெண்ணின் வலியுடன் கூடிய முனங்கல் .


தூரத்தில் இருவர் இருசக்கர வாகனத்தில் செல்வதை கண்டவன் ஓர் நொடி அவ்வண்டியையும் , அதிலிருப்பவர்களையும் ஆழமாய் பார்த்த அவனின் கண்கள் அடுத்து முனங்கல் வந்த திசையை பார்த்தது .


மனித உருவிற்கு மாறியவன் அருகில் சென்று பார்க்க , சுற்றிலும் ரத்தம் பெறுகி இருக்க... ஆடைகள் கிழிந்து... முதுகு புறத்தின் நடுவில் தோல் வெந்து உடலை குறுக்கியபடி கிடந்த பெண்ணவளை கண்ட நொடி மனதில் ஒருவருடத்திற்கு முன்பான டாமினியின் நிலை நினைவுவர விரைந்து அவளை கைகளில் ஏந்திக்கொண்டான் .


அப்பொழுதும் இவனின் தொடுகையை உணர்ந்து பெண்ணவள் உடலை சுருக்கி முனங்க , அதை கண்டவனின் கண்களில் கண்ணீர் வழிந்து அவளின் முகத்தில் விழுந்தது .


பொசுங்கிய முகத்தினில் இவனின் கண்ணீர் பட்டு எரிச்சல் தோன்ற," ஸ்ஸ்" என்ற அவளின் முனங்களில் அவளின் முகம் பார்த்தவனுக்கு அவளின் கோலம் கண்டு மனம் கொதித்தது .


பெண்ணாய் பிறக்கும் அனைவரும் ஆண்களிடம் தோற்பதுதான் விதியோ. அந்த தோல்வி அன்பால் இருந்தால் இறுதியில் வெல்வது அவளாய் இருப்பாள் . அதே அந்த தோல்வி ஆணின் அவனின் ஆண்மையின் கர்வம் கொண்டு அமைந்தால் பெண்ணவளின் கதி இதுதான் போலும்.


எப்படியோ அவளை சுமந்து சென்ற சந்திராதித்யன் , அங்கு இருந்த ஒரே ஒரு பெரிய வீட்டை அடைந்து அவர்களின் உதவியை நாடினான் .


அங்கு சென்ற பின்பே அது ஓர் மருத்துவமனை என்றறிந்தவன் தன் கைகளில் இருந்தவளை அங்கு ஒப்படைத்தான் .


அங்கு அவளின் நிலை கண்டு இவனை ஆராய்ச்சியாய் பார்த்தவர்கள் இவனின் தோற்றத்தில் ..அவனை பற்றி தவறாய் ஏதும் தோன்றாததில் அவளை பற்றி ஏதேனும் அறிவானா ?? என கேட்டனர் .


அவனோ எதையும் கவனிக்க தோன்றாமல் தன் கைகளை பற்றியபடி இருந்த அப்பெண்ணின் கைகளையே பார்த்தவனுக்கு... அவனின் டாமினியின் நினைவே மீண்டுமாய் தோன்ற , வாய் தானாய் "டாமினி" என்றது .


-காதலாகும் ....



இறுதி அத்தியாயம் சனிக்கிழமை அன்று பதிவிடபடும் ...உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே...
 

Thoshi

You are more powerful than you know😊❤
(இறுதி)அத்தியாயம் 14:



சூர்யா யார் என்றே தெரியாமல் மருத்துவமனையில் சேர்த்தவன் சொல்லிய 'டாமினி' என்ற பெயரே மருத்துவ குறிப்பில் பதிவானது .


அப்பெண்ணின் நிலையறிந்த பின் செல்வோம் என மருத்துவமனையின் வாயிலில் வந்து நின்றவனின், மனம் மீண்டும் தன்னவளை தேட," அவளிற்கு எதுவும் ஆகியிருக்க கூடாது பரமேஸ்வரரே "என வேண்டியபடி இருந்தவனின் முன் முகம் முழுக்க கலக்கத்தை சுமந்தபடி நின்றாள் சந்திரிகா.


அவளை அவ்விடத்தில் எதிர்பார்க்காதவன் முதலில் திகைத்து , மனதின் தேடலுக்கு விடையாய் அனகாவும் உடன் வந்திருப்பாளோ என தேடியவனின் கண்களில் தங்கையின் கலங்கிய முகம் தாமதமாகவே விழுந்தது .


பதட்டத்துடன் சந்திரிகாவின் தோள்களை பற்றியவன் , " அன..அனகாவிற்கு என்ன நேர்ந்தது ??" எனக் குரல் காற்றாய் வெளிவர கேட்டவனின் மனம் , அவளிற்கு ஒன்றுமில்லை என்ற பதிலை எதிர்பார்த்தது.


அவனின் கேள்வியில் அவனை விட அதிக பதட்டத்துடன், " அண்ணா...! அப்போ நீ தூக்கிட்டு வந்தது அவங்களை இல்லையா ??" எனக் கேட்டாள்.


அவள் சொல்லியதில் அவன் இதயம் தாளம் தப்ப," என்ன உளறுகிறாய் சந்திரிகா..!! நான் எதற்கு அவளை இங்கு தூக்கிக்கொண்டு வரவேண்டும் ?? முதல் நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் ??" என உறுமினான் .


அவனின் கோபத்தை அறிந்திருந்தவளாய் நடுக்கத்துடன் , தாங்கள் அவனை தேடி இங்கு நடந்தே வந்தது , நடுவில் அவள் கீரிக்கு பயந்து அனகாவை விட்டு தள்ளி நின்றவேளையில் , ஓர் மாருதி வந்து அனகாவை கடத்தி சென்றது என அனைத்தும் சொல்லியவள் ,


"நான் விரைந்து அவர்களை தொடர்ந்து இவ்வளவு தொலைவு வந்தபின் ..எதிரில் நீ கைகளில் ஓர் பெண்ணை ஏந்தியபடி இதனுள் நுழைந்ததை கண்டு , நீ அனகாவை தான் தூக்கிவருகிறாய் என்று எண்ணிவிட்டேன் அண்ணா...!" என தவறிழைத்ததை உணர்ந்து அழுதபடி கூறினாள்.


"மனிதர்களை போல் உனது சித்தமும் கலங்கியதா என்ன? உன் கண் முன்னாள் கடத்தப்பட்டவளை தொடர்ந்து இத்தனை தூரம் வந்திருப்பவள் ,எதிரில் வரும் நான் எவ்வாறு அவளை ஏந்தியிருப்பேன் என நொடி நேரம் யோசித்திருந்தால் அந்த வண்டியை தவற விட்டிருக்க மாட்டாய் சந்திரிகா "


அவர்கள் இருவரின் செயலால் ஏற்பட்ட விபரீதத்தில் கோபமாய் ஆரம்பித்த சந்திராதித்யன் குரல் தன்னவளுக்கு என்ன நேர்ந்ததோ என்னும் தவிப்பில் உடைந்துபோனது.


அப்பொழுது அவனை தேடிவந்த செவிலியர் "டாமினியின்(சூர்யாவின்) உயிர்க்கு ஆபத்தில்லை " என சொல்லி செல்ல ,அந்நிலையிலும் அப்பெண்ணிக்காய் கடவுளிடம் நன்றி உரைத்தவன் தன்னவளை தேடிச் சென்றான்.


அண்ணனுடன் சேர்ந்து சந்திரிகாவும் தேட... நேரம் தான் கடந்ததே தவிர அனகாவை அவர்களால் கண்டுப் பிடிக்கமுடியவில்லை .


நீண்ட நேர தேடலுக்கு பின் இருவரும் அருகிலிருந்த சிறு கிராமத்தை அடைய சந்திராதித்யனின் மனம் தன் இணை அருகிலிருப்பதை உணர்ந்து கொண்டது .


"சந்திரிகா...! என் மனம் உண்மையை உரைக்குமானால் அனகா இவ்வூரில் தான் இருக்க வேண்டும்" என சொல்லியவனின் கண்கள் வேகவேகமாய் நாலாபுறமும் சுழன்றது.


தனது நுகரும் சக்தியால் அனகாவின் வாசனையை அறியமுற்பட்ட சந்திரிகா , "அண்ணா...! அனகா இந்த வீட்டினுள் இருப்பதாய் எண்ணுகிறேன் . இறுதியாய் அவர்களுடன் இருந்ததில் அவரின் வாசம் இன்னும் எனதுணர்வுகளில் கலந்திருப்பதால் என்னால் அவர்களின் வாசத்தை இங்கு நுகர முடிகிறது " என சந்தோஷித்தாள்.


இருவரும் விரைந்து அவ்வாயிலுக்கு வர , உள்ளிருந்து தெறித்த நெருப்பு கங்கங்கள் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தது .


இருவரும் அதை தாண்டிச் செல்ல முற்பட நெருப்பு கங்கங்கள் இன்னும் அதிகமாய் உள்ளிருந்து தெறித்தது .


தன் சக்திகளை கொண்டு நெருப்பு கங்கங்கள் தங்களை தீண்டாமல் சந்திராதித்யன் தடுத்து கொண்டிருக்க , அதன் சூட்டை நீண்ட நேரம் தாங்க முடியாத சந்திரிகாவின் உடல் வலுவிழந்து பாம்பின் உருவிற்கு வந்தது .


அவளின் நிலை கண்ட சந்திராதித்யனுக்கு , தன்னவளை தேடி உள் செல்வதா ?? அல்ல தங்கையின் நலம் பேணுவதா ?? என தடுமாற்றம் தோன்ற ,


வழக்கம்போல் அண்ணனின் மனம் அறிந்துகொண்ட சந்திரிகா, " உள்செல் அண்ணா ...! நான் வேறு ஏதும் வழிகள் உள்ளதா என பார்க்கிறேன் " என தங்களின் மொழியில் சொல்லியவள் அவன் தடுப்பதற்கு முன் அவ்வீட்டை சுற்றி ஊர்ந்து செல்லத் தொடங்கினாள் .


தங்கையை பார்த்திருந்தவனின் காதில் விழுந்தது ,"குழியா.....!! " என்ற தன்னவளின் வலியுடன் கூடிய கதறல் ஒலி.


அவ்வீட்டினுள் இருந்தே அவளின் குரல் கேட்க இத்தனை நேரம் அவள் இங்கு இருக்கிறாளா ?? இல்லையா ? என்பது தெரியாமல், ஒன்றும்புரியா புதிருக்குள் நுழைந்ததை போல் தவித்திருந்தவனுக்கு ... சிறு குறிப்பாய் அவளின் குரல் கேட்க, அடுத்தநொடி நெருப்பு கங்கங்கள் உடலை சுட்டு பொசுக்குவதை கூட உணரமறுத்தவன் அவ்வீட்டினுள் பாய்ந்திருந்தான் .


எங்கிருந்து தீ பற்றியது என்பதை அறியமுடியாதபடி அவ்வீடு முழுவதும் தீயில் குளித்திருக்க , அதன் சூட்டில் தன் பலம் சிறிது சிறிதாய் குறைவதை உணர்ந்த சந்திராதித்யன், ஈசனை தன் மனதினுள் நிறுத்தி தனது சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டினான் .


நாகங்களின் மிகப்பெரிய பலவீனம் நெருப்பு. சீறிக்கொண்டு படமெடுத்தாடும் நாகத்தையும் ஒரு சிறு தீ கங்கம் அடங்கச்செய்யும். மனித தோற்றத்தை எடுக்கக்கூடிய அற்புதமான சக்தி கொண்ட இச்சாதாரிகளை நாகமணியின் காவலாய் ஒட்டுமொத்த நாகங்களின் அரசர் ஆதிஷேஷர் நியமித்திருக்க, அதை அபகரிக்க முயலும் கயவர்கள் நெருப்பையே தங்களின் ஆயுதம் ஆக்குவார் . தன் வாழ்நாள் முழுக்க சேமித்த சக்திகளை கொண்டே இச்சாதாரியால் அவர்களை வெல்ல முடியும். வெற்றிபெற்று நாகமணியை காப்பாற்றிய போதும் அந்த இச்சாதாரியின் முழு சக்தி ப்ரோகித்தலால் ஆன்ம பலம் முழுதும் குலைந்து தன் வாழ்நாளையும் முடித்துக்கொள்ள நேரும்.


அதனாலே தங்களிடம் ஏகப்பட்ட சக்திகள் இருந்தபோதும் மனிதர்களை எதிரியாய் பாவித்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் சந்திரமதியினர் .


நெருப்பின் நிழலை கூட தீண்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தவன் இன்று அந்நெருப்பிற்கு நடுவில் உடல் தகிக்க தன் சக்திகளை ஒன்று திரட்டி, நெருப்பு உடலை அதிகமாய் தீண்டாதபடி நகர்ந்து அவ்வீடு முழுவதும் தன்னவளை தேடினான்.


அப்பொழுது பின்புறமாய் கார் ஒன்று செல்லும் ஓசை கேட்க, விரைந்து பின்புறமாய் ஓடியவன் ,
அங்கு எவரும் இல்லாமல் போக என்ன செய்வது என விரைவாய் யோசிக்கத் தொடங்கியவனின் செவியை மீண்டுமாய் தீண்டியது தன்னவளின் குரல்.


இம்முறை அலறலாய் அல்லாமல் முனங்களாய் பக்கத்திலிருந்த அறையிலிருந்து கேட்க , வேகமாய் சென்று அக்கதவை தள்ள கதவு சற்றும் அசைந்து கொடுக்காததில் அதை உடைத்தெறிய முற்பட அக்கதவிலும் பரவியிருந்த நெருப்பு அவனை தீண்டியது.


அதில் அவனது இடதுபுற உடல் ஆங்காங்கே பொசுங்கி , உடல் சிறுது சிறிதாய் பாம்பின் உருவிற்கு மாற , பற்களை கடித்து "பரமேஸ்வரரே...! எனக்கு தங்களின் துணை தேவை ...தயை கூர்ந்து உதவி செய்யுங்கள். இன்னும் சில நிமிடங்கள் எனக்கு அருளுங்கள் ஈசனே ...! மனையாளை காப்பது ஆண்மகனின் கடமை அல்லவா ...நான் அறிவேன் எனது இறுதி நொடிகள் நெருங்கிவிட்டது ஆயினும் என் காதல் உள்ளம் என்னவளுக்காய் பதறுகிறது பிரபு ...! "


-என ஈசனிடம் வேண்டியவனின் உடல் பெருமளவிற்கு நாகத்தின் உருவாய் மாறியிருக்க , சில இடங்களில் நெருப்பின் நாக்குகள் தீண்டியதில் தோல் பொசுங்கி வெறும் எழும்பு மட்டும் தெரிந்தபடி , நெருப்பில் மாட்டாமல் விலக எங்கெங்கோ முட்டிக்கொண்டதில் உடலின் சில இடங்கள் ரத்தத்தில் குளித்திருக்க , அதற்குமேல் முன்னேற முடியாமல் சக்திகள் அற்று கதவின் அருகிலே விழுந்திருந்தவன் முனங்களாய் தன் காதலை காப்பதற்க்காய் பரமேஸ்வரரிடம் மன்றாடினான் .


அவனின் மன்றாடல் ஈசனை சேர்ந்ததோ , பாம்பின் உருவிற்கு மாறிக்கொண்டிருந்தவனின் தோற்றம் பாதியில் நின்றது மட்டுமில்லாமல் அவனின் நீண்ட வால் திடீரென துள்ளி அக்கதவில் பட்ட நொடி அது திறந்துகொண்டது .


இடுப்பிற்கு கீழ் பாம்பின் உருவம் வந்திருக்க , பலம் இழந்து கண் மூடி கரைந்துக் கொண்டிருந்தவன் , கதவு திறந்த நொடி அவ்வறையினுள் நுழைந்து தன்னவள் எங்கே என தேடினான் .


அவ்வறையின் மற்றோரு கோடியில் ஓர் உருவம் கவிழ்ந்திருக்க அவ்வுருவத்தை சுற்றி ரத்தம் சூழ்ந்திருந்தது .


அந்த உருவம் அனகா என உணர்ந்த சந்திராதித்யன் , பாதி மனித உடலும் பாதி பாம்பின் உடலும் கொண்டு மெதுவாய் அவளை நோக்கி ஊர்ந்தான் .


சிறிதுசிறிதாய் நெருப்பு அவ்வறையிலும் நுழைந்திருக்க , அனைத்தையும் சுவைத்துவிட தன் நாக்கை நீட்டிக்கொண்டு வந்த பெரும் தீங்கங்கிடம் இருந்து ஒதுங்கியவனின் கழுத்தில் கீறியது அங்கு நெருப்பில் கண்ணாடி வெடித்து துண்டாக்கி அங்கு வீசப்பட்டிருந்த கண்ணாடித் துண்டு .


தன் இறுதி நொடிக்கு இன்னும் நீண்ட நேரம் இல்லை என்பதை உணர்ந்தவன் நெருப்பையும் பொருட்படுத்தாமல் தன்னவளின் அருகில் சென்று சுவற்றில் சாய்ந்தவன் , அடிபட்டிருந்த அனகாவின் தலையை எடுத்து தன் நெஞ்சினில் சாய்த்துக்கொண்டான் .


முன்நெற்றி பிளந்து ரத்தம் வர அதை தன் பொசுங்கிய வலதுகையால் துடைத்தவனின் இடதுகை அவளின் பின்மண்டையின் காயத்தை உணர்ந்தது .


அவனை முதல்முறை பார்த்தபோது விளையாட்டாய் தன்னுடன் வம்பிழுத்து பேசியது, சிறுபிள்ளையாய் இருட்டுக்கு பயந்து தன்னிடம் அடைக்கலமானது , தன் காதலை வெட்கத்துடன் சொல்லி இவனின் பதிலுக்காக காத்திருந்தது என அவளின் அனைத்து பரிமாணமும் நினைவு வர அவளின் இந்நிலையை தாங்கமுடியாதவன் அழகூடமுடியாமல் , தங்களை சூழ்ந்திருக்கும் நெருப்பிடமிருந்து தப்பித்து எவ்வாறு அவளை அங்கிருந்து கூட்டி செல்வது என சிந்திக்க ஆரம்பித்தான்.


அப்பொழுது அவனின் கண்களுக்கு எதிரிலிருந்த குட்டி சுவரும் அதன் பின்புறம் உள்ள வரிசையாய் அடுக்கிவைத்த கண்ணாடிகள் பட்டது.


அந்த சுவற்றின் பின் இதுவரை நெருப்பு பரவாததை உணர்ந்து அனகாவை தன்னுடலுக்குள் பாதுகாப்பாய் புதைத்தபடி சிறுது சிறிதாய் அவ்விடம் நோக்கி நகர்ந்தான்.


அவனுக்குள் புதைந்ததை போல் ஒன்றிருந்தவளுக்கு அவனின் இதயத்தின் ஓசை தெளிவாய் கேட்க , அவளின் வாழ்நாள் முழுதும் கேட்க விரும்பிய அவ்வோசையை மயங்கிருந்தபோதும் அவளின் மனம் உணர்ந்துகொண்டது .


அதில் மேலும் அவனிடம் ஒன்றியவள் , "குழியா...!" என மெல்லியதாய் அழைக்க...அவளின் காதல் அழைப்பு அவனின் செவி தீண்டி கண்ணீர் வரவழைத்தது .


அவளை கவனித்து நொடிகளை வீணாக்க விரும்பாதவன் அவளை இறுக்கிகொண்டு வேகமாய் நகர்ந்தான் .


அதை எல்லாம் உணராத அனகா மயக்கம் சிறிதாய் இருக்கும்பொழுதும் அனைத்தையும் சொல்லிமுடித்துவிட வேண்டுமென தன் மனத்துக்குள்ளே சிறிது நேரத்திற்கு மயங்கிவிடக்கூடாது என நினைத்தபடியே மீண்டுமாய் அவனை அழைத்தவள் ,


"குழியா..! நான் உன்னை ...உன்னை பார்த்தேன்...ஓ...ஒரு...பொ...பொண்ண...நீ தூ...தூ...தூக்..தூக்கிட்டு போன..அந்த பொண்ணு...க்கும் ...நீ...நீ தான் ...நியாயம்...செய்யணும் ...டா...டாமினி .....அத...தான் ..விரும்புவா...நா...நானும் ..சந்...சந்தோஷ... படுவேன் "


என கண்களை திறக்காமலே திக்கி திக்கி பேசியவளின் பேச்சை கேட்டவனிற்க்கு , "இவள் தங்களை தாண்டி தான் இங்கு வந்தாளா ?? பரமேஸ்வரரே ..! நான் என்ன தீங்கிழைத்தேன் ?? என் அருகிலே என்னவளிற்கு அநியாயம் நடந்திருக்க நான் அதை அறியாமல், என்னவளை காக்கமுடியாமல் இருந்திருக்கிறேனே..தங்களை சாட்சியாய் கொண்டே இவளை மணந்தவன் நான்.. எங்களுக்கு இவ் அநீதி இளைப்பது ஏன் ஈஸ்வரா??" என உயிர்போகும் வேதனையுடன் அவர்களின் குலம் காப்பவரிடம் நியாயம் வேண்டினான் .


அவனின் நியாயதிற்கு பதில் கிடைக்காத போதிலும் , அந்த கண்ணாடிகளின் இறுதியில் இருந்த சன்னல் கம்பிகளின் சட்டத்தை உடைத்து வந்த சந்திரிகா அவர்கள் தப்புவிக்க வழியை கிடைக்கச் செய்தாள்.


அவளின் கண்களில் முதலில் தன் அண்ணனின் உருவே தென்பட அவன் தன் இறுதிநொடிகளில் பயணிப்பதை அறிந்தவள் அவனிற்காய் வாய்விட்டு கதறினாள் .


அவளின் கதறலில் வேகமாய் பரவிக்கொண்டிருந்த கொடுந்தீயும் ஓர் நொடி நின்று மீண்டும் பரவ தொடங்கியது .


அவளின் அழுகையை கட்டுபடுத்த சொல்லிய சந்திராதித்யன், அவளிடம் அனகாவை இங்கிருந்து அழைத்துக்கொண்டு செல்லசொல்லி சொல்ல அவள் இவனை விட்டு செல்ல மறுத்தாள் .


நீண்ட நேரம் சமாதானம் சொல்லியும் செல்ல மறுத்த சந்திரிகாவை கண்டவன் , தன்னவளையும் ...உடன் பிறந்தவளையும் காக்க தன் வசிய படுத்தும் சக்தியை தங்கையிடமே பிரகோயித்தவன் , அவர்களை வெற்றிகரமாய் வெளியேற செய்து அச்சந்தோஷத்துடனே தன்னுடன் கைகோர்க்க துடித்துக்கொண்டிருந்த மரண தேவனிடம் தன்னை ஒப்புவித்தான் .


அனகாவை தோளில் சுமந்தபடி அவ்வீட்டை விட்டு வெளிவந்து சிறிதுதூரம் கடந்து அங்கு சாலையின் ஓரம் இருந்த மரத்தினருகில் அவளை சாய்த்தபின்பே சந்திராதித்யனின் வசியம் முறிந்து தன் உணர்வுக்கு வந்தாள் சந்திரிகா.


மரத்தின் மறுபுறம் வந்தவள் அங்கிருந்தபடியே தன் அண்ணன் மரணத்திற்க்கு காரணமான அவ்வீட்டை கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை துடைத்த படியே பார்க்கமுற்பட்டாள்.


பின்புறம் ஏதோ சத்தம் கேட்க , அனகாவை ஒருவன் கைகளில் ஏந்தியபடி அங்கு நின்றிருக்கும் காரில் ஏற்றுவதை கண்டவள் , சற்று முன்புவரை நடந்ததில் பதறி பாம்பின் உருவிற்கு வந்தவள் அவர்களை தொடர்ந்து காரில் ஏறியிருந்தாள்.


"தாங்கள் அவசரப்பட்டு காட்டை விட்டு வந்ததே தன் அண்ணனின் இறப்பிற்கு காரணம் எனக் குற்றவுணர்வு பெருக்கெடுக்க, அவன் உயிர் கொடுத்து காப்பாற்றிய அவனின் காதலை தான் மீண்டும் தொலைத்துவிடுவோமோ??" என தவித்தபடி காரில் ஏறியவளை சிறிதாய் நிம்மதியுற செய்தது அக்காரில் இருந்தவனின் அனகாவிற்க்கான துடிப்பு .


யஷியை கைகளில் ஏந்தியபடி காற்றில் கலந்திருந்த சந்திராதித்யனின் உருவம் இவை அனைத்தையும் நினைத்து பார்க்க ,


விஸ்வநாத்திடம் பேசிக்கொண்டிருந்த மித்ரனும் அதையே சொல்லிக் கொண்டிருந்தான் .


"அன்று சாலையின் ஓரம் யாரோ அடிபட்டிருப்பதை பார்த்து உதவலாம்னு போனா... அங்க நம்ப யஷி அங்கிள். யாரோ மாதிரி ரோட்டோரம் அடிபட்டு ....அவளோட அந்த நிலைமையை என்னால தாங்கவே முடியலை அங்கிள்.அதற்க்கு பிறகு அவளை ஹோச்பிடல்ல சேர்த்தது , தலைல அடிபட்டத்துல கோமாக்கு போனவ சிலமாசம் கழிச்சி பாதி நினைவுகளை மட்டுமே நியாபகத்துல வச்சி முழிச்சதுனு அடுத்து நடந்த எல்லாம் உங்களுக்கு தெரியுமே அங்கிள் ..."


ஆம் அன்று மரத்தடியில் இருந்த யஷியை காரில்
ஏற்றிவந்தது மித்ரன் தான் .இவர்களை தொடர்ந்த சந்திரிகா, அனகாவின் உறவுகளே அவர்கள் தான் என்பதை உணர்ந்து அவள் அவளுக்கு உரிய இடத்தில் சேர்ந்ததில் மகிழ்ந்து தன் அண்ணனிடம் மனத்தால் பேசிய படி தங்கிளடத்திற்கு திரும்பிவிட்டாள்.


ஆயினும் அண்ணனின் நினைவு தோன்றும் பொழுதெல்லாம் அனகாவை சென்று பார்ப்பவள் , குகை வீட்டில் கிடைத்த நாட்குறிப்பையும் திறந்தே பார்க்காமல்..எவரும் அறியாமல் அனகாவிடம் சேர்ப்பித்திருந்தாள்.


சிறுவயது முதல் மனிதர்களின் மேல் அவளே அறியாமல் பிடித்தம் ஏற்பட்டிருக்க , சந்திராதித்யனின் மரணத்தால் அது முழுதும் அவளின் மனதில் இருந்து அழிக்கப்பட்டது . அனகாவை தவிர மனிதர்கள் எவரையும் அவள் பார்க்கவும் விரும்புவதில்லை .


இந்த காலம் தான் எத்தனை விசித்திரம் வாய்ந்தது .நாம் ஆசையாய் ரசித்து பார்ப்பதையே ஒருநாள் வெறுத்து ஒதுக்க செய்துவிடுகிறதே .


இன்று :


ஒருவருடம் முன்பு யஷி தொலைந்து ,பின் மீண்டு வந்ததை பற்றி பேசிகொண்டிருந்த மிதர்னும் , விஸ்வநாத்தும் யஷி வீட்டில் இல்லாததை சிறிது நேரம் கடந்தே அறிந்துக் கொண்டனர் .


அவள் எங்கு சென்றிருப்பாள் என பதறிய மித்ரனுக்கு சிறிது நேரதிற்க்கு முன்பு தன்னை வேகமாய் உலுக்கிய காற்றின் உருவம் தற்பொழுதே தோன்ற, தன்னை தானே திட்டிக்கொண்டவன் , "யஷிக்கு எதுவும் ஆகக்கூடாது " என வேண்டியபடியே வீட்டை விட்டு வெளிவந்து, காரைக் கூட எடுக்காமல் பைத்தியம் பிடித்தவன் போல் அவளை தேடத் துவங்கினான் .


அவனை தொடர்ந்து தானும் சுதாரித்த விஸ்வநாத் , தன் மகளையும் ..மகன்போன்ற மித்ரனையும் எண்ணி கடவுளிடம் அவர்கள் இருவருக்கும் எதுவும் நேரக்கூடாதென வேண்டியபடி தனது தேடுதலை துவங்கினார்.


அவர் வேண்டுதலுக்கு கடவுள் செவிசாய்த்தர் போலும் ,அங்கு அந்த எரிந்த வீட்டினுள் இத்தனை நேரம் மயங்கிக்கிடந்த யஷி கண்களை திறக்க முயற்சித்து வெற்றிபெற்றிருந்தாள்.


காற்றுடன் கலந்திருக்கும் சந்திராதித்யனால் நீண்டநேரம் அவளை ஏந்த முடியாமல் போக அன்று போல் இன்றும் அந்த கண்ணாடிகளுக்கும் , குட்டி சுவருக்கும் நடுவிலிருக்கும் இடத்தில் அவளை கிடத்தியிருந்தான் .


கண்விழித்த யஷிக்கு தன் முன் மின்னிக்கொண்டிருந்த பச்சை நிற கண்கள் மட்டும் தெரிய அதையே விடமால் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ...இ்த்தனை நாளாய் அரைகுறையாய் வந்து சென்ற காட்சிகள் அனைத்தும் தெளிவாய் நினைவு வந்தது .


அவனுடன் சேர்த்து தன் காதலையும் அதன் நினைவுகளையும் ஒருவருடத்திற்கு முன்பு தொலைத்தவள் ...எந்தஇடத்தில் அவை அனைத்தையும் தொலைத்தாலோ அதே இடத்தில் அவை அனைத்தும் தன்னிடம் சேர்ந்ததில் உள்ளுக்குள் மகிழ்ச்சி அலையலையாய் பெறுக ஆசையுடன் அவனை கட்டிக்கொள்ள முயன்றாள்.


ஆனால் காற்றோடு கலந்திருந்தவனின் நிழல் உருவம் அவளின் ஆசைக்கு தடை போட , ஆசைப்பட்ட பொம்மையை தொடமுடியாமல் தவிக்கும் குழந்தையாய் உதடுகளை பிதுக்கியவள் அவனின் முகம் பார்த்தாள்.


அவளின் தவிப்பான முகத்தை பார்த்த சந்திராதித்யனுக்கு அவளின் தவிப்பை உடனே களைய தோன்ற , " உன்னால் முடியாத போதும் என்னால் உன்னை தொடமுடியும் அனகா என்னை உணர முயற்சி செய் "என்றபடி காற்றோடு கலந்திருந்தவன் அவளை சுற்றி படர்ந்தான் .


அவனின் தொடுகையை அவளால் உணரமுடியாத போதும் அவனின் வாசம் தன்னை சுற்றி பரவிஇருப்பதை உணர்ந்தவள் அவன் அணைப்பை கற்பனையில் உருவாக்கி அதில் மகிழ்ந்தாள் .


சிறிதுநேரம் சென்று மீண்டுமாய் அவளின் எதிரில் வந்தவன், "அன்று என்ன நடந்ததென்பதை சொல் அனகா !! அன்று என்னால் டாமினியின் இறப்பிற்கு காரணமான ஆறாவது ஆளை கொள்ளமுடியாமல் போனாலும் , நீ ஆசை பட்டதை போல் சூர்யாவின் மரணத்திற்கு மட்டுமின்றி ...பல பெண்களின் மரணத்திற்கு காரணமானவர்களை கொன்றேன் . ஆனால் உனக்கு அன்று என்ன நேர்ந்ததென்பதை இன்றாவது என்னிடம் சொல் அனகா !!" எனக் கேட்டவனிடம் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள் .


அதே நேரம் தனது காரை வேகமாய் ஒட்டிக்கொண்டிருந்த பாஸை கண்களில் பயத்துடன் பார்த்த ஜான், "பாஸ்...எதுக்காக இப்போ திரும்ப அந்த ஊருக்கே போறோம் ...வேண்டாம் பாஸ் ..!"


-என மாலை யஷியை பார்த்த பின் இவ்வூரைவிட்டு தாங்கள் வந்த ஊருக்கே செல்லலாம் என சொல்லி பாதி தூரம் வரை சென்ற பின் மீண்டுமாய் அவன் இந்த ஊருக்கே போகவேண்டும் என, வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த அவனையும் விளக்கி தானே அசுரத்தனமான ஒட்டியபடி வந்தவனிடம் கேட்டான் .


அவன் வந்தானா இல்லை சந்திராதித்யன் அவனின் மனதில் புகுந்து மீண்டும் வர செய்தானா அதை அந்த ஈசனே அறிவார் .


"ஜான் ...! அன்னிக்கு நடந்ததெல்லாம் மறந்துட்டியா ?? பத்தொன்பது வயசுலயே பொண்ணோட ருசி என்னனு தெரிஞ்சிக்கிட்டவன்டா நான் அதுல கையும் களவுமா சிக்கியும், என்னிக்கோ ஒருநாள் வேறுதேவைக்காக .. நான் ரெண்டு வயசு குறைச்சி சொன்னதுல தண்டணை இல்லாம தப்பிச்சி வந்தவன்டா. கை எட்டியும் வாய்க்கு எட்டாம போனவ இப்போ கண்ணுமுன்னாடியே வந்து நிக்குறப்போ ருசிப்பாக்கமா எப்படி போறது ஜான்...??" என கேட்டவனின் பெயர் ரியாஸ் .


இத்தனை நாட்களாய் பாஸ் என்ற அடையாளத்தின் பின் மறைந்திருந்தவன்.. போன வருடம் ஒரு பெண்ணை போகப்பொருளாக நினைத்து அவளை உயிரோடு கொன்றிந்தான் . அவனை தான் வயது குறைவு என்று அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியிருக்க , ஜாமீன் என்னும் ஒன்று இருப்பதே இவர்களுக்காக தான் என்பதை போல் அதற்கடுத்த ஒரு வாரத்திலே வெளியே வந்திருந்தான் .


ரியாஸீற்கு ஒருவருடம் முன்பு தாங்கள் கடத்திய அனகாவின் (யஷி) உடல் கண்முன் தோன்றி அவனின் இச்சையை கூட்ட அவனின் வேகம் அதிகரித்தது .


அவன் சொன்னதை கேட்ட ஜானிற்கு ஒருவருடத்திற்கு முன்பாய் தாங்கள் இவ்வூருக்கு வந்த நாள் அன்று நடந்தது நினைவு வந்தது.


அனகா என்னும் யஷி சந்திராதித்யனிடம் தன்னை கடத்தியதிற்கு பின் நடந்ததை சொல்ல தொடங்க , அவளை கடத்தியவர்களில் ஒருவனான ஜானிற்கும் அன்று நடந்தவை படமாய் ஒடியது.


அன்று:


ஜாமினில் வந்த பிறகும் சிறிது நாட்கள் எங்கும் செல்லாமல் இருந்த ரியாஸ் நான்கு மாதங்களுக்கு பிறகு , ஜானுடன் மாருதியை கிளப்பிக்கொண்டு... தங்களின் பெண்களின் ரத்தத்தை குடிக்கும் ராஜ்யமான சின்னம்பாளையத்திற்கு வந்தான்.


நீண்ட நாட்களாய் பெண்களை சுகிக்காமல் இருந்த ரியாஸீற்கு , பாதையின் நடுவில் ...நிலவு வெளிச்சத்தில் ...அழகிய பூவாய் நின்றிருந்தவளை கசக்கி முகர அவனின் அழுக்கான மனம் ஆசை கொள்ள அவளின் அருகில் காரை நிறுத்தியவன் , அவளை வாய் பொத்தி காருக்குள் இழுத்து போட்டான் .


திடீரென தன்னை இழுத்த கைகளின் அழுத்தத்தில் அவனின் நோக்கம் அறிந்துகொண்டிருந்த யஷி(அனகா)க்கு நெஞ்சத்தில் அச்சம் தானாய் தன் இருப்பிடத்தை நிலைநாட்டியது .


தன்னவனுக்கு மனைவியாய் ஆன அன்றே அவனிற்க்கான தன் பெண்மைக்கு ஆபத்து வந்ததில் கலங்கிய பெண்ணவளின் மேனி அந்த கயவனின் தீண்டலில் துடிதுடித்தது .


"சீக்கிரம் ஊர் எல்லையில இருக்க நம்ப வீட்டுக்கு வண்டியை விடு ஜான்....இவளை ரொம்ப நேரம் என்னால சும்மா பாத்துட்டு மட்டும் இருக்க முடியாது " என்றவனின் கைகள் அவளின் மேல் ஊற,


அருவருப்பை உணர்ந்த யஷி(அனகா) , அவன் கைகளில் துள்ளி அவனை தன்னால் முடிந்தவரை அடித்தாள்.


அவளின் அடித்ததில் கோபமானவன் , அவளின் தலைமுடியை கொத்தாய் பிடித்து காரின் கதவில் இடித்தான் .


அதில் அவளின் முன்நெற்றி பிளந்து ரத்தம் வர, வலியில் அலறிய யஷி(அனகா)யின் கண்களில் விழுந்தான் சந்திராதித்யன், கைகளில் ஒரு பெண்ணை ஏந்தியபடி.


அப்பெண்ணை பார்க்கும் பொழுதே அவளிற்கு நேர்ந்ததை புரிந்துக் கொண்ட யஷி(அனகா), தான் இப்பொழுது அனுபவிப்பதை விட அப்பெண் பலமடங்கு சித்திரவதையை அனுபவித்ததை உணர்ந்தவள் ...தான் இருக்கும் நிலை மறந்து அப்பெண்ணின் உயிர்க்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என வேண்டிக் கொண்டாள்.


அதற்குள் அவர்கள் வீட்டை அடைந்திருக்க, வரமறுத்த யஷி(அனகா)யின் கன்னத்தில் அறைந்தவன் , அவளின் கைகளை பிடித்து இழுத்தான்.


தன்னால் முடிந்தவரை அவனை அடித்து , பற்களால் கடித்து , நகத்தால் கீறி தடுக்க பார்க்க , அவளின் செயலில் அவளை வெறித்தனமாய் அடித்தவன் ...அவளை தரையில் தேய்த்தவாரே இழுத்துச் சென்றான்.


வீட்டிற்குள் இழுத்துவந்து போட்டவனிடம் இருந்து நழுவியவள் ,கதவின் புறம் ஜான் நின்றிருந்ததை பார்த்து அவ்வீட்டினுள் ஓடத் துவங்கினாள்.


அவளை இருவரும் துரத்த முற்பட எப்படி என்றே தெரியாமல் அவ்விடம் முழுவதும் நெருப்பு பரவ ஆரம்பித்தது . முதலில் அதை கண்டுக்கொள்ளாத ரியாஸும் , ஜானும் அவளை துரத்த... அவர்களிடம் தப்பிப்பதற்க்காய் பின்புறமாய் ஓடியவளின் மேல் அங்கிருந்த நாற்காலியை தூக்கி அடிக்க அது அவளின் பின்மண்டையை பதம்பார்த்தது .


அதில் தடுமாறி "குழியா...!" எனக் கத்தியபடியே கீழே விழுந்தவள் முன் அங்கிருந்த அறை தென்பட உள்நுழைந்து கதவை அடைத்துக்கொண்டாள் .


சிறிதுநேரம் அக்கதவை உடைக்க முயற்சித்தவர்கள் , தீ வேகமாய் பரவுவதை உணர்ந்து வேறுவழியில்லாமல் பின்பக்க வழியாய் தங்களின் உயிரை காத்துக்கொள்ள ஓடினர்.


முன்நெற்றி பிளந்து ரத்தம் அதிகமாய் வெளியேறிருக்க , உடலில் அங்கங்கே காயத்துடன் மயக்கத்தில் ஆழ்ந்த வேளையில் தான் சந்திராதித்யன் அவ்விடம் வந்தது .


அனைத்தையும் சந்திராதித்யனிடம் சொல்லி முடித்த யஷி (அனகா) , ஆறுதலுக்காய் அவனை பார்க்க அதை உணர்ந்துக்கொண்ட சந்திராதித்யன் காற்றாகவே அவளின் மேல் படர்ந்து பரவினான்.


அவர்கள் நீண்டநாட்களுக்கு பிறகு தங்களுக்கு கிட்டிய தனிமையில் தங்களின் கடந்தகாலத்தை நினைத்தபடி ஒருவர் மற்றவரிடம் ஆறுதல் தேடிக் கொண்டிருந்தனர் .


அப்பொழுது அவ்வீட்டின் வாயிலில் "சர்ர்ர்ர் ...." என கிரீச்சிட்டபடி வந்து நின்றது மாருதி .


அதிலிருந்து , " பாஸ்...! இப்போ எதற்காக இந்த வீட்டுக்கே மறுபடியும் வந்திருக்கோம் " என கேட்டபடியே இறங்கிய ஜான் , அவ்வீட்டை கண்களில் பயத்துடன் பார்த்தான்.


அன்று ஏற்பட்ட நெருப்பு தாங்கள் வருவதற்க்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஹரிஷும் , அஸ்வந்த்தும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ள அதில் அறிவுகெட்டதனாமாய், திருட்டுத்தனமாய் கடத்திவைத்திருந்த பல லிட்டர் பெட்ரோலை அவ்வீடு முழுவதும் ஊற்றிய ஹரிஷ், நெருப்பை பற்ற வைக்கபோக ...சுதாரித்த அஸ்வந்த் அவனை பற்றி இழுத்து சென்றாலும் , ஹரிஷ் பற்ற வைத்த நெருப்பு அங்கு பட்டத்தை அவனும் கவனித்திருக்க வில்லை.


இதை எல்லாம் மறுநாள் அஸ்வந்த் இவர்களிடம் சொல்லியிருக்க , அதை எண்ணிப் பார்த்தான்.


"என்ன ஜான் ...!மலரும் நினைவுகளா ??" என நக்கலடித்த ரியாஸ்,


"என்னமோ தெரியலை ஜான்..! இங்க அவ வருவான்னு எனக்கு தோணுது வா உள்ள போவோம்.." என்று அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவன் ,


அன்று திறக்கமுடியாமல் போன பின்புற அறையின் கதவை திறக்க , அவன் மனம் எண்ணியதை போலவே அவன் தேடிவந்தவள் அங்கு சுவற்றில் சாய்ந்தபடி இருந்ததை கண்டவனுக்கு தன் கண்களையே நம்ப முடியாமல் போனது .


ருசி கண்ட பூனையாய் கண்களில் காமம் வழிய அவளின் மேனியை மொய்த்தவனின் கால்கள் தானாய் அவளிடம் சென்றது .


அத்தனை நேரம் யஷி (அனகா) யிடம் தன்னை தொலைத்திருந்த சந்திராதித்யன் , அவனின் கால் இவ்வறையில் பட்ட நொடி தன்னை சூறாவளியாய் மாற்றியவன் சுழல ஆரம்பிக்க .... அங்கிருந்த கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து ரியாஸ் மற்றும் ஜானின் உடல்களில் பட்டுத் தெறித்தது .


யஷி(அனகா)யின் மேல் அவை பாடாமல் காத்தபடி மொத்த கண்ணாடிகளை நொறுக்கியிருந்தான்.


திடீரென கண்ணாடிகள் உடைந்து தெரித்ததில் புரியாமல் வெளியேற முயன்ற ஜானின் கழுத்து சங்கில் சரியாய் சொருகியது ஒரு பெரிய கண்ணாடித் துண்டு .


அடுத்தநொடி அவன் தரையில் விழ அங்கு கீழே தெரிந்திருந்த கண்ணடித்துண்டுகள் அவனின் உடலை பதம்பார்க்க , மீண்டுமாய் சந்திராதித்யன் சுழல அங்கு இருந்த மொத்த கண்ணாடி துண்டுகளும் ஜானின் உடலின் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து போர்வையாய் மாறியது .


அங்கு நடந்ததை பார்த்த ரியாஸ் , கண்களை விரித்து நம்பமுடியாமல் திகைத்திருக்க ,அவனின் உடலிலும் ஆங்காங்கே கண்ணாடி துண்டுகள் கிழித்திருந்தது .


என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியாதவனுக்கு கோபம் தலைக்கேற , யஷி (அனகா) தான் அனைத்திற்கும் காரணம் என்று நினைத்தவன் அவளின் கை பற்றி இழுக்க , அடுத்த நொடி காற்றில் பறந்து அங்கிருந்த சுவற்றில் தலை மோத கீழே விழுந்தான் .


விழுந்தவன் மீண்டும் எழ முற்பட மீண்டுமாய் ஓர் புயல் அங்கு உருவாக , அவ்வறையிலே மாற்றி மாற்றி தூக்கி ஏற்பட்டவனின் உடலின் எலும்புகள் அனைத்தும் நொறுங்கியது .


முழுதாய் நொறுங்கி தரையில் கிடந்தவன் தான் தூக்கியடிக்கப்பட்டதில் தரையில் விழுந்திருந்த தன் துப்பாக்கியை எடுத்தி , எது தன்னை தாக்குவது என்பதையே அறியமுடியாததால் அவ்வறையில் இலக்கின்றி சரமாரியாக சுட்டான் .


அதில் சில சந்திராதித்யன் மேல் படுவது போல் இருக்க , அது அவனை ஒன்றும் செய்யாது என யஷி (அனகா) யின் மூளை சொல்லிய போதும் ... மனம் அதை முந்திக்கொண்டு உந்தியத்தில் , தானாய் அவனை மறைத்தார் போல் அவனின் முன் நின்றவளின் உடலை துளைத்தது குண்டுகள் .


"அனகா...!!" என கத்திய சந்திராதித்யனின் குரலுடன் "பாப்பா.....!" என்ற மித்ரனின் குரலும் இணைந்து அவ்வறையை அதிர செய்தது .


பைத்தியம் போல் ரோட்டில் , கால்களில் செருப்புகூட அணியாமல் யஷியை தேடித்திரிந்த மித்ரன் வழியில் விசாரித்து அவள் பாதி எரிந்த வீட்டை தேடிச் சென்றதை உணர்ந்து அவனும் அங்கு ஓடி வந்திருந்தான் .


வீட்டினுள் நுழைந்தவனிற்கு பின்புறமிருந்து சத்தம் கேட்க, அங்கு சென்றவன் கண்டது , மாலையில் பார்த்த இருவரில் ஒருவன் யஷியை சுட்டதை தான்.


அவனின் மேல் பாய்ந்தவன் ஏற்கனவே நொறுங்கிருந்தவனை மேலும் நொறுக்க , அவனை தடுக்க முற்பட்ட ரியாஸீன் உடலுக்குள் புகுந்த சந்திராதித்யன் , தூணை உடைத்து வெளிவந்த நரசிம்மராய் ஆவேசமாய் அவனின் உடலை விட்டு வெளிவர ,பல பெண்களின் வாழ்வை வெறும் தேக சுகத்திர்க்காய் பாழாக்கியவனின் தேகம் பல துண்டுகளாய் சிதறியது .


அதில் அதிர்ந்து மிரண்ட மித்ரன் பின் அது காற்றில் கலந்த உருவத்தின் வேலை என்பதை புரிந்துக்கொண்டவன் , யஷியை தன் கைகளில் ஏந்தியபடி அவ்வறையை விட்டு வெளியேறினான்.


அவன் கைகளில் தூக்கியதை உணர்ந்த யஷிக்கு சிறுவயது முதல் அவனின் வீட்டில் ஒன்றாய் அவனுடன் விளையாடியது ,சிறு குழந்தையாய் தன்னை கொஞ்சியது , அன்னையாய் மடிசாய்த்தது என அவன் செய்த அனைத்தும் காட்சிகளாய் தோன்ற அவனின் கைகளில் இருந்தபடியே சற்று எக்கி அவனின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவள் ,


தன் கழுத்தில் காரணமே தெரியாமல் இத்தனை நாளாய் அணிந்திருந்த செயினை கழற்றி அவனின் பாக்கெட்டில் போட்டவள் , " நான் உனக்கே மகளா பிறக்கணும்டா " என கலங்கி ," அப்போ இத என் கைல கட்டிவிடு.. ஒருநாள் என்னோட பச்சை கண்ணன் என்னை தேடி வருவான் .அவனே இத என் கழுத்துலையும் மாட்டுவான் " என உறுதியாய் சொல்லி , சிரிப்புடன் அவனின் நெற்றில் மீண்டும் முத்தமிட்டு விலகியவளின் தலை அவனின் கைகளில் தொங்கியது .


பிறந்த நொடி முதல் எந்த கைகள் அவளை அன்பாய் அரவணைத்து, அவள் சோர்ந்துபோகும் வேளைகளில் எல்லாம் ஏந்திக்கொண்டதோ ... அதே கைகளில் புன்னகையுடன் தன் இறுதிமூச்சையும் நிறுத்திக்கொண்டாள் .


தன்னவளை ஏந்தியபடி செல்லும் மித்ரனை பார்த்தபடி இருந்த சந்திராதித்யன் , அவளின் தலை தொங்கியதில் பதறி அருகில் செல்ல போக அவனை தடுத்து அவனின் மேல் சாய்ந்துகொண்டாள் அவனின் அனகா தானும் காற்றோடு கலந்தவளாய் .



--------------------------------------------------------------------------------


பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு :


"யஷிமா...யஷிக்குட்டி எங்கடா இருக்கீங்க பாப்பா " என வீட்டிற்குள் நுழையும்பொழுதே கொஞ்சலாய் அழைத்தபடி வந்த மித்ரனின் மேல் ஓடி வந்து தாவி ஏறினாள் அவனின் ஒன்பது வயது மகள் யஷி.


"மித்ரா...! நீ எங்க போன ?? நான் உன்னை தேடுனேன் தெரியுமா ..நீ காணோம் ??" என்றவாரு உதடுகளை பிதுக்கி சிணுங்கியவள் அவனின் நீண்ட முடியினை பிடித்து ஆட்டினாள் .


"குட்டிமா ...!! உனக்கு எத்தனை தடவை சொல்லிருகேன் அப்பாவ பேர் சொல்லி கூப்பிடாதனு...இதுல இப்போ தான் வர மனுஷரோட முடிய பிடுச்சி இழுத்து மல்லுக்கட்டுர?? முதுகுல நாலு போட்டா தான் அடங்குவியா ???" என மகளை கடிந்தபடியே வந்தாள் நிலா, மித்ரனின் மனைவி.


"ஷ்ஷ்ஷ் பேபிமா....!பாப்பாவை திட்டாதனு சொல்லிற்கேன்ல.விடுமா, பாப்பா என்கிட்ட மட்டும்தான இந்தமாதிரி இருக்காங்க .மத்த எல்லோர்கிட்டையும் அமைதியா போறாங்கனு நீயும் தான சொன்ன . என் யஷிக்குட்டி சமத்துக் குட்டி " என மனைவியிடம் மகளுக்காய் பரிந்து வந்தவன் மகளை கொஞ்சினான்.


"ம்ம்ம்க்க்கும்...! நீங்க தான் இவளை கெடுக்குறதே ...அவ எது பண்ணாலும் கொஞ்சவேண்டியது .இதுல எனக்கு பாப்பாகிட்ட கோவபடவரலடினு டையலாக் வேற..நாங்க மட்டும் கோவப்படுறதுல பிஎச்டி பண்ணிருக்கோம்
பாரு " என கணவனை முறைத்தவளின் குரல் அதற்க்கு நேர்மாறாய் தன்னவனின் மகள் மேலான பாசத்தில் குழைந்தே வெளிவந்தது .


அதை கண்டுகொண்ட மித்ரன் பெரிதாய் சிரித்தபடி ," ஹாஹா பேபிமா..! உன்கிட்ட மட்டும் நான் என்னிக்குடி கோபப்பட்டிருக்கேன் " என மகளை மடியில் வைத்திருந்தவன், மனைவியை தோள்வளைவில் கொண்டுவந்தான் .


மித்ரனின் அணைப்பில் இருந்த நிலா ￰அப்பொழுதுதான் கவனித்து ,"அப்பா எங்கேங்க ?? உங்க கூட வரலையா ? எனக் கேட்டாள்.


யஷியின் தந்தை விஸ்வநாத் மகளின் இறப்பில் உடைந்து போயிருந்தாலும் ...தன் மகள் இறந்ததில் உணர்வுகளை தொலைத்து இயந்திரம் போல் வாழ்ந்துக் கொண்டிருந்த மித்ரனிடம் ," யஷயே உனக்கு மகளாய் பிறந்து உன்னிடம் வருவாள் " என சொல்லி சொல்லி கரைத்தவர், நண்பனின் மகள் நிலாவுடன் அவனுக்கு திருமணமும் நடத்தி வைத்திருந்தார் .


மித்ரன் அவரை தங்களுடனே வசிக்கவேண்டுமென அன்புக்கட்டளை போட்டிருக்க ,நிலாவும் அவரை தந்தையாய் எண்ணி அவருக்கு இன்னொரு மகளாய் தான் இன்றுவரை இருந்துவருகிறாள் .


"பேபிமா...! என்னோட கூட படிச்ச ஆதி பத்தி சொல்லிருக்கேன்ல....நான், யஷி, ஆதி மூணு பேரும் எப்பவும் ஒண்ணா தான் இருப்போம்னு.. ரொம்ப வருஷம் கழிச்சி நேத்து தான் நாங்க ரெண்டு பேரும் பேசுனோம் ...அப்போதான் அவன் குடும்பத்தோட இந்தியா வந்திருக்குறத சொன்னான். அத அங்கிள் கிட்ட சொன்னதுதான்... அடுத்த நிமிஷம் , எப்படி இந்தியா வந்தவன் நம்ப வீட்ல தங்காம இருக்கலாம் நான் போய் கூட்டிட்டு வரேன்னு கிளம்பிட்டாரு .அவங்களை கூட்டிக்கிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு" என்றான்.


சொல்லி முடித்தவன் ..தன் கைவளைவுக்குள் இருந்தவர்களை பார்க்க அவர்கள் இருவரும் அவனின் மேல் சுகமாய் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர் .


"ஒருத்தன் மூச்ச பிடிச்சிக்கிட்டு பேசியிட்டிருக்கேன் நீங்க ரெண்டு பேரும் தூங்கிறீங்களா " என இருவரின் வயிற்றிலும் கிச்சுகிச்சு மூட்ட ,


அம்மாவுடன் கூட்டு சேர்ந்து தூங்குவது போல் பாசாங்கு செய்திருந்த யஷி,"மாம் ...ரன்...ரன்...!! " என்றபடி தந்தையிடமிருந்து தப்பி ஓடினாள்.


இருவரையும் பொய்யாய் முறைத்தவன் அவர்களை பிடிக்க துரத்த , தாயும் மகளும் அவன் கைகளுக்கு போக்குக்காட்டியபடி தப்பித்து வெளியே தோட்டத்திற்கு ஓடினர் .


தாயுடன் சேர்ந்து முகம் முழுக்க சிரிப்புடன் ஓடியவளை தோட்டத்தின் ஈரமண் சறுக்க , "அப்ப்பாபா...!" என்றபடி பின்புறமாய் சரிந்தவளை தாங்கிக் கொண்டது ஓர் வலக்கரம் .


யார் என பார்த்தவளின் பார்வையில் , அவளின் முகத்தின் அருகே அவளை தாங்கியபடி நின்றிருந்த பதினோரு வயது சிறுவனின்
பச்சை நிறக் கண்கள் பட...ஒன்பது வயது யஷிக்கு அது சொன்ன செய்தி புரியாமல் போனது.


அவளின் கைகளில் தொங்கிக்கொண்டிருந்த செயினை பார்த்த சிறுவன், அவள் விழும்பொழுது அது கழுத்திலிருந்து கலன்றுவிட்டதோ என எண்ணியபடி அவளை சரியாய் நிற்கவைத்தவன் , அதை தானே அவளின் கழுத்தில் அணிவித்தான் .


மகள் சறுக்கியதில் மித்ரனும் ,நிலாவும் பதறி அருகில் வருவதற்குள் இவை நடந்துவிட நிலா விரைந்து யஷியை தன் அணைப்புக்குள் கொண்டுவந்தாள்.


மித்ரன் எதிரிலிருக்கும் சிறுவனின் மின்னும் பச்சை நிறக் கண்களை பார்த்தபடியே , "யார் குட்டி நீங்க ..உங்க பெயர் என்ன ...??" என்று கேட்டவனிற்க்கு ,


அன்னையின் புடவையின் முந்தானையால் முகத்தை மறைத்து கண்களை மட்டும் தெரிய பார்த்துக் கொண்டிருந்தவளை தானும் பார்த்தபடியே , " நான் சந்திரபிரதாப் சன் ஒப் ஆதித்யன் " என சிரிப்புடன் பதில் சொல்லிவனின் கன்னங்களில் ஆழமாய் குழி விழுந்தது .


(சுபம்)
 
Status
Not open for further replies.
Top