All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீரா செந்திலின் "உன் விழிகளில் நான் தொலைந்தேன்" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் வணக்கம். முதலில் எனக்கு நான் கனவிலும் நினைக்காத, நேற்று வரை இது நடக்குமா? என்று நினைத்து ஏங்கிய அறியவாய்ப்பை கேட்ட உடனே வழங்கிய நமது அருமை சகோதரி ஸ்ரீகலா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். போட்டிகள் நிறைந்த உலகில் தன்னை போல் பிறரும் எழுத்தாளர் ஆக வேண்டும் என நினைத்து தளம் அமைத்து வாய்ப்பு வழங்கி வருகின்றார்.அவரை போலவே அவரது கதைகளும் அருமை...
என்னை பற்றி சொல்லும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. சாதரணமாக சொல்லனும்னா நான் உங்களிள் ஒருத்தி அவ்வளவு தான். எனக்கு ரொம்ப நாளாகவே கதை எழுதனும்னு ஆசை ஆனால் எப்படி எழுதுறதுன்னு தெரியவில்லை ஆனால் இப்ப நம்ம ஸ்ரீகலா சகோதரி மூலமாக நமக்குன்னு சொல்வதை விட எனக்கு ஓரு அறிய வாய்ப்பு கிடைச்சு இருக்கு so அந்த வாய்ப்பை பயன்படுத்தி கதை எழுதலாமுன்னு முடிவு பண்ணிட்டேன் sorry எனக்கு இது கொஞ்சம் over தான் but பொறுத்துகோங்க plz.எதாவது பிழை இருந்தால் சொல்லுங்கள் கண்டிப்பாக திருத்தி கொள்கின்றேன். இனி வரும் காலங்களில் நீங்கள் எனக்கு தர இருக்கும் பேராதர்வுக்கு( கொஞ்சம் பேராசை தான்) இப்போழுதே நன்றி சொல்லி கொள்கிறேன்.
இப்படிக்கு
உங்களில் ஒருத்தி
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -1
நள்ளிரவு 12 மணி அக்கா…. என்ற அலறல் சத்ததில் அந்த லேடிஸ் ஹாஸ்டலில் தூங்கி கொண்டிருந்த அனைவரும் பதறியடித்து கொண்டு எழுந்து ஓட்டமும் நடையுமாக சத்தம் வந்த அறையை நோக்கி செல்ல, அங்கு சத்தம் வந்த அறையில் ஓருத்தி அமர்த்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்க அவளை சுற்றி நான்கு பெண்கள் அவளது அழுகை யை நிறுத்த வழியின்றி முழித்து கொண்டிருந்தார்கள்.
அந்த நான்கு பெண்களில் ஒருத்தி கத்தியவளை பார்த்து கேட்டாள் ஏண்டி உனக்கே இது நல்லா இருக்கா? கடந்த ஒரு வாரமாக இப்படி இரவு நேரத்தில் கத்தி எங்களை எழுப்பி விடுறதே உனக்கு வேலையா போச்சு சரி, நாங்க தான் உன் கூட தங்கி இருக்க பாவத்துக்கு கஷ்டபடுறோம்னா பாவம் இவங்க என்னடி பண்ணாங்க இப்படி நைட் நேரத்தில் உன் அலறல் கேட்டு ஓடி வரதுக்கு சொல்லுடி என கடுகடுத்தாள்.
ஏன்டி இவளே நாளைக்கு நாங்க எல்லாரும் ஆபிசுக்கு போய் வேலை பார்க்குறதா இல்லை தூங்குறாதா சொல்லு என்று அவளுடைய தோழிகளில் இன்னொருத்தியும் சேர்ந்து எரிச்சலுடன் அழுபவளை திட்டி கொண்டு இருக்கும் பொழுது, இங்க என்ன நடக்குது? ஏன் இப்படி எல்லாரும் இந்த நேரத்தில் தூங்காமா இப்படி நின்னு வேடிக்கை பார்க்கிறீங்க என்ற அதட்டல் சத்தம் கேட்டு அதுவரை குனிந்து அழுது கொண்டு இருந்தவள் அப்பொழுது தான் சுயஉணர்வு பெற்றவளாக தன்னுடைய காந்த விழிகளை உயர்த்தி தன்னை சுற்றி நிற்கும் தனது அறை தோழிகளையும், மற்ற அறை தோழிகளை கவனித்தாள் நமது கதையின் நாயகி விதுஷா.( அவளை பற்றிய வர்ணனை இன்னொரு நாள் சொல்கிறேன்)
• அதுவரை தன்னை சற்றி நடப்பது தெரியாமல் குனிந்து அழுது கொண்டு இருந்தவள் இப்பொழுது இங்கு சுற்றி இருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என அவள் யோசிக்கும் தருணத்தில் அங்கு வந்து அதட்டியவர் வேறு யாருமல்ல ஹாஸ்டல் வார்டன் அகிலாண்டேஸ்வரியே தான். பிறகு அவர் அங்கு நின்ற அனைவரையும் நோக்கி அது தான் ஒன்னுமில்லைன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏன் எல்லாரும் வேடிக்கை பார்க்குறீங்க கிளம்புங்க அவங்க அவங்க ரூமுக்கு இப்போ தூங்குனா தான் நாளுக்கு சீக்கிரம் எந்திரிச்சு ஆபிஸ்க்கு போகலாம் போங்க என்று விரட்டினார்.
• அதுவரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அனைவரும் இருந்த இடம் தெரியாமல் சத்தமின்றி கலைந்து சென்றார்கள். பிறகு தன்னுடைய கோபமான முகத்தை மென்மையாக மாற்றியவர் ஏன்மா விதுஷா என்னம்மா ஆச்சு உனக்கு இப்படி ஒரு வாரமாக நைட் நேரத்தில் தூக்கத்தில் பயந்து கத்தி இங்க இருக்க எல்லாரையும் எழுப்பி விடுறியே அப்படி என்ன பிரச்சனைமா உனக்கு நீ எதுவும் கெட்ட கனவு எதுவும் கண்டியோமா என்று பரிவாக கேட்க உடனே அவள் இல்லை மேடம்.. என்னது மேடமா ஏன்மா விதுஷா உனக்கு எத்தனை தடவை சொல்லுறது என்ன அம்மா இல்லை இல்லை உனக்கு தான் உங்க அம்மாவை தவிர வேற யாரையும் அம்மான்னு கூப்பிட பிடிக்காதுல சரி உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் அகிலாம்மா கூப்பிடுமா எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாய் சரி விடு அதை அப்பறம் பார்த்துகலாம் இப்ப உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுமா என்று கேட்டார்.
• எனக்கு ஒரு பிரச்சைனையும் இல்லை மேடம் ஒரு வாரமாக எங்க அக்கா நினைவாகவே இருக்கு அவளை உடனே பார்க்கனும் போல அவளுக்கு எதோ பிரச்சனை வர போகுதோன்னு தோனுது மேடம். அது தான் இப்படி ஒரு வாரமாக தூக்கத்தில் அலறி எந்திரிப்பதாக தனது பிரச்சனைக்கு விளக்கம் கொடுத்தால் மான் போன்ற விழிகளை கொண்ட நமது கதையின் நாயகி விதுஷா...
9055
 

Attachments

Last edited:

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -2

ஏதோ தவறு செய்தவள் போல திக்கி திணறி அவருக்கு பதில் அளித்து கொண்டு, பார்க்கவே பாவமாக இருப்பவளிடம் என்ன கேட்பது என்று புரியாமல் சட்டென்று நியாபகம் வந்தவராக, அதுவரை தங்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் அனைத்தையும் சற்று அதிகமாக வாய்பிளந்து ஆ.... என்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அவளது ரூம் தோழிகள் நால்வரை நிமிர்ந்து பார்த்தார் என்பதை விட முறைத்தார் என்பதே சரி, அவ்வளவு கோபம் அவர்கள் மீது ஏன்னெனில், இவளை கொஞ்சம் கூட சமாதானம் செய்யாமல் அழுக விட்டு வேடிக்கை பார்ப்பதாக நினைத்தார், மீண்டும் இரக்க பார்வைக்கு மாறியவர் விதுஷாவை பார்த்தார்.



அவள் இங்கு நடப்பதுக்கும் தனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு என்பது போல, தனது அக்காவை நினைத்து அழுது கரைவதிலே குறியாக இருக்க, இதற்கு மேல் இவளிடம் என்ன கேட்டாலும் உண்மையான பதில் எதுவும் கிடைக்க போவது இல்லை இவள் ஏதோ ஒன்றை யாரிடமும் சொல்லாமல் மறைக்க நினைக்கிறாள் இனி இவளிடம் கேட்பது பயனளிக்காது என்று நினைத்தவர் மீண்டும் அந்த நால்வரை நோக்கி, ஏன்மா உங்களுக்கு இந்த பொண்ணு பற்றி ஏதாவது தெரியுமா, ஏன் இப்படி பண்றனு என்பதை தன்னுடைய புருவத்தை உயர்த்தி பார்வையாலேயே கேட்டார். அவருடைய பார்வைக்கான கேள்வியை புரிந்து கொண்டு நால்வரும் ஒன்று சேர்ந்து இவளை பற்றி எதுவுமே எங்களுக்கு தெரியாது என்பது போல மறுப்பாக தலை அசைக்க அதில் கடுப்பானவர்,



ஏன்மா அறிவுனு ஒன்னு உங்களுக்கு இருக்க இல்லையா? படிச்சவங்க தானே நீங்கல்லாம் உங்களை மாதிரி பொண்ணு தானே இவ இப்படி அழுகுறளே எதையோ நெனைச்சு அதை என்ன ஏதுன்னு கேட்டு ஆறுதல் கொடுப்போமுனு தோணாம எங்க வாய வேடிக்கை பார்க்குறீங்க. நானே ஒரு வாரமா என்னோட ஊருக்கு போய்ட்டு இப்ப தான் ஹாஸ்டல் வந்தேன். சரி கொஞ்சம் பயண களைப்பில் அசதி போக தூங்கலாமுன்னு பாத்தா உங்களுக்கு ரூம்ல இருந்து இவளோட அலறல் சத்தம் வந்து பாத்தா ரூம் வாசலை அடைச்சு கிட்டு எல்லாரும் தூங்காம இவளோட அழுகையை வேடிக்கை பார்க்குறீங்க, சரி நம்ம கூட மூன்று மாதமாக தங்கி இருக்காளே, இப்படி ஒரு வாரமா தூக்கத்துல எழுந்து ஏதோயோ நெனைச்சு அழுறாளே, அவளை என்ன ஏதுன்னு விசாரிச்சீங்களா? என்ன பொண்ணுமா நீங்கல்லாம் உங்களுக்கு ஆபீஸ் போனோமா ரூம்க்கு வந்தோமா தூங்குற வரை போன்ல யாருக்குடையது அரட்டை அடிச்சோமான்னு இருக்கவே நேரம் போதலை இதுல இவள பற்றி இல்லை இல்லை யாரை பற்றியும் எந்த கவலையும் எங்க இருக்க போகுது என்று அலுத்து கொண்டவர்.



அவளை பற்றி ரொம்ப இல்லைனாலும் கொஞ்சமாவது தெரிஞ்சுப்போம் என்று தோணுச்சா உங்களுக்கு, யாரும் கூடவும் தங்குனா மட்டும் போதாது, அவுங்கள பத்தி கொஞ்சம் கேட்டு தெரிஞ்சு வச்சுக்கங்க அப்போ தான் இப்படி வர கூடிய ஒரு சில பிரச்சனைகளை சரி பண்ண முடியும் என்ன புரியுதா? அது சரி பூம் பூம் மாடு மாதிரி தலை ஆடுனா மட்டும் போதாது புரிஞ்சு நடந்துக்கங்கமா, என்று சொன்னவர் சற்று நக்கலாக “ போங்கம்மா போய் போனை பார்க்காமல் நிம்மதியா குறட்டை விட்டு தூங்குங்க நாளைக்கு நேரத்துல வேலைக்கு போக வேண்டாமா என்று நால்வரையும் விரட்டினர்.


அம்மாடி விதுஷா நீயும் தூங்குமா எதுனாலும் காலையில பேசிக்கலாம், காலையில கோவிலுக்கு போய்ட்டு உங்க அக்கா பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிடுமா அப்பறம் என்னை வந்து பாருமா என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தவர் அந்த அறையில் ஒரே இடத்தில் இருந்த விலை உயர்ந்த நான்கு ஆண்ட்ராய்டு போன்களை பார்க்க தவறவில்லை.. இந்த போனாலே தானே தன்னோடு ஒரே ரூம்ல மூன்று மாசமா கூட ஒண்ணா தங்கி இருப்பது யாரு, என்னனு கூட தெரியாம இந்த போன் துணையோடு இருக்காங்க இந்த பொண்ணுங்கனு நெனைச்சு வருந்தினார்.



எப்பொழுது அவர் ரூம்ல இருந்து வெளிய போவார் என்று அதுவரை பெயருக்கு பெட்ல படுத்து தூங்குற மாதிரி நடிச்ச நால்வரும் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டு எழுந்து வந்து விதுஷாவை முறைத்தனர். பிறகு அவர்களில் ஒருத்தி அவளிடம், ஏண்டி நீ எங்க ரூம்க்கு வந்து மூன்று மாசம் முழுசா முடியல அதுக்குள்ள ஏண்டி இவோலோ ரகளை பண்ற? எங்கள ஒரு வாரமா தூங்க விடாம அலறி எழுப்பி விடுறது நீ, எதுக்கு இப்படி பண்றனு உனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்ட அப்படியே உட்க்கார்ந்து கிட்டு அழுவ, இது தானே இந்த ஒரு வாரமா நடக்குது இதுல, அந்த வார்டன் அம்மா சாரி சாரி மேடம் அவுங்க உன்ன மட்டும் தான் அம்மானு கூப்பிட சொன்னாங்க? உன்னை பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம போன்ல யாருகுடவோ எப்பவும் அரட்டை அடிக்குறோமுன்னு எங்கள குற்றம் சொல்லுது அந்த அம்மா.




ஏண்டி உன்கிட்ட எவ்ளோ தடவ உன்னை பத்தி கேட்டோம், நீ எப்பாவது உன்னை பத்தி எங்க கிட்ட ஏதாவது சொல்லி இருக்கியாடி ? சொல்லுடி உன் பேரு மட்டும் தான் தெரியும் எங்களுக்கு மற்றபடி வேற ஏதாவது நீ உன் திருவாய திறந்து எங்க கிட்ட சொன்ன தானே தெரியும். நீ சிரிச்சு கூட நாங்க பார்தது இல்லைனு சொன்ன கூட அந்த அம்மா நம்புமான்னு தெரியல, இதுல எங்கள அந்த அம்மா திட்டுது உன்னை பத்தி முழுசா தெரிஞ்ச மாதிரி,


நாங்களும் ஒரு வருடமாக இந்த ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கோம் எங்க கிட்ட மட்டும் ஒரு நாள் கூட இவ்வளவு அன்பா பேசுவதோ, நடந்து கிட்டாதோ இல்லையே,


இப்போ என்னடானா நீ பண்ண வேலைக்கு எங்களை குற்றம் சொல்லுறாங்க அந்த உன்னோட அன்பு வார்டன் அம்மா , நீ துக்கத்தில் கனவு கண்டு அழுதா அதுக்கு நாங்க என்னடி பண்ணோம்.



எப்ப பாரு எங்கள பார்த்தாலே எரிஞ்சு விழும், எங்கள மட்டும் இல்லை இந்த ஹோஸ்டேலில் இருக்கும் எல்லாருகிட்டயும் அப்படி தான் இருக்கும் இந்த இரும்பு மனுஷி ஆனால் உன்னை பார்த்தால் மட்டும் உருகுற மனுஷி ஆகிடுது, உன்னை மடில வச்சு கொஞ்சாத குறை தான் போ.



அது என்னடி உன்னை பார்த்த மட்டும் ஒரு அன்பான, சாந்தமான எஸ்ப்ரஸின் காட்டுது எங்கள பார்த்து சந்தரமுகி ஜோதிகா மாதிரி, பத்திரகாளி மாதிரி கண்ணை உருட்டி உருட்டி மெரட்டுது, எல்லாம் எங்க நேரம் வேற ஹாஸ்டல் போகலாமுன்னு நெனைச்சா இங்க இருக்க வசதி, பாதுகாப்பு வேற எங்குமே கிடைக்க வாய்ப்பே இல்லை அது தான் போன போகடுமுன்னு இந்த அம்மாவோட உருட்டல், மெரட்டல் எல்லாதையும் ஓரம் கட்டிட்டு பொறுத்துகிறோம் இல்லைனா அக்கா புள்ளைக்கு இருக்க திறமைக்கு ( அவளை பற்றி அவளே பெருமையாக சொல்லி கொண்டாள்) இந்நேரம் வேற ஹாஸ்டல்ல ஜெகஜோதியா இருந்து இருப்பேன்.


நீ வந்து முழுசா மூணு மாசம் ஆகல அதுக்குள்ள இந்த அம்மா உன்னை பார்த்து உருகுது மறுகுது ம்ம்.... அப்படி என்ன தாண்டி சொக்கு பொடி போட்ட அவுங்கள மயக்க கொஞ்சம் எங்களுக்கும் சொல்லி கொடு கத்துகிறோம் என்று பொறிந்து தள்ளியவள்.


இறுதியாக அது சரி நீயே மிக பெரிய அமுக்கினி உம்மணாமூஞ்சி உன்கிட்ட போய் இவ்வளவு நேரம் எனர்ஜி போக கத்துறேன் நீ என்னடானா எதையும் கவனிக்காம யாருக்கோ வந்த விருந்துனு உட்கந்து இருக்க நீ சொல்லாம உன்னை பத்தி தெரிஞ்சுக்க நாங்க கிளி ஜோசியமா பார்க்க முடியும் என்று பேசி முடித்தவள் இதற்கு மேல இவ கிட்ட பேசுறது வேஸ்ட்னு சொல்லிட்டு மற்ற மூவரையும் தூங்க அழைத்து சென்றாள்.


அவர்கள் சென்று தூங்கும் வரை அமைதியா இருந்த நம்ம விதுஷா மெதுவாக சென்று தன்னுடைய டைரில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து அதில் தோற்றதில் இவளை போலவே இருந்த பெண்ணிடம் கண்ணீர் மல்க மானசீகமாக “ அக்கா என்னை மன்னித்து விடு நீ எங்கு இருந்தலும் என்னிடம் வந்து விடு.


உன்னை பார்த்து அந்த வார்த்தை சொன்னது தப்பு தான் அதற்காக எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கிறாய், எல்லாம் என்னால், என்னுடைய அந்த வார்த்தையால் தான் என்று தெரியும் மன்னித்து விடு...


இவள் இங்கு மனம் உருக கேட்க்கும் மன்னிப்பு அவளோட அக்காவின் இதயத்தை எட்டியதா ?
இனி வரும் கதையில பாப்போம்...
விழிகள் தொலையும்...



 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -3

விதுஷாவிடம் பேசிவிட்டு தன்னோட ரூம்க்கு வந்த அகிலாம்மா, தூக்கம் வராமல் மணியை பார்த்தார் நேரம் 3 மணியை காட்ட, கைபேசியை எடுத்து தன்னுடைய அன்பு மகன் கவுதமுக்கு அழைத்தார், அவன் போன் எடுப்பான் என்ற நம்பிக்கையில், அந்த பக்கம் அழைப்பு எடுக்க பட நிம்மதி பெற்றவராக,

என்னப்பா கவுதம், உனக்கு கொஞ்சம் கூட இந்த அம்மா நினைப்பே இல்ல போல தெரியுதே, நான் தான் இந்த ஹாஸ்டல் பொண்ணுகளை கட்டி கிட்டு அழுகுறேன் என்றால்,

நீ என்னடானா எப்ப பாரு ஒரே வேலை வேலைனு சொல்லிக்கிட்டு ஊரு ஊரா அலைகிற போல... என்று தன் மகனுக்காக பொய்யாக சலித்தவர் உனக்கு என்னப்பா ? கொடுத்துவச்சவன், உன்னை சுற்றி எப்பவும் கலர் கலரா, வித விதமா, புதுசு புதுசா, அழகு அழகா கண்களுக்கு குளிர்ச்சியா, எல்லாம் இருக்கும், அப்படி இருக்கும் போது இந்த பழைய அம்மா, வயசான அம்மாவோட, நினைப்பு எப்படி வரும் என்று ஒரு விதமான நக்கல் சிரிப்புடன் கேட்டார்..


என்னமா நீங்களும் இப்படி பேசுறீங்க... என்னை பற்றி, என்னோட வேலை பற்றி, எல்லாம் நன்றாக தெரிஞ்ச நீங்களே இப்படி பேசுறது கொஞ்சமும் உங்களுக்கு ஓவரா படல? இல்லை சும்மா என்னை ஏதாவது கேட்கனுமுன்னு கேட்க்குறீங்களா என்ன .. என்று சற்று கோபதோடவே அவரை கேட்டான்.


என்னப்பா அப்படி என்ன கேட்க கூடாத கேள்வி கேட்டுட்டேன்னு இதுக்கு போய் ரொம்ப கோப படுற சரி விடு, நம்ம பையன் ரெண்டு நாளா போன் எதுவும் நமக்கு பண்ணலையே, நாம பண்ணாலும் போன் எடுக்கலேயே, அதான் சரி கொஞ்சம் அக்கறையா என்ன ஏதுன்னு கேட்க போன் பண்ண எரிஞ்சு விழுற.. என்றார்



ஆமாமா ஆமா பிள்ளை ரெண்டு நாளா போன் பண்ணவே இல்லையே, ஏதோ வேலை விஷயமா ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போனானே அவனுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ, நேரத்துக்கு சாப்பிடானா? தூங்குனானா? தினமும் நம்ம கிட்ட பேசிட்டு தானே தூங்குவான், இப்படி நெனைச்சு அக்கறையா நீங்க கேள்வி கேட்ட ரொம்ப சந்தோஷம் தான்.
ஆனால் நீங்க என்னடானா அப்படி எல்லாம் என்கிட்டே கொஞ்சம் கூட அக்கறையா விசாரிக்காமால், உன்னை சுற்றி கலர் கலரா, புதுசு புதுசா, அப்படி இருக்கும், இப்படி இருக்கும், அதை எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியா பார்த்துட்டு இந்த பழைய அம்மாவை மறந்துட்டியானு நக்கலாக கேட்க்குறீங்களே இது நியாயமா மா?



இப்ப என்ன தப்பா கேள்வி கேட்டுவிட்டேன் என்று உனக்கு இவ்வளவு கோபம் வருது, நீ போனது ஊட்டிக்கு தானே அங்க கலர் கலரா, புதுசு புதுசா, கண்ணுக்கு குளிர்ச்சியா, மலர்களும், மலைகளும், மரங்களும், குளுகுளு கிளைமேட் என்று எல்லாமே நல்லா இருக்குமே அதை எல்லாம் பார்த்தியா, ரசிச்சியானு தானே ஒரு ஆர்வ கோளாறுல, அக்கறைல கேட்டேன் அதுக்கு போய் இப்படி கோபப்படுற நீ... என்று அவனை மடக்கினர்.



உங்களுக்கு தான் என்னோட பாஸ் பற்றி எல்லா விஷயமும் ரொம்ப நல்லா தெரியுமே மா, அப்பறம் எதுக்கு என்னை இப்படி நக்கலா கேள்வி கேட்டு கடுப்பு ஏதுறிங்க? அவருகிட்ட நான் எதையுமே பார்க்க முடியாது, ரசிக்க முடியாது என்று உங்களுக்கு தெரியாதா என்ன? இன்னொரு விஷயம் என்னனா நான் போனது விளம்பர பட சூய்ட்டிங் எடுக்க, நீங்க நெனைக்குற உங்க மருமகள் கூட புதுசா கல்யாணம் ஆகி தேனிலவுக்கு போகல ஊட்டிய சுற்றி பார்க்க, அதுவும் எங்க பாஸ் கூட ஊட்டிக்கு போனதும் சென்னை மெரினா கடற்கரை வெயில படுத்து கெடக்குறதும் ஒன்னு தான், அவரு என்ன படுத்துன கொடுமைல “எப்படா தப்பிச்சு ஊருக்கு போவமுனு ஓடி வந்துட்டேன் என்றான் சற்று எரிச்சலுடன்.



சரி சரி மகனே நீங்க இப்ப என்கிட்டே எவ்ளோ தான் கோபமா எரிச்சலா பேசுனாலும், கொஞ்சம் பேச்சுக்கு நடுவுல உங்க மனசுல உள்ள ரொம்ப நாள் ஆசைய என்கிட்ட சொல்லிடீங்க போல என்று அர்த்தத்துடன் சிரித்தார்..
என்னது ரொம்ப நாள் ஆசையா? நான் எப்பம்மா உங்ககிட்ட அப்படி சொன்னேன்? கொஞ்சம் எனக்கு புரிகிற மாதிரி சொல்லுங்கமா..
அதுவா அதான் நீ தான் இப்போ சொன்னேல்லபா “ ஊட்டிக்கு உங்க மருமகள் கூட தேனிலவுகா போனேனு” அதை சொன்னேன் உன்னோட நீண்ட நாள் ஆசைனு... என்று அவர் மறுபடியும் அவனை நக்கல் கொடுக்க..
அம்மா, ஏன்மா எப்ப பாரு என்னை வம்புக்கு இழுக்குறீங்க, கொஞ்சமாவது பெரிய மனுசி மாதிரி பொறுப்பா, ஒரு அம்மா பிள்ளை கிட்ட பேசுற மாதிரி பேசுறிங்களா? எப்ப பாரு கிண்டல், நக்கல், தான் என்கிட்டே என்று மீண்டும் கோபமாக கேட்டான் ..
அதற்கு அவர் சரி, நான் உன்கிட்ட எப்பவும் பொறுப்பா பேசலைன்னு சொல்லுற அப்படி தானே, சரி விடு இப்போ உன்கிட்ட நான் பொறுப்பான, பெரிய மனுசியா, அம்மாவா ஒண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்க “ நான் உனக்கு கல்யாணம் பண்ணலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன் “ போதுமா பொறுப்பா பேசுனது... இவ்வளவு பொறுப்பு போதுமா உனக்கு இன்னும் கொஞ்சம் வேணுமா “ என்று பாட்டு பாடினார் ராகதோட......


ஐயோ அம்மா போதும்மா விட்டுடுங்க... ஹா ஹா ஹா என்னால சிரிக்காம இருக்க முடியல...ஹா ஹா ஹா என்று அடக்க முடியாமல் சிரித்தவன்.


அப்படினா மை சன் உங்களுக்கு, “கோபமாக பேச வராதுன்னு” ஒதுக்கங்க அப்போ தான் நான் என்னோட காமெடிய நிறுத்துவேன்.




உடனே சரிமா ஓகே இப்ப நான் தான் அவுட் ஒத்துகிறேன், இன்னைக்கு நீங்க தான் ஜெய்ச்சிங்க போதுமா.. நீங்க அன்றைக்கு சொன்னது சரி தான் எனக்கு கோபம் சுட்டுபோட்டலும் வராது தயவுசெய்து உங்க காமெடிய நிற்படுங்க.. என்னால தாங்க முடியல ஹா ஹா ஹா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. விட்டா கோவை சரளா ரேஞ்சுக்கு நடிப்பிங்க போல...

ஓகே மை சன் ஊட்டி பயணம் எப்படி இருந்துச்சு?
ரொம்ப நல்லா ரசிச்சீங்களா? இயற்கையா? சூய்ட்டிங் எல்லாம் முடிஞ்சுடுச்சா? ஒழுங்கா சாப்பிட்டியா? தூங்குனியா?
எல்லாம் சூப்பர்மா அதெல்லாம் நோ ப்ரொப்லெம் எங்க பாஸ் இருக்குறப்ப நான் எதுக்கும் கவலை பட வேண்டியது இல்லை மா , சரி நீங்க ஊருக்கு போனீர்களே? எப்ப வந்திங்க? போன காரியம் நல்லபடியா முடிஞ்சுதுதா?
எல்லாம் நல்ல படியா முடிச்சது பா..இன்னைக்கு நைட் தான் வந்தேன். உன்கிட்ட ஒண்ணு கேட்கனுமுன்னு நெனச்சேன், உண்மைய சொல்லு, நீ எப்ப தான் ஒரு கல்யாணம் பண்ண நினைப்ப? வயசு வேற கூடிக்கிட்டே போகுது உனக்கு...
எப்ப பாரு பாஸ் பாஸ் என்று அவன் பின்னாடி சுத்துறத விட்டுட்டு , ஒழுங்கா கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு பேரன் இல்லை பேத்திய பெத்து கொடுக்குற வழிய பாருடா...
அம்மா, எங்க பாஸ அவன் இவனு சொல்லாதீங்க ப்ளீஸ் அப்பறம், உங்களுக்கு எங்க பாஸ எப்பவும் திட்டலைனா தூக்கம் வராதே,
ஆமா அவனை பற்றி அவரு இவருனு பேசிட்டாலும் ...
சரி அதை விடுடா கண்ணா, உன்கிட்ட ஒரு பொண்ணு பற்றி சொன்னேல்ல, நியாபகம் இருக்க உனக்கு?
எந்த பொண்ணுமா ஓஓ கல்யாணதுக்கு பொண்ணு பார்த்து இருக்கீங்களா? அட போங்கம்மா, வெட்கமா இருக்கு என்று வெட்க பட்டவன நெனைச்சு தலைல அடித்து கொண்டவர்...
டேய் பொண்ணுனா கல்யாணம் தான் உனக்கு நியாபகம் வருமா? வேற விஷயமே தோணாத உனக்கு என்றார்..
இப்ப தானே மா நீங்க கல்யாணம், குடும்பம், குழந்தைனு இருனு சொன்னிங்க அதுக்குள்ள நீங்க சொன்னதை நீங்களே மறந்துட்டு என்னை திட்டுறீங்க, கல்யாணம் பண்ணு பண்ணுனு சொல்லுறிங்களே தவிர எனக்குணு ஒரு பொண்ணு பார்க்க தோணுச்சா உங்களுக்கு? போங்கம்மா எப்ப பாரு என்னையே குறை சொல்லிகிட்டு, உங்க கூட நான் சண்டை பேசு மாட்டேன் போங்க என்றான் பொய் கோபத்தோடு..
சரி மகனே நம்ம சண்டையை அப்பறம் போட்டுக்கலாம் இப்ப நான் கேட்க்குறதுக்கு பதில் சொல்லுங்க..
நான் அன்னைக்கு விதுஷானு ஹாஸ்டல்ல தங்கி இருக்க பொண்ண பத்தி சொன்னேல்ல”
ஆமாம் அதுக்கு இப்ப என்ன அந்த பொண்ண நான் கட்டிக்கணுமா சொல்லுங்க உங்களுக்கு பிடிச்சா எனக்கு ஓகே தான்... நோ ப்ரொப்லெம் அம்மா எந்த வழியோ அடியேன் அந்த வழி....
ஹலோ மை சன் உங்கள மாதிரி ஆளுக்கு எல்லாம் அந்த பொண்ணு செட் ஆகாதுமா, உனக்கு எல்லாம் ஒரு வாயாடி தான் சரி வரும் உன்னை அடிச்சு துவைச்சு காய போட்டு இஸ்த்திரி போடா சரியா இருக்கும்.
இப்போ நான் சொன்ன பொண்ணு ஒரு வாய் இல்லாத பூச்சி தெரியுமா உனக்கு? இவ பேசவே ஒரு லட்சம் கேட்ப்பா சரியான அமுகுணி அவ, அவளை எல்லாம் மறந்தும் மனசுல நெனைச்சுடாத, அப்படி எதுவும் மனசுல நெனைச்சேன்னா இப்பவே ரப்பர் வச்சு அழிச்சுடுங்க மை சன்.. எனக்கு எல்லாம் நல்லா வாய் பேசுற, சண்டை போடுற பொண்ணு தான் மருமகளா வரணும், இல்லைனா லைப் ரொம்ப போரடிக்குமே டா செல்லம்.
ஏன்மா கூட வாழ பொண்ணு பார்க்க சொன்ன குத்து சண்டைக்கு பொண்ணு பார்க்க நெனைக்கிறிங்க...
சரி அதை அப்பறம் பேசிக்கலாம் பொண்ணு பார்குறப்ப.,
இப்ப நீங்க சொல்லுற பொண்ணு பேரு கூட ஏதோ சொன்னிங்களே...ம் ம் விதுஷா...
அந்த பொண்ணு பார்க்க எப்படி இருப்பானு சொல்லுங்கமா.. என்று கேட்டான் கொஞ்சம் ஆர்வமாகவே...
அந்த பொண்ணுக்கு என்னப்பா அவோளோ அழகு, அப்படியே பார்க்கறதுக்கு தேவதை தான் போ, பறக்க சிறகு தான் இல்லை என்று சொன்னவர்..
சரி அதை விடு நீ எதுக்கு இப்போ அவ அழக பற்றி எல்லாம் கேட்க்குற, அவ எப்படி இருந்த உனக்கு என்னடா “ அவ உனக்கு செட் ஆக மாட்டான்னு இப்ப தானே உன்கிட்ட சொன்னேன் என்றார்..
அது ஒன்னும் இல்லை மா எப்ப பாரு போன் எடுத்தாலே அந்த பொண்ண பற்றியே ஏதாவது பேசுறீங்க அப்படி என்ன தான் அவ கிட்ட இருக்குனு கேட்டேன் எங்க அகிலாம்மா மனசுல இடம் பிடிக்குற அளவு, ஏன்னா எங்க அம்மா மனசுல இடம் பிடிக்குறது அவ்வளவு எளிது அல்ல, ரொம்ப கஷ்டம், பிடிச்சவுங்களுக்காக எதையும் விட்டு கொடுப்பாங்க (வாழ்க்கையை கூட என மனதுக்குள்ளே நினைத்தவன் ) அப்படி அந்த பொண்ணு கிட்ட என்ன இருக்கு ஹாஸ்டல் வந்த மூணு மாசத்துல, ஏன்னா இதுவரை நீங்க ஹாஸ்டல இருக்க யாரை பத்தியும் என்கிட்டே சொன்னது இல்லை அதான் எனக்கு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குமா அவ்வளவு தான்..
மற்றபடி அந்த பொண்ணு மேல எனக்கு எதுவும் தோன்றவில்லை, ஒருவேளை அவளை அதுதான் உங்களுக்கு சிறகு இல்லாத தேவதைய நேர்ல பார்த்த அய்யா பிளாட் ஆவேனோ என்னமோ, ஆனால் நான் எங்க விளம்பர கம்பெனில பார்க்காத அழகிகளா, பெண்களா ? நீங்க சொல்லுற தேவதையா விட அவோளோ அழகுமா, அவுங்கள பார்த்தே அய்யா விழுகல,

நேற்று கூட மும்பை பொண்ணு ஒருத்தி ‘அம்புட்டு அழகு அந்த பொண்ணு என்ன ஒரு நிறம் என்ன ஒரு முகம் எல்லாமே அழகு” ஆனால், என்று அவளை வாயை திறந்து வர்ணிக்க கனவு உலகுக்கு போனவன், தனது அம்மாக்கு தெரிஞ்சா திட்டு விழும் என்பதை எண்ணி நினைவுக்கு வந்தவன் சரி இனி என்னமா உங்க தேவதையை பாத்தா நான் மயங்கி விழுக போறேன்னு நெனைக்கிறிங்க, போங்கம்மா... என்றான் சலிப்பாக சொன்னவனுக்கு தெரியவில்லை, தான் அந்த தேவதைய பார்த்தால் இனி என்ன ஆவானோ, இல்லை சாகக்கூட துணிவனோ என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம் )
சரி, இப்போ நான் சொல்லுறத கொஞ்சம் கேளு உன்னோட அழகிகள் புராணத, ராமாயணதை கொஞ்சம் நிறுத்திடு நான் சொல்லுறத கேளு. என்றார்
எனக்கு அந்த பொண்ணோட கண்ண பார்த்தாலே எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு டா.. என்னனு புரியல டா...என்றார்
ஐயோ அம்மா நான் பார்க்காத கண்ணா என்று ஆரம்பித்தவனை “ டேய் மறுபடியும் உன்னோட கம்பெனி அழகிக கண்ண பற்றி பேச ஆரம்பிச்சுடாத அம்மா பாவம் அழுதுடுவேன்...
ஏன்மா நீங்க உங்க அழகி பற்றி சொல்லுறத மட்டும் நான் பொறுமையா கேட்கணும் , ஆனால் நான் எங்க கம்பெனி அழகிகளை பற்றி பேசுனா மட்டும் நீங்க கேட்க மாட்டேன் என்று அழுகுறீங்க போங்கம்மா..

இப்படியே இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டதில் நேரம் போனது தெரியாமல் காலை பொழுது 5:30 மணியை காட்ட,
இருவரும் ஒரு வழியாக விடிந்ததை உணர்ந்து, ஓகே மை சன் இப்ப நேரம் ஆகிடுச்சு மீதி சண்டையை நாளைக்கு வச்சுக்கலாம் என்று சொன்னவர், மீண்டும் ஒரு சில விஷயகளை அவனிடம் கேட்டு தெரிஞ்சு கொண்டவர் ஓகே டா கண்ணா, நீயும் போய் கொஞ்சம் தூங்கு , நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன் என்று சொல்லி விட்டு போனை அணைத்தார்கள்...
தனது இந்த மகனால் தான் அவரது பட்டு போன வாழ்க்கைக்கு ஒரு உயிர்ப்பு கிடைத்தது என்பதை நினைத்து இந்த தாய் தினமும் பெருமை கொண்டார், அவனுடன் பேசும் போதும் சிரிக்கும் போது சின்ன குழந்தையாகவே மாறுவதை உணர்ந்தார்..
அவனோட பதிலுக்கு பதில் பேசி போடும் சின்ன சின்ன சண்டைகள், கிண்டல்கள், தான் அவரை இன்று வரை உயிருடன் சந்தோசமாக வைத்து உள்ளது என்று கூட சொல்லலாம், ஒரு காலத்தில் உயிராய் நினைத்த உறவுகள் நம்பிக்கை துரோகம் செய்து இவரது முதுகில் குத்திய பொழுதே அவர் இறந்து இருப்பர் ஆனால் தன்னுடைய மகனுக்காக தான் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த மகனுக்காக உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்.
இப்படி ஒரு அன்பான மகன் கிடைக்க காரணமான, இன்று வரை தினமும் வணங்கும் ஈசனுக்கு நன்றி சொன்னார்...

விழிகள் பேசும்.....








 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க?
என்னோட கதையை படிச்சுட்டு மறக்காம கமெண்ட் லிங்க்ல கொஞ்சம் கமெண்ட் கொடுங்க பா அப்ப தான் என்னோட கதை எப்படி இருக்குமுன்னு எனக்கு தெரியும்
இப்படிக்கு

மீரா செந்தில்

 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள்- 4

பார்வதி மகளிர் ஹாஸ்டல் தொடங்கி பல வருடங்கள் ஆகி இருந்தாலும், அது அப்படி ஒன்றும் பிரபலம் அடைந்து இருக்கவில்லை, ஆனால் எப்பொழுது அகிலாண்டேஸ்வரி பொறுப்பில் வந்ததோ அப்பொழுது இருந்தே அவர் பல நல்ல மாற்றங்களை செய்ய ஆரம்பித்து விட்டார்..

இப்பொழுது கூட பார்வதி மகளிர் ஹாஸ்டல் என்றால் தெரியாத பெண்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தனி தன்மை பெற்று உள்ளது என்று சொல்லுவது மிகை அல்ல.. ஏன்னெனில் ஹாஸ்டெல்ல தங்கி வேலைக்கு செல்லக்கூடிய பெண்களிடம் மத்தியில் அப்படி ஒரு நல்ல பிரபலம் ஆகி இருந்தது.


சென்னைக்கு வேற மாநிலம், வேற ஊரு களில் இருந்து வரும் பெண்கள் யாரிடமவது, “ஒரு நல்லா லேடீஸ் ஹாஸ்டல் சொல்லுங்கன்னு சொன்னாலே, அனைவரும் பரிந்து உரைப்பது “ பார்வதி மகளிர் விடுதியை தான், அப்படி ஏன் என்று காரணம் கேட்டால் அவர்கள் சொல்லும் காரணம், அங்கு இருக்கும் பாதுகாப்பு மற்றும் அனைத்து வசதிகளும் தான், அந்தளவு அகிலாம்மா அதை உருவாக்கி வச்சு இருந்தார்...


விதுஷாவின் ரூம் தோழி கூட, இந்த ஹாஸ்டல்ல இருக்க கூடிய அனைத்து வசதிகளும் மற்றும் பாதுகாப்பும் வேற எங்கு போனாலும் கிடைப்பதில்லை...என்றும் அதனால் தான் அகிலாண்டேஸ்வரின் “ உருட்டல் மிரட்டல் “ போன்ற எல்லாதையும் பொறுத்து கொண்டு தான் இங்கே தங்கி இருப்பதாக சொன்னாளே..அது தான் நிதர்சனமான உண்மையும் கூட ..

எப்பொழுது இங்கு ஆண்கள் தான் அதிகம் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்பதை தனது சொந்த வாழ்க்கை கொடுத்த அனுபவ பாடத்தால் உணர்ந்தவர் இனி தன்னால் முடிஞ்ச வரை பெண்களை பாதுகாக்க வேண்டும் உறுதியாக நெனைத்தவர், தன்னால் எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது ஆனால் தன்னால் முடிந்தவரை பாதுகாப்பு அளிப்போம் என்று நினைத்தவர், அதுவரை யாரும் கவனிப்பு இன்றி இருந்த பெயருக்கு இயங்கி வந்த விடுதியின் பொறுப்பை கையில் எடுத்தார் மேலும் வாழ்ந்தால் நாலு பேருக்கு நல்லது பண்ணனும் என்று வாழ்க்கை லட்சியமாக எண்ணியவர் ,

இங்கு அவரது விடுதியில் இருக்கும் பெண்களை தன்னால் முடிந்த அளவு பல கட்டுபாடுகளை விதித்து, முகத்தில் கடுமையை காட்டி அவர்களை தவறான வழிக்கு செல்லவிடாமல் தன்னால் முடிந்த பாதுகாப்பை அளித்து வருகிறார் என்பதே உண்மை

கடந்த மூன்று வருடங்களாக தான் அகிலாண்டேஸ்வரி தான் பல நவீன வசதிகள் செய்து பராமரித்து வருகிறார், அதற்கு முன்பு இருந்தவரை அது ஒரு சாதாரண அடிப்படை வசதிகள் பெயரளவில் இருந்த மகளிர் விடுதி அவ்வளவு தான்.. ஏனெனில் விடுதியின் முந்தைய பராமரிப்பளர்களுக்கு, இந்த விடுதியை நல்லா முறையில் நடத்த விருப்பம் இல்லை ஏனெனில் அவர்களுக்கு இதை விட அதிகம் பெயரும் புகழும் தர கூடிய பெரிய பெரிய நிறுவனங்கள் இருந்தது அதனால் அவர்கள் இந்த விடுதியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை, கண்டு கொள்ளவும் இல்லை, ஏதோ பேரளவு சொத்து என்று இருந்துட்டு போகட்டும் என்றே நினைத்து செயல்பட்டார்கள்.... என்பதே உண்மை..

மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்த பழய அகிலாண்டேஸ்வரி குணங்கள் வேறு இப்பொழுது இருக்கும் புதிய அகிலாண்டேஸ்வரி குணங்கள் வேறு, அப்பொழுது வெகுளி தனமாக, எப்பொழுதும் சிரித்த முகத்துடன், கனிவான பார்வையுடன் அன்பே உருவாய், அனைவரும் நல்லவர்களாக நம்பி வெளி உலகமே தெரியாமல் இருந்தார்..

தன்னோட இருபவர்கள் சந்தோசமே தன்னோட சந்தோஷம் என்று தன்னோட குடும்பமே கோவில்,அவர்கள் எல்லாம் தெய்வம் என நம்பி, அவர்களுக்கு சேவை செய்வதே தனது வாழ்க்கையின் லட்சியம் என்று அவர்கள் மீது உயிரேயே வைத்து அவர்களை பார்த்து பார்த்து சந்தோச பட்டு வாழ்ந்து வந்தவர் தான் அவர்...

ஆனால் காலத்தின் கட்டாயமோ என்னவோ, யாரு செய்த பாவமோ இவரது வாழ்க்கையவே மாற்றி அமைத்து விட்டது, தனக்கு எல்லாமும் அவர்கள் தான், இந்த குடும்பம் தனக்கு கடவுள் கொடுத்த வரம் என்று அவர் நினைத்து நம்பி வாழ்ந்து வந்தவர் எப்பொழுது, தன்னுடைய குடும்பமே தனக்கு செய்த மன்னிக்க முடியாத, யாராலும் ஏற்று கொள்ள முடியாத, துரோகங்களை எப்பொழுது தெரிந்து கொண்டாரோ அதோட அவர்களை வெறுத்து ஒதுக்கியவர், அப்பொழுதே தன்னுடைய இயல்பான குணங்களை மாற்றி கொண்டார்...

தான் வெகுளித்தனமாக அனைவரையும் நல்லவர்கள் என்று நம்பி வாழ்ந்தது தப்பு என்றும் அதனால் தான் தன்னை எல்லாரும் ஏமாற்றினார்கள் என்று எண்ணியவர், தன்னை அனைவரிடமும் கடுமையான கண்டிப்பான கோபக்கார பெண்மணியாகவே காட்டி கொண்டு வாழ்ந்து வருகிறார் ஆனாலும் அவரையும் மீறி சிலரிடம், சில நேரங்களில், அவரோட உண்மையான அன்பான குணம் வெளிப்பட்டு விடுகிறது என்று கூட சொல்லலாம்..
அது வேற யாரிடமும் இல்லை நம்ம கதையோட தேவதை விதுஷா கிட்ட தான். ஆனால் அது ஏன் என்று அவருக்கே புதியவில்லை, ஏன் தன்னால் மற்றவர்களிடம் மாதிரி கோபமாக அவளிடம் மட்டும் கோபமாக நடக்க முடியலவில்லை என்று பலமுறை யோசித்து விட்டார்..
தான் ஏன் அந்த பெண்ணை மட்டும் திட்டம் முடியவில்லை, அவளை பார்த்தாலே பழைய சாந்தமான அகிலாண்டேஸ்வரியாக, தான் மாறுவதை பலமுறை உணர்ந்தார், ஆனால் காரணம் தான் கிடைக்கவில்லை,
இதுவே ஹாஸ்டலில் உள்ள வேற பொண்ணுக யாரவது, விதுசா மாதிரி இரவு நேரத்தில் அலறி எல்லார் தூக்கத்தையும் கெடுத்து இருந்தால் நடந்து இருப்பதே வேறாக இருக்கும், இந்நேரம் அந்த பெண்ணை ஹோஸ்ட லை விட்டு கட்டாயம் அனுப்பி இருப்பர்..ஆனால் விதுஷா விஷயத்தில் அவரால் எந்த கண்டிப்பும் கடுமையும் காட்ட முடியவில்லையே ஏதோ ஒன்று அவரை தடுக்கிறது..
தன்னுடைய மகன் வயதில் உள்ள ஹாஸ்டல் பெண்களை எல்லாம் கண்டிப்பாக மேடம் என கூப்பிட சொல்லி அவர்கள் புதிதாக சேரும் அன்றே சொல்லி விடுவார், ஆனால் விதுஷா மட்டும் “மேடம்” என்று கூப்பிட்டால், அவரையே அறியாமல் அம்மானு கூப்பிடு என்று சொல்லிவிட்டார்..
இது ஏன் எதற்க்காக இந்த பெண்ணை பார்த்தால் மட்டும் தனக்கு எங்கோ பார்த்த நியாபகம், குறிப்பாக அந்த கண்கள் அவரை என்னமோ செய்தது.. சொல்ல முடியாத உணர்வுகள் அவரை குழப்பம் அடைய செய்தது.. அதனால் தான் தன்னுடைய மகனிடம் இந்த விவரங்களை சொன்னார்..
அவனுக்கு கூட தன்னோட அம்மாவ நெனைச்சு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு, ஏன்னா எப்பொழுதுமே அவருடைய அன்பு மகன் கௌதம் கிட்ட மட்டும் தான் அன்பா பாசமா நடந்து கொள்ளுவர், கோப படமாட்டார்,
ஏன்னா அவன் அவோரட செல்ல மகன் அல்லவா, அவோரட வாழ்க்கையோட ஆணி வேர் அவன் தானே அதனால் கூட அவனிடம் மட்டும் பாசமாக இருக்கலாம் என்று அவனுக்கு தோன்றியது..

இந்த உலகத்துல இவனை தவிர வேற உறவுகள் இருந்தும் யாரும் தேவை இல்லை என்று நினைத்து வாழ்பவர்..
ஆனால் அப்படி தன்னை மட்டுமே நேசிச்ச அம்மா, மற்றவர்களிடம் கோப முகம் காட்டிய அவனது இப்ப என்னடானா, திடீரென்று, அந்த பொண்ண பார்த்த கோபம் பட முடியல, அவளை எங்கோ பார்த்த ஒரு புதிய புரியாத உணர்வு தோணுது,
அவள் மேல பாசம் காட்ட தோணுது என்று சொல்லுவது அவனுக்கே சற்று அந்த பெண்ணின் மீது கொஞ்சம் பொறாமையை அளித்தது எனலாம் ..
அப்படி அம்மாவின் மனதை கவர்ந்த பெண்ணை பார்க்க வேண்டும், என்ற ஆவல் உண்டானது என்று கூட சொல்லலாம்...
ஆனால் அந்த தேவதையை விரைவில் பார்க்க போகிறோம் என்று அவனுக்கு கொஞ்சம் கூட தெரிந்து இருக்க வில்லை ....
விழிகள் தொலையும்....

.
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -5

அகிலாம்மா தனது அறையை விட்டு சென்றவுடன் விதுஷா தனது அக்காவின், போட்டோவை பார்த்து, அழுது கொண்டே இருந்தவள் அவளையே அறியாமல், தானாகவே அசதியில் தூங்கிவிட்டு இருந்தாள்..


இப்போவாது நம்ம கதையோட ஹீரோயின் பற்றி கொஞ்சம் சொல்லுறேன் இப்பவே நல்லா கேட்டு கொள்ளுங்கள்...
நாளைக்கு என்ன குத்தம் சொல்ல கூடாது...
எங்கம்மா ஹீரோ என்று நீங்க கேட்க்குறது எனக்கு நல்லாவே கேட்க்குது பா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பா வருவார்...
5 வருசமா ஓடுற டிவி சீரியலில் கூட ஹீரோயின முக்கியம வச்சு எடுக்குறாங்க
நமது சின்ன கதை தான் ஒரு மாசமா ரெண்டு மாசமா என்று எனக்கே தெரியல அப்படினா ஹீரோயின் க்கு எம்புட்டு சீன் போடணும் சொல்லுங்க பா சொல்லுங்க

அதான் நான் ஹீரோயின் பற்றி முதலில் சொல்லுறேன்
ஹீரோ சீக்கிரம் வருவாரு மா கவலை படக்கூடாது கண்ணுகளா..

அவள் தன்னுடைய BSC பேஷன் டிசைனிங் படிப்பை கல்லூரி ஹோஸ்டேலில், தங்கி தான் முடித்தாள், இவள் பன்னிரண்டாம் வகுப்பு வரை தன்னுடைய சொந்த ஊரில் தான் படித்தாள் மேலும் அவள் பள்ளி இறுதி தேர்வில் நல்லா மார்க் வாங்கியதால் அவளுக்கு, கோயம்பத்தூரில் உள்ள புகழ் பெற்ற கல்லூரியிலே BSC பேஷன் டிசைனிங் படிப்பில் இடம் கிடைத்தது..

எல்லாரும் டாக்டர், டீச்சர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று லட்சியதுடன் இருக்க இவள் மட்டும் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆவதே தனது வாழ்க்கை லட்சியம் என்று கொண்டு இருந்தாள் அதற்கு காரணம் அவளது அம்மா யாழினி மட்டும் அல்ல அவர்களை இன்று வரை வாழ வைக்கும் தையல் கலை என்று கூட சொன்னால் அது மிகையல்ல ..
தையல் கலைய தங்களை காத்த கடவுளாகவே நினைத்தாள் நம்ம விதுசா
யாழினி கூட தனக்கு சிறுவயது முதல் கட்டாயமாக கற்று தர பட்ட தையல் தொழில் செய்து தான் இவளையும், இவளது அக்கா வித்யாவையும் படிக்க வைத்தார், மேலும் அந்த ஊரில் பெரிய பணக்காரர், நெறைய ஆடைகள் வடிவமைப்பு, ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ஆடை சம்மந்தபட்ட அனைத்து தொழிலுக்கு முதலாளி ஆவர் “




விதுஷா மற்றும் வித்யாவின் அப்பா, சின்னவள் ஒரு வயதும், பெரியவள் க்கு நான்கு வயது இருக்கும் பொழுதே ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார், இப்போது வரை அவரது முகம் இவர்களுக்கு சரியாக நியாபகம் இல்லை, விவரம் அறியாத வயதில் பார்த்ததால் அப்பா முகத்தை கூட மறந்துவிட்டு இருந்தார்கள் மேலும் அவர்களது அப்பா போட்டோ கூட பார்தது இல்லை அதை கூட அவர்களது அம்மா ஏதோ ஒரு காரணமாக மறைத்து விட்டார் என்று கூட சொல்லலாம்..


சில நேரங்களில் அவரது அம்மாவும், அப்பாவை பற்றி இவர்கள் கேட்க்கும் பொழுது சொன்ன வார்த்தை “ உங்க அப்பா ரொம்ப நல்லவர் அவ்வளவு தான்.. அதற்கு மேல் இவர்களும் கேட்கவில்லை, கேட்கவிடவும் இல்லை, அவரும் சொல்லவில்லை ஏனெனில் அவர்களது அம்மா மிகவும் அழுத்தமான குணம் உடையவர் மிகவும் கண்டிப்பானவரும் கூட,

ஒரு முறை அவர் சொன்னால் சொன்னது தான் அதற்கு மேல் எதுவும் கேட்க கூடாது என்பதை ஒரே ஒரு அழுத்த பார்வையாலே எதையும் புரிய வைத்துவிடுவார்.


இல்லை என்றால் கணவர் இன்றி தனியா ளாக இரண்டு பெண் பிள்ளைகளை வளர்ந்து படிக்கவைத்து இருக்க முடியுமா? பாதுகாக்க முடியமா?


அதனால் அவளது அம்மா அவர்களிடம் எப்பவுமே மிகவும் கண்டிப்பாகவே நடந்து கொள்ளுவர், சிரித்து கூட பேசமாட்டார், அவர்களுக்கும் அது பழகி போனதால் அவர்களும் அவரிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.. அவர்களுக்ககுள்ளே பேசி கிண்டல் செய்து சிரித்து கொள்வார்கள்..


அப்படி அவர்கள் சிரிப்பதை பார்த்தால் ஒரு முறைப்பு தான் இவர்கள் தானகவே அடங்கி அமைதி ஆகி விடுவார்கள்..


அன்றும் அப்படி தான், இவர்கள் ஏதோ ஜோக் சொல்லி சிரிப்பதை, பார்த்து முறைத்தார்,

அவர் அந்த இடத்தை விட்டு சென்ற உடனே,
சின்னவ சொன்னாள் ,” நம்ம யாழினி அம்மா மட்டும் பெரிய சமஸ்தான இளவரசியா இருந்து இருந்தாங்கனு வச்சுக்க அவோளோ தான் ஒரே பார்வாயிளே எல்லாரையும் அடக்கி ஆட்சி செய்து இருப்பாங்க குட்டி அக்கா , அவுங்க பார்வைல அவோளோ கம்பீரம், அவோளோ கர்வம், கண்டிப்பு எல்லாமே இருக்குது பாருக்கா என்றாள்..


அம்மாடி விது குட்டி சொன்னது சரி தான் நம்ம அம்மாவ பார்த்த எனக்கும் அப்படி தான் தோணுது, பாவம் நம்ம அம்மா “ அழகு, அறிவு, திறமை, கர்வம், ஆளுமை இப்படி எல்லாம் இருந்தும், இப்படி ஏழையா வந்து பிறந்து, சின்ன வயசுலையே கணவரை இழந்து, சின்ன வயசுலேயே ஆசைகளை அடக்கி கிட்டு நம்மள காப்பாத்த எவ்ளோ கஷ்ட படுறாங்க பாரு,


நம்ம வீட்டுல எல்லா வேலையும் பார்த்துடு, தையல் வேலை பாத்துட்டு, நம்ம குமாரசாமி அய்யா வீட்டுல போய்ட்டு அவுங்க வீட்டுல இருக்க பொண்ணுகளுக்கு தனக்கு தெரிஞ்சா பாட்டு, நடனம், சமையல், வீட்டு பராமரிப்பு, தையல் இப்படி எல்லாம் கற்று கொடுத்து கிட்டு வீட்டு வேலையும் செய்றாங்க..

எல்லாமே நமக்காக தான்கா அம்மா செய்றங்க நாமளும் அவுங்க பேச்சை நல்லா படியா கேட்டுகிட்டு, நல்லா படிச்சு சம்பாதிச்சு அம்மாவ நல்லா பார்த்துக்கணும் விது குட்டி என்றாள் பெரியவள் வித்யா..


( பெரியவள், சின்னவளை விது குட்டி என்றும், சின்னவள், அக்காவை “ குட்டி அக்கா என்று கூப்பிடுவார்கள் )



எனக்கு ஒரு சந்தேகம் குட்டி அக்கா , உனக்கு அம்மா அப்பாவை எப்படி கல்யாணம் பண்ணி கிட்டாரு, அவரு எப்படி இருப்பரு? எப்படி இறந்தாருனு? அம்மா ஏன் இப்படி இருக்காங்க? நம்ம கிட்ட ஏன் இப்படி கோபமாவே நடக்குறங்க? அப்பா போட்டோ எங்க? அம்மா அப்பா கல்யாண போட்டோ கூட எங்க? அம்மாவோட சொந்த ஊரு எது,? அவுங்க அப்பா அம்மா எங்க?


அப்பா பேரு என்ன? அப்பாவோட ஊரு என்ன ? அவோரட சொந்தம் யாரு? எங்க இருக்காங்க இப்படி நெறைய கேள்வி அம்மா கிட்ட கேட்க தோணலையா உனக்கு?

எனக்கு கேட்க தோணுது தான் ஆனால் அம்மாவே ஏதோ காரணம் இருப்பதால் தான் நம்ம கிட்ட மறைக்குறாங்க பாப்பா, இல்லைனா சொல்லி இருப்பாங்க அதனால் விடு பாப்பா அவுங்க எவ்ளோ கஷ்ட பட்டாலும் நம்மள நல்லா வச்சுகிற தான் நெனைக்குறாங்க பாப்பா,

அவுங்களுக்கு எப்போ சொல்ல தோணுதோ அப்போ சொல்லட்டும் அதுவரை இந்த குட்டி முளைய கொஞ்சம் ஆப் பண்ணுங்க செல்லம்...


அவர்கள் சொன்ன நேரமும் மறுநாள் வந்தது தான் கொடுமை, தன்னுடைய பிள்ளைகளை வளர்க்கவே தன்னுடைய அன்பு கணவர் இறந்த பின்பும் உயிரை கையில் பிடித்து கொண்டு நாட்களை எண்ணி கொண்டு வாழ்ந்தவர் .. இனி தனது பிள்ளைகளை தவிக்க விட போறோம் என்பதை மறந்து விட்டார்..

கணவர் இறந்த பொழுதே இவரும் செத்து இருப்பர் ஆனால் தான் செத்தால் தன்னுடைய பிள்ளைகளை யாரு வளர்ப்பது என்று நினைத்து சாகும் முடிவை மாற்றி கொண்டார்

அவர் சின்ன வயதில் சொல்லி தந்த பாட படி தற்கொலை செய்வது கோழைத்தனம் என்று எண்ணுபவர்.


தனக்கு நன்கு தெரிந்த தையல் கலை மட்டும் இன்றி சமையல் முதல் அனைத்து வேலைகளையும் அவர் தனது பெண்களுக்கு கற்று கொடுத்து இருந்தார், ஏன் என்றால் அவருடைய உடல்நிலை அவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது,


தான் ரொம்ப நாள் இருக்க மாட்டோம் அதனால் நமது பிள்ளைகள் நாம் இல்லாமல் வாழ கற்று கொள்ளவேண்டும்.. என்று தனக்கு தெரிந்த அனைத்தும் கற்று கொடுத்தார் ஆனால் வாழ்க்கையின் முக்கியமான சூழ்ச்சி இல் இருந்து தப்பிபது எப்படி, யாரை நம்ப கூடாது என்று சொல்ல மறந்து விட்டார்... இந்த அன்பு தாய்

தான் இருந்தாலும், இறந்தாலும் தன்னை பற்றி ஒரு போதும் அவர்கள் கவலை பட கூடாது, என்றும் தன்னோட பாசத்தை அன்பை அவர்கள் நெனைக்க கூடாது என்று தான் அவர் அவர்கள் மேல் பாசத்தை காட்டாமல் கண்டிப்பை காட்டி வளர்த்தார்... அந்த அன்பு தாய்..




தனது வேலைகள் முடித்த பின்பு மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை குமாரசாமி அய்யா “ வீட்டிலும் வேலை பார்த்தார்.. யாழினி.


மேலும் குமாரசாமி அய்யா க்கு யாழினி சொந்த மகள் போலவே நினைக்கும் நல்ல மனிதர் ஆவர் ஏன் என்றால் அவருக்கு பெண் குழந்தை இல்லை, அதனால் அதனால் யாழினி மீது தனி அன்பு, மேலும் யாழினி அவரிடம் மிகுந்த அன்புடன் நடந்து கொள்வர்.. பெரியார் ஏதாவது வேலைகாண சம்பளதை அதிகம் கொடுத்தால் “ யாழினி அன்புடன் வேண்டாம் என்றே சொல்லி விடுவார் மேலும் அய்யா உங்க உதவி தேவைப்படுறப்ப நான் வாங்கிக்கிறேன் என்று சொன்னவர்,
ஒரு நாள் குமாரசாமி அய்யா வை பார்த்த யாழினி அவரிடம் ஒரு கனமான மஞ்சள் பையை ஒப்படைத்தாள் அதை யாரிடம் கொடுக்காமல் மிக பாதுகாப்பக பேங்க் லாக்கர் வைக்கும் படியும் அதில் இருபவை அனைத்தும் தன்னுடைய பொண்ணுகளை சேர வேண்டியது என்றும்,
அதில் உள்ள லெட்டர் தான் கைப்பட மகள்களுக்கு எழுதியது, அதை நான் இறந்த பின்பு தன்னுடைய பொண்ணுகளிடம் ஒப்படைக்க சொன்னவர்,

மேலும் யாழினி “ குமார சாமி அய்யா கிட்ட கேட்ட இன்னொரு உதவி என்னனா,


. யாழினி யோட பொண்ணுகளை, யாழினியோட இறப்புக்கு பிறகு அவர்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்றும் சொன்னார்


ஆனால் குமார சாமி அய்யாக்கு தெரியலவில்லை “ தன்னோட குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் தான் யாழினி சாகவும், யாழினி பொண்ணுக கஷ்டபட காரணமா இருக்க போறாங்க என்றும்,


தான் யாழினிக்கு செய்த சாத்தியத்த காக்க முடியாது என்று,

விழிகள் தொலையும்
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,

உங்களுக்கு என்னோட கதை பிடிச்சு இருக்க இல்லையானு தெரியல இருந்தாலும் எனக்கு தெரிஞ்சா கதையை எழுதுறேன்

இது என்னோட முதல் கதை அதனால் கொஞ்சம் தவறு இருக்க வாய்ப்பு இருக்கு அதனால் மன்னிக்கவும்

கதையை படிச்சுட்டு நல்லதோ கெட்டதோ கொஞ்சம் கமெண்ட் பண்ணுங்க பா

திட்டுனா கூட ஓகே தான்
நான் மட்டும் இல்லை இங்க கதை எழுதுற எல்லாருக்குமே type பண்றது கொஞ்சம் கஷடம் தான் போல
நான் கதை எழுதுறப்ப அதை உணருகிறேன்
அவுங்க ரொம்ப நேரமா கஷ்ட பட்டு type பண்ணாத நான் 5 நிமிடதில் படிச்சுட்டு ஈசியா போயிடுறேன்
So இனி மேல நான் எல்லாரோட கதைக்கு கமெண்ட் போடுவேன்
Plz தப்பா நெனைக்காதிங்க எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்
By
Meera senthil
 
Status
Not open for further replies.
Top