All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பார்கவியின் "உன்மேல் காதல் தானா என்னுயிரே" - கதை திரி

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் யூடி சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்
Ipo konjam work load adhigama irukuradhala weekly once dhn ud poda mudiyudhu sis... Ini konjam konjama seekiram poda try panren...
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...😁😁😁 புது வருஷம் ஆரம்பிச்சாச்சு... அதே புத்துணர்ச்சியோட கதையோட அடுத்த எபி போட்டுட்டேன்... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😊😊😊
முன்னாடியே சொன்ன மாதிரி, ஏகப்பட்ட ஒர்க் டென்ஷன்ஸுக்கு இடையில் எழுத நேரம் கிடைக்குறப்போ எழுதிட்டு இருக்கேன்... அதனால் வாரம் ஒருமுறை தான் எபி போடா முடியுது பிரெண்ட்ஸ்... சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...😊😊😊



காதல் 4

23544


சூரியன் மெல்ல மெல்ல ஆதிக்கம் துவங்கி சுட்டெரித்துக் கொண்டிருந்த வேளையில், ராஜசேகர் அந்த வீட்டின் முன் நின்று சிறிது யோசனையுடன் அவ்வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளே மழலைகளின் கோரஸ் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

எதற்கோ வெளியே வந்த மலர்விழியின் அன்னை ராசாத்தியின் பார்வையில் பட்டார் ராஜசேகர்.

வயது மூப்பினால் கண் பார்வை மங்கிய நிலையில், கண்களை சுருக்கி, “யாரு நீங்க..? என்ன வேணும்..?” என்று கேட்டார். பின் அவரே, “உங்க வீட்டு குழந்தையை இங்க சேர்க்க வந்துருக்கீங்களா..? உள்ள வாங்க நான் மலர கூப்பிடுறேன்…” என்று பதிலையும் கூறிவிட்டு, அவருக்கு பேச வாய்ப்பே தராமல் உள்ளே சென்று விட்டார்.

“மலரு... ஸ்கூல் விஷயமா யாரோ உன்ன பாக்க வந்துருக்காங்க…” என்று அவர் கூறியது ராஜசேகருக்கும் கேட்டது.

ஒருவித பதட்ட நிலையே அமர்ந்திருந்தார் அவர். சற்று நேரத்தில் அங்கே வந்தார் மலர்விழி. காலர் வைத்த ஜாக்கெட், மூப்பின் அடையாளமாய் தலையில் ஆங்காங்கே தெரியும் வெள்ளை முடி, கண்களில் பெரிய ஃப்ரேமுடன் கூடிய கண்ணாடி என்று இருப்பத்திமூன்று வருடங்களுக்கு முன்பாக பார்த்த அவரின் மலருக்கும் இப்போதிருக்கும் மலர்விழிக்கும் அத்தனை வித்தியாசங்கள்.

அதுமட்டுமா… அப்போதைய மலரின் பார்வையில், அவரின் ராஜாவுக்கான பார்வையிலிருந்த கனிவு, அன்பு, பாசம், காதல் – இவை எதுவுமே இப்போது இல்லையே…

ராஜசேகர் அவரின் எண்ணத்தில் மூழ்கியிருக்க, அவரை தூரத்திலேயே அடையாளம் கண்டுக்கொண்ட மலர்விழிக்கோ அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மனம் முழுவதும் வெறுப்பு மட்டுமே நிறைந்திருந்தது. ஒரு பெருமூச்சுடன், அவரின் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவரின் கவனம் அங்கில்லை என்பதை உணர்ந்து செருமினார்.

அவரின் செருமலில் நிகழ்விற்கு வந்த ராஜசேகர், “மலர்…” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார்.

“மிஸ்டர். ராஜசேகர், நான் தான் மலர்விழி. உங்களுக்கு நர்சரி சம்பந்தமா என்ன கேட்கனுமோ கேட்கலாம்…” என்றார் கம்பீரமாக.

மலர்விழியின் கூற்றிலிருந்தே, அவரை மலர் என்று சுருக்கி அழைக்கும் வாய்ப்பை ராஜசேகர் இழந்துவிட்டார் என்பதை உணர்த்தியிருந்தார். மேலும் நர்சரி தவிர வேறு எதைப் பற்றியும் பேச அவர் விரும்பவில்லை என்பதையும் அடிகோடிட்டு காட்டியிருந்தார்.


“மலர், நான் உன்ன விட்டு…” என்று ஆரம்பித்தவரை இடைமறித்த மலர்விழி, “நான் முடிஞ்சு போன எதையும் கேக்க விரும்பல…” என்றார்.

“ஹ்ம்ம் எனக்கு தெரியும்… ஆனா நான் இப்போ வந்துருக்குறது… நீ… நீ பத்திரமா இருக்கீயான்னு…”என்று தயக்கத்துடன் கூறியவரை முறைத்தவர், “இத்தன வருஷம் இல்லாம இப்போ என்ன திடீர் அக்கறை..?” என்று குத்தலாக கூறினார்.

அதில் உள்ளம் மறுகினாலும், அவர் கூறுவது உண்மை தானே என்று அமைதியாக இருந்தவர், “எதுக்கும் இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இரு…” என்றார்.

அதற்கும் நக்கல் சிரிப்பை உதிர்த்தவர், “உங்கள மாதிரி பணத்துக்கு பின்னாடி போறவங்க தான் எப்போ என்ன ஆகுமோன்னு பயப்படனும்…” என்றார்.

“ப்ச்… நான் சொல்றத கேக்கவே கூடாதுன்னு இருக்கீயா மலர்…” என்று வேதனையுடன் அவர் கூற, “யாரு நீங்க… நீங்க சொல்றத எதுக்கு நான் கேக்கணும்…” என்று கோபமாக வினவினார் மலர்விழி.

இருப்பத்திமூன்று வருட கோபம் அனைத்தும் மொத்தமாக வெடிக்க காத்திருந்ததோ, அம்மழலைகளின் சத்தத்தில் இயல்பிற்கு திரும்பியவர், “ப்ளீஸ் இங்கயிருந்து போயிடுங்க… திரும்ப இந்த பக்கம் எட்டிக்கூட பார்த்துறாதீங்க…” என்று கைகூப்பியவர், விடுவிடுவென்று வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகரின் மனம், ‘இது உன்னோட பாவத்துக்கான தண்டனை…’ என்று எதார்த்தத்தைக் கூற, அவரும் கனத்த இதயத்துடன் அங்கிருந்து சென்றார். அவர் மனம் முழுக்க, தன் பகைவர்களினால் இவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது என்ற கவலையே நிறைந்திருந்தது.

*****

சஞ்சய் கூறியது போலவே பத்து நிமிடங்களில், ராஜசேகர் தமிழ்நாட்டிற்கு தான் சென்றிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்திருந்தாலும், சஞ்சயால் உடனே கிளம்ப முடியாத சூழ்நிலை.

ராஜசேகர் ஏற்படுத்தியிருந்த குழப்பங்களை சரி செய்ய சஞ்சய் அங்கே இருக்க வேண்டிய கட்டாயம். அது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவனின் தொழில்களிலும் யாரோ சதி செய்ய முயன்றிருப்பது தெரிந்தது. அதனால் அனைத்தையும் தன் நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்து, அதற்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய சூழலிலும் சிக்கிக் கொண்டான்.

அதிலிருந்து வெளிவருவதற்கே ஒரு வாரம் ஆனது. இந்த ஒரு வாரத்தில், நடந்த சூழ்ச்சிகளை ஆராயும் போது, தனக்கெதிராய் யாரோ ஒரு எதிரி உருவாகியிருப்பது தெரிந்தது. மேலும், இந்த ராஜசேகர் விஷயத்திலும் அவனே திரை மறைவில் அவரை ஆட்டி வைத்திருக்கலாம் என்றும் யூகித்தான்.

*****

இந்த ஒரு வாரத்தில், சஞ்சீவை பல சமயங்களில் சந்தித்துவிட்டாள் ரஞ்சு. அவையனைத்தும் எதிர்பாராத சந்திப்பா, இல்லை திட்டமிட்ட சந்திப்பா என்று பிரித்தறிய முடியா வண்ணம், ரஞ்சு எங்கு சென்றாலும் அங்கு இருந்தான் சஞ்சீவ். பாவம் அவளே குழம்பித் தான் போனாள். ஆயினும், அவனைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை. அவன் எப்போதும் அவளின் ‘அமுல் பேபி’ தான்.

இந்த சந்திப்புகளின் மூலம், இருவரும் நன்றாக பேசத் துவங்க, ‘ரஞ்சு’ மற்றும் ‘சஞ்சு’வாகிப் போயினர் மற்றவருக்கு.

இதில் சஞ்சு என்கிற சஞ்சிதாவிற்கு தான் வருத்தம்… “நானும் சஞ்சு, அவனும் சஞ்சுவா…” என்று உதடு பிதுக்கி அவள் வினவ, “நீயும் அவனும் தான் அண்ணன் தங்கச்சியாச்சே…” என்று அவளை கலாய்த்தாள் தர்ஷு.

ரஞ்சு அவளைப் பற்றி மேலோட்டமாக கூற, சஞ்சீவோ அவனைப் பற்றி வாயே திறக்கவில்லை. அவ்வப்போது அவனிடமிருந்து உதிரும் சொற்களைக் கொண்டு, இவளே யூகித்ததில், அவனின் அன்னை மற்றும் தந்தை இப்போது உயிருடன் இல்லையென்பதும், அவனிற்கு தந்தை மீது சிறிதும் பாசமில்லை என்பதைக் கண்டுகொண்டாள். இதைப் பற்றி மேலும் அவனிடம் தோண்டித் துருவ அவள் விரும்பவில்லை.

அந்த வாரயிறுதியில் தோழிகள் மூவரும் அவர்களின் ஊருக்கு செல்லலாம் என்று நினைத்திருக்க, அதனை பேச்சோடு பேச்சாக சஞ்சீவிடமும் சொல்லியிருந்தாள் ரஞ்சு.

அவனோ அதைப் பற்றி வேறேதும் வினவவில்லை. அவனின் பாவனையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, தர்ஷுவிடம் கூறினாள் ரஞ்சு.

ஆம்… தர்ஷுவிற்கு சஞ்சீவின் மேல் சந்தேகம் தான். முதல் நாள் அவர்கள் எதேச்சையாக பூங்காவில் சந்தித்துக் கொண்டாலும், அதற்கடுத்த நிகழ்வுகள் திட்டமிடப்பட்ட சந்திப்புகளாவே அவளிற்கு தோன்றின. அவளின் சந்தேகத்தை மற்ற இருவரிடமும் கூறவும் செய்தாள்.

“உங்களுக்கு அந்த சஞ்சீவ் மேல எந்த டவுட்டும் வரலையா..?” என்று பேச்சை துவங்கினாள் தர்ஷு.

இருவரும் தர்ஷுவை புரியாமல் நோக்கிவிட்டு, “எதுக்கு சந்தேகம்..?” என்றனர் ஒரே குரலில்.

“அந்த சஞ்சீவ் எதுக்கு அடிக்கடி ரஞ்சுவ மீட் பண்ணனும்…” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, “அதான் கோ-இன்சிடென்ஸ்னு சொன்னாரே…” என்று சஞ்சீவிற்கு வக்காலத்து வாங்கினாள் சஞ்சு.

“ஒரு தடவ நடந்தா தன் அதுக்கு பேரு கோ-இன்சிடென்ஸ்… ஓயாம நடந்தா அது ப்ரீ-பிளான்ட்…” என்ற தர்ஷு ஒரு பெருமூச்சுடன், “ஐ திங்க் ஹி இஸ் ஸ்டாக்கிங் யூ…” என்றாள் ரஞ்சுவை நோக்கி…

“அவன் எதுக்கு ரஞ்சுவ பின்தொடரனும்…” என்று மீண்டும் சஞ்சுவே வாய் திறக்க, எப்போது போல் ரஞ்சு அவர்களை மெளனமாக பார்த்திருந்தாள்.

“அது எனக்கும் சரியா தெரியல… ஆனா அவன் ரொம்ப டேஞ்சரஸ்…” என்றாள் தர்ஷு.

“ஹே அவன போய் டேஞ்சரஸ்னு சொல்ற… எப்பவும் சிரிச்சுட்டே அழகா பேசுறான்…” என்ற சஞ்சுவை இடைவெட்டியவள், “அழகானது எல்லாமே ஆபத்தானது தான்… அண்ட் ஒருத்தரால எப்பவுமே சிரிச்சுட்டே இருக்க முடியாது… அப்படி இருந்தா அவன் நடிக்கிறான்னு அர்த்தம்…” என்றாள் தர்ஷு.

ரஞ்சுவிற்கு இருவரின் வாதமும் சரியாகத் தான் தோன்றியது. அவளிற்குமே, சஞ்சீவ் அவளைப் பின்தொடர்கிறானோ என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் அவனை ஆபத்தானவன் என்றும் கருத முடியவில்லை.

மூவராலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாததால் தான் இந்த சோதனையை மேற்கொள்ள தீர்மானித்தனர். அதன்படி ரஞ்சு ஊருக்கு செல்கிறாள் என்று அவனிற்கு தெரிந்தால், குறைந்தபட்சம் எப்போது செல்கிறாள், எப்போது திரும்புவாள் என்றாவது அவன் வினவுவான். அப்படி வினவினால், அவன் ரஞ்சுவைப் பின்தொடர்வது குறித்த அவர்களின் சந்தேகம் ஓரளவிற்கு சரியானது தான் என்ற முடிவிற்கு வர இயலும் என்பதே அவர்களின் திட்டம்.

ஆனால், நடந்ததை ரஞ்சு கூறியதும், “நான் தான் சொன்னேன்ல அப்படி எல்லாம் ஒண்ணுமில்லன்னு…” என்றாள் சஞ்சு.

“ஹ்ம்ம் ஒண்ணுமில்லன்னா சந்தோஷம் தான்…” என்றாள் தர்ஷு.

“உனக்கேன் அவன் மேல இவ்ளோ காண்டு..?” என்று சஞ்சு கேட்டதும், “அவன் நாம நெனச்ச மாதிரி சாதாரண ஆளில்ல… ரொம்ப பெரிய பணக்காரன். அப்படி இருக்கவன் எதுக்கு இந்த ஊருல ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கணும்..? ஸ்டில் ஐ ஃபீல் சம்திங் ஃபிஷி…” என்று யோசனையுடன் கூறிய தர்ஷுவைக் கண்ட ரஞ்சு, “ஸ்ஸ்ஸ் போதும் ரெண்டு பேரும் உங்க சிஐடி மூளைய கொஞ்ச நாள் கழட்டி வச்சுட்டு ஊருக்கு கிளம்பலாம் வாங்க…” என்று அவர்களை இழுத்துச் சென்றாள்.

இவர்களுக்கு முன்பாக அவன் அவ்வூருக்கு சென்றிருப்பது அறியாமல்…

*****

தோழிகள் மூவரின் வீடு, அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஒரு மணி நேர தூரம் இருந்தது. வெள்ளியன்று மாலை கல்லூரி முடிந்ததும் கிளம்பியவர்கள் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊருக்கு சென்றிருந்தனர்.

கிளம்பும் முன் ரஞ்சுவின் வீட்டிற்கு அழைத்தபோது, அவளின் தாய், தந்தை மற்றும் சுபி மூவரும் அவர்களின் தூரத்து சொந்தத்தின் திருமணத்திற்கு சென்றிருப்பதாகவும், அவர்கள் வரும்வரை தர்ஷுவின் வீட்டில் இருக்குமாறும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட மற்ற இருவரும், “என்ன இது… ஒரு வாரத்துக்கு முன்னாடியே வரோம்னு சொல்லியாச்சுல… அப்போவே சொல்ல வேண்டியது தான… தூரத்து சொந்தத்துல கல்யாணம்னா மூணு பேரும் போகணுமா… இப்போ மட்டும் உங்க அப்பாக்கும் அம்மாக்கும் வேலை இருக்காதா… இந்த தடவ காலேஜூக்கு வரதுக்கு முன்னாடி இத கேட்டுட்டு தான் வரணும்…” என்றனர்.

ரஞ்சுவோ அவர்கள் பேசியதற்கு எந்த எதிர்வினையும் புரியவில்லை. அவள் மனதினுள் பாரமேறிய உணர்வு…

தர்ஷு மலருக்கு அழைத்து, ரஞ்சுவும் அங்கு தான் இரவு தங்க போகிறாள் என்று கூறினாள். ஏற்கனவே, வசுந்தரா ஊரில் இல்லாததால், சஞ்சுவும் தர்ஷு வீட்டில் தான் தங்குவதாக இருந்தது.

“ஹே அப்போ இன்னைக்கு நாம ஒன்னா தான் இருக்க போறோம்… இன்னைக்கு கேர்ள்ஸ் நைட்ல மலர் ஆன்ட்டியையும் சேர்த்துக்கலாம்…” என்று உற்சாகமாக திட்டமிட்டாள் சஞ்சு. அவளின் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது.

திட்டமிட்டதைப் போலவே, அவர்களின் ‘கேர்ள்ஸ் நைட்’ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென ஆரவாரமாக செல்ல, ஆடிக் கலைத்தவர்கள் நடு இரவில் தான் உறங்கிப் போயினர். மூவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி உறங்கியதைக் கண்ட மலர்விழி, ‘இப்போது போலவே எப்போதும் மூவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.

*****

இரவு வெகு நேரம் கழித்து தூங்கியதால், காலையில் நேரம் கழித்தே விழித்தனர் மூவரும். விழித்தவுடன் முதலில் வாசலுக்கு வந்து அவர்களின் ஊர் அழகை ரசிக்கவில்லையென்றால், மூவருக்கும் அந்த நாள் நல்லதாகவே அமையாது என்ற எண்ணம்.

இதோ மூன்று தேவியரும், வெளிவாயிலுக்கு விஜயம் செய்ய, அங்கே பதட்டத்துடன் நின்றிருந்தார் ராஜசேகர்.

அவரின் பதட்டமான முகத்தைக் கண்ட ரஞ்சு, “என்னாச்சு அங்கிள்..? எதுவும் ப்ராப்ளமா..?” என்று வினவினாள்.

அவளைக் கண்டு, மேலும் பதட்டமடைந்தவர், “நீ யாரு மா..?” என்று சுயநினைவின்றி கேள்வியைக் கேட்டிருந்தார்.

அவரின் கேள்வியில், தோழியர் மூவரும் அவரை ஒருமாதிரி பார்க்க, அவரோ அதையெல்லாம் சட்டைசெய்யாமல், ரஞ்சு சொல்லப்போகும் பதிலுக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த மலர்விழி, “என்ன மூணு பேரும் இங்கயே நின்னுட்டீங்க..? உள்ள போய் சாப்பிடுங்க…” என்றார்.

ரஞ்சு, “ஆன்ட்டி, இவரு…” என்று ஆரம்பிக்க, “நான் பாத்துக்குறேன் ரஞ்சு… நீ உள்ள போ…” என்றார்.

மூவரும் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டே உள்ளே செல்ல, “உங்கள இங்க வராதீங்கன்னு சொல்லிருக்கேன்ல..” என்று மலர்விழி அடிக்குரலில் கூறியது அவர்களுக்கும் கேட்டது.

“என்னாச்சு தர்ஷு… எதுவும் ப்ராப்ளமா..?” என்று ரஞ்சு வினவ, “தெரியல ரஞ்சு. இப்போ கேட்டா அத்த இன்னும் டென்ஷனாவாங்க… கொஞ்ச நேரம் கழிச்சு தான் கேக்கணும்…” என்றாள்.

*****

மும்பையில் தொழில்களில் ஏற்பட்ட சிக்கல்களை எல்லாம் தீர்த்த சஞ்சய், ராஜசேகரை தேடி ஊருக்கு கிளம்பினான். அவனுடன் கோகுலும் பயணத்தை மேற்கொண்டான்.

அந்த விமான பயணம் முழுவதும், ‘யார் அவனின் புது எதிரி’ என்ற சிந்தனையிலேயே கழித்தவன் அறியவில்லை, அவனின் எதிரியை அறியும் முன் அவன் வாழ்க்கை பல திருப்பங்களை சந்திக்க போகிறது என்று… அதற்கு காரணமாகப் போகின்றவளை விரைவில் சந்திக்க போகிறான் என்றோ, உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடிய அவன் தம்பியை அவன் துரோகியைத் தேடிப் போகும் இடத்தில் பார்க்கப் போகிறான் என்றோ அவன் அறியவில்லை…

*****

தோழியர் மூவரும் காலையுணவை முடித்துவிட்டு, ஊரை சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது வழியில் நின்றவனைப் பார்த்து மூவருமே அதிர்ந்தனர். அவனோ அதே புன்னகையுடன் இவர்களைப் பார்த்திருந்தான்.

“இவன் எதுக்கு இப்போ இங்க வந்துருக்கான்..?” என்று சஞ்சு கேட்க, “நான் தான் சொன்னேன்ல, அவன் ரஞ்சுவ ஃபாலோ பண்றான்…” என்றாள் தர்ஷு.

“இருக்குமோ… எதுக்கு ஃபாலோ பண்ணனும்...” என்று மீண்டும் சஞ்சு வினவ, “மேபி லவ்வா இருக்கும்…” என்றாள் தர்ஷு அசுவாரஸ்யமாக…

“வாவ் செமல… ரஞ்சு பேபி… நீ தான் நம்ம கேங்ல ஃபர்ஸ்ட் லவ் பண்ண போற…” என்று குதூகலமானாள் சஞ்சு.

“ஹே அது எப்படி அவ்ளோ நிச்சயமா சொல்ற, அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னு…” என்று தர்ஷு ஆரம்பிக்க, “ஏன்… ஏன்… ஏன்… லவ் பண்ண மாட்டாங்க… ஹி லுக்ஸ் ஹேண்ட்ஸம்… பழகவும் ஈஸியா இருக்கான். எப்பவும் சிரிச்சா முகத்தோட, பாக்கவே பொண்ணுங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கான். பிளஸ் ஹி இஸ் ரிச் டூ… வேற என்ன வேணும்…” என்று சஞ்சு தன் வாதத்தை முன் வைத்தாள்.

“நீ சொன்னியே, ‘பொண்ணுங்களுக்கு பிடிச்ச மாதிரி’ன்னு… அது தான் யோசிக்க வைக்குது… ஏன் அவன் ஒரு ஏமாத்துகாரனா இருக்கக்கூடாது..? திரும்பவும் நான் சொல்றேன், அழகு ஆபத்தானது…” என்றாள் தர்ஷு.

சஞ்சீவைப் பற்றி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்த இருவரும் ரஞ்சுவின் மனதைப் பற்றி யோசிக்கவே இல்லை.

ரஞ்சுவோ, தர்ஷு கூறிய காதலிலேயே அதிர்ந்து தான் போயிருந்தாள். ‘காதல்’ என்றதும் அவளின் நினைவிற்கு வந்தது அவளின் ‘கனவுக் காதலன்’ தானே… அவளின் மனமோ சஞ்சீவை அவளின் கனவுக் காதலனுடன் பொருத்த முயன்று கொண்டிருக்க, அப்போது தான் இருவரும் சண்டையிடும் சத்தம் அவளிற்கு கேட்டது.

“ப்ச்… ரெண்டு பேரும் அமைதியா இருங்க…” என்றவாறே அவனை நோக்கி சென்றனர்.

அவனை நெருங்கியதும், “சஞ்சு, நீங்க இங்க..?” என்று தயக்கத்துடன் வினவினாள் ரஞ்சு.

“உங்கள பார்க்க தான் வந்தேன்…” என்று அவன் சிரிப்புடன் கூறியதைக் கேட்டவர்கள் அதிர்ந்து நின்றுவிட்டனர்.

தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இதோ அடுத்த எபியோட வந்துட்டேன்...😊😊😊 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁 (பி.கு கீழ இருக்க போட்டோ பார்த்துட்டு இவங்க தான் ஜோடின்னு நினைச்சுடாதீங்க... சில ஜோடிகள் மாறலாம்... சிலருக்கு ஜோடியே இல்லாம இருக்கலாம்...😉😉😉)

23653


காதல் 5

அவர்களைத் தான் பார்க்க வந்திருப்பதாக சஞ்சீவ் கூறியதும், மூவரும் முழித்தவாறு நின்றிருப்பதைக் கண்டவன் சிரிக்க ஆரம்பிக்க, அப்போதும் அவனைப் பார்த்து மூவரும் விழித்தனர்.

சஞ்சீவ் தான் சிரிப்பை அடக்கியபடி, “ஹே நான் சும்மா சொன்னேன்… அதுக்கு எதுக்கு இப்படி மூணு பேரும் ஸ்டான்னாகி நிக்குறீங்க… ரிலாக்ஸ்…” என்றான்.

அப்போதும் சந்தேகம் தீராத தர்ஷு, “அப்போ எதுக்கு இங்க வந்துருக்கீங்க..?” என்றாள்.

“அட இது என்ன உங்களுக்கு மட்டும் பட்டா போட்ட ஊரா… நான் இங்க வரக்கூடாதா..? என்ன சிஸ்டர்…” என்று கடைசி வரியை சஞ்சுவை பார்த்து கேட்க, அவனின் ‘சிஸ்டர்’ என்ற அழைப்பில் சகோதர பாசம் பொங்க, “ச்சே அப்படியெல்லாம் இல்ல ப்ரோ… நீங்க தாராளமா வரலாமே…” என்று அவனிற்கு ஒத்து ஊதினாள்.

“ம்ம்ம் இங்க எங்க பூர்விக பண்ணை வீடு இருக்கு… இத்தனை நாளா அதை பராமரிச்சுட்டு வந்தவங்க வயாசானதால அவங்க பிள்ளைங்க கூட இருக்க போறாங்க… அதான் இனிமே அதை நானே பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்… “ என்று அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்த பண்ணை வீட்டைக் காட்டினான்.

“ஹே ப்ரோ, அது உங்க பண்ணை வீடா… சூப்பரா இருக்கு…” என்று சஞ்சு கூற, “எல்லாரும் வீட்டுக்கு வாங்களேன்…” என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

சஞ்சு துள்ளிக் குதித்து முன்னே நடக்க, ரஞ்சு கூட அவ்வீட்டைப் பார்ப்பதற்கு ஆர்வத்துடன் இருந்தாள். ஆனால் தர்ஷு மட்டும் சஞ்சீவையே சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டும் காணாதவாறு அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ஊரில் இருந்ததை விட சற்று சிறிய அளவில் இருந்தாலும், அழகில் அதை விட சிறந்தாக இருந்தது. சுற்றிலும் பல்வேறு மரங்கள் அழகாக பராமரிக்கப்பட்டு இருக்க அதில் வாசம் செய்யும் பட்சிகளின் ரீங்காரம் அவ்விடத்தை உயிர்ப்பாக வைத்திருந்தது.

பூக்களின் வாசம் காற்றில் கலந்திருக்க, மெல்ல அப்பக்கம் எட்டிப் பார்த்தவர்கள், அங்கிருந்த நந்தவனத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஒவ்வொரு செடிகளின் அருகிலும் நின்று பல கோணங்களில் புகைப்படங்களை எடுத்தனர் மூவரும். அவர்களின் உலகில் இருந்தவர்களைக் கலைத்தது சஞ்சீவின் வருகை.

அவனருகே வந்த வேலையாளின் கையில் இளநீர் இருக்க, ஆளுக்கு ஒன்றை தந்துவிட்டு கிளம்பினார் அவர்.

“அப்பறம் கேர்ள்ஸ்… தோட்டம் எப்படி இருக்கு..?” என்றான் சஞ்சீவ்.

“ஆவ்ஸம் சஞ்சு…” என்று ரஞ்சு கூற, சஞ்சுவும் அதை ஆமோதித்தாள்.

“உங்க பிரெண்டுக்கு தான் பிடிக்கல போல…” என்று தர்ஷுவை காட்டி அவன் கூற, வேண்டுமென்றே அவன் செய்கிறானோ என்று தர்ஷு புருவ முடிச்சுடன் அவனை பார்த்தாள்.

அவளின் பார்வையை தவறாக புரிந்து கொண்ட சஞ்சு அவள் காதருகே, “ஹே என்ன டி இப்படி பப்லிக்கா சைட்டடிக்கிற…” என்று முணுமுணுக்கவும், தன் யோசனையை கைவிட்டு சுயத்திற்கு வந்தவள், சஞ்சுவை முறைத்தாள்.

மேலும் சில நொடிகள் பேசியே பொழுதைக் கழித்தனர். அப்போதும் சஞ்சு தான் சஞ்சுவிடம் (!!!) வாயடித்துக் கொண்டிருந்தாள். ரஞ்சு அவர்களை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவள், அவ்வப்போது பேசினாள். தர்ஷு தான் தீவிர சிந்தனையில் இருந்தாள்.

இப்போதும் சஞ்சீவிடம் ஏதோ தவறாக இருப்பதாக அவளின் உள்ளுணர்வு கூறியது. ஆனால் அதை தோழிகளிடம் கூறினால், கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால் அமைதியாகவே வந்தாள்.

“அப்பறம் ப்ரோ… எப்படி எப்பயும் சிரிச்சுட்டே கலகலன்னு இருக்கீங்க..?” என்று சஞ்சு வினவ, அதற்கும் புன்னகையே பதிலாக அளித்தான்.

“இதுக்கும் சிரிப்பு தானா… பார்த்துட்டே இருங்க ஒரு நாள் இல்ல ஒரு நாள், இப்படி சிரிச்சுட்டே இருக்கீங்கன்னு யாராவது உங்களை ஏமாத்த போறாங்க…” என்றாள்.

சஞ்சு எதார்த்தமாக தான் அப்படி கூறினாள், ஆனாலும் சஞ்சீவின் முகம் ஒரு நொடி இருண்டது. சஞ்சு பேச்சு சுவாரஸ்யத்தில் அதை கவனிக்க வில்லை என்றால், தர்ஷு சஞ்சீவைப் பற்றிய தீவிர சிந்தனையில் இருந்ததால் அதை கவனிக்க வில்லை.

ஆனால் அந்த ஒரு நொடி மாற்றத்தை பார்த்த ரஞ்சுவோ, ‘என்னாச்சு சஞ்சுக்கு… மேபி யாராவது ஏமாத்திருப்பங்களோ… ச்சு இந்த சஞ்சுவை யாரு இப்போ இப்படி சொல்ல சொன்னது… சஞ்சு ஹர்ட் ஆகிருப்பாங்களோ…’ என்ற யோசனையிலேயே மீண்டும் அவன் முகம் பார்க்க, அவன் எப்போதும் போல சிரிப்புடனே இருந்தான்.

‘நாம இப்போ சரியா தானா பார்த்தோம்…’ என்று ரஞ்சு எண்ணுமளவிற்கு உடனடியாக அவனின் இறுக்கத்திற்கு விடை கொடுத்திருந்தான் சஞ்சீவ். பல வருட பயிற்சியின் தாக்கமோ!!!

அதன்பின்பு பேச்சு வேறு திசையில் செல்ல, ரஞ்சுவும் அதை மறந்து விட்டாள். அந்த பண்ணை வீட்டை சுற்றிப் பார்த்தவர்கள் கிளம்ப ஆயத்தமாக, சஞ்சீவ், “அப்பறம் எப்போ ஊருக்கு கிளம்புறீங்க..?” என்று வினவினான்.

அதுவரையிலும் குழப்பமாக சுற்றிக் கொண்டிருந்த தர்ஷு அவனின் கேள்வியில் விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளைத் தான் அவனும் பார்த்துக் கொண்டிருந்தான், கேலி சிரிப்புடன்.

“நாளைக்கு கிளம்பிடுவோம் சஞ்சு…” என்று அவர்களின் பார்வையினை கவனிக்காமல் சாதாரணமாக கூறினாள் ரஞ்சு.

வேறெதுவும் கூறாமல், அவர்களை வழியனுப்பி வைத்தான் சஞ்சீவ். சற்று தூரம் நடந்ததும், ஏதோ உந்த திரும்பிப் பார்த்த தர்ஷு அங்கு இவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த சஞ்சீவைக் கண்டு அதிர்ந்து தான் போனாள்.

அவன் கண்களில் தெரிந்த தீவிரம் தர்ஷுவை அதிர்ச்சிக்குள்ளாக்க, அவனோ மீண்டும் புன்னகையை மீட்டெடுத்து, அவளை நோக்கி கண்ணடித்தான்.

அதில் மீண்டும் அதிர்ந்த பெண்ணவள் முன்பக்கம் திரும்பிக் கொள்ள, அவளின் மனமோ, சஞ்சீவ் நல்லவனா கெட்டவனா என்ற ஆராய்ச்சியில் இறங்கியது.

அவளின் முகம் கண்ட ரஞ்சு, “ஹே தர்ஷு… என்னாச்சு..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்று வினவினாள்.

தனக்கு சரிவர தெரியாத ஒன்றை தோழிகளிடம் கூறி அவர்களை பதற்றமடைய செய்ய வேண்டாம் என்று எண்ணிய தர்ஷு, “லேசா தலை வலிக்குது… வேற ஒண்ணுமில்ல ரஞ்சு.” என்று கூறி சமாளித்தாள். பின் சஞ்சுவின் கலாட்டாவில், சஞ்சீவை தற்காலிகமாக மறந்தும் போனாள்.

*****

விமானம் தரை இறங்கியதிலிருந்தே மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது சஞ்சய்க்கு. கண்ணுக்குத் தெரியாத எதிரிகளைக் கூட கண்ணசைவில் தனக்கு கீழ் கொண்டு வருபனிற்கு, தன் மனநிலை மாற்றத்திற்கான காரணம் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் ஓடிக் கொண்டிருக்கும் சஞ்சய், சில நொடிகளாக அந்த விமான நிலையத்தில் தேங்கி நின்றதைக் கண்ட கோகுலுக்கு ஆச்சரியமாக இருக்க, அவனருகே சென்று, “பாஸ்…” என்று அழைத்தான்.

கோகுலின் குரலில் தன்னை சமன்படுத்திக் கொண்டவன், “கோகுல், இன்னைக்கு இருக்க மீட்டிங் எல்லாம் கேன்செல் பண்ணிடு… அண்ட் ஒன்ஸ் ஹோட்டல் போனதும், என்னை டிஸ்டர்ப் பண்ணாத… ஏதாவது வேலை வந்துச்சுன்னா நீயே கவனிச்சுக்கோ…” என்று கூறியவன் தளர்ந்து நடக்கத் துவங்கினான்.

ராஜசேகர் பற்றி கேட்க வந்த கோகுல், சஞ்சயின் நிலை கண்டு, எதுவும் பேசாமல் அவனை பின் தொடர்ந்தான். அவன் மனமோ, ‘பாஸுக்கு என்னாச்சு..? அவரு இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லயே…’ என்று யோசித்தது.

சஞ்சயும் அதையே யோசித்துக் கொண்டிருந்தான். சமீப காலமாக போட்டிருந்த முகமூடியின் காரணமாக இறுகிப் போய், ஓடிக் கொண்டிருந்தவனின் மனம் கடந்த கால வாழ்க்கைக்கு ஏங்க ஆரம்பித்தது. அவன் கடைசியாக சிரித்த நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். அவனின் எண்ணவோட்டம் மகிழ்ச்சியாக கழித்த நாட்களுக்கு பின்னர் வந்த கொடும் நாட்களையும் அவனிற்கு காட்ட, அன்று அனுபவித்த வேதனையின் சாயல் இன்றும் அவன் முகத்தில் தோன்றியது.

முன்பு ஒருமுறை இதே போல் அவன் மனம் தவித்த அன்று நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அவனின் மனதில் உலா வர, அந்த கம்பீர ஆண்மகனிற்கும் கண்ணீர் சுரப்பிகள் உண்டென்று நிரூபிக்க கண்ணீரை உற்பத்தி செய்ய, இருக்கும் இடம் உணர்ந்து அதை அடக்கிக் கொண்டான்.

இத்தனை நாட்களாக இல்லாமல் இன்று அவனின் மூளை பழையதைக் கிளற ஆர்வம் காட்டியதோ… அவன் உணர்ச்சிக் குவியலாக இருந்தான்.

அவர்களின் மகிழுந்து அந்த ஐந்து நட்சத்திர விடுதிக்கு வந்து நிமிடங்கள் இரண்டை கடந்திருந்தாலும், அதிலிருந்து சஞ்சய் இறங்கவில்லை என்பதைக் கண்ட கோகுல் அவனை அழைக்க, அப்போது தான் அவனின் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்றான் சஞ்சய்.

கண்ணீரை அடக்கியதாலோ, இல்லை கோபத்தை அடக்கியதாலோ, அவனின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க, கோகுலிற்கே அவனைக் கண்டு பாவமாக இருந்தது.

கோகுலின் குடும்பமும், சஞ்சயின் குடும்பத்திற்கு நெருக்கம் என்பதால், சஞ்சயின் தவிப்பிற்கு என்ன காரணம் என்பதை ஓரளவிற்கு கோகுலும் அறிவான்.

கோகுலை பொறுத்தவரை சஞ்சய் ஒரு ஹீரோ… எத்தனையோ இழப்புகள், வேதனைகள், தவிப்புகளுக்கு மத்தியிலும் தொழிலில் சாதித்துக் கொண்டிருப்பவன். அவனின் தந்தை சஞ்சய் போல் இருக்க வேண்டும் என்று கூறும்போது வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும், அவனிற்கு சஞ்சயே ‘ரோல் மாடல்’.

அப்படிப்பட்டவனின் இன்றைய நிலை காண இயலாதவனாக, “பாஸ்… ஹோட்டல் வந்துடுச்சு… நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துக்குறேன்…” என்றான்.

ஒரு விரக்தி சிரிப்புடன் அங்கிருந்து நகர ஆரம்பித்தவனிற்கு, அப்போது தான் அவன் இங்கு வந்த காரணம் மனதில் உதிக்க, “கோகுல், அந்த ராஜசேகர்…” என்றான்.

“பாஸ், அவனை நாளைக்கு பார்த்துக்கலாம்… இப்போ உங்களுக்கு ரெஸ்ட் தான் அவசியம்…” என்றான்.

சஞ்சய்க்கும் அதுவே சரியென்று பட்டதால், அவனின் அறைக்கு விரைந்தான். அவனின் விரக்தியை மாற்ற கூடிய நபரை காண்பான் என்று முன்பே தெரிந்திருந்தால், அப்போதே கிளம்பியிருப்பானோ… அவர்களின் சந்திப்பை ஒரு நாள் நீட்டித்து வைக்க வேண்டும் என்று விதி நினைத்தால், யாரால் அதை மாற்ற முடியும்!!!

அறைக்கு செல்லும் சஞ்சையை பார்த்த கோகுலோ ஒரு பெருமூச்சுடன், ‘அடேய் சஞ்சீவ்… எங்க டா போய் தொலைஞ்ச…” என்று தான் ஆருயிர் நண்பனை வசைபாடினான் மனதிற்குள்…

*****

நண்பன் மனதிற்குள் திட்டியது சஞ்சீவிற்கும் கேட்டதோ, கடந்த கால நினைவுகளின் மிச்சமாய் அவனுடன் இருந்த டைரிகளிலிருந்து பார்வையை திருப்பினான். சிறுவனாகவே இருந்திருக்க கூடாதா என்னும் கேள்வி ஆயிரமாவது முறையாக அவன் மனதில் எழுந்தது.

அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், நேரம் தான் கழியும் என்று உணர்ந்தவனாக, ஊருக்கு செல்ல ஆயத்தமானான்.

அவன் எக்காரணத்திற்காக இங்கு வந்தானோ, அவளே ஊருக்கு செல்கிறாள் என்னும் போது அவனிற்கு இங்கென்ன வேலை..!

*****

ஒரு நாள் முழுவதும் அறையிலேயே அடைந்து கிடந்த சஞ்சய், கடந்த கால நிகழ்வுகளை மனதிற்குள் புதைத்து வைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டான்.

இதோ இரையைத் தேடும் புலியாக, கம்பீரத்தை மீட்டெடுத்துக் கொண்டு வந்தான் அவன். ஆஸ்திரேலியாவிலுள்ள தொழில்களை ஒளி ஒலி கலந்தாய்வு மூலம் கவனித்தான். மற்ற தொழில்களின் நிலவரங்களையும் அதன் மேலாளர்களுடன் கலந்தாலோசித்தான். இவையே அந்நாளின் முக்கால்வாசியை ஆக்கிரமித்துக்கொள்ள, மாலை வேளை தான் சற்று தளர்வாக அமர்ந்திருந்தான்.

அப்போதும் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பாதவன், “கோகுல், அந்த ராஜசேகர் இருக்க இடத்தை ட்ராக் பண்ண சொன்னேனே… அவரை கண்டுபிடிச்சாச்சா…” என்று வினவினான்.

“பாஸ்… அது வந்து… தேடிட்டு இருக்காங்க…” என்று திக்கினான் கோகுல்.

“வாட் இன்னமும் தேடிட்டு தான் இருக்காங்களா… எவ்ளோ நாளாச்சு… இன்னமும் தேடிட்டு இருக்காங்கன்னா என்ன அர்த்தம்..?” என்று கோபத்துடன் கேட்க, ‘மை பாஸ் இஸ் பேக்…’ என்று வெளியே அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு, மனதிற்குள் நினைத்தான் கோகுல்.

“இப்படி என் மூஞ்சியவே பார்த்துட்டு இருக்காம, சீக்கிரம் தேட சொல்லு… ஐ டோன்ட் விஷ் டு ஸ்பெண்ட் சோ மச் ஆஃப் மை டைம் வித் திஸ் கல்ப்ரிட்…” என்று பற்களை கடிக்க, வேகமாக அறையிலிருந்து வெளியேறினான் கோகுல்.

அடுத்த அரை மணி நேரத்தில், ராஜசேகரை தேடும் பொறுப்பை ஒப்படைக்கப்பட்ட துப்பறிவாளர், சஞ்சய் முன்பு நின்றார்.

“என்ன மிஸ்டர். டேனியல்… இன்னுமா அந்த ராஜசேகரை கண்டுபிடிக்குறீங்க..?” என்று சஞ்சய் சிறிது கோபத்துடன் வினவ, “சார்… நாங்க எங்களாலான எல்லா முயற்சியும் செஞ்சுட்டு தான் இருக்கோம்… ஆனா அவருக்கு பின்னாடி யாரோ இருந்து அவரை காப்பாத்திட்டு இருக்காங்க… ஏன்னா எங்களுக்கு ஒவ்வொரு முறையும் அவர் இருக்குமிடம் பத்தி தகவல் கிடைச்சு போறதுக்குள்ள, அங்கயிருந்து அவரு எஸ்கேப் ஆகிடுறாரு… நாங்க இதுவரைக்கும் எடுத்து வைக்குற ஸ்டெப் எல்லாமே மறைமுகமா பண்றப்போ எப்படி இது வெளிய லீக்காகுதுன்னு தெரியல… சோ அடுத்து எடுத்து வைக்குற அடியை இன்னும் கொஞ்சம் கவனமா எடுத்து வைக்கனும்… அதுக்கு கொஞ்சம் நேரமாகும்.. “ என்று கூறி முடித்தார்.

சஞ்சய்க்கும் அந்த சந்தேகம் இருந்தது. ராஜசேகரினால், யாருடைய உதவியும் இல்லாமல் இத்தனை நாட்கள் தலைமறைவாக இருக்க முடியாது. வேறு யார் அவரின் பின்னாலிருந்து அவரை ஆட்டுவிப்பது. கண்ணிற்கு தெரியாமல் தன்னுடன் மோதுபவன் யாரென்ற யோசனையில் இருந்தவனை கலைத்தது டேனியலின் அழைப்பு.

“சார்…” என்று தயக்கத்துடன் இழுத்தவரைக் கண்ட சஞ்சய், “என்ன டேனியல், வேற ஏதாவது சொல்லணுமா..?” என்றான்.

“ஆமா சார். ராஜசேகரை தேடப் போன இடத்துல, என்னோட டீம் மேட் ஒருத்தன் எடுத்த போட்டோ இது…” என்று ஒரு புகைப்படத்தை சஞ்சயிடம் காட்டினான்.

அதைக் கண்கள் விரிய கண்டவனின் மூளை அடுத்து செய்ய வேண்டியவற்றை திட்டமிட, டேனியலிடம், “ராஜசேகரை விட இவன் தான் எனக்கு முக்கியம். டேக் இட் அஸ் எ ஹை ப்ரையாரிட்டி… இவன் எங்க இருக்கான்… என்ன பண்ணிட்டு இருக்கான்னு எவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க…” என்றான்.

மீண்டும் அந்த புகைப்படத்தில் பார்வை பதித்தவன், ‘இந்த தடவை உன்னை விட்டுட மாட்டேன் சஞ்சு…’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டான்

*****

விடுமுறை நாட்கள் முழுவதையும் தர்ஷுவின் வீட்டிலேயே கழித்தனர் தோழிகள் மூவரும். ரஞ்சுவின் பெற்றோர் அவள் ஊரிலிருந்து கிளம்பும் வரையிலும் அவர்களின் வரவைப் பற்றி தெரிவிக்கவில்லை. அவர்களின் இந்த செயல் ரஞ்சுவை பெரிதும் வருத்தியது. அவளின் முகத்தை வைத்தே மனதை உணர்ந்த சஞ்சுவும் தர்ஷுவும் தான் அவளை சமாதானப்படுத்த ஊர் சுற்றுவது, மற்றவர்களை வம்பிளுப்பது என்று அவளின் கவனத்தை திசை திருப்பினர். அதுவும் ஓரளவிற்கு வேலை செய்தது.

இந்த காரணத்தினால் தான் சஞ்சு கூட அவளின் வீட்டிற்கு செல்லவில்லை. அவளின் தாயிடம் ரஞ்சுவைப் பற்றிக் கூறி, இங்கேயே இருக்க அனுமதி வாங்கினாள்.

இதோ விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்பும் சமயம்… மூவரும் அவர்களின் பைகளில் வாங்கிய சிற்றுண்டிகளை அடைத்து வைத்தனர்.

“ச்சே… என்ன இது இந்த பேக் பத்தவே இல்ல… அடுத்த தடவை பெரிய பைய்யா எடுத்துக்கணும்…” என்று புலம்பிய சஞ்சுவைக் கண்ட ரஞ்சு, “எவ்ளோ பெரிய பை எடுத்தாலும், நீ கொண்டு வர ஸ்னாக்ஸுக்கு பத்தாது தான்…” என்று கூறி தர்ஷுவுடன் ஹை-ஃபை அடித்துக் கொண்டாள்.

அப்போது அறைக்குள் வந்த மலர்விழி அவர்களின் சிரிப்பைக் கண்டு, ‘இவங்க மூணு பேரும் இப்படியே சந்தோஷமா இருக்கணும்...’ என்று வேண்டிக் கொண்டார். அவர்களின் கஷ்ட காலம் இனி தான் ஆரம்பம் என்று தெரியாதவராய்…

“மூணு பேரும் எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா… தர்ஷு உன் சார்ஜர் ஹால்ல இருக்கு பாரு… ரஞ்சு இந்தா நீ கேட்ட பால்கோவா… பேக்குள்ள வச்சுக்கோ… சஞ்சு உங்க அம்மா கிட்ட கிளம்ப போறதை சொல்லிட்டீயா… அவங்களே உங்களை பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்றதா சொன்னாங்க…” என்று அந்த மூவரையும் விட அவர் தான் படபடப்பாக காணப்பட்டார்.

“ஸ்ஸ் ஆன்ட்டி எதுக்கு இவ்ளோ டென்ஷன்… எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்… கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா இருங்க…” என்றாள் ரஞ்சு. பின் சஞ்சுவின் தயவால் அங்கு கலாட்டா களைகட்ட, நால்வரின் சிரிப்பு சத்தம் அந்த வீட்டையே உயிர்ப்பாக வைத்திருந்தது.

“நீங்க மூணு பேரும் கிளம்பிட்டீங்கன்னா, கலகலன்னு இருக்க வீடு மறுபடியும் அமைதியாகிடும்…” என்று மலர்விழி வருந்த, மூவரும் அவரருகே அமர்ந்து அவரின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டனர்.

அவர்களின் சிறு வயது முதலே ஏதோவொரு காரணத்தினால், பெற்றோரின் அன்பு கிடைக்காமல் இருந்தவர்களுக்கு, பெற்றோர் ஏக்கத்தை போக்கிய ஜீவன் தான் மலர்விழி. அன்பை மட்டுமே கொட்டி தந்து, அதற்கு பிரதிபலனாக எதையுமே எதிர்பாராமல் இருப்பவர்.

அவரின் வருத்தம் கண்டு மூவருமே அவரை அணைத்துக் கொண்டனர். நொடிகள் நீள, சூழ்நிலையின் கனத்தை குறைக்க, “ஆன்ட்டி, நம்ம சவுண்ட் சுரேஷ், மாடர்ன் மது, சைரன் சைமன் இவங்க எல்லாரும் இப்போ சேட்டை பண்றது இல்லையா…” என்று சற்றும் சம்பந்தம் இல்லாமல் வினவ, அதைக் கேட்ட மலர்விழி விழித்தார் என்றால் மற்ற இருவரும் அவளின் சேட்டை கண்டு புன்னகைத்தனர்.

“அதெல்லாம் இல்ல… இன்னமும் மூணும் அடங்க மாட்டிங்குது… இத்துணூண்டு சைஸ்ல இருந்துட்டு எவ்ளோ சவுண்ட்… மூணு பேரையும் ஒரு இடத்துல உக்கார வைக்குறதுக்குள்ள, நான் இந்த வீட்டை மூணு தடவை சுத்தி வந்துடுவேன் போல… ஆமா இப்போ எதுக்கு இதை கேக்குற…” என்றார்.

“நீங்க தான வீடு அமைதியா இருக்கும்னு சொன்னீங்க… அதான் அவங்களுக்கு ட்ரைனிங் பத்தலையோன்னு நினைச்சேன்…” என்று கூறி கண்ணடிக்க, அவளின் சேட்டையை உணர்ந்து, “அப்போ நீ தான் அவங்களுக்கு சொல்லிக் குடுத்ததா…” என்று காதைப் பிடித்து திருகினார்.

இப்படியே நேரம் கழிய, அவர்கள் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. மூவரும் தர்ஷுவின் பாட்டியின் கூற செல்ல, அவர் தர்ஷுவை மட்டும் வாழ்த்தி அனுப்ப, மற்ற இருவரும் அவரின் குணம் இதுவென்று அறிந்ததால், எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கிளம்பினர்.

அவர்களை பேருந்து நிலையத்தில் விடுவதற்கு, வசுந்தரா வந்திருந்தார். மீண்டும் சில பல அறிவுரைகள், எச்சரிக்கைகளை வசுந்தரா மூவருக்கும் பொதுவாக கூற, “ப்ச்… இந்த அட்வைஸ் சொல்றதெல்லாம் யாரு தான் கண்டுபிடிச்சாங்களோ…” என்று அலுத்துக் கொண்டாள் சஞ்சு.

அவளை முறைத்த வசுந்தராவின் பார்வையில் அடங்கியவளாக அமைதியாக பேருந்தில் ஏறினாள் சஞ்சு. நமுட்டுச் சிரிப்புடன் அவளைத் தொடர்ந்தனர் மற்ற இருவரும்.

வசுந்தரா கூறிய அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால், பிற்காலத்தில் இவர்களை சுற்றி பின்னப்படும் வலையிலிருந்து தப்பியிருப்பரோ… அதை தோழிகளும் அறியவில்லை… வசுந்தராவும் அறியவில்லை…

தொடரும்...


உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 எல்லாருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...😉😉😉 இதோ அடுத்த எபியோட வந்துட்டேன்...😊😊😊 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁 சஞ்சய் அண்ட் சஞ்சீவ் அண்ணன் தம்பின்னு சரியா கெஸ் பண்ண எல்லாருக்கும்👏👏👏

23817

காதல் 6

தோழிகள் மூவரும் ஒரு வழியாக விடுதிக்கு வந்து சேர்ந்தனர். இருந்த களைப்பில் கொண்டு வந்ததையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு படுக்கையில் சாய்ந்தனர். அப்போது சஞ்சுவின் அலைபேசியில் வசுந்தரா அழைக்க, “ச்ச… இந்த அம்மாக்கு எப்படி தான் தெரியுமோ… சரியா கால் பண்றாங்க…” என்று அலுத்துக் கொண்டே அலைபேசியை உயிர்ப்பிக்க, மற்ற இருவரும் அந்த அழைப்பு எதற்கென்று தெரிந்ததால், சத்தமில்லாம் எழுந்து அவரவர் கொண்டு வந்ததை அடுக்க ஆரம்பித்தனர்.

அடுத்த பத்து நிமிடங்கள், சஞ்சு ‘ம்ம்ம்’ கொட்டுவதிலேயே கழிய, அவளின் மனமோ, ‘இதுக்கு வந்ததும் எடுத்து வச்சுருக்கலாம்…’ என்ற காலம் கடந்த சிந்தனையில் இறங்கியிருந்தது.

அதன் பிறகு, மலர்விழியிடமும் ஒரு ‘அட்டெண்டன்ஸ்’ஸைப் போட்டவர்கள், ரஞ்சுவின் வீட்டிற்கு அழைத்தனர். அழைப்பு போய் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் வெறுத்து போன ரஞ்சுவே அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

தன் கவலையை தோழிகளிடமும் இறக்க வேண்டாம் என்று முடிவு செய்த ரஞ்சு, “ப்ச் ஏதாவது வேலையா இருப்பாங்க… சரி நீங்க படுங்க… நான் போய் என் ஸ்வீட்டி கிட்ட பேசிட்டு வந்துடுறேன்…” என்று சாதாரணமாக செல்வதைப் போல பால்கனிக்கு சென்று விட்டாள். மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரு பெருமூச்சை வெளியிட்டனர்.

*****

காலை ஓட்டத்திற்கு தயாரான ரஞ்சுவும் தர்ஷுவும் அவர்களின் வழக்கமான பூங்காவிற்கு வந்தனர். ரஞ்சுவை விட தர்ஷு தான் ஆர்வமாக இருந்தாளோ என்று எண்ணும் அளவிற்கு அவளின் பார்வை நாலாபுறமும் சுற்றிச் சுழன்றது.

ஆனால் அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்குவது போல், சஞ்சீவ் அன்று வரவே இல்லை. தர்ஷுவே, ‘ஒண்ணுமில்லாததுக்கு நாம தான் இப்படி போட்டு குழப்பிட்டு இருக்கோமோ…’ என்று எண்ணினாள்.

அவளின் சிந்தனையை தடை செய்வது போல, “ஹாய் க்யூட்டி…” என்ற சத்தம் கேட்க, தர்ஷு திரும்பிப் பார்க்காமலேயே அது யாரென்று கண்டுபிடித்து விட்டாள்.

“ஹே க்ரிஷ் அங்கிள்… எப்படி இருக்கீங்க..?” என்று உற்சாகமாக வினவ, க்ரிஷ் (எ) கிருஷ்ணாவும் அவளின் உற்சாகத்திற்கு ஈடு கொடுப்பது போல, “எப்பவும் போல சூப்பரா இருக்கேன் டா…” என்றவர், அவர்களை சமீபித்த மனைவியை கடுப்பேற்றும் பொருட்டு, “என்ன உங்க ஆண்ட்டி தான் கொஞ்சம் வயசாகிட்ட மாதிரி இருக்கு…” என்று கண்ணடித்து கூறினார்.

தர்ஷுவும் ஓரக் கண்ணில் ராதையைப் பார்த்துவிட்டு, “அஃப்கோர்ஸ் அங்கிள், நீங்க இன்னும் யங் அண்ட் சார்மிங்… இன்ஃபேக்ட் இப்போ கூட உங்களுக்கு பொண்ணு தர, ‘நீ… நான்’னு போட்டி போடுவாங்க…” என்று குறும்பாக கூறி அவருடன் ‘ஹை-ஃபை’ அடித்துக் கொண்டாள்.

“ஹும்… அரைக் கிழவனுக்கு ஏத்தத்த பாரேன்… வாக்கிங் வரதே முன்னாடி துருத்திட்டு இருக்க தொப்பைய குறைக்கத் தான்… இதுல இவரு ஆணழகன் மாதிரியும், இவருக்கு பொண்ணு குடுக்க லைன்னா நிக்குற மாதிரியும் பேசிட்டு இருக்காரு…” என்று உதட்டை சுழித்துக் கொண்டார் ராதை.

அப்போதும் சும்மா இருக்காமல், “ஆமா, என் ஸ்வீட்டி எங்க… இந்நேரம் அவ இருந்துருந்தா, என்ன இப்படி பேச்சு வாங்க விட்டுருப்பாளா…” என்று கிருஷ்ணா வருத்தத்துடன் கூறுவது போல் பாசாங்கு செய்ய, ராதையோ அவரை முறைத்துக் கொண்டு நின்றார்.

“உங்க ஸ்வீட்டிக்கு எப்போ இவ்ளோ சீக்கிரமா விடிஞ்சுருக்கு, அங்கிள்… இனிமே நாங்க போய் தான் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பி விடணும்…” என்றாள் ரஞ்சு.

“ச்சே ஸ்வீட்டிய ரொம்ப மிஸ் பண்றேன் ரஞ்சும்மா…” என்று அவர் மனைவியைப் பார்த்துக் கொண்டே கூற, “என்னவாம் இப்போ அவருக்கு… மிஸ் பண்றாராம்ல மிஸ்ஸு…” என்று ராதை பொங்கியெழ, ரஞ்சுவும் தர்ஷுவும் தான் அவர்களை சமாதானப்படுத்தினர்.

“அப்பறம் ஊருக்கு போயிட்டு வந்தீங்களே… வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க..?” என்று ராதை வினவ, இருவரும் ஊருக்கு சென்று வந்த நிகழ்வுகள் அனைத்தும் கதையாகக் கூறினர்.

இது தான் ராதையின் வழக்கம். அவருக்கு சொந்த பந்தம் இல்லாததால், இவர்கள் கூறும் கதைகளை ஆவலுடன் கேட்பார். சில சமயங்களில் மலர்விழியிடம் பேசியதுண்டு. வசுந்தரா காவலர் என்பதால், அவரிடம் சிறு தயக்கம் உண்டு. அது போலவே ரஞ்சுவின் பெற்றோரிடமும் ஒருவித தயக்கம் எழும் ராதைக்கு.

“என்ன இது… பிள்ள ஊருக்கு வந்துருக்கு, அதை கவனிக்காம, ஊர் சுத்துறது ரொம்ப முக்கியமோ…” என்று ராதை நீட்டி முழக்க, ரஞ்சுவின் முகம் தான் கூம்பிப் போனது.

ராதை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், வெளியே கொட்டி விடுவார். அவரிடம் நாசூக்கு என்பதெல்லாம் கிடையாது. சில சமயங்கள் அது மற்றவரின் மனதை பாதிக்கவும் செய்யும்… ஆனால், அவருக்கு அதெல்லாம் தெரியாது. பேசி முடித்த பின்பே, தான் பேசியது தவறோ என்று கணவனின் முகம் பார்க்கும் வெள்ளந்தி மனிதி அவர்.

இப்போதும் அப்படியே… ரஞ்சுவின் முகத்தைக் கண்டவர், பாவமாக கிருஷ்ணாவைப் பார்க்க, மனைவியின் பாவனையில் லேசாக புன்னகைத்தவர், தான் பார்த்துக் கொள்வதாக கண்களை சிமிட்டினார்.

“ஹே ராதா மா... இந்த த்ரீ ரோசஸ லஞ்சுக்கு இன்வைட் பண்ணனும்னு சொன்னியே…” என்று பேச்சை மாற்ற உதவ, இத்தனை வருட பழக்கமாக, கணவன் புள்ளி வைத்து ஆரம்பிக்க, மனைவியோ அதை வைத்து கோலம் போட்டு விட்டார்.

“ஆமா ஆமா… மறந்தே போயிட்டேன் பாருங்க… இந்த வாரம் சண்டே உங்க மூணு பேருக்கும் நம்ம வீட்டுல தான் லஞ்ச்… எந்த சாக்கு போக்கும் சொல்லாம வந்துடனும் சரியா…” என்று கூற, இது அடிக்கடி நடக்கும் நிகழ்வானதால், தோழிகள் இருவரும் சம்மதித்தனர்.

“வாவ் ஆண்ட்டி… இந்த தடவ என்ன டிஷ் புதுசா செய்யப் போறீங்க..?” என்று ரஞ்சு ஆர்வமாக வினவ, ராதையும் அவர் ‘யூ-ட்யூப்’பில் பார்த்த அந்த ரெசிபியைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

ராதை கூறி முடித்ததும் கிருஷ்ணா தான், “இந்த தடவையும் என்ன ‘டெஸ்ட் ரேட்’டாக்க முடிவு பண்ணிட்டீங்களா…” என்று பாவமாக கேட்க, மற்ற மூவரும் கலகலத்து சிரித்தனர்.

இதில் ஊருக்கு சென்ற கதையைப் பாதியிலேயே விட்டதால், சஞ்சீவை சந்தித்ததைப் பற்றி இவர்களிடம் கூறவில்லை. ஆக மொத்தத்தில் சஞ்சீவ் ஊருக்கு வந்திருந்தான் என்பது தோழிகள் மூவரைத் தவிர யாருக்கும் தெரியாது…

இவர்களின் சிரிப்பை சற்று தள்ளி, தன் ஹுடை வைத்து முகத்தை மறைத்த உருவம் கண்ணெடுக்காமல் கண்டதை இவர்கள் அறிய வாய்ப்பில்லை தான்…

*****

அந்த ஒரு வாரம் வேகமாக சென்றிருக்க, வாரயிறுதி நாட்களுக்குள் அடியெடுத்து வைத்திருந்தனர் மூவரும். அந்த ஒரு வாரத்தில் பெரிதாக எந்தவித நிகழ்ச்சிகளும் நடந்துவிடவில்லை. கல்லூரி விட்டால் விடுதி, அவ்வப்போது பசிக்கும் போது, வடை கடை, தாகமெடுக்கும் போது, ‘ஜூஸ் கடை’… இதுவே தான் ‘ரிப்பிட் மோட்’டில் சென்று கொண்டிருந்தது.

அந்த சமயங்களில், சஞ்சீவின் ஹோட்டலை கடந்து செல்லும்போது, “ஹே, யாராவது என் புது ப்ரோவ பார்த்தீங்களா..?” என்று சஞ்சு தான் வினவினாள்.

“இல்லயே சஞ்சு… அவரை ஊர்ல பார்த்தது தான்… பார்க்ல கூட நான் பார்க்கல…” என்று ரஞ்சு கூறினாள்.

இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல், தர்ஷு அமைதியாகி விட, அதைப் பொறுக்காத சஞ்சு, அவளை வம்பிழுக்க வேண்டியே, “சிலர் என்னவோ அவரு நம்மள ஃபாலோ பண்றாருன்னு சொன்னாங்களே…” என்று கூற, தர்ஷு அப்போது தான் மனதிற்குள், ‘நம்ம தப்பா தான் நெனச்சுட்டோம் போல…’ என்று நினைத்துக் கொண்டு, “இப்போ என்ன உன் இன்ஸ்டன்ட் ப்ரோ ரொம்ப நல்லவருன்னு சொல்லணுமா…” என்று சஞ்சுவிடம் கேட்டாள்.

“என்ன உடனே இறங்கிட்ட… ஹே உண்மைய சொல்லு… உனக்கு அவரு மேல ஒரு ‘சாஃப்ட் கார்னர்’ வந்துடுச்சு தான…” என்று சஞ்சு கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல், தர்ஷுவை ஓட்டித் தள்ள, அவளோ சஞ்சுவை கலாய்க்க என்று அந்த இடமே ரணகளமானது.

ரஞ்சுவோ இவர்களின் சேட்டையை சிரித்துக் கொண்டே ரசித்துக் கொண்டிருந்தாள். தவிர, இது அவர்களுக்குள் எப்போதும் நிகழும் நிகழ்வு தான். வாய்ப்பு கிடைக்கும் போது, யாரையாவது தோழிகள் ஒருவருடன் சேர்த்து வைத்து கலாய்ப்பது. அதை மூவரில் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அப்போது கிண்டல் செய்து அப்போதே மறந்தும் விடுவர்.

ஆனால் இம்முறை சஞ்சு கூறியது உண்மையாக இருக்குமோ… தர்ஷுவிற்கே தெரியாமல், அவள் மனதின் ஒரு மூலையில் சஞ்சீவ் நுழைந்திருப்பானோ… இவர்கள் மூவரில் அவனைப் பற்றி அதிகம் யோசித்தது அவள் தானே!

*****

சனிக்கிழமை காலை… அடுத்த நாள் ராதையின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால், சனிக்கிழமையை ஓய்வு நாளாக வெள்ளி இரவே அறிவித்துவிட்டு தான் படுத்திருந்தனர் மூவரும். அதனால் காலை நடைபயிற்சியும் ரத்தாகியிருந்தது!

இவர்கள் சோம்பியிருப்பதினாலோ என்னவோ, சூரியனும் அன்று சோம்பி மேகத்திற்குள் தன்னை மறைத்துக் கொண்டது போல… ஏழு மணியாகியும், விடியாதது போலவே இருந்தது. ரஞ்சுவும் தர்ஷுவும், அவ்வப்போது போர்வையை விலக்கி, அருகிலிருக்கும் அலைபேசியில் மணி பார்ப்பதற்கு கூட சோம்பி, ஜன்னல் வழியாக வெளிச்சம் வந்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டு மீண்டும் இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டனர். இப்படி எத்தனை முறை நடந்ததோ!

அதன் பின்பு, இருவரும் முழித்தது, சடசடவென கேட்ட மழையின் சத்தத்தால் தான். இருவரும் அசந்து தூங்கவில்லை என்பதால், மழை வலுக்கும்போதே எழுந்து விட்டனர். மணியைப் பார்க்க, அது பத்தென காட்டியது.

‘இவ்ளோ நேரமா தூங்கிட்டோம்…’ என்று பதறி எழுந்தனர் இருவரும். இருவரும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வந்ததும், காலையுணவிற்கு ‘ஸ்விகி’யில் ஆர்டர் போட்டு விடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர். ஒன்பதரைக்கே ‘மெஸ்’ மூடப்படும் என்பதால் தான் தீவிர ஆலோசனை.

“ப்ச் இது என்ன… எந்த ஹோட்டல் செலக்ட் பண்ணாலும், ‘நாட் அவைலபில்’னு வருது…” என்று தர்ஷு பசித்த வயிற்றை தடவிக் கொண்டே சொல்ல, “மழை வேற பெய்யுதே… அதான் ஆன்லைன் ஆர்டர் அக்ஸெப்ட் பண்ணலையோ என்னவோ…” என்று ரஞ்சு கூறினாள்.

“இந்த சஞ்சு இன்னுமா எழுத்துக்கல… சாப்பாடுனு சொன்னா முதல் ஆளா வருவாளே… அவளுக்கு தான் இன்னும் நிறையா ஹோட்டல் தெரியும்…” என்று தர்ஷு கூற, ரஞ்சு சஞ்சுவை எழுப்ப சென்றாள்.

சஞ்சுவின் அருகே செல்லும்போதே, அவள் அனத்திக் கொண்டிருப்பது கேட்டது. அதை உறுதிப்படுத்திக் கொள்ள, அவளின் தலையிலும் கழுத்திலும் கை வைத்து பார்க்க, அவள் சந்தேகப்பட்டது போலவே, சஞ்சுவிற்கு காய்ச்சல் அடித்தது.

சஞ்சுவிற்கு காய்ச்சல் வந்தால், அவ்வளவு சீக்கிரம் குணமாகாது என்பது மற்ற இருவருக்குமே தெரியும். மற்ற நேரத்தில் அவள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பாளோ, அதற்கு நேர்மாறாக, காய்ச்சலில் படுத்திருக்கும்போது சோர்ந்து விடுவாள்.

இப்போது என்ன செய்வது என்று ஒரு நொடி சிந்தித்த தோழிகள் இருவரும், முதலில் மாத்திரையைக் கொடுப்போம் என்று முடிவெடுத்து மாத்திரையைத் தேடினர். ஆனால், அவர்களின் கஷ்ட காலத்திற்கு மாத்திரை டப்பாவில், காய்ச்சலுக்கான மாத்திரை அட்டை மட்டும் தான் இருந்தது. அதற்குள் மாத்திரை இல்லை. அட்டை இருப்பதைக் கண்டு, இவர்களும் மாத்திரை இருக்கிறது என்று நினைத்து விட்டனர் போலும்…

மாத்திரை இல்லை என்றதும் சிறிது பதட்டம் ஏற்பட, பக்கத்து அறைகளிலிருந்த தோழிகளிடம் சென்று கேட்க, அவர்களும் கையை விரித்தனர். கடைசி முயற்சியாக விடுதி உரிமையாளரிடம் கேட்கலாம் என்று தோழிகள் இருவரும் அவரைப் பார்க்கச் செல்ல, அவரின் உதவியாளரோ, “அவங்க மார்க்கெட்டுக்கு போயிருக்காங்க மா… அவங்க ரூமுக்குள்ள தான் மெடிக்கல் கிட் இருக்கு… ஆனா, அவங்க ரூம்ம பூட்டி, சாவியும் கொண்டு போயிட்டாங்க போல…” என்று அவரும் எதிர்மறையாக கூறிவிட, ரஞ்சுவும் தர்ஷுவும் தான் பதறிப் போயினர்.

அவர்களின் நிலை கண்ட பக்கத்து அறை தோழி ஒருத்தி, அவளின் வண்டியை கடன் தர முன்வர, மழையும் சற்று விட்டிருந்தது. ரஞ்சு தான், அடுத்து மழை பிடிப்பதற்குள், மாத்திரை வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, தோழியின் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றாள்.

ரஞ்சு கடைக்குச் சென்று மாத்திரை வாங்கும் வரை எல்லாம் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது. கடையிலிருந்து திரும்பும் வழியில் தான், சாப்பிடாமல் எப்படி மாத்திரை போடுவது என்று யோசிக்க, அருகில் திறந்திருந்த ஹோட்டலிற்கு சென்றவள், அவசரத்திற்கு இட்லியை வாங்கிக் கொண்டு மீண்டும் கிளம்பினாள்.

சற்று தூரம் வந்த பின்னர், வண்டி மக்கர் செய்ய ஆரம்பிக்க, ‘ஐயோ… இதுக்கு இப்போ என்னாச்சுன்னு தெரியலையே…’ என்று புலம்பியபடி வண்டியை நிறுத்தினாள். அந்த நேரம் தான், வருண பகவானிற்கு பூமியின் மேல் கருணை தோன்றியதோ, பூமாதேவியை குளிர்விக்க, சடசடவென இறங்கி வந்தார்.

நடுரோட்டில் வண்டி பழுதடைந்து நிற்க, இவளும் அருகில் தெப்பலாக நனைந்தபடி நின்றிருந்தாள். ‘கடவுளே… இந்த நாள் இதை விட மோசமா இருக்கக் கூடாது…’ என்று புலம்ப, கடவுளோ, ‘இனிமே தான் இன்னைக்கான நாளோட பலனை அனுபவிக்க போற…’ என்பது போல சிரித்தது, பாவம் அவளிற்கு தெரியவில்லை.

எதார்த்தமாகவோ இல்லை, விதியின் வசத்தாலோ, அந்த வண்டி பழுதடைந்து அவள் நின்றது, சஞ்சீவின் வீட்டின் முன்பு. முதலில் அவள் அதைக் கவனிக்க வில்லை. வண்டியை எப்படி சரி செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான், பக்கவாட்டிலிருந்து கதவு திறக்கும் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தவள் கண்டது, கையில் குடையுடன் நிற்கும் சஞ்சீவை.

யாரும் உதவிக்கு வராத நிலையில் மனதிற்குள் புலம்பியவளிற்கு, சஞ்சீவைப் பார்த்ததும் மனது சிறிது லேசானது உண்மை தான்.

“ஹே ரஞ்சு… என்னாச்சு… ஏன் இப்படி மழைல நனைஞ்சுட்டு இருக்க…?” என்றவாறே வந்தவன், குடையை அவளிற்கும் சேர்த்து பிடித்தான் சஞ்சீவ்.

“சஞ்சுக்கு ஃபீவர்… அதான் டேப்லெட்ஸ் வாங்கலாம்னு வந்தேன்… நான் வந்தப்போ அவ்ளோவா மழை இல்ல… ஆனா, இப்போ வண்டியும் பாதி வழியிலேயே சதி செய்ய, மழையும் பெய்ய ஆரம்பிச்சுடுச்சு…” என்று கூறவும், லேசாக புன்னகைத்த சஞ்சீவ், “இப்படி மழை பெய்யுது… இதுல நீ போறதுக்கு ரிஸ்க் தான்… மழை விடுற வரைக்கும் என் வீட்டுல இரு… அதுக்குள்ள வண்டி சரியாகுதான்னு பார்க்கலாம்…” என்றான்.

ரஞ்சுவிற்கு வேறு வழி தெரியாததால், சம்மதமாக தலையசைக்க, தன் பணியாளர்களிடம் வண்டியை உள்ளே நிறுத்துமாறு கூறிவிட்டு அவளுடன் நடந்தான்.

ஒரே குடையில் ஒன்றாக செல்வது, ரஞ்சுவிற்கு எந்த வித தாக்கமும் ஏற்படுத்தவில்லை போல… ஆனால், சஞ்சீவோ மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

ஆம் ஒரு வாரம் அவளைப் பார்க்க முடியாமல் போனதால், தன் திட்டம் என்னவாகும் என்று கவலையில் இருந்தவனிற்கு, இயற்கையே ஒரு வாய்ப்பை அளித்திருக்க, அதை சும்மா விடுவானா…

ரஞ்சு அவனிடம், “ஒரு வாரமா ஆளே காணோம்… ரொம்ப பிஸியா..?” என்று சாதாரணமாக கேட்டிருக்க, அவனோ மனம் மகிழ்ந்தவனாக, “கொஞ்சம் முக்கியமான வேலைகள் இருந்துச்சு… அதான் வாக்கிங் வரல… ஏன் மேடம் என்ன தேடுனீங்களோ..?” என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் வினவ, “ஹாஹா உங்க இன்ஸ்டன்ட் தங்கச்சி தான் உங்கள ரொம்ப தேடுனா…” என்று கள்ளம்கபடமில்லாமல் சிரித்தாள்.

அவளின் பதிலில் அவனின் எதிர்பார்ப்பு சரிந்தாலும், இந்த சந்திப்பில் அவளுள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டான்.

உள்ளே சென்றவள், அவள் நடந்து வந்த இடம் பார்க்க, அவள் உடையிலிருந்த தண்ணீர் அவள் நடந்து வந்த தடத்தைக் காட்டிக் கொடுத்தது. அதைக் கண்டவள் கண்களைச் சுருக்கி சஞ்சீவைப் பார்க்க, அவளின் பார்வையைக் கண்டவன், சிரித்துவிட்டு ஒரு அறையைக் காட்ட, அவளும் உள்ளே சென்றாள்.

அங்கிருந்த குளியலறையில் உடையை நீர் வழிய பிழிந்து கொண்டிருந்தவளை அலைபேசி ஒலி கலைக்க, அப்போது தான் சஞ்சுவின் நிலை நினைவிற்கு வர, வேகவேகமாக அதை உயிர்ப்பித்தாள்.

எதிர்முனையில் தர்ஷு தான் பேசினாள். “ரஞ்சு, சஞ்சுக்கு மாத்திரை குடுத்தாச்சு…. செகண்ட் ஃப்ளோர்ல இருக்க நிம்மி கிட்ட மாத்திரை இருந்துச்சு… அப்பறம் நம்ம செண்பா அக்கா கிட்ட சஞ்சுவோட காய்ச்சல் பத்தி சொன்னதுல அவங்களே இட்லி ஊத்திக் கொடுத்தாங்க… சாப்பிட்டு டேப்லெட் போட்டுட்டா… இப்படி மழை பெய்யுது… நீ இதுக்காக சீக்கிரம் வர வேணாம்… எங்கயாச்சும் நின்னுட்டு வா…” என்று அவள் கூற, ரஞ்சு மறுமொழி கூறுவதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

ரஞ்சு அலைபேசியைப் பார்க்க, சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தது. விடுதிக்கு சென்று சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணியவள், விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.

சஞ்சீவ் எப்படி அவளிடம் பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவனின் சிந்தனையைக் கலைத்தது வாசல் அழைப்பு மணி சத்தம்.

இந்நேரத்தில் யாரென்று என்று யோசித்துக் கொண்டே, கதவைத் திறக்க, அங்கு நின்றவனை அவன் எதிர்பார்க்கவில்லை. எவனிற்காக இந்த ஒரு வாரம் வெளியில் செல்லாமல் இருந்தானோ, அவனே கதவில் சாய்ந்து நின்றிருந்தான்.

“ஹலோ சஞ்சு…” என்று புன்சிரிப்புடன் கூறினான் சஞ்சய், சஞ்சீவின் அண்ணன்.

அண்ணனை இவ்வளவு விரைவில் எதிர்பார்க்காமல் விழித்தது ஒரு நொடி தான். அடுத்த நொடியே வரவழைக்கப்பட்ட சிரிப்புடன், “ஹாய் சஞ்சய்… சாரி சாரி… தி கிரேட் எஸ்.ஜே… என்ன இந்த பக்கம்..? உங்க வேலைகளையெல்லாம் விட்டுட்டு இங்க வந்துருக்க காரணம் என்ன..?” என்றான். சாதாரணமாகக் கேட்பது போலிருந்தாலும், சஞ்சய்க்கு தெரியாதா, தம்பியின் நக்கல்…

“நானும் என் தம்பி வந்து என்னோட பொறுப்புகளை குறைப்பான்னு நெனச்சேன்… அவன் இங்க வந்து ஒரு பொண்ணு பின்னாடி சுத்துவான்னு எதிர்பார்க்கல… ஹ்ம்ம் அதான் நானும் யாருக்காக இப்படி உழைக்கணும்னு ஒரு மாசம் ஜாலியா இருக்க வந்துட்டேன்…” என்று திருப்பிக் கொடுத்தான் சஞ்சய்.

அவன் கூறியதில் அதிர்ந்த சஞ்சீவின் மனமோ, ‘பொண்ணுன்னு சொல்றான்… யாருன்னு தெரிஞ்சுருக்குமா… இல்லயே தெரிஞ்சா இவ்ளோ சாவகாசமா பேசியிருக்க மாட்டானே… ஒரு மாசம் இங்க இருக்கப் போறானா…’ என்று குழம்பிக் கொண்டிருக்க, அந்த குழப்பத்திற்கு காரணமானவனோ, “என்ன சஞ்சு இப்படி வாசல்லயே நிக்க வச்சு பேசிட்டு இருக்க…” என்று கிண்டலாகக் கேட்டான்.

“இப்போ எதுக்கு இங்க வந்துருக்க..?” – இந்த முறை சற்று தீவிரமாக சஞ்சீவ் வினவ, “ஒரு தடவ செஞ்ச தப்ப, திரும்பவும் செய்யக் கூடாதுன்னு நெனைக்கிறேன் சஞ்சு…” என்றான் சஞ்சய். கம்பீரமான அவன் குரலில் அதிசயமாக சோகம் இழையோடியது.

சஞ்சீவும் அதைக் கேட்டு இறுகித் தான் போனான். அவன் அப்படியே நிற்பதைக் கண்ட சஞ்சய், “என்ன சஞ்சு… இது எனக்கும் உரிமையான வீடு தான… உள்ள வர விடுவியா… இல்ல வாசலோட துரத்திடுவியா…” என்று கூறியவாறே அதிரடியாக உள்ளே நுழைந்தான்.

அவனின் அதிரடி பிரவேசத்தில் என்ன செய்வது என்று புரியாமல் அவன் பின்தொடர்ந்து சஞ்சீவிற்கு அப்போது தான் ரஞ்சுவின் நியாபகம் வந்தது.

அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதேனும் செய்யலாமா என்று யோசிப்பதற்குள், அது எதுவும் தேவையில்லை என்பது போல, அவளே அந்த அறையிலிருந்து வெளிவந்தாள், “சஞ்சு…” என்று அழைத்தவாறே…

இதோ எது நடக்கக்கூடாது என்று நினைத்தானோ, அது நடந்தே விட்டது. இவன் வெளிப்படையாகவே தலையில் கைவைத்துக் கொள்ள, அதற்கு காரணமானவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.



தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க சொல்லுங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 தாமதமானதிற்கு மன்னிக்கவும்...🙏🙏🙏 கிண்டில்ல pentopublishக்கு எழுதிட்டு இருந்தததால தான் தாமதம்... இனி சரியா பதிவுகள் வந்துடும்...😁😁😁 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...😍😍😍 படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க...🙂🙂🙂

23952

காதல் 7

“சஞ்சு… இப்போ மழை நின்னுடுடுச்சுன்னு நினைக்கிறேன்… சோ நான் கிளம்பு…” என்று கூறியபடியே வந்தவள், அங்கு சஞ்சீவுடன் நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தாள். சஞ்சய்யோ ஏதோ ஒரு பெண்ணின் குரல் கேட்க, புகைப்படத்தில் பார்த்த பெண்ணோ என்று அவளைக் கண்டவனும் அதிர்ந்து தான் போனான். ஆனால், இருவரின் அதிர்ச்சிக்கும் வித்தியாசம் இருந்தது.

ரஞ்சு, புதிதாக ஒருவனைக் கண்ட முதல் நொடியில் தோன்றும் அதிர்ச்சியில் இருந்தாள் என்றால், சஞ்சயின் அதிர்ச்சியிலோ துரோகமும் ஏமாற்றமும் கலந்திருந்தது.

இருவரும் அதிர்ந்தது ஒரு நொடியே, அடுத்த நொடி சஞ்சய் சஞ்சீவை முறைத்தான். ரஞ்சுவிற்கோ, அதிர்ச்சி போய் குழப்பம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது, சஞ்சயின் பார்வையைக் கண்டு…

சஞ்சயின் பார்வையில் என்ன இருந்தது… வலி, ஏமாற்றம், துரோகம், கவலை… எல்லா உணர்ச்சிகளையும் அல்லவா அது பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

ரஞ்சு சஞ்சயை ஆராய்ச்சி பார்வை பார்க்க, சட்டென்று அவன் அவளைப் பார்த்தான். இப்போது அவனின் பார்வையில் கலப்படமே இல்லாத குற்றச்சாட்டு தெரிந்தது.

‘எதுக்கு இவன் இப்படி பாக்குறான்…’ என்று யோசிக்கும் போதே, சூழ்நிலையை சற்று மாற்ற வேண்டி, “ரஞ்சு, இது என் அண்ணா, சஞ்சய்… சஞ்சய் பிரசாத்… கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸோட சி.இ.ஓ, தி கிரேட் எஸ்.ஜே…” என்று சஞ்சீவ் அவனை அறிமுகப்படுத்தினான். அவனின் குரலில் தெரிந்த கேலியை ரஞ்சு புரிந்து கொள்ளவில்லை என்றாலும் சஞ்சய் நன்கு உணர்ந்து கொண்டான்.

சற்று முன் அவனை கிண்டல் செய்த போது கூட பொறுத்துக் கொண்டவன், இப்போது அவளின் முன்னே அவனை கேலி செய்ய, கைகளை மடக்கி கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்.

ரஞ்சுவோ, சஞ்சீவ் இவ்வளவு பணக்கார வீட்டின் வாரிசா என்று வியந்தாள். அவளிற்கும் கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ் பற்றி தெரியும். உலகளாவிய வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் வீட்டின் பிள்ளைகளா இவர்கள்... எத்தனையோ வி.வி.ஐ.பிக்கள் காத்திருந்து பார்ப்பவர்களா என்று ஆச்சரியத்தில் மூழ்கியவளை சுயத்திற்கு அழைத்து வந்தது சஞ்சயின் முகபாவனை.

ஏனோ அவனிற்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதை நன்குணர்ந்து கொண்டாள் ரஞ்சு. அதே போல், அண்ணன் – தம்பிக்கு இடையே ஏதோ உட்கட்சி பூசல் உள்ளது என்பதையும் அவர்களின் முகமே தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.

இனிமேலும், அங்கு இருக்க அவள் என்ன லூசா… “சஞ்சு..” என்று ஆரம்பித்தவள், சஞ்சயின் முகபாவனையில், “சஞ்சீவ், நேரமாகிடுச்சு… நான் கிளம்புறேன்…” என்று மாற்றிக் கூற, சஞ்சீவிற்கும் அவள் இங்கிருந்து செல்வதே நலம் என்று தோன்ற, அமைதியாக தலையசைத்தான்.

சஞ்சீவின் தலையசைப்பிற்கு தலையசைப்பின் மூலமே, மறுமொழி கூறியவள், சஞ்சயிடம் திரும்பினாள். ‘ஒரு கர்டஸிக்காக சொல்லிட்டு போயிடுவோம்…’ என்று நினைத்துக் கொண்டு அவனைப் பார்க்க, அவனோ கண்களிலேயே அனலைக் கக்கினான்.

அதைக் கண்டு பயந்தவள், அவனைத் திரும்பிக் கூட பார்க்காமல், வெளியே சென்று விட்டாள்.

வெளியே வந்ததும் தான் அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டவள், “ச்சே என்ன இப்படி பாக்குறான்… எதுக்கு இவ்ளோ கோபம்… இவ்ளோ வெறுப்பு…. ப்பா சாமி… என்ன கண்ணு அது… அப்படியே உள்ள இழுக்கும் போல… இன்னொரு தடவ அவன் கண்ணு முன்னாடி வரவே கூடாது…” என்று புலம்பிக் கொண்டே, சஞ்சீவின் வேலையாள் கொடுத்த வண்டி சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

அவளின் எதிரில் வந்த மனிதன், தான் தனியாக பேசிக் கொண்டு செல்வதை வித்தியாசமாக பார்ப்பதைக் கூட கண்டுகொள்ளவில்லை ரஞ்சு. அந்த அளவிற்கு, அவனின் ஒற்றைப் பார்வை அவளை பாதித்து தான் இருந்தது.

அந்த எதிரில் வந்த மனிதன், வேறு யாருமில்லை கோகுல் தான். சஞ்சயும் கோகுலும், சஞ்சீவ் இருக்குமிடம் தெரிந்த மறுநொடியே கிளம்பியிருந்தனர்.

வீட்டிற்கு வந்ததும், கோகுலிற்கு அவனின் வீட்டிலிருந்து அழைப்பு வர, அவன் சஞ்சயை உள்ளே செல்லுமாறு கூறிவிட்டு, அங்கிருந்த தோட்டத்தில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

பேசி முடித்தவன், வீட்டிற்குள் செல்ல முற்படும்போது, அவனைக் கடந்து சென்றவளைக் கண்டான். தனக்குள்ளேயே பேசிக் கொண்டு கடந்து சென்றவளை புருவம் சுருங்கப் பார்த்தவன், ‘லூசா இவ…’ என்று குழம்பியபடியே உள்ளே சென்றான்.

****

ரஞ்சு சென்ற பிறகு, சஞ்சய் சஞ்சீவிடம், “என்ன நடக்குது இங்க சஞ்சு..? இதுக்கு தான் யாருக்கும் தெரியாம இங்க இருக்கியா..?” என்று கோபமாக வினவ, சஞ்சீவோ ஒரு பெருமூச்சுடன், “என் லைஃப் எப்படி இருக்கணும்னு நான் தான் டிசைட் பண்ணுவேன் மிஸ்டர். சஞ்சய்… இந்த வீட்டுல உங்களுக்கும் உரிமை இருக்கு… சோ இங்க நீங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்… ஆனா, என் லைஃப்ல குறுக்க வந்தா, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…” என்று உறுதியாகக் கூறினான்.

அவனின் கூற்றைக் கேட்ட சஞ்சய்க்கு மனது உடைந்து தான் போனது. அவனின் தவறுக்காக எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டாகிற்று… இனி என்ன செய்வது என்று அவனிற்கும் புரியவில்லை. வியாபாரத்தில் எத்தனையோ அசாத்திய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சட்டென்று யோசிப்பவனிற்கு, குடும்ப சிக்கல்களை அவிழ்ப்பதற்கான தீர்வுகளை கண்டறிய முடியவில்லை… இதில் சரியான பயிற்சி இல்லாதது தான் காரணமோ…

இவர்களின் காரசார உரையாடலை நிறுத்துவதற்காகவே கோகுல் உள்ளே நுழைந்தான்.

வந்ததும் வராததுமாக, நேரே சென்று சஞ்சீவை அணைத்தவன், “டேய் மச்சான்… நீ பாட்டுக்கு என்ன உங்க அண்ணன் கூட கோர்த்து விட்டுட்டு போயிட்ட… ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காரு டா அந்த மனுஷன்…” என்று அவனின் காதுக்குள் முணுமுணுத்தான்.

இவ்வளவு நேரமிருந்த கடின பாவம் மாற, சஞ்சீவின் முகத்தினைக் கண்டே, கோகுல் தன்னைப் பற்றி தான் கூறியிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட சஞ்சய்க்கும் லேசாக சிரிப்பு வந்தது.

கோகுலை சீண்டிப் பார்க்க எண்ணியவன், “ஹலோ பி.ஏ…” என்று விழிக்க, கோகுலோ சஞ்சீவிடமிருந்து பிரிந்து, “எஸ் பாஸ்…” என்று அட்டென்ஷனில் நின்றான்.

அவனைக் கண்ட சகோதரர்கள் இருவருக்குமே சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டனர்.

“இங்க நான் நிக்குறேன்… வந்ததும் ஓடிப் போன உன் பிரெண்டு கிட்ட போற…” என்று சஞ்சய் கூற, “அதான… டேய் சஞ்சு… எதுக்கு டா சொல்லாம கொள்ளாம ஓடிப் போற… அதுவும் என்ன விட்டுட்டு… நெக்ஸ்ட் டைம் அப்படி போறதா இருந்தா என்னையும் கூட்டிட்டு போயிடு டா… முடியல…” என்று கோபத்தில் ஆரம்பித்தவன் கெஞ்சலில் முடிக்க, இம்முறை சிரிப்பை அடக்க முடியாமல் இருவருமே சத்தமாக சிரித்தனர்.

இருவரின் சிரிப்பையும் கண்ட கோகுல், ‘இனிமேலாவது ரெண்டு பேரும் எந்த கஷ்டமும் இல்லாம சிரிச்சுட்டே இருக்கணும்…’ என்று வேண்டினான், கடவுள் அவனின் வேண்டுதலை தள்ளிப் போடப் போவதை அறியாமல்…

நண்பர்கள் இருவருக்கும் பேச வேண்டியவை இருக்கும் என்று உணர்ந்த சஞ்சய், அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி கோகுலிடம், “நான் ரெஸ்ட் எடுக்க போறேன் கோகுல்… ஈவினிங் வரைக்கும் என்ன டிஸ்டர்ப் பண்ணாத…” என்று மாடிக்கு சென்றான்.

சஞ்சய் செல்லும் வரை காத்திருந்த கோகுல் சஞ்சீவிடம், “இப்போ சொல்லுங்க சார்… மனசுல என்ன நெனச்சுட்டு இருக்கீங்க… இந்த உலகத்துல உனக்கு ஒண்ணுன்னா கவலைப்பட யாருமே இல்லன்னா… ஹான்… உனக்கு என் நெனப்பு, எங்க அம்மா அப்பா நெனப்பு வரலைன்னா கூட பரவால, அது எப்படி உனக்கு ஒண்ணுன்னா துடிக்கிற உன் ஜெய் நெனப்பு கூடவா வரல…” என்று கோபத்தில் பேசினான்.

சஞ்சீவ் ஏதோ சொல்ல வர, அவனை தடுத்த கோகுல், “நீ என்ன சொல்லப் போறன்னு எனக்கு நல்லாவே தெரியும்… இன்னும் எத்தன நாளைக்கு பழசயே நெனச்சு அவர ஒதுக்கி வைப்ப… அவரு சிரிச்சு எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா…” என்றவன் சஞ்சீவின் தோளில் ஆறுதலாக கைவைத்து, “இங்க நீயும் எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பன்னு எனக்கு நல்லா தெரியும் சஞ்சு…” என்றான்.

கோகுல் கூறுவது உண்மை என்பதால் அதை மறுத்துக் கூறாமல் அமைதியாக நின்றான் சஞ்சீவ். தன்னுடைய பயணப் பொதிகளை எடுக்க வந்த சஞ்சயின் காதிலும் கோகுலின் பேச்சு விழ, அவன் தங்கள் இருவரின் மேல் கொண்ட பாசத்தை உணர்ந்தவன் மனதிற்குள், ‘பாத்தீங்களா… எங்களுக்கும் பாசத்தைக் காட்ட இந்த உலகத்துல ஆள் இருக்காங்க…’ என்று கூறிக் கொண்டான்.

அவன் யாருடன் மனதில் உரையாடினானோ அந்த நபருக்கு அது சென்றடைந்தது போல, அவரின் மனமே அவரைக் குற்றவாளியாக்கி, அவரை வேதனையில் வாட்டியது.

சஞ்சீவ் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருப்பதைக் கண்ட சஞ்சய் அவனிற்கு சிறிது காலவகாசம் வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு, “க்கும்… கோகுல். இந்த ஒரு மாசம் இங்க தான் இருக்க போறோம்… இந்த ஒரு மாசம் நான் அவைலபிலா இருக்க மாட்டேன்னு எல்லா ஹெட்ஸுக்கும் தகவல் சொல்லிடு… அண்ட் நீயும் போய் ரெஸ்ட் எடு…” என்ற அழுத்தமாக.

அவன் கூறியதிலிருந்தே, இப்போது சஞ்சீவிடம் எதுவும் கேட்க வேண்டாம்… இன்னும் ஒரு மாதம் இருப்பதால், மெதுவாக கேட்டுக் கொள்ளலாம் என்பதை உணர்ந்த கோகுலும், “ஓகே பாஸ்…” என்றான் விசுவாசமான பி.ஏவாக…

சஞ்சயின் கூற்றைக் கேட்ட சஞ்சீவிற்கும் சற்று ஆறுதலாக தான் இருந்தது. இத்தனை நாட்கள் யாருக்கும் தெரியாமல் இங்கிருப்பதே சிறிது குற்றவுணர்வாக இருந்தது. அதன் காரணமாகவே மனம் எப்போதும் பாரமாக இருக்கும். இப்போது அந்த பாரம் கரைந்து விட்டதைப் போல மனம் லேசாக இருந்தது. இதற்கு காரணம் சஞ்சய் மற்றும் கோகுல் என்றால் அது மிகையாகாது.

“ஹே கோகுல்… நீ என்ன பார்க்க வந்தியா, இல்ல உன் பாஸ் கூட பி.ஏவா இங்க வந்தியா…” என்று சஞ்சீவ் வேண்டுமென்றே சஞ்சயின் முன் வினவ, ‘அடப்பாவி… என்ன எதுக்கு டா கோர்த்து விடுற…’ என்று கோகுல் தான் முழிக்க வேண்டியதாயிருந்தது.

சஞ்சயின் இதழும் லேசாக சிரிப்பில் வளைய, கோகுல் என்ன சொல்லப் போகிறான் என்பதைப் போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஐயோ… இவரு வேற பாக்குறாரே…’ என்று மனதிற்குள் புலம்பியவன், “அது வந்து…. இப்போ என்ன சொல்றது… ஹான் டூ இன் ஒன் டா…” என்று இளித்தான்.

சஞ்சீவ் மீண்டும் ஏதோ கேட்க வர, “போதும் நீ என்ன கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது போதும்… இப்போ என் ரூம்ம காமி…” என்று கையோடு இழுத்துச் சென்றான்.

*****

ரஞ்சு, எப்படி வண்டியை ஓட்டிக் கொண்டு விடுதியை அடைந்தாள் என்பது அவளிற்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஏனெனில், அவளின் சிந்தனை முழுவதும் அவனின் பார்வையில் தானே இருந்தது.

அவன் பார்வையிலிருந்த வெறுப்பிற்கான காரணத்தை அலசிக் கொண்டிருந்தவள், இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தாள்.

‘நான் அவங்க தம்பி கூட பழகுறது பிடிக்கலையோ… இருக்கலாம்… ஹை கிளாஸ்ல இருக்குறவங்களே இப்படி தான்… இனிமே சஞ்சய் கூட அளவா பழகணும்…’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள், நாளையே அதை உடைத்தெறியப் போவதை அறியாமல்…

தங்களின் அறைக்கு வந்தவள், சஞ்சுவின் அருகில் சென்று தொட்டுப் பார்க்க, காய்ச்சல் வெகுவாக குறைந்திருந்தது.

தர்ஷு ரஞ்சுவிடம் அலைபேசியில் கூறியிருந்ததை மறுபடியும் கூறி, “உன் மொபைலுக்கு என்னாச்சு… திரும்ப கால் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சு…” என்று வினவினாள்.

“சார்ஜ் இல்ல தர்ஷு… அதான் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு…” என்றவள், தான் வாங்கி வந்த இட்லியை தர்ஷுவிடம் கொடுக்க, இருவரும் அதை உண்டனர்.

ரஞ்சு இட்லி வாங்கிய கடையில் தான் மழைக்கு ஒதுங்கியிருப்பாள் என்று நினைத்து தர்ஷு அவளிடம் எதுவும் கேட்கவில்லை. குழப்பத்திலிருந்த ரஞ்சுவும் அவளிடம் எதுவும் கூறவில்லை.

அடுத்த நாள் காலை… ரஞ்சுவிற்கு சீக்கிரமே விழிப்பு ஏற்பட எழுந்து விட்டாள். ஒருமுறை சஞ்சுவை சோதித்துப் பார்த்தவள், அவளிற்கு காய்ச்சல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

முதல் நாள் சஞ்சுவை பார்த்துக் கொண்டிருந்ததால், தர்ஷுவும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப மனமில்லாத ரஞ்சு, அவள் மட்டுமே நடைப்பயிற்சிக்கு தயாரானாள்.

மனம் மீண்டும் மீண்டும் அவனை நினைக்க, ‘ச்சே… என்னது இது… இப்போ எதுக்கு அவன பத்தியே யோசிச்சுட்டு இருக்கேன்… அவனும் அவன் பார்வையும்… இனி அவன பத்தி யோசிக்கவே போறதில்ல…’ என்ற முடிவுடன் அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள்.

சுத்தமான காற்றை சுவாசித்தப்படியே ஓடிக் கொண்டிருந்தவள், பாதையோரமாக இருந்த கல் மேஜையில் சஞ்சீவ் அமர்ந்திருப்பதைக் கண்டவளின் கால்கள் அவளின் அனுமதியின்றியே அவனிடம் அழைத்துச் சென்றன.

சஞ்சீவ், தலையில் கைவைத்து அமர்ந்திருப்பதைக் கண்டவள் ஒரு நொடி தயங்கி பின், “சஞ்சு…” என்று அழைத்தாள்.

அவளைக் கண்டதும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவன், “ஹாய் ரஞ்சு…” என்றான்.

அவனருகே அமர்ந்தவள், “என்னாச்சு… ஏதாவது பிராப்ளமா… என்கிட்ட ஷேர் பண்ணலாம்னா சொல்லுங்க…” என்றாள் ரஞ்சு.

“உன்கிட்ட ஷேர் பண்ண முடியாததெல்லாம் இல்ல ரஞ்சு… ஜஸ்ட் பழைய நினைவுகள்… அது குடுத்த வலிகள்… அதான் இப்படி… கொஞ்ச நேரத்துல நார்மல் ஆகிடுவேன்…” என்றான்.

“உங்க ஃபேமிலி பத்தி நான் கேட்டுக்கவே இல்ல… இவ்ளோ நாள் நீங்க மட்டும் தான் இங்க இருந்தீங்களா… அவங்க எங்க இருக்காங்க…” என்று அவன் தான் குடும்பத்தைப் பற்றிய பேச்சை எடுக்கவில்லை என்பதை மறந்தவளாக வினவினாள்.

சஞ்சீவும் அன்று அவளிடம் பகிர்ந்துவிடும் எண்ணத்தில் இருந்தானோ, அவனின் குடும்பத்தைப் பற்றி கூற ஆரம்பித்தான்.

“எங்க ஃபேமிலி இருந்தது ஆஸ்திரேலியால. எங்க தாத்தா காலத்துல அங்க போய் செட்டிலாகிட்டோம்… நான் அங்க தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே… கே.பி குரூப்ஸ்… எங்க தாத்தா கிருஷ்ண பிரசாத் காலத்துல ஆரம்பிச்சு, எங்க அப்பா சத்ய பிரசாத், அத பெருசா டெவலப் பண்ணாரு. ஹ்ம்ம் எங்க அப்பாவ பத்தி என்ன சொல்ல… ஹி இஸ் எ மான்ஸ்டர்…” என்றான் வேதனை நிறைந்த குரலில்…

அவனின் கூறிய விதத்தைக் கேட்டவளிற்கு சிறிது பதட்டமாக இருந்தது. தந்தையையே ‘மான்ஸ்டர்’ என்று கூறும் அளவிற்கு அப்படி என்ன ஆகியிருக்கும் என்று யோசித்தாள். அவளின் சிந்தனையைக் கலைப்பது போல பேச ஆரம்பித்தான் சஞ்சீவ்.

“ஹி இஸ் எ குட் பிசினஸ்மேன்… ஆனா, கண்டிப்பா நல்ல கணவனோ, நல்ல அப்பாவோ இல்ல… நாங்க பிறந்ததே அவருக்கு அப்பறம் அவரோட பிசினஸ் பாத்துக்கணும்னு தான்னு அடிக்கடி அவரே சொல்லுவாரு… எங்க படிப்ப பத்தியோ, வளர்ச்சிய பத்தியோ அவருக்கு அக்கரையே இல்ல… ஆனா, நாங்க யாரு கூட பழகுறோம்னு செக் பண்ணிப்பாரு… ஏன்னா, அது அவரோட ஸ்டேட்டஸ பாதிக்குமாம்… இதுவரைக்கும் எனக்கு ஒரே ஒரு பிரென்ட் தான் தெரியுமா… ஜெய்க்கு அது கூட இல்ல… நாங்க ரெண்டு பேரும் பொண்ணா பிறந்துருந்தா, எங்கள பாத்துருக்க கூட மாட்டாருன்னு இப்போ ஃபீல் பண்றேன்…” என்று கூறினான் சஞ்சீவ். அவனின் குரலிலிருந்தே தந்தை மீதான அப்பட்டமான வெறுப்பு தெரிந்தது.

“எங்க அம்மா… வாயில்லா ஜீவன்… நாங்க ஏதாவது தப்பு பண்ணா கூட அவங்கள தான் அடிப்பாரு அப்பா… இவ்ளோ ஏன்… சாப்பாடு நல்லா இல்லைனா கூட அவங்க தான் அடி வாங்குவாங்க… இத்தனைக்கும் சமைச்சது செர்வன்ட்ஸா இருப்பாங்க… இவரு தொல்லை தாங்க முடியாம தான் எங்கள விட்டுட்டு போயிட்டங்களோ…” என்றவனின் கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்த்தது.

“அண்ட் ஃபைனலி என்னோட ஜெய்… எவ்ளோ நாளாச்சு தெரியுமா, என்னோட ஜெய்னு சொல்லி… என் ஃபேமிலில எனக்கு ரொம்ப க்ளோஸ் அவன் தான்… அவனுக்கு அப்பறம் தான் அம்மா கூட… எனக்கும் அவனுக்கும் மூணு வருஷம் டிஃப்பரன்ஸ்… சோ அண்ணான்னு எல்லாம் கூப்பிட மாட்டேன்… இவ்ளோ க்ளோஸா இருந்த நாங்க பிரிஞ்சதும் எங்க அப்பாவால தான்… ஒரு தடவ, அவரு ஏதோ கோபமா சொல்லிட்டாருன்னு ஹாஸ்டல்ல போய் படிக்க போயிட்டான்… அப்போ கூட சண்டை போட்டேன், என்ன விட்டுட்டு போயிட்டியேன்னு… அப்பறம் தான் அம்மா கூட க்ளோஸானது… அதுவும் ரொம்ப நாள் நிலைக்கல… அம்மா ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்கன்னு நியூஸ் வந்துச்சு… பாடிய கூட பாக்க விடல… அப்போ தான் ரொம்ப தனிமைய ஃபீல் பண்ணேன்… ஐ மிஸ்ட் ஜெய் எ லாட்… ஆனா, அவனுக்கு அப்படி இல்ல போல… அவன் கரியர் தான் முக்கியம்னு வீட்டுக்கே வரல…” என்று விரக்தியுடன் சஞ்சீவ் கூற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு ஜோடி விழிகளிலும் அவன் வேதனையை எண்ணி கண்ணீர் சுரந்தது.

“அதுக்கு அப்பறம் எனக்கும் என் அப்பாவுக்கும் ஒத்துப் போகல… முக்கியமா என் படிப்பு விஷயத்துல… நான் கேட்டரிங் ஜாயின் பண்ண போறது அவருக்கு பிடிக்கல… நானும் ஜெய் மாதிரியே சண்டை போட்டு வெளிய படிக்க போயிட்டேன்… ஒரு நாள் அப்பா இறந்துட்டாருன்னு போன் வந்துச்சு… நானும் ஜெய்யும் ஜஸ்ட் ரிலேடிவ்ஸ் மாதிரி தான் அதுல கலந்துகிட்டோம்… ஹ்ம்ம் அப்பறம் என்ன, ஜெய் அப்பா விட்டுட்டு போன பிசினஸ கவனிக்க நாள் முழுக்க ஓடுனான்… அப்பயாவது என்கூட பேசுவான்னு நெனச்சேன்… பேசுனான் தான்… ஆனா, பழைய மாதிரி இல்ல… எனக்கு எல்லாத்தையும் இழந்த ஃபீல்… அதான் ஒரு சேஞ்சுக்கு இங்க வந்தேன்…” என்று கூறி முடித்தான்.

ரஞ்சுவிற்கு தான், கலகலப்பாக இருப்பவனிற்கு பின்னால், இவ்வளவு ஏமாற்றங்களா என்று மனம் கனத்து போனது. சஞ்சய் மீது கோபமாக வந்தது.

‘இவ்ளோ தூரம் அன்புக்காக தேடியிருக்கான்… அத கூட குடுக்க முடியாம அப்படி என்ன வேலை அந்த சிடுமூஞ்சிக்கு…’ என்று நொடித்துக் கொண்டாள் மனதிற்குள்…

அவளின் எண்ணங்கள் அவனை அடைந்ததோ, “ஹாய்..” என்றவாறே அந்த மேஜையில் அவளருகே அமர்ந்தான் சஞ்சய்.

சட்டென்று அவனைக் கண்டவளிற்கு தூக்கிவாரிப் போட, அதிர்ந்து அவனை விட்டு நகர்ந்தவளைக் கண்ட சஞ்சய், கேலியாக புருவத்தை தூக்கினான்.

இப்போது சற்று சமன்பட்ட மனதுடன் இருந்ததால், அவனை முறைத்தாள். சாதாரணமாக இருந்திருந்தால், இந்த முறைப்பு சாத்தியமா என்பது சந்தேகம் தான். ஆனால், சஞ்சீவின் கதையைக் கேட்டதால் உருவான கோபத்தின் காரணமாக, அவனின் நேற்றைய பார்வையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டதால், அந்த முறைப்பு சாத்தியமானது.

சஞ்சீவ் அவனை புருவம் சுருங்க பார்த்தானே தவிர, வேறெதுவும் சொல்லவில்லை. அங்கு நிலவிய அமைதியைக் கலைத்தவனாக, “ஹாய்… ஐ’ம் சஞ்சய்…” என்று ரஞ்சுவின் முன் கை நீட்டினான்.

அவனைப் புரியாத பார்வை பார்த்த ரஞ்சு தயக்கத்துடன், “ஐ’ம் ரஞ்சனா…” என்றாள்.

அவனிடம் கைகுலுக்கி விட்டாலும், ரஞ்சுவின் சிந்தனை நின்றபாடில்லை.

‘நேத்து முறைச்சான்… இன்னைக்கு சிரிக்கிறான்…’ என்று ரஞ்சு யோசிக்க, அதே யோசனையில் தான் சஞ்சீவும் இருந்தான்.

இருவரின் யோசனை சுமந்த முகத்தைக் கண்டு புன்னகைத்துக் கொண்ட சஞ்சய், மனதிற்குள் தான் வகுத்த திட்டங்கள் சரியான பாதையில் தான் செல்வதாக எண்ணிக் கொண்டான்.

அண்ணன் தம்பிக்கு இடையில் ரஞ்சு குழப்பத்துடன் அமர்ந்திருக்க, அவர்களை சத்தமில்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டது அந்த உருவம்.


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துகோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 ஹாப்பி ஃப்ரைடே...😁😁😁 சொன்ன மாதிரி இந்த வாரம் சரியா வந்துட்டேன்...😊😊😊 இதுவரைக்கும் நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 இந்த எபியும் படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙂🙂🙂

24028
காதல் 8

மூவருக்குமிடையே இருந்த மௌனத்தைக். கலைத்த ரஞ்சு, “ஹ்ம்ம்… எனக்கு நேரமாச்சு… நான் கிளம்புறேன்…” என்று இருவருக்கும் பொதுவாகக் கூறிவிட்டு அவர்களின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

ஆனாலும், “பை ரஞ்சு…” என்ற குரல் அவளின் காதில் விழ, திரும்பாமலேயே அது சஞ்சயின் குரல் என்பதை அவளின் மனம் கண்டுகொண்டது. ‘ரஞ்சுவா…’ என்று திகைக்கவும் செய்தது.

முதல் நாள் போலவே இப்போதும் சஞ்சயின் நினைவே அவளை வியாபித்திருந்தது. வித்தியாசம் என்னவென்றால், முதல் நாள் அவனின் முறைப்பைக் கண்டு யோசித்திருந்தாள் என்றால், இன்று அவனின் சிரிப்பை எண்ணி மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறாள்.

அவள் அங்கிருந்து சென்ற நொடி சஞ்சீவ் சஞ்சயிடம், “எதுக்கு இங்க வந்த…?” என்று வினவியிருந்தான்.

“ஹலோ பிரதர்… நீ மட்டும் தான் ஜாக்கிங் பண்ணுவியா… ஏன் நாங்க பண்ண மாட்டோமா…” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சஞ்சய்.

“ப்ச்… ரஞ்சு கிட்ட எதுக்கு பேசுற..?” என்று சஞ்சீவ் அடிக்குரலில் கேட்க, அவன் எதைக் கேட்கிறான் என்று புரிந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், “என்ன சஞ்சு இப்படி கேட்டுட்ட.. நேத்து என்ன அவளுக்கு இன்ட்ரோ குடுத்தியே… அவள எனக்கு இன்ட்ரோ குடுத்தியா…” என்று விஷமமாக கேட்டு சஞ்சீவின் பிபியை மேலும் ஏற்றினான்.

சஞ்சீவ் ஏதோ கூறப் போக, அப்போது தான் அங்கு வந்த கோகுல், “ஹே சஞ்சு, இப்போ போச்சுல அந்த பொண்ணு கூட என்ன பேசிட்டு இருந்தீங்க..?” என்று வினவினான்.

இரு சஞ்சுவும், ‘இவன் எதுக்கு அவள பத்தி கேக்குறான்…’ என்ற ரீதியில் அவனைப் பார்க்க, கோகுலின் தலையில் அன்றைய நாளில் அண்ணன் தம்பி இருவரிடமும் திட்டு வாங்க வேண்டும் என்று கடவுள் எழுதியிருப்பார் போல, அவன் இருவரின் பார்வையையும் கவனிக்காமல், “சரியான லூசு போல அந்த பொண்ணு…” என்று கூறியதும், இருவருமே அவனை முறைத்துக் கொண்டு அந்த கல் மேஜையிலிருந்து எழுந்து நின்றனர்.

அப்போது தான் இருவரின் பாவனையையும் கண்ட கோகுல், ‘ஆத்தி இது என்ன ரெண்டு பேரும் என்ன இவ்ளோ பாசமா பாக்குறாங்க… இப்போ நாம என்னத்த சொன்னோம்னு இப்படி முறைக்குறாங்க...’ என்று உஷாரானான் கோகுல்.

“அது இல்ல டா… நேத்து நான் வந்தப்போ, இந்த பொண்ணு உன் வீட்டுலயிருந்து வெளிய வந்துச்சா… அப்போ யாரப் பாத்துட்டு வந்துச்சுன்னு தெரியல… பேயறைஞ்ச மாதிரி தனியா புலம்பிட்டே வந்துச்சா…” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, சஞ்சயின் முகத்தில் கோபத்தின் அளவு கணிசமாகக் கூடிக் கொண்டிருந்தது.

‘அய்யயோ இப்பவும் சொதப்புறேன் போலயே… எதுக்கும் டாப்பிக்க சேஞ் பண்ணுவோம்…’ என்று நினைத்த கோகுல், “எனக்கு தூக்கமா வருது… நான் இன்னொரு ரவுண்டு ஓடிட்டு வரேன்…” என்று விட்டால் போதுமென்று ஓடி விட்டான்.

கோகுல் சென்றதும் ஒரு பெருமூச்சுடன், “நீ எதுக்கு அவ கிட்ட நெருங்க முயற்சிக்கிறன்னு எனக்கு புரியுது… ஆனா, நீ நினைக்குறது நடக்காது சஞ்சய்…” என்று சஞ்சீவ் அழுத்தமாக கூற, “ஓ… நான் நினைக்கிறதெல்லாம் உனக்கு புரியுதா… அப்போ நான் எதுக்காக அப்படி பண்ண நினைக்கிறேன்னும் புரிஞ்சுருக்கணுமே…” என்று சற்று கிண்டலாகவே பதிலளித்தான் சஞ்சய்.

“என் லைஃப் நான் பாத்துக்குவேன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்…” – சஞ்சீவ்.

“முன்னாடி பண்ண தப்ப, இன்னொரு தடவ பண்ண மாட்டேன்னு நானும் ஏற்கனவே சொல்லிட்டேன்…” – சஞ்சய்.

இருவரும் அவரவரின் முடிவிலிருந்து பின் வாங்குவதில்லை என்று முடிவெடுக்க, அந்த முடிவின் முக்கிய பாத்திரமாக இருக்கும் ரஞ்சுவிற்கு இதனால் என்ன பாதிப்பு உண்டாகுமோ…

****

குழப்பத்துடனே அறைக்கு வந்தவளை வரவேற்றது, சஞ்சுவின் உற்சாகக் குரலே… ஒரு நாள் ஓய்வே அவளிற்கு பழைய சுறுசுறுப்பை தந்திருக்க, எப்போதும் போல தர்ஷுவை கிண்டலடித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது உள்ளே நுழைந்த ரஞ்சுவைக் கண்டவள், “ஹோய் ரஞ்சு… என்ன இன்னைக்கு லேட்டு… உன் ஆள பாத்துட்டு வந்தியா…” என்று அவளை கலாய்க்க, ரஞ்சுவோ சஞ்சயின் நினைவில் இருந்ததால், சஞ்சு கேட்ட கேள்வியை உணராமல், ‘ஆம்’ என்று தலையசைத்திருந்தாள்.

அதில் அதிர்ந்த சஞ்சுவோ, “எதே ஆமாவா… ஹே தர்ஷு இங்க வந்து பாரு… இவ ஏதோ மந்திருச்சு விட்ட மாதிரியே இருக்கா…” என்று தர்ஷுவையும் துணைக்கு அழைத்தாள்.

தர்ஷுவும் அங்கு நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்ததால், ரஞ்சுவின் பதிலும் அவளிருக்கும் நிலையும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ரஞ்சுவின் அருகே வந்தவள், “சஞ்சீவ பார்க்ல பாத்தியா..?” என்று வினவ, “அவங்க அண்ணாவ பாத்தேன்…” என்று தன்னிச்சையாக கூறினாள்.

“அவ்வ்வ்… தம்பிய பாக்க போய், அண்ணாவ பாத்து ஸ்டான்னாகி வந்துருக்காளோ… ஹே ரஞ்சு அப்போ என் ப்ரோவோட ப்ரோ தான் உன் ஆளா…” என்று உற்சாகமாக சஞ்சு வினவ, அவளை லேசாக அடித்த தர்ஷு, “ப்ச்… சும்மா இரு சஞ்சு… அவளே ஏதோ குழப்பத்துல இருக்கா… நீ வேற…” என்று கூறிவிட்டு ரஞ்சுவை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தாள்.

அப்போது தான் சுயத்தை அடைந்த ரஞ்சு, மற்ற இருவரும் தன்னை வேற்று கிரகத்திலிருந்து வந்ததைப் போல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் தான் கூறியவை நிகழ்விற்கு வர சட்டென்று, “நீங்க நினைக்கிற மாதிரி இல்ல…” என்று கூறினாள்.

“ஆஹான்… நாங்க என்ன நினைச்சோம் மேடம்…” என்று கிண்டலாக சஞ்சு வினவ, தர்ஷுவும் இப்போது குறுகுறுப்புடன் ரஞ்சுவை நோக்கினாள்.

“அது… அது… ப்ச்… இப்போ எதுக்கு வந்ததும் விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க… நகருங்க ரெண்டு பேரும்…” என்று அவர்களிடமிருந்து தப்பித்து உள்ளே செல்ல முற்பட, அதெல்லாம் அவர்களிடம் நடக்குமா…

அவளிடமிருந்து விஷயத்தைக் கறந்த பின்னர் தான் அறைக்குள்ளே அவளை விட்டனர்.

“என்னது ஃபர்ஸ்ட் மொறைச்சான் அடுத்து சிரிச்சானா…” என்று சத்தமாகவே யோசித்த சஞ்சுவைக் கண்ட தர்ஷு, “மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடியுமோ…” என்று கண்ணடித்துக் கூறினாள்.

“ஹா அப்போ என் ப்ரோவோட நெலம…” என்று சஞ்சு சஞ்சீவை எண்ணிக் கூற, “உன் ப்ரோ என்னமோ இவள லவ் பண்ற மாதிரி சொல்ற…” என்று தர்ஷுவும் அவள் பங்கிற்கு பேச, ரஞ்சு தான் இருவரையும் அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தாள்.

“இல்லன்னு வேற சொல்லுவியா… ரஞ்சு – சஞ்சு பேரு கூட எவ்ளோ பொருத்தமா இருக்கு…” – சஞ்சு.

“சஞ்சய்லயும் சஞ்சு இருக்கு…” – தர்ஷு.

அதற்கு மேல் முடியாதவளாக, ‘ரெண்டு பேரும் எப்படியோ போய் தொலைங்க…’ என்று நினைத்த ரஞ்சு குளிக்க சென்று விட்டாள்.

“ஆமா, நீ ஏன் என் ப்ரோ மேல இவ்ளோ காண்டா இருக்க..? அவரு ரஞ்சுவ லவ் பண்ணா என்ன..?” என்று ஆராய்ச்சி பாவத்துடன் சஞ்சு வினவ, தர்ஷுவும் அதைத் தான் தனக்குள் கேட்டுக் கொண்டாள். ஆனால், அவள் மனம் தான் அவள் எதிர்பார்த்த பதிலை சொல்லவில்லை.

மனதோடு நடந்த ரகசிய உரையாடலை மறைத்துக் கொண்டு, “நான் எதுக்கு அவரு மேல காண்டா இருக்கணும்… நான் தான் முதலயே சொன்னேன்ல, அவர பத்தி நமக்கு எதுவும் சரியா தெரியாது. அப்படி இருக்குறப்போ ரஞ்சுவோட ஃபியூச்சரயே அவர நம்பி எப்படி ஒப்படைக்குறது…” என்று சஞ்சுவிடம் சமாளித்தாள்.

“இத்தன நாள் பாத்த என் ப்ரோவயே நம்ப முடியாதுன்னா, அவரோட ப்ரோவ மட்டும் எப்படி நம்புற…” என்று புருவம் உயர்த்தி வினவியவளைக் கண்ட தர்ஷு சிரித்துக் கொண்டே, “அது உன்ன வெறுப்பேத்த சொன்னேன்…” என்று கூற, தோழிகளிடையே அடிதடி சண்டை உருவானது. இதன் பயன், அவர்களின் தலையணை மூலைக்கு ஒன்றாக பறந்து போய் விழுந்தது.

இவர்களின் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த ரஞ்சு, “ஷ்… உங்க ரெண்டு பேரையும் தனியா கொஞ்ச நேரம் விட முடியுதா… ஒழுங்கா ரூம்ம கிளீன் பண்ணிட்டு குளிக்க போங்க…” என்று கூற, இருவரும் ஆளுக்கு முதலாக அந்த இடத்தை விட்டு அகன்றனர். இவர்களைத் திட்டிக் கொண்டே ரஞ்சு தான் அறையை சுத்தப்படுத்தினாள்.

தோழிகள் இருவரும் விளையாட்டாக சண்டை போட்டது, உண்மையில் நடந்தால்… யாருக்கு யார் சாதகமாக நிற்கக் கூடுமோ…

*****

ஊருக்கு ஒதுக்குப்புறமான குடவுன் போன்ற இடம்… படங்களில் காட்டுவது போல யாரையாவது கடத்தி வைத்திருக்கும் வில்லன்களின் இடம் போன்ற தோற்றத்தில் இருந்தது அந்த இடம். இதன் உரிமையாளரும் ஒருவிதத்தில் அத்தகைய செயல்களை செய்யக்கூடியவர் தான்.

“என்ன டா அந்த போன ரொம்ப நேரமா நோண்டிட்டு இருக்க… படிச்சவன்னு வேலைக்கு வச்சா, அவ்ளோ சுறுசுறுப்பா இருக்க மாட்டிங்குறியே…” என்று தன் கட்டைக்குரலில் அங்கலாய்க்க, அதிலிருந்தே அக்கூட்டத்தின் தலைவன் அவன் என்று தெரிந்து கொள்ளலாம்.

‘இருய்யா… இந்த ஐ-போன்ல எதெது எங்க இருக்குன்னு பாக்கவே லேட்டாகுது…’ என்று மனதிற்குள் புலம்பினான் அவன். வெளியில் சத்தம் வந்தாலே, யோசிக்காமல் தலையை வெட்டிவிடும் காட்டுமிராண்டி கூட்டத்தில் இருந்து கொண்டு, அவனால் தைரியமாக பேசிவிட முடியுமா என்ன…

ஒருவழியாக அந்த காணொளி அழைப்பை ஏற்படுத்தி அந்த தலைவனிடம் கொடுத்தான். ‘ஹும்… அ, ஆ, இ, ஈ படிக்கத் தெரியாதவனுக்கு ஐ-போனு…’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான் அந்த முதுநிலை பட்டதாரி.

அலைபேசியில் தெரிந்த தன் உருவத்தை கண்டவர், தன் கறைபடிந்த பற்கள் தெரியுமாறு சிரித்து, “பாக்க கம்பீரமா இருக்கேன்ல…” என்று மீசையை தடவிக் கொண்டார்.

‘க்கும்… காண்டாமிருகம் மாதிரி இருந்துட்டு கம்பீரமா இருக்கானாம்…’ – வழக்கம் போல ‘மைண்ட் வாய்ஸில்’ பேசினான். அதற்குள் மறுபக்கம் அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளபட்டது.

“வணக்கம் சார்…” என்று இந்த தலைவன் அவனின் தலைவனுக்கு சலாம் போட்டான்.

அதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், “அங்க என்ன நிலவரம்..?” என்று வினவினான் வில்லன்.

“சார், அந்த பையன் இப்போ இங்க தான் இருக்கான். அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டுல தான் இருக்காங்க…” என்று மிஸ்டர். காண்டாமிருகம் கூற, “ஃபூல் அது எனக்கு தெரியாதா… லைவ் கமெண்ட்ரி பண்ணவா நீ இருக்க… ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்கன்னா, ஏதோ பிளான் பண்றாங்கன்னு அர்த்தம்…” என்று திட்டினான் மறுமுனையில் இருந்தவன்.

“அவனுங்களுக்கு நீங்க தான் மறைமுகமா குறிவச்சு தாக்குறீங்கன்னு தெரியாது…” என்று அமைதியான குரலில் கூற, “தெரியாத வரைக்கும் தான் நம்ம சேஃபா அவனுங்கள டார்கெட் பண்ண முடியும்… ஆனா, எப்படி இன்னும் என்ன கண்டுபிடிக்காம இருக்காங்கன்னு தான் எனக்கு டவுட்டா இருக்கு…” என்று யோசனையுடன் கூறினான் வில்லன்.

“நம்ம செய்கை அப்படி… யாருக்கும் சந்தேகம் வராது…” என்று பெருமை பீற்றிக் கொள்ள, “கிழிச்ச… அவன் வேறெதோ குழப்பத்துல இருக்கான்… அதான் நம்ம பக்கம் கவனம் திரும்பல…” என்றான்.

“நம்ம பசங்களும் சொன்னாங்க… அவனுக்கும் தம்பிகாரனுக்கும் ஏதோ சண்டை போல… கோவமா பேசிக்கிட்டதா சொன்னான்னுங்க…” என்று தகவலைக் கூற, “இதுவும் பழசு தான்… தம்பி கோச்சுக்கிட்டு தான் ஆஸ்திரேலியாலயிருந்து இந்தியா வந்ததே…” என்று பல்லைக் கடித்தான் வில்லன்.

இவர்களின் உரையாடலைக் கேட்ட அந்த படித்தவனிற்கு தான் சிரிப்பாக இருந்தது. பின்னே, தங்களையெல்லாம் அரற்றிக் கொண்டிருப்பவன் பம்மி பதுங்கினால் சிரிப்பு வரத்தானே செய்யும். எனினும், அதை வெளியே தெரியாதவாறு அடக்கிக் கொண்டான்.

தன் ஆட்கள் முன்னிலையிலேயே அவமானப்பட்டதால் அதை தகர்க்கும் பொருட்டு, “எனக்கு ஒரு ஐடியா தோணுது… அண்ணன் தம்பிக்குள்ள சண்டைன்னு சொல்றீங்க… அப்போ தம்பி கூட கூட்டு வச்சுக்கிட்டு அண்ணங்காரன போட்டுத் தள்ளிடலாம்ல…” என்று தன் முழுத்திறமையை பயன்படுத்தி ‘புதிய’ திட்டம் ஒன்றைக் கூறினார் மிஸ்டர். காண்டாமிருகம்.

“இதெல்லாம் சரியா வராது… வெளிய இருந்து பாக்க தான் ரெண்டு பேரும் அடிச்சுக்குற மாதிரி இருக்கும். ஆனா, ஒருத்தருக்கு ஏதாவதுன்னா இன்னொருத்தர் சும்மா இருக்க மாட்டாங்க…” என்று வில்லன் எச்சரிக்க, “அப்படி ஏதாவதுன்னா கையில மாட்டுன தம்பிய கொன்னுடலாம்…” என்று தன் திட்டத்தை செயல்படுத்திவிடும் நோக்கத்தில் கூறினார் காண்டஸ்.

வில்லனின் முகத்தில் இப்போதும் திருப்தியில்லை. அப்போது மறுமுனையில் ஒலித்தது அந்த குரல்.

“ஓகே சொல்லு ரிஷி… ரெண்டு பேரும் சண்டை போட்டு பாத்து ரொம்ப நாளாச்சு…” என்று பெண் குரல் மட்டும் கேட்டது.

அந்த பெண் குரலுக்கு வில்லனாகிய ரிஷியின் முடிவை மாற்றும் சக்தி இருந்தது போலும்… அவன் அரைகுறையாக சம்மதித்தான்.

“ரெண்டுல ஒரு விக்கட் காலிங்கிற தகவலோட உங்கள மறுபடியும் சந்திக்கிறேன்…” என்று அந்த அழைப்பைத் துண்டித்தார் காண்ட்ஸ்.

அழைப்பைத் துண்டித்த மறுநிமிடம், தான் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைத்து, “எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே அவமானப்படுத்துவான்… இருக்கட்டும் இவனுக்கும் ஒரு நாள், நாள் குறிக்குறேன்…” என்று சற்று முன்னர் யாரிடம் பம்மி பதுங்கினானோ அவனையே கேட்க முடியாத அளவிற்கு திட்டித் தீர்த்தார்.

‘க்கும்… ஆள் முன்னாடி எதுவும் பேசுறது இல்ல…’ என்று நக்கலாக நினைத்துக் கொண்டான் அந்த பட்டதாரி.

“ஹே உன் பேரு என்ன..” என்று அவன் வினவ, சட்டென்று தன்னை அழைப்பார் என்று எண்ணாததால், சற்று திணறியபடி, “லோ…லோகேஷ்…” என்றான்.

“ஹ்ம்ம் லோகு… நீ என்ன பண்ற… அந்த தம்பி நம்பர உடனே கண்டுபிடிக்கிற…” என்று கூறிவிட்டு சென்றுவிட, அந்த லோகேஷ் தான், ‘கூப்பிடுறத பாரு… லோகு.. கட்லான்னு…’ என்று முணுமுணுத்தப்படி தனக்கு இடப்பட்ட வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

*****

“என்னாது அடுத்த வாரம் ஒத்திவைக்க போறீங்களா… நோ நோ நோ நோ… ஐ’ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்… எது வேணும்னாலும் சாப்பிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க… சோ இன்னைக்கு லன்சுக்கு வரோம்… நல்லா சாப்புடுறோம்…” என்று சஞ்சு அலைபேசியில் ராதா – கிருஷ்ணன் தம்பதியரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

சஞ்சுவிற்கு உடல்நிலை சரியில்லாததால், அவர்களின் ‘லன்ச்’சை அடுத்த வாரம் தள்ளிவைப்பதாகக் கூறியதற்கு தான் சஞ்சு அவர்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாள்.

ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தி, அலைபேசியை வைத்துவிட்டு மற்ற இருவரையும் நோக்கி ஒரு பார்வை பார்க்க அவர்களோ, “அடுத்த வாரம் வர சொல்லி அவங்களே சொல்றாங்கல…” என்றனர்.

“ச்சு… அதுவரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது…” என்று தோளைக் குலுக்கி கொண்டாள்.

அப்போது ரஞ்சுவின் அலைபேசி தன் இருப்பை உணர்த்தியது. அதன் திரையில் இத்தனை மாதத்திற்குப் பின் அன்னையின் பெயர் ஒளிர, ஆச்சரிய ஆனந்தத்துடன் அழைப்பை ஏற்றாள்.

மகிழ்ச்சியான குரலில், “ஹலோ ம்மா…” என்று ரஞ்சு அழைக்க, அவளின் மகிழ்ச்சிக்கு அந்த பக்கத்திலிருந்து எந்த எதிர்வினையும் இல்லாது போக, மீண்டும் அன்னையை அழைத்தாள் ரஞ்சு.

“க்கும்… உன்கிட்ட பேசணும்… இப்போ கிளம்பி வா…” என்று கூறிவிட்டு அவளின் மறுமொழியைக் கூட எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டார் அவளின் அன்னை.

ரஞ்சுவிற்கு தான் எதுவுமே புரியவில்லை. நீண்ட நாட்கள் அழைக்காத தாய் அழைத்ததில் மகிழ்வதா, இல்லை இயந்திர குரலில் அவர் கூறிய செய்தியை புரிந்து கொள்ள முடியாமல் குழம்புவதா…

அழைப்பை ஏற்கும்போது அவள் முகம் வெளிப்படுத்திய பாவனையிலிருந்து, இப்போது குழப்பத்துடன் இருப்பது வரை அனைத்தையும் கண்ட அவளின் தோழிகள், என்னவென்று விசாரிக்க, அலைபேசி உரையாடலை கூறினாள்.

“எதுக்கு இப்படி உடனே கிளம்பி வர சொல்லணும்… அதுவும் இப்போ சொல்லி இப்பயே கிளம்பணுமா…” என்று சஞ்சு ஆரம்பிக்க, தர்ஷுவிற்கு கூட கோபம் வந்தது.

“நாம அங்க போறப்போ, எங்கயாவது கிளம்பி போயிட வேண்டியது… இப்போ வர சொல்ல வேண்டியது…” என்றாள் தர்ஷு.

“இப்படி திடீர்ன்னு சொன்னா, எப்படி கிளம்புறதாம்… ச்சே வரவர இவங்க உன் பேரண்ட்ஸ் தானான்னு டவுட் வருது…” என்று எரிச்சலில் சஞ்சு கூறிவிட, தர்ஷு தான் அவளை அடக்கி, ரஞ்சுவின் புறம் கண்களைக் காட்டினாள்.

ரஞ்சுவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தாயின் குரலிலிருந்த ஒட்டாத தன்மையை யோசிக்கும் போது, ஏனோ மிரட்சியாய் இருந்தது. மொத்த குடும்பத்தின் ஒதுக்கமும், மனம் வருந்தும் நிகழ்வுகள் நடக்கப்போவதை கட்டியம் கூற, எப்போதிலிருந்து இந்த ஒதுக்கம் என்று எண்ணிப் பார்க்க, பதில் தான் கிடைத்த பாடில்லை.

இந்த சிந்தனையில் இருந்ததால், மற்ற இருவரின் புலம்பல்கள் இவள் செவிக்குள் சென்றடையவில்லை.

அவளின் யோசனையைக் கலைப்பது போல, தர்ஷு அவளின் தோளைத் தொட, அதில் நிகழ்விற்கு வந்தவள் ஒரு முடிவுடன், “நான் ஊருக்கு கிளம்புறேன்…” என்றாள்.

அதைக் கேட்ட சஞ்சு, “என்ன ‘நீ’ன்னு சொல்ற… எல்லாரும் சேர்ந்து தான எப்பவும் போவோம்…” என்றாள்.

“இல்ல சஞ்சு… எதுக்கு உங்களுக்கும் அலைச்சல். நான் மட்டும் போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன்…” என்றாள் ரஞ்சு. இறுதி வார்த்தைகளை அவள் அழுத்திக் கூறும்போதே அவள் ஏதோ முடிவெடுத்து விட்டாள் என்பதை உணர்ந்த தர்ஷுவும் சஞ்சுவிடம் கண்களாலேயே ‘எதுவும் மறுத்துக் கூறாதே’ என்று ஜாடை காட்டிவிட்டு, ரஞ்சு கிளம்புவதற்கு உதவினாள்.

ஒருவேளை, ரஞ்சுவிற்கு அங்கு நடக்கப்போவதை முன்னரே அறிந்திருந்தால், தர்ஷு சஞ்சுவை தடுத்திருக்க மாட்டாளோ…

*****
சஞ்சீவ், அவனின் அறையில் தீவிர சிந்தனையில் இருந்தான். சஞ்சயின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தனக்குள்ளேயே ஆலோசித்துக் கொண்டிருந்தான்.

முதல் நாள் பார்வையிலேயே எட்டி நிறுத்திய ரஞ்சுவிடம், அடுத்த நாள் சாதாரணமாக உரையாடியது அவனிற்கு சந்தேகத்தையே கொடுத்தது. அதுவே சொல்லாமல் சொல்லியது, அவனின் அடுத்த குறி ரஞ்சு தான் என்று…

ரஞ்சுவை அவனிடமிருந்து காக்க வேண்டுமென்றால், அவனை விரைவாக இங்கிருந்து கிளப்ப வேண்டும் என்று முடிவெடுத்தவன், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று யோசனையில் மூழ்கியிருந்தான்.

அப்போது அவனின் அலைபேசி ஒலியெழுப்பி, அவனின் சிந்தனையைக் கலைத்தது. பழக்கமில்லாத எண்ணிலிருந்து வந்த அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவன், ஏதோ தோன்ற அதை ஏற்றிருந்தான்.

அந்த முனையில் ஒரு கரகரப்பான குரல் கேட்டது. “தம்பி, உனக்கும் உங்க அண்ணனுக்கும் ஒத்துப்போகாதாமே… அதப் பத்தி கொஞ்சம் பேசலாம். வரியா…” என்று மறுமுனையில் கூறப்பட, புருவம் சுருக்கி அந்த குரல் கூறியதை உள்வாங்கிக் கொண்டான்.

“என்ன தம்பி யோசிக்கிற… எதிரிக்கு எதிரி நண்பங்கிற முறைல, ஒரு நல்ல டீலிங்க்கு வருவோம்… என்ன சொல்ற…”

ஒரு பெருமூச்சுடன், “எங்க வரணும்…” என்று வினவினான்.

*****

“என்னங்கடா இவன் உடனே ஒத்துகிட்டான். அந்த ஆளு என்னமோ, ஒருத்தருக்கு ஏதாவதுன்னா இன்னொருத்தர் உயிரே தருவாங்கங்கிற ரேஞ்சுக்கு பில்ட்-அப் குடுத்தான்… தம்பி என்னன்னா, அண்ணன போட்டுத் தள்ள முதல் ஆளா டீலிங் பேச வரான்… ம்ம்ம் நான் சொன்ன மாதிரி என் திட்டம் பலிக்கப் போகுது… ரெண்டுல ஒன்ன தூக்கிட்டு, என்ன அவமானப்படுத்துன அவன் முன்னாடி கெத்தா நிக்கணும்…” என்று கனவு காண ஆரம்பித்தார் மிஸ்டர். காண்டாமிருகம்.

இவரின் கனவு பலிக்குமா… சஞ்சீவ், சஞ்சய்க்கு எதிராக இவர்களுடன் கூட்டு சேர்வானா… ரஞ்சுவின் குடும்பம் அவளிற்கு வைத்திருக்கும் பூகம்பம் என்ன…

தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 ஹாப்பி சண்டே... சில தவிர்க்க முடியாத காரணங்களால், (நான் ரொம்ப டென்ஷனா இருந்தேன்... அதான் அந்த காரணம்...😐😐😐) வெள்ளியன்று சஞ்சு ப்ரோஸ கூட்டிட்டு வர முடியல... அதான் இன்னைக்கு வந்துட்டேன்...😁😁😁 இன்னைக்கு ஒரு சஸ்பென்ஸ் ரிவீல் பண்ணியாச்சு... சஞ்சுவ தவிர யாரும் அதை கெஸ் பண்ணல...😜😜😜 என்னன்னு கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க...😉😉😉 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பிரெண்ட்ஸ்...😍😍😍

24216
காதல் 9

தர்ஷு மற்றும் சஞ்சு, ரஞ்சுவுடன் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர். இன்னும் கூட சஞ்சு முணுமுணுத்துக் கொண்டே தான் இருந்தாள்.

“ப்ச் இந்த நேரம் பாத்து எங்க அம்மாவும் ஊர்ல இல்ல, மலர் ஆன்ட்டியும் இல்ல… நீ எப்படி தனியா… ப்ச்… நான் வேணா இப்பவே அம்மாக்கு கால் பண்ணி வர சொல்றேன்…” – என்று சொல்லிக் கொண்டிருந்த சஞ்சுவின் பேச்சை இடைவெட்டிய ரஞ்சு, “நான் போய் என்னன்னு பாத்துட்டு சொல்றேன் சஞ்சு. தேவையில்லாம எதுக்கு அவங்கள அலைய வைக்கணும்…” என்றாள்.

இப்போது அவளின் மனம் சற்று சமன்பட்டிருந்தது. நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள்.

“பஸ் ஏறிட்டேன்ல… நீங்க எதுக்கு வெயிட் பண்றீங்க… ரெண்டு பேரும் கிளம்புங்க…” என்று ரஞ்சு கூற, பேருந்து கிளம்பியதும் தான் செல்வோம் என்று மறுத்து விட்டனர் இருவரும்.

அப்போது தான் ரஞ்சுவிற்கு ராதாவின் வீட்டிற்கு மதிய உணவிற்கு செல்வதாக வாக்களித்தது நினைவிற்கு வந்தது. இருவரிடமும் அதைப் பகிர, அவர்களோ அவளில்லாமல் செல்லப்போவதில்லை என்று சொல்லிவிட்டனர்.

“ப்ச்… நான் வரலைன்னா என்ன… நமக்காக அவங்க வெயிட் பண்ணுவாங்க… மார்னிங் நீ வேற அவங்க கிட்ட கண்டிப்பா வருவோம்னு சொல்லிருக்க… செஞ்சதெல்லாம் வேஸ்ட்டாகுறது ஒரு பக்கம் இருந்தாலும், அவங்க காத்திருப்ப ஏமாத்துற மாதிரி இருக்காதா… இப்போ இங்கயிருந்து நேரா அவங்க வீட்டுக்கு தான் போறீங்க…” என்று பேசிப் பேசி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தாள்.

அவர்களும் அரைமனதாகவே சம்மதித்தனர். என்ன தான் குடும்ப விஷயம், அதனால் ரஞ்சு தனியே செல்வது தான் சரியாக இருக்கும் என்று வெளியே சொன்னாலும், தர்ஷுவிற்கும் ஏனோ மனம் அலைப்பாய்ந்தது உண்மையே.

பேருந்து கிளம்ப, இருவரும் ரஞ்சுவிடம் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி விடைபெற்றனர், அன்றைய இரவே அடித்து பிடித்து ஊருக்கு செல்லப்போவதை அறியாமல்…

*****

சஞ்சீவ் அவனின் மகிழுந்தில் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவன் மனதில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்க, ஒரு மூலையில் தான் செய்வது சரி தானா என்றும் யோசித்துக் கொண்டிருந்தான்.

இப்படி யாரோ ஒருவன் அழைப்பு விடுத்து வர சொல்ல, தானும் அவனை நம்பி அங்கே செல்வது முட்டாள்தனமாகப் பட்டாலும், ஏதோவொன்று அவனை அங்கு அழைத்துச் சென்றது என்று தான் கூற வேண்டும். இல்லையெனில், தன் அண்ணனிற்கு தெரியாமல், ஏன் வந்ததிலிருந்து அவனுடனே சுற்றும் நண்பனிற்கு கூட தெரியாமல் செல்வானா.

சஞ்சு மற்றும் ரஞ்சு இருவருமே ஒரே வழித்தடத்தில் சென்று கொண்டிருக்க, அவர்களின் வாழ்வை மாற்றப் போகும் நிகழ்வை விதி அங்கு தான் நடத்தப்போகிறது என்பதை இருவருமே அறியவில்லை.

*****

அவள் எப்போதும் இறங்கும் நிறுத்தத்தில் இறங்கியவள், தன் கண்களை சுழலவிட்டாள். இங்கிருந்து தன் அப்பாவுடன் உற்சாகமாக கதைகள் பல பேசியபடி சென்றதெல்லாம் முன்னொரு காலத்தில் நடந்ததைப் போன்று தோன்றியது. தான் பேசுவதற்கெல்லாம் பதில் பேசாவிட்டாலும், எப்போதும் ஒரு புன்னகையுடன் அவளை கூட்டிச்செல்வதே அவளிற்கு போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போதோ அவரைக் கண்களால் கண்டே பல மாதங்களாயிற்று.

ஒரு பெருமூச்சுடன் தன் பயணப்பொதிகளை சுமந்து கொண்டு, தன் வீடு நோக்கி நடந்தாள்.

அவள் இறங்கியதும், சவாரிக்காக ஆட்டோக்காரர்கள் அவளை வட்டமிட, ஏனோ நடந்து செல்ல வேண்டும் என்று தோன்றியதால், அவர்களை மறுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள். அவளின் மனம் எப்போதும் போல தன் குடும்ப சூழல்களை அலசிக் கொண்டிருந்தது.

விஸ்வநாதன் – கமலா இருவரும் மருத்துவர்கள் என்பதால் ஒருவித பரபரப்புடனே காணப்படுவர். அவர்களுக்கு மகள்களிடம் ஆற அமர்ந்து பேச நேரமே கிடைக்காது. அதனால் அந்த குடும்பத்தில் ஒட்டுதல் என்பது அவ்வளவாக இருக்காது.

சாதாரண நாட்களில் தான் இப்படி என்றால், ஏதாவது விழாவிற்கு கூட இருவரில் ஒருவர் தான் சென்று வருவர். அவர்களின் வேலை அப்படி… மகள்களை பெரும்பாலான விழாக்களிற்கு அழைத்துச் செல்வது கூட இல்லை. ரஞ்சு மற்றம் அவளின் தங்கை சுபத்ராவிற்கு அவர்களின் உறவினர்கள் யாரும் நினைவில் கூட இருக்க மாட்டார்கள்!

காலையில் நேரமே சென்று விட்டால், கணவனும் மனைவியும் இரவு எப்போது வீடு திரும்புவர் என்பது அவர்களுக்கே தெரியாது… ரஞ்சு கல்லூரி செல்ல ஆரம்பித்ததிலிருந்து அவளும் விடுதியில் தங்கி படிக்கிறாள். சுபத்ரா பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியை அதே ஊரில் தொடர் விரும்பியதால், அவள் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு செல்வாள்.

கல்லூரி சேரும் போது, ரஞ்சுவும் இங்கயே படிப்பதாக சொன்னபோது, இதே சுபத்ரா தான் அவளை வெளியூரில் தங்கி படிக்குமாறு கூறியது. அதற்கு அவள் கூறிய காரணம் இப்போதும் கூட ரஞ்சுவிற்கு விரக்தி சிரிப்பை வரவழைத்தது.

“உங்களுக்கு எப்பவும் அவ தான் செல்லம்… அவ அது நல்லா பண்றா… இது நல்லா பண்றா… அவள பாத்து கத்துக்கோ… இப்படி எப்பயும் அவள தான் தல மேல தூக்கி வச்சு கொண்டாடுறீங்க… கொஞ்ச நாள், அவ பக்கத்துல இல்லனா தான் என்னோட அருமை தெரியும்…” என்று சுபத்ரா கூறியதற்கு, அன்று அவளின் பெற்றோர்கள் இருவரும் அவளைத் திட்ட, அவளின் பார்வையோ ரஞ்சுவின் மேல் வஞ்சமாக பதிந்தது.

அதை பெற்றோர்கள் பார்க்கவில்லை என்றாலும் ரஞ்சு பார்த்தாள். சிறிது நாட்கள் விலகி இருக்கலாம் என்று முடிவு செய்தவள், அவளே தான் வெளியூர் சென்று படிப்பதாக கூறினாள்.

இதைக் கேட்ட சஞ்சு மற்றும் தர்ஷு சுபியின் செயலில் எரிச்சல் அடைந்தாலும், அவர்களும் ரஞ்சுவுடன் படிக்கப் போவதாக கூற, ‘த்ரீ ரோசஸ்’ கேங் இன்று வரை பிரியாமல் இருக்கிறது.

சிறிது நாட்கள் விலகி இருக்கலாம் என்று நினைத்த ரஞ்சு, அடுத்தடுத்து வந்து சென்ற நாட்கள் தான் அதை உணர்ந்தாள்… எப்போதும் ஒட்டுதல் இருக்காது தான் என்றாலும், அவள் விடுதி சென்ற பிறகு, ஏனோ விலகுதலை அதிகமாக உணர்ந்தாள்.

அதுவும் கடந்த ஓராண்டாகவே சுபியின் ஏளன பார்வையை சந்தித்து வருகிறாள். இப்போது யோசிக்கும்போது, ஓராண்டாக தான் அன்னையும் அவளிடம் சரியாக பேசவில்லை என்றும் அவளின் மனதிற்கு பட்டது.

ஒரு பெருமூச்சுடன், தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை சந்திக்க சற்று தயாராகியே சென்றாள்.

*****

அலைபேசியில் அவர்கள் கூறிய இடத்திற்கு வந்தான் சஞ்சீவ். பழைய குடவுன் போன்ற இடம் அது. (அதே வில்லன் பிளேஸ் தான்) சுற்றிலும் ஆராய்ந்தவாறே உள்ளே நுழைந்தான்.

அவன் வந்ததை கண்டுகொண்ட மிஸ்டர். காண்டாமிருகம், “வாங்க சஞ்சீவ்… பரவாலையே சொன்ன நேரத்துக்கு சரியா வந்துட்டீங்களே…” என்று சிரித்துக் கொண்டே கூறினாலும், அவரின் நக்கல் குரலில் கலந்திருந்ததை சஞ்சீவும் கண்டுகொண்டான்.

‘இவருக்கு இருக்க நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…’ என்று புலம்பியது லோகேஷ் தான்.

சஞ்சீவ் எதுவும் கூறாமல் அவரையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வை எதிரிலிருப்பவருக்கு அசௌகரியமாக இருந்தது போலும்… “என்ன தம்பி பாத்துட்டே இருக்கீங்க… உள்ள வாங்க…” என்று அழைத்தார். அவனும் பார்வையை மாற்றாமல் உள்ளே சென்றான்.

அங்கு அவர்களுக்குக்கான மேஜை போடப்பட்டிருக்க, அதில் அமர்ந்தனர் இருவரும்.

“தம்பி, என் பேரு அருணாச்சலம்.” என்று மிஸ்டர். காண்ட்ஸ் அறிமுகப்படுத்திக்கொள்ள, சஞ்சீவோ வெறுமனே தலையசைத்தான்.

அவன் தன் பெயரைக் கூறுவான் என்று எதிர்பார்த்தவருக்கு சற்று அவமானமாக தான் இருந்தது. மனதிற்குள், ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் என்ன அவமானப்படுத்துனான்… இப்போ இவன்… பண்ணுங்க டா பண்ணுங்க… உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு…’ என்று வீராப்பாக சபதம் போட்டுக் கொண்டார்.

லோகேஷ் தான் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டான், அருணாச்சலத்தின் முகம் போன போக்கை கண்டு…

இந்த சம்பவம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே, அங்கிருப்பவர்களை அளவிட்டுக் கொண்டான் சஞ்சீவ். திடகாத்திரமாக நால்வர் இருந்தனர். அருணாச்சலத்தின் அடியாட்கள் போலும்… அவர்களைத் தவிர்த்து லோகேஷ் மற்றும் அருணாச்சலம்… அவனுடன் சேர்த்து மொத்தம் எழுவர் இருந்தனர் அந்த இடத்தில்.

மனதிற்குள் அவன் ஒரு கணக்கை போட, இவர்களை ஆட்டுவிக்கும் விதியோ, அவனும் தீர்க்கப்படாத கணக்கை காட்டவே அவனை இங்கு அழைத்து வந்திருக்கிறது என்பதை அவன் அறியவில்லை…

ஒரு பெருமூச்சுடன், “என்கூட என்ன பேசணும்னு வர சொன்னீங்களோ, அதப் பத்தி பேசலாமா…” என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.

அவரோ சுதாரித்துக் கொண்டு, “ஹான் அது தான் தம்பி, உங்க அண்ணா கூட உங்களுக்கு சண்டையாமே… அதான் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து… உங்க அண்ணாக்கு எதிரா… அண்ணாவ எதிர்த்து…” என்று முதலில் நன்றாக ஆரம்பித்தவர், அவனின் பார்வையில் திக்கினார்.

“அதாவது என் அண்ணன போட்டுத் தள்ளுறது… அதான உங்க பிளான்…” என்றான் பொருள் விளங்கா குரலில்…

அவனின் இந்த வெளிப்படையான பேச்சில், எந்த பக்கம் தலையாட்டுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார் அருணாச்சலம்.

“அது தம்பி…” என்று மேலும் ஏதோ பேச வர, அமர்ந்திருந்த நாற்காலியை உதைத்து தள்ளி எழுந்தவன், “எங்கள என்னன்னு நெனச்சீங்க… நாங்க ரெண்டு பேரும் எப்படி வேணா அடிச்சுக்குவோம்… அதுக்குன்னு மத்தவங்கள அடிக்கவிட்டு வேடிக்கை பாப்போம்னு இல்ல… புரிஞ்சுதா… இப்போ நான் வந்தது கூட, அவனுக்கு அப்படி யாரு அந்த எதிரின்னு தெரிஞ்சுக்க தான்… ரொம்ப நாள் அவனுக்கு யாரோ குடைச்சல் குடுத்துட்டு இருக்காங்களாமே… அதான் யாருன்னு பாக்கலாம்னு வந்தேன்…” என்றான் நக்கல் சிரிப்புடன்.

அவன் தோரணையில் சற்று அதிர்ந்த அருணாச்சலம், தன் ஆட்களைக் கண்டு நிம்மதியுற்றவராக, “என்ன தம்பி, ரொம்ப எகுருறீங்க… நீங்க இருக்குறது என் இடம்… இதோ நாலு பேரு இருக்கானுங்க… நீங்க ஒத்த ஆளு… இதென்ன சினிமாவா… ஒருத்தன் நாலு பேர அடிக்க…” என்று கிண்டலாக வினவினார்.

அவர் கூறிய நால்வரை ஒரு பார்வை பார்த்தவன் கோணல் சிரிப்புடன், “சரியா தான் சொல்றீங்க… இது சினிமா இல்ல தான்… என்னால ஒரே நேரத்துல நாலு பேர அடிக்க முடியாது தான்… ஆனா, சமாளிக்க முடியும்… ப்ச் என்ன இந்நேரம் நான் இங்க வந்த தகவல் அவனுக்கு போயிருக்கும்… நீங்க என்ன வெல்கம் பண்ணி, உங்க பேர சொல்லின்னு நிறைய டைம் வேஸ்ட் பண்ணிட்டீங்க அருணாச்சலம்… இப்போ பாருங்க அவன் வந்துட்டே இருக்கான்… நானாவது கொஞ்சம் இரக்க குணம் உள்ளவன்… அவன் வந்தா இங்க யாரும் உயிரோடவே போக மாட்டீங்க…” என்றான் சஞ்சீவ்.

உள்ளுக்குள் அச்சம் தோன்றினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “என்ன டா பயமுறுத்துறியா… வர சொல்லு டா உங்க அண்ணனையும்… ரெண்டு பேரையும் எதுக்கு தனி தனியா போட்டுக்கிட்டு… ஒரேடியா ஜோலிய முடிச்சுடுவோம்…” என்றார் வீராப்பாக…

“த்சு.. இப்போ கூட உங்க ஆளுங்கள என்ன அடிக்க சொல்லியிருக்கலாம்… ஹ்ம்ம் இந்த வில்லனுங்களே சம்டைம்ஸ் காமெடியனா போயிடுறாங்க…” என்று அவரைப் பார்த்து கேலியாக கூறினான் சஞ்சீவ்.

அதில் கோபம் அடைந்த அருணாச்சலம், தன் ஆட்களில் ஒருவனிற்கு கண்ணை காட்ட, அவனும் பின்னிலிருந்து சஞ்சீவை தாக்க வந்தான். ஆனால், சஞ்சீவோ முன்னரே அருணாச்சலத்தின் கண்ணசைவின் மூலம் இந்த தாக்குதலை உணர்ந்தவன் சற்று குனிந்து அதிலிருந்து தப்பியவன், அந்த அடியாளின் கைகளை பின்னால் மடக்கி, அவன் கால் முட்டியின் பின்பகுதியை காலால் உதைத்து அவனை மண்டியிட செய்து, கழுத்தை லேசாக திருப்பினான்.

இவையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்க, இப்போது அருணாச்சலத்திற்கு வியர்க்க ஆரம்பித்தது.

“இதோ காமெடியன்னு சொல்லி வாய மூடல, அதுக்குள்ள இப்படி ஒரு பிளான்… எப்படியெப்படி நீங்க கண்ணால சொல்றத உங்க ஆளுங்க கேப்பாங்களா… அப்படி கண்ணால பேசுறதையாவது ரகசியமா பேசித் தொலையுறீங்களா… ஹ்ம்ம் ஒரு நல்ல புத்தியுள்ள வில்லன்னா என்ன பண்ணிருக்கணும், எல்லாரையும் ஒண்ணா தாக்க சொல்லிருக்கணும்…” என்று அருணாச்சலத்திற்கு ‘கிளாஸ்’ எடுத்துக் கொண்டிருக்க, அவரின் மற்ற அடியாட்களோ வாயைப் பிழந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

“டேய் லூசுப்பயலுங்களா… அவன் பேசிட்டு இருக்கான்னு, நீங்களும் வாயப்பொழந்து பாத்துட்டு இருக்கீங்க… போடுங்க டா அவன…” என்று கத்தினார் கடுப்பான காண்ட்ஸ்…

பிறகென்ன அங்கிருந்த பொருட்கள் உடைய, ஒரு அதிரடி சண்டை காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. சிறு வயதிலிருந்தே தற்காப்பு கலை பயின்றதால், சஞ்சீவ் மூவரையும் நன்றாகவே சமாளித்தான்.

சண்டையில் இருவரை வீழ்த்தியவனின் செவியில் அந்த குரல் ஒலிக்க, அவனின் மூளையோ சற்று நேரம் ஸ்தம்பித்து தான் விட்டது. அந்த ஒரு நொடி தடுமாற்றத்தை பயன்படுத்திக் கொண்ட அருணாச்சலத்தின் அடியாள் அவனை மண்டையில் இரும்பு கம்பி கொண்டு தாக்க, தலையிலிருந்து ரத்தம் வழிய கீழே சரிந்தான் சஞ்சீவ்.

அதே நேரம், வெளியில் சில மகிழுந்துகளின் சத்தம் கேட்க, உஷாரான அருணாச்சலம் அங்கிருந்து வேறு வழியில் தப்பித்து சென்றார்.

*****

ரஞ்சு தன் வீட்டில் நுழைந்த போதே ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள். கதவைத் திறந்து உள்ளே சென்றவள் கண்டது, பெரிய பெரிய பைகளை நடுகூடத்தில் அடுக்கி வைத்திருந்ததை தான்.

‘வீடு காலி பண்றங்களா… அதான் என்னையும் வர சொன்னாங்களா…’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கமலாவிடம் பேசியவாறு வெளியே வந்தாள் சுபத்ரா.

வாசலில் ரஞ்சுவைக் கண்டதும் ஒரு நக்கல் சிரிப்புடன், “வந்துட்டா உங்க தத்து பொண்ணு… ஹ்ம்ம் சீக்கிரம் சொல்லிட்டு கூப்பிடுங்க கிளம்பலாம்… அதுவரைக்கும் என் ரூம்ல இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்குள் சென்று விட்டாள்.

எப்போதும் இப்படி அவள் பேசும்போது கண்டிக்கும் தாயும் தந்தையும் அமைதியாக இருக்க, அதுவே சுருக்கென்றிருந்தது ரஞ்சுவிற்கு. அப்போது தான் சுபி கூறியது அவளின் மூளைக்குள் சென்றது.

‘தத்து பொண்ணா… நானா… என்ன சொல்றா இவ… என் காதுல சரியா தான் விழுந்துச்சா…’ என்று குழம்பியவள், பெற்றோரின் முகம் பார்க்க, இருவரின் முகமும் இறுகியிருந்தது.

மூளைக்குள் சென்ற விஷயம் சிறிது குழப்பினாலும், சிறிது நேரத்திலேயே விழித்துக் கொண்டது அவளின் மூளை. இத்தனை நாட்களாக அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கான காரணம் அவளிற்கு தெரிந்து விட்டது. ஆனால், அப்படி தெரிந்த விஷயம் தான் உவப்பாக இல்லை.

‘அப்போ நான் அவங்க பொண்ணு இல்லயா… இத்தன நாள் இத மறைச்சுட்டாங்களா… சின்ன வயசுலயிருந்து அது தெரியாம தான நல்லபடியா வளர்த்தாங்க… இப்போ என்ன…’ என்று மனது விம்மியது ரஞ்சுவிற்கு…

அதிர்ச்சி பாதி கவலை மீதியென உணர்ச்சி குவியலில் இருந்தவள், அவளின் முகம் காட்டும் பாவனைகளைக் கண்டும் அமைதியாக… இல்லை இல்லை இறுக்கமாக அமர்ந்திருந்த பெற்றோரைப் பார்த்து, “ஏன்..?” என்று ஒரு வார்த்தையில் அவளின் மொத்த உணர்வுகளையும் கொட்டினாள்.

‘ஏன் இத முன்னாடியே எனக்கு சொல்லல..?’
‘இப்போ மட்டும் ஏன் இத சொல்றீங்க..?’
‘இத்தன நாள் இல்லாம இப்போ மட்டும் ஏன் என்ன விலகி போறீங்க..?’
‘ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது..?’
இவையனைத்தும் அவள் கேட்க தான் நினைத்தாள், ஆனால், அவளின் குரல் அதற்கு ஒத்துழைக்க மறுக்க, ஒற்றை வார்த்தையில் தன் கேள்விகளை சுருக்கிக் கொண்டாள்.

ஒரு பெருமூச்சுடன் கமலா பேசத் துவங்கினார்.

“ஆமா, நாங்க தத்தெடுத்து பொண்ணு தான் நீ… நீ பிறந்தப்போவே, உங்க அம்மா உன்ன எங்ககிட்ட குடுத்துட்டாங்க… எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு… ஆனா, ஏனோ சுபிக்கும் உனக்கும் ஒத்துவரல… நாங்களும் கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் சரியாகிடும்னு நெனச்சோம்… ஆனா, அது எப்பவும் சரியாகாதுன்னு எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு… எங்களுக்கு ‘எங்க’ பொண்ணு தான் முக்கியம்… அதான் இப்போ நாங்க இந்த ஊர விட்டே போகலாம்னு முடிவு பண்ணிருக்கோம்…” என்று மின்னாமல் முழங்காமல் ரஞ்சுவின் தலையில் இடியை இறக்கினார்.

தான் அவர்களின் தத்துப் பெண் என்பதிலேயே அதிர்ச்சியில் உறைந்தவள், அடுத்தடுத்து அவர் கூறியவற்றை ஜீரணிக்க கூட முடியாமல், அப்படியே கீழே அமர்ந்துவிட்டாள்.

அவளின் நிலை கண்டு அந்த இறுக்கமானவர்களுக்கும் பரிதாபம் எழுந்ததோ, “உன்ன அப்படியே விட்டுட்டு போற அளவுக்கு நாங்க கல் நெஞ்சக்காரவங்க கிடையாது… உன் பேர்ல இருக்க அக்கவுண்ட்ல அஞ்சு லட்சம் டெபாசிட் பண்ணிருக்கோம்… உனக்குன்னு சேர்த்து வச்ச நகை பேங்க்ல இருக்கு… அது போக இந்த வீட்ட கூட உன் பேர்ல மாத்தி எழுதியாச்சு… அதுக்கான பத்திரம் இதோ…” என்று அவள் கைகளில் எதையோ திணித்தார் கமலா.

அதைக் கண்டவள் விரக்தியாக சிரித்துக் கொண்டாள். ஒரே நாளில் எத்தனையை தான் அவள் தாங்குவாள்… இத்தனை நாள் யாரை அம்மா, அப்பா என்று அழைத்தாளோ, அவர்கள் அவளின் பெற்றோர் இல்லை. எப்போதும் முறைத்துக் கொண்டே திரிபவள், அவளின் சொந்தத் தங்கையும் இல்லை. அது மட்டுமில்லாமல், இத்தனை நாட்கள் ஒன்றாக வாழ்ந்த வீட்டில், இன்று அவளை மட்டும் விட்டுவிட்டு இதோ அனைவரும் கிளம்பிச் செல்லப் போகின்றனர்.

இவ்வளவு பேசியவர்கள், அவர்கள் எங்கே செல்கின்றனர் என்பதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. சொன்னால், ஒரு நாள் தேடி வந்துவிடுவாளோ என்ற பயமாக இருக்கலாம்… இவையே ரஞ்சுவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. அவள் எங்கு அமர்ந்தாளோ, அதே இடத்தில் இருந்து எதிரில் மாட்டப்பட்டிருந்த போஸ்டரில் பார்வையை பதித்திருந்தாள்.

‘லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் சர்ப்ரைஸஸ்’ என்ற வாசகம் அதில் எழுதியிருக்க, ரஞ்சுவின் மனமோ, ‘ஆமா… பல கசப்பான சர்ப்ரைஸஸ் நிறைஞ்சது தான் லைஃப் போல…’ என்று எண்ணிக் கொண்டது.

அப்போது வெளியே வந்த சுபி, “பேசியாச்சா… கிளம்பலாமா…” என்றாள்.

ரஞ்சு அவளை நிமிர்ந்து பார்க்க கூட இல்லை. அவளை மட்டுமல்ல யாரையும் பார்க்கவில்லை. பார்த்தால், எங்கு அவர்களை செல்ல வேண்டாம் என்று கதறி விடுவோமோ என்ற பயத்தில் இருந்தாள். அப்படி அவர்களை இழுத்துப் பிடிக்கவும் அவள் விரும்பவில்லை. ‘என்ன வேணாம்னு சொல்றவங்க எனக்கும் வேணாம்…’ என்ற வீம்பும், தனிமை பயமும் மாறி மாறி அவளை வாட்ட ஆரம்பித்தது.

அவள் தங்களை பார்ப்பாள் என்று சிறிது நேரம் காத்திருந்தவர்களோ, “நாங்க கிளம்புறோம்…” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

மௌனமாக கண்ணீர் வடித்தாள் பெண்ணவள். அப்போது அவளின் அருகில் நிழலாட கண்களை மட்டும் உயர்த்தி யாரென்று பார்த்தாள்.

அங்கு விஸ்வநாதன் கண்களில் ஒரு பரிதவிப்புடன் நின்று கொண்டிருந்தார். இத்தனை நாள் மகளாக பாவித்து வளர்த்து வந்தவளை தனியே விட்டுச் செல்கிறோம் என்ற கவலையாக இருக்கும்…

‘அட்லீஸ்ட் இவராவது கொஞ்சம் ஃபீல் பண்றாரே…’ என்று எண்ணிக் கொண்டாள் ரஞ்சு.

“சாரின்னு ஒரு வார்த்தைல சொல்லிட முடியாது… உன்ன நான் கையில வாங்குனப்போ, இப்படி பாதில விட்டுட்டு போவேன்னு நெனைக்கல… ஹ்ம்ம்… நீ எப்பவும் நல்லா இருக்கணும் டா… உன் பிரெண்ட்ஸ் உன்ன பாத்துபாங்க… அவங்க கூடவே இரு…” என்று அவளின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்.

பின் என்ன நினைத்தாரோ, “உன் அம்மாவ பத்தி தெரிஞ்சுக்கணும்னா, மாடில இருக்க ஸ்டோர் ரூம் பரண் மேல ஒரு பாக்ஸ் இருக்கும்… அதப் பாத்து தெரிஞ்சுக்கோ டா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியே சுபியிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.

“கேர்ஃபுல்லா இரு டா… தனியா இருக்காத… இனிமேலாச்சும் உன் லைஃப்ல நிரந்தரமான ஒரு சொந்தம் உருவாக என் மனசார கடவுள வேண்டிக்குறேன்…” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அவர் கூறியவை அனைத்தும் செவி வழி சென்று மூளையின் ஒரு பாகத்தில் சேமிக்கப்பட்டது. ஆனால், அதை சிந்தித்துப் பார்க்கும் அளவிற்கு இப்போது அவளிற்கு தெம்பில்லை. அதே இடத்தில் விச்ராந்தியாக படுத்துவிட்டாள்.

*****

“ஜீவ், உன்ன பாத்து எவ்ளோ நாளாச்சு…” என்ற குரலில் தூக்கிவாரிப்போட மயக்கத்திலிருந்து விழித்தான் சஞ்சீவ்.

தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 ஹாப்பி ஃப்ரைடே... நாளே முடியப்போகுது, இப்போ வந்த வாழ்த்துறான்னு நீங்க நினைக்குறது புரியுது...😁😁😁 எப்படியோ 12 மணிக்கு முன்னால போஸ்ட் போட்டுட்டேன்னு நினைக்கும்போது கொஞ்சம் ஹாப்பி தான்...😉😉😉 படிச்சுட்டு எப்பவும் போல உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க...😊😊😊

24361

காதல் 10

சஞ்சய் அவன் அறையிலுள்ள ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தான். அவர்களின் வீட்டை சுற்றி, ஓங்கி உயர்ந்த மரங்கள் நிரம்பியிருப்பதால், அந்த இடத்தின் தட்பவெப்பநிலை எப்போதுமே மிதமாகவே இருக்கும். தொழிலுலகில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து, இப்போது தான் இப்படி ஆற அமர்ந்து இயற்கையை ரசிக்குமளவிற்கு சஞ்சய்க்கு நேரமிருக்கிறது. இல்லையென்றால், எப்போதும் காலில் சக்கரம் கட்டிவிட்டது போல, அவர்களின் ஒவ்வொரு தொழிலையும் கவனிக்கவே அவனிற்கு நேரம் போதாது.

இப்படி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் அந்த காட்சியில் நிலைத்தது. அந்த ஜன்னலுக்கு வெகு அருகிலிருந்த மரத்தின் கிளைகளில் இருந்த அந்த குருவிக் கூட்டில் தாய் குருவி தன் குட்டிகளுக்கு உணவை ஊட்டும் காட்சியே அது.

அதைக் கண்டவனின் நினைவுகள் தனது சிறு வயதை நோக்கி பயணிக்கத் துவங்கியது. தந்தை வெளியே செல்லும் நேரத்தில், தாயிடம் செல்லம் கொஞ்சி உணவுண்ணும் காட்சிகள் கண் முன்னே விரிந்து, அவர்கள் (சஞ்சய் மற்றும் சஞ்சீவ்) இழந்ததை பூதாகரமாகக் சுட்டிக் காட்டியது.

அவனைக் கடந்த காலத்தில் மூழ்க விடாமல் காக்கவே அறைக் கதவு தட்டப்பட்டது. அந்த சத்தத்திலேயே வந்தது கோகுல் என்று அறிந்து கொண்டான் சஞ்சய்.

உள்ளே வந்தவனின் முகத்திலிருந்த பதட்டைக் கவனித்தவன் புருவம் சுருங்க அவனைப் பார்க்க, கோகுலோ கையிலிருந்த அலைபேசியை சஞ்சயிடம் நீட்டினான்.

மறுமுனையில் என்ன தகவல் கிடைத்ததோ, இத்தனை நேரமிருந்த இளக்கம் மறைந்து வழக்கம் போல கடுமை அதனிடத்தில் குடிக்கொண்டது.

அலைபேசியை அணைத்தவன், “***** யாரு மேல கைய வைக்க பாக்குறாங்க… ******” என்று திட்டியவாறே வேகவேகமாக படிகளில் இறங்க, கோகுலோ அதே பதட்டத்துடன் அவனைத் தொடர்ந்தான்.

சஞ்சய் வேகமாக மகிழுந்தை இயக்க, “பாஸ்… ட்ரைவர்…” என்று கோகுல் இழுத்தான்.

“இப்போ அதுக்கெல்லாம் நேரமில்ல… லோகேஷுக்கு கால் பண்ணி ஸ்பீக்கர்ல போடு… அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு லைவ்வா தெரியணும்…” என்றவாறே மகிழுந்தை செலுத்திக் கொண்டிருந்தான்.

இவ்வாறு தான், சஞ்சீவ் – அருணாச்சலத்தின் சந்திப்பின் நேரலைக் காட்சிகள் சஞ்சயின் கவனத்திற்கு வந்தது.

‘எங்கள என்னன்னு நெனச்சீங்க… நாங்க ரெண்டு பேரும் எப்படி வேணா அடிச்சுக்குவோம்… அதுக்குன்னு மத்தவங்கள அடிக்கவிட்டு வேடிக்கை பாப்போம்னு இல்ல… புரிஞ்சுதா…’ – சஞ்சீவின் குரலில் ஒலித்த உறுதியில் சஞ்சயின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

பல ஆண்டுகள் கழித்து தம்பியின் குறும்புப் பேச்சுக்களை ரசித்தபடியே மகிழுந்தை செலுத்தினான்.

ஆனால், அந்த மகிழ்ச்சியை நீண்ட நேரம் நீடிக்கவிடாது, ‘அந்த’ குரல் அவனிற்கும் கேட்டது. சரியாக அந்த சமயம் தான் அருணாச்சலத்தின் இடத்திற்கு வந்தவன், மகிழுந்தை விட்டு கீழே இறங்கியிருந்தான்.

என்ன தான் அலைபேசி வழியாகக் கேட்டாலும், அந்த குரல், அதிலிருந்த உணர்வுகள்… அனைத்தும் மறக்கக்கூடியவையா…

சற்று அதிர்ச்சியுடன் உள்ளே சென்றவனிற்கு அடுத்த அதிர்ச்சியாக, சஞ்சீவின் தலையில் யாரோ ஒருவன் கம்பியால் அடிக்க, அவன் மயங்கி சரியும் நிகழ்வு சஞ்சயின் கண்முன்னே நிகழ்ந்தது.

ஒரு நொடியில் சுதாரித்தவன், கீழே விழுமுன் அவனைத் தாங்கிக் கொண்டு, அருகில் இன்னமும் அதிர்ச்சி குறையாமல் நின்றிருந்த கோகுலைக் கண்டு, “ஸ்டார்ட் தி கார்…” என்று கத்தினான்.

அப்போது அவர்கள் அருகில் வேகமாக வந்த லோகேஷ், “சாரி சார்… இப்படி நடக்கும்னு எக்ஸ்பெக்ட் பண்ணல… சார் நல்லா தான் ஃபைட் பண்ணிட்டு இருந்தாரு… அதான் நான் தள்ளியே நின்னுட்டேன்… திடீர்னு இப்படி…” என்று சொல்லிக் கொண்டிருந்தவனை முறைத்தான் சஞ்சய்.

“இப்படி வெட்டியா ரீசன் சொல்றதுக்கு தான் உங்கள ஹையர் பண்ணேனா…” என்று அடிக்குரலில் சீறினான் சஞ்சய்.

அவன் சீறலின் காரணத்தினாலோ, முழுவதுமாக மயங்கிடாத சஞ்சீவ், “அவன எதுக்கு திட்டுற ப்ரோ…” என்று முணுமுணுத்தான்.

அரை மயக்கத்தில் இருந்தவன், இயல்பாய் ‘ப்ரோ’ என்று அழைத்ததை உணராமல் இருக்கலாம். ஆனால், அவனின் இந்த அழைப்பிற்காக காத்திருந்தவனின் விழிகளோ பணிக்க ஆரம்பிக்க, அதை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைக்க, சஞ்சீவை தூக்கிக் கொண்டு அவர்கள் வந்த மகிழுந்தை நோக்கிச் சென்றான்.

அப்போது அங்கு வந்த காவல்துறையினரை சமாளிக்க லோகேஷை அங்கே விட்டுவிட்டு மற்ற மூவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

*****

“ஜீவ், உன்ன பாத்து எவ்ளோ நாளாச்சு…” என்ற குரல் மீண்டும் கேட்க மயக்கத்திலிருந்து சட்டென்று விழித்தான் சஞ்சீவ்.

அது கனவென்று கிரகிக்கவே சில நேரம் எடுத்தது சஞ்சீவிற்கு. அதற்குள் அவன் பதட்ட முகத்தைக் கண்ட சஞ்சயும் கோகுலும் அவனருகே வந்தனர்.

“என்னாச்சு சஞ்சு..? ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸா இருக்க..?” என்று சஞ்சய் வினவ, இருவரிடையே இருக்கும் பிணக்கு எல்லாம் பின்தங்கி போக, சஞ்ஜயை பதட்டத்துடனே நோக்கினான் சஞ்சீவ்.

அவனின் பார்வையில் தன்னிடம் தனியாக ஏதோ கூற விழைகிறான் என்பதை புரிந்து கொண்ட சஞ்சய், “கோகுல், டாக்டர பாத்து சஞ்சு முழிச்சுட்டான்னு சொல்லி கையோட கூட்டிட்டு வா…” என்றான்.

“ஓகே பாஸ்…” என்று வெளியே வந்த கோகுல், ‘ஹ்ம்ம் அண்ணனும் தம்பியும் ஏதாவது பேசணும்னா மட்டும் என்ன கழட்டி விட்டுடுவாங்க…’ என்று புலம்பியவன் அந்த மருத்துவமனை கேன்டீனிற்கு சென்றான்.

*****

“இப்போ சொல்லு என்னாச்சு சஞ்சு..?” என்று அவன் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டு சஞ்சய் வினவ, “ஷி இஸ் ஹியர்…” என்றான்.

அந்த ‘ஷி’ யாரைக் குறிக்கிறது என்பதை நன்கறிந்த சஞ்சய், “ஐ நோ தாட் சஞ்சு…” என்றான் அந்த அறையின் மூலையை வெறித்தப்படி.

சிறிது நேரம் அங்கு எந்த பேச்சும் இல்லை. இருவரின் முகமும் கசங்க, அந்த நொடி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவே தயங்கினர்.

பின் அந்த அமைதியைக் கலைத்தவனாக, “உன்னோட பிசினஸ்ல குளறுபடி பண்ணிட்டு இருக்குறவனுக்கு அவ ஹெல்ப் பண்றா… ஆனா, அந்த மெயின் ஆளு யாருன்னு என்னால கண்டுபிடிக்க முடியல…” என்றான் சஞ்சீவ்.

“ப்ச்… இத கண்டுபிடிக்க தான் இப்படி யாருகிட்டயும் சொல்லாம தனியா போனியா… கொஞ்ச பேர் இருந்ததால இதோட முடிஞ்சுது… இதுவே நெறைய பேர் இருந்துருந்தா… நீ இப்பவும் கேர்லெஸா தான் இருக்க சஞ்சு…” என்று கோபமாக ஆரம்பித்து சோர்வாக முடித்தான்.

“எவனோ ஒருத்தன் போன் பண்ணி, உன் அண்ணனுக்கு எதிரா பிளான் போடலாம் வான்னு கூப்பிட்டான். அதான் யாரு அந்த புதுசா முளைச்ச வில்லன்னு பாக்க போனேன்.. எப்படியும் என்ன கண்காணிக்க ஆளு வச்சுருப்பன்னு தெரியும்… நான் கிளம்புன கொஞ்ச நேரத்துலேயே உனக்கு தகவல் வந்துருக்கும்னும் எனக்கு தெரியும்…” என்று கூறிய சஞ்சீவை, இதழில் மலர்ந்த புன்னகையுடன் கண்டான் சஞ்சய்.

இது தான் சஞ்சீவ். அவனிற்கு கோபப்படவே தெரியாது. அப்படியே கோபம் வந்தாலும் சில மணி நேரங்களுக்கு மேல் நிலைக்காது. இத்தனை நாட்கள் அவன் இயல்பிலிருந்து விலகியிருந்ததற்கு கூட, ஒரு வகையில் தன் அண்ணனையும் நண்பனையும் விட்டு தனியே இங்கு வரவேண்டிய சூழலினால் தான். எப்போது இருவரும் சஞ்சீவைத் தேடி இங்கு வந்தனரோ, அப்போதே அவனின் கோபமும் சிறிது சிறிதாக தளர ஆரம்பித்தது.

சஞ்சீவ், சஞ்சயிடம் கோபப்பட்டு இந்தியா வந்திருந்தாலும், அவன் மனமோ சஞ்சயை சுற்றியே இருக்கும். சஞ்சயைப் பற்றிய விபரங்களை எப்போதுமே விரல்நுனியில் வைத்திருப்பான். இந்த விஷயத்தில் அண்ணனும் தம்பியும் மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல.

மீண்டும் சஞ்சீவே ஆரம்பித்தான். “திரும்பவும் அவ நம்ம வாழ்க்கைல குறுக்க வருவான்னு நான் எதிர்பார்க்கல…” என்று சஞ்சீவ் கூற, “ஹ்ம்ம் ஆமா சஞ்சு… நானும் இத்தன நாளா அவள தேடிட்டு தான் இருந்தேன்… நம்ம லைஃப்ல விளையாடினவள சும்மா விடுறதா… ஆனா, இப்போ வரைக்கும் அவள பத்தின எந்த தகவலும் கெடைக்கல…” என்றான் யோசனையுடன்.

“அதுவும் உன் பிசினஸுக்கு எதிரா…” என்று கூறத் துவங்கிய சஞ்சீவின் பேச்சில் குறுக்கிட்ட சஞ்சய், “அது ‘நம்ம பிசினஸ்’ சஞ்சு…” என்றான் அழுத்தமாக.

“ப்ச் ப்ரோ… இப்போ திரும்பவும் ஆரம்பிக்காத…” என்றான் சலிப்புடன்.

“அப்போ நம்ம பிசினஸ் பிடிக்காம தான் இந்தியாக்கு ஓடி வந்தியா சஞ்சு…” என்று அவனையே கூர்மையாக பார்த்துக் கொண்டு கேட்டான் சஞ்சய்.

“ஹும்… பதில தெரிஞ்சுக்கிட்டே கேள்வி கேக்குறியா ஜெய்…” என்ற சஞ்சீவிற்கு அப்போது தான் ரஞ்சுவின் நினைவு வந்தது.

“ஜெய்… ரஞ்சு… நாம ஹாஸ்பிடல் வர வழில அவள பாத்தோம்ல… மயக்கத்துல இருந்ததால எனக்கு சரியா தெரியல… ஆனா, எதுக்கு அவ ஊருக்கு போயிருக்கா…” என்று பேசிக் கொண்டிருந்த சஞ்சீவை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

அவனின் பார்வையை உணர்ந்த சஞ்சீவ், “ஜெய் நீ நெனைக்கிற மாதிரி ரஞ்சு தப்பான பொண்ணு இல்ல…” என்று மெல்லிய குரலில் கூறினான்.

“அப்போ நான் என்ன நெனைக்கிறேன்னு உனக்கு தெரியுதா சஞ்சு…” என்றான் சஞ்சய்.

சஞ்சீவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “உன் அமைதியே நீ என்ன செஞ்சுட்டு இருக்கன்னு உனக்கு சொல்லலையா சஞ்சு… இப்போ இருக்க சிஷுவேஷன்ல அந்த பொண்ணையும் இழுத்து விட்டுருக்க…” என்றான் கடுமையான குரலில்.

“இந்த மாதிரி ஆகும்னு நான் யோசிக்கல…” என்று சஞ்சீவ் முணுமுணுக்க, “யூ ஷுட் ஹாவ் தாட் அபௌட் இட் சஞ்சு…” என்று சஞ்சய் கூற, அதை ஆமோதிப்பது போல தலையசைத்துக் கொண்டான் சஞ்ஜீவ்.

“ஆனா… இப்போ ரஞ்சு எப்படி இருக்கான்னு பாக்கணும் ஜெய்… அவ ஏன் தனியா இங்க போயிருக்கான்னு தெரிஞ்சுக்கணும்…” என்று எழப் பார்த்த சஞ்ஜீவிடம், “ஆர் யூ கிட்டிங் சஞ்சு..? உனக்கு அடி பட்டுருக்குன்னு மறந்துட்டியா..?” என்றான் சஞ்சய் கண்டிப்பான குரலில்.

“ப்ச்… ப்ரோ நீ சொன்ன மாதிரி நான் தான் ரஞ்சுவ தேவையில்லாம நம்ம பிரச்சனைக்குள்ள இழுத்து விட்டுருக்கேன்… சோ அவ பாதுகாப்பு என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி…” என்றான்.

“ப்ச் சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா சஞ்சு…” என்றவன் சிறிது நேர யோசிப்பிற்கு பிறகு, “சரி, உனக்கு சரியானதும் நீ பாத்துக்கோ… பட் அதுவரைக்கும் ரெஸ்ட்ல தான் இருக்கணும்…” என்று திட்டவட்டமாக கூறி விட்டான் சஞ்சய்.

“அப்போ அதுவரைக்கும்…” என்று இழுத்த சஞ்சீவை முறைத்த சஞ்சய், “நான் பாத்துட்டு வரேன்…” என்றான் கோபமாக.

சஞ்சீவிற்கும் வேறு வழியில்லாததால் சஞ்சயின் முடிவிற்கு சம்மதித்தான். இருவரின் மனதும் ரஞ்சுவின் பாதுகாப்பிற்காக என்னென்ன செய்யலாம் என்று திட்டம் தீட்ட, விதியோ வேறு திட்டத்தை தீட்டியது. யாரின் திட்டம் பலிக்குமோ…

*****

கோகுல் வந்ததும், அவனிடம் சஞ்சீவைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, சஞ்சய் ரஞ்சுவைக் காண கிளம்பினான்.

அப்போது தான் சஞ்சீவ் கோகுலின் முகத்தைக் கண்டான். அவன் முகத்திலிருந்த குழப்பத்தைக் கண்ட சஞ்சீவ், “ஹே கோகி என்னாச்சு…?” என்று வினவ, நண்பனின் வெகு நாட்களுக்கு பின்னான ‘கோகி’ என்ற அழைப்பில் மனம் நெகிழ்ந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அடேய்… ஏன் டா ஏன்… இப்படி ஒரு பேர வச்சுட்டு, ஓயாம ‘கோகி’ ‘கோகி’ன்னு கூப்பிடுற…” என்று புலம்பினான்.

“இதெல்லாம் உனக்கு புதுசா என்ன…” என்று அந்த சூழலிலும் நண்பனை கலாட்டா செய்தவன், “உன் மூஞ்சில ஏதோ ஒளிவட்டம் தெரியுதே…” என்று வினவ, “ஹும் ஒருத்தன் அசிங்கப்பட்டா போதுமே, என்ன ஏதுன்னு கிளம்பிடுவீங்களே…” என்று முணுமுணுத்தவனும், சற்று முன்னர் நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தான்.

*****

கால் மணி நேரத்திற்கு முன்பு…

“இந்தியா வந்ததும் பொண்ணு பாத்து, அம்மாவுக்கு வேலைய குறைக்கலாம்னு பாத்தா இந்த அண்ணனும் தம்பியும் அத நடக்கவே விட மாட்டாங்க போலயே… கடைசி வரைக்கும் சிங்கிலாவே இந்த ‘சஞ்சு ப்ரோஸ்’ கூட சுத்துவேனோ…” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தவாறே அந்த மருத்துவமனை கேண்டீனை நோக்கி நடந்தான் கோகுல்.

கோகுல், சஞ்சய் மற்றும் சஞ்சீவின் குடும்ப நண்பர் அமர்நாத்தின் ஒரே மகன். இவர்களின் பாட்டனார் காலத்திலிருந்தே இரு குடும்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. தொழிலில் கூட, கடந்த சில வருடங்களுக்கு முன்வரை பங்குதாரர்களாக இருந்தனர்.

ஏனோ, சத்ய பிரசாத்திற்கு இந்த நட்பில் அவ்வளவு நாட்டம் இல்லை. மனிதர் அமர்நாத்திடம் முகம் கொடுத்து பேசுவது கூட, அவரும் தொழிலில் பங்குதாரராக இருந்த காரணத்தினால் தான்.

ஆனால், இவர்களின் அடுத்த தலைமுறை இவர்களைப் போலில்லாமல், நட்பில் இணைந்திருந்தனர். அதுவும் சஞ்சீவ் – கோகுல் இருவரும் இணைந்திருக்கும் நேரமெல்லாம், அந்த இடம் கலகலப்பாகவே இருக்கும். சஞ்சய் இவர்களுடன் இனைந்து ரகளை செய்யவில்லை என்றாலும் இவர்கள் செய்யும் கூத்துகளையெல்லாம் ரசித்துக் கொண்டிருப்பான்.

அமர்நாத் மற்றும் அவரின் மனைவி ஹெலன், அந்த குடும்பத்தில் சத்யாவைத் தவிர மற்ற மூவரிடமும் நன்றாக பழகுவர்.

கோகுலின் அன்னை ஹெலன், ஆஸ்திரேலியாவை சார்ந்தவர். அவருக்கு இந்தியா கலாச்சாரம் மிகவும் பிடித்துப் போனதால் தான் அமர்நாத்தை திருமணம் செய்து கொண்டார். மேலும், கோகுலிற்கு கூட இந்திய பெண்ணைத் தான் திருமணம் செய்து வைக்கப் போவதாக முன்பே கூறிவிட்டார்.

அந்த காரணத்திற்காக தான் கோகுல் இன்று வரை புலம்பிக் கொண்டிருக்கிறான்.

“மம்மி… அங்க ஆஸ்திரேலியால, லிண்டா, லீசான்னு எத்தனையோ பொண்ணுங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணாங்க… ஆனா, உனக்காக எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணேன்… இப்போ பாரு இவனுங்க கூட குப்பை கொட்டிட்டு இருக்கேன்…” என்று புலம்பியவனை, அந்த பணியாளர் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே அவனிற்கான தேநீரை வழங்கினார்.

அந்த கேன்டீனை சுற்றிப் பார்த்துக் கொண்டே (!!!) தேநீரை அருந்திக் கொண்டிருந்தான். வெகு நிதானமாக அருந்தியவன் மணியைப் பார்த்து, ‘இந்நேரம் அண்ணனும் தம்பியும் பேசி முடிச்சுருப்பாங்க… எதுக்கும் பாஸ் சொன்ன மாதிரி டாக்டர பாத்துட்டே போலாம்…’ என்று நினைத்தவன் நிமிர, அதே நேரம் அவனைக் கடந்து சென்றனர் இரு பெண்கள்.

முதலில் நடந்தவள் நிமிர்ந்து நடந்ததால் அவளின் முகத்தைக் கண்டவனால், அடுத்து சென்றவளின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

மூளையின் உந்துதலால், “எக்ஸ்க்யூஸ் மீ…” என்று அவளை அழைத்து விட்டான். ஆனால், அழைத்த பின்பு தான் அதை அவனே உணர்ந்தான்.

அந்த பெண்ணோ திரும்பி கேள்வியாக கோகுலைப் பார்க்க, அவளிடம் என்ன சொல்வதென்று ஒரு நொடி முழித்தான்.

அந்த ஒரு நொடியிலேயே எதிர்பக்கம் நின்றிருந்தவளின் பொறுமை குறைய, அது சுருங்கிய அவளின் புருவங்களில் தெரிந்தது.

அதைக் கண்டவன், ஏதாவது சொல்லியாக வேண்டும் என்பதால் வாய்க்கு வந்ததை கூற, அவளோ “இடியட்…” என்று திட்டிவிட்டு சென்றாள்.

‘நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி திட்டுறா…’ என்று மீண்டும் புலம்பியவாறே சஞ்சீவின் அறைக்கு வந்து சேர்ந்திருந்தான் கோகுல்.

*****

தான் திட்டு வாங்கிய கதையை சஞ்சீவிடம் கோகுல் கூற, அதில் சிரித்தவன், “அப்படி என்னத்த டா சொல்லி தொலைஞ்ச…” என்றான் சஞ்சீவ்.

“ஹ்ம்ம் ‘நீ குனிஞ்சுட்டே போனதால, உன் முகத்த சரியா பாக்கல… அதான் நிதானமா பாக்கலாம்னு கூப்பிட்டேன்’னு சொன்னேன்…” என்றான் பாவமாக.

“அந்த பொண்ணு ஏதோ நல்ல மூட்ல இருந்துருப்பா போல, அதான் திட்டுறதோட விட்டா…” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறினான் சஞ்சீவ்.

“ஹும்… எப்போ உங்க அண்ணா கூட வேலை பார்க்க ஆரம்பிச்சேனோ, அப்பயிருந்து எல்லாருக்கிட்டயும் பல்ப் வாங்கிட்டு இருக்கேன் டா… நல்லா கோர்த்து விட்டுருக்காரு டா எங்க அப்பா…” என்று கோகுல் கூற அவனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.

ரஞ்சுவின் தற்போதைய பாதுகாப்பை அண்ணனிடம் ஒப்படைத்ததால் உண்டான நிம்மதி தான் சஞ்சீவின் சிரிப்பிற்கான காரணமோ…

*****

ரஞ்சுவின் ஊருக்கு மகிழுந்தில் வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருந்த சஞ்சயின் மனமோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆனால், அலைபாய்தலின் காரணம் தான் சரிவர விளங்கவில்லை அவனிற்கு.

முகமறியா எதிரியின் திட்டங்கள், அதில் சஞ்சீவ் தாக்கப்பட்டது, வெகு நாட்கள் கழித்து சஞ்சீவுடன் இயல்பாக உரையாடியது, முக்கியமாக இத்தனை நாட்களில் அவன் தேடிய அந்த குரலுக்கு சொந்தக்காரி தன் எதிரியுடன் கைகோர்த்து தன்னை எதிர்க்க நினைப்பது என்று அன்றைய நாளின் நிகழ்வுகள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் யோசித்து மூளை சோர்வடைய, இப்போது ரஞ்சுவிற்காக மேற்கொள்ளும் அந்த பயணத்தினால் சிறிது எரிச்சலும் உண்டானது.

‘ப்ச் இந்த சஞ்சு தேவையில்லாம அந்த பொண்ண இதுல இழுத்து விட்டுருக்கான்… இது அவங்களுக்கு தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு தான் ஆபத்து…’ என்று யோசித்தவனிற்கு தெரியவில்லை, ஏற்கனவே அந்த ஆபத்து ரஞ்சுவை கட்டம் கட்டிவிட்டது என்பதை…

‘கூகிள் மேப்’பின் உதவியுடன் அவள் வீடிருக்கும் தெரு வரை வந்தவன், அதற்கு மேல் செல்லும் வழி தெரியாமல், அங்கிருந்தவர்களிடம் வினவினான்.

அவர்கள் அவனை மேலும் கீழும் பார்க்க, அந்த பார்வையையெல்லாம் உதாசீனப்படுத்தியவன், அவள் வீட்டை நோக்கி மகிழுந்தை செலுத்தினான்.

இவ்வளவு தூரம் வந்தவன், அந்த வீட்டிற்குள் செல்ல முதலில் தயங்கினான். ஆனால், சூழ்நிலையை உணர்ந்து கொண்டவன் அவளின் பாதுகாப்பை மனதில் கொண்டு, வீட்டிற்குள் செல்ல முடிவெடுத்து அழைப்பு மணியை அழுத்தினான்.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களாக முயற்சித்தும் பதிலில்லாமல் போக, இவன் வெகு நேரமாக அழைப்பு மணியை அழுத்திய சத்தத்தில், அருகிலிருந்த வீடுகளிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தனர்.

அதைக் கண்டவனின் பொறுமை சிறிது சிறிதாக மறைய, அடுத்த முயற்சியாக கதவைத் தட்ட ஆரம்பித்தான். அப்போதும் எதிர்பக்கமிருந்து எந்த எதிர்வினையும் இல்லாது போனதால், ‘வெளிய தான அவள பாத்தேன்… இன்னும் வீட்டுக்கு வரலையோ…’ என்ற குழப்பத்துடன், எதற்கும் முயற்சித்து பார்க்கலாம் என்று கதவின் கைப்பிடியில் கைவைத்து அழுத்த, இதை முதலிலேயே செய்திருக்கலாம் என்பது போல, அது சுலபமாக திறந்து கொண்டது.

அதைக் கண்டவனின் மனதில் பொறுமை தொலைந்த கோபத்துடன் இதுவும் சேர்ந்து கொள்ள, அன்றைய நாளில் பொறுப்பற்ற தன்மைக்காக சஞ்சுவைத் தொடர்ந்து ரஞ்சுவையும் திட்டிக் கொண்டிருந்தான் சஞ்சய்.

வீட்டிற்குள் சென்றவன், கீழேயிருக்கும் அறைகளில் அவள் அரவம் உணராத காரணத்தினால், மேலே சென்றான். அப்போதே அவன் கண்கள் வீடிருக்கும் நிலையை ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொண்டது. அங்கு இரு அறைகள் இருக்க, முதல் அறையைத் திறந்தவன், அதில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருக்க, புருவ முடிச்சுடன் இரண்டாவது அறைக்குச் சென்றான்.

அங்கு அவன் கண்ட காட்சியில் பதறியவன், ரஞ்சுவைத் தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தான்.

தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க சொல்லுங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 'சர்ப்ரைஸ்' 💃💃💃 எல்லாருக்கும் முதல்ல காதலர் தின வாழ்த்துக்கள்...❤❤❤ காதலர் தினம் ப்ளஸ் சண்டே... சோ உங்களுக்கான 'சர்ப்ரைஸ்'ஸா அடுத்த எபியோட வந்துட்டேன்...😊😊😊 அதுக்காக இன்னைக்கு எபில லவ் சீன்ன யாரும் தேடக்கூடாது... ஆனா, எபி முடிவுல, நீங்க கேட்ட சஸ்பென்ஸ் ரிவில் பண்றதுக்கான ஹிண்ட் இருக்கு... அதை படிச்சுட்டு எல்லாரும் உங்க கெஸ் என்னன்னு சொல்லுங்க பாப்போம்... மீ வெயிட்டிங்...😉😉😉

24381
காதல் 11

ரஞ்சுவின் பொறுப்பற்ற தன்மையில் கோபம் கொண்டவனாக அவளின் அறைக்குள் சென்ற சஞ்சய், அங்கு அவள் கீழே விழுந்திருந்த நிலை கண்டு சற்று பதறினான். அவளிற்கு இருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறி அவளிடம் எச்சரிக்கை செய்யவே அவன் வந்தது. இப்போது அவளின் நிலை கண்டவன், எதிரிகளினால் ஏற்பட்ட ஆபத்தோ என்று எண்ணினான்.

வேகமாக அவளருகே சென்றவன், அவளை ஆராய்ந்ததில் இரத்தம் வந்ததற்கான அறிகுறி தென்படவில்லை என்று கண்டபோது தான் அவனின் பதட்டம் சற்று குறைந்தது. சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து, அவளின் மயக்கம் போக்க முயன்றான். ஆனால், அவளோ மயக்கத்திலிருந்து விழித்த பாடில்லை.

இனியும் தாமதிக்காமல் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணியவன், அவளைத் தூக்கிக் கொண்டு கீழே சென்றான்.

அவளைத் தவிர வீட்டில் யாருமில்லை என்பதை கண்டுகொண்டவன், அவளின் குடும்பத்தினர் எங்கு சென்றிருப்பர் என்று யோசித்தபடியே வெளி வாயிலை அடைந்தான். எப்போது அவளை சஞ்சுவுடன் கண்டானோ, அப்போதே அவளைப் பற்றிய விபரங்களை விசாரித்து தெரிந்து கொண்டான்.

சஞ்சய் உள்ளே சென்றபோது எட்டிப்பார்த்தவர்கள் இப்போதும் அவரவர்களின் வீட்டிலிருந்து பார்க்க, உள்ளே சென்றவனின் கைகளில் ரஞ்சுவை தூக்கிக் கொண்டு வருவதைக் கண்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். ரஞ்சுவின் பக்கத்து வீட்டுக்காரர் அவர் வீட்டிலிருந்தே, “தம்பி, பாப்பாக்கு என்னாச்சு..?” என்றார்.

சஞ்ஜயோ, “தெரியல சார். நான் போனப்போ மயங்கியிருந்தாங்க… அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்… இவங்க பேரண்ட்ஸ் வந்தா சொல்லிடுறீங்களா….” என்றான்.

“அவ அப்பா அம்மா விட்டுட்டு போனதுல தான் தம்பி பாப்பா மயங்கியிருக்கும்… பாவம், அவங்க போறப்போ அது முகத்த பாக்கவே முடியல…” என்று அவர் கூற, சஞ்சயோ குழப்பத்தில் இருந்தான்.

‘அப்பா அம்மா விட்டுட்டு போயிட்டங்களா…’ என்று நினைத்தாலும், முதலில் ரஞ்சுவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி அவனின் மகிழுந்தில் அவளை அமர வைத்து வேகமாக செலுத்தினான்.

*****

அந்த மருத்துவமனை தாழ்வாரத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த சஞ்சய், சற்று முன்னர் தனக்கு ஏற்பட்ட பதட்டதை எண்ணி அதன் காரணத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

‘சஞ்சுனால அந்த பொண்ணு பாதிக்கப்படக் கூடாதுன்னு டென்ஷன் ஆகிருப்பேன்…’ என்று அவனே அவனை சமாதப்படுத்திக் கொண்டான். ஆனால் அவன் மனதிற்கு தெரியும், கண்ணாடியாய் உடைந்து போனவளின் பிம்பத்தை சீரமைக்கும் முயற்சியை அவனின் இதயம் ஆரம்பித்து விட்டதென்றும், அதற்கான முதல் படியாய், ரஞ்சுவின் மீதான சலனம் அவனைத் தொற்றிக் கொண்டதென்றும்…

“ஹலோ மிஸ்டர்…” என்று தனக்கு வெகு அருகில் கேட்ட குரலில், சிந்தனையிலிருந்து வெளிவந்து கண்களைத் திறந்தவன், அங்கிருந்த மருத்துவரைக் கண்டு, “டாக்டர், ஹொவ் இஸ் ஷி..?” என்றான், மறைக்க முயன்று தோற்றுப் போன பதட்டத்துடன்.

“அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க… மனசுல எதையோ போட்டு குழப்பிட்டு இருக்காங்க… அவங்களுக்கு இப்போ தேவை ரெஸ்ட் தான். அண்ட் அவங்க பாடி கண்டிஷன் பார்க்கும்போது, சரியா சாப்பிடலன்னு நினைக்குறேன்… சோ இப்போ ட்ரிப்ஸ் ஏறுது… முடிஞ்சதும் ஒரு தடவ செக் பண்ணிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்…” என்றார்.

அவரிடம் விடைபெற்றவன் ரஞ்சு இருந்த அறைக்குள் சென்றான். கட்டிலில் நிர்மலமான முகத்துடன் படுத்துக் கொண்டிருந்தவளைக் கண்டவனின் எண்ணங்கள் மீண்டும் கடந்த காலத்திற்கு பயணித்தது.


“சஞ்சு…” என்ற குரலில் இருவருமே திரும்பிப் பார்க்க, அவளோ நாக்கை கடித்துக் கொண்டாள். இரு சஞ்சுவும் சிரிக்க, “ரெண்டு பேருக்கும் ஒரே பேரு வச்சா நான் எப்படி கூப்பிடுறதாம்…” என்று அவள் செல்லமாக சிணுங்கினாள்.

“சார்...” என்ற விழிப்பில் கண்களைத் திறந்தவன், தன் முன் நின்றிருந்த செவிலியைக் கண்டு புருவம் சுருக்கினான்.

“சார், பேஷண்ட் பேரு சொல்லுங்க…” என்று அந்த செவிலி வினவ, “ஷ்ரே… க்கும்… ரஞ்சனா…” என்றான்.

அந்த செவிலி அங்கிருந்து நகர்ந்த பின்பு அவனின் மனம் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் சிக்கித் தவித்தது. ‘பெண்கள் எல்லாருமே ஏமாற்றுபவர்கள் தான்’ என்று அவனின் மூளை முழுவதும் தீவிரமாக பரவியிருந்த எண்ணம், ரஞ்சுவையும் அந்த பட்டியலில் சேர்க்க முற்பட, அவன் மனமோ அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

காலங்காலமாக ஏற்படும் அதே சண்டை… மூளைக்கும் மனதிற்கும் இடையேயான சண்டை. இதில் வெற்றி பெறப்போவது, சஞ்சயின் மூளையா இல்லை சஞ்சயின் மனமா…

*****
ரஞ்சு இன்னும் விழிக்காமல் இருக்க, சஞ்சய்க்கு கடந்த கால சிந்தனைகள் வருவதும் போவதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க அவளருகே அமைதியாக அமர்ந்து கொண்டான்.

சற்று நேரம் கழித்து, மெல்ல கண் விழித்த ரஞ்சுவிற்கு நடந்தது அனைத்தும் கனவாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் தோன்ற, அங்கு நிலவிய சூழலலோ, நிகழ்ந்தது கனவில்லை நிஜம் என்று அடித்துக் கூறியது.

ஒரே நாளில் யாருமில்லாத அநாதையாக மாறக்கூடும் என்று கனவில் கூட நினைக்காதவளிற்கு, அவளின் இந்த நிலை சுய-கழிவிரக்கத்தைப் பெருக்க, கண்கள் ஒரு மணி நேரமாக நிறுத்தியிருந்த கண்ணீரை மீண்டும் பொழிய ஆரம்பித்தது.

இத்தனை நேரம், அவள் முகத்தில் தெரிந்த பாவங்களை ஊன்றி கவனித்தான் சஞ்சய். காரணமேயின்றி (!!!) அவளின் சோகம் அவனைத் தாக்குவதை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் உணரத் துவங்கினான்.

பெண்ணவள் அப்போது தான் சஞ்சயைக் கண்டாள். அன்றைய நிகழ்வுகளின் தாக்கத்தால், முற்றிலும் குழம்பியிருந்த மூளைக்கு சஞ்சயின் வரவு மேலும் குழப்பத்தை ஏற்படுத்த, சலிப்புடன் கண்களை மூடிக் கொண்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிற்கு அவளின் சலிப்பு கண்களில் பட, “என்னாச்சு…” என்றான் மென்குரலில்.

அவனிடம், அவர்களின் முதல் சந்திப்பின் போது இருந்த கோபமோ, இரண்டாவது சந்திப்பின் போது இருந்த ஆராய்ச்சி உணர்வோ இப்போது இல்லை என்பதை ரஞ்சு உணர்ந்து கொண்டாள்.

அதன் பிறகு தான், சஞ்சய் எப்படி இங்கு வந்தான் என்பதைப் பற்றி தான் எதுவும் வினவவில்லை என்பதே அவளிற்கு உரைத்தது. மேலும், அவன் தான் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும்… அதற்கான நன்றியைக் கூட தெரிவிக்காமல் சலிப்புடன் கண்களை மூடிக் கொண்டதற்கு தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், கண்கள் திறந்து அவனைக் கண்டாள்.

அவன் முகம் எதையோ உணர்த்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தோ… இல்லை அவள் தான் உணர முயன்று தோற்றுக் கொண்டிருந்தாளா…

முதல் சந்திப்பின் போது அணிந்திருந்த கோட் சூட் இல்லாமல், சாதாரண ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்திருந்தவனைக் கண்டவள், ‘இவர வேற எங்கயோ பாத்த மாதிரி இருக்கே…’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் ஏதோ கூற வந்து மீண்டும் யோசனையில் ஆழ்ந்ததைக் கண்டவன், “க்கும்…” என்ற செருமலில் அவளை நிகழ்விற்கு அழைத்து வந்தான்.

‘ச்சே இப்படி பேன்னு அவர பாத்துட்டு இருக்கேன்… இருக்க பிரெச்சனைல இது வேற…’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள், “தேங்க்ஸ்…” என்று அவனைப் பார்க்காமல் கூறினாள்.

“ம்ம்ம்…” என்று அதை ஏற்றுக் கொண்டவன், சிறிது தயக்கத்துடன் (!!!) “என்னாச்சு… டாக்டர் கிட்ட கேட்டப்போ ரொம்ப டென்ஷன்ல இருக்கன்னு சொன்னாரு… என்னாச்சுன்னு என்கிட்ட ஷேர் பண்ணலாம்னு நெனச்சா சொல்லு…” என்று வினவினான்.

ரஞ்சுவோ அவன் பேசியதைக் கேட்டு, உலக அதிசயமே தன் பக்கத்தில் நிற்பது போல அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். பின்னே, பார்த்த முதல் நாளே, வெறுப்பை அப்பட்டமாக காட்டியவனாயிற்றே… இப்படி கனிவான சொற்களை அவனிடமிருந்து சத்தியமாக ரஞ்சு எதிர்பார்த்திருக்கவில்லை.

அவளின் விரிந்த கண்கள் அவனை இம்சைப்படுத்த, அவள் முகத்தில் படிந்திருந்த தன் கண்களை வேறு பக்கம் திருப்பி, மீண்டும் செருமினான்.

மீண்டும் அவனின் வார்த்தைகளை தனக்குள் ஓட்டிப் பார்த்தவள், அன்றொரு நாள் சஞ்சீவிடம் தான் கூறிய அதே வார்த்தைகள் இன்று சஞ்சய் கூறியிருப்பதை உணர்ந்தாள்.

அவளிற்கும் நடந்ததை யாரிடமாவது சொல்லி மனதிலுள்ள பாரத்தை இறக்கி வைக்க வேண்டும் என்று தோன்றியது. சஞ்சு மற்றும் தர்ஷு இருந்திருந்தால், அந்த சம்பவம் நடந்த நொடியே நடந்ததைக் கூறி ஆறுதலாக அவர்களின் தோளில் சாய்ந்திருப்பாள். ஆனால், மூளை மந்தமாகிய இன்று அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூட தோன்றாது அமைதியாக இருந்தாள்.

இப்போது அந்த ஆறுதலான தோளாக அவன் தெரிய, ஏன், எதுக்கு என்று யோசியாமலயே நடந்ததைக் கூறத் துவங்கினாள்.

அவள் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டவனிற்கு, சுயநலமாக சிந்தித்த அவளின் ‘முன்னாள்’ பெற்றோரின் மீது கோபமாக வந்தது.

இப்படிப்பட்டவர்கள் எதற்காக குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்… இப்படி பாதி வழியிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும்…

அவன் மனமோ, ‘அவளும் கிட்டத்தட்ட உன் நிலைமைல தான் இருக்கா… உனக்காவது குடும்பம்னு சொல்லிக்க சஞ்சு இருக்கான்… அவளுக்கு அப்பா, அம்மான்னு இருந்தும் இல்லாத நிலைமை…’ என்று யோசித்துக் கொண்டிருந்தது.

“கடைசியா போகும் போது சொன்னாங்க பாருங்க… உன்ன நாங்க அப்படியே விட்டுட விரும்பல… உனக்கு பணமும் வீடும் பங்கு போட்டுருக்கோம்னு… ச்சே நான் அவங்க கிட்ட எதிர்பார்த்தது பணமும் வீடுமா… என்ன இத்தன வருஷமா வளர்த்துருக்காங்களே, இது கூடவா தெரியல…” என்று அழுகுரலில் கூறியவளை வருத்தத்துடன் பார்த்தவன், ஆறுதலாக தோளோடு அணைத்துக் கொள்ள, அவளும் இருக்கும் இடம், சூழல் அனைத்தையும் மறந்து அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.

இருவரும் தங்களை மறந்திருந்த நேரம், சஞ்சயின் அலைபேசி ஒலியெழுப்ப, அதில் தான் நிகழ்விற்கு வந்தனர் இருவரும்.

‘ச்சே இப்படி அவர் தோள்ல சாஞ்சு அழுத்துட்டு இருந்துருக்கேன்… என்ன பத்தி என்ன நெனைப்பாரு…’ என்று அவளும், ‘நானா இப்படி ஒரு பொண்ண தோள்ல சாச்சு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன்…’ என்று அவனும் நினைத்து, ஒருவரையொருவர் பார்க்காமல் தவிர்த்தனர்.

அலைபேசியில் ‘சஞ்சு’ என்ற பெயர் மின்ன, அதை உயிர்ப்பித்து காதில் வைத்தவன், கதவைத் திறந்து வெளியே சென்றான்.

“ஜெய்… என்னாச்சு..? இவ்ளோ நேரமாச்சு, நீயே போன் பண்ணுவன்னு நெனச்சேன்…” என்று மறுமுனையில் பேசிய சஞ்சீவின் குரலில் பதட்டம் லேசாக எட்டிப் பார்த்தது.

“இங்க ஒரு ப்ராப்ளம் சஞ்சு…” என்று ஆரம்பித்த சஞ்சய், ரஞ்சு கூறியவற்றை அவனுடன் பகிர்ந்துக் கொண்டான்.

“ச்சே என்ன மனுஷங்க ப்ரோ இவங்க… இப்படி தான் வளர்த்த பொண்ணையே தனியா விட்டுட்டு போயிருக்காங்க… இப்போ ரஞ்சு எப்படி இருக்கா..?” என்றான்.

“ரொம்ப குழப்பத்துல இருக்கா சஞ்சு… அவள பாக்க பாவமா தான் இருக்கு…” என்று சஞ்சய் கூறியதும், “நான் வரேன் ஜெய்…” என்று எழுந்து விட்டான் சஞ்சீவ்.

“சஞ்சு… உன் கண்டிஷன் என்னன்னு திரும்ப திரும்ப நியாபகப்படுத்தனுமா…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சஞ்சய் வினவ, மறுமுனையோ மௌனத்தில் ஆழ்ந்தது.

“ஹலோ…” என்று சஞ்சய் குரலுயர்த்த, “அவள தான் உனக்கு பிடிக்காதே… அதான் தனியா கஷ்டப்படுவன்னு…” என்று முணுமுணுத்தான் சஞ்சீவ்.

“ப்ச்… என்ன இரக்கமில்லாதவன்னு நெனச்சுட்டியா சஞ்சு… இப்படி கஷ்டத்துல இருக்குறவங்க கிட்ட கோபத்த காமிக்குற சாடிஸ்ட்னு நெனச்சியா…” என்று மேலும் சஞ்சய் வினவ, “இப்போ கூட சாடிஸ்ட்டா தான் பிஹேவ் பண்ற ஜெய்…” என்றான் சஞ்சீவ் அலுப்புடன்.

அவன் கூறியதைக் கேட்ட சஞ்சய் அதிர்ந்து பேசாமலிருக்க, அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட சஞ்சீவ், “நான் கூட கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்… ஆனா, என்ன திட்டிட்டு தான இருக்க… அப்போ நீ சாடிஸ்ட் தான ப்ரோ…” என்று பாவமாகக் கூற, அவனைத் திட்ட முடியாமல், “சஞ்சு…” என்று பல்லைக் கடித்தான் சஞ்சய்.

அவன் பேச்சை வேறு பக்கம் திருப்புவதற்குள் சஞ்சய், “அவளோட பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி அவங்கள வர சொல்லு சஞ்சு… மேபி அவங்க கூட ஃப்ரீயா இருப்பா…” என்றான்.

“ஸ்யூர் ப்ரோ… அவங்க கிட்ட சொல்றேன்… அவங்க வரவரைக்கும் பாத்துக்கோ…” என்று அழைப்பை அணைத்தான். அந்த கடைசி வரை ஏனோ சஞ்ஜயை அழுத்த, ‘ஏன் அவன் சொல்லாம நான் பாத்துக்க மாட்டேனா…’ என்ற உரிமையுணர்வு அவனிற்கே தெரியாமல் தோன்றியது.

அதே குழப்பத்துடன் உள்ளே சென்றவனை வரவேற்றது அவளின் குழப்ப முகம்.

‘இவ சும்மா சும்மா யோசிச்சு குழம்பிட்டு இருக்காளே…’ என்று அவளின் சிந்தனையை அறியாமல் யோசிக்க, அவளோ மற்ற பிரச்சனைகளை விடுத்து, அவன் தோளில் சாய்ந்திருந்தற்காக திட்டுவானோ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

“க்கும்… நடந்ததயே நெனச்சு குழம்பிட்டு இருக்காத… உன் வாழ்க்கை நீ தான் வாழனும்… உன்ன வேணாம்னு விட்டுட்டு போனவங்கள பத்தி யோசிக்காம, உன்கூட இருக்குறவங்கள யோசி…” என்றான் சஞ்சய்.

ரஞ்சுவும் அவனின் கூற்றை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தாள்.

அப்போது தான் அவளிற்கு தன் தோழிகள் நினைவும், மலர் மற்றும் வசுந்தராவின் நினைவும் வந்தது. இந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லவில்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே மலர் உள்ளே வந்தார்.

“ரஞ்சு…” என்று அழைத்தவாறே வந்தவர், கட்டிலில் அவள் சோர்ந்து அமர்ந்திருக்கும் நிலை கண்டு, “உன்ன இப்படி தனியா விட்டுட்டு போக எப்படி டா அவங்களுக்கு மனசு வந்துச்சு… ச்சே நானும் ஊர்ல இல்லாம போயிட்டேனே… உங்க பக்கத்து வீட்டுக்காரங்க போன் பண்ணி தான் விஷயம் தெரிஞ்சுது டா… உடனே வந்துட்டேன்…” என்று புலம்ப ஆரம்பிக்க, சஞ்சய் அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி வெளியே வந்துவிட்டான்.

மலரைக் கண்டவளிற்கு மீண்டும் கண்கள் பனிக்க, அவரை அணைத்துக் கொண்டு, “நான் அவங்க பொண்ணு இல்லன்னு என்ன விட்டுட்டு போயிட்டாங்க ஆன்ட்டி… என் அம்மா நான் பிறந்ததும் இவங்க கிட்ட குடுத்துட்டு போயிட்டங்களாம்… இப்போ இவங்களுக்கு என்ன தனியா விட்டுட்டு போயிட்டாங்க… அப்போ யாருக்கும் நான் தேவை இல்லல…” என்று விசும்பினாள்.

அதைக் கேட்டவரின் கண்களும் கண்ணீரைப் பொழிய, அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரின் இதயத்தை தாக்கியது.

வெளியில் இருந்தவனிற்கோ, கதவிடுக்கின் வழியே அவள் பேசிய வார்த்தைகள் கேட்க, அவளின் கண்ணீரை துடைக்க கைகள் பரபரத்தன. முயன்று கட்டுப்படுத்திக் கொண்டவனிற்கு மனதைக் கட்டுப்படுத்தும் வழி தான் தெரியவில்லை.

“எனக்கு
யாருமில்ல சஞ்சு… குழந்தையா இருக்கும்போதே என்ன அந்த அநாதை ஆசிரமத்து வாசல்ல விட்டுட்டு போயிட்டங்களாம்… ஸ்கூல்ல எல்லாரும் அவங்க பேர் சொல்லும்போது அப்பா பேரையும் சேர்த்து செல்லும்போதெல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் தெரியுமா… என் பிரெண்ட்ஸ் எல்லாரும், அவங்க அம்மா இது நல்லா சமைப்பாங்க, அது நல்லா சமைப்பாங்கன்னு சொல்லும்போது எனக்கு மட்டும் ஏன் அம்மா இல்லன்னு சாமிக்கிட்ட கேட்பேன்… சாமிக்கு ஒன் வே கம்யூனிகேஷன் தான் போல… ஹ்ம்ம் இதுவரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்ல… நீயே சொல்லு சஞ்சு, பிறந்தப்போவே நான் என்ன பாவம் செஞ்சேன்னு இப்படி ஒரு தண்டனை…” என்று கதறியவளை தோளோடு அணைத்து சமாதப்படுத்தினான் சஞ்சய்.

“என் ஷ்ரே பேபி ரொம்ப போல்டுன்னு நெனச்சேனே… இப்படி அழுதுட்டு இருக்காங்களே… இனிமே இப்படி ஒரு கவலை உனக்கு வரக்கூடாது… இதோ உனக்கு நான் இருக்கேன், சஞ்சு இருக்கான்… உனக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்கு… இனி இப்படி அழக்கூடாது சரியா…” என்று வினவியவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒற்றை சிரிப்புடன் தலையசைத்தாள்.


“தம்பி… தம்பி…” என்று யாரோ அழைக்கும் சத்தத்தில் சிந்தனையிலிருந்து வெளிவந்தவன், அருகில் பார்க்க மலர் தான் நின்றிருந்தார்.

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி… நீங்க தான் ரஞ்சுவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தீங்கன்னு சொன்னா…” என்றவர் பிறகு என்ன நினைத்தாரோ, “நீங்க ரஞ்சுவுக்கு எப்படி பழக்கம் தம்பி…” என்றார் ஆராய்ச்சி பார்வையுடன்.

முதலில் சற்று தயங்கினாலும், தொழிலில் பல சவால்களை சமாளித்தவன் ஆயிற்றே… சஞ்சுவும் ‘த்ரீ ரோசஸும்’ பழகியவற்றை அறிந்தவன் என்பதால், அந்த இடங்களிலெல்லாம் தன்னையும் இணைத்துக் கொண்டு கதை புனைந்து விட்டான். மேலும், அவர்களின் பண்ணை வீடு ஒன்று இந்த ஊரில் இருக்கிறது என்றும், அதைப் பார்த்துவிட்டு, அப்படியே ஊருக்கு வந்திருப்பதாக கூறிய ரஞ்சுவையும் பார்க்கவே வீட்டிற்கு சென்றதாகவும் அவருக்கு சந்தேகம் வராதவாறு கூறினான்.

மலரும், ஆண் – பெண் நட்பை எதிர்க்கும் பிற்போக்குவாதி அல்ல. பெண்கள் மூவரின் மீதும் அவ்வளவு நம்பிக்கை… சரி எது, தவறு எது என்பதை பகுத்தறியும் குணம் அவர்களுக்கு இருப்பதாக நம்பினார். மேலும், சஞ்சயின் மரியாதையான தோற்றமும், அவருக்கு அவன் மீது நன்மதிப்பை அளித்தது.

“அப்படியா தம்பி… இந்த பொண்ணுங்க எல்லாத்தையும் சொல்லுங்க… இத சொல்லாம விட்டுச்சுங்க… மூணு பொண்ணுங்களும் தனியா இருக்காங்களேன்னு அடிக்கடி மனசு பதறும்… பரவால உங்கள மாதிரி நல்ல மனுஷங்களோட நட்ப சம்பாதிச்சுருக்குங்க…” என்று கூறினார் மலர்.

சஞ்சய்க்கு அவரை ஏமாற்றுவது மனதிற்கு வருத்தமளித்தாலும், இப்போது இருக்கும் சூழலில் வேறெதுவும் பேசி அவர்களை கலவரப்படுத்த விரும்பவில்லை.

அவன் முடிவெடுத்துவிட்டான், இனி ரஞ்சு மற்றும் அவளை சுற்றியிருப்பவர்களுக்கு அவனே பாதுகாப்பு வழங்க முடிவெடுத்து விட்டான். இந்த முடிவு, சஞ்சு தேவையில்லாமல் ரஞ்சுவை இவர்களின் பிரச்சனையில் இழுத்து விட்டதலா, இல்லை அவன் மனதில் ரஞ்சுவின் மீது ஏற்பட்ட சலனத்தினாலா என்பது அவனிற்கே சரிவர தெரியவில்லை.

“தம்பி, நான் கொஞ்சம் கேண்டீன் வரைக்கும் போயிட்டு வரேன்… அதுவரைக்கும் பார்த்துக்குறீங்களா… சாரி தம்பி. உங்களுக்கும் வேலை இருக்கும்…” என்று அவர் இழுக்க, “பரவால ஆன்ட்டி… நீங்க போயிட்டு வாங்க…” என்று அனுப்பி வைத்தான்.

*****

மலர், அவரின் சொந்த ஊருக்கு ஒரு விழாவிற்கு சென்றிருக்க, விழா முடிந்து விருந்து சாப்பிடப் போகும் நேரம், ரஞ்சுவின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதில் சாப்பிட கூட செய்யாமல் அடித்து பிடித்து ஓடி வந்ததால், இப்போது அவருக்கு பசியுடன் தலை வலிக்கவும் செய்தது. கேண்டீனில் சூடான தேநீரை வாங்கிப் பருகியவர் மனதில் ரஞ்சுவின் கேள்விகள் சாட்டையடியாக இருக்க, தன் தலையெழுத்தை நொந்தவாறே, ரஞ்சுவிற்கு பாலை வாங்கிவிட்டு வெளியே நடந்தார்.

கவனமில்லாமல் நடந்து கொண்டிருந்தவரை எதிரே வந்த பெண் இடித்துவிட, பால் கீழே சிந்திவிட்டது. தன்னை நொந்து கொண்டே, அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க திரும்பியவர், அங்கு வேகவேகமாக சென்றவளை நோக்கி, “ஹே ரஞ்சு, எங்க போற…?” என்று வினவினார்.

அந்த பெண்ணோ, பதட்டத்துடன் அங்கிருந்து விரைந்து சென்று விட்டாள். குழப்பத்துடன் நின்றிருந்தவரை நோக்கி வந்த சஞ்சய், “என்னாச்சு ஆன்ட்டி… ஏன் இங்கயே நின்னுட்டீங்க…?” என்று வினவினான்.

“அது நம்ம ரஞ்சுவுக்கு பால் வாங்கிட்டு வந்தேன்… ஏதோ நெனப்புல எதிர்ல வரவங்கள பாக்காம இடிச்சுட்டேன்… சாரி சொல்ல திரும்புனா, ரஞ்சு தான் நான் கூப்பிட கூப்பிட நிக்காம போயிட்டா…” என்று குழப்பத்துடன் கூறினார்.

அவர் கூறியதைக் கேட்டவனின் மனதில் மணியடிக்க வாயோ, “ஷ்ரேயா…” என்று முணுமுணுத்தது.


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 வழக்கம் போலவே லேட்டு தான்... போன எபிக்கு வந்த உங்க கமெண்ட்ஸ் பார்த்து மீ வெரி ஹாப்பி...😊😊😊 எல்லாரும் சூப்பரா கெஸ் பண்ணீங்க... இதுவரைக்கும் கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 தொடர்ந்து உங்க ஆதரவை கொடுங்க...😍😍😍

24519


காதல் 12

மலர்விழி வெளியே சென்றதும், அந்த அறையின் ஒரு மூலையிலிருந்த நாற்காலியில் அமர்ந்து தன் அலைபேசியில் கவனம் செலுத்தினான் சஞ்சய்.

சற்று நேரம் நெளிந்து கொண்டிருந்த ரஞ்சுவிற்கு உறக்கம் வந்தாலும், சஞ்ஜயின் முன் உறங்குவதற்கு யோசித்தவளாக ஜன்னல் வழியே வெளியே பார்வையை செலுத்தினாள்.

எதேச்சையாக அவளைக் கண்டவன், தூக்கம் வந்தாலும் அடக்கிக் கொண்டிருப்பவளைக் கண்டு, சட்டென்று எழுந்து அலைபேசியை காதில் வைத்தவாறு வெளியே சென்றான்.

அதைக் கண்டவள் மெல்லிய சிரிப்புடன் உறங்கிப் போனாள். முதல் நாள் தன்னைக் கண்டு முறைத்ததை எல்லாம் தற்காலிகமாக மறந்து விட்டாள்.

எதற்கோ உள்ளே வந்தவன் அவளின் ஆழ்ந்த நித்திரையைக் கண்டு, ‘அதுக்குள்ள தூங்கிட்டாளா…’ என்று வியந்தவாறே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது உண்மையிலேயே அலைபேசி ஒலியெழுப்பியது.

அவளின் தூக்கம் கலையாதவாறு விரைவாக வெளியே சென்று விட்டான்.

அந்த தாழ்வாரத்தில் நடந்து கொண்டே பேசி முடித்தவன், எதேச்சையாக வெளியே காண, அங்கு மலர்விழி ஏதோ சிந்தனையில் வருவதையும், அவருக்கு எதிரே ‘ஹூடட் டி-ஷர்ட்’ அணிந்த உருவம் அவரைக் கவனிக்காமல் வேகமாக செல்வதையும் பார்த்தான்.

இருவரும் மோதிக் கொள்வார்களோ என்று நினைத்தவன், அதைத் தடுக்க கீழே சென்றான். ஆனால், அதற்குள் அவன் நினைத்ததைப் போலவே, இருவரும் இடித்துக் கொண்டனர்.

அவன் மலரின் அருகே சென்ற போது, அவர் அந்த ‘பெண்’ணை ‘ரஞ்சு’ என்று அழைப்பதைக் கண்டு குழம்பியவன் காரணத்தை வினவ, அவர் கூறியதைக் கேட்டவனிற்கு அது யாரென்று சட்டென்று புரிந்தது.

ஒரு நொடி ‘அவளின்’ நினைவுகளில் செயலற்று நின்றவன், மறுநொடியே சுதாரித்து, “ஆன்ட்டி, ரஞ்சு உள்ள தூங்கிட்டு இருக்கா… நீங்க வேற யாரையாவது பார்த்துருப்பீங்க…” என்று சமாளித்தான்.

“அட ஆமா தம்பி… ஏதோ நெனப்பு எனக்கு…” என்று தலையில் அடித்துக் கொண்டு, “ப்ச் ரஞ்சுக்கு வாங்குன பால் கொட்டிடுச்சு… நான் திரும்பவும் வாங்கிட்டு வரேன்…” என்று மீண்டும் கேன்டீனை நோக்கிச் சென்றார்.

மற்றொரு சமயத்தில், மலருக்கு பதில் சஞ்சயே சென்றிருப்பான். ஆனால், இப்போதோ அவன் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

‘எதுக்கு இங்க ஹாஸ்பிடலுக்கு வரணும்… என்ன ஃபாலோ பண்றாளா… ச்சே இருக்காது… தனியா இப்படி என்கிட்ட சிக்க நெனைக்க மாட்டா… ஆனா, ஏன்..?’ என்று சிந்தித்தவனிற்கு சட்டென்று அந்த காட்சி மனக்கண்ணில் ஓட, விரைந்து ரஞ்சுவின் அறைக்குச் சென்றான்.

ஆனால், அங்கு அவன் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. ஓடிவந்ததில் மூச்சு வாங்க, அந்த நாற்காலியில் தளர்வாக அமர்ந்து கொண்டான். மீண்டும் அந்த காட்சி ‘ஸ்லோ மோஷனில்’ அவன் மனக்கண்ணில் ஓடியது.


“பாஸ் யாரு கூடவும் என்ன கம்பேர் பண்ணாதீங்க… எனக்கு அது பிடிக்காது… இந்த உலகம் முழுக்க தேடுனாலும், என்ன மாதிரி யாரும் இருக்கக் கூடாதுன்னு நெனைக்கிறவ நான்… எஸ் ஐ ஷுட் பி யூனிக்… நோ ஒன் ஷுட் ரிசம்பில் மீ…”

இப்போதும் அவன் மனம் அடித்துக் கொண்டது. ரஞ்சு எத்தகைய ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அடுத்து என்ன செய்வது என்ற திட்டத்தில் இறங்கி விட்டான்.

அவன் எண்ணத்தின் நாயகியோ, “அவ மேல அவ்ளோ பாசமா உனக்கு… தி கிரேட் எஸ்.ஜே அவளுக்காக இப்படி விழுந்தடிச்சு ஓடுவியா… அப்போ உன்ன இப்படி அலைய விடுறதுக்காகவே அவள மெதுவா துடிக்க துடிக்க கொல்லலாம் போலயே… எஸ் நான் முடிவு பண்ணிட்டேன்… என்ன நீ துரத்துறியா… இனி இவள வச்சு உன்ன வலிக்க வலிக்க அடிக்குறேன்…” என்று திட்டம் தீட்டினாள்.

*****

“தம்பி, காபி…” என்று மலர்விழி நீட்ட, அப்போது தான் சிந்தனையிலிருந்து விடுப்பட்டான் சஞ்சய்.

ஒரு நன்றியுடன் அதைப் பெற்றுக் கொண்டான் சஞ்சய். ஏனோ, மலர்விழியை அவனிற்கு பிடித்தது. ரஞ்சுவைப் பற்றி விசாரித்த போது, அவளிற்கு தெரிந்தவர் என்ற அளவில் மலர்விழியைப் பற்றியும் மேம்போக்காக தெரிந்து கொண்டான்.

திருமணம் செய்து கொள்ளாமல், தன் அண்ணன் மகளைப் பார்த்துக் கொள்கிறார் என்று அறிந்ததும், இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா என்று நினைத்தான். இப்போது அண்ணன் மகளின் தோழிக்காக, அதுவும் வளர்த்தவர்களே நிற்கதியாக விட்டுச் செல்லும் வேளையில், ஊரிலிருந்து அடித்துப் பிடித்து ஓடி வந்தவரைக் கண்டவனிற்கு அவரின் மீது இருந்த நல்லெண்ணம் கூடிக் கொண்டே சென்றது.

“ரஞ்சு, இந்த பால குடிச்சுட்டு தூங்கு டா…” என்று மலர்விழி எழுப்ப, விழி மலர்த்தியவள் முதலில் கண்டது, காபியை பருகிக் கொண்டே தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சயைத் தான்.

அவனும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் பார்க்கவில்லை. எதேச்சையாக பார்த்தவனிற்கு, இருவரின் விழிகளும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதும் தான் சுயவுணர்விற்கு வந்து வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாவிட்டாலும், அவ்வப்போது இந்த பார்வை பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது.

“தம்பி, உங்களுக்கு வேலை இருக்கும்ல… நீங்க கிளம்புங்க…” என்று மலர் கூற, “இல்ல ஆன்ட்டி… ரஞ்சுவோட பிரெண்ட்ஸ் வர வரைக்கும் நான் உங்களுக்கு உதவிக்கு இருக்கேன்…” என்றான். அவன் மனதிலோ, அவன் ஏற்பாடு செய்த பாதுகாவலர்கள் வரும் வரையிலும் ரஞ்சுவிற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

“இருக்க டென்ஷன்ல அவங்க ரெண்டு பேருக்கும் சொல்லணும்னே மறந்துட்டேன்…” என்று மலர் கூற, ரஞ்சுவும் அதைத் தான் நினைத்தாள். கூடவே, சஞ்சய் தனக்காக எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.

இவர்களின் சிந்தனைகளை கலைத்தவாறே உள்ளே நுழைந்தனர் சஞ்சுவும் தர்ஷுவும்.

“ஹே ரஞ்சு… இப்போ எப்படி இருக்கு..?” என்று சஞ்சு படபடவென பேச, தர்ஷுவும் அவளிற்கு குறையாத பதட்டத்துடன் காணப்பட்டாள்.

“எப்படி இவ்ளோ சீக்கிரமா வந்தீங்க..?” என்று ரஞ்சு வினவ, இருவரும் தங்களுக்கு பின் உள்ளே நுழைந்து அனைவரையும் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டனர்.

*****

ஒன்றேகால் மணி நேரத்திற்கு முன்…

சஞ்ஜயிடம் அலைபேசியில் பேசிய பின்பு சற்று வருத்தத்துடன் இருந்த சஞ்சீவை நோக்கிய கோகுல், "என்னடா ஆச்சு..? பாஸ் எங்க போயிருக்காரு..?" என்றான் சஞ்சீவிற்காக சாத்துக்குடியை பிழிந்தவாறே.

"ரஞ்சுவ பாக்க போயிருக்காரு டா..." என்றான் ஏதோ யோசனையில்.

'ரஞ்சு' என்று அவன் கூறியதைக் கேட்ட கோகுல், சாறு பிழிவதை நிறுத்திவிட்டு ஆவலுடன் அவனருகே வந்தான்.

அதை எதையும் கவனிக்காத சஞ்சீவ், ரஞ்சுவிற்கு ஆபத்து, அதுவும் தன்னால் தான் என்று நினைத்து வருந்தினான். அவன் எதற்காக ரஞ்சுவை சந்தித்தான், எதற்காக அவளிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டான் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

'இவன் என்ன ஏதோ சொல்ல வந்தான்... இப்போ அமைதியா இருக்கான்...' என்று யோசித்த கோகுல், சஞ்சீவை சுரண்ட, அப்போது தான் சுயத்திற்கு வந்தான் சஞ்சீவ்.

"என்ன டா..." என்று சஞ்சீவ் கோகுலிடம் வினவ, "என்னடாவா... நீ தான டா ஏதோ கதை சொல்ல வந்த..." என்று பிசிபிசுத்த கைகளை துடைத்துக் கொண்டே கோபத்துடன் கூற, சஞ்சீவோ ரஞ்சுவைப் பற்றி சுருக்கமாக கூறி, அவள் வீட்டில் நடந்ததையும் கூறினான்.

"இப்படியெல்லாமா இருப்பாங்க... ச்சு பாவம் அந்த பொண்ணு... ஆமா, நீயெப்படி அந்த பொண்ணு கூட பிரெண்டான... எங்கயோ இடிக்குதே..." என்று யோசிக்கும் பாவனையில் இருக்க, சஞ்சீவ் தான் "ஒரு ஜூஸ எவ்ளோ நேரமா போடுவ..." என்று கேட்டு அவன் சிந்தனைக்கு அணைகட்டினான்.

அவனை ஒரு பார்வை பார்த்து, "ஹ்ம்ம் எத்தன நாளைக்கு இப்படி மறைச்சு வப்பன்னு பாக்குறேன்..." என்று முணுமுணுத்துவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றான்.

சஞ்சீவிற்கு கோகுலிடம் இதைப் பற்றி மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால், இப்போது பழையதைப் பற்றி பேசி, இருக்கும் நிம்மதியைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

அதேபோல், இவர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் விளையாடியிருக்கிறாள் என்பது வரை மட்டுமே கோகுலிற்கு தெரியும். அந்த சம்பவங்களின் போது அவன் லண்டனில் படித்துக் கொண்டிருந்ததால் அதைப் பற்றி அறியவில்லை. அதன்பின்னும் அதைப் பற்றி அவனாக வினவியதில்லை.

கோகுல் கொடுத்த பழச்சாறை பருகிய சஞ்சீவிற்கு, அப்போது தான் சஞ்சய் ரஞ்சுவின் தோழிகளுக்கு விபரம் கூறி அனுப்பி வைக்க சொன்னது நினைவிற்கு வந்தது.

உடனே சஞ்சுவிற்கு அழைத்தான்.

*****

"ஆன்ட்டி, உங்களுக்கு முடியலன்னா சொல்ல வேண்டியது தான... முடியாம வேலை செஞ்சு பாருங்க... இப்படி ஹாஸ்பிடல்ல ட்ரிப்ஸ் போடுற நிலைமைக்கு வந்துருக்கீங்க..." என்று தர்ஷு கூற, சஞ்சுவும் அதை ஆமோதித்தவளாக, "ஆமா ராது... முடியலன்னு கிருஷ் கிட்ட சொன்னா, அவரே சமைச்சுருப்பாரு..." என்று ராதாவின் அருகில் நின்றிருந்த கிருஷ்ணனை நோக்கி கண்ணடித்தாள்.

அங்கு நிலவும் சூழலை இலகுவாக்கவே அவள் இவ்வாறு கூறுகிறாள் என்பதை அங்கிருந்த அனைவரும் புரிந்து கொண்டனர்.

"இப்போ எதுக்கு அவர கிருஷ்ன்னு கூப்பிடுற..." என்று ராதா வினவ, "ஹான்... கிருஷ்ஷ கிருஷ்ஷுன்னு கூப்பிடாம, க்ரஷ்ஷுன்னா கூப்பிட முடியும்... அட இது கூட நல்லா இருக்கே... 'கிருஷ் மை க்ரஷ்...'" என்று கிருஷ்ணனுடன் 'ஹை-ஃபை' அடித்துக் கொண்டாள்.

சில மணி நேரங்களுக்கு முன்...

ரஞ்சுவை பேருந்தில் ஏற்றிவிட்டு ராதாவின் இல்லம் சென்றனர் சஞ்சு மற்றும் தர்ஷு. இருவரையும் வரவேற்ற ராதா, அவர்களுக்காக சமைத்ததை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

ரஞ்சுவைப் பற்றியும் வளின் குடும்பத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று மயங்கினார். அன்று எழும்போதே ராதாவிற்கு தலை சுற்றலாகத் தான் இருந்தது. அதை ஒதுக்கிவிட்டு வருபவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்தார். எப்போதும் இல்லாத அளவிற்கான வேலை, அவரை மயக்கத்திற்கு தள்ளியது.

அப்போதிருந்து இப்போது வரை மூவரும் மாறி மாறி அவருக்கு அறிவுரை கூறிவிட்டிருந்தனர்.

மருத்துவரும் அவர் பங்குக்கு பல அறிவுரைகளைக் கூறி டிஸ்சார்ஜ் செய்ய, அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர்.

அப்போது தான் சஞ்சீவ் சஞ்சுவிற்கு அழைத்தான்.

"ஹலோ ப்ரோ... என்ன இது ஆச்சர்யமா எனக்கு கூப்பிட்டுருக்கீங்க..." என்று ஆவலாக வினவ, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், "இப்போ எங்க இருக்கீங்க..." என்று வினவினான்.

தர்ஷுவும் சஞ்சுவினருகே நடந்ததால், அவளின் 'ப்ரோ' என்ற அழைப்பு அவளிற்கும் கேட்டது. புருவ சுழிப்புடன் அவளைப் பார்த்தாள்.

சஞ்சீவின் குரலிலிருந்த தீவிரத்தில், "நாங்க **** ஹாஸ்பிடல்ல இருக்கோம்..." என்றாள் சஞ்சு.

"ஓ... யாருக்கு என்ன..?" என்று சற்று பதட்டத்துடனே வினவ, "எங்களுக்கு ஒண்ணுமில்ல ப்ரோ... எங்களுக்கு தெரிஞ்ச ஆன்ட்டிக்கு தான் ஹெல்த் இஸ்யூ.. " என்றாள்.

அதற்கு மீண்டுமொரு 'ஓ' போட்டவன், அவனிருந்த அறைக்கு வர சொன்னான்.

"ப்ரோ என்னாச்சு... உங்களுக்கு எதுவும் ப்ராப்ளமா..?" என்று சஞ்சு கேட்க, "வாங்க சொல்றேன்..." என்று அழைப்பைத் துண்டித்து விட்டான்.

'என்னவா இருக்கும்...' என்று யோசித்த சஞ்சுவைக் கலைத்தது கிருஷ்ணனின் குரல்.

"ரெண்டு பேரும் வாங்க... உங்க ஹாஸ்டல்ல விட்டுடுறோம்..." என்று கிருஷ்ணன் அழைக்க, "இல்ல அங்கிள்... நீங்க போங்க... நாங்க ஷாப்பிங் போகணும்..." என்றாள் சஞ்சு. தர்ஷு கேள்வியாக பார்க்க, கண்களாலேயே அவளை 'மறுத்துக் கூறாதே' என்று விட்டாள் சஞ்சு.

இருவரையும் பத்திரமாக போகுமாறு கூறிவிட்டு ராதா - கிருஷ்ணன் தம்பதி அவர்களிடம் விடைபெற்றனர்.

"எதுக்கு ஷாப்பிங் போகணும்னு பொய் சொன்ன..." என்று சஞ்சுவிடம் வினவ, "சஞ்சு ப்ரோ நம்ம ரெண்டு பேரையும் வர சொன்னாரு... என்னன்னு தெரியல தர்ஷு..." என்றாள்.

"ஹாஸ்பிடலுக்கா வர சொன்னாரு..." என்று கேட்ட தர்ஷுவிற்கும் குழப்பமே.

இருவரும் சஞ்சீவ் கூறிய அறைக்கு சென்றனர்.

அங்கு தலையில் கட்டுடன் இருந்த சஞ்சீவைக் கண்ட சஞ்சு, "ப்ரோ... என்னாச்சு..?" என்று வினவினாள்.

"யாரது... இவனுக்கு புது தங்கச்சி..." என்று திரும்பிய கோகுல் அங்கு நின்றிருந்தவளைக் கண்டு, "அச்சோ இவளா..." என்று முணுமுணுத்தான்.

அப்போது தான் அவனைக் கண்ட சஞ்சுவும், 'இந்த இடியட் எதுக்கு இங்க இருக்கான்...' என்று நினைத்தாள்.

இருவரையும் உள்ளே அழைத்த சஞ்சீவ், தனக்கு சிறு விபத்து ஏற்பட்டதாகக் கூறி சமாளித்தான்.

பின் இருவரிடமும் ரஞ்சு வீட்டில் நடந்ததைப் பற்றிக் கூறினான்.

அதைக் கேட்ட இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. ரஞ்சு அவர்களின் சொந்த மகள் இல்லை என்பதே அதிர்ச்சியாக இருக்க, அவர்கள் அவளை தனியே விட்டுச் சென்றதை ஜீரணிக்கவே முடியவில்லை. தாங்கள் சிறு வயதிலிருந்து பார்த்துப் பழகியவர்கள் இத்தனை சுயநலக்காரர்களா என்று எண்ணினர்.

முதலில் சற்று தெளிந்த தர்ஷு, "ஆமா, இது உங்களுக்கு எப்படி தெரியும்..?" என்று வினவினாள்.

'ப்ச்... சரியான கேள்விக்கு பிறந்தவளா இருக்கா... எப்போ பாத்தாலும் 'ஏன்', 'எதுக்கு', 'எப்படி'ன்னு' என்று மனதிற்குள் புலம்பிய சஞ்சீவ், "சஞ்சய், என் அண்ணா அங்க அந்த பண்ணை வீட்ட பாக்க போயிருக்காங்க..." என்று சஞ்சீவ் கூறியதும், "உங்க அண்ணாவா... அவரு தான் ரஞ்சுவ மொறைச்சதா..." என்று ஏதோ கூற வந்த சஞ்சு, சட்டென்று வாய் மூடிக் கொண்டாள்.

அதைக் கண்டுகொள்ளாமல் மேலும் தொடர்ந்தான் சஞ்சீவ்.

"ஜெய், ரஞ்சு வீட்டு சைட் போகும்போது, அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்குறவங்க பேசுனத கேட்டு வீட்டுக்குள்ள போய் பாத்தப்போ, ரஞ்சு மயங்கிக் கிடைந்தாளாம்... அதான், ப்ரோ அவள ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு எனக்கு கால் பண்ணி சொன்னாரு... ரஞ்சுக்கு மாரல் சப்போர்ட்டுக்காக, உங்க கிட்ட சொல்லி அங்க வர சொன்னதும் ஜெய் தான்..." என்று தனக்கு நடந்ததை மறைத்து அவர்களை சமாளித்தான்.

ரஞ்சுவின் நிலையறிந்து கலங்கிய தோழிகள், சஞ்சீவை கேள்விகளால் குடைவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அப்போதே அவளைக் காண செல்ல ஆயத்தமாயினர்.

இத்தகைய சூழலில், இருவரையும் தனியே அனுப்ப விரும்பாத சஞ்சீவ், "நீங்க ரெண்டு பேரும் தனியா போக வேணாம்... இவன் என் பிரெண்டு கோகுல்... இவன் கூட ரெண்டு பேரும் ஊருக்கு போங்க... சீக்கிரமாவும் போயிடலாம்..." என்று கூறினான்.

சஞ்சுவோ, 'இவன் கூடவா...' என்று யோசிக்க, தர்ஷுவிற்கு கோகுல் - சஞ்சு 'மோதல்' பற்றி தெரியாததால், அவள் சம்மதமாக தலையாட்டினாள்.

மனதிற்குள் புலம்பிய மற்றொரு ஜீவன் கோகுல். 'இவ சும்மாவே மொறைக்குறா... இவன் வேற அவ கூட கோர்த்து விடுறானே...' என்று புலம்பியபடி சஞ்சீவிடமிருந்து விடைபெற்றான்.

மகிழுந்தில் செல்லும்போது பல சமயங்களில் இருவரின் விழிகளும் மற்றவரின் விழிகளுடன் மோதிக் கொள்ள, பேச்சற்ற மௌனமான பயணமாக இருந்தது.

*****

சஞ்சு அவளின் திடீர் பயணத்தைப் பற்றி, சில பல தணிக்கைகளுடன் கூறி முடித்தாள்.

"ஆமா, உன்ன இங்க சேர்த்த அந்த சிடுமூஞ்சி எங்க..? அதென்ன எப்போ பாத்தாலும் மொறைச்சுக்கிட்டு..." என்று சஞ்சு கூறிக் கொண்டே போக, இடையில் அவளின் பேச்சை தடுத்து நிறுத்த ரஞ்சு மற்றும் தர்ஷு எத்தனையோ முயற்சிகள் செய்ய, அவற்றை சஞ்சு கண்டுகொள்ளவே இல்லை.

அப்போது தான் அனைவரின் பார்வையும் தன் பின்னே இருப்பதை உணர்ந்தவள், திரும்பிப் பார்க்க அங்கு முகத்தில் ஒரு பாவனையும் காட்டாமல் நின்றிருந்தான் சஞ்சய்.

சஞ்சயைக் கண்ட சஞ்சு, 'வாவ்... இவனும் அழகா இருக்கானே... இவன போயா சிடுமூஞ்சின்னு சொன்னா ரஞ்சு... நல்லா தான இருக்கான்...' என்று யோசித்துக் கொண்டே அவனைப் பார்த்து இளித்தவள், "ஹாய் ஐ'ம் சஞ்சு..." என்றாள்.

அவனோ, "ஓ நீங்க தான் அந்த சஞ்சுவா... ஒரே நேம்னு சஞ்சீவ் உங்கள சிஸ்டரா தத்தெடுத்துக்கிட்டானாமே... அவனுக்கு சிஸ்டர்னா எனக்கும் சிஸ்டர் தான..." என்று கேட்க, சஞ்சுவோ அதிர்ச்சியில், "என்னாது மறுபடியும் சிஸ்டரா..." என்று வாய்விட்டே கூற, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

இவர்களின் சிரிப்பு நீடிக்குமா...


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 
Top