All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பார்கவியின் "உன்மேல் காதல் தானா என்னுயிரே" - கதை திரி

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 ஹாப்பி சண்டே...😍😍😍 இதோ வாரத்துக்கு ஒரு அத்தியாயம் கணக்குலயிருந்து கொஞ்சம் கூட பிசகாம (😉😉😉) அடுத்த எபியோட வந்துட்டேன்...😊😊😊 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 இந்த எபியையும் படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁
(பிகு... எல்லாரும் ரஞ்சு - சஞ்சய் ஜோடின்னு சொன்னீங்களே... அப்போ ஷ்ரேயாக்கு யாரு ஜோடி...😜😜😜)

24613

காதல் 13

சற்று நேரம் பேசிவிட்டு விடைபெற்றனர் சஞ்சயும் கோகுலும். செல்லும்போது ரஞ்சுவிடம் தலையசைத்து விடைபெற்றான் சஞ்சய். இதைக் கண்ட சஞ்சுவும் தர்ஷுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

இத்தனை நேரமும் ஒன்றும் புரியாமல் குழம்பி நின்ற ஜீவன் கோகுல் தான்.

‘இந்த பொண்ணு சஞ்சீவுக்கே எப்படி பிரெண்டானான்னு குழப்பத்துல இருக்கேன். இதுல, எப்பவும் காலுல சக்கரத்த கட்டிவிட்ட மாதிரி ஓடிட்டே இருக்க பாஸ், இந்த பொண்ணுக்காக இவ்ளோ நேரம் இங்க வெயிட் பண்ணிட்டு இருந்துருக்காரு… என்னமோ நடக்குது… ஹ்ம்ம் கண்டுபிடிக்குறேன்…’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க, அவனின் முகத்தை எதேச்சையாக பார்த்த சஞ்சு, ‘இவன் ஃபேஸே சரியில்லயே… எப்போ பாத்தாலும் ட்ரீம்ஸுக்கு போயிடுறது…’ என்று நினைத்தாள்.

சஞ்சய் தான் அவன் தோள் தொட்டு நிகழ்விற்கு கொண்டு வந்தான். கோகுலும் ‘நல்ல பிள்ளை’ போல அனைவரிடமும் விடைபெற்று இறுதியாக சஞ்சுவை நோக்க, அவளோ அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.

‘இன்டர்நேஷனல் பியூட்டிஸ் எல்லாரும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… இந்த லோக்கல் பியூட்டிக்கு இருக்க ஏத்தத்த பாரேன்…’ என்று வழக்கம் போல மனதிற்குள் கூறிக்கொண்டு அவளிடம் விடைபெறாமல் வெளியே சென்றான்.

இருவரும் அங்கிருந்து சென்றதும், மலரும் ஓய்வெடுப்பதாகக் கூறி சற்று தள்ளியிருந்த மேஜையில் படுத்துவிட்டார்.

“என்ன மேடம் கண்ணுலேயே படம் காட்டுறீங்க…” என்று சஞ்சு ஆரம்பிக்க, “அதான…அவரு தலையசைக்குறதும் பதிலுக்கு இவ தலையசைக்குறதும் பாத்தா, நாம வரதுக்கு முன்னாடி வேறெதோ நடந்துருக்கும் போலயே…” என்றாள் தர்ஷு.

இருவரும் பழையதைப் பற்றி பேசி ரஞ்சுவின் மனதைக் கஷ்டப்படுத்த விரும்பாமல், அவளையும் கடந்து போனவற்றை நினைக்க விடாமல் இருக்கவே இந்த பேச்சை ஆரம்பித்தனர். ரஞ்சுவிற்கும் தோழிகளின் முயற்சி புரிந்ததால், சிரிப்புடனே அதை மறுத்து சமாளித்துக் கொண்டிருந்தாள்.

“அப்படியெல்லாம் எதுவுமில்ல… ஜஸ்ட் ஒரு கர்டஸிக்கு அவரு தலையசைச்சாரு… நானும் பதிலுக்கு தலையசைச்சேன்…” என்று ரஞ்சு கூற, “ஆமா, இவர தான நீ சிடுமூஞ்சி, மொறைச்சுட்டே இருக்காருன்னு சொன்ன… பாத்தா அப்படி தெரியலயே… இல்ல சஞ்சு…” என்று சஞ்சுவையும் கேலி செய்தாள் தர்ஷு.

“க்கும்… அதான் தங்கச்சி ஆக்கிட்டிங்களே… அது எப்படி நான் அழகா இருக்கான்னு சொல்றவங்க எல்லாம் என்ன தங்கச்சின்னு கூப்பிட்டு மனச கஷ்டப்படுத்துறாங்க…” என்று சஞ்சு கூற, “சஞ்சு, நாம தேடி போறவங்கள விட நம்மள தேடி வரவங்கள லவ் பண்ணா தான் வாழ்க்கை நல்லா இருக்குமாம்…” என்று ரஞ்சு சிரிப்புடன் கூறினாள்.

“ஹ்ம்ம் அவன் எப்போ வரது… நான் எப்போ லவ் பண்றது...” என்று சஞ்சு பெருமூச்சு விடும்போதே, “எக்ஸ்க்யூஸ் மீ” என்ற குரல் வாயிலருகே கேட்டது.

“எவன் அவன்…” என்று சஞ்சு திரும்பிப் பார்க்க, அங்கு கோகுல் கையில் சஞ்சுவின் அலைபேசியுடன் நின்றிருந்தான்.

*****

மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த நொடி…

“ச்சே மனசுல ஃபிளைட் ஓட்டுறேன்னு நெனப்பு… இவன் வந்த ஸ்பீடுக்கு இன்னும் கொஞ்ச நேரம் கார்ல இருந்துருந்தேனா ஒவ்வொரு பார்ட்டும் தனியா கழண்டுருக்கும் போல… இதே மாதிரி இன்னொரு தடவ ஓட்டட்டும்… ஓவர் ஸ்பீட்னு மம்மிட்ட கம்ப்ளைன் பண்ணி உள்ள தள்ள சொல்றேன்…” என்று தர்ஷுவிடம் பொரிந்து கொண்டிருந்தாள் சஞ்சு.

“முதல பாதைய விட்டு நீங்க தள்ளி நில்லுங்க…” என்ற குரல் கேட்க, பின்னாடி திரும்பாமலேயே அது கோகுல் தான் என்று கண்டுகொண்டாள் சஞ்சு (!!!)

தன்னைப் பற்றி குறை கூறியதால் உண்டான எரிச்சல் அவன் குரலில் அப்பட்டமாக தெரிந்தது. அவனிற்கு குறையாத எரிச்சலுடன் திரும்பினாள் சஞ்சு.

“ஹலோ, இவ்ளோ ஸ்பீடா போனா சொல்லத் தான் செய்வாங்க… நீங்க மட்டும்னா எப்படியோ போங்கன்னு விட்டுடுவேன்… எங்க உயிரும்ல இதுல சம்பந்தப்பட்டிருக்கு…” என்றாள் சஞ்சு கோபமாக.

“உங்க பிரெண்ட சீக்கிரம் பாக்கணும்னு கூட்டிட்டு வந்தது என் தப்பு தான்… அதுவும் என் பிரெண்டு கேக்குறானேன்னு மறுக்க முடியாம கூட்டிட்டு வந்தேன்…” என்று கூறி ஏதோ முணுமுணுத்துவிட்டு முன்னே செல்ல முயன்றான்.

வண்டி நிறுத்துமிடம் என்பதால், குறுகலான பாதையாக இருக்க, கோகுல் முன்னே செல்ல வேண்டும் என்றால் சஞ்சு தள்ளி நிற்க வேண்டும். அவளும் அவன் செல்வதற்கு வழி விட வேண்டி இடப்புறம் நகர, கோகுலும் இடப்புறம் நகர்ந்தான். சஞ்சு மீண்டும் வலப்புறம் நகர, கோகுலும் நகர்ந்தான்.

‘இதுங்க என்ன பார்க்கிங்ல சடுகுடு ஆடிட்டு இருக்குதுங்க…’ என்று நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள் தர்ஷு.

மூன்றாம் முறை அதே நிகழ்வு ‘ரிப்பிட் மோட்’டில் நடக்க, அவன் முன் கையை நீட்டி நிறுத்த சொல்லிவிட்டு, ஒரு பக்கம் நகர்ந்து மறு பக்கம் அவன் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தாள். அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டு சென்றான். மிகவும் குறுகலான பாதை என்பதால், செல்லும்போது இருவரும் இடித்துக் கொள்ள, அதில் இருவரின் கைகளிலிருந்து அலைபேசிகளும் கீழே விழுந்தன.

“ப்ச்…” என்ற சலிப்புடன் அவனை முறைத்துக் கொண்டே கைக்கு அகப்பட்ட அலைபேசியை எடுக்க, அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே அலைபேசியை எடுத்து அதைப் பார்க்காமலயே பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரும்பிச் சென்றான்.

முதலில் அவளின் பேச்சு எரிச்சலைக் கொடுத்திருந்தாலும், அதன்பிறகு நடந்த ‘விளையாட்டு’ அவனின் மனநிலையை மாற்றித் தான் இருந்தது. ஒரு புன்னகையுடன் சென்றான். அந்த புன்னகையை கவனிக்காத சஞ்சுவோ அவனின் முதுகை நோக்கி முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

“போதும் நீ அவருக்கு சூனியம் வச்சது… வா போலாம்…” என்று தர்ஷு தான் அவளை இழுத்துக் கொண்டாள்.

இருவருமே தங்களின் அலைபேசி மாறியதை அப்போது உணரவில்லை

*****

சற்று நேரம் முன்பு… சஞ்சு தன்னை கண்டுகொள்ளதாதை எண்ணிக் கொண்டே வெளியே சென்றான் கோகுல். சஞ்சய் முன்னே சென்று விட, ஏதோ யோசனையில் பின்தங்கியவனை அழைத்த செவிலி, “சார் உங்க போன் அடிக்குது…” என்றுவிட்டு கடந்து சென்றார்.

‘என் போன்னா…’ என்று யோசித்தவாறே அலைபேசியை எடுத்தவனிற்கு அப்போது தான் அது மாறிப் போனது தெரிந்தது.

‘க்கும் சும்மாவே வெட்டுற மாதிரி பாப்பா… இதுல அவ மொபைல் வேற என்கிட்ட இருக்கு… என்ன சொல்லப் போறாளோ…’ என்று பயந்துக் கொண்டே மீண்டும் ரஞ்சுவின் அறைக்குச் சென்றான்.

*****

இருவரும் அலைபேசி மாறிய கதையை சிந்தித்துக் கொண்டிருக்க, அதற்குள் நடந்ததை ரஞ்சுவிடம் கூறினாள் தர்ஷு.

எதுவும் பேசாமல் அலைபேசியை அவளிடம் நீட்டினான் கோகுல்.

‘இவன் என்ன கரெக்ட் டைம்ல என்ட்ரி குடுத்துருக்கான்… நான் சொன்னத கேட்டுருப்பானோ… மூஞ்சிய பாத்தா கேக்காத மாதிரி தான் இருக்கு…’ என்று சிந்தித்துக் கொண்டே தன்னுடையதை வாங்கிக் கொண்டு அவனுடையதைக் கொடுத்தாள்.

அவனும் அதை வாங்கிக் கொண்டு தலையசைத்து விடைபெற, யோசனையில் இருந்ததால் தன்னிச்சையாக அவனை நோக்கி தலையசைத்திருந்தாள் சஞ்சு.

உதட்டோரம் சிறு சிரிப்புடன் வெளியேறினான் கோகுல். “மாம் உங்க மருமகள கண்டுபிடிச்சுட்டேன்னு நெனைக்குறேன்…” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றவனை அங்கிருந்தவர்கள் வித்தியாசமாக நோக்கினர்.

*****

மருத்துவமனையிலிருந்து வெளியே தன் வாகனத்தை நோக்கிச் சென்ற சஞ்சயை தடுத்தது ஒரு குரல்.

“என்ன பாஸ் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க… பாதுகாப்பு குடுக்க வேண்டியவங்களுக்கெல்லாம் பாதுகாப்பு குடுத்தாச்சா…” என்று நக்கலாக கேட்டபடி அவன் முன்பு வந்தாள் ஷ்ரேயா.

அவளைக் கண்டதும் முகமும் உடலும் இறுக நின்றிருந்தான் சஞ்சய். ஏனோ அவளின் முகத்தைக் காண்பதற்கு கூட பிடிக்கவில்லை சஞ்சய்க்கு.

அதை உணர்ந்து கொண்டவளோ, “என்ன பாஸ், என் முகம் பாக்க சலிச்சுடுச்சோ… அப்படி இருக்க முடியாதே… ஏன்னா உங்க புது ஆளுக்கும் என் முகம் தானாமே… ஐ மீன் என்னையே ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கா…” என்று அவள் கிண்டலாக கூற, “உன்ன மாதிரி வெளியுருவத்துல வேணா இருக்கலாம்… ஆனா, நிச்சயம் உன்ன மாதிரி சுயநலக்காரி இல்ல…” என்றான் சஞ்சய் வெறுப்பாக.

“த்சு… எமோஷன் பத்தலையே… இன்னும் எமோஷன் வேணும்னா என்ன பண்ணலாம்…” என்று நாடியில் விரல் வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தவள், “என் லுக்-அ-லைக்குக்கு பெருசா ஒரு ஆக்சிடென்ட் பண்ணா இன்னும் கொஞ்சம் எமோஷன் கிடைக்குமோ…” என்று கூற, கோபத்தில் நரம்புகள் புடைத்தாலும் அதை அடக்கியவனாக, “அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… அவளுக்காக நான் கவலைப்படுவேன்னு வீணா கற்பனை பண்ணிக்காத…” என்றான் சஞ்சய்.

“வாய் பொய் சொன்னாலும் கண்ணு பொய் சொல்லாதாமே… அப்படியா சஞ்சு…” என்று வேண்டுமென்றே அந்த ‘சஞ்சு’வை அழுத்திக் கூறியவளைக் கண்டு பல்லைக் கடித்துக்கொண்டு, “கால் மீ சஞ்சய்…” என்றான்.

“ஓகே ஓகே… மிஸ்டர். சஞ்சய்… நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே… சரி நானே சொல்றேன்… அவள பத்தி நான் பேசும்போது உன் கண்ணுல தெரிஞ்ச ஸ்பார்க்… ப்பா… நான் லவ் சொல்லும்போது உன் கண்ணுல தெரிஞ்ச அதே ஸ்பார்க்… ச்சு மறக்க முடியுமா அந்த மொமெண்ட்ட… தி கிரேட் எஸ்.ஜே எனக்கு மண்டியிட்டு ப்ரொபோஸ் பண்ண தருணம்…” என்று சஞ்சய் மறக்க நினைப்பதை வேண்டுமென்றே கிளறினாள்.

அவளின் கணைகள் ஒவ்வொன்றும், அதன் இலக்கை அடைந்து தாக்கத் தான் செய்தன. ஆனால், இத்தனை வருட பழக்கம், அவனின் உணர்வுகளை வெளிக்காட்ட விடாமல் உள்ளுக்குள்ளேயே கட்டிப்போட வைத்தது.

“தாட்ஸ் வென் ஐ பிக்கேம் அ லூசர். திரும்பவும் அதே தவற நான் செய்வேன்னு நீ எப்படி எதிர்பாக்குற…” என்று சஞ்சய் வினவ, “இந்த காதல் இருக்குல காதல், அது யாரு மேல எப்போ வரும்னு தெரியாது… சட்டுன்னு வந்துடுமாம்… அண்ட் உன்னையும் உன் தம்பியையும் எனக்கு நல்லாவே தெரியும்… ‘அன்பு’ன்னு சொன்னா போதும், உன் தம்பி நாய் குட்டி மாதிரி பின்னாடியே வந்துடுவான்… யூ நோ, இப்பவும் எனக்கு சான்ஸ் இருக்கு…” என்று கண்ணடித்துக் கூறினாள்.

அதில் அடக்கி வைத்த பொறுமையெல்லாம் நொடியில் பறக்க, அவள் கழுத்தை அழுத்திப் பிடித்து, “ஜஸ்ட் ஷட் அப்… இன்னொரு தடவ என்ன சார்ந்தவங்கள பத்தி ஏதாவது பேசுன, இங்கயே கொன்னுட்டு போயிட்டு இருப்பேன்…” என்றான் சஞ்சய்.

அப்போதும் திமிர் குறையாதவளாக, “என்…என்ன கொல்…ல்லனும்னு நீ நெனச்சுருந்தா நீ… இவ்ளோ நேரம்… என்கிட்ட பே..பேசிட்டு இருந்துருக்க மாட்…ட…” என்று திக்கித் திணறி கூற அவனும் அவள் கூறியதிலிருந்த உண்மையை உணர்ந்து சற்று அதிர்ந்து தான் போனான்.

எனினும் அதை வெளிக்காட்டதவாறு, “நான் உன்ன சும்மா விட்டதுக்கு நீயா ஒரு காரணத்த நெனச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல… எங்க குடும்பத்தையே அழிச்ச உனக்கு அவ்ளோ ஈஸியான தண்டனையெல்லாம் தர மாட்டேன்… லண்டன்ல மைக்கேல்னு பெரிய கன்ஸ்ட்ரஷன் கம்பெனி வச்சுருக்காரு… அவர தெரியுமா உனக்கு… ச்சு… யாருக்கிட்ட போய் தெரியுமான்னு கேக்குறேன் பாரேன்… உன் பிசினஸ அவருக்கிட்ட இருந்து தான ஆரம்பிச்ச… அப்பறம் ராபர்ட், வில்சன்… ஹ்ம்ம் இன்னும் கலெக்ட் பண்ணிட்டே இருக்கேன்… ஆனா, சும்மா சொல்லக்கூடாது… நீ ஏமாத்துன எல்லாருமே பெரிய ஆளுங்க தான். உன்ன வெளிப்படையா தேடுனா, அவங்க டிக்னிட்டி குறைஞ்சுடுமோன்னு இவ்ளோ நாள் பயந்துட்டு இருந்தாங்களாம்… அதுல உன்ன பாராட்டியே ஆகணும்… பட் நோ மோர் கேம்ஸ்… இவ்ளோ நாள் நீ விளையாடினத நாங்க பாத்தோம்… இப்போ நான் ஆடப்போற விளையாட்ட நீ பாரு…” என்று நக்கலாக கூறினான்.

சஞ்சய் கூறியதைக் கேட்டவுடன் ஷ்ரேயாவின் முகம் இருண்டு போக, சற்று நேரத்திலேயே அதிலிருந்து வெளிவந்தவள், “இதுக்காகவே உன்ன அலற வைக்கணும்… என்ன இவ்ளோ நாள் ஓடவிட்ட அத்தன பேரையும் சும்மா விட மாட்டேன்… இப்போ தான் உன்னோட வீக் பாயிண்ட்… சாரி சாரி வீக் பாயின்ட்ஸ் என்னன்னு தெரிஞ்சுடுச்சே…” என்று வஞ்சத்துடன் கூறினாள்.

அதைப் பற்றி சற்றும் கவலைக்கொள்ளாமல், “என்ன ஆதரவுக்கு ஆள் இருக்குன்னு தைரியத்துல பேசுறியா… அந்த புது ஆள் யாருன்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சுடும்… அப்பறம் ரெண்டு பேரையும் சேர்த்தே நல்லா கவனிக்கிறேன்…” என்றான் சஞ்சய்.

அதைக் கேட்டு சிரித்தவள், “நீ உன்னோட எதிரிய நேர்ல பாக்கும்போது உன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு பாக்க ரொம்ப ஆவலா காத்திருக்கேன்…” என்று கோணல் சிரிப்பு சிரிக்க, சஞ்சயின் மனமோ அப்படி அதிரும் அளவிற்கு யாராக இருக்கும் என்று தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது.

“எனிவேஸ் பெஸ்ட் ஆஃப் லக் மிஸ்டர். சஞ்சய். சீக்கிரமா என் காலுல விழ வாழ்த்துக்கள்… போறதுக்கு முன்னாடி ஒரு டவுட்… சப்போஸ் உன் தம்பியா.? காதலியான்னு.? ஒரு சூழ்நிலை வந்தா நீ யார காப்பாத்துவ… யோசிச்சு வை நெக்ஸ்ட் மீட் பண்றப்போ ஆன்ஸர் சொல்லு… பை…” என்று அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

அவள் சென்றதும் தன் மகிழுந்திற்குள் அமர்ந்தவன், இருக்கையில் தலை சாய்த்துக் கொண்டான். என்ன தான் அவளிடம் பேசி அனுப்பி விட்டாலும், அவள் கிளறிய விஷயங்கள் அவன் மறைத்து வைக்க முயன்ற காயங்களில் மீண்டும் கத்தியை வைத்து திருகியதைப் போல் வலித்தது.

எந்தவொரு மனிதனும் அவன் அடைந்த தோல்வியை மறக்க மாட்டான். அதுவும், பெரிய பெரிய வியாபாரங்களை எல்லாம் வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பவன் சிறு பெண்ணிடம் தோற்று போனதை எளிதில் மறக்க முடியுமா…

சஞ்சயும் அவன் தோற்று போன பக்கங்களைத் தான் திருப்பிக் கொண்டிருந்தான்.

எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ… கோகுல் வந்து கதவைத் தட்டியதும் தான் நிகழ்விற்கு வந்தான்.

“என்னாச்சு பாஸ்..?” என்று கோகுல் வினவ, “நத்திங்… நீ வந்த கார்ல வந்துடு…” என்று கூறிவிட்டு சென்று விட்டான் சஞ்சய்.

‘நல்லா தான இருந்தாரு… எந்த காத்து கருப்பு அடிச்சுதுன்னு தெரியலையே…’ என்று புலம்பியபடி அவனைப் பின்தொடர்ந்தான் கோகுல்.

*****

சஞ்சய் அங்கிருந்து கிளம்பி நேராக சஞ்சீவ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்தான்.

அவனைக் கண்டதும் சஞ்சீவ், “ஜெய், ரஞ்சுக்கு என்னாச்சு…” என்று வினவினான்.

“பேரண்ட்ஸ்… ஐ மீன் இத்தன வருஷமா பேரண்ட்ஸ்னு நெனச்சுட்டு இருந்தவங்க விட்டுட்டு போனதுல கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ட்டா இருந்துருக்கா… இப்போ பரவால…” என்றான்.

“தேவையில்லாம நான் வேற இந்த பிரெச்சனைல இழுத்து விட்டுட்டேன்ல…” என்று சஞ்சீவ் கூற, அதற்கு சஞ்சயிடமிருந்து எந்த பதிலும் வராத காரணத்தினால் அவனைப் பார்த்த சஞ்சீவ், அவன் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் ஏதோ உணர்ந்தவனாக, அதை உறுதிப்படுத்திக் கொள்ள அவனிடமே வினவினான்.

“ஷ்ரேயாவ பாத்தேன்…” என்று சஞ்சய் கூறியதைக் கேட்டதும் சஞ்சீவ் எதுவும் பேசாமல் தனக்குள் இறுகிப் போனான்.

சில நொடிகள் கழித்தே வாய் திறந்தான் சஞ்சீவ். “எங்க பாத்த..?” என்ற கேள்விக்கு, அவனிடம் சொல்ல வேண்டியவற்றை மட்டும் சொல்லி, ரஞ்சுவின் பாதுகாப்பைப் பற்றியும் கூறினான் சஞ்சய்.

இவர்கள் இருவரும் பேசுவதைக் கவனித்த கோகுல் முதலில் எதுவும் புரியாமல் முழிக்க, பின் அவர்களின் பேச்சைக் கூர்ந்து கவனித்ததில், ஷ்ரேயா என்ற பெண் தான் இவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமானவள் என்பதைப் புரிந்து கொண்டான். மேலும், அவளால் ரஞ்சுவிற்கும் ஆபத்து என்பதையும் இருவரின் பேசிலிருந்தும் புரிந்து கொண்டான்.

‘ஓ இதுக்கு தான் பாஸ் அந்த லோகேஷ அந்த பொண்ணுக்கு பாடி-கார்ட்டா இருக்க சொன்னாரா…’ என்று அவனே ஒரு முடிவுக்கு வந்தான்.

கோகுலின் நினைவு ரஞ்சுவிடமிருந்து சஞ்சுவிடம் தாவியது. ‘இந்த லோகேஷ் பையன் நம்மள விட கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்சம் பெர்சனாலிட்டில முன்ன இருக்கானே… சஞ்சு குட்டி ட்ராக் மாறி அங்குட்டு போயிடுமோ… எதுக்கும் ஒரு கண்ண அந்த லோகு பையன் மேல வைக்கணும்…’ என்று நினைத்துக் கொண்டான்.

கோகுல் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பதைக் கண்ட மற்ற இருவரும், தங்களின் பிரச்சனையைப் பற்றித் தான் எண்ணிக் கொண்டிருக்கிறான் (!!!) என்று நினைத்து அவனை அழைக்க, அவனோ அவனின் ‘சஞ்சு குட்டி’யுடன் டூயட் ஆடிக் கொண்டிருந்தான்.

“டேய் கோகி…” என்று சஞ்சீவ் சத்தமாக அழைக்க, அப்போது தான் நிகழ்விற்கு வந்தான் கோகுல்.

“என்னாச்சு…?” என்று ‘நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம்’ போல் முழிக்க, “என்னத்த டா இவ்ளோ நேரமா யோசிச்ச…” என்றான் சஞ்சீவ்.

“அது… அது வந்து…” என்று கோகுல் திக்க, “டேய் என்னடா பண்ணிட்டு இருக்க… தயவு செஞ்சு இது தான் வெட்கம்னு மட்டும் சொல்லிடாத…” என்று சஞ்சீவ் கூறினான்.

“ப்ச் போ டா… நான் எங்க மம்மிக்கு ஏத்த மருமகள பாத்துட்டேன் டா…” என்று மீண்டும் அந்த அரிய வகை ‘வெட்கத்துடன்’ கூறினான்.

சஞ்சீவ் யோசனையாக, “அந்த மூணு பேர்ல யாரு டா..?” என்று வினவ, சஞ்சய் கூட கோகுலைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அது வந்து மச்சான்… உன் தங்கச்சி தான் டா…” என்று கோகுல் இளித்துக் கொண்டே கூறியதும் தான் இரு சஞ்சுக்களும் சீராக மூச்சு விட்டனர்!!!


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க...👇👇👇


 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 ஹாப்பி சண்டே...😁😁😁 போன எபில சஞ்சய் - ரஞ்சு தான் ஜோடின்னு நிறைய பேர் சொல்லிருந்தீங்க... அதுல ஷ்ரேயா குறுக்க வந்தா, என்ன திட்டக்கூடாதுன்னு இப்போவே சொல்லிட்டேன்...😉😁😉 இதோ அடுத்த அத்தியாயம் படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😍😍😍

24723

காதல் 14

அன்றைய நாளை மருத்துவமனையிலேயே கழித்தவர்கள், அடுத்த நாள் மருத்துவர் வந்து ரஞ்சுவின் நிலையை சோதித்துப் பார்த்ததும் கிளம்பினர்.

கிளம்பும்போதே ரஞ்சு மலரிடம், “ஆன்ட்டி, நான் எங்க வீட்டுக்கே போறேன்…” என்று கூற, மலரோ, “அங்க போய் தனியா என்ன பண்ணுவ ரஞ்சு..?” என்று கேட்டதும், விரக்தியாக சிரித்தவள், “இனிமே நான் அத பழகத்தானே வேணும், ஆன்ட்டி…” என்றாள் ரஞ்சு.

மலரின் மனமோ அவளின் விரக்தி பேச்சில் துடித்தது. ‘இன்னும் என்னென்ன கஷ்டங்கள நீ அனுபவிக்கணுமோ…’ என்று ஊமையாய் (!!!) அழுதது.

“இன்னொரு தடவ இப்படி பேசுனா என்ன பண்ணுவேன்னு தெரியாது ரஞ்சு. விட்டுட்டு போனவங்கள நெனச்சு நீ எதுக்கு வருத்தப்பட்டுட்டு இருக்க… ஏன் நாங்க எல்லாம் இல்லயா உன்கூட… அப்படி என்ன தனிமைய நீ பழகிக்கப்போற…” என்று தர்ஷுவும் சஞ்சுவும் மாறி மாறி அவளை அதட்ட ஆரம்பிக்க, ரஞ்சுவே, “போதும் போதும்… இனி அப்படி சொல்ல மாட்டேன்…” என்று கூறும்வரையில் அவளை விடவில்லை.

“ஆனா, இப்போ அந்த வீட்டுக்கு போகணும்னு தோணுது…” என்று பாவமாக கூற, ஒரு பெருமூச்சுடன் மற்றவர்கள் சம்மதித்தனர்.

ரஞ்சுவை சஞ்சுவுடன் அனுப்பிவிட்டு சிறிது பின்தங்கினாள் தர்ஷு. மலரின் முகம் தெளிவடையாமல் இருப்பதைக் கண்டவள், ரஞ்சு தனியாக இருப்பதை நினைத்து வருந்துகிறார் என்று நினைத்துக் கொண்டவள், “அத்த, ஃபீல் பண்ணாதீங்க… அவள தனியா விட மாட்டோம்… அவளுக்கு ஏனோ அங்க இருக்கணும்னு இருக்கு… அவளையும் ‘இத பண்ணாத, அத பண்ணாத’ன்னு சொல்லி ஸ்ட்ரெஸ் பண்ண வேணாம்… நானும் சஞ்சுவும் அங்க அவ கூட துணைக்கு இருக்கோம்…” என்று கூறி தேற்றினாள்.

மலரின் வருத்தத்திற்கான காரணத்தை அறியாமல் தர்ஷு அவரை சமாதானப்படுத்த வேண்டி இதை சொல்லியிருந்தாலும், அவள் கூறிய, ‘தனியா விட மாட்டோம்’ என்ற வாக்கியம் அவரின் மன சஞ்ஜலத்திற்கு மருந்தாக அமைந்தது என்று கூறினால் அது மிகையாகாது.

மருமகளின் கைகளைப் பற்றிக் கொண்டவர், “மூணு பேரும் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும்…” என்று எப்போதும் கூறுவதைக் கூற, “இத நீங்க சொல்லணுமா அத்த…” என்று தர்ஷுவும் அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

“ரஞ்சு, இப்போ நீ அந்த வீட்டுக்கு போனா ஒழுங்கா ரெஸ்ட் எடுக்க மாட்ட… சோ இன்னைக்கு ஒருநாள் எங்க கூட வா…” என்று தர்ஷு அழைக்க, “இல்ல தர்ஷு… நா… நான் அங்கயே போறேன்… நீங்களும் என்கூட வாங்களேன்…” என்று முதலில் மறுத்தவள் அவர்களையும் தன்னுடன் வர அழைத்தாள்.

அங்கிருந்த மூவருக்கும் அவளின் தயக்கமோ, மெல்லிய பிடிவாதமோ கருத்தில் பதியவில்லை போலும். ஏன், ரஞ்சுவிற்கே அவள் செய்ய நினைத்த காரியம் சரியா தவறா, இதனால் புதிதாக பிரச்சனைகள் வருமா என்பது சரிவர தெரியவில்லை. இருந்தாலும், மனதில் உறுத்திக் கொண்டிருப்பதை முழுதாக களைந்து விட்டால் சற்று நிம்மதியாக இருக்கும் என்றும் அவளிற்கு தோன்றியது.

இந்த குழப்பங்களினுடே அவளின் வீட்டிற்கு வந்தனர். ரஞ்சுவை வீட்டில் விட்டவர்கள், “ஒன் ஹவர்ல ஃப்ரெஷ்ஷாகிட்டு வந்துடுறோம்…” என்றுவிட்டு சென்றனர்.

தான் செய்ய நினைக்கும் காரியத்திற்கு தனிமையும் அவசியம் என்பதால், எதுவும் கூறாமல் தலையசைத்து அனுப்பி வைத்தாள் ரஞ்சு.

*****

சஞ்சுவைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்த கோகுலை, சஞ்சயும் சஞ்சீவும் வெகு நேரமாக அழைத்தும் பயனில்லாததால், ‘கனவிலேயே டூயட் ஆடி தொலையட்டும்’ என்று விட்டுவிட்டனர் இருவரும்.

ஆனால், அந்த பெருந்தன்மை கோகுலின் அலைபேசிக்கு இல்லை போலும், அது அவனின் சிந்தை கலைக்க இருபதாவது முறையாக கூப்பாடு போட்டது.

மருந்தின் வீரியத்தால் உறக்கம் வர சொக்கியிருந்த சஞ்சீவை அலைபேசி சத்தம் தூங்க விடாமல் செய்ய, ‘கோகுல் கோகுல்’ என்று கத்திப் பார்த்தவன், வெறுத்துப் போய் தன்னருகில் இருந்த தலையணையை அவனை நோக்கி எரிந்திருந்தான்.

கனவு கலைந்த எரிச்சலில், திரும்பிப் பார்த்த கோகுல், அப்போது தான் இவர்களின் சத்தம் கேட்டு உள்ளே வந்து தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருந்த சஞ்ஜயைக் கண்டு திட்ட திறந்த வாயை மூடிக் கொண்டான்.

இருபத்தியோராவது முறையாக ‘காட் தி மேன் வித் தி பிளான் ரைட் ஹியர்’ பாடல் ஒலிக்க, “டேய் அத அட்டெண்ட் பண்ணி தொலையேன்டா…” என்று கத்தினான் சஞ்சீவ்.

‘இவன் எதுக்கு இப்போ கத்துறான்…’ என்று நினைத்தவாறே அலைபேசியின் புறம் பார்வையைத் திருப்ப, அவனின் தாய் தான் அழைத்திருந்தார்.

‘ஆஹா, என்ன மம்மி கரெக்ட் டைம்ல கால் பண்றாங்க… ஒரு வேள இவங்க ஏதாவது போட்டுக் குடுத்துருப்பாங்களோ…’ என்று எண்ணியவாறே அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தான்.

“டேய் கோகுல், எத்தன தடவ டா கால் பண்றது… கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா உனக்கு…” என்று ஆரம்பித்து இந்திய தாய்மார்கள் திட்டுவதை அட்சரம் பிசகாமல், அவரின் கொஞ்சும் தமிழில் திட்டி முடித்தார் ஹெலன். அவரின் தமிழுக்கு உபயம் கோகுலின் தந்தை அமர்நாத் தான்.

“ஸ்ஸ் மாம்…” என்று கோகுல் ஆரம்பிக்க, “அம்மான்னு கூப்பிடுன்னு எத்தன தடவ சொல்றது…” என்று அதற்கும் எகிறினார் ஹெலன்.

“இதுக்கெல்லாம் காரணம் மிஸ்டர். அமர்நாத் தான… ஆஸ்திரேலியா வந்ததும் இருக்கு அவருக்கு…” என்றவன், “ம்மா, என் பொறுப்பு பத்தி உனக்கு தான் சரியா தெரியல…” என்று அவன் மனதைத் திறக்க ஆரம்பிக்க, “என்ன ஏதாவது பொண்ண பாத்துட்டு ஒளறிட்டு இருக்கியா…” என்று வினவினார்.

தன்னைப் புகழ்வார் என்றெண்ணிய கோகுல் அப்போது தான் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டிருந்தான். அதன் காரணமாக அண்ணனும் தம்பியும் ஹெலனின் பேச்சைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

“எதே ஒளருறேனா… ம்மா… நீ தான சொன்ன, உனக்கு இந்திய மருமக தான் வேணும்னு… உன் சந்தோஷத்துக்காக என் பின்னாடி சுத்தி சுத்தி வந்த லிசா, லிண்டாவ கூட வேணாம்னு ஒதுக்கி, உனக்காக இந்தியாக்கு வந்து பொண்ணு பாத்துருக்கேன்… நீ என்னடானா அசால்ட்டா ஒளருறேன்னு சொல்லிட்ட…” என்றான் கோகுல்.

“ஆமா, சொன்னேன் தான்… ஆனா, உனக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைப்பேன்னு நான் எங்க சொன்னேன்… முதல சஞ்சய், சஞ்சீவுக்கு முடிச்சுட்டு தான் உனக்கு… உன்ன யாரு அவசரப்பட்டு பொண்ணு பாக்க சொன்னா… இதுல பொறுப்பு பருப்புன்னு…” என்று எதுகை மோனையாக தமிழில் கலக்கினார் ஹெலன்.

“என்னாது… இவங்களுக்கு முடிச்சுட்டு தான் எனக்கா… அப்போ கடைசி வரைக்கும் சிங்கிள் தான்…” என்று வாய் விட்டு புலம்பியவனைக் கண்டவர்கள் புறத்தில் மட்டுமில்லாது அகத்திலிருந்து சிரித்தனர்.

சுயநலம் மிகுந்த இந்த உலகத்தில், நெருங்கிய வட்டத்திலிருந்தவர்களின் புதல்வர்களை, அவர்களின் காலத்திற்குப் பின், வேற்றளாக பார்க்காமல், அவர்களின் நலனில் அக்கறை கொள்பவர்கள் மிகச் சிலரே. அம்மிகச்சிலரில் ஹெலனும் ஒருவர்.

சஞ்சய் மற்றும் சஞ்சீவை தன் மகனிற்கு இணையாக தான் நடத்துவார் ஹெலன். வாரம் ஒருமுறை இருவரும் ஹெலனைப் பார்க்க வரவேண்டும் என்பது அவரின் கண்டிப்பான வேண்டுகோள். அதற்கிணங்க இந்தியா வரும்வரையிலும் கூட சஞ்சய் அவருக்காக நேரம் ஒதுக்கி அவரைப் பார்த்துவிட்டு தான் வருவான்.

சஞ்சீவ் ஆஸ்திரேலியாவை விட்டு சொல்லாமல் சென்றதில் அவருக்கு இப்போதும் வருத்தமே. கோகுல் அவனைக் கண்டுபிடித்து விட்டதைக் கூறியிருக்க, அப்போதைக்கு அவனைப் பற்றி வினவியதோடு விட்டு விட்டாலும், அவரால் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அதற்காகவே இந்த அழைப்பு. அதை நன்கறிந்திருந்த கோகுலும், அவருக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான்.

இவர்களின் பேச்சைக் கேட்டு சிரித்த சஞ்சீவின் குரல் செவியை அடைந்தாலும் வீம்பாக அவனைப் பற்றிக் கேட்காமல் இருக்கும் ஹெலனை இன்னும் வெறுப்பேற்ற எண்ணி, “சரி சரி… போதும் என்ன கிண்டல் பண்ணது கால் கட் பண்ணுங்க…” என்று சலித்துக் கொள்வதைப் போல கோகுல் பேச, ஹெலனனோ, “இப்போ எதுக்கு அவசரமா கால் கட் பண்ணனும்னு சொல்ற…” என்றார்.

“ஹான்… என் பாஸ் எனக்கு முக்கியமான வேலை குடுத்துருக்காரு… அத பாக்கணும்… சும்மா சும்மா கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்க…” என்று சஞ்சீவிடம் கண்ணடித்துக் கொண்டே கூறினான்.

அப்போது அவனிடமிருந்து அலைபேசியைப் பிடுங்கிய சஞ்சய், “அதெல்லாம் ஒரு வேலையும் இல்லாம வெட்டியா தான் இருக்கான் ஆன்ட்டி… வேலை பாக்க சொன்னா, அவன் லவர் கூட டூயட் ஆடிட்டு இருக்கான்…” என்றான்.

அவனின் இந்த மாற்றத்தில் திகைத்தது சஞ்ஜீவ், கோகுல் மட்டுமல்ல, எதிர்முனையிலிருந்த ஹெலனும் தான்.

என்ன தான் சிறு வயதில் இதே போல சில குறும்புகள் செய்திருந்தாலும், தந்தையின் கண்டிப்பினால் அவனின் குறும்புகள் எல்லாம் பள்ளி செல்ல துவங்கியபோதே குறைந்திருந்தது. கல்லூரியில் அடியெடுத்து வைத்ததும் எதிர்கால வாழ்வை நோக்கி தீவிரமாக உழைத்தவன், நிகழ்காலத்தை விட்டுவிட்டான்.

தொழிலில் நுழைந்த சில வருடங்களில் மீண்டும் அவன் வாழ்வில் வசந்தத்தின் சாயலை மட்டும் காண்பித்தது விதி. அதன் பின் சில பல காரணங்களால், எப்போதும் இல்லாத வகையில் இறுகித் தான் போனான்.

சஞ்சயின் இந்த பரிணாமங்களில், முதல் சொன்னவை சஞ்சீவ் மற்றும் கோகுல் பிறந்த சில வருடங்களில் நடந்ததால், அவற்றை இருவரும் கண்டதில்லை. அடுத்தடுத்த பரிணாமங்களிலும் அவன் இவ்வளவு இலகுவாக இருந்து அவர்கள் பார்த்ததில்லை. இருவரின் மீதும் சஞ்சய்க்கு பாசம் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிவிட மாட்டான்.

‘பாஸா இப்படி…’ என்று வாய் பிளக்காத குறையாக பார்த்துக் கொண்டிருந்த கோகுல், சஞ்சீவை நோக்கி கண்களால் சைகை செய்ய, சஞ்சீவோ உதட்டைப் பிதுக்கினான்.

இவர்களின் மௌன உரையாடல்கள் முடிவதற்கும் சஞ்சய் ஹெலனிடம் பேசிவிட்டு அலைபேசியை கோகுலிடம் நீட்டுவதற்கும் சரியாக இருந்தது.

இன்னமும் அதிர்விலிருந்து வெளிவராத கோகுலோ, சஞ்ஜயைப் பார்த்துக் கொண்டே அலைபேசியை வாங்கி காதில் வைத்தான். அலைபேசியை உரியவனிடம் சேர்த்ததும் வேலை முடிந்து விட்டதைப் போல சஞ்சய் வெளியே சென்று விட்டான்.

“டேய் கோகுல், நம்ம சஞ்ஜயா இது…” என்று மறுபுறத்தில் ஹெலன் வினவ, கோகுலோ “ம்ம்ம்” என்று முணுமுணுத்தான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு டா… நல்லா பேசி விளையாடிட்டு இருந்த பிள்ள, இறுகி போயிட்டானேன்னு நானும் உங்க அப்பாவும் வருத்தப்படுவோம்… இப்போ அவன் இப்படி பேசுறத பாக்கும்போது எப்படி இருக்கு தெரியுமா… ஹ்ம்ம் இத பாக்குறதுக்கு அவன் அம்மாக்கு குடுத்து வைக்கல…”

ஹெலன் உணர்ச்சி வேகத்தில் பேசிக் கொண்டிருக்க, கோகுல் அதையெல்லாம் கேட்டால் தானே… அவனோ மனதிற்குள் ஆயிரமாவது முறையாக, ‘நம்ம பாஸா இது’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனை, “யாரு டா அந்த பொண்ணு…” என்ற ஹெலனின் கேள்வி நிகழ்விற்கு அழைத்து வந்தது.

கோகுலின் மனதில் சட்டென்று ரஞ்சுவின் பிம்பம் வந்து போனது. மருத்துவமனையில் அவளிற்காக காத்திருந்த சஞ்சய், இருவரின் கண் பேசும் பாஷைகள் என்று ஒவ்வொன்றாக வலம் வர, ஹெலனின் சொற்கள் அவன் கபாலத்தின் உள்ளே செல்லவில்லை.

கோகுலை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவ், அவன் உறைந்த நிலையை உணர்ந்தவனாக, அவனிடமிருந்து அலைபேசியை வாங்கி, “ஹெலன் ஆன்ட்டி, உங்க பையன் ஃப்ரீஸ் ஸ்டேட்டுக்கு போயிட்டான்…” என்றான்.

சட்டென்று சஞ்சீவ் குரலைக் கேட்டதும், ஹெலனிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவரின் அமைதியை உணர்ந்த சஞ்சீவ், “ஆன்ட்டி, உங்க எல்லாருக்கிட்டேயும் சொல்லாம அங்கயிருந்து வந்தது தப்பு தான்… ஆனா, அப்போயிருந்த சிஷுவேஷன்ல என்ன முடிவெடுக்கணும்னே தெரியாம தான் இருந்தேன்… ஏனோ அங்கயிருந்து தூரமா போயிட்டா நல்லா இருக்கும்னு தோணுனதும் கிளம்பிட்டேன்…” என்றான்.

“நீ கிளம்புனதுக்கு நான் எதுவுமே சொல்லல… சொல்லவும் மாட்டேன்… மைண்ட் சேஞ்சுக்கு வேற இடம் போறேன்னு சொல்லிட்டு போயிருந்தா, நாங்க உன்ன தடுக்கவா போறோம்…” என்று முறுக்கிக் கொண்டவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் என்றாகி விட்டது சஞ்சீவிற்கு.

அதன்பின் பொதுவான நலவிசாரிப்புகள் நடந்தேற, சஞ்சீவின் மருத்துவமனை வாசத்தை அவரிடமிருந்து மறைத்து விட்டான்.

“எப்போ ஆஸ்திரேலியா வருவ சஞ்சீவ்..?” என்று ஹெலன் கேட்டதற்கு, “இங்க முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கு ஆன்ட்டி… முடிச்சுட்டு சீக்கிரமா வந்துடுறேன்…” என்றான்.

*****

அறையை விட்டு வெளியே வந்த சஞ்சய்க்கே தன்னை நினைத்து அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஏனோ இரண்டு நாட்களாகவே அவனின் மனநிலையில் மாற்றம் இருந்தது உண்மை தான். அதற்காக அவனால் இவ்வளவு இலகுவாக கோகுலை கேலி பேச முடியும் என்று அவன் நினைக்கவே இல்லை.

அதுவும், ஹெலனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, கோகுலின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த பின்னரே தான் செய்து கொண்டிருக்கும் காரியம் கருத்தில் பட, பேச்சை முடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.

‘எனக்கு என்னாச்சு… ஏன் நான் இப்படி பிஹேவ் பண்றேன்…’ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொள்ள, அவனின் மனமோ, ‘இது தான் முதல் முறைங்கிற மாதிரி என்கிட்ட கேக்குற…’ என்று கூறி, அவனின் கடந்த கால பக்கங்களிலிருந்து ஒன்றை உருவி அவனிற்கு படமாக் காட்டியது.


“சஞ்சு… ஏன் இப்படி எமோஷனலாகுறீங்க…”


“ஹ்ம்ம்… உனக்கு தெரியாது ரேயா… எங்க அம்மா கிட்ட மட்டும் தான் இவ்ளோ ஃப்ரீயா பேசுவேன்… சஞ்சுகிட்ட கூட இந்தவளவு ஃப்ரீயா பேசுனது இல்ல… அப்பாவ பத்தி தான் உனக்கே தெரியுமே… அவரால தான், என்னோட சின்ன வயசு சந்தோஷமெல்லாம் இழந்தேன்… இப்போ உன்னால நான் பழையபடி மாறுன மாதிரி இருக்கு… ஐ ஃபீல் லைவ்லி அண்ட் கம்ஃபர்ட்டபில் வித் யூ…”

“ஐ வில் பி வித் யூ ஆல்வேய்ஸ் சஞ்சு…”

பழைய நினைவுகளில் மூழ்கியவனின் மனமோ, ‘என்ன ஏமாத்திட்டு அவளோ சாதாரணமா உன்னால தப்பிக்க முடியும்னு நெனச்சுறாத ஷ்ரேயா...’ என்று பொங்கியது.

இதில், இப்போது எதற்கு அன்று தோன்றிய அதே உணர்வுகள் இன்றும் தோன்ற வேண்டும் என்று அவன் மனம் கூற வந்ததை அறியாமல் போனது அவன் தவறோ…

அவளைப் பற்றி நினைத்ததும் அவள் பேசியதும் நினைவிற்கு வர, ‘நான் ஷாக்காகுற அளவுக்கு யாரு…’ என்று சிந்தனை செய்து கொண்டிருந்தவன், ஏதோ தோன்ற லோகேஷிற்கு அழைத்தான்.

*****

தன் வீட்டிற்கு வந்தவளின் மனம் ரணமாக வலித்தது. கடந்து சென்றதை நினைத்து வருந்தி பயனில்லை என்பதால் மாடியில் தன்னறைக்குச் சென்றாள். அலுப்பு தீர குளித்துவிட்டு வந்தவள் வயிற்று பசியைக் கூட போக்க எண்ணாமல் நேராக சென்றது அந்த ஸ்டோர் ரூமிற்கு தான்.

வீட்டை விட்டு செல்லும்போது விஸ்வநாதன் கூறியது இன்னமும் அவள் காதுகளில் ஒலித்தது. அங்கிருந்த முக்காலியை எடுத்து போட்டு மேலே ஏறியவள், பரண் மேலிருந்த அட்டைப்பெட்டியை எடுக்க முயன்றாள். உயரமாக இருந்ததால் அவளால் அதை சுலபமாக எடுக்க முடியவில்லை. கைகளை வைத்து தட்டி தடவி ஒரு வழியாக அந்த பெட்டியை ஓரத்திற்கு கொண்டு வந்து விட்டாள். இவ்வளவையும் செய்தவள், அங்கிருந்த இன்னொரு பெட்டியைக் கவனிக்காமல் போனது தான் விதி செய்த சதியோ!

அந்த பெட்டியை மெதுவாக கீழே இறக்கி வைத்தவள், அதை பிரித்தாள். பல வருடங்களாக மேலே அடைத்து வைக்கப்பட்டதால் தூசி படர்ந்திருந்ததை அகற்றிவிட்டு, ஒருவித எதிர்பார்ப்புடன் உள்ளே இருந்தவற்றை பார்க்க ஆரம்பித்தாள்.

உள்ளே சில புகைப்படங்கள் இருந்தன. விஸ்வநாதனின் சிறு வயது புகைப்படங்கள், கமலத்தின் சிறு வயது புகைப்படங்கள் எல்லாம் இருந்தன. அவற்றுள் ஒரு புகைப்படம் மட்டும் சட்டமிடப்பட்டிருந்தது. அதில் சிறு வயது கமலமும், அவர் அருகில் மற்றொரு பெண்ணும் நின்றிருந்தனர். அதன் கீழே, ‘வித் லவ் இவாஞ்சேலின்’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.

ரஞ்சுவோ வெகுவாக குழம்பிப் போனாள். விஸ்வநாதன் கூறியதை வைத்துப் பார்த்தால், இந்த இவாஞ்சலின் தான் தன்னுடைய அன்னையாக இருக்குமோ என்று தோன்றியது ரஞ்சுவிற்கு. ஏனெனில், அந்த அட்டைப்பெட்டிக்குள் இருந்த மற்ற புகைப்படங்கள் எல்லாம், விஸ்வநாதனோ கமலமோ தனியே இருக்குமாறு இருந்தது.

அவளை யோசிக்க விடாதவாறு, வெளியே அழைப்பு மணி ஒலியெழுப்பி தோழிகள் வந்ததைக் கூற, அவசரமாக அந்த புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, தன்னறையில் மறைத்து வைத்தாள்.

மற்ற இருவரிடமும் அதை மறைக்கும் எண்ணம் இல்லையென்றாலும், தான் செய்யப்போவது சரியான செயலா என்று தெரியாத காரணத்தினால், தற்காலிகமாக அதை மறைத்து வைக்கலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.

“ஹோய் என்ன பண்ணிட்டு இருந்த இவ்ளோ நேரம்…?” என்று ரஞ்சு கதவைத் திறந்ததும் சஞ்சு வினவ, “இப்போ தான் குளிச்சுட்டு வந்தேன்…” என்றாள்.

“சரி வா வா.. எனக்கு ரொம்ப பசிக்குது… என் ஹிட்லர் மம்மி வரதுக்குள்ள நூடுல்ஸ் செஞ்சு சாப்பிட்டுடலாம்… இல்லனா நூடுல்ஸ் உடம்புக்கு கெடுதல்னு லெக்க்ஷர் எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க… நம்மளுக்கு எது தெரியுமோ அத தான செஞ்சு சாப்பிட முடியும்…” என்று பேசிக் கொண்டே இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள் சஞ்சு.

இதை எதிர் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ், “ப்பா என்ன பொண்ணு டா… வாய தொறந்தா மூடவே மாட்டிங்குது… ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு மாதிரி போல…” என்று நினைக்கும்போதே சஞ்சயிடமிருந்து அழைப்பு வந்தது.

“எப்பா… ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மூக்கு வேர்த்தா மாதிரி கூப்பிட்டுடுறாரே…” என்று முணுமுணுத்துக் கொண்டே அழைப்பை ஏற்றான்.

“சார், மேமோட பிரெண்ட்ஸ் வந்துருக்காங்க… வேற சந்தேகப்படுற மாதிரி யாரும் வரல சார்…” என்று சஞ்சய் கேட்கும் முன்பே நிலவரத்தைக் கூறிவிட்டான்.

“ஓகே… கேர்ஃபுல்லா இருங்க…” என்று அழைப்பைத் துண்டித்து விட்டான் சஞ்சய்.

*****

“ஷ்ரேயா, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு… நீ அவள பாக்க போனதே தப்பு… இதுல அந்த சஞ்சய் முன்னாடி வேற போயிருக்க… என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல… எவ்ளோ ரிஸ்க் எடுத்து இதுல இறங்கிருக்கோம்னு தெரியும்ல… ஸீ, அவனுக்கு உண்மை தெரிஞ்சா என்ன காப்பத்திக்க என்ன வேணும்னாலும் செய்வேன்…” என்று கோபத்தில் கத்தினான் ரிஷி.

அதையெல்லாம் கேட்டுக் கொள்ளாதவள் போல, அலச்சியத்துடன் அமர்ந்திருந்தவளைக் கண்டு உள்ளுக்குள் தகித்தது ரிஷிக்கு.

“ஷ்..ரே…யா… உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்…”

“ப்ச்… எதுக்கு இப்படி கிட்ட வந்து கத்திட்டு இருக்க ரிஷி… தெரியுது நீ என்கிட்ட தான் பேசிட்டு இருக்கன்னு… தனியா பேச நீயென்ன லூசா…” என்று நக்கலாக வினவ, ‘இந்த ஆப்பரேஷன் முடியட்டும் உனக்கு இருக்கு…’ என்று மனதிற்குள் கருவியவன், அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

“எத எப்போ பண்ணனும்னு உன்ன விட எனக்கு நல்லாவே தெரியும் ரிஷி… ஐ’ம் யுவர் சீனியர் இன் திஸ்… அண்ட் சஞ்சய பத்தி எனக்கு நல்லா தெரியும்… அவன சாதாரணமா அழிக்கக் கூடாது… அவன சுத்தி இருக்குறவங்க ஒவ்வொருத்தரும் அவன் கண்ணு முன்னாடி இறக்கணும்… அத பாத்து பாத்து அவன் துடிக்கணும்…” என்று கூற, ரிஷியே அவளின் வன்மத்தில் சிறிது ஆடித்தான் போனான்.

“அதுக்கு சஞ்சீவ டார்கெட்டாக்குனா பத்தாதா… எதுக்கு அந்த பொண்ணு… அண்ட் சஞ்சய்க்கு ஒன்னும் அந்த பொண்ணு மேல இன்ட்ரெஸ்ட் இருக்க மாதிரி தெரியலையே…” என்று தன் சந்தேகத்தை ரிஷி வினவ, கோணலாக சிரித்த ஷ்ரேயா, “இன்ட்ரெஸ்ட் இல்லனா என்ன, உருவாக்குவோம்… இன்னைக்கு அதுக்கான முதல் படிய எடுத்து வச்சாச்சு… இனி, அவன் அவள உருகி உருகி காதலிக்கிற அந்த நேரத்துல அவள தூக்கணும்… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா…” என்று திட்டம் தீட்டினாள் ஷ்ரேயா.

“என்னவோ… சஞ்சீவ்ங்கிற ஈஸியான ரூட்ட விட்டுட்டு, தலைய சுத்தி மூக்க தொடுற மாதிரி இருக்கு…” என்று முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான் ரிஷி.

என்னதான் ரிஷியை சமாளித்து விட்டாலும், அவளின் மனதிற்கு தெரியுமல்லவா இந்த திட்டத்தின் காரணம் என்னவென்று…


“என்ன விடுங்க சஞ்சு…”


“என்கிட்ட இருந்து தப்பிச்சு போக பாக்குறியா ஷ்ரேயூ…”

“ஹ்ம்ம்… தப்பிச்சு போக விட்டுட்டாலும்…”


“இன்னும் கொஞ்ச வருஷம் தான்… அப்பறம் நீயே நெனச்சாலும், விலக முடியாத மாதிரி உன்ன லாக் பண்ணிடுவேன்…”

அவளின் நினைவுகளைத் தடை செய்தது ரிஷியின் வருகை.

“கேக்க மறந்துட்டேன்… நீ என்ன பத்தி ஏதாவது சொன்னீயா..?” என்றான் பதட்டத்துடன்.

“ஹ்ம்ம் க்ளூ குடுத்துருக்கேன்… கண்டுபிடிக்குறானான்னு பாப்போம்…” என்றவளின் முகம் சற்று முன்னிருந்த இளக்கத்தை தொலைத்திருந்தது.


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍டொன்டொய்ங்.... சர்ப்ரைஸ்...😁😁😁 உலக வரலாற்றில் முதல் முறையாக, வெள்ளிக்கிழமைக்கு முன்னாடியே எபியோட வந்துட்டேன்...😜😉😜 இதுவரைக்கும் நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 தொடர்ந்து இதே மாதிரி ஆதரவு கொடுத்தீங்கன்னா, இப்படி பல சர்ப்ரைஸ் கிடைக்கும் பிரெண்ட்ஸ்...😁😁😁 ஷ்ரேயா ஃபேன்ஸ் 😜😜😜 யாராவது இருந்தீங்கன்னா, உங்களுக்கு சேட் நியூஸ் என்னன்னா, இன்னைக்கு நோ ஷ்ரேயா பார்ட்...😁😁😁

24825


காதல் 15

அடுத்த நாளே மலரிடம் கூறிக்கொண்டு, ஊருக்கு வந்து சேர்ந்தனர் மூவர் குழு. முதலில் ரஞ்சுவின் உடல்நிலை, மனநிலை என்று அனுப்ப மறுத்த மலரை, தர்ஷு தான் சமாதானப்படுத்தினாள்.

“அத்த, இங்க இருந்தா தான் அவ பழச நெனச்சு வருத்தப்படுவா… நீங்க கவலைப்படாதீங்க… நாங்க பாத்துக்குறோம்…” என்று தனியே அவரிடம் வாக்கு கொடுத்துவிட்டு வந்திருந்தாள்.

எப்போதும் போல, அந்த காலை நேர நடைப்பயிற்சி. சோர்வாக இருந்த காரணத்தினால், தர்ஷு அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, அவளை எழுப்பாமல், ரஞ்சு மட்டும் கிளம்பி வந்திருந்தாள்.

வழக்கமாக ஊரிலிருந்து வந்த அடுத்த நாள் காலை, இருவருமே நடைப்பயிற்சிக்கு செல்ல மாட்டார்கள். இப்போது ரஞ்சு இருக்கும் மனநிலையில் தூக்கம் தூரமாகிப் போக, காலை நேர காற்றை சுவாசித்தாலாவது மனம் வேறுபுறம் திரும்புமா என்று பரிசோதிக்கவே கிளம்பினாள் ரஞ்சு.

சில அடிகள் நடந்திருந்தவளின் மூளை முதல் நாள் அந்த சட்டமிடப்பட்ட புகைப்படத்தை ஆராய்ந்த நிகழ்வை எண்ணிப் பார்த்தது.

முதல் நாள், சஞ்சுவின் திட்டப்படி ‘நூடுல்ஸ்’ செய்து சாப்பிட்டதும், வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த வசுந்தரா அழைத்துப் பேசினார். அவர் வருவதற்கு இன்னும் சில நாட்கள் இருந்ததால், அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கூறினார். தர்ஷு மற்றும் சஞ்சுவிடம், ரஞ்சுவைக் கவனித்துக் கொள்ள சொல்லவும் மறக்கவில்லை.

அதன் பின்னான நேரம் சோம்பலாக கழிய, மற்ற இருவரும் வரவேற்பறையிலேயே உறங்கிவிட, ரஞ்சுவோ அவர்களின் தூக்கத்தை கலைக்காதவாறு எழுந்து தன்னறைக்கு சென்றவள், தான் மறைத்து வைத்த புகைப்படத்தை எடுத்தாள்.

சற்று நேரம் இவாஞ்சலினின் முகத்தையே பார்த்திருந்தவள், அதில் வேறு ஏதாவது துப்பு கிடைக்குமா என்று தேடினாள். புகைப்படத்தை அதன் சட்டத்திலிருந்து வெளியே எடுத்து திருப்பிப் பார்த்தவளிற்கு முகவரியும் தொலைப்பேசி எண்ணும் கிடைத்தது.

உடனே, தன் அலைபேசியிலிருந்து அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். மறுமுனையிலோ அந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற பதிவு செய்யப்பட்ட குரல் கேட்டது. என்ன தான் முதல் முறையிலேயே தான் நினைத்தது ஈடேறிவிடும் என்று எண்ணவில்லை என்றாலும், ரஞ்சுவின் மனம் சோர்ந்து தான் போனது. அவள் படிக்கும் கல்லூரிக்கு அருகில் அந்த முகவரி இருந்தது மட்டுமே அவளை மேலும் சோர்வுறச் செய்யாமல் தடுத்தது.

அவள் மனதிற்குள், ‘ஊருக்கு போனதும் நேராவே போய் விசாரிக்கலாம்…’ என்று கூறிக் கொண்டாள்.

அதை யோசித்துக் கொண்டே வந்தவள், வழியில் யாருடனோ மோதிக் கொள்ள, வலியில் லேசாக முனகினாள்.

“ஹே ஆர் யூ ஓகே..?” என்ற படபட குரலில் யாரென்று நிமிர்ந்து பார்த்தவள் வியந்து தான் போனாள்.

ஹூடட் டி-ஷர்ட் மற்றும் ட்ராக் பேண்ட் சகிதம் அங்கு நின்றிருந்தவன் சஞ்சய் தான். அவனின் தோற்றத்தைக் காட்டிலும் அவளை அதிர்ச்சியடைய செய்தது அவனின் குரலும் முகம் காட்டிய பாவமும் தான்.

அவளை வேறெதுவும் யோசிக்க விடாமல், அங்கிருந்த மேஜையில் அமரச் செய்தவன், “அப்படி என்ன தீவிரமான யோசனை… முன்னாடி யாரு வராங்கன்னு பாக்க மாட்டியா..?” என்று சற்று கடுமையுடன் வினவினான் சஞ்சய்.

‘அதான… என்னடா இன்னும் சிடுசிடுன்னு பேசலையேன்னு பாத்தேன்…’ என்று உள்ளுக்குள் சுணங்கிப் போக, அவளின் மனமோ முந்தைய மருத்துவமனை நிகழ்வை எடுத்துக் காட்டி, அவனிற்கு சார்பாக பேசியது.

ரஞ்சு அவளின் மனதோடு விவாதித்துக் கொண்டிருக்க, அவளின் நிலை கண்ட சஞ்சய் அவள் முன்பு கைகளை அசைத்து, “ஹலோ மேடம், கனவு கண்டுட்டே வாக்கிங் போவீங்களோ…” என்றான் கிண்டலாக.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்றவள், சுற்றிலும் தேட, அவளின் தேடுதலைக் கண்டுகொண்டவனாக, “உன் பிரென்ட் வரல…” என்றான்.

தான் ஏன் சஞ்சீவை அவளின் 'நண்பனாக கூறினோம் என்று சஞ்சயும் யோசிக்கவில்லை, அதைக் கேட்டவளிற்கும் அதை ஆட்சேபிக்க மனம் வரவில்லை போலும்.

சில நொடிகள் மெளனமாக கழிய, சஞ்சயே ஆரம்பித்தான். “இப்போ எப்படி இருக்கு..?”

“ம்ம்ம் இப்போ பரவால… தேங்க்ஸ் அன்னைக்கு ஹெல்ப் பண்ணதுக்கு…” என்று ரஞ்சு கூற, “எத்தன பேரு எத்தன விதமா தேங்க்ஸ் சொல்வீங்க…” என்று அவளிடம் சாதாரணமாக உரையாடினான்.

“ஆமா, அன்னைக்கே கேக்கணும்னு நெனச்சேன்… நீங்க எப்படி அங்க வந்தீங்க..?” என்று தன் சந்தேகத்தை வினவினாள் ரஞ்சு. சூழ்நிலை வேறாக இருப்பின், இதைக் கேட்டிருப்பாளா என்று தெரியாது. ஆனால், அவனின் இலகுவான பேச்சு அதைக் கேட்க வைத்தது.

மற்றவர்களை சமாளிப்பதில் அண்ணனும் தம்பியும் ஒரே போல யோசிப்பர் போலும். அன்று சஞ்சீவ் தோழிகள் இருவரிடம் சொன்னதையே சற்று மாற்றி கூறினான் சஞ்சய்.

“ஏன் உன் பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் கூட வரல…”, “உடம்பு சரியாகுற வரைக்கும் தனியா எங்கயும் போகாத…” போன்ற பேச்சுக்கள் இருவரிடமும் சரளமாக நிகழ, அதை அவர்கள் உணரவில்லை. ஆனால், இருவரையும் கண் கொத்திப் பாம்பாக கண்காணிக்கும் அந்த நபரின் பார்வையிலிருந்து தப்பவும் இல்லை.

இவர்கள் இருவரையும் கவனித்தது அந்த நபர் மட்டுமல்ல லோகேஷும் தான்.

“என்னடா இது… நம்மள வாட்ச் பண்ண சொல்லிட்டு, அந்த வேலைய இவரே பாக்குறாரு… அப்பறம் எதுக்கு தேவையில்லாம நானு…” என்று சலித்துக் கொண்டே அங்கிருந்த மேஜையில் அமர்ந்து, விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான்.

“லேட்டாச்சு நான் கிளம்புறேன்…” என்று எழுந்த ரஞ்சுவைத் தொடர்ந்து தானும் எழுந்தவன், “நான் சொன்னத மறந்துடாத… தனியா எங்கயும் போகக் கூடாது…” என்று எச்சரித்தவன், “டேக் கேர்…” என்று கூறினான்.

ரஞ்சுவும் அவன் கூறியவற்றிற்கு நன்றாக தலையாட்டியவள், அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

“திரும்பிப் பாக்குறேன்னு இப்பவும் யாரு மேலயாவது மோதிடாத.. “ என்று சஞ்சய் சற்று சத்தமாக கூறியதும் தான், தான் செய்து கொண்டிருக்கும் செயல் உரைக்க, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்.

அதை சிறு சிரிப்புடன் கண்டவன், அவள் அங்கிருந்து மறைந்ததும் வேகமாக சென்று நின்றது மேஜையில் சாய்ந்து சுகமாக தூங்கிக் கொண்டிருக்கும் லோகேஷின் முன்பு தான்.

அவனோ அதை அறியாமல் தூங்க, அவனின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டான் சஞ்சய்.

அப்போதும் கண் விழிக்காமல், தூக்கத்திலேயே அழைப்பை ஏற்றான் லோகேஷ்.

“லோகேஷ், எங்க இருக்கீங்க..?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சஞ்சய் வினவ, “இங்க தான் சார்… பார்க்ல…” என்றவாறே கண்களை லேசாக திறந்தவன் முன்பு, அகன்ற கால்களுக்கு விரிந்த நெஞ்சுடனும், லேசாக அரும்பிய வியர்வையுடனும் நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தவன் எழுந்து நின்றான்.

“இது தான் நீங்க பாத்துக்குற லட்சணமா..?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சஞ்சய் வினவ, “சார்… அது வந்து…” என்று தலையை சொரிந்தான் லோகேஷ்.

“ஐ டோன்ட் வான்ட் யுவர் சில்லி ரீசன்ஸ் லோகேஷ்… இனிமே இப்படி நடக்காம பாத்துக்கோங்க… அண்ட் இனி நான் கொஞ்சம் பிஸியா இருப்பேன்… இப்படி உங்கள அனுப்பிட்டு பின்னாடியே வந்து உங்களுக்கு சப்ஸ்டிட்யூட் வேலை பாக்க முடியாது…” என்று கூறிவிட்டு அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று சென்று விட்டான்.

இன்னும் தூக்கக் கலக்கத்தில் இருந்த லோகேஷோ, ‘என்னடா நடக்குது இங்க…’ என்று முழித்துக் கொண்டிருந்தான்.

“ஃபீல்டு ஒர்க் வந்தா ஜாலியா இருக்கலாம்னு பாத்தா, இப்படி எல்லாரு கிட்டயும் திட்டு வாங்க வேண்டியதா இருக்கே…” என்று புலம்பிக் கொண்டே தன் பணியைத் தொடர சென்றான்.

*****

சஞ்சய் பூங்காவிலிருந்து வீட்டிற்கு சென்றவன், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சஞ்சீவ் இருந்த மருத்துவமனைக்கு சென்றான். அவன் செல்லும் நேரம் தான், மருத்துவர் சஞ்சீவை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

பரிசோதனையை முடித்தவர் சஞ்சயிடம், “ஹி இஸ் ஆல்ரைட் நொவ்… ஆனாலும் தலைல அடிபட்டதுனால கொஞ்ச நாள் எந்தவித ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாம ஓய்வா இருக்குறது பெட்டர்…” என்று கூறிவிட்டு செல்ல, சஞ்சயோ சஞ்சீவிடம் திரும்பி, “டாக்டர் சொன்ன மாதிரி கொஞ்ச நாள் நீ ரெஸ்ட் எடுக்கணும்…” என்று கூறினான்.

“நோ வே ஜெய்… ஹோட்டல் போய் பாத்தே ரொம்ப நாளான மாதிரி இருக்கு… அப்பறம் இப்படி ஒரே இடத்துல இருக்குறதெல்லாம் எனக்கு செட்டாகாதுன்னு உனக்கே தெரியுமே…” என்று மறுத்து பேசியவனை கண்களாலேயே தடுத்து நிறுத்திய சஞ்சய், அடுத்த பத்து நிமிடங்களில் சஞ்சீவின் வாயிலிருந்தே வீட்டிலிருந்து ஓய்வெடுப்பதாக கூற வைத்திருந்தான்.

அதைக் கேலிச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கோகுல் புறம் திரும்பினான் சஞ்சய்.

‘அய்யயோ என்ன நம்ம பக்கம் திரும்புறாரு…’ என்று அதிர்ந்தவனிற்கு, சரியாக அதிரக் கூட அவகாசம் கொடுக்காமல், “அந்த ராஜசேகர் விஷயம் எண்னாச்சு கோகுல்..?” என்று வினவினான்.

“எந்த ராஜசேகர்…” என்று தன்னை மறந்து வெளியே கூறிவிட்டவனை பொசுக்கும் பார்வை பார்த்தவாறே நின்றிருந்த சஞ்சையைக் கண்டவன், ‘ஹ்ம்ம் இப்போ தான் பாஸ் இஸ் பேக் டு ஃபார்ம்… ஆனா இப்படி அவருக்கிட்ட முதல் ஆளா நான் மாட்டுவேன்னு எதிர்பார்க்கலையே… இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது…’ என்று வழக்கம் போல புலம்பினான் கோகுல்.

இப்போது இவர்களைக் கண்டு சிரிப்பது சஞ்சீவின் முறையானது. அதே ‘முறை’யை சஞ்சீவிற்கு திருப்பி விட்ட கோகுலின் கவனத்தை ஈர்த்த சஞ்சய், “என்ன சொல்லி சமாளிக்கன்னு தெரியலையா…” என்றான்

“பாஸ், நீங்க தான… ஃபர்ஸ்ட் சஞ்சீவ்… அதுக்கு அப்பறம்…. அந்த ராஜசேகர்…” என்று திக்கியவனை நோக்கி, “சஞ்சுவ கண்டுபிடிச்சு எத்தன நாளாச்சு கோகுல்..?” என்று கைகளைக் கட்டிக்கொண்டு வினவ, ‘ஐயோ, விட மாட்டிங்குறாரே… என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப வருத்தெடுக்குறாரே…’ என்று மண்டை காய்ந்தான் கோகுல்.

அவனின் நிலை சஞ்சீவிற்கு பாவமாக இருக்க, “விடு ப்ரோ… நெக்ஸ்ட் ஆக வேண்டியத பாக்கலாம்…” என்று கூற, ஒரு பெருமூச்சுடன் அதை ஒப்புக்கொள்வதைப் போல, “இனி இப்படி வெயிட் பண்ணிட்டே இருந்தா, அந்த ராஜசேகர பிடிக்க முடியாம போயிடும்… சோ நாமளே தேட வேண்டியது தான்…” என்று கூறினான் சஞ்சய்.

“ஓகே பாஸ் இன்னைக்கே தேட ஆரம்பிச்சுடலாம்…” என்று அவனிடம் மேலும் திட்டு வாங்காமல் தப்பிக்க இப்படி கூறினான் கோகுல்.

இருவரையும் பார்த்த சஞ்சீவ், “ஹலோ என்ன ரெண்டு பேரும் ஏதேதோ பிளான் பண்ணிட்டு இருக்கீங்க… நான் மட்டும் இப்படி நாலு சுவத்துக்குள்ள அடைஞ்சு இருக்கணும்… நீங்க மட்டும் உங்க வேலைய பாக்க போவீங்களா… அதெல்லாம் முடியாது… ஒன்னு எல்லாரும் அவங்கவங்க வேலைய பாக்க போவோம், இல்ல எல்லாரும் ரெஸ்ட் எடுப்போம்…” என்று சற்று பிடிவாதமாகவே கூறினான் சஞ்சீவ்.

சஞ்சய் எத்தனையோ சமாதானங்கள் கூறினாலும் கேட்க மறுத்துவிட, வேறு வழியின்றி சஞ்சய் சஞ்சீவுடன் வீட்டிற்கு செல்வது என்றும், கோகுல் ராஜசேகரைக் கண்டுபிடிக்க நியமித்திருக்கும் துப்பறிவாளரோடு செல்வான் என்றும் முடிவு செய்யப்பட்டது.

சில பல உத்தரவுகளை சஞ்சயிடம் பெற்றுக் கொண்டு ராஜசேகரைத் தேடிச் சென்றான் கோகுல். சஞ்சயும் சஞ்சீவும் அவர்களின் வீட்டை நோக்கி பயணப்பட்டனர்.

*****

தன் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு அறைக்கு வந்து கொண்டிருந்த ரஞ்சு இன்னமும் சிந்தனையின் பிடியிலேயே இருந்தாள். ஆனால், நடைப்பயிற்சிக்கு முன்னிருந்த சிந்தனையும் அதற்குப் பின்னான சிந்தனையும் முற்றிலும் வேறானது.

‘நான் ஏன் அவங்கள அப்படி பாத்தேன்…’ என்று நூறாவது முறையாக தன்னையே கேட்டுக் கொண்டு வந்தவள், மீண்டும் வழியில் யாரையோ இடித்துக் கொள்ள, சட்டென்று மனதில் அவன் கூறிய வார்த்தைகள் மறுஒலிபரப்பாக, தன்னை மறந்த நிலையில் நின்று கொண்டிருந்தாள்.

எதிரில் ரஞ்சுவின் செய்கைகளை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்த அவளின் விடுதி தோழி ஸ்ரீநிதி, அவளை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தாள்.

“ஹே ரஞ்சு என்னாச்சு உனக்கு..? நான் அத்தன தடவ கூப்பிடுறேன்… ஏதோ கனவுல இருக்க மாதிரி நின்னுட்டு இருக்க… ஹ்ம்ம் உன்ன பாத்தா வேறெதோ மேட்டர் மாதிரி தெரியுதே…” என்று கேலி செய்ய ஆரம்பித்தாள்.

அவளைப் பொறுத்தவரை, ரஞ்சு எப்போதும் போல ஊருக்கு சென்று வந்திருந்தாள். ரஞ்சுவின் குடும்பத்தைப் பற்றிய எந்த செய்தியும் அவளிற்கு தெரிவிக்கப்படவில்லை. அவள் மட்டுமல்ல, சஞ்சு தர்ஷு தவிர, வேறு ஒருவருக்கும் அதை தெரியப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே எப்போதும் போல ரஞ்சுவை கேலி செய்தாள் ஸ்ரீநிதி.

ஸ்ரீநிதியைப் பார்த்தவுடன் தான் அவளிடம் தான் கேட்க வேண்டிய உதவி நினைவிற்கு வந்தது. அதன் தாக்கத்தால் சஞ்சய் கூட அவளின் மனதின் ஒரு மூலைக்கு சென்று விட்டான்.

“ஹே ஸ்ரீ, நீ எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும்…” என்று வினவ, ஸ்ரீயும் அவளின் முக மாறுதலைக் கவனித்தவாறே, “என்ன ஹெல்ப் ரஞ்சு… சொல்லு கண்டிப்பா பண்ணிடலாம்…” என்று உதவியைக் கோரும் முன்பே சம்மதித்திருந்தாள்.

இது கிட்டத்தட்ட பிரதியுபகாரம் போலவே… சில மாதங்களுக்கு முன்பு, இதே ஸ்ரீ உதவி கோருமிடத்தில் நிற்க, ரஞ்சு அவளிற்கு உதவுவதாக வாக்களித்து, அதன் படியே அந்த உதவியை செய்திருந்தாள். அதன் காரணமாகவே எப்போதும் ஸ்ரீக்கு ரஞ்சுவை பிடிக்கும். அவளிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்நோக்கியிருப்பவளிற்கு அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கும்போது அதை விட்டுவிடுவாளா என்ன…

“ஸ்ரீ, உங்க அண்ணா டிடெக்ட்டிவ் தான… எனக்கு ஒருத்தவங்களோட அட்ரெஸ் கண்டுபிடிக்கணும்… அதுக்கு அவங்க ஹெல்ப் வேணும் ஸ்ரீ…” என்றாள் ரஞ்சு.

“அவ்ளோ தான, பண்ணிட்டா போச்சு… அவங்க யாரு, கடைசியா எங்க இருந்தாங்க, அவங்கள பத்தி உனக்கு தெரிஞ்ச விபரங்கள் எல்லாம் குடு, அண்ணா கிட்ட சொல்றேன்…” என்றாள் ஸ்ரீ.

“என்கிட்ட அவங்க பழைய போட்டோவும், பழைய போன் நம்பர் அட்ரெஸ் மட்டும் தான் இருக்கு…” என்றவள், தான் ஏற்கனவே அலைபேசியில் சேமித்து வைத்திருந்த புகைப்படத்தையும், விலாசத்தையும் ஸ்ரீக்கு அனுப்பினாள்.

“இது… இது உங்க அம்மா தான…” என்று ஸ்ரீ கமலத்தை நோக்கி கை நீட்ட, ரஞ்சுவோ ஒரு பெருமூச்சுடன், “ம்ம்ம்” என்று மட்டும் கூறியவள், “கொஞ்சம் சீக்கிரமா கண்டுபிடிக்க முடியுமா ஸ்ரீ…” என்றாள்.

அதற்குள் ஸ்ரீயை யாரோ அழைக்க, “டோன்ட் வொரி ரஞ்சு. சீக்கிரமா கண்டுபிடிச்சுடலாம்…” என்று கூறியவாறு சென்று விட்டாள்.

இப்போதும் ரஞ்சுவிற்கு தான் செய்ய நினைக்கும் செயல் சரியா தவறா என்று தெரியவில்லை. இருப்பினும் முடிவு செய்துவிட்டாள், அவளின் பிறப்பிற்கு காரணமானவர்களை பார்த்தே ஆக வேண்டும் என்று…

*****
சஞ்சீவை அவனின் அறையில் விட்டுவிட்டு தன்னறைக்கு வந்த சஞ்சய்க்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ உணர்த்த முயன்று கொண்டிருந்தன.

சற்று நேரத்திற்கு முன்பு கோகுலை திட்டிய நிகழ்வு மனதில் ஓட, ‘நான் ஏன் அப்படி நடந்துகிட்டேன்…’ என்று நினைத்தான்.

‘என்னமோ புதுசா நடந்துகிட்ட மாதிரி சொல்ற… அந்த ராட்சசி செஞ்சு வச்ச வேலைக்கு அப்பறம் எல்லாருக்கிட்டயும் அப்படி தான நடந்துகிட்ட…’ என்று அவனைப் பற்றி அவனே மறந்த விஷயங்களை அவனிற்கு நினைவுபடுத்தியது அவனின் மனசாட்சி.

அவனும், ‘அதான…’ என்று யோசிக்க அவனை மேலும் யோசிக்க விடாமல், ‘அந்த ரஞ்சுவ பாத்ததும் தான் சார் புதுசா நடந்துக்குற மாதிரி இருக்கு.. ‘ என்று எடுத்துக் கூறியது.

அவனின் செயல்கள் அனைத்தையும் வரிசை படுத்தி பார்த்தவனிற்கு அவனின் மனம் கூறுவது சரியென்றே பட்டது. அவனின் இந்த வித்தியாசமான செய்கைகளுக்கான காரணத்தை மனதிடமே கேட்க, அவனின் மனமோ சற்றும் தாமதிக்காமல் காதல் என்ற பதிலைத் தந்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளத் தான் சஞ்சயால் முடியவில்லை.

‘என்னது காதலா… லூசா நீ… ஏற்கனவே ஒருத்தி அத சொல்லித் தான் ஏமாத்திட்டு போயிருக்கா… திரும்பவும் அதுக்குள்ள போறதுக்கு நான் என்ன லூசா… நோ நெவர்… இன்னொரு தடவ இந்த பொண்ணுங்கள நம்ப நான் தயாராயில்ல… அதுவும் அந்த முகம்…’ என்று விவாதித்துக் கொண்டிருந்தவனை, இடைவெட்டிய அவனின் மனம், ‘அந்த முகத்த பாத்து தான் திரும்பவும் காதல்ல விழுந்துட்டீங்க மிஸ்டர். எஸ்.ஜே…’ என்று அவனிற்கு சளைக்காமல் பதிலளித்தது அவனின் மனம்.

‘வாட்… யூ மீன் பிசிகல்லா அவ மேல அட்ராக்ஷன் வந்துருக்குன்னு சொல்றியா…’

‘அதுல ஒன்னும் தப்பிலையே… முதல் ஈர்ப்பு முகத்த பாத்து வந்தாலும், அது காதலா மாறுறதுக்கு மனசும் ஒத்துப்போகணும்… அப்படி பாத்தா, நீ இப்போ செகண்ட் ஸ்டேஜ்ல இருக்க…’

‘எது… பாத்த ரெண்டு நாள்ல லவ்வா…’

‘அத நீ முடிவு பண்ண வேணாம்… நான் முடிவு பண்ணா போதும்… அண்ட் எஸ் அவ மேல உனக்கு லவ் தான்…’

‘ரிடிக்குலஸ்…’ – இப்படி அவனிற்கு மனதிற்கும் விவாதம் போய் கொண்டிருக்க, அதை முடித்தவன் அவனே.

‘வந்த வேலைய முடிச்சுட்டு சீக்கிரம் பிசினஸ் பாக்க போகணும்… சும்மா இருந்தா தான் இது மாதிரியான எண்ணங்கள் தான் வரும்…’ என்று அவன் நினைக்க, ‘இன்னும் எத்தன நாளைக்குன்னு பாக்குறேன்…’ என்று அவனின் மனமோ சிரித்துக் கொண்டது.

சில மணி நேரங்களிலேயே அவனின் மனம் கூறியது உண்மையென்று நிரூபிப்பதைப் போல, அவனவளிற்காக ஓடினான் சஞ்சய்.

*****

அன்றைய நாள் கல்லூரிக்கு செல்லும்போது கூட சற்று பதட்டமாகவே காணப்பட்டாள் ரஞ்சு. சஞ்சு கேட்டதற்கு ஏதோ கூறி சமாளித்து விட்டாள்.

ஸ்ரீயிடமிருந்து ஏதாவது தகவல் வந்ததா என்று அடிக்கடி அலைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டவளை தர்ஷு புருவம் சுருக்கி பார்த்தாலும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

மாலை வேளையும் வந்துவிட, ரஞ்சுவின் அலைபேசியில் அவள் எதிர்பார்த்த தகவல் தான் வரவில்லை. சற்று சோர்வுடனே அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தவளை தற்காலிகமாக அந்த சோர்விலிருந்து மீட்கவே அந்த தகவல் கிடைத்தது. அதைக் கண்டவள், சஞ்சு மற்றும் தர்ஷுவிடம் ப்ராஜெக்ட் சம்பந்தமாக அவளின் கைட் வர சொன்னதாக கூறினாள்.

“ப்ச் இவங்களுக்கு வேற வேலையே இல்ல… காலேஜ்ல இருக்குறப்போ எல்லாம் கண்டுக்குறதே இல்ல… இப்போ கூப்பிட்டு வர சொல்றது.. “ என்று சஞ்சு சலித்துக் கொள்ள, தர்ஷுவோ, “நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு வா ரஞ்சு…” என்றாள்.

“இல்ல தர்ஷு நான் போயிட்டே வரேன்… இப்போ விட்டா திரும்ப அவங்க எப்போ அவைலபிலா இருப்பாங்களோ…” என்று வாய்க்கு வந்ததைக் கூறிவிட்டு சென்று விட்டாள்.

“இவ எப்போ இவ்ளோ சின்சியரா ஆனா…” என்று சஞ்சு யோசிக்க, தர்ஷுவிற்கும் அதே எண்ணம் தான்.

*****

ரஞ்சுவின் கல்லூரிக்கும் விடுதிக்கு இடைப்பட்ட இடத்தில் இருந்தது அந்த உணவகம். மாலை வேளை என்பதால் ஆங்காங்கு மக்களின் சலசலப்பு இருந்து கொண்டேயிருந்தது. ரஞ்சுவின் கவனமோ அதிலெல்லாம் இல்லை. எப்போது ஸ்ரீயின் அண்ணன் வருவார், அவரிடமிருந்து எப்போது தனக்கு அந்த தகவல் கிடைக்கும் என்பதிலேயே குறிப்பாக இருந்தாள்.

அப்போது அவளின் அலைபேசி ஒலித்தது. ஸ்ரீ தான் அழைத்திருந்தாள்.

“ரஞ்சு வெரி சாரி… அண்ணாக்கு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சாம்… அவசரமா ஊருக்கு கிளம்பிட்டு இருக்கானாம்… இஃப் யூ டோன்ட் மைண்ட், அவனோட பிரெண்டு வந்து அந்த டிடெயில்ஸ் குடுத்தா வாங்கிக்குறியா…” என்று கேட்க, ரஞ்சுவோ தகவல்கள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவள், “அதுனால என்ன ஸ்ரீ… நான் தான் அவசரமா வேணும்னு உன் அண்ணாவ தொல்லை பண்ணிட்டேன்னு நினைக்குறேன்…” என்றாள்.

“ச்சேச்சே அதெல்லாம் இல்ல ரஞ்சு… அண்ணாவோட பிரெண்ட் டிடெயில்ஸ் உனக்கு வாட்சப்ல அனுப்புறேன்…” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

அவள் கூறியதைப் போலவே, செய்தியும் வர சிறிது நேரத்தில் அந்த நண்பனும் வந்தான். அவன் தந்த தகவலைக் கண்டவளிற்கு, அன்றைய நாளின் சாதனையாய் அது தோன்றியது.

அந்த தகவல்களில் பார்வையை ஓட்டியவள், அங்கிருந்த விலாசத்தைக் கண்டு சிறிது நிம்மதியுற்றாள்.

‘ஷப்பா இங்க பக்கத்துல இருக்க அட்ரெஸ் தான்… இதுக்கு தனியா பொய் சொல்லிட்டு வரணுமான்னு யோசிச்சேன்… இப்போவே கையோட பாத்துட்டு போயிடலாம்…’ என்று அவள் முடிவெடுக்க, அவளின் முடிவை சாதாகமாக்கிக் கொள்ள ஒருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமல் போனாள்.

*****

“ஷப்பா தலைவலிக்கு ஒரு காபி வாங்கி குடிக்கலாம்னா என்ன கூட்டம்…” என்று அலுத்துக் கொண்டே அவனின் பணியிடமான அந்த விடுதிக்கு எதிர் வீட்டிற்கு சென்றான் லோகேஷ்.

கல்லூரியிலிருந்து தோழிகள் மூவரும் விடுதியை நோக்கி செல்ல, ‘இனி எங்க போயிடப் போறாங்க… நாம சூடா ஒரு காபி குடிச்சுட்டு வரலாம்…’ என்று அந்த தெரு துவக்கத்திலிருந்த கடைக்குள் சென்றான்.

அவன் சென்ற நொடியிலேயே, ரஞ்சுவின் அலைபேசிக்கு தகவல் வந்ததையோ, அவள் மற்ற இருவரையும் சமாளித்துவிட்டு சென்றதையோ கவனிக்காமல் போனது அவனின் துரதிர்ஷடமோ!

வெகு நேரத்திற்கு பின்பே, ரஞ்சு விடுதியில் இல்லாததைக் கண்டுபிடித்தான் லோகேஷ். அதுவும், சஞ்சு மற்றும் தர்ஷு இருவரும் மாறி மாறி வெளியில் வந்து போய் கொண்டிருப்பதைக் கண்டவனிற்கு, வயிற்றில் புளியைக் கரைத்தது போலிருந்தது.

அதை உண்மையாக்குவதைப் போலவே, அடுத்த ஐந்தாம் நிமிடம் சஞ்சயிடமிருந்து அழைப்பு வர, பயந்து கொண்டே அதை உயிர்பித்தவனின் செவிகளில் ரத்தம் கசியும் வண்ணம் திட்டித் தீர்த்தான் சஞ்சய்.

*****

மனதை வெகுவாக சமாதானப்படுத்தி, தன் வேலைகளில் கவனத்தைத் திருப்பியவனிற்கு கிடைத்தது சில மணி நேர வெற்றி மட்டுமே.

சரியாக ஆறு மணிக்கு அவனின் அலைபேசி ஒலியெழுப்ப, தன் வேலையைக் கலைத்ததினால் உண்டான சலிப்புடனே அதை உயிர்ப்பித்தான். மறுமுனையில் கூறிய செய்தியில் அவன் கண்கள் சிவக்க, தாடை இறுக, பயங்கர கோபத்தில் அந்த அழைப்பைத் துண்டித்தவனின் கைகள் அடுத்த நொடி அழைத்தது லோகேஷின் எண்ணிற்குத் தான்.

ஐந்து நிமிடங்களிற்கும் மேலாக லோகேஷை திட்டியவனின் மனமோ, அவளிடம் செல்ல உத்தரவிட, இம்முறை அதற்கு மறுப்பு எதுவும் கூறாமல், அவன் மனம் சொன்னதை அப்படியே நிறைவேற்ற அவனின் கால்கள் அவளை நோக்கி விரைந்தன…


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 ஹாப்பி ஃப்ரைடே...😁😁😁 எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு... நானா இப்படி அடுத்தடுத்த நாள்ல எபியோட வரேன்னு...😂😂😂 இதுவரைக்கும் கொடுத்த ஆதரவை இன்னும் வரவிருக்கும் எபிக்கும் கொடுப்பீங்கங்கிற நம்பிக்கைல இதோ அடுத்த எபியோட முதல் பார்ட்...😁😁😁 நாளைக்கே அடுத்த பார்ட்டுடன் வரேன் பிரெண்ட்ஸ்...😍😍😍

24844

காதல் 16.1

தன் வேலைகளுக்கு தொல்லை கொடுப்பது போல ஒலித்த அலைபேசி சத்தத்தில், முதலில் சலிப்புடன் அதை எடுத்துப் பார்க்க, அதிலிருந்த ‘அன்னோன் நம்பர்’ அவன் புருவங்களை சுருக்கச் செய்தது. மற்ற சமயங்களில் இது போன்ற அழைப்பை ஏற்காதவனிற்கு, இப்போது ஏனோ ஆபத்து என்று மனதில் பட, சற்றும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றிருந்தான்.

“ஹலோ சஞ்சு… ஹா…ன்… மிஸ்டர்.சஞ்சய்… கால் எடுக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்…” என்று கிண்டலாக ஆரம்பித்தாள் ஷ்ரேயா.

சஞ்ஜயோ அதையெல்லாம் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், “எதுக்கு இப்போ கால் பண்ணிருக்க..?” என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.

“ஹ்ம்ம் இது தான் உன்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயம்… பாரு ப்ளா ப்ளான்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணாம டைரக்ட்டா விஷயத்துக்கு வந்துட்ட…” என்று அப்போதும் அவள் அழைத்ததற்கான காரணத்தைக் கூறாமல் அவனை அலைகழித்தாள்.

சஞ்சயோ அவளின் பதிலில் பல்லைக் கடித்துக் கொண்டிருக்க, “ச்சு ச்சு… இப்போ கோபத்துல உன் முகம் அப்படியே ரெட்டிஷா ஆகிருக்கும்ல… ப்ச் அத நேர்ல பாக்க முடியாம போயிடுச்சே… ஹ்ம்ம் பரவால, இனி அடிக்கடி உன் முகம் மாறுமே அப்போ பாத்துக்குறேன்… அப்பறம் இப்போ எதுக்கு உனக்கு கால் பண்ணேனா, நீ யாருக்காக எஸ்கார்ட்லாம் வச்சு பாதுகாக்கனும்னு நெனைக்குறியோ, அவங்களுக்கு தன்னோட உயிர் மேல ஆசை இல்ல போலயே… தனியா ***** ஹோட்டல்ல உக்கார்ந்துட்டு யாரையோ எதிர்பார்த்து காத்திட்டு இருக்காங்க போல…” என்று அவனை பதற வைத்துவிட்டே விஷயத்திற்கு வந்தாள்.

‘ப்ச் தனியா போகாதன்னு சொன்னாலும் கேக்காம போயிருக்கா…’ என்று மனதிற்குள் அவளைத் திட்டிக் கொண்டிருக்க, “என்ன சார், இன்னமும் லைன்ல இருக்கீங்க… இந்நேரம் பறந்து போய் அவங்கள காப்பாத்த வேணாமா… நான் வேற ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கேனா, சோ சட்டுன்னு யாருக்கும் தெரியாம அவள கொலை பண்ற மூட்ல இல்ல… சீக்கிரம் இங்க வாங்க பாஸ்… நீங்க சொன்ன கேம்ம விளையாடுவோம்…” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

அடுத்த நிமிடம் லோகேஷிற்கு அழைப்பு விடுத்து அவனைத் திட்டியவன், இனியும் தாமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து தன்னறையிலிருந்து வெளியேறினான்.

சஞ்சீவின் அறையைக் கடக்கும்போது, ஒரு நொடி நிதானித்து, அவனைக் காண, அவனோ மருந்தின் உபயத்தால் நித்திரையில் இருந்தான். இதற்காக அவனை எழுப்ப வேண்டாம், வந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து வெளியே சென்று விட்டான். சஞ்சீவிடம் சொல்லிவிட்டே சென்றிருக்கலாம் என்று பின்னர் வருந்துவான் என்று அவனிற்கு தெரியவில்லை.

*****

ரஞ்சு, அவள் கையில் வைத்திருந்த முகவரிக்கு செல்லலாம் என்று திட்டமிட்டுக் கொண்டே, அந்த உணவகத்தை விட்டு வெளியே வந்தாள். பாதையில் கவனமில்லாமல் மனதில் பலவற்றை உருப்போட்டுக் கொண்டே வந்தவள், தனக்கு பின்னால் அதிவேகத்துடன் வரும் ஸ்போர்ட்ஸ் காரையும் கவனிக்கத் தவறினாள்.

ரஞ்சுவை இடித்துவிடும் நோக்கில் அவளை நோக்கி வந்து கொண்டிருந்த மகிழுந்தை கவனித்த சஞ்சய், வேகமாக அவளை தன்னை நோக்கி இழுத்திருக்க, தன் இலக்கு விலக்கப் பட்டதால், அதன் பாதையில் சர்ரென்று வழுக்கிக் கொண்டு போனது அந்த மகிழுந்து.

ரஞ்சுவிற்கு நடந்த சம்பவம் அதிர்ச்சி தான். அந்த மகிழுந்திற்கும் அவளிற்கும் சிறிதளவே இடைவெளி இருந்தபோது தான் தனக்கு பின்னே வாகனம் வருவதை, அதுவும் அதீத வேகத்தில் வருவதை உணர்ந்தாள். சட்டென்று என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருந்தவளை, யாரோ கைப்பிடித்து இழுக்க, அந்த இழுப்பிற்கு சென்றிருந்தாள்.

இப்போது கூட யார் தன்னைக் காப்பாற்றியது என்று உணராமல், அவனின் கைகளில் நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள். அவளின் பயத்தை உணர்ந்த சஞ்சயோ, மெல்ல அவளை அவன் மகிழுந்து நிற்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றான்.

அந்த இடைவேளையில் சுயத்தை அடைந்தவள், தன்னைக் காப்பாற்றியவன் சஞ்சய் என்பதை அப்போது தான் பார்த்தாள்.

மகிழுந்தில் அவளை அமருமாறு கண்களாலேயே பணித்தவன், சுற்றி வந்து ஏறிக் கொண்டான்.

இன்னமும் குழப்பத்திலிருந்து வெளிவராதவளின் தோற்றத்தைக் கண்டு பெருமூச்சு விட்டவாறே, “இன்னைக்கு காலைல தான தனியா போகாதன்னு சொன்னேன்… அதையும் மீறி தனியா வந்துருக்கன்னா என்ன அர்த்தம்… மத்தவங்க உன் நல்லதுக்குன்னு சொல்ற எதையும் கேக்க கூடாதுன்னு முடிவுல இருக்கீயா..? நான் மட்டும் சரியான நேரத்துல வரலைனா என்ன ஆகுறது..?” என்று கோபத்தை அடக்கியபடி வினவினான்.

ரஞ்சுவைப் பொறுத்தவரை சற்று முன்னர் நிகழ்ந்தது எதிர்பாராமல் நடந்த சம்பவமே. இவளிற்காக பல மணி நேரங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று அவளிற்கு தெரியாதே. அப்படி இருக்கும் போது, சஞ்சய் இப்படிக் கூறியதைக் கேட்டவள் குழம்பித் தான் போனாள்.

“நான் தனியா வந்ததுக்கும் இப்போ நடந்ததுக்கும் என்ன சம்பந்தம்..?”என்று குழப்பத்துடன் அவள் வினவ, ஏதோ யோசனையில் இருந்தவனும், “அது உனக்காக பிளான் பண்ண ஆக்சிடெண்ட்…” என்று கூறியிருந்தான்.

அவன் கூறியதைக் கேட்டவளிற்கு அதிர்ச்சியாக இருக்க, மீண்டும் ஒருமுறை நிகழவிருந்த சம்பவத்தை எண்ணி நெஞ்சம் பதைப்பதைத்தது.

அவளின் முகத்தைக் கண்டவனிற்கு அப்போது தான் அவன் கூறியது நினைவிற்கு வர, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

“என்ன எதுக்கு.. ஆக்சிடெண்ட்… யாரு…” என்று திக்கியபடி அவள் பேச, அவளின் கைகளில் தட்டிக் கொடுத்தவன், “ரிலாக்ஸ் சனா… அதான் ஒன்னும் ஆகலல…” என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

மேலும் மேலும் அவள் அதிலேயே உழல்வதைக் கண்டவன், ‘சாஃப்டா சொன்னாலாம் கேட்டுக்க மாட்டா… வழக்கம் போல நம்ம ஸ்லாங்லயே சொல்ல வேண்டியது தான்…’ என்று நினைத்தவன், “இன்னும் எவ்ளோ நேரத்துக்கு இப்படி நடந்ததையே நெனச்சுட்டு இருக்கப் போற… ஆமா, அப்படி என்ன விஷயத்துக்கு இந்த நேரத்துல இங்க தனியா வந்த..?” என்று கடுமையாக வினவினான்.

அவனின் அழுத்தமான குரலிலேயே அந்த சம்பவத்திலிருந்து வெளியே வந்தவள், அவன் அடுத்து கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று முழித்துக் கொண்டிருந்தாள்.

‘இவ முழியே சரியில்லயே… எதையோ எல்லாருக்கிட்ட இருந்தும் மறைச்சுருக்கா போலயே…’ என்று அவளை சரியாக கணித்தவன், கைகளை கட்டிக்கொண்டு இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து அவளைத் துளைக்கும் பார்வை பார்த்தான்.

‘அச்சோ இவரு பாக்குற பார்வையில நானே உண்மைய சொல்லிடுவேன் போலயே…’ என்று ரஞ்சு நினைக்க, அவளின் மனமோ, ‘இப்போ அவரு கிட்ட உண்மைய சொன்னா தான் என்ன… எப்படியோ ஒரு நாள் எல்லாருக்கும் தெரிய தான போகுது… நீ என்ன தப்பா பண்ண போற…’ என்று கூற, அவளும் சஞ்சயிடம் சொல்லிவிடுவது என்ற முடிவிற்கு வந்தாள்.

அவளின் பாவனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “என்ன மேடம், ஒரு வழியா என்ன நம்பி உண்மைய சொல்லலாம்னு முடிவுக்கு வந்துட்டீங்களா..?” என்று கேலியாக வினவினான்.

‘இவருக்கு எப்படி மனசுல நெனைக்கிறது எல்லாம் தெரியுதோ…’ என்று மனதிற்குள் நினைத்தவள், எங்கு அதையும் கண்டுபிடித்துவிடுவானோ என்று அவள் தனியே வந்ததற்கான காரணத்தைக் கூறத் துவங்கினாள்.

அவள் கூறியதை பொறுமையாகக் கேட்டவன், “இப்போ உன்ன விட்டுட்டு போனவங்கள சந்திச்சு என்ன பண்ண போற சனா..?” என்று வினவினான் சஞ்சய்.

அதற்கான பதிலைத் தானே அவளும் யோசித்துக் கொண்டிருக்கிறாள். “தெரியல…” என்று சோகமாக பதில் கூறினாள்.

ஒரு பெருமூச்சுடன், “சரி இப்போ எங்க கிளம்பிட்ட அந்த வீட்டுக்கா..?” என்றான். அவளோ பதில் கூறாமல், மண்டையை மட்டும் ஆட்டினாள்.

“ஓ… மேடமுக்கு மணி பாக்க தெரியுமா..? இல்ல லேட்டா தான் வருவேன்னு உன் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வந்துருக்கியா..?” என்று கடுப்பாக கேட்டதும் தான், தன் தோழிகளின் நினைவே வந்தது.

“இவளுக்காக அங்க அவங்க ரெண்டு பேரும் அங்க தவிச்சுட்டு இருக்காங்க… மேடம் ரொம்ப கூலா நகர்வலம் போய்ட்டு இருக்காங்க…” என்று அவன் முணுமுணுத்தாலும் அது ரஞ்சுவிற்கு கேட்கவே செய்தது.

தான் செய்யவிருந்த காரியத்தை எண்ணி உதட்டைக் கடித்து அமைதியாக இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன், “என்ன மேடம் இப்போயாச்சும் ஹாஸ்டல் போலாம்னு நெனப்பு இருக்கா… இல்ல வேற எங்கயாவது சுத்தனுமா..?” என்றான்.

‘என்னது சுத்துறேனா… நான் என்ன வேலைவெட்டி இல்லாம பொழுது போகாம சுத்திட்டு இருக்கேனா… சும்மா சும்மா திட்டுறது…’ என்று மனதிற்குள் சிலுப்பிக் கொண்டவள், வெளியே அதை அப்படியே சொல்ல முடியாமல், “ஹாஸ்டல் போலாம்…” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அவளின் கோபம் புரிந்தாலும், நடக்கவிருந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்தவனாக, அவளிடம் இலகிப் போக விரும்பவில்லை சஞ்சய்.

அந்த மகிழுந்து பயணம் அமைதியில் கழிய, நேராக சென்று அவளின் விடுதி இருக்கும் தெருவில் நிறுத்தினான்.

“இனி நீயே போயிடுவியா…” என்று அவன் வினவ, அப்போதும் மொழிகள் இன்றி மௌனமாக தலையசைத்தாள்.

அவள் இறங்கி செல்லும் நிமிடம், “நாளைக்கு நீ போக நெனச்ச இடத்துக்கு போகலாம்… ஆனா, உன் பிரெண்ட்ஸ் கிட்ட எங்க போறன்னு சொல்லிட்டு தான் வரணும் புரிஞ்சுதா… நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு ரெடியா இரு…” என்று கூறினான்.

அவ்வளவு நேரம் கூம்பியிருந்த முகம் பொலிவு பெற லேசான சிரிப்புடன் மீண்டும் தலையசைத்துவிட்டு சென்றாள். அவள் செல்வதையே பார்த்தவனின் மனம், ‘இதுக்கு பேரு லவ் இல்லயாமா…’ என்று கூறுவதை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

*****

சற்று நேரத்திற்கு முன்பு, தனக்கு அலைபேசியில் வந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரேயா வெற்றி சிரிப்பு சிரிக்க, அவளின் அருகில் நின்றிருந்த ரிஷிக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை.

“ஷ்ரேயா, எதுக்கு இப்போ இந்த போட்டோவ பாத்து இப்படி சிரிக்கிற..?” என்று எரிச்சலுடனே வினவினான் ரிஷி. பின்னே, தான் ஒன்று திட்டமிட, நடப்பதோ வேறாக இருந்ததே.

‘ச்சே இப்போ என்ன வேலை பாத்துட்டு இருக்கேன்… விட்டா, என் செலவுல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடுவா போல…’ என்று கொதித்துக் கொண்டிருந்தான் ரிஷி.

அவளோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இந்த ஒரு போட்டோ போதும் அண்ணன் – தம்பிக்கு இடையில சண்டைய மூட்டி விடுறதுக்கு…” என்று வன்மமாகக் கூறினாள்.

மீண்டும் அதிலிருந்த சஞ்சயை நோக்கி, “அன்னைக்கு என்ன சொன்ன, உன் தம்பி தான் எல்லாமேன்னு சொன்ன தான… உன் தம்பிய வச்சே இந்த தடவ உன்ன தோக்கடிக்குறேன்…” என்று அவனிடம் பேசுவதைப் போல பேச, ரிஷிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

“இந்த போட்டோவால எப்படி சண்டை வரும்…” என்றவன் மீண்டும் அந்த புகைப்படத்தைக் கண்டான்.

சற்று முன்னர், அந்த மகிழுந்து இடிப்பதிலிருந்து காக்க ரஞ்சுவை இழுத்த சஞ்சயும், அவனின் இழுப்பிற்கு அவனிடமே சரணடைந்த ரஞ்சுவும் அந்த புகைப்படத்தில் அழகாக விழுந்திருந்தனர். நடந்த சம்பவத்தை அறியாதவர் பார்த்தால், இருவரும் ஒருவரையொருவர் அணைத்திருப்பதைப் போலவே தோன்றும்.

“என்னோட ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட், தம்பிய போட்டோ பிடிச்சு அண்ணனுக்கு அனுப்பி வச்சேன்… ஆனா, அவன் தம்பிய மட்டும் பாத்து பாசத்துல வந்துட்டான்… அண்ணனுக்கு சமமா, தம்பிக்கும் பாசம் இருக்கான்னு பாக்க வேணாம்… அதுக்கு தான் இது…” என்று கிண்டலாகக் கூறியவள், “அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா, நம்மளால அவனுங்கள ஜெயிக்க முடியாது… அதான் ரெண்டு பேரையும் பிரிக்க போறேன்…” என்றாள் அழுத்தமான குரலில்.

“இந்த போட்டோ பாத்தவொடனே சந்தேகம் வந்து பிரிஞ்சுடுவாங்களா…” என்று அப்போதும் சந்தேகத்துடனே ரிஷி வினவ, “நான் எதுக்கு இருக்கேன்…” என்று கோணலாக சிரித்தவள், “சஞ்சய தான் என்னால ஈஸியா அணுக முடியாது… ஆனா சஞ்சீவ்… ஹ்ம்ம் அவன் அன்புக்கு அடிமை… அவன ஈஸியா நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம்…” என்று திட்டமிட்டாள்.

“ஓகே அப்போ நம்ம ஆளுங்க மூலமா இந்த போட்டோ அவனுக்கு கிடைக்க ஏற்பாடு பண்றேன்…” என்று ரிஷி கூற, “ஹுஹும்… என் ஜீவ நேர்ல பாத்து எவ்ளோ நாளாச்சு… நானே போய் குடுத்துட்டு வரேன்…” என்றாள்.

அவளின் முகத்தைக் கண்ட ரிஷி, “அப்படி என்ன அவன் உனக்கு ஸ்பெஷல்..?” என்று லேசான பொறாமையுடன் கேட்க, அவளோ அது காதிலேயே விழாதவாறு அங்கிருந்து சென்றாள்.

அவளின் மனமோ அந்த கேள்வியிலேயே நின்றது. ‘ஆமா அவன் எனக்கு ஸ்பெஷல் தான்…’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சொன்ன மாதிரியே அடுத்த பார்ட்டோட வந்துட்டேன்...😁😁😁 போன எபியோட ரெண்டாவது பார்ட்ங்கிறதால கொஞ்சம் சின்னதா தான் இருக்கும்... (அதுவே 1000 வார்த்தைகள் வந்துடுச்சுன்னு இங்க பதிவு பண்ணிக்குறேன்...😁😁😁) படிச்சுட்டு எப்பவும் போல உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்...😍😍😍

24857

காதல் 16.2

ரஞ்சுவை விடுதியில் விட்டுவிட்டு, லோகேஷை நேரிலும் பார்த்து திட்டிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான் சஞ்சய். அவனின் வரவை ஆவலாக (!!!) எதிர்பார்த்துக் காத்திருந்தான் சஞ்சீவ்.

நீள்சாய்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறு, இரு கைகளையும் இருபுறமும் நீட்டி, தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்த சஞ்சீவ் சஞ்சயை நோக்கி, “என்ன தூங்க வச்சுட்டு, நீ மட்டும் தனியா எங்க போய் சுத்திட்டு வர ப்ரோ..?” என்றான்.

“ஆமா, நீ சின்ன பாப்பா, உன்ன ஏமாத்தி தூங்க வச்சுட்டு வெளிய போறேன்…” என்று கேலி பேசினான் தமையன்.

இருவரும் இப்படி பேசி எத்தனையோ வருடங்கள் ஆகியிருக்க, இருவருக்குமே அந்த நாட்கள் மனக்கண்ணில் வந்து போயின. இந்த ‘ஃபிளாஷ்பேக்’ துணுக்குகளால் தம்பி கேட்ட கேள்வியை இருவருமே மறந்து விட்டனர்.

சரியாக அப்போது கோகுலும் உள்ளே வந்தான். “ஷப்பா, என்ன அலைச்சல்… சஞ்சு, நீ வெட்டியா தான இருக்க… ஓடி போய் எனக்கு ஒரு ஜூஸ் எடுத்துட்டு வா பாப்போம்…” என்று சஞ்சீவின் அருகில் அமர்ந்து விட்டான்.

வந்தவனிற்கு, வாயில் எதிர்புறம் அமர்ந்த சஞ்சீவே கண்களுக்குத் தெரிந்தான். பக்கவாட்டில் அமர்ந்திருந்த சஞ்சயை அவன் கவனிக்கவே இல்லை.

தான் பேசியதற்கு சஞ்சீவிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, மூடிய கண்களைத் திறந்து பார்க்க, சஞ்சீவோ அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன இப்படி மொறைச்சுட்டு இருக்க… இதெல்லாம் நான் யாருக்காக பண்றேன்… எல்லாம் உன் அண்ணாக்காக தான் தம்பி… போ போய் ஜில்லுன்னு ஒரு ஜூஸ்… ஹுஹும் நைட்க்கு அது வேணாம்… கூலிங் பீர் இருந்தா கொண்டு வா…” என்றான் கால்களை ஆட்டிக் கொண்டே…

இப்போது வரையிலும் சஞ்சீவைப் பார்த்தே பேசிக் கொண்டிருந்ததால், எதிரில் அமர்ந்து அவனையே கூர்மையாக பார்த்திருந்த சஞ்சயை கவனிக்கவில்லை.

“பீர் மட்டும் போதுமா, இல்ல இந்த சைட் டிஷ்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டே சஞ்சீவ் இழுக்க, “அட அட… இதுவல்லவோ நட்பு… நீ என்ன பண்றனா, வெந்தும் வேகாம இருக்க ஹாஃப்-பாயில் ஒன்னு, நல்லா பெப்பர் தூக்கலா போட்ட ஆம்லெட் ஒன்னு… ஹும் இப்போதைக்கு இது போதும்… போ போ சீக்கிரம் கொண்டு வா… இன்னும் என்ன வாய பாத்துட்டு இருக்க…” என்று விரட்டினான்.

“அப்படியே எந்த சஞ்சு கொண்டு வரணும்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்…” என்று இம்முறை எதிர்புறமிருந்து கேள்வி வர, பார்வையை அந்த புறம் திருப்பியவன் அதிர்ந்து போய் சரியாக அமர்ந்தான்.

‘அய்யயோ இவரு இங்க தான் இருக்காரா… இது தெரியாம, கொஞ்சம் ஓவரா வேற போயிட்டோமே…’ என்று மனதிற்குள் புலம்பியவனாக, வெளியில் இளித்து வைத்தான்.

“அட பாஸ், நீங்களும் இங்க தான் இருக்கீங்களா… அப்பறம் இதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம், சும்மா காமெடிக்கு பாஸ்… நீங்க ரெண்டு பேரும் அத சீரியஸ்னு நம்பிட்டீங்க போல...” என்று ஏதோ உளறி வைத்தான்.

சஞ்ஜயோ அதை பெரிதுப்படுத்தாமல், “போன காரியம் என்னாச்சு..?”என்று வினவினான்.

‘உஷ்… நல்ல வேள இன்னைக்கு தப்பிச்சேன்…’ என்றுக்கு நினைத்தவனிற்கு தெரியவில்லை, இன்று அவனிடத்தில் ஏற்கனவே ஒருவன் திட்டு வாங்கியிருக்கிறான் என்று…

“பாஸ், அந்த ராஜசேகர் இங்க வந்ததுக்கான ப்ரூஃப் கிடைச்சுருக்கு… இங்க மெயின் ஏரியால இருக்க பத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்ல அவரு தங்கியிருக்காருன்னு ஒவ்வொரு ஹோட்டல்ல இருக்க சிசிடிவில பாத்து கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டோம்…” என்று கூற ஆரம்பித்தான் கோகுல்.

“பத்து ஹோட்டலயா…” என்று சஞ்சீவ் வினவ, “ஆமா சஞ்சு, ஆனா எந்த ஹோட்டலயும் ரெண்டு நாளுக்கு மேல தங்குனது இல்ல… அதே மாதிரி, அந்தந்த ஹோட்டல்ல தங்குன நாள் எல்லாம் கணக்கு பண்ணி பாத்தா, நடுவுல சில நாள் அந்த மனுஷன் எங்க போனாருன்னு தெரியல… அது தான் ரொம்ப குழப்பமா இருக்கு… இதே மாதிரி மத்த ஹோட்டல்ஸ்ல தேடுறதா, இல்ல வேற பக்கமா தேடுறதான்னு ஒன்னும் புரியல…” என்று சோர்வாக கூறினான் கோகுல்.

அவன் சோர்வே வேலைப் பளுவை கூற, இம்முறை அவன் கேட்காமலேயே அவனிற்கான பானத்தை எடுத்து வரச் சென்றான் சஞ்சீவ்.

சஞ்சயோ ராஜசேகரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவன், “அந்த ஹோட்டல் ரூம்ஸ் எல்லாம் ஆன்லைன் மூலமா புக் பண்ணதா கோகுல்..?” என்று வினவினான்.

“எல்லாமே ஆன்லைன் மூலமா தான் புக் பண்ணிருக்காரு பாஸ்… ஆனா, புக் பண்ணி மேக்ஸிமம் அரை மணி நேரத்துலேயே ஹோட்டலுக்கு வந்துருக்காரு…” என்றான் கோகுல்.

“ஹ்ம்ம் ஸ்மார்ட் மூவ்… ஒரே இடத்துல இருந்தா, சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்னு இப்படி இடத்த மாத்திக்கிட்டே இருக்காங்க… அண்ட் அந்த ஹோட்டல் புக் பண்ணது கூட அவரா இருக்காது…பி நாளைக்கு ரெண்டு டீம்மா சர்ச் பண்ண ஆரம்பிங்க… ஒரு டீம் இங்க இருக்க மத்த ஹோட்டல்ஸ்ல போய் விசாரிங்க… இன்னொரு டீம் வேற எங்கயாவது அவரு மூவ் ஆகிருக்க சான்ஸ் இருக்கான்னு பாருங்க…” என்று அடுத்தடுத்த திட்டங்களை தீட்டினான்.

இவர்கள் பேசுவதைக் கன்னத்தில் கைவைத்து கவனித்துக் கொண்டிருந்த சஞ்சீவைப் பார்த்த சஞ்சய், “சஞ்சு, டையர்ட்டா இருந்தா தூங்க போ…” என்க அவனை முறைத்த சஞ்சீவ், “ப்ரோ உனக்கே இது நியாயமா படுதா… இங்க வந்ததுலயிருந்து தூங்கி எழுந்து சாப்பிட்டுன்னு ரிப்பீட் மோட்ல பண்ணிட்டு இருக்கேன்… மறுபடியும் தூங்க சொல்ற… இன்னைக்கு ஒரு நாள் இப்படி அடைஞ்சு கிடந்ததே கஷ்டமா இருக்கு… ப்ளீஸ் ஜெய், ஹோட்டல் கணக்குகள எல்லாம் இங்க வர வச்சாவது பாத்துக்குறேன்…” என்றான்.

சில பல நிமிட சமாதானங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் இடையே சஞ்சீவ் வீட்டிலிருந்து ‘ஓய்வாக’ பணியை மேற்பார்வையிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

*****

“ஹே ரஞ்சு, எங்க போயிருந்த..? எதுக்கு இவ்ளோ நேரமாச்சு… நாங்க பயந்தே போயிட்டோம் தெரியுமா..?” என்று ரஞ்சு விடுதியினுள்ளே நுழைந்ததுமே படபடவென்று பேச ஆரம்பித்தாள் சஞ்சு.

ரஞ்சுவிற்கு அவர்களிடம் மறைத்துவிட்டு சென்றதோடு, அவர்களை பதட்டப்படுத்திவிட்ட குற்றவுணர்வும் சேர்ந்து கொண்டது. நுழைந்தது முதல் அவளின் முகத்தை மட்டுமே பார்த்து ஒன்றும் பேசாமல் இருந்த தர்ஷு சஞ்சுவிடம், “அவளே இப்போ தான வந்துருக்கா… முதல ரூமுக்கு கூட்டிட்டு போவோம் சஞ்சு…” என்றாள்.

அதைக் கேட்டதும் ரஞ்சுவின் முகம் மேலும் கூம்பிப் போனது. அவளை அறைக்கு அழைத்துச் சென்று, சாப்பிட வைத்த பின்னரே மீண்டும் விசாரணையைத் துவங்கினர்.

“கைட் கூப்பிட்டாங்க, போயிட்டு வந்தேன்னு பொய் சொல்லாம, இப்போயாச்சும் எங்க போன, அதுவும் எங்ககிட்ட மறைச்சுட்டு போறளவுக்கு அப்படி என்ன சீக்ரெட்னு சொல்றியா…” என்று தர்ஷு வினவ, தலை குனிந்து கொண்டாள் ரஞ்சு.

தர்ஷு பேசியதில் அதிர்ந்த சஞ்சு, ரஞ்சுவின் செய்கையைப் பார்த்து உண்மை என்னவென்று அறிந்து கொண்டவளும் ரஞ்சுவின் பதிலுக்காக காத்திருந்தாள்.

ஒரு பெருமூச்சுடன் நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தாள், தனக்கு நேரவிருந்த விபத்தைப் பற்றி மட்டும் மறைத்துவிட்டாள். அதைப் பற்றித் தான் அவளிற்கே ஒன்றும் தெரியாதே… அடுத்த நாள் சஞ்சயைப் பார்க்கும்போது இதைப் பற்றி வினவ வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

“இத எதுக்கு எங்ககிட்ட மறைச்ச ரஞ்சு..? அவங்கள தேடிப் போறேன்னு சொன்னா, நாங்க மறுத்துடுவோமா என்ன..?” என்று ஆதங்கத்துடன் சஞ்சு வினவ, “ச்சே இத உங்ககிட்ட மறைக்கணும்னு இல்ல சஞ்சு… இன்ஃபேக்ட் எனக்கே நான் செய்யுறது சரியான்னு தெரியல…” என்று கூறினாள் ரஞ்சு.

“சஞ்சய் கேட்டத தான் நானும் கேக்குறேன் ரஞ்சு… அவங்கள கண்டுபிடிச்சு என்ன செய்யப்போற…? அதுவும் உன்ன வேணாம்னு தூக்கிப் போட்டவங்கள தேடி போறேன்னு சொல்ற… ஹ்ம்ம்… இத நான் எப்படி எடுத்துக்கன்னு தெரியல ரஞ்சு…” என்று அவள் செய்யவிருந்த காரியம் தனக்கு பிடிக்கவில்லை என்பதை தன் பேச்சிலேயே காட்டினாள் தர்ஷு.

“தர்ஷு, நான் பழச எதையும் கிளற போகல… என்ன வேணாம்னு முடிவு பண்ணவங்க எனக்கும் வேணாம்… எனக்குன்னு சொல்லிக்க நீங்க எல்லாரும் இருக்குறப்போ, அவங்க எதுக்கு… ஆனாலும், எனக்கு ஒரே ஒரு கேள்வி அவங்கள பாத்து கேக்கணும்… என்னோட பிறப்பு தெரிஞ்சதுலயிருந்தே என் மனச போட்டு வருத்துற விஷயம்… அதுக்கு மட்டும் பதில் கெடைச்சா போதும்… ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்…” என்றாள் ரஞ்சு.

சற்று நேரம் அமைதியாக இருக்க, “அப்போ நாளைக்கு நீ அந்த சஞ்சய் கூட போகப்போற… அப்படி தான…” என்று வினவினாள் தர்ஷு.

அவளைப் பாவமாக பார்த்த ரஞ்சு, “ப்ளீஸ்…” என்று வாயசைக்க, “சரி போயிட்டு வா… பட் இது தான் லாஸ்ட் திரும்பவும் இப்படி லூசு மாதிரி பண்ணமாட்டேன்னு எங்களுக்கு ப்ராமிஸ் பண்ணனும்…” என்றாள் தர்ஷு.

ரஞ்சுவும் சரியென்று தலையசைத்தாள். ஏனோ தர்ஷுவிற்கு அங்கு செல்ல விருப்பமில்லை. இல்லையென்றால், ரஞ்சுவுடன் அவளும் கிளம்பியிருப்பாள். தர்ஷு போகாததால், சஞ்சுவும் செல்லவில்லை.

“சரி சரி ரொம்ப சூடா இருக்கீங்க… வாங்க வெளிய போய் ஜில்லுன்னு ஒரு ஐஸ்-க்ரீம் சாப்பிட்டுட்டு வரலாம்…” என்றாள் சஞ்சு அவளின் காரியத்தில் கண்ணாக…

“நாங்க எல்லாம் ஜில்லுன்னு தான் இருக்கோம்… உனக்கு வேணும்னா உங்க அம்மா கிட்ட கேளேன்… அவங்க பேசுறதுலேயே கூலாகிடுவ…” என்று கிண்டலாகக் கூறினாள் தர்ஷு.

“ஹ்ம்ம் என்ன என் ஹிட்லர் மம்மி கிட்ட மாட்டிவிடலைன்னா உனக்கு தூக்கம் வராதே… வா ரஞ்சு நாம பாதாம் மில்க் பண்ணி குடிக்கலாம்…” என்று ரஞ்சுவை இழுத்துக் கொண்டு சென்றாள்.

“அதுக்கு எதுக்கு மேடம் அவளையும் இழுத்துட்டு போற..?” – தர்ஷு.

“ஹான் நானே மம்மி’ஸ் லிட்டில் பிரின்சஸ்ல… எனக்கு எப்படி பாதாம் பால் பண்ண தெரியும்…” என்று உதட்டைப் பிதுக்கினாள் சஞ்சு.

“எப்போ பாத்தாலும் இத சொல்லிடு… உன்ன எல்லாம் வருங்காலத்துல உன் ஹஸ்பண்ட் எப்படி மேய்க்க போறாரோ..?” என்று ரஞ்சு கூற, “ஹ்ம்ம் இதுக்கு தான் நல்லா சமைக்க தெரிஞ்சவனா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்…” என்று தோளைக் குலுக்கினாள் சஞ்சு.

“அந்த சமைக்க தெரிஞ்ச பையனுக்கு இப்போவே என் ஆழ்ந்த அனுதாபங்கள தெரிவிச்சுக்குறேன்…” என்று ரஞ்சுவும் தர்ஷுவும் சிரித்துக் கொண்டனர்.

“இன்னும் கண்ணுலயே படாத (!!!) என் வருங்காலம் இருக்கட்டும், அது என்ன ஹீரோயின்னுக்கு ஒரு கஷ்டம்னா உடனே ஹீரோ சார் என்ட்ரி குடுத்துடுறாரு…” என்று ரஞ்சுவை கண்ணைக்காட்டி சஞ்சு கேலி பேசினாள்.

சஞ்சுவின் கேள்வியில், மனதிற்குள் உற்சாகம் ஏற்பட்டாலும், அதை வெளியில் சொல்லாமல், “அதெல்லாம் ஒண்ணுமில்ல சஞ்சு… நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத…” என்றுவிட்டு அங்கிருந்து நழுவிவிட்டாள்.

தர்ஷு இவையனைத்தையும் பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை. முன்னே சஞ்சீவின் நடவடிக்கைகளில் அவளிற்கு ஏற்பட்ட குழப்பமே தீராத பட்சத்தில் இப்போது அவனை விட வேகமாக (!!!) செயல்படும் சஞ்சயின் நடவடிக்கைகள் இன்னும் குழப்பத்தையே தந்தன. இவற்றை இன்றே ரஞ்சுவிடம் வெளிப்படுத்தி அவளையும் குழப்ப வேண்டாம் என்று நினைத்தாள்.

*****

அடுத்த நாள் அனைவருக்கும் பரபரப்பாக விடிந்தது. பலரின் வாழ்க்கையை மாற்றக் கூடிய நாளாக மாறப்போகிறது எண்டர்ஜ் அப்போது அவர்களுக்கு தெரியாமல் போக, எப்போதும் போல ஒரு நாளாகவே அன்றைய தினத்தை ஆரம்பித்திருந்தனர்.

சஞ்சய் மற்றும் ரஞ்சுவின், அவளின் பிறப்பைக் பற்றி அறிந்து கொள்வதற்கான பயணம், ராஜசேகரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக கோகுல் மேற்கொள்ளும் பயணம், சஞ்ஜீவின் மனதைக் கலைக்க ஷ்ரேயா மேற்கொள்ளும் பயணம்… இவற்றில் எந்தெந்த பயணங்கள் தங்களின் இலக்கை சரியாக அடைந்து வெற்றியடையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 
Top