All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

..தீராப் பகை தீராக் காதல் - அவிரா

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 5)



.அவ்வளவு நேரமாக' அவன் சற்று தள்ளாட்டத்துடன் ... அவளையே பார்த்தவாறே .... கதவில் சாய்ந்து ..நின்றிருந்த விதமும், கலைந்த ஆடைகளும், அவனின் இரத்தம் பூசிய விழிகளும், அவன் முழுப் போதையில் இருப்பதை கூற.....

அய்யோ.. இவன் தெளிவா இருக்கும் போதே, ஒரு நாளைக்கு அத்தனை பொண்ணுங்க கூட ... கூத்தடிப்பான்.. இந்த நிலையில நான் வேற
இவன்கிட்ட, ஒத்தையில சிக்கி இருக்கேன் ...." போச்சு.. விடிய, விடிய என்னைய வைச்சு செய்யப் போறான் .. என மனம் பதற; அசையாது அப்படியே சிலையாக நின்றிருந்தாள் வானதி ...

" ன தி இ ....அப்படியே அசையாம நில்லு., இந்த ரும் மே, சுத்துதூஊஊ... நான் தான்; இந்த கதவைப் பிடிச்சு ... நிப்பாட்டி வைச்சுருக்கேன்.. என்று பாண்டியன் கூறி முடிந்த நொடி, கதவின் வழவழப்பில், சறுக்கி, அப்படியே .. கதவின் மேலே சரிந்தவாறே .. கால்களை விரித்து, கீழே அமர்ந்தான்..

அவன் சறுக்கி, கீழே அமர்ந்தும்... சற்றும் அசையாமல்; வானதி.. அப்படியே நின்றிருக்க ...

" ன தி இ .. ரூம் இப்போ சுத்துல.. இல்ல....நான் நிறுத்திட்டேன்.. என குழறிக் கொண்டே எழுந்தவன் ... இரண்டடி நடக்க .. மூன்றாவது அடியில் மீண்டும் விழப் போனவனை... அவளை மீறி ஓடிச் சென்று தாங்கியிருந்தாள் ... மனிதாபிமானத்தால் ....

தன் முழு பாரத்தையும், அவளின் தோளில் 'தன் இடக்கையைப் ேபாட்டு இறக்கியவன்.. அவனின் சிக்.. ஸாக் ..(zig_Zag)...நடைக்கேற்ப அவளையும் சேர்த்தி அலைக்கழித்தே .. கட்டிலில் குப்புற விழ முயற்சிக்க ...அந்தோ பரிதாபம், கட்டிலுக்கு அருகே இருந்த வெற்றிடத்தில் தரையில் அவளுடன் குப்புற விழுந்தான், அவளுடன் ...

அவனின் வாயோ.." . ப்ளான்
பண்ணாமா கிணத்துல குதிச்சா...இப்படி தான் ... மூக்கு உடையும் ..ன தி இ .. என்னைய கெட்டியாப் பிடிச்சுக்கோ... உன்னையே நான் காப்பாத்துறேன் , .என குழறியவாறே, அவளின் தலையை தரையோடு தேய்க்க ....
அவனிலிருந்து திமிறி எழுந்தவள்.. அவனை திருப்பி, நேராக படுக்க வைத்தாள்..
இவனே பாதாளத்துல பல்லைக் காட்டிட்டு கிடக்குறான் .... கட்டிலுக்கும், தரைக்குமே....வித்தியாசம் தெரியாமா?... இந்த லட்சணத்துல, என்னைய காப்பாத்துறானாம்... என வாய்க்குள்ளே முனகியபடியே, எழுந்தவளின்... கைப்பற்றி பாண்டியன் இழுக்கவும், தடுமாறி அவனருகே அமர்ந்தாள் ரதி..

ன தி இ .. உன்னையப் பார்க்கவும், இங்கிருந்து எதோ .. கிளம்புது ... என தன் அடிவயிற்றிலிருந்து ..வாய் வரை
தன் விரலைக் கொண்டுச் சென்றவன் ..
அவள் என்னாது என்னைப் பார்த்ததும் எதோ வயித்துல இருந்து
கிளம்புதா.?... என தவறாக நினைத்து அதிர்ந்து விழிக்க....

அடுத்த நொடி;பொளக்'கென அவளின் மீது வாந்தி எடுத்து விட்டு .. ச்சி, ச்சி; "வ்வாக்' .. வாந்தி எடுத்துட்டியா ?.. .
ண தி இ ... 'அய்யோ நாத்தம் , நாத்தம் ....என்றவன் அவளிடமிருந்து தள்ளி அமர்ந்து, தன் மூக்கை மூடி கொண்டான் ...

வடிவேல் பாஷையில் "என்னா
நேக்கா.. நம்ம மேல வாந்தி எடுத்துட்டு ; ஒண்ணும் தெரியாத
பச்சப்பிள்ளையாட்டம்... மூக்கை மூடிட்டு உட்கார்ந்து இருக்கிறதைப் பார்.. என்று புலம்பியவாறே, தன்னையும், அந்த இடத்தையும், சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் ஒருமுறை பாத்ரும்மிற்குள் சென்று ... உடைமாற்றி விட்டு வர ..
பாண்டியனை அங்கே காணாமல் , அறையில் சுற்றும், முற்றும் தேட..

அறையின் ஒரு மூலையில், இருந்த பெரிய ஃப்ரிட்ஜ்ஜை திறந்து வைத்துவிட்டு, அதனருகே குத்துக் கால் வைத்து, அமர்ந்திருந்தவனை நோக்கி சென்றாள்.

அவள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து.." ன தி இ .. ( நதி) பார்த்து ; பார்த்து, என் முன்னாடி பெரியகுளம் இருக்கு, தவறி விழுந்துடாதே .. என்க..

அவனின் முன்னே", குடிப்பதற்காக ஃப்ரிட்ஜ்ஜில் ' வைத்திருந்த, நீர் பாட்டிலை ; எடுத்து கீழே ஊற்றி வைத்துவிட்டு ; பாவமாக அமர்ந்திருந்தான்..

அவனைக் கொல்லும் வெறியில் பார்த்து விட்டு, "எங்கிருந்துடா.,வந்த ..ஏன்டா.. என்னை
சாகடிக்கிற என மனம் ஒரு புறம் , அவனை தாளிக்க .. மறுமனமோ?..இதையே உன்னால தாங்க முடியலையே? அவன் தவறாக உன்னிடம் நடந்திருந்தால், உன் நிலைமை என்ன?.. இப்படியா அவனை திட்டிட்டு இருந்திருப்பே?.. அந்த நிலைமைக்கு இது மேல்.. பேசாமல் அவனை இப்படியே விட்டுட்டு, பக்கத்து அறையில் போயி தூங்கு....என இடித்துரைக்க...
பெண்ணவளின் இன்னொரு தாய்மை மனமோ?.. அப்படியே அவனை விட்டுச் செல்ல இயலாமல் ..
அவன் ெகாட்டிய தண்ணீரை, துடைத்து, ..."தண்ணீ வேணும்" என பாவமாக பார்த்த ....அவனுக்கும் தண்ணீரை புகட்டி விட்டு,
ஃப்ரெட்ஜ்ஜை மூடிவிட்டு ..
கைத்தாங்கலாக.. அவனை அழைத்துச் சென்று மெத்தையில் படுக்க வைத்துவிட்டு .. தனக்கு ஒரு, தலையணை, போர்வையை எடுத்து ..

சென்று ஷோபாவில் போட்டு, விட்டு, "அப்பாடி" என்ற முனகலோடு, அதில் படுத்தாள்...
"கடவுளே, இந்தகுடிக்காரன் கூட .ஒரு பொழுதே ஓட்ட முடியலையே.. நம் நாட்டிலுள்ள .... குடிமகன்களின் மனைவிமார்கள் எல்லாம் ... எப்படி தான், இவங்களையும் , சகிச்சுக்கிட்டு, பணப்பற்றாக்குறையோடு . . குழந்தைகளையும் வளர்கிறார்களோ..

எது, எதுக்கோ,யார், யாருக்கோ? .. அவார்ட் தாராங்க.. எனக்கு அதிகாரம் இருந்தால், இவர்களுக்கு அவார்ட் கொடுப்பேன் என நினைத்தப்படியே கண்மூடினாள்.. அடுத்த நொடியே

" னதி இ.. என்று ஈனமாக பாண்டியன் அழைக்க.. பட்டென்று எழுந்து அமர்ந்தவள்.. வந்தனா... வைய் கொன்னுடுவேன்டா.. உன்னை... என தன்னை மீறி கத்தி இருந்தாள். அதில் அமைதியாக அவன் வயிற்றை தடவியப்படி, அமர்ந்திருந்தான்.. பெண்
மனம் கேளாமல், அவன் முன் சென்று,, நின்று .. "என்ன வயிறு வலிக்குதா?" எனக் கேட்டாள் ரதி..

இல்ல 'ச் சூ. . ச்சூ" .. வருது.. எப்படி போகணும்.. குழந்தையாய் வினவ.

கருமம், கருமம், வா, பாத்ரும்மினுள் விடுறேன். குத்துமதிப்பா போயிட்டு வா.. அவன் கைகளைப் பற்ற.. அதை தட்டி விட்டவன்.. இல்ல., நீயும், வா அப்போதான் போவேன். என அவன் அடம் பிடிக்க .

ப்ளிஸ் .நீ போ .. நான் வரக்கூடாது .. என்றாள்..
மீண்டும் அவள் கைப்பற்றி, "வாவென " அழைக்க..
வந்து தொலை என அவன் கைப்பற்ற., இம்முறை அவன் தட்டி விட்டு, .

தன் நெஞ்சை சுட்டிக் காட்டியவன்.. "என்னைய கொல்லுறதா
இருந்தா.. இங்க .. என் நெஞ்சில குத்தி சாகடி என்னைய. உன பொறம்போக்கு அப்பன் மாதிரி முதுகுல குத்தி, சாகடிச்சுடாதே .. எனக் கோபமா.. வெறியா.. பழிவாங்க துடிக்கும் சீற்றமா என பிரித்தறிய முடியாத கடினக்குரலில் கூறியவனை ..

இப்ப மட்டும் எப்படி.. இவ்வளவு தெளிவா பேசுறான் என்று அதிர்ந்துப் பார்த்தாள் பேதையவள்..

என்ன. அதிர்ச்சி ஆயிட்டியா?.. சும்மா.. நடிச்சேன்.. சந்தர்ப்பம் கிடைச்சா. என்னை கொல்லுறியா.. இல்ல சக மனுஷனா நடந்துக்கீறியானு
சீண்டினேன் .. என கண் சிமிட்டி..பாண்டியன் சிரித்தான்..

அவனிடம், எதையும் சொல்லி புரிக்க வைக்க முடியாது என நினைத்தவள்.. எதுவும் பேசாமல் தன்னிடத்தில் சென்று படுத்துக் கொண்டாள்.

இதுதான்; சாக்குனு அப்படியே போயி படுத்துக்கிட்ட.. மச்சானுக்கு காலு அமுக்கி விடுறது.. தூங்குறதுக்கு ஒரு பாட்டு படிகிறது. அப்படியும்... தூக்கம் வரைலைனா, உன் நெஞ்சுல சாய்ச்சு,, தூங்க வைக்கிறது .. என விஷமம்மாக சிரித்துக் கொண்டே கேட்க..

போர்வையை முகத்திலிருந்து விலக்கி, அவனைப் பாவமாக ரதி பார்க்க..

இன்னிக்கு எனக்கு நிறைய வேலை செய்திருக்க .அதுனால இன்னிக்கு
பிழைச்சிப்போ.. நாளைக்கு வைச்சுகிறேன் கச்சேரியை.. என்று விட்டு ..மெத்தையில் சரிந்துப் படுத்து... ஆழ்ந்து தூங்கிப் போனான் அடுத்த பத்தாவது நொடியே..
பெண்ணவளுக்கு தான் தூங்கம் தூரப் போனது... " முதலில் அச்சு அசலாக குடிக்காரன் போலவே இருந்தான். தீடிரென்று தெளிவாக பேசுறான்.. இரண்டுமே உண்மை மாதிரி தான் தெரியுது.. எப்படி இவ்வளவு சீக்கிரம் மப்பு ., இறக்குச்சு.. ஏன்; என்னை ஒண்ணும் செய்யலை.. என குழம்பியவாறே விடியற்காலையில் நித்திரையில் மூழ்க ஆரம்பித்தாள்..

" குழம்பிய மனம் ... சிந்திக்கும் திறனை இழக்கும், விளையாட்டிலும் சரி, போரிலும் சரி.. எத்தகைய வீரனையும், வீழ்த்த .. அவனின் சிறு மனக்குழப்பமே போதுமானது.. வெற்றிப்பெறுபவனுக்கு.. இங்கும் .. அதையே தான் பாண்டியன் , ஆயுதமாக கையில் எடுக்க... அதன் முக்கியமாக கூறிய.."உன் தந்தைப் போல் முதுகுகில்....குத்தாதே " .. என்ற முக்கிய பதத்தை மறந்திருந்தாள் பேதையவள்...

அதிகாலையில் ரதியை எழுப்பி, பல் துலக்க ., குளிக்க.. கோலம் போட, வீட்டை சுத்தம் செய்ய, இப்படி படுத்தி எடுத்தவன். இறுதியாக 8 மணிக்கு டைனிங் டேபிள் முன் அமர்ந்தவன் ...
தன் எதிரே, தலைக்கு குளித்து, துண்டை தலைக்கு கட்டியவாறு, எந்தவித ஒப்பனையும் இன்றி, சுடிதாரில் .. நின்றிருந்தவளின் .. முகத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு, தன் தலையை குலுக்கி விட்டு ..

ரதி.. பசிக்குது எனக்கு... நெய் தோசை மொறு, ெ மாறுனு சுட்டு ; கூடவே, தேங்காய், தக்காளி சட்னி வைச்சு எடுத்துட்டு வா.. என்று விட்டு அவள் .. அமைதியாக நகராமல், நிற்கவும். என்ன செய்ய தெரியாதா? என நக்கலாக கேட்டான்..
அதில் கோபத்தில் .சிலிர்த்தவள். எனக்கு எல்லாமே நல்ல செய்ய தெரியும்.. என்று வீராப்பாக...கூறி விட்டு... அவன் கேட்டதை அவன் முன் வைத்தாள் அடுத்த இருபது நொடியில் ...
நெய் தோசையை பிய்த்து... சட்னியில் துவைத்து, வாயில் வைக்க போன நொடி, அதை தட்டிவிட்டு, தட்டையும் விசிறியடித்து .. அவனின் சட்டையைப் பற்றி உலுக்கியது.
அச்செயலில் ரதி அதிர்ச்சியில் நிற்க .. பாண்டியனோ, அக்கரங்களை தட்டி விட்டு, வேங்கை என எழுந்து நின்றான்.. ..

_ பகை தொடரும் ..
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா__(பகுதி - 6)

தன்னிலிருந்து மருதவேலை பிரித்தெடுத்த பாண்டியன். "பேச்சு, பேச்சு தான் இருக்கணும், மீறி உன் கை என் மீது பட்டது. அப்புறம், கை இருக்காது எதுக்கும் ...... எதுக்கும் என்ற வார்த்தையில் .. கழுவதற்கு என்ற மறைபொருளுடன் ... அழுத்திக் கூறியவன் .. சற்று இடைவெளி விட்டு ..ஜாக்கிரதை என கர்சிக்க....

அவனின் கோப முகமும், நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்த விதமும், கண்களில் தீப்பொறி பறக்க.
மருதவேலை பார்த்த விதமும்,அவன் சொன்னதை செய்வான் .. சற்று தள்ளி நின்றே பேசு..என மருதவேலின் மூளை அவரை பயப்படுத்த .. சற்று அவனிடமிருந்து விலகி நின்றார்.

அடுத்து பாண்டியன்,
"கார்ட்ஸ்" என அலறிய சத்ததில்,
மருதவேலுக்கு பின்னால் நின்றிருந்த இருவர் ..பதற்றத்துடன் பாண்டியன் முன்னே வந்து நின்றனர் ...

என்ன வேலை பார்க்கிறிங்க.. உங்களை மீறி எப்படி இந்தாளு உள்ளே வந்தான். இது தான் நீங்க வேலை பார்க்கிற லட்சணமா ...என பாண்டியன் குரல் உயர்த்த .,

இல்ல சார்.. அது வந்து .. "ச.... " ...
என பாதுகாவலர் சத்யாவை பார்த்துக் கொண்டே.... ஏதோ கூறவிழைவதற்குள்....

அவரை மேற்கொண்டு சொல்ல விடாமல் இடைவெட்டி, "சரி, சரி . இனி யாரையும், என் பெர்மிஸன் இல்லாம... வீட்டுக்குள்ள விடக் கூடாது" போங்க.... என்றவன் ...

மருதவேல்யிடம் திரும்பி .. "யாருய்யா.. நீ.?.. என் வீட்டுக்குள்ள புகுந்து .... என் சட்டையைப் பிடிக்கிற.. அவ்வளோ ....பெரிய பருப்பு?..
என அவரை தெரியாதது போல நக்கலாக கேட்டான்.


அவனின் நக்கல் குரலில், கொதித்தெழுந்த மருதவேல்.

" பொறுக்கி, பொறம்போக்கு நாயே' ., எவ்வளவு ஏத்தம் இருந்தா,
என்கிட்டயே... வாலாட்டி இருப்ப.. ரெய்டு வரது. மக்களை எனக்கெதிரா தூட்டி விடுறது.. இதுயெல்லாம் எனக்கு சப்பை மேட்டருடா... முழுசாக என்னைப் பத்தி தெரியாம என்கிட்ட மோதிட்ட ; இனி எப்படி சின்னாபின்னமா' ..
அவுறேன்னு பாருடா.... என பாண்டியனை கொல்லும் வெறியோடு மருதவேல பார்த்துக் கத்தினார் ..

அடுத்ததாக,,,,

இவ்வளவு நேரம், தந்தை தனக்காக வந்து, பாண்டியனோடு சண்டை போடுகிறார் என மனதில் நிம்மதி பரவ நின்றிருந்த .... ரதியை நோக்கி..

"இந்த பரதேசிக்கு, நீயும் உடைந்தையா?... இவன் கூட இருக்கம்ணு தான் எனக்கெதிரா..... இவன் கூட சேர்ந்துக்கிட்டு ..இவ்வளவையும் எனக்கெதிராக., பண்ணியா? ... ஒத்த பொண்ணு உன் மேல் அதீத நம்பிக்கை வைச்சதுக்கு ... என் புத்தியை
செறுப்பால அடிச்சுக்கனும்.... நம்பிக்கைத் துரோகி .." என
நெருப்புத் தூண்டுகளை வார்த்தைகளாக்கி ..ரதியின் மீது கொட்டினார் மருதவேல் .


தந்தையின் பழி சொல்லில், வேரற்ற மரம் போல், அப்படியே சுவரில், சாய்ந்து..... அழ ஆரம்பித்தாள் ரதி..

அவளின் அழுகையை; வெற்றுப் பார்வை பார்த்து விட்டு .. மருதவேலை
நோக்கிய பாண்டியன் ... "யோவ், நான் மட்டும் தான் ... உன்னை . பழி வாங்க .. ஒவ்வொன்னா... பண்ணிட்டு இருக்கேன்.. இதுல இவ ஒண்ணும், கூட்டு கிடையாது ... உன்னை காப்பாத்த .. குறுக்கே வந்து .. ஐ மீன் .. உன் சொத்தை காப்பாற்ற .. இங்க இருக்குறா.... என்.. .... என ஏதோ கூற வந்து.....
சிறிது இடைவெளி விட்டவன். இங்கிருந்து .. இவளை கூட்டிட்டு, போ, பெரிசு.,, அப்புறம் இன்னொரு பெரிய்ய ஆப்பா... உன்னோட மொத்த சாம்ராஜ்ஜியமே தரைமட்டமா' ... ஆகுற மாதிரி ....நீ எந்த வகையிலுமே எந்திரிக்க முடியாதபடி உனக்கு செதுக்கி வைச்சுருக்கேன் ... முடிந்தால் கண்டுபிடி. நாலு நாளைக்குள்ள ..... கண்டுபிடிச்சாலும், சரி; இல்லைனாலும் சரி.. 5-வது நாள் உன்னோடது எல்லாம்,
என்னோடது "....என மருதவேலின் முக மாறுதலைப் பார்த்துக் கொண்டே ..கூறினான்.

அவன் கடைசியாக கூறியது ....
மருதவேலின் மண்டைக்குள் .. முன்னுக்கு வர .. முன்னே சொன்ன .. மகள் பற்றிய விஷ்யமும், பழி வாங்க தான் .என்ற பதமும்...... பின்னுக்குத் தள்ளப்பட்டு .. " பெரிய ஆப்பு...உன் சாம்ராஜ்ஜியம் எனக்கு .." வார்த்தைகள் கோர்வையின்றி, மருதவேலின் மனதில் உலா வர... இன்னும் மீள முடியாதபடி என்னடா பண்ணி வைச்சுருங்க.. என பெருங்குரலெடுத்து கத்தினார் ..


பாண்டியனோ... நகைத்துக் கொண்டே சென்று, ஹால் சோபாவில்,கால் மேல் கால் போட்டு தெனாவட்டாக அமர்ந்து, தன் காலைப் பார்த்து, "யோவ், நீ என்
காலுல விழுந்து கேட்டாக் கூட சொல்ல மாட்டேன்" என்று பலமாக சிரித்தான்...


சாதாரணமானவன்.. ஏதோ தொழில் பொறாமையில் சின்ன, சின்ன இடையூறு செய்கிறான்.. நேர்ல
மிரட்டிப். பார்க்கலாம், இல்லனா .. ஆளை வைச்சு கை, காலை உடைத்து பயப்படுத்தலாம்.. என நினைத்து வந்தவருக்கு ... கடைசியாக அவன் சொன்ன தோரணை, வெறும் வெற்று மிரட்டல் இல்லை என்பது சந்தேகமின்றி தோண.,,,,,


இவனிடம் இனி இதைப் பற்றி கேட்டு பயன் ஒன்றும் இல்லை, என்று ... முடிவெடுத்தவர் ....இவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த, சத்யாவின் கன்னத்தில் அறைந்து .. " மொத பிரச்சனை அப்போவே.... தீர விசாறினு
சொன்னேன்.... ஒண்ணுமில்லனு சொன்ன .. அடுத்தடுத்த பிரச்சனையின் போது, ஏதுதேதோ... காரணம் சொல்லி, உடம்பு முடியாம இருந்த நான் உன்னை..... பார்த்துக்க
சொன்னதுக்கு ... படுபாவி இப்ப இங்க கொண்டு வந்து நிறுத்திட்ட .. அனாதை நாய்யிக்கு ஆதரவு கொடுத்து, சோறு போட்டு வளர்த்ததற்கு நன்றி கடன்
செலுத்திட்டடா ... என்று விட்டு ..இவ்வளவு நேரமாக அசையாமல் அமர்ந்திருந்த வானதியை உக்கிரமாகப் பார்த்தார் ... எங்கே தன் சொத்துக்கு .....இவளாலும், பாண்டியனாலும் ....ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று .... ..

அவளோ, இவ்வளவு நேரமாக ,, அங்கு நடக்கும் போரை கவனிக்காமல் ... தன் மனதினுள் ...

"இத்தனை வருடங்களாக தன்னை அன்போடும், நெஞ்சத்தில் உயிர்யென தாங்கி. வளர்த்திய தந்தை.. எங்கே போனார்..
உலகமே. என்னை தவறாக கூறியிருந்தாலும்.. பெற்ற தாயிடம், ஒரு பெண் அத்தகைய வார்த்தையை,,, கூறி இருந்தால், இப்படி தன் மகள் பேசுபவள் இல்லையே, அப்படியிருக்க..... ஏன் இப்படி கூறினாள் :,,,,, என, அதை ஆராயந்து, அவள் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டாளா?... என ஏன்? சிந்திக்கவில்லை. அவருடன் தான் அனைத்து பிரச்சனைகளையும் ..சரி செய்ய பாடுபட்டேன் .... நொடியில்.. அனைத்தையுமே மறக்க என்ன காரணம்.. என தன்போல் கண்ணீரை சிந்தியவாறு, யோசித்துக் கொண்டிருந்தாள் வானதி ..

அப்பொழுது தந்தை அழைத்த ..' நாச்சி" என்ற சப்தத்திற்கு நிகழ்காலம், வந்தவள்.. தந்தை தன்னை புரிந்து, கூட்டி செல்ல கூப்பிடுகிறாவென்று.. அவசரமாக எழுந்து அவரருகே நின்றாள் மலர்ந்த முகத்துடன் ..

இதை கவனித்த பாண்டியன் முகத்திலோ, "ஒரு கசந்த முறுவல் வெளிப்பட்டு மறைந்தது "...

"இவன் எனக்கு எதோ பெரிய ஆப்பு வைச்சுருக்கானாம்.. நான் பாரு திரும்ப முட்டாளா... உனக்கிட்ட சொல்லுறேன் .. உன் ஆசை காதலன் .. அவன் போட்ட திட்டம் உனக்குத் தெரியாமையா இருக்கும். நெஜமாவே .. உங்கம்மா.. உன்னை எனக்கு ெ பத்திருந்தா... என் இரத்தம் உன் உடம்பில் ஓடுனா.. சொல்லு, இவன் என்ன பண்ணி இருக்கான் எனக்கு எதிராக ?... தான் பேசும் தரம் தாழ்ந்த வார்த்தைகள், மூலம் தன் மகளின் மனதிலிருந்து தான் தந்தை ஸ்தானத்திலிருந்து, இறங்கி....' பண வெறி' பிடித்த அரக்கனாக மாறிக்கொண்டுயிருப்பது... அறியாமல் ரதியை பற்றி உலுக்கினார் ..

தன் தந்தைக்கு... மகள்பாசம், மகளின் மனம், மகளின் நலன்,மனைவியின் மானம் .. இது எதுவுமே முக்கியமில்லை அவருடைய சொத்திற்கு முன்.. என்ற முடிவுக்கு வந்தவள்.. கண்மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ..

"எனக்கு எதுவும் தெரியாது"..... என்றவள் அப்பா என்ற வார்த்தையை முழுங்கி இருந்தாள்..

"பெத்த அப்பனை விட....உனக்கு ஆம்பிளை சுகம் பெரிசா .. போச்சா.. பார்த்துக்கிறேன்.. உங்க இரண்டு பேரையும், என்றவர் ..பாண்டியன் முன் சென்று, "என்னைப் பத்தி முழுசா தெரியலை உனக்கு.. கூடிய சீக்கிரம்... நான் யாருனு காட்டுறேன்" ... என கத்தி விட்டு வெளியேறினார்..

அப்பொழுது,சத்யா.. ரதியையும், பாண்டியனையும் பார்த்து, செய்கையில் ஏதோ .. செய்ய ... அவனை அடிக்க பாண்டியன்எழுவும், விருட்டென்று மறைந்தான் சத்யா..

இவர்களின் செய்கையை, ரதி பார்த்திருந்தாலும்; அவளின் மனமோ?.. ....தனக்கு உயிர் கொடுத்த உறவு, பொய்த்துப் போனதில், உள்ளம் துடிதுடித்துக் கொண்டிருந்தது தரையில் போட்ட மீனாக.. தந்தையின் பாசம் எனும் சுவாசம் இழந்து ..

அப்போது, அவளருகே வந்த பாண்டியன், அவளின் கைப்பற்றி; ஒன்றை கூற..... அதில் சித்தம் தெளிந்து தூக்கி வாரி போட.... நிமிர்ந்தாள் ...

._ பகை தொடரும்......
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா_(பகுதி - 7)

தன் தந்தையின் பாசமற்ற... பணம் மட்டுமே பிரதானமான.... அவரின் இன்னொரு... சுயநல முகத்தைக் கண்டு திகைத்து அமர்ந்திருவளின் கைப்பற்றி, அவள் விரல்களில் அழுத்தம் கொடுத்தவாறே..."....

"தேனுமிட்டாய் பேபி, உங்கப்பன் வந்து என்னை செமம்ம..... டென்ஷன் பண்ணிட்டுப் போயிட்டான்.... ஸோ... உன்னோட தேன்மிட்டாய் உதட்டால... சும்மா நச்சுனு ... " லிப் ட்டு லிப்' 'டீப் கிஸ்ஸ்ஸ.. ஒன்னு கொடுத்தா .... என்னோட டென்ஷன், தலைவலி எல்லாமே சரியாயிடும்.தரியாடி ... என ஹஸ்கி குரலில், ரதியின் காதருகே பாண்டியன் .... குறுகுறுத்தான்....

"லிப் ட்டு லிப் "... வார்த்தைகள்... அவளின் மூளைக்கு சென்றடைந்து... அவளுக்கு அபாய மணி அடிக்க, அதில் பதறி பாண்டியனின் கைகளை உதறியவள்..,,, அவனை" பே"வெனப் பார்த்து முழித்தாள் ... மொழியை மறந்த (குழந்தை) மதலையைப் போல் ..

;எப்பவுமே என்னை சுத்தி, நிறைய பொண்ணுங்க இருப்பாங்க.. நான் டென்ஷன் ஆன.... உடனே...ஒருத்தர் மாத்தி, ஒருத்தருனு .முத்தம் கொடுத்து, டென்ஷனைப் போக்கிடுவாங்க.. இங்க நீ மட்டும் ..தான் இருக்க.. அதுதான் உன் கிட்ட கேட்டேன் ... அப்படி நீ கொடுத்தால் அதோட வேல்யூ ரொம்ப அதிகம் ... எப்படினா?......

.. ஒரு டிப்ப் ...லிப் கிஸ் .... பயன்கள்


இதழ்முத்தம் கொடுக்கும் போது... இருவரின் உடலில் கார்டிசோல் அளவு குறைந்து, மனம் ரிலாக்ஸாக இருக்கும். மேலும் முத்தம் மன கவலையில் இருந்து விடுவிக்கும். அதோடு டோபமைன் என்னும் சந்தோஷமான மனநிலையில் வைக்கும் ஹார்மோனின் அளவை மேம்படுத்தி, நல்ல அமைதியான மனநிலையில் இருக்க உதவும். இது மட்டும் இல்லாமல், புத்துணர்ச்சி, தலைவலி, உடல் வலி. உனக்கு கூட போகும் :. .

நீயும் டென்ஷனாக இருக்க.. இது நம்ம ரெண்டு பேருக்குமே...
பெனிபிட்டு...... பிட்டு ... என்பதை அழுத்திக் கூறி .... அறிவியல்பூர்வமாக நிருப்பிக்கப்பட்டதும்மா... இது .. தலை சாய்ந்து....நேராக ... தலையை கோதி.. எப்படி வேணும்னாலும் ... சரி.. அது உன் வசதி என்று..... கேள்வியாக அவளின் கண்களைப் பார்த்தான்.

அவன் குழைவாக கேட்ட விதத்திலேயே .. தான் தரவில்லை என்றால், அவனே.,, அதை செய்வான் என யோசித்தவள்.. தனக்கு .. விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக .. அவனை பாவமாகப் பார்த்து வைத்தாள்.
அவளின் விழி .....வழி பார்வையிலே ... அவளின் விருப்பமின்மையை புரிந்துக் கொண்டவன்..

சரி தேனுமிட்டாய், சாப்பிடுற விளையாட்டு வேண்டாம்.. அதுக்குப் பதிலாக, இன்னிக்கு நான் சொல்லுற வேலையெல்லாம் .. என அவன முழுவதாக கூறுவதற்குள்....

ரதியின் முகம் ..
" ...வேறு வேலையின்னா .... சமீபத்தில் மெத்த படித்த மேதாவி ஜந்து .....ஒன்று சொன்னதே.. "ஆடைக்கு மேல தொட்டால் பாலியல் வன்முறை இல்லை என்று "..

எனக்கு அது போல் பதவி இல்லை ..... இருந்திருந்தால் தவறாக பெண்களை பார்க்கும் கண்களையே தோட்டச் சொல்லி சட்டம் போடுவேன்....... என மனதில்
வீராப்பாக பேசியவள் வெளியே....

அது போல ஏதேனும் கேட்பானோ... என்பது போல் ... பாண்டியனை மருண்டப்பார்வை பார்த்து வைத்தாள்..

இப்போ .. என்னோட ரூம்மை; முழுசும் நீ தனியே கிளின் பண்ணனும், அப்புறம் என் ஆபிஸ்ஸுக்கு... கூட்டிட்டுப் போறேன்.. அங்க வந்து,ஒரு வருஷ அக்கெளண்ட்ஸை .. செக் பண்ணிக் கொடுக்கணும் ... எது வசதி?... எனக் கேட்டான்..

என்னவோ., ஏடாகூடமாக கேட்கப் போகிறான் என்று நினைத்தவளுக்கு.. அவன் சொல்லிய வேலை .. மனதை இலேசாக்க ....

"ப்யூ.. என வாயில் காற்றை ஊதியவள்.. இவ்வளவுதானா?.. சீக்கிரம் செய்துடுவேன்.. அதுக்கு ( லிப் லாக்)இந்த வேலையே செய்யுறேன்...

அதுவும் உங்க ஆபிஸ் கணக்கு பார்க்க ரெண்டே நிமிஷம் போதும்.. சிறிய கம்பெனியாக இருக்கும் என யூகித்து ...கூறினாள்.


"ம்... அப்படியா?.. என்பதைப் போல் கேலிச் சிரிப்பை அவள் மீது
சிந்தி விட்டு, ..." சாப்பிட்டுட்டு மேலே என் ரூம்க்கு போ.. ஒரு கால் பேசிவிட்டு வரேன்.. என்றவன்.. மொபைலில்....யாருடன் பேசிக் கொண்டே வெளியேறினான்..

போன் பேசிக் கொண்டே. வெளியே சென்றவன்.. எப்பொழுதும் தான் வெளியே செல்லும் நேரமானதால் .... தன் கார் அருகே.... ஓட்டுநர்
நெளிந்தவாறே நின்றிருந்த விதத்தைப் பார்த்ததுமே.. .. கோபம் தலைக்கேற.." "கால் யூலேட்டர்" .. என...பேசியை அணைத்து விட்டு, வீட்டினுள் சென்றவன்.. ஹாலில் இருந்தே கிட்சனைப் பார்த்து... "ராமுண்ணா" எனக் கத்திய கத்தலில் ..

சமையல் அறையில் இருந்தவர், கையில் இருந்த கரண்டியை;கீழே போட்டுவிட்டு, அவனின் முன்பு பதற்றத்தோடு நின்றார்..

" ஏன்?... இன்னும் மணி அண்ணாக்கு சாப்பாடு கொடுக்கல?".. கோவத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டுக் கேட்டான்.

அது, தம்பி .. நீங்க .. புதுசா வந்தவங்க சண்டை ... என கோர்வையாக கூறாமல், துண்டு ; துண்டாக .. அவர் கூற...

காலையில்... ... புதுசாக வந்தவங்க... உங்க கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க .. அப்படி இருக்கும் போது, உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையா... என்ற சிந்தனையை மீறி நான் எப்படி... அவங்களுக்கு சாப்பாடு தர முடியும்?..
என்ற அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவன்...

ராமு ..அண்ணா... சண்டையில எனக்கு எப்பவுமே ...எதுவும் ஆகாது .. என்னை மீறியாரும் என்னை எதுவும் செய்ய முடியாது... ( இறைவனையே ஆட்டிப்படைத்த ., விதி இதை கேட்டு சிரித்தது வருங்காலத்தில் அவனுக்கு நேர விருக்கும்... நிலையை எண்ணி)

மேலும், அவங்க சப்பை ஆளுங்க .. இதுக்கு போய் ... நீங்களும் சாப்பிடாம, இருந்து, அவங்களுக்கும் சாப்பாடு கொடுக்காம இருந்து இருக்கிங்க.. மணி டிரைவர் அண்ணா, சுகர் பேஷண்ட் ....தோட்டக்கார சாமி தாத்தா.. வயசானவங்க... வாட்ச்சு மேன் பசங்க.... வயசு புள்ளைங்க....சமையல் செய்யுற ராமு படுக்கிழவன் என வேண்டுமென்றே, கூற.

அவரின் முகத்தில் ... பதற்றம் போயி...சற்று சிரிப்பு எட்டிப் பார்த்தது.....

அதைக் கவனித்துக் கொண்டே ;
" இப்படி எல்லாருக்குமே ".. பசி நேரத்து உணவு ...உயிர் காக்கும் மருந்து ... இனி எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்குரிய உணவை தாமதப்படுத்தீர்கள் ... வேலை செய்து தான் உண்கிறார்கள்.. என மெல்லியக் குரலில் எதையோ நினைத்தவாறு அழுத்தமாகக் கூறினான்.


"சரி, தம்பி .. இனி இப்படி செய்ய மாட்டேன் ... என்றவர் .. எனக்கு 50-வயசுதான் ஆகுது.. நான் ஒன்னும் படு கிழவன் கிடையாது.. நீங்களும்... இன்னும் சாப்பிடவில்லை என்று விட்டு .. அவர் கையோடு அவனை அழைத்துச் சென்று .. டைனிங் சேரில்.. உட்கார வைத்து, அவனுக்கு உணவை பரிமாறிவிட்டு, மற்றவருக்கு கொடுக்கச் சென்றார்.

இவ்வளவு நேரம், வாயில் வைத்த பூரியோடு, "ஆஹா' ... நீ அவ்வளவு நல்லவனா... பொம்பிளை பொறுக்கி,... என்பது போல் அதிர்ச்சியோடு நின்றிருந்தவளை... சொடக்கிட்டு, அழைத்து ..

"என்னபூரிக்கு .. வாயில காத்து அடிக்கிறியா ... சாப்பிடுற வேலையை விட்டுட்டு ... சாப்பிடுற மாதிரி நடிச்சினா... அப்புறம், "முத்தம் பூரி "... குடுப்பேன்.. என ... ஒற்றை புருவத்தை வளைத்து கூற.....

அவன் சொன்ன, "முத்தம் பூரியா ? " ... அப்படினா என யோசித்தவளுக்கு ....,,, "அதாவது .. அவன் வாயில் இருப்பதை அவளுக்கு கொடுப்பது .. என்ற அர்த்தத்தை .. அவளின் மூளைக்குள் பையர் சர்விஸ் மணியே அடித்து .. சொல்ல..... அதில் பதறியவள்...

இதோ, சீக்கிரம், சாப்பிட்டுட்டு ..ரூம்மை கிளின் பண்ணுறேன்.. என்று விட்டு, இரண்டே வாயில் இரண்டு பூரியை உள்ளே தள்ளி விட்டு .. மாடிக்கு விரைந்தாள்..


மரமண்டை எல்லாமே !..... லேட்டா தான் புரியுது .. என இதழ் பிரித்து சிரித்துவிட்டு ... பேருக்கு உணவை கெரித்து விட்டு மேலே சென்றான் ... மேலும்,,, அவளை படுத்தியெடுக்க...,,

இதை இப்படி வை, அதை மடி, சட்டையை இப்படி மாட்டு .. பழைய பைல்ஸ்ஸை இந்த கப்போர்டில்... வை. இந்த வருஷச. . முக்கிய டாக்குமெண்டை; என்னோட
ப்ர்ஸ்னல் .. பீரோவில் வை " ... என அவளுக்கு கட்டளையிட்டவாறே, அவளிடம் வேலையை வாங்கியவன், கடைசியாக, பீரோவை பூட்டி ... எப்போதும் போல், அவள் அங்கிருப்பதை மறந்து .. அவன் எப்போதும் வைக்கும் இடத்தில்... சாவியை தன்னியல்பாக வைக்க ...

தனக்கு சாதகமாக ஏதாவது .. கிட்டுமா என அவனின் செய்கையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு,

தான் அடுக்கியதிலிருந்த ...முக்கியமான பைல் ஒன்றை கவனித்தவள்.. அவற்றை மற்றைய முக்கியமான Lாக்குமெண்டுகளோடு, வைத்து, பூட்டி ... . அந்த அறையிலேயே சாவியை வைக்கவும் .... பத்மனாத சுவாமியின் .. மர்ம அறையை தொறப்பதற்கான சாவியைப் பார்த்தது போல் .. குஷியானவள்.. எங்கே?.... அவன் தன்னை பார்த்து; சாவியை இடம் மாற்றி விடுவானோ?.. என்று...மெதுவாக வேறு பக்கம் நகர்ந்து .. ஜன்னலை துடைப்பது போல் நின்றுக் கொண்டாள்.

தான் சாவியை வைத்ததை அவள் பார்த்தாள்..என்ற எண்ணம் துளியும் இன்றி .அவளருகே சென்று, ....

." மெல்ல, மெல்ல .. துடை ... ஜன்னல் கம்பிக்கு வலிக்கப் போகுது... அடச்சீ ... துடைக்க துணியே .இல்லாமல் .. காத்துல கையை ஆட்டி ..நடிக்காதே.. " எனவும் ..

"இய்ய் "... என சிரித்துக் காண்பித்தாள்.,
போதும் நடிச்சது வா..ஆபிஸ்ஸீக்கு ேநரம் ஆகுது... என்றவன் கீழே சென்று, காரில் அமர... அவன் பின்னோடு ஓடி வந்தவள்...மூச்சிரைக்க, முன்னாடி டிரைவரும், பின்னாடி அவனும் இருக்க.. எங்கே?- அமர்வது என்று முழித்துக் கொண்டிருந்தாள்.

தன் அருகே அமரயோசிப்பவளை .. கண்களால் முறைத்து .." என் பக்கத்துல உட்காரவில்லை என்றால், காருக்கு பின்னாடி, ஃபீரியா ஓடி
வரீறியா,.... என....
பட்டென்று அவனருகே அமர்ந்தாள்.

அடுத்த ஒரு மணி நேரம் எந்த பேச்சும் அவளிடையே .. பேசாமல், தன்னுடைய, "லேப்-டாப்பில் ".. பணி செய்தவன். வண்டி நிற்கவும்.., லேப்-டாப்பை மூடி... தன்னுடன் எடுத்துக் கொண்டு, காரிலிருந்து கீழிறங்கி, காரை சுற்றி வந்து... அவளின்புறமுள்ள கதவைத் திறந்து விட ,,, வெளியே இறங்கி நின்றவளிடம்..

." வெல்கம் ட்டு மை ஆபீஸ் " என்றான் பெரிதாக இதழ் விரித்த புன்னகை சிரிப்புடன் ..

அவனின் சிரிப்பையே பொருள் விளங்கா பாவத்தோடு ..பார்த்தவாறே.....
தன்னை சுற்றி இருந்த இடத்தை .. சுற்றும், முற்றும் .... திரும்பிப் பார்த்த ரதி....... அவ்விடத்தின் வெறுமையில்.." யூ சீப் ராஸ்கல்" என கோவத்தில் தன்னை மீறிக் கத்தியிருந்தாள் ...

.......... பகை தொடரும் ..
 
Top