All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கருத்துத் திரி

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான கவிதை வரிகளுடன் உங்கள் தொடக்கமே அருமை👌படுக்கை அறையின் வர்ணிப்பும் 👌 அந்த அறையில் கமழ்ந்த நறுமணம் நம் நாசியையும் தொட்டுவிட்டே சென்றது. ரவியை குறித்த வர்ணனையே சொல்லிவிட்டது ஆரு ஃபிரீஸ் மோடில் தான் இருப்பாளென்று 😍 அவள் சொல்வது போல் அந்த கல் ரவியிடம் அழைத்து செல் என்றவுடன் இப்படியா கொண்டு வந்து அவளை அவனிடம் சேர்க்க வேண்டும் 😝😝😝😝

ரவி கலாரசிகனா இல்லை நீங்கள் கலாரசிகையா எனும் போட்டி எழும் அளவுக்கு அவன் அறை மற்றும் பால்கனி தோட்ட அலங்காரங்கள் இருந்தது. அதை புகைப்படத்துடன் விளக்கியது 👌👌👏👏😍😍

சொந்த பாட்டியென்று நினைத்திருக்க அப்படியில்லை என்று அவன் சொன்னவுடன் ஆருவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தான் நமக்கும் 😱

அடப்பாவி ஆரு😱 உன்னை கூப்பிட வந்தவனை போய் ரேப் பண்ண வந்தானு சொல்லி என்னவொரு அலம்பல் பண்ணியிருக்க 😱😂

அவன் தேவதை பெண் வந்தாள் என்றவுடன் ஆருவுக்கு ஏற்படும் பொறாமை உணர்வு ரசிக்க வைக்கிறது. அந்த பெண் அவளின்றி வேறு யாராக இருக்கக்கூடும். இது புரியாமல் இருக்கிறாளே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

நீண்ட நாட்கள் கழித்து புதிர் போட்டிருக்கீங்க ஆனால் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் அடுத்த பதிவில் அதற்கான விடையை அறியவும் ரவியின் வாழ்க்கையில் நடந்தவைகளை அறியவும் ஆவலோடு காத்திருக்கிறேன் 😍
Nice review..
Thank u..😀😀😀
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரவி வீட்டை விட்டு வெளியே வந்தபோது இருந்த மனநிலைக்கும் வீட்டிற்கு திரும்பும் போது இருந்த மனநிலைக்கும் தான் எத்தனை வேறுபாடு 🤷‍♀️ எல்லாம் அந்த குட்டி வாண்டு செய்த மாயம் 😍 ஆருவின் அந்த மழலை மாறா உரையாடல் யாவும் அவன் மனதிற்கு இதமழித்தது என்பது மறுக்க முடியாத உண்மை 🤩 அவளின் பேச்சு யாவும் நம்மையும் கவர்ந்தது 😍 அவனை விடாப்பிடியாக அவன் வீட்டிற்கு கிளம்ப வைத்து இறுதியில் அவனுக்கு முத்தமிட்டு அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டாள் 😍

உண்மையில் உங்கள் கவிதைகள் அள்ளுது போங்க 👌😍 அவளின் நினைவாக அந்த பறவையின் வடிவை தன் நெஞ்சிலேயே பச்சை குத்தியிருக்கிறான்😍

என்னது அந்த கல்லுக்கு சார்ஜ் போய்விட்டதா 😲 அதை சரிசெய்வது குறித்து ரவிக்கு ஏதேனும் தெரிந்திருக்க வேண்டுமே 🥺

புதிர் போட்ட விதமும் அதற்கு விடையளித்த விதமும் 👌👌தாகமுக்தி யின் நிறத்தை பார்க்கையிலேயே குடித்து பார்க்க தூண்டுகிறது 😋

ஆல்பாட்ரஸ் பறவை குறித்த தகவல்களும் படமும் சுவாரஸ்யம் மிக்கதாக இருந்தது 👌👌😍

ரவி ஆருவை தன் வீட்டினருக்கு அறிமுகப்படுத்தும் காட்சியை காண ஆவல் 😍

பார்கவியின் ஹாண்ட்பாக் எப்படி கிடைத்தது என அவனுக்கு நினைவில்லை. ஆனால் பார்கவி கால சக்கரத்தில் பயணிக்கும் போது அவரிடம் ஹாண்ட் பாக் இருந்தது என்று தான் நினைக்கிறேன். அப்படியென்றால் அவர் தன் வீட்டிற்கு தான் வந்தாரா 🤔அதில் என்ன பிழை நேர்ந்ததோ 🤔ரவி தான் இதற்கெல்லாம் விடையை தேட போகிறானா 🤔என மனதில் இது போல் சில கேள்விகள். அதற்கான விடையை அறியும் ஆவலுடன் நான் 😍😍😍
உங்கள் கருத்து உண்மையிலே எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. எப்படி இவ்வளவு உன்னிப்பாக கவனித்து விமர்சிக்க முடிகிறது.

தாகமுக்தி குடிக்க நல்லா இருக்கும். கொஞ்சம் மணமா மூலிகை தண்ணீர் மாதிரி இருக்கும். கடைகளில் பாக்கெட் களில் கேட்டால் கிடைக்கும். நாட்டு மருந்து கடைகளில் பதிமுக பட்டை என்றால் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.

ஹேண்ட் பாக், ரவி அம்மா பார்கவியின் டைம் ட்ராவல் பற்றிய விவரங்கள் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

உங்கள் கருத்து என்னை மீண்டும் மீண்டும் ஆச்சரியபடுத்துகிறது.😃😃😉😍
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma episode... Naa சொன்னா maari அது aaru தான்... அவன் manasai மத்தி வீடு ku annupi இருக்கா.... Avanuke theriyala avan அம்மா handbag 👜 eppadi avan kita வந்தது nu.... கல்லு ku time travel panra சக்தி இருக்கு.... அவல வீடு la உள்ளவங்களுக்கு introduce panna poraan... இனிமேல் என்ன velai இருக்கு..
ஆமா சித்ரா டியர்...
அந்த கற்களுக்கு கொஞ்ச நேரம் மட்டும் ஒரு நிகழ்வில் பயணிக்க கூடிய சக்தி இருக்கிறது.

ஆருவை அறிமுக படுத்திய பின் என்ன நடக்கும்.. உங்கள் யூகங்கள் என்ன.. என் பதிவில் காணலாம்.

உங்கள் தொடர் கருத்துகள் எனக்கு மகிழ்ச்சியைகொடுக்கிறது. நன்றி.😀😘
 

Ramyasridhar

Bronze Winner
உங்கள் கருத்து உண்மையிலே எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. எப்படி இவ்வளவு உன்னிப்பாக கவனித்து விமர்சிக்க முடிகிறது.

தாகமுக்தி குடிக்க நல்லா இருக்கும். கொஞ்சம் மணமா மூலிகை தண்ணீர் மாதிரி இருக்கும். கடைகளில் பாக்கெட் களில் கேட்டால் கிடைக்கும். நாட்டு மருந்து கடைகளில் பதிமுக பட்டை என்றால் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.

ஹேண்ட் பாக், ரவி அம்மா பார்கவியின் டைம் ட்ராவல் பற்றிய விவரங்கள் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

உங்கள் கருத்து என்னை மீண்டும் மீண்டும் ஆச்சரியபடுத்துகிறது.😃😃😉😍
நன்றி 😍
தாகமுக்தி கிடைத்தால் முயன்று பார்க்கிறேன் 😍
 

Chitra Balaji

Bronze Winner
Hi maa.... How are you... Enna aachi இதனை naala காணும்...... Super Super Super pa.... Semma semma episode.... Nariya விஷயம் sonniga painting ah pathi... Saree... Athuyum in skirt semma.... அந்த பெட்டி Super maa... அவன் வீடு la avala ellaarukum introduce panna poraan.... அந்த கல்லு vechi தான் travel panni வந்து இருக்கான்... Super Super maa
 
Top