All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சௌந்தர்யாசெழியனின் 'பேசாத வார்த்தை எல்லாம் பேரின்பத்தின் தேடல்'' - கதை திரி

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:love::love::love:ஹாய் மக்களே............:):):)
எபி 5 போட்டாச்சு..., போன எபிக்கு லைக்ஸ் கமென்ட்ஸ் போட்ட எல்லா செல்லங்களுக்கு தாங்க்ஸ்ஶு......:love::love::love::love::love:




பேரின்பம் 5


அண்ணி......., வேதா..., செளமி....., எல்லாரும் ரெடியாகிட்டீங்களா....?????? சாமி தேரு தெரு முக்குக்கு வந்துருச்சு..., சீக்கிரம் வாங்க எனக் கூறிக் கொண்டே பூஜைக்கான அபிஷேக தட்டை தயார் செய்துக் கொண்டிருந்தார் விமலா.

தேரு வந்துருச்சா?? எங்க விமலா உங்க அண்ணன்?? தம்பியையும் காணோம் ரெண்டுப் பேரும் எங்க போயிட்டாங்க என தனது கணவரின் தங்கை மற்றும் தனது தம்பியின் மனைவியுமான விமலாவிடம் கேட்டுக் கொண்டே தாம்பழ தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டார் சோலையம்மாள்.

அண்ணணும், மாமாவும் வெளிய தான் நிக்கிறாங்க அண்ணி தேரு தெரு முக்குக்கு வந்திருச்சு அதான் இவுக ரெண்டுப் பேரும் போய் இடம் போட்டு வச்சிருப்பாக..., இன்னும் இந்த கொமரிகள காணோம் என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேதாவும் செளமியும் வர,
அவர்கள் கையில் மாவிளக்கை கொடுத்தவர்கள், அனைவருமாக கிளம்பி தேர் நிற்கும் இடத்திற்கு சென்றனர்.

நீண்ட வரிசையில் தட்டுகள் காத்திருக்க இவர்களுக்கான இடத்தில் தட்டை வைத்தவர்கள், இவர்கள் முறை வருவதற்காக காத்திருந்தனர்.

காத்திருந்த நேரத்தில் தெரிந்தவர் ஒருவர் வந்துவிட பெரியவர்கள் அனைவரும் அவரிடம் பேசிக் கொண்டிருக்க,

வேதாவும் செளமியும் பேச்சை மறந்தவர்களாக ஏதும் பேசாத அமைதியாக நின்றிருந்தனர். இருவரும் இன்னும் காலையில் நடந்த சம்பவத்தில் இருந்து வெளிவந்திருக்கவில்லை.

இதில் அளவுக்கதிமாக பயந்திருந்தது செளமிதான் ஏதோ ஒரு வேகத்தில் அவனிடம் அட்ரஸ் ஸை கூறிவிட்டவள், அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கையில் இப்பொழுதும் அவள் உடல் நடுங்கியது.

அவளின் நடுக்கத்தை உணர்ந்த வேதா, அவளின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுக்க...,
ஏதோ பேச வாய் திறந்த செளமியை கண்களால் அடக்கியவள், அருகிலிருந்த சோலையம்மாவை சுட்டிக் காட்ட செளமி வாயை இறுக மூடிக் கொண்டாள்.

பின் அவர்களுக்கான முறை வந்ததும் கண் மூடி இறைவனை வழிபட்டவரகள், அவர்களது அபிஷேக தட்டினை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்.

இரவு உணவினை முடித்து விட்டு அனைவரும் உறங்க சென்ற நேரம், தலையணை மற்றும் பாயுடன் சோலையம்மாளின் முன் சென்று நின்றனர் வேதாவும் செளமியும்.

அவர்கள் வந்ததற்கான காரணம் தெரிந்தாலும் பதில் பேசாது அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சோலையம்மாள், தான் பேசாது அவர்கள் வாயை திறக்கப் போவதில்லை என அறிந்தவர்,

என்ன விஷயம்?? தூங்காமா இன்னும் இங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க....?? "வேதா நாளைக்கு ஊருக்கு கிளம்பணுன் ஞாபகம் இருக்கா இல்லையா?? என்க,

" இருக்கும்மா..." என்றாள் வேதா.

"அப்றம் ஏன் இன்னும் தூங்காமா இருக்க...., போ போய் தூங்குங்க...." என்றவர் தூங்க ஆயுத்தமாக..,

"அத்த......... என இழுத்த செளமி அவர் 'என்ன' என்பது போல் பார்த்ததில் அடுத்த வார்த்தை பேசாது அவளது உதடுகள் இறுக மூடிக் கொண்டன.

அவளிடம் திரும்பி ஒரு முறைப்பை வீசிய வேதா...., தங்களையே பார்த்துக் கொண்டிருந்த சோலையம்மாளிடம் திரும்பியவள்..,
" அம்மா..., நாளைக்கு ஊருக்கு போயிடுவோம்லம்மா"??

"ஆமா அதுக்கென்ன இப்போ...."??

" அதான்ம்மா... இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் மொட்ட மாடில தூங்கிக்கிறோம்.....ப்ளீஸ் மா என்றவள் செளமியை முறைக்க..,

அவளின் முறைப்பன் அர்த்தத்தை உணர்ந்தவள், " ப்ளீஸ் அத்த இன்னைக்கு ஒரு நாள் தான நாளைக்கு நீ்ங்க ஊருக்குப் போயிட்டா அப்றம் எப்போ வரப் போறீங்க.."

ஷோ ப்ளீஸ் அத்த...., இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் நாங்க அங்க தூங்கிக்கிறோமே....., என

அதற்கு பதிலாக "எதுக்கு" என்று ஒற்றை வரியில் அவர்கள் இருவரையும் வாயடைக்க செய்திருந்தார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று இருவரும் முழித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆபத்துவனாக வந்தார் செல்வமணி.

என்னாச்சுக் கா??? இன்னும் தூங்கலையா நீங்க? என்று சோலையம்மாளிடம் கேட்டவர்,

என்னாச்சுடா நீங்க ஏன் இன்னும் உங்க ரூமுக்கு போகமா இங்க இருக்கீங்க?? என நின்றிருந்தவர்களிடம் கேட்டவர் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க....,

இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த செளமி சோலையம்மாள் வாயை திறப்பதற்குள், " அப்பா.... இன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் மொட்ட மாடில தூங்குறோம்ப்பா.."

"வேதா நாளைக்கு ஊருக்குப் போயிட்ட அப்றம் எப்ப வருவான்னே தெரியாது ஷோ ப்ளீஸ் ப்பா நாங்க அங்க தூங்குறோம்ப்பா அத்தகிட்ட பர்மிஷன் வாங்கிக் குடுங்கப்பா......" என தனது தந்தையிடம் அவசரமாக கூறி முடிக்க.....,

அவர்கள் நின்றிருந்த தோற்றம் செல்வாவின் மனதை இளக்க, தனது தமைக்கையிடம் திரும்பியவன்,
"விடுங்க அக்கா இன்னைக்கு ஒரு நாள் தான பசங்க ஆசப்படுறாங்க எனக்காக விடுங்க ப்ளீஸ் " என அவரும் ஒரு ப்ளீஸை போட்டு வைக்க,

அதற்கு மேலும் அவரால் அனுமதி தராமல் இருக்க முடியவில்லை...., "சரி நீங்க ரெண்டு பேரு மட்டும் போக வேணாம் அப்பா, இல்லன்னா மாமாவ துணைக்கு கூப்புட்டுக்கோங்க" என்றார்.

"இல்லம்மா.... அப்பா டையர்ட்டா இருக்குன்னு அப்பவே தூங்கிட்டாரு....., மாமாக்கு காலையில இருந்து ஒரே அலைச்சல்..., கால் வலிக்குதுன்னு அத்தைகிட்ட தைலம் கேட்டுட்டு இருந்தாரு மாடி ஏறுனா இன்னும் வலிக்க தான் செய்யும்"

இவுங்க ரெண்டுப் பேரும் வோணாம்மா சரவணன கூட்டிட்டு போய்க்கிறோம் என,

'சரவணனா' என யோசித்தவர்.., ஏதும் பேசாது "சரி போங்க ஆனா நேரமே எந்திரிச்சு கீழ வந்துடனும் இங்க வந்து கூட தூங்கிக்கோங்க.."

விடியறவரைக்கும் மேல இருக்க வேணாம் என்க,

"சரி" ன தலையாட்டியவர்கள், வெளியேறி சரவணனை துணைக்கு அழைக்க.." யாரக் கேட்டு நா வருவேன்னு அத்த கிட்ட சொன்னிங்க...,"
" என்னால எல்லாம் கூட வர முடியாது நீங்க இங்கயே தூங்குங்க" என எகிறவனை ******கேம் மொபைலில் விளையாட தருவதாக அவனை தாஜா செய்து ஒரு வழியாக மொட்டை மாடியை அடைந்திருந்தனர்.

இரவு நேர நிசப்தத்தில் வானம் என்னும் கருப்பு தேவதையில் ஒற்றைக் கல் மூக்குத்தியாய் நிலவு மகள் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

வாயு பகவான் இனிமையான தென்றல் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.எங்கே மெல்லிய பாட்டொலி கேட்க, அதற்கு சரிசமமாக பைரவரின் சங்கீதமும் ஓங்கியது, காற்றிற்கு ஆடும் தென்னை கீற்றுகளின் சத்தமும் சில் வண்டுகளின் ரீங்காரமும் அவ்விடத்தை நிறைக்க...,

இதை ஏதும் அறியாது தங்களுக்குள்ளே உழன்று கொண்டிருந்தனர் பெண்கள்.

இதற்கு மேலும் அமைதியை கடைபிடிக்காது செளமி திரும்பி தமையனை பார்க்க, அவனே காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தீவிரமாக விளையாட்சில் மூழ்கி இருந்தவன் தங்கள் பேச்சை கவனிக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள், வேதாவிடம் திரும்பி பேசலானாள்.

வேதா.......,

ம்ம்ம்ம்........,

பயமா இருக்கு......,

ஏன்? அவன்கிட்ட அட்ரஸ் சொல்லும் போது இது தெரியலையா...??? இப்ப மட்டும் என்ன புதுசா சொல்லுற...!!! என்றவளின் பேச்சில் காரம் தெறித்தது.
அவசரபட்டு அவனிடம் முகவரி கூறிய செளமியின் மீது கோபம் இருக்கவே செய்தது. இது தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழி வகுக்குமே என எண்ணி கவலை கொண்டாள் வேதா.

அவளின் கோபத்தில் சிறியவளின் கண்களில் இருந்து சட்டென கண்ணீர் கன்னங்களில் இறங்கியது.அவளிற்கு தற்பொழுது தான் தான் செய்த செயலின் வீரியம் புரிந்திருந்தது. எனவே, வேதாவின் கோபத்தை அமைதியாக தாங்கிக் கொண்டாள்.

தனது கேள்விக்கு பதில் வராது போக திரும்பி பார்த்தவளின் கண்களுக்கு செளமியின் அழுகை முகமே தென்பட்டது, அதனை காண சகிக்காது...,

ம்ப்ச்...... சாரி செளமி ஏதோ கோபத்துல பேசிட்டேன் என்க....,

நான் தான் சாரி கேக்கணும் வேதா..., சத்தியமா அந்த நேரத்துல எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாமா அங்க இருந்து கிளம்புனா போதும்ன்ற அவசரத்துல என்ன பேசுறதுன்னு என்ன அறியாமா தப்பான்னா அட்ரஸ சொல்லிட்டு வந்துட்டேன்.
'ஆனா இப்போ நெனச்சுப் பாக்கும் போது தான் நான் செஞ்ச முட்டாள்தனமான காரியத்தோட விளைவு புரியது என அழுகை குரலில் கூறினாள்'.

அழும் அவளை ஆறுதல் செய்ய முடியாத நிலையில் தான் வேதா இருந்தாள். ஏனென்றால் அவளிற்கே செளமி தவறான முகவரியை கூறியதை நினைத்து பயத்தில் அழுகை வரும் போலிருந்தது.

(ஆம்...... செளமி வினோத்திடம் கூறியது தங்கள் வீட்டு முகவரியை அல்ல....., பயத்தில் மற்றும் அவன் மீதிருந்த கோபத்தில் தவறான முகவரியை கூறிவிட்டு வேதாவை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.)

'வேதாவிற்கு செளமியை நினைத்து தான் பயம் அதிகமாகியது.அவன் வேறு தாங்கள் கொடுத்த முகவரிக்கு சென்றால் கண்டிப்பாக உண்மை தெரிந்துவிடும்...., நிச்சயம் கோபம் கொள்வான் கோவிலில் தான் அவனின் கோபத்தை பார்த்தாயிற்றே.....,'

'நாளை தான் ஊருக்கு சென்றுவிட்டால் நிச்சயம் ஆறு மாதங்களுக்கு இடையில் இங்கு வர அனுமதிக்க மாட்டார் அவளின் அம்மா. இவள் பள்ளி செல்லும் நாட்களிலோ அல்லது வேறு எங்காவது செல்கையில் அவன் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வது...,'

'அப்படி பார்க்க நேரிட்டால் தவறான முகவரியை கொடுத்ததற்காக நிச்சயம் கோபப்பட்டு கேள்வி கேட்பான். இன்று அவனின் சிறு அதட்டலிற்கு செளமியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.'

'தாங்கள் சொன்ன பொய்யில் கண்டிப்பாக அவனின் கோபம் பன்மடங்காயிருக்கும் அவனின் கோபத்தை இவள் தாங்குவாளா?? ' இதனால் வேறு பிரச்சனைகள் எழுந்துவிட்டாள் என்ன செய்வது என இவற்றை எல்லாம் நினைத்து தான் வேதாவின் மனம் பயம் கொண்டது.

தற்பொழது இவளை சரிசெய்வது தான் முதன்னை என எண்ணியவள், தனது சிந்தனைகளை ஒதுக்கி வைத்தவள், அவளிடம் பேசலானாள்..,

ம்ப்ச்...., செளமி விடு டி நீ எதுக்கு இப்ப பயத்துட்டு இருக்க????

இல்ல அவுங்க அட்ரஸ்க்கு பொண்ணு கேட்டு போய்ட்டாங்கன்னா என்ன பண்ணுறது??

வேதாவிற்கும் அதுதான் பயமே இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவள்..." கொஞ்சமாச்சும் ப்ராக்டிக்கலா யோசி செளமி..., இவன் போய் மொதல்ல இந்த விஷயத்த அவுங்க வீட்டுல சொல்லுறானான்னு பாப்போம்..."

" அப்புடியே தப்பி தவறி சொன்னாலும் அவுங்க வீட்டுல இருக்குற பெரியவங்க யாரு என்னன்னு விசாரிக்காமா...., உடனே தட்ட தூக்கிட்டு பொண்ணு கேக்க போய்டுவாங்களாக்கும்...."

"அப்ப போக மாட்டாங்களா" செளமி இடைச்சொறுகலாக கேட்க,


"அடிப் போடி லூசே.......,முதல்ல வீட்டப் பத்தி விசாரிப்பாங்க...., அப்பயே தெரிஞ்சிடும் அது தப்பான அட்ரஸ்ன்னு...." அதுக்கப்பறமும் நம்மள தேடுவான்னு நெனைக்கிற..."

"நம்ம சொன்னது பொய்யின்னு தெரிஞ்சதுமே இந்த விஷயத்த அப்டியே மேல கொண்டு போகமா விட்டுடுவாங்க.....,"

"நிஜமாவா வேதா....."

" ஆமாடி ஆமா.... என்ன..... விசாரிக்காமா சொன்னதுக்கு அவனுக்கு தான் டோஃஸ் விழும் அதப் பத்தி நமக்கென்ன கவல" என சிரிப்புடன் அவள் முடிக்க...,

செளமியின் இதழ்களிலும் புன்னகை எட்டிப் பார்த்தது. அவளின் புன்னகையை கண்ட வேதாவிற்கும் புன்னகை தொற்றிக் கொண்டது.

"சரி சரி உன் பயம் எல்லாம் போய்டுச்சா...., இப்பவாச்சும் தூங்குவோம்மா..??
இப்ப லேட் ஆகிடுச்சு டி என்ற வேதா எட்டி சரவணனின் தலையில் கொட்டி அவனிடம் இருந்து மொபைலை பறிந்திருந்தாள்.

" ஏய்......ஏய்...." ஏண்டி அதுக்குள்ள புடிங்குன்னு இன்னும் ஒரு லெவலர இருக்கு தா..."

"டேய்..., போதும் நீ வெளான்டது டைம் ஆகிடுச்சு மூடிட்டு தூங்குடா...."

"ஏன் இவ்ளோ நேரம் நீங்க பேசிட்டு இருக்கும் போது தெரியலையா நேரமானது...." என அவன் கடுப்படிக்க....,

"தெரியல.... அதுக்கு இப்ப என்னான்ற... பேசாமா தூங்குுடா என வேதா அதட்ட..,

" ஓஓ..... உங்களுக்கு வேலையாகனும்னு என்ன காக்கா புடிச்சிங்க இப்ப வேல முடிஞ்சதும் கழட்டி விடுறீங்களா...." நா கீழப் போறேன் என அவன் மிரட்ட...,

அவனின் மிரட்டலில் அசல்ட்டாக தோளைக் குலுக்கியவள், " போ.... யாரு உன்ன தடுக்கல...., ஏண்டா பொம்பளபிள்ளைகள தனியா விட்டுட்டு வந்தேன்னு உன் அத்த வசப்பாடுவாங்க....." வாங்கி கட்டிக்கோ எங்களுக்கென்ன வந்தது....,

வா செளமி நம்ம படுப்போம் என்றவர்கள் போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொள்ள....

அவளின் பேச்சில் உள்ள உண்மையை உணர்ந்தவன்...., ஏதும் செய்ய இயலாது தரையை ஓங்கி மிதித்தவன், தன் இடத்தில் வந்து படுத்துக் கொண்டான்.

அவனின் செய்கையில் சிரித்தவர்கள் உறக்கத்திற்கு சென்றிருந்தனர்.

ஆனால் அவர்கள் அறியாதது வினோத் இவர்கள் சொன்ன முகவரிக்கு குடும்பத்தோடு சொல்ல இருப்பதும்.. அதுவும் மறுநாளே என்றும்..... இதனால் அவனின் பெரும் கோபத்திற்கு இருவரும் ஆளாக போவதையும் அறியாது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தனர்.

செல்லம்ஶ் இந்த எபி புடிச்சிருந்துச்சுன்னு ௐரு லைக் போடுங்க...:whistle::love::love:கமென்ட்ட கீழ உள்ள லிங்க்ல சொல்லுங்க (n)(n)(n)

 
Last edited:

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ செல்லம்ஸ்,

இதோ தேடலின் அடுத்த இரு அத்தியாங்களுடன் வந்துவிட்டேன்.போன எபிக்கு லைக்ஸ்&கமென்ட்ஸ் சொன்ன அனைவருக்கும் டாங்க்ஸ்ஸூ செல்லம்ஸ்:):)


பேரின்பத்தின் தேடல் 6

சோலையம்மாள் சொல்படி கீழிறங்கி விட்டனர் மூவரும். சிறிது நேரம் படுக்கையில் உருண்டவர்களுக்கு தூக்கம் வந்தபடில்லை.

தன்னைப் போல் செளமியும் தூங்காமல் இருப்பதை கண்டவள்,
"செளமி..." என்றழைக்க.,

"ம்ம்ம்...."

"உனக்கு தூக்கம் வருதா டி"

" ம்ப்ச் இல்ல வேதா... தூக்கம் கலஞ்சிருச்சு"

" அப்ப நம்ம மஞ்ச தண்ணி விளையாட ஸ்டார்ட் பண்ணுவோமா என வேதா கேட்க,"

அவளின் கேள்வியில் செளமி நேரத்தைப் பார்க்க விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது.
"இப்பவே வா விளையாடணும் இன்னும் யாரும் எந்திரிச்சிருக்க கூட மாட்டாங்க.."

"யாரும் எந்திரிக்கலன்னா என்ன?? நம்ம எழுப்பி விடுவோம் ம்ப்ச்..... நீ வரலன்னா போ..... நா விளையாடப் போறேன்". " எனக்கு தூக்கம் வரல..." என்றவள் எழுந்து வெளியே செல்ல.....,

செளமியாவிற்கும் தூக்கம் வராது எழுந்து அவள் பின்னூடே சென்றாள்.

வெளியே வந்தவர்கள் ஒரு வாளி நிறைய மஞ்சள் தண்ணீரை கலக்கியவர்கள் அதினுள்ள கோலப்பொடி.., ஷாம்பு..., என கையில் கிடைத்த அனைத்தையும் கலந்தவர்கள்,

அதனை தூக்கிக் கொண்டு சரவணன் படுத்திருந்த இடத்தினை அடைந்தனர்.
நன்றாக முகம் வரையிலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கி கொண்டிருந்தான்.

அவனை ஒரு பார்வை பார்த்தவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள..., செளமி மெதுவாக அவனது உறக்கம் கலையாதவாறு அவனின் முகத்திலிருந்து மெல்ல போர்வையை விலக்கி விட்ட நொடி....,

அவன் மீது மொத்தமாக வாளியினை கவிழ்த்திருந்தாள் வேதா....., இவர்களது செய்கையில் அலறி அடித்து எழுந்தவனின் வாய்க்குள் முழுவதும் கோலப் பொடி.

சிரிப்பு சத்தம் கேட்டு நிமர்ந்தவன், "உங்கள"....... என தூரத்திக் கொண்டு ஓட....,

சரவணனின் பிடியில் சிக்காமல் அவனுக்கு போக்கு காட்டி கொண்டவர்கள்..., பின் அவனிடம் சிக்கி சில பல அபிஷேகங்களை பெற்றுக் கொண்டு, பின் மூவருமாக சேர்த்துக் கொண்டு தங்களது ஆட்டத்தினை வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து தொடங்கியிருந்தனர்.
சூரியன் உச்சியில் வரும் வரை மஞ்சள் நீர் விளையாடிக் கொண்டிருந்தவர்கள்
ஒரு கட்டத்தில் களைப்படைய மூவரும் தங்களது ஆட்டத்தினை முடித்துக் கொண்டனர்.

அதே நேரம் மஞ்சள் நீர் விளையாடிவிட்டு வீட்டுக்குள் முகம் கொள்ள புன்னகையுடன் உள் நுழைந்தான் வினோத் பின்னே அவன் நினைத்த காரியம் நடக்கப் போகிறதல்லவா??

அவன் உள் நுழைவதை கண்ட விக்ரம்," என்ன மச்சான் மூஞ்சில பல்ப்பா எறிய விட்டுட்டு வர" என அவனின் மகிழ்ச்சிக்கான காரணத்தை அறிந்தும் அவனை சீண்ட.....,

தன் தமக்கையின் கணவணும் மற்றும் தனது அத்தையின் மகனுமான விக்ரமின் சீண்டலில் அவனது முகம் இன்னும் புன்னகையை பூசிக் கொண்டது.

அதனை கண்டவாறு," பின்ன இருக்காத மாமா அவன் நினச்சத சாதிச்சுட்டான்ல்லா.... அதான் அய்யா மூஞ்சியில ஒளிவட்டம் தெரியுது...." என தனது கணவனுக்கு பதில் அளித்துக் கொண்டு அங்கே பிரசனமானள் கவிதா.

தனது அக்காவின் கேலியில் அவனது முகம் சிவக்க ஆரம்பிக்க.., அதனை மறைத்துக் கொண்டு...." இப்ப என்னவாம் புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும்..., என் மூஞ்சி எப்பயும் போலத்தான் இருக்கு...," என்னப் பாக்குறத விட்டுட்டு வேற வேல இருந்தாப் பாருங்க போங்க..., என..,

"அதான் எங்களுக்கு எந்த வேலையும் வைக்காமா நீயே பொண்ணுப் பாத்து.., அட்ரஸ கண்டுப்புடிச்சு.., நைட்டோட நைட்டா அக்காவும் தம்பியும் எல்லார்க்கிட்டயும் பேசி இன்னைக்கே பொண்ணு பாக்க போக சம்மதமும் வாங்கிட்டீங்களே..." அப்றம் எங்க இருந்து நாங்க வேலையப் பாக்க என அவனை வாரினான் விக்ரம்.

அவனின் கேலியில் அசடு வழிந்தவன்," உங்களுக்கு கஷ்டம் கொடுக்காமா நானே எல்லா வேலையும் செஞ்சதுக்கு பாராட்டுவீங்கன்னா பாத்தா இப்புடி வாருறீங்களே மாம்ஸ்ஸூ..."உங்களுக்கு இதுல இஷ்டம் இல்லன்னா நம்ம பொண்ணு பாக்கவே போக வேண்டாம்..."என்ன தப்பா நினச்சுகிட்டீங்கள...,போங்க.. போங்க நா கோச்சுகிட்டு போறேன்.... என சிரிப்புடன் சொன்னவன்...., அவர்களிடமிருந்து தப்பித்து மாடியேற....,

டேய்... ஆச்சி பத்து மணிக்கு நல்ல நேரம் இருக்கு அப்போ கிளம்பலாம்னு சொல்லிட்டாங்க... அத சொல்லத்தான் வந்தேன் சீக்கிரம் லேட் பண்ணாமா ரெடியாகிட்டு வா..., என்க,

" கவி அதான் உன் தம்பி எனக்கு புடிக்கலன்னா பொண்ணு பாக்க போக வேண்டாம்ன்னு சொல்லுறான்ல அப்ப பொண்ணு பாக்கப் போறது கேன்சல்......" என நமட்டு சிரிப்புடன் கூறிய விக்ரமின் வார்த்தைகளில் திடுக்கிட்டவன்,

' ஆத்தி... சும்மா விளையாட்டுக்கு சொன்ன இந்த மனுஷன் அத நிஜமாக்கிடுவாரு போலயே...' என நினைத்தவன் அவசரமாக கீழிறங்கி....,

" நா எப்ப மாமா பொண்ணு பாக்க போக வேணாம்னு சொன்னேன்...... ஏன் கவி உனக்கு ஏதும் அப்படி கேட்டுச்சா.." என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு தனது தமக்கையை துணைக்க...,

"ச்சே...ச்சே... உங்க மாமாக்கு தான் காது வர வர டமராமாகிட்டேப் போகுது...., எனக்கு ஏதும் அப்படி கேக்கல..."என

இவர்கள் இருவரின் உரையாடலில் " ஆ...ஆ.. "வென வாயை பிளந்த விக்ரம், தன்னை கண்டு சிரிப்பவர்களை நோக்கி..." ஏண்டா அப்ப நீ எனக்கு இஷ்டம் இல்லன்னா பொண்ணு பாக்க போக வேணாம்னு சொல்லவே இல்ல....., அப்டிதான..???"

"ஆமா ஆமா மாமா...இதுல உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் ..." என்க..

அவனின் வார்த்தைகளில் அவனை முறைத்த விக்ரம் தனது மனைவியிடம்,
" ஏன் கவி அப்ப உன் தம்பி சொன்னது உன் காதுல விழுகவே இல்லையா..." என..,

"அட ஆமாங்க மாமா அவன் அப்புடி சொல்லவே இல்ல....., என அடித்துக் கூறியவள் விக்ரமின் முறைப்பை பொருட்படுத்தாது.., சீக்கிரம் ரெடி ஆகிட்டு வாடா எனக்கு வேல இருக்கு என்றவள் அங்கிருந்து நகர்ந்து விட...,

அவள் சென்ற திசையை முறைத்த கொண்டிருந்த விக்ரமை அழைத்த வினோத்.., " மாம்ஸ் எதுக்கும் ஒரு நல்ல இ.என்.டி டாக்டரா போய் பாருங்க சொல்லாதது எல்லாம் சொல்லுற மாதிரியே உங்களுக்கு கேக்குது...., இது புது விதமான வியதியா இருக்கும் போல.... என்றவனின் நக்கலில் பேச்சில் வெகுண்டவன்..,

" அடேய்... விட்ட அக்காவும் தம்பியும் எனக்கு பைத்தியம்னு பேர் கட்டிடுவீங்க போல ..." என்றவன் அவனை தூரத்த ....,

விக்ரமின் கைகளில் சிக்காமல் அறைக்குள் நுழைந்து தாளிட்டவனின் முகத்தில் நிறைவான புன்னகை..

'ஜிலேபி...... உன்ன பாக்க வரதுக்குள்ள எத்தன பேர சமாளிக்க வேண்டியிருக்கு.... ஏன் தா உன்ன இவ்ளோ புடிச்சிருக்கோ தெரியல... அப்படி என்ன தான் இருக்கு உன்கிட்ட...., என கண் மூடி முணுமுணுத்தவனின் மனக்கண்ணில்... ஆரஞ்சு நிற தாவணியில் இரட்டைப்பின்னல் போட்டு இருபுறமும் மல்லிகை சரம் சுற்றி நெற்றியில் கருப்பு பொட்டும் அதற்கு மேலே சிறு கீற்றாய் குங்குமம் வைத்து அம்சமாக நின்றிருந்தவளின் தோற்றம் வர....'போதும்டா வழிச்சது... போய் ரெடியாகு....' என தன்னை தானே தலையில் தட்டிக் கொண்டவன் குளியலறைக்குள் நுழைந்திருந்தான்.

"உர்.." என்ற முகத்துடன் ரூமினுள் நுழைந்த விக்ரமை கண்ட கவிதாவிற்கு சிரிப்பு வர அதனை அடக்கியவள் அவனிடம் திரும்பி.., " மாமா டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன்.. சீக்கிரம் போய் குளிச்சுட்டு வாங்க..." என்க,

அவளின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாது அதே "உர்" முகத்துடன் அமர்ந்திருந்தவனை கண்டவனை கண்டு அடக்கமாட்டாமல் அவள் சிரித்து விட...,

அவளின் சிரிப்பில் கடுப்புடன் அவளை முறைத்தவன்..., முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொள்ள.., அவனின் பொய் கோபத்தை அறிந்தவள் அவனிடம் சென்று அவனின் முகத்தை தன்புறம் திருப்பியவள்...,

"என்னாச்சு என் மாமாவுக்கு எதுக்காக இப்புடி குரங்கு மாதிரி முகத்த வச்சிருக்கீங்க..." என்றவளின் உவமையில் காண்டானவன்.., ஒரே இழுவையில் அவளை தன் மடி மீது கொண்டு வந்தவன்...," ஏன்னு உனக்கு தெரியாது.." எனக் கேட்க,

அவனின் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டவள் அவனின் மூக்கோடு தனதை உரைய விட்டவள்... கண்களை திறந்து அவனை நோக்க......,

மனைவியின் மூக்கு உரசலில் மெய்மறந்து நின்றவனை கண்டவளிற்கு சிரிப்பு வர அவனிடம்,
" ஏன் மாமா... இங்க இவ்ளோ நேரம் 'உர்' னு மூஞ்சிய வச்சிக்கிட்டு ஒருத்தர் இருந்தாரே அவர பாத்தீங்களா... என்க..,"

அவளின் கேள்வியில் பட்டென்று கண்ணை திறந்தவன் அவளை முறைக்க முயன்று பின் சிரித்து விட்டான்.

அவனின் சிரிப்பில் தானும் சிரித்தவள் பின் நிதானித்து ," மாமா நிஜமா சொல்லுங்க உங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லையே... பொண்ணு பாக்க போறதில்ல..." எனக் கேட்டாள்.

" ச்சே.. ச்சே.. எனக்கு எதுக்கு கவி வருத்தம் இருக்கப் போகுது வினோத் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்..., அவனுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணதான் அவன் சந்தோஷமா இருப்பான்..., இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் வினோத் ஆசப்பட்டது நல்லப் படியா நடந்தாப் போதும்..."

"அந்த பொண்ணு மேல ரொம்ப ஆர்வமா இருக்கான்....ரொம்ப பிடிச்சிருச்சுப் போல அந்த பொண்ண இதுல ஏதாச்சும் தப்பு நடந்துச்சுன்னா ரொம்பவே ஹார்ட் ஆகிடுவான் அந்த அளவுக்கு சீரியஸ்ஸா இருக்கா இந்த பொண்ணு மேல.... என்னோட பயம் எல்லாம் அந்தப் பொண்ணுக்கு இந்த ஏற்பாடுல்ல விருப்பம் இல்லன்னு சொல்லிடக் கூடாது தான்...." என

"அப்படி எல்லாம் நடக்க நான் விடமாட்டேன்ங்க... என் தம்பி ஆசப்பட்டத கண்டிப்பா நா நிறைவேத்தி வைப்பேன்.... எல்லாம் நல்லப் படியாவே நடக்கும்னு நம்புவோம்.... அவன வேண்டாம்னு சொல்லுற அளவுக்கு அவன்கிட்ட எந்த குறையும் இல்ல..."

"சரி சரி சீக்கிரம் போய் குளிங்க டைம் ஆகிடுச்சு நா போய் பாப்பாவ தூக்கிட்டு வரேன்..." என்றவள் வெளியேறிவிட....,
விக்ரமும் தயாரவதற்காக குளியலறைக்குள் நுழைந்துவிட்டான்.

இதில் கணவன் மனைவி இருவரும் அறியாதது தம்பியின் ஆசையை நிறைவேற்றி தருவேன் என்ற கவிதாவே அவனது ஆசையை குழித் தோண்டி புதைக்கப் போவதும்..., வினோத் உடன்பிறந்தவளுக்காக தன் காதலை விட்டுக் கொடுத்து உயிர்ப்பில்லாமல் அவன் நடமாடப் போவதையும் அவனது தமக்கை அறிந்திருக்கவில்லை....!!!!!!!

தேடல் தொடரும்............,:):)

:):)
share ur comments(n)(n)
 
Last edited:

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேரின்பத்தின் தேடல் 7

தங்களது ஆட்டத்தினை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய மூவருக்கும் பசி வயிற்றைக் கிள்ள... வேகமாக குளித்து முடித்து வந்தவர்கள் பசியில் கத்தும் தங்களது வயிற்றிற்கு கொஞ்சம் உணவிட்ட அதன் சத்தத்தை அடக்கினர்.

உண்டு முடித்ததும் வேதா தன்னுடைய பொருட்கள் மற்றும் உடைகளை பேக்கில் அடுக்க அவளிற்கு உதவிக் கொண்டிருந்தாள் செளமி. கட்டிலுக்கடியில், கதவிற்கு பின்புறம் என ஆங்காங்கே சிதறிக் கிடந்த பொருட்களை தேடி எடுத்து அடுக்குவதற்குள் ஓய்ந்துப் போயினர்.

ஒருவழியாக அனைத்தையும் எடுத்து வைத்தவர்கள் வெளியே வர..., அவர்களை கண்ட சோலையம்மாள்..,
"வேதா இங்க வா.." என

"சொல்லுங்கம்ம.."

"இன்னைக்கு மதியம் ஊருக்கு கிளம்பறதால பக்கத்துல இருக்க சொந்தக்காரங்க வீட்டுக்கு ஒரு எட்டு போய் சொல்லிட்டு வந்துடலாம் நீயும் கிளம்பு.." இல்லன்னா உங்க பொண்ண கூப்புட்டு வரலயா ஏன்? எதுக்கு?? நாங்க எல்லாம் இருக்கோம்னாவது உங்க பொண்ணுக்கு தெரியும்மான்னு வேணும்னே பேசுவாளுக..."
எதுக்கு அவளுக கிட்ட எல்லாம் நீ பேச்சு வாங்கணும் வா ஒரு தடவ போய் பாத்துட்டு வந்துடலாம்....,
செளமி நீயும் கிளம்பு போங்க போய் வேற உடுப்பு மாத்திட்ட வாங்க.... என்றவரின் பேச்சிற்கு தலையாட்டியவர்கள்.... வேறு உடை மாற்றி வர உறவினர்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

இங்கே, வினோத்தின் வீட்டில் ஒருவழியாக நல்ல நேரம் முடிவதற்குள் அனைவரையும் கிளப்புவதற்குள் நொந்து நூடூஸ்ஸாகி விட்டனர் விக்ரம்-கவிதா தம்பதியினர்.

அவர்களது சிறிதும் அல்லாது பெரிதும் அல்லாத மினியேஞ்சர் மாயாண்டி குடும்பம்.

வீட்டின் மூத்த உறுப்பினர் கந்தசாமிசெட்டியார்-குணவதி. (செட்டியார் பர்னிச்சர்ஸ் & டிசைன்ஸ்) திண்டுக்கல்லில் முக்கிய சாலை வீதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற கடை. இத்தம்பதியினருக்கு மூன்று செல்வங்கள்..,

முதலாமவர் குருமூர்த்தி-பாக்யா தம்பதியினர். இவர்களுக்கு இரு பிள்ளைகள். முதலாமவள் கவிதா,அடுத்தது வினோத் (நம் கதையின் நாயகன்).

இரண்டாமவர் சிவகாமி- பழனிச்சாமி.இவர்களுக்கு ஒற்றைப் புதல்வன். விக்ரம்- கவிதா( விக்ரம் தனது தாய் மாமன் மகளான கவிதாவையே திருமணம் செய்து கொண்டான்.) சிவகாமியை மதுரையில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இவர்களின் தொழில் நகை கடை, மதுரை மீனாட்சி அம்மன் தெற்கு வாசலில் இவர்களது கடை அமைந்துள்ளது.விக்ரம்-கவிதாவிற்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது பொயர் ஜனிஷ்கா.தற்பொழுது சிவகாமி குடும்பம் முழுவதும் மதுரை வசம்.திருவிழாவிற்காக தற்பொழது தங்கள் பிறந்த வீட்டிற்கு வந்திருந்தனர் பெண்கள் இருவரும்.

கந்தசாமிசெட்டியார்-குணவதி தம்பதியினரின் மூன்றாவது புதல்வன் சேதுபதி- அன்புக்கரசி தம்பதியினர். இவர்களின் புதல்வி மிருதுளா. அவ் மொத்த வீட்டின் கடைக்குட்டி. கல்லூரி இரண்டாம் வருடம் பயில்கிறாள்.


திருவிழாவிற்கு வந்திருந்த அத்தையின் குடும்பம் இன்று மதியமே ஊருக்கு கிளம்புவதால் தான் இந்த அவசர ஏற்பாடு எனில் மற்றொரு காரணம் வினோத்திற்கு அவனது தமக்கையின் ஆதரவு பலமாக தேவைப்பட்டது இவ்விசயத்தில்.

நேற்று இரவு அவன் இவ்விஷயத்தை சொன்னதில் இருந்து அவனுக்கு பக்கபலமாக இருந்து..., முதலில் விசாரித்து விட்டு பிறகு பெண் பார்க்க செல்லலாம் என்ற பெரியவர்களை நாளை அவள் ஊருக்கு செல்ல இருப்பதை சுட்டிக் காட்டி அனைவரிடமும் போராடி அடுத்த நாள் காலையே பெண் பார்க்க செல்ல சம்மதிக்க வைத்திருந்தாள்.
தம்பியின் மனமறிந்து அனைத்தையும் செய்து முடித்திருந்தாள் கவிதா.

ஒருவழியாக அனைவரும் காரில் ஏறி அமர, பின்பக்கம் ஏற சென்ற வினோத்தை கவனித்த கந்தசாமி," சின்னவனே நீ முன்னாடி டிரைவர் பக்கத்துல உக்காருடா உனக்கு தான பொண்ணு வீட்டுக்கு வழி தெரியும்.." என கூற..
அதை ஆமோதிக்கும் விதமாக அவனும் முன்னால் ஏற . புன்னகை முகமாக அமர்ந்திருந்தவனை பார்க்க பார்க்க அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்க.., அனைவரையும் தாங்கிக் கொண்டு செளமி சொன்ன முகவரிக்கு கார் சீறிட்டுப் பாய்ந்தது.

உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தவர்கள் திரும்பும் போது மதியத்தை நெருங்கியிருந்தது. ஏற்கனவே, விமலா சமைப்பதற்கு அனைத்தையும் தயாராக வைத்திருக்க....., உடன் சோலையம்மாளும் இணைய விரைவாக சமையலை முடித்தவர்கள்,
அனைவரையும் உணவு உண்ண அழைத்திருந்தனர்.

உண்டு முடித்தவர்கள் அசதியில் அனைவரும் உறங்கி விட..,
மீண்டும் அவர்கள் எழும் போது மணி நான்கை தாண்டியிருந்தது.

வேதாவின் ஊர் காரைக்குடி, திண்டுக்கல்லில் இருந்து வேதாவின் ஊருக்கு செல்ல குறைந்தது மூன்றரை மணி நேரம் ஆகும். தற்பொழுது கிளம்பினால் இரவு உணவிற்கு வீட்டிற்கு சென்று விடலாம் என அறிந்தவர்கள்,

விமலா கொடுத்த டீயை அருந்திவிட்டு தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு பஸ் ஸாண்ட் சென்றனர். உடன் வர இருந்த செளமியை மறுத்து விட்டு வேதாவும் செளமியும் கட்டிப்பிடித்து பிரியா விடை கொடுத்து கிளம்பியிருந்தனர்.

அவர்கள் சென்ற நேரம் காரைக்குடிக்கு ஒரு பேருந்து நிற்க..., அதில் ஏறி தேடிப் பிடித்து ஜன்னலோர இருக்கையில் வேதா இடம் பிடித்து விட...,

பேருந்து எடுப்பதற்கு இன்னும் கால் மணி நேரம் ஆகும் என டிரைவர் அறிவித்து விட," அதுவரை கீழே இறங்கி அமரலாம் என வேதாவின் மாமா அழைக்க.. வேதாவை தவிர மற்ற இருவரும் கீழிறங்கியிருந்தனர்.

அப்பொழுதும் ஆட்கள் அதிகம் இல்லாமல் இருப்பதை கண்டுக் கொண்டே வேதாவை தனியாக அமர ஒத்துக் கொண்டு கீழிறங்கினார்.

அவர்கள் மூவரும் கீழிறங்கி அமர, ஜன்னலில் தலைசாய்த்து இரள் போனில் மூழ்கி விட்டாள்.

"ம்ப்ச்....... விடுடா பாத்துக்கலாம்..??? இதுக்கு போய் ஏன் இப்புடி மூஞ்சிய உர்ருனு.." வச்சிருக்க.......

"......................."

"அவன் தான் கோபாமா இருக்கான்னா நீயும் ஏன் இப்புடி இருக்க கவி..??"

"...................."

என்ற உரையாடல்கள் வேதாவிற்கு கேட்க, 'என்ன ரொம்ப நேரமா இவரு ஒருத்தரே பேசிட்டு இருக்காரு... பதிலுக்கு வேற யாரும் பேசல....,
ஒரு வேள பைத்தியமா இவரு......' என நினைத்தவள் நன்றாக சரிந்து அமர்ந்திருந்த சீட்டில் இருந்து எக்கி மெதுவாக பக்கவாட்டில் எட்டிப் பார்க்க........,
இறுகிய முகத்துடன் வினோத் பைக்கில் அமர்ந்திருக்க.., அவனுக்கு சற்றும் குறையாத கோபத்துடன் கவிதாவும் அருகில் நின்றிருக்க... அவர்களின் எதிர்புறம் விக்ரம் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

இதை பார்த்தவளின் இதயம் பயத்தில் வெளியே எகிறிடும் அளவிற்கு துடித்தது. ' ஆத்தி........ இவனா என அலறியவள் சடுதியில் துப்பட்டாவால் தலையை முக்காடிட்டு கண்கள் மட்டும் தெரியும் அளவிற்கு விட்டவள் முகம் முழுவதையும் துப்பட்டால் சுற்றிக் கொண்டவள் ஜன்னலின் கண்ணாடியை கொஞ்சம் இடைவெளி மட்டும் விட்டு இழுத்து மூடியவள்....,

இடைவெளி இருந்த இடத்தில் நன்றாக சாய்ந்து செவிகளை கூர்மையாக தீண்டிக் கொண்டு அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்க ஆரம்பித்தாள்.

வினோத்தும் மற்ற இருவரும் வேதா அமர்ந்திருந்த பேருந்திற்கு வலது புறம் நின்றிருந்த மதுரை செல்லும் பேருந்திற்கும் உள்ள இடைவெளியில் நின்றிருந்தனர்.காரைக்குடி செல்லும் பேருந்துகள் இடப்புறமும் மதுரை செல்லும் பேருந்துகள் வலப்புறமும் அணிவகுத்து நின்றிருந்தன.

விக்ரம் ஊருக்கு செல்வதால் அவனை வழி அனுப்ப வந்தவர்கள் பேருந்தில் ஆட்கள் கூடாததால் இன்னும் பேருந்து எடுப்பதற்கு நேரமிருந்ததாலும் விக்ரம் ஏற வேண்டிய பேருந்திற்கு கீழயே நின்று பேச ஆரம்பித்திருந்தனர். எனவே, இவளிற்கு அவர்களின் பேச்சை கேட்பதற்கு வசதியாக போய்விட்டது.

'தான் இத்தனை தூரம் பேசியும் பதில் பேசாது நின்றிருந்த அக்கா தம்பியை காண காண விக்ரமிற்கு சலிப்பாக இருந்தது..'

அதிலும் வந்ததிலிருந்து மருந்திற்கும் வினோத்தின் முகத்தில் சிரிப்பின்றி கோபத்தில் இறுகி போய் முசுடு முகத்துடன் நின்றிருந்தான்.
உடன் பிறந்தவனின் முகத்தை காண காண தமக்கையின் முகமும் கோபத்தில் சிவந்தது.

"ம்ப்ச் கவி அவன் தான் தெரியாமா நடந்த இந்த சின்ன விஷயத்துக்கு சின்ன பையன் மாதிரி கோபப்பட்டுகிட்டு சீரியஸ்ஸா இருக்கான்னா நீயும் அவனுக்கு நிலமை எடுத்து சொல்லாமா அவனுக்கு சரிக்கு சமமா கோபபட்டுக்கிட்டு இருக்கா என விக்ரம் கடிய...."

அதுவரை அமைதியாக இருந்தவள் அவனின் சின்ன விஷயம் என்ற சொல்லில் பொங்கி எழுந்துவிட்டாள்.

"எதுங்க மாமா சின்ன விஷயம் அவ வீட்டு அட்ரஸ்ஸூன்னு சொல்லி தப்பான அட்ரஸ்ஸா கொடுத்ததா..???
அங்க போய் எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டது தான் மிச்சம்........,"

"பிடிக்கலன்னா பிடிக்கலன்னு மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு போக வேண்டியது தான எதுக்காக தப்பான அட்ரஸ சொல்லி அசிங்கப்படுத்தனும்.....இதுல இவன்கிட்ட நேத்து தாத்தா யாரு அட்ரஸ் கொடுத்தாங்கன்னு கேட்டதுக்கு பிரண்ட்ஸ் சொன்னாங்கன்னு பொய் வேற......"

(ஆம் நேற்று இரவு வேதாவை பற்றி சொன்னதுமே கந்தசாமி கேட்ட முதல் வார்த்தையே அவர்களது முகவரி எவ்வாறு தெரியும் என்று தான்.... கேட்டார். செளமி தான் முகவரி கொடுத்தால் என்று சொன்னாள் எங்கே பெண்களை தவறாக நினைத்து விடுவார்களோ என பயந்து தனது நண்பர்கள் தான் கண்டுபிடித்து கூறினார்கள் என கூறியிருந்தான்.)

"அங்கப் போய் அது தப்பான அட்ரஸ்ஸூன்னு தெரிஞ்சப்பறம் இவன்கிட்ட எந்த பிரண்ட்டுடா இந்த அட்ரஸ்ஸ கொடுத்ததுன்னு கேட்டதுக்கு வாயவே தெறக்காமா இருந்தான்..."

"எல்லாரும் எத்தன தடவ கேட்டாங்க இந்த அட்ரஸ சொன்னதுன்னு.... வாயா மூடிக்கிட்டு தானா நின்னான்....., இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான நீங்க கோபப்பட்டு கேட்டீங்கன்னு தானா உண்மையை சொன்னானான்......"
இதுல இந்த உண்மையை நம்ம ரெண்டு பேத்த தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாதுன்னு.. ஆர்டர் வேற போடுறான்....." என

தனது தமக்கையின் குற்ற சாட்டில் எந்த வித பிரதிபலிப்பும் இல்லாத அதே இறுகிய முகத்துடன் இருந்தான் வினோத்.

"எனக்கு வர கோபத்துக்கு அந்த பொண்ணு மட்டும் என் கண்ணு முன்னாடி இருந்த கன்னத்துலயே ஓங்கி ஒரு அறை அறைஞ்சிருப்பேன்" என்றவளின் வார்த்தைகளில் இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த வேதா அதிர்ந்தாள் என்றாள்.....
ஆண்கள் இருவருக்கும் கோபம் வந்துவிட... "கவி...". " அக்கா..." என ஒரு சேர அதட்டினர்.

"என்ன பேச்சு பேசுற கவி முன்ன பின்ன தெரியாத பொண்ண பத்து இப்புடி தான் பேசுவியா.... இது தப்பு கவி..." என்றான் விக்ரம்.

"அப்போ அவ மட்டும் தப்பான அட்ரஸ கொடுத்தது சரிங்களா மாமா...." அப்போதும் அவள் எகிற...,

அவளின் மரியாதை அற்ற விளிப்பில் கோபம் கொண்ட விக்ரம்," வாய மூடு கவி எப்போ இருந்து இப்புடி மரியாத இல்லாமா பேச கத்துகிட்ட..... உன் இஷ்டத்துக்கு அவ இவ னு சொல்ற பாத்தா அறஞ்சிருவேன்னு.. சொல்ற...., இப்புடியெல்லாம் அந்த பொண்ண பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு.....ஆங்..... சொல்லு டி....??? தேவயில்லாம பேசுறத இப்பவ நிறுத்திக்கோ.... என,

தனது கணவனின் கோபத்தில் அரண்டவள்.., "இல்ல மாமா நாமா போனது இறந்தவங்க வீட்டுக்கு..., அந்த பொண்ணுங்க எதுக்குங்க மாமா இப்புடி எழவு வீட்டு அட்ரஸ் கொடுத்து நம்மள இப்புடி அசிங்கப்படுத்தனும்...." அதான் அந்த கோபத்துலபேசிட்டேன்.

"கோபம்னா உன் இஷ்டத்துக்கு அடுத்த வீட்டு பொண்ண பத்தி பேசுவியா....., ம்ப்ச்...... புரிஞ்சிக்கிட்டு பேசு கவி அட்ரஸ விசாரிக்காமா போனது நம்ம தப்பு..., அதுமட்டும் இல்லாம இறந்தது அந்த வீட்டுல இருக்குற பொண்ணோட கணவர்..,இது ஏதும் தெரியாமா மொட்டையா உங்க வீட்டுப் பொண்ண பொண்ணு பாக்க வந்துருக்கோம்னு சொன்ன.........????

அங்க இருக்கவங்க சண்டைக்கு வர தானா செய்வாங்க....,இதுவும் நம்மளோட தப்பு தான்...., இப்புடி எல்லா தப்பையும் நம்ம மேல வச்சுக்கிட்டு நீ எந்த தைரியத்துல அந்த பொண்ண திட்டுற......"

"அந்த பொண்ணுக்கு அது இறந்தவங்க வீடுன்னு தெரியாதோ என்னவோ...., அதுமட்டுமில்லாமல் செத்தவன் இன்னைக்கு காலையில தான் செத்துருக்கான்.., ஷோ அந்த பொண்ணு தெரிஞ்சே தான் அட்ரஸ கொடுத்தான்னு உளருறத முதல்ல நிறுத்து....."

"உன் தம்பி என்ன செஞ்சான்னு முழுசா சொன்னான்ல கிட்டதட்ட மிரட்டியிருக்கான் அந்த பொண்ணுகள அதுல பயந்து தான் இவன்கிட்ட தப்பிக்கிறதுக்காக தப்பான அட்ரஸ கொடுத்துருக்காங்க...." இதுக்கு என்ன பதில் சொல்லுற.....?? என்றவனின் குற்றசாட்டில் பதில் பேச முடியாது வாய் மூடி மெளனியானாள்.

"ஏன் மாமா என்கிட்ட இருந்து தப்பிக்கறதுக்காகன்னு சொல்றீங்களே என்ன பாத்தா பொம்பள பொறுக்கியாவா மாமா தெரியுது உங்களுக்கு.." என கசங்கிய குரலில் கேட்டவனை கண்டு பதறிய விக்ரம், " வினோத் இங்க பாரு நா அப்புடி சொல்லலடா....., நீ எப்படிபட்டவன்னு எங்களுக்கு தெரியும்....,?? என்றான்.

வினோத்," ஆனா அவளுக்கு தெரியலையே மாமா என்ன ஒரு பொறுக்கின்னு நெனச்சு தானா மாமா அவ கூட இருந்த பொண்ணு அட்ரஸ் சொல்லும் போது அமைதியா இருந்தா...." என தொண்டை அடைக்க கூறியவனை கண்டு கலங்கிய கவிதா...,

"டேய் இங்கப் பாருடா நீ... நீ.... தங்கம்டா.., உன் அருமை அவ.. விக்ரமின் முறைப்பை கண்டு.., அந்த பொண்ணுங்களுக்கு தெரியல....., ஊரு உலகத்துல வேற பொண்ண இல்ல நீ... நீ ... இத நெனச்சு எல்லாம் கலங்காதடா....." என ஆறுதல் கூறி அவனை தேற்றிக் கொண்டிருப்பவளைக் கண்ட விக்ரமிற்கு எங்காவது முட்டிக் கொள்ளலாமா என்றிருந்தது.

'இவ ஒருத்தி அவனுக்கு ஆறுதல் சொல்றேன்ற பேர்ல எறியிற தீயில எண்ணெய ஊத்தி அவன் கோபத்த தூண்டிவிட்டுட்டு இருக்கா.... தம்பி னு வரப் போ சரி எது தப்பு எதுவும் தெரியாது..,அவ தம்பி செய்றது தான் நியாயம் சரி....., அவன் தப்பே செஞ்சுருந்தாலும் இந்த அம்மிணி அவனுக்கு தான் கூஜா தூக்கிட்டு நிப்பா...., அதனால தான் அவன் செஞ்சது இன்னும் தப்புன்னு உணராமா இருக்கான்' என மனதில் நினைத்தவன் வினோத்திடம் பேசலானான்.

"வினோத்..., நீ எப்புடின்னு எங்களுக்கு தெரியம்.., ஆனா யாருன்னே தெரியாத பொண்ணுங்ககிட்ட நீ இப்படி நடந்துக்கிட்டதா தப்பில்லயாடா..." என,

"அப்படி என்ன மாமா தப்பு பண்ணிட்டேன்.., பிடிச்சிருக்குன்னு சொல்லி தானா மாமா பேசுனே.., வேற ஏதும் அசிங்கமா நடந்துக்கலயே....,
என்னோட விருப்பத்ததானா சொன்னேன் அதுக்கு அவ இப்புடி அசிங்கப்படுத்தியிருக்க கூடாது...., கண்டிப்பா இத நான் மறக்கவும் மாட்டேன்.., மன்னிக்கவும் மாட்டேன் மாமா....." என இறுகிய குரலில் கூறினான் வினோத்.

'உன் விருப்பத்த சொன்னியேடா மடையா..., அந்த பொண்ணு விருப்பத்த கேட்டியா.... என நினைத்த விக்ரம் இதனை சொன்னால் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்தவன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டான்.'

இதனை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வேதாவிற்கு கவியின் பேச்சில் கோபம் வந்தாலும் இருக்கும் இடம் உணர்ந்து அமைதிக் காத்தவள்.., தற்பொழுது வினோத்தின் பேச்சில் இன்னுமஎ ஆத்திரம் எழ,' இவன் தான் லூசுன்னா....., குடும்பமே லூசா இருக்கும் போல என்ன ஏதுன்னு விசாரிக்காமா இவுங்க போனா அதுக்கு நா என்ன பண்ண முடியும் அது இறந்தவங்க வீடுன்னு எங்களுக்கு எப்புடி தெரியும்..' என நினைத்தவள் மனதிற்குள் அவர்களை திட்டி தீர்த்து விட்டு செளமியாவிற்கு இங்க நடந்த அனைத்தையும் மெசேஜ் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

விக்ரம் ஏறப் போகும் பேருந்து கிளம்ப இருவரிடமும் விடைப்பெற்றவன்.., கவிதாவிடம் சில பல அறிவுரைகளை அள்ளி வீசியவன் பேருந்தில் ஏறினான்.
கவிதா இன்று ஊருக்கு கிளம்ப இருந்தவள், இன்று நடந்த நிகழ்வுகளினால் வினோத்திற்கு ஆறுதலாக இருக்க எண்ணி இரு நாட்கள் இருந்து பின் ஊருக்கு வருவதாக சொல்லிவிட, அவளுடம் விக்ரமின் அப்பா அம்மாவும் இருந்துக் கொள்ள அவன் மட்டும் வேலை இருப்பதால் ஊருக்கு கிளம்பி விட்டான்.

சிறிது நேரத்தில் விக்ரமின் பேருந்து கிளம்பி விட, அதனை தொடர்ந்து வினோத்தும், கவிதாவும் கிளம்ப அதுவரையிலும் அவனை முறைத்தப்படியே இருந்தாள் வேதா.

தன் முதுகை துளைக்கும் பார்வையை உணர்ந்த வினோத் திரும்ப கண்ணாடி ஜன்னல்கள் மூடியிருந்ததால் அவளை கண்டுக் கொள்ள முடியவில்லை, திரும்பியவன் கண்களிற்கு யாரும் அகப்படமால் போக தலையை உலுக்கியவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனம் பேருந்தில் அனைவரும் ஏறியது் அவர்களிடம் திரும்பியது, அவர்கள் ஏறிய சில நிமிடங்களில் பேருந்து புறப்பட்டு விட, தன் மாமானிடம் விடைப்பெற்றவள் அவனின் எண்ணங்களை சுமந்தவாறு ஊர் நோக்கி பயணப்பட்டாள் வேதஸ்ரீ.

விதியின் ஆட்டத்தில் இவர்கள் இணைவார்களா அல்லது .............??????

தேடல் தொடரும்...........,

share ur comments(n)(n)


 

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜெள்ளம்ஸ் why ya?? Why?? ஏன் இந்த கொலவெறி...... நேத்து இருந்து ஒரு கமன்ட் கூட வரலையா 😭😭😭ஆனா லைக்ஸ் மட்டும் வந்துட்டே இருக்குய்யா மீ பாவம்ய்யா...., படிக்கறவங்க புசிச்சிருந்த ஒரு கமென்ட் போடுங்கய்யா புடிக்கலன்னாலும் என்ன புடிக்கலன்னு சொல்லுங்கய்யா??? நீங்க சொல்லுறத வச்சுதான் கத நல்லாப் போகுதா இல்ல மொக்கையா இருக்கான்னு தெரிஞ்சுக்க முடியும்...,

இப்படிக்கு
உங்கள் கமென்ட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் அப்பாவி பொண்ணு:(:(
 

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேரின்பத்தின் தேடல் 8

அன்று காலை எழுந்த வேதஸ்ரீ சந்தோசம் சோகம் என்ற இரு கலவையான உணர்களில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். ஊரிலிருந்து வந்து கிட்டதட்ட இரண்டரை மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் நாளையில் இருந்து அவளது செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பிக்க இருக்கின்றன அதனை நினைத்து சோகம் என்றால், செமஸ்டர் முடிந்த விடுமுறையில் உறவினர் ஒருவரின் மகளுக்கு திருமணம் இருப்பதால் ஊருக்கு செல்லலாம் என்று அவளின் அம்மா கூறியதில் மகிழ்ச்சி என இரு வேறு நிலையில் இருந்தாள்.

ஊருக்கு என நினைத்தவுடன் அவனின் நினைவுகள் அவளின் அனுமதியின்றி உள்நுழைந்தது.கடந்த இரண்டரை மாதங்களில் அவனது நினைவுகள் வராமாலும் இல்லை அதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் அவனது நினைவுதான் என்ற நிலையும் இல்லை. பாஃஸிங் கிளவுட் டாக அவனை கடந்து சென்றிருந்தாள்.

சம்மன் இல்லாமல் ஆஜார் ஆகும் அவனின் நினைவுகளை ஒதுக்கியவள் மொபைலை எடுத்து செளமிக்கு ஒரு குட்மார்னிங் மெசேஞ்ஞை தட்டிவிட்டாள், செளமியாவிற்கு இன்னும் மூன்று நாட்களில் பப்ளிக் எக்ஜாம் ஆரம்பிக்க இருந்தது. எனவே இருவரும் மெசேஞ் மூலம் மட்டும் பேசிக் கொண்டு தங்களது படிப்பில் மூழ்கினர்.
எழுந்து பல்துலக்கி பிரஸ்ஸாகி வெளிவந்தவள் கிச்சனுக்குள் செல்ல, அங்கே சோலையம்மாள் காலை உணவிற்கான வேளையில் ஈடுபட்டிருந்தவர், இவளைக் கண்டதும் டீ யை கொடுக்க, அதனை பெற்றுக் கொண்டவள் டி.வி யை ஆன் செய்துவிட்டு அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டாள்.

மெல்லிய சத்தத்தில் மெலோடி பாட்டு ஓடிக் கொண்டிருந்த வேளை, அவளது தந்தை குளித்து வேலைக்கு செல்ல தயராக வர, அவரை கண்டவள் நியூஸ் சேனலை மாற்றிவிட்டு சமையலறைக்குள் சென்று உணவு பதார்த்தங்களை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்தவள், சோலையம்மாளை எதிர்பார்க்காது தந்தையை உணவுண்ண அழைத்தவள் அவளே தட்டு வைத்து பரிமாற ஆரம்பித்தாள்.

சாப்பிட அமர்ந்தவர் மகளை கண்டு சிறு புன்னகையை கொடுத்தவர், சிறிது நேரத்தில் நீயூஸ் சேனலில் மூழ்கியவர் பின் வேதாவிடம் பேச தொடங்கியிருந்தார்.

வேதாம்மா.......

சொல்லுங்கப்பா....??

எக்ஸாம்க்கு எல்லாம் ப்ரிப்பேர் பண்ண ஆரம்பிச்சுட்டியாடாம்மா...?? நைட் ரொம்ப நேரம் முழிச்சிருக்காதடா..?? என்க,

ம்ம்ம்... ப்பா ப்ரிப்பர் பண்ணிட்டேன் இது கொஞ்சம் கஷ்டமான பேப்பர்ப்பா அதான் நேத்து நைட்டு கொஞ்ச நேரம் படிச்சேன் இனி ஒண்ணும் பிரச்சன இல்லப்பா...?? என்றாள்.

பின் வேதாவிடம் பேசியவரே உண்டு முடித்தவர்..., அவரது மனைவியிடமும் மகளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி சென்றார்.
வேதாவின் தந்தை பரசுராம் அரசு வேலையில் பணிபுரிபவர், இவர்களின் சொந்த ஊர் திண்டுக்கல். பரசுவின் டிரான்ஸ்பரினால் இவர்கள் இங்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.

மீண்டும் திண்டுக்கல்லிற்கே டிரான்ஸ்பர் எழுதி கொடுக்க நினைத்தவர் வேதா கல்லூரியின் இறுதி வருடத்தில் இருப்பதால் அவள் கல்லூரி முடிந்ததும் எழுதி கொடுத்துவிடலாம் என நினைத்து விட்டுவிட்டார்.

அவர் கிளம்பி செல்லவும் வேதா குளித்துவிட்டு வர, அன்னையும் மகளும் உண்ண ஆரம்பிக்க.., அப்பொழுது ரஜினி முருகன் படத்தின் கிளைமேக்ஸ்ஸில் சூரி சொல்லும் "சோலையம்மா........!!!!!!" என்ற ரிங்டோனுடன் வேதாவின் மொபைல் அலற ஆரம்பித்தது.

அதனை கேட்ட சோலையம்மாளிற்கு புரை ஏற ஆரம்பிக்க அவரின் தலையில் தட்டியவள் குடிக்க தண்ணீர் கொடுத்தவள்....., மொபைலை சைலண்ட்டில் போடத மடதனத்தை எண்ணி தன்னையே நொந்தவள் அவசர கதியில் அதனை இயக்கி காதில் வைத்திருந்தாள்.

அழைத்தது அவளின் உடன்பிறப்பு கதிர்.சில பல நல விசாரிப்புகளுக்கு பின் தாயிடம் போனைக் கொடுத்தாள்.
மகனிடம் கொஞ்சி முடித்தவர் அவளை முறைத்து திட்ட வாய் திறக்க..., அதற்குள் சுதாரித்தவள்," அம்மா நா போய் படிக்கிறேன்..." என்றவள் அவரிடம் இருந்து மொபைலை பறித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து விட்டாள்.
அவளை திட்டியபடியே சாப்பிட்ட தட்டுகளை எடுத்தவர் சமையலையினுள் சென்றுவிட்டார்.

கதிர்..., பரசுராம்-சோலையம்மாளின் மூத்த புதல்வன் மருந்துவம் முடித்துவிட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் தங்கி ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறான். அவனின் ஓய்வு நேரம் இது என்பதால் எப்பொழுதும் இந்த நேரத்தில் அழைத்துவிடுவான். வேதா கதிரின் அழைப்பிற்கென ஸ்பெஷலாக அமைந்த ரிங்டோன் அது.கதிர் பெற்றவர்களுக்கு அடங்கிய புதல்வன் வேதாவிற்கு பாசாமான உடன்பிறப்பு.

சென்னையில் படிப்பை முடித்தவன் முதலில் காரைக்குடியில் உள்ள மருத்தவமனையில் பயிற்சி பெற நினைக்க.., வேதாவின் படிப்பு முடியும் வரை மட்டுமே அங்கு இருப்பர் என்றும் பின் திண்டுக்கல்லிற்கே வந்துவிடுவர் என தந்தை சொல்ல..., பின் மதுரைக்கு சென்றுவிட்டான். தற்பொழுது ஒரு ரூம் எடுத்து தனது நண்பனுடன் தங்கியுள்ளான்.இவர்கள் திண்டுக்கல்லிற்கு வந்து விட்டால் அங்கிருந்து ஒருமணி நேரம் பயணம் தான் எனவே வீட்டிலிருந்தே வந்து போய் கொள்ளலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்திருந்தனர்.

அறைக்குள் நுழைந்து புக்கை எடுத்தவளுக்கு மற்ற அனைத்தும் பின்னுக்கு செல்ல படிப்பதில் மூழ்கினாள்.


"அண்ணே....., அண்ணே...."

"என்னடா....??"

"சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்னே"

"அங்க வச்சிட்டு போடா நா சாப்புட்டுக்கிறே.."

"சரிண்ணே... மறக்காமா சாப்பிட்டுங்க..என்றவன் அங்கிருந்த மேஜை மீது சாப்பாட்டுக் கூடையை வைத்துவிட்டு தனக்கு இட்ட பணியை செவ்வனே செய்துவிட்டு சென்றுவிட்டான்.

உள்ளிருந்து கைகளை கழுவிக் கொண்டு வந்தவன்.., அங்கிருந்த சாப்பாட்டை எடுத்து போட்டுக் கொண்டு உண்ண ஆரம்பித்தான் வினோத்.

காலையில் எழுந்ததும் காபியை மட்டும் குடித்து விட்டு கடைக்கு வருபவனுக்கு காலை மதிய உணவு அனைத்தும் கடையிலே..., இரவு உணவிற்கு மட்டும் வீட்டிற்கு வருபவன் உண்டுவிட்டு வீட்டினரிடம் சிறிது நேரம் பேசுபவன் பின் உறங்க சென்றுவிடுவான்.

எப்பொழுதும் இப்படி தானா என்று கேட்டால் ஆம் இப்படிதான் இவனது அன்றாட நடவடிக்கைகள் அமையும். கடந்த சென்ற மாதங்களில் அவனிடமும் எந்த மாற்றமும் இல்லை.

கவிதா சொன்னதுபோல் இரண்டு நாட்கள் இருந்தவள் பின் விக்ரமின் நச்சரிப்பு தாங்காது கிளம்பிவிட்டாள்.அப்போதும் கிளம்ப மனமில்லாமல் இருந்தவளை இவன் தான் கிளப்பி விட்டிருந்தான்.

ஏனோ அந்த நிகழ்வு நடந்ததிலிருந்து வீட்டினர் அனைவரும் அவனை பரிதாபமாக பார்க்க, அதனை அறவே வெறுத்தவன், அந்த நிகழ்வுகளால் எனக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை நான் எப்போதும் போல் இருக்கிறேன் என அனைவருக்கும் காட்ட முயன்றான்...(அப்படி முயன்று கொண்டிருந்தான்)


உண்டு முடித்தவன் எழுந்து சென்று வேலையை செய்ய தொடங்கியிருந்தான். அன்று மரக்கட்டில் ஒன்றிற்கு டிசைன் செய்து கொண்டிருந்தான், டிஷைன் செய்வதற்கென உள்ள மிஷினை அதற்கு உரிய இடத்தில் பொருத்திவிட்டு இவன் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க இயந்திரம் அதற்குண்டான வேலையை தொடங்கியது.

இப்படியே மதிய உணவிற்கு அவன் தந்தை வரும் வரையிலும் அவனது வேலை தொடர்ந்துக் கொண்டிருந்தது.
எப்பொழுதும் மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்லும் தந்தை இன்று தனது தமையனிடம் பேச வேண்டி அவருக்கும் சேர்த்து உணவை குடுத்துவிட சொல்லியிருந்தார்.

அவர் சொற்படி உணவும் வந்துவிட இவன் இருப்பிடம் நோக்கி வந்துவிட்டார்.

"வினோத்..... வாப்பா சாப்பிடலாம் நேரம் ஆச்சு.." தந்தையின் வருகை உணர்ந்தவன்,"தோ... வரேன்ப்பா..."என்றவன் தன் வேலையை முடித்துக் கொண்டு வெளிவந்தான்.

இருவரும் ஏதும் பேசாது அமைதியாக உண்ண ஆரம்பித்திருக்க அவனின் தந்தை பேச்சை தொடங்கியிருந்தார்," என்னப்பா அந்த கட்டில் வேலை எல்லாம் முடிஞ்சுதா..."என்க, " ம்ம்ம்.. நாளைக்குள்ள முடிஞ்சிடுப்பா... இன்னும் கொஞ்ச சின்ன சின்ன வேல தான் இருக்கு.. " என்றான்.

"அப்பறம் தம்பி.. தன் தந்தை தயங்குவதை கண்டவன்,"சொல்லுங்கப்பா ஏன் தயங்குறீங்க.. என்ன விஷயம்...."

"அது வந்து தம்பி ஒரு பொண்ணு ஜாதகம் வந்துருக்கு.., உனக்கு சம்மதம்னா ஒரு தடவ போய் பாத்துட்டு வந்துரலாம்..." என்றவரின் பேச்சில் ஒரு நொடி தயங்கி நிந்ற அவனது விரல்கள் பின் அதன் வேலையை தொடங்கியது.

'தன் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாது இருந்தவனை கண்டவர் பின் அவனது பதிலை எதிர்பார்த்து அமைதியாக உண்ண ஆரம்பித்தார்.'

உணவினை உண்டு முடித்தவன் மனதில் ஒட்டி இருந்த அவளது நினைவுகளையும் சேர்த்து மொத்தமாக வெளேயேற்றும் வண்ணம் கைகளை கழுவியன் தனது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் தந்தையை நோக்கி,
"சரிங்கப்பா.. உங்க இஷ்டம்" என்றவன்,எழுந்து சென்றுவிட்டான்.

வினோத்தின் பதிலில் திருப்தியடைந்தவர் தனது மனைவிக்கு இவ்விஷயத்தை சொல்லும் பொருட்டு வினோத்துடம் சொல்லிக் கொண்டு வீடு புறப்பட்டார்.
 

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேரின்பத்தின் தேடல் 9

தந்தையிடம் சம்மதம் சொல்லி விட்டு வந்தவனின் மனம் நிலைக் கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்திருத்தது. வழுக்கட்டாயமாக இதயத்தில் ஆழத்தில் புதைத்திருந்த அவளது நினைவுகள் அவனின் அனுமதியின்றி மேல் எழும்ப ஆரம்பித்தன.

தனது மனதை திசை திருப்பும் பொருட்டு வேலையில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.தொடரும் நிழல் போல் அவளது முகம் நினைவில் வர அதனை தொடர்ந்து நடந்த அசாம்பாவிதங்களும் நினைவில் வர கண்களை இறுக மூடி தன்னை கட்டுப்படுத்த நினைத்தவன் அடுத்த நிமிடம் "ஆ..ஆ...." என அலறி தனது கைகளை பார்க்க பெருவிரலில் இயந்திரத்தில் உள்ள கூர்மையான பொருள் அவனது விரல்களை பதம்பாத்திருந்தது.

சற்றே ஆழமான கீறல், இரத்தம் நிற்காமல் வந்துக் கொண்டிருக்க அருகே இருந்த குழாயில் கைகளை கழுவியவன் முதலுதவி பெட்டி அங்கயே இருக்க, தனக்கு தேவையான மருந்தை போட்டுக் கொண்டான்.

அதற்கு மேல் அவனின் கவனம் வேலையில் செல்ல மறக்க.., வேலையாளை அழைத்து பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு ஓய்வறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் மனம் முழுவதும் அவளது நினைவுகள் மட்டுமே, நினைவுகளின் தாக்கத்தா தாளாது தலையை இரு கைகளாலும் தாங்கியவன் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் இறங்கியது.

"இல்ல.. இல்ல... அவள நினைக்க கூடாது என்ன வேணாம்னு அசிங்கப்படுத்திட்டு போனவா எனக்கு வேண்டாம்.. நினைக்காத நினைக்காத அவள நினைக்காத ஜஸ்ட் அவள பாத்ததும் புடிச்சிருந்தது அத சொன்னேன் அவ வேண்டாம்னு சொல்லிட்டா ஷோ எனக்கு வேண்டாம்.. நா ஒண்ணும் அவள காதலிக்கல வெறும் ஈர்ப்பு மட்டும் தான்... வேண்டாம் எனக்கு அவ வேண்டாம் அவள நா கடந்து வந்துட்டேன் அவள மறந்துட்டேன்...." என தனக்குதானே கத்தி சொல்லிக் கொண்டான்.

சிறிது நேரம் தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தவன் பின் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவனாக 'நா அவள அவ நினைவுகள மறந்துட்டேன் மறந்துட்டேன்...' என தனக்கு தானே உறுதி எடுத்துக் கொண்டவன் பின் எந்தவித தடுமாற்றமும் இன்றி தனது வேலையை தொடர சென்றுவிட்டான்.

அவனறியாதது அவனது உறுதி எல்லாம் நாளை செளமியாவை காணும் வரையில் தான் என்பது.

அன்றிரவு, வீடு வந்த தந்தையிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் செளமி." அப்பா.... எவ்ளோ நாள கேக்கிறேன் எனக்கொரு ஸ்டடி டேபிள் வாங்கிக் குடுங்கன்னு... நீங்க காது கொடுத்து கேக்குறீங்களா இருக்குறது ஒண்ணு இதுல சரவணன் வேற அவனுக்கு தான் அது வேணும்னு அதுல உக்காந்துக்குறான்.. தினமும் அவனோட என்னால சண்டை போட்டுட்டு இருக்க வேண்டியாதா இருக்கு... இன்னும் மூணு நாளுல எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது உங்களுக்கு தெரியுமா தெரியாதா... இவன் கூட மல்லுக் கட்டிட்டு இருந்தா நா எப்புடி படிக்கிறது...." என்றவளின் கத்தலை கேட்டுக் கொண்டே அங்க வந்த விமலா அவளிடம், " ஏண்டி வந்ததும் வராதுமா அவருக்கிட்ட கத்திட்டு இருக்கு முதல அவர சாப்பிட விடு..." என அவளை அதட்டியவர் அனைவரையும் உண்ண அழைத்திருந்தார்.

அவர் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள் பின்," அப்பா...." என்று ஆரம்பிக்க, அவளை தடுத்து நிறுத்திய அவளின் தந்தை," செளமிமா நாளைக்கே போய் நீ கேட்டத அப்பா வாங்கிட்டு வந்துடுறேன் போதுமா.." என கேட்க," ம்ஹூம்... இல்லப்பா நானும் வரேன் என்னையும் கூட்டிட்டு போங்க எனக்கு புடிச்சதா பாத்து நா செலக்ட் பஞ்ணுறேன்.." என செளமி கேட்க, சிறிது யோசித்தவர்,"சரிடமா நாளைக்கு காலையில ரெடியா இரு.. உன்ன கூட்டிட்டு போய்ட்டு வந்து அப்பா கடைக்கு போய்க்கிறேன்..." என்றவர்,தன் மனைவியிடம் திரும்பி,"விமலா ரொம்ப களைப்பா இருக்கு பால ரூம்க்கு கொடுத்துவிடு நா போய் படுக்கிறேன்..." என்றவர் உறங்க சென்றுவிட,
பிள்ளைகள் இருவரும் பாலை கொடுத்தவர், சரவணனிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்த செளமியை,

"ஏய்..., போய் படு டி சும்மா அவன்கிட்ட சண்ட போட்டுக்கிட்டு.., டேய்.., உனக்கு மட்டும் என்ன தனியா சொல்லணும்மா.., போய் படுங்க ரெண்டு பேரும்..." என அதட்டி அவர்களை அறைக்கு அனுப்பியவர் தங்களின் அறைக்கு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் வினோத் தங்களின் கடைக்கு செல்ல உடன் குரூமூர்த்தியும்.
இங்கே சொன்னது போல செளமி காலையிலே தயாராகி நிற்க.., அவளை அழைத்துக் கொண்டு கடை தெருவிற்கு சென்றார்.

அவர்கள் சென்று இறங்கிய கடை செட்டியார் பர்னிச்சர்ஸ்& டிசைன்ஸ்.இவர்கள் உள் நுழைந்த நேரம் இவர்களை கண்ட குரூமூர்த்தி," அடடே..,வாப்பா செல்வா.., நல்லாருக்கியே வியாபாரம் எல்லாம் எப்புடி போகுது..." எனக் கேட்டார்.
அவரைக் கண்ட செல்வமணி,"நா நல்லா இருக்கேன்னே.. நீங்க எப்புடி இருக்கீங்க.., வியாபாரத்துக்கு என்னன்னே நல்லதான் போகுது..., பாப்பாக்கு ஸ்டடி டேபிள் வாங்கணும் அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்.."என்றார்.

"ஓ.ஓஓ.. சரி ஏன்மா பாப்பா உன் பேர் என்ன?? எத்தனாவது படிக்கிற??என செளமியிடம் கேட்டார் குரூமூர்த்தி.

" என் பேரு செளமியா அங்கிள்... ப்ளஸ்டூ படிக்கிறேன்..." என பதிலளித்தாள் செளமி.
"கோபாலு இங்க வா..,என கடையில் வேலை செய்பவனை அழைத்தவர்," பாப்பாவ ஸ்டடி டேபிள் இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போய் காட்டு..." என்றவர்,செளமியடம்" நீ போய் உனக்கு புடிச்சதா பாத்து செலக்ட் பண்ணிட்டு வாடா மா..." என்க,
அவளோ தன் தந்தையை பார்க்க,"நீ போய் உனக்கு புடிச்சத எடுத்துட்டு வா செளமி அப்பா இங்க இருக்கேன் பயப்படாத நமக்கு தெரிஞ்சவங்க கடை தான்..." எனக் கூறி அவளை அனுப்பி வைத்தார் செல்வமணி.

அவள் சென்றதும் மற்ற இருவரும் தங்கள் தொழில் விஷயங்களை பேச ஆரம்பித்தனர்.
செளமியின் தந்தை செல்வமணி மொத்த வியாபார கடை (ஹோல்சேல்) ஒன்றை நடத்துகிறார். இவர்களின் கடை திண்டுக்கல் கிளை சாலையில் அமைந்துள்ளது. குரூமூர்த்திக்கும் செல்வமணிக்கும் தொழில்ரீதியாக நல்ல பழக்கம் உண்டு மற்றும் குரூமூர்த்தி தான் வியாபார சங்கத்தின் தலைவர் ஆவர், செல்வமணி பொருளாளர். இருவரும் மற்றவர்களின் குடும்ப நிலை பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை. தொழில்முறை பழக்கம் மட்டுமே.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளை வினோத் தன் தந்தையை தேடி வந்துவிட, ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைத்தார் குரூமூர்த்தி.மரியாதை நிமித்தமாக நின்று ஓரிரு வார்த்தைகள் பேசியவன் பின் தந்தையிடன் தான் வந்த காரணத்தை கூறிவிட்டு தன் இடத்திற்கு சென்றுவிட்டான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் கோபாலுடன் செளமியா வந்துவிட்டாள்.
"என்ன கோபாலு எல்லா காட்டுனியா பாப்பாக்கு.." எனக் கேட்டார் குரூமூர்த்தி.
"காட்டுனேங்க அய்யா ஆனா பாப்பக்கு தா ஏதும் புடிக்கல போல.." என்றான்.
"ஏன் செளமி மா ஏதும் பிடிக்கலயா.. எனக் கேட்ட தந்தையை பார்த்தவள்," ம்ஹூம்... இல்லப்பா எனக்கு புடிச்ச மாதிரி ஏதும் இல்ல..." என உதடு பிதுக்கினாள்.

"ஏதாச்சும் ஒண்ண செலக்ட் பண்ண வேண்டியது தானா செளமி ஸ்டட டேபிள் தான போ அங்க இருக்குறதுல ஏதாச்சும் எடுத்துட்டு வா அப்பாக்கு நேரமாகுது செளமி.." என்றார் செல்வமணி.
தந்தையின் சொற்களில் முகம் சுருக்கியவள்,"சாரிப்பா." என்றவாறு திரும்ப செல்ல...,
அவளின் சுருக்கிய முகத்தை பார்த்த குரூமூர்த்தி, " நீ நில்லும்மா ஏன் செல்வா புடிச்சத எடுத்தா தான அந்த புள்ளைக்கு சந்தோஷம்..." என்றவர் கோபலிடம், "நீ போய் வினோத் தம்பிய அவன் வரச்சு வச்சிருக்குற டிசைன்ஸ் எல்லாம் எடுத்து வர சொல்லு ஏன் னு கேட்ட எல்லா விபரத்தையும் சொல்லி வர சொல்லு..." என அவனை அனுப்பியவர்,

" தம்பி நிறைய வரச்சு வச்சுருப்பான் பாப்பா அதுல உனக்கு புடிச்சத நீ சொல்லு அதே மாதிரியே செஞ்சிடலாம்...." என்றார்.
வேலையாள் சென்று விபரத்தை சொல்ல ஸ்டடு டேபிளிற்கென்று நேற்று அவன் வரைந்ததை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

"இதோ தம்பியே வந்துட்டான்." என்றார் குரூமூர்த்தி. செளமி இவனிற்கு முதுகு காட்டி நின்றவள் குரூமூர்த்தியின் வார்த்தைகளில் திரும்பியவள் திகைத்து நின்று விட்டாள்.
இவளை பார்த்த வினோத்தும் அதிர்ச்சியில் ஒரு நொடி நின்றவனிற்கு பெண் பார்க்க சென்ற அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஞாபகம் வர நொடியில் ஏறிய கோபத்துடன், "ஏய்.... என்ற உறுமலுடன் அவளருகில் சென்றிருந்தான்."

இவனின் உறுமலில் பயந்த செளமி தன் தந்தையின் பின் ஒளிய அதனை கண்டவன், "ஏய்.. எங்க ஒளியிற உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா தப்பாம அட்ரஸ் கொடுத்து என்ன ஏமாத்தியிருப்பீங்க...,எங்க அவ நீ மட்டும் வந்துருக்க என வேதாவை தேடியவன் அவள் இல்லாமல் போக இன்னும் கோபமடைந்தவன், " சொல்லு உன்கிட்ட தான கேக்கிறேன் எங்க அவ உன்ன சின்னப்புள்ளனு நினச்சா நீ என்னவே ஏமாத்தியிருக்கா எவ்ளோ திமிர் இருக்கணும் உங்க ரெண்டு பேருக்கும்......" என சீறினான்.

அவனின் கோபத்தில் அனைவரும் திகைத்து நின்று விட்டனர். சூழ்நிலை உணர்ந்த குரூமூர்த்தி, " வினோத்....." என ஓங்கி அதலிட்டவர், வேலையாட்கள் கவனம் முழுவதும் தங்களை நோக்கி இருப்பதை உணர்ந்தவர், "இங்க வச்சு ஏதும் பேச வேண்டாம் ஆபிஸ் ரூம் போகலாம் வாங்க..." என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றார்.
அவர் வினோத்தின் கத்தலில் ஓரளவு விஷயத்தை அறிந்திருந்தார் இருந்தும் அவருக்கு முழவதுமாக தெரிய வேண்டியிருந்தது.

அனைவரும் அவரை பின்தொடர்ந்து உள்ளே நுழைந்த நொடி, " டேய்...... அறிவில்ல கடையில எல்லார் முன்னாடியும் இப்புடியாடா கத்துவ.. பத்தாததுக்கு அந்த புள்ளய வேற மிரட்டுற...???? என்னடா நினச்சுட்டு இருக்க உன் மனசுல சொல்லுடா...??????என கர்ஜித்தார் குரூமூர்த்தி.
தந்தையின் அதட்டலில் சுயநிலை அடைந்து தன்னை சமன் செய்திருந்தவன், தற்பொழுது தந்தையின் கோபத்தை அமைதியாக தாங்கி நின்றவன் செளமியை முறைக்க தவறவில்லை
செல்வமணிக்கு ஒன்றும் புரியவில்லை 'இவன் எதற்காக செளமியிடம் கோபப்பட வேண்டும், மற்றும் தனது மகள் எதற்காக பயந்து நடுங்க வேண்டும்..' என யோசித்தவர் தன்னை இறுக்கி புடித்திருக்கும் செளமியின் கைகளில் நடுக்கத்தை உணர்ந்தவர் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவர் ஏதும் பேசாது அமைதியாக நின்றிருந்தார்.

இவர்களை கவனித்த குரூமூர்த்தி, "வாங்க இங்க உக்காருங்க என அவர்களை இருக்கையில் அமர வைத்தவர் செளமிக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க மறு பேச்சு பேசாமல் வாங்கிக் கொண்டாள்.
" சொல்லு வினோத் எதுக்காக அப்புடி நடந்துக்கிட்ட..., இந்த பொண்ண உனக்கு முன்னாடியே தெரியுமா...???" எனக் கேட்டார்.அவனோ ஏதும் சொல்லாது வாயை இறுக மூடிக் கொண்டான். அவனிடம் திரும்ப திரும்ப கேட்டு பதில் இல்லாமல் போக சலிப்படைந்தவர், செளமியிடம்,”ஏம்மா இவன உனக்கு முன்னாடியே தெரியுமா...,” எனக் கேட்டார்.
அவளோ, பயத்தில் செய்வதறியாது இல்லை என தலையாட்ட, அவ்வளவுதான் எங்கிருந்து தான் வினோத்திற்கு அத்தனை ஆத்திரம் வந்ததோ......,

"ஏய்.... என்ன.... சொன்ன என்ன உனக்கு தெரியாதா.. எங்க என்ன பாத்து சொல்லு பாப்போம் என்ன தெரியாதுன்னு....." என்றவன் பாய்ந்து எழுந்து அவள் முன் வர முயல..., அவனின் செயலை உணர்ந்த செல்வமணி அவனிற்கு முன் வேகமாக எழுந்தவர், "போதும் நிறுத்து அங்கயே நில்லு....!!!!! இவ்வளவு நேரமும் சின்னப்பையன் குரூமூர்த்தி அண்ணன் பையன்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் நான் பொறுமையா இருந்தேன்... இனி ஒரு வார்த்த என் பொண்ண பத்தியோ இல்ல அவக் கிட்ட குரல உசத்தி பேசுன..... அவ்வளவுதான் உனக்கு மரியாதா.....!!!" என விரல் நீட்டி அவனை எச்சரித்தவர்
குரூமூர்த்தி யை ஒரு பார்வை பார்த்தவர் அடுத்த நொடி அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

அவர் சென்றதும் ஏதும் பேச முடியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தார் குரூமூர்த்தி. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை மகனின் இந்த கோப முகத்தில் அவரே திகைத்துப் போய் நின்றிருந்தார்.சிறிது நேரம் அமைதிக் காத்தவர் தன் மகனை நோக்க அவனோ, செல்வமணியின் பேச்சில் முகம் கருத்து நின்றிருந்தான்.

குரூமூர்த்திக்கு இப்பிரச்சனையின் ஆணிவேர் தெரிய வேண்டி இருக்க,"வினோத்... இங்க வந்து உட்கார்..." என்றார் அழுத்தமாக.அவரின் குரலை தட்ட முடியாது அவரின் சொற்படி சென்று அமர்ந்தான்.

அவன் ஆசுவசாப்படுவதற்காக சிறிது நேரம் கொடுத்தவர், பின் அவனிடம் "சொல்லு வினோத் அந்த பொண்ண உனக்கு எப்புடி தெரியும் ஒண்ணு விடாமா நடந்த எல்லா விஷயமும் எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும்... அதுக்கு முதல ஒரு கேள்விக்கு பதில் சொல்லு நீ சொன்ன பொண்ணுக்கும் இப்ப வந்த பொண்ணுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா..." என்க,

அவனோ,"ஆம்.."என்ற ரீதியில் தலையாட்டினான்."எப்புடி...?? " என அடுத்த கேள்விக் கணை அவரிடம் இருந்து பறந்து வர..., "அன்னைக்கு அந்த பொண்ணுக் கூட இவளும் இருந்தா ரெண்டுப் பேரும் சேர்ந்து தான் வந்தாங்க..." என்றான் வினோத்.

"உனக்கு அந்த அட்ரஸ யாரு கொடுத்தது உண்மை சொல்லு அன்னைக்கு உன் சோக்காளி பசங்க கொடுத்ததா சொன்ன......., அப்போ அது பொய்யா..????" எனக் கேட்டார் குரூமூர்த்தி. அதற்கு இனி மறைத்து பயனில்லை என உணர்ந்த வினோத்.." ஆமாப்பா அன்னைக்கு சொன்னது பொய்யிதான்... இப்ப வந்த பொண்ணு தான் அந்த விலாசம் கொடுத்தது...." என்றான் தந்தையின் முகம் பார்க்காது.
"ம்ம்ம... சொல்லு வினோத் உனக்கு எப்புடி இந்த பொண்ணுங்கள தெரியும்..., என்ன நடந்ததுன்னு எனக்கு ஆதில இருந்து தெரியணும்..." என்றவர் அவனின் பதிலுக்காக காத்திருக்க...,


இனி சொல்லாமல் இவர் விட போவதில்லை என உணர்ந்த வினோத் வேறு வழியின்றி அனைத்தையும் சொல்ல ஆரம்பித தான் அப்போதும் அவனின் தவறை உணராது.

தேடல் தொடரும்.......

share ur comments here

 
Last edited:

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேரின்பத்தின் தேடல் 10

அதே நேரம் செளமியாவை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்ற செல்வமணிக்கு இன்னும் கோபம் தீர்ந்தப் பாடில்லை. செளமியை முதலில் வீட்டிற்கு கொண்டு சென்று விடலாம் என எண்ணியவர் பின் அவருக்கு தெரிந்துக் கொள்ள சில விஷயங்கள் இருப்பதால் இங்கு அழைத்து வந்து விட்டார்.

செளமி இன்னும் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து வெளிவந்திருக்கவில்லை. அவனின் கோபத்தில் அதிகளவு மிரட்டிருந்தாள்.தந்தை தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லாமால் இங்கு கூட்டி வந்ததிலே அவர் நடந்ததை தெரிந்துக் கொள்ளதான் இங்கு அழைத்து வந்திருக்கிறார் என்பதை ஓரளவு ஊகித்தவளுக்கு இன்னும் இன்னும் பயம் அதிகரித்தது.

சிறிது நேரம் மெளனத்தில் கழிய, தனது யோசனையில் இருந்து வெளிவந்த செல்வமணி, "செளமிமா..." என அழைக்க..., தந்தையின் குரலில் தூக்கிவாரிப் போட,பயத்துடன் "ப்பா...." என்றாள்.

அவளின் மிரட்சியை கண்டுக் கொண்ட செல்வமணி அவளின் அருகில் எழுந்து சென்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டவர்,
"செளமி மா அப்பா தானடா கூப்புட்டேன்.., ஏன் இந்த பயம்...." என மென்மையாக கேட்க, அவரின் கேள்வியில் கண்களில் நீர் கரையிட..."ப்பா...." என தேம்பியவள் அவரின் தோள் சாய்ந்து அவரை அணைத்துக் கொண்டாள்.

அவளின் முதுகை இதமாக வருடி..., தலை கோதி அவளை ஆசுவாசப்பபடுத்தியவர், " செளமி மா ஏன் இப்ப அழுகுற..., அப்பா உன்ன ஏதும் திட்டலையேடா..., எனக்கு நம்பிக்கை இருக்கு என் பொண்ணு தப்பு பண்ணிருக்க மாட்டான்னு...,
வினோத்த.... எப்புடி தெரியும் உனக்கு எப்ப பாத்த.., எங்க பாத்த.., அப்பாக்கிட்ட எந்த விஷயமாச்சும் சொல்லாமா மறச்சுருந்தா இப்ப சொல்லிடுடா..., கண்டவனும் என் பொண்ண திட்டுறத என்னால பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது...., நீ அப்பாக்கு தெரியாமா எந்த பிரச்சனையிலும் மாட்டிக்கிட்டியா...., அப்பா இருக்கேன் உனக்கு பயப்படாமா நடந்த விஷயத்த சொல்லுடா......" என பரிவான குரலில் கேட்டார் செல்வமணி.

தந்தையின் கரிசனத்தில் ஆறுதலில் தைரியம் வரப் பெற்றவள், "அப்பா.." என அழைத்து வினோத்தை கோவிலில் சந்ததித்து, அவன் அவர்களிடம் பேசியது.., அவர்களை தடுத்து வழிமறித்து முகவரியை கேட்டது..., பின் வேதா பேருந்து நிலையத்தில் வினோத் பேசியதை சொன்னது..,என அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தவள், " அன்னைக்கு இருந்த பயத்துலயும் பதட்டதுலயும் தான்ப்பா நா அட்ரஸ மாத்தி சொன்னேன் சத்தியமா அது இறந்தவங்க வீடுன்னு எனக்கு தெரியாதுப்பா..., தெரிஞ்சுருந்தா கண்டிப்பா நா சொல்லிருக்கவே மாட்டேன்..." என்றாள்.

அவள் சொல்வதை கேட்ட செல்வமணிக்கு கோபம் பல்மடங்கு பெருகியது.., 'புள்ளைங்க கிட்ட எப்புடி நடந்துருக்கான் ராஸ்கல்..' என நினைத்து பல்லைக் கடித்தவர் அவளிடம்," ஏன் இந்த விஷயத்த வீட்டுல யாருக்கிட்டயும் சொல்லல..." என்க, "சொன்ன அத்த வேதாவ தான் திட்டுவாங்கன்னு பயந்துட்டு சொல்லலப்பா..." என்றாள்.

"அட்லீஸ்ட் அப்பாகிட்டாயாவது சொல்லிருக்கலாம்லடா இப்ப பாரு எவ்ளோ பெரிய பிரச்சனை ஆகிடுச்சுன்னு..." என்றார். அவளே, " சாரிப்பா... பயத்துல தான் சொல்லல.." என்றாள்.

மகளின் கலங்கிய முகம் அவளிடம் கோபப்பட முடியாமல் தடுக்க மற்றும் பயத்தினாலே அவர்கள் தவறு செய்திருப்பதும் புரிய..., இதற்கு காரணமானவனின் மேல் தான் கோபம் பெருகியது. பின் செளமியை தன் சமதானம் செய்து இங்கு நடந்தவைகளை வீட்டில் சொல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக வேதாவிற்கு இங்கு நடந்த எதையும் சொல்ல வேண்டாம் என சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டவர் பின் கடைக்கு திரும்பியிருந்தார்.கடைக்குள் வந்தவர் சிறது தாமதிக்காது குரூமூர்த்திக்கு போன் செய்திருந்தார்.

அங்கே, நடந்தவைகளை வினோத் சொல்ல சொல்ல கேட்டிருந்தவருக்கு தவறு முழுவதும் அவனிடமே என புரிந்தது, அதிலும் அவன் தான் செய்ததை இன்னமும் தவறு என்று புரியாது பேசிக் கொண்டிருப்பதும் தெள்ளத் தெளிவாக அவருக்கு விளங்கியது.
அவன் பேசும் வரை அமைதியாக இருந்தவர், அவன் பேசி முடித்ததும் அதே அமைதியை கடைப்பிடித்து அவனை பார்த்தப்படியே அமர்ந்திருந்தார்.

தந்தையின் கோபத்தை இல்லை திட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்கு அவரின் இந்த அமைதி சற்றே சங்கடமே, ஏனெனில் குரூமூர்த்தி இதுவரை இப்படி அமைதியாக இருந்ததில்லை பிள்ளைகள் மீது கோபமோ.., வருத்தமோ அதை வெளிக்காட்டிதான் பழக்கமே.

தந்தையின் அமைதி அவனை கூர் போட, " என்னப்பா அமைதியா இருக்கீங்க.., ஏதாச்சும் சொல்லுங்கப்பா....," என்றான்.

"என்ன தம்பி சொல்ல சொல்லுற நீ பண்ணுண காரியம் பேசுற மாதிரியா இருக்கு..." என்று பதிலளித்தார். அவனோ, " என்ன மேல கோபமாப்பா..." எனக் கேட்க,

"கோபம் இல்ல தம்பி வருத்தம் ஆதங்கம்..., என் பையன இப்புடி முன்ன பின்ன தெரியாத பொண்ணுங்க கிட்ட நடந்துக்கிட்டான்ற வேதனை.." என்றார்." அப்பா நீங்களும் என்ன மோசமானவன்னு நெனைக்கிறீங்களாப்பா..., நான் அப்புடி என்னப்பா தப்பு பண்ணிட்டேன் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ண விரும்புறேன்னு தானப்பா கேட்டேன்..., வேற ஏதும் தப்பா கேட்கவோ இல்ல நடந்துக்கவோ இல்லையேப்பா....," என்றான் வருத்தமாக..,

"எது வினோத் தப்பில்லைன்னு சொல்லுற, இன்னைக்கு நீ கடையில அந்த புள்ளைக்கிட்ட நடந்துக்கிட்டது சரியா..., ம்ம் பதில் சொல்லு..." என்றவரின் கேள்விற்க்கு "இல்லை" என்று தலையாட்டியவன், அடுத்து பேச வாய் திறக்க எத்தனிக்க...,

அவனை பேச விடாமல், " இரு வினோத் நா இன்னும் பேசி முடிக்கல..,என்ன பேச விடு" என அதட்டியவர்,"உனக்கு பிடிச்சிருந்தா அந்த பொண்ணு யாரு என்ன... அங்க இருக்குற சூழ்நிலை என்னன்னு தெரியாமா உன் இஷ்டத்துக்கு நடந்துக்குவியா..., அந்த பொண்ணு தப்பான விலாசத்த மாத்தி சொல்லுற அளவுக்கு உன் நடவடிக்கை அமஞ்சிருக்கு..," என்றவர், தொடர்ந்து " நா உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கிறேன் நம்ம மிருது கிட்ட யாராச்சும் நீ அந்த பொண்ணங்க கிட்ட நடந்துக்கிட்ட மாதிரி யாராச்சும் நடந்துக்கிட்ட நீ சும்மா இருப்பியா.., இல்ல நீ மிரட்டுன மாதிரி விலாஷம் சொல்லு இல்லைன்னா வீட்டுக்கு வருவேன் சொன்னதான் நீ சும்மாதான் இருப்பியா..." என்க,

அவனோ, தந்தையின் வார்த்தைகளில் உள்ள உண்மை புரிய தன்னுடைய முட்டாள்தனத்தால் செய்து வைத்திருந்த பிரச்சனையின் வீரியம் உரைக்க, குற்றஉணர்வுடன் "இல்லை" என்று தலையாட்டினான்." அப்ப உன் வீட்டு பொண்ணுன்னா பொக்கிஷம் அடுத்த வீட்டுப் பொண்ணுன்னா இளக்காரம் அப்புடி தானா..." என்றவரின் கேள்விக்கு 'ஆம்' என்றா தலையாட்ட முடியும் என எண்ணியவன் அமைதிக் காத்தான்.

அப்பொழுது குரூமூர்த்தியின் செல்போன் அழைக்க எடுத்துப் பார்த்தவர் ஸ்பீக்கரில் போட்டு விட்டு அமைதிக காக்க எதிர்புறமும் அமைதியே, பின் இவரே தொண்டையை கனைத்து, " சொல்லு செல்வா..," என்றார்.அவரோ சிறிது நேரம் அமைதிக் காத்தவர் பின்," அண்ணே இப்புடி பேசுறேன்னு என்ன தப்பா நினைக்காதீங்க.., ஏன்னா உங்க பையன் செஞ்சிருக்கிற காரியம் அப்புடி அத நினச்சாலே எனக்கு அப்புடியே ஆத்திரமா வருது.., உங்க பையன் என்ன பெரிய இவனா என் வீட்டுப் பொண்ணுங்கள மிரட்டியிருக்கான் என்ன நினச்சுக்கிட்டு இருக்கான் மனசுல, உங்க முகத்துக்காக தான் நான் இந்த பிரச்சனைய சும்மா விடுறேன் இதுல என் வீட்டுப் பொண்ணுங்களும் சிக்கியிருக்காங்க நாளப் பின்ன இதுனால அவுங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு தான் நான் பொறுமையா இருக்கேன்.., " என கோபம் குறையாமல் கூறி முடித்தார்.

" உன் கோபம் எனக்கு புரியுது செல்வா நியாயமானதும் கூட தப்பு என் பையன் பேர்ல இருக்கும் போது உன்கிட்ட எந்த விளக்கமும் நான் சொல்ல முடியாது உன் கோபத்த நான் ஏத்துக்கிட்டு தானா ஆகணும், நடந்த எல்லாத்துக்கும் என் பையன் மட்டும் தான் காரணம் வேற யாரையும் இதுல தப்பு சொல்ல முடியாது நா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றே செல்வா என் பையன் பண்ண தப்புக்கு நா மன்னிப்பு கேட்கிறேன் இப்போதைக்கு என்னால இது மட்டும் தான் சொல்ல முடியும் முடிஞ்சா என்ன "மன்னிச்சிடு" என்றுவிட,

அவரின் வார்த்தைகளில் மற்ற இருவருமே பதறி விட்டனர்." என்ன அண்ணே மன்னிச்சிடுன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்கண்ணே... ஏதோ கோபம் அந்த ஆத்திரத்துல பேசிட்டேன் மத்தப்படி நீங்க மன்னிப்பு கேட்கணும்ல எதிர்பார்க்கல..., இத்தோடு இந்த பிரச்சனைய முடிச்சிடலாம்..., எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்க அண்ணே.." என,

"சொல்லு செல்வா என்ன பண்ணணும்..??" என்றார் குரூமூர்த்தி.
அதற்கற செல்வாவோ, "இத்தோடு இந்த விஷயத்த உங்க பையன முடிச்சுக்க சொல்லுங்க, இனி ஒரு தடவ என் வேதா விஷயத்துல தலையிடக் கூடாது அவனால இனி எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது..." எனக் கேட்டார்.

" கண்டிப்பா இனி என் பையனால உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராது...," என்றவர் வினோத்திடம், " என் தம்பி நா சொல்லுறது சரி தானா..." எனக் கேட்க, ஏற்கனவே தன்னால் தந்தை மன்னிப்பு கேட்க நேர்ந்ததை எண்ணி குற்ற உணர்ச்சியில் இருந்தவன் தன்னாலே "சரி" என தலையாட்டியவன் அப்பொழுதும் தன் மனம் அவளின் பெயரை குறித்துக் கொண்டதை எண்ணி வேதனையடைந்தான்.

குரூமூர்த்தியின் வார்த்தைகளில் தெளிந்த செல்வமணி, " சரி அண்ணே அப்போ நா வச்சிடுறேன்.." என சொல்லி போனை கட் செய்தவர் தன் வேலைகளை கவனிக்க சென்று விட்டார்.

பேசி முடித்ததும் வினோத் தை பார்த்த குரூமூர்த்தி, "நீ சொன்ன வார்த்தைய காப்பாத்துவன்னு நெனைக்கிறேன்..., நீ செஞ்ச காரியத்தால இன்னைக்கு தலைகுனிவு எனக்கு தான் வினோத்.., உன்கிட்ட நா கேக்கிற ஒரு விஷயம் இனி உன்னால எந்த பிரச்சனையும் வரக் கூடாது என் மரியாதைய காப்பாத்தனும்னு நினச்சியின்னா இந்த ஒரு விஷயத்த மட்டும் செய் போதும்..." என்றார்.

அவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயன்றவனின் தொண்டை அடைக்க, "ம்ம்ம்.." என்றவன் வெளியேறியிருந்தான்.

பைக்கில் ஏறி இலக்கில்லாமல் பறந்தவன் இறுதியில் வந்து நின்ற இடம் திண்டுக்கல்லின் முக்கிய அடையாளமான மலைக்கோட்டைக்கு, ஏனோ அவனின் மனம் தனிமையை தேட அவன் தேடி வந்த இடம் தான் மலைக்கோட்டை.

மலைக்கோட்டையின் அடிவாரத்தில் பிரசித்து பெற்ற மாரியம்மான் கோவில் உள்ளது இங்கு நடைபெறும் திருவிழா மிகவும் பிரமலமானது திண்டுக்கல்லை சுற்றியிருக்கும் அனைத்து ஊர் மக்களும் கூடிவிடுவர். கிட்ட தட்ட ஒரு மாதம் இத் திருவிழா நடைபெறும்.கொடி ஏற்றியதில் இருந்து ஆரம்பிக்கும் திருவிழாவிற்கு சளைக்காமல் மக்கள் வெள்ளம் வந்துக் கொண்டே இருக்கும், தினம் ஒரு சாமி அலங்காரம், தினம் ஒரு பிராத்தனை என ஒரு மாதமும் திண்டுக்கல்லே களைக் கட்டும் அந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தி அம்மனை தரிசித்து விட்டு ஒன்று விடாமல் அனைத்து ராட்டினங்களிலும் ஏறி, திருவிழாக் கடைகளில் நுழைந்து அப்பா பர்ஸை காலி செய்வது எல்லாம் தனி சுகமே,

மலைக்கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இம் மலைக்கோட்டை கி.பி 14 ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசின் மன்னன் முத்துகிருஷ்ண நாயக்கரால் கட்டப்பட்டது.சுற்றுலா தளமாகவும் இது உள்ளது.

திண்டு போன்ற மலைக்கோட்டையை சுற்றி அமைந்துள்ளதால் திண்டுக்கல் என்று அழைக்கப்படுகிறது. மற்றும் ஆதிக் காலத்தில் திண்டி என்ற மன்னன் இந்த நகரை ஆண்டப் போது மக்களை துன்புறத்தினார். எனவே, மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி என்ற மன்னனை சிவனாகிய ஈசன் வதம் புரிந்தததால் திண்டீஸ்வரம் எனவும் அழைக்கப்பட்டதாகவும் சில மக்கள் கூறுகின்றனர்.

பண்டைய தமிழ் மன்னர்களான் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் எல்லையாக இந்நகவம் அமைந்திருந்தது.

நீண்டிருந்த படிகளை கடந்து ஏறியவன் மலை மீது இருந்த கோவிலை அடைந்தான். சுற்றிலும் பார்வையை சுழல விட்டவனின் கண்களுக்கு சிக்கியது என்னவோ கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கொஞ்சிக்குழாவி கொண்டிருக்கும் காதலர்கள் தான். அவர்களை பார்த்தாலே தெரிந்திற்று கல்லூரி மாணவர்கள் என்று.

பார்த்த வினோத்தின் முகம் சுருங்கியது.., அவனிற்கு காதலர்கள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளில் என்றும் பிடித்தமில்லை. அதுவும் இது ஒரு பொது இடம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வந்துச் செல்லும் இடம் என்னதான் காதலர்கள் என்றாலும் வெளி இடங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூடவா தெரியாத அளவிற்கு முட்டாள்களாக இருப்பார்கள் என்பது தான் அவனின் வாதம்.

இதையெல்லாம் அவர்களிடம் சென்று சொல்லி விட முடியும் அப்படியே கூறினாலும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா சொல்லும் நம்மை ஏதோ வேற்றுக் கிரகவாசி ரீதியில் பார்த்து வைப்பார்கள். என எண்ணி அவர்களை கடந்து சென்றவன் நின்ற இடம் அவனிற்கு மிகவும் பிடித்தமான
கோட்டையின் நடுவில் அமைந்திருக்கும் பீரங்கி மேடு என்றும் போல் இன்றும் அங்கு சென்று நின்றவனுக்கு அவனையும் அறியாது உச்சியில் இருந்து உள்ளங் கால் வரையிலும் ஒரு சிலிர்ப்பு தோன்றியது.

தான் நிற்கும் இதே இடத்தில் பல ஆண்டுக்களுக்கு முன்னாள் எத்தனை மன்னர்கள் நின்றிருப்பார்கள் என நினைக்கும் போதே அவனின் ரோமக் கால்கள் அனைத்தும் கூத்திட்டு நின்றன.

அதுவும் இந்த பீரங்கி மேடு பிரட்டிஷ்காரர்கள் இந்த மலையை கைப்பற்றிய போது பாளையக் காரர்களுக்கும் அவர்களுக்கும் போர் எழுந்தது. எனவே, ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை எதிர்க்க இந்த பீரங்கி மேடை அமைத்திருந்தனர், இன்றளவும் இவையாவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சிறிது நேரம் அங்கே நின்றவன் பின் மலை மீது அமைந்திருந்த கோவிலிற்கு சென்று அம்மனை வழிபட்டவன், பின்பு அமைதியாக யாருடைய தொந்திரவும் இல்லாத ஓரிடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

அதுவரையிலும் அவனிடமிருந்து தள்ளி இருந்த இன்று நடந்த நிகழ்வுகள்
அனைத்தும் அவனை ஆக்ரமித்தன. அதுவும் தன்னால் தன் தந்தைக்கு ஏற்பட்ட தலைக் குனிவை நினைத்துப் பார்த்தவனுக்கு இதுவரை இருந்த உற்சாக தன்னை மாறி ஒரு வித வேதனை உணர்வு அவனை ஆட்கொண்டது.

அமைதியாக "வேதா.." என்ற பெயரை உச்சரித்தவனின் இதழ்களில் அழகிய புன்னகை ஒன்று வந்தமர்ந்தது. கண் மூடி அவளை சந்தித்த நாளில் இருந்து நடந்த அனைத்து நிகழ்வுகளையும் மனம் அசைப் போட்டது.

அன்று கோபத்தில் தெரியாத பல உண்மைகள் இன்று அமைதியாக சிந்திக்கும் போது விளங்கின. தனது முட்டாள் தனத்தால் அவசரத்தால் அவன் நடந்துக் கொண்டதும் தெள்ளத் தெளிவாக விளங்கிற்று.

'எதற்காக நான் அவளிடம் அப்படி நடந்துக் கொண்டேன்,?? எந்த உரிமையில் நான் அவளிடம் அப்படி நடந்துக் கொண்டேன்..?? அவள் என்னவள்..., எனக்கானவள்..., என்ற எண்ணம் தோன்றியதாலா....??? அதற்காக யார் என்றே தெரியாத பெண்களிடம் அப்படி நடந்துக் கொண்டது தவறல்லவா...??? என் தந்தை என்னை அப்படி வளர்க்கவில்லையே...??????
தந்தை சொன்னது போல் கவிதாவிடமோ அல்லது மிருதுவிடமோ யாராவது இப்படி நடந்துக் கொண்டால் நான் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பேனா அவர்களை உண்டு இல்லா என்று ஆக்கிவிட மாட்டேனா...???' என நினைத்தவனுக்கு விடை கிடைக்கவில்லை.

'அப்பொழுது தந்தை சொன்னது போல் தன் வீட்டுப் பெண்கள் பொக்கிஷம்..., அடுத்த வீட்டுப் பெண்கள் இளக்காரம் என்று என் மனம் நினைக்கிறதா...????
'இல்லை' சர்வ நிச்சயமாக 'இல்லை..' அவளை இளப்பம் என்று என்னால் நினைக்க முடியுமா.....???? நிச்சயமாக இல்லை..., அவள் தேவதை அல்லவா...!!!!'

' நேற்று வரை அவளை வேண்டாம் என்று அடித்துக் கொண்ட மனது இன்று கடையில் அந்த சிறுப் பெண்ணை கண்டதும் என்னை அறியாமல் என் மனமும் விழிகளும் அவளை தானே முதலில் தேடி அலைப் பாய்ந்தது...., அப்பொழுது நேற்று நான் எடுத்த முடிவு எனக்கு நானே சமதானம் செய்துக் கொண்டேன் போலவே அம் முடிவின் உறுதி முழுதாக ஒரு நாள் கூட நீடிக்கவில்லையே.....!!!'

'அந்த அளவிற்கா அவள் என்னை ஆட்டிப் படைக்கிறாள்.., இனி அவளையும் அவள் நினைவுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்ர கொள்ள முடியுமா..?? என்றவனின் கேள்விக்கு அறிவும்.., மனதும்.., ஒரு சேர 'முடியாது' என ஸ்திரமாக அடித்துக் கூறின.என அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனின் ஓய்ந்துப் போனது.

இறுதியாக அறிவையும் மனதையும் ஒரு சேர தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் நன்கு சிந்தித்து உறுதியாக ஒரு முடிவை எடுத்தவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

தேடல் தொடரும்......,

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்க்கில் பதிவு செய்யவும்.....செல்லம்ஶ் என்னை திருத்திக் கொள்வதற்க்கு உதவும்....(n)(n)(n):):):):)


 
Top