All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சௌந்தர்யாசெழியனின் 'பேசாத வார்த்தை எல்லாம் பேரின்பத்தின் தேடல்'' - கதை திரி

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சௌந்தர்யாசெழியனின் பேசாத வார்த்தையெல்லாம் பேரின்பத்தின் தேடல் - கதை திரி
 
Last edited:

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் அன்பர்களே,

இதோ , நீண்ட நெடிய இடைவெளிற்கு பிறகு எனது அடுத்த கதையோட வந்துவிட்டேன்.

"பேசாத வார்த்தையெல்லாம் பேரின்பத்தின் தேடல்" இதற்கு உங்களது ஆதரவினை தெரியுவிங்கள்.

நன்றி
sowndharyacheliyan.


பேரின்பம் 1:

ஓ .......ஓ ஓ.............
.......ஆ....ஆ..ஆஆஆ...என விதவிதமாக அந்த கப்பல் ராட்டினத்தில் அமர்ந்திருந்தவர்களின் கூச்சல் விண்ணைப் பிளந்தது.

கப்பலின் ஒரு முனை மேல் எழும்பும் போது அதற்கு வலப் பக்கமுள்ள ஜெயின்ட் வீலை ஒரு இன்ச் இடைவெளியில் தொட்டு விட்டு வந்ததை கண்டவர்களின் அடிவயிறு பீதியில் கலங்கினாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது கத்தி ஆர்ப்பாட்டம் செய்து தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இளசுகள் தங்களின் இளைஞிகளின் கவனத்தை தங்கள் புறம் திருப்புவதற்காக விதவிதமாக ஒலி எழுப்பிக் கொண்டிருக்க, புதிதாக திருமணம் முடித்த ஆண்கள் தங்களின் மனைவிமார்கள் முன்னே கெத்தை விடாது உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியே தங்களின் மனைவிமார்களுக்கு தைரியம் அளிக்கும் போர்வையில் தாங்களும் தைரியம் தேடிக்கொண்டிருந்தனர்.

பட்டப் பகலில் வெயில் கொளுத்தியதையும் பொருட்படுத்தாது அடுத்த ரவுண்டுக்கு ஆட்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

காரணம் அன்றுதான் கடைசி திருவிழா இப்பொழுது விட்டால் இனி அடுத்த வருடம் இதனை எல்லாம் காண முடியும் என்ற காரணத்தினால் வெயிலையும் பொருட்படுத்தாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு திடலை முற்றுகை இட வந்திருந்தனர்.

அதே நீண்ட வரிசையில் அடுத்த ரவுண்டுக்கு காத்திருந்தவள் கப்பலின் ஒருமுனை ஜெயின் வீலை தொட்டு வருவதை கண்ட அவளின் அடிவயிறு கலங்க ஆரம்பிக்க இதயம் பீதியில் முரசு வேகத்தில் கொட்ட ஆரம்பித்தது.

தன் இதயம் வெளியில் விழுந்து விடாதவாறு ஒரு கையால் தன் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டவள் தன் முன் நின்றிருந்த வேதஸ்ரீ யை பாவமாகவும் அதேசமயம் இத்தகைய ஆபத்தான முயற்சி தேவையா? என்பது போல் பார்த்தாள் சௌமியா.

பெரியவளோ சிறியவளின் பார்வையை பொருட்படுத்தாது தன் கவனத்தை முழுவதும் கப்பலில் ஏறிய தீருவேன் என்பது போல் அதன் மீது நிலைக்க விட்டிருந்தாள்.

பின் அவளின் அம்மாவிடம் இங்கு வருவதற்காக கெஞ்சி கூத்தாடி அல்லவா அனுமதி கேட்டு வந்துள்ளாள்.

இந்த வாய்ப்பினை தவற விட மனமில்லாது செளமியின் பார்வையை விடாப்பிடியாக தவிர்த்தவள் அதில் ஏறியே தீருவேன் என்ற வீம்புடன் அசையாது நின்று கொண்டிருந்தாள்.

அவளின் வீம்பினை கண்ட சௌமியா,

"போச்சு இன்னைக்கு இவ எனக்கு சங்கு ஊதாமா விடமாட்ட போலயே! வேற வழி இல்ல சமாளிப்போம்!! இந்த கப்பல பாத்தா தானா நமக்கு வயிறு கலக்குது என நினைத்தவள் முயன்ற தனது கவனத்தை திசைதிருப்பி இருந்தாள்.

அங்கு உள்ள அனைத்தையும் சுற்றி வட்டமடித்த அவளின் கண்கள் தூரத்தில் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தவனை கண்டதும் கலக்கம் சூழ அவசரமாக தன் முன் நின்றிருந்தவளை விளித்தாள்.

வேதா..........,

ம்ம்ம்ம்........, இவள் புறம் திரும்பாது ம்ம்ம்.....கொட்டினாள் வேதா.

டி வேதா அங்க பாருடி என சௌமி பொறுமை இழந்து கத்த......,

ம்ப்ச்....,என்னடி

என அவளின் குரலில் சலித்தவள் அவள் காட்டிய திசையில் வருபவனை பார்த்து அதிர்ந்தவள்,

இவன் எதுக்குடி இங்க வரான்....?

தெரியலையே ..............?

வேற யாரையாச்சும் பார்க்கப் போவாண்டி....... இங்க நம்ம மட்டுமா இருக்கோம்..........??????

ஆமா அப்படியும் இருக்கும் .......

என இருவரும் மாறி மாறி மற்றவருக்கு தைரியம் கூறி கொண்டிருந்தனர்.

ஆனால் இவர்களுடைய தைரியத்தை உடைக்கும் வகையில் அவன் இவர்களை நோக்கி தூரத்தில் வந்து கொண்டிருந்தான்.

இவன் புறம் ஒரு கண்ணை வைத்திருந்த இருவரும் அவன் தங்களை நோக்கித்தான் வந்து கொண்டிருப்பதை உறுதிசெய்தவர்கள் செய்வதறியாது பீதியில் உறைந்தனர்.

இவர்கள் உறை நிலையை கண்டவனின் இதழ்கள் அழகிய புன்னகையை உதிர்த்தன. அதிலும் அவன் பார்வை சௌமியின் அருகிலிருந்தவளின் மீது சற்று ஆர்வமாகவே படிந்தது.

அவளின் புன்னகையில் உறை நிலையில் இருந்து வெளி வந்தவர்கள் அப்போதுதான் உணர்ந்தனர் அவன் அவர்களுக்கு சில அடி தூரத்தில் வந்து விட்டிருந்ததை.

அவர்களின் செய்கைகளைக் கவனித்துக் கொண்டு அவன் அவர்களை நெருங்கவும் கப்பலில் இருந்து ஆட்கள் இறங்கவும் சரியாக இருந்தது .

இதனை பயன்படுத்திக் கொண்டு இருவரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து அவன் கண்ணில் இருந்து தப்பித்திருந்தனர்.
சில நொடிகள் முன்பு வரை கண்ணெதிரே இருந்தவளை காணாது திகைத்தவன் முடிந்த மட்டும் கூட்டத்தினுள் செல்ல முயல அவனால் முடியவில்லை.

அவளின் கண்ணில் இருந்து மறைந்தவர்கள் அதிக கூட்டமாக இருந்த அந்த வரிசை கடைகளில் புகுந்திருந்தனர்.

அங்கிருந்த எல்லா கடைகளின் மேல் பக்கமும் மற்ற இரு புறமும் தார்ப்பாய் கொண்டு கட்டியிருந்தனர்.
அதில் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு இடையே உள்ள இடைவெளியில் இருந்த தார்ப்பாயில் தங்களை மறைத்துக் கொண்டு இவனை தேடினர்.

கூட்டத்தின் உள்ளே நுழைய முடியாமல் தவித்தவன் அவர்கள் கடைகள் இருந்த இடத்திற்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவன் கூட்டம் கலைந்தது அவர்களைத் தேடி அவ்விடத்திற்குச் சென்றான்.


pls frds story pudichu iruthuchuna like pannunga, kela ulla link la unga comments share pannunga ungoloda comments than enaku energy boast.
(n)(n)(n)(n)(n)(n)(n)



 
Last edited:

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் அன்பர்களே,

இதோ அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன் படித்துவிட்டு உங்களது கருத்தினை தெரிவியுங்கள்.:):)
போன எபிக்கு லைக்ஸ் & கமென்ட்ஸ் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல..........,


பேரின்பம் 2

ஆத்தி இவன் நம்மள விட மாட்டான் போலயே எல்லாம் உன்னால வந்தது அவன் உன்னத்தான் தேடி வரான்....,

சௌமியின் குற்றச்சாட்டில் வெகுண்டவள், "இத்தன நாள் எட்ட நின்னு சைட் அடிச்சவன் இப்படி தேடி வருவான்னு நான் மட்டும் என்ன கனவா கண்டேன்" ராட்டினத்தில் ஏற முடியாத கடுப்பில் கத்தினாள் வேதா.

போச்சு போச்சு இது மட்டும் அத்தைக்கு தெரிஞ்சுச்சு ரெண்டு பேர் தோலையும் உரிச்சு எடுத்துடுவாங்க,

இதுக்குதான் பெரியவங்க துணை இல்லாம வர வேண்டாம்னு சொன்னேன் என் பேச்ச கொஞ்சமாச்சும் காது கொடுத்து கேட்டியா இப்ப பாரு இப்படி சிக்கிக்கிட்டு அவஸ்தைப்படுறோம்.


அவளின் அத்தை என்ற விழிப்பில் வேதாவிற்கு அவளின் அம்மா சோலையம்மாள், கையில் துடைப்பக்கட்டையுடன் நிற்கும் காட்சி கண்முன் தோன்ற மிரண்டு விட்டாள்.

பின் இவ்விஷயம் மட்டும் அவரின் காதிற்கு எட்டினால் வயது பெண் என்றும் பாராமல் துடைப்பக்கட்டை அக்கு அக்காக பிரியும் வரை அடி வெளுத்துவிடுவார்.

இன்றையோடு திருவிழா முடிவதால் நாளை அவள் குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பிவிடுவர் இனி அடுத்த வருடம் தான் இதனை எல்லாம் அனுபவிக்க முடியும் என்பதால்,

இன்று இங்கு வர அப்பா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, என அனைவரையும் அவள் அம்மாவிடம் வரிசையாக தூதுவிட்டு போராடி அனுமதி பெற்றிருந்தாள்.

அதுவும் சோலையம்மாள், 'இங்க போகக் கூடாது, ஆம்பள பசங்க ஜாஸ்தி இருக்கற எடத்துல இருக்க கூடாது, தெரியாதவங்க கிட்ட பேச கூடாது, போனமா வந்தமான்னு பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா யாரோடும் வம்பு இழுக்காம வரணும் எதையாவது இழுத்துகிட்டு வந்தீங்க...., தொடப்பக்கட்ட பிச்சிரும்.

இரண்டு மணி நேரம் தான், கண்டதையும் வாங்கி திங்காம ஒழுங்கா வீடு வந்து சேரணும்', என ஆயிரத்தெட்டு அறிவுரைகள் கூறி துணைக்கு சௌமியின் தம்பியையும் அனுப்பித்தான் அனுமதி கொடுத்திருந்தார்.

சரவணன் இவர்களை இறக்கி விட்டு இரண்டு மணி நேரம் முடிந்ததும் போன் பண்ண சொல்லிவிட்டு அவன் நண்பர்களுடன் சென்று விட்டான்.


இருவரும் நன்றாக ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு கடைசியாக கப்பலில் ஏற நின்று இருந்த போதுதான் அவன் இவர்களை கண்டது.

வேதா ........,
அடியே ........,
என யோசனையில் மூழ்கி இருந்தவளை முதுகில் அடி கொடுத்து நினைவுகளை நினைவுலகிற்கு திருப்பி இருந்தால் செளமியா.

ம்ப்ச் என்ன டி....?


என்ன .., என்ன டி ??? இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு அத்தை குடுத்த டைம் முடிய போகுது....,

வீட்டுக்கு போற ஐடியா இருக்கா இல்லையா டைமுக்கு வீட்டுக்கு போகலைன்னா என்ன ஆகும்னு தெரியும் இல்ல, உன்னோட சேர்ந்து என்னையும் அடி வாங்க வைக்க பிளான் பண்றியா..., நீ ??! ஒழுங்கா இங்கேயிருந்து போக ஏதாவது பண்ணு......,


இருடி நானும் அதை தான் யோசிக்கிறேன் நீ சரவணனுக்கு போன் பண்ணி கோயிலுக்கு வெளியே நிக்க சொல்லு ஒரு அரை மணி நேரத்தில் வந்திருவோம்னு சொல்லு,
என இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அவன் இவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கி இருந்தான்.

அவனை கண்டவர்கள் தங்களை நன்றாக தார்ப்பாய் பின் மறைத்துக் கொண்டவர்கள் அவன் அவர்களை தாண்டி செல்லும் வரையிலும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அவன் இவர்களை கடந்து சற்று தூரம் சென்ற நொடி மூச்சை விட்டவர்கள் வேகமாக வெளிவந்தனர்.

அவன் இடப்புறம் செல்ல இவர்கள் வலப்புறம் கோவிலுக்கு வெளியே செல்லும் வழியில் வேகமாக நடந்தனர்.

இவர்களைத் தேடிக் கொண்டு சென்றவனுக்கு அவர்கள் கண்ணில் படாது போக எதேச்சையாக பின்புறம் திரும்பியவன் இருவரையும் கண்டு விட,

மகிழ்ச்சியில் வேகமாக அவர்களின் பின்னே வேக நடையுடன் பின்தொடர்ந்தான்.

ஏதோ உள்ளுணர்வு உந்த திரும்பி பார்த்த வேதஸ்ரி கண்களில் அவன் தங்களை பின்தொடர்வது விழ மிரண்டவள் சௌமியின் கையை பற்றி இழுத்து கொண்டு கிட்டத்தட்ட ஓடினாள்.

ஏன் இப்படி இழுக்கிற வேதா....,

செளமி பின்னாடி திரும்பி பார்க்காத அவன் நம்மள பாத்துட்டு பின்னாடி வராண் டி...,

ஏதே...!!!!!!! என அதிர்ந்த சௌமியா முன்னைவிட வேகமாக வேதாவுடன் நடை போட்டாள்.

அவர்களின் வேகத்தைக் கண்டு ஒரு நொடி திகைத்தவன் பின் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இனி இதுபோல் அமையாது என எண்ணியவன் மின்னல் வேகத்தில் ஓடி சென்று கோவிலை விட்டு வெளியேறுமுன் அவர்களை வழிமறித்து இருந்தான்.



:) Read and share ur valuble comments below the link..., thanks in advance.........,


 

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் அன்பர்களே,

இதோ அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்தினை தெரிவியுங்கள் பிரண்ட்ஸ். பீளீஸ் லைக் போடுறவங்க அப்புடியே ஒரு கமென்ட் பண்ணி என் நெஞ்சில பால வார்த்துங்க தெய்வங்களா......,:):)

போன எபிக்கு லைக்ஸ் கமென்ட் சொன்னவங்களுக்கு நன்றிகள் பல,சைலண்ட் ரீடர்ஸ்க்கும் நன்றிகள் பல சொல்ல விரும்புகிறேன்.:):)

பாய் டாட்டா......,



பேரின்பம் 3

தங்கள் முன் நின்றவனை கண்ட வேதாவின் முகம் அப்பட்டமாய் அதிர்ச்சியை காட்டியது.

சில நிமிடங்களில் தன்னை சமன் செய்தவள் அவனை முறைத்துவிட்டு அவனை சுற்றி நடக்க,
' ஏங்க...... ஏங்க......... நில்லுங்க '...
என மீண்டும் வழிமறித்தான் அவன்.

அவனின் செயலில் பயந்தவள்,
"ஹலோ வழி விடுங்க சார்.....,"என

'உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்' என்றான்.

யா........, யார்கிட்ட......, பயத்தில் வார்த்தைகள் திக்கி திணறின வேதாவிற்கு.

"உங்ககிட்ட தான்...." பளிச்சென பதில் வந்தது அவனிடமிருந்து.

தான் பிடித்திருந்த செளமியின் கைகள் வயதில் நடுங்குவதை உணர்ந்தவள், கண்களால் அவளை அமைதிபடுத்தி விட்டு அவனை நிமிர்ந்து பாராது.....,

' உங்ககிட்ட பேச ஏதும் இல்ல' வழிய விடுங்க.....,
என்றவள் அவள் நகராது நிற்பதைக் கண்டு எரிச்சலடைந்தவள்,

அவனை தாண்டிச் செல்ல... தன் முகம் பார்க்காத பேசியவளை கண்டு புன்னகை புரிந்தவன் அவள் தாண்டி செல்லவும் மீண்டும் வழிமறித்தான்.

இம்முறை எரிச்சலை முகத்தில் மறைக்காத காட்டியவள்,
' ஹலோ யார் நீங்க என்ன வேணும் உங்களுக்கு...'

நீங்கதான்.......,

என்ன....?????

ஐ மீன் உங்க நேம் வேணும்...,

தெரியாதவங்க கிட்ட எல்லாம் நான் பேசுறது இல்ல...

" அப்போ என்ன உங்களுக்கு தெரியாதா?? என்றவனின் குரலில் கேலி நிரம்பி வழிந்தது.

அவன் இத்தனை நாள் அவளை பார்ப்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அவன் பார்க்காத பொழுது அவனை பார்த்து விட்டு இப்பொழுது தெரியாது என்கிறாளே.

அவனின் கேலியை உணர்ந்தவளின் முகம் விழுந்துவிட்டது.

அவனை நிமிர்ந்து நேராக சந்தித்தவள்,
" ஆமாம் உங்கள் எனக்கு தெரியாது போதுமா..."என்க

அப்ப தெரியலனா என்ன இப்ப தெரிஞ்சுக்கோங்க,

நான் வினோத் ஆர்கிடெக்ட் இன்ஜினியரிங்,
இங்கே எங்களுக்கு சொந்தமா ஒரு பட்டறை (கதவு கட்டில் மற்றும் இதர பொருட்கள் டிசைன் செய்யுமிடம் இவர்கள் டிசைன் செய்து மரக்கட்டில் மரகதவு போன்றவை பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது மற்றும் இவர்கள் கடைகளிலும் நேரடியாக பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யும் இடம்)
இருக்கு.

எனக்கு ஒரு அக்கா இருக்காங்க, என அவன் சுய விளம்பரம் செய்ய செய்ய பதில் பேசாது அமைதியாக நின்றாள் வேதஸ்ரி.

அவளின் அமைதியை கண்டவன், 'என்னங்க நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன்... நீங்க ஏதும் பேசாம இருக்கிங்க...????

என்ன பேசணும்...!!!

ஏன்? இதை எல்லாம் என்கிட்ட சொல்றீங்கன்னு கேட்க மாட்டீங்களா ??

ஏன் கேட்கணும்...., ஏன்னு கேட்டா..... நான் உங்கள லவ் பண்றேன்னு சொல்வீங்க!!!! அப்படித்தானே......,தற்பொழுது கேலி ந நிரம்பி வழிவது இவள் முறை ஆயிற்று.

அதனை உணர்ந்தவன்,
"நிறைய படம் டிவி சீரியல் பாப்பிங்க போல உங்களுக்கு ஏதாவது பர்னிச்சர் ஐட்டம் தேவைன்னா..!! எங்க கடைய கான்ட்டாக்ட் பண்ணுங்கண்ணு சொல்ல வந்தேன்,

ஆனால் உங்களுக்கு வேற மாதிரி விருப்பம் இருக்கும் போலயே அப்படி இருந்தா எனக்கு 'நோ அப்ஜக்ஷன்' என அவனின் பதிலில் அவள் முகம் சுருங்கி விட.....,

"எங்களுக்கு எந்த பர்னிச்சர் ஐட்டம் தேவை இல்லை"
நீங்க சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க தானே நகருங்க....,

"""நீங்க இன்னும் உங்க பேரை சொல்லவே இல்லையே???"""

மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றவனை கண்டவர்களுக்கு ஆயாசமாக இருந்தது.

இந்த கலவரத்தில் செளமி தன் தம்பிக்கு தகவல் சொல்ல மறந்து இருந்தாள்.

சிறுது நேரத்தில் அவனே, அழைத்துவிட்டான்.
' எங்க இருக்கீங்க ரெண்டு பேரும் இன்னும் வெளியே வராம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நேரமாச்சு கோயிலுக்கு வெளியே வாங்க ஏற்கனவே அத்தை கிளம்பிட்டீங்களான்னு போன் பண்ணிட்டாங்க என்றவனின் குரலில் சௌமியாவிற்கு இன்னும் வியர்த்துக் கொட்ட தொடங்கியது.:)

வேதாவின் கைகளை அழுந்தப் பற்றியவள்,
"வேதா... வா போகலாம்" டைம் ஆயிடுச்சு சரவணா கால் பண்ணிட்டான். வெளிய வெயிட் பண்றானா......., அப்பொழுது தான் வேதாவும் கவனித்தால் நேரம் ஆகிருந்ததை.

இனியும் தாமதித்தால் தங்களுக்கு நல்லது இல்லை என உணர்ந்தவள் இப் பிரச்சினையை முடிக்க எண்ணி,

இங்கே பாருங்க உங்க பார்த்தாலும் அவ்வளவு இன்டீசன்ட்டா தெரியல என் பெயரை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க,

ஷோ யாராச்சும் பார்த்து பிரச்சினை ஆகுறதுக்குள்ள வழியை விடுங்க எங்களுக்கு டயம் ஆச்சு என்றாள்.

அவளின் பயத்தை உணர்ந்து தனது விளையாட்டுத் தனத்தை கைவிட்டவன்,

"இங்க பாருங்க எனக்கும் உங்க பேரு கூட தெரியாது. இப்புடி இங்க உங்கள தனியா நிக்க வச்சு பேசுறதுல எனக்கு விருப்பமில்லைங்க..." ஆனாலும்....... நான்...... எப்படி.........." என அவன் தடுமாற ஆரம்பித்தான்.

ஏனோ!! அவனின் கண்ணியமான தோற்றத்தினால் அவனை தவறாக நினைக்க தோன்றவில்லை வேதாவிற்கு,
இருந்தாலும் இவன் தாமதிக்கும் நேரம் தங்களுக்கு உகந்ததல்லவே....,

இந்திலையில் சரவணன் தங்களை காணவில்லை என தேடி வந்து விட்டால் என்ன செய்வது என பதட்டமடைந்தவள் அவனிடம் கோபத்தை கொட்டினால்.....,

'என்ன தான் பிரச்சனை உங்களுக்கு எங்க நிலைமை தெரியாம எங்களை போகும் விடாம இப்படி தொல்லை பண்றீங்க' என்றவளின் குரல் சூடாக வெளிவந்தன.

"தொல்லை" என்ற வார்த்தையில் அவன் முகம் விழுந்துவிட்டது. சடுதியில் அவளின் நிலைமையை யோசித்தவன் கண்களை இறுக்க மூடி திறந்தவன்,

"எனக்கு உன்ன பிடிச்சிருக்கு முறைப்படி உன்ன பொண்ணு கேட்டு வந்து கல்யாணம் செய்ய விரும்புறேன்". சொல்லிவிட்டான் ஆனால் எதிரில் இருப்பவளின் நிலை.....!!!!!!!!!

வினோத்தின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தில் ஈயாடவில்லை இருவருக்கும்.


ungal ponnana comments sa inga ulla link la sollitu ponga friends,;););););)


:):):):):)
 
Last edited:

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Makkale,

mannichuu..., final year nala suddenna project sumbit panna sollitangayya :(:( ithana nala project kuda marradichu nethu thanyya mudichu oru valli sign vangi sumbit panniyachu ;);) so ini than epi elutha poren eluthitu post pannituren.:giggle::giggle: wait karo makkale plz.........,;);)
 

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். இனி தாமதமாகாது எபி வருவதில். Read and share ur comments

அத்தியாயம் 4

தான் கேட்டது சரிதானா இல்லை தவறாக ஏதும் கேட்டு விட்டோமோ என சந்தேகித்த வேதா, " என்ன சொன்னிங்க புரியல" எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து விட்டவன், தன்னுள் எழும் படபடப்பை முடியை அழுந்த கோதி அடக்கியவன், அவளிடம் திரும்பி,

புடிச்சிருக்கு......, ஆமா புடிச்சி தான் இருக்கு அதுவும் உன்ன ரொம்பவே புடிச்சிருக்கு, கண்டவுடனே காதலான்னு கேட்டா, என்கிட்ட பதில் இல்ல, அப்ப இது காதல் இல்லையான்னு கேட்ட அதுக்கும் என்கிட்ட பதில் இல்ல,

“என்கூடவே காலம் முழுக்க நீ இருக்கனும்ன்ற அளவுக்கு புடிச்சிருக்கு.., நீ என்கூடவே இருக்கணும்னா என்னோட மனைவியான மட்டுமே அது சாத்தியம் அதனால உன்ன கல்யாணம் பண்ற அளவுக்கு புடிச்சிருக்கு, உன்ன நான் பாத்து மூணு நாள் தான் இருக்கும் அதுக்குள்ள எப்புடி இப்புடி ஒரு உணர்வு எனக்குள்ள வந்துச்சுன்னு சத்தியமா தெரியல”,

“எனக்குள்ளயே இதுக்கான பதில தேடிக்கிட்டு தான் இருக்கேன் ஆனா இன்னும் பதில் கிடச்சாப் பாடில்லை” என்றவன் நிறுத்தி அவளை ஒரு பார்வை பார்ந்தவன் ஆழ்ந்த குரலில் அவளின் மனதில் தனது வார்த்தைகள் நுழையும் பொருட்டு, "ஒரு வேள நீ என் வாழ்க்கைகுள்ள................... இல்ல எனக்குள்ள வந்தன்னா அதுக்கு பதில் கிடைக்குமோ என்னவோ" என்றவன் தொடர்ந்து இதோ இப்பக் கூட நா பேச பேச "பே" னு என்னவே பாத்துட்டு இருக்கியே இப்பக் கூட உன்ன அள்ளி எடுத்து எனக்குள்ள அடக்கிக்கனும்ன்ற அளவுக்கு புடிச்சிருக்கு, என்றவன் அருகில் செளமி இருப்பதன் பொருட்டு சிறு பெண்ணின் முன் இதற்கு மேல் வார்த்தைகளை விடாது தனது பேச்சினை நிறுத்திக் கொண்டான்.

அவனின் வார்த்தைகள் என்ற அம்புகளில் சிக்கித் தவித்தவளின் இதயம் அவளின் அனுமதியின்றி " அதுக்கு நா என்ன பண்ணணும்? என்ற வார்த்தைகளை உதடுகளின் மூலம் வெளிகொணர்ந்திருந்தது.

அவளின் நிலையை எண்ணி புன்னகை பூத்தவன் "வேற பெருசா ஒண்ணுமில்ல உன் பேரும் வீட்டு அட்ரஸ் மட்டும் சொன்ன போதும்" என,

அவனின் வீடு என்ற வார்த்தைகளில் அதுவரை செயல்பாடதிருந்த மூளை அதிவேகமாக செயல்பட்டு சோலையம்மாவின் உருவத்தை மனக் கண் முன் நிறுத்த, அதில் அரண்டு சுயம் பெற்றவள்,

அதுவரை அவளை சுற்றியிருந்த மாயக் கயிறு அறுபட, "என்ன உளர்றீங்க" எனக் கூறி முகத்தை சுழிக்க,

அவளின் சுழித்த முகத்தை கண்டவனின் முகம் கோபத்தை தத்தெடுத்தது, சடுதியில் கோபம் என்னும் விஷம் அவன் உடல் முழுவதும் பரவியதில் வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழுந்தன.

"என்ன.....!! என்ன உளர்றாங்க??????? நா பேசுனதுல என்ன உளர்றல கண்டுபுடிச்ச நீ!!!????

“புடிச்சிருக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறேன்னு தான கேட்டேன், வேற ஏதாச்சம் அசிங்கமா பேசினேனா…..??? எதுக்கு முகத்த சுழிச்ச நீ?? என்ன பாத்து எதுக்கு நீ அப்புடி ஏதோ அருவெருப்பானத கேட்ட மாதிரி முகத்த சுழிச்ச.....,??? சொல்லு ...... ??? நா பேசுனதுல என்ன உளறல இல்ல அருவெருப்ப கண்டுபுடிச்ச நீ......??? எனக்கு பதில் சொல்லு.......,????? என்னப் பார்த்து எதுக்காக முகத்த சுழிச்ச நீ அதுக்கு பதில் சொல்லு....., ???
என்றவனிற்கு அவன் விரும்பும் பெண்ணவளின் அதுவும் அவனின் விருப்பத்தை சொல்லும் பொழுது அமைதியாக இருந்தவள் அதன் பிறகு முகத்யை சுழித்ததை அவனால் தாங்க இயலவில்லை, அப்படி என்ன தவறாக பேசிவிட்டேன் இல்ல, என்னை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறதா???எதற்காக முகத்தை சுழிக்க வேண்டும்??...என்ற கேள்வி அவனின் மனதை குடைய ஆரம்பிக்க அதன் தாக்கம் தாளது அவளிடம் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.

அவனின் தீடிர் கோபத்தில் அரண்டவர்கள், சுற்றிலும் ஒன்றிரண்டுப் பேர் இவனின் சத்தத்தில் தங்களை கவனிப்பதை உணர்ந்த வேதா பதிலுக்கு தானும் பேசினால் தேவையில்லாத பிரச்சனை உருவாகும் என்பதை உணர்ந்தவள், ஏதும் பேசாது அமைதியானாள்.

அவளின் அமைதியை உணர்ந்து தன் நிலை அடைந்தவனுக்கு சுற்றுப்புறம் உரைக்க உதடுகளை அழுந்த மூடி அவளைப் பார்க்காது வேறு புறம் திரும்பிக் கொண்டான்.

வேதாவிற்கு அங்கே இருப்பது முள்ளில் மேல் நிற்பது போன்று இருந்தது. அவனின் கோபத்திற்கு பதிலடி கொடுக்க இயலாது, அவனை கடந்து சென்றால் எங்கே பின் தொடர்ந்து வந்து விடுவானோ?? என்ற பயமும்......, அவ்வப்போது சுற்றி இருப்பவர்களின் சந்தேகப் பார்வையினால் ஏற்பட்ட நடுக்கமும் அவளின் சிந்தினை திறனை செயலிழக்க செய்ய செய்வதறியாது தடுமாறி நின்றாள்.

இந்த களோபரத்தில் இருவரும் நேரம் தாண்டியதையோ..., சரவணன் இவர்களுக்காக கோயிலின் வெளியே காத்திருந்து விட்டு இவர்களை தேடி கோயிலின் உள் நுழைந்ததையோ?? யாரும் கவனிக்கவில்லை.

சுற்றும் முற்றும் இருந்த கூட்டத்தில் இவர்களை தேட இயலாது செளமியின் மொபைலுக்கு அழைப்பு விடுத்தான் சரவணன்.

அதுரையிலும் பயத்தில் வேதாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த செளமியா தனது போன் வைப்ரஃட் ஆவதை உணர்ந்து திரையை பார்க்க சரவணணின் எண்ணை கண்டதும் தான் அவனை வெளியே நிற்க சொன்னதும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் தாண்டியதையும் உணர்ந்தவள் அவசரமாக அழைப்பை ஏற்றாள்.

இவள் பேசும் முன்," எங்க இருக்கீங்க ரெண்டு பேரும் என்ன வெயிட் பண்ண சொல்லி பதினச்சு நிமிஷத்துக்கு மேல ஆச்சு உங்கள தேடி கோயில்குள்ள வந்துட்டேன் எங்கன இருக்கீங்க கூட்டத்துல உங்கள தேட முடியல சீக்கிரம் வாங்க இல்ல எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நா வரேன்” என அவன் முடிக்க.....,

அவன் கோயிலின் உள்ளே வந்துவிட்டதை கூறும் பொழுதே பதட்டமடைந்த செளமி சுற்றும் முற்றும் பார்க்க கூட்டத்தின் நடுவே அவன் இருந்ததை கண்டுக் கொண்டவளுக்கு, அவன் தங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என கூறியதும் பயத்தில் மேலும் வியர்த்துக் கொட்டியது. சரவணன் வந்து தங்களை இவனோடு சேர்ந்து பார்த்து விட்டாள் நிச்சயம் விபரீதமாகிவிடும் என எண்ணியவள் அவசரமாக அவனிடம், " இல்ல இல்ல..., நான் உன்ன பாத்துட்டே நீ அங்கயே இரு பத்து நிமிஷத்துல வந்திடுறோம்" என கூறி அழைப்பை துண்டித்தவள் வேதாவை பார்க்க........,

அவள் பேச ஆரம்பித்ததில் இருந்து அவளையே தான் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவளின் பேச்சில் இருந்தே விஷயத்தை ஓரளவு ஊகித்து வைத்திருந்த வேதா அவள் தன்னை பார்த்ததும்," சரவணன் உள்ள வந்துட்டானா என தனது ஊகத்தை கேட்க",

" ஆமா" வேதா வந்துட்டான் நா அவன பாத்துட்டேன், நம்மளுக்கு டைம் இல்ல சீக்கிரம் போகணும் இல்ல அவன் இங்க வந்திடுவான்" வா போகலாம் என்ற செளமியின் பேச்சை ஆமோதித்தவள் அவ்விடத்தை விட்டு அவசரமாக நகர...,

அதுவரையிலும் அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தவன், அவர்கள் கிளம்பவும் மீண்டும் அவர்களை வழிமிறிந்தவன், " நீ இன்னும் நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல" என அவர்களை தடுத்து நிறுத்தியிருந்தான்.

ஏற்கனவே, சரவணின் வரவை அறிந்ததில் இருந்து பயத்தில் இருந்தவளுக்கு இவனின் செய்கை கோபத்தை கிளற, மற்றும் சுற்றி இருப்பவரகளின் பார்வையும் சேர்ந்து வேதாவிற்கு இன்னும் ஆத்திரத்தை கிளப்ப, " நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்ன்ற எந்த கட்டாயமும் எனக்கில்ல, நீங்க எங்க கிட்ட வம்பு பண்ணுறீங்கன்னு சொல்லி கூட்டத்த கூட்ட எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனா அதால பாதிக்கபடுறது நீங்க மட்டுமில்ல நாங்களும்தான்ற ஒரு காரணத்துக்காக உங்க கிட்ட இவ்ளோ நேரம் பொறுமையா பேசிட்டு இருக்கேன்,

இதுக்கப்பறமும் நீங்க இப்புடி அனவாசியமா கேள்வி கேட்டாலோ இல்ல வழிய மறிச்சு போக விடாமா தடுத்தாலோ, நா சொன்னத செய்ய வேண்டி வரும் நீங்க தான் அவமானப்பட்டு போவீங்க", பொறுக்கி மாதிரி நடந்துக்காம ஒழுங்கு மரியாதையா வழிய விடுங்க என்றவள் அவனை தாண்டி செல்ல...,

மீண்டும் மீண்டும் அவளின் வார்த்தைகள் தன்னை ஒரு பொறுக்கியாக சித்திரப்பதை உணர்ந்தவனுக்கு இன்னும் கோபம் ஏற, கோபத்தில் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் தன்னை தாண்டி செல்ல இருப்பவளை தடுத்து நிறுந்தும் பொருட்டு," இப்ப நீ பதில் சொல்லாமா போனா உன்ன பாஃலோப் பண்ணி உன் வீட்டு அட்ரஸ கண்டுபுடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது இல்லன்னா உன்ன கூப்புட வந்தவன்கிட்டயே எல்லாத்தையும் சொல்லி அட்ரஸ் கேட்டுக்கிறேன் எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல வாங்க போகலாம் என்றவன் அவர்களை தாண்டி செல்ல,

அவனின் வார்த்தைகளில் கால்கள் நகர மறுக்க, முன்னால் சென்றவன் இவர்கள் வராததை உணர்ந்து, திரும்பி "என்ன ரெண்டுப் பேரும் அப்டியே நிக்கிறீங்க சீக்கிரம் வாங்க......, எனக்கு டைம் இல்ல, உன் கிட்ட பதில எதிர்பார்க்கிறது வேஸ்ட்டு என வேதாவிடம் கூறியவன், பெட்டர் நானே உங்க வீட்டுக்கு இப்ப உங்க கூடவே வந்து உன் வீடு ஆளுங்க கிட்ட என் விருப்பத்த சொல்லிக்கிறேன்"...., நிறைய வேல இருக்கு வாங்க முதல்ல உங்க வீட்டுக்கு போவோம் என அலட்டிக் கொள்ளாமல் கூறியவனை கண்டு செளமியாவிற்கு அழுகை வரும் போல் இருந்தது.

இவன் சொன்னது போல் வீட்டிற்கு வந்தால் பின் தங்களின் நிலைமை அதிலும் வேதாவின் நிலைமை இன்னும் மோசமாகும்..., சோலையம்மாளின் காதிற்கு இப்படிபட்ட விஷயங்கள் போனால் இனி ஜென்மத்திற்கும் வேதாவை இங்கு அனுப்ப மாட்டர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை, அவருக்கு பெண் பிள்ளைகள் வீணாண சொல் பேச்சிற்கு ஆளாகுவது சுத்தமாக பிடிக்காது அதிலும் வேதாவை கண்டிப்புடனே வளர்ந்திருந்தார். அப்படி இருக்கையில் இவன் வீட்டிற்கு வந்தாலோ இல்லை சரவணணிடம் பேசினாலே பாதிப்பு வேதாவிற்கு தான்.

தங்களுன் நிலைமை அறியாமல் இப்படி பேசுபவனின் மோல் செளமிக்கு கோபம் வந்தாலும் அதே சமயம் அழுகையும் கூடியது.

அவனின் பேச்சில் முதலில் மிரண்ட வேதா, பின் தன்னை சமாளித்துக் கொண்டு " என்ன மிரட்டுறீங்களா"என்க,

"அப்புடியும் வச்சிக்கோ" என அசல்ட்டாக தோளைக் குலுக்கியவனை கண்ட வேதா அடுத்து பேச வாய் திறப்பதற்குள், இடைப்புகுந்த செளமி,

" இப்ப உங்களுக்கு என்ன அட்ரஸ் தான வேணும் சொன்ன எங்கள போக விடுவீங்கள?? அப்றம் எங்க பின்னாடி பாஃலோ பண்ணி வர மாட்டிங்கள??எனக் கேட்க, அவளிடம் கோபத்தை காட்டாது வினோத் "ஆம்" என தலையாட்ட..., அதில் முகம் தெளிந்தவள் முகவரியை லேசான அழுகை குரலில் கூறியவள்", அவனின் பதிலை எதிர்பாரது...,

திகைத்த நின்ற வேதாவின் கரங்களை பற்றிக் கொண்டு விறுவிறு என்று அவனை தாண்டிச் சென்று சரவணனிடம் வந்தவர்கள் அவனையும் அழைந்துக் கொண்டு கண நேரத்தில் கோயிலை விட்டு வெளியேறியிருந்தனர்.

அவர்கள் கோயிலை விட்டு செல்லும் வரை கோபத்துடன் அவர்களையே பார்ந்திருந்தவனுக்கு செளமியின் அழுகை முகம் கண் முன் தோன்ற, அடேய்...., வினோத் என்னடா பண்ணி வச்சிருக்க....? சின்ன பொண்ணு பயப்படுற அளவுக்கு இப்புடியாடா நடந்துக்குவ இடியட்.......,

சிறு பெண் பயப்படும் வகையில் நடந்துக் கொண்டதை எண்ணி அவன் மீதே அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. இதே இது முகவரியை வேதா சொல்லி இருந்தாள் கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டான் இத்தனை பிரச்சனைகள் நடந்த பின்னும் அவளிடம் முகவரியை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

செளமியின் அழுகை குரல் அவனை சந்தேகப்பட விடவில்லை. எனவே, அவள் கேட்டப் பொழுது ஆம் எனக் கூறி விட்டான். எவ்வளவு அழகாக முடிந்திருக்க வேண்டிய முதலே சந்திப்பு வேதாவின் வார்த்தைகளும் அதற்கு பிரதிபலனான தனது கோபமும் முதல் சந்திப்பையே இப்படி பிரச்சனைகளோடு முடித்தி வைத்ததை எண்ணி மனம் குமைந்தான்.

இருப்பினும் வேதாவின் வார்த்தைகளால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் அவனை விட்டு நீங்கவில்லை...., " போடி... ஜிலேபி எல்லாம் உன்னால தான் எப்புடி பேசுற நாக்குல விஷத்த தடவி பேசுவாப் போல...., ச்சை நீயாச்சு கொஞ்சம் பொறுமையா இருந்துருக்க கூடாதாடா வினோத் அவ பேசுறானு பதிலுக்கு நீயும் இப்புடி தான் நடந்துக்குவியா....., என தன்னை தானே திட்டியவன்.."

“பேச்சுக்கு பொறுக்கி மாரி நடந்துக்காதீங்கன்னு சொன்ன இப்ப நான் பண்ண அலப்பரையில பொறுக்கின்னோ கன்பாஃர்ம் பண்ணிருப்பா…” எல்லாம் நேரம்டா வினோத் சரி சமாளிப்போம் என தனக்குதானே சொல்லிக் கொண்டவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

தேடல் தொடரும்........,
share ur comments below the link(n)(n)(n)(n):):):):):)




 
Top