All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி கிருஷ்ணாவின் ‘ உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!’ - கருத்துத் திரி

பெண்ணவளை காத்திட ஆணவனின் அதிரடி ஆரம்பம் ஆகியது.சூழ்நிலை எவ்வளவு வலியை தந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தன்னவளை காக்க சமயோசிதமாக செயல்பட்டதோடு தன்னவளை மீட்டுவிட்டான் ஆடவன்.தன் மிதுமாவை பாத்த சந்தோஷம் ருத்ரனுக்கு.ஆதிகேசவனின் நிலை இனி சொல்ல தேவையில்லை.அப்பப்பா எத்துணை சோதனைகள் இந்த விஷ்ணு குடும்பத்திற்கு.காக்கும் கடவுளின் நாமத்தை கொண்டதால் அழிக்கும் கடவுளின் நாமத்தை கொண்டவனின் தமையன் கையால் காக்கபட்டுள்ளனர்.துளசி பவித்ரமான பெயர்.அவரும் எத்தனையோ கடவுள்களை கும்பிட்டிருப்பார்.தன்னவன் தன் மனதில் காதலியாக நினைத்தவளை தன் கண் முன்னே அவளின் நிலையை கண்டு கதறும்போதும் சரி அவளை கையில் ஏந்தூ காக்க போராடும்போதும் சரி இப்போதுவரை அவனது மனநிலையை துல்லியமாக அறிந்து அவனுக்கு பக்கபலமாக இருப்பது அருமை.நாம் ஒருவருக்கு செய்யும் தன்னமில்லாத உதவி நமக்கு தக்க சமயத்தில் திரும்ப கிடைக்கும் என்பதற்கு விஷ்ணு குடும்பமே உதாரணம்.தன் குடும்பத்தின் நிலை அறிந்த மிது அவர்களிடம் பேச துடித்தாலும் அங்கே வார்த்தைகள் வரவில்லை.தன் மகவு உயிருடன் உள்ளது என்று அறிந்த போது மித்ராவின் மனநிலையை வார்த்தைகளால் வடித்திட இயலாது.சொல்லொன்னா சந்தோஷம் அவளுக்கு.தன் கணவணின் நிலைதான்அவளுக்கு கொஞ்சம் வருத்தம்.ருத்ரன் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தன்னால்தான் இந்த நிலை இவர்களுக்கு என எண்ணி இன்னமும் மருகிகொண்டிருக்கின்றான்.தற்போது அவனது குற்ற உணர்ச்சூ ஓரளவு சரி ஆகிவிடும்.தன்னவன் வந்து தன்னை காப்பான் என பெண்ணவள் நம்பியது வீண் போகவில்லை.👏👏🤝👍🏻👍🏻👌👌🏼💖💜👏🤝🤝👍🏻👍🏻👌💖👌🏼💖💜💖👌🏼👌👍🏻🤝💜👏👏👌🏼💖👌🏼👌👌🤝👏💜
 
Top