swathikrishna
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஆடவனின் நேசம் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.குழந்தை உள்ளம் கொண்ட குமரியவளை குமரியாக உணரசெய்தது ஆடவனின் நேசம்.பெண்மையை மதித்து அவளை கையாண்ட விதம் அருமை.தன்னவளின் குழந்தை தனத்தில் கவரப்பட்ட ஆடவன் உணர்ச்சியின் பிடியில் சிக்கி இருந்தாலும் அவளின் உணர்வை மதித்து நடந்து கொண்டது ஞிறப்பு.பெண்மையை அவளையே உணர செய்த ஆடவன் அவளின் தாயுமானவானகா இனி மாறப்போகின்றான்.தன்னவள் இழந்ததை அவனால் திருப்பி கொடுக்க இயலாது.ஆனால் அவளின் சந்தோஷத்தை மீட்டுதர முடியும்.ஆதிகேசவனின் நிலையை அறிந்திட்ட ஆடவன் அவனை எவ்வாறு தண்டிப்பான்.அந்த நரகாசுரனைவிட கொடிய அசுரன் இவன்.பெற்ற மகனின் வாழ்விலேயே சதி செய்த இத்தகைய கொடூரன் சாதாரணமாக தண்டிக்கபடக்கூடாது.ருத்ரனின் வருகை மிதுவின் வாழ்வில் புயல் வீச செய்யுமா இல்லை வசந்தத்தை வாரி வழங்குமா.உலகில் எத்துனையே மருத்துவமனைகள் எத்தனையோ மருத்துவர்கள் இருக்க விதியின் செயலா ருத்ரன் ஹரியை சந்திக்கப்போவது.தன் தந்தையின் இன்னும் பல பரிணாமங்களை அறியாத ருத்ரன் அவனின் முழு கொடூரங்களை அறியும்போது காலம் என்ன செய்ய காத்திருக்கின்றதோ.அப்பாவி பெண்களை இப்படி தவறாக பயன்படுத்தும் இவன் தண்டிக்கப்படுவது எப்போது.கன்னியரின் கடைக்கண் பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகு அப்படின்னு சொல்லுவாங்க.மிதுவோட வாழ்வில் நஞந்த கொடூரங்களை மற்றவரின் மூலம் அறிந்திட்ட போதே ஆடவனுக்கு இத்துணை கோபம் என்றால் தன்னவளின் வாய்மொழியாக கேட்டால் அவனின் கோபம் எப்படி இருக்கும்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப மருத்துவனின் இன்னொரு அவதாரத்தை காண நேரிடும்.
Thank you so much dear