Mohana govindaraj
Bronze Winner
So sad
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Sis romba kastama irunthuchu, eppo fb mudiumnu manasu parama iruku sis.....
ஆழமான அழுத்தமான பதிவு.நடந்த கொடூரங்கள் அனைத்தும் கண் முன்னே காட்சிகளாக வந்தன.டேய் ஆதி நீ எல்லாம் அரக்கன் வகையில கூட சேர்க்க முடியாத கொடும்பாவி.பெண்ணோட கண்ணீரை பார்த்தால் பேய் கூட இறங்கும்னு சொல்லுவாங்க.நீ அவளோட கதறலையும் பொருட்படுத்தல அவளோட வலியையும் கண்டுக்கலை.உன்னை பெற்றவளும் பெண்தானே.அவளின்.பிரசவ வேதனை உனக்கு அவ்வளு இளக்காரமாக போய்விட்டதா.காலம் தொட்டு அரக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கண்டிப்பாக உனக்கும் கிடைக்கும்.அப்போது நீ துடிப்பதை இவர்களின் ஆன்மா பார்த்து கொண்டிருக்கும்.அவர்கள் என்னடா பாவம் செய்தார்கள்.உன் கண்ணில் சிக்கியது மட்டுமே அவர்கள் செய்த பாவம்.பிரித்வி தனக்கு யாருமே இல்லை மருகி தவித்த ஆடவன் தன்னவளின் அன்பில் திளைத்து யாதுமாகிய அவளை இந்நிலையில் காணும்போது அவனின் வேதனை சொல்லில் அடங்காது.தன்னவளுக்காக தாயுமானவனாக மாறிய ஆடவன் தன்னவளை காக்க முடியா கையறு நிலையில்.துளசி குடும்பம் செயத நற்பயன் அவரின் மற்றொரு சிறு மகளை காக்க உதவியது.காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்பெரிது என்பதற்கேற்ப குமுதாவின் உதவி மிதிலா மகிழ் இருவரின் உயிர் காக்க உதவியது.தன்னவளின் தாய் பாசத்திற்காக அவளை அழைத்து வந்தது மட்டுமே பிரித்திவியின் குற்றமா இல்லை தன் மகளின் நல்வாழ்விற்காக நடந்த அத்தனை கொடூரங்களையும் அவர்களிடம் மறைத்த விஷ்ணு குடும்பத்தின் குற்றமா.இப்படி நடந்தது தெரிந்திருந்தால் இவர்கள் காக்க பட்டிருக்கலாம்.விதியை யாரால் வெல்ல முடியும்.காலத்தின் பிடியில் இவர்களின் கண்ணாமூச்சி ஆடாடம் நிறைவுக்கு வந்தது.என்னதான் ருத்ரன் தன் தந்தையை தண்டிக்க மறைமுகமாக செயல்பட்டாலும் அவரை வீழ்ததுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை ஆடவன் மறந்தது ஏனோ.தன்னுடைய வாழ்வை பகடையாக தந்தை ஆடிக்கொண்டிருக்கிறார் என அறியாதது இவனின் குற்றமா இல்லை சதியா.பெண்ணவளின் இத்தகைய துயரை விய்மொழியாக கேட்ட மருத்துவனுக்கே இத்தனை வேதனை என்றால் கண் முன்னே கண்ட அனைத்தும் பெண்ணவளை எந்தளவு நிலைகுலைய செய்திருக்கும்.வயதுக்கு மீறிய வலியினால் இவள் பட்ட துயரங்கள் காலத்தால் மறக்க வைக்க பட்டாலும் அவளின் வடு மறையுமா.மென்மையே உருவான மருத்துவனுக்கு இத்தனை கோபம் என்றால் மற்றவருக்கு.ஹரியின் கையால் ஆதி தண்டிக்கப்படுவானா இல்லை சதியை அறிந்து தான் பெற்ற மகனின் கையால் மடிவானா.இவனுக்கு நரகம் என்ற சொல்லை விட கொடிய தண்டனை கிடைக்க வேண்டும்..காலம் அனைத்தையும் மாற்றும் தன் நேசத்தினால் பெண்ணவளின் கடந்தாகல வடுவை மறைய செய்வான் மருத்துவன்.ருத்ரன் இங்கு வந்து தன்னுடைய மிதுவை சந்திப்பானா.அப்படி சந்தித்தால் மிது ருத்ரனின் நிலை என்ன.