All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாரலின் "அன்பே உ(எ)ன்னை உனக்காக" கதைத் திரி

Status
Not open for further replies.

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 7
இரட்டையர்கள் இருவரும் தாங்கள் அறிந்த செய்தியில் ஸ்தம்பித்து இருந்தனர் . நிஸ்வந்தால் அவன் அறிந்துகொண்ட செய்தியை ஜீரணிக்க இயலவில்லை . அந்த செய்தி அவனுக்கு அதிர்ச்சியும் கூட !! . அவளை தூரத்தில் பார்த்து அவள் உயிருடன் இருப்பதை கண்டு சந்தோஷிப்பதா ? இல்லை அவளின் தோற்றத்தை கண்டு வருத்தமுறுவதா ? என்ற குழப்பத்தில் இருந்தான் .

அந்த கண்களில் உயிர்ப்பு இல்லை . சிகப்பாக அதில் ப்ளஷ் போடாமலே ரோஜா நிறம் கொண்ட அழகிய இரண்டு குண்டு கன்னங்கள் இன்று எழும்போடு ஒற்றி போய் கண்களின் கீழ் கருவலயத்துடன் , அமுல் பேபி போன்ற உடல் வற்றி ஏதோ சப்பிட்டே பல நாள் ஆனதை போன்ற தோற்றத்துடன் நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை . அதில் அவளின் தோற்றத்தில் தெரிந்த முக்கிய மாற்றம் அவனை கண்கொண்டு பாக்க விடாமல் குத்தியது .

யஸ்வந்த் தனக்கு தேவையான செய்திகளை சேகரித்து வைத்துக் கொண்டான். இப்பொழுது அதை நிஸ்வந்திடம் கூற அவன் தயாராக இல்லை . நிஸ்வந்த் முதல் கட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வர சற்று கால அவகாசம் தேவை என்று எண்ணினான் யாஷ் .

...............................................................
அங்கு ஜெயதி தனது வீட்டில் தாயுடனும் தங்கையுடம் தனது நேரத்தை செலவிட்டாள் . ரக்ஷிதாவிடம் இப்பொழுது எல்லாம் தெரிந்த மாற்றம் ஜெயதியை நிம்மதியுறச்செய்தது .
எங்கே குட்டி ரஞ்சியை கண்டவுடன் முன்போல் ஏதேனும் விபரீதம் நடந்துவிடுமோ என்று அஞ்சினால் அவ்வாறு ஒன்றும் நிகழாமல் இருந்ததே அவளின் மனதிற்கு பெரும் நிம்மதியாக இருந்தது .

லீலாவதி முடிந்தவரை ரஞ்சி குட்டியை தன்னுடனே வைத்துக்கொண்டார் . ரக்ஷிதாவையும் ஜெயதியுடன் தொழிலில் இறக்கினர் . ஷில்பா அந்த சகோதிரிகளுக்கு உறுதுணையாக நின்றாள் .

ரக்ஷிதா தொழிலில் முனைப்பாக இருப்பதை கண்ட ஜெயதி மகிழ்ச்சியுற்றாள் . ஜெயதியின் உதவி இல்லாமலே ரக்ஷிதா எதிரியின் பலம் பலகீனம் கொண்டு நேரடியாக தாக்கினாள் . அதன் பலன் ஆர் ஆர் குரூப் ஒப் கம்பனிஸின் பங்கு சரிவு மற்றும் பெரும் இழப்பு .

அன்று காலை ஜெயதியின் அலைபேசி ஒலித்தது எடுத்து பார்த்தவள் புன்னகையுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்து " நீங்க சொன்னது போல் நல்ல மற்றம் தெரிகிறது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை " என்று ஆர்பரித்தாள் .

"ஹே ஜெயதி கூல் ....நான் விசாரிக்காம ஒரு முடிவு எடுக்க மாட்டேன் சரியா ...! சரி சொல்லு எங்கள் வீட்டு மஹாராணியும் இளவரசியும் எப்படி இருக்கிறார்கள் " என்றது எதிர் முனையில் இருந்து வந்த குரல் .

"அவர்களுக்கு என்ன நன்றாக இருக்கிறார்கள் . என்ன குழந்தை தான் அவளுடன் ஓட்டமாட்டேன் என்கிறாள் . இவளும் சிறிதும் அதை பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை ." வருத்தத்துடன் வந்தது ஜெயதியின் குரல் .

"முன் போல் ரகளை இல்லை அல்லவே .....அனைத்திற்கும் காலம் கனிந்து வரவேண்டும் . குழந்தைக்கு தாயாக நீ இருக்கும் பொழுது வேறு என்ன கவலை " பெருமிதத்துடன் வந்தது அந்தக் குரல்.

"ஹ்ம்ம் அந்த நல்ல நேரம் வரும் வரை காத்திருக்கேன் " என்று கூறி அழைப்பை துண்டித்தாள் ஜெயதி .

ரக்ஷிதா மற்றும் லீலாவதி வந்து இன்றோடு ஒரு மாதம் முடிந்தது . இன்று சகோதிரிகள் இருவரும் ஒரு முக்கிய அலுவலக விஷயமாக ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டும் . இப்பொழுது எல்லாம் ரக்ஷிதா ஏ ஜே குரூப் ஒப் கம்பெனிஸில் இன்றியமையாதவளாக மாறிப்போனாள் .

மாலை ஒரு விருந்திற்கு செல்லவேண்டும் அது தொழில் முறை நண்பர்களுக்கு ஒரு தொழில் அதிபர் குடுக்கும் விருந்து . அதை தவிர்க்க முடியாத காரணத்தினால் லீலாவதி அவர்கள் குழந்தையுடன் ஷில்பாவையும் பாதுகாவலர்களையும் அழைத்துக்கொண்டு சென்றார் .

மாலை மங்கிய நேரத்தில் மும்பையில் இருந்து சற்று தள்ளி இருந்த அந்த பெரிய வீட்டில் ஆட்டம் ,பாட்டம், மது ..இரவு உணவு என்று அணைத்து அம்சங்களுடன் ஒரு விருந்து நடைபெற்றுக்கொண்டு இருந்தது . அதில் பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர் .

பெண்கள் ஆடம்பர உடைகளுடன் கழுத்தில் கை காதுகளில் ஜொலிக்கும் நவரத்தினங்களுடனும் வளம் வந்தனர் . ஆண்கள் தொழில் முறை நண்பர்களுடன் எதிர்காலத்தில் தொழில் செய்வது பற்றியும் மது கோப்பைகளுடன் இருந்தனர் .

அங்கு கம்பீரமாக சந்தன நிற சேலையில் தங்க ஜரி சிறிதாக ஆனால் மிகவும் அழகாக நெய்யப்பட்ட புடவையில் கண்களில் கண்ணாடியுடன் கழுத்தில் முகப்பு வைத்த சங்கிலியுடன் உள்ளே நுழைந்தார் லீலாவதி . அவரை கண்டவர்கள் அவரின் தீட்சண்யமான பார்வையிலும் கம்பீரத்திலும் தங்களை மறந்து மரியாதையை செலுத்தினார்கள் .

லீலாவதி ஷில்பாவை தன்னுடன் இருக்கச்செய்து ஒரு முக்கிய பிரமுகரின் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தார் .

அப்பொழுது அவரின் கைகளில் இருந்து நழுவிய ரஞ்சி குட்டி தனது பிஞ்சு கால்களை எட்டிப்போட்டு அங்கு ஆறடி உயரத்தில் நின்று கொண்டு இறந்தவனின் கால்களை அருகில் சென்று சுரண்டினாள் .

அந்த பிஞ்சு கைகளின் ஸ்பரிசத்தில் கீழே குனிந்த அவன் முகம் மலர்ந்தது . அந்த குழந்தையை பார்த்த அவன் கண்கள் பணித்தது . ரோஜா மொட்டு போன்று கொழுக் மொழுக் என்று இருந்த குழந்தை பிங்க் நிற இளவரசி கவுன் அணிந்து குழந்தைகளுக்கென செய்யப்படும் வைர அணிகலன்கள் அணிந்து அழகாக அவனை பார்த்து அரிசி பல் தெரிய சிரித்தாள் .

அதில் கட்டுண்ட அவன் குழந்தையை கைகளில் அள்ளிக்கொண்டான் . அப்பொழுது அங்கே வந்த இன்னொருவன் "நிஷு உனக்கு .... " ஏதோ கேக்க வந்தவன் நிஸ்வந்த் குழந்தையை தூக்கி கொண்டு நிர்ப்பதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாகினான் .

குழந்தையோ "நீங்க ?? " என்று யஸ்வந்த்தை பார்த்து இழுத்து கேட்டாள் . ஆம் குழந்தையை தூக்கியது நிஸ்வந்த் அப்பொழுது அங்கே வந்தது யஸ்வந்த் .

"நீயே கண்டுபிடி பார்ப்போம் ...? " என்றான் யாஷ் கண்களில் சிரிப்புடன் .

"ஹ்ம்ம் யாஷு " என்றது அந்த சின்ன சிட்டு .

"எஸ் ரைட் பேபி " என்று கூறி சிரித்தான் யஸ்வந்த் .

அப்பொழுது நிஸ்வந்த் எதோ கேக்க முற்படுகையில் ...நிஸ்வந்த் பக்கம் திரும்பிய அந்த தேவதை "அப்ப இது நிச்சு அப்பா !! " என்று மழலையில் கூறி ஆர்பரித்தாள் .

நிஸ்வந்த் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தான் . சற்று சுதாரித்து நடுங்கும் குரலில் "உங்க பெ..பெயர் என்ன ? " என்றான் .

"அய்யோ இது தெரியாதா நான் ரஞ்சி குட்டி என் பாட்டியோட பெயர் ...ரஞ்சினி நிச்சுவாந்த ..." அதே மழலையில் கூறி கிளுக்கி சிரித்தாள் .

நிஸ்வந்த்தின் கைகள் தளர்ந்தது குழந்தையை அவன் தவற விடுவதற்குள் யஸ்வந்த் பிடித்துவிட்டான் . அப்பொழுது எங்கு இருந்து வந்தாளோ ஷில்பா குழந்தையை தன் கைகளில் வாங்கிக்கொண்டு இருவரையும் முறைத்தாள் .

"ஷில்பா ஆண்ட்டி இது நிச்சு அப்பா " என்றாள் ரஞ்சி குட்டி .

ஷில்பா கொதிநிலைக்கு சென்றாள் நிஸ்வந்தை முறைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .
லீலாவதி அப்பொழுது ஷில்பாவை எதிர் கொண்டு "ஷில்பா இது சரி இல்லை " என்றார் கண்டிக்கும் குரலில் .

"எனக்கு அதெல்லாம் தெரியாது மாம் ...ஜெயதி உடனே நம்மளை கிளம்பச் சொன்னா ...சோ நீங்களும் கிளம்பனும்" என்று கூறி பாதுகாவலர்களுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .

எவ்ளோ நேரம் குழந்தை சென்ற திசையையே பார்த்து நின்றான் என்று தெரியாது . யஸ்வந்த்திற்கு தான் நிஸ்வந்தை அவ்விடம் விட்டு நகர்த்தி அழைத்து வரும் வரை வியர்த்துவிட்டது .
.............................................................................................................
ஜெயதி புயல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்தாள் . ரக்ஷிதா அவளின் பின் நிதானமாக வந்தாள் .

நீள்விரிக்கையில் அமர்ந்து இருந்த லீலாவதியின் முன் சென்ற ஜெயதி "அம்மா என்ன நினைச்சுட்டு இருக்கீங்க .....ஏன் இப்படி செஞ்சீங்க , பட்டது போதாதா ? " என்று பொரிந்து தள்ளினாள் .

அங்கு ஷில்பா நிற்பதை கண்ட ஜெயதி அவளிடம் காய்ந்தாள் "ஷில்பா வாட் தி ஹெல் ஹாஸ் ஹாட்பேண்ட் ...நீ இருந்து எப்படி குழந்தையை அவர்களிடம் செல்ல அனுமதித்தாய் ? " என்று அனல் கக்கும் பார்வையுடன் கேட்டாள் .

"இல்லை ஜெயதி மாம் ஹெல்ட் மை ஹாண்ட்ஸ் ...என்னை அவங்களை நெருங்க விடலை " தலை கவிழ்ந்து கூறினாள் ஷில்பா .

"மாம் என்ன நினச்சு இதெல்லாம் பண்றீங்க .... " திரும்ப தாயிடம் காய்ந்தாள் .

லீலாவதியோ பொறுமையாக பதில் கூறினார் "உரிமை உள்ளவர்களிடம் இருந்து எத்தனை நாள் மறைப்ப ?...எப்படியும் சேரவேண்டிய இடத்தில சேர்ந்து தானே ஆக வேண்டும் !! " என்றார் .

ஜெயதி கொதிநிலையில் உச்சிக்கே சென்றாள் "அம்மாஆ ... " என்று அவள் கத்தினாள் .

நல்லவேளை குழந்தை அலுப்பில் தூங்கிவிட்டாள் . ரக்ஷிதா அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவள் "அம்மா சொல்றது சரிதான் ஜெயதி " என்றாள் .

ஜெயதி கண்களை விரித்து அவளை பார்த்தாள் . இத்தனை நாள் அக்கா என்றே அழைத்து வந்தவள் இன்று பெயர் சொல்லி அழைப்பதில் சிறுவயது நியாபகங்கள் துளிர்த்தது . மேலும் இன்னொரு அதிர்ச்சியாக அவள் கூறிய செய்தி "ரக்ஷி ஆர் யு மேட் " என்றாள் ஜெயதி .

"ஆம் கிலீர் ஜெயதி ரஞ்சி எப்படியும் அவர் மகள் இல்லை என்று ஆகிவிடுமா இல்லை நான் தான் அம்மா இல்லை என்று கூறி விட முடியுமா " என்றாள் ரக்ஷிதா விரக்தியுடன் .

"ரக்ஷி " என்று ஆரம்பித்த ஜெயதியின் குரலை இடை இட்டது அவளின் குரல் "அபி ...கால் மீ அபிதா " என்றாள் ரக்ஷிதா எனும் அபிதா .

அபியின் நிமிர்வை கண்டு சந்தோஷித்தாள் ஜெயதி "அபி !! "என்ற கூவலுடன் ஓடிச்சென்று அவளை அனைத்துக்கொண்டாள் .
...........................................................................................
எப்படியோ நிஸ்வந்தை அவ்விடம் விட்டு அழைத்து வந்துவிட்டான் யஸ்வந்த் . வீட்டிற்குள் நுழைந்த நொடி நிஷு யாஷ் முன் நின்று "அவள் ...அவள் என் குழந்தையா ? " கண்களில் முழு உயிரையும் தேக்கி வைத்துக்கொண்டு கேட்டான் அவன் .

யாஷ் 'ஆம்' என்னும் விதமாய் தலையை மேலும் கீழும் ஆட்டினான் .

நிஸ்வந்த் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான் "எப்படி யாஷ் " என்றான் குரலில் வலியுடன் .

"எனக்கு இது முன்னாடியே தெரியும் ....முதலில் ஒரு யூகம் தான் அன்று விமானநிலையத்தில் வைத்து உறுதியானது ." என்றான் யாஷ் .

நிஸ்வந்த்திற்கு இது பெரும் அதிர்ச்சி அவன் கண்கள் சொன்ன செய்தியை புரிந்து கொண்ட அவனின் இன்னொரு உயிரானவன் "இந்த குழந்தையை முன்பே இருமுறை பார்த்தேன் அப்பொழுது அவளின் பெயர் ஆஞ்சி என்று கூறினாள் மேலும் உன்னை பற்றி கேட்டாள் ...நான் குழம்பினேன் அப்பொழுது சரியாக கண்ணன் அண்ணா முன் பெரியப்பா பெரியம்மாவை ரஞ்சி என்று அழைத்தார் எனக்கு அங்கு பெரும் சந்தேகம் துளிர்த்தது ...எனக்கு தெரிஞ்ச வரையில் கண்ணன் அண்ணாக்கு இது ஆரம்பத்தில் இருந்தே தெரியும் ....அன்று விமான நிலையத்தில் அவளின் முழுப்பெயர் அழைத்து மிசெஸ் லீலாவதி அவர்கள் உறுதி படுத்தினார் " யாஷ் பொறுமையாக கூறினான் .


நிஸ்வந்த் முழவதுமாக உடைந்து போனான் . அவர்களின் இனிமையான நாட்களின் பொழுது ரஞ்சினி என்ற பெயர் பெண் பிறந்தால் ராஜ்குமார் என்ற பெயரை ஆண்பிள்ளை பிறந்தால் வைக்க வேண்டும் என்று அவளிடம் கூறியது நியாபகத்தில் வந்து வதைத்தது . இரட்டையர்கள் இருவரும் பெரியப்பா பெரியம்மா மேல் அளவில்லா அன்பு வைத்தவர்கள் ஆகையால் இப்படி ஒரு ஒப்பந்தம் இருவருமே போட்டனர் . ராகினி மற்றும் பிரவீன் சந்தோசமாக அதை சிறு வயதில் இருந்தே ஆமோதித்தனர் .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் இதோ வெகு நாளைக்கு பிறகு உங்களை அடுத்த பதிவுடன் சந்திக்க வந்துவிட்டேன் . முதலில் மன்னிக்கவும் தாமதத்திற்கு . எல்லாரும் படிச்சுட்டு மறக்காம எப்படி இருந்தது என்று சொல்லிட்டு போங்கோ . இப்படிக்கு நான் (சாரல் )

 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -8
அடுத்தநாள் ரக்ஷிதா என்னும் பாவை அபிதாவாக கண்முழித்தாள் . அபிதாவாக அவளின் மனம் அவளை உணரச்செய்த பிறகு அவளின் மென்மையான மனம் தனது மகளை முதலில் தேடியது . தனது வேலைகளை முடித்துக் கொண்டு கீழ்தளத்தில் இருக்கும் மகளின் அறைக்கு சென்றாள் .

இத்தனை நாட்களில் மகளை கண்டவுடன் வராத ஒரு உரிமை உணர்வு பாசம் கனிவு அனைத்தும் ஒரு சேர கலந்து தனது பார்வையை இம்மியளவும் திருப்பாமல் தனது மகளை கண்டாள் . ரஞ்சினி குட்டியை பார்த்துக்கொள்ளும் பெண் அபிதா உள்ளே நுழைந்தவுடன் நாகரிகம் கருதி சத்தம் இல்லாமல் வெளியேறினார் .

அபிதாவின் கால்கள் நடுங்கியது முதல் முறை தன் குழந்தையை ஒரு தாயாக நெருங்கினாள் . இத்துணை நாட்கள் அவளிடம் இருந்து ஒதுங்கி செல்லும் அந்த தேவதை இவளின் வரவை கண்டு என்ன விதமான எதிர்வினை ஆற்றுவாள் என்ற பயத்துடன் நெருங்கினாள் .

ரஞ்சினி இன்னும் துயில் கலையாமல் போர்வைக்குள் அன்றில் அலர்ந்த மலராக முகத்தில் சின்ன புன்னகையுடன் தூங்கிக்கொண்டு இருந்தாள் . அபிதா கண்களில் இரண்டு ஆண்டுகாலத்தின் பிரிவை ஈடுகட்டும் விதமான உணர்ச்சிப்பெருக்குடன் தனது மகளை கண்டாள் . அருகில் சென்று அமர்ந்த அபிதா நடுங்கும் கரங்கள் கொண்டு ரஞ்சியின் தலையை மிருதுவாக கோதினாள் .

அதில் தனது தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த அந்த சின்ன சிட்டு தூக்க கழகத்தில் சுகமாக புரண்டு அபிதாவின் மடியில் படுத்தாள் . அபிதாவின் மூச்சு ஒரு நொடி நின்று சீரானது . இவை அனைத்தையும் வழமையாக ரஞ்சினியை காண வரும் ஜெயதியின் கண்களில் விழுந்தது . ஜெயதி எதிலும் தலை இடாமல் ஓரமாக நின்று தாய் மகளின் நெருக்கத்தை நிறைந்த மனதுடன் கண்டுகொண்டு இருந்தாள் .

எவ்ளோ நேரம் மூவரும் அதேபோல் இருந்தனரோ ... சற்று நேரத்தில் ரஞ்சினி கண்முழித்தாள் . குழந்தை மனம் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாது . திட்டினால் சிணுங்கவும் அதட்டினால் அளவும் தெரியும் சற்று நேரத்தில் அந்த குழந்தை இயல்புக்கு மாறி அடித்தவரையே கொஞ்சும் குணம் கொண்டது .

தூக்கத்தில் இருந்து முழித்த ரஞ்சினி எழுந்து அமர்ந்து கண்களை தேய்த்துக்கொண்டே "குட் மோர்னிங் அம்மா" என்றாள் . அபிதா இன்பமாக அதிர்ந்தாள் . கண்களில் மிச்சம் இருந்த தூக்கத்துடன் உதட்டில் சிரிப்புடன் "அபிமா குட் மோர்னிங் சொன்னா நீங்களும் சொல்லணும் அதுதான் குட் ஹாபிட் " என்றாள் மழலையில் .

அபிதா கண்களில் தேங்கிய நீருடன் "கு குட் மார்னிங் குட்டிமா " என்றாள் . சிறிது தெளிந்தவுடன் குழந்தை ஒரு நொடி அருகில் இருக்கும் அபியை கண்டு துணுக்குற்றாள் . உடனே என்ன தோன்றியதோ குழந்தை "பாட்டிய்ய்ய் " என்று அலறிக்கொண்டே கையில் இருந்த மினி பொம்மையை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினாள் .

அபி மனதளவில் மறித்து போனாள் . நன்றாக பேசும் குழந்தை தன்னை முழு நினைவில் காணும் பொழுதான ஒதுக்கத்திற்கு தான் தானே கரணம் என்று அப்படியே கட்டிலில் அமர்ந்து கதற துடங்கினாள் .

ஜெயதி அபியின் அருகில் வந்து அவளின் தோளில் கை வைத்து "அபி " என்றாள் மென்மையாக .

"ஜெயா நானே என் மகளை என்னிடம் இருந்து ஒதுங்குவதற்கு காரணம் ஆகிட்டேனே " என்று ஜெயதியின் வயிற்றை கட்டிக்கொண்டு தேம்பினாள் .

"அபி அவ குழந்தை டி முழிச்சு பார்த்த ஒடனே எப்படி பேசினா ஏதோ சில நினைவுகள் ...அவள் உன் மகள் நிச்சயம் உன்னை ஏற்றுக்கொள்வாள் " ஆறுதலாக கூறினாள் ஜெயதி .

அபி ஏதும் சொல்லாமல் எழுந்து சென்று தனது அறைக்குள் புகுந்து கதைவடைத்து கண்ணீர் வற்றும் வரை அழுதாள் . சற்று நேரத்தில் தன்னை நிலை படுத்திகொண்டு முகத்தை கழுவி அலுவலகம் செல்லுவதற்கு ஏற்ற உடையுடன் கீழே உணவு மேஜைக்கு சென்றாள் .

அங்கு ஜெயதி குழந்தைக்கு இட்லியை பிட்டு சாம்பாரில் தொட்டு ஊட்டிக்கொண்டு இருந்தாள் . குழந்தை சமத்தாக மேஜை மேல் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டு இருந்தாள் .

அங்கே வந்த அபி இருவரையும் கண்டு ஒதுங்கி செல்ல எத்தனித்தாள் . ஜெயதி அபியின் கரங்களை பிடித்து அருகில் அமரவைத்தாள் . அபி மனதில் ஒருவித பயத்துடன் அமர்ந்தாள் .

"ரஞ்சி குட்டிக்கு ஜெயாமா என்ன சொல்லிக்கொடுத்தேன் " என்று ஆரம்பித்தாள் ஜெயதி .

"என்ன சொன்னிங்க" மழலை மொழியில் வந்தது பதில் .

"யாரையும் அழவைக்க கூடாதுனு சொல்லி கொடுத்தேனா இல்லையா " அழகாக குழந்தைக்கு ஏற்றவாறு வினவினாள் ஜெயதி .

'ஆமாம் ' என்னும் விதமாக தலையை ஆட்டினாள் ரஞ்சினி .

"அப்ப ஏன் பப்பு குட்டி அபிமாவை அளவச்சீங்க "

"நானா நான் ஏதும் சொல்லலையே " அந்த இரண்டு வயது குழந்தை நடப்பது புரியாமல் கேட்டாள் .

"அது நீங்க மார்னிங் அபிமா உன் பக்கத்துல இறுக்கப்ப ஓடிபோய்ட்டீல அதான் அபி அம்மா அழுதாங்க " சொன்ன ஜெயதியை மிரட்சியாக பார்த்தாள் குழந்தை .

"அது அபி அம்மா சொன்னா அவங்க அடிப்பாங்க தள்ளி விடுவாங்க அதான் " பயத்துடன் தனக்கு தெரிந்ததை கூறினாள் குழந்தை .

தன் மகளை அவனின் மகளாக கண்ட வினையை உணர்ந்த அபி சத்தம் வராமல் அழுதாள் .

அதை பார்த்த குழந்தை ஜெயதியின் காதை கடித்தாள் "ஜெயாம்மா அபிம்மா எதுக்கு அழறாங்க " என்று மழலை மொழியில் கேட்டாள் .

"அது நீங்க பேசலைல அதான் அம்மா அழறாங்க நீங்க பேசுங்க அழமாட்டாங்க " குழந்தைக்கு புரியும் விதத்தில் எடுத்து கூறினாள் ஜெயதி .

"அபிமா !!" குழந்தைத்தனத்துடன் சிரிப்புடன் கூப்பிட்டாள் ரஞ்சினி .

அபி சட்டென்று நிமிர்ந்து குழந்தையை பார்த்தாள் . "நான் உங்க கூட பேசுறேன் ஆனா நீங்க ஒரு ப்ரோமிஸ் பண்ணனும் " என்றாள் ரஞ்சினி .

ஜெயதிக்கு குழந்தையை பற்றி நன்கு தெரியும் விஷம புன்னகையுடன் இருவரையும் பார்த்தாள் . கண்துடைத்து வரவைத்து புன்னகையுடன் நிமிர்ந்த அபி "சொல்லுமா " என்றாள் .

குழந்தை கள்ள சிரிப்புடன் "எனக்கு ...எனக்கு ஐஸ் கிரீம் ...கேக் , சாக்கி , ஜூஸ் , சாக்கி க்ஷேக் எல்லாம் வேணும் இன்னைக்கே ... " கண்கள் மின்ன ஜெயதியையும் லீலாவதியையும் கள்ளத்தனத்துடன் பார்த்துக்கொண்டே கூறினாள் .

லீலாவதியோ இவை அனைத்தையும் பொறுமையுடன் பார்த்தவர் சத்தமாக சிரித்து "அடி ...நீ சரியான ஆளு நாங்க வேண்டாம் சொல்வோம்ன்னு அபிமா கிட்ட ப்ரோமிஸ் வாங்கிட்டு லிஸ்ட் போடறியா " என்று சந்தோசத்துடன் வினவினார் .

அனைவரும் சிரித்துவிட்டனர் . ஷில்பா மன நிறைவுடன் அனைவரையும் பார்த்து அன்றைய நாளுக்கான நாட்காட்டியை எடுத்து இரு சகோதரிகளையும் வேலையில் கவனத்தை திசை திருப்பினாள் .

...........................................................................

நிஸ்வந்த் தன்னவள் தன்னருகில் வந்துவிட்டாள் எப்பாடுபட்டேனும் அவளை நெருங்க வேண்டும் என்று தீர்மானித்து சற்று தொழிலும் கவனத்தை செலுத்த தொடங்கினான் . அவனுக்கு மனது ஒருநிலைக்கு வந்தது . இத்தனை ஆண்டுகாலம் அவர்களின் எதிரி என்று சொல்லிக்கொள்ளும் அளவு எவரும் இல்லை ஆதலால் இவனின் தடுமாற்றம் பெரிதாக தொழிலை பாதிக்க வில்லை அந்த அளவுக்கு அவனின் மனம் அறிந்து யஸ்வந்த் தோல் கொடுப்பான் . ஆனால் இப்பொழுது நடக்கும் தொடர் சறுக்கல் இவர்களை குறிவைத்து தாக்குவது என்று அறிந்த நொடி சற்று குழம்பினான் . அதே தோல்வி தன்னவளின் நிறுவனத்திடம் என்று அறிந்தவுடன் பெருமை கொண்டான் .

அவனுக்கு இருக்கும் ஒரே வருத்தம் தனது மகளின் பிறப்பை கூட அறிய முடியாத பாவி ஆக்கிவிட்டாள் என்பதே .

நிஸ்வந்த் கணினியில் மூழ்கி இருந்த சமயம் உள்ளே நுழைந்த யஸ்வந்த் "கிளம்பு கிளம்பு " என்று நிஸ்வந்த்தை துரிதப்படுத்தினான் .

நிஸ்வந்த் புரியாமல் "என்ன ? யாஷ் எதுக்கு இந்த அவசரம் " என்று புருவத்தின் நடுவே முடிச்சுடன் வினவினான் .

"இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் ஹோட்டல் தாஜில் நீ போயி ஆகணும் " என்று யாஷ் மர்ம புன்னகையுடன் கூறினான் .

"ஹே என்ன புதுசா இப்ப எல்லாம் நீ தான போவ யாஷ் " என்று புரியாமல் கேட்ட நிஸ்வந்த்தை பார்த்த யஸ்வந்த் " நீ தான் போகணும் எதுக்குன்னா ? " என்று கூறி நிறுத்தி அவனின் முகம் பார்த்து "உனக்கு தெரிஞ்சவங்க புடிச்சவங்க கூட மீட்டிங் " என்றான் யஸ்வந்த் .

ஒரு நொடி முழித்த நிஷு மண்டைக்கு மேல் தாமதமாக எறிந்த பல்பு மூலம் அறிந்து நிமிர்ந்து பார்த்தான் அங்கே யஸ்வந்த் இல்லை . அவன் தான் எப்பவோ ஓடிவிட்டானே .

பிறகு நிஸ்வந்த் ஒருவித பரபரப்புடன் நிறுவனத்தின் மேலாளரை அழைத்து அன்றைய மீட்டிங் என்ன என்று கேட்டறிந்து ஒரு வித லப்டப் இதயத்துடிப்புடன் தாஜ் ஹோட்டல் சென்றான் .

நிஸ்வந்த் உள்ளே நுழைகையில் அங்கே அவனுக்கு முன் வந்து அமர்ந்து இருந்த அவளை கண்டு புருவத்தை தூக்கி கடிகாரத்தை பார்த்தான் .

அவளும் அதே நேரம் தனது கைக்கடிகாரத்தை பார்த்தாள் . ஒரு வித சலிப்புடன் முகத்தை கோப்புக்குள் நுழைத்தாள் அந்த சலிப்பிற்கு கரணம் இரண்டு நிமிட தாமதம் . நிஸ்வந்த் ஒரு வித உற்சாகத்துடன் அவளின் எதிரில் சென்று நின்றான் .

அவள் எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தாள் "ஹாய் மிஸ்ஸஸ் அபிதா " என்றான் சந்தோசத்துடன் .

கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த அபிதா "வாட் ? " என்றாள் .

"உங்களை தான் மிஸ்ஸஸ் அபிதா நிஸ்வந்த் " என்றான் மீண்டும் .

இப்பொழுது வெளிப்படையாக கோபத்தை காட்டிய அவள் " எஸ்க்கியுஸ் மீ ...ஆம் மிஸ் ரக்ஷிதா ...ரக்ஷிதா ரங்கராஜன் " என்றாள் நிமிர்வுடன் .

அவன் ஏதும் தெரியாததை போல் தோள்களை குலுக்கி கொண்டு அவளின் எதிரில் அமர்ந்தான் .

அருகினில் கோபாவிழிகளுடன் அபிதாக்கு அரணாக நின்று கொண்டு இருந்த ஷில்பா அன்றைய மீட்டிங்கிற்கான அவசியத்தை கூறி ஒப்பந்தங்களை இருபுறம் வைத்து கையெழுத்து வாங்கினாள் . ஆனால் அவனின் விழிகளோ அவளை தவிர்த்து எதையும் கண்டுகொள்ளவில்லை . அந்த ஒப்பந்தத்தையும் சரியாக படிக்காமல் கையொப்பம் போட்டான் .

அதனால் வரும் பின்விளைவுகளை அவர்கள் ஆர் ஆர் கன்ஸ்டருக்ஷன் சந்திக்கும் பொழுது நிச்சயம் அவர்களால் அதை எதிர்கொள்ள முடியாது . இந்த ஒப்பந்தம் முக்கியமாக அவர்களின் மென்பொருள் நிறுவனத்தின் இன்னொரு கிளையை பூனாவில் கட்ட இருப்பதாகவும் அதற்காக ஆர் ஆர் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடுவதுமே . ஏ ஜே குழுமத்தில் கட்டுமான தொழில் இருந்தும் அவர்கள் ஆர் ஆர் குழுமத்தை நாடியதை தீர விசாரிக்க அந்த இரட்டையர்கள் தவறினர் . தனது சகோதரனின் துயர் தீர்க்க யஸ்வந்த்தும் தன்னவளை தன்னருகில் இருத்தி வைக்க நிஸ்வந்தும் உணர்ச்சி பெருக்கில் எதையும் அலசி ஆராயாமல் செய்தனர் . அது எவ்ளோ பெரிய சறுக்கல் என்பதை அவர்கள் உணரும் பொழுது காலம் கடந்து இருக்கும் .

ஏ ஜே குலமத்தின் சார்பாக சொல்லப்பட்டது கட்டுமான துறை அவர்களுக்கு புதிது அவர்களின் மென்பொருள் நிறுவனமே அவர்களின் முக்கிய தொழில் ஆகையால் இத்தகைய பெரும் ஒப்பந்தத்தை இந்திய நாட்டில் அனுபவமிக்க ஆர் ஆர் குழுமத்துக்கு தருவதில் அவர்களுக்கு திருப்தி என்றும் அதற்கு முக்கிய காரணம் லீலாவதி என்று முன்னிறுத்தினர் . லீலாவதியின் தொழில் பக்தி அறிந்த யஸ்வந்த் அதை உண்மை என்று நம்பி அவர்களின் அனுபவம் இல்லாத கட்டுமான நிறுவனத்தை தற்சமயம் நாட சற்றே தயங்குகிறார்கள் என்று முழுதாக நம்பினான் .

ஷில்பாவின் கண்களில் வந்த வெற்றி புன்னகையையும் ரக்ஷிதா எ அபியின் கண்ணில் தெரிந்த க்ரோதத்தையும் காண தவறினான் நிஸ்வந்த் . அவன் அவளைத்தான் அளவிட்டு கொண்டு இருந்தான் .

அவளின் பூசின உடல் வாகு வற்றி ..ரோஜா போன்ற கொலு கொலு கன்னங்கள் எழும்போடு ஒட்டி போய் நவீன பெண்ணிற்கான அம்சத்துடன் பெண்கள் அணியும் கருப்பு நிற கோட் சுய்ட் அணிந்து நிமிர்வுடன் அவளை காண அவனின் நெஞ்சில் ஈட்டியை சொருகியது போல் இருந்தது . அவளின் நிமிர்வு அவனிற்கு கசக்க வில்லை அவன் இழந்துவிட்ட தேவதை பெண்ணை நினைத்து வருந்தினான் . கண்களில் குறும்பு இருந்த இடத்தில வெறும் கோபம் ஆவேசம் என்று அனைத்தும் குடி கொண்டு இருந்தது . மேலும் அவன் மிகவும் நேசித்த அவளின் முடி ....!! அவளின் முடி அவளின் இடை வரை நீண்டு இருக்கும் பட்டு போன்று மிகவும் அழகாக இருக்கும் இப்பொழுதோ ? குட்டையாக வெட்டி கழுத்தை தொட்டும் தொடாமலும் இருந்தது .

அவள் எந்த முகமனும் இல்லாமல் சட்டென்று எழுந்து கிளம்ப திரும்பினாள் . அவன் எதை பற்றியும் யோசிக்காமல் அவளின் கையை பிடித்துவிட்டான் . அவளின் கண்களில் தெறித்த அனல் அவனையே ஒரு நொடி ஆட்டம் காண செய்தது வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் காதலுடன் அவளை நோக்கினான் .

ஒரு நிமிடம் அவனையும் அவன் கையையும் மாரி மாரி பார்த்த அவள் சட்டென்று அவளின் வலது கையில் இருந்த பேனாவில் எதையோ அழுத்தினாள் "கிளிக் " என்ற சத்தத்துடன் ஒரு சிறு கத்தி .

"சதக் சதக் சதக் " என்று சரமாரியாக அவனின் கையில் கீறலை போட்டு அவ்விடம் விட்டு நொடியில் மறைந்தாள் . அவனும் கையில் வலியுடன் கண்களில் காதலுடன் அவளையே நோக்கினான் .

அங்கு வந்த அந்த உணவகத்தின் மேலாளர் "சார் வாட் ஹாட்பேண்ட் ... கிஷோர் கால் போலீஸ் " என்று சத்தம் போட்டவனை தடுத்த நிஸ்வந்த் "இட்ஸ் பர்சனல் லீவ் இட் " என்று கூறி நேரே தனது நண்பனின் மருத்துவமனைக்கு சென்றான் .

இவனின் நிலையை கூறி அந்த மருத்துவ நண்பன் உடனே யஸ்வந்த்தை அழைத்துவிட்டான் . அங்கே புயல் வேகத்தில் உள்ளே நுழைந்த யஸ்வந்த் "வாட் தி ஹெல் ..." என்று சரமாரியாக கத்த தொடங்கி விட்டான் .

"சில் யாஷ் எனக்கு ஒன்னும் இல்லை விடு பாத்துக்கலாம் " பொறுமையாக கூறினான் நிஸ்வந்த .

அவனை ஆழ்ந்த பார்வை பார்த்த யாஷ் "என்ன கருமம் பிடிச்ச காதலோ !! " என்று கூறி தலையில் அடித்துக் கொண்டான் .

...........................................................................

வீட்டிற்கு வந்த அபிதா தன்னை இலகுவான ஜீன்ஸ் டாப்ஸ் உடைக்கு மாற்றிக்கொண்டு மகளுடன் நேரத்தை செலவழிக்க புறப்பட்டுவிட்டாள் .

ரஞ்சினியை லீலாவதி சந்தோசமாக தயார் செய்து ஷில்பாவின் துணையுடன் அனுப்பினார் . வெளியே ஒரு மாலிற்கு வந்த அபிதா ரஞ்சினியுடன் அன்று மலை பொழுதை முழுதாக மகளுடன் செலவளித்தாள் .

'அலாதின்' ஆங்கில படத்துக்கு சென்று ஷில்பா,அபி மற்றும் ரஞ்சினி மூவரும் ரசித்து பார்த்தனர் . பிறகு காலையில் மகள் கேட்ட கேக்காத அனைத்தையும் வாங்கி குவித்தாள் .

ஷில்பா நொடிக்கு ஒருமுறை ஜெயதியை அழைத்து மனநிறைவுடன் அனைத்தையும் ஒப்புவித்தாள் .

"என்ன ஷில்பா உங்க நட்பின் ஆழத்தை இப்படித்தான் காட்டணுமா !! " என்று விளையாட்டாக கேட்ட அபிக்கு அசட்டு தனமாக புன்னைகைத்தாள் .

தலையை இடமும் வலமுமாக அசைத்து தனது அலைபேசி எடுத்து ஜெயாவிற்கு அழைத்து "ஜெயா ஆம் பைன் ...இப்படி ஷில்பாவை துருவி துருவி போன் பில்லை ஏத்தாதே " புன்னகையுடன் கூறினாள் .

ஜெயதி அந்த பக்கம் என்ன கூறினாளோ "ஜெயா ஆம் ஆல் ரைட் .... நான் ரைட் ஹா இல்லைனா இந்தியா வர மாமா அனுமதிச்சிருக்க மாட்டாங்க ... நான் பாத்துக்கிறேன் நீ வேலை முடித்து சீக்கிரம் வா " என்று புன்னகையுடன் பேசி வைத்தாள் அபிதா .

ஷில்பா சந்தோசமாக அதன் பின் அந்த தாய் மகளுடன் ஒரு அங்கமாக ஒன்றினாள் . ஷில்பாவை போன்ற தோழி கிடைப்பது அரிது என்பதை அபிதா லச்சமாவது முறையாக எண்ணிக்கொண்டாள் .

அதன் பின் சில நாட்கள் மிகவும் சந்தோசமாக சென்றது அவர்களுக்கு . ஜெயதி தங்களுக்கு எல்லாமுமாக இருந்து உதவிய அந்த நபருக்கு அழைத்து "என்னோட அபியை மீட்டு எடுத்து தந்ததுக்கு நன்றி " என்று பலமுறை ஆனந்த கண்ணீருடன் கூறினாள் .


அந்த ஆனந்தம் அனைத்தும் ஆர் ஆர் குழுமம் ஏ ஜே மென்பொருள் நிறுவனத்துக்கு கட்டுமான வேலை ஆரம்பிக்கும் வரை மட்டுமே என்பதை எவரும் அறியவில்லை . அனைவரும் அவர்களை நோக்கி வரும் புயலில் சிக்கி மீண்டும் எவ்வாறு உயிர்த்தெழுந்து வருகிறார்கள் என்பதை இனி வரும் காலத்தில் பார்ப்போம் .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளே எனது கதையான அன்பே உ(எ)ன்னை உன்னக்காக கதையின் எட்டாம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன் படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் . இன்றைய கால கட்டத்தில் நமது உடல்நிலையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் . சொந்தங்களை விட்டு தொலைதூரம் இருப்பதால் வந்த நிலைமை இது . என் நிலை அறிந்து பொறுமை காத்த அனைவர்க்கும் எனது நன்றிகள் பல . இப்படிக்கு நான் (சாரல் ).

 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends as of I told you all before my health condition is little low so am going to take some break am going to hometown.... I will resume this story from the month of September after that I will not give any excuse... Hope you all understand... Thank you
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 9
இதோ இதோ என்று பூனாவில் ஏ ஜே குழுமத்தின் கட்டிட தொடக்க விழா நாளும் வந்தது . அன்று காலை விடிவதற்கு முன்பே நிஸ்வந்த் அங்கு வந்துவிட்டான் . நிஷுவின் இம்சை தாங்காமல் யாஷும் அவனோடு வந்துவிட்டான் .
சரியான நேரத்திற்கு இரண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்தது . அதில் ஒரு வாகனத்தில் அபி , லீலாவதி மற்றும் ரஞ்சி குட்டி மூவரும் வந்து இறங்கினர் .

மற்றுமொரு வாகனத்தில் ஜெயதி ஓட்ட ஷில்பா அருகினில் அமர்ந்து வந்தடைந்தாள் . அனைவரும் ஒன்றாக நடந்து வந்து இரட்டையர்கள் முன் நின்றனர் . யஸ்வந்த்தும் நிஸ்வந்தும் லீலாவதியின் காலில் விழுந்து வணங்கினர் .
அதை ஒரு எள்ளலான புன்னகையுடன் பார்த்தாள் ஜெயதி . அபியோ தன் மகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவது போல் அவளுடன் பேசிக்கொண்டு இருந்தாள் .

ஷில்பா சட்டென்று முன்னே வந்து "அச்சச்சோ அம்மா ...!! " என்று அலறினாள் .
அனைவரின் கவனமும் அவளின் பக்கம் திரும்பியது லீலாவதியோ இருவரையும் ஆசிர்வதித்து திரும்பி "என்ன ஆச்சு ஷில்பா எதுக்கு கத்துற " என்று புன்முறுவலுடன் வினவினார் .

"அது வந்து அம்மா உங்களுக்கு ஜலதோசம் பிடிச்சிருக்கு ...இதுல வேற நீங்க மருந்தும் சாப்பிடவில்லை இங்க இருக்க பனி மழைல உங்களுக்கு மேலும் ஜலதோஷம் பிடிச்சுடுமோ என்று பயந்தேன் கத்திட்டேன் ...ஹி ஹி ஹி " என்று இளித்து வைத்தாள் .

அதை கேட்ட ஜெயதி சட்டென்று சிரித்துவிட்டாள் . யஸ்வந்த் அவளை முறைப்பதை கண்டு தோலைக்குலுக்கி முன்னே நகர்ந்தாள் .

நிஷு இந்த உலகிலே இல்லை அபியையும் அவன் மகளையும் ரசித்துக்கொண்டு இருந்தான். தூக்கி போட்ட குதிரை வால், வெள்ளை நிற முழுக்கை சட்டை ,கரு நிற கால் சராய் சற்றே உயர்ந்த செருப்பு என்று தோரணையுடன் இருந்த அபியின் பக்கம் இருந்து பார்வையை திருப்புவது நிஷுக்கு சவாலாகவே இருந்தது .

மீண்டும் ஷில்பா "எதுக்கும் சேலையை தூக்கியே நடங்க " என்றாள் .
லீலாவதியோ புரியாமல் பார்த்தார் . யஸ்வந்த் நிஷுவின் பார்வை உணர்ந்து அவனின் கவனத்தை திருப்பினான் .
அப்பொழுது ஷில்பா மீண்டும் தொடர்ந்தாள் "அது ஒன்னும் இல்லை அம்மா இங்க ஒரே ஊற்றா இருக்கா அதான் சேலை நனைந்து போய்டுமே அதான் சொன்னேன் " ஓரக்கண்ணால் நிஸ்வந்தை பார்த்துக்கொண்டே கூறினாள் .
அவளின் குறும்பில் நிஷுக்கே சிரிப்பு வந்தது . "ஹே வாயாடி பேசாம வா " என்று கூறி லீலாவதி அபியை கூட்டிக்கொண்டு முன்னே நடந்தார் .

சட்டென்று முன்னே செல்ல எத்தனித்த ஷில்பாவின் முன் வந்த யஸ்வந்த் "இங்க கொசு தொல்லை எல்லாம் ஜாஸ்தியா இருக்குல்ல " என்றான் .
"அச்சச்சோ அதுவேறா நல்ல வேளை சொன்னிங்க " என்று கூறி பின் திரும்பி வாயிலில் நின்ற அவர்களின் ஆட்களில் ஒருவனை அழைத்து "ராய் இங்க கொசு தொல்லை இருக்காம் தேவை இல்லாத கொசுவை கவனிச்சு அனுப்பிருங்க " என்று நக்கலாக கூறினாள் .

ராய் மலங்க மலங்க முழித்தான் பாவம் ஹிந்தி காரனிடம் தமிழில் கூறினால் அவனும் என்னதான் பண்ணுவான் . எதிர்த்து ஏதும் கூறினால் ....ஐயோ எதற்கு வம்பு என்று ராய் அமைதியாக நின்றான் .

அப்பொழுதுதான் வாயிலை எட்டி பார்த்த யஸ்வந்த் "ஒஹ் உங்க மேடம் எங்க போனாலும் அடி ஆட்கள் இல்லாமல் போக மாட்டாங்களா ? " என்று கேட்டு புருவத்தை உயர்த்தினான் . அதில் தெரிந்த கிண்டலை கண்டு கொதித்து விட்டாள் ஷில்பா .

"சில நரி கூட்டம் தந்திரத்துடன் நேரில் மோத பயந்து கொண்டு முதுகில் குத்துகிறார்கள் ...பட்ட அனுபவம் அதான் முன்ஜாக்கிரதை ஏற்பாடு " என்று கூறி லீலாவதியின் அருகில் சென்று நின்று கொண்டாள் .

அதன் பிறகு வேலைகள் ஜரூராக நடந்தது . இதில் நடுவில் பசி வந்து ரஞ்சினி ஜெயா அம்மா தான் ஊட்டணும் என்று ஊரை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள் .

ஜெயாவும் புன்னகையுடன் அவள் சமைத்த உணவை காரில் இருந்து எடுத்து வந்து மகளுக்கு பாசமாக ஊட்டினாள் அதை பார்த்த யஸ்வந்த் யோசனைக்கு சென்றான் . காரணம் இங்கே சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதும் உயர்தர உணவகத்தில் இருந்து வருவிக்கப்பட்டது .

அதை எடுத்து முன் வந்த நிஸ்வந்திடம் வேண்டாம் ஜெயா அம்மா கைல தான் வேணும் என்று அவள் செய்த ஆர்ப்பாட்டம் யாஷ் நிஷு இருவரையும் யோசிக்க வைத்தது .

இவர்களும் பெரியம்மா மேல் அளவில்லா அன்பு கொண்டவர்கள் தான் ஆயினும் தங்களின் தாய் உணவு ஊட்டுவது என்று வந்தால் தாயிடம் ஓடிவிடுவார்கள் . எந்த குழந்தையும் முதலில் தாயிடம் உண்ணவே விருப்பப்படும் ஆனால் ரஞ்சினி ஜெயா தவிர்த்து எவர் முன் வந்தாலும் அந்த இடத்தையே ரெண்டாகினாள் . அபி ஓரமாக கண்களில் வலியுடன் நின்றிருந்தாள் இதை இருவருமே கவனித்தனர் .

அனைத்தும் நல்லபடியாக முடிந்து அனைவரும் கிளம்பினர் அப்பொழுது வழி அனுப்பும் விதமாக முன் வந்த இரட்டையர்களை அக்கா தங்கை இருவருமே தவிர்த்தனர் . நிஸ்வந்த் கண்களில் ஏக்கத்துடன் அபியையே பார்த்துக்கொண்டு இருந்தான் . அப்பொழுது ஜெயதி "மிஸ்டர் நிஸ்வந்த் ஆஸ் அபி டிஸ்க்ஸ்ஸ்ட் இந்த கட்டிட வேலை நேரத்திற்குள் முடிந்திருக்க வேண்டும் ...அண்ட் இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ப்ராஜெக்ட் ஏ ஜே குழுமத்தின் புதிய பெரிய அலுவலகம் இந்தியாவிலும் கால் பதிக்கிறது என்று சொல்லப்போவது ...இதில் எந்த வித கப்ரோமிஸும் இருக்கக்கூடாது ஆன் டைம் முடிஞ்சிருக்கணும் " என்று திமிராக கூறினாள் .

கண்களில் குறும்புடன் நிஸ்வந்த் "சூர் ஆஸ் மிஸ் ரக்ஷிதா செட் எல்லாமே சரியாய் நடக்கும் " என்றான் .
அங்கு இரு நபர்களுடைய பற்கள் உடையும் அளவுக்கு கடிக்க பட்டது . ஒன்று யஸ்வந்த் ஜெயதியின் தோரணை அதும் தனது சகோதரனிடம் .....அவளை கொள்ளும் ஆத்திரம் வந்தது அவனுக்கு .

மற்றொன்று அபி நிஷு பதில் கூறுகையில் மிஸ் ரக்ஷிதாவில் அழுத்தத்தை கூட்டி அவளை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டே குறும்பு புன்னகையுடன் கூறியது 'உன்னை நான் கண்டுகொண்டேனடி ' என்று கூறும் விதமாக இருந்தது .

ரஞ்சினி நிஷு யாஷுவுடன் நன்றாக பழகினாள் அதை எவரும் தடுக்கவில்லை அதுவே நிஸ்வந்த்திற்கு ஆறுதலாக இருந்தது .
.........................................................................................
ஆகிற்று இன்றோடு ஏ ஜே குழுமத்தின் கட்டிட வேலை ஆரம்பித்து மூன்று மாதம் ஓடிவிட்டது . அதில் இது வரை ஆர் ஆர் நிறுவனம் சந்திக்காத பிரச்சனைகள் என்று வரிசை கட்டிக்கொண்டு வந்தது .

ஒரு பொருளை ஆர்டர் செய்தால் தரமில்லாத பொருள் வந்து இறங்கியது . சம்பள உயர்வுக்கு ஊழியர்கள் போராடினர் . இவர்களின் வரைபடம் ஒன்றாக இருந்தால் கட்டிடம் வேறு விதமாக கட்டப்பட்டு இருந்தது . இடித்து இடித்து கட்டினர் .
யஸ்வந்த் இதில் எதோ சூழ்ச்சி இருப்பதாக எண்ணினான் . நிஸ்வந்தும் ஏதும் செய்ய முடியாத நிலையில் ஊழியர்களை மாற்றிக்கொண்டே இருந்தான் .

தவறு ஒருவர் செய்தால் அது அவர்களின் கவனக்குறைவு இல்லை சதி என்று எண்ணலாம் . இது அணைத்து பக்கத்தில் இருந்தும் வரும் குடைச்சல் எவ்வாறு சரி செய்வது என்று முழி பிதுங்கி நின்றனர் .
அப்பொழுது அவர்களின் நிறுவனத்தில் ஆடிட்டிங் நடைபெற்றது அப்பொழுது அதிர்ச்சிகரமான விஷயம் யஸ்வந்த் நிஸ்வந்த்தின் காதிற்கு வந்ததில் அதிர்ந்தனர் .

இவை அனைத்தும் தன்னால் என்று நிஸ்வந்த் கண்ணீர் விட்டான் . நிஷுவின் நிலைமை காண சகிக்காத யஸ்வந்த் அவ்விடம் விட்டு வேகமாக புறப்பட்டான் .
................................................................................................
ஏ ஜே குழுமத்தின் அருகில் இருக்கும் பார்க்கில் தனது மகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள் ஜெயதி . அவளின் பார்வைக்கு சற்றே தொலைவில் அவர்களின் ஆட்கள் பாதுகாப்பிற்காக நின்று இருந்தனர் .

அப்பொழுது ரஞ்சினி ஓரமாக செவரை ஒட்டிய புதரின் பின் ஒளிந்தாள் . அதை கண்டும் காணாமல் கண்ணை திறந்த ஜெயதி சிரிப்புடன் தனது மகளின் அருகில் சென்று "ரஞ்சி குட்டி மாட்டிக்கிட்டா " என்று ரஞ்சினியை தூக்கினாள் .

அப்பொழுது அவர்களின் பின் யாரோ குதிக்கும் சத்தம் கேட்டது . யாரென்று இருவரும் திரும்பி பார்த்தனர் "ஐ நிஷு அப்பா " என்று கைதட்டி குதூகலித்தாள் சிறுமி .

"அச்சோ குட்டிமா நான் யஸ்வந்த் மா " என்றான் யஸ்வந்த் .

குதித்தது நிஷு இல்லை என்பது ஜெயதிக்கு தெரிந்து அவனை முறைத்தாள் . அவளின் முறைப்பை கண்டுகொள்ளாமல் யஸ்வந்த் முன்னே வந்து ஜெயதியின் தோலில் இருந்த ரஞ்சினியை கொஞ்சினான் . அவளோ அவனின் நெருக்கம் எதோ தணலில் நிற்பதை போல் உணர்ந்தாள் . உடனே அவ்விடம் விட்டு நகர முற்பட்டாள் .

அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை என்னமோ இருக்குவதை போல் உணர்ந்தாள் குனிந்து அவளின் சிற்றிடையை பார்த்தாள் யஸ்வந்த்தின் கை அவளை அனைத்து இருந்தது . ஒரு நொடி திகைத்தாள் . அவனோ கண்களில் குறும்புடன் ரஞ்சியிடமே கவனம் இருப்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தான் .

அவனின் குரும்பை புரிந்து கடுப்பில் இருந்த ஜெயதி திரும்பி ராயை ஒரு பார்வை பார்த்தாள் . அதில் என்ன உணர்தானோ ராய் .
இரண்டு நிமிடத்தில் யஸ்வந்த்தின் போனிற்கு அழைப்பு வந்துகொண்டே இருந்தது . அலைபேசி விடாமல் அடிப்பதை உணர்ந்து அதை எடுத்து காதில் வைத்த அவனின் கை தானாக தளர்ந்தது .

இப்பொழுது ஜெயதியின் கண்ணில் குறும்பு பார்வை . மீண்டும் ராயை பார்த்தாள் . அவன் சம்மதமாக தலை அசைத்து முன்னே வந்து குழந்தையை வாங்க கை நீட்டினான் .

போக மறுத்த ரஞ்சியிடம் "அம்மு இப்ப நீ அபி அம்மா கிட்ட போ நான் வரேன் " என்று பதமாக கூறி அனுப்பி வைத்தாள் .
குழந்தையும் சென்றது . இவை அனைத்தையும் அலைபேசியை காதில் வைத்துக்கொண்டே கவனித்த யாஷு அவளை முறைத்தான் . அவளும் பதில் பார்வை நிமிர்வாக பார்த்தாள் .

யஸ்வந்த் ஏதும் பேசாமல் திரும்பி நடந்தான் . அவனின் நடை அவளின் கை சொடக்கின் ஒளியில் நின்றது "என்னை தொட்டதுக்கே உன்னோட கோடௌன் பூஊஊ " என்று கையை தட்டி ஊதினாள்.

அவளின் வார்த்தையில் சீற்றம் அடைந்த யஸ்வந்த் திரும்பி வந்து "தயிரியம் இருந்தால் முன்னே மோதி பார் இப்படி ஒரு பத்திரம் போட்டு அதில் நிஷு அறியாமல் கையெழுத்து வாங்கி பின்னாடி குத்துவது உனக்கே அசிங்கமாக இல்லை " வார்த்தைகளை அவளை நோக்கி கடித்து துப்பினான் .

"முதுகில் குத்துவதை பத்தி நீங்கள் பேசுவது ஏதோ சிரிப்பு மூட்டுவதை போல் இருக்கிறது .... அண்ட் லிசன் காண்ட்ராக்ட் போடறப்பவே எல்லாமே சரியாக பதிவு பண்ணிதான் கையெழுத்து வாங்கினோம் படித்துவிட்டு போடாதது எங்களின் தவறு இல்லை போ போய் இப்ப இருக்க கோடௌன் அதையாவது காப்பாத்து " என்று கூறி முன்னே நடந்து அவளின் அலுவலகம் நோக்கி சென்றாள் .

'அடக்கிறேண்டி உன் திமிரை' என்று மனதில் கருவிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் யஸ்வந்த் .
அவர்களின் இந்த சந்திப்பிற்கான காரணம் ஆர் ஆர் கட்டிட நிறுவனம் சரியான நேரத்தில் கட்டிடத்தை கட்டி முடிக்காவிட்டால் நஷ்ட ஈடாக கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கும் தொகை அவர்களின் அனைத்து சொத்தின் மதிப்பு . நிஸ்வந்த் உணராமல், படிக்காமல் கையெழுத்து போட்டு கொடுத்தாகிற்று அதை சாத்தியப்படுத்த ஜெயதி கட்டிட வேலை நடைபெறுவதில் காலதாமதம் செய்வதர்கு செய்த ஏற்பாடுகளை கேட்டவுடன் கொதித்துவிட்டான். அவளை ஒருவழி பண்ணவேண்டும் என்ற வெறியுடன் வந்தான் . எதோ உந்த தங்களின் வீட்டின் வாரிசுடன் விளையாடும் அவளை அணைக்கும் ஆவல் வந்து அவனை அறியாமலே அதை செய்தும் விட்டான் .
அதற்கு அவள் கொடுத்த பதில் அடி .. !!!
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பே உ(எ)ன்னை உனக்காக .....
அத்தியாயம் -10

யஸ்வந்த் கட்டிட வேலைகள் நடைபெறுவதில் ஜெயதியே முக்கிய தடையாக இருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டான் . நிஸ்வந்த் பொறுக்கமாட்டாமல் ஜெயதியை காண அவளின் அலுவலகம் நோக்கி நேரே சென்றான் .

ஜெயதியோ நிஸ்வந்த்தின் வருகை அறிந்து அவனை உள்ளே அனுப்புமாறு கூறினாள் . அவளின் அறையில் அவளை சந்திக்க சென்ற நிஸ்வந்த் அவளின் ஆளுமை நிறைந்த தோற்றத்தில் வாயடைத்து போனான் .

"எஸ் மிஸ்டர் நிஸ்வந்த் ப்ளீஸ் சிட்டௌன் " என்றாள் ஜெயதி .

அதில் ஒரு பெருமூச்சுடன் எதிரினில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் . இருவருமே சற்று நேரம் அமைதி காத்தனர் .

நிஸ்வந்த் தான் முதலில் தொடங்கினான் . "ஏன் இப்படி ஜெயதி " என்றான்
.
'உங்களுக்கு தெரியாது ' என்ற பார்வையை பார்த்தாள் ஜெயதி . முகத்தில் ஏளனமாக ஒரு முறுவல் .

"எனக்கு புரியுது எல்லாம் அபிக்காக அவள் என் உயிர் , அவளுக்காக என்று கூறி இருந்தால் நான் என் பங்கு சொத்து எல்லாத்தையும் எழுதி கொடுத்திருப்பேன் அதை விட்டு இப்படி எனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து எனது முதுகில் குத்தி இப்பொழுது எங்கள் மொத்த நிறுவனத்தையும் வீழச்செய்ததில் என்ன கண்டாய் " என்றான் நிஸ்வந்த் .

முதலில் அவன் பேசட்டும் என்று அழுத்தமான பார்வையுடன் அவனையே பார்த்து இருந்தாள் .அவனே தொடர்ந்தான் " இப்பொழுது என் சொத்து மட்டும் இல்லாமல் என் கூட பிறந்த பாவத்திற்காக என் யாஷு உழைப்பையும் கேள்விக்குறி ஆகிருக்கு ? போதும் நான் அபியிடம் பேசுறேன் அவள் என்னை புரிந்துகொள்ளுவாள் . என்னை தண்டிச்சுக்கோ என் யாஷை விட்டுவிடு " என்றான் . அதில் அவனின் சகோதர பாசம் மேம்பட்டு இருந்ததை உணர்ந்து கொண்டாள் ஜெயதி .

"வெள் மிஸ்டர் நிஸ்வந்த் இத்தனை வருஷம் உங்களை ..உங்கள் தவறையும் மீறி உங்களை உங்களுக்காக நேசித்த ஒரு சிறிய பெண்ணை ஏமாற்றிய குற்ற உணர்வே இல்லாமல் இருந்த பொழுது எங்கே போனது இந்த உணர்வெல்லாம் ...உங்களை நம்பிய ஒரு காரணத்திற்காக உயிருடன் ஒருத்தியை கொன்றுவிட்டு இப்பொழுது உங்கள் தம்பிக்காக வருந்துகிறீர்களா ? " என்றாள் ஏளனத்துடன் .

ஆவேசமாக எழுந்து "உங்கள் ரத்த சொந்தம் என்றால் துடிக்குது இல்ல இதே துடிப்பு ஒரு அப்பாவி பெண்ணை வாழ்வை நாசம் செய்யும் பொழுது எங்கே போனது " கோபத்துடன் அவள் கேட்ட கேள்விகளுக்கு அவனிடம் பதில் இல்லை .
"என்ன சார் தெரியும் உங்களுக்கு அவள் எப்படி எங்க கைக்கு கிடைச்சான்னு தெரியுமா ... அவளை நீங்க தேடினேன் மட்டும் சொல்லாதீங்க அக்கறையுடன் தேடி இருந்தால் இந்நேரம் கண்டுபிடித்திருக்கலாம் . " என்றாள் அவள் .

"ஆனால் நான் தேடினேன் மா அவள் என் உயிர் அவளை விட்டு என்னால் இருக்க முடியவில்லை அவளுக்கு விபத்து என்று துடித்தேன் ...அவள் இல்லாத வாழ்கை வெறுமையாக உணர்ந்தேன் " என்றான் நிஸ்வந்த் வருத்தத்துடன் .

"என்ன வருத்தம் ? என்ன துயரம் ? ஒன்னும் செத்து போய்டலயே ? " என்று ஆக்ரோஷமாக கேட்டாள் ஜெயதி .

அப்பொழுது பட்டென்று கதவு திறந்து உள்ளே வந்த யஸ்வந்த் ஜெயதியை நெருங்கி அவள் கழுத்தினை பிடிக்க சென்ற நிமிடம் நிஸ்வந்த் சுதாரித்து யஸ்வந்த்தை தடுத்தான் . நிஷு ஏ ஜே குழுமத்தின் அலுவலகம் சென்று இருக்கிறான் என்று அறிந்தவுடன் நிச்சயம் ஜெயதியிடம் சமாதான புறா தூது விட போயிருப்பான் என்று சரியாக கணித்த யஸ்வந்த் நேராக இங்கு வந்தவன் ஜெயதியின் வார்த்தைகள் கேட்டு கோபத்தின் உச்சிக்கு சென்றான் ' எவ்வாறு அவள் எனது உடன் பிறப்பை இப்படி பேசலாம் ' என்று எண்ணினான் .

"ஹே என்னடி ஓவர் ஹா பேசுற அவன் தப்பு பண்ணினதாவே இருக்கட்டும் அதில் உன் தங்கைக்கும் சரி பங்கு இருக்கு அதற்கு என்ன வேணும்னாலும் பேசுவிய நீ " என்று நிஸ்வந்த்தின் கைகளில் இருந்துகொண்டே சீறினான் யஸ்வந்த் .
"நிஷு என்னை விடு " என்று திமிறினான் . அதற்குள் எவ்ளோ தடுத்தும் உள்ளே சென்ற யஸ்வந்த்தை நினைத்து கலங்கிய ஷில்பா பாதுகாவலர்களுடன் உள்ளே நுழைந்தாள் .

அனைவருமாக சேர்ந்து யஸ்வந்த்தை வெளியேற்றினர் . நிஸ்வந்த் ஜெயதியின் முன் வந்து "சாரி ஜெயதி ...யாஷ் வருவான்னு நான் எதிர்பார்களை " என்றான் தலையை தொங்கப்போட்டு .

ஜெயதி ஏதும் கூறாமல் வெளியே போகுமாறு கை காட்டி "ப்ளீஸ் " என்றாள் .

நிஸ்வந்த்தும் தலையை தொங்கப்போட்டு வெளியேறினான் .

ஷில்பா உள்ளே நுழைந்தாள் "ப்ளீஸ் லீவ் மீ அலோன் ஷில்பா " என்று கூறி ஜன்னலின் அருகினில் சென்று தொலைதூரத்தை வெறித்தாள்.
.............................................................................................
அன்று ஜெயதியின் அறையினுள் நடந்தவைகள் அனைத்தும் அபி அரிவாள் .ஏதும் பேசாமல் ஜெயதியை கவனிக்கலானாள் . அவளின் நடவடிக்கையில் ஒரு தடுமாற்றம் இருப்பது போலவே தோன்றியது அபிதாவிற்கு .
என்னவென்று கேட்டாலும் அவள் கூறப்போவது இல்லை பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலையில் அபி இருந்தால் . ஜெயதிக்கு அதன் பிறகு வந்த நாட்களில் அந்த கட்டுமான வேலையில் எந்த இடையூறு பண்ணும் எண்ணமும் இல்லை . வேலைகளை எளிதாக நடக்க விட்டாள் .

மீண்டும் ஆர் ஆர் குழுமம் ஏறுமுகத்தை கண்டது . யஸ்வந்த் அதில் மகிழ்ச்சி கொண்டான். நிஸ்வந்தோ யோசனையை தாங்கினான் .

"நிஷு பாத்தியா நம்ம பங்கு வர்த்தகம் ஏறுமுகத்தில் இருக்கிறது இப்பொழுது அந்த திமிர் பிடிச்சவ மூஞ்சியை எங்க கொண்டு போய் வச்சுக்குவா " என்று கேட்டான் யஸ்வந்த் .

'தப்பா கணிக்கிற யாஷ் ஜெயதி மனம் வைத்ததால் தான் ஏறுமுகம் ...அவள் இந்நேரம் நம் வழியில் வந்திருந்தாள் இருந்த இடம் தெரியாம போயிருப்போம் ' என்று மனதில் எண்ணினான் நிஷு .
இதோ இதோ என்று புனாவில் ஏ ஜே குழுமத்தின் கட்டிட வேலையும் நிறைவு பெற்றது . ஜெயதி அதிகம் அங்கு வருவது இல்லை .

அபி முக்கியம் அவசியம் என்றால் வருவாள் . ஷில்பா மட்டுமே அடிக்கடி வந்து வேலைகள் நிலவரம் என்று கண்ணுற்று செல்வாள் . யஸ்வந்த்தோ "எங்க அந்த திமிர் பிடிச்சவ ஏதும் பண்ண முடிலைனு இங்க வரதையே நிறுத்திட்டாளா " என்று எள்ளலாக கேப்பான் .

ஷில்பா அதற்கு கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வாள் . அதற்கும் நிஷுவிடம் பொருமி தள்ளுவன் யாஷ் "அந்த திமிர் பிடிச்சவ தோழிதானே அதான் இவளுக்கும் அந்த திமிர் "

இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் ஜெயதியை குறியீடாக குறித்து பேசுவதை யஸ்வந்த் வளமை ஆக்கிக் கொண்டான் . நிஸ்வந்தும் மௌனமாக நடப்பதை கவனிப்பான் .

தொழில் துறை அமைச்சரை அழைத்து புனாவின் கிளையை திறக்க ஏற்பாடு செய்து இருந்தாள் ஜெயதி ஆனால் அவள் வரவில்லை . லீலாவதி , ஷில்பா , அபி மற்றும் ரஞ்சினி குட்டி நால்வரும் வந்திருந்தனர் .

யஸ்வந்த்தின் கண்களோ ஜெயதியின் வருகையை எதிர்நோக்கி வாசலை பார்த்தவண்ணம் இருந்தது . நிஷ்வந்த் அவனின் நடவடிக்கை பார்த்து "யாஷ் ஏன் இப்படி இருக்க " என்று வினவினான்

"அந்த திமிர் பிடிச்சவ வரலையா நிஷு " என்று கேட்டான் யாஷ் . நிஷு மனதில் பலமாக யோசிக்க ஆரம்பித்தான் . தனது உடன் பிறப்பிடம் இருந்து பதில் வராததை கண்டு "என்ன நிஷு ?" என்று கேட்டான் யாஷ் .

"இல்லை நீ ஒரு பொண்ண பத்தி அதிகம் பேச மாட்ட ....ஆனால் யாரென்று தெரியாத நாட்களில் இருந்து ஜெயதியை பற்றி மட்டுமே என்னிடம் அதிகம் பேசற ...அது நல்லதோ கெட்டதோ அவளின் பேச்சுக்கள் உன்னிடம் அதிகம், இப்பொழுது கூட அவளின் வரவை எதிர் நோக்கி இருக்க " என்று மனதில் பட்டதை பட்டென்று கேட்டான் நிஸ்வந்த் .

ஒரு நொடி முழித்த யஸ்வந்த் " ஹே அதெல்லாம் இல்ல பார் நீ என்ன செய்தும் என்னுடைய வேலைகளையே வளர்ச்சியையோ உன்னால் ஒன்றும் பண்ண இயலாது என்று காட்டவே அவளை தேடினேன் " அவன் கூறிய சமாதானம் யாருக்கென்று அவனே அறியான் .

"யாஷ் ஒன்னு தெரிஞ்சுக்கோ நம்மால் ஜெயதியின் விளையாட்டை சமாளிக்க இயலாமல் தோய்ந்து போனோம் ...இப்பொழுது நம் நிறுவனம் வளர்ச்சி கொண்டிருக்கு என்றால் அது ஜெயதி போதும் இந்த விளையாட்டு என்று எண்ணியதால் இருக்கலாம் ..." தெளிவாக சொன்னான் நிஷு .

"என்ன நிஷு ஏதோ அவ பிச்சை போட்டு நம்ம பொழைச்ச மாதிரி பேசுற " பொரிந்து தள்ளினான் யாஷ் .
"உண்மை சில நேரங்களில் கசக்கும் யாஷ் ...ஒத்துக்கொள்ள வேண்டும் நம்மை விட ஜெயதி சிறந்த தொழில் அதிபர் . அவள் எண்ணியதால் மட்டுமே இன்று நம்மால் இந்த கட்டிடத்தை முடிக்க முடிந்தது " நிதர்சனத்தை எடுத்துக்கூறினான் நிஷு அதில் கோபம் கொண்ட யாஷ் அவ்விடம் விட்டு நகர்ந்தான் .

நிஷு தன்னவளை காணும் பொழுதெல்லாம் கண்ணாடியை பார்ப்பதை போன்று தள்ளி நின்றே ரசித்தான் . எங்கே அருகினில் சென்றால் அந்த கண்ணாடியை உடைத்து விடுவோமோ என்று எண்ணி அஞ்சினான் . இது மெல்ல மெல்ல சரி செய்ய வேண்டிய விஷயம் என்பதை உணர்ந்து கொண்டான் . அவன் அபியை பார்த்துக்கொண்டு இருக்கையில் யாஷை நோக்கி ரஞ்சினி தத்தி தத்தி நடந்து சென்றாள் .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பே உ(எ)ன்னை உனக்காக .....
அத்தியாயம் -11

அதன் பிறகு பூனாவில் இருக்கும் அலுவலகம் தொடங்கி அங்கு வேலையும் தொடங்கியாகிற்று . எதாவது பொது நிகழ்ச்சிகளில் அபியை நிஸ்வந்த் சந்திக்க நேர்ந்தால் ஆவலுடன் பேச பெரும் முயற்சி எடுப்பான் . அவளோ அவனை கண்டுகொள்ளவே மாட்டாள் .

அன்று மாலை ஷில்பா மற்றும் ஜெயதி சற்று நேரம் தோழிகளாக பேசிக்கொண்டு இருந்தனர் . “எஸ் சொல்லு ஷில்பா உனக்கு அமெரிக்கா போகும் எண்ணம் இல்லையா ?” புன்னகையுடன் தோழியை கேட்டாள் .

“இப்பதான் அபி சரி ஆகிருக்கா ...உன்முகத்தில் சிரிப்பு என்பதை இப்பதான் பார்க்க முடியுது....எல்லா பிரச்னையும் சரி ஆகட்டும் போலாம் ” என்றாள் ஷில்பா .

தோழியின் அன்பில் நெகிழ்ந்த ஜெயதி “கொஞ்ச நாள் நீ போய் உன் அம்மாவுடன் இருந்துவிட்டு வா நான் இங்க பார்த்துகிறேன் “ .

“ எங்க பார்த்துப்ப நீ உன் வேலை ஆபீஸ் ரஞ்சினி என்று சுத்திட்டு இருப்ப ...இப்பவே ரொமான்ஸ் கிங் நிஸ்வந்த் எங்க பார்த்தாலும் அபி பின்னாடியே சுத்தறார் நான் போய்ட்டா அவருக்கு கொண்டாட்டம் தான் ” என்றாள் ஷில்பா .

“ எனக்கு தெரியும் அவர் அபியை துரத்துவதும் இவள் ஓடி ஒளிவதும் .... இருவரும் உயிராய் நேசிக்கிறார்கள் என்ன காரணம் என்று தெரியவில்லை நிஸ்வந்தின் நடவடிக்கையில் இவள் மனதால் பாதிக்க பட்டு குடும்பத்தை இழந்து வேரறுந்த மரம் போல் துவண்டு போனாள் ...இருவரும் அமர்ந்து பேசினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து இருவரும் சேர்ந்து வாழலாம் .” என்றாள் ஜெயதி .

“ ஹே என்ன சொல்ற நீ இருவரும் சேர்ந்து வாழ்வதா ...இதற்கா இத்துணை கஷ்டப்பட்டு நஷ்டம் வரச்செய்து பலி தீர்த்த ” அதிர்ந்தாள் ஷில்பா .

“ நஷ்டம் ஏற்படுத்தியது பாடம் புகட்டவே ...ஆனால் என்னுடைய குறிக்கோள் அவர்கள் சேர்ந்து வாழ்வது” என்றாள் ஜெயதி .

“அபி அவரை பார்த்தாலே ஓடுறாளே ...” தனது சந்தேகத்தை கேட்டாள் ஷில்பா .

“ அது எங்கே நிஷ்வ்ந்த்தை பார்த்தால் அவர் பின் சென்றுவிடுவோமோ என்ற பயத்தில்.... அவள் அவரை மனதார விரும்புகிறாள் இல்லையென்றால் எப்படி அவ்ளோ துயரத்திலும் தனக்கு மகள் பிறந்தால் ரஞ்சனி என்றும் மகன் பிறந்தால் ராஜ்குமார் என்றும் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லுவாள் ...காரணம் கேட்டால் அது என் நிஷுவின் ஆசை என்றாள் ” தங்கையின் காதலை கண்டு மெய்சிலிர்த்து பேசினாள் ஜெயதி .

“ஒஹ் ஒருவேளை இருவரின் குழந்தை என்று ஆசைப்பட்டு சொல்லிருக்கலாம் ...” என்று இழுத்தாள் ஷில்பா.

“நோ அன்னைக்கு நிஸ்வந்த் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார் என்பதற்காகவே இந்த விளையாட்டு போதும் என்று கூறி என் கையை கட்டி போட்டவளும் அவளே ” என்றாள் .

அதிர்ந்த ஷில்பா “ என்ன சொல்ற ?” என்று வினவினாள் .

“ ஆம் அந்த கட்டிட வேலைகளை தடுத்து பெரும் நஷ்டம் ஏற்படுத்த விரும்பினேன் ஆனால் முட்டால் காதலால் காதலனை காப்பாற்ற அன்று இரவு வேண்டாம் விட்டுவிடு என்று என்னிடம் அழுதாள் .” முகத்தை சுருக்கி வலியுடன் கூறினாள் ஜெயதி .

இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த அலுவலக அறையில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர் . வெளியே எதிர்ச்சியாக இதை கேக்க நேர்ந்த அபிக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது . பழைய நினைவுகள் மேல் எழும்பியது . தன்னை கட்டுப்படுத்த இயலாமல் தனது அறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டு கதறினாள்.

அன்றைய இரவு அபிக்கு தூங்கா இரவாக மாறியது . இங்கு நிஷ்வந்தும் அன்றைய இரவை தூங்க இரவாக பழைய நினைவுகளுடன் கழித்தான் .

மூன்று ஆண்டுகளுக்கு முன் .......
இரபத்தியாறு வயது கட்டிளங்காளைகளாக மும்பை மாநகரை சுற்றி திரிந்தனர் யஸ்வந்த் மற்றும் நிஸ்வந்த் . இருவரும் ஒரே நேர்கோட்டில் செல்பவர்கள் . அதில் அவர்களுக்கு என்று தனி சாம்ராஜ்ஜியம் ,தனி கோட்பாடுகள் .

வளர்ந்த பிள்ளைகள் சுயத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணிய அவர்களின் வீட்டின் பெரியவர்கள் அவர்களை அவர்கள் போக்கில் விட்டனர் . வெளிநாட்டில் முழுதாக படித்து வந்த இருவரும் கோட்பாட்டுக்குள் வாழ விரும்பவில்லை . வீட்டின் பெரியவர்களுக்கு தெரியாமல் இருவரும் மது மாது புகை பப் என்று சந்தோசமாக களித்தனர் . அதே நேரம் தொழிலும் செம கெட்டி எதிரிகள் என்று எவரும் இருக்க கூடாது என்பதில் இருவரும் கருத்தாக இருந்தனர் .

அப்பொழுதுதான் தொழில் முறை கூட்டத்தில் தொழிலதிபரான ரோஹனுடன் அவளை பார்த்தான் நிஸ்வந்த் .

“ ஹே யாஷ் யாரு அந்த பொண்ணு செம கியூட் ...அழகா பொம்மை மாரி இருக்கா ” என்றான் நிஸ்வந்த் .

ரோஹன் வளந்துவரும் தொழில் அதிபர் அவனின் வளர்ச்சி தங்களை பாதிக்குமா என்று எண்ணி அவனை பற்றி விசாரித்து அறிந்து வைத்திருந்தான் யாஷ் . ரோஹனின் தந்தை சிறு முதலீட்டில் தொழில் ஆரம்பித்து தவறினர் அதை எடுத்த ரோஹன் இப்பொழுது தான் கொஞ்சம் முன்னேற்றம் காண்கிறான் . ரோஹனின் தாய் பேராசை கொண்டவர் . மகளை பெரிய இடத்தில திருமணம் முடித்தால் மகனுக்கு சொத்துடன் பெண் வரும் என்ற எண்ணம் .

அதற்காகத்தான் இன்று பிடிக்காத இடத்திற்கு தனது மகள் அபியை சீவி சிங்காரிச்சு அனுப்பிவைத்திருக்கார். அபியின் கண்களில் தெரிந்த மருட்சி யஸ்வந்த்தை யோசிக்க வைத்தது .

“நிஷு அவங்க பேரு அபி...அபிதா ரோஹனின் தங்கை ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்ற கோட்பாடுகளுடன் வளந்தவங்க ...அந்த குடும்பத்தில் தப்பி பிறந்த பெண் தன் மகளின் அழகை காட்டி பணக்காரரை வளைத்து போடுவது இவர்களின் அம்மா லக்ஷ்மியின் திட்டம்....இப் ஆம் நோட் ராங் இன்னைக்கு கூட அவங்க சொல்லித்தான் இவங்க இந்த பார்ட்டிக்கு வந்திருக்கனும் ” என்றான் .

“ரியலி ஐ லைக் ஹேர் “ என்றான் நிஸ்வந்த் .

பதறிய யாஷ் “வேண்டாம் நிஷு அவங்க உனக்கு செட் ஆக மாட்டாங்க ...நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று என்னும் ஆட்கள் ...அவங்க இப்படித்தான் வாழனும் இல்லை சாகனும் என்று யோசிக்கும் நபர் .” என்று எச்சரித்தான் யாஷ் .

“ஹ்ம்ம் ” என்றுகூறி நகர்ந்த நீஸ்வந்த்தின் மனதில் அவளின் மருண்ட விழிகள் வந்து ஆட்சி செய்தது .

யஸ்வந்த் தொழில் விஷயமாக சென்னை சென்றிருந்த சமயம் நிஸ்வத்திற்கு அபியை சாலையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது .

சாலையில் தங்கள் வீடு கார் பழுதாகி நின்றுவிட அபி கையை பிசைந்து கொண்டு சுற்றியும் பார்வையை சுழற்றினாள் . தூரத்தில் தனது ஆடி காரில் வந்துகொண்டு இருந்த நிஷு “ஹே பூனைக்குட்டி ”

“எதுக்கு இப்படி முழிச்சுகிட்டு நிக்கிறா ....அது சரி நாம பாக்கிரப்ப எல்லாம் முழிச்சுகிட்டுதான் நிக்கிறா ....” என்று தனக்குள் கூறிக்கொண்டே அபியின் அருகில் சென்று தனது காரை நிறுத்தினான் . தனது அருகில் ஒட்டினாற்போல் நின்ற காரை பார்த்து பயந்தாள் அவள் .

“ஹே பூனைக்குட்டி நீ இவ்ளோ பயந்த சுபாவமா ? “ என்று எண்ணிக்கொண்டே தனது காரை விட்டு கீழே இறங்கினான் நிஷு .

ஒரு நொடி அவனை உற்று பார்த்த அவள் அவள் அவனின் பின் பார்வையை செலுத்தினாள்

‘ஒஹ் அம்மணிக்கு நம்மள பத்தி தெரியும்போலவே ’ என்று எண்ணிய நிஷு “ஹ்க்கும் யாஷ் சென்னை போயிருக்கான் ஆம் நிஸ்வந்த் “என்று கூறினான் .

“ஹாய் ” என்று கூறி முறுவல் அளித்தால்.

“என்ன இங்க நிக்கிற ” எடுத்தவுடன் ஒருமையில் பேசும் அவனை விழி அகற்றாமல் பார்த்தாள் . அவனும் என்ன செய்வான் நித்தமும் அவளின் நினைவில் உருகி கரையும் அவனுக்கு அவள் அந்நியமாகவே தெரியவில்லை .

“நீ எப்டியும் என்னை விட சின்ன பொண்ணுதானா அதான் . நீ ரோஹனுடைய தங்கை தானே ?” என்றான் . அவள் ‘ ஆம் ‘ என்னும் விதமாக தலை ஆட்டினாள் .

“ என்னை முன்பே தெரியுமா ? “ என்றான் .

இவள் அதற்கும் தலை ஆட்டி வைத்தாள் . என்னடா இது பூம் பூம் மாடு மாரி தலையை தலையை ஆட்டுறா என்று எண்ணினான் .

“ என்னாச்சு “ என்று மீண்டும் வினவினான் .

“ அது அது கார் ரிப்பேர் நான் காலேஜ் போகணும் எக்ஸாம் ...அதான் பிரிண்ட்ஸ் வந்தா லிப்ட் கேட்டு போலாம்னு ” என்று இழுத்தாள் .

“ வா நான் ட்ரோப் பண்றேன் “ சற்றும் யோசிக்காமல் கூறினான் அவன் .

அவள் திகைத்தாள் அதற்குள் டிரைவர் அவளை பார்த்து “ நீங்க அவரோட போங்க சின்னம்மா பயம்வேண்டாம் உங்க அண்ணா கிட்ட சொல்லிடறேன் “ என்றார் .

அவளையே பார்த்துக்கொண்டு இருந்த நிஸ்வந்தை பார்த்து ” போலாம் ” என்றாள் தயங்கிக்கொண்டே .

போகும் வழியில் அவளின் படிப்பு வீடு என்று அனைத்தை பற்றியும் கேட்டறிந்தான் . அவள் தயங்கிக்கொண்டே பதில் கூறினாள் . கல்லூரி வரவும் இறங்கி உள்ளே ஓடினாள் .

நன்றி கூட சொல்லாமல் போகும் அவளை பார்த்த அவனுக்கு சிரிப்பு தான் வந்தது . வயது தான் பதினொன்பது குணம் குழந்தை போல என்று எண்ணிக்கொண்டான் .

இரவு அடுத்த பரிட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்த அவளின் அருகில் இருந்த அவளின் தொல்லை பேசி தொந்தரவு குடுத்தது .

எடுத்து பார்த்தவள் இரவு எதோ தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு என்றவுடன் எடுக்காமல் தவிர்த்தாள் . மீண்டும் தொல்லை பேசி தொல்லை குடுத்தது .

எரிச்சலுடன் காதில் வைத்து “ ஹலோ “ என்றாள் .

“ எக்ஸாம் எப்படி பண்ணீன” என்று ஆழ்ந்த ஆண் குரல் வினவியது . பயத்தில் அவளின் உள்ளங்கை வேர்த்து கைபேசி நழுவ பார்த்தது அவளுக்கு .

“ ஹெலோ...ஹெலோ ஊவ் இஸ் திஸ் ?” என்றாள் திக்கிகொண்டே .

“ ட்ரோப் பணினவங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டிங்களா ?” என்றது அந்த குரல் .

கண்டுகொண்டாள் அவள் அவனை கண்டுகொண்டாள் உதடு துடிக்க மெதுமைவாக “நிஷு ” என்றாள் .

அவன் சத்தமாக சிரித்து ”நோட் பேட் ” என்றான் .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -12

ஆம் அவளுக்கு அழைத்தது நிஸ்வந்த் . அவனுக்கு அபிதாவை கண்டவுடன் ஒரு பிடித்தம் . அவளின் முதிர்ச்சியில்லாத குழந்தை தனமான முகம் சற்றே மேல்தட்டு வர்க்கத்தில் பிறந்தாலும் இன்னும் கலாச்சாரத்தை மதிக்கும் அவள் பாங்கு ...கன்னியமான உடை என்று அணைத்து வகையிலும் அபிதா அவளின் நிஷுவை கவர்ந்தாள் .


யாஷ் சென்னை சென்று திரும்புவதற்குள் இருவரின் தொலை பேசி வாயிலான நட்பு வலுப்பெற்றது . முதலில் தயங்கிய அபிதா நிஸ்வந்தின் பேச்சினால் கவரப்பட்டாள் . பத்தொன்பது வயது பேதை பேராசை கொண்ட அன்னையிடமோ ....தொழில் பின் ஓடும் தமயனிடமோ எதையும் பகிர்ந்துகொள்ள முடியாமல் மனதில் மருகினாள் . அதற்கு என்று ஒருவன் தானாக வந்து தோல் கொடுக்கவும் என்ன ஏது என்று ஆராயாமல் நெருங்க ஆரம்பித்தாள் .

ஊரில் இருந்து வந்த யாஷ் நிஷுவிடம் “நிஷு உன் முகத்தில் எதோ ஒரு மாற்றம் தெரியுதே " என்றான் .

புன்னகையுடன் "அப்படி என்ன மற்றம் தெரியுது யாஷ் " என்றான் நிஷு.

"அத தான் நானும் யோசிக்கிறேன் ....! ...ஹ்ம்ம் நான் ஊரில் இல்லாத பொழுது என்ன நடந்தது நிஷு " என்றான் .

"ஹ்ம்ம் ஆடு நடந்தது,மாடு நடந்தது ஏன் நான் கூட நடந்தேன் ! " நிஷுவின் குரலில் ஒரு துள்ளல் .

"மொக்க போடாம மட்டேற்கு வாடா " சலித்துக்கொண்டான் யாஷ் .

அப்பொழுது அவர்கள் இருவரின் நடுவில் மேஜை மேல் இருந்த நிஷுவின் கைபேசி அவனை அழைத்து . இருவரின் பார்வையும் திரையின் மேல் தெரிந்த பிம்பத்தில் விழுந்தது . ஒருவனின் முகம் பிரகாசம் ஆனது ஒருவனின் முகம் யோசனையை தத்தெடுத்தது .

"சொல்லுமா " என்று பேசிக்கொண்டே இருக்கைவிட்டு எழுந்து ஜன்னலின் அருகினில் சென்று முகம் விகாசிக்க பேசிக்கொண்டு இருந்தான் நிஸ்வந்த் . யஸ்வந்த்தின் முகம் பெரும் குழப்பத்தை சுமந்திருந்தது .

வெகு நேர உரையாடலின் பொழுது எதார்த்தமாக திரும்பிய நிஸ்வந்த் யஸ்வந்த்தின் முகம் கண்டு இணைப்பை துண்டித்து யாஷ் முன் வந்து அமர்ந்தான் .

"சொல்லு யாஷ் " என்றான் இயல்பாக .

"நிஷு நீ என்ன பன்னிட்டு இருக்க ....நிச்சயம் இது சரிவராது ..." என்றான் யஸ்வந்த் . அவனின் குரலில் ஆதங்கம் வெளிப்பட்டதை உணர்ந்தான் நிஸ்வந்த் .

"நீ என்ன யோசிக்கிறனு புரியுது யாஷ் ....ஹ்ம்ம்ம் என்னால அபிதாவை பார்த்த நாளில் இருந்து அவளின் நியாபகத்தை தடுக்க முடில ...எதார்த்தமா ஒரு நாள் பார்க்க நேர்ந்தது ..." பேசிக்கொண்டு இருக்கும்போதே பாதியில் நிறுத்தி யஸ்வந்த்தின் முகம் நோக்கினான் . யஸ்வந்த்தோ நீ சொல்வதை சொல் என்ற பாவனையில் அழுத்தமாக உடன் பிறப்பின் முகம் நோக்கினான் .

"பார்த்ததில் இருந்து ஒரு வித தவிப்பு அவளுடன் பழக வேண்டும் என்று ... மற்ற பெண்களை பார்க்கும் போது பழகும் போதோ இல்லை தனிப்பட்ட நேரங்களின் பொழுதோ வராத ஒரு உணர்வு இவளிடம் தோன்றியது சரி இவளுடன் பழகினால் அந்த உணர்வு போய்விடும் என்று எண்ணி பழகி பார்த்தேன் ...." நிஷுவின் விழிகள் கவிதை பேசின . யாஷ் அதை கவனிக்க தவறவில்லை .

"பழகினால் ஒவ்வொரு நாளும் புதிதாக தெரிகிறாள் ...என்னை வேறு ஒரு விதமான சுகமான உலகிற்கு அழைத்து செல்கிறாள் ...மற்றவர்களை போல் சிறிது நேர இன்பத்திற்கான பழக்கம் போல் தோன்றாமல் இவளுடனான பந்தம் வாழ்நாள் முழுமைக்கும் வேண்டும் என்று தோன்றுகிறது யாஷ் " கனவில் மிதந்து கொண்டே சொன்ன அவனின் கண்களில் தெரிந்த அப்பட்டமான காதலில் பயந்தான் யாஷ் 'இது சாத்தியம் ஆகுமா ? ' என்ற கேள்வி அவனுள் தோன்றாமல் இல்லை .

"நிஷு இது சரி வருமா ? " மனதில் தோன்றியதை கேட்டான் யஸ்வந்த் .

புரியாமல் பார்த்தான் நிஸ்வந்த் . "நிஷு யூ ஆர் இன் லவ் ... " என்றான் யாஷ் .

அவனின் மனதை அவனே அறியவில்லை . யஸ்வந்த்தின் கூற்றில் நிஸ்வந்த் அவனுக்குள் சிந்தனையில் ஆழ்ந்தான் . "நிஷு உன் முகம் பார்த்தாலே தெரியுது நீ அவங்களை காதலிக்கிறன்னு ...ஆனால் இது சரி வருமா ? நான் கேள்விப்பட்ட வரைக்கும் அபிதாவிற்கு வாழ்வில் ஒழுக்கம் முக்கியம் முக்கியம் ...நம்மளை நமக்கே தெரியும் ...நல்லா யோசி நிஷு தேவை இல்லாமல் ஒரு பெண்ணின் மனதில் ஆசை வளர்த்து விடாதே ... நாம் அன்றாடம் சந்திக்கும் பெண்கள் போல் இல்லை அபிதா " தனக்கு தோன்றியதை சொல்லிவிட்டான் யஸ்வந்த் .

இரட்டையர்களின் பலமே அவர்களுக்கு முன் அவர்களின் நுண் உணர்வுகளே அவர்களுடைய ஒட்டி பிறந்த உயிர் கண்டுகொள்ளும் . பெரும்பாலும் இரட்டையர்களில் ஒருவர் சொல்லாகவும் மற்றுமொருவர் செயலாகவும் இருப்பர் .

நம் அனைவருக்குமே நம்முடைய நிழல் நம்மை தொடரும் இரட்டையர்களை பொறுத்தவரை அவர்களின் நிழலுக்கு உயிர் உண்டு . யஸ்வந்த் கூறியதை கேட்ட நிஸ்வந்த் சிந்தனைவயப்பட்டான் .'யாஷ் சொல்வது போல் இது சரி வருமா ....அவளின் குணத்துக்கும் எனக்கும் பொருந்துமா ...அவள் சின்ன பெண் . முதலில் இது காதல் தானா ...? ' என்ற கேள்விகளுடன் நிஸ்வந்த் யோசித்தான் .

யஸ்வந்த்தும் நிஸ்வந்த் யோசிக்க இடமளித்து நகர்ந்தான் . தனக்குள் ஆழ்ந்து யோசித்த நிஸ்வந்த் இது காதலா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அபிதாவுடன் பேசுவதை தவிர்த்தான் . அபிதாவின் விரல்கள் நிஸ்வந்திற்கு அழைப்பு விடுத்தே தேய்ந்து போயின . நிஸ்வந்த் நிலை இல்லாமல் தவித்தான் . என்றும் சொல்லாக யஸ்வந்த் இருப்பான் . செயலாக நிஸ்வந்த் இருப்பான் .

நிஷு அபிதாவை தவிர்த்து வந்த சில நேரங்களில் சொல்லாகவும் செயலாகவும் யஸ்வந்த்தே இருக்கும் கட்டாயத்தினுள் சென்றான் . யஸ்வந்த்திற்கு அவன் உடன் பிறப்பின் தவிப்பு புரியாமல் இல்லை . ஒரு நாள் அபிதாவின் கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆர் ஆர் குழுமத்தின் ஒட்டி பிறந்த ரெட்டை இளவரசர்களை அழைத்திருந்தனர் .

நிஸ்வந்த் வர மறுத்துவிட்டான் . அழைப்பு இருவருக்குமானது வேறு வழி இல்லாமல் யாஷ் மட்டும் சென்றான் .

அபிதா இத்துணை நாட்களில் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ள கிடைத்த உற்ற தோலும் அவளை விட்டு விலகியதில் கலங்கினாள் . அபிதாவிற்கு அவளின் தந்தை வழி பழக்கம் அதிகம் . தமிழ்நாட்டில் கிராமத்தில் வளர்க்கப்பட்டவர் தனது மகளையும் அதே வழியில் வளத்தார் . இதுவே அவளுக்கு வினையாகி போனது . லட்சுமி போன்ற தாட்பீகம் பேசும் அன்னையுடன் அவள் தினமும் போராட வேண்டிய நிலை .

அவளின் குணத்தால் நவநாகிரக வளர்ச்சிக்கு பேர்போன மும்பையில் தனித்து தெரிந்தாள் . நண்பர்கள் என்று எவருமே இல்லை . நிஸ்வந்த் வழிய வந்து பேசவும் முதலில் தயங்கினாலும் அவனை மீறி அவனிடம் வெளிப்பட்ட அக்கரையில் தனது தந்தையை கண்டாள் . அவனும் கடந்த நாட்களில் அவளை தவிர்ப்பதை உணர்ந்து தவித்து போனாள் . லட்சுமி சொல்வதற்கு முன்பே ரோஹனுடன் அணைத்து பார்ட்டிக்கும் சென்றாள் . எங்கேனும் அவன் தென்படுகிறானா என்று தேடுவாள் அவளின் தேடல் புரிந்த மற்றைய ஜீவன் தன்னை மறைத்து தனக்கான தேடலை அவளின் கண்களில் கள்ள தனத்துடன் ரசிக்கும் .

நிகழ்ச்சி ஆரம்பித்தது . அபிதா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு போகாமல் தன் போக்கில் வானத்தை பார்த்துக்கொண்டே மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தாள் . அப்பொழுது திடீர் என்று அங்கு பரபரப்பு கூடியது . சிறப்பு விருந்தினர் வருகையையொட்டி அனைவரும் அந்த அரங்கத்தின் வாயிலில் கூடி நின்றிருந்தனர் . யஸ்வந்த்தும் கருப்பு நிற கோர்ட் சுய்ட்டில் கம்பீரமாக இறங்கினான் . அவனை கண்ட பெண்களின் கண்கள் திறந்த வாய் மூடாமல் இருப்பதை கண்டு மனதில் நகைத்துக்கொண்டான் யாஷ் .

அப்பொழுது சுற்றத்தை ஒரு நொடி ஆராய்ந்த யஸ்வந்த்தின் கண்களில் விழுந்தாள் அபிதா . அவளை தூரத்தில் இருந்தே அவனால் அடையாளம் காண முடிந்தது . சிறப்பு விருந்தினர் பற்றிய தகவல் மாணவர்களுக்கு சொல்லி இருக்க வில்லை ஆகையால் அபிதா எதையும் உணராமல் கல்மேடையில் மரத்தின் அடியில் கண்களில் கண்ணீருடன் தனித்து அமர்ந்து இருந்தாள் .

யோசனையுடன் உள்ளே சென்ற யஸ்வந்த் சிறப்பு உரை ஆற்றி ,சில அறிவுரைகள் தொழில் சார்ந்தது பற்றி கூறி இறங்கினான் . நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் அபிதா அங்கு இருக்க முடியாமல் ரோஹனுக்கு அழைத்து காரை கொண்டு வரச்சொன்னாள் .

கார் வந்து நின்றது . ஓட்டுநர் அவளுக்கு அழைப்புவிடுத்து இருந்தார் . அவளும் மெதுவாக நுழைவாயில் நோக்கி நடந்தாள் . சென்று கொண்டு இருந்தவளின் பார்வை பிரகாசமானது . வேக எட்டுக்களுடன் கண்களில் எதிர்பார்ப்புடன் அவனை நெருங்கினாள் .

யஸ்வந்த் ஒரு மணி நேரம் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்காக ஒதுக்கி இருந்தான் . அவன் வெளியே காரின் அருகில் வந்தான் . கார் வாயில்புரத்தை ஒட்டி உள்ளே நின்று இருந்தது அவனை நோக்கி எதிர்பார்ப்புடன் வரும் அபிதாவை கண்டு தயங்கி நின்றான் . அபிதா வேகமாக ஆவலுடன் அவன் எதிரில் வந்துநின்றாள் .

இருவரும் நேராக பார்த்து கொண்டனர் . யாஷ் என்ன நடக்கும் என்று பார்க்கலாம் என்று நின்றான் . அபி யோசனையுடன் அவனின் முகத்தை கண்டாள் . ஆவலுடன் வந்த அவளின் முகம் கூம்பியது . தலையை தொங்க போட்டு இரண்டு எட்டு வாயிலை நோக்கி நடந்தாள் .

யஸ்வந்த்தின் முகம் யோசனைக்கு சென்றது . சட்டென்று நின்று அபிதா திரட்டிய தெம்புடன் யஸ்வந்த்தை நோக்கி மீண்டும் வந்தாள் . யஸ்வந்த்திற்கு மனதில் சுவாரசியம் கூடியது என்ன நடக்கும் என்று ஆவலுடன் அவளை பார்த்தான் .

அபிதா அருகினில் சென்று "நீங்க யஸ்வந்த் தான ? " என்று கேட்டாள் .

யஸ்வந்த்தின் புருவங்கள் ஆச்சர்யத்தில் உச்சியை தொட்டன . அவர்களின் குடும்பத்தாரை தவிர்த்து எவராழும் இருவரையும் சரியாக அடையாளம் காண இயலாது . ஒரு சில முறை மட்டுமே பார்த்த நிஷ்வ்ந்த்தை சரியாக அடையாளம் கண்டுகொண்டவளை கண்டு ஆச்சர்யமுற்றான் .

"எஸ் ஆம் யஸ்வந்த் " ஏதும் தெரியாதது போல் பதில் கூறினான் .

"நிஸ்வந்த் வரலையா ? "என்று கேட்டவளை பார்த்து யஸ்வந்த்திற்கு சகலமும் விளங்கியது . 'நிஷுவின் பூனைக்குட்டிக்கு தயிரியம் வந்திருச்சு போலவே ...எல்லாம் காதல் படுத்தும் பாடு ஹான் ' என்று மனதில் எண்ணிக்கொண்டான் .

"உங்களுக்கு நிஷுவ தெரியுமா ? " அறியாப்பிள்ளை போல் கேக்கும் யாஷை என்ன செய்யலாம் .

"தி...தெரியும் அவர் நான் கூப்பிட்டா எடுக்க மாட்டீங்கிறார் நீங்க ஒரே ஒரு தடவை அவருக்கு உங்க நம்பர்ல இருந்து கூப்பி கூப்பிட முடியுமா ? " அபிதாவின் கண்கள் இறைஞ்சின . சரியாக அப்பொழுது அபிதாவை தாண்டி வாயிலை நோக்கியது யஸ்வந்த்தின் விழிகள் .

வாயிலுக்கு முதுகு காட்டி நிற்கும் அபிதா எதையும் உணரவில்லை . தலை குனிந்து திக்கி திக்கி கேட்டிருந்தாள் . யஸ்வந்த்திடம் பதில் இல்லாததால் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை அவன் பார்வை சென்ற திசை நோக்கி திரும்பியது .

என்ன நடந்தது என்று உணர்வதற்குள் அழுகையுடன் வாயிலில் நின்றிருந்தவனின் கைகளில் சரண் புகுந்திருந்தாள் அபிதா .
 
Status
Not open for further replies.
Top