All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Epodum suspense vacitey irukengasuper Pa sema 2 perum etho panini irukanganu ninaikiren enanu nu than theirla yash abi ya ethadu panini irupanoromba yosikireney ena panrandu wait panuvom
அத்தியாயம் - 2
ஜெயதி ஆர் ஆர் சொலுஷனில் வேலைக்கு சேர்ந்து அன்றோடு ஒரு மாத காலம் முடிவுபெற்றது . அவளின் வேலை செய்யும் திறன் ,புத்தி கூர்மை அனைத்தையும் கண்ட நிஸ்வந்த் கண்ணனின் சிபாரிசு என்ற கூடுதல் தகுதி இருந்தமையால் தனக்கு நிகரான அனைத்து செயல்பாட்டிற்கான உரிமையும் அவளிற்கு வழங்கிருந்தான் .
யஸ்வந்த்தும் நிஸ்வந்த் யோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவனின் முடிவிற்கு ஒப்புக்கொண்டான். அவனுக்கும் கண்ணனின் சிபாரிசு என்பதே போதுமான தகுதியாக இருந்தது .
ஜெயதி இங்கு ஆர் ஆர் சொலுஷன்னை முழுதாக பார்த்துகொள்ள ஆரம்பித்தபிறகு நிஸ்வந்த் வடமாநிலங்களில் அவர்களின் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை சம்பந்தமான விஷயங்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தான் .
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஜெயதியை இதுவரை யஸ்வந்த் பார்த்தது இல்லை . நிஸ்வந்த்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலுவலகம் யஸ்வந்த் அதில் தலையிடமாட்டான் . அதே போல் தான் நிஸ்வந்தும் . ஆனால் தினப்படி நிலவரத்தை பகிர்ந்துகொள்வார்கள் .
நாளை வாரவிடுமுறை சனிக்கிழமை . நிஸ்வந்த் தனது நண்பனும் உடன்பிறப்புமான யஸ்வந்த்தின் வரவிற்காக காத்துக் கொண்டு இருந்தான் . இருவரும் சனிக்கிழமை காலை அன்று ஒரு நட்சத்திர விடுதியில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டு இருந்தனர் . உடல் முழுக்க ஈரம் சொட்ட சொட்ட ஆஜானுபாகுவான புஜங்களுடன் காட்சி அளித்த இருவரையும் அங்கு இருந்த பெண்களின் பார்வை வட்டமிட்டுக் கொண்டே இருந்தது .
இருவரும் நீந்தி முடித்து மேலே வந்தவுடன் ஒரு நவநாகரிக யுவதி இறுக்கி பிடித்த குட்டியான உடை அணிந்து அவர்களின் அருகில் ஒயிலாக வந்தாள் . "ஹே ஹண்டசம் கேன் வி டேக் ஸெல்ப்பி " இருவரையும் பார்த்து மயக்கும் புன்னகையுடன் கேட்டாள் அவள் .
நிஸ்வந்த் ஒரு இளம் புன்னகையுடன் "சாரி திஸ் இஸ் நோட் மை கப் ஒப் டீ " என்று கூறி நாகரிகமாக நகர்ந்து லவுஞ் நாற்காலியில் சென்று சாய்ந்து அமர்ந்து அருகினில் இருந்த பீரை பருகினான் .
போகும் உடன் பிறப்பை ரகசிய புன்னகையுடன் நோக்கிய யஸ்வந்த் "யா சூர் " என்று கூறி அந்த பெண்ணுடன் புகைபடம் எடுத்து சற்று நேரம் கடலை வறுத்தான் .
யஸ்வந்த்தும் வறுத்தான் வறுத்தான் வறுத்துக்கொண்டே இருந்தான் . யஸ்வந்த் இன்னும் வராததை கண்ட நிஸ்வந்த் தலையை இடமும் வலமுமாக ஆட்டி சிரித்துக் கொண்டான் .
சற்று நேரம் கழித்து நிஸ்வந்தை நோக்கி வந்த யஸ்வந்த் பார்வையை ஒரு இடத்தில் ஆராயும் விதத்தில் செலுத்தினான் . மீண்டும் யஸ்வந்த்தை நிமிர்ந்து பார்த்த நிஸ்வாந்த் அவன் பார்வை சென்ற திக்கை திரும்பி பார்த்தான் . அங்கு ஒரு பெண் அழகான நீள சிகப்பு நிற பாந்தினி ஸ்கிர்ட் அணிந்து வெள்ளை நிற டாப்ஸ் போட்டு வலை போன்ற ஸ்டோல் அணிந்து திரும்பி நடந்து சென்றுகொண்டு இருந்தாள் . அவளின் முதுகில் படர்ந்து விரிந்திருந்த முடியையே பார்க்க முடிந்தது நிஸ்வந்தால் .
யோசனையுடன் மற்றுமொரு லவுஞ்சில் அமர்ந்த யஸ்வந்த் "நிஸ்வந்த் அந்த கேர்ள் அவளை நீ பார்த்தியா ? " மிகுந்த யோசனையுடன் போகும் அந்த பெண்ணை சுட்டிக் காட்டி கேட்டான் .
"இல்லை யாஷு ஐ ஜஸ்ட் காண்ட் சி ஹேர் பேஸ் ...என்னாச்சு தெரிஞ்சவங்களா ? " என்று எதிர் கேள்வி கேட்டான் நிஸ்வந்த் .
"நோ ஹேர் ஐஸ் ...அவ கண்கள் உன்னை பார்த்து ஏதோ சொன்னுச்சு ....எனக்கு அது சரியாக படலை " யோசனையுடன் கூறிய யஸ்வந்த்தை நோக்கி நிஸ்வந்த் "ஹே கம் ஓன் ...சம் கேர்ள் மே பி தெரிஞ்சவங்களா இருக்கலாம் ..அதனால் என்னை பார்த்திருக்கலாம் ...டோன்ட் திங்க் மச் " என்றான் முகத்தில் வரவைத்து புன்னகையுடன் .
நிஸ்வந்த்தின் மனதில் ஒருவேளை அவளாக இருப்பாளோ என்ற கேள்வி அரித்தது 'ச்ச இருக்காது அவள் எப்படி இருந்தாலும் எந்த இடத்தில இருந்து பார்த்தாலும் என்னால் அவளை அடையாளம் காண முடியும் ..யஷ்க்கும் அவளை நன்றாக தெரியும் இது யாரோ தெரிந்தவங்க ' என்று தனக்கு தானே மனதில் சொல்லி தேற்றிக்கொண்டான் .
"வெள் யாஷ் ஹொவ் அபௌட் தட் கேர்ள் ...ரொம்ப நேரம் பேசுன , கருகுற வாசம் இங்க வரைக்கும் வந்துச்சு " என்றான் கேலி போல் .
"ஹே நிஸ்வந்த் ஷி இஸ் ஜஸ்ட் கிரேஸி ..மல்ஹோத்ரா டாட்டர் .. நம்மளை நிறைய இடத்தில் பார்த்திருக்கா ஷி வாஸ் லிட்டரல்லி போலோவிங் அஸ் " என்று கூறி சிரித்தான் யஸ்வந்த் .
பொதுவாக சாதனையாளர்களை , பணக்காரர்களை மற்றும் நடிகர்களை எங்கு கண்டாலும் அவர்களின் பக்கம் தங்களின் பார்வையை வட்டமடிப்பார்கள் மக்கள் . ஆனால் இந்த இரட்டையர்களுக்கோ ஒரே மாதிரி பிறந்ததே ஒரு வித ஈர்ப்பு தான் அதும் இல்லாமல் அழகாக இருந்தார்கள் நடிக்கவில்லை அவ்ளோதான் அதை தவிர இளம் தொழில் அதிபர்கள் இரட்டை சிறுத்தைகள் என்று போற்றப்படும் இவர்களின் பக்கம் கோபியர்களின் பார்வை அதும் பணக்கார பெண்களின் பார்வை பெரிதும் சுற்றும் .
யார் யாரை மணமுடிப்பது , இல்லை யார் இவர்களுக்கு பெண் கொடுத்து சம்பந்தி ஆவது என்ற போட்டி தொழில் வட்டத்தில் இருக்கிறது . இதை தெரிந்தும் தெரியாதவர்கள் போல் கடந்து விடுவார்கள் இருவரும் .
அடுத்தநாளும் இருவரும் மும்பை மாநகரில் பெரும் புள்ளிகள் வந்து செல்லும் பப்பிற்கு வந்து தங்களின் நண்பர்களுடன் கும்மாளமடித்தனர் . நிஸ்வந்த் மது நண்பர்கள் என்று இருந்தான் . யஸ்வந்த்தோ ஆடும் மேடையில் பெண்களுடன் ஆடிக்கொண்டு இருந்தான் ஒரு கையில் மது கோப்பை மறு கையில் தன் மேல் வந்து விழும் பெண்கள் . நிஸ்வந்தும் எதற்கும் குறைந்தவனில்லை ஆனால் ஒருத்தியால் அவள் ஒருத்தியால் !!தனது மொத்த இயல்பையும் தொலைத்து பெண்களை முற்றிலுமாக தவிர்த்தான் .
எதிர்ச்சியாக திரும்பிய யஸ்வந்த் நிஸ்வந்தை நோக்கிய அந்த கண்களின் சொந்தக்காரியை கண்டான் . மீண்டும் அவனின் முகத்தில் யோசனைகளின் அறிகுறி . அந்த பெண்ணை உற்று நோக்க முற்படுகையில் மல்ஹோத்ராவின் மகள் யஸ்வந்த்தின் முகத்தை தன்னை நோக்கி திருப்பினாள் . "ப்ச் " என்ற சலிப்புடன் மீண்டும் அந்த பெண்ணை பார்க்க திரும்புகையில் அவள் அங்கு இல்லை .
மேடையை விட்டு கீழே இறங்கி சுற்றியும் பார்வையை சுழலவிட்டு தேடினான் . அவளை கானவில்லை . 'அவள் பார்வை சொன்ன செய்தி சரி இல்லை ' என்று உள்ளூர எண்ணம் உதித்த அடுத்த நொடி நிஸ்வந்த்திற்கு நிழல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தான் .
அனைவரையும் தவிர்த்துவிட்டு யஸ்வந்த் நிஸ்வந்தை கூட்டிக்கொண்டு கிளம்பினான் . காரில் இருவரும் செல்கயில் குழப்பத்துடன் யஸ்வந்த்தை நோக்கிய நிஸ்வந்த் "யாஷ் என்னாச்சு ஏன் இவ்ளோ டென்ஷன் ? " என்றான் .
"நிஷு சம்திங் பிஷி அதே பெண் !! நேத்து பார்த்த அதே பெண் இன்றும் உன்னை பார்த்தாள் ...அவளின் பார்வை நிச்சயம் நல்லதை சொல்லவில்லை ..." என்று குழப்பத்துடன் கூறி அந்த பெண்ணின் முகத்தை மனதில் கொண்டுவந்து இதற்கு முன் எங்கேனும் பார்த்திருக்கிறோமா என்று நெற்றியை வலதுகையின் இருவிரல் கொண்டு நீவிக்கொண்டே யோசித்தான் . ஏதும் பிடிபடவில்லை .
"வாட் யாஷ் எதிர்ச்சியா அந்த பெண் இன்னைக்கும் இங்கு வந்திருக்கலாம் ..டோன்ட் மயின்ட் இட் " என்று கூறிய நிஸ்வந்த் "நீ அவளை இதற்கு முன் பார்த்திருக்கயா ? அவ எப்படி இருந்தா " என்று யஸ்வந்த்தை நோக்கி கேட்டான் .
"ப்ச் அவளை தூரத்தில் இருந்து தான் பார்த்தேன் ஷி வாஸ் எங் ..குட் லுக்கிங் எவ்ளோ யோசித்தும் எங்கயும் பார்த்த நியாபகம் இல்லை " என்றான் குழப்பத்தில் ஸ்டேரிங் வீலை குத்தி .
"சில் எதுக்கு இவ்ளோ டென்ஷன் யாரோ ... எதிர்ச்சியா திரும்ப திரும்ப பார்த்திருப்ப ...மித்த பொண்ணுங்க மாதிரி நம்மளை ஆர்வமா பார்த்திருக்கலாமே ? " மனதில் பட்டதை கேட்டான் நிஸ்வந்த் .
"நோ ஐ க்நொவ் கேர்ள்ஸ் எல்லாரும் நம்ம ரெண்டு பேரையும் ஆர்வமா பார்ப்பாங்க பட் அவ பார்வை சொன்ன செய்தி நிச்சயம் நல்லதா இல்லை ...அண்ட் மோர் ஓவர் அவ உன்னை ..உன்னை மட்டும் தான் பார்த்தா ...!! " என்று கூறி யோசனையில் ஆழ்ந்தான் .
அதே யோசனையுடன் நிழல் பாதுகாப்பை நிஸ்வந்த் அறியாமல் ஏற்பாடு செய்து சென்னை நோக்கி கிளம்பினான் யஸ்வந்த் .
அதன் பிறகு ஆறு மாதகாலம் எந்த வித மாற்றமும் இல்லாமல் சீராக சென்றது . யஸ்வந்த்தே தனது சந்தேகம் தேவையற்றதோ என்று என்னும் வகையில் எந்த வித சம்பவங்களும் நிகழவில்லை . 'ச்ச மே பி நிஸ்வந்த் வாஸ் ரைட் ' என்று அவனே எண்ணிக்கொண்டான் .
இதன் நடுவில் நிஸ்வந்த் இருவாரத்துக்கு ஒருமுறை சென்னை வந்து சென்றான் . வழமைக்கு மாறாக ஏதும் நிகழவில்லை . தொழிலில் ஏறுமுகமே . ராஜ்குமார் ஓய்வாக தனது மனைவியுடன் காலத்தை கழித்தார் . ஆகையால் முழு பொறுப்பும் நிஸ்வந்த் யஸ்வந்த்திடம் வந்து சேர்ந்தது .
ஆறு மாதம் கழித்து ஒரு நாள் நிஸ்வந்த் அவனின் அறையில் மடிக்கணினியில் வேலைகளில் மூழ்கிப் போய் இருந்த சமயம் அவனின் அறைக்கதவு மென்மையாக இருமுறை தட்டப்பட்டது .
சிலருக்கு மட்டுமே தனது அறைக்கு வர அனுமதி உண்டு அதும் முக்கிய வேலை இல்லையேல் எவரும் உள்ளே வரமாட்டார்கள் என்பதை அறிந்த நிஸ்வந்த் எதாவது முக்கியமான விஷயமாக இருக்கும் என்று நினைத்து
" எஸ் கம் இன் " என்றான் தனது கம்பீரமான ஆளுமை நிறைந்த குரலில் .
உள்ளே வந்தாள் ஜெயதி "குட் மோர்னிங் நிஸ்வந்த் " என்றாள் . அது பன்னாட்டு நிறுவனங்களின் நாகரிகம் எவரையும் சார் என்றோ மேடம் என்றோ குறிப்பிட மாட்டார்கள் .
"குட் மோர்னிங் மிஸ் ஜெயதி " என்றான் . அவனின் பார்வை மடிக்கணினியில் தான் இருந்தது .
"உங்க மெயில் செக் பண்ணிட்டிங்களா ? " என்று கேட்டாள் அவள் .
"என்ன மெயில் " என்று ஒரு நொடி புருவங்கள் சுருக்கி யோசித்தவன் "ஒஹ் அந்த xxxxx கம்பெனி டீடெயில்ஸ் ஹா! பாத்துட்டு சொல்றேன் " என்று கூறி பேச்சை கத்தரித்தான் . அதன் உள் அர்த்தம் அவ்ளோதான் நீ போகலாம் என்பதே .
இருந்தும் ஜெயதி நகராமல் அங்கேயே நிர்ப்பதை உணர்ந்த நிஸ்வந்த் நிமிர்ந்து நேராக அமர்ந்து தனது வலது கையின் இரு விரல் கொண்டு தாடையை முட்டுக் கொடுத்து அவளை ஆழமாக பார்த்தான் . அவனின் பார்வை 'என்ன ' என்னும் விதமாய் இருந்தது .
அதை உணர்ந்த அவள் " ஆம் ரிசைனிங் " என்றாள் நிமிர்வாக .
"வாட் " என்று அதிர்ந்து எழுந்து தனது முழு உயரத்துக்கு நிமிர்ந்து நின்றான் . நிச்சயம் பாதி பெண்கள் அதில் நடுங்கி விடுவார்கள் . ஆனால் ஜெயதியை போன்ற பல பெண்கள் நிமிர்ந்து நின்று பதில் கொடுப்பார்கள் .
அவனின் அதிர்விற்கும் காரணம் உண்டு . தனக்கு நிகராக அலுவலக ரகசியம் அனைத்தும் அறிந்த ஒருத்தி என்றால் அது அவள் தான் .
"எஸ் ஐ ஹாவ் டு ...ஈவென் மிஸ்டர் கண்ணன் அவருக்கும் சொல்லிவிட்டேன் . ஒன் மந்த் நோட்டீஸ் பீரியட் தென் ஐ வில் கெட் ரிலீவ்ட் " என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .
"ஷிட் " என்று தனது ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் தனக்கு முன் இருந்த மேஜை மீது காட்டினான் நிஸ்வந்த் . கண்ணன் சொல்லிற்காக முக்கிய பொறுப்பில் அமர்த்திய தனது மடமையை எண்ணி நொந்துக் கொண்டான் .
வழமை போல் நிஸ்வந்த்தின் விரல்கள் தானாக யஸ்வந்த்தை அழைத்து "யா நிஷு என்ன ஒர்கிங் ஹௌர்ல கூப்பிட்டிருக்க ? " என்றான் கேள்வியாக .
"யாஷ் ஜெயதி இஸ் ரிசைனிங் " எடுத்தவுடன் தனது ஆதங்கத்தை கூறினான் .
அன்பு வாசகர்களே ....ரொம்ப அதிகமா இருக்கோ ... மக்காஸ் என் இரண்டாம் கதையான அன்பே உ(எ )ன்னை உனக்காக... கதையின் இரண்டாம் அத்தியாயம் பதிந்துவிட்டேன் படிச்சுட்டு ஒரு வார்த்தை சொல்ட்டு போனா மீ ரொம்ப ஹாப்பி மக்காஸ் ...இப்படிக்கு நான் (சாரல் )
மும்பை மாநகரத்தில் இன்பினிட்டி வணிக வளாகத்தில் இருக்கும் ப்ஹுட் கோர்ட்டில் யஸ்வந்த் தனக்கு முன் ஒரு காபி கோப்பையுடன் கையில் அலைபேசியை நோண்டிக் கொண்டு நிஸ்வந்த்தின் வரவிற்காக காத்துக் கொண்டு இருந்தான் . அப்பொழுது தூரத்தில் "அம்மா " என்ற ஒரு மழலையின் தமிழ் விழிப்பு அவனின் கவனத்தை கவர்ந்தது .
நிமிர்ந்து அந்த பெண் குழந்தையை பார்த்தான் . 'ஒரு இரண்டு வயது இருக்குமா ?' அழகாக கொலு கொலு என்று துரு துரு என்று இருந்தாள் . யாருக்கோ போக்கு காட்டி தனது பிஞ்சு கால்கள் கொண்டு ஓடிக்கொண்டு இருந்தாள் . அவனின் முகத்தில் ஒரு புன்னகை அவனையும் அறியாமல் அவனின் கால்கள் அந்த குழந்தையை நோக்கி முன்னேற துடித்தது . இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று முன்னோர்கள் சொல்லி சென்றனரோ ....!!
அப்பொழுது வேகமாக ஒரு பெண் அவனை கடந்து ஓடிச் சென்றாள் . நேராக அந்த பெண் சென்று குழந்தையை தூக்கிக் கொண்டாள் . குழந்தையோ "அம்மா " என்று கைதட்டி குதூகலித்தது . "ஹே பப்பு குட்டிமா அம்மா விட்டுட்டு இப்படி நீங்க ஓடலாமா ....பாட்டி பாருங்க உங்க மாதிரி ஓட முடியாம நிக்கிறாங்க " என்று குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டு இருந்தாள் .
அந்த குழந்தை அம்மா என்று அழைத்தவளை நிமிர்ந்து பார்த்தவுடன் மின்சாரம் தாக்கியது போல் சமைந்து நின்றான் யஸ்வந்த் . 'இவள் இந்த பாப்பாக்கு அம்மாவா ? ' என்று யோசிக்கலானான் மேலும் 'இவள் அன்று பார்த்தவள் தானே ' என்று எண்ணினான் . . அவளோ லெவிஸ் ஜீன்ஸ் பாண்ட் அணிந்து பெண்கள் அணியும் கருப்பில் வெள்ளை கட்டம் போட்ட அழகான டாப்ஸ் அணிந்து முடியை விரித்து போட்டு இருந்தாள் . நிச்சயம் அவளை ஒரு குழந்தையின் அம்மா என்றால் எவரும் நம்பமாட்டார்கள் .
யஸ்வந்த்தின் பார்வை அந்த பெண்ணை ஆழ்ந்து பார்த்துக்கொண்டு இருக்கையிலே அந்த பெண் தனது குழந்தையுடன் கொஞ்சுவதை நிறுத்திவிட்டு ஒரு இடத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள் . அவள் பார்வையில் தெரிந்தது என்ன கோபம் , ஆற்றாமை , வெறுப்பு அவனால் அந்த பார்வையின் அர்த்தத்தை கணிக்க முடியவில்லை .
அவள் பார்வை சென்ற திக்கை திரும்பி பார்த்த அவன் அதிர்ச்சியுற்றான் . காரணம் அவள் பார்த்துக்கொண்டு இருந்தது நிஸ்வந்தை . நிஸ்வந்த் தனது சகோதரனை தேடி வந்தான் . அவன் அவளை கவனிக்கவில்லை . அந்த பெண்ணின் பார்வை ,நிஸ்வந்த்தின் மேற்பார்வையில் இருக்கும் நிறுவனத்தின் பங்குச் சரிவு ,அனைத்து ப்ரொஜெக்ட்டும் சொல்லி வைத்தார் போல் ஒரே நிறுவனத்திற்கு கைமாறுவது என்று எல்லாத்தையும் சேர்த்து நினைத்த யஸ்வந்த் ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தான் .
கண்ணை திறந்து பார்க்கையில் நிஸ்வந்த் இவன் அருகில் வந்துகொண்டு இருந்தான் . அவள் ....அவள் அவன் கண்களுக்கு தென்படவில்லை . ஒரு முடிவு தனக்குள் எடுத்துக்கொண்டு அடுத்தகட்ட வேலைகளை பார்க்க கிளம்பினான் யஸ்வந்த் .
அத்தியாயம் - 3 ஜெயதி அந்த நிறுவனத்தில் இருந்து விடைபெற்று ஒரு வார காலம் முடிந்து இருந்த நிலையில் ஆர் ஆர் சொலுஷணிற்கு வர இருந்த ஒரு ப்ராஜெக்ட் புதிதாக சில மாத காலம் முன் தொடங்கப்பட்ட எ ஜே சொலுஷனிற்கு கைமாறியது .
நிஸ்வந்த் பொறுப்பெடுத்து திறம்பட தொழில் செய்த இத்துணை ஆண்டுகளில் இது தான் அவனின் இரண்டாம் அடி . முதல் அடி பெரிதாக பாதிக்கும் முன் அந்த நிறுவனத்தை விளையாட்டுத்தனமாக கைப்பற்றினான் . அதன் விளைவுகள் ... அந்த தொழில் சறுக்கலைத் தாண்டி வந்தாலும் அதனால் ஏற்பட்ட தாக்கம் , பாதிப்பு என்றேனும் மறையுமோ ?? காலம் தான் பதில் சொல்லவேண்டும் .
நிஸ்வந்தும் யஸ்வந்த்தும் அதை பற்றி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு இருக்கையில் யஸ்வந்த் கூறியது "நிஷு கடந்த சில மாதமா ஜெயதி இருந்தாங்க .. சோ அவங்க இல்லாத இந்த சமயம் மொத்த வேலை பலுவின் காரணமாக உன்னால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை . டோன்ட் கண்பியூஸ் .... இது சின்ன ப்ராஜெக்ட் பாத்துக்கலாம் " என்று நிஸ்வந்தை தேற்றினான் .
"ஆனாலும் யாஷ் ஜெயதி ரொம்ப டாலெண்டெட் ...திடிர்னு வேலைக்கு வந்தாங்க திடிர்னு போய்ட்டாங்க ... கண்ணன் அண்ணா எதுக்கு சேர்த்தாங்க ? ... அவங்க போகிறதா சொன்னப்பவும் ஏன் எதையும் என்கிட்ட சொல்லல ? " நிஸ்வந்த்தின் மனதில் குழப்பத்துடன் அரித்த கேள்விகள் வெளிவந்தன .
"விடு நிஷு .... அதான் ஏதோ பர்சனல் ரீசன் சொல்ராங்கலே .... கண்ணன் அண்ணா சொல்லக்கூடிய விஷயமா இருந்தா சொலிர்ப்பாங்க மே பி ஹேர் சிச்சுவேஷன் ...!! கண்ணன் அண்ணாவை கேள்வி கேட்டா அது நம்ம அண்ணாவை நாமளே கீழ இறக்கிறமாதிரி ஆகாதா ... உன்னோட ஸ்ட்ரெஸ் கொறையனும் இனி உன் ஆபீஸ்க்கு நான் அப்ப அப்ப வரேன் ... வி கேன் ஷேர் ஓவர் ஒர்க் ...அங்க பெரியப்பா டெஸ்ட்டைல் பிசினெஸ் கொஞ்ச நாள் பார்த்துப்பாங்க நான் பேசுறேன் " என்று எளிதாக தீர்வை கண்டுபிடித்தான் யஸ்வந்த் .
நிஸ்வந்தும் ஏதும் கூறவில்லை . அவன் தான் சில ஆண்டுகாலமாக ஒரு வித மன அழுத்தத்துலயே இருக்கிறானே இருந்தும் தொழிலில் வல்லவனாகவே திகழ்ந்தான் . தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரனின் மனதை அறியாதவனா யஸ்வந்த் ...புரிந்துகொண்டு வேலைப்பளுவை பங்குபோட தயாராக இருந்தான் . அவர்கள் அறியவில்லை வல்லவனுக்கெல்லாம் வல்லவன் ஒருவன் இருப்பான் என்பதை ..
யஸ்வந்த் நிஸ்வந்த் இருவரும் சேர்ந்து ஆர் ஆர் சொலுஷன் , ஆர் ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் , ஆர் ஆர் டெஸ்ட்டைல் ரீடைல் ஸ்டோர் என்று அனைத்தையும் ஒன்றாகவே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர் . நிஸ்வந்த்தின் மன உளைச்சல் கண்ட யஸ்வந்த் தனது இருப்பிடத்தை மும்பைக்கு மாற்றிவிட்டான் .
ராகினி தனது மனக்கவலையை இருவரிடமும் கொட்டி தீர்த்தாள் "ஏன்டா இத்தனை நாள் நிஷு தான் இங்க வராம மும்பைலயே இருந்தான் ... இப்ப நீயும் அவனோட சேர்ந்துட்டியா ! ... முன்னாடிலாம் என்னை பார்க்காம இருக்க மாட்டீங்க என்னைக்கு தனியா தொழில் ஆரம்பிச்சீங்களோ அன்னைக்கு இருந்து ரெண்டு பெரும் சரி இல்லை ... மாமா நீங்களும் ஏன் எதையும் கண்டுக்காம இருக்கீங்க ? " தனது மகன்களிடம் ஆரம்பித்து தனது அக்காவின் கணவர் ராஜ்குமாரிடம் முடித்தாள் தாய் அவள் .
"ராகினி விடு மா அங்க ஏதோ ப்ராஜெக்ட் இஸ்ஸுன்னு சொல்ரான் ...போகட்டும் இங்க சவுத் இந்தியா டெஸ்ட்டைல் ஸ்டோர்ஸ் நான் பார்த்துகிறேன் ... முடிலயா சஷ்டி பிரவீன் இருக்காங்க .. " என்று நிதானமாக கூறினார் ராஜ்குமார் .
கண்ணன் தனது தந்தையிடம் எதையும் மறைத்தது இல்லை . விட்டு பிடிப்போம் ஏதோ தொடர் வெற்றி ,வயதின் கோளாறு, பணம், நட்பு என்று எல்லாம் சேர்ந்து தவறான பாதையில் செல்கிறார்கள் என்று எண்ணினார் ராஜ்குமார் . பிரவீன் ராகினி இருவருமே மிகுந்த பாசமான அப்பா அம்மா ... அவர்களின் கவனத்திற்கு வராமல் இருக்கும் நிஸ்வந்த் யஸ்வந்த்தின் லீலைகள் ஒருவேளை அவர்களின் முன் கடைபரப்பப்பட்டால் நிலைமை என்னாகும் ?
நிஸ்வந்த் யஸ்வந்த் இருவரும் சேர்ந்து ஒன்றாக தொழில் பார்க்க ஆரம்பித்து இந்த இருமாத காலத்தில் ஆர் ஆர் சொலுஷனில் மட்டும் தொடர் சரிவு . அவர்களின் நிறுவனத்திற்கு வர இருந்த ப்ராஜெக்ட் அனைத்தும் சொல்லி வைத்தார் போல் ஒரே நிறுவனத்திற்கு சென்றது . யஸ்வந்த்துமே அதில் குழம்பித்தான் போனான் .
நிஸ்வந்த் முற்றிலுமாக உடைந்தான் . யஸ்வந்த் முன் வந்து நிஸ்வந்தை கட்டுமான தொழிலை பார்க்க சொல்லி ஆர் ஆர் சொலுஷனை முழுதாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான் . அதில் ஒரு ப்ராஜெக்ட் சம்மந்தம்மாக அமெரிக்கா செல்ல வேண்டி வந்ததால் நிஸ்வந்த்திற்கு ஆயிரம் பத்திரம் சொல்லி அமெரிக்கா கிளம்பினான் .
இங்கு நிஸ்வந்த் கட்டுமானத்தொழிலை மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டான் . அமெரிக்கா சென்ற யஸ்வந்த் அந்த ப்ராஜெக்ட் கைகூடி வர இருந்த கடைசி நிமிடத்தில் எ ஜே சொலுஷனிற்கு சென்றதை தாங்கமுடியாமல் மிகுந்த கோபம் கொண்டான் . முதல் வேலையாக நாடு திரும்பியவுடன் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை சந்திக்க வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டான் . அவன் விசாரித்த வரையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி லீலாவதி அமெரிக்கா வாழ் இந்தியர் ... ஆனால் அந்த நிறுவனத்தில் முடிவு எடுப்பது அவரின் புதல்விகள் . என்ன முயன்றும் அவர்கள் இருவரை பற்றி யஸ்வந்த்தால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அதிலும் ஒரு பெண் இந்தியாவில் இருக்கிறாள் என்பதை அறிவான் யஸ்வந்த் .
அமெரிக்காவில் முன்பெல்லாம் தானும் நிஸ்வந்தும் சேர்ந்து சுத்தும் நாட்களை நினைத்து ஏங்கியது . முன்பெல்லாம் இருவரும் வருவது வழக்கம் ...என்று ஒரு பெண்ணின் வருகை நிஸ்வந்த்தின் மனதை பாதித்ததோ அன்றில் இருந்து யஸ்வந்த் மட்டுமே தொழில் சம்மந்தம்மாக வந்தால் மேலும் கூடுதலாக இருநாட்கள் இருந்து உல்லாசமாக கழித்துவிட்டு செல்வான் .
அப்படி இரு நாட்களாக உல்லாசமாக இருக்க நினைத்த சமயம் அவனின் அறையில் அமர்ந்து மடிக்கணினியை திறந்து பார்த்த நொடி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினான் . எவ்வாறு இது சாத்தியம் ?
இங்கு நிஸ்வந்த் தனது அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்கும் கோபத்துடன் நடந்துக்கொண்டு இருந்தான் . ஆர் ஆர் சொலுஷனின் பங்கு பங்குச்சந்தையில் மிகுந்த சரிவை தொட்டு இருந்தது . மேலும் அவர்களின் கட்டுமான தொழிலும் சரிவு ஆரம்பித்து இருந்தது . அனைத்தும் சொல்லி வைத்தார் போல் எ ஜே சொலுஷன் மற்றும் எ ஜே கன்ஸ்டருக்ஷனிடம் கைமாறியது . மிகவும் குறுகிய காலத்தில் எ ஜே குழும பங்குகள் உச்சத்திற்கு வந்தது .
இந்த கையறு நிலையில் தன்னுடன் ஒட்டி பிறந்த சகோதரனின் அருகாமைக்காக ஏங்கியது நிஸ்வந்த்தின் மனது . அதேநேரம் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் அமர்ந்து பங்கு சந்தை சரிவை கண்ட யஸ்வந்த் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாட்டை பார்த்துக்கொண்டு இருந்தான் .
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பணத்தை தண்ணியாக செலவு செய்ய அணைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ள நகரம் . அந்த நகரத்தின் விமான நிலையம் வந்தடைந்த யஸ்வந்த் தனது சகோதரனுக்கு அழைத்தான் . "நிஷு என்ன நடக்குது எப்படி ஷேர்ஸ் இவ்ளோ டவுன் ஆச்சு " யஸ்வந்த்தின் எந்த கேள்விக்கும் நிஸ்வந்திடம் பதில் இல்லை . அவனின் அமைதி தாங்க முடியாமல் "நிஷு டோன்ட் ஒர்ரி ... நான் கிளம்பிட்டேன் " என்று ஆரம்பித்து தனது பயனவிவரத்தை பகிர்ந்து கொண்டான் யஸ்வந்த் .
யஸ்வந்த் நாடு திரும்பி இருந்த இந்த இரண்டு நாளில் அவர்களின் கட்டுமானத்தொழில் நடக்கும் கட்டிடங்களில் தரம் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதாக கூறி மேலும் இரு ப்ராஜெக்ட் அவர்கள் கை நழுவிச் சென்றது .
"எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ் சிஈஓவை பார்க்க ஏற்பாடு பண்ணுங்க " என்று யஸ்வந்த் தனது செகரெட்டரியிடம் கூறிக்கொண்டு இருந்தான் .
"சூர் சார் " என்று கூறி அவர் நகர்ந்தார் .
"யாஷ் என்ன நடக்குதுனே தெர்ல கண்ண கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கு எப்படி எல்லாம் அந்த நிறுவனத்துக்கே கைமாறுது ..இஸ் இட் எ ட்ராப் ? " என்று குழப்பத்துடன் கேட்டான் நிஸ்வந்த் .
"யா இட்சீம்ஸ் லைக் ட்ராப் போர் யூ " என்றான் நிதானமாக .
"வாட் ?? " மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானான் நிஸ்வந்த் .
"புரிலயா ... ஆர் ஆர் சொலுஷன் உன் கீழ இருந்தப்ப ஆரம்பிச்ச இந்த ட்ராப் நீ கான்ஸ்டருக்ஷன் கம்பனிக்கு போகவும் உன்னை விடாமல் துரத்துது " என்று நிறுத்தி நிதானமா ஆழ்ந்த குரலில் கூறினான் யஸ்வந்த் .
" மயிட் பி ...இட் மே பி ஹெர் " யஸ்வந்த் ஒற்றை புருவத்தை தூக்கி நிஸ்வந்தை நேராக பார்த்து கூறினான் .
"என்ன சொல்ற ...எப்படி அவளா இருக்க முடியும் நான் அவளை இந்த மூணு வருசத்துல தேடாத நாள் இல்லை ... அவளோட அம்மா அண்ணா எல்லாரும் இறந்துட்டாங்க அந்த விபத்துல யாரும் உயிர் தப்பலைனு கேள்விப்பட்டேன் ... " நிஸ்வந்த்தின் அதிர்ச்சி இன்னும் அவனை விட்டு மீளவில்லை .
"நான் ஒரு யூகத்தில் சொன்னேன் நிஷு ... ஸ்டில் அவங்க உடல் மட்டும் கண்டுபிடிக்க முடில ரைட் !!...இது உனக்கு வச்ச ட்ராப் எ ஜே குரூப்ஸ் டெசிஷன் மேக்கர் இஸ் எ எங் லேடி எல்லாம் சேர்த்து யோசிச்சா ... ?சோ ஜஸ்ட் கெஸ் ... " தனது மனதில் உதித்த சந்தேகத்தை கோர்வையாக பகிர்ந்துகொண்டான் யஸ்வந்த் .
"நிஜமாவா யாஷ் ... நான் இம்மீடியட்டா எ ஜே குரூப்ஸ் சிஈஓவை பார்க்கணும் ... " குரலில் மிகுந்த பரபரப்புடன் கேட்டான் நிஸ்வந்த் .
"நிஷு இட்ஸ் ஜஸ்ட் கெஸ் ... காம் டோவ்ன் ...மிகுந்த நம்பிக்கையான ஆட்களை தவிர்த்து அவங்க அடையாளத்தை யாருக்கும் காமிச்சது இல்லை ... லெட்ஸ் வெயிட் " என்று தனக்கும் சேர்த்து பொறுமையாக இருக்குமாறு கூறிக்கொண்டான் யஸ்வந்த் .
அன்று இரவு தொழில் முறை பார்ட்டிக்காக தாஜ் ஹோட்டலில் மும்பை மாநகரில் ஒரு நெடிய ஹால் பதிவு செய்யப்பட்டு இருந்தது . அந்த பார்ட்டி கொடுப்பது மல்ஹோத்ரா சிறந்த தொழில் அதிபர்... அவரின் மகள் யஸ்வந்த் நிஸ்வந்த்தின் அழகில் மயங்கி அவர்களின் பின் சுற்றுகிறாள் .
அந்த பார்ட்டி ஹாலில் அனைவரும் தங்களின் நட்புகளுடன் பேசிக்கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தனர் . பெண்மணிகள் தங்களின் பணம் பெருமை அழகு அனைத்தையும் முன் நிறுத்தும் விதமாக அழகான உடைகளில் விலை உயர்ந்த நகைகள் போட்டு அழகு பதுமைகளாக வளம் வந்தனர் .
நிஸ்வந்த் அங்கு இருந்த பார் கவுண்டரில் அமர்ந்து மூக்கு முட்ட குடித்துக் கொண்டு இருந்தான் . யஸ்வந்த் கோபியர்கள் நடுவில் கண்ணனாக பெண்களின் நடுவில் கையில் மது கோப்பையுடன் பேசிக்கொண்டு இருந்தான் . மல்ஹோத்ராவின் மகளின் பார்வை தன் மீது ஆர்வமாக படிவதை உணர்ந்த யஸ்வந்த் அவளுடன் இழைந்தான் .
என்னதான் பெண்களின் நடுவில் தனது லீலைகளை அரங்கேற்றிக் கொண்டு இருந்தாலும் நிஸ்வந்த்தின் மீது தனது பார்வையை நொடிக்கு ஒரு முறை செலுத்திக்கொண்டே இருந்தான் . அப்பொழுது யஸ்வந்த்தின் கண்ணில் பட்டாள் அவள் . அழகான சிகப்பு நிற கல்வைத்து வேலைப்பாடு செய்து இருந்த சேலையில் மிதமான ஒப்பனையில் தோலை தாண்டி தொங்கிய முடியை நேர்த்தியாக விரித்துவிட்டு மிகுந்த செழிப்பான தோரணையுடன் நிஸ்வந்தை நெருங்கிய அவள் .
யோசனையுடன் அந்த அவளை பார்த்துக்கொண்டு இருந்த யஸ்வந்த் புரிந்துகொண்டான் . முன்பு பலமுறை நிஸ்வந்தை வன்மத்துடன் பார்த்த அவள் தான் இவள் என்று . நிஸ்வந்தை நெருங்கிய அந்த பெண் அவன் முன் எள்ளலான ஒரு சிரிப்பை படர விட்டு நின்றாள் . அவளை பார்த்ததும் "ஹே நீயா இப்ப எங்க வேலை பாக்கற ? " என்று குளறலுடன் கேட்ட நிஸ்வந்தை ஏளனமாக பார்த்துவிட்டு வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .
யஸ்வந்த் வருவதற்குள் அவள் சென்று விட்டாள் . " ச்ச " என்று சளித்துக் கொண்டான் யஸ்வந்த் . "யாஷ் " என்று எழுந்து நிற்கமுடியாமல் தள்ளாட்டத்துடன் விழ இருந்த நிஸ்வந்த்தை தாங்கி பிடித்த யஸ்வந்த் "நிஷு உஹ் இஸ் ஷீ ? " என்றான் கேள்வியாக .
"யாரு யாஷ் " என்றான் தள்ளாட்டத்துடன் . 'ச்ச இவன்கிட்ட கேட்டு பயன் இல்லை ஆளு மட்டை ' என்று எண்ணிய யாஸ்வந்த் நிஸ்வந்துடன் தங்களின் குடியிருப்புக்கு வந்தான் . யஸ்வந்த்தின் மனதில் 'அவள் யாராக இருப்பாள் ? அந்த பார்வை ஏன் அவ்ளோ வன்மத்துடன் நிஸ்வந்தை பார்த்துச்சு ... எனக்கு தெரியாம நிஷு வாழ்க்கையில் இவள் எப்படி ? ' என்று பல கேள்விகளுடன் அடுத்து வர இருக்கும் நாட்களை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருந்தான் .
என் இரண்டாம் கதையான அன்பே உ(எ)ன்னை உனக்காக ...கதையின் மூன்றாம் அத்தியாயம் பதிந்துவிட்டேன் . படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் . உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் நான் (சாரல் ).
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.