மிகவும் அற்புதமான பதிவு. மிக மிக இரசித்து படித்தேன் என்றே சொல்லவேண்டும். முதல் பதிவை படித்த போது முதன் முதலில் அதை படித்தபோது ஏற்பட்ட தாக்கத்தை விட இப்போது படித்தபின் ஏற்பட்ட தாக்கம் மிக அதிகமே. இப்போது படிக்கும்போது ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி கொள்ள முடிகிறது. பாடலை நித்து கேட்கபதன் காரணமும் நன்கு உணர முடிகிறது. ரித்வி உணர்ச்சிவயப்பட்டவனாக இருக்கையில் அவளுடைய அலைபேசியின் ஒலி அவன் கவனத்தை திசை திருப்பி விட்டுவிட்டது. அவள் தனியாக சென்று பேச ஆரம்பிக்கவும் இவனுக்குள் ஏற்படும் தவிப்பும் கோவமும், அவள் சிரித்து பேச இவன் பரிதவிப்பும், அவள் என்ன பேசுகிறாள் என்பதை அறிய அவள் அருகே சென்று முதன் முதலாக அவன் வாழ்க்கையில் இதுவரை செய்யாத ஒட்டுகேட்கும் செய்கையை செய்ய விளைந்து பின் அவளிடம் மாட்டிகொண்டு சொல்ல தெரியாமல் தடுமாறுவதும், அவன் உணர்வுகளை சமாளிக்க காரில் தாளமிடுவதும், கண்களை மூடி மூக்கை சுருக்கி சிரித்தவாறே காரில் நெற்றியை முற்றிக்கொள்வதும் என அனைத்தும் மிக அருமை . ரித்துவின் இந்த மாற்றம் வியக்கவும், மகிழவும், இரசிக்கவும் வைக்கிறது. நித்துவே அவனிடம் சொல்வாள் என்று எதிர்பார்ப்பது பின் அவள் சொல்லவில்லை என்றவுடன் இவனே கேட்டும் அவள் சொல்ல மறுத்தவுடன் அவளை சொல்ல வைக்க காரின் வேகத்தை கூட்டி அவன் கோபத்தையும் பிடிவாதத்தையும் அதில் காட்டி அவளை சொல்ல வைத்து விடுகிறான். அவள் சொல்லியவுடன் ஏற்படும் கோவம் அவள் அந்த வரணுக்கு அளித்த பதிலில் தணிகிறது.அவள் புன்னகை இவனை ஈர்க்கிறது. ரித்விக்கு காதல் வந்தவுடன் நம் கண்களுக்கு அவன் இன்னும் அழகாகவே தெரிகிறான். அவனின் ஒவ்வொரு செயலிலும் நம்மை அவன்பால் ஈர்க்கிறான். காதல் வந்ததினால் பொஸ்ஸசிவ்னஸூம் வந்துவிடுகிறது. அவள் அம்மா அழைத்து பேசவும் அதை கேட்ட அவனால் அவளை வேறு யாருடனும் இணைத்து பார்க்க முடியவில்லை, எங்கே அவளை இழந்துவிடுவோமோ என்ற பரிதவிப்பில் அவளிடம் என்னையே திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டு விடுகிறான். அவளின் ஏன் என்ற கேள்விக்கு அவன் இருந்த மனநிலையில் அவனால் சரியாக கூறமுடியாமல் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கும் என்ற காரணத்தையும், அவள் அன்னை சொன்ன காரணத்தையும் முன்வைக்கிறான், கொஞ்சம் நிதானித்திருந்தால் தெளிவாக அவனும் புரிந்துகொண்டு அவளுக்கும் அவன் காதலை உணர்த்தியிருப்பான். அவள் கமிட்மென்ட் காதலா என்கையில் இல்லை என்ற கத்த துடிக்கிற அவன் அவள் காரணம் கேட்டால் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்புகிறான். காரை நிறுத்தி அவள் ஆர் யூ ஓகே என்பதற்கு நோ ஐம் நாட், என்னதான் வேணும் என்கையில் யூ என்கிற பதில்களில் அவன் கோவமும் பிடிவாதமும் அப்பட்டமாக தெரிகிறது. கண்முன் தெரியாத கோவத்திலும் அவள் நிராகரித்ததை தாங்கிகொள்ள முடியாமலும் அவசரத்தில் வார்த்தைகளை நஞ்சென உதிர்த்துவிடுகிறான். நான் உன்னை நிராகரித்ததற்காக என்னை இப்போது ரிஜெக்ட் செய்கிறாயா, ரிவென்ஜ்ஜா, என்னை தேடி ஏன் வந்தாய், யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கெதுக்கு, காதல் தானே, அதனால் திருமணம் செய்துகொள் என்று என்னென்னவோ பேசிவிடுகிறான். இறுதியாக அவன் உதிர்க்கும், இருவரும் ஒருவருடைய தேவையை ஒருவர் தீர்த்துக்கொள்ளலாம் என்பதில் நித்து முற்றிலும் உடைந்து விடுகிறாள், பொங்கி விடுகிறாள். அவன் வார்த்தைகளை கொண்டு அவள் காதலையும், அவள் உணர்வுகளையும் அல்லவா கொன்றுவிட்டான். இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட பின்னர் அவள் எவ்வாறு அவனை அறையாமல் இருப்பாள்.கசங்கி எரிந்த என் உணர்வுகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய், எத்தனை வருடங்கள் ஆனாலும் உன் குரலை வைத்தே உன்னை கண்டுபிடித்து விடுகிறேன், என் சாதனைக்கு பின்னால் உன் உத்வேக வார்த்தைகளே இருந்திருக்கிறது, காதல் இல்லாமல் காதலை யாசித்தாய், நீயே விரும்பவேண்டும் என்றுதான் உன் கமிட்மென்ட் காதலை மறுத்தேன், நீ என்னை பார்க்கும்போதும், ஏன் நீ எனக்கு ஸ்பெஷல் என்று கேட்கும்போதெல்லாம் என் காதலை அடக்கினேன், உன் அருகில் இருக்கும் போதெல்லாம் நான் தடுமாறினேன் என அவள் பேசிய அனைத்திலும்அவள் காதலையும், அவள் வலியையும் நன்கு உணரமுடிந்தது. அவள் ரித்வியை நோக்கி கேட்ட அனைத்தும் சாட்டையடி கேள்விகள். அவள் பேஷ் என்று கைத்தட்டவும் இவன் மரத்தை வெறித்து கொண்டு கண்மூடுகையிலே அனைத்தையும் உணர்ந்து விட்டான் என்று புரிகிறது. அவனை அறியாமல், புரியாமல், தெரியாமல் வார்த்தைகளை உதிர்த்து இருந்தாலும் அதை அள்ள முடியாதே. அவளுக்கும் ரித்வியின் இந்த மாற்றம் தெரியாதே. யாரை குற்றம் சொல்ல முடியும் இதில். அவளின் இத்தனை வருட வலிகளும் வெளிவந்துவிட்டது. இவை எல்லாம் சொல்லியபின்னும் அவனை வைரம் என்றும் பொக்கிஷமானவன் என்றும் சொல்ல தவறவில்லை. காதலில் தான் தவறிவிட்டாய் என் வாழ்க்கையில் நீ இல்லை என்றாலும் உன் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று சொல்லிவிட்டே செல்கிறாள். அவள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அவளை தொடராவிடிலும் அவளை பத்திரமாக கொண்டு சேர்க்க செய்கிறான். காதல் இல்லாத போதே அவள் மீது அக்கரையோடு இருப்பவன் இப்போது சொல்லவா வேண்டும் . அவளின் நிச்சயத்தன்று வழக்கம்போல் அவன் குரலை வைத்தே அவனை கண்டுகொள்கிறாள், சர்வேஷின் அழைப்பின் பேரில் வந்து ஆச்சர்யமூட்டுகிறான். அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அறியாதவன் போலே அறிமுகமாகிறான், மாயமாய் கூட்டத்தின் நடுவே மறைந்தும்விட்டான்.2நாட்கள் கழித்து அழைத்து நான் லவர், ப்ரெண்டு, ஸ்பெஷல் இல்லை ஆனால் எதிரியும் இல்லை என்று நினைத்தால் வரலாம் என்று அழைப்பு விடுக்கிறான். இருவரும் சந்தித்து விடைபெறுகையில் கைகுலுக்கிவிட்டு அவள் நிமிர்கையில் அவன் காதல் மொத்தமும் கண்ணில் தேக்கி அவளை பார்க்கிறான். ஆனால் அவன் பார்வையை அவள் உணரும்முன் அதை மறைத்தும் விடுகிறான். அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் காதலில் தான் எத்தனை பரிமாணங்கள், பிரிவுகள், வேதனைகள், வலிகள். இன்று அவனின் வரவுக்காக காத்திருக்கையிலும் அவன் நினைவுகளே. நினைவுக்கு சொந்தக்காரனோ தள்ளியிருந்து அவள் ஒவ்வொரு அசைவுகளையும் இரசித்து கொண்டிருக்கிறான். ஓ மை டியர் ஸ்வீட்டி என்று அவன் முணுமுணுக்கையில் அவனின் அளப்பரிய காதல் வெளிப்படுகிறதே.கவிதையும் மிக அருமை. முந்தைய பயணத்தில் முறிந்ததை இப்பயணத்தில் சேர்க்க நினைக்கிறானோ. அவள் இழந்ததை இப்போது மீட்டு கொடுக்க போகிறானோ, அவன் சொல்லாமலே அவன் காதலை அவளுக்கு உணர்ந்திட விளைகிறானோ என்று பல எண்ணங்கள் என்னுள்ளே. விடை உங்களிடம். ஆவலோடு காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு. மிக மிக இரசித்த பதிவு இது. வாவ் வாவ் பதிவு