ஹாய் ராஜி,
காதலால் விளையாடி கொன்றவன்
காதலால் உறவாடி கொள்கிறான்...!
காதலால் விளையாடி கொண்டவன்
காதலால் உறவாடி கொல்கிறான்...!
காதல்...
ஆரம்பத்தில் ஆர்ப்பரிப்பு
அவசரத்தில் அவமதிப்பு
காலங்கள் கடந்தாலும்
உணர்வுகளால் உயிர் துடிப்பு!
காதல்...
உயிர் தொட்ட உணர்வில்
கொல்லுகின்ற போதை...
உயிர் குடித்த உணர்வில்
சொல்லுகின்ற பாதை...
காலங்கள் கடந்தாலும்
உள்ளூரும் அதன் துடிப்பு..
காத்திருந்த காதல் மகள்
காதலுக்கு அது சிறப்பு!
காதல்...
உணர்வில்லா காதலுக்கு
உருவமில்லா காதலுக்கு
உயிர் கொடுத்த வேளையிலே
உயிர் குடிக்கும் வலியிருந்தும்
உருக் கொடுத்த மன்னனவன்...
உற்றவனாய் வாழ்ந்தாலும்
உரிமையாய் சாய்ந்தாலும்
கன்னியவள் காதலுக்கு
காத்திருந்த காலமதில்
கற்பனையாய் வாழ்ந்தாலும்
கண் நிறைத்தான் காதலனே...!
காதல்...
கண்ணால் பார்க்காத
காவியக் காதலுக்கு
கண்ணாடி காட்டியது
கண்மணியே உன் படைப்பு!
எத்தனை கதைகள்
காவியமாய் வந்தாலும்....
காதலின் இலக்கணத்தை
கற்பனையாய் சொன்னாலும்...
உன் நடை அழகில்
காட்டும் காதல்
கண்ணீரில் கரைந்த கணம்...
கனவல்ல நிஜம் என்று
கனாக் காணும் சத்தியமே...!
அருமை, அருமை அருமை ராஜி, எப்படி சொல்ல என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு அழுத்தம், என்ன ஒரு நடை, இருவரையும் கண் முன் நிறுத்தி , கரை கண்ட காதல் கண்டு, கண்ணீர் விட்டு ரசித்த நடை. அற்புதம் ராஜி, அதி அற்புதம்.
முடிந்து விட்டது என்று ஆரம்பித்தேன், மாலை ஆரம்பித்து முடித்தும் விட்டேன், ஆனால் இன்னும் கதை முடிய வில்லையா? என்று அர்த்த ராத்திரியில் தவிக்கிறேன்......
காத்திருக்கிறேன் ராஜி.....