Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. அருமை..ரித்வி தன்னை தனிக்காட்டு ராஜா என தன் வேதனையை கூட அவளுக்கு தன் முகத்தில் காண்பிக்காது சிறு முறுவலுடனே சொல்கிறான். நித்து அவனை பார்க்காமலே அவன் பார்வையை உணர்ந்து நேராக பார்த்து வண்டியை ஒட்டு ரித்வி என சொல்வது அருமை. இவனும் அவள் முகபாவனைகளை வைத்தே அவள் ஏதோ கேட்க நினைக்கிறாள் என புரிந்து கொள்கிறான். மிருதுளா குறித்து அவளுள் ஏற்படும் பொறாமையும் அருமை. நல்லவேலை நீ நடுவில் வந்துவிட்டாய் என இவன் ஒரு கோணத்தில் சொன்னால் அவள் வேறொரு கோணத்தில் புரிந்து கொண்டு வருத்தமாக பேசுகிறாள். வருத்தத்திலும் அவள் பேச்சு அவன் நலனை குறித்தே இருக்கிறது. அவன் மீதான அவள் காதல் திருமபவும் ஏமாற்றத்தை விளைவிக்குமோ என்பது மட்டும் தான் அவள் பயம் என்று நினைத்தால் இருவரின் தோற்றத்தையும் ஒப்பிட்டும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாளே.!! ரித்வி நீ தான் எனக்கு வேண்டும் என்று ஒரே வார்த்தையில் அவளை குளிர செய்து விட்டான். அதை தொடர்ந்து அவன் கூறும் அனைத்தும் உண்மையே. அவன் செய்தது அனைத்தும் புரியாமல் செய்தது தானே, புரிந்த பின் அவனுடைய காதல் அவளுடைய காதலுக்கு சற்றும் சளைத்தது அல்லவே.. அதனால் தான் நமக்கும் ரித்வியை ஆரம்பத்தில் இருந்தே பிடித்திருக்கிறது. அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து அவனும் அவளை இரசித்து கொண்டு தான் இருந்திருக்கிறான். அதை அவன் விவரிக்கும் விதம் அருமை. அவன் காதலை அவள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்க தொடங்கிவிட்டாள். அவள் மனம் ஏற்பதை அவளால் நம்பமுடியாமல் அதற்கு விடையை அவனிடமே தேடுகிறாள். அவன் அதற்கு அதை ஆராயாமல் ஜஸ்ட் பீல் அவர் லவ் என்று வார்த்தையிலும் செய்கையிலும் உணர்த்துகிறான். இருவரும் தாங்கள் இழந்ததை மீட்டெடுக்க தொடங்கி விட்டார்கள். அருமையான பதிவு.
ஆம் அவளின் விடை தேடுதல் தான் அடுத்த யூடிகள்