All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் “காமதேவன் அம்பு” - கதை திரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 10:





நாட்கள் கடகட என்று ஓடிவிட, குணா வேர்ல்ட் டூர் செல்லும் நாளும் நெருங்கிவிட்டன. அன்னை சென்னை வந்ததிலிருந்து பெரும்பாலும் இரவு வேளையில் குணாவை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டான் தயா. இன்னும் ஒரு வாரத்தில் வேர்ல்ட் டூர் என்ற நிலையில், தன்னால் வெளிநாடு வர முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள் சங்கீதா.





“என்ன விளையாடுறியா … கடைசி நேரத்துல வர முடியாதுனு கழுத்தறுக்குறா … என்ன பாத்தா எப்படி தெரியுது …” தொண்டையடைக்க கத்தியவனை கண்டு ஸ்டூடியோவில் இருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர். அதுக்கும்





“இங்க என்ன அவுத்து போட்டுட்டு ஆடுறாங்களா … வாய பொளந்துக்கிட்டு பாத்துகிட்டு இருக்கீங்க … ஒழுங்கா ப்ராக்டிஸ் பண்ணுங்க …” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தான். அவன் கோபத்தை கண்டு உள்ளுக்குள் பயந்தாலும்,





“எதுக்கு இவ்வளவு ஹார்ஷா கத்திக்கிட்டு இருக்கீங்க … இப்போ நா வரலைனா என்ன உங்க ப்ரோக்ராம் நின்னா போக போகுது … அங்க வந்து சும்மா ஒப்புக்கு சப்பானியா தான் நா நிக்கணும் … அந்த அந்த நாட்டுல ப்ரோக்ராம் ஏற்பாடு பண்ணவங்களே உங்களுக்கு மேனேஜர் அரேஜ் பண்ணுறாங்க … எதுக்கு தேவையில்லாத விஷயத்துக்கு சும்மா ஓவர் சீன் போடுறீங்க …” என்றதும் தான் தாமதம், கண்கள் இரண்டும் கோவை பழம் போல சிவந்து போக, அதீத கோபத்தை பல்லை கடித்து கட்டுப்படுத்துவது அவன் தாடையின் அசைவு காட்டிக் கொடுத்தது.





“குணா … அது …” அவன் கோபத்தில் பயந்து போய் வாயை திறந்தவளை பேச விடாமல் கையை நீட்டி தடுத்தவன்,





“நீ வர … வந்துதான் ஆகணும் … எனக்கு தேவையான பொழுது கூட நிக்க முடியாதா நீ, எதுக்கு இந்த வேலைக்கு வந்த … டைம் பாஸ் பண்ணவா …” என்றவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் குழுவினருடன் கலந்துக் கொண்டான்.





சோகமாய் ஓரிடத்தில் உட்கார்ந்த சங்கீதாவை நோக்கி வந்த வீணா,





“என்னடி பீலிங்ஸ் வா வானு அழைக்குது … லவ் எப்படி அல்லோவ் பண்ணும்னு யோசிக்கிறியா …” என்று திடீரென்று கேட்கவும், ஆஅ என்று அதிர்ந்து போன சங்கீதா,





“என்னடி சொல்ற …”.





“என்ன என்னடி சொல்ற … நீதான் அந்த காமப்பிசாசுன்னு நீ குணாவ பாக்குற பார்வையிலையே கண்ணு உள்ளவன் யாரும் சொல்லிடுவாங்க … யாருடி அந்த அப்பாவி லவர் …” என்றதும் சற்று அதிர்ந்து போனவள் உடனே சமாளித்து,





“ஏய் அவன் நல்லா டான்ஸ் ஆடுவான் அத ரசிச்சு பாத்தா உன் இஷ்டத்துக்கு கத கட்டுவியா டி … அந்த காஜி பாய நீ சைட் அடிக்கிறதே எனக்கு புடிக்காது … இந்த லட்சணத்துல என்ன வேற கூட்டு சேரு …” என்றவளை நம்பாத பார்வை பார்த்த வீணா, நம்பிட்டேன் என்றபடி மீண்டும் ப்ராக்டிஸ் செய்வதற்காக சென்றாள்.





வீணா அங்கிருந்து நகர்ந்ததும் அப்பாடா என்று மூச்சு விட்ட சங்கீதாவிற்கு வீட்டில் வெளிநாடு செல்ல பெர்மிசன் எப்படி வாங்குவது என்ற கவலை உண்டானது. அன்று முழுதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்த குணாவை கண்டு சில சமையம் அவளுக்கு சிரிப்பு கூட வந்தது. அவன் கோபத்திலும் நியாயம் இருப்பதை உணர்ந்தவளுக்கு என்ன செய்வது என்ற யோசனை. அதே யோசனையுடன் வீட்டிற்கு வந்து குளித்து உடை மாற்றி உட்கார்ந்தவளின் முன் சாப்பாட்டை வைத்தார் சந்திரசேகர்.





சிந்தனை முழுவதும் குணாவை சுற்றியே இருக்க பத்து நிமிடங்களாக தட்டில் இருந்த இட்லியை சாப்பிடாமல் சட்னியில் ஊற வைத்துக் கொண்டு பிசைந்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஞாபகம் வந்தவளாக தட்டை பார்த்தவள், ச்சைக் என்று தலையை ஆட்டிவிட்டு சாப்பிட போனவளின் பார்வை தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தந்தையை ஏறிட்டு பார்த்தது.





அவள் பார்த்த அடுத்த நொடி, தன் பார்வையை சற்றென்று திருப்பிக் கொண்டவரின் செயல் வித்தியாசமாக இருக்க குழம்பிப் போனாள். இவ்வளவு நேரம் தன்னை பார்த்துக் கொண்டிருந்தவர் ‘சாப்பிடுடா’ என்ற வார்த்தையை ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி அவளுள்.





ஏன் என்று யோசிக்கையில் தான் வேலையில் சேர்ந்த கொஞ்ச நாளில் இருந்து தந்தையிடம் தெரிந்த விலகலை கண்டுக் கொண்டாள்.





“அம்மூ தூங்கிடுச்சா ப்பா …” என்று அன்னையை பற்றி சற்று சங்கடத்துடன் கேட்டவளுக்கு முகம் பார்த்து பதில் சொல்லாமல், ம்ம்ம் என்று தலையாட்டியவரை கண்டவளுக்கு அவர் தன்னை ஒதுக்குவது புரிந்தது.





“ப்ப்பா …” என்றவளுக்கு மேலே பேச முடியாமல் எதுவோ தடுக்க, மெல்ல நிமிர்ந்து மகளின் முகத்தை பார்த்தவர்,





“ஓஹ் … இந்த கையாலாகாதவன் அப்பான்ற நினைப்பு கூட இருக்காம …” என்கவும் விக்கித்து போனாள். கண்களில் நீர் கட்டிக் கொள்ள,





“ப்ப்பா …” என்று செறுமிய மகளிடம் பொங்கிவிட்டார் சந்திரசேகர்.





“இவனுக்கு என்ன தெரிய போகுது கூமுட்டைனு நினைச்சு தானே இத்தன நாள் டான்ஸர் குணா கிட்ட வேலைக்கு போறத பத்தி ஒரு வார்த்தை எங்ககிட்ட சொல்லல …” என்று குற்றம்சாட்டிய தந்தையை கண்டு குற்றவுணர்வில் துடித்துவிட்டாள்.





“ப்ப்பா …” என்றவளுக்கு மேலே பேச முடியவில்லை. அவர் சொல்வதை போல தானே எண்ணிக் கொண்டு அவரிடம் சொல்லாமல் விட்டாள்.





“உங்க ரெண்டு பேர் கிட்டையும் ஒரு அப்பா போலவா பழகியிருக்கேன் … ஏண்டா என்கிட்ட சொல்லல … உங்கம்மா உங்களை ஒரு வார்த்தை கேட்டதில்ல ஏன் தெரியுமா … நா உங்கள நல்லா பாத்துப்பேன் நம்பிக்கைல உங்க விசயத்துல தலையிடுறது இல்ல … இப்போ அது எவ்வளவு பெரிய தப்புனு புரியுது … ஒரு அம்மா பிள்ளையை பாத்துக்கிறது போல அப்பால முடியுமா …” என்று கண் கலங்கியவரை தாவி அணைத்துக் கொண்டாள்.





“சாரிப்பா … நீ நினைக்கிறது போல இல்லப்பா … எனக்கு உங்ககிட்ட சொல்ல சங்கடமா இருந்தது … நல்ல விஷயமா இருந்தா நெஞ்ச நிமித்திக்கிட்ட சொல்லிருப்பேன் … என்ன தப்பா நினைக்காதீங்க ப்ப்பா …” என்று கதறிய மகளின் முதுகை தடவி கொடுத்து சாந்தபடுத்தியவர்,





“அழாதடா … அம்மா முழிச்சுக்க போறா …” என்றவர் மேலும் அவள் வேலையை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டவர் அவரே அவளுக்கு இட்லியை ஊட்டினார்.





வேலை விட்டு வந்ததிலிருந்து ஏதோ யோசனையா இருந்ததை பற்றி கேட்கவும், சற்று தயங்கினாலும் டான்ஸ் டூர் பற்றி அவரிடம் கூறிவிட்டாள். சற்று யோசித்தவர்,





“அம்மா விடுவான்னு தெரிலடா … எனக்கும் இது சரியா படல …” என்ற தந்தையின் தோள் வளைவில் தலை சாய்ந்து உட்கார்ந்தவள்,





“ப்ப்பா … ப்ளீஸ் ப்பா … எப்படியாவது எனக்கு பெர்மிஷன் வாங்கி கொடுங்கப்பா … நா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து குணா கிட்ட பயங்கர சேஞ்சஸ் ப்ப்பா … இந்த ஒருவாட்டி மட்டும் … அப்படியே விட்டுட்டு வர மனசில்லப்பா … எனக்கு நம்பிக்கை இருக்கு இந்த டூர மட்டும் அவன் தாண்டிட்டா, இனி அந்த பக்கமே போக மாட்டான் … ப்ளீஸ்ப்பா … என் மேல நம்பிக்கை வச்சு அனுப்புங்க ப்பா …” என்று கெஞ்சிய மகளை கண்டு ஐயோ என்று இருந்தது.





யாராவது அடுத்தவன் திருந்த வேண்டும் என்று தன் வாழ்க்கையை பணயம் வைப்பார்களா … இதை சொன்னால் இவள் புரிந்துக் கொள்வாளா என்று நினைத்தவருக்கு நடப்பதை கண்டு தலை வலியே வந்தது. மகளின் மனதை மாற்ற முயன்றவருக்கு தோல்வியே மிஞ்ச கடைசியில் அவள் ஆசைக்கு வழிவிட்டு அமைதியாக நின்றுக் கொண்டார்.





அடுத்த தடங்கல் செழியன் ரூபத்தில் வர, ஒரே போடாக தந்தை சம்மதித்து விட்டார் என்ற பிடியில் நின்று வெளிநாடு செல்வதற்கு சம்மதம் வாங்கினாள்.





மறுநாள் மிகவும் உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பி சென்றவளின் பார்வை அடிக்கடி தன்னை மீறி குணாவை தொட்டு தொட்டு வந்தது. அன்றைய தினம் அனைவரும் கிளம்பி சென்ற பின் வீட்டிற்கு கிளம்பாமல் பாட்டை ஒலிக்க விட்டான் குணா.





கேள்வியுடன் பார்த்தவளை கண்டுக் கொள்ளாமல் போட்டிருந்த டீஷர்டை கழட்டிவிட்டு ஆர்ம் கட் டீ ஷர்டை போட்டுக் கொண்டவன் தலை மற்றும் இருகைகளையும் இடமும் வலமுமாக ஆட்டி தன்னை இலகுவாக்கிக் கொண்டவன், ரிமோட்டால் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டை மாற்றினான். திடீரென்று ஹ்ம்ம் ஹ்ம்ம் என்ற சரணத்துடன் ஆரம்பித்த பாடலில் மேனி சிலிர்த்து போய் அதே இடத்தில் நின்றுவிட்டாள். சாதன சர்கம் குரலில்,





“ அம்மாடி அம்மாடி


நெருங்கி ஒரு தரம் பாக்கவா


அய்யோடி அய்யோடி


மயங்கி மடியினில் பூக்கவா





யம்மாடி யம்மாடி


நீ தொடங்க தொலைந்திட வா


இழந்ததை மீட்க வா ஓ…


இரவலும் கேட்க வா ஓ… ஹேய் ஹேய்ஹேய் ஹேய் …” பாடல் ஒலிக்கவும் தன் கை பற்றி அவன் இழுத்த இழுப்புக்கு அவனுடன் இழைந்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.





இசைக்கு மயங்காதவர் யாராவது உண்டா. அதுவும் மயக்கும் குரலில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருந்தவள், குணா தன் கை பற்றியதும் முழுதாக தன்னிலை இழந்தாள். அவன் அசைவுகளுக்கு ஏற்ப தன்னுடலை அசைத்தவள் இருவர் மூச்சுக் காற்றும் முகத்தில் மோதிக் கொள்ளும் நெருக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தாள்.





இடுப்பை வளைத்து கையை தூக்கி நெஞ்சு உரச என்று இருவரும் உணர்ச்சி பிழம்பாய் ஆடிக் கொண்டிருந்தனர். பாடல் முடியும் தருவாயில் உணர்ச்சிவசப்பட்ட குணா அவள் இதழ்களை ஆவேசமாக தீண்ட போக, அன்று போல் இன்றும் கடைசி நேரத்தில் சுதாரித்து இருவருக்கும் தடையாக தன் வலக்கரத்தை கொண்டு வந்தாள் சங்கீதா.





அவள் இதழை தீண்டவில்லை என்றாலும் தன்னிதழை விலக்கிக் கொள்ளாமல் தொடர்ந்து அவள் கைகளில் இதழை அழுந்த பதித்திருந்தான். அந்த பக்கம் அவளும் தன் கைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். இருவர் பார்வையும் வேட்கையுடன் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டு நின்றன.





குணாவின் பார்வையில் ஏன் என்ற கேள்வி ஏமாற்றத்துடன் தொக்கி நிற்க, அவள் பார்வையோ எதையும் காட்டாமல் அவனை தைரியமாக தாங்கி நின்றது.





அதில் கடுப்பானவன் ச்சைக் என்றவாறே அவளை உதறிவிட்டு தள்ளி போய் நின்றுக் கொண்டான். அவன் நின்ற தோற்றம் அவள் மனதை பிசைய, ஓடி சென்று கட்டிக் கொள் என்று மூளையிட்ட கட்டளையை கண்ணை மூடி உதறி தள்ளியவள்,





“நா கிளம்புறேன் குணா …” என்றவள், “நா பாரீன் டூர் வர எங்க வீட்டுல பர்மிசன் வாங்கிட்டேன் …” என்றுவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பி சென்றாள்.





ஸ்கூட்டியை கிளப்பியவளுக்கு குணாவை அப்படியே விட்டு செல்ல மனம் பிரண்ட, தயாவை போனில் அழைத்து,





“தயா … குணாவ உங்க உங்க கூட அழைச்சுட்டு போங்க … அவர் ஆள் அப்செட்டா இருக்கார் … நீங்க வர வரைக்கும் நா வெய்ட் பண்றேன் …” என்றவள் அவன் வந்ததும் தான் அங்கிருந்து கிளம்பி சென்றாள்.





குணாவிற்கு கட்டவிழுந்த தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தலையை பிடித்தபடி அங்கேயே உட்கார்ந்துவிட்டான். தயா வந்து அழைக்கும் வரை அதே இடத்தை விட்டு சிறிது அசையவில்லை. அப்படியொரு கோபத்தில் இருந்தான் சங்கீதாவின் மேல்.





சிறிதாக தீண்டினால் கூட வெடித்து விடும் அபாயத்தில் இருந்தவனின் தோளை தொட்டான் தயா. இருந்த கோபத்திற்கு ஒரே தட்டு, அவன் தள்ளிய வேகத்தில் பேலன்ஸ் தவறி கீழே விழ பார்த்தவன் நிதானித்து,





“என்னடா ஆச்சு உனக்கு … எதுக்கு இவ்வளவு கோபம் …” என்ற அண்ணனை திரும்பி தீப்பார்வை பார்த்தவன்,





“உன்ன யாரு இங்க வர சொன்னது … என்ன கொஞ்சம் தனியா விடு, போ இங்கிருந்து …” என்று கத்தியவனை கண்டு தலையை அதிருப்தியில் ஆட்டியபடி அருகில் உட்கார்ந்துக் கொண்டான். தன் பேச்சை கேட்காமல் அங்கேயே உட்கார்ந்தவனை கண்டு,





“ஒரு தடவ சொன்னா புரியாதா … போ … நா ஒன்னும் சின்ன குழந்தை இல்ல, உன் கண்ட்ரோல்ல இருக்க … எனக்கும் புத்தி இருக்கு என் வழில போக விடு …” என்று தொண்டையடைக்க கத்தியவனுக்கு பதில் கூறாமல் அமைதியாக கண்ணை மூடிக் சுவற்றில் தலை சாய்த்து கொண்டான்.





“நா தான் அவங்க புள்ளையே இல்லைனு சொல்லி உறவ துண்டிச்சு விட்டாங்கல்ல … அப்புறம் என்ன டாஸ்க்கு இப்போ இங்க வந்தாங்களாம் … என் விருப்பப்படி வாழ்க்கையை அமைச்சுக்கணும் நினைச்சது தப்பா … சொல்லுடா … அவங்க சொல்றபடி தான் வாழணும்னா எதுக்கு என்ன பெத்துக்கிட்டாங்களாம் … ச்சைக் எல்லாரையும் பாக்க பாக்கா கடுப்பா வருது ….” சற்று அடக்கி கத்தியவனுக்கு அமைதியே பதிலாக கொடுத்தான் தயா.





“ உண்மையா சொல்லனும்னா நா உங்க எல்லாரையும் விட்டு மனசளவுல ரொம்ப தூரம் வந்துட்டேன் தயா … அம்மா அண்ணா எந்த மாதிரி நெருக்கமும் என் மனசுல இல்லடா … புரிஞ்சுக்கோ …” சோர்ந்து போன குரலில் பேசியவனை திரும்பி கூட பார்க்கவில்லை அவன் அண்ணன்.





கத்தி கத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தியதால் சற்று தெளிந்திருந்தான் குணா. அவனும் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். சற்று பொறுத்து,





“வைஷுக்கு உன்ன கட்டிக்க விருப்பம் … உன்ன தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் பிடிவாதம் பிடிக்கிறா … அதான் மாமா அவள இங்க அனுப்பி வச்சிருக்கார் …” திடீரென்று பேசியவனை நெற்றி சுருக்கி கேட்டவன் புரியாமல்,





“எதுக்கு …” என்கவும், பெருமூச்சை விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தவன்,





“நீங்க ரெண்டு பேரும் பழக தான் … இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் வைக்கணுமாம் … இல்ல இப்போதைக்கு அவளுக்கு கல்யாணம் நடக்காதாம் …” என்றவன் தம்பியின் விழிகளை அழுத்தமாக பார்த்தபடி,





“அவள கல்யாணம் பண்ணிக்கிறியா …” என்று கேட்கவும், அதிர்ந்து போய் பார்த்தவனின் தலை முடியாது என்று மறுத்து அசைத்தது.





“அப்போ வைஷுவை உன் கூட வேர்ல்ட் டூருக்கு அழைச்சுட்டு போ … உன்ன கல்யாணம் பண்றத விட பாழும் கிணத்துல விழலாம்னு அவ நினைக்கிற அளவுக்கு நடந்துக்கோ …” என்ற தமையனை ஒருநொடி முகம் சுருங்க பார்த்தவன் பின்,





“என்னடா நா பேசுனது கேட்டு பயங்கர காண்டுல இருக்க போல …” என்றவனை அவன் பார்த்த பார்வையில் தலைசாய்த்து சிரித்தவன்,





“அப்பா … ஒடம்பெல்லாம் எரியுது … செம்ம ஹாட் மச்சி உன் ஐஸ் …” கண்ணை சிமிட்டி கூறியவன் தன் வலக்கையை அவன் தோளை சுற்றி போட்டு தன்னோடு நெருக்கி கொண்டே,





“வாடா வாடா … நீதான் நா பண்றது எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போற நல்லவன் ஆச்சே … இப்போ மட்டும் என்ன திடீர்னு கோபம்லாம் படுற …” என்றவனின் கூற்றில் மெலிதாக புன்னகைத்தவன்,





“உனக்கு எங்க மேல பாசமில்லாம இருக்கலாம் அதுக்காக நானும் அப்படியே இருக்கனும் அவசியமில்லையே … தயாக்கு தம்பினா எப்பவும் ஸ்பெசல் தான் … கடவுளே வந்து அவன வெறுத்து போனு சொன்னா கூட இவன் கேட்க மாட்டான் … நீ மூச்சடைக்க பேசினதெல்லாம் வேஸ்ட் வா போலாம் …” என்ற அண்ணனை கண்டு கண்கள் கலங்கிப் போனது குணாவுக்கு, இருந்தும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாதவன்,





“இப்படி மொக்க போட்டே என்ன கவுத்துடுற டா அண்ணா …” என்றவன் அவன் கன்னத்தில் முத்தம் வைக்க,





“ச்சீ … தள்ளி போடா … நா ஒன்னும் நீ லைக் பண்ற கேர்ள்ஸ் இல்ல …” என்று தன்னிடமிருந்து தள்ளிவிட்டவனை கண்டு சத்தம் போட்டு சிரித்தான் குணா.





ஒருவழியாக வீட்டிற்கு வந்து சாப்பிட்டு படுக்கையில் விழுந்த பின் மொபைலை எடுத்து பார்த்தான் தயா. சங்கீதாவிடமிருந்து சில அழைப்புகளும் சாரி என்று தாங்கிய மெசேஜூம் வந்திருந்தன. மெசேஜை படித்த அடுத்த நொடி அவனை அழைத்திருந்தாள். ஒரு நொடி தயங்கியவன் அழைப்பை ஏற்றதும்,





“சாரி சாரி … அப்படி பேசியிருக்க கூடாது … எனக்கு ஒன்னும் தெரியாததை போல நீங்க பேசினத பாத்து கோபம் வந்துடுச்சு … அதுவும் குணா கிட்ட உண்மைய சொல்லிடுவேன் சொன்னதும் பயங்கரமா தலைக்கு ஏறிடுச்சு … சாரி …” என்று உள்ளே போன குரலில் பேசியவளுக்கு உடனே பதில் கூறாமல் சிறிது நேரம் அமைதி காத்தவன், பின்





“விடு மா … நா பெருசா எடுத்துக்கல … வைஷுவும் வருவா, அவளுக்கு நீ துணை உனக்கு அவ துணை … என்னால இத மட்டும் தான் பண்ண முடிந்தது …” வெறுமையான குரலில் பேசியவனை கண்டு கண்கள் கலங்கி விட்டது சங்கீதாவிற்கு.





“சாரி தயா … ப்ளீஸ் என்ன நம்புங்க … நா உங்களுக்கு வாக்கு கொடுத்தபடி நடந்துப்பேன் … என்னையே அசிங்கப்படுத்துறது போல நடந்துக்க மாட்டேன் …” என்றவள், பின்





“தேங்க்ஸ் … எனக்காக யோசிச்சதுக்கு …” நன்றி கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.





பார்க்கிங்கில் தானும் குணாவுடன் வெளிநாடு செல்வதா கூறிய சங்கீதாவிடம் நீ செல்லக் கூடாது என்று ஒற்றைக் காலில் நின்று மறுப்பு தெரிவித்தான் தயா. அவனுக்கு தான் தம்பியின் மனம் தெரியுமே, சங்கீதாவை தனியாக அனுப்புவது அவ்வளவு நல்லதில்லை என்று மனதில் பட, அவள் செல்வதற்கு முட்டுக்கட்டை போட்டான். பதிலுக்கு கோபத்தில் வார்த்தைகளை அவளும் விட மனம் வெறுத்து போய் தான் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தான். அங்கே தம்பி உட்கார்ந்திருந்த கோலம் அனைத்தையும் மறக்க செய்திருக்க , இதோ படுக்கையில் கண் மூடி படுத்திருந்தவனுக்கு தன்னை சுற்றி நடப்பதை நினைத்து சொட்டு தூக்கமில்லை.





வைஷுவை கண்டிப்பாக குணா கட்டமாட்டான் என்பது புரிய ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கூற்றிற்கு ஏற்ப அவளையும் குணாவுடன் அனுப்ப முடிவெடுத்தான். முடியவே முடியாது என்று குறுக்கே படுத்த சௌந்தர்யம் மற்றும் மாமாவை ஒருவழியாக சமாளிக்க வைத்து இதோ ஏர்போட்டில் குணா மற்றும் வைஷுவையும் இறக்கி விட்டு கிளம்பியிருந்தான்.





ட்ரூப் மெம்பெர் அனைவரும் வந்த பின்னும் இன்னும் வராமல் குணாவை கடைசி நிமிடம் வரை டென்ஷனில் சுத்த விட்டிருந்தாள் சங்கீதா. அவசர அவசரமாக உள்ளே வந்தவளை முறைத்து பார்த்தனர் குணாவும் வைஷுவும்.





“இதான் நீ வர நேரமா …” என்று குணா பல்லை கடிக்க,





“இவ எதுக்கு கூட வரா மாமா …” என்று சங்கீதாவை பார்வையால் பொசுக்கினாள் வைஷு. ‘ம்ம்க்கும் இவ ஒருத்தி உண்மை என்னனு தெரியாம ஒளறுது …’ என்று மனதில் சங்கீதா நினைத்துக் கொள்ள,





“ம்ப்ச் … அவ என் பிஏ வைஷு … அவ இல்லாம போக முடியாது …” என்ற குணாவின் பதிலில் எதிரே நின்றிருந்தவளை மிதப்பான பார்வை பார்த்தாள் சங்கீதா. அதில் கடுப்பான வைஷு,





“என்ன பெரிய பிஏ … ஏன் அந்த வேலையை நா பண்ண மாட்டேனா …” என்ற பதிலில்,





“ஓஹ் … மேடம் அப்போ சார்க்கு எந்த பிளேவர் புடிக்கும்னு சொல்லுங்க … ஸ்ட்றாபெரி பப்பில்கம் இல்ல …” என்று ஆரம்பித்தவளை கண்டு கடுப்பான குணா அவள் பேச்சை நிறுத்துவதற்காகவே வேண்டுமென்றே இரும்பினான். இருமிய படி





“தண்ணி … தண்ணி …” என்று கேட்டவனை நோக்கி இருவரும் தங்களிடமிருந்த தண்ணீர் பாட்டலை நீட்டினார். இருவரையும் கண்டு திகைத்து போனாலும், தலையை தட்டியபடி வைஷு நீட்டிய தண்ணீரை வாங்கி குடித்தவனை கண்டு வாயெல்லாம் பல்லாக சங்கீதாவை பார்த்து சிரித்தாள். தண்ணீர் குடித்து முடித்து நிமிர்ந்தவனை நோக்கி பாட்டிலை நீட்டியபடி,





“பிஏ பண்ண வேண்டிய வேலையை உங்க அத்த பொண்ணு பண்ணும் போது நா எதுக்கு வெட்டியா … தண்ட செலவு … அவங்களே பாத்துப்பாங்க … நா கிளம்புறேன் …” என்றவளை முறைத்து பார்த்த குணா,


‘ அட கொரங்கே நேரங்களாம் பாத்து என்ன பழி வாங்குறல … இருக்கட்டும் இருக்கட்டும் உன்ன அப்புறமா கவனிச்சுக்கிறேன் …” மனதில் அவளை வசைபாடியவன் முறைத்தபடியே அவளிடமிருந்தும் தண்ணியை வாங்கி குடித்தான்.





ஒற்றை புருவத்தை ஏற்றி காட்டி எப்பூடி என்று சிரித்தவளை கண்டு கோபத்தில் தரையில் ஓங்கி மிதித்துவிட்டு சற்று தள்ளியிருந்த இருக்கையில் போய் உட்கார்ந்துக் கொண்டாள். குணாவும் சங்கீதாவை முறைத்துவிட்டு மாமன் மகள் அருகில் சென்று உட்கார்ந்துக் கொண்டான். உட்கார்ந்த ஐந்து நிமிடங்களிலே ரெஸ்ட் ரூமை தோடி சென்றவனை கண்டு சத்தம் எழுப்பாமல் சிரித்தாள் சங்கீதா.





போர்டிங்கான அழைப்பு வந்ததும் அனைவரும் ஏறி முடித்த பின் கடைசியாக ஏறினாள் சங்கீதா. மூணு பேர் உட்காரும் சீட்டில் இவளுக்கு வைஷுவிற்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, ஆனால் உள்ளே வைஷுவின் இடத்தில் குணாவும், இவள் இடத்தில் வைஷுவும் உட்கார்ந்திருந்தனர்.





“குணா … நீங்க கார்னர் சீட், வைஷு சென்டரா உட்காருன்னும் … மாறி உட்கார்ந்திருக்கீங்க பாருங்க … எழுந்திருங்க …” என்றவளை குணா முறைத்து பார்க்க,





“மாமா … அவ பக்கத்துல என்னால உட்கார முடியாது …அவள அங்கையே உட்கார சொல்லுங்க …” என்ற வைஷுவை பல்லை கடித்தபடி முறைத்து பார்த்த சங்கீதாவை நக்கலாக பார்த்து சிரித்த குணா, கண்களால் தனக்கு அருகில் இருந்த இடத்தில் உட்காருமாறு சைகை செய்தான்.





‘பெரிய காந்த கண்ணழகன் நினைப்பு கண்ணாலே பேசுறாராம் … நீயே டுவெண்ட்டி போர் ஹவர்ஸ் காஜி மூட்லையே சுத்திட்டு இருப்ப உன் பக்கத்துல நானா … நோ …’ என்று மனதில் அவனுக்கு பழிப்பு காட்டியவள், சுற்றியும் தன் பார்வையை சுழல விட்டாள். இரு இருக்கைகள் தள்ளி வீணா மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பதை கண்டு முகம் மலர புன்னகைத்தவள்,





“குணா … வீணா தனியா உட்கார்ந்திருக்க நா அவ பக்கத்துல உட்கார்ந்துக்குறேன் …” என்றவள் அவன் முறைப்பை சட்டை செய்யாமல் வீணாவை நோக்கி நகர,





“ரொம்ப சநதோஷம் … அங்கேயே போய் உட்காந்துக்கோ, இங்க திரும்ப வந்துடாத …” என்று சிலுப்பிய வைஷுவை திரும்பி பார்த்து சிரித்தவள்,





“வரமாட்டேன் வர மாட்டேன் … நீயே வச்சுக்கோ உன் காஜி புடிச்ச மாமாவ …” என்றவள் காஜி என்ற சொல்லை மட்டும் வாய்க்குள் முணுமுணுக்க அது விழ வேண்டியவன் காதில் சரியாக விழுந்தது. என்ன என்ன என்ற வைஷுவிற்கு,





“பாத்து உன் மாமாவ பத்திரமா புடிச்சு வச்சுக்கோ … மேல பறக்கும் போது காக்கா வந்து தூக்கிட்டு போய்ட போகுது ..” நக்கலாக கூறிவிட்டு செல்ல ,





“அதான் நீ கிளம்பிட்டியே வேற எந்த காக்கா வந்து தூக்கிட போகுது …” என்று பதில் கொடுத்த வைஷுவுடன் சேர்ந்து குணாவும் தன்னை காஜி என்று கூறிய கடுப்பில் சத்தம் போட்டு சிரித்தான்.





வீணாவின் அருகில் சென்றவள்,





“ஹேய் மச்சி … தள்ளி உட்காரு டி …” என்ற சங்கீதாவின் குரலில் நிமிர்ந்து பார்த்த வீணா,





“ஏய் கேபி இங்க என்ன பண்ற …” சிரிப்புடன் விசாரித்தவளை முறைத்து பார்த்தவள்,





“அப்படி கூப்பிடாதேன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன் … தள்ளி உட்காரு இங்க தான் உட்கார போறேன் …” என்ற தோழியை புன்னகையுடன் பார்த்தவள்,





“சாரி பேபி இந்த ட்ரிப் முழுக்க நா உனக்கு அன்அவைலபிள் …” என்று புதிர்போட்ட தோழியை புரியாமல் பார்த்தவளை நோக்கி கண்ணை சிமிட்டிய வீணா,





“என் பாய்ப்ரெண்ட் வரான் … ப்ரோக்ராம் இல்லாத நேரத்துல அவன் கூட தான் டைம் ஸ்பென்ட் பண்ணி செம்ம பன் பண்ண போறேன் …” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தவள்,





“என்ன பாய்ப்ரெண்டா … அது யாரடி திடீர் பாய்ப்ரெண்ட் எனக்கு தெரியாம …” திகைப்புடன் கேட்டவளுக்கு,





அதெல்லாம் சொல்ல முடியாது நீ மட்டும் உன் லவர் யாரு உன் பீலிங்ஸ் யாருன்னு சொன்னியா … போ போ போய் ஒன் இடத்துல உட்காரு … மை ஆளு வர நேரமாச்சு …” என்று விரட்டியவளை முறைத்தபடி திரும்பி நடந்தவளின் காதுகளில்,





“ஹேய் … செழி … திஸ் வே … இங்க இங்க …” என்று ஆர்பாட்டத்துடன் வரவேற்ற வீணாவின் குரல் கேட்க, நடப்பதை நிறுத்தி பயத்துடன் திரும்பி பார்த்தவள் அங்கே வீணாவை அணைத்து விடுவித்த செழியனை கண்டு அதிர்ந்து போய் நின்றுவிட்டாள்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 11:



செழியனை அங்கே கண்டதும் பேயை கண்டது போல அதிர்ந்து போனவள், கோபத்துடன் அவர்களை நோக்கி நடந்தாள்.



“யாரு இந்த சார் தான் உங்க பாய் ப்ரெண்ட் … இத நா நம்பனும் …” நக்கலாக கேட்டபடி வீணாவை முறைத்து பார்த்தவளிடம்,



“எஸ் … இதுல உங்களுக்கு என்ன டவுட் …” என்று பதிலளித்த தம்பியிடம்,



“ச்செழி … விளையாண்டது போதும் … கடுப்ப கிளப்பாத …” என்று பல்லை கடிக்க,



“ஓஹ் மை காட் … உனக்கு செழியன முன்னமே தெரியுமா … அப்போ இண்ட்ரோ கொடுக்க வேணாம் …” என்று ஆச்சிரியப்பட்ட வீணாவை கடுப்புடன் பார்த்த சங்கீதா,



“அப்போ உனக்கு இவன் யாருன்னே தெரியாது அப்படித்தானே …” என்ற தோழியை பார்த்து,



“செழி யாருனு தெரியும் … பட் உனக்கும் அவருக்கும் உள்ள கனக்சன் தெரியாதே … உன் கசின் பிரதரா … இல்ல தூரத்து அண்ணாவா …” என்று அப்பாவியாய் பதில் கேள்வி கேட்டவளைக் கண்டு இடுப்பில் கைவைத்து முறைத்தவளிடம்,



“ஹேய் … என்ன வந்ததுல இருந்து என் பேபிய மிரட்டிகிட்டே இருக்க … இப்ப உனக்கு என்ன வேணும் …” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தவள்,



“என்ன கோமாளி கூத்து இது செழி … அக்காவ போய் பேபினு கொஞ்சிகிட்டு இருக்க … நீ ஏதோ பிளான் பண்ணி பண்ற … மரியாதையா கீழ இறங்கி போ …” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தங்கள் சீட்டை தேடி வந்த சிலர் அவளை இடித்து கொண்டு செல்ல,



“ச்ச … இவங்க வேற நேரங்காலம் தெரியாம …” என்ற அலுத்துக் கொண்ட நொடி,



“வாட் … அக்காவா … செழி வாட் இஸ் திஸ் … இவா என்ன சொல்றா …” என்று பதறிய வீணாவை கண்களால் பொசுக்கியவள்,



“நா என்ன சொல்றேனு உனக்கு புரில … அப்படித்தானே …” என்றவளை மதிக்காமல், தன்னருகில் உட்கார்ந்திருந்த வீணாவின் தோளை சுற்றி கையை போட்டவன்,



“நோ பேபி … ஐ வில் எக்ஸ்பிலைன் … இவ பொறாம புடிச்சவ … வேணும்னே பிரிக்க பாக்குறா …” என்று பதிலளித்தவன், சங்கீதாவிடம் திரும்பி,



“இவ என் கூட பொறந்தவளா அக்கானு கூப்பிட … என்ன இப்போ வயசுல பெரியவங்கள லவ் பண்ண கூடாதுனு ஏதாவது ரூல்ஸ் இருக்கா … எங்களுக்கு புடிச்சிருக்கு வயசு ஒரு தடையில்ல … போ போ … போற வரவங்க இடிச்சுட்டு போறானுங்க எருமாடு போல நிக்கிற …” என்ற தம்பியை முறைத்து பார்க்க,



“அய்யோ செழி என்ன சொல்ற நா நா உனக்கு அக்காவா … அய்யோ நெஞ்சே வலிக்குதே …” என்று அவன் தோள் சாய்ந்து அழுதவளைக் கண்டு,



“ரொம்ப நடிக்காதடி …” என்று சொல்ல வந்தவளை பேச விடாமல்,



“மேடம் … ப்ளீஸ் டேக் யுவர் சீட் …” என்ற ஏர்ஹோஸ்டசின் கோரிக்கையில் இருவரையும் முறைத்து பார்த்தபடி திரும்பி நடந்தவளை கண்டு இருவர் இதழ்களிலும் புன்னகை. சங்கீதா சென்றதும்,



“ஹெல்லோ தம்பி … போதும் உங்க அக்கா போயிட்டா … மேலேயிருந்து கையை எடுக்குறீங்களா …” என்றதும் அவசரமாக அவள் தோளை சுற்றியிருந்த கையை எடுத்துக் கொண்டவனிடம்,



“அப்புறம் இன்னொரு விஷயம் தம்பி, இதான் லாஸ்ட் என் மேல கை போடுறது … நீங்க ஒன்னும் என் உண்மையான பாய்ப்ரெண்ட் இல்ல புரியுதுங்களா தம்பி …” என்ற வீணாவை திரும்பி அழுத்தமாக பார்த்தவன்,



“அதே போல நா ஒன்னும் உங்க கூட பிறந்த தம்பி இல்ல … சோ இனிமே தனியா இருக்கும் போது கூட தம்பின்னு கூப்பிடாதீங்க நாராசமா இருக்கு …” என்றவனை முறைத்து பார்த்தாள் ஒழிய பதில் கூறவில்லை.



முகத்தை உர்ரென்று வைத்தபடி பொத்தென்று தன்னருகில் உட்கார்ந்தவளின் அருகே நெருங்கி,



“என்ன … மூக்கு அறுபட்டுருச்சா …” என்று நக்கல் செய்தான் குணா. அவனை அனல் தெறிக்க பார்த்தவள்,



“எப்படி குணா … அவ பாய்ப்ரெண்ட் கூட வர ஒத்துக்கிட்டிங்க …” என்று குறைபட்டவளை கண்டு இதழ் பிரியாமல் சிரித்தவன்,



“எல்லாம் உனக்காகத்தான் …” என்ற பதிலில் அதிர்ந்து போனவள், என்ன என்று பார்க்க,



“பாரு இப்பவே என் பக்கத்துல உட்கார மாட்டேன்னு அங்க போன … அப்போ நைட் கண்டிப்பா அவ கூடத்தான் ஸ்டே பண்ணுவேன்னு வீம்பு புடிப்ப … பட் இப்போ அந்த ப்ரோப்லேம் இல்ல … யூ ஹேவ் டு ஸ்டே இன் மை ரூம் …” அலட்டாமல் பேசியவனை அடப்பாவி என்ற பார்வை பார்த்தவள்,



“வீணா இல்லைனா என்ன … அதான் உங்க அத்த பெத்த ரத்தனம் இருக்கே அதுகூட சேர்ந்து படுத்துப்பேன் …” என்று முறைத்தவளை நக்கலாக பார்த்தவன்,



“நீ தலை கீழா நின்னா கூட அவ உன்கூட ஸ்டே பண்ண விரும்ப மாட்டா …” என்று கண்ணை சிமிட்டியவனை முகம் சுழித்து பார்த்தவள்,



“அப்போ ஒழுங்கா ஊருக்கு போற ஐடியா இல்ல போல …” என்று கடுப்படித்தவளிடம்,



“அதப்பத்தி நோ ஐடியா … பட் நாம கண்டிப்பா அப்பா அம்மா விளையாட்டு விளையாண்டுட்டு தான் கிளம்புறோம் …” என்று மீண்டும் கண்ணை சிமிட்ட தலையில் அடித்துக் கொண்டவள் திரும்பி பார்க்க, இவளை தான் முறைத்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் செழியன்.



‘அடப் போங்கடா …’ என்று உள்ளுக்குள் அலுத்துக் கொண்டவள் நிமிர்ந்து உட்கார்ந்துக் கொண்டாள். அதற்குள்,



“என்ன மாமா … அவ கூடவே பேசிட்டு வறீங்க … இந்த பக்கம் திரும்புங்க …” என்ற அத்தை மகளை நோக்கி மயக்கும் புன்னகை சிந்தியவன் பின் அவளிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான்.



விமானம் கிளம்பி இரண்டு மணி நேரம் கடந்திருக்கும், சங்கீதா என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக எழுந்து நடந்த செழியன் இவர்களை கடந்து சென்று திரும்பி பார்க்க அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்.



நடுநாயமாக குணா உட்கார்ந்திருக்க, அவன் வலப்பக்கம் தோளில் வைஷுவும், இடப்பக்க தோலில் சங்கீதாவும் தலைசாய்த்து உறங்கிக் கொண்டிருக்க ‘இவள’ என்று பல்லை கடித்தான். கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்த குணாளன் உள்ளுணர்வு உந்த சற்றென்று கண் திறந்து பார்த்தான். அருகில் தங்களையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்த செழியனை கண்டு என்ன என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கவும், அதில் தெளிந்தவன் கடுப்பாக,



“பாக்க வள்ளி தெய்வானையோட காட்சியளிக்கிற முருகர் போலவே இருக்கீங்க …” என்ற கூற்றில் கன்னம் விரிய சிரித்தவன் தேங்க்ஸ் என்று கண்ணை சிமிட்டினான்.



‘ஆளையும் மூஞ்சையும் பாரு நக்கலா சொல்றத கூட பாராட்டா எடுத்துக்குறான் … எல்லாம் இந்த மங்கி பிசாசால …’ என்று மனதில் கருவியவன் திரும்பி போகும் போது வேண்டுமென்றே சங்கீதாவின் கையில் யாருக்கும் தெரியாமல் நறுக்கென்று கிள்ளி வைக்க, ஆஅ என்ற சிறு அலறலுடன் துடித்து போய் கண்விழித்தவள் திரும்பி பார்க்க தன்னையே முறைத்தபடி சென்றுக் கொண்டிருந்த செழியனை கண்டு ‘எரும மாடு எப்படி கிள்ளி விட்டுட்டு போகுது பாரு …’ என்று பல்லை கடித்தாள்.



ஒருவழியாக நள்ளிரவு சிங்கப்பூர் வந்தடைந்தனர். அடுத்து அவர்கள் சென்றது தங்க வேண்டிய இடத்திற்குத்தான். விழா ஏற்பாட்டாளர் த்ரீ ஸ்டார் ஹோட்டலில் அனைவருக்கும் ரூம் போட்டிருக்க பயண அலுப்பில் எதுவும் பேசாமல் தூங்க சென்றனர்.



ஏற்பாடு செய்யப்பட்ட அறைகளை யார் யாருக்கு என்று பார்த்து கொடுத்துவிட்டு, கடைசியாக வந்தாள் சங்கீதா. அதுவரை தன் அறைக்குள் செல்லாமல் காரிடாரில் நின்றுக் கொண்டிருந்தான் குணாளன். அவள் அருகில் வந்ததும், “கம் ” என்று அவள் கை பிடித்து அழைக்க, ‘அய்யோ …’ என்றிருந்தது சங்கீதாவிற்கு.



அதற்குள் வீணா தங்கியிருந்த அறையில் இருந்து வெளியே வந்த செழியன் அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினான். அவன் செய்கையை சில நொடி புருவம் இடுங்க பார்த்த குணா பின் சங்கீதாவின் கை பற்றி தன் அறை நோக்கி செல்ல, சற்றென்று திரும்பி பார்த்த செழியனின் பார்வை இணைந்திருந்த அவர்களின் கரங்களில் மேல் அழுத்தமாக படிந்தது.



அவனை நிமிர்ந்து பார்க்காமலே அவன் பார்வையை உணர்ந்த சங்கீதா வெடுக்கென்று தன் கையை உருவிக் கொள்ள, சலிப்புடன் திரும்பி பார்த்து முறைத்த குணா,



“ரொம்ப பண்ணாத … இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்தமும் எனக்குதான் …” என்று காதில் கிசுகிசுக்க, விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள்,



“விருப்பம் இல்லாம தொட மாட்டேன் … அதுவும் இந்த விஷயத்துல பழம் தின்னு கொட்டை போட்டவங்களை தான் புடிக்கும்னு டயலாக் எல்லாம் விட்டது …” என்று கண்ணீல் தீ பறக்க கேட்டவளை கண்டு பக்கென்று சத்தம் போட்டு சிரித்தவன், அவளை தோளோடு அணைத்துக் கொண்டு



“அது நீ உன் புருஷன தவிர மத்தவங்கள தொட மாட்டேன்னு சீன் போட்டல்ல … அந்த கடுப்புல சொன்ன பொய் …” என்று கண் சிமிட்ட, இவர்களை நோக்கி வேகமாக வந்தான் செழியன்.



‘இவன் ஒருத்தன் … நானே இந்த மொக்க பீஸ் கிட்ட இருந்து ஈஸியா தப்பிச்சு வந்துடுவேன் … தேவையில்லாத சீன் கிரியேட் பன்றான் இடியட் …’ என்று தம்பியை நினைத்து உள்ளுக்குள் அவளாள் பல்லை மட்டும்தான் கடிக்க முடிந்தது. பதட்டமாக அவர்கள் அருகில் வந்த செழியன்,



“சிஸ்டர் … ப்ளீஸ் வீணா கூட ஸ்டே பண்ணிக்கிறீங்களா … ஷி இஸ் நாட் பீலிங் வெல் …” என்றவனை சங்கீதா முறைத்து பார்த்தாள் என்றால் குணாவோ,



“நல்லா தானே இருந்தா சடென்னா என்ன வந்துச்சு …” என்றான் கடுப்புடன். “அது …” என்று தயங்கிய செழி,



“லேடீஸ் ப்ரோப்லேம் … ஸ்டொமக் பெயின்ல துடிச்சுக்கிட்டு இருக்கா … அதான் சிஸ்டர் கூட இருந்தா பெட்டரா பீல் பண்ணுவா …” என்று அடிச்சு விட்டவனை, இதெல்லாம் ஒரு காரணமா என்ற பார்வை பார்த்தான் குணா.



‘அட பக்கி நாயே … இதெல்லாம் ஒரு ரீசனு எடுத்துட்டு வந்து நிக்கிற … நானே இத கண்டுக்க மாட்டேன் இவன்கிட்ட போய் … லூசு பயலே …’ என்று வறுத்துக் கொண்டிருந்தவளுக்கு நன்கு தெரிந்தது இதற்காகவே குணா தன்னை அவன் அறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்வான் என்று.



“ஹாஹா … டேய் தம்பி உன்ன விடவா இந்த சிஸ்டர் பாத்துக்க போறாங்க … உன்னால ஒன்னும் பண்ண முடியாதுனு … என்னையும் சும்மா இருக்க பிளான் போடுற பாத்தியா … போ போ … நீயே வீணாக்கு கம்போர்ட் கொடு …” என்று விரட்டியவன் சங்கீதாவின் முழங்கையை பிடித்து தன் கை இடுக்கில் வைத்துக் கொண்டே தன் அறையை நோக்கி நடந்தான்.



அவன் பேச்சில் முகம் கருக்க நின்றிருந்த செழியனை பார்க்கவே பாவமாக இருந்தது சங்கீதாவிற்கு. அதுவும் வினாடிக்கு வினா அவன் முகத்தில் ஏறிய சிவப்பை கண்டவளுக்கு கோபத்தில் கண்டிப்பாக வார்த்தகளை விட்டுவிடுவான் என்று புரியவும், அவன் வாய் திறப்பதற்கு முன்



“ம்ப்ச் … வாட் இஸ் திஸ் குணா … முடிலைனு ஹெல்ப் கேட்குறாங்க … கண்டுக்காம போனா என்ன அர்த்தம் …” அவன் பிடியில் இருந்து திமிறியபடி கோபப்பட்டவளை முறைத்தவாறே,



“எனக்கு புடிக்கலைனு அர்த்தம் … நீ என்ன அவளுக்கு பேபி சிட் பண்ண வந்துருக்கியா … தடிமாடு போல வளந்துருக்கான் அவளுக்காக நாடு விட்டு நாடு வந்துருக்கான் அவன் பாத்துகிட்டும் … மொதெல்ல இது என்ன உயிர் போற விஷயமா … லேடீஸ் எல்லாருக்கும் மாசம் மாசம் வர ப்ரோப்லேம் அத போய் பெருசா தூக்கிட்டு வந்துருக்கான் …” என்று அவன் போட்ட சத்தத்தில் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தாள் வைஷு.



குணாவும் சங்கீதாவும் நின்றிருந்த கோலத்தை கண்டவளுக்கு ஆத்திரம் வர,



“தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க மாமா …” என்றவள், “இந்த நேரத்துல உனக்கு மாமா கூட என்ன வேல …” என்று சங்கீதாவை பார்த்து கேட்கவும் இதுதான் தப்பிக்கும் ஒரே வழி என்றறிந்தவள்,



“எங்க தூங்குறதுனு தெரில … உங்க கூட படுக்க விடமாடீங்க … நாளைக்கு வேற ரூம் அரேஞ் பண்றவரைக்கும் குணா ரூம்ல படுக்கலாம்னு …” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,



“என்ன … மாமா ரூம்லய்யா … நீ அவருக்கு பிஏ தான் பொண்டாட்டி இல்ல புரியுதா …” என்று கடுப்படித்தவள், குணாவிடம் “என்ன மாமா எப்படி இவள உங்க ரூம்ல படுக்க அல்லோ பண்றீங்க …” என்று குற்றம்சாட்டியவளை சலிப்புடன் பார்த்தவன்,



“இப்ப எதுக்கு வைஷூ சத்தம் போடுற … பொண்டாட்டிக்கு மட்டுமில்ல என் பிஏக்கும் என் ரூம்ல படுக்க இடம் இருக்கு …” வெளிப்படையாக பேசியவனை அதிர்ந்து போய் பார்த்தவள்,



“அதெல்லாம் நீங்க தனியா இருக்கும் போது இடம் கொடுங்க … நா இருக்கும் போது இல்ல … உங்கள பத்திரமா பார்த்துக்க சொல்லி அத்தையும் தயா மாமாவும் சொல்லிருக்காங்க …” முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு பதில் கூறியவள்,



“புடிக்கலைனாலும் நீ என் கூட வந்து படுத்துக்க …” என்று சங்கீதாவின் கையை பற்றி தன் அறைக்கு இழுத்து சென்றவளிடம்,



“ஒரு நிமிஷம் … நீங்க உள்ள போங்க நா வந்துடுறேன் …” என்ற சங்கீதாவை ஒருநொடி முகம் சுருக்கி பார்த்த வைஷு பின் தோளை குலுக்கிவிட்டு அறைக்குள் நுழைந்துக் கொள்ள, சற்று தள்ளி நின்றிருந்த செழியனிடம்,



“வீணாவ கூப்ட்டு விடுங்க … எங்க கூட படுத்துகிட்டும் …” என்றவளை திரும்பியும் பார்க்காமல் அமைதியாக நின்றிருந்த செழியனை கண்டு பொறுமையிழந்தவள்,



“தம்பி கொஞ்சம் கூப்ட்டு விடுறீங்களா …” என்று அழுத்தமாக கேட்கவும், இதற்காகவே காத்திருந்தார் போல கதவருகில் நின்றிருந்த வீணா, அப்பொழுதுதான் வெளியே வருவதை போல முகத்தை பாவமாக வைத்தபடி வெளியே வந்தாள். தன்னை கடந்து சென்றவளை அழுத்தமாக பார்த்தபடி நின்றிருந்த குணா,



“வீணா … என்ன ஊர் உலகத்துல உனக்கு மட்டும்தான் பீரியட் பெயின் வருமா … மத்தவங்களாம் பொண்ணு இல்லையா என்ன … இவ்வளவு சீன் போடுற … ப்ளயிட்ல வரும் போது நல்லா தானே வந்த … இந்த ரூம் பாக்க கூட குதிச்சுட்டு குதிச்சுட்டு வந்த என்ன திடீர்னு இவ்வளவு ஆக்ட்டிங் எனக்கு புரியல …” என்று நக்கலாக கேட்டவனுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியாமல் விழித்தவளை கண்டு,



“ரெண்டும் மாறி மாறி ஆக்ட் விட்டு மொக்க வாங்குதுங்க …” என்று வாய்க்குள் முனகிய சங்கீதா,



“ம்ப்ச் … இது என்ன கேள்வி குணா … வயித்த வலி என்ன சொல்லிக்கிட்டா வரும் …” என்று கடுப்படித்தவள், பாவமாக நின்றிருந்த வீணாவிடம்,



“நீ வைஷு கூட போய் படுத்துக்கோ … நா வந்துடுறேன் …” என்றவள் செழியனை கண்டுக் கொள்ளாமல் குணாவை இழுத்துக் கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தாள்.



உள்ளே நுழைந்த வேகத்திற்கு கதவை சாற்றிவிட்டு, சங்கீதாவை இழுத்து இறுக கட்டிக் கொண்டான் குணா. அவன் அணைப்பில் சில நொடிகள் அமைதியாக நின்றவள் பின் அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளி,



“விடுங்க குணா … போய் தூங்குங்க …” என்றவளை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டவன்,



“ம்ப்ச் … தூக்கலாம் வரல … நீ தான் வேணும் …” என்றவன், முகத்தை மட்டும் நிமிர்த்தி,



“ப்ளீஸ் நோனு மட்டும் சொல்லாத சங்கீ … உள்ளுக்குள்ள கொதிச்சுட்டு இருக்கு … உன்கிட்ட இறக்காம எனக்கு தூக்கம் வராது …” என்றவன் ஒரு வேகத்துடன் கழுத்தில் முத்தம் பதிக்க போக, சற்றென்று கை கொடுத்து தடுத்தவள், அவன் முகத்தை வலுக்கட்டாயமாக பிரித்து இழுத்து தன்னை பார்க்க செய்தவள்,



“என்ன லவ் பண்றியா …” என்றாள் இதழ்களில் குறுநகை கூத்தாட.



“லவ்வா …” என்று முகத்தை சுழித்தவனை கண்டு புன்னகை விரிய,



“அப்போ கல்யாணம் பண்ணிக்க போறியா …” என்று அடுத்த கேள்வி கேட்கவும், அவளிடமிருந்து முழுதாக விலகியவன்,



“அதுக்கு நா தூக்குல தொங்கலாம் …” என்றவன் உடனே,



“இது பண்றதுக்கு லவ்வோ இல்ல கல்யாணமோ பண்ணனும்னு அவசியமில்லை … ஜஸ்ட் ரெண்டு பேருக்கும் ஆசையிருந்தா போதும் …” என்ற பதிலில்



“அதத்தான் நானும் சொல்றேன் … எந்த உரிமையும் இல்லாம ஆசையும் இல்லாம எப்படி இதுக்கு நா சம்மதிப்பேன் … ஒன்னு ஆச இருக்கனும் இல்ல உரிமை இருக்கனும் … ரெண்டுமே இல்லாத என்ன எதுக்கு போர்ஸ் பண்ற குணா …” என்றவளை கண்கள் இடுங்க பார்த்தவன்,



“சோ உனக்கு என் மேல ஆசை இல்ல …. அதானே …” என்று ஒருமாதிரி குரலில் கேட்டவனுக்கு, “எஸ் எஸ் …” என்று பதிலளித்தவளை சில நொடிகள் அமைதியாக பார்த்தவன் பின் முகத்தில் குறுநகை கூத்தாட கட்டிலில் சென்று விழுந்தவன்,



“ஓகே உன்ன போர்ஸ் பண்ண மாட்டேன் … அதே சமையம் லவ் சொல்லி தாலி கட்டி உரிமையாவும் ஆக்கிக்க மாட்டேன் … பட் நீயே உன்ன தருவ அதுவும் இந்த டூர் முடியரத்துக்குள்ள …” என்றவன் கண்ணை மூடி படுத்துவிட்டான்.



சில நொடிகள் அமைதியாக அவனை பார்த்திருந்தாள் சங்கீதா. காலில் அணிந்திருந்த ஷூவை கூட கழட்டாமல் கை காலை விரித்தபடி படுக்கையை அடைத்தபடி படுத்திருந்தவனை கண்டு தலையை இடமும் வலமுமாக ஆட்டியபடி அவனை நெருங்கியவள், அவன் காலிலிருந்து ஷூவை கழட்டிவிட்டாள். மெல்ல கண்ணை திறக்காமல் புரண்டு படுத்தவன்,



“அப்படியே ஷர்ட்டையும் கழட்டி விடு …” என்று தூக்க கலக்கத்தில் முணுமுணுத்தவனிடம்,



“ம்ம்ம் … இவ்வளவு டயர்ட் வச்சுக்கிட்டு தான் கசமுசா பண்ண கூப்ட்டியா …” என்றவளின் குற்றச்சாட்டில் மெல்ல வாய்விட்டு சிரித்தவன்,



“அது வேற டிபார்ட்மெண்ட் … இப்போ கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாம் சொல்லு எப்படி துள்ளி குதிச்சு நிப்பேன் பாரு …” என்று வசனம் பேசியவனை கண்டு தலையில் அடித்துக் கொண்டவள், அவனிடம் பேசிக் கொண்டே சட்டையை கழட்டியிருந்தாள்.



அவன் படுத்திருந்த தோற்றமும் அவனின் ஓய்ந்து போன தோற்றமும் மனதை கனக்க செய்ய, அவன் காலருகில் தரையில் உட்கார்ந்துக் கொண்டு காலை மெல்ல பிடித்துவிட்டாள். அவள் கால் பிடித்து விட்டது இதமாக இருக்கவும் சில நொடிகள் அதை அனுபவித்தான். பின் தன் ஒற்றை கையை நீட்டி அவளை தேடி கண்டுக் கொண்டவன் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுக்க, கண்கள் சொருகியது சங்கீதாவிற்கு.



“சங்கீ ஒன்னும் பண்ண மாட்டேன் ப்ளீஸ் பக்கத்துல வந்து படு … தனியா தூங்கி தூங்கி போராச்சு … நான் தூங்குற வரைக்கும் கம்பெனி கொடு …” என்று கெஞ்சியவனை மறுக்க தோன்றாமல் அவன் அருகில் சற்று இடைவெளி விட்டு படுத்துக் கொண்டவள்,



“இவ்வளவு நாள் துணையோடு தான் தூங்கிட்டு இருந்த போல எதுக்கு குணா சீன் …” என்றவளின் நக்கலில் இதழ் பிரியாமல் சிரித்தவன்,



“ஏய் மக்கு … நீ வந்ததுல இருந்துதான் தனியா தூங்க ஆரம்பிச்சேன் … அதுக்கு முன்ன துணையோடு தான் தூங்கினேன் பட் இப்படி ஒண்ணுமே பண்ணாம அமைதியா தூங்குனது இல்ல இதான் பர்ஸ்ட் டைம் …” என்றவன் அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்து தலைமுடியை வருடிக் கொடுக்க சொன்னான்.



“ம்ம்க்கும் … இதுக்குதான் இவ்வளவு பிட்டா …” என்று முணுமுணுத்தவள் அவன் கூறியதை மறுக்காமல் செய்தாள். அவனிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி வரவும் தான், அவன் தூக்கத்தை கலைக்காமல் மெல்ல எழுந்துக் கொண்டவள் அறையை விட்டு வெளியேறினாள்.



அறையை விட்டு வெளியே வந்தவள் அங்கே ஜன்னலை வெறித்து பார்த்தபடி நின்றிருந்த செழியனை கண்டு அவ்வளவு ஆத்திரம் வந்தது. வேகமாக அவன் அருகில் சென்று நின்றவளை திரும்பியும் பார்க்காமல் தொலைவில் தெரிந்த இருட்டை வெறித்து கொண்டிருந்தான்.



தன் முகம் பார்க்க மறுத்தவனின் முகத்தை வலுக்கட்டாயமாக பிடித்து தன்னை பாக்க செய்தவள் அதிர்ந்து போனாள். கண்கள் கலங்கி சிவந்திருக்க முகம் இறுகி போய் இருந்தவனின் தோற்றம் அவளுக்கும் கண்ணீரை வரவைத்தது.



“என்னடா செழி … என்ன நீ நம்பள இல்ல … உன் அக்கா அவ்வளவு பலவீனமானவனு நினைச்சியா … ஈஸியா உணர்ச்சிகளுக்கு தூண்டப்பட்டுவிடுவேன் பயப்படுறியா …” கோபத்தில் சீரியவளுக்கு பதில் கூறாமல் கீழ் உதட்டை பற்களால் கடித்தபடி அமைதியாக நின்றிருந்தவனை கண்டு கோபம் தலைக்கு ஏறியது.



“அவ்வளவு நம்பிக்கையில்லாதவன் எதுக்கு நா பண்ண வீடியோ காலை கட் பண்ண …” என்றவள், குணாவின் அறைக்குள் செல்வதற்கு முன் தன்னையே பார்த்தபடி நின்றிருந்த தம்பியின் தோற்றம் மனதை வருத்த செய்ய, அவன் திருப்திக்காக உள்ளே நடப்பதை காட்டுவதற்காக வீடியோ கால் செய்திருந்தாள். ஆனால் அவனோ அவள் அழைத்த அடுத்த நொடியே அழைப்பை துண்டித்திருந்தான்.



“நா ஒன்னும் அந்தளவுக்கு மோசமானவன் இல்ல …” என்று அவள் முகம் பார்க்காமல் பதிலளித்தவனை கண்டு இடுப்பில் கையை வைத்தபடி அதிருப்தியில் தலையை இடமும் வலமுமாக ஆட்டியவள்,



“அப்போ நா தான் மோசமானவை … என்ன நம்ப மாட்டள்ள …” என்ற தமைக்கைக்கு,



“அங்க நீ மட்டுமில்ல … அந்த பொறுக்கி நாயும் இருந்தான் …” என்று உடனே பதிலளித்திருந்தான். அவன் பதிலில் சங்கீதாவின் இதழ்கள் அழகான புன்னகையை சிந்தின.



“டேய் லூசி … நீ நினைக்கிற போல அவன் இல்லடா … பாக்க பேச தான் பொறுக்கி போல இருப்பான் … பட் என்ன மீறி ஒன்னும் பண்ண மாட்டான் … கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் டா அவன் … ப்ளீஸ் என்ன நம்பு …” என்ற பதிலில் அவளையே சில நொடிகள் அழுத்தமாக பார்த்தவன்,



“அவன நீ லவ் பண்றியா …” என்றான் சந்தேகத்தோடு. அவன் கேள்வியில் முகம் மலர புன்னகைத்தவள்,



“நோ … கண்டிப்பா லவ் இல்ல … பட் அவனை ரொம்ப பிடிக்கும் ப்ரெண்டுக்கு மேல லவர்க்கு கீழ … ரெண்டுக்கும் நடுவுல … ப்ரெண்ட் கிட்ட சில விஷயங்கள் அனுமதிக்க முடியாது ஒரு லிமிட் இருக்கனும் … அதே போல தான் லவர் கிட்ட நோ லிமிட் உன் மனசுல இருக்கிறத வெளிப்படையா ஷேர் பண்ணிக்கலாம் அதுக்கு நோ லிமிட் … சோ ரெண்டுத்துக்கும் நடுவுலனா, லிமிட்ட தாண்டி லிமிட் குள்ள இருக்கிற ஒரு உறவு …” என்று சிரித்து விளக்கம் கொடுத்தவளை இதழ்கள் துடிக்க பார்த்தவன்,



“அப்போ தயா …” என்று கத்தரித்ததை போல கேட்டவனை ஏறிட்டு பார்த்தவள் ,



“தயான்னு நினைச்சாலே ஒரு ப்ரெண்ட்ஷிப் பீலிங் தான் வருது … நா தான் லூசு போல க்ரஷ்ச லவ்னு நம்பி ஏமாந்திருக்கேன் …” என்று விளக்கம் கொடுத்தவளை இடைமறித்து எதுவோ கேட்க வந்தவனை மேலே பேச விடாமல்,



“டேய் செழி … தயா பத்தி நா ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன் … தேவையில்லாம அடிக்கடி அவன இழுத்து என்ன குற்றவுணர்ச்சில நிக்க வைக்கணும்னு நினைக்காத … நா தெளிவா இருக்கேன் … நாளைக்கு புல் டே வேலை இருக்கு டா ஆர்கனைஸ் பண்ணியிருக்குறத பாக்க போகணும் கொஞ்சம் நேரம் தூங்க விடு …” என்றவளுக்கு பதில் கூறாமல் தெளியாத முகத்துடன் நின்றிருந்த தம்பியை கண்டவளுக்கு அப்படியே விட்டு செல்ல மனம் இல்லாததால் அவன் தலை முடியை கலைத்துவிட்டு படி,



“தயாவும் இல்ல குணாவும் இல்ல … எனக்குன்னு பொறந்தவன் இனிமே தான் என்ன தேடி வருவான் போல … அதுவரைக்கும் நீ என்ன நினைச்சு பீல் பண்ணாம லைப்ப என்ஜோய் பண்ணு … சரியா …” என்றவளுக்கு தலையசைத்து பதிலளித்தவனை கண்டு என்ன நினைத்தாளோ பெருமூச்சை விட்டு,



“அக்கா ரொம்ப மாறிட்டேன்ல …” சிரித்துக் கொண்டே கேட்டவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன்,



“நீ எப்படியா வேணா இருந்துக்கோ … உனக்காக நா எப்போதும் இருப்பேன் …” என்றவனின் கண்கள் கலக்கியிருக்க, அவன் கூறியதை கேட்டவளின் கண்களும் கலங்கி போனது.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 12:



சிங்கப்பூர் தமிழ் சங்கம் நடத்தும் நடன நிகழ்ச்சி இது. தமிழர்கள் அதிகமாக புழங்கும் இடமான லிட்டில் இந்தியாவில் உள்ள கிரௌண்டில் தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



குணாவும் சங்கீதாவும் அந்த இடத்தில் போடப்பட்டிருந்த மேடையை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். நாளை மாலை ஆறு மணியில் இருந்து இரவு பத்து மணி வரை இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்திருந்தனர்.



மேடையை சுற்றி பார்வையிட்ட குணா, கீழேயிருந்து ஒரே தாவாக தாவி மேடையில் ஏறி நின்றவன், தன் கால்களால் மேடையை தட்டி பார்த்தான்.

பின் மேடையில் சிறு சிறு ஸ்டெப்பாக போட்டு ஆடியபடி ஒரு முறை மேடை முழுதும் வலம் வந்து அதன் தரத்தை உறுதி செய்துக் கொண்டான். கீழே ஓரமாக நின்றபடி அவன் சேட்டைகளை குறுஞ்சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.



காலை ஐந்து மணிக்கே கிளம்பி இங்கே வந்துவிட்டனர். தன்னையே பார்த்திருந்தவளை பார்த்து குறுநகை பூத்தவன், கண்களால் மேடைக்கு அழைக்க, வர மாட்டேன் என்று தலையசைத்து மறுப்பு தெரிவித்தவளை முறைத்து பார்க்க, சிறு சிரிப்புடன் மேடை ஏறினாள்.



“கம் லெட்ஸ் டான்ஸ் …” என்று தன் கைகளை பற்றியவன் பிடியில் இருந்து கையை விலக்கியவாறே பார்வையை சுற்றிலும் சுழலவிட்டவள்,



“இந்த விளையாட்டுக்கு நா வரல … இங்க தான் அந்த பின்னடிகட்டைக்காரன் இருப்பான் … நாளைக்கு பேஸ்புக்க தொறந்தாலே … நீங்களும் நானும் பல்ல இளிச்சுகிட்டு டான்ஸ் ஆடிட்டு இருப்போம் … கீழ ஊர் பேர் தெரியாதவன்லாம் கேவலமா கழுவி கழுவி ஊத்துவான் …” பொய்யாய் அலறியவள் கீழே இறங்க பார்க்க, தலைசாய்த்து சத்தம் போட்டு சிரித்தபடி அவள் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டவன்,



“ஹாஹா … பிஹைண்ட்வுட் மேல அவ்வளவு காண்டா … இந்த ட்ரிப் அவன் வர மாட்டான் … ஆக்சுவலி ரேவா இருந்திருந்தா இதையெல்லாம் பார்த்திருப்பா … நீதான் மக்கு பிஏவா இருக்கியே … உன் பாஸ்க்கு எப்படி காசு சேர்த்து கொடுக்கணும்னு தெர்ல … நீ சரியான வேஸ்ட் பீஸ் …” என்று போலியாக அலுத்துக் கொண்டவனை பதில் கூறாமல் முறைத்து பார்த்தவளை தன்னருகில் இழுத்துக் கொண்டவன்,



“சும்மா சின்ன சின்ன ஸ்டெப்ஸ் போட்டு பாக்கலாம் … யாரும் பாக்க மாட்டாங்க …” என்று அவள் இடுப்பை பற்றியவன் மொபைலில் ஒலித்த பாடலுக்கு ஏற்ப ஆடி சங்கீதாவையும் ஆட வைத்தான்.



ஒன்று என்று ஆரம்பித்து நான்கு பாடல் வரை ஆடி முடித்திருந்தனர். ஸ்லோவ் பாஸ்ட் என்று கலந்து கட்டிய இசைக்கு ஏற்ப ஆடி கலைத்திருந்தாள் சங்கீதா. முகம் கொள்ளா புன்னகையுடன் வேக மூச்சுகளை விட்டவாறே மேடையில் கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தவளின் அருகில் பொத் என்று அமர்ந்தான் குணா. இன்னும் முழுதாக விடியாததால் மக்கள் கூட்டம் இல்லாமல் இருந்ததே சங்கீதாவிற்கு அவ்வளவு சந்தோசத்தை கொடுத்திருந்தது. அவளின் மலர்ந்த முகத்தை கண்டவன்,



“டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்குமோ …” பதிலை தெரிந்துக் கொண்டே கேட்டவனுக்கு, இதழ்கள் விரிய சிரித்தவள்,



“டான்ஸ் சொல்றத விட … மியூசிக் ரொம்ப பிடிக்கும் … ஐ லவ் மியூஸிக் … பாட்டு கேட்டுட்டே ஆடவும் பிடிக்கும் …” கண்கள் விரிய பேசியவளைதான் விடாமல் பார்த்திருந்தான்.



தொடர்ந்து ஆடியதால் சிறு சிறு வேர்வை துளிகள் அங்கங்கே முகத்தில் படர்ந்திருக்க, சற்று களைத்து போய் தெரிந்தவளை நெருக்கிக் கொண்டு உடல்கள் உரச நெருங்கி உட்கார்ந்தவன் விரல்கள் கொண்டு வேர்வையை துடைத்துவிட, அவன் கையை தட்டிவிட்டவள் மடக்கியிருந்த கால்களை நீட்டி உட்கார்ந்து அவன் நெருக்கத்தை கண்களால் சுட்டிக்காட்டி முறைத்து,



“இதுக்கு பேசாம நீங்க மடியிலையே உட்காந்துக்கலாம் குணா …” என்ற அடுத்து நொடி சடாலென்று அவள் கால்களில் உட்கார்ந்துக் கொண்டான். சிறு சிரிப்புடன் அவனை பிடித்து கீழே தள்ளியவள்,



“எரும எரும … ஒரு பேச்சுக்கு சொன்னா உட்கார்ந்துடுவீங்களா …” என்று முகத்தை சுருக்கியபடி அவன் தோளில் அடித்தவளை புன்சிரிப்போடு பார்த்தவன்,



“பாரு நீ ஒரு பேச்சுக்கு சொன்னத கூட என் உயிர கொடுத்து நிறைவேத்துறேன் … நீயும் தான் இருக்கியே கல்நெஞ்சுக்காரி அவ்வளவு கெஞ்சியும் விளையாட வரியா பாரு …” என்று போலி சோகத்துடன் கூறியவன் மொபைலில், ‘அப்பம்மா விளையாட்டு விளையாடி பாப்போமா செல்லம் என் செல்லம் …’ என்ற பாடலை ஒலிக்க விட தலையில் அடித்தபடி எழுந்தவள்,



“நீங்க உயிர கொடுத்து மயிர புடுங்க வேணா … எதையாவது ஒளறிட்டே இருங்க … எனக்கு பசிக்குது நா போய் சாப்பிட வாங்கிட்டு வரேன் …” என்று மேடையைவிட்டு கீழே இறங்கியவளை கண்டு,



“அடிய்யே என் பீலிங்ஸ் உனக்கு உளறலா தெரிதா … ஆண் பாவம் பொல்லாதது … வீணா சாபம் வாங்கி கட்டிக்காத … அப்புறம் உன் புருஷன் பாதில கழட்டிவிட்டுட்டு வேற பிகர உசார் பண்ணிட்டு போய்டுவான் …” என்று சாபம் கொடுத்தவனிடம்,



“போனா போறான் … வேற புது பீசா பாத்து செட்டில் ஆகிடுறேன் … எவ்வளவு நாளைக்கு தான் பழைய வண்டியே ஓட்டிக்கிட்டு இருக்குறது …” சிரிப்புடன் கூறியவளை நோக்கி,



“அவ்வா … சாவித்திரி கெட்டப்புல இருக்க நமீதாவா நீ … உன்னையெல்லாம் நல்ல பொண்ணுன்னு இன்னும் இந்த ஊர் நம்பிட்டு இருக்க பாரு …” என்று கத்தியவனை திரும்பி பார்த்து சிரித்தவள்,



“எங்க முகராசிங்க அப்படிங்க சார் …” என்று கண்ணை சிமிட்டிவிட்டு சென்றவளை கண்டு இதழ் விரிய சிரித்தபடி பார்த்திருந்தான்.



சங்கீதாவும் குணாவும் காலை உணவை சாப்பிட்டு முடிக்கும் சமையம் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர் வைஷு வீணா மற்றும் செழியன்.



“நீங்க ஊர சுத்தி பாக்க போலையா …” என்றவளை கொலைவெறியுடன் பார்த்த வீணா,



“எங்கிருந்து சுத்தி பாக்குறது … அதான் பாய்ப்ரெண்டுனு ஒன்ன மடில கட்டிக்கிட்டு சுத்துறேனே … ” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அலுத்துக் கொண்டவளை கண்டு மளுக் என்று சிரித்துவிட்டாள்.



“ஏன் எங்கள ஊர சுத்த சொல்லிட்டு … நீ மாமாவ சுத்தலாம்னு நினைச்சியா …” என்று வெடுக்கென்று கேட்ட வைஷுவை எரிச்சலுடன் திரும்பி பார்த்தவள்,



‘இது ஒரு அரைலூசு … அந்த குணகெட்டவன் குணத்தை தெரியாம என்கிட்ட மல்லுக்கு நிக்குது …’ என்று உள்ளுக்குள் புலம்பியபடி தலையை ஆட்டியவள்,



“எம்மா தாயே … உன் மாமா அங்கதான் இருக்கார் போய் இறுக்கி புடிச்சுக்கோ …” என்று நக்கலடித்தவளை தீப்பார்வை பார்த்தவள்,



“நீ சொல்லைனாலும் இறுக்கி புடிச்சுக்க தான் போறேன் …” என்று சிலுப்பிக் கொண்டு சென்றவளை கண்டு,



“என்னடி இந்த லூசு சக்காளத்திகிட்ட சண்ட போடுறது போல என்கிட்ட எகிறிட்டு வரா …” என்று சிரித்த சங்கீதாவை, நக்கலாக பார்த்து



“அவ பயம் அவளுக்கு … எந்த புத்துல எந்த பாம்பு இருக்குனு யாருக்கு தெரியும் …” என்று தோளை குலுக்க,



“நீ வேணா போய் ஒவ்வொரு புத்தா போய் பார்த்துட்டு வாயேன் …” என்ற தோழியை தீப்பார்வை பார்த்தாள் வீணா.



இவர்களின் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் சற்று தள்ளி நின்று மேடையை அமைதியாக பார்வையிட்ட செழியனின் அருகில் சென்ற சங்கீதா, அவன் கைகளுக்குள் தன் கையை கோர்த்துக் கொண்டு,



“என்னடா செழி … சைலெண்டா இருக்க … இன்னும் ஏன் மேல கோபமா இருக்கியா …” என்ற தமைக்கையை மூக்கு விடைக்க பார்த்தவன்,



“பசிக்குது … நேத்து வீட்ல சாப்பிட்டது …” என்றவனின் குரலில் அப்பட்டமாக குற்றசாட்டு இருந்தது.



“எ … என்ன … இன்னும் சாப்பிடலையா … ஏ ஏன் …” என்று தடுமாறியவளை அடிபட்ட பார்வை பார்த்தவன்,



“நீ இருக்கும் போது நா எப்போ உன்ன விட்டுட்டு சாப்ட்டுருக்கேன் … ஆனா நீ என்ன கன்சிடர் பண்ணாம அவன் கூட சாப்டுட்டு இருக்க … ரொம்ப மாறீட்ட டி …” என்ற நேரடி குற்றச்சாட்டில் கண்கள் கலங்கி போனது சங்கீதாவிற்கு.



“அது … இல்ல டா … செழி … நா …” என்று திக்கியவள், “சாரி …” கண்ணீர் குரலுடன் கூற, ஒரு நொடி அவள் முகத்தை அழுத்தமாக பார்த்தவன் குணாவின் அருகில் சென்று நின்றுக் கொண்டான். கோபத்துடன் சென்றவனின் முதுகை வெறித்து பார்த்தவளின் அருகில் வந்து,



“சரியான எமோஷனல் இடியட்டா இருப்பான் போல …” என்று திட்டிய வீணா,



“பட் உன்ன பாத்தும் பயங்கர பொறாமை வருதுடி … பாசக்கார தம்பி உன்ன கோழி குஞ்சு காக்குறது போல காத்துகிட்டு இருக்கான் … யூ ஆர் ரியலி லக்கி சங்கீ …” என்ற தோழியை திரும்பி பார்த்து சிரித்தவள்,



“பாசக்காரன் மட்டுமில்ல கூடுவே இம்சையும் …” என்று சிரித்த தோழியை ஏக்கம் நிறைந்த விழிகளோடு பார்த்தவள்,



“உனக்கு அவன் அக்கரை அன்லிமிடெட்டா கிடைக்குதுல்ல அதான் அருமை தெரில … என்ன போல இல்லாதவங்களுக்கு தான் அந்த ஏக்கம் புரியும் …” என்று உருகி பேசிய வீணாவை நன்றாக திரும்பி பார்த்தபடி நின்றவள்,



“நீ நினைச்சா அந்த அன்லிமிட்டெட் அக்கரை உனக்கு கூட கிடைக்கும் … எனக்கு கிடைக்கிறத விட அதிகமா …” என்று புதிர் போட்டவளை புரியாமல் பார்த்தவளிடம்,



“பொய்யா சொன்ன பாய்ப்ரெண்ட உண்மையா ஆக்கிடு … இந்த டூர் முடியறுத்துக்குள்ள அவன ப்ரப்போஸ் பண்ணிடு மச்சி … செம்மயா தாங்குவான் …” கண்ணை சிமிட்டி கூறியவளை அதிர்ந்து போய் பார்த்தவள்,



“ச்சி ச்சி … என்ன பேசுற … அவன் வயசு என்ன என் வயசு என்ன … நா உன் ப்ரெண்ட் டி பைத்தியக்காரி … அவனுக்கு நானும் அக்கா தான் …” என்று கோபப்பட்டவளின் கோபத்தை சிறிதும் மதிக்காமல்,



“மூணு வயசு வித்தியாசம்லாம் ஒரு வயசா … நீ என் ப்ரெண்ட் தான் அவன் கூட பிறந்த அக்கா இல்ல … நா சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உன்னிஷ்டம் … அவன போல ஒரு பையன நீ எங்க தேடினாலும் கிடைக்காது அப்படி பாத்துப்பான் …” என்று தோளை குலுக்கியவள் செழியனை நோக்கி செல்ல, வீணாவின் மனதில் மெல்லிய சஞ்சலம் தோன்ற அவளை மீறி அவள் கண்கள் செழியனையே வட்டமிட, “ச்ச … இது தப்பு …” என்று வாய்விட்டு புலம்பி மனதை ஒருநிலை படுத்த முயன்றாள்.



நடன நிகழ்ச்சி நடக்கும் நாளும் அழகாக விடிந்தது. முதல்நாள் நள்ளிரவு வரை விடாமல் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த குணா அதிகாலையிலே விழித்துக் கொண்டான். அன்று முழுதும் நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள் சங்கீதா.



நிகழ்ச்சி ஆரம்பித்த பொழுது அளவான கூட்டமே கூடியிருக்க போக போக மக்கள் வெள்ளத்தில் அந்த இடமே கலகலத்து போனது. குணாவின் குழுவினர் தங்கள் நடனத்தால் அனைவரையும் தங்களுடன் சேர்ந்து ஆடவைத்தனர். வீணாவின் ஆடும் பொழுது விசிலடித்து தூள் கிளம்பினர் சங்கீதாவும் செழியனும். அனைவரும் ஆடி முடித்த பின் இறுதி நடனம் குணாவுடையது. மேடையில்



“காக்க காக்க கணம் காக்க கணம் காக்க காக்க …” என்று நான் அவனில்லை என்ற பாடல் ஒலிக்க, நான்கு பெண்களுக்கு நடுநயமாக நின்று இடுப்பை வளைத்து வளைத்து ஆட, மொத்த கூட்டமும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து கிளப்பிய கைதட்டல் வானை கிளித்துக் கொண்டு எதிரொலித்தது.



சங்கீதாவிற்கு ஏற்கனவே குணாவின் நடனத்தில் ஒரு மயக்கம் உண்டு இன்று அவனின் பெஸ்ட் பெர்போர்ம்ஸை கொடுக்க அவளை கையில் பிடிக்க முடியவில்லை அந்தளவிற்கு மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஈடா வைஷுவும் தன் மாமனின் நடனத்தில் மயங்கி ஆஅ என்று பார்த்துக் கொண்டிருந்தாள். இவ்வளவு ஏன் அவன் மேல் நல்ல அபிப்பிராயம் கொண்டிராத செழியன் கூட குணாவின் நடனத்தில் மயங்கிப் போனான்.



நிகழ்ச்சி முடிந்த பின் சில ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான் குணா. சங்கீதாவை தவிர அனைவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். குணாவை விட்டு போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த வைஷுவை வலுக்கட்டாயமாக மற்றவர்களுடன் அனுப்பிவைத்திருந்தான் குணா. அதேபோல தான் தனக்கு வேலை இருப்பதாக அவளை தனியாக விட்டு போக மாட்டேன் என்று முரண்டு பிடித்த செழியனை வீணாவுடன் அனுப்பி வைத்திருந்தாள் சங்கீதா.



விழா ஏற்பாட்டாளர்களின் பாராட்டு மழையில் புன்சிரிப்புடன் நனைந்துக் கொண்டிருந்தான் குணா. பல நடன நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் இங்கே கிடைத்த வரவேற்பு அவனை திக்குமுக்காட செய்தது. பார்க்கும் முகமெல்லாம் அன்பை வாரி வழங்கி அவனுடன் போட்டோ எடுக்க துடிப்பதை கண்டு சிறு கர்வம் கூட அவனுள் தோன்றியது.



அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டவன் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் ஏறாமல், சங்கீதாவின் கை பற்றி நடக்க தொடங்கினான்.



“குணா … டைம் ஆச்சு கார் வைட்டிங்க்ல இருக்கு …” என்றவளுக்கு பதில் சொல்லாமல் அவள் தோளை சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டான். சில நொடிகள் அவன் அணைப்பில் அமைதியாக நடந்தவள் மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்து,



“கொன்னுட்டிங்க குணா … அப்படியே நீங்க ஆடும் போது ஜிவ்வுன்னு இருந்துச்சு … எப்படி சொல்றதுன்னே தெர்ல …” கண்கள் பளபளக்க பேசியவளை தன்னோடு நெருக்கிக் கொண்டவன்,



“தெரிஞ்சத சொல்லு … நீங்களாம் பாராட்டும் போது எனக்கும் ஜிவ்வுன்னு இருக்கு …” என்று கண்ணை சிமிட்டியவனை கண்டு இதழ் விரிய சிரித்தவள், நடப்பதை நிறுத்திவிட்டு அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்தபடி,



“நீங்க இன்னும் பெரிய இடத்துக்கு வருவீங்க குணா … கூடிய சீக்கிரமே பெரிய படத்துக்கு டான்ஸ் மாஸ்டர் ஆகுற சான்ஸ் வரும் பாருங்க …” மிக சீரியசாக பேசியவளை நோக்கி குறுநகை புரிந்து, “ஆஹாங் …” என்று நம்பாமல் சிரித்தவனை முறைத்து பார்த்தவள்,



“நம்பளல … ஆனா இது கண்டிப்பா நடக்கும் …” என்று அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், “இன்னும் டீப்பா சொல்லணும்னா சினி பீல்ட்ல பெரிய ஸ்டாரா வர கூட வாய்ப்பிருக்கு …” என்றவளை திரும்பி பார்த்து,



“உனக்கு பேஸ் ரீடிங் தெரியுமா … என் மூஞ்ச உத்துபாத்து சொல்ற …” என்று சிரித்தவனுக்கு, “தெரியும் …” என்று சிலிப்பிக் கொண்டவளை குறும்புடன் பார்த்தவன்,



“எனக்கும் தெரியும் …” என்ற குணாவை புரியாமல் பார்த்தவளிடம்,



“லிப்ஸ் ரீடிங் பாக்க தெரியுமே … உனக்கு பாத்து சொல்லவா …” என்று அவள் உதடுகளை மோகத்துடன் வருடி கிசுகிசுத்தவனை முறைத்து பார்த்தவள்,



“ஒன்னும் வேணா … எனக்கே தெரியும் நா என்னாவணு …” என்று அவன் கைகளை தட்டிவிட,



“இது போங்காட்டம் … நீ பேஸ் ரீடிங் பண்ணும் போது நா தடுத்தேன்னா இல்லல …” என்றவன் மீண்டும் ஒற்றை விரலால் உதட்டை மெல்ல வருட, சற்றென்று தலையை பின்னே இழுத்துக் கொண்டவளை சலிப்புடன் பார்த்தவன்,



“ஓகே இப்போ குறி சொல்லவா … இந்த அழகான லிப்ஸ் என்ன சொல்லுதுன்னா … பியூச்சர்ல பெரிய டான்ஸராக போற இந்த குட்டி டான்ஸர் கூட இன்னைக்கு நைட் அம்மப்பா விளையாட்டு விளையாட போறாளாம் … விடிய விடிய செம்ம பன் பண்ண போறாங்களாம் …” என்று சிரிப்புடன் குறி சொல்லியவனை உதட்டில் உறைந்த புன்னகையோடு பார்த்திருந்தவள்,



“ஆமாமா … இதெல்லாம் அந்த குட்டி டான்ஸர் கனவுல தான் நடக்குமாம் … இதையும் சேர்த்து சொல்லுங்க பாஸ் …” என்றவள் அவன் கைகளோடு தன் கைகளை கோர்த்துக் கொண்டு ஆளில்லாத அந்த ரோட்டில் இழுத்துக் கொண்டு ஓடினாள். அவள் இழுத்த இழுப்புக்கு சென்றபடி,



“ஏய் … என்ன பண்ற ..” சிரித்துக் கொண்டே கூட ஓடினான். சற்றென்று ஓடுவதை நிறுத்தியவள் அவன் கைகளை விட்டுவிட்டு நடு ரோட்டில் துள்ளி துள்ளி குதித்து நடந்தாள். திடீரென்று நடப்பதை நிறுத்திவிட்டு கை காலை அசைத்து இடுப்பை வளைத்து ஆடினாள். ஒன்றிரெண்டு கார்கள் இவர்களை கடந்து சென்றாலும் யாரையும் கண்டுக் கொள்ளாமல் ஆடியவள், தன்னையே புன்னகையோடு பார்த்திருந்த குணாவின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு கையை அசைத்து காலை தூக்கி ஆடியவளுடன் சேர்ந்து ஆடினான் குணா.



இரவு பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, நடுரோட்டில் இரவு விளக்கின் வெளிச்சத்தில் எந்த வித இசையும் இல்லாமல், இரவு பூச்சிகளின் சத்தம் மட்டுமே கேட்க இருவரும் சிரித்துக் கொண்டே லூசு போல ஆடினார்கள். ஆடிக் கொண்டிருக்கும் போதே சங்கீதாவின் இடுப்பை பற்றி தூக்கி காற்றில் ஒரு சுற்று சுற்றியவன், கீழே விடும் போது அவள் இதழ்களில் அவசர முத்தம் பதிக்க நினைத்து தன்னிதழை அவள் முகத்தருகில் கொண்டு சென்றவனின் உதட்டை தன் இருகைகளாலும் பற்றி மூடியவள் கலகலத்து சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து நழுவி துள்ளி குதித்து ஓடினாள்.



நூலிழையில் தவறவிட்ட முத்தத்தை நினைத்து ஊப்ஸ் என்று இதழ் குவித்து காற்றை வெளியேவிட்டவன், தலையை கோதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். மீண்டும் அவனருகில் வந்தவள் அவன் கன்னத்தில் வலிக்காமல் குத்தி,



“சரியான திருடன் … காரியத்துல கண்ணா இருக்குறடா குணா பையா …” என்று செல்லம் கொஞ்ச, தன் வலக்கரத்தால் அவள் கழுத்தை இறுக்கி பிடித்து நெருக்கியவன்,



“இங்க மட்டும் என்னவாம் … கண்ணுல விலக்கெண்ண விட்டுட்டு பாப்பியா …” என்று சிரிக்க, இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டவள்,



“ஐயா சம்மதம் இல்லாம காத்து கூட என்ன தொட முடியாது தெரியுமா …” என்று பெருமை பேச,



“ஈஜிட் … காத்து வேணா தோத்து போகலாம் … பட் இந்த குணா தோக்க மாட்டான் …” என்று சவால்விட்டவனை பார்த்து ம்ம்ம்ம் ம்ம்ம்ம் என்றாள் நக்கலாக.



இரவு பன்னிரெண்டரை மணியளவில் அறைக்கு திரும்பியவர்களை தூங்காமல் முழித்திருந்து வரவேற்றனர் மூவர் குழு. காரிடாரில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தவர்களை கண்டு சங்கீதாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.



“ச்சைக் சிவபூஜை கரடியை கூடவே தூக்கிட்டு சுத்திகிட்டு இருக்கேன் பாரு …” என்று வைஷுவை கண்டு பல்லை கடித்தவன்,



“ஆமா … அந்த ரெண்டு பீஸும் உண்மையிலயே பாய் ப்ரெண்ட் கேர்ள்ப்ரெண்டானு சந்தேகமா இருக்கு … எனக்கும் மட்டும் இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா ரூம விட்டு வெளில வரமாட்டேன் … இவன் என்னனா வேஸ்ட் பெல்லோவ், ஒன்னு கும்பளா சுத்துறான் இல்ல என் கூட சுத்துறான் …” என்று பொறுமியவனை கண்டு பக்கென்று சிரித்துவிட்டாள்.



“சிரிப்பு வருதா … ஏன் வராது … அப்போ சிங்கப்பூர்ல அப்பா அம்மா விளையாட்டு விளையாட முடியாது போல … சரி விடு போற வழில எந்த ஊர்ல சான்ஸ் கிடைக்குதோ அங்க பாத்துக்கலாம் …” என்று அலுத்துக் கொண்டவன் அவர்களை பார்த்து கையசைத்தான்.



“ஹய் குணா … இன்னைக்கு டான்ஸ் மாஸ் பெர்பார்மன்ஸ் …” என்ற வீணா,



“ஹலோ மேடம் உனக்காகத்தான் வெய்ட்டிங் … சீக்கிரம் வா சிங்கப்பூர் நைட் லைப் எப்படி இருக்குனு பாப்போம் …” என்று கத்தி அழைக்கவும்,



“எரும ஏண்டி நடுராத்திரில கத்துற … ரூம்ல இருக்கவங்க எழுந்து வந்து கும்மிட போறாங்க …” என்று முறைத்தவளிடம், வர முடியாது என்று சொல் என்று சைகை செய்தான் குணா. பதிலுக்கு மறுப்பாக தலையசைத்தவளை முறைத்துக் கொண்டே தன் அறைக்குள் சென்றவனைக் கண்டு லேசாக சிரித்தவள்,



“கமான் கைஸ் … செமையா பன் பண்றோம் …” என்று உற்சாகத்துடன் கூறியவள் அவர்களுடன் கிளம்பிச் சென்றாள்.



இரவு ஊர் சுற்ற கிளம்பியவர்கள் காலை ஆறு மணிக்கு தான் தங்கள் அறைக்கே திரும்பியிருந்தனர். சற்று நேரம் தூங்கி எழுந்த பின் குளித்து முடித்து வெளியே வந்த சங்கீதா நேராக சென்று குணாவின் அறையை தான் தட்டினாள். இன்னும் தூங்கிக் கொண்டிருப்பான் போல, தூக்க கலக்கத்துடனே வந்து கதவை திறந்து விட்டான்.



“குட் மார்னிங் …” என்று பளீச் சிரிப்புடன் உள்ளே நுழைந்தவளை கண்டு கையில் கட்டியிருந்த வாட்சில் டைம் பார்த்தவன் சோம்பலுடன் சென்று மீண்டும் படுக்கையில் விழுந்து கண் மூடிக் கொண்டான். தன்னை கண்டுக் கொள்ளாமல் மீண்டும் தூங்க சென்றவனை ஆச்சிரியத்துடன் பார்த்தவள்,



“உலக அதிசயமால இருக்கு … பாஸ் கண்டுக்காம போய் படுத்துடீங்க …” கிண்டலாக கேட்டபடி கண்ணை மூடி தலைகாணியை கட்டிக் கொண்டு படுத்திருந்தவன் அருகில் பெட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டவளை கண்டு மெல்ல கண் திறந்து பார்த்தான். எதுவும் பேசாமல் தன் முன்னே உட்கார்ந்திருந்தவளை தீர்க்கமாய் பார்த்தவனிடம் கண்டு,



“ஓ ஓஹ் பாஸ் கோபமா இருக்கீங்கள்ல … மறந்துட்டேன் …” என்று சிரித்தவள், தலைகாணியை பற்றியிருந்த அவன் கையை தானாகவே எடுத்து கை குலுக்கியபடி,



“சமாதானம் … இந்த முசுடு குணாவ எனக்கு பிடிக்கல … ப்ளீஸ் கொஞ்சம் சிரிங்க குணா …” என்று கொஞ்சியவளை புருவம் சுருங்க பார்த்தவன், சற்றென்று அவள் கையை பிடித்து இழுத்து படுக்கையில் தள்ளி நொடியில் அவள் மேல் முழுதாக படர்ந்துவிட்டான்.



“நா சிரிக்கணும்னா … கிவ் மீ எ கிஸ் …” கரகர குரலில் கூறியவனை, சலிப்புடன் பார்த்தவள்,



“ம்ப்ச் … காலைலயே இது என்ன விளையாட்டு குணா … எழுந்துருங்க … நீங்க ஒன்னும் சிரிக்க வேணா …” என்று அவனை தன் மேலிருந்து தள்ளி விட முயன்றவளின் முயற்சி தோல்வியில் முடிய,



“நோ பேபி … இட்ஸ் நாட் எ கேம் … இது என் பீலிங் … இன்னுமா நீ உணறுல … கிஸ் பண்ணு …” என்று உத்தரவுவிட்டவனை முறைத்து பார்த்தவள்,



“கிஸ்ஸும் … ப-கும் நானா விரும்பி கொடுக்கணும் … இப்படி நீங்க வலுக்கட்டாயமா எடுத்துக்க கூடாது குணா … நீங்க கேட்டதை கண்ண மூடிட்டு கொடுக்குற அளவுக்கு இன்னும் உங்கள பிடிக்கல போல …” என்று அவன் முகத்திற்கு நேராக பேசியவளை கண்கள் இடுங்க பார்த்தவன்,



“பிடிக்காம தான் இந்தளவுக்கு நெருங்க என்ன அல்லோவ் பண்றியா …” என்று எதிர்கேள்வி கேட்டவனின் கண்களை பார்த்தபடி,



“எஸ் பிடிக்கும் தான் உங்க கூட பேச பிடிக்கும் பழக பிடிக்கும் டான்ஸ் ஆட பிடிக்கும் ஏன் நெருக்கமான சில அணைப்புகளும் புடிக்கும்தான் … அதுக்காக என்னையே தர்ற அளவுக்கு பிடித்தம் இல்ல … இதுக்கு மேல என்ன கம்பெல் பண்ணாதீங்க குணா … போர்ஸ் பண்ணாம நானா வந்தா நாம தாராளமா அப்பம்மா விளையாட்டு விளையாடலாம் … இப்போ எழுந்துக்குங்க குணா … மூச்சு விட முடில …” என்றவளை சில நொடிகள் அழுத்தமாக பார்த்தவன் எதுவும் கூறாமல் பாத்ரூம்குள் நுழைந்துக் கொண்டான்.



அன்று ஆரம்பித்த குணாவின் பாராமுகம் இன்று வரை தொடர்ந்துக் கொண்டிருந்தது. தேவைக்கு மட்டுமே சங்கீதாவிடம் பேசினான், முதலில் அவனின் ஒதுக்கம் வலிக்க செய்தாலும் இதுவும் நல்லதற்கு என்று நினைத்தவள் ஒதுங்கிக் கொண்டாள். சிங்கப்பூரில் ஆரம்பித்த இவர்களின் ஒருமாத கால நடன பயணம் நேற்று பிரான்சில் முடிவுற்றிருந்தது.



நாளைதான் இவர்களின் இந்தியா பயணம் அதனால் இன்று முழுவதும் பாரிஸை சுற்றி பார்க்க அனைவரும் கிளம்பிவிட்டனர். பாரிஸில் உள்ள புகழ் பெற்ற மாலில் சங்கீ வீணா செழி வைஷு கிளம்பியிருக்க, வைஷுவிற்கு துணையாக குணாவும் வந்திருந்தான்.



இவ்வளவும் நாளும் தன்னிடம் பேசாமல் வீம்பு பிடித்த குணாவை கண்டு கோபம் வர, எப்படியாவது அவனிடம் இன்று பேசிவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் அவன் அருகில் சென்று நின்றுக் கொண்டாள். கூடுவே விதியும் அவர்களை தன் பிடிக்குள் சுற்றி வளைத்துக் கொண்டது.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 13:





“பேச மாட்டிங்களா குணா …” என்றவளின் குரலில் சற்றென்று திருப்பி பார்த்தான் குணாளன். தன் முகத்தையே ஏக்கத்தோடு பார்த்திருந்தவளை ஒரு நொடி புருவம் சுருக்கி பார்த்தவன் பின் கைகளைக் கட்டிக் கொண்டு தடுப்பு ராடில் சாய்ந்தபடி அழுத்தமாக பார்த்தான்.





“யாரு … நானா … உனக்கே இது ஓவரா இல்ல …” என்றவனின் பதிலில்,





“என்ன ஓவரா இல்லையானு கேட்குறீங்க … கிட்ட வந்தாலே பேசாம தூர ஓடி போனது நானா இல்ல நீங்களா …” என்றவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.





“என்கிட்ட பேசறத விட உன் ப்ரெண்ட்ஸ் சர்க்கிள் கூட மிங்கிள் ஆகத்தான நீ விரும்புன … அதான் நானே டீசெண்டா ஒதுங்கிட்டேன் …” தோளை குலுக்கி பேசியவனை சில நொடிகள் அமைதியாக பார்த்தவள், பின் தொண்டையை செருமி,





“சாரி …” என்கவும், “இட்ஸ் ஓகே …” என்றபடி அங்கே மாட்டியிருந்த உடைகளை பார்க்க தொடங்கினான். அவன் கூடவே ட்ரெஸ்ஸை பார்த்தபடி,





“ப்ளீஸ் … பழையபடி பேசுங்க குணா … ஒரு மாதிரி அன்ஈஸியா இருக்கு …” என்று கெஞ்சியவளை பார்த்து உதட்டை வளைத்து சிரித்தவன்,





“சரியான காரியவாதி … ஒரு மாசமா என்ன கண்டுக்கல … நாளைக்கு ஊருக்கு கிளம்பனும் இப்போ வந்து பேசுற பாரு அங்க நிக்கிற கேடி சங்கீ …” சிரித்தபடி பேசியவனின் கையோடு கை கோர்த்துக் கொண்டவள்,





“அது …” என்று ஆரம்பித்து, “உங்ககிட்ட இருந்து எஸ் ஆக வேற வழி தெரில குணா … அதான் சைலண்ட்டா ஒதுங்கிட்டேன் …” என்று உண்மையை ஒத்துக் கொண்டவளை விடாமல் பார்த்தவன்,





“அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே …” என்று அவள் பிடித்திருந்த கையை கண்களால் சுட்டிக் காட்டவும், சிறு சிரிப்புடன் அவன் கையை இன்னும் அழுத்தமாக பற்றிக் கொண்டவள்,





“ஒரு நாள் தானே ஈஸியா சமாளிச்சுடுவேன் …” என்று சிரித்தாள்.





“அப்போ இன்னைக்கு புல்டே என் கூடவே இரு … அப்போதான் சமாதானம் ஆகுவேன் …” என்று டீல் பேசியவனின் கையிலிருந்த ஷர்டை எடுத்து அவன் முன் வைத்து பார்த்தபடி,





“டீல் டீல் டீல் … டபுள் டீல் …” என்றுவிட்டு, “இந்த கலர் உங்களுக்கு செம்மையா இருக்கு …” என்றவளின் கையிலிருந்த சட்டையை வாங்கி அதன் இடத்தில் மாட்டியவன்,





“இங்க வேணா … மேல இன்னும் நிறைய நல்ல நல்ல ஷாப்ஸ் இருக்கு அங்க போலாம் வா …” என்று இரண்டாம் தளத்திலிருந்து ஒன்பதாவது தளத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.





அந்த தளம் முழுவதும் பெயர் பெற்ற கடைகளால் நிரம்பியிருந்தது. கீழ் தளத்தில் போல அதிக கும்பல் இல்லாமல் மிதமான மக்கள் கூட்டம் நிரம்பியிருக்க தனக்கு பிடித்த கடைகளில் எல்லாம் ஆசையோடு உள்ளே சென்று ஒவ்வொரு பொருளாய் தொட்டு பார்த்து மகிழ்ந்தாள். வழியில் மாட்டியிருந்த உடையின் விலையை பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறைதான். நம்மூர் ரூபாய்க்கு சில லட்சங்கள் கொண்டதாக இருந்ததை கண்டதும் .





“எம்மாடி … எட்டு லட்சம் … இவ்வளவு வில கொடுத்து யாரவது டிரஸ் வாங்கி போடுவாங்களா … ஏன் குணா, நம்மூர் ஸ்டார்ஸ் கூட இவ்வளவு விலை கொடுத்து வாங்க மாட்டங்க போல …” என்று வாய் பிளந்தவளை கண்டு தலைசாய்த்து சிரித்தவன்,





“புடிச்சிருக்கா … வேணுமா …” என்றவனின் இதழ்கள் சிரிப்பில் விரிந்திருக்க, அவன் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டவள்,





“பிடிச்சுருக்குனு சொன்னா வாங்கி கொடுத்துடுவீங்களா …” என்றாள் நக்கலாக.





சங்கீதாவின் பதிலில் மாட்டியிருந்த உடையை கைகளால் தொட்டு தடவி விலையை பார்த்தவன், பின்,





“ம்ம்ம் … வாங்கிக் கொடுக்கலாமே … இப்போ இல்ல … நீ பேஸ் ரீடிங் பாத்து சொன்னது போல பெரிய ஸ்டாரா வந்தா கண்டிப்பா வாங்கி தரேன் …” என்று கண்ணை சிமிட்டியவனின் கையை பற்றி இழுத்து அருகிலிருந்த உலக புகழ் பெற்ற ஹாண்ட்பாக் கடைக்கு அழைத்து சென்றாள். அங்கிருந்த சில லட்சங்களை விழுங்கிய அழகிய கைப்பையை எடுத்து காட்டி,





“இது … அப்புறம் இது …” என்று மற்றொன்றையும் தூக்கிக் காட்டி, “இது … இதுவும் வேணும் மறந்துடாதீங்க …” சிறிய பர்ஸ் மற்றும் அழகிய காலணிகளை சுட்டிக்காட்டியவளை புன்னகையுடன் பார்த்திருந்தவன்,





“ம்ம்கூம் … மறக்க மாட்டேன் … எவ்வளவு வருஷம் ஆனாலும் நீ சொன்னது போல பெரிய ஸ்டார் ஆனா கண்டிப்பா வாங்கி தருவேன் …” என்று வாக்கு கொடுத்தவனின் கையை பற்றி குதித்து,





“ச்சோ ஸ்வீட் … எனக்கு கல்யாணம் ஆகி வேற ஊர்ல செட்டில் ஆனாலும் கண்டிப்பா வாங்கி தரணும் …” என்ற சங்கீயை ஒரு நொடி புருவம் சுருக்கி பார்த்தவன்,





“கல்யாணம் பண்ற ஐடியாலதான் இருக்கியா என்ன …” என்று கேள்வி போல கேட்கவும், புரியாமல் பார்த்தவள்,





“ஏன் … எதுக்கு இப்படி ஒரு கேள்வி கேட்டிங்க குணா … நீங்க எப்படி நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் நினைக்கலாம் …” என்று கேள்வி கேட்டவள் பின் எதையோ நினைத்து பார்த்தவளாக,





“ஓஹ் ஓ … இப்போ புரியுது … உங்க கூட டான்ஸ் ஆடிட்டு கடலை போட்டுட்டு ஊர் சுத்திட்டு, எப்படி ஒருத்தன கல்யாணம் பண்ணிப்பனு கேட்குறீங்க அதானே …” என்று அவளே கேள்வியை கேட்டுக் கொண்டு,





“அது வேற டிபார்ட்மென்ட் இது வேற டிபார்ட்மென்ட் ரெண்டையும் போட்டு குழப்பிக்க கூடாது … சரியா …” என்று கண்ணை சிமிட்டியவளை ஒரு நொடி அழுத்தமாக பார்த்தவன் பின், “புரிஞ்சுடுச்சு மேடம் …” என்று வெண்பற்கள் தெரிய சிரித்தான்.





இருவர் கைகளும் கோர்த்திருக்க அந்த தளத்தையே ஒரு சுற்று சுற்றி வந்தார்கள். ஓரிடத்தில் நிறைய துணிகள் மலைபோல் குவிந்திருப்பதை கண்டவள்,





“என்னது இது மல போல குவிஞ்சு கிடக்கு … எல்லாம் லைட்டா டேமேஜ் ஆனா பீஸ் …” என்று கையில் எடுத்து பார்த்தவள்,





“குணா … பாக்க நல்லா இருக்கு, ப்ரைஸ்ஸும் கம்மியா இருக்கு … ஊருக்கு வாங்கிட்டு போலாமா …” என்று ஆர்வத்துடன் கேட்டவளுக்கு மறுப்பா தலையசைத்தவன்,





“ம்ம்கூம் … வேணா … வில ஜாஸ்தியா இருந்தாலும் நல்ல பீஸா எடுப்போம் …” என்று பதிலளித்திருக்கும் போதே தொலைவில் கூச்சலும் துப்பாக்கி சத்தமும் கேட்க அதிர்ந்து போய் பதற்றத்துடன் பார்த்தனர்.





இவர்கள் நின்றிருந்த இடம் சற்று தள்ளி பாத்ரூம்க்கு அருகில் இருந்ததால் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. இருவரின் கண்களுக்கும் ஓபன் ஏரியாவின் அடுத்த பக்கம் மூன்று முகமூடி அணிந்திருந்த நபர்கள் கையில் ஏந்தியிருந்த துப்பாக்கியால் இலக்கின்றி சுட்டுக் கொண்டிருக்க, மக்கள் நாலா பக்கம் தெறித்து ஓடி கொண்டிருந்தனர்.





நடப்பதை நொடியில் புரிந்துக் கொண்ட குணா, அதிர்ச்சியில் மரம் போல நின்றுவிட்டவளை இழுத்துக் கொண்டு துணிகள் நிறைந்த கப்போர்டில் தங்களை மறைத்துக் கொண்டான்.





திடீரென்று ஏற்பட்ட தாக்குதலால் அங்கிருந்த அனைவரும் நிலைகுலைந்து போக, பதட்டத்தில் கேள்வி கேட்டவர்களை கொஞ்சம் கூட யோசிக்காமல் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தனர் தீவிரவாதிகள். ஒன்பதாவது தளம் தான் அந்த மாலின் கடைசி தளம், மேல் தளத்தில் இருந்து படிக்கட்டு மூலம் உள்ளே நுழைந்தவர்கள் மற்ற அணைத்து வழிகளையும் அடைத்துவிட்டனர்.





பிரான்ஸை எதிர்க்கும் முக்கியமான தீவிரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர். தன் கண் முன்னே செத்து மடிந்தவர்களை கண்ட சங்கீதா அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டவள் பயத்தில் மூச்சு விட திணறினாள். அவளின் தடுமாற்றத்தை கண்ட குணா, கண்களால் சற்று பொறுத்துக் கொள்ள என்று கெஞ்ச பயத்தில் எங்கே அவளுக்கு மண்டையில் ஏறியது.





சத்தமாக, “ஆஅ ஆஅ ஆஅ …” என்று மூச்சு விட திணறியவளை கண்டு பதறிப் போனான் குணாளன். இந்த நொடி வரை அந்த தளத்தில் மூன்று பேர் தான் அவன் கண்களுக்கு தெரிந்தனர். கண்ணுக்கு தெரியாமல் எத்தனை பேரோ என்று எண்ணும் போதே யாரவது மறைந்து இருக்கின்றார்களா என்று துப்பாக்கியால் துணிகளை குத்தியப்படி நடந்து வந்தான் ஒருத்தன்.





அவ்வளவுதான் அந்த நொடியில் உயிர் பயத்தை உணர்ந்தான் குணாளன். பயத்தில் வேர்வை ஆறாய் பெருக்கெடுத்து ஓட, கை கால்கள் எல்லாம் வெலவெலத்து போனது. ‘போச்சு அவ்வளவு தான் இன்னும் கொஞ்ச நேரத்துல இவன்க கையாள சாக போறோம் …’ திக் திக் என்று மனம் பீதியில் அடித்துக் கொள்ள மூச்சு விட பயந்தவனாக கண்ணை இறுக மூடி நின்றவனின் முகத்தில் மூச்சு காற்று உரச வாயை மூச்சுக்காக திறந்தபடி கண்களில் மரண பயத்தை அப்பிக் கொண்டு அவனை இறுக்கி அணைத்திருந்தாள் சங்கீதா.





அவர்கள் நின்றிருந்த ராக்கை துப்பாக்கியால் தட்டியபடி வந்துக் கொண்டிருந்தவனை கண்டு முதுகு சில்லிட நின்றிருந்தவர்களின் இதய துடிப்பு மற்றவர்களுக்கு கேட்கும் அளவிற்கு துடித்து கொண்டிருந்தது.





துப்பாக்கி முனை சங்கீதாவை தொட இன்னும் ஒரு இன்ச் என்ற நிலையில் இருந்த போது, பக்கத்திலிருந்த பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான் ஒருவன். சட்டென்று துப்பாக்கி வைத்திருந்தவனின் கவனம் அவனிடம் திரும்பியது.





முன்னாள் ராணுவ வீரரான அவருக்கு அங்கிருந்த நிலைமை நொடியில் புரிந்து போகவும், ஒருநொடி கூட தாமதிக்காமல் மறைத்து வைத்திருந்த பிஸ்டலை எடுத்து அந்த துப்பாக்கிக்காரனை குறி பார்த்து சுட்டிருந்தார். வேரறுந்த மரம் போல தங்கள் எதிரில் விழுந்தவனை பார்த்து சங்கீதாவின் உடல் பயத்தில் தூக்கி போட்டது. நல்ல வேலையாக அனைவரின் கவனமும் கீழே விழுந்திருந்தவனின் மேல் இருந்ததால் ராக்கில் இருந்த துணிகள் அசைந்ததை யாரும் கவனிக்கவில்லை.





பயத்திலே இவள் நம்மை காட்டி கொடுத்துவிடுவாள் என்றுணர்ந்த குணா, மேலும் அசையவிடாமல் சங்கீதாவை இறுக்க கட்டிக் கொண்டான். அடுத்தடுத்து கேட்ட துப்பாக்கி சத்தத்தில் என்ன நடந்துருக்கும் என்று புரிந்தது குணாவிற்கு. அவன் நினைத்தது போல அங்கே மூன்று பேர் இல்லாமல் மொத்தம் ஐந்து நபர்கள் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர். அவர்களுக்குள் எதையோ சத்தம் போட்டு பேசி ஒரு முடிவு எடுத்த பின் இருவர் சென்று பாத்ரூமை சோதனையிட்டு வந்தனர்.





உள்ளே யாரும் இல்லை என்று சோதனையிட்ட பின், கீழே கிடந்தவனை இழுத்துக் கொண்டு ஓரிடத்தில் படுக்கவைத்தனர். ஒருவன் எட்டாவது தளத்தில் இருந்து வரும் வழியில் பார்வையை பதித்தபடி நின்றிருந்தான். மற்றொருவன் மேல் தளத்திற்கு செல்லும் பாதையில் நின்றுக் கொண்டு காவல் காத்தான். மற்ற இருவர் அங்கிருந்த கூட்டத்தை மிரட்டிக் ஓரிடத்தில் உட்காரவைத்து கொண்டிருந்தனர். தலைவன் போலிருந்தவன் தன் கையிலிருந்த வாக்கி டாக்கி மூலமாக யாரிடமோ எதையோ பேசிக் கொண்டிருந்தான்.





அதிக நேரம் இங்கே இருப்பது ஆபத்து என்று உணர்ந்த குணாளன், என்ன பண்ணலாம் என்று துணி இடுக்கு வழியாக வெளியே பார்க்க, தீவிரவாதிகள் அனைவரும் தம்தம் வேலைகளில் பிஸியாக இருந்தது தெரிந்தது. இப்பொழுது தாம் வெளியே வந்தால் அனைவரின் பார்வையும் தங்கள் மீதே திரும்பும் என்பதை அறிந்தவன் வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருந்தான்.





அவன் காத்திருப்பு வீணாகவில்லை சரியாக முப்பது நிமிடங்களுக்கு பிறகு, கும்பலாக உட்கார வைக்கப்பட்டிருந்த மக்களிடம் சிறு சலசலப்பு ஏற்பட, அனைவரின் கவனமும் அவர்களிடம் சென்றது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சத்தம் எழுப்பாமல் சங்கீதாவை தன்னுடன் அணைத்துக் கொண்டே அங்கிருந்து நழுவி பாத்ரூம்குள் நுழைந்துக் கொண்டான்.





மூலையில் கடைசியாக இருந்த டாய்லெட்க்குள் சங்கீதாவை இழுத்துக் கொண்டு வேகமாக சென்றவன் கதவை தாப்பாள் போடாமல் லேசாக சாற்றிவிட்டான். இங்கே வந்ததும் தான் பயம் தெளிந்து நன்றாக மூச்சு விட்டாள் சங்கீதா.





அந்த சின்ன டாய்லெட்டை சுற்றி சுற்றி பார்த்த குணாளனுக்கு சாதாரனமாக நின்றால் கூட மற்றவர் பார்வைக்கு தாங்கள் இருப்பது அப்பட்டமாக தெரிந்துவிடும் என்று புரிந்தது. இரு சுவருகள் இனையும் இடத்தை பார்த்தவன் அதிகம் யோசிக்காமல் முதுகை அதில் சாய்த்து இரு கால்களையும் கீழே தொங்க விடாமல் இருபக்க சுவர்களில் முட்டு கொடுத்து அந்தரத்தில் உட்கார்ந்துக் கொள்ளா ஆஆ என்று வாய் பிளந்து பார்த்தாள் சங்கீதா.





அவள் நின்றிருந்த கோலத்தை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன், வாய் திறக்காமல் தலையசைத்து வா என்று அழைக்க, பயத்தோடு அவனை நெருங்கியவளின் இடுப்பை பற்றி மேலே தூக்கி தன் தொடையின் இருபக்கமும் கால்களை தொங்கவிட்டபடி உட்கார செய்தான்.





கீ கொடுத்த பொம்மை போல அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் சென்றவளுக்கு அவனின் நெருக்கமும் தான் உட்கார்ந்திருந்த நிலையம் மனதில் பதியவில்லை. அவள் மனம் முழுவதும் பயம் மட்டுமே அப்பிக்கிடந்தது. நிமிடங்கள் கடந்தும் இருவரும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. எங்கே வேகமாக மூச்சு காற்றை விட்டால் கூட அவர்களின் செவிகளை தீண்டிவிடுமோ என்ற பயத்தில் அமைதி காத்தனர்.





சிறிது நேரத்தில் யாரோ பாத்ரூம் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்து நடுவில் உள்ள டாய்லெட்டில் சிறுநீர் கழிக்கும் சத்தம் கேட்கவும் இருவருக்கும் மூச்சு நின்றுவிட்ட நிலை. வந்த வேலை முடிந்தாலும் உடனே செல்லாமல் அனைத்து டாய்லெட்டின் கதவுகளையும் மெல்ல தட்டி தட்டி பார்த்தபடி வர அள்ளுவிட்டு போனது இருவருக்கும். இவர்கள் இருந்த டாய்லெட்டின் கதவை லேசாக தட்டிவிட்டு வெளியே நின்றபடி பார்த்தவன் வந்தவழியே திரும்பி சென்றுவிட்டான்.





பல்லி போல இருவரும் சுவற்றோடு சுவர் ஒட்டிக் கொண்டிருக்கவும் அவன் பார்வையில் படாமல் தப்பித்திருந்தனர். அவன் வெளி கதவை சாற்றிய பின் தான் அதுவரை அடக்கியிருந்த மூச்சை இருவரும் வெளியே விட்டனர். பயம் அப்பிய விழிகளோடு தன்னை தாங்கியிருந்தவனை பார்த்தவள்,





“பயமா இருக்கு குணா …” மெல்ல கிசுகிசுத்தவளை பார்த்தான் ஒழிய பதில் கூறவில்லை.





“மாட்டிப்போமா …” என்று அடுத்த கேள்வி கேட்டவளுக்கு, ம்ம்ம் என்று பதிலளித்தவனை கலங்கிய விழிகளோடு பார்த்தவள்,





“அப்போ அவ்வளவு தான நம்ம வாழ்க்க …” என்று உதடு பிதுக்கியவளை சலிப்போடு பார்த்தவன்,





“நீ இப்படி நொய் நொய்ன்னு சத்தம் போட்டு பேசிகிட்டு இருந்தேன் வை … அரமணி நேரத்துக்கு அப்புறம் சாக வேண்டிய நாம இப்பவே செத்துடுவோம் பர்வாலையா …” என்று பயம்காட்ட, இடக்கண்ணில் இருந்து ஒற்றை கோடாய் கண்ணீர் இறங்க,





“ரொம்ப பயமா இருக்கு …” என்றாள் நடுங்கிய குரலில். பேசாதே என்று கூறியும் பேசியவளை கண்டு கடுப்பானவன், நக்கலாக





“உயிர் மேல அவ்வளவு ஆசையா …” என்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்தவள்,





“நா ஒன்னும் சாகுறதுக்கு பயப்படல … பட் இவன்க கையாள சாக தான் புடிக்கல … நா என்ன தப்பு பண்ணேன் இந்த பொறுக்கி நாய்ங்க என்ன சுட்டு தள்ள …” என்று கோபப்பட்டவளின் முகத்தையே சில நொடிகள் பார்த்தவன்,





“பயப்படாத டி சங்கீஈ … பயந்து பயந்து அவன்கள இங்க கூப்டருவ போல …” என்று கேலி பேசியவனை இறுக்கமாக கட்டிக் கொண்டவள்,





“நானா வர வைக்கிறேன் அதுவா வருது … எப்படி பயமில்லாம இருக்கணும்னு தெர்ல …” என்று சிறு பிள்ளை போல பிழற்றியவளை கண்டு அந்த நிலையிலும் அவனுக்கு சிரிப்பு வந்தது.





அவன் சிரிப்பதை கண்டவள்,





“உனக்கு மட்டும் எப்படி சிரிப்பு வருது … எனக்கு பயந்து பயந்தா வருது …” என்று கண்ணீர்விட்டவளின் நெற்றியில் தன் நெற்றியால் முட்டியவன்,





“நீ பெர்மிஷன் கொடுத்தா உன் பயத்த நா போக்கி காட்டுறேன் …” என்றவனை நீர் நிறைந்த விழிகளால் பார்த்தவள் ம்ம்ம் என்று தலையாட்டிய அடுத்த நொடி அவள் இதழ்களை தன் இதழால் கவ்விக் கொண்டான்.





நீண்ட நெடிய முத்தம். அவனுக்கு அது தேவையாக இருந்தது. அவளுக்கோ அவன் இதழ் தீண்டல் ஆத்மார்த்தமாக உணராமல் தன் பயத்தை போக்கும் கருவியாக மனதில் பதிய முதல் முத்தத்தை உணராமலே முத்தத்தை முடித்திருந்தாள். இதழ்கள் பிரிந்த பின் தொன தொனக்காமல் அவன் தோள் வளைவில் தலைசாய்த்துக் கொண்டாள் சங்கீதா. அவனோ தன் தோளில் சாய்ந்திருந்தவளின் வாசத்தை தனக்குள் இழுத்து உள்ளே நிரப்பிக் கொண்டே கழுத்து வளைவில் சிறு சிறு முத்தங்களை பதித்தான்.





இதை எதையும் உணராமல் கண்ணை மூடி உள்ளே நடுங்கிக் கொண்டிருந்தவளின் காது மடலை தன் இதழால் தீண்டி,





“சங்கீ இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்போம் தெரில ப்ளீஸ் அப்பம்மா விளையாட்டு விளையாடலாமா …” என்று கேட்கவும் பட்டென்று கண்ணை திறந்து தலை நிமிர்த்தி பார்த்தவளின் விழிகளில் அப்பட்டமாக அதிர்ச்சி இருந்தது.





தாங்கள் இருக்கும் நிலை என்ன இந்த நேரத்தில் என்ன கேட்கிறான் பார் என்று நினைத்ததும், அவள் இதழ்களில் சிறு புன்னகை அரும்பியது. உதட்டில் உறைந்த சிரிப்போடு நோ என்று மறுத்து தலையசைத்தவளை ஏமாற்றத்தோடு பார்த்தவன்.





“ஏன் நோ … நம்மளால கண்டிப்பா உயிரோடு வெளில போக முடியாது … நா செத்து இங்கையே அலைய விரும்பல …” என்று பாவமாய் கூறியவனை புரியாமல் பார்த்தவளின் மூக்கில் முத்தம் பதித்து,





“ஆமா என்னோட கடைசி ஆச உன்னோட அப்பம்மா விளையாட்டு விளையாடுறதுதான் … அது நடக்கலைன்னா சொர்க்கத்துக்கு போகாம கண்டிப்பா இங்கதான் சுத்திட்டு இருப்பேன் ஆவியா …” என்றவனின் கூற்றை கற்பனை பண்ணி பார்த்தவளின் முகம் சிரிப்பில் மலர்ந்தது.





“சொர்க்கத்துக்கு … ரொம்ப ஆச தான் … உங்களுக்கு கண்டிப்பா நரகம் தான் …” என்று சிரித்தவளை கண்டுக் கொள்ளாமல்,





“ம்ப்ச் அது முக்கியமில்ல … நா கேட்டதுக்கு சே எஸ் ஆர் நோ …” என்றவனின் முகத்தை பார்த்தவளுக்கு அவன் விளையாட்டிற்கு கேட்கவில்லை என்று புரிந்தது. சில நொடிகள் பதில் கூறாமல் அமைதி காத்தவள்,





“அது …” என்றவளின் இதழ்களை ஆவேசமா பற்றி விடுவித்தவன்,





“ப்ளீஸ் சங்கீ நோ சொல்லாத …” என்றவனின் கெஞ்சலில் தடுமாறி போனாள்.





“அது … பாத்ரூம்ல எப்படி … கீழ ரொம்ப டர்ட்டியா இருக்கு அங்க போய் எப்படி …” என்று தன் சம்மதத்தை மறைமுகமாக கூறியவளின் இதழ்களில் மென் முத்தம் பதித்தவன்,





“கீழலாம் போக வேணாம் … நம்ம முன்னோர்கள் இதுக்குன்னு பல வழிகள கத்து கொடுத்துருக்காங்க … அதுல ஒன்ன இப்போ ட்ரை பண்ணி பாத்துடலாம் …” என்று கண்ணை சிமிட்டியவன் அது என்ன என்பதை அடுத்து சில நொடிகளில் அவளுக்கு உணர்த்தினான்.





உடைகள் கலையவில்லை உடல்கள் தீண்டவில்லை அவள் உணர்ச்சிகளும் தூண்டப்படவில்லை. அவர்கள் இருந்த நிலையிலையே அவள் பெண்ணையே வலிக்க வலிக்க களவாடியிருந்தான் அது தரும் சுகத்தை அவள் உணரும் முன்பே.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 14:



குணாவின் தோள் வளைவில் தலைசாய்த்து அவன் மேல் சாய்ந்திருந்தவளுக்கு சற்று முன் என்ன நடந்தது என்று புரியவில்லை அந்தளவிற்கு அவளை தீண்டிவிட்டு வேகமாக விலகியிருந்தான். முதல் முறை என்பதால் உண்டான வலியை தவிர வேற எந்த மாற்றமும் அவளிடமில்லை.



நடந்து முடிந்ததை பற்றி இனி நினைக்க கூடாது என்று தனக்குள் பிடிவாதமாக சொல்லிக் கொண்டவள் திடீரென்று ஞாபகம் வந்தவளாக,



“குணா … பாடிய ஹாண்ட்ஓவர் பண்ணும் போது போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டு தான் கொடுப்பங்களா …” திடீரென்று சந்தேகம் கேட்டவளை புரியாமல் பார்த்தவனிடம்,



“இல்ல … அப்படி பண்ணா இப்போ நாம பண்ணது வீட்டுல இருக்கவங்களுக்கு தெரிஞ்சுடும்ல …” என்று முகம் கசங்கியவளை கண்டு சிரிப்புதான் வந்து அவனிற்கு.



“செத்த பிறகு யார் என்ன நினைச்சா உனக்கு என்ன … ப்ரீயா விடு …” என்றவனை கலங்கிய முகத்துடன் பார்த்தவள்,



“எப்படி ப்ரீயா விட முடியும் … நம்பி அனுப்பிருக்காங்க வெளில தெரிஞ்சா அசிங்கம்ல …” என்றவளை அவன் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டாள். சில நொடிகள் அமைதியாக இருந்தவள்,



“கால் வலிக்கலையா …” என்று அவன் முகம் பார்க்க,



“வலில மறுத்து போச்சு …” என்ற பதிலில்,



“நா வேணா இறங்கிக்கவா …” என்றவளை அழுத்தமாக பார்த்தவன்



“ஏன் உயிரவிட அவ்வளவு ஆசையா …” என்கவும், பொருமையிழந்தவள்,



“ச்ச எப்பதான் சுடுவாங்களோ … செம்ம டென்ஷனா இருக்கு … வெய்ட் பண்ண முடில, உள்ள கொதக் பதக்குனு இருக்கு … சட்டுபுட்டுனு சுட்டு போட்டுட்டு போனா, நிம்மதியா போய் சேர்ந்திடலாம்ல …” என்று புலம்ப,



“சாவ அவ்வளவு ஆர்வமா இருந்தா பேசாம நீயே போய் அவங்க முன்னாடி நில்லு …” என்று குணா நக்கலடிக்க,



“நா என்ன லூசா சாவ தேடி போக … அதுவா வந்தா ஏத்துப்பேன் …” என்று சிலிர்த்துக் கொண்டு பதில் கூறியவளிடம்,



“அப்போ அவங்க வர வரைக்கும் மூடிட்டு இரு …” என்று சுள்ளென்று விழுந்தான். மோசமான நிலையிலும் அவனின் அலட்சியமான பேச்சு உள்ளுக்குள் நெருடிக் கொண்டே இருந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் உட்கார்ந்திருந்த நிலையில் இருந்தே அந்த இடத்தை தலையை சாய்த்து ஆராய்ந்து பார்த்தாள்.



ஏற்கனவே நீண்ட நேரமாக காலை விரித்து சுவற்றில் முட்டு கொடுத்து உட்கார்ந்திருந்தது பயங்கர வலியை கொடுத்தது குணாவிற்கு. இதில் அங்கேயும் இங்கேயும் அசைந்து கொண்டிருந்தவளை கண்டு கடுப்பானவன்,



“ம்ப்ச் … ஒரு இடத்துல அசையாம இருக்க மாட்டியா …” என்று கடுப்படித்தான். அவனை சிறிதும் சட்டை செய்யதவள், மேலே பார்த்தபடி,



“ஏன் குணா மேல போற பைப் லைன பால்லோவ் பண்ணி போனா வெளில போயிடலாம்ல … எத்தன படத்துல பார்த்துருக்கோம் …” என்று யோசனை கூற,



“அதான் நீயே சொல்லிட்டியே படத்துலனு … இங்க நா ஹீரோவும் இல்ல இது பட ஷூட்டிங்கும் இல்ல … சும்மா ஐடியா சொல்றேன்னு கத்தி இந்த பக்கம் திரும்பாம இருக்கவனுகள இங்க திருப்பி விட்டுடாத …” என்றவனின் பதிலில் அமைதியாகி வாயை மூடிக் கொண்டாள்.



மேலும் ஒரு மணி நேரம் கடந்திருக்கும், குணா மிகவும் சோர்ந்துப் போனான். நீண்ட நேரமாக கால்களை ஒரே நிலையில் வைத்திருந்தது கால்களை வலுவிழக்க செய்ய எந்த நேரம் வேண்டுமானாலும் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் தான் இருந்தான்.



அவனின் மன தைரியமும் உடல் உறுதியும் நேரம் ஆக ஆக குறைந்துக் கொண்டே வர, திடீரென்று வெளியே கேட்ட துப்பாக்கி சூடும் சலசலப்பும் கடத்தல் நாடகம் உச்சகட்டத்தை நெருங்கிவிட்டதை உணர்த்தியது. சத்தம் கேட்டு கீழே குதிக்க போனவளை சோர்வுடன் தடுத்தவன்,



“ப்ளீஸ் சங்கீ கொஞ்ச நேரம் அமைதியா இரு … அங்க என்ன நடக்குதுன்னே தெரில … போலீஸ் போர்ஸ் வந்து நாம தப்பிக்க கூட சான்ஸஸ் இருக்கு …”என்றவனால் சரியாக கூட பேச முடியவில்லை. அவன் நிலையை கண்டு கவலை பட்டவளுக்கு அவன் வார்த்தைகளை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை. மேலும் அரைமணி நேரம் கடந்த பின் இவை அனைத்திற்கும் முடிவு எட்டியிருந்தது.



ராணுவம் வந்து இவர்களை மீட்கும் பொழுது மிகவும் பலவீனகமாக இருந்தான் குணாளன். அவனை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்க, அவனுக்கு துணையாக இருந்துக் கொண்டாள் சங்கீதா. மாலில் ஜம்மெர் கொண்டு மொபைலின் சிக்னலை தடுத்திருந்ததனால், மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததும் சங்கீதாவை அழைத்துவிட்டான் செழியன். பதட்டத்துடன் பேசியவனைக்கு ஆறுதல் கூறியவள் வீணா மற்றும் வைஷுவிடமும் தாங்கள் பத்திரமாக இருப்பதாக கூறி வைத்திருந்தாள்.



கண்ணை மூடி படுத்திருந்த குணாவை பார்க்க பார்க்க அவ்வளவு கஷ்டமாக இருந்தது. மூன்று மணி நேரமாக தன்னை அவன் கால்களில் தாங்கியிருந்ததை நினைத்து கண்கள் கலங்க, மெல்ல அவன் தலையை வருடிவிட்டுக் கொண்டிருந்தாள். திடீரென்று அவள் கைபேசி ஒலியெழுப்ப எடுத்து பார்த்தவள் தயாவின் நம்பரை கண்டதும் முகம் மலர்ந்து போனாள். உடனே அழைப்பை ஏற்று,



“ஹெல்லோ …” என்ற அடுத்த நொடி,



“சங்கீ எப்படிமா இருக்க … குணா எங்க அவன் போன் நாட் ரீச்சபல்னு வருது … நல்லாருக்கான்ல …” என்று பதட்டத்துடன் இவர்களின் நலனை பற்றி விசாரித்தான் தயாளன்.



“ஹைய்யோ தயா பதட்ட படாதீங்க இங்க நாங்க சேப்பா இருக்கோம் … ஒன்னும் பிரச்னையில்லை …” என்றவள் நடந்ததை முழுதும் கூறி முடித்தாள்.



“ஒரே இடத்துல ரொம்ப நேரமா உட்கார்ந்து இருந்ததால குணா கொஞ்சம் வீக்கா பீல் பன்றார் … அதுக்குதான் ட்ரீட்மெண்ட் போய்கிட்டு இருக்கு … நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்ல …” என்கவும்,



“கிரிகிட்ட பிளைய்ட் டிக்கெட் பாக்க சொல்லிருக்கேன் … டிக்கெட் கிடைச்சதும் இன்பார்ம் பண்ணுறேன் …” என்றவனை அவசரமாக இடைமறித்தவள்,



“வேணா வேணா … நாங்க தான் நாளைக்கு அங்க வறோமே நீங்க வர்றதுக்குள்ள நாங்க கிளம்பிடுவோம் …” என்றவளின் பதிலில், “ஓஹ் …” நெற்றியை நீவி யோசித்தவன்,



“குணா பக்கத்துல இருந்தா போன குடு …” என்கவும், கண்ணை மூடி படுத்திருந்தவனை திரும்பி பார்த்தவள்,



“நல்லா தூக்கிட்டு இருக்கார் … எழுஞ்சொடனே கால் பண்ண சொல்றேன் …” என்றவள் மேலும் சில நொடிகள் அவனிடம் பேசி முடித்த பின் போனை வைத்தாள்.



போனை வைத்தபின் சிரித்த முகத்துடன் திரும்பி பார்த்தவள், அங்கே தன்னையே பார்த்தபடி படுத்திருந்த குணாவை கண்டு சற்று அதிர்ந்து தான் போனாள்.



“முழிச்சுட்டு தான் இருந்தீங்களா … அப்போ தயா பேசுனது தெரிஞ்சுருக்குமே … ஏன் பேச கேட்கல …” என்றவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டான்.



“இப்பவும் கல்யாணம் பண்ற ஐடியால தான் இருக்கியா …” திடீரென்று சம்பந்தமே இல்லாத கேள்வியை கேட்டான். அவன் கேள்வியில் ஏனோ முதுகு தண்டு சில்லிட்டு போக பயத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,



“புரியல …” என்றவளின் கேள்வியில் மென்னகை புரிந்தவன் அவள் கைகளை பற்றி தன்னருகில் உட்காரவைத்துக் கொண்டான். சில நொடிகள் எதும் கூறாமல் அமைதியாக அவள் கைகளை மெல்ல வருடியவாறே அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து,



“என்ன புரியல … என் கூட செக்ஸ் வச்சுக்கிட்டு என் அண்ணன கல்யாண பண்ணுற ஐடியா இன்னும் இருக்கானு கேட்டேன் … கேள்வி புரியுதா … இல்ல இன்னும் தெளிவா எக்ஸ்பிலைன் பண்ணனுமா …” என்றான் நிதானமாக. ஒரு நொடி சங்கீதாவின் உடல் அதிர்ச்சியில் ஆடிப்போனது. அவளிடம் தோன்றிய நடுக்கத்தை அவள் கைகளின் மூலம் உணர்ந்துக் கொண்டவனின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது.



பதில் கூறாமல் தன்னையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தவளை கண்டு பற்கள் தெரிய சிரித்தவன் எதுவோ நினைத்தவனாக தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டான்.



“என்ன காதல் சங்கீ உன்னோடது … நாலு வருஷம் தயா பின்ன சுத்தி அவன்கிட்ட காதலையும் சொல்லிருக்க, என்கிட்டையும் அதுக்கு ஈகுவல் ஆனா பீலிங்ச காட்டி பல்லக்காட்டிட்டு சுத்திகிட்டு இருக்க … இதுக்கு பேர் என்ன காதல் சங்கீஈஈ …” என்று வருடுவதை நிறுத்திவிட்டு தடையை தடவி யோசிப்பதை போல நடித்தவன் பின்,



“ஹாங் அதுக்கு பொருத்தமான பேர் கண்டு பிடிச்சுட்டேன் … நாய்க் காதல் … நல்லாருக்குள்ள … ரோட்ல ஒரு பெண் நாய் இருந்துச்சுனு வச்சுக்கோ ஊர்ல இருக்க ஆண் நாய் எல்லாம் அது மேல ஏறும் … அந்த பொட்ட நாயும் கண்டுக்காது … அதுக்கு எந்த நாய் மேல ஏறுதுனு தெரியாது அதுக்கு தேவ தட் சுகம் …” என்று தன்னை கேவலப்படுத்தி விளக்கம் கொடுத்தவனை கண்டு நெஞ்செல்லாம் எரிந்து போனது. உள்ளுக்குள் தபக் தபக் என்று கோப தீ எரிந்துக் கொண்டிருக்க எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.



“அது எப்படி என் அண்ணன உண்மையா லவ் பண்ணிருந்தா என் டச்சிங்கு சிலிர்த்து போய் நின்றிருப்ப … கூட ஆடுவாங்கலாம் பாடுவாங்கலாம் சேந்து ஊர சுத்துவான்கலாம் இவ்வளவு ஏன் கட்டிபுடிச்சு கிடப்பாங்களாம் ஆனா ஒரு முத்தம் கொடுக்க விடமாட்டாங்களாம் … ம்ம்ம் … அவ்வளவு சேப்பா போய் என் இளிச்சவாயன் அண்ணன் கைல சேரனும் … என்ன ஒரு பிளானிங் …” என்று நக்கலாக சிரித்தான்.



சங்கீதாவோ உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து சிறிதும் அசையாமல் அவனையே அழுத்தமாக பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.



“அதான் உன் நாய் காதல கௌரவ படுத்த, நாத்தம் புடிச்ச டாய்லெட்ல வச்சே உன்ன செஞ்சு முடிச்சேன் … உனக்கு அது போதும் …” என்று கண்ணை சிமிட்டியவனை உணர்ச்சிகளை காட்டாத விழிகளுடன் பார்த்தாள்.



சில நொடிகள் அவன் முகத்தையே பார்த்திருந்தவள் அவன் எதுவும் பேசவில்லை என்றதும் அமைதியாக எழுந்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல பார்க்க, சற்றென்று அவள் கைகளை எட்டி பிடித்து,



“என்ன அமைதியா போற … எதாவது பேசு …” என்றவனின் முகம் கடுப்பில் இருந்தது. அவன் செயலை கண்டு அவள் இதழ்கள் இகழ்ச்சியாக விரிந்தன. தலையை மறுப்பாக ஆட்டி உதட்டை பிதுக்கியவள்,



“என்ன பேசணும் … எனக்கு எதுவும் பேச தோணல …” என்று தோளை குலுக்கவும், குணாவின் முகம் கோபத்தில் ரத்தமென சிவந்து போனது.



“ஒஹ் … நா இவ்வளவு பேசுனத்துக்கு பதிலுக்கு எதுவும் சொல்ல தோணலல …” என்று அழுத்தமாக கேட்டவனை உதட்டில் உறைந்த புன்னகையோடு பார்த்தவள்,



“எஸ் … சீரியஸா எதுவும் கேட்க தோணல …” என்றவளை கோபமாக பார்த்தவன்,



“இதையும் கேட்டுட்டு போ … கனவுல கூட தயாவ கல்யாணம் பண்ணிப்போம்னு நினைச்சுக்கிட்டு இருக்காத … அவனோட தல …” என்று முடியை இழுத்துக் காட்டியவன்,



“இல்லல்ல … அவன் கால் சுண்டு விரல்ல இருக்க மயிரா கூட இருக்க தகுதியில்லாதவ நீ … அவனோட இளகிய மனச வச்சு ஈஸியா வளைச்சுடாலம்னு பகல் கனவு கானாத …” என்று கோபத்தில் கர்ஜித்தான்.



அவனை விட்டு சில அடிகள் எடுத்து வைத்தவள் பின் நின்று திரும்பி நிதானமாக பார்த்தாள்.



“ஒரு பொண்ணோட கற்பை காட்டி அவளுக்கு கொடுத்த வாக்க தயா மீறுவார்னு நீங்க நினைச்சா உங்கள விட முட்டாள் வேற யாரும் இல்ல … அண்ட் மோர்ஓவர் தும்மந்துண்டு ஸ்கின்ல தான் என் கற்பு இல்லனு எனக்கு புரியும் உங்களுக்கு புரியலனா நீங்க ஒரு முட்டாள் …” என்று அழுத்தமாக கூறியவள் அவனை திரும்பியும் பார்க்காமல் நடந்து சென்றாள்.



பாரிஸில் இருந்து திரும்பி வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. ஆனால் முன்பிருந்த கலகலப்பு இல்லாமல் அமைதியாகி போனாள் சங்கீதா. அவளின் இயல்பை துளைத்து நடமாடியவளை காண பொறுக்காமல் பல முறை அவளிடம் காரணம் கேட்டு சோர்ந்துவிட்டான் செழியன்.



“கண்ணு முன்ன அத்தன பேர சுட்டு போட்டது இன்னும் மைண்ட்ல இருந்து போலடா …” என்ற காரணத்தை தம்பியிடம் கூறியிருந்தாள் சங்கீதா. ஆனால் அவன் தான் அதை முழுதாக நம்ப முடியாமல் உண்மையான காரணம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.



“நீ தான சங்கீ கூடவே இருக்க, உனக்குமா அவ என் திடீர்னு சைலண்ட் ஆனானு தெரியாதா …” என்று வீணாவிடம் கோபப்பட்டான்.



“நா சொல்ற ரீசன தான் நம்ப மாட்டேன்னு பிடிவாதமா இருக்கு … பேசாம நீயே எதுக்காக அப்படி இருக்கானு சொல்லு …” என்று பதிலுக்கு கடுப்படித்தாள். ஊருக்கே தெரியும் கண் முன்னே மரணத்தை கண்டுவிட்டு வந்தவள் அவள் என்று அந்த பாதிப்பு தான் அவள் இயல்பு மாறியதற்கான காரணம் அதை ஒத்துக் கொள்ளாமல் தன்னிடம் சண்டை பிடிப்பவனை கண்டு எரிச்சல் தான் வந்தது.



சில நொடிகள் மௌனமாய் எதையோ யோசித்தவன் பின் வீணாவின் அருகில் சென்று உட்கார்ந்துக் கொண்டு,



“அந்த பொறுக்கி எப்படி இருக்கான் … அவனும் இவள போலத்தான் இருக்கானா இல்ல கலகலன்னு இருக்கானா …” என்று அவள் முகம் பார்த்து கேட்க, வந்த கோபத்தை பல்லை கடித்து பொறுத்துக் கொண்டவள்,



“எப்பவும் போலத்தான் இருக்கான் நினைக்கிறேன் சரியா தெரில செழி … இனிமே பாத்து சொல்றேன் …” என்று இழுத்து வைத்த சிரிப்போடு கூறியவளை, சற்று எரிச்சலுடன் பார்த்தவன்,



“கூட வேல பாக்குற … இதுகூட கவனிக்க மாட்டியா …” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தவனை திரும்பி பார்த்து முறைத்தவள்,



“செழி, வர வர ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்க … சங்கீ ஒன்னும் சின்ன புள்ள இல்ல அவளுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு, அவள பத்தி யோசிக்கிறத விட்டுட்டு முதல்ல நம்மள பத்தி பேசு …” என்றாள் கடுப்பாக.



காபி ஷாப்பில் ஆளுக்கு ஒரு காப்பியை குடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். தன் முன்னே உட்கார்ந்திருந்தவளை ஆழமாக பார்த்தபடி,



“நம்மள பத்தியா …” என்று கேள்வியாக நிறுத்தியவன், “நம்மள பத்தி பேச கூட ஏதோ இருக்கா …” என்று நக்கலாக கேட்க, திமிராய் பேசும் வாயை இழுத்து வைத்து வலிக்க வலிக்க முத்தமிட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அழகாக புன்னகைத்தாள் வீணா.



“ஏன் இல்ல … நா உன்கிட்ட சொன்னதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல செழி …” என்றவளின் முகம் திடீரென்று செம்மையை பூசிக் கொண்டது. அவள் முகத்தையே அழுத்தமாக பார்த்தபடி காபியை உறிஞ்சு குடித்தவன்,



“பதில் சொன்னாதான் எஸ்னு அர்த்தம் … பதில் சொல்லனா நோனு அர்த்தம், இது கூட தெரியாதா …” என்றவனின் பதிலில் சற்றென்று அவள் முகம் சுருங்கி போனது. கண்ணில் கூட ஒற்றை துளி நீர் எட்டிப்பார்க்க, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக எழுந்தவள்,



“சாரி … இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் … பை …” என்றுவிட்டு அவசரமாக நகர பார்க்க, வேகமாக அவள் கைகளை பற்றியவன்,



“ஏய் வீணா … பேசிகிட்டு இருக்கும் போதே எங்க போற … உட்கார் …” என்றவனை திரும்பியும் பார்க்காமல் அதே சமையம் உட்காராமல் முகத்தை தூக்கி வைத்தபடி நின்றிருந்தவளின் கையை அழுத்தமா பிடித்தபடி,



“ப்ளீஸ் உட்கார் … எனக்காக …” என்று கெஞ்சவும் இறுகிய முகத்தோடு உட்கார்ந்துக் கொண்டாள்.



எதிரே உட்கார்ந்திருந்தவன் எழுந்து வந்து அவள் அருகில் உக்காந்துக் கொண்டான். கூடவே,



“ண்ணா … ரெண்டு வட கொடுங்கணா …” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.



“எனக்கு வட வேணா பசிக்கல …” மூஞ்சை உர்ரென்று வைத்திருந்தவளை லேசாக திரும்பி பார்த்தவன்,



“நா உனக்கு சொன்னேன்னு சொல்லவே இல்லையே …” என்கவும் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள். சில நொடிகள் அமைதியாக டேபிளில் தாளமிட்டவன் பின்



“தனியா ஊருக்கு போகணும் சொன்னியே துணைக்கு நானும் வரட்டா …” திடீரென்று கேட்கவும், தன்னருகில் உட்கார்ந்திருந்தவனை திகைத்து போய் பார்த்தாள். பின் தொண்டையை செருமி,



“ஊருக்கு மட்டுமில்ல … வாழ்க்கையிலும் தனியாத்தான் பயணம் செய்ய போறேன் அதுக்கும் துணையா வரேன் சொல்லு, ஊருக்கு உன்ன கூட்டிட்டு போறேன் …” என்றாள் கலங்கிய விழிகளுடன். அவள் கண்ணீரை ஒற்றை விரலால் துடைத்துவிட்டு நிமிர்ந்தவன்,



“எனக்கும் வர ஆசையாத்தான் இருக்கு … பட் உனக்கும் எனக்கும் செட் ஆகுமானு யோசனையாவே இருக்கு … என்னால உன் கேள்விக்கு மனமார பதில் தர முடில நா என்ன பண்ணட்டும் நீயே சொல்லிடு …” என்று அவளிடமே முடிவை விட்டுவிட்டான்.



அந்த தடுமாற்றமான பதிலிலே அகமகிழ்ந்து போனவளின் முகம் மலர்ந்து போனது.



“நீங்க பொறுமையா நா செட் ஆவேனா இல்லையானு யோசிச்சுட்டு வாங்க செழி … அது வரைக்கும் மீ வெய்டிங் …” என்று கண்ணை சிமிட்டியவளின் வாயில் ஸ்பூனால் வடையை ஊட்டினான்.



அவன் செயலில் கண்கள் கலங்கி போக, கலங்கிய விழிகளும் முகத்தில் சிரிப்புமாய் வாயை திறந்து வடையை வாங்கியவளின் கண்களை துடைத்து விட்டவாறே,



“யோசிச்சுட்டேன் … உனக்கும் எனக்கும் செட் ஆகும்தான் தெரியுது … அப்படி இல்லைனா கூட பரவால்ல, நா உனக்கு தகுந்த மாதிரி செட் ஆகிக்கிறேன் …” என்று புன்னகை புரிந்தவனின் கைகளை பற்றி முகத்தில் ஒற்றிக் கொண்டாள். பின் ஈரம் படர்ந்த விழிகளோடு நிமிர்ந்து பார்த்து,



“தேங்க்ஸ் …” என்று சொல்ல போனவளின் வாயை வேகமாக மூடி,



“தேங்க்ஸ்லாம் மூணாவது மனுஷங்களுக்கு தான் சொல்லுவாங்க … நா உனக்கு அந்நியனா …” என்று குறும்பு பார்வை பார்த்தவனை கண்டு முகம் மலர சிரித்தவள்,



“நோ … எனக்கே எனக்குன்னு இருக்க ஒரே சொந்தம் நீ தான் செழி … ஐ லவ் யூ …” என்று உணர்ச்சிகரமாய் பேசியவளின் கையை அழுத்தி கொடுத்தவன்,



“என் பாசத்த பங்கு போட்டுக்க உன்ன சேர்த்து இன்னும் நாலு பேர் இருக்காங்க … பட் என்ன முழுசா உனக்கே உனக்குனு கொடுத்துட்டேன் வீணா என் உயிர் இருக்கிற வர இத திரும்ப வாங்கிக்க மாட்டேன் …” என்று உறுதியளித்திருந்தான்.



ஸ்டூடியோவில் குணா இட்டிருந்த வேலையை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. ஒரு மாசம் நோட்டீஸ் பீரியட் இல்லாமல் வேலையை விட்டு அனுப்ப மாட்டேன் என்று குணா முடிவாக கூறியிருந்ததால் இன்னும் அவனிடம் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.



டான்ஸ் ப்ராக்டிஸில் இருந்தவன் திடீரென்று ஆடுவதை நிறுத்திவிட்டு அனைவரையும் தன்னருகில் அழைத்தான்.



“ஓகே எல்லாரும் செம்மயா பெர்பார்ம் பண்ணுறீங்க அடுத்த கான்செர்ட்ட கலக்கிடலாம் …” என்று உற்சாகத்துடன் ஆரம்பித்தவன், பின் தொண்டையை செருமி



“உங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ் சொல்ல தான் கூப்ட்டேன் …” என்று நிறுத்தியவன் தன் பாகில் இருந்த கவரை கையில் எடுத்து அதை பிரித்தவாறே,



“கைஸ் … எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு … இன்னும் டூ வீக்ஸ்ல மேரேஜ் …” என்றதும் அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு ஆர்ப்பரிக்க, “பொண்ணு யாரு குணா …” என்றவர்களின் கேள்விக்கு சிரித்தபடி,



“உங்களுக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு தான் …” என்று நிறுத்தியவனின் விழிகள் அங்கே கை கட்டி நின்றபடி இவன் பேசுவதை முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சங்கீதாவை வருடிக் கொண்டே, கையில் இருந்த பத்திரிகையை பிரித்து காட்டி,



“வைஷு தான் …” என்று கூட்டத்தை பார்த்து கண்ணை சிமிட்ட, “ஒஹ்ஹஹ் …” என்ற சத்தத்துடன் அனைவரும் அவனை சூழ்ந்துக் கொண்டனர்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 15:





குணாளன் கமலேஷ் வெட்ஸ் வைஷாலினி என்ற பெரிய பேனர் அந்த மண்டபத்துக்குள் காலடி எடுத்து வைத்தவர்களை வரவேற்றது. முகூர்த்தம் காலை ஏழரை டூ ஒன்பது மணி என்பதால் தூங்கி வழியாமல் சுறுசுறுப்புடன் வந்தவர்களை பேனரில் சிரித்துக் கொண்டிருந்த குணாவும் வைஷுவும் வரவேற்றனர்.





வேதாச்சலத்திற்கு வைஷு ஒரே பெண் என்பதால், தன் ஊரையே அழைத்து திருமணத்தை தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார். குணாவும் தயாளனும் தம்தம் தொழிலில் இருந்த பிரபலங்களை அழைத்து ஜமாய்த்துக் கொண்டிருந்தனர். அந்த இடம் பிரபலங்கள் சொந்தங்களாலும் நிரம்பி வழிந்தது.





மண்டபத்தின் உள்ளே சொந்தங்கள் கூடியிருக்க ஐயர் கொடுத்த மூகூர்த்த உடையை வாங்கிக் கொண்டு புன்னகை முகமாக மணமகன் அறையை நோக்கி நடந்த குணாளனை இறுக்கி அணைத்துக் கொண்டான் தயாளன்.





“ரொம்ப சந்தோசமா இருக்குடா … சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா கூட கிரிய அழைச்சுக்கிட்டு போ …” என்றவன், கிரியிடம்





“கிரி சீக்கிரம் கூட்டிட்டு வா …” என்று உத்தரவிட்டான். அண்ணனுக்கு சிரிப்புடன் கூடிய தலையசைப்பை கொடுத்த குணா கிரியுடன் மணமகன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான். அதேநேரம் மணப்பெண்ணின் அறையில்,





“என்னடி கல்யாண பொண்ணுக்கு இருக்கிற கலகலப்பு ஒன் மொகத்துலையே காணும் … என்ன விஷயம் …” சோர்ந்து போய் தெரிந்த வைஷுவை தன் எக்ஸ்ரே கண்களால் ஆராய்ந்தபடி கேள்விகளை தொடுத்தாள் வீணா.


அவளுக்கு பதில் கூறாமல் தன்னையே பார்த்திருந்த சங்கீதாவிடம்,





“குணாமாமாவ லவ் பண்றியா …” என்று நேரடியாக கேட்டவளை சில நொடிகள் அமைதியாக பார்த்தவள், இதழ்களில் மென்புன்னகையை படரவிட்டவாறே,





“ஆமான்னு சொன்னா விட்டு கொடுக்க போறியா …” என்ற பதிலில் திடுக்கிட்டு போய் அவள் முகம் பார்த்தவள்,





“நீயும் குணா மாமாவும் ரொம்ப க்ளோசா பழகினத பாத்து நா அப்படிதான் நினைச்சேன் …” தான் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் தனக்கு தோன்றியதை கேட்டவளின் கையை பற்றி வருடிய சங்கீதா ஒரு பெருமூச்சை விட்டு





“குணா என்னையும் சரி இல்ல வேற யாரையும் லவ் பண்ற ஆள் இல்ல … அதனால உனக்கு யாரையாவது லவ் பண்றாரோனு சந்தேகம் வேணா … பட் …” என்று நிறுத்தியவள்





“நீ நினைக்கிற மாதிரி குணா ஒன்னும் விருப்பப்பட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குள்ள … அவன் ஒன்னு நினைச்சு செய்றான் … அது … ம்ப்ச் எப்படி சொல்றதுனு தெர்ல … இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன வேணாலும் நடக்கலாம் … எல்லாத்தும் ப்ரிப்பேர்டா இரு … அழுது வடியாம தைரியமா முடிவெடுக்கணும் …” என்கவும் பதறிவிட்டனர் வீணாவும் வைஷுவும்.





வேர்ல்ட் டூருக்கு சென்று வந்ததிலிருந்து மூவருக்கும் நல்ல நெருக்கம் உண்டு. தங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் திருமணத்திற்கு சம்மதம் சொன்னவளிடம் பேசாமல் சில நாட்கள் முறுக்கிக் கொண்டு திரிந்தாள் வீணா. வைஷு எவ்வளவு கெஞ்சியும் கோபத்தை இறுக்கி பிடித்திருந்தவளை சங்கீதா இடையில் புகுந்து சமாதானம் செய்து வைத்தாள்.





தாலி கட்ட இன்னும் சில நேரமே இருக்கும் நிலையில் குணாவின் எண்ணத்தை பற்றி சொல்லி பெரிய குண்டை தூக்கிக் போட்டவளிடம்,





“நீ இவ்வளவு பேசியதால என் மனசுல இருந்தத நானும் கேட்குறேன் … வீணா சந்தேகப்பட்டது போல நீ குணாவ லவ் பண்றியா … உன் பேச்சு எல்லாம் இந்த கல்யாணம் நடக்காது போலவே இருக்கு … சொல்லு கடைசி நிமிஷத்துல அவ மனச குழப்பிவிடுறது போல பேசிகிட்டு இருக்க, இதான் ஒரு நல்ல ப்ரெண்ட் செய்யுற செயலா …” என்று கோபப்பட்ட வீணாவை கண்டு புன்னகையே பதிலாக தந்தவள்,





“என்ன கேட்டா காஜி குணாவ விட … போர் அடிக்கிற தயா தவுசண்ட் டைம் பெட்டரான பெர்ஷன் சொல்லுவேன் … அப்புறம் உன் இஷ்டம் …” என்ற தோழியின் கையை வலிக்க பற்றி இழுத்து தள்ளிய வீணா,





“ஏய் வாய மூடுடி … எனக்கு தான் தெரியுமே அவனுக்காக உன் லவ்வர விடுற அளவுக்கு அவன் மேல வெறி இருக்குவ தானே … ச்சை கடைசி நிமிஷத்துல இப்படியா இவள் போட்டு குழப்புவ … தயவு செஞ்சு இங்கிருந்து போ …” என்று கத்தியவளை தன் வெறுமையான விழிகளால் வருடியவள் பின் தன்னையே நீர் நிறைந்த விழிகளுடன் பார்த்திருந்த வைஷூவை பாவமாய் பார்த்தபடி வெளியேறினாள்.





அவள் கூறியது உண்மை என்பதை போல தன் அறையில் நடந்துக் கொண்டிருந்தான் குணாளன். அவன் கையிலிருந்த பாட்டிலை பிடுங்கிக் கொண்டிருந்த கிரி,





“குணா … நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாள … இப்படி நடந்துகிறதால நீ மட்டுமில்ல உன் குடும்பமே அசிங்க பட போகுது … ப்ளீஸ் நா சொல்றத கேளு …” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.





“என்னடா கேட்கணும் … அந்த கேடு கெட்டவ தயாவ கல்யாணம் பண்ணா பரவாலையா … சொல்லு … எப்படிடா அவளுக்கு மனசு வந்துச்சு அந்த பக்கம் என் அண்ணன லவ் பன்றேன் சொல்லிட்டு இங்க என் கூட ஜலபுலா ஜன்க்ஸ் வெளையாட முடிஞ்சுது … நானும் அவ என் அண்ணன லவ் பண்ணவனு தெரியாமலே அவள கரெக்ட் பண்ண ட்ரை பண்ணேன் மச்சான் … ரொம்ப அசிங்கமா இருக்கு …” என்று போதையில் புலம்பியவனை கண்டு நெற்றியை நீவிவிட்ட கிரி,





“அய்யோ ராமா … உனக்கு எத்தன தடவ டா சொல்றது … அவ உங்க அண்ணன லவ் பண்றேன் சொன்னது உண்மை தான் … ஆனா பதிலுக்கு உங்க அண்ணன் லவ் பண்றார்னு அவளுக்கு தெரியாதுடா … அதோடு சங்கீதாவுக்கும் தயாக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு … நீ ஏண்டா நடுவுல பூந்து குட்டைய குழப்புற …” கோபத்தில் மெல்லிய குரலில் சீரியவனை கசங்கிய முகத்துடன் பார்த்தவன்,





“இதான் இதான் … இத கேட்டாத்தான் எனக்கு அவ்வளவு வெறி ஏறுது … அது எப்படிடா நாலு வருஷமா ஒருத்தன சுத்தி வந்தவ திடீர்னு என்ன பாத்ததும் தயாகிட்ட வந்த பீலிங்ஸ் என்கிட்டயும் வந்துச்சு … எல்லாம் லஸ்ட்டா மச்சான், அவளுக்கு என் உடம்பு மேல ஒரு கண்ணு … தயாவ விட பாடிய பிட்டா மெய்டைன் பண்றேன்ல அதான், அதுல மயங்கிட்டா …” என்று வாய்விட்டு புலம்பியவன்,





‘அதுக்கு தண்டனையாதான் அவ வெர்ஜினிட்டிய எடுத்துட்டேன்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.





சிங்கப்பூரில் ஸ்டேஜ் பெர்பார்மன்ஸ் முடிந்தபின் சங்கீதாவை தன்னுடன் அன்றிரவு தங்கவைக்க திட்டமிட்டிருந்தவனின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டு நால்வரும் ஊர் சுற்ற கிளம்பிவிட சோர்வுடன் படுக்கையில் விழுந்தான் குணா. விடாமல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த மொபைல் அழைப்பில் அலுப்புடன் கண்ணை திறந்து பார்த்தவன் ரேவதியின் நம்பரை அங்கே கண்டதும் கோபத்தில் போனை தூக்கி தூர எறிந்தான்.





என்னை வேண்டாமென்று தூக்கி போட்டவளிடம் நா பேச போவதில்லை என்ற பிடிவாதத்துடன் கண்ணை மூடியவனை தூங்க விடாமல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது மொபைல் போன். ஒருகட்டத்தில் சங்கீதாவின் மேலிருந்த கோபத்தில் அழைப்பை ஏற்று பதில் பேசாமல் அமைதி காத்தவனை காக்க விடாமல் வானத்திலிருந்து விழுந்த மழை நீர் போல சலசலத்தாள் ரேவதி.





அவனை பற்றி விசாரித்தவள், அன்று நடந்த நடன நிகழ்ச்சியை பாராட்டி பேசி முடித்தபின், எதற்காக அழைத்தாளோ அந்த விஷயத்தை மெல்ல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல பேச தொடங்கினாள்.





“குணா … என் மேல பயங்கர கோபமா இருக்கீங்கன்னு தெரியும் …” என்ற அடுத்த நொடி,





“தெரியுதுல … அப்போ மூடிட்டு போனை வை …” என்று எரிந்து விழுந்தவனை கண்டு முகம் கசங்கியவள்,





“எனக்கு மட்டும் உன்ன விட்டு போகணும்னு ஆசையா குணா … அதையும் மீறி போறேன்னா ஏதாவது ஒரு ஸ்டராங் ரீசன் இருக்கணும்னு ஏன் உனக்கு புரியல …” என்றவளின் கேள்வியில் யோசனையில் மூழ்கியவன் அமைதியாகி அவள் பேசுவதை கேட்க தொடங்கினாள்.





“இதுக்கு எல்லாம் காரணம் உங்க அண்ணன் தயாவும் உங்க கூடவே அழைச்சுக்கிட்டு சுத்துறீங்களே அந்த சங்கீதாவும் தான் …” என்று ஆரம்பித்தவள், தயா தன்னை மிரட்டி வேலையில் இருந்து போக சொன்னதாகவும், சங்கீதா தயாவை நான்கு வருடங்களாக காதலிக்கிறாள் என்று, அண்ணன் காதலியிடம் தான் இவன் சுத்துகிறான் போலவும் பேசியவள்,





“நா தான் உங்கள கெடுக்கிறேனாம் … உங்கள விட்டு விலகி போன நீங்க சரியாகிடுவீங்களாம் … அதுக்குன்னு அவர் காதலிச்ச பொண்ணையே அனுப்பிருக்காரே அவர் எப்படியாப்பட்ட ஆள் … அந்த சங்கீதா உங்கள மயக்கி அவ சொல்றத படி கேட்க வைக்கணும் அதான் அவர் பிளான் … அப்படித்தானே இவ்வளவு நாளும் நீ நடந்துகிட்டு குணா …” என்றவள் கூறியதை ஜீரணிக்கவே சில நிமிடங்கள் பிடித்தது குணாவிற்கு. எதுகும் பேசாமல் அமைதியாக இருந்தவனை கண்டு,





“என்ன குணா இன்னும் என்ன நம்பலையா …” என்றவளுக்கு கண்ணை மூடி தன்னை சமன் செய்துக் கொண்டவன்,





“நம்புறேன் … நீ கொஞ்சநாள் அமைதியா இரு நா தீர விசாரிச்சுட்டு என்ன பண்ணனும்னு சொல்றேன் …” என்று போனை வைத்தவனுக்கு தூக்கம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.





தயாவா இப்படியெல்லாம் செய்தது என்று நினைத்தவனுக்கு ரேவதி கூறியதை சாதாரண விஷயமாக ஒதுக்கி தள்ள முடியவில்லை. சங்கீதாவின் நடவடிக்கையை ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தவனின் முகம் கோபத்தில் சிவந்து போனது. அவள் முன்னாள் கவர்ச்சி நடிகை சாந்தியின் மகள் என்றதை வந்த கொஞ்ச நாளில் தெரிந்துக் கொண்டான். என்ன நடந்தது என்று தெரியாமல் அடுத்த நொடியை கடத்த முடியாது என்றதை உணர்ந்தவன் சற்றும் தாமதிக்காமல் கிரியை அழைத்திருந்தான். நள்ளிரவு நேரத்தில் குணாவிடமிருக்குது அழைப்பு என்றதும் பதறி போனவன் உடனே அழைப்பை ஏற்கவும், எந்தவித முகஸ்துதியும் இல்லாமல் நேரமாக விசயத்திற்கு வந்தவனை கண்டு அதிர்ந்து போனான்.





குணா கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் பூசி மொழுகி பேசியவன் ஒருகட்டத்தில் அவனின் தொடர் நச்சரிப்பாலும் தயாவின் வாழ்க்கை சிறக்கவும் தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் குணாவிடம் ஒப்பித்திருந்தான்.





சங்கீதா தயாவை ஆஃபீஸில் சந்தித்து தன் காதலை கூறியதும், தட்டி கழிப்பதற்காகவும் என்றாலும் தம்பியின் மேல் உள்ள அக்கறையாலும் சங்கீதாவின் மேலிருந்த நம்பிக்கையாலும் குணாவிடம் அவளை அனுப்பியதும், அதன் பின் தயாவின் மனதில் தோன்றிய காதலும், அதை உணர்ந்துக் கொள்ளாத சங்கீதா என்று ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி போனை வைத்திருந்தான் கிரி.





நீண்ட நேர அலசலுக்கு பின் தயா செய்தது தன் மேல் உள்ள பாசத்தால், ஆனால் சங்கீதா செய்தது தனக்கும் தன் அண்ணனுக்கும் பச்சை துரோகம் என்ற முடிவுக்கு வந்திருந்தவன், அவளிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவளை காண காண இவளை எப்பேற்ப்பட்டாவது தன் அண்ணன் வாழ்க்கையில் இருந்து தூக்கி வீச வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதை நடத்தி முடிக்கும் இறுதி கட்டத்தில் நின்றிருந்தான்.





வைஷுவை அதற்கு மேல் யோசிக்க விடாமல் மேடைக்கு அழைக்க தளும்பிய மனநிலையோடு மேடையேறி மனையில் உட்கார்ந்துக் கொண்டாள். அங்கே நடக்க வேண்டிய சடங்குகள் நடந்து முடிக்க அடுத்து மணமகனை மேடைக்கு அழைக்கவும், முகமும் உடையும் குடித்ததால் வேர்வையில் குளித்திருக்க, கண்கள் சிவந்து போய் சற்று நிதானமில்லாமல், நடக்கும் போது தடுமாறியவனை கை தாங்களாக தாங்க வந்த கிரியின் உதவியை புறக்கணித்து தள்ளாடியபடி நடந்தவன் சற்று தொலைவில் உட்கார்ந்திருந்த சங்கீதாவின் அருகில் சென்று அவள் காலடியில் முட்டி போட்டு உட்கார்ந்துக் கொண்டவனை கண்டு அவளின் முதுகு தண்டு சில்லிட்டது.





அவள் மனமோ, ஏதோ விருப்பதாகத ஒன்று நடக்க போவதாக அபாயஒலி எழுப்ப ஒடுங்கி போய் உட்கார்ந்திருந்தாள். அதற்குள் மேடையில் நின்றிருந்த தயா, குணவாவின் செயலை கண்டு அதிர்ந்து போய் கீழே குதித்து அவர்களை நோக்கி நடந்து வரவும், சங்கீதாவின் முகத்தை இருகைகளாலும் பற்றி,






“என்ன மன்னிச்சுடு செல்லமே … என் மேல இருந்த நம்பிக்கையில உன்னையே எந்த கேள்வி கேட்காமல் கொடுத்த உன்ன என் அண்ணனுக்காக அண்ணன் ஆசைக்காக அதோ மேடையில் உட்கார்ந்திருக்க கேனச்சிய கல்யாணம் பண்ணுற நிலைல நிறுத்திய இந்த விதிய நா வெறுக்குறேன் … ஐ ரியலி ஹேட் திஸ் விதி … அடுத்த ஜென்மத்துல காதலோடு சேர்ந்து வாழ்வோம் …” என்று அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்து எழுந்திருக்க, குணா கூறிய வார்த்தைகளை கேட்டு அதே இடத்தில் உறைந்து போய் நின்றுவிட்டான் தயா.
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 16:








திருமணத்திற்கு பிரபல நாதஸ்வர கலைஞர்களை ஏற்பாடு செய்திருந்தார் வேதாச்சலம். தாலி கட்டும் நேரம் நெருங்கியதால் தங்களின் திறமையை அரங்கம் அதிர காட்டிக் கொண்டிருந்ததால் குணா கூறியது சங்கீதாவின் அருகில் உட்கார்ந்திருந்த செழியனுக்கும் மற்றும் ஒரு சிலருக்கு மட்டுமே கேட்டது. கல்யாண மாப்பிள்ளை மேடைக்கு செல்லாமல் உட்கார்ந்திருந்த பெண்ணின் காலடியில் மண்டியிடவும் மொத்த கூட்டத்தின் கண்ணும் அவர்களையே வட்டமிட்டது.





சங்கீதாவின் நெற்றியில் இதழ் ஒற்றியவன் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தன்னை மொய்த்த ஆயிரம் கண்களை அலட்சியம் செய்து நிதான நடையுடன் மேடையேறி வைஷுவின் அருகில் சென்று உட்கார்ந்துக் கொண்டான். அங்கே அவன் சென்றது கூட தெரியாமல் தலையில் இடி விழுந்தது போல அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர் செழியனும் தயாளனும்.





சற்று முன்னர் தன் கண் முன்னே சங்கீதாவின் கன்னம் பற்றி நெற்றியில் இதழ் ஒற்றியவன், எதுவும் நடவாததை போல தன்னருகில் உட்கார்ந்திருப்பதை ஒருவித திகைப்போடு திரும்பி பார்த்தாள் வைஷு. அவள் மனதிலோ மணமகள் அறையில் சங்கீதா கூறியதே வளம் வர, அவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருந்தாள். நீண்ட நேரமாய் தன்னையே பார்ப்பதை உணர்ந்த குணா, சற்றென்று திரும்பி பார்த்து இரு கண்களையும் சிம்மிட்ட, அவன் செய்கையில் உண்மையில் பயந்து போன வைஷு தன் பார்வையை முன்னால் திருப்பிக் கொண்டாள்.





அதற்குள் மேடையில் இருந்து யாரோ தயா என்று அழுத்தி அழைக்கவும் அதிர்ச்சியல் இருந்து தெளிந்தவன் சங்கீதாவை அழுத்தமாக பார்த்தபடி,





“லுக் சங்கீ … குணா சொன்னத சீரியஸா எடுத்துக்குள்ள … பட் ஐ …” என்று சொல்லும் போதே, மீண்டும் மேடையிலிருந்து அழைப்பு வர,





“தேங்க்ஸ் தயா … நீங்க பயப்படுற போல ஒன்னும் நடக்கலை … அண்ட் மோர்ஓவர் … என்னோட பெர்சனல ஷேர் பண்ற அளவுக்கு நமக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல … உங்கள ஒரு குட் ப்ரெண்டா நா மதிக்கிறேன் ப்ளீஸ் மேடைல கூப்பிடுறாங்க இங்க நின்னுகிட்டு எல்லாரோட கவனத்தையும் என்பக்கம் திருப்பாதீங்க, ஏற்கனவே உங்க தம்பி வேற பத்த வச்சுட்டு போய்ருக்கார் உங்க பங்குக்கு நீங்களும் என்ன அசிங்கப்படுத்தாதிங்க ப்ளீஸ் …” என்று கை கூப்பி கெஞ்சியவளை அடிபட்ட பார்வை பார்த்தவனின் கழுத்து நரம்பு கோபத்தை அடக்குவதால் புடைத்துக் கொண்டு துடித்தது.





“உன்னோட பர்சனல் ஸ்பேஸ் குள்ள நா வரல பட் குணாவோட அறிமுகம் கிடைச்சது என்னால தான் … சோ உனக்கு என்ன நடந்தாலும் நா தான் பொறுப்பு … அத மட்டும் மைண்ட்ல வச்சுக்கோ …” என்று அழுத்தி கூறியவன் வேக நடையுடன் மேடையேறினான்.





தயா மேடை ஏறியதும் தான் அதுவரை அழுத்தி பிடித்திருந்த செழியனின் கையை விட்டாள் சங்கீதா. தயா பேச ஆரம்பிக்கும் முன்பே சிலிர்த்துக் கொண்டு குணாவை நோக்கி செல்ல முயன்றவனை எழ விடாமல் தடுத்து பிடித்தவள் பார்வையால் அமைதியாக இருக்கும் படி அவனிடம் கெஞ்சினாள். தயா சென்றதும்,





“வலிக்குதுடி … ரொம்ப அசிங்கமா பீல் பண்றேன் … என்ன ஜோக்கரா நிக்க வச்சுட்டல … கூட இருந்தே உன்ன அவன்கிட்ட இருந்து சேப் பண்ண முடில … நா என்ன ஆம்புள …” என்று குரல் கமற பேசியவனின் கண்கள் கலங்கியது.





“ம்ப்ச் … அவன் ஒரு ஆளுன்னு அவன் சொன்னத பெருசா எடுத்துக்கிட்டு பீல் பண்றியே … என்ன நம்ப மாட்டியா …” என்ற தமக்கையை அனல் தெறிக்க பார்த்தவன்,






“ஒன்னும் தெரியாத போல பேசின செருப்பு பிஞ்சிடும் … என்ன என்ன அந்த தயா போல கேனையன் நினைச்சுட்டியா … எனக்கு உன்ன பத்தியும் தெரியும் அந்த பொறுக்கி பத்தியும் தெரியும் … சும்மா நடிக்காத …” என்று கோபத்தில் சீரியவனை கலங்கியே விழிகளோடு பார்த்தவள்,





“அப்போ நீ என்ன நம்பல … யாரோ ஒருத்தன் உன் அக்காவ பத்தி தப்பா சொன்னா நீ நம்பிடுவியா … அவ்வளவு தான் உன் நம்பிக்கையா …” என்று பதில் கேள்வி கேட்டவளை அழுத்தமாக பார்த்தவன்,





“அப்போ அவன் சொன்னது உண்மை இல்லனு, என் தலைல அடிச்சு சத்தியம் பண்ணு …” என்று அழுத்தமாய் பார்த்தவனின் விழிகளை சந்திக்காமல் மேடையை வெறித்தவள், பின் தொண்டையை செறுமியபடி,





“ஒரு ப்ரோமிஸ்ல தான் என்னோட ஒழுக்கம் இருக்குன்னு நீ நினைக்கிறியா …” என்று கேட்கும் போதே அவள் குரல் கலங்கி ஒலித்தது. சில நொடிகள் தமைக்கையை அழுத்தமாக பார்த்தவன் சடாரென்று அங்கிருந்து எழ,





“ப்ளீஸ் சீன் கிரியேட் பண்ணாம உட்கார் செழி … நா எல்லார் முன்னும் அசிங்கப்படணும்னு குணா நினைக்கிறான் … இப்போ வரைக்கும் அவன் நினைச்ச படிதான் எல்லாம் நடந்துகிட்டு இருக்கு … எல்லாரும் என்ன தான் குறுகுறுன்னு பாக்குறாங்க … ப்ளீஸ் அவன் முன்னாடி என்ன அசிங்கப்படுத்தி தோக்க விடாதா …” என்று கெஞ்சியவளை கண்டு மீண்டும் உட்கார்ந்துக் கொண்டான். சில நொடிகள் அமைதிகாத்தவன்,





“இத மட்டும் சொல்லு அவன் கல்யாணம் நடக்கணுமா வேணாமா …” என்ற தம்பியை திரும்பி பார்த்து புன்னகைத்தவள்,





“என்ன அரசமரத்து பண்ணையார் நினைப்போ … என்ன கெடுத்துட்டான் சொன்னவன் கூடுவே சேர்த்து வைக்கிற பிளானா … அவ்வளவு சீன்லாம் இங்க இல்ல அவனே கல்யாணத்த நிறுத்துவான் பாரு …” என்ற தமைக்கையை புரியாமல் பார்த்தான் செழியன்.





இங்கே செழியன் கேட்டததை தான் குணாவிடமும் கேட்டுக் கொண்டிருந்தான் தயாளன். அவன் அருகில் குனிந்து கழுத்தில் இருந்த மாலையை சரி பண்ணுவது போல, குறுக்கு விசாரணை பண்ணிக் கொண்டிருந்தவன் வலையில் சிக்காமல் நழுவிக் கொண்டிருந்தான் குணா.





“இப்போ என்ன தாண்டா சொல்ல வர … உனக்கு அந்த பொண்ண ஏமாத்துன பீலிங் இல்லையா …” யாருக்கும் கேட்காத வண்ணம் கோபத்தில் சீறினான் தயாளன்.





பின்னே சற்று முன்னர் அந்த சங்கீதாவின் தலையில் முத்தமிட்டு அண்ணனால் பிடிக்காத கல்யாண பந்தத்தில் இணைவது போலவும் அடுத்த ஜென்மத்தில் காதலோடு வாழ்வோம் என்று வசனம் பேசியவன், தயாவிடம் வைஷுவை திருமணம் செய்வதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினான். தயாவின் கேள்விக்கு எக்கி அவன் காதருகில் வாயை கொண்டு சென்றவன்,





“இல்ல … கீழ பேசுனத கேட்டு கன்ப்யூஸ் ஆகிட்டியா … அது சும்மா நடிப்பு … இல்லனா அந்த பொண்ணு நா ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டேன்னு பிரச்சன பண்ணிடுச்சுனா …அதான் லுலுலாய்க்கு ஒரு பிட்ட போட்டுட்டு வந்தேன் …” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு தலையை ஆட்டியவனை கண்டு பல்லை கடித்தான் தயா.





உண்மையில் தயாவிற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியாத நிலை. குணாவின் பேச்சு விளையாட்டு தனமாக இருந்தாலும் லேசில் ஒதுக்கி தள்ளவும் அவனுக்கு மனமில்லை. அதேபோல் சங்கீதாவின் மேலும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்தான். இவ்வளவு பேர் கூடிய இடத்தில் அடுத்து என்ன என்று காட்டில் கண்ணை கட்டிவிட்ட நிலையில் தான் இருந்தான்.





“தயா பேசுனது போதும் … தள்ளி நில்லு சின்னவன சாங்கியம் பண்ண விடு …” என்று பெரியம்மா முறை உள்ளவர் அதட்டவும், மெல்ல எழுந்து நின்று நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவனின் சிந்தனைகள் எங்கெங்கோ சென்று வர சம்பந்தமே இல்லாமல் வைஷுவின் முகம் அவன் மனக்கண்ணில் வந்து போக, சற்றென்று திரும்பி பார்த்தான்.





முகத்தில் பல விதமான சிந்தனை ரேகைகள் ஓட ஒருவித இறுக்கத்துடன் அமைதியாக உட்கார்ந்திருந்தவள் மனதில் என்ன ஓடுகின்றது என்று அறிந்துக் கொள்ள முடியாமல் அதுக்கும் தவித்து போனான். இதுவா அதுவா என்று மூளைக்குள் போட்டு குழப்பிக் கொண்டிருக்க,





“மாங்கல்யத்த எல்லார் கிட்டையும் காட்டி ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்கோ …” என்ற அய்யரின் குரலில், சற்றென்று சிந்தனைகளில் இருந்து கலைந்து ஒரு முடிவு எடுத்திருந்தான்.





முதலில் குணா வைஷு திருமணம் நடைபெறட்டும், என்ன நடந்திருந்தாலும் சங்கீதா என் பொறுப்பு என்ற முடிவுக்கு வந்த பின்தான் அவனால் நிம்மதியாக அங்கே நிற்க முடிந்தது. அனைவரின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டு குணாவின் கைக்கு வந்து சேர்ந்தது மஞ்சள் பூசிய கயிற்றில் பொன் தாலி கோர்க்கப்பட்ட தாலிக் கயிறு.





சிரித்த முகத்துடன் தாலி கயிறை கைகளில் ஏந்திக் கொண்டவன் வைஷுவின் கழுத்தை நோக்கி கையை கொண்டு செல்ல, தாலி ஏந்திய கையை கழுத்தில் கட்டவிடாமல் தடுத்து பிடித்தாள் வைஷு.





தாலி கட்ட விடாமல் கடைசி நொடியில் தடுத்த மணமகளை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர். சொந்தங்களின் முன் மகள் செய்த செயலை கண்டு பதறிய வேதாச்சலம்,





“வைஷுஊ … என்ன பண்ற …” என்று அதட்ட, எதையும் கண்டுக் கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. தன்னை பார்த்து கேள்வியாய் ஒற்றை புருவத்தை ஏற்றிய குணாவை கண்டு இதழ் பிரியாமல் சிரித்தவள்,





“கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லைனா எதுக்கு மேடை வரைக்கும் வந்து அசிங்கப்படுத்தனும் …” என்றவளை கண்டு வெண்பற்கள் தெரிய சிரித்தவன்,





“கல்யாணத்துல இண்ட்ரெஸ்ட் இல்லைனு தெரிஞ்ச பிறகும் என்னதான் கட்டணும்னு நீ ஏன் ஆசைப்படணும் … ஊர்ல என்ன விட்டா ஆம்பளைங்க இல்லையா … இல்ல …” என்று எதையோ கூற வந்தவனை பேச விடாமல் கை நீட்டி தடுத்தவள், அய்யரிடம்,





“சாமி மனைல இருந்து எழுந்திருக்கலாமா …” என்கவும்,





“இல்ல கொழந்த … தாலி கட்டாம எழுந்திருக்க கூடாது … அது நல்ல சகுனம் இல்ல …” என்றவரின் பதிலில் மெல்ல தலையசைத்துக் கொண்டாள். அங்கே குணாவின் அருகில் முகத்தில் பதட்டத்தை சிறிதும் காட்டிக் கொள்ளாமல் தன்னையே அமைதியாக பார்த்திருந்த தயாவை கண்டவள், பின் தொண்டையை செருமி,





“மாமா … எனக்கு ஒரு ஹெல் …” என்றவளை மேலே பேசவிடமால்,





“இப்போ என்ன நா உன் கழுத்துல தாலி கட்டணும் … அதானே …” என்று அவசரமாக இடைமறித்தவனிடம், கண்ணீர் நிறைந்த கருவிழிகள் ரெண்டும் முத்துக்களாய் ஜொலிக்க புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைத்து தன் விருப்பத்தை தெரிவித்தாள் வைஷு. அடுத்த நொடி மனையில் உட்கார்ந்திருந்த குணாவை குனிந்து பார்த்தவன்,





“எழுந்துரு …” என்று உத்தரவிட,





“ஆர் யூ ஸ்சுயர் ப்ரோ …” என்றவாறே மாலையை கழுட்டி மனையில் இருந்து எழுந்து நின்றான் குணா. தயா வைஷுவின் அருகில் உட்கார்ந்ததும், அதுவரை சோர்ந்து போய் வளைய வந்த வேதாச்சலத்திற்கு தனி தெம்பு வந்ததை போல துள்ளி குதித்து அவன் அருகில் வந்தவர் இருகைகளையும் பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டு,





“மாப்ள …” என்றவருக்கு உணர்ச்சியின் பிடியில் அடுத்த வார்த்தை பேச முடியாமல் வார்த்தைகள் சிக்கிக் கொண்டன.





“சந்தோஷமா மாமா …” என்ற மருமகனின் கேள்விக்கு சந்தோஷத்துடன் தலையசைத்தார் வேதாச்சலம். கண்கள் பணிக்க நின்றிருந்த தன் அன்னையை நோக்கி மென் புன்னகையை சிந்தியவன், வைஷுவின் அருகில் சாய்ந்து,





“வைஷு … நா இன்னும் அதே போர் தயா மாமா தான் … உனக்கு பிரச்சனையில்லையே …” என்று விளையாட்டாய் கிசுகிசுத்தவனை நோக்கி, “சாரி மாமா …” என்று சிறு விசும்பலுடன் திரும்பியவள் அவன் கைகளை பற்றிக் கொள்ள,





“ச்ச லூசு சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் … இனி நோ மோர் அழுகை ட வைஷு … ஐ அம் ரியலி ப்ரவுட் ஆப் யூ … எல்லார் முன்னும் காட்சி பொருளா நின்னும் அய்யோன்னு மூலைல முடங்கி உட்காராம … போல்ட்டா டெசிஷன் எடுத்த பாரு …” என்று அவள் கையை அழுத்தி பிடித்து விட்டவன்,





“சாமி மந்திரித்த சொல்லுங்க நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலிய கட்டிடுறேன் … இல்ல வேற ஏதாவது சீன் வந்துட போகுது …” என்று கிண்டல் செய்தவனின் கைகளில், மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கு கோர்க்கப்பட்ட தாலி கயிறு தரப்பட, சொந்தங்களின் ஆசியுடன் கூடியிருந்த உற்றாரின் சலசலப்புடன் மேளதாள ஒலியுடன் வைஷுவின் கழுத்தில் தாலியை கட்டி தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான் தயாளன்.





அனைத்து சடங்குகளும் முடிந்தபின் சந்தோசத்துடன் தன்னை அணைத்துக் கொண்ட குணாவை ஒதுக்கி தள்ளியவன்,





“நீ இவ்வளவையும் பண்ணது நா வைஷு கழுத்துல தாலி கட்டுறதுக்காகத்தானு தெரியாத அளவுக்கு நா ஒன்னும் முட்டாள் இல்லடா … உன்னோட பிளானுக்காக ரெண்டு பொண்ணுக லைப்ல விளையாடிட்ட … வைஷுவ விடு … பட் வாட் அபௌட் சங்கீதா … அவளுக்கு நீ என்ன பதில் சொல்ல போற …” என்ற தமையனை அலட்சியமாக பார்த்தவன்,





“சும்மா கத்தாதே, நா தான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் எத்தன தடவ சொல்லிருப்பேன், நீ காதுலையே வாங்கல … எனக்கு புடிச்ச நேரத்துல புடிச்ச பொண்ணுங்க கூட எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம ஜாலியா என்ஜோய் பண்ணனும் … என்னாலளாம் ஒருத்தி கூட லைப் லாங் காலம் தள்ள முடியாது … புரிஞ்சுக்கோ …” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவனை முகம் சிவக்க பார்த்தவன்,





“நா கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் கூறல … உன்ன நம்பி வந்த பொண்ண என்ன பண்ண …” என்று மீண்டும் சங்கீதாவை பற்றி கேட்கவும், பொறுமையிழந்த குணா,





“லுக் தயா நீ ரொம்ப ஓவரா போற … என்ன நடந்ததுன்னு உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல அது எங்க பர்சனல் …” என்ற பதிலில் கோபம் கொண்டவன்,





“அப்போ என்ன டாஷ்க்கு எங்க முன்னாடி அவகிட்ட தப்பு நடந்தது போல பேசின …” என்று கோபத்தில் சீரியவனை கண்டு இடுப்பில் கையை வைத்துக் கொண்டவன்,





“ஏண்டா என்ன தாண்டா பிரச்சனை உனக்கு … இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு புது பொண்டாட்டி கூட பேசிகிட்டு இருக்காம ஏன் என்ன நொய் நொய்ன்னு டார்ச்சர் பண்ற …” என்று சலித்துக் கொண்டவன்,





“இந்தா உண்மைதானே வேணும் கேட்டுக்கோ … நா அவகிட்ட அப்படி பேசினதால தானே வைஷுவை நீ கல்யாணம் பண்ணிகிட்ட … கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும் …” என்று அலட்சியமா பதில் அளித்தவனின் கன்னத்தில் ஒங்கி அறைந்திருந்தான் தயா.





கோபத்தில் குத்தி கிழிக்க துள்ளிக் குதித்திருந்த வாயை பல்லை கடித்து கட்டுப்படுத்தியவனை, பார்வையால் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு சென்றான் தயா. அன்றிலிருந்து அண்ணனிடமிருந்தும் ஒதுங்கிக் கொண்டான் குணா.





ஒருவாரமாக திரும்பிய பக்கமெல்லாம் இவன் திருமணம் நின்று போன விஷயம் தான் மீடியாவில் அதிகம் பேசப்பட்டது. சிலர் இவனின் அந்தரங்க விஷயங்களை எல்லாம் நொண்டியெடுத்து விவாதமும் செய்தனர். எதற்கும் வாயை திறந்து பதில் கூறாதவன் பிரச்சனைகளை பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.


சோசியல் மீடியாவின் பரபரப்பினால் பெரிய திரையில் நடன இயக்குனராகும் வாய்ப்பு குணாவிற்கு கிடைத்தது. வந்த வாய்ப்பை தட்டிக் கழிக்காமல் உடனே ஒத்துக் கொண்டவன் ரேவதியை மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். குணாவும் சங்கீதாவும் கடைசியாக பார்த்துக் கொண்டது தயாவின் கல்யாணத்தில் தான்.





சில சமயம் இரவு நேரங்களில் அவன் பண்ணிய காரியத்திற்கு அவள் எதிர்வினை ஆற்றாதது நினைத்து குழம்பி போனான். தயா கல்யாணம் முடிந்த பிறகாவது தன்னிடம் சண்டையிடுவாள் நியாயம் கேட்பாள் என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.





நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய பாதையில் மட்டுமே கவனம் செலுத்தியவனின் காதில் விழுந்த சங்கீதாவின் திருமண செய்தி கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.





முன்னேற்றம் ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு வெறிக் கொண்டு ஓடியவன் அடுத்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமா உலகின் முன்னனி கதாநாயகர்களின் ஒருவனாக திகழ்ந்தான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 17:





குளிரூட்டப்பட்ட அறையில் லட்சங்களை விழுங்கிய சொகுசு மெத்தையின் குறுக்காக படுத்து தூங்கிக் கொண்டிருந்தவனை, தூங்க விடாமல் கலைத்து கொண்டிருந்தது அவனின் கைபேசி. தூங்கிக் கொண்டே பெட்டில் கையை துழாவி போனை தேடி எடுத்து, அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ …” என்ற நொடி அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.





அது கூட தெரியாமல் காதில் போனை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான். நேற்று படுக்கையில் வந்து விழும் போதே நள்ளிரவை தாண்டியிருக்க அப்படியொரு தூக்கம். மீண்டும் மொபைல் ஒலிக்கவும் கஷ்டப்பட்டு அழைப்பை ஏற்று காதில் வைக்க,





“எங்க இருக்க …” என்ற தயாவின் குரலை கேட்டதும் பயங்கர கோபம் கொண்டான்.





“இத கேட்க தான் தூங்கிட்டு இருக்க என்ன எழுப்பி விட்டியா … தூங்க வந்ததே லேட் … நா அப்புறமா பேசுறேன் …” என்று அழைப்பை துண்டிக்க போனவனிடம்,





“நேத்து நைட் டிஸ்கோ பாஸ்கர் கிட்ட சண்ட போட்டியா …” என்று நேராக விசயத்திற்கு வந்திருந்தான். அதில் தூக்கம் கலைந்தவன் கண்ணை திறந்து பார்க்க, சரியான தூக்கம் இல்லாததால் விழிகள் ரத்த சிவப்பை கக்கிக் கொண்டிருந்தன.





“என்னாச்சு …” தன் கேள்விக்கு பதில் கூறாமல் எதிர்கேள்வி கேட்டவனை கண்டு சலிப்பாக தலையசைத்து கொண்ட தயா,





“ம்ம் … இன்னும் என்ன ஆகனும் … எவ்வளவு பெரிய இஸ்ஸுஸ் போய்கிட்டு இருக்கு … இந்த நேரத்துல அவன்கிட்ட என்ன சண்ட வேண்டிக்கிடக்கு … பிரச்சனை எல்லாம் அடங்குற வரைக்கும் அமைதியா இருந்துருக்கலாம்ல … போ போய் பேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் எல்லாம் பாரு, நாறடிச்சுட்டு இருக்காங்க … இதெல்லாம் தேவையாடா உனக்கு …” என்று கோபத்தில் கத்திக் கொண்டிருக்கும் போதே, தன்னிடமிருந்த மற்றொரு மொபைலில் ட்விட்டருக்குள் நுழைந்தவன் அதிர்ந்து போனான்.






டிஸ்கோ பாஸ்கர் குணாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘டிஸ்கோ’ என்ற பெயரில் நடனத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி பெரும் வெற்றியும் கண்டவர். இந்த படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதை குணாவும், இயக்குனருக்கான விருதை டிஸ்கோ பாஸ்கரும் பெற்றனர். அன்றிலிருந்து குணாவின் வாழக்கை பாதையே மாறி போனது என்றே சொல்லலாம், அந்தளவிற்கு அடுத்தடுத்து படங்கள் வந்து குவிய டிஸ்கோ பாஸ்கரின் வழிகாட்டலில் முன்னனி நடிகர்களில் ஒருவனாக திகழ்ந்தான்.





எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ஏற்றிவிட்ட ஏணியை மறக்காமல் அவருடன் நல்லுறவை தொடர்ந்தான். டிஸ்கோ பாஸ்கரை அண்ணன் என்றும் அவர் மனைவி ரிங்கியை அண்ணி என்றும் முறைவைத்தே அழைத்தான். தன் சொந்த அண்ணை விட இவர்களிடம் தான் அதிக நெருக்கத்தை காட்டியவனிடம், இவர்களும் தங்களுள் ஒருவனாக தான் நினைத்தனர்.





ஆறு வருடங்களுக்கு மேலாக நன்றாக சென்றுக் கொண்டிருந்த உறவில், டிஸ்கோ பாஸ்கர் ரிங்கியின் சொந்த பிரச்சனையால் விரிசல் ஏற்பட்டது. தன் படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிய பெண்ணுடன் பாஸ்கருக்கு நெருக்கம் ஏற்பட, மெல்ல மெல்ல தன் மனைவியை விட்டு பிரிய தொடங்கியவர் விவாகரத்து கேட்டு கோர்டை நாடினார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட குணா மனம் பொறுக்காமல் பாஸ்கரிடம் சண்டை போட, அன்றிலிருந்து குணாவை தவிர்த்தார் பாஸ்கர்.





குணா ரிங்கியின் பக்கம் நிற்க, அவன் மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்டார் டிஸ்கோ பாஸ்கர். அழகான மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருந்தவரை தமிழ்நாடே காறித்துப்பியது. மக்களின் பார்வையில் தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளவதற்காக, குணாவையும் ரிங்கியும் சம்பந்தம் படுத்தி மறைமுக செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.





அவர் நினைத்தது போலவே ஒரு பக்கமாக பேசிக் கொண்டிருந்த மக்கள் இருக்குமோ என்ற ரீதியில் சந்தேகம் கொள்ள, மேலும் தன்னை உத்தமனாக காட்டிக் கொள்வதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தார். அந்த வாய்ப்பை தான் நேற்று குணா அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தான்.





சில நாட்களாய் மனஉளைச்சலில் இருந்தவன் தண்ணி அடிப்பதற்காக பப்பிற்கு நேற்றிரவு சென்றான். இவன் அங்கே வந்திருப்பதை கேள்விப்பட்டு தன் நண்பர்களுடன் அங்கே சென்றார் டிஸ்கோ பாஸ்கர். முதலில் அவரை கண்டதும் பேச வேண்டாம் என்று நினைத்த குணா, உள்ளே போன சரக்கு கொடுத்த உந்துதலில் அவரை தேடி சென்றான்.





“அதான் புடிக்கலைனு ஒதுங்கிட்டிங்களே அப்புறம் எதுக்கு தேவையில்லாத அசிங்கத்த பண்ணிக்கிட்டு இருக்கீங்க … அண்ணியும் என்னையும் இணைச்சு பப்ளிக்கா பேசியிருக்கீங்க வெட்கமா இல்ல …” அவன் தன்மையாக பேச நினைத்தாலும் உள்ளே போன போதை சிலிர்த்துக் கொண்டு பேச வைத்தது.





குணாவின் சத்தத்தை கேட்டு அங்கிருந்த ஒரு சிலர் இவர்களை திரும்பி பார்த்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பாஸ்கர்,





“நா ஏன்டா அசிங்க படணும் … தப்பு செஞ்ச நீங்க தான் அசிங்கப்படணும் … என் முதுகுக்கு பின்னாடி கள்ள காதல் பண்ணிக்கிட்டு இருந்த நீங்களே நிம்மதியா சுத்தும் போது நா ஏன் அசிங்கப்படணும் …” என்ற அடுத்த நொடி அவன் மேல் பாய்ந்திருந்தான் குணா.





அவனை தெரிந்த சிலர் தடுத்து பிடித்து இழுத்து பிரச்சனை வேண்டாம் என்று அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.





ஆனால் சோசியல் மீடியா முழுவதும், “நடிகர் குணா குடித்துவிட்டு டைரக்டர் டிஸ்கோ பாஸ்கரின் மேல் கொலைவெறி தாக்குதல் …” என்ற தலைப்பில் நேற்று நடந்ததை திரித்து பாஸ்கருக்கு சாதகமாக செய்தியை பதிவிட்டிருந்தனர். கூடவே, ரிங்கியுடன் குணா நெருக்கமாக நடனம் ஆடும் பழைய வீடியோவும், இருவரும் உரிமையுடன் பேசிக் கொள்ளும் ஆடியோ பதிவும் வலம் வந்தன. அனைத்தையும் பார்த்தவன்,





“என்னடா இது … நேத்து அந்த ஆள்கிட்ட ஏன் அசிங்கமா செய்தி பரப்புறீங்கன்னு தாண்டா கேட்டேன் … என்னென்ன பண்ணி வச்சுருக்கான் பாரு …” என்று கோபப்பட்டவன்,





“அண்ணி கூட டான்ஸ் ஆடுனத அந்த நாய் தான் வீடியோ எடுத்தான் … எப்படி யூஸ் பண்ணிக்கிறான் பாரு … அந்த போன் கால் கூட … வெளிநாட்டு ஷூட்டிங் போனப்போ … இவன் போன்ல இருந்துதான் அண்ணிகிட்ட பேசுனேன் … இவனும் பக்கத்துல இருந்தான், கூட சேர்ந்து சிரிச்சு கிண்டல் பண்ணி பேசிட்டு இப்போ எப்படி தப்பா காட்டிருக்கான் பாரு …இவன …” என்று பல்லை கடித்தவனின் கண்கள் கோபத்தில் கலங்கி போனது.





“டேய் தம்பி இத விட பெரிய மேட்டர் போய்கிட்டு இருக்கு முதல்ல அத பாருடா …” என்ற தயாவின் நக்கலில் மீண்டும் மொபைலில் மூழ்கியவனின் முகம் கோபத்தில் சிவந்து போக கண்களோ தீப்பிழம்பாய் கொதித்தது.





ரேவதி மற்றும் சில பெண்கள் குணாவின் மேல் செக்ஸ்வல் ஹராஸ்மெண்ட் குற்றம் சாற்றி மீடூவில் பதிவிட்டிருந்தனர். தூங்கி எழுந்து கண் விழிப்பதற்குள் இவ்வளவு வருசமாக அவன் கட்டிக்காத்து வந்து பெயரும் புகழும் அடியோடு நொறுக்கப்பட்டிருந்தன.





மக்கள் அவனை திட்டி காறிமுகிழ்ந்து தாறுமாறாய் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். அவன் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்ட சிலர், ‘தங்கள் தலைவன் பொய்த்து போனது கண்டு மனவேதனை அடைந்ததாக’ பதிவிட்டிருக்க மொத்தமாக நொறுங்கி போனான்.





“அந்த ரேவதி தே…. முண்ட எவ்வளவு தைரியம் இருந்தா மீடூ போட்டுருப்பா … என்ன கெடுத்ததே அவதான் …” என்று காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டியவன்,





“என் மேல கம்ப்லைன் சொன்ன யோக்கியசிங்கலாம் விருப்பப்பட்டு படுக்க வந்தவள்ங்க … என்னமோ நா வற்புறுத்தி ரேப் பண்ணது போல பேசியிருக்காங்க …” என்று கோபத்தில் கொதித்தான்.






“ஆமா இவங்கல்லாம் விருப்பப்பட்டு வந்தவங்க தான் … பட் விருப்பமே இல்லாத பொண்ண தொட்டதால வந்த பாவம் டா இது … எத்தன வருஷம் ஆனாலும் உன்ன தண்டிக்காம விடாது …” என்று நக்கலடித்தவனிடம்,





“தயா …” என்று பல்லை கடித்தவன்,





“இந்த பேச்ச விடவே மாட்டியா … எத்தன தடவ சொல்றது அவள நா போர்ஸ் பண்ணல பண்ணல பண்ணல … பெரிய ஹீரோவா ஆனாலும் இதுவரைக்கும் என் வாழ்க்கையிலையே விருப்பமில்லாத பொண்ணுங்கள தொட்டதே இல்லடா … நீயே புரிஞ்சுக்கலைனா மத்தவங்க எப்படி டா புரிஞ்சுப்பாங்க …” என்று ஆத்திரத்தில் குரல் அடைக்க கத்தியவனை கண்டு சிறிதும் கண்டுக் கொள்ளாதவன்,





“இப்ப கத்தி என்ன ப்ரோஜனம் … உன் வரலாறு அப்படி … டான்ஸர் குணா கூட ஒரு பொண்ணு பேசுனாளே அவளை பத்தி தப்பா பேசுற போலத்தானே நடந்துகிட்டு … இப்போ பீல் பண்ணி ஒன்னும் ஆக போறதில்ல … கொஞ்சநாள் எதுவும் பேசாம அமைதியா இரு …” என்று அறிவுரை கூற, பதில் கூறாமல் அமைதி காத்தான் குணா.





“டேய் … சொன்னது காதுல விழுந்ததா இல்லையா …” என்று எதிர்புறம் கத்திக் கொண்டிருந்தான் தயா.





“உன் பொண்ணு கூடவும்தான் பேசி பழகுறேன் … அதையும் தப்பாத்தான் பேசுவியா …” என்று நிதானமாக கேட்டவனுக்கு சற்றும் யோசிக்காமல்,





“நா தப்பா நினைக்க மாட்டேன் பட் மத்தவங்க நினைக்க வாய்ப்பிருக்கு …” என்ற பதிலில் அழைப்பை துண்டித்திருந்தான் குணா. அழைப்பு துண்டிக்கபடவும் தான் தான் கூறியது நினைவிற்கு வர தலையில் அடித்துக் கொண்டவன்,





“இப்போ எதுக்கு கோப படுறான் உண்மையதானே சொன்னேன் …” என்று புலம்பியவனை முறைத்து பார்த்தாள் வைஷு.





“என்ன மாமா நீங்க … பாவம் குணா மாமா ஏற்கனவே கஷ்டத்துல இருக்கார், இதுல நீங்களும் உங்க பங்குக்கு பேசி நோகடிக்கிறீங்க …” என்றவள் மேடிட்ட வயிற்றை கைகளால் தாங்கிக் கொண்டு மெல்ல நடக்க, அவள் தோளை சுற்றி கைகளால் அணைத்துக் கொண்டவன்,





“ஏய் பாத்து … இப்பவோ எப்பவோன்னு இருக்கு, பேசாம ஒரு இடத்துல உட்கார மாட்டியா …” என்று மனைவியை கடிந்தபடி அருகிலிருந்த சோபாவில் உட்காரவைத்தவன்,





“பாவமாதான் இருக்கு … வீணா பழிய சுமந்துக்கிட்டு இருக்கான் … ஒழுக்கமா இருந்திருந்தா இந்த அவமானம் தேவையா … அதுவும் அப்பா பொண்ணுங்க விசயத்தாலதான் இறந்து போனார் … அத பாத்து வளந்தவன், அவனே அந்த படுகுழில விழலாமா …” என்ற கணவனின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து அவன் தோளில் தலைசாய்த்தாள்.





“ஏதோ கொஞ்சூண்டு புண்ணியம் பண்ணிருக்கேன் போல … அதான் கடைசி நிமிசத்துல கடவுள் என் மைண்ட செஞ்ச் பண்ணிட்டார் …” என்று புன்னகைத்தவளின் இதழில் தன்னிதழை ஒற்றியெடுத்தவன்,





“என்னது கொஞ்சூண்டு புண்ணியமா …” என்று இழுத்து நிறுத்தியவனை கண்டு புன்முறுவல் பூத்தவள்,





“ஆமா கொஞ்சூண்டு தான் …” என்று தன் இரண்டு விரல்களை குவித்து காட்டியவள்,





“நிறைய புண்ணியம் பண்ணியிருந்தா கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கழிச்சு வயித்த தள்ளிக்கிட்டு நிப்பேனா …” என்று உதடு சுழுத்தவளை கண்டு சத்தம் போட்டு சிரித்தவன்,





“அடய் … உனக்கே இது ஓவரா தெரில … பப்புமாவ பெத்தது மட்டும் தான் நீ … கைல வாங்கினதுல இருந்து இப்ப வரைக்கும் நான்தான் எல்லாமே பாத்துட்டு வரேன் … ரொம்பத்தான் அலுத்துக்குற … வயித்துல இருக்க செல்லத்த மட்டும் நீ வளக்கவா போற … எப்பவும் போல பெத்து என் கைல கொடு … நா பாத்துக்கிறேன் … உன்ன என்ன அடுத்து அடுத்து குழந்தை பெத்துக்க சொல்லியா டார்ச்சர் பண்ணேன், பாரு பப்புக்கும் செல்லத்துக்கும் குறைஞ்சது எட்டு வருஷம் கேப் கொடுத்துருக்கேன் …” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனின் பெண்ணரசி தூக்கம் கலைந்து எழுந்து வந்தாள்.





தயா வைஷு இருவருக்கும் திருமணம் வேண்டுமென்றால் அவசரத்தில் நடந்திருக்கலாம், ஆனால் இருவரும் தங்கள் வாழ்க்கையை ஒருவரை ஒருவர் புரிந்த பின் தான் தொடங்கினர். அதுவும் சங்கீதாவை நினைத்து குற்றவுணர்வில் தவித்தவனை அதிலிருந்து மீண்டு கொண்டு வந்தது வைஷுவின் புரிதலான அன்பு. இருவருக்கும் எட்டு வயதில் வர்ஷா என்ற மகள் உண்டு. மீண்டும் கருவுற்றிருந்த வைஷு எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தையை பெத்தெடுக்கும் நிலையில் இருந்தாள்.





“பப்பும்மா ப்ரஷ் பண்ணி குளிச்சுட்டு சித்தாவ பாக்க போவமா …” என்ற தந்தையை முகம் மின்ன பார்த்தவள் பின்,





“ஸ்கூலுக்கு போகணுமேப்பா …” சுரத்தையே இல்லாமல் பதிலளித்த மகளை கைகளில் தூக்கிக் கொண்டவன்,





“இன்னைக்கு ஒருநாள் லீவ் விட்டுக்கலாம் … சித்தா பப்பும்மா பாக்காம ஒரே பீலிங்கா இருக்காங்களாம் … போய்ட்டு வந்துடுவோம் …” என்றபடி குளிக்க வைப்பதற்காக பாத்ரூம்குள் நுழைந்தான்.





அங்கே குணாவோ வாழ்க்கையே வெறுத்தவனாக சோபாவில் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தான். தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த கைபேசியை கூட கவனிக்க மறந்தவனாக தன் கவலைகளில் மூழ்கியிருந்தான்.





இரண்டு நாட்கள் கடந்துவிட்டன அவன் பிரச்சனை வெடித்து, ஆனால் இன்னும் விடாமல் ஹாட் டாபிக்காக யூட்யூபில் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். தினம் தினம் புது புது குற்றசாட்டுகள் கிளம்பி அவன் ஒழுக்கத்தை பற்றி அலசி ஆராய்ந்து சந்தி சிரிக்க வைத்துக் அனைவர் பார்வையிலும் கேடுகெட்டவனாக பதிந்து போனான்.





ரெண்டு நாட்களுக்கு முன் தன்னிடம் பேசிய தயா அடுத்த இரண்டு மணி நேரத்தில் மீண்டும் அழைத்து வைஷுவிற்கு பிரசவ வலி வந்துவிட்டதாக கூறியவன் அதன் பின் அவனை அழைக்கவும் இல்லை, இவனும் என்ன குழந்தை பிறந்தது என்று கேட்டுக் கொள்ளவுமில்லை.





வீட்டில் வேலை செய்பவர்களையும் லீவில் அனுப்பிவிட்டு, போனையும் அனைத்துவிட்டான். இரண்டு நாட்களாக, இவன் என்ன சாப்பிட்டான் என்ன செய்கிறான் என்று கேட்க கூட நாதி இல்லாமல் தனிமையில் முடங்கிப் போனான். யாராவது தன்னை அணைத்து ஒன்றுமில்லையடா என்ற ஒத்தை வார்த்தையை கூற மாட்டார்களா என்று மனம் ஏங்குமளவிற்கு தனிமை அவனை பயமுறுத்தியது. தன் அண்ணன் கூட தன்னை அழைத்து பேசவில்லையே என்ற கழிவிரக்கத்தில் கண்கள் கூட கலங்கிப் போனது.





எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ தெரியாது சற்றென்று, யாரோ கன்னத்தில் மென் முத்தம் பதிக்க பதறிப்போய் கண் விழித்தவனின் கைகளில் பிறந்த ரெண்டே நாள் ஆன தன் மகனை வைத்தான் தயா. கலங்கிய விழிகளில் இருந்து கண்ணீர் கோடாய் கன்னத்தில் இறங்க, தம்பியின் கண்ணீரை துடைத்துவிட்டான் தயா.





துடைக்க துடைக்க கண்ணீர் வந்து கொண்டே இருக்க, ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் கையில் இருந்த பூச்செண்டின் காலில் முகம் புதைத்து குலுங்கி அழுதான் குணா.





“வைஷு பேபிய தூக்கு … வா நாம நம்ம வீட்டுக்கே போலாம் … நாம வந்தது இவனுக்கு புடிக்கல போல …” கேலி போல பேசி தம்பியின் மனநிலையை மாற்ற முயன்றவனின் கண்களும் கலங்கியிருந்தன. அதில் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவன் வைஷுவை கண்டதும்,





“டேய் அறிவுகெட்டவனே, டெலிவரி ஆன பொண்ணு டா … எதுக்கு இங்கையும் அங்கையும் அலைய வைக்கிற …” என்று பதறியவன்,





“சாரி வைஷு உன்ன கவனிக்கல … எப்படி இருக்க, நார்மலா இல்ல சிசேரியான …” என்று அக்கறையுடன் விசாரித்தவனுக்கு சோர்வுடன் புன்னகைத்தவள்,





“நல்லா இருக்கேன் மாமா … நார்மல் டெலிவரி தான் …” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளை திரும்பி பார்த்து முறைத்த தயா,





“எவ்வளவு ஈஸியா நார்மல் டெலிவரினு சொல்ற …” என்று மீண்டும் முறைத்தவன் தன்னை கேள்வியுடன் பார்த்த தம்பியிடம்,





“அன்னைக்கு உன் வீட்டுக்கு தாண்டா கிளம்பிட்டு இருந்தோம் … இவ பாத்ரூம்ல வழுக்கி கீழ விழப் போனவ எசக்கு பிசகா எப்படியோ பிடிச்சு விழாம நின்னுட்டா, அதுல பேபியோட தோள்பட்டை சிக்கி, டெலிவரி ஆகுறதுக்குள்ள பயங்கர டென்ஷன் … அந்த டென்ஷன்ல இருந்ததால உன்கிட்ட உடனே பேச முடில … அப்புறம் சுவிட்ச்ஆப் பண்ணி வச்சுருக்க … ரெண்டு நாளா தனியா துடிச்சுட்டு இருந்திருப்ப அதான் டிஸ்சார்ஜ் ஆனதும் நேரா இங்க வந்துட்டோம் …” என்று விளக்கம் கொடுத்திருக்க, வைஷுவின் கைகளில் குழந்தையை கொடுத்தவன், அடுத்த நொடி அண்ணனை இறுக்கி அணைத்துக் கொண்டான்.






ரெண்டு நாளாக மனஉளைச்சலில் இருந்தவனுக்கு அண்ணனின் வருகை யானை பலத்தை கொடுக்க, எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது.





ஆனால் அவர்கள் நினைத்தது போல் பிரச்சனை அவ்வளவு சுலபமாக முடிவது போல இல்லையென்று தெரிந்ததும், ஒருவாரம் கடந்த நிலையில்,





“குணா … நீ இங்க இருக்கிறது சரியா இருக்காது … கொஞ்ச நாளைக்கு இந்தியா விட்டு இருந்தாதான் உனக்கு மனநிம்மதி கிடைக்கும் பிரச்சனையும் ஒருமுடிவுக்கு வரும் …” என்று கூறியவன் தம்பியின் கையில் பிலைட் டிக்கெடை கொடுத்தான்.





சிங்கப்பூர் செராங்கூன் ரோட்டில் அமைந்திருந்த எவெரிடே சலூனின் மூணாவது தளத்தில் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்த ஆண்களுக்கான பிரிவில் வேகமாக கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சங்கீதா.





“இன்னைக்கு எனக்கு ஆப்டேன்னு தெரியும்ல அப்புறம் எதுக்கு என்ன கூப்ட்டு விட்டுருக்கா ஜென்சி … எங்க அவ …” உள்ளே நுழைந்ததிலிருந்து கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவளின் முன் ஜூஸை நீட்டிய ஹேமா,





“அக்கா குடிங்கோ … வெயில்ல வந்தது மண்டை சூடேறிக்கும் போல … ஜில்லுனு குடிச்சு கூல் பண்ணுங்கோ அக்கா …” என்றவளை முறைத்து பார்த்தாலும் அவள் நீட்டிய ஜூஸை வாங்கி குடித்தாள்.





“ஜென்ஸியக்கா, அந்த பொலிடீஷியன் வீட்டு பங்க்ஷன் பத்தி பேச போயிருக்கா … உள்ள இருக்கிறது விவிவிவிஐபியாம் … யாரையும் உள்ளார விட கூடாதுனு சொல்லிருக்கா … என்னையும் போக கூடாதுனு ஆர்டர் போட்டுருக்கா …” என்ற ஹேமாவிடம்,





“அப்படி யாரு அந்த விவிவிவிஐபியாம் … எப்போ அவ எனக்கு தெரியாம புக்கிங் போட்டா …” என்ற சங்கீதாவிற்கு, தெரியாது என்று உதட்டை பிதுக்கியவள்,





“சங்கீ அக்கா … உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டா … நம்ம நாட்டுக்கு ஆக்டர் குணா வந்துருக்காராம் தெரியுமா …” குணாவின் பெயரை கேட்டதும் சங்கீதாவின் உடல் இறுகி போனது.





“அவன் என்ன நாட்டோட பிரைம்மினிஸ்டரா, எங்க போறான் வரான்னு தெரிஞ்சு வச்சுக்க …” என்று அலட்சியமாக பதில் அளித்தவளை அதிர்ச்சியுடன் பார்த்தவள்,





“அச்சோ … உங்களுக்கு குணாவ பிடிக்காதா …” எதையோ செய்ய கூடாததை செய்தது போல முகத்தை வைத்துக் கொண்டு பேசியவளை கண்டு கடுப்பான சங்கீதா,





“புடிக்காது … அவனும் அவன் மூஞ்சியும் … வியாக் முகத்த நினைச்சு பார்த்தாலே வாந்தி வந்தியா வருது … மொகம் தான் பாக்க சகிக்காம இருக்குன்னா, நடிப்பு சுத்த வேஸ்ட் … இவனையெல்லாம் எவன் நடிக்க கூப்டான் தெரில … சும்மா கையை காலை ஆட்டி ரெண்டு ஸ்டெப் போட்டா நடிகனாயிடுவானா … வேஸ்ட் பெல்லோ …” என்று முகத்தை சுழித்தவளை கண்டு,





“இப்படியெல்லாம் பேசாதீங்கக்கா … அவர் எவ்வளவு சூப்பரா நடிப்பார் தெரியுமா … அதுவும் காமெடி சீன்லாம் சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியாது … உங்களுக்கு புடிக்காது அதுக்காக அவரை அசிங்க பேசுவீங்களா …” என்று நடிகர் குனாவிற்காக சங்கீதாவிடம் சீறியவளை நக்கலாக பார்த்து சிரித்தவள்,





“ஏய் பாப்பா என்ன நீ அந்த பொறுக்கிக்காக என்கிட்ட கோவப்படுவியா …” என்று சமாதானம் செய்ய முயன்ற சங்கீதாவை முறைத்து பார்த்தவள்,





“பொறுக்கின்னு சொல்லாதீங்கக்கா …” என்று மீண்டும் கோபப்பட்டவளை கண்டு





“அட …” என்று சிரித்துக் கொண்ட சங்கீதா,





“ஏய் அவன பத்தி சோசியல் மீடியால கிழி கிழினு கிழிக்கிறாங்க … அப்போ கூட உனக்கு புரியலையா …” என்றவளை உர்ரென்ற முகத்துடன் பார்த்தவள்,





“அதெல்லாம் ரூமர்ஸ் … நம்பாதீங்க …” என்ற ஹேமாவை சிரிப்புடன் பார்த்தவள்,





“எது … ரூமர்சா … அந்த பொறுக்கிய பத்தி என்கிட்ட கேளு கதை கதையா சொல்றேன் …” திமிராய் பேசியவளை முகம் சுருக்கி பார்த்தவள்,





“என்னமோ பக்கத்துல இருந்து பழகி பாத்தது போல பேசுறீங்க … உங்களுக்கு புடிக்கலைனா விடுங்க …” என்று அவள் பதிலுக்கு கூட காத்திராமல் திரும்பி நடக்க முயன்றவளை,





“ஏய் பாப்பா நில்லு … இவ்வளவு சொல்றேன் நம்பாம போற … அவன் கூட பழகாமலே பக்கத்துல இருந்து பார்த்ததால தான் சொல்றேன் … அவன் நடிக்கிறதுக்கு முன்ன டான்ஸ் ஸ்டூடியோ வச்சிருந்தான் அதுல தான் என் ப்ரெண்ட் டான்ஸரா இருந்தா, அவள பாக்க அப்போ அப்போ போவேன் … அப்போல்லாம் அவன் என்ன கண்ணாலே செக்ஸ் டார்ச்சர் கொடுப்பான் தெரியுமா … செக்சியா நம்ம முன்னாடி போஸ் கொடுப்பான் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுவான் … கேப் கிடைச்சா தொட்டு தடவலாம்னு அலைஞ்ச கேஸ் … அந்த ஸ்டூடியோல இருக்கிற முக்கால்வாசி பொண்ணுங்க அவன் கூட மேட்டர் பண்ணியிருக்காங்க … அதுக்காக அவன் காதல் மன்னம் மன்மதசுந்தரனு நினைச்சுடாத … ஆளு பாக்கத்தான் செக்சியா இருக்கான் பட் அந்த விசயத்துல வீக்காம் … ஒரு டென் செகண்ட்ஸ் போதுமாம் மேட்டர முடிச்சுடுவானாம் … நீயே சொல்லு நமக்கு தும்பலே பத்து செகண்ட்ஸ்க்கு மேல வரும் … ஆனா இவன் …” என்று மீண்டும் முகத்தை சுழித்தவளை நம்பாத பார்வை பார்த்தாள் ஹேமா.





தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவள்,





“சங்கீக்கா நீங்க சொன்னதுல பெரிய லாஜிக் ஓட்டை இருக்கு … வெறும் போது செகண்ட்ஸ்க்காகவா பொண்ணுங்க மீடூ பண்ணுவாங்க … இல்ல புருஷன விட்டுட்டு வருவாங்களா … இப்படித்தான் உங்கள மாதிரி ஹேட்டர்ஸ் தான் குணாவ பத்தி தப்பா ரூமர்ஸ் கிளப்பி விடுறது … முதல்ல திருந்துங்க அக்கா …” என்றவளை அடிங்க என்று அடிக்க சென்றவளின் கைகளில் சிக்காமல் சிரித்தபடி ஓடினாள் ஹேமா.





“போடி லூசு நா ஒன்னும் கத கட்டுல … அவன் டென் செகண்ட்ஸ் ஆளு தான் அனுபவிச்சவ நா சொல்றேன் நம்பாம போகுது லூசு …” என்று முணுமுணுத்தவள், அறைக்குள் இருந்த விவிவிவிஐபியை காண்பதற்காக கதவை திறந்து உள்ளே சென்றவள் அங்கே தன்னையே அழுத்தமாக பார்த்தபடி உட்கார்ந்திருந்தவனை கண்டு அதே இடத்தில் நின்றுவிட்டாள்.
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 18:



‘இவன … திரும்பவும் மாமா வேல பாக்க ஆரம்பிச்சுட்டான், இவன் கடைசி வர திருந்தவே மாட்டான் போல …’ என்று தன் அண்ணனை மனதிற்குள் கரித்துக் கொண்டிருந்தான் குணா. சங்கீதா சிங்கப்பூரில் இருப்பதை அறிந்துக் கொண்டே தன்னை இங்கே அனுப்பியவனை நினைத்து பல்லை கடித்தவனுக்கு தமையனின் மேல் தான் கோபம் வந்தது.



வேண்டாம் என்று ஒதுங்கி அவள் நினைப்பே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பவனின் பாதையை அவள் பக்கமாக திசை திரும்பியவன் மட்டும் நேரில் இருந்தால் முகத்தை பேர்த்திருப்பான் அப்படியொரு கோபம் அவனிடத்தில். பின்னே தன்னை பற்றி வெளியே கேவலமாக பேசிக் கொண்டிருப்பவளின் முகத்தில் முழிக்க வேண்டுமே என்பதை நினைத்தாலே அவமானமாக நினைத்தான்.



இன்று வரை தன்னிடம் ஒரு கேள்வி கூட கேட்காமல் விலகி சென்று அடுத்த வாழ்க்கையில் நுழைந்தவளிடம் கேட்க இவனிடம் பல கேள்விகள் உண்டு. என்னவோ அவளிடம் தான் தோற்று போனதாகவே உணர்ந்தான். அதுவும் அவள் கூறிய பத்து செகென்ட்ஸ் விஷயத்தில் முகம் அவமானத்தில் கன்றி போனது. எந்த நொடியிலும் அவள் உள்ளே வரலாம் என்ற நிலையில் படபடப்புடன் காத்திருந்தவன் முகத்தை அழுத்தமாக வைத்துக் கொண்டான்.



உள்ளே யார் இருக்கின்றார்கள் என்று தெரியாமல் சிரித்த முகத்துடன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தவள் அங்கே தன்னையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தவனை கண்டு அதிர்ச்சியாகி அதே இடத்தில் நின்றுவிட்டாள். பின் தன்னை சடுதியில் சமாளித்துக் கொண்டு,



“ஹாய் சார் … வெல்கம் டூ எவெரிடே … ஹொவ் வாஸ் யுவர் டே …” என்று ஒன்றும் நடவாததை போல சாதாரணமாக பேசியவளை விடாமல் பார்த்தவன் பதில் பேசவில்லை. நான் இவளை சின்ன அளவில் கூட பாதிக்கவில்லையா இல்லை என் முன்னாள் தோக்க கூடாது என்று நடிக்கின்றாளா என்ற யோசனை அவனிடத்தில்.



எத்தனையோ முறை அவனை தொலைக்காட்சியிலும் கைபேசியிலும் பார்த்திருந்தாலும் பத்து வருடங்கள் கழித்து நேரில் பார்ப்பவனை கண்டு அவளிடம் படபடப்பு தோன்றியது என்னவோ உண்மைதான். தன் கேள்விக்கு பதில் கூறாமல் தன்னையே பார்த்திருந்தவனை கண்டு இதழை பிதுக்கியவள்,



“மேனர்ஸ் தெரியாதவன் போல, பதில் சொல்லணும் கூட தெரில …” என்று அவன் காது படவே முணுமுணுத்தவள், சைகையால், ‘காது கேட்காதா …’ என்று கேட்க, அவனிடத்தில் பதிலில்லாத வெறும் அழுத்தமான பார்வை மட்டுமே.



அவன் அமைதியை தோளை குலுக்கி புறந்தள்ளியவள்,



“ஹாய் சார் … ஐ அம் சங்கீதா … நீங்க பாடி கேர் சர்வீஸ் புக் பண்ணிருக்கீங்க … அதுல அண்டர் ஐ ட்ரீட்மெண்ட், மேனிக்யூர் பெடிக்யூர் கவர் ஆகுது …” என்று விளக்கம் கொடுத்தவள், அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அவன் காலருகில் குட்டி ஸ்டூலை இழுத்து போட்டு உட்கார்ந்துக் கொண்டாள்.



வலக்காலை பற்றி நடுவில் இருந்த ஸ்டூலில் வைத்து ஒவ்வொரு நகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொண்டிருந்தவள் என்ன நினைத்தாளோ திடீரென்று ஸ்டூலை தள்ளிவிட்டு அவன் காலை எடுத்து தன் தொடையில் வைத்து வேலையை தொடர்ந்தாள். அதில் மனம் குளிர்ந்தானோ இல்லை அவளை பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் வந்ததோ,



“எத்தன பசங்க …” என்று கேட்டான். அவன் கேள்வியில் ஒருநொடி அசைவற்று போனவள் நகத்தை ஷேப் செய்தபடி,



“நாலு …” என்று பதிலளித்து வேலையை தொடர, “நாலா …” என்று அதிர்ந்து போனவன்,



“பொண்ணு எத்தன பையன் எத்தன …” என்று கணக்கு கேட்டவனை நிமிர்ந்தும் பாராமல்,



“தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போறீங்க …” என்றவளின் நக்கலான கேள்வியில் வாயை மூடிக் கொண்டவன் அதன்பின் வாயை திறக்கவில்லை.



சரியாக ரெண்டு மணி நேரம் தன்னை சங்கீயின் கைகளில் ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடிக் கொண்டான் குணா. இங்கு வருவதற்கு முன்பு கூட அவளை பற்றிய சிந்தனைகள் இல்லாமல் இருந்தவனுக்கு அவள் அருகாமையில் மனம் பரிதவித்து தத்தளித்தது. அவள் தன்னிடம் முன்பு போல பேச வேண்டும் பழக வேண்டும் என்ற ஆசை எழ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடுபட்டான்.



அனைத்தையும் முடித்தபின் அவன் முகத்தை பார்த்தவளுக்கு நெஞ்சடைத்த உணர்வு. சற்றென்று புதியவர்களிடம் கலகலத்து பழக தெரியாதவன் ஆனாலும் முகத்தில் எப்பொழுதும் சிறு புன்னகை குடிக் கொண்டிருக்கும். அவன் முகத்தை பார்க்கும் பொழுதெல்லாம் அவளையும் மீறி அவனை ரசித்திருக்கின்றாள். அப்படி பட்ட வசீகர முகம் இன்று களையிழந்து புன்னகையை தொலைத்து வயது கூடி தெரிந்த தோற்றம் பார்க்கவே அவள் மனதை பிசைந்தது.



குணாவை சங்கீதாவிற்கு ரொம்ப பிடிக்கும், காதலா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்வாள். நட்பையும் தாண்டிய உறவாகவே நினைத்து பழகியவளின் எண்ணத்தை மாற்றியதே அவனின் தேவையில்லாத செய்கைகள் தான். பத்து வருடங்களுக்கு முன் இருந்த வெறுப்பும் கோபம் இன்று நேரில் சந்தித்தபின் காணாமல் போயிருந்ததை நினைத்து அவளுக்கே ஆச்சிரியம் தான்.



சரியான கவனிப்பு இல்லாமல் நீண்டு வளர்ந்து நெற்றி முழுவதும் கிளை பரப்பிக் கொண்டிருந்த தலை முடியை சரிபடுத்த துடித்த கையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு தன் வேலை முடிந்துவிட்டதை தெரிவித்தாள்.



சிறு தலையசைப்புடன் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தவன், முகத்தில் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேற, அவன் முதுகையே சில நொடிகள் பார்த்தவள் கண்ணை மூடிக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் உட்கார்ந்துவிட்டாள். அவள் மனக்கண்ணில் அவனுடன் பழகிய நாட்கள் கண் முன் வந்து போனது, இருவரும் நடனமாடியது, வெளிப்படையாக மற்றவரை ஜொள்ளுவிட்டு ரசித்தது அவனின் அத்துமீறல்கள் அவளின் சமாளிப்புகள் என்று அனைத்தும் மின்னி மின்னி மறைய, பெருமூச்சு விட்டு எழுந்தவள் தன் வேலையை பார்க்கலானாள்.



சரியாக ஒருமணி நேரம் கழித்து ஸ்பாவை விட்டு வெளியே வந்த சங்கீதா நடைபாதையில் இறங்கி நடக்க, “சங்கீதா …” என்றழைப்பில் திரும்பி பார்த்தாள். சுவரில் சாய்ந்து நின்றபடி இவளை தான் பார்த்திருந்தான் குணா. இவளுக்காகவே அங்கே காத்திருப்பான் போல, இவளை கண்டதும் வேகநடையிட்டு அவளை நெருங்கினான்.



தனக்காகவே காத்திருந்தவனை கண்டு சிறிது அதிர்ந்தாலும், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு பார்த்தவளிடம்,



“பசிக்குது தனியா சாப்பிட ஒருமாதிரி இருக்கு கொஞ்சம் கம்பெனி கொடுக்கிறியா …” ஒருவழியாக கேட்க வந்ததை தட்டுத்தடுமாறி கேட்டவனை அழுத்தமாக பார்த்தவள்,



“கல்யாணம் ஆகிடுச்சா …” என்று திடீரென்று கேட்கவும், அதிர்ந்து போய் இல்லையென்று தலையாட்டியவனிடம்,



“யார் கூடாவது லிவிங்ல இருக்கீங்களா …” என்ற அடுத்த கேள்விக்கு புருவம் சுருக்கி இல்லையென்று மீண்டும் தலையாட்டியவனிடம்,



“அப்போ இவ்வளவு நாள் தனியா தானே சாப்டீங்க … இப்பவும் தனியா சாப்பிடுங்க ஒருமாதிரியா இருக்காது …” என்று பதிலளித்துவிட்டு திரும்பி நடந்தவளை, இதுக்காகவா இவ்வளவு கேள்வி என்று பார்த்தவன், கூடவே நடந்தபடி,



“இது புது இடம் … நா தங்கிருக்க ஹோட்டல்ல என்ன சாப்பிடுறதுனே தெரில … இங்க வந்து ஒன் வீக் ஆச்சு இன்னும் சரியா சாப்பாடு கிடைக்கல …” என்று விடாமல் விளக்கம் கொடுத்தவனை திரும்பி பார்த்து முறைத்தவளிடம்,



“ப்ளீஸ் ஒரே ஒரு லஞ்ச் மட்டும் என்னோட சேர்ந்து சாப்பிடு …” என்று மீண்டும் கெஞ்சியவனை மறுக்க மனம் இல்லாததால்,



“ஓகே லஞ்ச் மட்டும் தான் … எனக்கு ஹோட்டல் சாப்பாடு செட் ஆகாது, நானே சமைச்சு சாப்ட்டாதான் புடிக்கும் … நா தற்ரத சாப்பிட இஷ்டமிருந்தா வாங்க, பட் இதையே அட்வாண்டேஜா எடுத்துக்க கூடாது …” என்ற மிரட்டலுடன் அவனுடன் சாப்பிட சம்மதம் தெரிவித்தாள்.



அவள் சம்மதித்ததும் அகமகிழ்ந்து போனவன் துள்ளலுடன்,



“டபுள் ஓகே … பர்ஸ்ட் நா ரூம்க்கு போய் குளிச்சுட்டு வந்துடுறேன் … உன் பசங்களுக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும் ஷாப்பிங் போய்ட்டு உன் வீட்டுக்கு போகலாம் …” என்றவனை முகம் சுருங்க பார்த்தவள்,



“என்னால எங்கையும் வந்து வெய்ட் பண்ண முடியாது … நீங்க குளிச்சுட்டு பொறுமையா சாப்பிடுங்க, இன்னொரு நாளைக்கு லஞ்ச் பாத்துக்கலாம் …” என்று முகத்தில் அடித்ததை போல பேசியவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல், விறுவிறுவென்று நடக்க, அவள் அவமதிப்பில் முகம் கருத்தாலும்,



“பரவலா சாப்ட்டு குளிச்சுகிறேன் …” என்றவாறே கூட நடந்தான்.



“நீங்க ஒன்னும் எனக்காக கஷ்டப்பட வேணாம் … நீங்க போய் குளிச்சுட்டு ரிலாக்ஸ் ஆகி சாப்பிடுங்க … கண்டிப்பா இன்னொரு நாளைக்கு லஞ்ச் சாப்பிடலாம் …” சற்று தன்மையாக பேசியவளுக்கு பதில் கூறாமல் நடந்தான்.



“இதான் உங்க விரும்பம்னா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல … எல்லாம் உங்களுக்காகத்தான் சொன்னேன் … நாளைக்கு நா சொன்னத கேட்காம என்ன சாப்பிட கூட்டிட்டு போய்ட்டனு என்ன பழி வாங்கிட பிளான் பண்ணிட கூடாதுல அதுக்குதான் …” என்று சிரித்தவளை திரும்பி பார்த்தானே ஒழிய பதில் கூறவில்லை. அவன் அமைதி அவளுக்கு அமைதியை கொடுக்கவில்லை போல,



“குணா எனக்கு ஒரு டவுட் கேட்கலாமா …” என்றவளை சந்தேகத்துடன் பார்த்தவன், “வேணாம் கேட்காத … இப்போதைக்கு எனக்கு சோறுதான் முக்கியம், சாப்பாட கண்ணுல காட்டிட்டு என்ன வேணா கேளு இப்ப உன் கூட சண்ட போடுறளவுக்கு ஸ்ட்ரெண்த் இல்ல …” என்று மறுத்தவனைக் கண்டு உதட்டை சுழித்து பழிப்பு காட்டியவள்,



“ரொம்ப உஷார்தான் …” என்றவாறே கார் கதவை திறந்துக் கொண்டு காரில் ஏற, அவளை தொடர்ந்து ஏறியவனின் உதடுகளில் மெல்லிய புன்னகை வீற்றிருந்தது.



“குளிக்கத்தான் விடல … வெறும்கையை வீசிட்டு போய் பசங்க முன்னாடி நின்னா நல்லாயிருக்காது, ப்ளீஸ் அவங்களுக்கு எதாவது வாங்கிட்டு போலாம் …” என்று திடீரென்று கெஞ்சியவனை காரை ஓட்டிக் கொண்டே திரும்பி பார்த்தவளின் மனம்,



‘சோ … இவன் நம்மை பற்றி ஒரு பெர்சென்ட் கூட தெரிஞ்சுக்க முயலவில்லை…’ என்ற உண்மையை எடுத்துரைத்தது.



“உங்க கிப்டுக்காக அங்க யாரும் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கல …” என்று பதில் கொடுத்தவளை கோபத்துடன் பார்த்தவன்,



“என்ன அசிங்கப்படுத்த, வேணும்னே பண்ற …” என்று குற்றம்சாட்டியவனிடம்,



“ஓஹ் … அசிங்க படுத்துறேன்னு தெரிஞ்சுடுச்சா … அவ்வளவு ரோஷம் பாக்குறவர் எதுக்கு அசிங்கப்பட்டு வரணும் … வண்டியை நிறுத்துறேன் இறங்கிக்கிறீங்களா …” என்று நக்கலாக பேசியவளை முறைத்து பார்த்தவன்,



“எல்லாம் என் நேரம் … இவ்வளவு அசிங்கப்பட்டும் ஏன் உன்கூட வரணும்னு நினைக்கிறேன் தெர்ல …” என்று மனதை மறையாமல் கூறியவனை கேட்டு நக்கலாக அவள் இதழ்கள் வளைந்தது.



“அதுக்கு காரணம் மனசாட்சி முருகேசா … தப்பு பண்ணிட்டோம்னு மனசு உறுத்துது அதான் லஞ்ச் சாப்ட்டு சமரசம் பண்ண பாக்குது …” என்றாள் கேலியாக. அவள் முகம் பார்க்கும்படி கார் கதவில் சாய்ந்து உட்கார்ந்தவன்,



“தெர்ல … பட் மனசு உறுத்துற அளவுக்கு நீயும் ஒழுங்கு இல்ல …” என்ற அடுத்தநொடி அவள் கைகளில் கார் பறந்தது. ஹைவேயில் இருந்து பிரிந்த கிளை பாதையில் வண்டியை செலுத்தியவள் சற்று ஒதுக்குபுறமான இடத்தில் வண்டியை நிறுத்தினாள்.



“என் ஒழுக்கத்த பத்தி பேச முதல்ல உங்களுக்கு தகுதி இல்ல … தென் என்ன பத்தி எந்த விளக்கமும் கொடுக்க நா ரெடியா இல்ல … அதுக்கு நீங்க வெர்த்தும் இல்ல …” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் காரை கிளப்பினாள்.



தான் பேசியது அதிகப்படி என்று புரிந்ததால் சமாதான கொடியை பறக்க விட நினைத்தவனாக,



“சாரி …” என்று மன்னிப்பு கேட்கவும் சற்று திகைத்து போனவள், புருவம் சுருக்கி,



“எதுக்கு …” என்று கேட்க, சில நொடிகள் மௌனம் காத்தவன்,



“எல்லாத்துக்கும் …” என்று பதிலளித்திருந்தான். அவன் மன்னிப்புக்கு அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போனது. இறுகி போய் உட்கார்ந்திருந்தவள் வீலை இறுக்கமாக பற்றியதிலிருந்து அவளின் கோபம் அவனுக்கு தெரிந்தது. மேலும் பேசி சங்கடப்படுத்த விரும்பாதவன் அமையாகி போனான்.



எல்லாவற்றையும் பண்ணிவிட்டு பத்து வருடங்கள் கழித்து பொதுவில் மன்னிப்பு கேட்டால் நான் இறங்கி போக வேண்டுமா என்று உள்ளுக்குள் கொதித்து போனவள், கோபத்தை எல்லாம் காரை செலுத்துவதில் காட்டினாள். அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வசிக்கும் இடம் வந்து சேர, காரை பார்க்கிங்கில் பார்க் செய்தவள் எதுவும் பேசாமல் வேகவேகமாக நடந்து சென்று லிபிட்க்குள் ஏறிக் கொண்டாள்.



கோபத்தில் இருந்தவள் அவனை வா என்றும் அழைக்கவில்லை, அவனுக்காக காத்திருக்கவுமில்லை. அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எந்த பக்கம் செல்ல வேண்டும் என்ற குழப்பம். அவளின் வீட்டு முகவரியும் தெரியாததால், தன்னையே நொந்துக் கொண்டு அதே இடத்தில் நின்றிருக்க,



“ஹெல்லோ … மேல வர ஐடியா இல்லையா …” என்று ஒன்பதாவது தளத்தில் இருந்து கீழ் நோக்கி கத்தினாள். ஓபன் ஏரியாவில் அனைவரும் பார்க்க சத்தம் போட்டு கத்தியவளை கண்டு சங்கடத்துடன் நெளிந்தவன், எப்படி வருவது என்று செய்கையில் கேட்க,



“நயன்த் ப்ளோர் …உங்களுக்கு நேரா லிப்ட் இருக்கு பாருங்க, அதுல ஏறி வாங்க …” என்று மீண்டும் கத்த, அவனருகில் நடந்தவர்கள் தலையை உயர்த்தி அவளை பார்த்துட்டே தங்கள் வேலையை தொடர்ந்தனர். இன்னும் இங்கே நின்றால் மேலும் கத்தி அசிங்கப்படுத்துவாள் என்று பயந்தவன், பாய்ந்து சென்று லிப்ட்டில் ஏறிக் கொண்டான்.



அவள் கூறியதை போல ஒன்பதாவது தளத்தில் இறங்கியவனை, சற்று தொலைவில் ஒரு வீட்டின் முன் நின்றுக் கொண்டு முறைத்துக் பார்த்திருந்தாள். ஏனோ அவளின் கோபம் அவனை பதட்டமடிய செய்ய, வேகநடையிட்டு நெருங்கியவன்,



“இதான் உன் வீடா … நல்லாயிருக்கு …” என்று வாயில் வந்ததை அடித்துவிட, அவனை முறைத்து பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவள்,



“உள்ள வருவீர்களா … இல்ல ஆரத்தி கரைச்சு கூப்பிடணுமா …” என்று நக்கலாக கேட்க, அடுத்த நொடி வீட்டிற்குள் நின்றிருந்தான் குணா.



“உட்காருங்க …” என்று சோபாவை காட்டியவள் டிவியை போட்டுவிட்டு உள்ளே சென்றாள். அவள் சென்றதும் வீட்டை தான் பார்வையால் அளவிட்டுக் கொண்டிருந்தான், இரண்டு அறைகள் கொண்ட அளவான வீடு. நேர்த்தியாக இருந்த வீட்டை கண்ட நொடி அவனுக்கு பிடித்துவிட்டது. சிறிது நேரத்தில் கையில் ஜூஸ் கிளாஸ்சுடன் திரும்பி வந்தவள், அவனிடம் ஒன்றை நீட்டினாள். பிகு பண்ணாமல் வாங்கிக் கொண்டவன்,



“பசங்க வீட்டுல இல்ல போலிருக்கு …” அமைதியாக இருந்த வீட்டை கண்டு கேள்வியெழுப்பியவனுக்கு,



“ம்ம்ம் …” என்று மட்டும் பதிலளித்திருந்தாள்.



“உன் ஹஸ்பண்ட் எப்போ வருவார் …” என்று பேச்சை எண்ணி கேட்டவனை அழுத்தமாக பார்த்தபடி,



“தெரியாது …” என்றவளின் பதிலில் முகம் சுருங்கி போனாலும் விடாமல்,



“அப்போ பசங்க எப்போ வருவாங்க …” என்றவனுக்கு மீண்டும்,



“அதுவும் தெரியாது …” என்று பதிலளித்திருக்க, அவள் வேண்டுமென்றே தன்னை அவமதிப்பதாக நினைத்தவன்,



“என்ன தெரியாது … உன் பசங்களும் புருசனும் எப்ப வருவாங்கனு தெரியாதா … இல்ல பதிலளிக்க விருப்பம் இல்லையா …” என்று கோபப்பட்டவனிடம்,



“நீங்க அப்படி நினைச்சா நா என்ன பண்ண முடியும் … தெரியாததை தெரியாதுன்னு தானே சொல்லணும் … என் புருஷன பத்தி கேட்கணும்னா போய் அவர் பொண்டாட்டிகிட்ட கேட்கணும் … அப்புறம் அவர் என் புருஷன் இல்ல முன்னாள் புருஷன் புரியுதா … அதே போல இல்லாத புள்ளைங்கள பத்தி கேட்டா நா என்ன சொல்ல முடியும் …” என்றவளின் பதிலில் ஷாக்கடித்தது போல உட்கார்ந்திருந்தான். மெல்ல தெளிந்து,



“என்னாச்சு …” என்றவனை முகம் சுருக்கி பார்த்தவள்,



“என்ன என்னாச்சு … நீ டென் செகென்ட்ஸ்னா அவன் தெர்ட்டி மினிட்ஸ் … இப்போ வரைக்கும் நீ என்ன பண்ணனேனே தெரில, வாமா மின்னல் கணக்கா இருந்தது … அவனும் தெர்ட்டி மினிட்ஸ்சா ஜவ்வு மாதிரி இழுத்து என்ன பண்ணான்னு தெர்ல … ஆக மொத்தத்துல என் லைப்ல வந்த ரெண்டு ஆம்பளைங்களும் சுத்த வேஸ்ட்னு புரிஞ்சுது … அந்த கடுப்புல உணர்ச்சியே காட்டாம மரக்கட்டையா கிடந்த என்ன எவ்வளவு நாள் தான் அவனும் சகிச்சுப்பான், அதான் வெளில ஆள புடிச்சுட்டு நீ வேணாம்னு சொன்னான் … நானும் பதிலுக்கு போடானு டாடா கட்டிட்டு அவன்கிட்ட இருந்து இந்த வீட்ட ஆட்டைய போட்டுட்டேன் … பின்ன ரெண்டு வருஷம் அவனுக்கு ஸ்லீப்பிங் பார்ட்னரா சர்வீஸ் பண்ணிருக்கேன்ல …” என்று தன் கதையை கூறி பெருமையடித்து கொண்டவளிடம்,



“என்ன இருந்தாலும் நீ விருப்பட்டு சம்மதிச்சு கல்யாணம் பண்ணவன் தானே … கொஞ்சம் நல்ல விதமா வாழ்ந்துருக்கலாமே …” என்று உண்மையான அக்கறையுடன் கேட்டவனை நக்கலாக பார்த்தவள்,



“விருப்பப்பட்டுலாம் இல்ல … நா செழியனுக்கு வாக்கு கொடுத்திருந்தேன், அவன் என்ன சொன்னாலும் கேட்பேன்னு … அவன் தான் இந்த கல்யாண ஏற்பாட்ட பண்ணான் … அரவிந்த் பாக்க நல்லாயிருந்தான், நல்லா பழகுனான் … அதைவிட முக்கியம் உங்க முன்னாடி தோத்து போக கூடாதுனு வெறி வந்துச்சு … நீ என்ன பிளான் பண்ணி அசிங்க படுத்தினாலும் பாரு நா முடங்கி போலன்னு என்ன நிரூபிக்க வேண்டி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் …” என்று சாதாரணமாய் கூறியவள் குடித்து வைத்த காலி கிளாசை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.



சங்கீதா கூறிய அனைத்தையும் அசைபோட்டபடி அதே இடத்தில் உட்கார்ந்துவிட்டான் குணா. ஒருவேளை தான் அவசரப்படாமல் இருந்திருந்தால் இருவரின் வாழ்க்கை பாதையும் மாறியிருக்குமோ என்று நினைப்பு வராமல் இல்லை. வாயால் காற்றை ஊப்ஸ் என்று ஊதி வெளியேற்றியவன் சங்கீதாவை தேடி சென்றான்.



சமையலறையில் சிறிய அளவில் உள்ள ப்ளூ டூத்தில் இருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, இசைக்கு ஏற்ப உடலை மெல்ல அசைத்தபடி வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்தாள்.



அவன் வந்ததை உணர்ந்துக் கொண்டவள் வெங்காயத்தை வெட்டியபடி



“இங்க என்ன பண்ற … இன்னும் தேர்ட்டி மினிட்ஸ்ல சாப்பாடு ரெடியாகிடும் …” என்றவளின் கையிலிருந்த கத்தியை பறித்து அவள் செய்த வேலையை தான் தொடர்ந்தான் குணா. அவனிடம் சொன்னாலும் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்தவள், ப்ரீசரில் இருந்து எடுத்து வைத்திருந்த சிக்கனை சுத்தப்படுத்துவதற்காக கையில் எடுக்க,



“இன்னொரு சான்ஸ் கொடுத்தா டென் செகென்ட்ஸோ இல்ல தேர்ட்டி மினிட்ஸோ இந்த ஆம்பள வேஸ்ட் இல்லைனு ப்ரூவ் பண்ணி காட்டிடுவேன் …” என்றவனின் முகத்தை நோக்கி பறந்து வந்தது சுத்தப்படுத்தாத உரித்த முழு கோழி.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 19:



தன்னை நோக்கி பறந்து வந்த சிக்கனை கடைசி நொடியில் முகத்தில் படாமல் தடுத்து பிடித்தான் குணா. அப்படியிருந்தும் சிக்கனின் கசடுகள் அவன் முகத்தில் பட்டு தெறித்தன. சிக்கனில் இருந்து கிளம்பிய வாடை வேறு குமட்டிக் கொண்டு வர,



“உனக்கு தூக்கி எறியரத்துக்கு வேற எதுவும் கிடைக்கலையா … உவக் கொமடிகிட்டு வருது …” என்று சிடுசிடுத்தவனை அனல் தெறிக்க பார்த்தவள்,



“சிக்கன உட்டெறிஞ்சேன்னு சந்தோசப்பட்டுக்க … கைல மட்டும் குக்கர் கிடைச்சிருந்தது மண்ட பொளந்துருக்கும் … எவ்வளவு தைரியம் இருந்தா இன்னொரு சான்ஸ் கிடைக்குமான்னு கேட்ப … முத தடவ உன்ன சும்மா விட்ட திமிர் தானே இப்படியெல்லாம் பேச வைக்குது …” என்று கோபத்தில் சீறினாள். அருகில் இருந்த சிங்க்கில் முகத்தை கழுவியவன்,



“இப்போ எதுக்கு வயலென்ட் ஆகுற … நா உண்மையை தான் சொன்னேன் …” என்றவனை பேசவிடாமல் கோபமாக இடைமறித்தவள்,



“என்ன மயிறு உண்மையை சொல்ற … இதுக்கு மேலையும் வாயை தொறந்த மூஞ்ச பேத்துடுவேன் பாத்துக்கோ … சும்மா சொல்லல உண்மையாத்தான் சொல்றேன் …” என்று இடுப்பில் கை வைத்துக் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்க மிரட்டியவளை கண்டு தலையை அதிருப்தியில் இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டவன்,



“ம்ப்ச் … கொஞ்சம் பேச விடு … நானும் உன்ன மீட் பண்ணதுல இருந்து பாக்குறேன் லபோலபோனு கத்திகிட்டே இருக்க … ரொம்ப மாறிட்ட சங்கீதா …” என்றவன் மேலும் அவளை பேசவிடாமல்,



“நா சொன்னத நீ தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்ட … ஊர் சைடுல சொல்வாங்கள முள்ள முள்ளால எடுக்கணும், அததான் அப்ளை பண்ண நினைச்சேன் … தெரிஞ்சோ தெரியாமலோ செக்ஸ் மேல வெறுப்பு வர நா காரணமா ஆகிட்டேன் … அதனால தான் உன் முன்னாள் ஹஸ்பண்ட் கூட ஒழுங்கா கோவப்ப்ரெட் பண்ண முடியாம உன் மேரேஜ் லைப் ஸ்பாயில் ஆகிடுச்சு … அதான் திரும்ப சான்ஸ் கிடைச்சா நீ நினைக்கிறது தப்புனு உனக்கு காட்டிடுவேன் … உன்னால மரக்கட்டையா கூட ஆக்ட் பண்ண முடியாது … சீ ரெண்டு பேர் விருப்பப்பட்டு பண்ணா இதவிட ஹெவன் வேற எதுவும் இல்ல …” என்று பொறுமையாக விளக்கம் கொடுத்தவனை கையை கட்டிக் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்தாள். அவன் பேசி முடித்ததும்,



“ஆஹான் … குணா அவ்வளவு பெரிய நல்லவரா … எப்போ இருந்து இவ்வளவு நல்லவரா மாறீனீங்க … அச்சோ உங்க ஸ்பீச் கேட்டு கைல இருக்க ஹேர்லாம் புல்லரிச்சு போய் சிலிர்த்துக்கிட்டு நிக்குது பாருங்க …” என்று கையை தடவிய படி நக்கலாக பேசியவள்,



“பட் பாருங்க பாஸ் … நா ஒன்னும் செக்ஸ்க்கு அலையிற கேஸ் இல்ல … அது இல்லாமலே இவ்வளவு நாள் ரொம்ப ஹாப்பியா வாழ்ந்துட்டேன், இனிமேலும் வாழ்ந்துடுவேன் … அதனால சாரி உங்க ஹெல்ப் வேணாம் … வேற யாருக்காவது தேவப்பட்டா அங்க ஹெல்ப் பண்ணுங்க …” என்று உதட்டை வளைத்து பேசியவளின் வார்த்தைகளில் எள்ளல் துள்ளி விளையாடியது. அவள் பேசியது கோபத்தை கொடுக்க,



“நா என்னைக்கும் என்ன நல்லவன்னு சொன்னதில்ல … ஏதோ மெண்டலா அஃபக்ட் ஆகியிருக்கியே என்னால முடிஞ்ச ஹெல்ப்ப பண்ணலாம்னு பாத்தா ரொம்பதான் … போயேன் கடைசி வரைக்கும் மேட்டர் பண்ணா என்னன பீல் கிடைக்கும்னு தெரியாமலே செத்து போ … யாருக்கு நஷ்டமாச்சு …” என்று அலுத்துக் கொண்டவனின் மேல் உருளைக்கிழங்கை தூக்கிப் போட்டவள்,



“வாய மூடுறா … பேசாம போய் ஹால்ல உட்காரு … சமைச்சுட்டு கூப்பிடுறேன் கொட்டிக்கிட்டு கிளம்பு … தேவையில்லாத பேச்சு பேசிகிட்டு கோபத்த கிளப்பதா …” என்று கத்திக் கொண்டிருக்கும் போதே, அவள் போன் ஒலித்தது. செழியனிடமிருந்து தான் வீடியோ கால் வந்திருந்தது, சலிப்புடன் அழைப்பை ஏற்றவள்,



“சொல்லுடா …” என்கவும்,



“என் டார்லிங் என்ன பண்ராங்க …” என்ற அவன் கூறிய அடுத்த நொடி,



“ஹான் புடிங்கிட்டு இருக்காங்க … ஒன் பொண்டாட்டிகிட்ட சண்டைனா அவ கால்ல விழுந்து தொல … அவள வெறுப்பேத்த டார்லிங் நோர்லிங்னு கூப்பிட்ட மூஞ்ச பேத்துடுவேன் …” என்றவளின் ஆவேசத்தில், சாவகாசமா கட்டிலில் சாய்ந்துக் கொண்டு பேசியவன் பதறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.



சங்கீதா போட்ட சத்தத்தில் செழியனிடம் கோபித்துக் கொண்டிருந்த வீணா கூட சண்டையை மறந்து அவன் அருகில் சென்று உட்கார்ந்து இவளை தான் பார்த்திருந்தாள்.



“என்னடி ஆச்சு … ஏன் இவ்வளவு கோபமா இருக்க …” என்று பதறவும், குணா மேலிருந்த கோபத்தை தம்பியிடம் காட்டியது புரியவும்,



“ம்ப்ச் … மூட் அப்செட் டா … எல்லாம் அந்த குணாவால …” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,



“என்னது குணாவ … அந்த பொறுக்கி என்ன பண்ணான் … ஊர விட்டு ஓடிப் போனவன் அங்க தான் வந்துருக்கானா … அவன் இருக்கிற பக்கம் கூட போகாத …” என்று கோபத்துடன் பேசியவனின் கண்கள் ஸ்க்ரீனில் தெரிந்த குணாவின் உருவத்தை கண்டு கோவை பழம் போல சிவந்து போனது.



“ஹாய் டா அரவேக்காடு …” என்று கையசைத்த குணாவை கண்டு பல்லை கடித்தவன்,



“ஏய் அறிவுகெட்டவளே ஏற்கனவே பட்டது போதாதா இவன எதுக்கு வீட்டுக்குள்ள விட்ட … மொதல்ல அவன வீட்ட விட்டு விரட்டிவிடு …” ஆத்திரத்தில் கத்தியவனை கண்டு



“டேய் ஏண்டா மூச்சடைக்க கத்துற பட்டுன்னு போய்ட போற … உன் அக்கா என்ன சின்ன பப்பாவ, இத பண்ணு அத பண்ணுனு சொல்லி கொடுத்துக்கிட்டு இருக்க … அவ லைப்ல நீ ஏற்கனவே கும்மியடிச்சது போதும் … அவள ப்ரீயா விடு, அவ வாழ்க்கையை அவ பாத்துப்பா …” என்று அறிவுரை கூறியவனை கண்டு ஏகத்துக்கு டென்ஷன் ஆன செழியன்,



“நீ பேசாத … சங்கீஈஈ … என்னடி நடக்குது அங்க … எதுக்கு இவன் கூட திரும்ப பேசுர …” என்று கத்தியவன்,



“வீணா … ஈவினிங் ப்ளைட் இருக்கானு பாரு …” என்று மனைவிக்கு கட்டளையிட,



“டேய் அரமெண்டலு, அவளுக்கு என் கூட பேசுறதுல எந்த கஷ்டமும் இல்லைன்னு தெரிதுல, அப்புறம் நீ வந்து என்ன புடுங்கப் போற … ஏற்கனவே அவளுக்கு இஷ்டமில்லாத கல்யாணத்த வற்புறுத்தி பண்ணிவச்சுருக்க அதுக்கே உன் மூஞ்ச பேக்கலாம் … நேர்ல வந்தா கண்டிப்பா இது நடக்கும் …” என்றதும் கொதித்து போனான் செழியன்.



“ச்சி வாய மூடு, அவளுக்கு நடந்த அவசரக் கல்யாணத்துக்கு காரணமே நீதாண்டா பொறுக்கி … அவசர கல்யாணமா இருந்தாலும் நல்ல மாப்பிள்ளையா தான் பாத்து கட்டிவைச்சோம் … அவ லைப்ப ஸ்பாயில் பண்ணிட்டு ரொம்ப நல்லவன் போல பேசுற …” என்று சீரியவனுக்கு,



“நல்லவனா இருந்தா மட்டும் போதுமா … அவளுக்கு ஏத்தவனானு பாக்க மாட்டியா … எதுக்கு அவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணி வச்சீங்க … கொஞ்சநாள் பொறுத்திருக்கலாம்ல, ஏன் அவ மேல நம்பிக்கையில்லையா … தயா கல்யாணத்தப்ப நா தான் எங்க ரெண்டு பேருக்கும் நடந்தத சொன்னேன் … என் வார்த்தையை நம்புன நீ அவள நம்புலல … ” என்று நல்லவன் கணக்காய் தன்னிடம் கேள்வி கேட்கவும் சுர்ரென்று ஏறியது செழியனுக்கு.



“போதும் நிறுத்து … எனக்கு உன்ன பத்தியும் தெரியும் அவள பத்தியும் தெரியும் …” என்று தொண்டையடைக்க கத்தியவன்,



“ஏய் சங்கீ, அவன பேசவிட்டுட்டு வேடிக்கை பாக்குறியா … நா என்ன உன் லைப் கெட்டு போகணும்னா அரவிந்தனுக்கு கட்டி வச்சேன் … அப்போ அவன் பேசுனது தான் உன் மனசுலையும் இருக்கா …” என்று கோபத்தில் எகிறியவனை சிறிதும் கண்டுக் கொள்ளாதள் வீணாவிடம்,



“ஏய் இங்க பாருடி … உன் புருஷன் மட்டும் இதுக்காக இங்க வந்தான் வச்சுக்கோ, அதோட தம்பி உறவே இல்லாம போய்டும் … உன் புருஷன்கிட்ட சொல்லு எனக்கு என்ன பாத்துக்க தெரியும், இவன் நாட்டாம பண்ண வேணாம்னு சொல்லு … நா அப்புறமா அம்முகிட்ட பேசுறேன் …” என்றவள் அவர்கள் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்திருந்தாள்.



எதுவும் பேசாமல் அமைதியாக சமைத்துக் கொண்டிருந்தவளை கண்டவனுக்கு, அவள் தம்பிக்கே இந்த நிலைமை என்றால் நம்மை தூசி தட்டுவது போல தட்டி வெளியே தூக்கிப் போட வாய்ப்பிருக்கு என்று நினைத்தவன் நல்ல பிள்ளையாக ஹாலில் சென்றுக் உட்கார்ந்துக் கொண்டான்.



சங்கீதாவின் சிந்தனை முழுவதும் குணா கூறியதில் சுற்றிக் கொண்டிருந்தது, அதனால் தான் இன்னும் தன்னை கட்டுப்படுத்த நினைக்கும் செழியன் மேல் கோபம் வர அவனிடம் சற்று கடினம் காட்டினாள். அவளுக்கு நன்கு தெரியும் தான் பேசிய பேச்சால் தம்பி காயப்பட்டு போயிருப்பான் என்று, இருந்தாலும் இந்த கடுமையை காட்டவில்லை என்றால் இன்றிரவு அவன் கண்டிப்பாக இங்கே வந்துவிடுவான் என்று தெரிந்ததால் தான் அவனிடம் இளகாமல் வீணாவிடம் பேசி வைத்துவிட்டாள்.



ஆனால் நடுவில் நல்லவன் போல சிந்து பாடிய குணாவை நினைத்து அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. ஏன் அவனை மீண்டும் தன்னிடம் பழக அனுமதித்தோம் என்று அவளுக்கே புரியவில்லை.



சங்கீதா நினைத்ததை போலவே, அங்கே வீணாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான் செழியன்.



“இவ்வளவு நாள் அவ மனசுல அவன் பேசுனது சரின்றது போல் தான் நினைச்சுகிட்டு இருந்திருக்கா … எனக்கு தான் ஒன்னும் தெரியாம போச்சு …” என்று கண் கலங்கியவனை பார்க்க பார்க்க வீணாவிற்கு பாவமா இருந்தது.



“செழி … ப்ளீஸ் நா சொல்றத பொறுமையா கேளுங்க … குணா சொன்னது போல சங்கீ ஒன்னும் சின்ன குழந்தையில்ல … அவள அவ போக்குல போக விடுங்க … ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல எட்டு வருஷம் தனிமைல தான் இருக்கா … யார் துணையும் இல்லாம வேலை வீடு, வீடு வேலைனு இருக்கறவ கொஞ்சம் அவளுக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துதான் பாக்கட்டுமே …” என்று தன்மையாக எடுத்து கூறியவள் அவன் யோசிப்பதற்கு சிறிது அவகாசம் கொடுத்து அங்கிருந்து சென்றாள்.



சோபாவில் படுத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த குணா, களைப்பில் தூங்கிவிட, சமைத்து முடித்து வெளியே வந்த சங்கீதா பார்த்தது தூங்கிக் கொண்டிருந்தவனை தான். முகத்தை சுருக்கி அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்ப மனம் வரவில்லை என்றாலும் பசிக்குது என்று அவன் கூறிய வார்த்தைகள் அவள் காதுகளில் எதிரொலிக்க, சமைத்தவற்றை எல்லாம் கொண்டு வந்து ஹாலில் கடைபரப்பியவள் அவனை எழுப்பினாள்.



பாதி தூக்கத்தில் எழுந்ததால் கண்கள் சிவந்து போய் கண் விழத்தவன், ஒருநொடி தான் எங்கே இருக்கின்றோம் என்று புரியாமல் குழம்பி போனவன் பின் தெளிந்து,



“ம்ம்ம் … செம்ம ஸ்மெல்லா இருக்கு … செம்ம பசி சாப்பாடு போடு …” என்று பேசிக் கொண்டே சோபாவின் அருகில் தரையில் உட்கார்ந்துக் கொண்டான். கை கழுவாமல் உட்கார்ந்ததை கண்டு,



“கை கழுவிட்டு உட்காருங்க குணா …” என்றவளின் கோரிக்கையை நிராகரித்தவன்,



“ம்ப்ச் … சாப்பாடா போடு சங்கீ … ஏற்கனவே கழுவிய கைதான் நல்ல பசி …” என்றதும் அதற்கு மேல் பேசாமல் தட்டில் சாப்பாடை போட்டு சிக்கன் குழம்பை ஊற்றி வருத்த கறியையும் வைத்து கொடுத்தாள்.



தட்டை வாங்கியவன் சில உருண்டைகளை உள்ளே தள்ளும் வரை தலையை நிமிர்த்தவில்லை. அவனையே பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவன்,



“பயங்கர டேஸ்ட் … நல்லா சமைக்கிற … அதுவும் சிக்கன் வருவல்ல பெப்பர் தூக்கலா ஆஸம் …” என்று சிலாகித்தவன் சின்ன சிக்கன் பீஸை எடுத்து வாயில் போட்டு ரசித்து மெல்ல,



“உண்மையிலயே நல்லாயிருக்கா … அது ஒருவாரம் காஞ்சு கிடந்ததால் சூப்பரா இருந்திருக்கும் ” என்று சந்தேகத்துடன் பேசியவளை போலியாக முறைத்தவன்,



“ஹெல்லோ மேடம் இதுல தன்னடக்கம் தேவையில்லங்க …” என்று கிண்டலாக சொல்ல, கிண்ணத்தில் இருந்த சிக்கன் தீர்ந்து போனதால் தன் தட்டிலிருந்த சிக்கனையும் எடுத்து அவன் தட்டில் போட்டாள். வேண்டாம் என்று சொல்லாமல் அதையும் வாங்கிக் கொண்டவன் சாப்பாடை ஒருக்கட்டு கட்டியிருந்தான்.



சிறிது கூட பந்தா இல்லாமல் சாதாரணமாக சாப்பிட்டவனையே பார்த்திருந்தவள்,



“குணா சத்தியமா நீங்க தான் ஆக்டர் குணாவ, நம்ப முடில …” சிறு சிரிப்புடன் கேட்டவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தவன்,



“திடீர்னு ஏன் இந்த சந்தேகம் …” என்றவனுக்கு,



“ரொம்ப மொக்கையா இருக்கீங்க … சைடு ஆக்டரா கூட கற்பனை பண்ணி பார்க்க முடில …” என்றதும், ஹாஹா என்று சத்தம் போட்டு சிரித்தவன்,



“அடப்பாவி இதே வாய்தான் பெரிய ஸ்டாரா வருவேன்னு ஜோசியம் பார்த்து சொன்னுச்சு … இப்போ உல்டாவா சொல்ற …” என்று சிரித்தவனிடம்,



“அப்போ கெத்தா நல்லா இருந்தீங்க … இப்போ மூஞ்சுல எதோ மிஸ் ஆகுது … கலையாவே இல்ல சொங்கியா இருக்கிங்க, பேஸ் டல்லடிக்குது … பார்த்தாளே ஹீரோ வைப் வரல …” என்று அவன் முகத்தை ஆராயந்தபடி பேசியவளைக் கண்டு கன்னம் விரிய சிரித்தவன்,



“வயசாகிடுச்சுல்ல … என்ன டல்லா இருந்தாலும் விஷ்வல் எபெக்டும் மியூசிக்கும் இருந்தா போதும் கெத்தா காட்டிடும் …” என்று சிரித்தவனை பார்த்தபடி,



“என்ன பெரிய வயசு முப்பத்தியேழு ஒரு வயசா …” என்றவளின் பதிலில் பற்கள் தெரிய சிரித்தவன்,



“பின்ன இல்லையா இன்னும் மூணு வருசத்துல நாப்பது அரைக்கிழம் …” என்கவும், அவனையே சில நொடிகள் பார்த்தவள்,



“ஏன் குணா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்க … பண்ணியிருந்தா பொண்டாட்டி பிள்ளைங்கன்னு அழகான குடும்பம் கிடைச்சுருக்கம்ல …” உண்மையான அக்கரையில் கேட்டவளைக் கண்டு மென்மையாக சிரித்தவன்,



“தெரியலையே … ஏன் அப்படியொரு எண்ணம் எனக்கு வரலைனு தெரில … மேபி கமிட்மெண்ட்ல சிக்க வேணாம்னு நினைச்சுருக்கலாம் … பட் என் லைப்ப நல்லா என்ஜோய் பண்ணி தான் கொண்டு போயிருக்கேன் …” என்றதும்,



“அதான் தெரியுதே … நீங்க எந்தளவுக்கு என்ஜோய் பண்ணிருக்கீங்கனு இங்க ஓடி வந்ததை பார்த்தே தெரியுது …” என்று நக்கலாக பேசியவளை பார்த்து முகம் கருத்தாலும் , சிரித்துக் கொண்டே,



“பொறாமைல ஏன் மேல சேத்த வாரி இறைச்சா நா என்ன பண்ண முடியும் நாத்தம் புடிச்ச சகதி காலியாகுற வரைக்கும் அதுகிட்ட போகாம இருக்கிறதுதான் நல்லது … அப்புறம் மீடூ சொன்னவங்களுக்கே உண்மை என்னனு தெரியும் … என் மேல ரொம்பநாளா கோபத்துல இருந்திருப்பாங்க போல, பாவம் சான்ஸ் கிடைச்சதும் கொட்டிட்டாங்க … அவங்களையும் மன்னிச்சு விட்ரலாம் …” என்று நிதானமாக பேசியனை கண்கள் சிமிட்டாமல் பார்த்திருந்தாள் சங்கீதா. என்ன என்று கேட்டவனிடம்,



“இல்ல இது உண்மையிலையே குணா தான … இல்ல மக்கள திசை திருப்ப குணா போல இருக்க போலியானு பார்த்துட்டு இருக்கேன் … இவ்வளவு நிதானமா பதில் சொல்லிக்கிட்டு இருக்கிங்க …” என்று கேலி பேசியவளை நோக்கி மென்னகை புரிந்தவன், அதுக்கும்



“வயசாகிடிச்சுல்ல …” என்று பதிலளித்திருந்தான்.அதில் காண்டானவள்,



“ச்சைக் … எனக்கு இந்த குணாவ பிடிக்கல … மூஞ்சு அழுது வடியுது … முதல்ல பப்பரக்கான்னு பரப்பிக்கிட்டு இருக்க இந்த முடிய கட் பண்ணனும் …” என்று எழுந்தவள், இன்னும் எழுந்திருக்காமல் உட்கார்ந்திருந்த குணாவிடம்



“சீக்கிரம் கைய கழுவிட்டு வாங்க … பர்ஸ்ட் உங்கள சரி பண்ணனும் … இந்த மூஞ்ச பாக்க பாக்க எரிச்சலா வருது …” என்றவாறே பாத்திரங்களை ஹாலில் இருந்து அப்புறப்படுத்தினாள். கையை கழுவிவிட்டு வந்தவன்,



“இப்பவேவா … வயிறு முட்ட சாப்டுருக்கேன் நல்லா தூக்கம் வருது … கட் பண்ண சிசர் ட்ரிம்மர்லாம் வேணும்ல, நாளைக்கு பார்லர் வரேன் …” என்று கொட்டாவியை வெளியேற்றியவன் சோபாவில் பொத்தென்று விழுந்தான். கையில் சிறு பெட்டியுடன் வந்தவள்,



“அது கூட இல்லாமலா இருப்பேன் … நாளைக்கு தூங்கிக்கலாம் இப்போ தலையை காட்டுங்க …” என்று விடாப்பிடியாக அவனை எழுப்பி, தலைமுடியை அழகாக்கும் முயற்சியில் இறங்கினாள். முகத்திற்கும் பேஷியல் போட்டு அவனை ஒருவழியாக்கி குளிக்க அனுப்பியவள், அவன் அணிவதற்காக பக்கத்தில் உள்ள கடையில் ட்ரெஸ் வாங்க சென்றாள்.



குளித்து முடித்து அவள் வாங்கி தந்த உடையை உடுத்தி வந்தவனை கண்டதும் முகம் மலர்ந்தாள் சங்கீதா.



“ம்ம்ம் … இப்போதான் கொஞ்சமாச்சும் பாக்குற மாதிரி இருக்கு …” என்று கிண்டலடித்தவளை கண்டு இதழ்விரிய சிரித்தவன்,



“அடப்பாவி இப்பகூட ஹீரோவா கண்ணுக்கு தெரியலையா …” என்று பாவமாய் கேட்கவும், “இல்லையே …” என்று உதட்டை பிதுக்கினாள்.



சங்கீதா குணா இருவருக்கும் கடந்த காலத்தை மறந்து சகஜமாக பழகுவது மனதுக்கு இதம் தர அதையே பிடித்துக் கொண்டு தங்களின் மனக்கசப்பை மறந்து நெருங்க முயன்றனர்.



சிறிது நேரம் அருகிலிருந்த இடங்களை சுற்றி பார்த்துவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு கிளம்பிவிட்டான் குணா. மறுநாள் காலை குட் மார்னிங் உடன் இருவரின் அன்றைய தினம் தொடங்கியது. சங்கீதாவிற்கு இன்று புக்கிங் இருந்ததால் தன்னால் வெளியே வர முடியாது என்று கூறிவிட்டதால், மதியம் அவளுடன் சேர்ந்து உணவருந்த சென்றான் குணா.



முன்பே அவனுக்கும் சேர்த்து உணவு எடுத்து வருவதாக கூறியிருக்க, பார்லர் அருகிலிருந்த பார்க்கில் இருவரும் உணவு உண்டனர். முருங்கைக்காய் சாம்பாரும் உருளைக்கிழங்கு வருவலும் கூடவே அவித்த முட்டையும், அமிர்தமாய் இருந்தது குணாவிற்கு. இரவு இருவரும் கடைத்தெருவை சிறிது நேரம் சுற்றிவிட்டு அவனுக்கு மட்டும் இரவு உணவை வாங்கிக் கொண்டு, ஹோட்டலில் இறக்கிவிட்டு தன்னிடத்திற்கு கிளம்பிவிடுவாள் சங்கீதா.



பகல் பொழுது முழுவதும் தூங்கியே நேரத்தை கடத்துவான் குணா. இப்படியே அந்த வாரம் முழுவதும் சென்றிருக்க, வெள்ளிக்கிழமை மதியம் சங்கீதாவை தேடி வந்தவனின் முகம் ரத்த பசையே இல்லாததை போல சோர்ந்து போய் தளர்ந்த நடையுடன் நெருங்கியவனை பாவமாக பார்த்தாள் சங்கீதா. அவளுக்கு தான் அவனின் சோர்வுக்கான காரணம் தெரியுமே.



அவன் மேல் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க போவதாக நடிகர் சங்கம் அறிவித்திருந்தது. கூடவே அவனை ஆறு மாத காலம் நடிக்க தடை விதித்திருக்க, தமிழ்நாடு முழுவதும் அவன் தன் அன்றைய ஹாட் டாபிக். வழக்கம் போல சோசியல் மீடியாவில் கருத்து என்ற பெயரில் அவன் பிறப்பை முதற்கொண்டு கேவலப்படுத்தி அவனையும் அசிங்கப்படுத்தி அவனை சார்ந்தவர்களையும் இழுத்து நாரடித்துக் கொண்டிருந்தனர். முகம் இறுகி போய் உட்கார்ந்திருந்தவனின் முன் சாப்பாட்டு பொட்டலத்தை வைத்தவள்,



“உங்களுக்கு பிடிச்ச பெப்பர் சிக்கன் செஞ்சுருக்கேன் … சாப்புடுங்க குணா … இப்போதான் அவேன்ல சூடு பண்ணி கொண்டு வந்தேன் …” அவனை சாப்பிட வைக்க முயன்றவளின் முயற்சியைக் கண்டு புன்னகை புரிந்தவன்,



“பசிக்கல சங்கீ … நைட் சாப்டுக்கிறேன், போகும் போது மறக்காம கொடு …” நாசுக்காக சாப்பிட மறுத்தவனை அழுத்தமாக பார்த்தவள்,



“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க வந்துடுறேன் …” என்று திடீரென்று எழுந்து சென்றவளை புரியாமல் பார்த்தவன், இரு கைகளையும் பின்னால் கொண்டு சென்று தலைக்கு முட்டு கொடுத்து அதில் சாய்த்துக் கொண்டு கண்ணை மூடிக் உட்கார்ந்துவிட்டான்.



இருபது நிமிடங்கள் கழித்து அங்கே வந்தவள் அவன் உட்கார்ந்திருந்த தோற்றத்தை பார்த்து பெருமூச்சு விட்டவள்,



“குணா …” என்றழைக்க, கண் விழித்து பார்த்தவன் டேபிளில் இருந்த உணவு பொட்டலத்தை மீண்டும் பையில் வைத்தவளை கண்டு,



“ஏய் சங்கீ சீரியசா எனக்கு பசிக்கல, ப்ளீஸ் நீ சாப்பிடு … கண்டிப்பா நைட் நா சாப்பிடுப்பேன் …” என்று கெஞ்சியவனை கண்டுக் கொள்ளாமல்,



“இப்படி அழுது வடிஞ்சுகிட்டு இருந்தா எப்படி சாப்பாடு இறங்கும் … இப்போ என்னாச்சுன்னு சோக கீதம் வாசிச்சுகிட்டு இருக்கீங்க …” என்று முறைத்தவளை கண்டு முகம் கசங்கியவன்,



“என்ன ஆகலைனு என்ன சந்தோசமா சாப்பிட சொல்ற … என்ன பேசினா கூட கண்டுக்க மாட்டேன் எங்கம்மாவ இழுத்து பேசுறானுங்க … சுத்தமா முடியல …” என்று குரல் கமர பேசியவனின் கண்கள் லேசாக கலங்கியது. அவன் முகத்தை குனிந்து பார்த்தவள்,



“என்ன பீலிங்ஸ்சா … நல்லா பீல் பண்ணுங்க … நீங்க போட்ட ஆட்டத்துக்கு இது கூட பண்ணலைனா நீங்க மனுஷ ஜென்மமே இல்ல … முடிஞ்சா கண்ணுல குளம் கட்டி நிக்கிற தண்ணிய கீழ இறக்கி விடுங்க பீல் பண்ணதுக்கு அர்த்தமாவது இருக்கும் …” என்று நக்கலடித்தவளை முறைத்து பார்த்தவன் தன்னை மீறி சிரித்துவிட்டான்.



“நா கஷ்டப்படுறதுல அவ்வளவு சந்தோசம் …” என்றவனுக்கு,



“பின்ன இல்லையா … எவ்வளவு சாபம் விட்டுருக்கேன் … அட்லீஸ்ட் கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர பார்த்தேனா கூட மனசு திருப்தியாகிடும் …” என்று பதிலளித்தவளை கண்டு சத்தம் போட்டு சிரித்தவன்,



“அடப்பாவி சாபம்லாம் வேற விட்டியா …” என்கவும்,



“பின்ன விடாம கொஞ்சுவாங்களா …”



“அப்போ ஒன் சாபம் தான் பலிச்சுருச்சு போல … அதான் இவ்வளவு அசிங்கப்பட்டு நிக்கிறேன் …”



“கண்டிப்பா மை சாபம் தான் பலிச்சுருக்கு … மத்தவல்களாம் விருப்பப்பட்டு வந்தவங்க, பட் நா அப்படி இல்ல சாக போறோம் கடைசி ஆசையை நிறைவேத்துனு கெஞ்சுனவன நம்பி ஏமாந்தவ … பவர்புல் சாபம் …” என்று பெருமையடித்தவளை கண்டு சிறிது நேரம் யோசித்தவன்,



“ஒஹோ அதான் விஷயமா … எதால சாபம் வந்துச்சோ அத திரும்ப பண்ணிதான் சாப விமோஷனம் அடையனும் … பத்து வருசத்துக்கு முன்ன கல்ல தின்னா செரிக்கிற வயசு … அந்தரத்துல தொங்கிகிட்டே பத்து செகென்ட்ல ஈஸியா சாபம் வாங்கிட்டேன் … ஆனா இப்போ ரொம்ப கஷ்டமாச்சே … நீ வேற கொஞ்சம் வெய்ட் போட்டுட்ட … நாம சாப விமோஷனத்த தரையில கன்சிடர் பண்ணலாம … உனக்கு ஓகேவா … இல்ல அந்தரத்துல தான் தொங்கணுமா …” என்று சீரியஸாக பேசிக் கொண்டிருந்தவனின் தலையில் கையிலிருந்த பேக்கால் வலிக்க அடித்தவள்,



“எவ்வளவு கொழுப்பு உங்களுக்கு, என்கிட்டயே சக்ஜஷன் கேட்பிங்களா … இன்னைக்கு உங்க கை கால ஒடைக்கா விடமாட்டேன் …” என்று மீண்டும் அடிக்க கையை ஓங்கியவளின் கைகளில் சிக்காமல் சிரித்தபடி ஓடியவன்,



“ஹாஹா … சாப விமோஷனத்துக்கு கைகால் முக்கியமில்லங்க மேடம் … நொண்டி கைய வச்சுக்கிட்டே பேஷா பூஜையப் போட்டு சாப விமோஷனத்த வாங்கர அளவுக்கு திறமைசாலிங்க இந்த குணா …” என்று கத்திக் கொண்டு ஓடி,



“த்தூ … இதுல பெரும மயிறு வேற …” என்று துப்பியபடி விரட்டினாள்.
 
Status
Not open for further replies.
Top