All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் “காமதேவன் அம்பு” - கதை திரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்த கதையின் தலைப்பு. தொடர்ந்து உங்கள் ஆதரவை தந்து உற்சாகப்படுத்துங்கள். விரைவில் கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் – 1


புலர்ந்தும் புலராத அதிகாலை வேளையில் குளிரையும் பொருட் படுத்தாமல் ஜாகிங் செய்து கொண்டிருந்தாள் சங்கீதா. கால்கள் பாட்டிற்கு பழகிய வழியை பார்த்து ஓடிக் கொண்டிருக்க, கண்களோ வழக்கம் போல, அவளின் நீண்ட நாள் ரகசிய காதலனை தேடி அலைபாய்ந்தது. அப்படித்தான் அவனை தன் மனதில் பதிய வைத்திருந்தாள்.


நீண்ட என்பது சில நாட்களில் அடங்குவதில்லை, சரியாக சொல்வது என்றால் நான்கு வருடங்களுக்கு மேலாக அவனை ரகசிய காதல் செய்துக் கொண்டிருந்தாள். அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தொலைவில் இருந்து ரசிப்பதும், அவன் கண் முன்னே நடமாடுவதுமாக தன்னை அவன் மனதில் பதிய வைக்க முயன்றுக் கொண்டிருந்தாள். இருபக்கமும் பார்வையை துழாவி பார்த்தவாறே ஓடிக் கொண்டிருந்தவளின் கண்ணில் பட்டான் யுவராஜ் தயாளன்.


நல்ல உயரத்தில் கண்ணை உறுத்தாத நிறத்தில் குறுநகை முகத்தில் மலர்ந்திருக்க முன் உச்சி தலைமுடி காற்றில் அசைத்தாட எதிர்புறத்தில் இருந்து வேர்த்து விறுவிறுக்க ஓடி வந்துக் கொண்டிருந்தவனை இமைக்க மறந்து பார்த்தபடி சில நொடிகள் நின்றுவிட்டாள் சங்கீதா. பின் சுற்றுப்புறம் உரைக்க அவன் மேலிருந்த மயக்கத்தில் இருந்து தெளிந்தவள், அவனை நோக்கி நிதானமாக ஓடினாள்.


வழக்கம் போல தன்னையே நினைத்தபடி ஓடி வந்தவளை கண்டுக் கொள்ளாமல் அமைதியாக கடந்து சென்றான் யுவராஜ் தயாளன். முன் முப்பதுகளில், ஃபார்மாசிட்டிகல்ஸ் உலகத்தில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு அதில் பயணித்துக் கொண்டிருப்பவனை யாருக்கு தான் பிடிக்காது.


இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் யுவராஜின் மூன் பார்மா மருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் கல்லூரி விழாவிற்கு வருகை தந்திருந்த தயாளனின் ஆளுமையில் மயங்கியவள் தான் இன்று வரை தெளியவில்லை.

இன்றும் தன்னை கண்டுக் கொள்ளாமல் கடந்து சென்றவனை கண்டு முகம் சுருக்கியவள்,


"பெரிய லாடு லபக்கு மயிறுனு நினைப்பு ... முன்னாடி போற உருவம் கண்ணுக்கு தெரியாதா ..." என்று கடுப்பில் வாய்விட்டு பொறுமியவள்,


'ஹேய் நாங்கள்லாம் கஜினி முகம்மது பரம்பரையாகும் ... இவரு திரும்பி பாக்காம போனா மொகத்த தொங்க போட்டுக்கிட்டு போகணுமா ... நோ விட மாட்டேண்டா நீ எப்படி என்ன பாக்காம போறேன்னு பாக்குறேன் ...' என்று அவன் முதுகை முறைத்தபடி மனதில் கருவினாள்.


எதிர்திசையில் ஓடுவதை நிறுத்திவிட்டு அவனை நோக்கி வேகமாக ஓடியவள் அவனை தாண்டி சில அடிகள் சென்ற பின் கால் சுளுக்கி விழுவதை போல கீழே விழுந்தாள்.


தன் முன்னே விழுந்து கிடந்தவளை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்து ஜாகிங் செய்தபடி ஓடியவனை கண்டு ஏகத்திற்கு கோபம் வர பல்லை கடித்தவள், மீண்டும் எழுந்து அவனை முந்திக் கொண்டு ஓடி மீண்டும் அவன் கவனத்தை பெற கீழே விழுந்தாள்.


இந்த முறையும் அவளை கண்டுக் கொள்ளாமல் கழுத்தில் சுளுக்கெடுப்பதை போல தலையை இருபக்கமும் கீழும் மேலுமாய் அசைத்தும், உடலை இடமும் வலமுமாக வளைத்தபடி ஓடியவனை கண்டவளுக்கு, அவன் தலைமுடியை பிடித்து அருகில் உள்ள மரத்தில் நங்கு நங்கு என்று மோத வேண்டும் என்ற வெறி வந்தது.


தயாளன் உடற்பயிற்சி செய்து முடிக்கும் வரை அவன் முன்பாக தோன்றி என்ன குறளி வித்தை காட்டியும் அவள் ஒருத்தி அங்கே இருப்பதாகவே காட்டிக் கொள்ளாமல் ஓடுவதில் மட்டும் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.

இதற்கு மேல் அங்கிருப்பதில் ப்ரோஜனம் இல்லை என்று உணர்ந்தவள் வீட்டிற்கு செல்வதற்காக தன் ஸ்கூட்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றவளிடம்,


"கொஞ்சம் நில்லும்மா ..." என்று அவள் முன்பு வந்து நின்றார் அந்த கிரௌண்டில் அவளுடன் கூட சேர்ந்து ஜாகிங் செய்தவர். இவர் எதற்கு தன்னை நிற்க சொல்கிறார் என்ற யோசனையுடன் அவரை பார்த்திருக்க,


"நானும் உன்ன ரொம்ப நாளா பாத்துகிட்டு இருக்கேன் ... ஐ திங்க் யூ ஹேவ் சம் நெர்வ் ப்ரோப்லேம் ... நல்லா ஓடிக்கிட்டு இருக்க திடீர்னு அடிக்கடி கீழ விழுந்துடுற ... இப்போவே போய் நல்ல டாக்டரா போய் பாரு பிரச்சனை சீரியஸ் ஆகுறதுக்குள்ள சரி பண்ணிடலாம் ..." என்று பிரீ அட்வைஸ் கொடுக்க, உள்ளுக்குள் நொந்து போனவள் 'யார் யாரோ என்ன நோட் பண்ணுறாங்க ... பாக்க வேண்டியவன் பாக்க மாட்டுறானே ...' என்று மனதில் புலம்பியபடி தலையை மட்டும் சரி என்று ஆட்டினாள். அதே நேரம் இவர்களை கடந்து சென்ற யுவராஜ் தயாளன் இதழ்கள் ரகசிய புன்னகையில் மலர்ந்திருந்தது.


ஸ்கூட்டியை கேட்டின் உள்ளே நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளை வரவேற்றார் சந்திரசேகர்.


"என்னடா முகம் டல்லடிக்குது ... காபி எடுத்துட்டு வரவா ...' என்ற தந்தையின் அருகில் உட்கார்ந்தவள் அவரின் தோள் சாய்ந்துக் கொண்டாள். மகளின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தவரிடம்,


"அம்மூ ஷூட்டிங் போயாச்சப்பா ..." என்றவளின் நெற்றி வேர்வையை தோளில் கிடந்த துண்டால் துடைத்தபடி,


"நாந்தாண்டா விட்டுட்டு வந்தேன் ... நீலாங்கரைல ஷூட்டிங் ... சரி நீயேன் டல்லா இருக்க ..." தந்தையின் கேள்விக்கு பதில் சொல்வதற்காக வாயை திறந்தவளை முந்திக் கொண்டு,


"ம்ம்கூம் கழுதை கெட்டா குட்டி சுவரு ... சங்கீ மங்கீ அவதாரம் எடுத்தா அதுக்கு ஒரே காரணம் தட் மொக்கராஜ் உங்க செல்ல பொண்ண பங்கமா மொக்க பண்ணிருக்கானு அர்த்தம் ..." என்று சிரித்தபடி கையில் காபி கப்புடன் தந்தையின் அருகில் வந்து உட்கார்ந்தான் செழியன்.


சந்திரசேகர் தன் இளம்வயதில் சினிமா மேக்கப் ஆர்டிஸ்டிடம் அசிஸ்டண்டாக பணியாற்றினார். அப்பொழுது சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சாந்தி மீது காதல் வர இருவரும் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டனர். திரைத்துறையில் நிலையாக கால் பதிப்பதற்காக மனித உருவில் இருந்த ஓநாய்களின் இச்சைக்கு உடன்பட்ட சாந்தி, திருமணம் முடிந்ததும் அதிலிருந்து மெல்ல விலகிக் கொண்டார்.


சங்கீதாவும் செழியனும் பிறந்து அவர்கள் ஓரளவுக்கு வளர்ந்ததும், சின்ன திரையில் தன் கால் தடத்தை பதித்தார் சாந்தி. இன்று அவர் பிரபலமான குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக சீரியல்களில் வலம் வந்துக் கொண்டிருக்கார்.


காலப்போக்கில் சந்திரசேகர் ஆண்களுக்கான பியூட்டி சலூன் ஒன்றை சொந்தமாக தொடங்கியிருந்தார். தந்தையை பார்த்து வளர்ந்ததால் சங்கீதாவிற்கும் பியூட்டீஷியன் படிப்பில் நாட்டம் வர, இதோ இன்று அவளும் ஒரு சிறிய பியூட்டி பார்லருக்கு உரிமையாளர்.


என்னதான் கணவனும் மனைவியும் திரையுலகில் இருந்தாலும், இருவருக்கும் தாங்கள் பட்ட கஷ்டங்கள் பல அனுபவங்களை தந்திருக்க, தன் பிள்ளைகளை கேமரா வெளிச்சத்தில் இருந்து வெற்றிகரமாக மறைத்திருந்தனர். நன்கு தெரிந்தவர்களை தவிர இருவரும் சாந்தியின் பிள்ளைகள் என்ற உண்மை ஒருவருக்கும் தெரியாது.


தன்னை கிண்டலடித்து தம்பியை முறைத்து பார்த்தவள்,


"யாருடா மொக்க , முன்னபின்ன கண்ணாடில உன் மூஞ்ச பாத்துருக்கியா ... தொடப்ப குச்சுக்கு ஷார்ட்ஸ் மாட்டிகிட்டு அலையிறவன்லாம் தயாவ பத்தி பேச தகுதி இருக்கா ... மொதல்ல போட்டுருக்க ஷார்ட்ஸ் டிக்கிய விட்டு நழுவாம பாத்துக்கடா ... டிக்கியில்லாதவனே ... வந்துட்டான் அடுத்தவங்க முதுக சொரிய ... " என்று எகிறிய மகளை கண்டு சத்தம் போட்டு சிரித்தார் சந்திரசேகர். தன் மகனை ரசனையாக பார்த்தபடி,


"நல்லாத்தான் சாப்புடுற, அப்புறம் ஏண்டா கொஞ்சம் கூட சத வைக்க மாட்டுது ..." என்ற தந்தையை கண்டு முறைத்தவன்,


"இப்போ இது ரொம்ப முக்கியம் பாருங்க ... ஒருத்தி நாலு வருசமா பைத்தியக்காரி போல அஞ்சு மணிக்கு அலாரம் வச்சு எவனையோ ஒருத்தனை பாக்க போறா அத பத்தி கவல படமா என் டிக்கிய ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க ..." என்று சிடுசிடுத்தான்.


"நீ எக்ஸாம் டைம்ல கூட அலாரம் வச்சு எழுந்தது இல்லையடி ... உனக்கே இது ஓவரா இல்ல ... ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னா கூட பரவால்ல நாலு வருசமா அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கியே ... ஒன்ன ஒருதடவையாவது திரும்பி பார்த்துருக்கானா ... நீ சைட் அடிக்கிறது கூடவா தெரியமா இருக்கும் ..." என்று ஆதங்கப்பட்ட தம்பியை பாவமாக பார்த்தவளின் சோர்ந்த முகத்தை கண்ட சந்திரசேகர்,


"ஏன்டா நா வேணா அவங்க வீட்டுல போய் பேசி பாக்கவா ..." என்ற தந்தையை நக்கலாக பார்த்த செழியன்,


"அய்யய்யய்யோ ... என்ன மகளதிகாரம் படம் ஓட்டுறீங்களா ... அவன யாருனு நினைசீங்க ... எப்படி அஜித் விஜய் கிட்ட கல்யாணம் சம்பந்தம் பண்ண முடியாதோ அப்படித்தான் அவன்கிட்டயும் ... உங்க பொண்ணு சைட் அடிச்சா அவன் நமக்கு ஈக்வல் ஆகிடுவான ... இவ்வளவு நாள் அவன் பின்னாடி தான் இவ சுத்திகிட்டு இருக்கா, ஒரு தடவையாவது திரும்பி பார்த்துருப்பானா ... இல்ல சைடு பார்வையாவது பார்த்துருப்பானா ..." என்று மகன் பேசிய உண்மையில் தந்தையின் முகம் சுருங்கி போனது. அதை கண்டு கோபம் கொண்ட சங்கீதா,


"என்னடா ரொம்ப ஓவரா பேசுற ... விஜய் அஜித்தும் இவனும் ஒண்ணா ... ரொம்ப ஓவரா பில்ட்டப் தராதா ஓகேவா ... இன்னும் த்ரீ மந்தல அவனே வந்து அப்பாகிட்ட பொண்ணு கேட்பான் அப்படி கேட்கல ... என் பேரு சங்கீ இல்ல ..." என்ற தமைக்கையை கண்டு நக்கலாக சிரித்தவன்,


"சங்கீ இல்ல மங்கீ ..." என்று சத்தமாக சிரித்தவன்,


"அப்புறம் மூணு மாசத்துக்கு அப்புறம் பீல் பண்ணி பாட ஏற்கனவே உனக்காகவே ஒரு பாட்ட வடிவேலு பாடியிருக்கார் ... என்னனு தெரியுமா ... நீ சங்கீ மங்கீ அடங்கோனு ... பாட அப்பா உனக்காக பீல் பண்ணி கண்ணீர் விட்டுகிட்டு இருப்பார் ..." என்று கிண்டலடித்தவன் கூறியதை கற்பனை பண்ணி பார்த்த அப்பா மகள் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட ஆளுக்கு ஒரு பக்கமாக செழியனை மொத்தி எடுத்தனர். அந்த இடமே கலகல என்று மாறவும், அங்கிருந்து எழுந்த சந்திரசேகர்


"நா போய் காபி எடுத்துட்டு வரேண்டா ..." என்று சமையலறை நோக்கி செல்லவும், அக்காவின் நாடியை பற்றிய செழியன்,


"மை அக்கா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கனும் ... யாருக்கவும் சோகமா இருக்க கூடாது … நீ கோப பட்டாலும் அவன் மொக்கராஜ் தான் ... அதுவுமில்லாம உனக்கு பிடிச்ச டிக்கியும் சொல்லிக்கிற சைஸ்ல இல்ல ... ஜீன் போட்டா ஐயன் பண்ணியது போல பிளாட்டா தான் இருக்கும் ... வெய்ட் பண்ணுவோம் உனக்குன்னு பொறந்த பெரிய டிக்கிகாரன் நம்ம முன்னாடி வராமலா போய்டுவான் ..." என்ற தம்பியின் கையை பின்னாடி வளைத்து முறுக்கி, முதுகில் கை முட்டியால் ஓங்கி வலிக்க குத்தினாள் சங்கீதா.


"ம்ம்மாஆஆ ..." என்று வலியில் அலறியப்படி படுக்கையில் புரண்டு படுத்தான் கமலேஷ் குணாளன். தன்னை கவனிக்காமல் குப்புற படுத்தபடி போனில் மூழ்கியிருந்தவனின் கவனத்தை கவரவே காமம் மிகுதியில் அவனின் எடுப்பான பின்னழகில் நறுக்கென்று கடித்திருந்தாள் நிவேதிதா. அவனின் தற்போதைய காதலி.


தன்னை பார்த்து வசீகரமாக சிரித்தவளின் வெற்றிடையை வலிய கரம் கொண்டு வளைத்து இழுத்து படுக்கையில் தள்ளியவன், அவள் மேல் படர்ந்தவாறே,


"சிக்ஸ் பீட் பாடில உனக்கு கடிக்க வேற இடமே கிடைக்கலையா ஹனி ..." என்று அவள் காது மடலை கடிக்க, குலுங்கி சிரித்தவள்,


"ரொம்ப நாளா அந்த ப்ளேஸ் என்ன டெம்ப்ட் பண்ணிட்டு இருந்துச்சு டார்லு ... யூ ஹேவ் நைஸ் ..." என்று அவன் பின்னழகை வர்ணிக்க, அதில் கிளர்ந்து போனவன்,


"ம்ம்ம் ... இது கூட கிக்க்கா இருக்குத்தான் ..." என்று சிரித்தபடி அவள் இதழை வன்மையாக கவ்விக் கொண்டவன், ஏற்கனவே பல முறை அறிந்த அவளின் இளமையின் வனப்பை மீண்டுமொரு முறை ஆர்வத்துடன் அறிய தொடங்கினான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 34943

அத்தியாயம் - 2:





மூன் பார்மா என்ற பெயரிடப்பட்ட கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில், அடுத்து தாங்கள் தயாரிக்க போகின்ற புது மருந்தை பற்றிய கலந்தாய்வில் இருந்தான் தயாளன். மிக முக்கியமான கூட்டம் அது, ஆனால் அங்கே விவாதிக்கப்படுவதை ஊன்றிக் கவனிக்க முடியாமல் அவனின் சிந்தனை முழுவதும் இன்று காலையில் அன்னை பேசியதில் லயத்திருந்தது.





தன் கையில் இருந்த பைலை வெறித்துக் கொண்டிருந்தவனிடம் தங்களுடைய அபிப்பிராயத்தை கூறி அவன் பதிலுக்காக சிலர் காத்திருக்க, இதை எதையும் உணரும் நிலையில் அவன் இல்லை. தயாளனின் அருகில் உட்கார்ந்திருந்த கிரிதரன், தன் பாஸின் நிலை உணர்ந்து,





"பாஸ் ... ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க ... ஒரு டீ சொல்லவா ... மீட்டிங்க கொஞ்ச நேரம் ஒத்தி வைப்போம் ..." என்றவனின் அக்கரையில் தன் உதவியாளனை நிமிர்ந்து பார்த்தான் தயாளன். அப்பொழுதுதான் அனைவரும் தன் பதிலுக்காக தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, தன் தவறு புரிந்து பெருமூச்சு விட்டு எழுந்தான்.





"சாரி ... நீங்க கன்டினியூ பண்ணுங்க ... கிரி இருப்பான் ... பைனல் டிராப்ட் அவன்கிட்ட கொடுத்து விடுங்க ... நா பாத்துக்கிறேன் ..." என்றுவிட்டு கிரியை பார்த்து தலையசைத்தவன் வேக நடையிட்டு மீட்டிங் ஹாலில் இருந்து வெளியேறியிருந்தான்.





தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன் கழுத்தை இறுக்கி பிடித்திருந்த பொத்தான்களை ஆவேசத்துடன் கழட்டியவன் சோர்ந்து போய் பொத் என்று சுழலும் நாற்காலியில் தளர்ந்து போய் உட்கார்ந்துவிட்டான். குடும்பத்தில் மூத்த மகனாய் பிறப்பது எவ்வளவு பெரிய கொடுமையானது என்று நூறாவது தடவையாக நினைத்துக் கொண்டான். அவன் உட்கார்ந்த அடுத்த நொடி டேபிளில் இருந்த மொபைல் ஒலிக்கவும், அதில் மிளிர்ந்த எண்ணைக் கண்டு மூச்சை இழுத்து விட்டவன் அழைப்பை ஏற்று,





“சொல்லுங்க மாமா …” என்ற மருமகனின் அழைப்பில் தொண்டையடைத்தது வேலாயுதத்திற்கு.





“தயா …” என்றழைத்து மேலே பேச முடியாமல் தயங்கிய தாய்மாமனின் குரலில் இருந்த கவலையை கண்டுக் கொண்டவன்,





“ம்ப்ச் … என்ன மாமா என் மேல நம்பிக்கையில்லையா … அதான் நா பாத்துக்கிறேன் சொல்லிருக்கேன்ல அப்புறம் என்ன …” என்றவனின் குரலில் சிறு எரிச்சல் எட்டி பார்த்தது.





“உன் மேல மல அளவு நம்பிக்கை இருக்கு தயா … அத வச்சு என்ன யூஸ் … என் பொண்ணுக்கு உன்ன பிடிக்கலையே, அவன தானே புடிச்சிருக்கு … அப்புறம் எப்படி நம்பிக்கை வரும் …” என்ற வேதாச்சலத்தின் குரலில் வேதனை அப்பி கிடந்தது.





“நானும் அவனும் வேற வேற இல்லையே மாமா … ரெண்டு பேரையும் நீங்கதான் தூக்கி வளத்தீங்க … என் ஒடம்புல ஓடுற ரத்தம்தான் அவன் ஒடம்பலையும் ஓடுது … கொஞ்சம் அவன் மேலையும் நம்பிக்கை வைங்க மாமா …” என்ற மருமகனின் வார்த்தைகளில் கசந்த முறுவலை சிந்தியவர்,





“ஒரே ரத்தம் தான் … நா தூக்கி வளத்த பிள்ளைங்க தான் யாரு இல்லைனு சொன்னா … நீ ராமனா வளர்ந்து நிக்கிற அவன் கோகுலத்தில் கிருஷ்ணனா இருக்கான் … பல கோபியோரோட கொஞ்சி குலாவிய கண்ணனோட குறும்ப படத்துலயும் இதிகாசத்துலையும் படிச்சு பார்த்து ரசிக்க முடிஞ்ச என்னால அதே குணத்தோட ஒருத்தன என் மகளுக்கு கணவனா கற்பனை பண்ணி கூட பார்க்க முடில … நேத்து கூட ஊர் பேர் தெரியாத பொண்ணு கூட சுத்திகிட்டு இருக்கானு வீடியோ பார்த்தேன் … மனசே விட்டு போச்சு …” என்றவர்,





“ஏன் தயா … நா பாத்த வீடியோவ என் பொண்ணும் பார்த்துருக்கும்ல … அப்புறம் எப்படி கட்டுனா அவன தான் கட்டுவேன்னு பிடிவாதம் பிடிக்குது … எனக்கு புரியமாட்டுது …” என்று புலம்பியவரை கண்டு வேதனை கொண்டாலும், அதை காட்டிக் கொள்ளாமல்,





“ம்ம்ம் … ஏன்னா வைஷாலி குனாவை நம்புறா … அவளுக்கு இருக்க நம்பிக்கை கூட உங்களுக்கு இல்ல மாமா … எத்தனை கோபியோரோட கொஞ்சி குலாவினாலும் கடைசில கிருஷ்ணர் கட்டுனது ருக்மணிய தானே …” என்று விளக்கம் கொடுத்தவனை அவசரமாக இடைமறித்தவர்,





“கண்ணனுக்கு ருக்குமணியை சேர்த்து எட்டு பொண்டாட்டிப்பா …” என்று கலக்கத்துடன் கூற,





“ம்ம்ம் … நம்ம குணா ஒன்னும் கிருஷ்ணர் இல்லையே மாமா … ஒன்ஸ் குடும்ப வாழ்க்கைல என்டர் ஆகிட்டா அந்த பந்தத்துல இருந்து மீற மாட்டான் மாமா … அவன் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டான்னு ஒரு அண்ணனா உங்களுக்கு நா வாக்கு கொடுக்குறேன் …” என்ற யுவராஜின் பதிலில் பதில் கூறாமல் அசல் நொடிகள் அமைதி காத்தார் வேதாச்சலம்.





“எதையும் யோசிக்கிற நிலைல இப்ப நா இல்ல தயா … குணாவ தவிற வேற யாரையும் கட்ட மாட்டேன்னு அடம் பிடிக்கிற பொண்ண வச்சுக்கிட்டு நா என்ன பண்ண முடியும் … கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு உன்கிட்ட வந்துட்டேன் உன்ன தான் நம்பியிருக்கேன் … ஜோசியர் வைஷுக்கு இந்த ஒரு வருஷத்துக்குள்ள கல்யாணம் நடத்தியாகனும் சொல்றார், அப்படி இல்லைனா கல்யாணம் பண்ணி வைக்கிறது கஷ்டம்னு பயம் காட்டுறார் தயா எனக்கு என்ன பண்றதுனே தெரில … நா என் பொண்ண குணாக்கு கட்டிக் கொடுக்க விரும்பலைனாலும் உண்ம நிலவரம் என்ன தெரியுமா … முதல்ல குணா கல்யாணத்துக்கு சம்மதிக்கனும் … எனக்கு என்னமோ அவன் சம்மதிப்பான்னு தோனல … அம்மாவோட கண்ணீருக்கே மசியாதவன் என் பேச்சையா கேட்கப் போறான் …” அவர் மனதில் இருந்ததை எல்லாம் தன்னிடம் கொட்டியவரின் வார்த்தையில் உள்ள உண்மையில் சற்று மௌனித்தான் தயாளன். பின் வரண்டு போயிருந்த தொண்டையை கனைத்து சரி செய்தவன்,





“மாமா… எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க … எனக்கும் குணா சட்டுனு கல்யாணத்துக்கு ஒத்துப்பான்னு தோனல … நா அவன்கிட்ட பேசி புரிய வைக்கிறேன் … நீங்க கவலப் படாம கல்யாண வேலையை பாருங்கு … எப்ப வேணா கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறது போல இருக்கும்” என்று நம்பிக்கை கொடுத்து அறுதலாக பேசியவனிடம்





“மாமா ரொம்ப செல்பிஷ்சா இருக்கேன்ல … மூத்தவன் நீ இருக்கும் போது உன் கல்யாணத்த பத்தி பேசாம குணா கல்யாணத்துக்கு அவசரப் படுத்துறேன்ல … என்ன மன்னிச்சுடுடா தயா …” என்று குரல் கமற பேசியவரைக் கண்டு துடித்துப் போனவன்,





“என்ன மாமா இது … நீங்க என்ன புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானா … குணாக்கு கல்யாணம் ஆகாம நா மேரேஜ் பண்ணிக்க மாட்டேன் … என்ன இருந்தாலும் அவன் என் பாசக்கார தம்பி அம்மா ஒதுக்குனது போல என்னால எப்படி வேணா போன்னு தண்ணி தெளிச்சு விட முடியாது … கண்டிப்பா அவன மாத்திக் காட்டுவேன் மாமா … நீங்க கவலப் படாம நிம்மதியா போன வைங்க …” என்று நயமாக பேசி போனை வைத்தவனின் நிம்மதி அவனை விட்டு சென்றிருந்தது.





சிறிது நேரம் கண்ணை மூடி நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தவனின் மனம் முழுவதும் அவன் தம்பி குணாவே ஆக்கிரமித்திருந்தான். சொந்தமும் ஊரும் குணாவை பற்றி தப்பாக பேசினாலும், இதுவரை அவன் தம்பியை யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை. அந்தளவிற்கு தம்பி மேல் உயிரையே வைத்திருந்தான்.





குணாவின் வாழ்க்கை முறை தவறு என்று யுவாவிற்க்கு தெரிந்தாலும் இன்று வரை அவனை ஒரு கேள்வி கேட்டதில்லை. கேட்டாலும் ‘என் வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வாழ்கிறான் இது தவறா’ என்று பதில் கேள்வி கேட்பவனிடம் என்ன எதிர்பார்க்க முடியும். பாசம் வைத்த காரணத்துக்காக அவன் தவறுகளை பொறுத்துக் கொண்டதுமில்லாமல், அதற்கான பலன்களை தன் தோளில் சுமந்துக் கொண்டு திரிந்தான்.





நீண்ட மூச்சை இழுத்து விட்டவன் மெல்ல எழுந்து சென்று ஜன்னல் பக்கமாக நின்றுக் கொண்டு பரபரப்பான சாலையை வெறித்து பார்த்தான்.





காலை எட்டுமணி, உலகத்தில் உள்ள 90% மக்கள் பரபரப்புடன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, தன் பர்சனல் அசிஸ்டண்ட் ரேவதியுடன் குளியலறையில் காம விளையாட்டில் மூழ்கியிருந்தான் குணாளன். சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை குறைக்க நினைத்தானோ என்னவோ இன்று ரேவதியுடன் ஒரே ஷவரில் குளித்துக் கொண்டிருந்தான்.





நேற்றிரவு அவள் இங்கையே தங்கிவிட, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடிய விடிய கூடி களைத்தவர்கள் அதிகாலையில் தான் கண் அயர்ந்தார்கள். குணாவின் கைபேசி ஒலியில் தான் சற்று முன் இருவரும் கண் விழித்தனர்.





கண் விழித்ததும் குளிப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்தவனை தொடர்ந்து, அவன் அழையாமலே உள்ளே நுழைந்தாள் ரேவதி. ஷவரை திறந்துவிட்டு அதன் அடியில் நின்றவனின் மேனியை தீண்டிய நீரின் ஸ்பரிசத்தை கண்ணை மூடி அனுபவித்துக் கொண்டிருந்தவனின் இடுப்பை கட்டிக் கொண்டு பின் புறமாக அனைத்துக் கொண்டாள்.





அணைத்துக் கொண்டதும் மட்டுமில்லாமல் அவன் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக நடந்துக் கொள்ள அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளின் பின்னங்கழுத்தை பற்றி தன் முன் கொண்டு வந்தவன் ஆவேசமாக அவள் இதழ்களை கவ்விக் கொண்டான்.





இதழ் ரசத்தை மட்டும் பருகினால் போதாது என்னையும் சற்று ருசி பார் என்று அவளின் மேனி சவால்விட, பல காம போர்களை வெற்றிக் கொண்டவனின் மேனி அந்த சவாலை குதுகலத்துடன் ஏற்றுக் கொண்டது.





தீவிரமான யுத்தத்தில் மூழ்கியிருந்தவன் எப்பொழுதும் எந்த பிரச்சனையும் இல்லாமல் தன்னை காக்கும் கவசத்தை அருகிலிருந்த செல்பில் தேட, கையில் தட்டுப் படாமல் போனது.





“ஓ காட் … எப்பயும் ஸ்டாக் வச்சுருப்பேன் இப்ப கானும்… எங்க வச்சேன் தெரியுமா ரேவா …” என்று செல்ப்பை எட்டி பார்த்து தேடியவனைக் கண்டு பொறுமையிழந்தாள் ரேவதி.





“ஸ்டாக் இல்ல …. நைட் நீங்க போட்டது தான் லாஸ்ட் பீஸ் …” என்று பதிலளித்த ரேவதி, அவன் கன்னம் பற்றி இதழில் ஆழமாக முத்தமிட்டவள்,





“எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல … கமான் குணா … லாஸ்ட் டைமா என்ன ஹெவனுக்கு கூட்டிட்டு போங்க…” என்று அவன் உணர்ச்சிகளை சீண்டியப்படி பதிலளித்தவளை தன்னிடமிருந்து பிரித்து தள்ளி நிறுத்தினான்.





“வாட் … ஸ்டாக் இல்லையா … அத வாங்கி வைக்கிறத விட வேற என்ன வேலை உனக்கு இருக்கு … ஹொவ் கேன் யூ சே பிரச்சனையில்ல … நீ இத கேள்வி பட்டதில்லையா … சேப்டி பர்ஸ்ட் … ஆல்வேஸ் வியர் ஹெல்மெட் ஒயில் ரைடிங் … சாரி பேப் ஹெல்மெட் இல்லாம நா ரைட் போக மாட்டேன் …” என்று அழுத்தமாக மறுத்தவனை கண்டு அவளின் முகம் வாடிப் போனது.





“ப்ளீஸ் குணா … எனக்கு உங்கள முழுசா பீல் பண்ணனும் … இதுக்கு அப்புறம் எப்போ திரும்ப மீட் பண்ணுவோம் தெரில … நோ சொல்லாதீங்க … ஐ ப்ராமிஸ் கன்சீவ் ஆகாம நா பாத்துக்கிறேன் … ஐ ஜஸ்ட் வாண்ட் டூ பீல் யூ …” என்று குரல் கமற பேசியவள், காற்று புக முடியாதளவிற்கு அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.





சற்று அடங்கியிருந்த உணர்வுகள் மீண்டும் பேயாட்டம் ஆட, வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டவன்,





“நோ … ரேவா … ஐ காண்ட் … சேப்டி இல்லாம யார் கிட்டயும் நெருங்க மாட்டேன்னு உனக்கு தெரியாது …” கழுத்து நரம்பு புடைக்க கத்தியவன்,





“இப்போ கூட ஒன்னும் கெட்டுப்போல … ஜாப் விடுற ஐடியாவ விடு, எப்பவும் போல சந்தோசமா இருக்கலாம் … அதவிட்டு செண்டி கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத …” என்று கோபப்பட்டவனை பரிதவிப்புடன் பார்த்தவளுக்கு யுவராஜ் தயாளன் மீது கொலைவெறியே வந்தது.





ஒருநொடி இவனிடம் உண்மையை சொல்லிவிடலாமா என்று யோசித்தவளுக்கு தயாளன் மிரட்டியது வேற ஞாபகத்திற்கு வர, கண்கள் கலங்க,





“என்னால முடிஞ்சிருந்தா நா ஏன் உங்கள விட்டு போக போறேன் குணா … என்னோட சுச்சுவேஷன் அப்படி … நா நா …” என்று தயங்கிக் கொண்டிருக்கும் போதே,





“முடியாதுல … அப்போ கெட்அவுட் …” என்று ஸ்க்ரீனில் தொங்கிக் கொண்டிருந்த டவலை உருவி அவள் முகத்தில் அடித்தவன்,





“நா குளிச்சுட்டு வர்றதுக்குள்ள இங்கிருந்து கிளம்பியிருக்கனும் …” என்று கடுமை காட்டியவனுக்கு, அவள் தன் பேச்சை கேட்காத கோபம்.





குளியலறையை விட்டு வெளியே வந்த ரேவதியின் முகம் அவமானத்தில் கன்றியிருந்தது. இவ்வளவு நாள் தன்னை தலையில் தூக்கி வைத்து ஆடியவன் இன்று ஒரு நொடியில் சற்றென்று தன்னை தூக்கி எறிந்ததை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.





எட்டு வருடங்களுக்கு முன் விஜய் டிவி டான்ஸ் ஷோ மூலமாக வெளி உலகத்திற்கு டான்ஸராக அறிமுகமானான் குணாளன். திறமை இருந்தும் பெரிய இடத்து பழக்கம் இல்லாததால் கிணற்றில் போட்ட கல்லை போல சில டிவி ரியாலிட்டி ஷோவில் மட்டுமே தலைக் காட்டிக் கொண்டிருந்தவனுக்கு ரேவதியின் அறிமுகம் கிடைத்தது.





ரேவதி குணாவை விட ஐந்து வயது பெரியவள். திருமணம் ஆகி ஒரே வருடத்தில் கணவனை பிரிந்து வளமான எதிர்கால வாழ்விற்காக முட்டி மோதிக் கொண்டிருந்த காலம் அது.





துறுதுறு என்று ஒரு இடத்தில் நிற்காமல் பம்பரமாய் சுழன்ற குணா இவள் கவனத்தை கவர, இவனை சரியான முறையில் வழி நடத்தினால் நல்ல எதிர்காலம் இருக்கு என்று புரிந்துக் கொண்டவள், அவனுடன் வலிய சென்று நட்பு பாராட்டினாள்.





ஏற்கனவே இதே பீல்டில் அவள் வேலை பார்த்ததால், என்ன என்ன வழிகள் என்று தெரிந்திருந்ததால் மெல்ல மெல்ல தனக்கான ஒருஇடத்தை பிடித்திருந்தான் குணா. ஆரம்பகாலத்தில் டான்ஸ் டான்ஸ் என்ற நினைப்பில் சுற்றிக் கொண்டிருந்தவனின் அழுத்தத்தை குறைப்பதாக நினைத்து மெல்ல மெல்ல மதுவை பழக்கிவிட்டவள் கூடவே தன்னையும் அவனுக்கு விருந்தாக்கி அவனின் எதிர்கால காம விளையாட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டு அமோகமாக தொடங்கி வைத்தாள்.





அடுத்த இரு வருடங்களில் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து நின்றவனின் வளர்ச்சி அவளை மிரட்டி பார்த்தது. நல்ல திறமை கூடவே வசீகரிக்கும் அழகு, எங்கே தான் அவனுக்கு சலித்து போய் தன்னை விட்டு விலகி விடுவானோ என்ற பயத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு, வித விதமான விருந்தை படைத்தால் தன்னை விட்டு செல்ல மாட்டான் என்று யோசனை உதிக்க சற்றும் தயங்காமல் மற்ற பெண்களையும் அவன் படுக்கைக்கு விருந்தாக்கினாள்.





முதலில் அவள் ஏற்பாட்டிற்கு மறுப்பு தெரிவித்த குணா, போக போக இந்த வாழ்க்கை முறைக்கு தன்னை பழகிக் கொண்டான். இல்லை இல்லை அவனை பழக்கியிருந்தாள் ரேவதி. எங்கே சென்றாலும் தன்னிடம் தானே அவன் வந்து சேர்வான் என்ற திமிரில் சுற்றிக் கொண்டிருந்தவளின் ஆட்டத்தை ஒற்றை வீடியோவில் அடக்கியிருந்தான் தயாளன்.





தன்னை குணாவிடமிருந்து பிரித்து வெளியே தள்ளிய தயாளனின் மேல் கொலை வெறியே வந்தது. மனதில்,’ஏதாவது சின்ன பொறி கண்ணுல பட்டா கூட உன்ன பொசுக்காம விட மாட்டேன் டா … எந்த தம்பிக்காக என்ன விரட்டுனியோ அதே தம்பி உன்ன வெறுக்க வைக்கல என் பேர் ரேவதி இல்ல …’ என்று சபதம் எடுத்தவள் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினாள்.





ஷவருக்கு அடியில் நின்றிருந்த குணாவின் மனம் உலை களமாக கொதித்துக் கொண்டிருந்தது. ரேவதியின் பிரிவு அவனை மிகவும் பாதித்திருந்தது. வெளியே எனக்கு ஒரு பாதிப்பும் இல்லையென்ற ரீதியில் சுற்றிக் கொண்டிருந்தவன் உண்மையில் உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தான். இருவருக்கும் இன்று நேற்று பழக்கமா, கிட்டத்தட்ட எட்டு வருட பழக்கம். அவனுக்கு எல்லாமாகவும் இருந்தவள் ஆயிற்றே, சற்றென்று அவள் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் துடித்து போனான்.





மனம் மட்டுமா துடித்தது, உடலும் சேர்ந்தல்லவா துடித்துக் கொண்டிருக்கிறது. சற்று முன் அவள் பற்ற வைத்த மோக தீ அடங்காமல் இறங்கும் வழி தெரியாமல் துடித்துக் கொண்டிருக்க, ஆற்றாமையில் ஓங்கி சுவற்றில் கையால் குத்தினான்.





தன்னிலை இழக்கும் நேரங்களில் அவனுக்கு பெரிதும் கை கொடுப்பது அவன் நேசிக்கும் நடனம் தான். இதற்காகவே வீடு முழுவதும் ஒலிக்கும் அளவிற்கு மியூசிக் சிஸ்டத்தை செட் செய்திருந்தான். ஹால் பெட்ரூம் கிட்சன் பாத்ரூம் என்று எங்கிருந்தாலும் பாட்டை ஒலிக்க செய்யலாம். தன் மனநிலையை மாற்றும் பொருட்டு பாத்ரூமில் செட் பண்ணியிருந்த மியூசிக் சிஸ்டத்தில் இருந்து பாடலை ஒலிக்க விட்டான்.





“ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா



போதும் போதும் என போதை தீரும் வரை வா …” என்று ரீமிக்ஸில் மலேசிய வாசுதேவன் துள்ளல் குரலில் பாடிக் கொண்டிருக்க, அவர் குரலுக்கு போட்டி போடும் வகையில் துள்ளலுடன் ஆடிக் கொண்டே குளித்து முடித்தான் குணாளன்.





குளித்து முடித்தும் ஆடுவதை விடாமல் அதே பாட்டிற்கு ரிபீட் மோடில் தொடர்ந்து ஆடியவன் இடுப்பில் துண்டை கட்டியபடி பாத்ரூமை விட்டு ஆடியபடியே வெளியே வந்தான்.





அதே நேரம் நீண்ட நேரமாக கதவை தட்டி தட்டி சோர்ந்து போன சங்கீதா, பூட்ட படாத கதவை ஆத்திரத்தில் ஓங்கி உதைக்க, உதைத்த வேகத்திற்கு இடுப்பில் துண்டுடன் ஆடிட் கொண்டிருந்தவனின் காலடியில் போய் விழுந்தாள்.
 

Attachments

  • photo-output.jpeg
    photo-output.jpeg
    381.1 KB · Views: 4
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 3:



சங்கீதா அந்த கதவில் பொறிக்கப்பட்டிருந்த ‘கமலேஷ் குணாளன்’ என்ற பெயரை உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த போனில் இருந்து மீண்டும் ஒருமுறை பிளாட்டின் எண்ணை சரி பார்த்துக் கொண்டே,



“பேர பாரு கமலேஷ் குணாளனாம் … காம பிசாசுன்னு வச்சுருக்கணும் … குணம் இல்லாதவனுக்கு குணாளனாம் … எப்படி தான் இவங்க வீட்டுல இப்படி ஒரு பேர் வைக்க மனசு வந்துச்சோ …” என்று பொறுமியவள்,



“சரியான லூசு புடிச்ச குடும்பமாம் இருக்கும் போல … இங்க அவனவனுக்கு ஒரு பேருக்கே பஞ்சமா இருக்கும் போது … இதுங்களுக்கு மட்டும் ரெண்டு ரெண்டு பேரு … அதுவும் சம்பந்தமே இல்லாம … யுவராஜ் தயாளன் … கமலேஷ் குணாளன் … என் புள்ளைக்கும் மட்டும் இப்படி பைத்தியக்கார பேர் வைக்கிறேன் வரட்டும் அப்புறம் இருக்கு …” என்று தயாளனின் குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தவள்,



“ம்ம்க்கும் லவ் கூடுமோ கூடாதோ தெர்ல இதுல புள்ள பேருக்கு போய் நிக்கிற நீ …” என்று தன்னையே நொந்துக் கொண்டவள் தன் கோபத்தை எல்லாம் காலிங் பெல்லை அழுத்துவதில் காட்டினாள்.



விடாமல் சில நொடிகள் அழுத்திய பின் கையை கட்டிக் கொண்டு அவன் கதவை திறப்பதற்காக காத்திருக்க, ஐந்து நிமிடம் சென்றும் அவன் வந்த பாடில்லை.



“என்னதிது … நா அழுத்துன அழுத்துக்கு அவன் அண்ணனுக்கே கேட்டுருக்கும், இவன் என்ன தொறக்காம இருக்கான் … நைட் நல்லா குடிச்சுட்டு மட்டையாகிருப்பானோ …” என்று வாய் விட்டு புலம்பியவள் மீண்டும் காலிங் பெல்லை விடாமல் அழுத்திக் கொண்டிருந்தாள். காலிங் பெல்லை அடித்து அடித்து கை வலித்ததே தவிர கதவு திறந்தபாடில்லை.



அந்த நேரம் பார்த்து அவள் தம்பி மொபைலில் அழைக்கவும் கடுப்புடன் அழைப்பை ஏற்றவள்,



“ச்செழி … அந்த குடிகார நாய் எவ்வளவு பெல் அடிச்சாலும் கதவ தொறக்க மாட்டுறான் டா … கடுப்பு கடுப்பா வருது … பெல் அடிச்சு அடிச்சு கை வலிக்குது …” என்று குறைபட்ட தமக்கையை நினைத்து கோப வர,



“இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேல … அவன் சொன்னான்னு அங்க போய் நிக்கிற ஒன்ன என்ன சொல்ல … லூசு ஒன்னு சுய புத்தியாவது இருக்கனும் இல்ல சொல் புத்தியாவது இருக்கனும் … ரெண்டுமே இல்லாம டாங்கி போல வளந்துருக்க … அறிவு கெட்டவளே முதல்ல அங்கிருந்து கிளம்பி வாடி …” என்று கோபத்தில் கத்தினான்.



ஏற்கனவே குணாளன் கதவை திறக்காத கடுப்பில் இருந்தவளுக்கு செழியன் தன்னை முட்டாள் பெண்ணாக நினைத்து பேசியது பெரும் கோபத்தை உண்டுபண்ணியது.



“ச்சீ … தம்பின்னு நினைச்சு உன்கிட்ட சொன்னேன் பாரு என் புத்திய செருப்பாலே அடிச்சுக்கணும் …” என்றவளை கண்டு சிறிதும் மனம் இறங்காதவன்,



“யாரு வேணாம்னு சொன்னா … அதான் காலுல ஒன்னுக்கு ரெண்டா போட்டுருக்கியே எடுத்து அடிச்சுக்கோ … நா மட்டும் நேர்ல இருந்திருந்தேன் நீ சொன்னத செஞ்சுருப்பேன் …” என்று சீரிய தம்பியிடம் அடங்கி போனவள்,



“டேய் செழி … என்னடா நீயும் என்ன புரிஞ்சுக்கிற மாட்டுற …” என்றவளை மேலும் பேசவிடாமல்,



“என்ன மயிர புரிஞ்சுக்கணும் … அவனே உன்ன கழட்டி விட பிளான் பண்ணி அங்க அனுப்பி வச்சுருக்கான் இது தெரியாம அவன் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டிகிட்டு வந்துருக்க … இது என்ன சினிமாவா, நீ நினைக்கிறது போல நடக்க …” என்று கோபத்துடன் இடைமறித்தவனின் கூற்றில் இருந்த உண்மை ஏற்கனவே அவளும் அறிந்ததுதானே. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,



“அதெல்லாம் நா பாத்துக்குறேன் … சின்ன புள்ளையா லட்சணமா அக்காக்கு ஐடியா கொடு … சொல்லு எப்படி அந்த குடிகார பயல எழுப்புறது …” என்ற தமக்கையை கண்டு அவனால் நீண்ட நேரம் தன் கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடியாமல் போனது. முகத்தை வெறப்பாக வைத்துக் கொண்டு,



“அவன் குடிச்சுட்டு தூங்குறானு உனக்கு எப்படி தெரியும் … அவன் வாய மோந்து பாத்தியா …” என்று இருக்கிற கடுப்பில் கேட்டுவிட,



“சீஈஈ … கருமம் கருமம் … அவன் வாயையா … உவாக் …” என்று வாந்தி எடுப்பதை போல முகத்தை சுழித்தவள்,



“நா வெறியாகி ஒண்ண கடிச்சு கொதரரதுக்குள்ள போன வச்சுட்டு ஓடிடு …” என்ற தமக்கையை கண்டு வாய்விட்டு சிரித்தவன், பின்



“பின்ன யார பத்தியும் தெரியாம பேச கூடாது …அதுவும் ஆம்பளைங்களுக்கு ஒன்னுனா இந்த செழியன் பொங்கிடுவான் தெர்மா …” என்கவும் மொபைலை காதிலிருந்து எடுத்து முகத்தின் முன் கொண்டு வந்தவள்,



“த்தூ …” என்று துப்பிவிட்டு அழைப்பை துடித்தாள். மீண்டும் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தவளின் பொறுமை எல்லையை கடக்க, கடுப்பில் இரு கையையும் மடக்கி முகத்திற்கு நேரே கொண்டு வந்து ஆஆஆஆ என்று கத்திய நொடி, இரு வயதான பெண்கள் மேல் தளத்தில் இருந்து படியில் இறங்கி வந்தவர்கள் தன்னை மறந்து கத்தியவளை விசித்திரமாக பார்க்கவும்,



“ஹீஹீ …இந்த ப்ப்ளோர்ல சிக்னல் ஒழுங்கா எடுக்குதான்னு ஜியோல இருந்து டெஸ்ட் பண்ண வந்திருக்கேன் மேம் …” என்று தானே வலிய சென்று பதிலளித்தவளை சிறிதும் மதிக்காமல் கடந்து கீழே இறங்கி சென்றனர்.



“திமிர் பிடிச்ச கிழவீங்க …” என்று அவர்களை திட்டியவள்,



“நைட் எத்தன பொண்ணுங்க கூட கூத்தடிச்சானோ தெர்ல சத்தம் கேட்குறது கூட தெரியாம தூங்குறான் … இவன …” என்று பல்லை கடித்தவள் இருக்கிற கடுப்பில் அவனை உதைப்பதாக நினைத்து கதவை ஓங்கி உதைக்க, பூட்டப்படாத கதவு திறந்து கொண்டு வழி விடவும், உதைத்த வேகத்தில் அவன் காலடியில் போய் விழுந்தாள்.



தன் காலடியில் வந்து விழுந்தவளை புருவம் இடுங்க பார்த்தவன், இடுப்பில் சுற்றியிருந்த துண்டை கண்ணிமைக்கும் நேரத்தில் அவிழ்த்து கீழே விழாதவாறு சரியாக கட்டிக் கொள்ள அதிர்ந்து போய் பார்த்திருந்தாள் சங்கீதா.



“அட கருமம் புடிச்ச தடிமாடே கொஞ்ச நேரத்துல கண்ணு அவிழ பாத்துச்சு டா …” என்று தனக்குள் முணுமுணுத்தவள் அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஹீஹீ என்று அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்க்க செய்தாள்.



அவள் உதடுகள் முணுமுணுத்ததை வைத்தே தன்னை திட்டுகிறாள் என்று அறிந்துக் கொண்டவனின் முகம் கடுமையை பூசிக் கொண்டது. மெல்ல கீழே இருந்தவளை பார்த்தபடி நடந்து சென்று மியூசிக் சிஸ்டத்தின் ரிமோட்டை கையில் எடுத்து ஒலித்துக் கொண்டிருந்த பாட்டை நிறுத்தினான். பின் ரிமோட்டால் மேலே எழும்படி அவளிடம் சைகை செய்தவன், ஒற்றை புருவத்தை ஏற்றி யார் நீ என்ற பார்வை பார்க்க,



‘அய்யோ தொற வாய தொறந்து பேச மாட்டாறா ரொம்பத்தான் சீனு …’ என்று மனதில் அவனை வறுத்துக் கொண்டே மேலே எழுந்தவள்,



“ராம்குமார் அனுப்பினார் … அவர் பேர் சொன்னாலே உங்களுக்கு புரியும் சொன்னார் சார் …” என்று பதிலளித்தவளை நெற்றி சுருங்க பார்த்தவனுக்கு அவள் எதற்காக வந்திருக்கின்றாள் என்று புரிந்தது.



“ஓஹ் …” என்றவன், “ராம்குமார் அனுப்புன ஆளுக்கு இன்னும் பேர் வைக்கலையா …” என்று நக்கலாக கேட்க,



“ஹீஹீ … நல்ல காமெடி சென்ஸ் சார் உங்களுக்கு …” என்று வழிந்தவளை முறைத்து பார்த்தவன் முதலில் உன் பெயரை சொல் என்ற பார்வை பார்க்க,



‘என்ன இவன் வந்ததுல இருந்து மொறைச்சுகிட்டே இருக்கான் … பொண்ணுன்னு எழுதி இருந்தாலே ஜொள்ளு விடுவான் தானே பின்னாடிகட்டைக்காரன் காட்டிருந்தான் … நம்மள திரும்பிக் கூட பாக்க மாட்டுறான், ஒருவேள நாம பாக்க பொண்ணு போல இல்லையோ …’ என்று மனதில் நினைத்தவள் அவனின் அழுத்தமான பார்வையில்,



“சாரி சார் … ப்ராப்பரா இன்ட்ரோ பண்ண மறந்துட்டேன் … ஐ அம் சங்கீஈ சார் …” என்று தன் பெயரை கூறியவளை ஒரு தினுசாக பார்த்தவன்,



“சங்கீஈஈஈயா … உன்ன கூட வச்சுக்கிட்டா அடி வாங்க வச்சுட மாட்டல்ல …” என்று நக்கல் அடித்தவனை கண்டு வரவைத்து சிரிப்புடன் பார்த்தவள்,



“அது அடிவாங்குற சங்கீஈஈ இல்ல சார் … சங்கீத்தாவோட சங்கீ …” என்று திருத்தியவளை உதட்டை பிதுக்கி பார்த்தவன்,



“ஓகே … சங்கீஈஈஈத்தா … இப்போ உங்க பேரை சொல்லுங்க …” என்றவனை கண்டு எரிச்சல் வந்தாலும் அடக்கிக் கொண்டவள்,



“சார் அது சங்கீஈஈஈத்தா இல்ல சார் … ஜஸ்ட் சங்கீதா … நீங்க நடுவுல ரொம்ப அழுத்தம் கொடுத்து கூப்பிடுறீங்க …” தன்னை மீறி கூறியவளை அழுத்தமாக பார்த்தவன்,



“ஏன் அழுத்தம் கொடுத்து கூப்பிட்டா நீங்க திரும்பி பாக்க மாட்டிங்களா சங்கீஈஈஈத்தா …” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி கேட்கவும்,



“ஓஹ் … கூப்பிடுலாமே ஹீஹீ .. எனக்கு நோ இஸ்ஸுஸ் சார் …” என்று வந்த கோபத்தை பல்லை கடித்து பொறுத்துக் கொண்டு பதிலளித்தாள்.

அவள் முகம் கடுப்பதை கண்டு கொண்டவன்,



“ஓகே … நொவ் டெல் மீ யுவர் நேம் சங்கீஈஈஈத்தா …” என்று மீண்டும் ஆரம்பித்தவனை கண்டு அதிர்ந்து போய் பார்த்தவள், தொண்டையை செருமி



“அதான் என் பேர சொல்லி தானே கூப்பிடுறீங்க அப்புறம் எதுக்கு சார் திரும்ப திரும்ப கேட்குறீங்க …” என்றவளின் குரலில் சிறு எரிச்சல் எட்டி பார்த்தது.



‘எவ்வளவு கூலான ஆள் நா … என்னையே டென்ஷன் பன்றானே … பேசாம போடா நீயும் வேணாம் உன் அண்ணனும் வேணாம்னு போய்டுலாமா …’ என்று மனதில் நினைக்க அது முகத்திலும் பிரதிபலித்தது.



“ஏன் தெரிஞ்சுக்கிட்டே கேட்டா பதில் சொல்ல மாட்டிங்களோ … உங்களுக்கு அந்தளவுக்கு பொறுமை இல்லையா சங்கீஈஈத்தா …” என்றவனை கண்டு உள்ளுக்குள் பல்லை கடித்தவள்,



“ஓஹ் … சொல்லலாமே சார் … ஹாய் சார் ஐ அம் சங்கீதா …” என்று முப்பத்திரண்டு பல்லையும் காட்டி சிரித்தவளை கண்டு தலையை மேலும் கீழுமாக அசைத்தவன்,



“ம்ம்ம் சங்கீஈஈத்தா …” என்று அழைத்தவன் திறந்திருந்த கதவை கண்களால் காட்டி சாற்றும்படி சைகை செய்தான். அவனின் விழி மொழியை அறிந்துக் கொள்ள முடியாமல் திணறியவள்,



“எ … என்ன சார் …” என்று தடுமாறிக் கேட்க, அலுத்துக் கொண்டே,



“ம்ப்ச் … நீ இந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டா போல … நா இருக்கிற பிசிக்கு பேசிகிட்டு இருக்க முடியாது ... என் கண்ணு சொல்றத புரிஞ்சுகிட்டு தீயா பத்திக்கணும் …” என்று விளக்கம் கொடுத்தவனை பாவமாக பார்த்தபடி,



“அய்யோ சார் … உங்களை நம்பித்தான் வந்துருக்கேன் … இப்போ மட்டும் என்னனு சொல்லுங்க இனி நானே உங்க கண்ணு காட்டுறது புரிஞ்சு பண்ணுறேன் … என் வாழ்க்கையே உங்க கைல தான் இருக்கு சார் …” விட்டால் அழுதுவிடுபவள் போல பேசியவளை கண்டு அதிருப்தியாக தலையாட்டிக் கொண்டான். பின் இடுப்பில் கையை ஊன்றியபடி மூச்சை இழுத்துவிட்டவாறே அவளை பார்த்து,



“டோர் ஓபன்ல இருக்கு போய் க்ளோஸ் பண்ணிட்டு வா …” என்ற அடுத்த நொடி மின்னலை விட வேகமாக ஓடி என்று கதவை சாற்றிவிட்டு வந்து அவன் முன் நின்றாள்.



“க்ளோஸ் பண்ணிட்டேன் சார் … அடுத்து என்ன பண்ணனும் …” என்று நல்ல பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவளை ஒரு தினுசாக பார்த்தவன்,



“வெயிட் ஹியர் …” என்றுவிட்டு பால்கனியை நோக்கி சென்றான். இவன் எதற்கு பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே செல்கிறான் என்று யோசித்தவள், அவன் அறியாமல் அவனை பின் தொடர்ந்து சென்றாள்.



குணாளனுக்கு தலையை விண்வின் என்று வலிக்க ஆரம்பித்தது. சற்று முன்பு ரேவதி ஏற்றி வைத்த தலைவலியை பெரும்பாடு பாட்டு இறக்கி வைத்தவனின் தலையில் ஏறி உட்கார்ந்துக் கொண்டாள் சங்கீதா. நெற்றி பொட்டை தேய்த்துவிட்டுக் கொண்டவன் ராம்குமாரை தான் போனில் அழைத்திருந்தான்.



“டேய் குணா …” என்று ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தவனை,



“எத்தனை நாள் என் மேல உனக்கு கோபம் ராம் … கேண்டிடேட் அனுப்புறன் சொல்லி ஒரு கேனச்சிய அனுப்பி வச்சுருக்க … பொண்ணா டா அது … மெண்டல், உள்ள என்டர் ஆனதுல இருந்து பல்ல காட்டிட்டே நிக்கிது … சுருக்கமா சொல்லனும்னா நீ அனுப்பின பொண்ணு சாணி மாதிரி இருக்கு … இவலாம் எனக்கு செட் ஆக மாட்டா சாரிடா நா வேணாம்னு சொல்லி திருப்பி அனுப்பிட போறேன் …” என்று கோபத்தில் பொரிந்து தள்ள, அதை கேட்டுக் கொண்டிருந்த சங்கீதா கொதித்து போனாள்.



‘என்னது சாணியா … என்ன திமிரு … டேய் இதுக்காகவே உன் காலுல விழுந்தாவது இந்த வேலைல சேர்ந்து உன்ன சாணியால அடிச்சா எப்படி இருக்கும்னு காட்டல நா சங்கீதா இல்லடா …” என்று மனதில் கருவியவள் சத்தம் எழுப்பாமல் திரும்பவும் ஹாலுக்கு சென்றுவிட்டாள்.



தன் நண்பன் கூறியதை கேட்டு பதறிப் போனவனுக்கு, சங்கீதாவை கண்டிப்பாக குணாளனிடம் வேலைக்கு சேர்த்து விடுவதாக தயாளனுக்கு வாக்கு கொடுத்திருந்தான்.



“டேய் குணா … பாத்ததும் எப்படிடா அவளை பத்தி தெரிஞ்சுக்க முடியும் … நல்ல டேலண்ட் ஆனா பொண்ணு டா … ப்ளீஸ் மச்சான் அவசரப்படாத … நா அவகிட்ட வாக்கு கொடுத்திருக்கேன் டா …” என்று பேசிக் கொண்டிருந்தவனை



“நீ வாக்கு கொடுத்தா அதுக்கு நா என்ன பண்ண முடியும் … என்னால இந்த விஷயத்துல உனக்கு ஹெல்ப் முடியாது …” என்று அவசரமாக இடைமறித்து கூறியவன் அழைப்பை துண்டித்திருந்தான். அழைப்பு துடிக்கப்பட்டதும் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்ட ராம்குமார் அடுத்தது அழைத்தது கிரிதரனை தான்.



“ஹெல்லோ கிரி … அண்ணா கிட்ட சாரி சொன்னேன் சொல்லிடு …” என்றதும், மெல்ல சிரித்துக் கொண்ட கிரி,



“என்ன புட்டுக்கிச்சா …” என்று சிரிக்க,



“ஆமா … அனுப்புனதுதான் அனுப்புனீங்க கொஞ்சம் புத்திசாலியான பொண்ணா பார்த்து அனுப்பியிருக்கலாம்ல … குணா போன் பண்ணி கண்ட படி திட்டி வச்சுட்டான் …” என்று அலுத்துக் கொண்டவனிடம்,



“சரிவிடு நா பாஸ் கிட்ட சொல்லிக்கிறேன் … தேங்க்ஸ் …” என்று போனை வைத்திருந்தான்.



இங்கே ராம்குமாரிடம் பேசிவிட்டு கூடத்திற்கு வந்த குணாளன், அங்கே ஒருவித பதட்டத்துடன் நின்றிருந்த சங்கீதாவை கண்டுவிட்டு அதிருப்தியில் தலையை இடமும் வலமுமாக ஆட்டியவன்,



“லுக் சங்கீ …” என்று ஆரம்பித்த அடுத்த நொடி வேகமாக அவன் அருகில் வந்தவள்,



“சார் சார் ப்ளீஸ் சார் வேலை இல்லனு சொல்லிடாதீங்க … இனி உங்க முன்ன பல்ல காட்டவே மாட்டேன் … அது ஏன் இனி நீங்க இருக்கும் போது வாயவே திறக்க மாட்டேன் … ஒரே ஒரு சான்ஸ் மட்டும் எனக்கு கொடுத்து பாருங்க சார் … இது என் வாழ்க்கை பிரச்சனை …” என்று இருகைகளையும் அவன் முன் குவித்து கெஞ்சிக் கொண்டிருந்தாள்.



தன் முன்னே கெஞ்சிக் கொண்டிருந்தவளை அழுத்தமாக பார்த்தவன்,



“ஒட்டு கேட்டியா …” என்று கேட்க சற்று தயங்கி ஆம் என்று தலையாட்டியவளை முறைத்து பார்த்தவனுக்கு என்ன பெண்ணிவள் என்றே நினைக்க தோன்றியது. நெற்றியை சொறிந்துக் கொண்டே,



“எனக்கு பி.ஏ வா இருக்கிறது அவ்வளவு ஈஸியான வேலை இல்ல … உன்ன பார்த்தா நல்ல ஹோம்லி கேர்ள் போல இருக்க … கண்டிப்பா இந்த வேல உனக்கு செட் ஆகாது … ராம்கிட்ட சொன்னா இதவிட நல்ல பெட்டெர் ஜாப் ஏற்பாடு பண்ணி தருவான் …” என்று நயமாக அவளுக்கு புரியும்படி பேசியவனை கண்களில் கண்ணீருடன் ஏறிட்டு பார்த்தவள்,



“ப்ளீஸ் சார் … எனக்கு ஏத்த வேலை இது இல்லைனு கண்டிப்பா எனக்கு தெரியும் சார் … இருந்தும் இந்த வேல தான் வேணும்னு சொல்றதுக்கு ஒரு ரீசன் இருக்கு …” மீண்டும் கெஞ்சியவளை அழுத்தமாக பார்த்தவன்,



“உள்ள கப்போர்ட்ல ரெட் கலர் டீஷர்ட் இருக்கும் எடுத்துட்டு வா …” என்று சாதாரணமாக கூறியவனை அதிர்ந்து போய் பார்த்தவள், பின் இது தனக்கு அவன் வைக்கும் பரிட்சை என்று உணர்ந்து மறுப்பு சொல்லாமல் மின்னல் வேகத்தில் அவன் அறைக்குள் சென்று அவன் கேட்ட கலரில் டீஷர்டை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.



ஆனால் அந்த ட்ரெஸ்ஸை எடுத்துக் கொண்டு வந்த ஒரு நிமிடத்தில் ஊரில் உள்ள கெட்ட வார்த்தைகள் அனைத்தும் போட்டு திட்டி முடித்திருந்தாள். தன் முன் நீட்டிய டீஷர்டை புருவம் சுருக்கி பார்த்தவன் அதை வாங்காமல் டீசர்ட்டை போடுவதற்கு ஏதுவாக கைகள் இரண்டையும் மேலே தூக்கி காட்டினான்.



கைகளின் இடுக்கில் மழிக்கப்படாத ரோமங்களுடன் வெற்றுடன்புடன் நின்றவனை கண்டு முகம் சிவந்தவள் பாவமாக அவனை பார்த்தாள். அவள் கெஞ்சலை சிறிதும் கண்டுக் கொள்ளாதவன், “ம்ம்ம்” கண்களால் டீஷிர்ட்டை போட்டுவிடும் படி கூற,



‘கட்டைல போறவன் நா வேல வேணாம்னு சொல்லிட்டு ஓடனும்னு நினைச்சு எவ்வளவு டார்ச்சர் பண்றான் … கை ரெண்டும் நல்லாத்தானே இருக்கு போட்டுக்கிட்டா என்னவாம் டீசர்ட் மட்டும் போட்டா போதுமா இல்ல ஜட்டியும் போட்டுவிடனுமா …’ என்று உள்ளுக்குள் புலம்பியப்படி எப்படி உடல் உரசாமல் டீஷர்ட் போட்டுவிடலாம் என்று யோசித்தாள். பின் தலையை குலுக்கி,



‘பஸ்ல போகும் போது எத்தன எருமைங்க உரசுங்க, அதுல ஒரு எருமையா நினைச்சுப்போம் … இல்லனா மூள வளர்ச்சி இல்லாத ஆளா நினைச்சு மனச திடப்படுத்திகிட்டு போட்டு விட்ர வேண்டியதுதான் …’ என்று நினைத்து அவன் அருகில் சென்றவள் போட்டுவிடுவதற்காக டீஷர்ட்டை தூக்கி பிடிக்கவும் அவளிடமிருந்து டீஷர்ட்டை பறித்துக் கொண்டான். அதுவரை பிடித்திருந்த மூச்சை இழுத்துவிட்டவளின் முகம் நிம்மதியில் மலர,



‘பரவால்ல போல கொஞ்சோண்டு கொஞ்சம் நல்லவன் போல …’ என்று நினைத்துக் கொண்டாள். அது முகத்திலும் பிரதிபலிக்க, அவள் முகத்தையே பார்த்திருந்தவன் உதட்டில் சிறு புன்னகை. ஏனோ அவளை சட்டென்று விரட்டிவிட அவன் மனம் ஒத்துழைக்கவில்லை. தன்னையே குறுகுறு என்று பார்த்தவளிடம்,



“சரி சொல்லு உனக்கும் உன் புருஷனுக்கும் என்ன பிரச்சன …” என்று திடீரென்று அவன் கேட்கவும் திணறிவிட்டாள் சங்கீதா.



“அது …” என்று இழுத்தவளுக்கு இந்த கேள்வியை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. ராம்குமார் சங்கீதாவிற்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், இவள் உலகம் அறியாத அப்பாவி என்றதால் கணவன் அவளை விட்டு பிரிந்து விட்டதாகவும், மீண்டும் கணவனுடன் சேர்வதற்காக நாலு பேரிடம் பழகி கரண்ட் ட்ரெண்டில் தன்னை மாற்றிக் கொள்ளவே இவனிடம் வேலைக்கு அனுப்பிவிட்டதாக கதை கட்டியிருந்தான். என்ன சொல்வது என்று யோசித்தவள்,



“ஒரு பிரச்சனையும் இல்லையே …” என்று சிரித்தவாறே பதிலளித்தவளை, தலைக்கு ஜெல்லை தடவியபடி திரும்பி பார்த்தவன்,



“ஓஹோ … அப்போ ஒரு பிரச்சனையும் இல்லைனா எதுக்கு என்கிட்ட வேலைக்கு வரனும் …” தலையை சீப்பால் வாரியபடி கண்ணாடி வழியே அழுத்தமாக பார்த்தவன் அவள் பதிலுக்காக காத்திருக்க, மீண்டும் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனவள், அவனின் அழுத்தமான பார்வையில்,



“அது பர்சனல் ரீசன் சார் …” அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னை விடமாட்டான் என்று புரிந்ததால் வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள். அவளின் பதிலில் திரும்பி நின்று அவளை பார்த்தவாறே பெர்பியூமை எடுத்து கழுத்து பகுதியில் சர்க் சர்க் என்று அடித்துக் கொண்டே,



“என் பிஏக்கும் எனக்கும் நடுவுல எந்த ஒளிவு மறைவும் இருக்கறத நா விரும்ப மாட்டேன் … இஷ்டம் இருந்தா சொல்லலாம் இல்ல …”என்று வாசல் பக்கம் கண்ணைக் காட்டியவன்,



“எனக்கு காலையிலையே ஒரு ரிகர்சல் இருக்கு … ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு … எதுவா இருந்தாலும் உன் கைலதான் இருக்கு …” என்று மறைமுகமாக நீ உன் பர்ஷனலை சேர் பண்ணாத்தான் வேலை என்று மிரட்டல் விட்டிருந்தான்.



‘கன்றாவி பிடிச்சவன் சம்பளம் கொடுக்கிறான்னு அடுத்தவங்க பெட்ரூம்ல எட்டி பாப்பானா … எல்லாம் அந்த தயாளனை சொல்லணும் … பெரிய இவனாட்டம் லவ் அக்சப்ட் பண்ண கண்டிஷன் போடுறான் … இந்த குணங்கெட்டவன் என்னனா பதில் சொல்லலைனா வேல தரமாட்டான் போல … சரி எதையாவது அடிச்சு விடுவோம் … உண்மையா இருந்தாத்தானே பயப்படணும் …’ என்று மனதை திடப்படுத்திக் கொண்டவள்,



“ரெண்டு பேருக்கும் பிரச்சனை ஒண்ணுமில்ல … பட் அவர்தான் என்ன விட்டு போனார் … அது … நா அவர் எதிர்பார்த்தது போல இல்லைனு சொல்லிட்டு … ” என்று தயங்கி நிறுத்தியவளை நிமிர்ந்து பார்த்தவன், “சிட் …” என்று அருகிலிருந்த சோபாவை காட்ட பிகு பண்ணாமல் அமைதியாக உட்கார்ந்துக் கொண்டாள்.



அவள் உட்கார்ந்ததும் பொறுமையாக வாட்சையும் கை காப்பையும் இரு கைகளிலும் போட்டு கொண்ட பின் அவள் எதிரே இருந்த ஷோபாவில் உட்கார்ந்துக் கொண்டான்.



“லுக் சங்கீஈஈத்தா … இப்பவும் எனக்கு உன்ன வேலைக்கு எடுக்க விருப்பம் இல்லை தான் பட் … ராம் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் அவன் சொல்லி மறுக்க மனசு வரலை … என்னோட லாஸ்ட் பிஏ ரேவா கூட லிவிங்க்ல இருந்தேன் … எனக்கும் அவளுக்கும் எந்த விஷயத்துலையும் ஒளிவு மறைவு அவ இருந்த வரைக்கும் இருந்ததில்ல … அதே தான் உன்கிட்டயும் எதிர்பார்க்கிறேன் …” என்றவனின் பேச்சில் அதிர்ந்து போய், “சார்ர்ர்ர்ர் …” என்று கூச்சலிட்டுவாரே எழுந்து நின்றாள். அவளின் அதிர்ந்த தோற்றத்தை கண்டவன்,



“ம்ப்ச் இப்போ எதுக்கு இந்த ஷாக் … நா லிவிங்ல இருந்தேன் தான் சொன்னேன் … உன்ன இருக்க வானு கூப்பிடல … நா சொன்னது உனக்கும் எனக்கும் நடுவுல எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது … நா இண்டெர்ஸ்ட் காட்டுற பொண்ணுங்க எல்லாம் குடும்ப வாழ்க்கைல இருந்து பிரிஞ்சு வந்தவங்களா இருப்பாங்க, இல்ல ஏற்கனவே இதுல ஊறி போனவங்களா தான் இருப்பாங்க … பேமிலி கேர்ள்ஸ் பக்கம் போக மாட்டேன் அப்படிதான் வெர்ஜின் பொண்ணுங்க கிட்டையும் வச்சுக்க மாட்டேன் … புரியுதா … தேவையில்லாதத கற்பனை பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு இருக்காதா …” என்று நீளமாக விளக்கம் கொடுத்துவிட்டு எழுந்தவன்,



“எனக்கு ரிகர்சலுக்கு டைம் ஆகிடுச்சு … நீ நாளைக்கு காலைல ஸ்டூடியோ வந்துடு … மத்ததை அப்புறம் பேசலாம் …” என்றவன் கிளம்பிவிட்டான்.



தன்னுடைய அலுவலக அறையில் உட்கார்ந்துக் கொண்டு கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த தயாளனின் டோரை தட்டிக் கொண்டு உள்ளே வந்தான் கிரி.



“பாஸ் குணா சங்கீதாவ வேலைக்கு சேர்த்துக்கிட்டாராம் ராம் இப்பதான் போன் பண்ணி சொன்னான் …” என்றவனுக்கு “ம்ம்ம்” என்று மட்டும் பதிலளித்தவன் தன் வேலையை தொடர்ந்தான்.



சில நொடிகள் சென்ற பின் இன்னும் செல்லாமல் அங்கேயே நின்றிருந்த கிரியை மெல்ல ஏறிட்டு பார்த்தவன்,



“எஸ் கிரி …” என்கவும் இதற்காகவே காத்திருந்தார் போல,



“பாஸ் நீங்க தப்பு பண்றிங்களோனு தோனுது … என்னதான் இருந்தாலும் சங்கீதாவ குணா கிட்ட அனுப்பியிருக்க கூடாது …” என்றவனின் குற்றச்சாட்டில் நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கியவனிடம்,



“ஐ க்நோ பாஸ் … உங்களுக்கு சங்கீதாவை புடிக்கும் …” என்றவனை அவசரமாக இடைமறித்த தயாளன்,



“கிரி … உனக்கு ஆபிஸ் ஒர்க் பார்க்கதான் சம்பளம் கொடுக்குது, என்னோட பர்ஷனலை பத்தி பேச இல்ல … காட் இட் …” என்றவனின் குரலில் தெரிந்த கடுமையில்,



“சாரி பாஸ் … நா மேத்தா பைல மூவ் ஆகிடுச்சானு பாக்கிறேன் …” என்று வேலை விஷயத்தை மட்டும் பேசிவிட்டு சென்ற கிரியின் முதுகை புன்சிரிப்புடன் பார்த்தவன், தன் மொபைலை கையில் எடுத்து போட்டோ கேலரியை தேடிச் சென்று தனக்கு விருப்பமான புகைப்படத்தை திறந்து பார்த்தவனின் இதழ்கள் அழகான புன்னகையில் விரிந்தன.



“கிறுக்கி ரெண்டு வாரமா உன்ன பாக்காம ஏதோ என்னவிட்டு போன பீல் … என்னையே சுத்தி சுத்தி வந்தப்போ தெரியாத உன் அருமை உன்ன பாக்க முடியாதப்பதான் பீல் ஆகுது … சீக்கிரம் என்கிட்ட வந்துடு கிறுக்கி …” என்று மொபைலில் குறும்பாக சிரித்துக் கொண்டிருந்த சங்கீதாவை மனதோடு கொஞ்சிக் கொண்டிருந்தான் யுவராஜ் தயாளன்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA- 4:



அதிகாலை ஐந்து மணி விளையாட்டு திடலை சுற்றி ஓடிக் கொண்டிருந்த தயாளனின் மனம் ஒருநிலையில் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. ஓடியவாறே நாலாபுறமும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில் தேடியது கிடைக்காத ஏக்கம். மனம் தன்னாலே பாரமாகிவிட ஓடுவதை நிறுத்திவிட்டு அருகில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் உட்கார்ந்துவிட்டான்.



பதட்டத்துடன் ஓடியதால் வியர்வை ஆறாக உடலில் பெருக்கெடுத்து ஓடியது. கண்ணை மூடி அமர்ந்திருந்தவனின் மனக்கண்ணில் இரு வாரங்களுக்கு முன் நடந்தது படமாய் ஓடியது. மகளின் திருமண விஷயத்தில் மாமாவின் புலம்பலையும் அம்மாவின் கண்ணீரையும் கண்டவனுக்கு, தம்பி விஷயத்தில் இனியும் பொறுமையாக இருப்பது நல்லதில்லை என்று முடிவெடுத்திருந்தான்.



என்ன பண்ணலாம் என்ற நீண்ட யோசனையில் இருந்தவனின் கண்ணில் பட்டாள் சங்கீதா. வழக்கம் போல அவனை சைட் அடிப்பதற்காக லஞ்ச் பிரேக் நேரத்தில் தயாளனின் ஆபீஸ் கார் பார்க்கிங் அருகில் இருந்த மரத்தில் மறைந்து நின்றுக் கொண்டு அவன் இருக்கும் அறை பக்கமாக பார்வையை பதித்து எக்கி எக்கி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை கண்டதும் இருக்கின்ற பிரச்சனையில், ‘என்ன பெண்ணிவள் …’ என்ற வெறுப்புதான் அவனுக்கு தோன்றியது.



இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணியவனாக, கிரியை அழைத்து தன்னிடம் சங்கீதாவை அழைத்து வரும்படி பணித்திருந்தான். தன்னை நோக்கி வேக நடையிட்டு வந்த கிரியை கண்டதும் தாமாகவே அவன் முன் வந்தவள்,



“ஹய் ப்ரோ … என்ன உங்க பாஸ் என்ன கூட்டிட்டு வர சொன்னாரா … வா ப்ரோ போலாம் …” என்று முன்னே நடந்தவளைக் கண்டு, ஒருநொடி திகைத்து போனவன்



“இந்தம்மா பாப்பா … நில்லு … எங்க அந்த பக்கம் போற … ஒண்ண யாரும் கூட்டிட்டு வர சொல்லி அனுப்பல … இனிமே இந்த பில்டிங்கில காலடி எடுத்து வச்சா ஒன் கால் இருக்கிற இடத்துல கால் இருக்காதுன்னு பாஸ் சொல்ல சொன்னார் …” என்று தனக்கு முன் அவளே வந்த காரணத்தை அறிந்த கடுப்பில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,



“ஏன் உங்க பாஸ் எனக்கு கால் கட்டு போட போறாரா …” என்று துடுக்காக கேட்கவும்,



“ஜோக் மொக்கையா இருக்கு ரசிக்க முடில …” என்ற கிரியிடம்,



“நீ ரசிக்க வேணாம் ப்ரோ உங்க பாஸ் மட்டும் ரசிச்சா போதும் …” என்று பதிலளித்தவள்,



“இங்க பாரு ப்ரோ … உனக்கும் எனக்கும் எந்த வாய்க்கா தகராறும் இல்ல … உன்கிட்ட சொன்னத உங்க பாஸ் என்கிட்ட சொல்லட்டும் … நா பாட்டுக்கு …” என்றவளை,



“கிளம்பி போய்கிட்டே இருப்பியா …” என்று அவசரமாக இடைமறித்த கிரியை நக்கலாக பார்த்தவள்,



“ஹொய் ஹொய்னானாம் … இந்த சங்கீய பாத்தா இளிச்ச வாய் போல தெர்தா … இவ்வளவு வருஷம் உங்க பாஸ் பின்னாடி நாய் போல அலைஞ்சுருக்கேன் … எனக்கே தெரியாம கவனிச்சு இருக்க அந்த மனுசன பாத்து நாலு இல்லல பத்து கேள்வி நறுக்குன்னு கேட்டா தான் என் மனசு ஆறும் …” என்கவும்,



“அப்போ கேட்டுட்டு போய்டுவியா …” என்ற கிரியை கண்டு உதட்டை பிதுக்கியபடி தலையாட்டியவள்,



“நோ … கேள்வி கேட்டு குற்றவுணர்வுல துடிக்க வச்சு டார்ச்சர் பண்ணி லவ் பண்ண வைப்பேன் …” என்றவளின் பதிலில் தன் தலையில் அடித்துக் கொண்டவனை மதிக்காமல் தயாளனை காண முன்னே நடந்து சென்றாள்.



‘சரியான அராத்து … நல்ல வேள பாஸ்க்கு இது மேல இன்ட்ரெஸ்ட் இல்ல …’ என்று மனதில் நொந்த படி அவளை பின் தொடர்ந்து சென்றான் கிரி.



யுவராஜின் அறையை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றவளை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்த தயாளன்,



“ரூம்குள்ள வர்றதுக்கு முன்ன டோர தட்டிட்டு வரணும்னு மேனர்ஸ் தெரியாதா …” என்று முகம் சுருக்கி கடுகடுத்தவனை நோக்கி,



“சோரி …” என்று பதிலளித்தவள் வேகமாக வெளியேறி, கதவை தட்டியபடி,



“மே ஐ கமின் சார்ர்ர்ர்ர் …” என்று மீண்டும் உள்ளே நுழைந்தவளை கண்டு பார்த்துக் கொண்டிருந்த பைலை மூடியபடி முறைத்து பார்த்தான். அவன் இதழ்களோ, “இடியட் …” என்று முணுமுணுக்க, அதை கண்டுக் கொண்டவள்,



“நமக்குள்ள என்ன பார்மாலிட்டிஸ்ன்னு நினைச்சுட்டேன் யுவா …” என்று சாதாரணமாக பதிலளித்தபடி அவன் முன்னிருந்த சேரில் உட்கார்ந்தவளைக் கண்டு கோபத்தில் தயாவின் முகம் சிவந்து போக, சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த கிரியை பார்வையால் பொசுக்கிக் கொண்டிருந்தான்.



‘ம்ம்க்கும் … என்ன எதுக்கு மொறைக்குறீங்க … இவ்வளவு வருஷம் அந்த பொண்ண உங்க பின்னாடி ஓட விட்டு பெரும பட்டுக்கிட்டிங்கள நல்லா அனுபவிங்க …’ என்று மனதில் பொறுமியவன், தன் இடக்கையை தூக்கி நெற்றியை சுற்றிக் காட்டி பொண்ணு கொஞ்சம் அர மெண்டல் என்று சைகை செய்தான்.



தயாளனின் பார்வை சென்ற திசையை கண்டு தானும் திரும்பி பார்த்தவள், அங்கே கிரி நின்றுக் கொண்டிருப்பதை கண்டு,



“ஹய் ப்ரோ … வாட் ஆர் யூ டூயிங் ஹியர் … லவர்ஸுக்கு பிரைவசி கொடுத்துட்டு வெளில கோஓஓஓஓ …” என்று கலகலத்தவளை கட்டுப்படுத்திய கோபத்துடன் பார்த்திருந்தான் தயாளன். சங்கீதா கூறியதற்காகவே வெளியே செல்லாமல் அதே இடத்தில் நின்றபடி அவளை முறைத்து கொண்டிருந்தான் கிரி.



“ம்ப்ச் போக மாட்டிங்களா … சரி உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா …” என்ற கேள்வியில் புருவம் சுருக்கி பார்த்தவன், ம்ம்ம் என்று தலையாட்டவும்,



“எப்போ ஆச்சு …” என்றவளை முறைப்புடன் பார்த்தவன் தன்னை மீறி,



“மூணு மாசத்துக்கு முன்ன …” என்று பதிலளிக்க,



“வாவ் … அப்போ நீங்க இன்னும் புது மாப்பிள்ளைதான் … ப்ரோ என் நாக்குல கருப்பு மச்சம் இருக்கு … என்ன தெரிஞ்சவங்க எல்லாம் சரியான கரிநாக்குனு சொல்லுவாங்க … இப்போ நீங்க போகலைன்னா உங்களுக்கும் உங்க வொய்ப்கும் …” என்ற பொழுதே அந்த அறையை விட்டு வெளியேறிருந்தான் கிரி.



வெற்றி சிரிப்புடன் தன்னை திரும்பி பார்த்தவளை தான் இவ்வளவு நேரமாக பார்த்துக் கொண்டிருந்தான் தயாளன். தன்னையே விடாமல் பார்த்திருந்தவனை கண்டு இரு கண்களையும் சிமிட்டியவள்,



“ஹய் யுவா … நிஜமாக நீங்களும் நானும் தனியாவா இருக்கோம் … அதுவும் நீங்க விடாமா என்ன மட்டும் தான் பார்த்துகிட்டு இருக்கீங்க … என்னால இந்த நொடிய நம்ப முடில … ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் என் கையை கிள்ளுங்களேன் …” என்று கையை தன் முன் நீட்டியவளை அழுத்தமாக பார்த்தவன், பதில் கூறாமல் மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து அவள் அருகில் டேபிளில் சாய்ந்து நின்றுக் கொண்டான்.



அவன் அருகில் வந்து நின்றதுமே சங்கீதாவிற்கு உள்ளுக்குள் படபடக்க செய்தது. தன் படபடப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்திருந்தாள்.



“சோ என்ன நீ லவ் பண்ற … கரெக்ட் …” என்று திடீரென்று கேட்டவனை லூசா நீ என்ற பார்வை பார்த்தவள்,



“அப்கோர்ஸ் … அதனால தான் இத்தனை வருசமா உங்க பின்னாடி சுத்திகிட்டு இருந்தேன் … ஏன் நா உங்க பின்னாடி எதுக்கு சுத்துறேன்னு உங்களுக்கு தெரியாதா …” என்று அவன் முகத்தை பார்த்து நேரடியாக கேள்வி கேட்டவளை கண்டு அழுத்தமாக தலையசைத்தவன்,



“எஸ் … ஐ க்நொவ் …” என்ற பதிலில் சுவிட்ச் போட்டார் போல அவள் முகம் பிரகாசமானது.



“என்ன பத்தி தெரிஞ்சுக்கிட்டே கண்டுக்காம அஞ்சு வருசமா சுத்த விட்டத மறந்துடுறேன் … சரி சொல்லுங்க எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் …” என்று கண்கள் மின்ன ஆர்வத்துடன் பேசியவளை கண்டு கேலியாக வளைந்தது அவன் உதடுகள்.



“நீ என் பின்னாடி சுத்துறது தெரியும் தான் சொன்னேன் … பதிலுக்கு நா சுத்துறேனோ இல்ல உன்ன லவ் பணறேனோ சொல்லல …” என்றவனின் பதிலில் ஒரு நொடி அவள் முகம் சுருங்கினாலும்,



“நானும் நீங்க என்ன லவ் பண்றீங்கன்னு சொல்லலையே … என்ன லவ் பண்ணுங்கன்னும் கேட்கல எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் தானே கேட்டேன் …” என்று பதிலளித்தவளைக் கண்டு ஒற்றை புருவத்தை மேலே ஏற்றியவன்,



“லவ் இல்லாம உன்ன ஏன் நா கல்யாணம் பண்ணிக்கனும் …” என்று எதிர்க் கேள்வி கேட்க,



“ஏன்னா நீங்கதான் லவ் பண்ணலைன்னு சொல்லிட்டிங்களே அப்புறம் எதுக்கு அதபத்தி தேவ இல்லாம பேசிக்கிட்டு …” என்ற சங்கீக்கு,



“பட் …” என்று ஆரம்பித்தவனை கை நீட்டி தடுத்தவள்,



“இப்படியே ஏட்டிக்கு போட்டியா பேசிகிட்டு இருந்தா நாள் முழுவதும் பேசிக்கிட்டே இருக்கலாம் … உங்களுக்கு என் மேல லவ் இல்ல பட் எனக்கு உங்க மேல அம்புட்டு லவ் இருக்கு … என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா நீ பீல் பண்ற மாதிரி எதையும் நடக்க விடமாட்டேன் ப்ளஸ் உங்களையும் என்ன லவ் பண்ண வைப்பேன் …” என்று நீண்ட விளக்கம் கொடுத்தவளை கண்டு தலையை லேசாக ஆட்டியபடி எதையோ யோசித்தான்.பின் தொண்டையை செறுமியபடி,



“ஆல்ரைட் … என்னைக்கு இருந்தாலும் யாரையோ கல்யாணம் பண்ணிக்கி போறேன் … அத ஏன் என்ன லவ் பண்ற பொண்ணா இருக்க கூடாது …” என்றதும் இருக்கையில் இருந்து எழுந்தவள்,



“ஓஹ் மை காட் … என்னால நம்பவே முடில … யுவா … நா …” என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்து பேச தடுமாறியவளை நிதானமாக பார்த்தபடி டேபிளில் தாளம் தட்டியவன்,



“நா இன்னும் பேசி முடிக்கல …” என்றவனை முகம் நிறைய புன்னகையுடன் பார்த்தவள், என்ன என்ற பார்வை பார்க்க,



“எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு … அதுக்கு ஓகேனா எனக்கு நோ இஸ்ஸுஸ் …” என்ற தயாளனை கண்கள் மின்ன பார்த்தவள்,



“எதுவா இருந்தாலும், எனக்கு ஓகே …” என்று வார்த்தையை விட, மெலிதாக சிரித்துக் கொண்டவன்,



“நா சொன்ன பிறகு பேச்சு மாற மாட்டில …” என்றவனை உற்சாகத்துடன் பார்த்தவள்,



“கமான் பாஸ் … கண்டிஷன்ஸ் என்னனு சொல்லுங்க …“ என்று அவனை தூண்டினாள்.



“ எங்கம்மாக்கு நானும் என் தம்பி மட்டும் தான் … எனக்கு என் தம்பினா பயங்கர உயிர் … அவனுக்கு கல்யாணம் ஆகாம நா கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு உறுதியா இருக்கேன் …” என்ற தயாளனை அவசரமாக இடைமறித்தவள்,



“இதான் இதான் இந்த குணத்துக்காக தான் உங்கள ரொம்ப புடிச்சது யுவா … யூ ஆர் ரியலி வெரி கிரேட் … இப்போ நா என்ன பண்ணனும் உங்க தம்பிக்கு கல்யாணம் ஆகிற வரைக்கும் வெயிட் பண்ணனுமா …” என்று புகழ்ந்து பேசியவளை கண்டு முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல்,



“இல்ல … அவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும் …” என்று புதிர்ப் போட்டவனை புரியாமல் பார்த்தவள்,



“நானா …” என்று சந்தேகத்துடன் இழுக்க, ஆம் என்று அவன் தலையசைந்தது. ஏன் என்ற குழப்ப ரேகைகள் முகத்தில் சூழ அவன் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.



“ம்ம்ம் … நீதான் … அவன்கிட்ட பேசி புரிய வச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கணும் … உன்னால முடியுமா …” என்ற தயாளனை இன்னும் குழம்பும் தீராத முகத்துடன் பார்த்தவள்,



“முடியும் … ஆனா ஏன் என்ன பேச சொல்றீங்க … நீங்களே பேசலாமே …” என்ற தன் சந்தேகத்தை கேட்டவளை அழுத்தமாக பார்த்தவன்,



“என்னால முடிஞ்சுருந்தா நா ஏன் உன்கிட்ட ஹெல்ப் கேட்க போறேன் … அவன் என் பேச்சையெல்லாம் கேட்டு நடக்குற காலம் எல்லாம் எப்பவோ தாண்டி போய்டுச்சு …” என்று பெருமூச்சை விட்டவனை யோசனையுடன் பார்த்தவள்,



‘அப்படி எந்த பொறம்போக்கு என் யுவாவ பீல் பண்ண வச்சது …’ என்று மனதில் நினைத்தவள்,



“அப்படி உங்க பேச்ச கேட்காத அந்த அப்பாடக்கர் தம்பி யாரு …” என்று நக்கலாக கேட்டவளை கூர்மையாக பார்த்தபடி,



“கமலேஷ் குணாளன் …” என்ற அடுத்த நொடி,



“வாட் உங்க தம்பி இந்த பொறுக்கி கிட்டயா வேலைல இருக்கார் … ஓஹ் காட் ப்ளீஸ் அவர முதல்ல அங்கிருந்து வேலையை விட சொல்லுங்க … இல்ல இந்த ஜென்மத்துல அவருக்கு கல்யாணம் நடக்காது …” என்று படபடத்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான் தயாளன். அவன் விழி வீச்சில் தடுமாறிப் போனவள்,



“என்ன … அ அ அவர் அங்க வேலை பாக்கலையா …” என்று தடுமாறியவளுக்கு இல்லை என்று அழுத்தமாக தலையசைத்தவன்,



“கமலேஷ் குணாளன் தான் என் தம்பி …” என்றான் நிதானமாக. சில நொடிகள் பேச்சிழந்து போய் உட்கார்ந்திருந்தவளுக்கு அப்படியொரு கோபம். இருந்தும் கோபத்தை காட்டிக் கொள்ளாமல் அமைதியாக,



“இது நடக்கிற காரியமா … உங்க தம்பி ஒரு காம பிசாசு ஆச்சே … அப்புறம் என்ன புதுசா கல்யாணம் பண்ணி பாக்கனும்னு ஆச …” என்றவளின் குரலில் நக்கலுடன் சேர்ந்து சிறிது எரிச்சல் தெரிந்தது. அவள் குற்றச்சாட்டில் முணுக்கென்று கோபம் கொண்டவன்,



“ஹேய் … என்ன என் முன்னாடியே என் தம்பிய பத்தி தப்பா பேசுற …” மெலிதாக கோபப்பட்டவனை “ம்ப்ச்” என்று சலிப்புடன் பார்த்தவள்,



“நா சொல்லல … ஊரே சொல்லுது … பின்னாடி கட்டைக்காரன் உங்க தம்பி வீடியோ ஒன்ன போட்டான் … அதுக்கு வந்த கமெண்ட்ஸை பாக்கணுமே … ஒட்டு மொத்த கமெண்ட்ஸும், காஜி காஜி காஜினு தான் இருந்துச்சு … ஒன்னா ரெண்டா பாக்குற பொண்ணுங்கள எல்லாம் ஆட்டய போட்டா மத்த பசங்களுக்கு கோபம் வராதா …” என்று தோளை குலுக்கியவளை புருவம் சுருக்கி பார்த்தவன்,



“ஹேய் நீங்கலாம் சொல்றபடி அவன் காமபிசாசோ காஜியோ இல்ல … ம்ம்ம் … ஜஸ்ட் குபிட் பார்வை கொஞ்சம் ஜாஸ்தியா போயடுச்சு அவ்வளவுதான் …” என்று தன் உடன்பிறப்புக்கு சப்போர்ட் செய்தவனிடம்,



“அதுக்கு பேர்தான் காஜி … நீங்க மூக்க சுத்தி தொடுறீங்க, நாங்க ஸ்ட்ரெயிட்டா தொட்டுட்டோம் அதான் வித்தியாசம் …” கூலாக பதில் கூறியவளை கண்டு பல்லை கடித்தவன் பின், ஞாபகம் வந்தவனாக



“ஹூ இஸ் திஸ் பின்னாடி கட்டைக்காரன் … எந்த வீடியோ …” என்று தன் சந்தேகத்தை கேட்டான். அதில் மகிழ்ந்துப் போனவள்,



“இதேதான் இதேதான் இந்த இன்னொசென்ஸ் தான் உங்ககிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் … பிசினஸ் பிசினஸ் பிசினஸ் … இத தவிர வேற எதுவும் உங்கள டைவர்ட் பண்ணதில்ல … தட்ஸ் வொய் ஐ ஃபால் இன் லவ் வித் யூ …” கண்ணும் முகமும் பெருமிதத்தில் மலர பேசியவளை கண்டு ஊப்ஸ் என்று மூச்சை இழுத்து விட்டவன்,



“இன்னும் நா கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லல …” என்றவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்து கொண்டிருந்தது.



“அதான் நம்ம பிஹைண்ட்வுட்காரன் … இவன் தான் இண்டஸ்ட்ரில கொஞ்சம் கசமுசா பார்ட்டிங்களுக்கு விளக்கு புடிக்கிறவன் … இப்போ அவன் விளக்கு புடிச்சுகிட்டு சுத்துறது உங்க தம்பி பின்னாடி தான் … யூ டோண்ட் ஒரி … அவன் கண்ணு ஒருத்தங்க மேல பட்டுருச்சுனா, அவங்களுக்கு கல்யாணம் பண்ண வச்சு பர்ஸ்ட் நைட் ரூம்குள்ள அனுப்பி வச்சுட்டு தான் அடுத்த ஆள பிடிப்பான் … கண்டிப்பா கூடிய சீக்கிரம் நீங்க எதிர்பார்த்த படி உங்க தம்பி கல்யாணத்த பாக்கலாம் … என் ஹெல்ப் தேவைப்படாது … நீங்க நம்ம மேட்டருக்கு வாங்க … எப்போ நம்ம கல்யாணத்த வச்சுக்கலாம் …” என்று கண்கள் மின்ன கேட்டவளை கூர்மையாக பார்த்தபடி சில நொடிகள் அமைதி காத்தவன் பின்,



“நா முன்னாடி சொன்னதுதான் … ஐ லவ் மை பிரதர் … அவன் லைப் ஸ்பாயில் ஆகிறத பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது … கண்டிப்பா உன்னால முடியும் … அவனை எப்படியாவது திருத்தி என் கைல கொடு … அடுத்த முகூர்த்தத்துல உன் கழுத்துல தாலி கட்டுறேன் …” என்று நிதானமாய் பேசியவனை கண்டவளின் முகத்தில் அதிருப்தியை கண்டவன்,



“என்ன பைவ் யெர்ஸ்ஸா லவ் பண்றேன் சொல்ற … எனக்காக இது கூட பண்ண மாட்டியா …” என்று அவள் காதலை முன்னிறுத்தி பேசவும் சற்று தடுமாறி போனவள், சிறு தடுமாற்றத்துடனே தன் சம்மதத்தை தெரிவித்தாள்.



“ஓகே … ஐ வில் ட்ரை மை பெஸ்ட் … உங்களுக்காக மட்டும் … எனக்கு சிக்ஸ் மந்த் டைம் கொடுங்க … அதுக்குள்ள அவர மாத்த முடியுதான்னு பாக்குறேன் …” என்றவளை கண்டு தலையை இடமும் வலமுமாக ஆட்டி இதழ் பிரியாமல் சிரித்தவன்,



“சிக்ஸ் மந்த … ஆர் யூ ஜோக்கிங் … இல்ல உன் மேல அவ்வளவு கான்பிடென்ட்டா … ஹீ இஸ் அ உன் பாஷைல சொல்லனும்னா காஜி ஆர் காமப்பிசாசு … அவன அவ்வளவு சீக்கிரத்துல சேஞ்ஓவர் பண்ண முடியும்னு நம்புறியா …” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி கேள்வியாய் நிறுத்தியவன்,



“டேக் யூவர் ஓன் டைம் … முடிஞ்சா அவனை திருத்தி காட்டி என் கையாள தாலி வாங்கிக்கோ … இல்ல இந்த காதல் லொட்டு லொசுக்குனு சொல்லிக்கிட்டு என் பின்னாடி சுத்த கூடாது … காட் இட் …” என்றவனின் குரலில் இருந்த அழுத்தம் முகத்திலும் தெரிந்தது.



இது அவன் தம்பி மேல் வைத்த பாசத்தால் கொடுத்த டாஸ்க் இல்லை தன் காதலை நிராகரிக்க கிடைத்த வாய்ப்பாக கொடுத்தது என்று புரிய, மனதில் புது வைராக்கியம் தோன்ற ,



‘இருடா வெண்ண உன் தம்பிய திருத்தி உன் முன்னாடி நிக்க வச்சு என் கழுத்துல தாலி கட்ட வைக்கல … என் பேரு …. இல்ல …’ என்று உள்ளுக்குள் சபதம் எடுத்துக் கொண்டவள்,



“டீல் …” என்று அவன் சவாலை ஏற்றுக் நாற்காலியில் இருந்து எழுந்துக் கொண்டவளை கண்கள் மின்ன பார்த்தவன்,



“குட் …” என்று புன்னகைத்தான். பின்,



“இந்த டீல்ல சில கண்டிஷன்ஸ் இருக்கு … அதுல முக்கியமானது … என் தம்பி கூட நோ கிஸ்ஸிங் நோ இண்டீசென்ட் டச்சிங் … முக்கியமா நோ ஃப-கிங் …” என்று சுழல்நாற்காலியில் ஆடியபடி பேசியவனை நிமிர்ந்து நின்று அழுத்தமாக பார்த்தவளிடம்,



“ஹேய் … உன் மேல நம்பிக்கை இருக்குமா … என் தம்பி மேல இல்ல … பியூட்சர்ல அவனுக்கு அண்ணியா ஆக சான்சஸ் இருக்கு …” எந்த ரிஸ்க்கும் நா எடுக்க விரும்பல …” என்று நக்கலாக சிரித்தவனை கூர்மையாக பார்த்தவள்,



‘ஒங்கம்மா காஜி புள்ளைய பெத்து போட்டு வளக்க தெரியாம வளத்து ஊர் மேய விடும் … ஆசையா பெத்து போட்டு வளைத்த எங்கப்பாம்மா பொண்ணு நா உன் காஜி தம்பிக்கு ஆயா வேல பாக்கணுமா … இருடி இரு என் காதல பணயம் வைக்கிற உன்ன அப்புறம் கவனிச்சுக்கிறேன் … முதல்ல அந்த காஜி பாய என்கிட்ட மாட்டிட்டு என்ன ஆகுறான் மட்டும் பாரு …’ என்று மனதில் கருவியவள், வெளியே முகத்தை சாதாரணமாக வைத்தபடி,



“டபுள் ஓகே …” என்றவளை கண்டு இதழ் பிரியாமல் உதட்டை இழுத்து வைத்து சிரித்தபடி பார்த்தவனின் கண்களில் என்ன இருந்தது விஷம சிரிப்பா இல்லை கர்வ சிரிப்பா?



சங்கீதாவின் குணத்தை பார்த்து தான் இந்த முடிவிற்கு வந்திருந்தான். எவ்வளவு உதாசீனம் படுத்தினாலும் தன்னை தொடர்ந்து வந்தவள் கண்டிப்பாக குணாளனின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாள் என்று நம்பினான். அதனால் தான் சங்கீதாவை தம்பியிடம் மறைமுகமாக வேலைக்கு சேர்த்து விட்டிருந்தான்.



அதுவரை இழுத்து மூடியிருந்த அவன் கண்ணும் இதயமும் சங்கீதாவை குணாளனிடம் தள்ளிவிட்ட பின் விழித்துக் கொண்டது. தன்னையே சுற்றி சுற்றி வந்த போது புரியாத அவளின் காதல் வலுக்கட்டாயமாக வேறு இடத்திற்கு அனுப்பியபின் புரிய தவித்து போனான். தம்பியின் மேல் நம்பிக்கை இல்லையென்றாலும் தன்னையே ஐந்து வருடங்களாக சுற்றிய சங்கீதாவின் மேல் இருந்த நம்பிக்கையில் அவள் வரும் வரை பொறுமையாக காத்திருக்க முடிவு செய்தான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்பு - 5



“இன்னும் ஒரே ஒரு தோச ஊத்துறேன்டா குட்டிமா …” என்று சங்கீதாவின் தட்டில் ஒரு தோசையை போட்டார் சாந்தி.



“ப்ளீஸ் அம்மூ … போதும் வயித்துல இடமில்ல, இதோட நாலு தோச தின்னுட்டேன் … மொத நாளே தூங்கி வழியப்போறேன் பாரு …” என்று சிணுங்கிய மகளை கண்டுக் கொள்ளாமல் மற்றுமொரு தோசையை அவள் தட்டில் போட்ட பின்னே அடுப்பை அணைத்தார்.



“அதெல்லாம் இடம் இருக்கும் … ஒரு தோச சாப்புடுறதால ஒன்னும் ஆகிடாது … நானே என்னைக்காவது தான் சமைச்சு போடுறேன் … சிணுங்காம சாப்புடு …” என்று மகளை அதட்டியவர்,



“என்ன செழி இப்போ சாப்பிடலையா …” என்று மீண்டும் உறுதிப்படுத்திக்க கேட்டார். சங்கீதாவிற்கு இன்று ஷூட்டிங் இல்லாததால், வீட்டின் சமையல் பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டார். ஷூட்டிங் நாட்களில் வீட்டு வேலை செய்ய முடியாதளவிற்கு பிஸியாக இருப்பவர். ஒரு நாளில் தொடர்ந்து இரண்டு மூன்று சீரியலில் நடித்து கொண்டிருப்பவர், அதனாலயே வீட்டையும் சமையலையும் அவர் கணவர் சந்திரசேகர் பார்த்துக் கொண்டார்.



“இப்போ வேணா … இவளை விட்டுட்டு வந்து சாப்ட்டுக்குறேன் …”என்று அன்னைக்கு பதிலளித்தவன்,



“சாப்ட்டு முடிச்சாச்சுன்னா கிளம்பு மங்கீ … உன்ன விட்டுட்டு சலூனுக்கு போகனும் … ஏற்கனவே அப்பொய்ண்ட்மெண்ட் கொடுத்துருக்காங்க …” தமக்கையை அவசரப்படுத்தினான். செழியன் பன்னிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஹேர் ஸ்பெஷலிஸ்ட் கோர்ஸ் தனியாக படித்து தந்தையின் சலூனில் அவருக்கு உதவியாக இருக்கின்றான்.



“இது என்ன புது பழக்கம் … அவளுக்கு போவ தெரியாதா … நீ என்ன புதுசா கொண்டுவிடுறேனு சொல்ற … அவ ஸ்கூட்டில போய்ப்பா … நீ சாப்பிட்டு கிளம்பு …” என்று அவனுக்கு தோசை சுடுவதற்காக சமையலறை நோக்கி திரும்பினார் சாந்தி.



சாப்பிட்டுவிட்டு கையை கழுவிக் கொண்டிருந்த சங்கீதா அவசரமாக தம்பியை திரும்பி பார்த்து நீயும் வா என்று பார்வையால் கெஞ்சினாள்.



“அவ அவ ஸ்கூட்டில தான் வர போறா … முத தடவையா வெளில வேலைக்கு போறா … பயம் இருக்கும்ல … துணைக்கு தான் மா போறேன் …” என்று விளக்கம் கொடுத்த மகனை திரும்பி பார்த்து முறைத்த சாந்தி,



“வேலைக்கு போறதுக்கு எதுக்கு பயப்படணும் … அதோட என் பசங்கள என்ன வந்தாலும் தைரியமா பேஸ் பண்ற மாதிரிதான் வளர்த்து விட்டுருக்கேன் … நீ ஒன்னும் அவ கூட போக வேணாம் … இத கூட பேஸ் பண்ண முடிலனா அப்புறம் எப்படி இந்த உலகத்துல நீ போராடி வாழ முடியும் …” என்று கறாராய் கூறி செழியன் செல்வதற்கு தடைவிதித்தார்.



இளமை காலத்தில் நிறைய அடிபட்டு வளர்ந்ததால் சாந்தியிடம் ஒரு கடுமை எப்பொழுதும் இருக்கும். எங்கே தன்னோட நிலைமை தன் மக்களுக்கும் வந்துவிடுமோ என்ற பயம். அதனாலயே தந்தை மகள் மகன் மூவரும் கூட்டணி அமைத்து தேவையானதை மட்டுமே சாந்தியின் பார்வைக்கு கொண்டு செல்வார்கள். யுவராஜின் விஷயம் சந்திரசேகருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம், அவர் கூட மனைவியிடம் இதை பற்றி ஒரு வார்த்தை மூச்சுவிட்டதில்லை.



ஆனால் அவரிடம் கூட குணாளனிடம் வேலைக்கு செல்வதை மறைத்திருந்தனர் அக்காவும் தம்பியும். முதலில் செழியனும் சங்கீதா அங்கே வேலைக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தான். பின் சங்கீதாவின் தொடர் கெஞ்சலால் மனமில்லாமல் தான் இதற்கு ஒத்துக்க கொண்டான். அன்னை செழியனை போக விடாமல் மறுத்ததால், அனைவரிடமும் சொல்லிக் கொண்டு முதல் நாள் வேலைக்கு கிளம்பி சென்றாள்.



பண்ரூட்டி அருகில் உள்ள வயல்வெளி மாமரத்து நிழலில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் கால் மேல் கால் போட்டபடி மல்லாக்க படுத்துக் கொண்டு கையில் இருந்த வாரமலரை முகத்தில் நிறைத்த சிரிப்புடன் பார்த்திருந்தாள் வைஷாலி. முழு பக்கத்தையும் ஆக்கிரமித்து சிரித்துக் கொண்டிருந்த குணாளனை தாண்டி அவள் பார்வை அசையவில்லை. புத்தகத்தில் தெரிந்த உருவத்தை இன்ச் பை இன்ச்சாக ரசித்துக் கொண்டிருந்தாள்.



“எப்போ மாமா என்ன கட்டிக்கிட்டு உன் கூட கூட்டிகிட்டு போக பாரு … இங்க நா உனக்காக தவிச்சுக்கிட்டு இருக்கேன் … அது தெரியாம கண்டவ கூட சுத்திகிட்டு கூத்தடிச்சுக்கிட்டு இருக்க …” என்று கொஞ்சியவள் புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்தவனின் உதட்டில் முத்தம் ஒன்றை வைத்தாள்.



இவர்களில் வயலில் வேர்க்கடலை பயிரிட்டிருக்க, அதில் முளைத்திருந்த களைகளை எடுத்துக் கொண்டிருந்தனர் பெண்கள். வைஷாலி படுத்திருப்பதை கண்டதும்,



“வைஷு பாப்பா … என்னத்த ரொம்ப நேரமா உத்து பாத்துகிட்டு சிரிச்சுக்கிட்டு இருக்க … சொன்னா நாங்களும் சிரிப்போம்ல …” என்று தங்கள் கலைப்பை போக்க அவளிடம் பேச்சு கொடுத்தனர். சிறு வெட்க சிரிப்புடன் அவர்களை நோக்கி எழுந்து வந்தவள்,



“வாரமலர்ல எங்க மாமா வந்துருக்கு … அதத்தான் பாத்துகிட்டு கொஞ்சிகிட்டு இருக்கேன் …” என்றவளிடம்,



“யாரு பெரிய புள்ளையா புக்ல வந்துருக்கு … ரொம்ப பொறுப்பான புள்ள பாப்பா அது …” என்ற பெண்மணியை கண்டு முகத்தை சுருக்கியவள்,



“ஐய்ய … ரசனையே இல்ல போக்கா … பெரிய மாமா சரியான போர் … நா சின்ன மாமாவ பத்தி பேசிகிட்டு இருக்கேன் …”என்றவள் தன் கையிலிருந்த புக்கை தூக்கிக் காட்டி,



“பாரு … எவ்வளவு அழகா சிரிச்சுக்கிட்டு இருக்கு … மாமா டான்ஸ் ஆடி பாத்துருக்கியா … இடுப்ப வளைச்சு ஆடும் பாரு அப்படியே மெய்மறந்து பாக்கலாம் …” என்று கனவு லோகத்தில் மிதந்தவளை கண்டு சிரிப்பை உதித்தவர்,



“ஒன் மாமாவ நீ மட்டும் ரசிக்கல பாப்பா ஊரே ரசிக்குது … அதுவும் செல்ல தொறந்தாளே உன்மாமான் வீடியோதான் வருது … பக்கத்தூட்டு மாமா, குணா தம்பி வீடியோவ காட்டி பாரு செண்பகம் புள்ள எப்படி ஆளே மாறிடுச்சுனு வருத்தப்பட்டார் … இந்த புள்ளயை கட்டிக்கிட்டா உனக்கு அடங்கி இருக்கும்னு தோனல பாப்பா … பேசாம உங்க பெரியமாமாவ கட்டிக்க … உன்ன சந்தோஷமா வச்சுக்கும் …” என்று அறிவுரை கூறவும் புக்கை வெடுக்கென்று பிடுங்கியவள்,



“போக்கா … எந்த ட்ரெண்ட்ல இருக்க … தயாமாமாவ கட்டி வாழ்க்க பூரா நாலு செவுத்துக்குள்ள மூக்க சிந்திக்கிட்டு இருக்கனும் … குணாமாமாவ கட்டிக்கிட்டு ஊர் ஊரா சுத்தலாம் … லைப்பே பரப்பரப்பா ஓடிட்டு இருக்கும் … இந்த காலத்து பசங்க கல்யாணத்துக்கு முன்ன அப்படி இப்படினு தான் இருப்பாங்க … கல்யாணம் முடிஞ்சதும் பொண்டாட்டி கால்ல விழுந்து கிடப்பாங்க …உனக்கு ஒன்னும் தெரில போக்கா” என்று பதில் விளக்கம் கொடுத்தவளை கண்டு அதிருப்தியில் முகம் சுளித்தவர்,



“அட கிறுக்கு பாப்பா … நம்மள கட்டிக்க போறவன் ராமனா இருக்கணும்னு தானே எல்லாரும் ஆசைப்படுவாங்க … நீ என்ன லூசு போல ஒளறிக்கிட்டு இருக்க …” என்று எரிச்சல்பட்டவரை சிறிதும் சட்டை செய்யாதவள்,



“சரி நா ஒன்னு கேட்குறேன் … கரடுமுரடு இல்லாம எந்த குண்டு குழியும் இல்லாத ரோட்ல போறது கிக்கா இல்ல கரடுமுரடான மலைல ஏறுறது கிக்கா … நீயே சொல்லு …” என்று புதிய தத்துவத்தை கண்டுபிடித்தவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவர்,



“நீ தயாவ கட்டுறியோ இல்ல குணாவ கட்டுறியோ … நா இந்த புல்ல புடுங்குனா தான் எங்கூட்டுல சோறு பொங்கும் தெரியாம வாய கொடுத்துட்டேன் ஆள விடு சாமி …” என்று பெரிய கும்பிடாக போட்டவர் தொடர்ந்து புல்லை பிடிங்கினார்.



தன்னிடம் பேசி ஜெயிக்க முடியாமல் பின் வாங்கியவரை கண்டு வெற்றி சிரிப்பு சிரித்த வைஷாலி, “அது …” என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.



அவள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட களையெடுக்கும் பெண்மணி ஒருவர்,



“இன்னாக்கா … இந்த புள்ள கொஞ்சம் கூட பொறுப்பா இல்லாம பேசிட்டு போது … யென் ஊட்டுக்காரும் செண்பகக்கா பையன் வீடீயோவ காட்டினாரு … ஆளு சரியில்லனு புரிஞ்சுது … இது எப்படிக்கா அவன் மேல ஆசப்படுது …” என்று தன் சந்தேகத்தை கேட்கவும்,



“நம்மள போல வெயில்ல வயல்ல இறங்கி வேல பாத்திருந்தா வாழ்க்கையோட அரும தெரியும் செல்லமா வளந்த புள்ளல அதான் சினிமா செல்ல பாத்து புத்தி கெட்டு போய் இருக்கு … பாப்போம் வேலாயுதம் அண்ணா என்ன பண்றாருனு …” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் வேலை பாட்டுக்கு ஜோராக நடந்துக் கொண்டிருந்தது.



அடையாறில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஏழாவது மாடியில் தன் கண்ணெதிரே இடுப்பை வளைத்து ஆடிக் கொண்டிருந்தவனை ஸ்தம்பித்து போய் வாய் பிளந்து பார்த்திருந்தாள் சங்கீதா. கடந்த இரண்டு மணி நேரமாக விடாமல் ஆடிக் கொண்டிருந்தான் குணாளன்.



இரண்டு நாளில் நடக்க போகின்ற நடன நிகழ்ச்சிக்கு ரெட்ரோ வகை கான்செப்டை தேர்வு செய்திருந்தான். அதற்கான பயிற்சியில் தான் அவனும் அவன் நடன குழு ஆட்களும் ஆடிக் கொண்டிருந்தனர்.



“ஏ உன்னைத் தானே ஹா...

ஏ உன்னைத் தானே ஹா...

நீ எந்த ஊரு

என்னோடு ஆடு

எது நிஜம் இளமை ஜெயிக்கும்

தகிடஜம் தகிட தகத்ஜம்

இளையவன் கனவு பலிக்கும்

தகிடஜம் தகிட தகத்ஜம்

திசைகளெட்டும் முரசு கொட்டும்

வெற்றித் திலகம் நான்



ஏ உன்னைத் தானே ஹு

ஏ உன்னைத் தானே ஹா..



ஏ உன்னைத் தானே …” என்ற பாடல் ஸ்பீக்கரில் அறையெங்கும் எதிரொலித்து ஒலித்து கொண்டிருந்தது. காதை பிளக்கும் துள்ளலான இசைக்கு ஏற்றவாறு சுண்டி இழுக்கும் வகையில் ஆடிக் கொண்டிருந்தான் குணாளன்.



நடுநாயகமாக அவன் நின்றிருக்க அவன் முன்புறம் பின்புறமாக ஐந்து ஐந்து பெண்கள் நின்று ஆடிக் கொண்டிருந்ததை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.



காலை முன்னும் பின்னும் அசைத்தும் இடுப்பை வளைத்தும் ஆடுவதை பார்க்க பார்க்க எங்கே தன்னிலை இழந்து தானும் அடிவிடுவோமா என்ற பயமே உண்டானது சங்கீதாவிற்கு. அந்தளவிற்கு இளமை துள்ளலுடன் இருந்த அந்த இடம் அவளின் இயல்பை மாற்றி போதை ஏற்றியிருந்திது.



அது ஒரு போட்டி நடனம் என்பதால் இரு குழுவாக பிரிந்து ஆட வேண்டும். அதைத்தான் இரு அணிகளுக்கும் தன்னை வைத்தே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் குணாளன். தன்னுடன் ஆடிக் கொண்டிருந்த பெண்ணின் இடுப்பை கைகளால் பற்றி தன் உடல் உரச ஒட்டிக் கொண்டு ஆடியவனை கண்டு பல்லைக் கடித்தாள் சங்கீதா.



‘பொறுக்கி அந்த பொண்ண ஜூஸ் மிக்சர் இல்லாமலே சக்கையா புழிஞ்சு எடுக்கிறான் … கை எங்கேயெல்லாம் போகுது பாரு இதான் சாக்குன்னு நல்லா தடவி பாக்குது காட்டெரும …’ குணாளனை மனதில் கருவிக் கொண்டிருந்தாள்.



ஸ்டூடியோ எக்ஸ் என்று பெயரிட்ட அந்த ஆபிஸிற்குள் நுழைவதற்கே அவ்வளவு சங்கடப்பட்டாள். உள்ளே நுழைந்தவளை, தன் சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்த குணாளளின் பார்வை சங்கீயை தீண்டிவிட்டு தன் கையில் கட்டப்பட்டிருந்த கைக்கெடிகாரத்தை பார்த்துவிட்டு அவளை குற்றம் சாட்டியது.



‘ம்ம்க்கும் … பெரிய மைசூர் மஹாராஜா பேலஸ் … இத கட்டிக்காக்க நா கரெக்ட் டைம்கு வரணும் பாரு … ஏண்டா டேய் ஆபிஸ தூக்கி அடையாறுல வச்சுக்கிட்டு சீக்கிரம் வரணும்னா … பறந்து தான் வரணும் …’ மனதில் பதில் கொடுத்தவள், முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கண்களால் சாரி என்று கெஞ்சவும், பெரிய மனது பண்ணி அவளை விட்டவன் கண்களால் தன்னருகில் அழைத்தான்.



அருகில் வந்தவளை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம்படுத்தியவன் அதன்பின் ஆடுவதில் கவனத்தை செலுத்தவும், இவளும் அவர்களிடமிருந்து சற்று தள்ளி நின்றுக் கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.



“டான்ஸ் தெரியுமா …” சற்றென்று தன்னருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தவளை முகத்தில் தழுவிய புன்னகையுடன் பார்த்திருந்தாள் பெண்ணொருத்தி. தன்னை கேள்வியோடு பார்த்தவளை கண்டு,



“ஹாய் … ஐ அம் வீணா … உங்க பேர் என்ன … குணா இண்ட்ரோ கொடுக்கும் போது சரியா கவனிக்கல …” என்று தன்னை அவளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.



“ஹைய்ய் … ஐ அம் சங்கீதா … நீங்க இங்க டான்ஸ் ஆட வந்திங்களா …” அபத்தம் என்று தெரிந்தும் பேச்சை வளப்பதற்காக அந்த கேள்வியை கேட்டவளை கண்டு வாய்விட்டு சிரித்த வீணா,



“இல்ல டிபன் சாப்புட்டு போக வந்தேன் …” என்று நக்கலாக பதில் கூறவும், முறைத்து பார்த்த சங்கீதா பேச்சை வளர்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். அதற்கும் சிரித்த வீணா,



“கோச்சுக்கிட்டிங்களா … பின்ன இங்க டான்ஸ் ஆட வராம வேற எதுக்கு வருவாங்கலாம் …” என்றவள்,



“சரி வாங்க நாம ப்ரெண்ட்ஸ் ஆகிடுவோம் … உங்ககிட்ட சண்ட போட்டா எனக்குதான் நஷ்டம் …” என்று அவளாகவே சங்கீதாவின் கை பற்றி



“ப்ரெண்ட்ஸ் …” என்று குலுக்கினாள். பதிலுக்கு சிரிப்புடன் கை குலுக்கியவள்,



“ப்ரெண்ட்ஸ் …” என்றுவிட்டு, “நா என்ன அவ்வளவு பெரிய ஆளா … என்கிட்ட சண்ட போட்டா நஷ்டம் சொல்றீங்க …” இயல்புக்கு திரும்பிய சங்கீ கேள்வி எழுப்ப,



“பின்ன இல்லையா …” என்று ஆச்சிரியமாக பார்த்தவள், “குணாவோட பிஏனா சும்மாவா … முன்னாடி இருந்த ரேவா கொரங்கு என்ன குணா பக்கத்துலயே விடாது … அவ யார கை காட்டுறாளோ அவதான் குணா கூட சிரிச்சு பேசி பழக முடியும் … சனியம் புடிச்சவ எப்படியோ போய் தொலைஞ்சுட்டா …” என்று அங்கலாய்தவளை கண்டு திகைத்து போய் பார்த்தாள் சங்கீதா.



“ஏன் இப்படி பாக்குறீங்க …” அவளின் திகைத்த பார்வையை கண்டு வினவிய வீணாவை, ஒரு பார்வை பார்த்தவள்,



“இவனையா … உனக்கு வேற ஆளே கிடைக்கலையா போயும் போயும் …” என்று அவள் காதருகில் கிசுகிசுத்தவளை கண்டு சத்தம் எழுப்பாமல் சிரித்த வீணா,



“ஏன் இவனுக்கு என்ன கொர … ஆளா பாரு எப்படி இருக்கான்னு … நல்ல ஹைட், அதுக்கு ஏத்த போல பாடி வச்சிருக்கான் … பாரு வேர்வைல டீஷர்ட் ஒட்டிக்கிட்டு இருக்கும் போதே சிக்ஸ் பேக் ஸ்டெப்ஸ் தெரியுது பாரு … மசுல்ஸ பாரு … அப்படியே அவன் ஹேர் ஸ்டைலையும் பாரு … கடிச்சு திங்கணும் போல இருக்குல்ல …” என்று அவன் புகழை பாடிக் கொண்டிருந்தவள்,



“டான்ஸ் ஸ்டெப் அப்போ இடுப்ப ரெண்டு கையாள புடிப்பான் பாரு அப்படியே இடுப்பு எலும்பு ஒடைஞ்சு போறளவுக்கு அழுத்தம் இருக்கும் … அய்யோ சான்ஸே இல்ல சொர்க்கத்துக்கு போய்ட்டு வந்த பீல் இருக்கும் …” கண்களில் ஏக்கம் படற பேசியவளை கண்டு, முகத்தை அஷ்டகோணலாக்கி , “ச்சீய்ய் …” என்றாள் சங்கீதா.



“என்ன சீய்ய் … அதெல்லாம் அனுபவிச்சு பாத்தாதான் அந்த பீல் புரியும் …” என்று எகிறிக் கொண்டு வந்தவளிடம்,



“ஹெல்லோ மேடம் அவன் உனக்கு மட்டும் சொர்கத்த காட்டிருக்க மாட்டான் … பாரு கூட ஆடுற பொண்ணுங்க எல்லாருக்கும் இப்படித்தான் சொர்கத்த காட்டிருப்பான் … இவனுக்கு போய் இப்படி …” அலையிற என்ற வார்த்தையை நாகரிகம் கருதி சொல்லாமல் விட்டாள். அதை புரிந்துக் கொண்ட வீணா,



“என்ன அலையுறேன் சொல்றியா … இட்ஸ் ஓகே, இருந்துட்டு போகட்டும் … நா என்ன அவன கல்யாணம் பண்ணிக்க போறேன்னா சொன்னேன் … கல்யாணத்துக்கு முன்ன ஜஸ்ட் நம்ம க்ரஷ்ச பீல் பண்ண சந்தோசம் … எனக்கு வரவன் எப்படி இருப்பான்னு தெரியாது, நா மட்டும் எதுக்கு எதையும் என்ஜோய் பண்ணாம சாமியாரிணி போல இருக்கனும் … ஜஸ்ட் டச்சிங் கிஸ்ஸிங் ஹக்கிங் மட்டும் தான் … அத குணா போல ஆள் கூட பண்ணா தான் கிக்கே …” என்ற பதிலில் தலையில் அடித்துக் கொண்டாள் சங்கீதா.



“சங்கீ … இப்போதான் உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு …” என்றவளை புரியாமல் பார்த்தவளிடம்,



“ஏன் கேளுடி …” என்று ஊக்கியவளை முறைத்து பார்த்தவள்,



“ஏன் கேட்கலைன்னா சொல்ல மாட்டியா …” என்ற கேள்வியில் வெண்பற்கள் தெரிய சிரித்தவள்,



“சொல்லுவேனே … ஏன் ரொம்ப புடிச்சிருக்கு தெரியுமா … நீ குணாவ ஷேர் பண்ணிக்க என் கூட போட்டி போட மாட்டேல்ல அதான் …” என்ற விளக்கத்தில்,



“அடச்சீ கருமம் … ஏய் இந்தாம்மா இப்படியே பேசி என்ன முதல் நாள்லே வேலையை விட்டு ஓட வச்சுடாதா …” என்று அலறிய சங்கீதாவின் விரல்களோடு தன் விரல்களை அழுத்தமாக கோர்த்துக் கொண்ட வீணா,



“நோ நீ போகணும் நினைச்சா கூட நா உன்ன விட மாட்டேன் …” என்ற புது தோழியை பார்த்து முறைத்தவளின் மூளையில் சற்று முன் வீணா குணாவை பற்றி வர்ணித்ததே பரவிக் கிடந்தது.



வீணாவிடம் பேசி முடித்தபின் மீண்டும் குணாவின் நடனத்தை ரசித்து பார்த்திருந்தாள். ஒருகட்டத்தில் குணா, கீழே உட்கார்ந்துக் கொண்டு ஒரு காலை மடக்கியும் ஒருகாலை நீட்டியும் இடுப்பை வளைத்து ஆடிய ஆட்டத்தை பார்த்தவளின் இடுப்பு சுளுக்கிக் கொண்டது. வீணாவின் பிடியில் இருந்த கையை விலக்கிக் கொண்டு இடுப்பை வருடியவளை கண்டு என்ன என்ற வீனாவிற்கு,



“அவன் ஆடுனா மொரட்டு ஆட்டத்த பாத்து என் இடுப்பு சுளுக்கிகிச்சு …” என்று பதிலளித்தவளை கண்டு சத்தம் போட்டு சிரித்து விட்டாள் வீணா. அப்பொழுதுதான் ஆடுவதை நிறுத்தியிருந்த குணா இவர்கள் புறமாக பார்வையை திருப்பி புருவம் சுருக்கி பார்க்கவும், அவனிடம் பேசுவதற்காக காத்துக்கிடந்த வீணா இந்த வாய்ப்பை சும்மா விடுவாளா. அவன் என்னவென்று கேட்பதற்கு முன்பாகவே,



“குணா … சங்கீய தொடாமலே அவ இடுப்ப உடைச்சுட்ட …” என்று கத்தியிருந்தாள். அங்கே நின்றிருந்தவர்கள் கிளுக் என்று சிரிக்கும் ஒலி அவர்களை நிமிர்ந்து பார்க்காமலே சங்கீதாவிற்கு கேட்டது. வீணாவின் பேச்சில் அரண்டுப் போன சங்கீதா, ‘அட அலஞ்சான் கொரங்கே காட்டு எரும்ம கிட்ட நீ கடல போட என்ன அடகு வைப்பியா … இருடி மவளே உன் ஆசையை கடைசி வரைக்கும் நிறைவேத்தாம பாத்துக்குறது தான் என் வேலையே …’ என்று மனதில் புலம்பியவள் அவசரமாக குணாவை பார்த்து இல்லை என்று தலையசைத்தாள்.



அவளையே விடாமல் பார்த்தவனின் பார்வை அவள் இடுப்பை ஒருநொடி தொட்டுவிட்டு மீண்டும் அவளிடம் வர, சங்கீதாவின் முதுகு தண்டு சில்லிட்டு போனது. மெல்ல தலையசைத்து தன்னருகில் அழைத்தவனின் அருகில் சென்று நின்றுக் கொண்டவளிடம் பார்வையால் எதையோ குறிப்பிட்டு காட்டினான். இருந்த பதட்டத்தில் என்ன வென்று புரியாமல் திருத்திருத்தவளை முறைத்து பார்த்தபடி தன் கையை அவள் முன் நீட்டினான்.



எதற்காக கையை நீட்டுகிறான் என்று தெரியாமல் ஒருவேளை கையை கேட்கிறானோ என்று நினைத்து அவன் கை மீது தன் கையை வைத்தவளை கண்டு அவன் அருகில் நின்றிருந்தவர்கள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க மீண்டும் முறைத்தான் குணாளன்.



தன்னை முறைத்தவனின் பார்வை தன்னை தாண்டி செல்வதை கண்டு, திரும்பி பார்த்தவள் அங்கே ஸ்டாண்டில் அவனின் டவல் மாட்டியிருந்தது தெரிந்தது. அப்பொழுதுதான் அவனையும் பார்த்தாள், உடல் முழுதும் வேர்வையில் குளித்திருந்தது தெரிந்தது. எதற்காக கையை நீட்டினான் என்று புரிய, அசட்டு சிரிப்பை உதிர்த்து மன்னிப்பை யாசித்தவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் டவலை எடுக்க ஓடினாள்.



“குணா … உங்க ஸ்பீடுக்கு இந்த கேர்ள் ஒத்து வருவாளான்னு சந்தேகமா இருக்கு … உங்க கண்ணசைவை வச்சே சொடுக்கு போற நேரத்துல எல்லாத்தையும் செஞ்சு முடிகிறவ ரேவா … எனக்கு என்னமோ இவ ரெண்டு நாள் தாக்கு புடிக்கிறதே டவுட்தான் …” என்று ஒருத்தி அவன் காதில் ஓதிக் கொண்டிருந்தது இவளுக்கும் கேட்க, பல்லை கடித்தவள்,



‘அடியே பென்சில் குச்சி … உன்ன இங்கிருந்து ஓட விடுறதுதான் என்னோட முத டார்கெட்டே … இருடி கொஞ்சம் செட்டாகிட்டு வரேன் …’ மனோதோடு கருவியவள் அவன் முன் துன்டை நீட்டினாள்.



தன் முன் நீண்ட துண்டை வாங்காமல், ‘ ரெண்டுநாள் எதுக்கு இன்னைக்கே ஓட விடுறேன் பாரு…’ என்று நினைத்தபடி போட்டிருந்த டீஷர்டை கழட்டி சங்கீதாவின் தோள் வளைவில் போட்டவன் அவளிடமிருந்த டவலை வாங்கி நிதானமாக உடம்பை துடைத்தான். இதை கொஞ்சம் கூட அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த பார்வையை காட்டிக் கொடுத்தது. வேர்வையில் சொத சொத என்றிருந்த டீஷர்டை பிழிந்தால் ஒரு வாளி தண்ணி பிடிக்கலாம் போல அந்தளவிற்கு நனைந்திருந்த டீஷர்டின் ஈரமும் அதிலிருந்து வந்த வேர்வை நாற்றமும் சங்கீதாவிற்கு குமட்டிக் கொண்டு வந்தது.



தன் தோளில் டீஷர்டை போட்டதிலிருந்து தன்னையே பார்த்தபடி துடைத்துக் கொண்டிருந்தவனின் பார்வைக்கு பயந்து முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ள பெரிதும் சிரமப்பட்டாள். சில நொடிகள் அவள் முகத்தையே உற்று பார்த்தவன்,



“என்ன வாமிட் வருதா …” என்று கேள்வியெழுப்ப, “இல்லையே …” என்று சிரித்தபடி பதிலளித்தவளின் முகத்தை குனிந்து பார்த்து, “ரியலி …”என்றவனுக்கு எஸ் என்று புன்னகையுடன் தலையசைத்தவள் வாயை திறந்தாள் அவன் மீதே வாந்தி எடுத்துவிடும் நிலையில் இருந்தாள்.



கையிலிருந்த டவலை அவள் கழுத்தை சுற்றி மாலையாக போட்டுவிட்டு,



“இத ஸ்டாண்ட்ல வச்சுட்டு என் டீஷர்ட் எடுத்துட்டு வா …” என்று பணித்தவனை கண்டு, ‘வொய்ப்கிட்ட வேல சொல்றது போல வேல வாங்குறான் … இடியட்’ என்று பல்லைக் கடித்தவள் அவன் சொன்னததை செய்தாள்.



அருகில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்த குணா, தன்முன் நீட்டிய டீஷர்ட்டை வாங்கிக் கொள்ளாமல் அவளுக்கு பார்வையால் போட்டுவிடும்படி உத்தரவிட,



‘ஆஆஆஆஆ … ரொம்ப படுத்துறானே … சின்ன பப்பா ட்ரெஸ் கூட போட தெரியாது … இவ்வளவு பேர் நிக்கிறாங்க வெட்கமே இல்லாம என்ன போட்டுவிட சொல்றான் காட்டெரும …’ என்று உள்ளுக்குள் புலம்பியவளின் பார்வை அந்த அறை முழுவதும் சுற்றிவர அங்கே தன்னையே ஏக்கத்தோடு பார்த்திருந்த வீணா கண்ணில் பட்டாள்.



‘க்கும் … இது அலஞ்சான்ஸ்கள் நிறைந்த ரூம் சோ போட்டுவிடுறதுல தப்பு இல்ல…’ என்று தன்னை சமாதானம் செய்துக் கொண்டவள் டீஷர்டை அவன் கழுத்தில் மாட்டிய பொழுதுதான் அவனின் கட்டுடல் கண்ணில் பட்டது. கைகள் பாட்டுக்கு மெதுவாக டீஷர்டை கீழே இறக்கிக் கொண்டிருக்க, கண்களோ வேகமாக அவனின் உடலை ஸ்கேன் செய்தது.



அவன் சொன்ன வேலையை முடித்தபின் சில நொடிகள் அங்கே நின்றவளை கண்டுக் கொள்ளாமல் அவன் பாட்டிற்கு மற்றவர்களுடன் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, நைசாக அங்கிருந்து நழுவி வீணாவின் அருகில் போய் நின்றுக் கொண்டாள்.



“ஹேய் சங்கீ வாட் இஸ் த ப்ரொசீஜர் டு சேஞ் மைஸெல்ப் டூ யூ …” என்ற வீணாவை கண்டுக் கொள்ளாமல்,



“நா பாத்துட்டேன் …” என்று மொட்டையாக கூறியவளை புரியாமல் பார்த்த வீணா,



“என்ன …” என்று கேள்வியெழுப்ப,



“நீ தப்பா பாத்துருக்க … ஆக்சுவலா சிக்ஸ் பாக் இல்ல … நாலு நாலு ஸ்டெப்ஸா எயிட் பாக் இருக்கு … எட்டக்க இருந்து பார்த்ததால உனக்கு சரியா தெரில …” என்று வேண்டுமென்றே அவளை வெறுப்பேத்த,



“வாட் … என்ன உண்மையாவா … ஹே ஹே நானும் பாக்கணும் சங்கீ … ப்ளீஸ் ஹெல்ப் மீ …” என்று கெஞ்சியவளை, லூசா நீ என்ற பார்வை பார்த்தவளிடம்,



“ப்ளீஸ் சங்கீ … நீ போய் குணா மேல தெரியாம தண்ணி ஊத்துறது போல ஊத்திடு … திரும்பவும் ட்ரெஸ் மாத்தும் போது நானும் உன்கூட நிக்குறேன் … எப்படி என் ஐடியா …” என்ற தோழியை கொலை காண்டுடன் பார்த்தவள்,



“புது ப்ரெண்டுனு கூட பாக்க மாட்டேன் … கைல கிடைக்குறத வச்சு விளாசி தள்ளிடுவேன் பீ கேர்புல் …” என்று எச்சரித்தவளை பாவமாக பார்த்தவள் ,



“அவ்வளவு தானா …” என்று கேட்க பதிலுக்கு, “அவ்வளவு தான் …” என்று கூறிய சங்கீதாவின் கையோடு கை கோர்த்துக் கொண்டவள்,



“சரிவிடு … இந்த ஹெல்ப்பையாவது சொல்லு … நா நீயா மாற ஏதாவது சான்ஸ் இருக்க …” என்றவளை கண்டு சிரிப்பு வர, அடக்கிக் கொண்ட சங்கீதா,



“ஏன் இல்ல இருக்கே …” என்றதும் சற்றென்று நிமிர்ந்து பார்த்தவளிடம்,



“கூடுவிட்டு கூடு பாஞ்சா நீ நானா மாறலாம் …” என்ற தோழியை முகம் சுருக்கி பார்த்தவள்,



“என்ன … என்ன பாத்தா லூசு போல தெரிதா …” என்று கோபப்பட்டவளை கண்டு, ‘லூசு போலெல்லாம் இல்ல லூசே தான் கன்பார்ம் பண்ணிட்டேன் …’ என்று மனதில் நினைத்தவள் வாயை திறக்காமல் அமைதி காத்தாள். சற்று நேரம் பொறுத்து பார்த்த வீணா,



“அது எப்படி கூடுவிட்டு கூடு பாயுறது … அத பத்தி உனக்கு தெரியுமா …”என்ற அப்பாவியை நினைத்து உள்ளுக்குள் குலுங்கி குலுங்கி சிரித்த சங்கீதா முகத்தை சீரியசா வைத்தபடி,



“எனக்கு அவ்வளவா தெரியாது … பட் என் ப்ரெண்ட் சொல்லி கேட்டுருக்கேன் பரங்கிமலை அடிவாரத்துல சித்தர்கள் நடமாடுறாங்களாம் … அவங்ககிட்ட போனா கண்டிப்பா நடக்கும்னு சொல்லிருக்கா … போய் பார்த்தா தான் தெரியும் …” வாய்க்கு வந்ததை அடித்துவிட, மிக தீவிரமான முகபாவத்துடன் பயங்கர யோசனையில் ஆழ்ந்தாள் வீணா.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்பு - 6:



இரவு பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க வீட்டின் மொட்டை மாடியில் முதல் நாள் வேலைக்கு சென்று வந்ததை கொண்டாடிக் கொண்டிருந்தனர் செழியனும் சங்கீதாவும். இருவரும் எதிர் எதிரே உட்கார்ந்திருக்க அவர்கள் முன் ப்ரைட் சிக்கன் பிட்சா சிக்கன் ரைஸ் பெப்சி லேஸ் சிப்ஸ் வாட்டர் கப் பரப்பப்பட்டிருந்தன. சரக்கு மட்டும்தான் மிஸ்சிங், ஒரு தண்ணி பார்ட்டிக்கு தேவையான அத்தனை ஐட்டமும் அங்கே இருந்தது.



“ஹாஹா ஹாஹா … அந்த லூசு என்ன அவ்வளவு பெரிய லூசா … நீ சொன்னத நம்பிடுச்சா …” என்ற செழியன் வாய்விட்டு சத்தமாக சிரித்தான்.



அன்று டான்ஸ் ஸ்டூடியோவில் வீணா தன்னிடம் பேசியதை தன் தம்பியிடம் பகிர்ந்துக் கொண்டாள் சங்கீதா.



“ஆமாடா ச்செழி … நீ வேணா பாரு எப்போ வேணா அந்த லூசு பரங்கி மலைக்கு படையெடுத்தாலும் எடுக்கும் …” என்று சொல்லி சிரித்தவள் இருவருக்கும் கூல்ட்ரிங்க்ஸை கப்பில் ஊத்தி அவனிடம் ஒன்றை நீட்டி “சியர்ஸ் …” என்கவும்,



“ம்ம்க்கும் … ஜூஸ் கொடுத்து ஏமாத்திட்டு சியர்ஸ் வேறயா …” என்று அலுத்துக் கொண்ட தம்பியிடம்,



“நா தான் வரும் போது சரக்கு வாங்கிட்டு வானு தானே சொன்னேன் … இப்போ பொலம்புனா எப்பிட்றா …” என்ற சங்கீயை முறைத்து பார்த்தவன்,



“எனக்கு மட்டும் வாங்கிட்டு வர சொன்னா பரவாலை … உனக்கும் சேர்த்துல வாங்கிட்டு வர சொன்ன … எரும எரும … எவ்வளவு தைரியம் இருந்தா புதுசா விட்டுருக்க கோதும பீர் வாங்கிட்டு வர சொல்லுவ …” என்று கோபப்பட்ட தம்பியை கண்டு மிக்ஸரை வாயில் அள்ளிப்போட்ட படி சிரித்தவள்,



“எனக்கும் பசிக்கும்ல … அது என்ன நீ குடிக்கலாம் நா குடிக்க கூடாது … என்ன ஆண் பெண் பேதம் பாக்கறியா …” என்று பெண்ணுரிமை பற்றி பேசியவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன்,



“நா குடிக்கிறத விட்றேன் … நீ சொற்பொழிவு ஆத்துறேன்னு பேர்ல மொக்க போடாத மங்கீ …” என்று கையெடுத்து கும்பிட்டவனை கண்டுக் கொள்ளாமல்,



“ஆனாடா தம்பி … அந்த காட்டெரும செம்மையா டான்ஸ் ஆடுறான் தெரிமா … நானே அவன் டான்ஸ்க்கு ரசிகையாகிட்டேனா பாத்துக்கேயன் …” என்று குணாவின் புகழ் பாடியவள், இன்று அவன் தன்னை வேண்டுமென்றே தாமதமாக அனுப்பியதை பற்றியும் ஸ்டூடியோவில் நடந்துக் கொண்டதை பற்றியும் செழியனிடம் கூறினாள்.



இன்று முழுவதும் சங்கீதாவை வேண்டுமென்றே பல வேலைகள் கொடுத்து அலைக்கழித்தவன் அனைவரும் சென்ற பின்னும் அவளை அனுப்பாமல் இரவு பத்தரை வரை வெட்டியாக உட்காரவைத்த பின்புதான் மனமிறங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவள் கூறியதை பொறுமையாக கேட்டுக் கொண்டவன்,



“சங்கீ எனக்கு என்னமோ நீ ரிஸ்க் எடுக்கிறியோனு பயமா இருக்குடி … என்ன தான் ராம்குமார் சொல்லி நீ போனதா அவன் நினைச்சாலும், அவனோட பேசிக் குணம் மாறுமா … பொம்பள பொறுக்கி அவன் … அதுவும் சினி பீல்ட்ல இருக்கான் … நாளைக்கு ஒன்னுகெடக்க ஒன்னு எதாவது ஆகிட போகுது … ப்ளீஸ் எனக்காக நீ அங்க போக வேணாம் டி …” என்ற கெஞ்சிய தம்பியின் கையை ஆறுதலாக பற்றி வருடிக் கொடுத்தவள்,



“ஏண்டா ஒன் அக்கா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா … இல்ல நீதான் எனக்கு எதாவது நடக்க விட்ருவியா … ரொம்ப யோசிக்காதா … சரியா …” என்று தம்பியை சமாதானம் செய்ய முயன்றவளின் முயற்ச்சி அவனிடம் எடுபடவில்லை. பதில் கூறாமல் அமைதியாக வானத்தை வெறித்தவனின் கசங்கிய தோற்றம் அவள் மனதை பிழிய,



“செழி … என்னடா … நா போல நீ பீல் பண்ணாத … இதுக்கு ஏண்டா இவ்வளவு எமோஷன் ஆகுற … விடு நா போல …” என்ற தமக்கையின் தோளை சுற்றி கை போட்டு தன்னோடு நெருக்கிக் கொண்டவன்,



“அதெல்லாம் விட வேணாம் நீ போ … என்னனு தெரில நெஞ்ச போட்டு அழுத்துது, உன்ன அங்க வேலைக்கு அனுப்ப கூடாதுனு மனசு கடந்து துடிக்குது … கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் போல … அது அம்மா அப்பாவ விட நீதான் எனக்கு ரொம்ப க்ளோஸ் … குணாவ பத்தி பேசினதும் பயந்துட்டேன் போல …” என்று சிரித்தவனின் தலையோடு தலையை முட்டு கொடுத்தவள்,



“இல்லடா நா போல … நீ என்ன நினைச்சு தெனமும் கஷ்டப்படுவ … வேணாம் விடு …” என்ற அக்காவின் தலையில் தன் தலையால் முட்டியவன்,



“நோ மங்கீ நீ போற … போய் அந்த வீணா போன குணாவ ஒருவழி பண்ணி, அந்த டிக்கியில்லாத தயா மூஞ்சுல கரிய பூசுர …” என்று அவன் கூறியதை கேட்டவளின் முகம் புன்னகையில் விரிந்தது.



“உனக்கு புடிச்ச விஷயம் ஒன்னு சொல்லவா … அந்த குணாக்கு நல்ல எடுப்பான டிக்கி … அவனுக்கு ஜீன் அழகா பொருந்தியிருக்கு …” என்று ரசனையோடு பேசியவளை கண்டு அவளிடமிருந்து விலகி நெஞ்சில் கை வைத்தவன்,



“என்னடி மங்கீ … நீ பேசுற மாடுலேஷனே சரியில்ல … அங்க அண்ணங்காரன்கிட்ட லவ சொல்லிட்டு தம்பிய பாத்து மயங்கி நிக்கிற அதுவும் ஒரே நாளுல …” என்று அதிர்ந்தவனை கண்டு கலகல என்று சிரித்தவள்,



“சீ … இது லவ் இல்ல ரசனை தம்பி … ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியுமா தெரியாதா …” என்று கேள்வியெழுப்பியவள், பின் சோர்ந்து போனவளாக,



“இன்னைக்கு பத்தர மணிக்குத்தான் விட்டான் அதுக்கே கிளம்பும் போது வார்ன் பண்ணி அனுப்புனான் டா … மிட்நைட் வரைக்கும் வேலையிருக்குமாம் … சில சமையம் நைட் ஸ்டே கூட பண்ணணுமாம் … வீட்டுக்கு தெரியாம எப்படி இத பண்றதுனு யோசனையா இருக்கு செழி …” என்ற தமக்கையை சற்று நேரம் புருவம் சுருக்கி பார்த்தவன், பின்,



“டோண்ட் ஒர்ரி … பாத்துக்கலாம் விடு நா இருக்கேன்ல …” என்று நம்பிக்கை கொடுக்க,



“தம்பிடா …” என்று அணைத்துக் கொண்டவளை பதிலுக்கு, “அக்காடா …” என்று அணைத்துக் கொண்டான்.



மறுநாள் காலை ஐந்து மணிக்கு அரக்க பரக்க கிளம்பி சரியாக ஆறு மணிக்கு தன்னிடமுள்ள சாவியை கொண்டு குணாவின் வீட்டு கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள் சங்கீதா. அவன் அறையை எட்டி பார்க்க நல்ல உறக்கத்தில் இருந்தது தெரிந்தது. நேராக சமையலறைக்குள் சென்றவள் டீ போடுவதற்காக பாலை காய்ச்சினாள்.



“ம்ம்ம் … இதெல்லாம் எங்க வீட்டுல கூட செஞ்சது இல்ல … என் தலையெழுத்து இவனுக்கெல்லாம் கால் கடுக்க நின்னு டீ போடனும் இருக்கு …” என்று புலம்பியபடி டீயை போட்டு முடித்தாள். ஒரு டீ போட்டு முடிப்பதற்குள் இடுப்பு வலி எடுத்துவிட, இடுப்பை பிடித்தபடி நின்றவள் கையில் கட்டிருந்த வாட்சில் மணியை பார்த்துவிட்டு,





“எரும கவுந்தடிச்சுட்டு தூங்குது பாரு … காலைல எக்சர்சைஸ் பண்ற பழக்கமே கிடையாது போல …”என்று வாய்க்குள் திட்டியவள்,



“இவன் போடுற ஆட்டத்துக்கு தனியா எக்சர்சைஸ் வேற பண்ணணுமாக்கும் …” என்று அவளே பதிலை சொல்லிக் கொண்டே, அவன் கிளம்புவதற்கு தேவையான அனைத்தையும் புலம்பிய படி செய்து முடித்தாள்.



“அய்யோ இப்போ அந்த மைனர் கு-ச வேற எழுப்பனுமா …”, “வாய்ல விரல் வச்சு சப்புற பாப்பா, எழுந்துக்க தெரியாது … இந்த மூஞ்ச எழுப்புறத்துக்கு ஒரு ஆள் …” முணுமுணுத்தபடி அறைக்குள் நுழைந்தவள், அவனை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் தடுமாறி போனாள்.



முதலில், “குணா குணா …” என்று அழைத்து பார்த்தாள். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை என்றதும், அறையில் இருந்த ஹாங்கரால் மெல்ல குத்தி குத்தி எழுப்பினாள். அவனிடம் இருந்து சிறு அசைவு கூட இல்லையென்றதும், பொறுமையிழந்தவள், காலை மடக்கி கட்டிலில் ஏறி தூங்குகின்றவன் அருகில் சென்று, “குணா…” என்று உலுக்கி அழைக்க அடுத்த நொடி அவன் அணைப்பில் கிடந்தாள் சங்கீ.



ஆறடி உயரத்தில் நல்ல திடகாத்திரமான தேகம் உடையவன் குணாளன். ஐந்தடியை தனக்குள் பாந்தமாக சுருட்டிக் கொண்டான். கண்ணை திறக்காமல் உறக்கத்தில் இருந்தவனின் அணைப்பில் அரண்ட கோழி குஞ்சியாய் நடுங்கிக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவன் கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருந்தாலும் முறுக்கேறியிருந்த உடலை வைத்தே அவன் தேவையை உணர்ந்தவள் மூச்சு விட கூட பயந்து போய் அசையாமல் படுத்திருந்தாள்.



நல்ல அயர்ந்து தூங்கியபின் அவன் அணைப்பில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று அவள் நினைத்திருக்க, நொடிகள் கடக்க கடக்க, அவனின் முகம் உணர்ச்சிகளின் பிடியில் சிவந்து போய் உஷ்ண மூச்சுக்காற்று அவள் காது மடலை தீண்ட அவஸ்தையில் நெளிந்தாள் சங்கீதா. அவள் உடல் அசைவில் உணர்ச்சிகள் சீண்டப்பட, “ஹனிஈஈஈ …” என்று கண்ணை திறவாமலே முனகியவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் மேல் படர்ந்து, ஆவேசத்துடன் அவள் இதழ்களை தீண்ட இதழ் தேனிற்கு பதில் பாறையில் மோதியதை போல இருக்கவும் மெல்ல கண்ணை திறந்து பார்த்தான்.



கண்கள் இரெண்டிலும் நீர் கோர்த்திருக்க வலக்கையை சுருட்டி குவித்து உதட்டின் மேல் வைத்திருந்தவளை கண்டதும் பீறிட்டு கிளம்பிருந்த உணர்வுகள் போன இடம் தெரியாமல் மறைந்து போயின. சில நொடிகள் கண்ணீர் கோர்த்திருந்த விழிகளை ஆழ்ந்து பார்த்தவன், எதுவும் பேசாமல் அமைதியாக அவளிடமிருந்து விலகி எழுந்தவன் பாத்ரூம்குள் நுழைந்துக் கொண்டான்.



படுத்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்காமல் அசையாமல் கிடந்தாள் சங்கீதா. அவளால் சற்று முன் நடந்ததை அவ்வளவு சீக்கிரமாக கடக்க முடியாமல் தடுமாறிப் போனாள். சற்று அசந்திருந்தாலும் அவளை முத்தமிட்டிருப்பான், அதை நினைத்த நொடியே உடல் பயத்தில் தூக்கி போட்டது. அவள் ஒன்றும் ஆண் பெண் உறவு பற்றி தெரியாதா அப்பாவி இல்லை. தைரியமான துடுக்கான பெண் தான் அவளையே அசைத்திருந்தான் குணாளன்.



ஆம் அவள் உணர்வுகளை அசைத்திருந்தான். ஒரு வேளை தான் சுதாரிக்காமல் இருந்து அவன் தன்னை முத்தமிட்டிருந்தால், தானும் அவன் நெருக்கத்தில் உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டு இசைந்திருந்தால், நினைக்க நினைக்க கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தயாளனிடம் தன் காதலை சொல்லிவிட்டு எப்படி தன் மனம் தடுமாற செய்யும், அப்படியென்றால் தான் ஒழுக்கமில்லாதவளா என்ற கேள்வி அவள் ஆழ் மனதில் பதிந்து போனது.



இவ்வளவு ரிஸ்க் எடுத்து இங்கே இருந்துதான் ஆக வேண்டுமா என்ற கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் தடுமாறியது மனம். இனி இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவள் பாத்ருமில் தண்ணீர் விழுகின்ற சத்தம் நின்றதும் அவசரமாக கட்டிலில் இருந்து எழுந்து ஹாலிற்கு சென்றாள்.



அங்கே பாத்ரூமில் கழுத்து நரம்புகள் புடைக்க கஷ்டப்பட்டு தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டிருந்தான் குணாளன். பெண்ணுடல் வேண்டும் வேண்டும் என்று அடம்பிடித்த தேகத்தை அடக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அவனின் மொத்த கோபமும் சங்கீதாவிடம் தான் திரும்பியது. இதுவே சங்கீதாவிற்கு பதில் வேறொரு பெண் அவன் கட்டிலில் படுத்திருந்தால் நிச்சயம் அவளை விட்டிருக்க மாட்டான். கலங்கிய விழிகள் இரண்டும் தன்னை பயத்துடன் பார்த்த பார்வை மேலே முன்னேற விடாமல் செய்ய தன்னை அறியாமலே அவளை விட்டு விலகியிருந்தான்.



கண்ணை மூடி மேலிருந்து விழுகின்ற ஷவர் நீரின் அடியில் நின்றவனின் நாசியை இன்னும் தீண்டிக் கொண்டிருந்தது சற்று முன் அவன் உணர்ந்த அவளின் வாசம். மூச்சை இழுத்து அவள் வாசத்தை தனக்குள் நிரப்பியவன், சற்றென்று கண்ணை திறந்தான். ‘ச்ச என்ன செய்துக் கொண்டிருக்கிறேன், திருமணம் ஆனா பெண் எப்படியும் தவிர்ந்த கணவனுடன் சேர்ந்து விடும் ஆசையில் இருப்பவளை போய்’ என்று தன்னை நொந்துக் கொண்டவன் தலையை உலுக்கி அவள் நினைப்பை விரட்ட நினைத்தான்.



நெஞ்சில் சோப்பை தேய்த்த போது, சற்று முன் தான் உணர்ந்த அவளின் மேனியின் மென்மை ஞாபகத்திற்கு வர கண்ணை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தான். மனதிற்குள் இது தவறு சரி என்று ஏகப்பட்ட வாக்குவாதம். இறுதியில் இரண்டு நாட்களாக பெண்ணை தொடாததால் வந்த தடுமாற்றம் என்று முடிவெடுத்தவனின் சிந்தனை முழுவதும் சங்கீதா மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள்.

இன்னும் இரண்டு நாளில் டெல்லியில் நடக்கவிருக்கும் பார்மா கான்பரன்சில் தான் என்ன பேச வேண்டும் என்பதை மும்முரமாக தயாரித்து கொண்டிருந்தான் தயாளன். அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான் கிரி. லேப்டாபில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவனின் சிந்தனை நேற்று ராம்குமார் கூறியதில் சிக்கிக் கொண்டது. நேற்றிரவு தயாவை அழைத்தவன்,



“ண்னா … குணா சங்கீதா ஹஸ்பண்ட் பத்தி கேட்டான்னா … இப்போ எங்க இருக்கார் என்ன பன்றாருனு புல் டீடைல் வேணும்னு சொல்லிட்டான் … பொய்யா யாரையாவது கை காட்டினா, கண்டிப்பா அவங்கள பத்தி விசாரிப்பானு தோணுது … இப்போ என்னணா பண்றது …” என்று கவலை தேய்ந்த குரலில் கேட்கவும் சற்று நேரம் நெற்றியை வருடி யோசித்தவன்,



“எதுக்காம் …” என்று கேள்வி கேட்க, “தெர்லன … பட் ரொம்ப சீரியசா கேட்டான் …” என்கவும்,



“ம்ம்ம் …” என்று கேட்டுக் கொண்டவன், “அவன் போன் பண்ணா எடுக்காதா …” ஐடியா கொடுக்க,



“ஒருவாரமா போன்ல டார்ச்சர் பண்ணான் … நா போன் எடுக்கலைனு நேரலையே வந்துட்டான்ணா …” என்றவனின் பதிலில் உதட்டை கடித்து சற்று நேரம் யோசித்தவன் பின் நெற்றியை தடவியபடி,



“அந்த பொண்ணு சொல்ல கூடாதுனு சொல்லிருக்கா … வேணுமா அந்த பொண்ணு கிட்டயே கேட்டுக்கோன்னு சொல்லிடு …” என்கவும், “ணா …” என்று இழுத்தவனிடம், “நா தான் அனுப்பிவிட்டேனு எப்பவும் சொல்லிடாத டா … எதையாவது சொல்லி சமாளி …” என்றுவிட்டு போனை வைத்திருந்தான். அப்போதிலிருந்து எதற்காக இதை கேட்கின்றான் என்ற எண்ணமே.



நீண்ட நேரமாகியும் அவன் தெளியவில்லை என்றதும் சூடாக காபி கலந்து கொண்டு வந்த கிரி அவன் முன் கப்பை வைத்தபடி,



“பாஸ் …” என்று சற்று அழுத்தி அழைக்கவும், மெல்ல திரும்பி பார்த்தவனின் முகத்தில் அயர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. இவ்வளவு ஓடி சொத்து சேர்த்து என்ன ப்ரோஜனம், அவன் கவலைகளை கொட்டி ஆறுதல் தேடுற அளவிற்கு நெருங்கிய உறவு இல்லாததை நினைத்து வேதனை பட்டான் கிரி.



“பாஸ் … நீங்க தப்பா நினைச்சாலும் பரவால்லை நா சொல்றதை சொல்லிடுறேன் … நீங்க ஒத்துக்கலைனா கூட உண்மை என்னனு உங்க முகமே காட்டி கொடுத்துடுது … எதுக்கு பாஸ் உங்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல், பேசாம அவங்களை திரும்ப வர சொல்லிடுங்க …” தன் மனதில் இருந்ததை பேசியவனை கண்டு தயாவின் இதழ்கள் மெல்ல விரிந்தன.



“நா திரும்ப அழைச்சா அவ மேல நம்பிக்கை இல்லைனு தானே அர்த்தம் … அத நா செய்ய விரும்பல …” என்றவனின் பதிலில் முதல் முறையாக தன் மனதில் இருந்ததை ஒத்துக் கொண்ட முதலாளியை நினைத்து சந்தோஷப்பட்டவன்,



“நீங்க எந்த நம்பிக்கைல அவங்கள அங்க அனுப்புனீங்க … வாழ்க்கை முழுதுக்கும் வருவேன்னு வாங்கு கொடுத்தவங்களே சந்தர்ப்பம் கிடைச்சா மாறும்போது, எந்த வித நம்பிக்கையும் அவங்களுக்கு நீங்க கொடுக்காத போது எப்படி ஒரே போல இருப்பாங்கன்னு நீங்க நம்பலாம் …” என்றவனின் பதில் கேள்வியில் உள்ளுக்குள் திடுக்கிட்டு போனாலும்,



“போர் இயர்ஸ் … என்னையே விடாம சுத்தி வந்த பொண்ணு மாறுவானு நீ எப்படி நம்பலாம் கிரி …” என்ற தயாவை சோர்ந்து போய் பார்த்தான்.





“ஏன் பாஸ் அந்த போர் இயர்ஸ்ல என்னைக்காவது அந்த பொண்ணுகிட்ட உங்க மனச திறந்து சொல்லிருக்கீங்களா … இல்ல பார்வையால உணர்த்திருக்கீங்களா … இப்பவும் தம்பிக்காகன்னு சொல்லி தான் அந்த பொண்ண அங்க அனுப்பிருக்கீங்க …” தயாளனுக்கு எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பேசியவனின் கூற்று தயாளனின் மனதில் இறங்கினாலும் அதை காட்டிக் கொள்ளாதவன்,



“போதும் கிரி எனக்கு அட்வைஸ் பண்ணுனது … போய் மீட்டிங்கு தேவையானதை ரெடி பண்ற வேலையை பாரு …” அவன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன், வலுக்கட்டாயமாக மனதை வேலையில் செலுத்தினான். ஒருமணி நேரம் சென்றிருக்கும் டேபிளில் இருந்த போன் ஒலிக்கவும் எடுத்து பார்த்தவன் அதில் ஒளிர்ந்த பெயரை கண்டு புருவம் சுருக்கினான். அழைப்பை ஏற்று,



“சொல்லு வைஷூ … என்ன திடீர்னு மாமா ஞாபகம் வந்துருக்கு …” என்று போலியாக ஆச்சிரியப்பட்டவனிடம், “என்ன மாமா கிண்டல் பண்றீங்க … நீங்க மட்டும் ஒழுங்கா … இதுவரைக்கும் எத்தன தடவை என்கிட்ட பேசியிருக்கீங்க …” பதிலுக்கு சிலிர்த்தவளை கண்டு அழகான முறுவல் ஒன்று அவன் முகத்தில் பூத்தது.



“இப்போ உனக்கு காரியம் ஆகணும் போல மாமாக்கு எதுவும் இல்லடா அதான் கால் பண்ணல …” என்று கிண்டலடித்தவனை கண்டு, “மாமாஅ …” என்று சிணுங்கி அழைத்தவள் பின் அவன் நலனை பற்றி கேட்டு அறிந்துக் கொண்டாள். சில விசாரிப்புகளுக்கு பின்,



“ம்ம்ம் சொல்லு மாமாவால என்ன காரியம் ஆகணும் …” என்று நேரடியாக விசயத்திற்கு வந்தான் தயாளன். சற்று தயங்கியவள் பின் தைரியத்தை வரவழைத்து கொண்ட பின்,



“எப்போ மாமா நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்க …” என்ற கேள்வியில் பக்கென்று சிரித்துவிட்டான்.



“இதுதான் பக்கத்து இலைக்கு பாயசம் கேட்குறதா …” என்று கேலி பேசியவனிடம்,



“ஏன் ஏன் … என் மாமன் மேல அக்கறை இருக்க கூடாதா …” மீண்டும் சிலிர்த்தவளிடம்,



“அப்போ நீயே என்ன கட்டிக்கோ … நாளைக்கே தாலி கட்டுறேன் …” என்றவனை கண்டு, “மாமா …” என்று அதிர்ந்து அழைத்தாள்.



“அது வந்து … உங்களுக்கு வேற நல்ல பொண்ணு கிடைக்கும் மாமா … நா வேணா …” என்றவளின் பதிலில்,



“ஏன் … உனக்கென்ன குறை … நா உன்னையே கட்டிக்குறேன் …” மீண்டும் போலியாக அடம்பிடித்தவனிடம்,



“நா வேணா மாமா …”, “ஏன்னு சொல்லு அப்போ தான் விடுவேன் …” என்று மிரட்டியவனிடம்,



“அது … என் ஹார்ட் கரப்ட் ஆகியிருக்கு மாமா … உங்களுக்கு வேற நல்ல சமத்தான அம்சமான பொண்ணா பாக்கலாமா …” அவள் பதிலில்,



“ஓஹோ அப்படியா விஷயம் … லேடிஸ் பர்ஸ்ட் … உனக்கு முடியுட்டும் அப்புறமா நா பண்ணிக்கிறேன் …” என்று அதிர்ச்சி கொடுத்தான் தயா.



“மாமாஆஆஆ …” என்று நெஞ்சில் கை வைத்தவள்,



“உங்களுக்கு நடந்தாதான் எனக்கு நடக்கும் … உங்க மனசுக்கு புடிச்ச பொண்ண யாராவது இருந்தா சொல்லுங்க இல்ல நா பாக்கட்டுமா எதுனாலும் ஓகே, அப்பாகிட்ட பேசி நா முடிச்சு வைக்கிறேன் …” என்று பொருப்பாய் பேசியவளைக் கண்டு அவன் முகத்தில் இருந்த முறுவல் நன்றாக விரிந்தது. அவள் கேள்விக்கு பதில் கூறாமல் அமைதி காத்தவனை கண்டு,



“சரியான அழுத்தம் மாமா நீங்க … இப்போ என்ன குணா மாமாவை புடிச்சிருக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு டைரக்ட்டா நா சொல்லனுமா …” சிறு கோபப்பட்டவளிடம், ‘அப்படி வா வழிக்கு …’என்று நினைத்தவன், அப்பாவியாய்



“இது என்ன ஓரவஞ்சனை … நானும் மாமா அவனும் மாமா, ஆனா அவனை மட்டும் உனக்கு புடிச்சிருக்கு …” அவனின் பாவமான குரலில் பதறிப் போனவள்,



“அய்யோ உங்களை யார் புடிக்கலைனு சொன்னா …உங்கள ரொம்ப பிடிக்கும் மாமா … பட் லைப் லாங் நினைக்கும் போது நீங்க கொஞ்சம் போர் மாமா அதான் நீங்க என் மனசுல ஒட்டல …” என்ற பதிலில் தலைசாய்த்து சத்தம் போட்டு சிரித்துவிட்டான்.



நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்விட்டு சிரித்த தயாவை தான் வாஞ்சையோடு பார்த்திருந்தான் கிரி.



“டோண்ட் ஒர்ரி வைஷு … இந்த மாமா இருக்க பயமேன் … சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன் … ஓகேவா …” மாமன் மகளுக்கு வாக்கு கொடுத்து அழைப்பை துண்டித்தான் தயா. தன்னையே விடாமல் பார்த்திருந்த கிரியை கண்டு இதழ் விரிய சிரித்தவன்,



“என்னடா … வச்ச கண்ணு எடுக்காம பார்த்துகிட்டு இருக்க …” என்று கேலியாக கேட்க,



“பேசாம நீங்க இவங்களையே கல்யாணம் பண்ணிக்குங்க பாஸ் …” கிரியின் பதிலில் கோபம் கொண்டவன்,



“கிரி …” என்று உறுமினான். “வரவர உன் லிமிட் தாண்டி பேசிகிட்டு இருக்க … போய் டாக்குமெண்ட் ரெடியாகிடுச்சானு பாரு …” சிடுசித்தவனிடம், “சாரி பாஸ் …” என்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் கிரி.



கிரி சென்றதும் கண்ணை மூடி யோசித்தவன் தன் அன்னையிடம் பேசி அவரை இங்கே வர வைத்து குணாவை அவரைக் காட்டி தன்னுடன் அழைத்துக் கொண்டால் மட்டுமே இதற்கு ஒருவழி பிறக்கும் என்று முடிவு செய்தான். அப்படியே சங்கீதா பற்றிய பயமில்லாமல் இருக்கலாம் என்று நினைத்தவனின் முகத்தில் நிம்மதியான புன்னகை.



ஆனால் அவன் நிம்மதியை அழிப்பது போல அடுத்த இரண்டு நாளில் குணாமிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் பதறிப் போனான் தயாளான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு - 7:



ஒருமாதம் ஓடிவிட்டது சங்கீதா குணாவிடம் வேலைக்கு சேர்ந்து. இந்த இடைப்பட்ட நாட்களில் அவனால் எந்தவித பிரச்சனையும் அவளுக்கு உண்டாகவில்லை, சொல்லப் போனால் முதல்நாள் காலையில் நடந்த சம்பவத்திற்கு பிறகு குணா சங்கீதாவிடம் இருந்து சற்று தள்ளியே இருந்தான்.



அன்று ஸ்டூடியோவில் மும்முரமாக டான்ஸ் ப்ராக்டிஸில் ஈடுபட்டிருந்த குணாவின் பார்வை அடிக்கடி அவனை மீறி சங்கீதாவை தான் பார்த்தது. எதையோ வீணாவிடம் கூறி சிரித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது எல்லாம் குணாவின் பார்வை அறிந்தே ஓடி ஓடி அவன் தேவைகளை பூர்த்தி செய்தாள் சங்கீதா. அவன் பார்வையை உணர்ந்து திரும்பி பார்த்தவள், என்னவென்று பார்வையால் கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்தவனின் மனம் பார்த்து ஒருமாதமே ஆன பெண்ணிற்காக ஏன் இவ்வளவு யோசிக்கின்றோம் என்று தன்னையே கடிந்துக் கொள்ள, முயன்று தன் கவனத்தை நடனத்தில் செலுத்தினான்.



தீவிர பயிற்சியில் இருந்தவனின் பர்சனல் போன் தொடர்ந்து ஒலிக்க, யார் என்று பார்த்தவன் தயாவின் பெயரை கண்டதும், சங்கீதாவிடம் கொடுத்துவிட்டு பயிற்சியை தொடர்ந்தான். அவளும் பெயரை பார்க்காமல் அழைப்பை ஏற்றவள், எதிர்முனையில் இருப்பவர் ஹலோ கூறுவதற்கு முன்,



“குணா டான்ஸ் ப்ராக்டிஸ்ல இருக்கார் … என்ன விஷயமா கால் பண்ணீங்கன்னு சொன்னா அவர்கிட்ட சொல்லிடுவேன் …” என்று மரியாதையாக பேசியவளுக்கு பதில் இல்லாமல் மறுமுனை அமைதி காத்தது.



சட்ரென்று காதிலிருந்து போனை எடுத்து பார்த்தவளுக்கு தயாவின் பெயரைக் கண்டும் படபடத்து போனது.



“ஹெ … ஹல்லோ … தயா சார் …” என்று தடுமாறியவளைக் கண்டு அழகான முறுவல் ஒன்று அவன் முகத்தில் உட்கார்ந்துக் கொள்ள,



“ஹைய் சங்கீ மங்கீ …” என்றான் புன்னகையோடு. அந்த அழைப்பில்லையே தடுமாறிப் போனவள், அடுத்து அவன் கேட்ட



“ஹொவ் ஆர் யூ … அப்புறம் ஜாப் எப்படி போகுது … எதாவது ப்ரோப்லேம் இருக்கா …” என்ற அக்கறையான கேள்வியில் அதிர்ந்து போனவளுக்கு பதட்டம் கூடியது.



“ம்ம்ம் … பை … இன் … ஒரு … இஸ்ஸு … ஸ்ஸும் … இல்ல …” என்று சொல்லி முடிப்பதற்குள் ஏன் என்று தெரியாமலே திணறிப் போனாள். அவளின் நிலையை உணர்ந்துக் கொண்டவன் அவள் குரலை கேட்டதே போதும் என்ற நினைப்பில்,



“ஓகே … குணா ப்ரீயான கால் பண்ண சொல்லு … பை டேக் கேர் …” என்ற சாதாரண அக்கரையில் கூட துணுக்குற்று போனாள். போனை வைத்ததும் அப்படியே ஒடுங்கி போய் ஓரமாக உட்கார்ந்துவிட்டாள்.



இவை அனைத்தையும் டான்ஸ் ஆடிக் கொண்டே பார்க்காததை போல பார்த்திருந்தான் குணாளன். அவளின் திடீர் முக மாற்றலும் உடனே போனை வைக்காமல் இருவரும் பேசியதை கண்டவனின் மனதில் சிறு நெருடல். சற்று முன்பு வரை தன்னிடம் வளவளத்துக் கொண்டிருந்தவள் திடீரென்று அமைதியாகிவிட, நெற்றி சுருக்கிய வீணா,



“வாட் ஹப்பெண்ட் சங்கீ … ஏன் சைலெண்டா இருக்க … எனி ப்ரோப்லேம் …” என்றவளின் பார்வை குணாவை சந்தேகமாக பார்த்தது. அதில் பதறிப் போனவள்,



“அய்யோ … அப்படியெல்லாம் இல்ல வீணா … ஜஸ்ட் ஜஸ்ட் … பீரியட் பெய்ன் … அதான் …” மேலே கூற முடியாமல் தடுமாறியவளை, சந்தேகமாக பார்த்தவள்,



“இதுக்கா டென்ஷனா நிக்கிற … ஜஸ்ட் இன்போர்ம் டூ குணா … அவன் புரிஞ்சுப்பான் …”, என்றவள், “உனக்கு பயமா இருந்தா சொல்லு நா அவன்கிட்ட பேசுறேன் …” என்று எழுந்த தோழியின் கை பற்றி அமரவைத்த சங்கீதா,



“அதெல்லாம் ஒன்னும் வேணா … கொஞ்ச நேரத்துல நானே சரியாகிடுவேன் …” என்ற பதிலில்,



“ம்ம்க்கும், எங்கையாவது பெர்பார்ம் பண்ண விடுறியா டி … நந்தி போல தடுத்துகிட்டு …” என்று முறைத்தவளை பாவமாக பார்த்தாள் சங்கீதா.



இரவு ஒன்பது மணியை போல அனைத்து வேலையும் முடிந்த பின் ஸ்டூடியோவை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் குணாளன். கூடவே நாய்க்குட்டியை போல அவன் பின்னால் ஓடினாள் சங்கீதா. காரின் அருகில் வந்ததும், கதவை திறக்க போனவன், திறக்காமல் நிமிர்ந்து காரில் ஏற போன சங்கீதாவை சில நொடிகள் அழுத்தமாக பார்த்தான். எதற்காக பார்க்கின்றான் என்று தெரியாமல் காரில் ஏறாமல் அவனையே அவஸ்தையோடு பார்த்தவளிடம்,



“உன் ஹஸ்பண்ட் தான் கூட இல்லையே … நாம செக்ஸ் வச்சுக்கிட்டா என்ன தப்பு … உனக்கு அதுக்கு விருப்பமா …” என்று நேரடியாக கேட்க, விதிர்விதிர்த்து போனவள், தன்னால் கார் கதவிலிருந்து கையை எடுத்து இரு அடிகள் பின்னால் சென்றவளின் தலை அடுத்த நொடியே இல்லை என்று அசைத்தது.



கண்கள் இடுங்க சில நொடிகள் அமைதியாக பார்த்தவன் பின்,



“வெல் … ஐ நீட் டூ கிவ் ரெஸ்பெக்ட் டூ மை பீலிங்ஸ் … சோ காலைலையும் நைட்டும் என் வீட்டுக்கு வராத … மார்னிங் எயிட் ஷார்ப்பா ஸ்டூடியோ வந்துடு … அப்புறம் முடிஞ்சளவுக்கு வேலையை விட்டு போக பாரு … என்னால ரொம்ப நாள் கண்ட்ரோல இருக்க முடியாது … ஓகே …” என்றவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் காரில் ஏறி பறந்திருந்தான்.



‘அடப்பாவி இப்டியாடா பச்சையா கேட்ப … வெட்கம் கெட்டவனே … நா வேலைக்கு சேர்ந்தே ஒரு மாசம்தானடா ஆகுது அதுக்குள்ள ஷாக் கொடுக்குற சண்டாளபாவி … எப்படிடா என்ன பாத்து இப்படியொரு கேள்வி கேட்க தோணுச்சு …’ என்று புலம்பியவள் ஊரில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளால் அவனை திட்டி தீர்த்திருந்தாள்.



காரில் ஏற்றாமல் தன்னை அங்கேயே விட்டு சென்றது வேற அவள் கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது. நடு ரோட்டில் கையை பிசைந்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் சங்கீதா. காலையில் அவன் வீட்டின் பார்க்கிங்ல் தான் தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்தியிருந்தாள், இப்பொழுது எப்படி வீட்டிற்கு செல்வது என்று யோசித்தவள் உடனே செழியனை அழைத்திருந்தாள்.



பல திட்டுகளை வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தவளின் முன் கோபத்துடன் தன் வண்டியை நிறுத்தினான் செழியன்.



“உனக்கென்ன நடுரோட்ல நிக்கனும்னு தலையெழுத்து … வேலையும் வேணா ஒரு மயிரும் வேணாம் … ஒழுங்கு மரியாதையா நாளைல இருந்து உன் பார்லருக்கு போற …” என்று கோபத்தில் சீரியவனுக்கு பதில் கூறாமல் அமைதி காத்தாள்.



‘இதுக்கே இந்த குதி குதிக்குறான் … இன்னும் அவன் படுக்க கூப்டத சொன்னா, அவ்வளவு தான் அக்கானு பாக்காம என்ன அறைஞ்சாலும் அறைஞ்சுடுவான் …’ மனதில் புலம்பியவள் வாயை இறுக மூடிக் கொண்டாள்.



குணாளனின் இடத்திற்கு வந்ததும் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்தவளின் பார்வை தன்னை மீறி அவன் தங்கியிருந்த பிளாட் பக்கம் நோக்கி தான் சென்றது. செழியன் மட்டும் இங்கே இல்லையென்றால் கண்டிப்பாக மேலே சென்று அவன் என்ன செய்துக் கொண்டிருக்கின்றான் என்று பார்த்துவிட்டே வந்திருப்பாள் அந்தளவிற்கு அவள் மண்டைக்குள் அவன் என்ன செய்துக் கொண்டிருப்பான் என்ற கேள்வி ஓடியது.



அவள் கவனித்த வரை இந்த ஒரு மாதமாய் எந்த பெண்ணையும் அவன் தீண்டவில்லை. இன்று என்னாகுமோ என்ற கவலையுடன் தன் ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றாள் சங்கீதா. குணாவின் மனநிலையும் அவள் எண்ணியதை போல தான் தடுமாறிக் கொண்டிருந்தது.



இந்த ஒரு மாதமாய் தன்னை பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அதற்கு முக்கிய காரணம் ராம்குமார். அவனுக்கு தெரிந்த பெண் என்ற காரணம் மற்றொரு காரணம் இதுவரை தானாக சென்று எந்த பெண்ணையும் படுக்கைக்கு அழைத்ததில்லை. அவர்களாகவே அவனை தேடி வந்தவர்கள், தேடி வர வைத்திருந்தாள் ரேவதி.



இதற்கும் மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாது என்றததால் தான் மனதில் இருந்ததை சங்கீதாவிடம் வாய்விட்டு கேட்ருந்தான். அவன் அறியாமலே அவளை நோக்கி அவனை அமைதியாக இழுத்துக் கொண்டிருந்தாள். இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவன் பார்வை அவன் கட்டுப்பாட்டை மீறி அவளை தான் வட்டமிடுகின்றன.



தான் வாய்விட்டு கேட்டும் முடியாது என்று மறுத்தவளாள் அவனின் ஈகோ அடிவாங்கி போக, சரிதான் போடி என்று நினைத்தவன் ரேவதியை அழைப்பதற்காக மொபைலை கையில் எடுத்து அவள் பெயரை அழுத்த போனவன், ‘நான் வேண்டாம் என்று என்னை விட்டு போனவளை திரும்பி அழைப்பதா …’ என்று கோபப்பட்டவன் மொபைலை தூக்கி எரிந்து விட்டு ஷவருக்கு அடியில் போய் நின்றுக் கொண்டான். அவனால் இப்போதைக்கு முடிந்தது குளிர் நீருக்கடியில் நின்று தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொள்வது மட்டும்தான்.



கண்ணை மூடி நின்றவன் நீண்ட நேரம் யோசனைக்கு பின், ஒரு ஒன்று அவள் தன்னுடைய தேவைகளை தீர்க்க வேண்டும் இல்லையென்றால் அவளுக்கு பதில் வேற ஒருவரை அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.



இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கையறைக்கு வந்த தயாளன் தன் அன்னையை அழைத்திருந்தான். அவர் அழைப்பை ஏற்றதும்,



“ஹலோ அம்மா … உங்களுக்கு தேவையானத எல்லாம் எடுத்து வச்சுடீங்களா … முக்கியமா நீங்க போடுற பிபி டேப்ளெட்ஸ் மூட்டுவலி தைலம் மறக்காம எடுத்துக்குங்க …” என்ற அக்கறையான கேள்வியில் கண் கலங்கி போனார் சௌந்தரம்.



“ம்ம்ம் … எடுத்துக்கிட்டேன் ப்பா …” என்றவர் சற்று தயங்கி,



“கண்டிப்பா அங்க வரணுமா தயா … இதுவரைக்கும் நா இருக்கேனா இல்ல செத்தேனா கூட கண்டுக்காதவனுக்காக நா ஏன் வரணும் …” கமறிய அன்னையின் குரலில் சுருக்கென்ற ஒருவலி நெஞ்சின் ஓரம் உண்டானது.



“அவன் கண்டுக்கலைனு நீங்களும் தான் அவனை தண்ணி தெளிச்சு விட்டுடீங்க ம்மா …” என்ற பெரிய மகனின் குற்றச்சாட்டில் மனம் வெதும்பியவர்,



“என்ன தயா நீயும் என்ன புரிஞ்சுக்கலை பாரு …” என்று கண்ணீர் விட்ட அன்னையிடம்,



“அம்மாஆ …ப்ளீஸ் அழுகறத நிறுத்துங்க … நா உங்களை தப்பு சொல்லலம்மா … ஆனா நீங்க அவன்கிட்ட பேசிகிட்டு இருந்திருந்தா கண்டிப்பா இந்த நிலைக்கு போயிருக்க மாட்டானு தான் சொல்றேன் … நீங்க கோபத்துல அவன்கிட்ட பேசுறத நிறுத்திடீங்க, அத அவன் அட்வான்டேஜ்ஜா எடுத்துகிட்டான் … உங்க கூட இருந்த எமோஷனல் பாண்டிங் விட்டதால அவன் லைப் மாறிடுச்சுமா புரிஞ்சுக்குங்க … நீங்க இங்க வந்தா மட்டும் தான் அவனை பழய நிலைக்கு கொண்டு வர முடியும் …” என்ற மகனுக்கு பதில் கூறாமல் அமைதிகாத்தார் சௌந்தரம்.



தயாளன் கூறியதை கேட்டதும் தான் கொஞ்சம் விட்டு கொடுத்து போயிருக்க வேண்டுமோ என்ற கேள்வி மனதை அறிக்க, பழைய சம்பவங்கள் அவர் நினைவில் வளம் வரவும் நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். அவரிடமிருந்து பதில் இல்லை என்றதும் “அம்மா அம்மா …” என்று பல முறை அழைத்துவிட்டான் தயாளன். விடாமல் ஒலித்த பெரியமகனின் குரலில் நடப்பு நிலைக்கு வந்தவர்,



“எல்லாம் எடுத்து வச்சுட்டேன் தயா … காலைல சீக்கிரம் ட்ரைன் பிடிக்கணும் … நா வைக்கவா …” என்ற அன்னையின் சோர்ந்த குரலில் கலங்கிப் போன தயா



“சாரி அம்மா …” என்றவனின் பரிதவிப்பு குரலில், “விடுப்பா … நா பெருசா எடுத்துக்கல … நாளைக்கு நேர்ல பாத்து பேசலாம் …” என்றுவிட்டு அழைப்பை துண்டித்திருந்தார்.



அன்று வைஷாலி தன்னிடம் பேசியபின் அன்னையை ஊருக்கு வந்தே ஆகணும் என்று பிடிவாதம் பிடித்து சம்மதிக்க வைத்திருந்தான் தயாளன். எப்படியாவது குணாவின் மனதை மாற்றி வைஷுவுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற உறுதி அவனிடத்தில்.



அன்னை வரும் விஷயத்தை குணாவிடம் கூறத்தான் காலையில் அவனை அழைத்தது. அவனுக்கு பதில் சங்கீதா எடுத்து பேசவும் சொல்ல வந்ததை சொல்லாமல் அழைப்பை துண்டித்திருந்தான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தபடி வீட்டில் நடை பயின்றான் தயாளன்.



விடாமல் இரண்டு மணி நேரம் நடந்தவன் எதோச்சையாக சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை பார்க்க மணி பதினொன்று என்று காட்டியது. சற்றும் யோசிக்காமல் அந்த நேரத்தில் குணாவை அழைத்திருந்தான். தூக்கம் வராமல் கடுப்புடன் புரண்டு படுத்துக் கொண்டிருந்த குணாவுக்கு, திடீரென்று போன் ஒலிக்கவும், எரிச்சலுடன் எடுத்து பார்த்தவன் அங்கே ஒளிர்ந்த பெயரில், “இவன …” என்று பல்லை கடித்தபடி,



“எதுக்குடா இந்த நேரத்துல கால் பண்ற … உனக்கு போன் பண்றதுக்கு நேரமே கிடைக்கலையா …” போனை எடுத்ததும் எரிந்து விழுந்தான். அவன் எரிச்சலில் எப்பொழுதும் போல முகத்தில் குறுநகை பூக்க,



“சாரிடா … முக்கியமான கட்டத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா … ” என்ற அண்ணனின் குரலில் தெரிந்த வருத்தம் உண்மையில்லை என்று புரியவும்,



“டேய் நடிக்காத … வேணுமே இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதவன் போல நடிக்கிறியா …” என்று பல்லை கடித்தவனை கண்டு இதழ் விரித்து சிரித்துக் கொண்டவன்,



“யான் என்ன செய்யும் இருபத்திநாலு மணி நேரமும் பிஸில இருக்கீங்க டான்ஸர் சார் … இந்த மாறி நேரத்துல புடிச்சா தான் உண்டு … மொதல்ல எழுந்து உட்கார்ரா … ஒருநாள் லேட்டா தூங்கினா ஒன்னும் நீங்க கொறைஞ்சுட மாட்டீங்க …” என்றவனின் பேச்சில் கடுப்பானவன்,



“மயிறு … நானே தூக்கம் வராம அல்லாடிட்டு இருக்கேன் … இதுல நீ வேற நேரங்காலம் தெரியமா டார்ச்சர் பண்ணிட்டு …” என்று புலம்பியபடி எழுந்து உட்கார்ந்தான்.



“ஏன் படுத்துகிட்டு பேசுனா பேச மாட்டிங்களோ … சொல்ல வந்ததை சொல்லும் சொல்லி தொலையும் …” என்ற தம்பியை கண்டு வாய்விட்டு சிரித்தவன்,



“என்னடா ரொம்ப உஷ்ணமா இருக்கு … வாட் இஸ் தி மேட்டர் …” என்ற அண்ணனிடம்,



“மேட்டர் தாண்டா மேட்டர் … ஒரு மாசம் ஆச்சுடா தயா … முடில … ரொம்ப டென்ஷனா இருக்கு …” என்ற தம்பியின் கூற்றில் நோபிள் பரிசை வென்றதை போல அகமகிழ்ந்து போனான் அண்ணனாக.



“எப்புட்றா … உலக அதிசயமால இருக்கு … எப்படி உன்ன சும்மா விட்டா அந்த லேடி சகுனி …” என்று போலியாக ஆச்சிரியப்பட்டவனை கண்டு,



“டேய் டேய் டேய் … இப்போதானே நடிக்காதன்னு சொன்னேன் … அஞ்சுரூபாக்கு நடிக்க சொன்னா சிவாஜி ரேஞ்சுக்கு நடிக்கிறியேடா …” என்று மீண்டும் பல்லை கடித்தவன், “உனக்கு ரேவா இங்கிருந்து போனது தெரியாது … அத என்ன நம்ப சொல்ற … எனக்கென்னமோ உன் மேல தாண்ட டவுட் வருது நீ தான் எதையோ சொல்லி அவள மிரட்டி விரட்டி விட்டுருக்க …” என்ற தம்பியின் புத்திசாலித்தனத்தில் தயாவின் இதழ்கள் அழகாக விரிந்தன.



“ஆமா … நா மிரட்டுனா அப்படியே பயந்து மிரண்டு ஓடிடுவா பாரு …” என்று சலித்துக் கொண்ட அண்ணனிடம்,



“அது என்னவோ உண்ம தான் … உனக்கு எல்லாம் பயப்படுற ஆள் அவ இல்ல … இருந்தாலும் உன் மேல தான் டவுட்டா இருக்கு டா …” என்ற தம்பியின் பதிலில் தலைசாய்த்து சிரித்தான் அந்த பாசக்கார அண்ணன்.



“கண்டுபிடி கண்டுபிடி … கண்டுபிடிச்சு உன்ன தெரிஞ்சு நானா இருந்தா என்கிட்ட வந்து நியாயம் கேளு …” என்று கேலி பேசியவனிடம்,



“அந்தளவுக்குனா இங்க சீன் இல்ல …” என்று பதிலளித்தவன், திடீரென்று, “உனக்கு சங்கீதாவ தெரியுமா …” என்று கேள்வி கேட்க,



“சங்கீதாவா … யாரு அது …” என்றவின் இதழ்களில் அழகான புன்னகை.



“டேய்இய்ய்ய் … கோபத்த கிளப்பாத … நா பாம் போட்டா கூட உன் காதுக்கு வந்துடும், உனக்கு என்னோட புது பிஏவ தெரியாதா …” என்று பதில் கேள்வி கேட்டவனிடன்,



“உனக்கே தெரியுதுல அப்புறம் ஏன் என்கிட்ட கேட்குற …” என்றவனின் பதிலில்,



“ம்ப்ச் … அது இல்லடா உனக்கு பர்சனலா தெரியுமான்னு கேட்டேன் … இன்னைக்கு உன்கிட்ட போன் பேசும் போது ரொம்ப நெர்வொஸ்சா இருந்தா, அதான் …” என்று விளக்கம் கொடுக்க, ‘ஓஹ் … என்கிட்ட பேச படபடப்பா இருக்கா சங்கீ மங்கீக்கு …’ என்று மனதில் அவளை கொஞ்சியவன்,



“ம்ம்கூம் தெரியாது …” என்றவன் வேறு பேச்சுக்கு தாவினான். மேலும் இருபது நிமிடங்கள் வெட்டியாக கலகலத்த பின்னர்,



“சரி சொல்லு … எதுக்கு கால் பண்ண …” என்ற குணாவிற்கு,



“அம்மா நாளைக்கு இங்க வராங்க குணா, நீ வீட்டுக்கு வா …” என்றழைத்த அண்ணனிடம்,



“இல்ல … நா வரல … நீயே பாத்துக்கோ … என்ன கேட்டா கேட்க மாட்டாங்க அப்படி கேட்டாங்கனா இங்க இல்லைனு சொல்லிடு …” என்றவனின் பதிலில் கோபம் கொண்டான் தயாளன்.



“அப்படிலாம் சொல்ல முடியாது நீ வந்துதான் ஆகணும் …” என்று கட்டளையிட்ட தமையனிடம்,



“முடியாதுடா … என்னால வர முடியாதுன்னு வர முடியாது தான் … இதுக்கு மேல பேசாத …” என்று போனை வைக்க போனவனிடம்,



“டேய் அவங்க உன்ன பெத்தவங்கடா அந்த ரெஸ்பெக்ட் கூட கொடுக்க மாட்டியா … என்னமோ மூணாவது மனுஷங்கள ட்ரீட் பண்றது போல ட்ரீட் பண்ற …” என்று கோபப்பட்டவனிடம்,



“ப்ளீஸ் தயா என்ன எமோஷனலா ப்ளாக்மெயில் பண்ணாத … என்ன என் வழில விடு … உங்க பாதைல இருந்து விலகி ரொம்ப தூரம் வந்துட்டேன் டா … திரும்ப இழுக்க முயற்சிக்காத, நீ தான் ஹர்ட் ஆவ …” என்று நிறுத்தியவன் பின்,



“நா ஒன்னும் சும்மா சொல்லல … நெஸ்ட் மந்த் சிங்கப்பூர் கான்சர்ட் இருக்கு … அதுக்குதான் தீவிரமா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன் … நடுவுல அம்மாவ வச்சு என்ன டிஸ்டர்ப் பண்ணாதா …” என்றவன் அவன் பதிலுக்காக கூட காத்திராமல் அழைப்பை துண்டிக்க,



“என்னது … சிங்கப்பூர் டூரா …” என்று அதிர்ந்தவனின் குரல் குணாவின் காதில் விழாமல் போனது.



அடுத்தநாள் காலையில் ஆறு மணிக்கே ஸ்டூடியோவிற்கு வந்துவிட்டாள் சங்கீதா. மனம் இந்நேரம் குணா என்ன செய்துக் கொண்டிருப்பான் என்பதிலையே அடித்து கொண்டிருந்தது. ஏற்கனவே நேர்த்தியாக இருந்த இடத்தை மேலும் அழகுபடுத்திக் கொண்டிருந்தாள். கையேடு வாங்கி வந்திருந்த பூக்களை தண்ணீர் நிறைந்த ஜாரில் போட்டுக் கொண்டிருக்க திடீரென்று கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் குணா.



நேற்றிரவு தயா பேசியதை நினைத்து சரியாக தூங்காதவன் எரிச்சலோடு ஸ்டூடியோவிற்கு கிளம்பி வந்திருந்தான். அங்கே சங்கீதாவை கண்டதும் அவனின் எரிச்சல் பல மடங்காக எகிறியது. ‘இவளை யாரு இந்த நேரத்துல இங்க வர சொன்னது …’ என்ற ரீதியில் அவளை முறைத்து பார்த்தான். அவன் தன்னை முறைப்பதை கண்டதும் அசடு வழிய சிரித்தவள், “ஹீஹீ … போர் அடிச்சது அதான் …” என்ற பதிலில் நன்றாக முறைதான்.



இரவில் தூங்காததால் கோவை பழம் போல சிவந்திருந்த கண்களை கண்டு அவள் கற்பனை தறிகெட்டு பாய,



“நைட் சரியா தூங்கலையா … ஏன் கண்ணு ரெட்டா இருக்கு …” என்றவளை அலட்சியமாக பார்த்தவன்,



“இது உனக்கு தேவையில்லாதா கேள்வி … உன் வேலையை மட்டும் பாரு …” என்று முறைத்தவனை பதிலுக்கு முறைத்தவளின் மனமும் இதையே தான் சொன்னது.



“ஹலோ பாஸ் … நா உங்க பிஏ … எனக்கு தெரிஞ்சுக்க எல்லா ரைட்ஸ்சும் இருக்கு … அப்படிதான் அக்ரீமெண்ட் காபி சொல்லுது …” என்றவளின் பதிலில் இடுப்பில் கை குற்றி மூச்சை இழுத்து விட்டவன்,



“இங்கபாரு நானே பேட் மூடுல இருக்கேன் … என் வாய கிளறாம போனா உனக்கு நல்லது இல்ல பயங்கர கெட்ட வார்த்தைல திட்டிடுவேன் …” என்று நிதானமாய் சீறினான்.



‘அது என்ன பயங்கர கெட்ட வார்த்தையா இருக்கும் … நமக்கு தெரியாத புது ஐட்டமா … அவன்கிட்டையே கேட்டு பாப்போமா … வேணா வேணா … ஏற்கனவே சூடா இருக்கான் இப்போ வாய திறந்தா பொசுக்கிடுவான் போல …’ என்று மனதில் புலம்பியபடியே பூஜாடி அருகில் சென்றான்.



‘ம்ம்க்கும் அண்ணகாரன் பேசாம ரொம்ப சீன் போட்டான் … இவன் மொறைச்சு திட்டிகிட்டே சீன் போடுறான் … ஆனா ஒன்னுடா காஜி பாய் உன் அண்ணன் சிடுமூஞ்சுக்கு நீ எவ்வளவோ பரவால்ல டா …’ உள்ளுக்குள் அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தபடி மற்றைய ஜாடியை நிரப்பினாள்.



குணாளனின் மனநிலை நொடிக்கு நொடி பயங்கரமாய் மாறி கொண்டிருக்க, தன்னை நிதானப்படுத்த ஸ்பீக்கரில் பாடலை ஒலிக்க விட்டான்.



‘மாமதுர அன்னக்கொடி … வா மதனி அண்ணன் ரெடி …” என்ற பாடல் திடீரென்று அறை முழுவதும் எதிரொலித்து ஒலிக்கவும், உற்சாகமான சங்கீதா தானும் கூட சேர்ந்து பாடியபடி பாடலுக்கு ஏற்ப இடுப்பை வளைத்து கொண்டிருந்தாள். குணாளன் இருந்த கடுப்பில் தன்னை அவன் கவனிக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் ஆடினாள்.



ஆடுவதற்கு ஏதுவாக சுவர் முழுவதும் பதிக்கப்பட்ட கண்ணாடியின் முன் நின்றிருந்த குணாவின் கண்களுக்கு இடுப்பை அசைத்துக் கொண்டிருந்த சங்கீதா கண்ணில் பட்டால். அதுவரை இறுக்கமான மனநிலையில் இறந்தவனின் இதழ்களில் குறுநகை. கண்ணாடியில் பார்த்த படி சங்கீதா சங்கீதா என்று அழைத்தவனின் அழைப்பு அவளை சென்றடையாமல் போகவும், போட்டிருந்த டீஷர்டை கழட்டி சுருட்டி அவள் மேல் வீசியிருந்தான்.



திடீரென்று மேலே விழுந்த டீஷர்டை எடுத்து பார்த்தவள் திரும்பி பார்க்க, அவளை தன்னருகில் வருமாறு சைகை செய்தான் குணாளன். அவனை நோக்கி நடந்தவள்,



‘ப்பா … என்ன ப்ராண்ட் செண்ட் அடிப்பான் இப்படி வாசனையா இருக்கு …’ என்று நினைத்தவளை கண்டு, ‘அடிய்யே என்னடி நடக்குது ஒரு மாசத்துக்கு முன்ன நாத்தமா இருந்தது இப்போ வாசனையா மாறிடுச்சா … நீ சரியில்லடி …’ என்ற மனதின் கூக்குரலை கேட்டு அவளே பயந்து போனாள்.



வெறும் ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்து நின்றவனின் கட்டுக்கோப்பான உடலை பார்த்தபடி நடந்தவளைக் கண்டு,



‘அய்யோ அய்யோ பாக்காதடி பாக்காத … அண்ணன் கிட்ட லவ் பண்றனு சொல்லிட்டு தம்பிய மொறைச்சு மொறைச்சு பாக்குறியே, நீயெல்லாம் நல்ல பொண்ணா … இதோ நிக்கிறானே காட்டெரும இவனுக்கு காமதேவன் பார்வை ஜாஸ்தியா படல … உனக்குதான் பட்டுருக்கு… காஜி புடிச்சவளே, ஆம்பள பொறுக்கி … நீ நல்லாருப்பியா …’ என்ற மனதின் கதறலை கண்டுக் கொள்ளாமல் அவன் முன்னே சென்று பாவமாய் நின்றவளைத் தான் அழுத்தமாக பார்த்திருந்தான்.



“துப்பட்டாவ கழட்டி வை …” என்றான் சத்தமாக. அதில் அதிர்ந்து போனவள், ‘அய்யோ எதுக்கு கழட்ட சொல்றன்னு தெரியலையே ..’என்று உள்ளுக்குள் புலம்பியபடியே,



“எ …ன்ன …” என்று தயங்கி கேட்க,



“ஐ செட் ரிமூவ் யுவர் துப்பட்டா …” என்று நிறுத்தி நிதானமாக கூறவும், ‘அச்சோ என்ன பண்ண போறான் …இப்போ என்ன பண்றது … துப்பட்டாவ தான ரிமூவ் பண்ண சொல்றான் கழட்டி வைப்போம் … அடுத்து ட்ரெஸ்ஸ கழட்ட சொன்னா இங்கிருந்து ஓடிடலாம் …’ என்று தனக்குள் சமாதானம் கூறியபடி துப்பட்டாவை கழட்டி தூரவைத்தாள்.



‘ஓஹ் … ஓடி போராளவுக்கு நீ நல்லவளா மா … உன் மைண்டே அடுத்து அவன் அதத்தான் சொல்லணும்னு ஆசைப்படுது பாரு …’ என்று மனசாட்சி கடுப்பில் காறித்துப்ப,



‘அய்யோ … இந்த மனசாட்சி வேற நேரகாலாம் தெரியாம டார்ச்சர் பண்ணுதே … ’ என்று புலம்பியவள் உண்மையில் மனசாட்சியிடம் சண்டை போட்டு சோர்ந்து தான் போனாள். முகத்தை சாதரனமாக வைத்துக் கொண்டு தன்னை பார்த்தவளிடம்,



“என்ன பாலோவ் பண்ணி ஆடு …” என்றதும், “டான்சா …” என்று அதிர்ந்தவளின் கண்கள் ஒருநொடி ஆசையில் மின்னியதை கண்டவன், “எஸ் …” என்றுவிட்டு குறைத்து வைத்திருந்த பாட்டின் சத்தத்தை அதிகரிக்க,



“இல்ல … நா ஆடல … எனக்கு ஆட வராது …” என்று பின்னால் சென்றவளை திரும்பி பார்த்தவனின் பார்வையில்,



“ஆடுறது என் ஜாப் இல்ல …” என்று தயங்கி தயங்கி பதிலளித்தவளை அழுத்தமாக பார்த்தவன்,



“எஸ் … நா சொல்றதை எல்லாம் செய்யுறது தான் உன் ஜாப் எக்ஸ்சப்ட் …” என்று இரண்டு விரலால் சைகை செய்தவனை கண்டு கண்கள் விரிய பார்த்தவள்,



‘அடேய் … என்ன நானே கஷ்டப்பட்டு அடக்கிட்டு இருக்கேன் என்ன போய் ஆட கூப்பிடுற … இது எங்க போய் முடிய போகுதுன்னு தெரியலையே …’ என்று நொந்தவள், இசையில் மயங்கி அவன் நடனத்தில் மயங்கி அவனை பின்பற்றி ஆடினாள்.



இருவருமே துள்ளலான இசைக்கு ஏற்றவாறே தங்களை மறந்து குத்தாட்டம் போட, மனதில் அழுத்தியிருந்த கவலை மனப்போராட்டம் பயம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. பாட்டின் முடிவில் இருவரும் ஆடியபடி கீழே விழ பாட்டு முடிந்தும் எழாமல் மேலே பார்த்தபடி படுத்திருந்தவர்கள் சற்று நேரம் கழித்து தலையை மட்டும் திருப்பி பார்க்க இருவர் விழிகளும் உரசிக் கொண்டன. அந்த விழிகளில் தெரிந்தது என்ன காதலா இல்லை காமமா?.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 8



தாம் செய்வது சரியா தவறா … தனக்கு என்னானது என்ற சுய அலசலில் ஈடுபட்டிருந்தாள் சங்கீதா. நீண்ட நேரமாக அவளை கவனித்த வீணா, அவளருகில் சென்று உட்கார்ந்தவள்,



“என்ன மச்சி யோசன பலமா இருக்கு … என்னனு சொன்னா நா ஹெல்ப் பண்ணுவேன்ல …” மச்சி என்றழைத்து பழகும் அளவிற்கு இருவருக்கும் அப்படியொரு நெருங்கிய நட்பு.



“அது …” என்று தயங்கியவள் பின் பெருமூச்சை விட்டு,



“இப்போ ஒருத்தர்கிட்ட லவ் சொல்லிட்டு … இன்னொரு பையன்கிட்ட பீலிங்ஸ் வர்றவள பார்த்து நீ என்ன நினைக்கிற …” என்ற தோழியை புரியாமல் பார்த்தவள்,



“வாட்ட் …” என்று முகத்தை சுருக்கவும்,



“ப்ளீஸ் சொல்லுடி … அந்த கேரக்டர பத்தி என்ன நினைக்கிற …” என்றவளுக்கு,



“லவ்வ ஒருத்தன்ட்ட, பீலிங்ஸ்ச இன்னொருத்தன்ட்ட காட்டுறாளா … யாருடி இந்த காமபிசாசு … உனக்கு தெரிஞ்சவளா …” என்று கேள்வி கேட்கவும்,



“ம்ப்ச் … இப்ப அது ரொம்ப முக்கியமா … என் பரெண்டுதான் … நா கேட்டதுக்கு பதில் சொல்லு …” என்று சிடுசிடுத்தவளிடம்,



“அதான் சொல்லிட்டேனே … காமப்பிசாசுன்னு … இதுக்கு மேலையும் அவளை பத்தி என் வாயால சொல்லனுமா …” என்ற தோழியை முகம் சுருக்கி பார்த்த சங்கீ,



“என்னது காமப்பிசாசா … அப்போ நீ மட்டும் ஒழுங்கா … பல பேர மேட்டர் பண்ண அந்த காஜிபாய் மேல விழ துடிச்சுக்கிட்டு இருக்க …” என்று எகிறிக் கொண்டு வந்தவளை முகத்தை கோணி பார்த்த வீணா,



“வாட்ட் … அதுவும் இதுவும் ஒண்ணா … என் மனசுல நா யாரையும் பிக்ஸ் பண்ணல … சோ யார வேணா பார்த்து ஜொள்ளுவிடுவேன், இல்ல மேல விழுந்து பொரளுவேன் … பட் அந்த காமப்பிசாசு ஒருத்தனுக்கு பால்ஸ் ஹோப் கொடுத்துட்டு, வேற ஒருத்தன பார்த்து மயங்கி நிக்குது … இவெல்லாம் ஒரு பொண்ணா …” என்று கோபப்பட்டவள்,



“ஆமா நீ ஏன், உன் காஜி ப்ரெண்டுக்காக என்கிட்ட சண்டைக்கு வர … ஒரு வேல அந்த காஜிகேர்ள் நீ தானோ …” சந்தேகத்தோடு பார்க்க, திடுக்கிட்டு போன சங்கீதா



“ச்சி … லூசு போல பேசாத லூசு … கடுப்பாயிடுவேன் …” என்றவளின் பார்வை அவளை மீறி குணாவை பார்த்தது.



அவனும் அவளைத்தான் அந்த நொடி பார்த்துக் கொண்டிருந்தான். இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டன.



அன்று முழுவதும் இருவர் பார்வையும் மற்றவர்கள் அறியாத வண்ணம் தீண்டிக் கொண்டே இருந்தது. சங்கீதாவும் குணாவும் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கும் வேர்ல்ட் டான்ஸ் டூர் ஏற்பாட்டை நேரில் சென்று பார்த்துவிட்டு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்ப மணி இரவு பத்தரையை தொட்டிருந்தது. அதற்குள் பல முறை அவளை அழைத்துவிட்டான் செழியன்.



கார் அருகில் வந்ததும், காரில் ஏறாமல் சங்கீதாவை அழுத்தமாக பார்த்திருந்தான் குணா. ‘போச்சு … நேத்து போல செக்ஸ் வச்சுக்கலாமான்னு கேட்டு, இங்கையே விட்டுட்டு போக போறான் காட்டெரும …’ என்று மனதில் புலம்பிக் கொண்டிருந்தவளை திடீரென்று கை பற்றி தன்னருகில் இழுத்துக் கொண்டவன், அதே வேகத்தோடு காரில் அழுத்தமாக சாய்த்து, அவள் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டான்.



இந்த திடீர் தாக்குதலை சிறிதும் எதிர்பார்க்காதவள் சில நொடிகள் அதிர்ந்து போய் நின்றுவிட்டாள். பின் அவன் பிடியில் இருந்து விலக முயன்றப்படி,



“என்ன பண்றீங்க குணா … விடுங்க … யாராவது பாத்தா தப்பா போய்டும் …” என்றவள் பயத்தில் பார்வையை நாலாபுறமும் சுழல விட்டாள்.



“ஐ டோண்ட் கேர் …” அவனின் அலட்சிய பதிலில், முறைத்து பார்த்தவள்,



“பட் ஐ கேர் … ஒரு மேரிட் பொண்ண பப்ளிக்ல கட்டிபுடிச்சுக்கிட்டு நிக்கிறத நினைச்சு நீங்க வெட்க படணும் குணா … ” என்ற காட்டமான பதிலில், கண்களால் எதையோ தேடியவன், உதட்டை பிதுக்கி,



“மேரீட் பொண்ணா … அப்படி யாரும் என் கண்ணுக்கு தெரில …” என்றவனைக் கண்டு அவள் உடல் பயத்தில் இறுகி போனது.



“வாட்ட் … என்ன ஒளறுறீங்க …” என்று தடுமாறியவள், “விடுங்க குணா …” உண்மை தெரிந்த பயத்தில் வேகமாக அவனிடமிருந்து திமிறினாள். அவளை சிறிதும் அசைய விடாமல் நெருக்கி நின்றவன்,



“பிராட் … ச்சீட்டர் … பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்துருக்க … எவ்வளவு திமிர் இருக்கனும் …” என்று கண்ணில் அனல் பறக்க பார்த்தவன்,



“சரி விடு என் மேல ஆசைப்பட்டு தானே வேலைக்கு சேர்ந்துருக்க … அதனால மன்னிச்சு விட்டுடுறேன் … பட் பொய் சொன்னதுக்கு பனிஷ்மெண்ட் கொடுத்தே தீருவேன் …” என்றவனின் பார்வை அவள் இதழை மோகத்துடன் வருடி, மின்னல் வேகத்தில் அவள் இதழ்களை ஆவேசத்துடன் கவ்வ சென்றது. அவன் எண்ணம் புரிந்தவள் அதைவிட வேகமாக இருவர் உதடுகளுக்கு நடுவே தன் கையை கொண்டு சென்று அவன் இதழ் முத்தத்தை கையில் வாங்கிக் கொண்டாள். கண்களில் அப்பட்டமாக ஏமாற்றம் தெரிய,



“வொய் …” என்று சீரியவனிடமிருந்து திமிறி விலகியவள், அவன் முத்தமிட்ட கையை அழுத்தமாக துடைத்தபடி,



“இவ்வளவு கண்டு பிடிச்ச புத்திசாலி … எதுக்கு இங்க வேலைக்கு சேர்ந்தேனு கண்டுபிடிக்கலையா …” என்றவளின் பார்வையில் எது வந்தாலும் சமாளிக்கலாம் என்ற தோரணை தெரிந்தது. அதற்கும் உதட்டை பிதுக்கியவன்,



“அது என்ன ராணுவ ரகசியமா … உன்ன பாத்தாலே தெரியுதே, எனக்காகத்தான் வேலைக்கு சேர்ந்துருப்ப …” என்றவனின் பதிலில் திமிர் கொட்டி கிடந்தது.



“எஸ் உங்களுக்காக தான் பொய் சொல்லி வேலைல சேர்ந்தேன் … பட் நீங்க நினைக்கிற போல இல்ல …” என்று கண்ணை சிமிட்டியவளுக்கு, தன்னை பற்றிய உண்மை எதுவும் அவனுக்கு இன்னும் தெரியவில்லை என்று புரிந்தது. அது தந்த தைரியத்தில், தன்னையே புரியாமல் புருவம் சுருக்கி பார்த்தவனிடம்,



“என் ப்ரெண்ட் உங்களோட பயங்கர விசிறி … ஒரு வீடியோ கூட மிஸ் பண்ணாம பாப்பா … எனக்கும் அவளுக்கும் உங்க கேரக்டர் வச்சு சண்ட அதுல கடுப்பாகி, அவகிட்ட நா பெட் கட்டிருக்கேன் … காஜி பாயான உங்க கூட வேலை பார்த்து கை படாதா ரோஜாவா வெளில வந்து காட்டுறேன் … அப்படியே குட் பாய மாத்தியும் காட்டுறேன்னு பெட் கட்டிருக்கேன் …” என்று புருவத்தை தூக்கிக் காட்டி பேசியவளை கண்டு சிறிது நேரம் அமைதியாக பார்த்தவன் பின் பக்கென்று சிரித்துவிட்டான்.



“ஓஹ் … அப்படிங்களா மேடம் …” என்றவனின் தோரணை நான் உன்னை நம்பவில்லை என்று சொன்னது.



“ஆமா … அப்படிதான் …” என்று பதிலுக்கு உதட்டை இழுத்து சிரித்தவளை சில நொடிகள் கருவிழிகள் சிரிக்க பார்த்தவன் பின்,



“ஓகே …” என்று தலையை மெல்ல ஆட்டியபடி, “நீ சொன்னது உண்மையா பொய்யான்னு ஐ டோண்ட் வாண்ட் டூ டிஸ்கஸ் … பட் அந்த பெட் ரொம்ப பிடிச்சுருக்கு … ஏன் நாம உன் ப்ரெண்டுக்காக விட்டு கொடுக்க கூடாது …” என்றவனை புரியாமல் பார்த்தவளிடம்,



“அதான் மா அந்த பெட் … அத ஏன் நாம இன்னைக்கே உண்மையாக்க கூடாது … நானும் நாளைல இருந்து திருந்தி நல்ல பையனா மாறிடுறேன் … உன் ப்ரெண்டும் ஜெயிச்சுடுவா நீயும் ஜெயிச்சுடுவ உங்க ப்ரெண்ட்ஷிப்க்கும் எந்த பாதிப்பும் வராது … என்ன சொல்ற …” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டவனை அழுத்தமாக பார்த்து ஒட்ட வைத்த சிரிப்புடன்,



“உங்க கனவுல கூட நடக்காது …” என்று அழுத்தம் திருத்தமாய் பார்த்தவளிடம்,




“ரியலி …” என்றவன் தன் மூச்சு காத்து அவள் முகத்தில் மோதும் அளவிற்கு நெருங்கி நின்றவன்,



“சரி அதெல்லாம் விடு இப்ப நம்ம மேட்டருக்கு வா … நேத்து இல்லாதா புருஷன் நம்ம நடுவுல வந்தான் … இப்ப நம்மள தடுக்க யாருமில்ல … இன்னைக்கு நைட் நீ என் கூடத்தான் ஸ்டே பண்ற …” என்று உத்தரவிட்டவனை, முகம் சுருக்கி,



“முடியாது …” என்றவளை பார்த்து,



“உங்களுக்கு நோ சொல்ற ரைட்ஸ் இல்லைங்க மேடம் … நா என்ன சொன்னாலும் கேட்கணும்னு அக்ரீமெண்ட்ல இருக்குறத மறந்துட்டீங்களா …” என்று நக்கலாக சிரித்தான். முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் தெரிய,



“உங்க கூட படுக்க முடியாதுனு சொன்ன கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டது உங்களுக்கு மறந்துப் போச்சா சார்…” பதிலுக்கு திருப்பி நக்கலடித்தளைக் கண்டு சிறு முறுவல் புரிந்தவன், தன் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தவளைக் கண்டு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், கார் கதவை திறந்து அவளை பிடித்து உள்ளே தள்ளியபடி,



“பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்தவங்க அந்த கண்டிஷன்ஸ் பத்தி வாய திறக்க கூடாதாம் மேடம் …” என்றவனிடமிருந்து திமிறிக் கொண்டு வெளியே வர முயன்றவளை கோபத்துடன் பார்த்தவன்,



“சங்கீத்த்தா … எனப் … சைல்டிஷ்சா பிகேவ் பண்ணாத … என்கிட்ட வேலை பார்த்தேன் சொன்னாலே நீ ஒழுக்கமா இருந்தா கூட யாரும் நம்ம மாட்டாங்க … ஓவர் சீன் போடாம பேசாம வா …” கோபத்தில் கத்தியவன் காரை சீறவிட்டிருந்தான்.



“இதெல்லாம் ஒரு பெருமையா … அந்தளவுக்கு உங்க மேல மத்தவங்களுக்கு நம்பிக்கை இருக்கிறத நினைச்சு வெட்கப்படணும் …” சுள்ளென்று எரிந்து விழுந்தவளை கண்டு தோளை குலுக்கியவன்,



“நா அப்படிதான் … மத்தவங்க என்ன பத்தி என்ன நினைக்கிறாங்கனு எனக்கு கவலை இல்ல …” என்றான் அழுத்தமாக. இவனிடம் இனி பேசி எந்த ப்ரோஜனமும் இல்லை என்று உணர்ந்தவள்,



“நீங்க எப்படி வேணா இருந்துட்டு போங்க … என்னால நீங்க சொல்றதுக்கு எல்லாம் ஆட முடியாது …” என்ற பதிலில் காரை ஓட்டிய படி திரும்பி பார்த்து முறைத்தவன்,



“உனக்கு வேற ஆப்ஷனே இல்ல … நா சொல்றத கேட்கனும் இல்ல வேலையை விட்டுட்டு போகனும் …” என்கவும்,



“ச்சீ … இப்படி போர்ஸ் பண்ணி சம்மதிக்க வைக்கிறது வெட்கமா இல்ல … வேலையையும் விட முடியாது நீங்க சொல்ற அசிங்கத்தையும் பண்ண முடியாது … உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க …” என்று சவால்விட்டவளை கண்டு கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்தன. சில நொடிகள் அமைதியாக காரை ஓட்டியவன்,



“என்னடி கொஞ்சம் அமைதியா போனா என்கிட்டையே உன் திமிர காட்டுருரியா … ஒன் செகண்ட் போதும் உன்ன துண்ட காணும் துணிய காணும்னு ஓட வைக்க …” என்று பல்லைக் கடித்தவனை நோக்கி,



“டீ போட்டு பேசறதலாம் என்கிட்ட வேணாம் … முடிஞ்சா ஓட வச்சு காட்டுங்க … அப்புறம் வாய் கிழிய பேசலாம் …” என்று வாயடித்தவளை கண்டு கோபம் தான் வந்தது குணாளனுக்கு.



“அப்புறம் என்ன மயித்துக்கு என்ன ஒருமாதிரியா பாத்து லுக்கு விட்ட … என் மேல இண்டெர்ஸ்ட் இருக்க போல எதுக்கு பாத்த …” கோபத்துடன் கேட்டவனை கண்டு உள்ளுக்குள் திடுக்கிட்டு போனாள். ‘ஓஹ் மை காட் அவ்வளவு ஓப்பனாவ பாத்து தொலைச்சேன் …’ என்று நொந்தவள், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கெத்தாக,



“இது என்ன புது கதையா இருக்கு … ஹெல்லோ மிஸ்டர் காமேஷ் குணாளன் … உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கா … எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்குங்க சார் …” என்றாள். அவள் கூறியதை கேட்டு நம்பாத பார்வை பார்த்தவன்,



“உன்னையும் ஒருத்தன் லவ் பன்றான் சொல்ற பாரு … இதான் இன்னைக்கு நா கேட்ட ஜோக்லயே பெரிய ஜோக் … ஆள வச்சுக்கிட்டே தான் என்னையும் ரூட் விட்டயா … செம்ம பொண்ணுப்பா …” என்று கேலியாக சிரித்தவனை கண்டு கோபத்தில் முகம் சிவந்தவள்,



“ப்ளீஸ் … கார நிறுத்துங்க … நா இங்கையே இறங்கிக்கிறேன் …” என்றவளை சிறிதும் மதிக்காதவன், காரின் வேகத்தை அதிகப்படுத்திய படி,



“அதெல்லாம் இறக்கி விட முடியாது … நா சொல்றதை கேட்கத்தான் உனக்கு வேல …” என்று தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைலை தூக்கி அவள் மடியில் போட்டுவிட்டு,



“இன்னைக்கு செம்ம மூட்ல இருக்கேன் … கண்டிப்பா மேட்டர் பண்ணியே ஆகணும் … போன்ல ப்ரீத்தினு ஒரு நேம் இருக்கும் … அவளுக்கு கால் பண்ணி நா வர சொன்னேன்னு சொல்லு …” என்று கட்டளையிட்டவனை கண்டு பல்லை கடித்தவள்,



“நா என்ன உங்களுக்கு மாமா வேல பாக்கவா வந்துருக்கேன் … அதெல்லாம் கால் பண்ண முடியாது … உங்களுக்கு வேணும்னா நீங்களே கால் பண்ணிக்குங்க …” என்று முகத்தை திருப்பியவளை கண்டு காரை ரோட்டோரத்தில் நிறுத்தினான்.



“மாமி வேல மாமா வேல … ஏன் நா ஆய் போய்ட்டு கழுவ சொன்னா கூட நீ கழுவி விடணும் …” அடக்கப்பட்ட கோபத்துடன் பேசியவனை திரும்பி பார்த்து, “ச்சீ …” என்று முகத்தை சுழித்தவளை சட்டை செய்யாதவன்,



“ஒன்னு கால் பண்ணு இல்ல அவளுக்கு பதில் நீ வா … என்னோட பிரஷர எப்படியாவது இறக்கி வைக்கணும் …” என்றவனின் பதிலில் தலையில் அடித்துக் கொண்டவள், அவனை திட்டியபடி அந்த ப்ரீத்தியை அழைத்தாள். அழைப்பு ஏற்கப்பட்டதும்,



“ஹாய் ப்ரீத்தி … நா குணா பிஏ …” என்ற அடுத்த நொடி,



“இன்னும் டென் மினிட்ஸ்ல குணா பிளாட்ல இருப்பேன் …” என்றவள் சங்கீதாவின் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்திருந்தாள்.



‘அட நாதார சிறுக்கி…’ என்று கையில் இருந்த போனை வெறித்து பார்த்தவளை திரும்பி நக்கலாக ஒரு பார்வை பார்த்தவனின் கைகளில் கார் பறந்தது.



அடுத்த இருப்பது நிமிடங்களில் அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்தியிருந்தான் குணா. காரில் இருந்து அவசரமாக இறங்கிய சங்கீதா கையில் கட்டியிருந்த வாட்சில் டைமை பார்த்தபடி,



“ஓகே குணா நா கிளம்புறேன் … மார்னிங் மீட் பண்ணலாம் …” என்று அவசரமாக கிளம்ப போனவளை,



“ஹெல்லோ … எங்க போற … நா இன்னும் உன்ன போக சொல்லலையே …” என்ற குணாவின் குரல் தடுத்து நிறுத்தியது. அவன் வேண்டுமென்றே தன்னை அலைக்கழிக்கிறான் என்று புரிய மூச்சை இழுத்துவிட்டு உள்ளங்கையை மடக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்தி,



“ஓகே … நா என்ன பண்ணனும் …” என்று கேட்டவளிடம் காரின் சாவியை தூக்கி போட்டு,



“வெயிட் ஹியர் … ப்ரீத்திக்கு யாரு கணக்கு செட்டில் பண்ணி விடுறது …” என்றபடி நடந்தவனின் பின்னே,



“விடிய விடிய வெயிட் பண்ண எனக்கு என்ன தலையெழுத்தா …” என்று கத்தியவளை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் நடந்தபடி,



“விடிய விடிய பண்ண நா என்ன ரோபோவா … ஜஸ்ட் ஒன் ஆர் டூ ஹவர்ஸ் ஆகும் … வெளில வெயிட் பண்ணாலும் ஓகே இல்ல கார்ல உட்கார்ந்தாலும் ஓகே … பட் யூ ஹேவ் டூ வெயிட் …” என்றவன் நிற்காமல் சென்றுவிட, ஊரில் உள்ள கெட்ட வார்த்தைகளால் அவனை திட்டி தன் ஆத்திரத்தை கொஞ்சமாவது தீர்த்துக் கொண்டாள்.




அவன் சென்று அரைமணி நேரம் கழித்து அவனிடமிருந்து அழைப்பு வந்தது. யூடியுபில் குணாவின் டான்ஸ் வீடியோவை பார்த்து கொண்டிருந்தவள் சலிப்புடன் அழைப்பை ஏற்க, அவசரமாக அவன் இடத்திற்கு வர சொல்லி துண்டித்திருந்தான். மீண்டும் அவனை நல்ல நல்ல வார்த்தைகளால் திட்டியபடி மேலே வந்தவள் கதவை தட்ட, அடுத்த நொடியே கதவு திறந்துக் கொண்டது.



‘பயபுள்ள கதவு கிட்டையே உட்கார்ந்துகிட்டு இருக்கு போல …’ என்று மனதில் நக்கலடித்தவள் கதவை திறந்தவனை கண்டு அதிர்ந்து போய் முகத்தை அவசரமாக திருப்பிக் கொண்டாள்.



“ஓஹ் மை காட் … வாட் இஸ் திஸ் குணா … இப்படித்தான் வந்து கதவ திறப்பீங்களா …” ஜட்டியுடன் நின்றிருந்தவனைக் கண்டு கோபத்தில் முகம் சிவக்க பேசியவளை பொறுமையின்றி பார்த்தவன்,



“வாட் … இதுக்கு என்ன குறைச்சல் … ஜட்டி போட்டுருக்குறத உன் கண்ணுக்கு தெரியலையா … போன் பண்ணி பைவ் மினிட்ஸ் ஆகுது ஆடி அசைஞ்சு வர …” என்று கோபப்பட்டவனை எரிச்சலோடு பார்த்தவளிடம்,



“ஐ நீட் எ ஹெல்ப் … கொஞ்சம் எமெர்ஜென்சி …” என்று தலையை கோதியவனிடமிருந்து பார்வையை திருப்பிக் கொண்டவள்,



‘குண கெட்ட குணா கொஞ்சம் அந்த ஜட்டிய டவலால சுத்திட்டு வந்தா என்னவாம் கருமம் பாக்க முடில …’ என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்க அடுத்து அவன் கூறியதை கேட்டு ”வாட்ட் …” என்று அலறிவிட்டாள்.



“ஹேய் … இப்போ எதுக்கு யாரையோ கத்தியால குத்த சொன்னது போல கத்தற … சீக்கிரம் போ … வெரி அர்ஜென்ட் …” என்று விரட்டியவனை நம்பாமல் பார்த்தவள்,



“நீ என்ன லூசா … என்ன போய் வாங்கிட்டு வர சொல்ற … கத்தியால குத்த சொன்னா கூட குத்திடுவேன் … இது … நோ …” என்று மறுத்தவளை கடுமையாக பார்த்தவன்,



“உன்ன போய் வாங்க சொல்லாம , நம்ம நாட்டு பிரைம் மினிஸ்டர கூப்டு வாங்க சொல்லுவோமா … நா சொல்றத செய்யறதுக்கு தான் நீ இருக்க … காட் இட் … கோ ” என்று கத்தியவனை சங்கடமாக பார்த்தவள்,



“நா எப்படி … லேடி போய் வாங்க முடியும் …” என்று தயங்கியவளை முறைத்து பார்த்தவன்,



“கமான் … எந்த செஞ்சரில இருக்க … இத யாரு வேணா வாங்கலாம் …” என்று விளக்கம் கொடுத்திருக்கும் போதே உள் அறையில் இருந்து,



“பேபிஈஈ …” என்று ப்ரீத்தாவின் குரல் சங்கீதமாய் அவனை அழைக்க,



“கமிங் பேபி …” என்று பதிலளித்தவன்,



“ஏய் … உன்கிட்ட வெட்டியா பேசிகிட்டு இருக்க நேரமில்ல … வெரி வெரி அர்ஜென்ட் … அபார்ட்மெண்ட் பக்கத்துல சூப்பர் மார்கெட் இருக்கு சீக்கிரம் வாங்கிட்டு வா …” என்று உத்தரவிட்டவாறே கதவை சாற்றியவன், பற்றென்று கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி,



“சொல்ல மறந்துட்டேன் … ஷி லைக்ஸ் ஸ்ட்ராபெரி பிளேவர் … டோண்ட் பர்கெட் இட் …” என்று கூறிவிட்டு மீண்டும் தலையை உள்ளே இழுத்துக் கொள்ள, அருகில் இருந்த சுவற்றை ஓங்கி உதைத்தவள்,



“இந்த குணம்கெட்ட காஜி கசமுசா பண்ண … நா மாமி வேல பாக்கணுமா .. எல்லாம் இவன் அண்ணனால வந்தது …” என்று புலம்பியபடி அவன் சொன்னதை வாங்க சென்றாள்.



அவன் கேட்டதை வாங்கிய பின் வீட்டிற்கு செல்லாமல் தனக்கு பிடித்த ஐஸ்கீரிமை சுவைத்துக் கொண்டிருந்தவளை சாப்பிடவிடாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த போனை தொந்தரவு செய்ய கடுப்புடன் அதை அட்டென்ட் செய்தவள் காதில் வைத்த நொடி,



“வாங்கிட்டியா … எங்க இருக்க …” என்ற குணாவின் பதட்டமான குரலை ரசித்தபடி கையில் இருந்த ஐஸ்கிரீமை நக்கியபடி கண்ணை மூடி சுவைத்தவள், அவனின் பல ஹெல்லோ ஹெல்லோக்கு பின்,



“வாங்கிட்டேன் பாஸ் … தோ வந்துகிட்டே இருக்கேன் … நீங்க டென்ஷன் இல்லாம என்ஜோய் பண்ணுங்க கரெக்ட் டைம்கு டெலிவெர் பண்ணிடுவேன் …” என்று அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்தவள் ஐஸ்கிரீமை ரசித்து சுவைத்த பின்பு அதன் அங்கிருந்து கிளம்பினாள்.



மேலும் பத்து நிமிடங்கள் கடந்த பின் அவன் வீட்டுக் கதவை தட்டிவிட்டு பொறுமையாக அவன் வருகைக்காக காத்திருந்தாள். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் போனில் அழைத்தவன்,



“இன்னும் என்ன பண்ற நீ …” என்று ஒவ்வொரு வார்த்தையாய் கடித்து துப்பியவனுக்கு பொறுமையாய் ,



“நா பத்து நிமிஷமா உங்க ரூம்க்கு முன்னாடிதான் நின்னுகிட்டு இருக்கேன் …” என்று பதிலளித்தவளை கண்டு



“வாட்ட் … பைத்தியமாடி நீ … மனுஷனோட அவசரம் புரியாம … போன் பண்ணி தொலைக்க வேண்டியதுதானே …” என்று போனில் கத்தியபடி கதவை திறந்தவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.



முடி களைந்து கழுத்து நரம்பு புடைத்துக் கொண்டு முறுக்கேறி நின்றவனை கண்டவளுக்கு அவன் பார்த்துக் கொண்டிருந்த வேலை புரிய முகத்தில் அருவருப்பை காட்டாமல் இருக்க பெரும் பாடுபட்டாள்.



“நீங்க பிசியா இருந்துருப்பீங்க … போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான் …” என்று விளக்கம் கொடுத்தவளை அவன் பார்த்த பார்வையில் வாயை கப்பென்று மூடிக் கொண்டவளின் முன் தன் கையை நீட்டியவனிடம் தான் வாங்கி வந்ததை வைத்தாள்.



அவள் வாங்கி வந்ததை திருப்பி பார்த்தவனின் முகம் கோபத்தில் கோவைப்பழம் போல சிவந்து போக,



“உன்கிட்ட என்ன பிளேவர் வாங்கிட்டு வர சொன்னேன்... நார்மல் ஒன் வாங்கிட்டு வந்துருக்க …” என்று எரிந்து விழுந்தவனை பாவமாக பார்த்தவள்,



“நா என்ன பண்ணுவேன் … சாக்லேட் இருக்கு பப்பில் கம் இருக்கு இந்த ஸ்டராபெற்ரி மட்டும் இல்லன்னுட்டானுங்க … அதான் கூடவே இதையும் சேர்த்து வாங்கிட்டு வந்துருக்கேன் …” என்று கையில் மறைத்து வைத்திருந்த ரெண்டு ஸ்ட்ராபெற்ரி பழத்தை தூக்கி காட்டினாள். பின் தொண்டையை செறுமியபடி,



“ம்ம்ம் … அது … அது மேல … இந்த பழத்த பிழிஞ்சு விட்டுக்கோங்க … ஸ்ட்ராபெற்ரி பிளேவர் வந்துடும்… இப்போதைக்கு இதான் என்னால முடிஞ்சது …” என்று அப்பாவியாய் விளக்கம் கொடுத்தவளை அனல் தெறிக்க பார்த்தவன்,



“சங்கீத்தாஆஆஆ …” என்று பல்லை கடிக்க ,



“ நா ஓடிட்டேன் … ஹேவ் அ ஷேப் நைட் குணா … என்ன ஹெல்ப் வேணும்னாலும் கூப்பிடுங்க … நா கீழதான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன் ” என்று ஒரே ஓட்டமாய் ஓடியவளின் முகத்தில் வெற்றி களிப்பு.



பின்னே இல்லையா, அவள் அடித்த கூத்தில் அவனின் உணர்வுகள் எல்லாம் வடிந்து போய் சோர்ந்திருந்தவனை கண்டவளுக்கு கண்டிப்பாக ஆபரேஷன் தோல்வியில் தான் முடியும் என்று புரிந்தது.



அவள் நினைத்தது சரியே என்பதை போல அடுத்த ஐந்து நிமிடங்களில் அவனிடமிருந்து மேலே வரும்படி மீண்டும் அழைப்பு வந்தது. உற்சாகத்தில் துள்ளி குதித்து சென்றவள், அவன் வீட்டை நெருங்கியதும் முகத்தை அப்பாவியாக வைத்தபடி,



“எஸ் குணா …” என்றவளை திரும்பி பார்த்தவனின் பார்வைக்கு சக்தியிருந்தால் இந்நேரம் பொசுங்கி சாம்பல் ஆகியிருப்பாள்.



“ப்ரீத்திக்கு செட்டில் பண்ணிவிடு …” என்றவனின் முகத்தில் அப்படியொரு இறுக்கம்.



“நோ குணா … எனக்கு எதுவும் வேணாம் …” என்று மறுத்த ப்ரீத்தி, “நா வேணா ஒன் ஹவர் வெயிட் பண்ணவா …” என்று கேள்வியாய் பார்த்தவளை மெல்ல அணைத்து விடுவித்தவன்,



“நோ நோ … நெக்ஸ்ட் டைம் பாக்கலாம் …” என்று ஓட்ட வைத்த புன்னகையுடன் விடை கொடுத்தவன்,



“ப்ரீத்திய அனுப்பிவிட்டுட்டு நீ மேல வா …” என்று உத்தரவிட்டவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் அறைக்குள் சென்று விட, ப்ரீதியுடன் வெளியேறினாள் சங்கீதா.



மீண்டும் அவன் இருக்கும் இடத்திற்கு வந்தவள், வெளியே நின்றபடி,



“ஓகே குணா … டைம் ஆயிடுச்சு … நா கிளம்புறேன் …” என்றவளின் கையை பிடித்து உள்ளே இழுத்து கதவை சாத்தினான் குணா.



“என்ன திமிரா … தேவையில்லாம என்ன சீண்டிவிட்டுட்டு, ஒன்னும் தெரியாதவள போல போறியா … உன்ன அவ்வளவு சீக்கிரத்துல விட்ருவேன் நினைச்சியா …” கோபத்தில் சீரியவனின் குரலில் தெரிந்த தடுமாற்றத்தில் குடித்திருக்கிறான் என்று புரிந்தது. அவள் நினைத்தது உண்மை என்பது போல அருகிலிருந்த டேபிளில் இருந்த மது நிரம்பிய கோப்பையை தன் வாய்க்குள் சரித்து கொண்டவனை கண்டு கிலி பிறக்க,



“நா என்ன சீண்டுனேன் … சும்மா சும்மா என்னையே சொல்லிட்டு இருக்கீங்க …” என்றாள் உள்ளே போன குரலில்.



“ஏய் … பேசாத டி … பேசாத … எனக்கு பயங்கர வெறியா இருக்கு … ஒன் மந்த்தா என்ன ரொம்ப கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன் பட் இன்னைக்கு என்னால முடில … கிடைச்ச சான்சையும் நீ கெடுத்துட்ட …” என்று கத்தியவன் மீண்டும் மதுவை தன் வாய்க்குள் சரித்துக் கொண்டான்.



நேரம் செல்ல செல்ல மதுவின் ஆக்கிரமிப்பால் நிதானத்தை இழந்தவனை கண்டு பயப்பந்து தொண்டையில் சிக்கிக் கொள்ள பயத்தில் வேர்த்து போய் நின்றிருந்தவளை ஆவேசத்துடன் நெருங்கியவன்,



“நீ நீ நீ … வே நும் … இப்போவே …” என்றவனால் நிக்க கூட முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தான். மூச்சு விட கூட பயந்தவளாக அசையாமல் நின்றிருந்தவளின் தலைமுடியை கொத்தாக பற்றியவன் வெறியோடு இதழ்களை தீண்ட குனிந்த நொடி வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அதில் தடுமாறி நின்றவனின் பிடியில் இருந்து விலகி ஓடி சென்று கதவை திறந்தவள் அங்கே நின்றிருந்தவனை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.



உள்ளே வந்த தன் அண்ணனை கண்டதும் புருவம் சுருக்கி பார்த்த குணா,



“டேய்ய்ய்ய் … நீ நீ இங்க … எ ன்ன பண்ற … உ ன்ன யாரு வ ர சொன்னா …” என்று திக்கு திணறி பேசிய தம்பியை தோளோடு அணைத்து கொண்ட தயா,



“என்னடா குணா இது … இவ்வளவு நிதானம் இல்லாமலா குடிப்ப …” என்றதும் தான் தாமதம், தன் மனதில் இருந்ததை எல்லாம் போதையில் கொட்டிவிட்டான். தான் சங்கீயை கூப்பிட்டது அவள் மறுத்தது என்று ஒன்னு விடாமல் புலம்பியவனை முகம் இறுக கேட்டுக் கொண்டிருந்தான். மேலும் அரைமணி நேரம் புலம்பிய பின் தூங்கி போன தம்பியை படுக்கையில் படுக்க வைத்தவன் கதவை சாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.



“தேங்க்ஸ் … நா போன் பண்ணி சொன்னதும் வந்ததுக்கு …” என்ற சங்கீதாவை சங்கடத்துடன் பார்த்தவன்,



“சாரி … நா …” என்று ஆரம்பித்தவனை பேச விடாமல் தடுத்தவள்,



“நோ ஹார்ட் பீலிங்ஸ் தயா … நீங்க வரலைனா கூட நா சமாளிச்சுருப்பேன் … எனக்கு டைம் ஆகிடுச்சு வீட்டுக்கு போகணும் … காலைல பேசிக்கலாம் …” என்றவளை கண்ணில் எட்டாத சிரிப்புடன் பார்த்தவன்,



“நா ட்ராப் பண்ணவா …” என்றவனின் அக்கரையில் மென்னகை புரிந்தவள்,



“இல்ல தம்பி வந்துகிட்டு இருக்கான் … நா கிளம்புறேன் … வேணும்னா பார்க்கிங் வரைக்கும் வாங்க …” என்றவளுக்கு சிறு தலையசைப்புடன் அவளை பின் தொடர்ந்து சென்றான்.



இன்னும் செழியன் வராததால் அருகில் இருந்த மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டனர் இருவரும். தயாவின் முகம் யோசனையில் சுருங்குவதை கண்ட சங்கீதா,



“தயா … நா ஒன்னு சொல்லவா …” என்றவளை கேள்வியாக பார்த்தவனிடம்,



“எல்லாரும் நினைக்கிறது போல குணா ஒன்னும் ரொம்ப மோசமான ஆளு இல்ல … சேர்க்கை சரியில்லாததால தான் அவர் தப்பு பண்ணிருக்கார் … உங்களுக்கு ஒன்னு தெரியுமா … நா இங்க வந்ததுல இருந்து பொண்ணுங்க விசயத்துல எந்த தப்பும் பண்ணல … இன்னைக்கு கூட ட்ரை பண்ணார் பட் தப்பு நடக்கல … என்ன கேட்டா நீங்க உங்க தம்பி கூட சேர்ந்து இருந்தாலே அவர் திருந்திடுவாருனு தோணுது …” என்று தன் கருத்தை கூறியவளை சிறு தலையசைப்போடு ஆமோதித்து ஏற்றுக் கொண்டான்.



இந்த விஷயங்கள் எல்லாம் அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தானே என்று நினைத்தவனின் மனம் பயங்கர குழப்பத்தில் இருந்தது. தன் தம்பி வரும் வரைக்கும் தன்னிடம் விடாமல் பேசியவளின் பேச்சுக்களை அமைதியாக கேட்டுக் கொண்டான் தயாளன்.




செழியன் வந்ததும் கிளம்பி சென்றவளை வழியனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தவன் போதையில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை பார்த்தவனின் கண்களுக்கு கசக்கி தூக்கி எறியப்பட்ட பேப்பரை போல இருக்கவும் வாஞ்சையுடன் அவன் தலை கோதியவன் குணாவின் மேல் கையை போட்டபடி அருகில் படுத்து கண்ணை மூடியவனின் விழியில் இருந்து அவனை மீறி கண்ணீர் வழிந்து கன்னம் நனைத்தது.
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 9:





காலையில் கண் விழித்த குணா தன் எதிரே போனில் எதையோ நொண்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த தயாவை கண்டு சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தவன்,





“நீ என்னடா பண்ற இங்க …” இன்னும் தூக்கம் கலையாத குரலில் கேட்ட தம்பியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன்,





“ம்ம்ம் … வேண்டுதல் …” என்ற பதிலில்ம், கண்ணை மூடி சோம்பல் முறித்தவனுக்கு நேற்று நடந்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வரவும்,





“நைட்ல இருந்து இங்க தான் இருக்கியா …” என்றான் சிறு புன்னகையுடன். தம்பியின் கேள்விக்கு பதில் கூறாதவன் கையை திருப்பி மணியை பார்த்துவிட்டு,





“சீக்கிரம் கிளம்பு … டைம் ஆகுது …” என்கவும், கையை தூக்கி உடலை இடமும் வலமுமாக வளைத்தவன்,





“நீ கிளம்புடா … நா கிளம்ப லேட் ஆகும் … லைட்டா தலைய வலிக்கிறது போல இருக்கு …” என்றவனை நிமிர்ந்து பார்த்து முறைத்த தயா,





“அம்மா ஊர்ல இருந்து வந்துருக்காங்கனு சொன்னதாவது ஞாபகம் இருக்கா …” என்றவனின் கோபத்தில், நெற்றியை இருவிரலால் அழுத்தி தேய்த்தவன்,





“அம்மாவ தனியா அங்க விட்டுட்டா என்ன பாக்க வந்த … அறிவிருக்க …” என்று திட்டியவன் பின் யோசனை வந்தவனாக,





“ஆமா … நீ எப்படி நேத்து நைட் இங்க வந்த … அவ போன் பண்ணி கூப்ட்டாளா …” நம்பமுடியாமல் சந்தேகத்துடன் இழுக்க,





“யாரு …” என்று தெரியாததை போல கேள்வி கேட்ட அண்ணனை குழப்பத்துடன் பார்த்தவன்,





“என் பிஏ சங்கீதா … ஆனா அவ போன் பண்ணிருக்க வாய்ப்பில்லையே …” என்றவனை புன்னகையுடன் பார்த்தவன்,





“அதானே நீயே சொல்லிட்டியே … நானா தான் வந்தேன், அம்மா வந்துருக்கதால உன்ன கூப்டுட்டு போக வந்தேன் …” என்ற பதிலில் சமாதானம் ஆனா குணா,





“சரிடா நீ கிளம்பு … எனக்கு நிறைய வேலை இருக்கு … வேர்ல்ட் டூர் வேற ஸ்டார்ட் ஆகுது … டைட் ஸ்செடுல் …” என்றவாறே போனில் சங்கீதாவை அழைத்தான்.





முழு அழைப்பும் சென்று நிற்கவும் முகம் கடுகடுக்க நின்றவன் மீண்டும் அழைத்தான்.





தொடர்ந்து நான்கு முறை அழைத்தும் அழைப்பு ஏற்கப்படாததால் மெல்ல மெல்ல கோபம் அவன் முகத்தில் குடிக் கொண்டது. இதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த தயா,





“என்ன …” என்றவனுக்கு ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டியவன்,





“போன் எடுக்க மாட்டுறா …” என்ற தம்பியை அழுத்தமாக பார்த்தவன்,





“எப்படி எடுப்பாங்க … நீ பண்ணி வச்ச வேல அப்படி …” தயாவின் குற்றச்சாட்டில் முகம் கசங்க பார்த்தவன்,





“அவ சொன்னாளா …” உள்ளே போன குரலில் கேட்டவனை கண்டு அதிருப்தியில் தலையை இடமும் வலமுமாக ஆட்டியவன்,





“நீதான் சொன்ன … அந்த பொண்ண என்ன பண்ண நினைக்கிறன்னு புல் டீடைல்லா சொன்ன …” என்றவனின் பதிலில் ஒன்றும் சொல்லாமல் பாத்ரூமை நோக்கி சென்றவனிடம்,





“உனக்கு அட்வைஸ் பண்ணா புடிக்காது … நா எதுவும் சொல்ல போறதில்ல … பட் நீயே யோசிச்சு பாரு நீ பண்ணிக்கிட்டு இருக்கிறது சரியா தப்பான்னு …” என்று கோபப்பட்டவன், “சீக்கிரம் ரெடியாகிட்டு வா நா வெளில வெயிட் பண்ணிட்டு இருக்கேன் …” என்ற தயாவிற்கு மறுத்து பேசியவனின் பேச்சை கண்டுக் கொள்ளாமல் கோபத்துடன் வெளியேறினான்.





வீட்டிற்குள் நுழைந்த இரு மகன்களையும் ஆசையுடன் தழுவின சௌந்தரத்தின் விழிகள். கலங்கிய விழிகளை சற்றென்று மறைத்துக் கொண்டவர் பெரிய மகனை கண்டு புன்னகைத்தபடி,





“சாப்பிடுறியப்பா …” என்று பாசத்துடன் கேட்டவரின் கையை பற்றிக் கொண்டவன்,





“நீங்க சாப்டீங்களாமா …” என்றவனுக்கு,





“இல்லப்பா … உனக்காதான் காத்துட்டு இருந்தேன் …” என்றார் சிறு புன்னகையுடன்.





“ம்ப்ச் … டேப்ளெட் போடணும் இன்னும் சாப்பிடாம என்ன பண்றீங்க …” என்று கடிந்துக் கொண்டவன்,





“வைஷு வைஷு …” உள் அறையை நோக்கி குரல் கொடுத்தான். வந்ததிலிருந்து தன்னை மதிக்காமல் பெரிய மகனை மட்டும் கவனித்த அன்னையை கண்டு சுரென்று கோபம் வந்தது குணாவிற்கு. உள்ளே நுழைந்ததிலிருந்து அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.





கவனமாக தன்னை பார்ப்பதை தவிர்த்தவறை கண்டு மனம் பாரமாகி போனது. ‘போங்க உங்களுக்கே அவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும் …’ என்று நினைத்துக் கொண்டவன் தயா வைஷுவை அழைத்ததும் அவ இங்க எங்க என்று நினைத்தான்.





தயா அழைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து கண்ணை கசக்கியபடி வெளியே வந்தாள் வைஷூ. தலை கலைந்து முகத்தில் இன்னும் தூக்கம் மிச்சமிருக்க, புதிதாக வாங்கிய தொள தொள நைட்டியில் வந்தவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் குணா.





“என்ன மாமா … தூங்கிட்டு இருக்கும் போது டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கீங்க …” என்று குறைபட்டுக் கொண்டே வந்தவள், அங்கே உட்கார்ந்திருந்த குணாவை கண்டதும்,





“குணா மாமா …” என்று குதூகலித்து கத்தியவளின் முகத்தில் இருந்த சோம்பல் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக,





“உண்மையிலே நீங்க தானா … “ என்று தரையை தொட்டுக் கொண்டிருந்த நைடியை தூக்கி கட்டியபடி துள்ளிக் குதித்து அவனிடம் ஓடினாள்.





தாயின் புறக்கணிப்பில் நொந்து போயிருந்தவனுக்கு அவளின் உற்சாக வரவேற்பு மனதை இதமாக்க, பெரிய புன்னகையை அவளை நோக்கி சிந்தியவன்,





“ஏய் கிளி … நீ வந்துருக்கறத இவன் சொல்லவே இல்ல … எப்படி இருக்க மாமா எப்படி இருக்காங்க …” வைஷுவின் மூக்கு சற்று வளைந்து கிளி மூக்கு போல இருந்ததால், சிறு வயதிலிருந்தே அவளை அப்படிதான் அவன் அழைப்பான். அவன் தன்னை உரிமையோடு அழைத்ததை கண்டு அகமகிழ்ந்து போனவள்,





“நா நல்லாருக்கேன் மாமா … நீ எப்படிருக் … உன்ன பாத்து எவ்வளவு நாள் ஆச்சு … அய்யோ எனக்கு ஒன்னும் புரியல … உன்ன வீடியோல பாத்தேன் மாமா … அவ்வளவு அழகா இருந்த …” சந்தோஷத்தில் துள்ளி குதித்தவளிடம்,





“பாத்தியா … மாமா எப்படி இருந்தேன் …” என்று சிரிப்புடன் புருவம் உயர்த்தியவனின் கன்னம் வழித்து நெட்டி முறித்தவள்,





“கொள்ள அழகு மாமா … அதுவும் வீடியோ முடியும் போது நீ போட்ட டான்ஸ் ஸ்டெப் … அய்யோ எப்படி சொல்ல …” பயங்கர எக்ஸைட்மெண்டில் கையை உதறியபடி பேசியவளுக்கு இருப்பு கொள்ளவில்லை.





இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சௌந்தரத்துக்கு வைஷுவின் அதிகப்படியான வழிசல் சுத்தமாக பிடிக்கவில்லை.





“வைஷு … போதும் போய் பல்லு விலகிட்டு வா …” என்று கடுப்படித்த அத்தையிடம்,





“இரு த்த …” என்றவள் மீண்டும் குணாவிடம் பேச முயல,





“வைஷு …” என்று அழுத்தி அழைத்தவரை கண்டு முகம் சுருங்க நின்றவளுக்கு எப்பொழுதும் அத்தையிடம் சிறு பயம் உண்டு. தந்தையை சுத்தமாக மதிக்கமாட்டாள் ஆனால் சௌந்தரம் என்றால் சற்று அடக்கிக் தான் வாசிப்பாள். அத்தையின் பேச்சை தட்ட முடியாமல் முகம் தொங்கி போய் நின்றவளை கண்ட குணா,





“நீ போய் பிரஷ் பண்ணிட்டு வா … நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் …” தாய் தன்னை சாப்பிட அழைக்காத கோபத்தில் வைஷுவை சாப்பிட அழைத்தான். அவள் உள்ளே சென்றதும்,





“கையை கழுவிட்டு வா குணா … சாப்பிடலாம் …” என்றழைத்த அண்ணனை திரும்பி பார்த்து முறைத்தவன்,





“நா கிளிக்கிட்ட சொன்னது உன் காதுல விழல … அவ கூட சாப்ட்டுக்குறேன் … என்ன மதிக்காதவங்க கையாள நா ஏன் சாப்பிடணும் …” என்று கோப்பட்டவனை கண்டு,





“ஓஹோ … சார் ரொம்ப மதிச்சீங்களோ … எப்படி மா இருக்கன்னு ஒரு வார்த்தை கூட உன்னால கேட்க முடிலல …” என்று வருத்தப்பட்டவனை தீப்பார்வை பார்த்தவன்,





“ஏன் உன் கண்ணுக்கு அது மட்டும் தான் தெரிஞ்சுதா … இவ்வளவு நேரம் உன்கிட்ட மட்டும் பாசப்படம் ஓட்டுனப்போ குருடனாயிட்டியா …” என்று நக்கலடித்தவனின் மொபைல் ஒலிக்கவும் எடுத்து பார்த்தவனின் முகம் கோபத்தில் கடுத்தது. போனை அவசரமாக உயிர்ப்பித்து காதில் வைத்தவன்,





“போன் பண்ணா எடுத்து பேச தெரியாதா … எங்க போய் தொலைஞ்ச …” என்று பொரிய, எடுத்ததுமே கடுப்படித்தவனை கண்டு கோபம் கொண்ட சங்கீதா பதில் பேசாமல் போனை வைத்துவிட்டாள்.





பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டதை நம்ப முடியாமல் போனை எடுத்து பார்த்தவனுக்கு கோபம் உச்சி மண்டைக்கு ஏறியது. என்ன திமிர் என்று பல்லை கடித்தவன், திருப்பி அவளை அழைக்க,





“போன் பண்ணா எப்படி பேசணும்னு தெரியாதா … இப்படித்தான் கத்துவாங்களா …” என்று நிதானமாய் கேட்டவளை கண்டு மீண்டும் பல்லை கடித்தவன்,





“ஏய் என்ன வாய் நீளுது … ஓவர்நைட்ல திமிர் கூடிடுச்சா …” கேட்டவாறே அங்கிருந்து எழுந்து பால்கனி நோக்கி சென்றான்.





“ஆமா … அப்படிதான் … ரேப் பண்ண நினைச்ச ஜந்துக்கு எல்லாம் இனி மரியாதை கொடுக்குறதா இல்ல …” என்றவளின் பதிலில் முகம் சிவந்து போனவன்,





“உன்ன அப்புறமா கவனிச்சுக்கிறேன் … இப்போ நீ எங்க இருந்தாலும் என் அண்ணன் வீட்டுக்கு வா …” என்று உத்தரவிட,





“உங்க அண்ணன் என்ன சீப் மினிஸ்ட்டரா கோட்டைல இருப்பார்னுனு அங்க வர …” என்ற நக்கலில் மீண்டும் அவன் பல் அரைபட்டது. வீட்டின் முகவரியை கூறிவிட்டு வைத்தவனுக்கு அவளின் மாற்றம் கடுப்பை கொடுத்தது.





சங்கீதாவிற்கு தயாளனின் வீடு எங்கே இருக்கின்றது என்று நன்றாகவே தெரியும் இருந்தும், எடுத்தவுடன் தன்னை டென்ஷன் பண்ணியவனை கடுப்பேத்தவே ஏட்டிக்கு போட்டியாக பேசினாள். அதைவிட நேற்றிருந்த குழப்பம் இன்றில்லை என்பதால் வந்த தைரியமாக கூட இருக்கலாம்.





சௌந்தர்யத்தை தவிர மற்ற மூவரும் காலையில் செய்த பூரியை சாப்பிட்டுக் கொண்டிருக்க வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வந்தது யார் என்று தெரிந்த குணா,





“டோர் ஓபன்ல தான் இருக்கு உள்ள வா …” என்று குரல் கொடுக்க, சற்று தயங்கியபடி கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள் சங்கீதா. அங்கே அனைவரும் சாப்பிடுவதை கண்டதும் சங்கடத்துடன் நெளிந்தவள்





“நா … வெளில வெய்ட் பண்றேன் …” கதவை நோக்கி திரும்பியவளிடம்,





“வெளில போக வேணா … ஹால்ல உட்கார … பைவ் மினிட்ஸ் கிளம்பிடலாம் …” என்ற குணாவை தொடர்ந்து,





“சாப்ட்டியா மா …” என்றான் தயா. மெல்ல தலையை ஆட்டி, “ம்ம்ம் … சாப்ட்டேன் …” என்று பதிலளித்தவளை தான் புருவம் சுருங்க பார்த்திருந்தனர் சௌந்தர்யமும் வைஷுவும்.





“யாரு இந்த பொண்ணு …” அன்னையின் அழுத்தமான குரலில், நெற்றி சுருக்கிய தயா,





“குணா பிஏ …” என்ற அடுத்த நொடி,





“என்ன பிஏவா … இவள எல்லாம் எதுக்கு வீட்டுக்குள்ள விடுறீங்க … நம்ம இருக்கும் போதே வீட்டுக்கு வரானா … அப்போ அங்கையும் போவாளா … ஒருதடவ பட்டும் புத்தி வரலல …” என்று வெறி பிடித்தவர் போல கத்தியவரை கண்டு உட்கார போன சங்கீதா அதிர்ந்து போய் நின்றுவிட்டாள்.





“அம்மா …” என்று அதட்டிய தயா, சங்கடத்துடன் சங்கீதாவை பார்த்து, “சாரி …” என்றான். எந்தவித தொந்தரவும் இல்லாததை போல நிம்மதியாக சாப்பிட்டு முடித்து எழுந்த குணா,





“நா எப்படினு ஊரு முழுக்க தெரியும் என்னமோ புதுசா பாக்குறது போல எதுக்கு டென்ஷன் ஆகுறாங்க …” எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் பேசியவன், கையை பிசைந்தபடி நின்றிருந்த வைஷுவிடம்,





“ஏய் கிளி … நா பொண்ணுங்க கூட சுத்துறது … அப்படி இப்படினு இருக்குறத பத்தி நியூஸ் வருமா வராதா …” என்றவனின் கேள்விக்கு ஆமாம் என்று தலையாட்டினாள் வைஷு.





“அப்புறம் என்ன இவங்க காதுக்கு மட்டும் அது போகாம இருக்குமா … எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே புதுசா கத்த வேண்டியது … ” என்று கையை கழுவ எழுந்து சென்றவன்,





“அதான் நா புள்ளையே இல்லனு வெட்டி விட்டுட்டாங்களா அப்புறம் நா எப்படி போனா என்ன … உன்ன மட்டும் பாத்துக்க சொல்லு … நா வரேன் …” என்றவன் வெளியேற, எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று புரியாமல் விழித்த சங்கீதா, அங்கிருந்தவர்களை சில நொடிகள் பார்க்க, அதே நேரம் வைஷூவும் நிமிர்ந்து அவளைத்தான் பார்த்தாள்.





தன்னைவிட சின்ன பெண் போல தோற்றமளித்த வைஷுவை நோக்கி சிநேகமாய் புன்னகைக்க, பதிலுக்கு கண்களால் எரித்தாள் வைஷு. ஆத்தாடி என்று உள்ளுக்குள் பயந்து போனவள் தன்னையே பார்த்தபடி நின்றிருந்த தயாவிடம் சிறு தலையசைப்பை தந்துவிட்டு விட்டால் போதும் என்ற ரீதியில் வெளியே ஓடிவிட்டாள். அவள் சென்றதும்,





“அம்மா நீங்க அந்த பொண்ணுகிட்ட நடந்தது சரியில்ல … வீட்டுக்கு எதிரியே வந்தாலும் வரவேற்க்குற முறைனு ஒன்னு இருக்குமா … அத நா சொல்லி தான் உங்களுக்கு தெரியும் இல்ல …நீங்க இப்படி பேச பேசத்தான் அவன் இன்னும் அந்த சாக்கடைல விழுவான் நம்மள விட்டு விலகியும் போவான் …” பொறுமையாக எடுத்து கூறியவன்,





“வாங்க ம்மா … எதை பத்தியும் நினைக்காம சாப்ட்டு மாத்திரையை போடுங்க …” என்றவன் வலுக்கட்டாயமாக அவரை சாப்பிட வைத்தான்.





மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சங்கீதா, திடீரென்று





“பாஸ் … உங்கம்மாக்கு இருந்தாலும் ரொம்ப திமிருங்க பாஸ் … என்னமோ ஊர்ல இல்லாத உத்தம புள்ளையை பெத்தது போல எவ்வளவு சீன போட்டாங்க … நா கூட கொஞ்ச நேரத்துல அரண்டு போய்ட்டேன் …” என்று நக்கலடித்தவளை ஸ்கூட்டியில் முன் கண்ணாடி வழியே பார்த்து முறைத்தான் குணா.





இன்று காலையில் தயா வீட்டிற்கு அவன் காரிலே வந்ததால் ஸ்டூடியோவிற்கு சங்கீதாவின் ஸ்கூட்டியில் தொற்றிக் கொண்டான். தன் அன்னையை கிண்டலடித்ததை பார்த்து





“அவங்க என் அம்மா …” என்று உறுமியவனிடம்,





“இருந்துட்டு போட்டோம் …” என்று பதிலளித்தவள், தன்னையே முறைத்துக் கொண்டிருந்தவனை கண்ணாடி வழியே பார்த்தவள்,





“ஆனாலும் உங்களுக்கு பெரிய மனசு சார் … செய்யிற பொறுக்கி தனத்த அம்மாக்கிடையே டென்த்ல ஸ்டேட் லெவல்ல கோல்ட் மெடல் வாங்கினது போல நெஞ்ச நிமித்துக்கிட்டு … ஆமா நா அப்படிதான்னு மாற தட்டிக்கிட்டிங்க பாருங்கா … அப்படியே கூஸ்பம்ப் ஆகிடுச்சு …” என்று கண்ணை சிமிட்டி பேசியவளை கண்டவனுக்கு அவள் தன்னை கிண்டல் செய்வது புரிந்தாலும் ஏனோ கோபம் வருவதற்கு பதில் சிரிப்புதான் வந்தது.





சங்கீதாவிற்கு சௌந்தர்யா பேசியது பெரியதாக தெரியவில்லை. குணாவை போல ஒரு பிள்ளையை பெற்றுவிட்டு வேறு என்னதான் அவரால் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டவளின் பார்வை குணா செல்லும் திசையிலே பயணித்தது. வேலையில் மும்முரமாய் இருந்தவளை மொபைல் ஒலித்து கலைக்க, எடுத்து பார்த்தவளுக்கு தயாவிடமிருந்து கால் வந்திருந்தது. உடனே அழைப்பை ஏற்றவளிடம் மன்னிப்பை வேண்டினான் தயா.





“சாரி … அம்மா குணா மேல வருத்தத்துல இருங்காங்க அந்த கோபத்த …” என்று சங்கடத்துடன் பேசியவனை மேலே பேச விடாமல்,





“அய்யோ தயா இவ்வளவு பீல் பண்ண வேணா விடுங்க … எனக்கு அம்மாவ புரிஞ்சுக்க முடியுது …” என்றவளின் பதிலில் லேசாக கண்கள் கூட கலங்கி விட்டது தயாவிற்கு.





“தேங்க்ஸ் …” என்றவன் சிறிது நேரம் அமைதி காத்தான் பின் தொண்டையை செறுமியபடி,





“நீ குணா கிட்ட இருக்க வேணா … இன்னைக்கே வர முடியாதுனு சொல்லிட்டு வந்துடு … எனக்கு மனசுக்கு சரியா படல …” என்றவனின் அக்கரையில் முகம் மலர்ந்தவள்,





“ம்ப்ச் … நேத்து இதப்பத்தி சொல்லிட்டேன் … உங்களுக்காக இல்ல எனக்கே நா சேலஞ்சு பண்ணிக்கிட்டேன் … அபப்டி என்ன பெரிய அப்பாடக்கர் உங்க குணா … கண்டிப்பா நீங்க சொன்னத செஞ்சுட்டு தான் உங்க முன்னாடி வருவேன் … இப்ப போன வச்சுடுறேன் …” என்று அழைப்பை துண்டித்தவளின் விழிகள் தூரத்தில் டான்ஸ் ஸ்டெப் போட்டுக் கொண்டிருந்த குணாவை கவ்வி நின்றது.





மிக தீவிரமாய் ஸ்டெப் சொல்லிக் கொண்டிருந்தாவனுக்கு நீண்ட நேரமாய் உள்ளுணர்வு குறுகுறுக்க சற்றென்று திரும்பி பார்த்தவன் அங்கே தன்னையே பார்த்தபடி உட்கார்ந்திருந்த சங்கீதாவை கண்டு என்ன என்று புருவம் உயர்த்தினான். முகத்தில் சிறு புன்னகை தவழ்ந்திருக்க, ஒன்றுமில்லை என்று தலையாட்டியவளை கண்டு குறும்பு கூத்தாட விரல்களால் இன்றிரவு மேட்டர் செய்யலாமா என்று சைகை செய்தான்.





அவன் கேள்வியில் முகத்தில் குடியிருந்த புன்னகை பெரிதாக விரிய ம்ம்ம் என்று தலையாட்டியவள் பின் தன் கழுத்தில் தாலி கட்டுவதை போல சைகை செய்யவும், தலையை இடமும் வலமுமாக ஆட்டியபடி கழுத்தில் தூக்குபோட்டு தொங்குவதை போல ஆக்சன் பண்ணியவனை கண்டு பக்கென்று சிரித்துவிட்டாள்.
 
Status
Not open for further replies.
Top