ஹாய் அக்கா......
செம ஸ்டோரி உங்களுடைய "என் காதல் உன்னோடு தான்"....
நீயே நீயா நானே தானா ருத்ரா மாதிரி தான் நான் ரிஷியையும் எதிர் பார்த்தேன். என்னால் ருத்ராவில் இருந்து வெளி வர முடியவில்லை அது தான் உண்மையான காரணம். ஆனால் இந்த ரிஷி மொத்தமாக வேறு குணநலன்களை கொண்டவன்.
முதல் டீசர் படித்துவிட்டு ரிஷி ஹீரோவாக இருந்தாலும் இந்தக் கதையின் வில்லனும் அவன் தான் என நினைத்தேன். ஏனெனில் அவனது செயல் அப்படி.
சமூகம் பல படிகள் முன்னேறி சென்றாலும் மறுமணம் என்று வந்தால் பெண்ணைப் பற்றிய எண்ணம் தவறானதாகும். இன்றும் ஆண் பெண் என்று பல வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன. அப்படிப்பட்ட சமுதாயத்தில் மக்களிடம் இப்படி ஒரு கதையை கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் பல. மித்து திருமணம் ஆகாதவள் என்று தெரியும் வரை அவள் இன்னொருவரின் மனைவி தானே. இது ஒரு சில எபிக்களில் யூகித்த பின்னரே கதையைப் பற்றிய எனது சிந்தனையில் கூட மாற்றம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் ரிஷியை நான் வில்லனாகத்தான் பார்த்தேன்... ஆனால் மொத்த கதையும் அவனே சுமந்திருக்கின்றான்... அவனே கதையின் உயிர்.
உங்களது எண்ணத்தை எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் தெளிவாக எடுத்துரைத்த எழுத்துக்கள் அருமை.
நிரு மாதிரி ஒருவன் சாத்தியமா... விரும்பும் பெண் மறுத்தால் கொலை செய்யவும் தயங்குவதில்லை.. இப்படி ஒருவன் இந்த நிலையில் ஆச்சரியமே தனது வாழ்வையும் துறந்து வாழ்ந்தவன்.
அதிரடியான ஆரம்பம்...
அழகான முடிவு....
நான் ருத்ராவின் தாக்கத்திலிருந்தே இன்னும் மீளவில்லை... இதில் ரிஷியும் இப்போது கலந்து விட்டான். இரண்டும் கலந்த கலவையான ஒரு கதாபாத்திரத்தை எதிர் பார்க்கின்றேன் அக்கா.
இன்னும் பல கதைகளில் தாங்கள் வெற்றி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.
கை நலம் பெற்ற பின்னர் அடுத்த கதையுடன் விரைவாக வாருங்கள்... மீ வெயிட்டிங்...
நட்புடன்
பிரியதர்ஷினி.S