ஒவ்வொருத்தருடைய வார்த்தைகள் தான் ஒவ்வொருத்தரையும் மாற்றுது , மகாவின் வார்த்தைகள் சாருவை காயப்படுத்தினாலும் அதை துடைக்க சரோ அன்பாகவும் ,அனுசரணையாகவும் இருந்தான் , அனால் சாரு ,மகா பேசியது உண்மைதான் என்பது போல நடந்துகொண்டாள் . சரோ பேசியது கோவத்தில் என்றாலும் வார்த்தைகள் வீரியம் மிக்கவை , பேசியது மட்டுமல்லாது செயல்பாடுகளும் அப்படியே இருந்தது . அந்த ஒரு விசயத்திற்கு மட்டும் மகா வேண்டும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கோவம் வந்துவிடும் இதில் தண்ணி வேறு .. எப்படி மஹாவால் சரோவை மன்னிக்க முடியும் ? சரோ விற்கு அந்த நேரம் சாரு மட்டுமே முக்கியம் என்று நடந்து கொண்டான் , இப்பொழுது மகாவிற்கு சமையல் செய்து பார்த்து கொண்டாலும் எனக்கு எந்த feel மே தோணவில்லை சாருவை பார்த்ததில் அன்பு நிறையாவே இருந்தது , கோவம் கொஞ்சம் கூட இல்லை . ஆனால் இப்பொழுது பொறுப்பாக பார்ப்பதனால் வரும் அழுத்தம் கோவமாக மஹாவிடம் மாறுகிறது .... நான் நினைக்கிறேன் மனைவி இல்லையென்றால் ஏன் 2 வது marriage பண்ணிக்கிறார்கள் என்று இப்படி குடும்ப பாரத்தை சுமக்க முடியாது என்பதால் ,,,.. இக்கதையில் வரும் character நிறைய நாம் வாழ்க்கையில் சந்தித்தோ , கேள்விப்பட்டோ இருப்போம் .... மகா பயந்து பயந்து பேசுவது , காதலோடு பார்க்கும் கண்கள் இதுயெல்லாம் தெரிந்த சரோ அவளுடைய பயத்தைப்போக்கமால் ரசித்து இருந்துருகிறான் , ஒரு கிராமத்தில் வளரும் பெண் , கதை புத்தகத்தில் வரும் ஹீரோ போல கணவன் இருக்கவேண்டும் என்று நினைக்கிற ஒரு தெளிவில்லாத பொண்ணு எப்படி இருப்பாள் ? சாருவை வீட்டிற்கு அழைத்து வருவது பற்றி ஏன் மஹாவிடம் சரோ சொல்லவில்லை ? வந்தபிறகு அந்த அதிர்சசி போகும் முன்னே , எனக்கு பிறந்த பையன் , எனக்கு ம் சாருவுக்கு நடந்தது தெரியும் தானே என்று சொல்லுவது ? நடந்த சங்கமம் உண்மை என்பதால் பையன் இருக்குமோ என்று அவள் நினைத்தது எப்படி மகா ,,, சரோவை நம்பவில்லை எப்படி கூறமுடியும் ? தேவா விடம் night தன்னிலை மறந்து பேசியதால் அவள் தப்பானவள் குழந்தை தன மகனுடையது இல்லை என்று 6 வருடம் கூட இருந்த மருமகளை புரிந்து கொள்ளாமல் பேசிய அத்தை . கட்டியவனே இது என்மகன் சொல்லும்போது [ 13 வருடங்கள் முன்பு நடந்தது விஷயம் ] எப்படி எடுத்துக்கொள்ளுவாள் அவள் ? உன்னை திருமணம் செய்த்தபிறகு நடந்தது என்றால் கண்டிப்பாக நம்பியிருக்க மாட்டாள் என்று நினைக்கிறன் . அவன் love பண்ணும்போது ஜேர்மனி போயிட்டு வரும்பொழுது சாருக்கு gift வாங்கி வந்தான் ,, ஆனால் மகாவிற்கு எதுவுமே வாங்கி கொடுத்தது இல்லை . வெளியே கூப்பிட்டு போனது இல்லை . ஆனால் இப்போ saree வாங்கிட்டு வந்துருக்கான் , எதனால் காரணம் சத்தியமாக புரியவில்லை ? love என்றால் அப்போ இல்லையா? யாரிடமும் தன்னை பற்றி சொல்லாதவள் எப்படி மற்றவளிடம் [divi ] hospital ] சொல்லுவாள் என்று யோசிக்காமல் கோவம் கொள்ளுகிறான் ,, அவனுக்கு முதலிருந்து கோவம் மட்டும் குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது , இப்பொழுது மகா post pregnancy depression இருக்கிறாள் என்று தோணுது . குழந்தை பிறந்த பிறகு மொத்தமாக சேர்த்துவைத்து பேசுவாள் என்று நம்புவோம் .