All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஏரிக்கரை - கதை திரி

Status
Not open for further replies.

Thoshi

You are more powerful than you know😊❤
உயிர் பிரியும் வலி கூட குழந்தையின் ஒற்றை முத்தத்தில் கரைந்துவிடுகிறது தாய்க்கு ....

ஏரிக்கரை - final :

டன்டடைன்....அம்மா நான் வந்துட்டேன் ...மா இன்னுமா தூங்குறீங்க எழுந்துக்கோங்க மா எனக்கு ரொம்ப பசிக்குது .

அவன் செலுத்தியிருந்த மயக்க மருந்தின் உபயத்தால் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவர் கண் முழிக்காமல் இருக்கவே....மை டியர் மாதாதாதா இப்போ எழுந்து எனக்கு சாப்பாடு ஊட்ட போறிங்களா இல்லையா என கத்தினான் . அவரிடம் அசைவில்லாததில் இத்தனை நேரம் அவன் கண்களில் இருந்த மென்மை சிறிது சிறிதாக குறைந்து அந்த இடத்தில தனது இரையை காணும் சிறுத்தையின் பளபளப்பு வந்தது.

எனக்கு தெரியும் ...எனக்கு தெரியும் .....அன்னிக்கும் என் பசியை போக்க விருப்பம் இல்லாமதான அந்த நண்டுகள் இருந்த ஏரில என்னை தூக்கி போட்டீங்க ...இப்பவும் உங்களுக்கு என் பசியை போக்க பிடிக்கலல ....ஆஆஆ என தலைமுடியை இறுக பற்றி கத்தியவன், அவரை தூக்கிக்கொண்டு சென்று முதல் கதவை திறந்து அங்கிருந்த டேபிளில் வைத்தான் . "மை டியர் மாதா" இப்போ எழுந்துக்க போறிங்களா இல்லையா என கேட்டான் .

இப்பொழுதும் அவரிடத்தில் அசைவில்லாததில் பக்கத்தில் இருந்த அந்த துருப்பிடித்த பிளேடை எடுத்தவன் சரக் சரக் என அவர் உடலில் தனக்கு தோன்றிய இடங்களில் எல்லாம் கீறினான் . ரத்தம் சொட்ட சொட்ட இருந்த பிளேடை தன் இதழ்களில் வைத்து முத்தமிட்டவன் ....ஹாஹா இப்போ அம்மா கண்டிப்பா எழுந்துப்பாங்க என்றான் .


...................................................


Security checking department :

அவ்வறையினுள் அவசரமாய் நுழைந்த அரசு ...ஐம் இன்ஸ்பெக்டர் அரசு from சி ஐ டி .....எனக்கு இன்னிக்கு மதியம் மூணுல இருந்து நாலு மணிக்குல ஆர்.ஆர் ரோடு வழியா போன வண்டிகளை பத்தி தெரியணும் அந்த சிசிடிவி புட்டேஜ பிளே பண்ணுங்க .

எஸ் சார் ..ஒருநிமிசம் ...

வீடியோ பிளே ஆனவுடன் கவனமாக பார்த்துகொண்டே வந்தவன் ஓரிடத்தில் ஸ்டாப் ஸ்டாப் என கத்தினா

ம்ம்ம் கொஞ்சம் பின்னாடி பிளே பண்ணுங்க ....

ஆங் இந்த வண்டிய ஜூம் பண்ணுங்க...வண்டி நம்பர் தெரியுதா பாருங்க ...

அப்படியே அந்த வண்டி எந்த ரூட்ல லாம் போயிருக்குனு பாத்து சொல்லுங்க ..

ஓகே சார் என்று ஒவ்வொன்னா போட்டு பார்த்தவர் சார் அந்த வண்டி கடைசியா காந்திநகர் வழியா போயிருக்கு சார் ..அதுக்கப்றம் அந்த வண்டி எந்த கேமராலையும் வரல சார் .

அரசுவின் இதழ்கள் காந்தி நகர் என ஒருமுறை சொல்லி பார்த்தது ...

....................................................

உடலில் ஆங்காங்கே கீறல்களின் ரத்தத்துடன் இருந்தவரிடம் அவன் ....அம்ம்மா இப்போவாது என்ன பாருங்க ...உங்களுக்கு வலிக்குதா அப்போ எனக்கும் அன்னிக்கு இப்டி வலிச்சிருக்கும்தானே என சிறுபிள்ளையின் குரலில் சொன்னவன் ....நான் ரொம்ப கெட்ட பையனா மா அதுனால தான் என்ன தூக்கி போட்டுட்டியா ...அப்போ அந்த பையனும் கெட்டவனா அதுதான் அவங்க அம்மாவும் அவனை பாத்துகலையா என சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஏதோ உளறினான் .அன்னிக்குல ...மா ...நான் ரோட்ல நடந்து போனனா அப்போ ஒரு குழந்தை ரொம்ப அழுதுட்டு இருந்திச்சிமா .பக்கதுல ஒரு நாய் அந்த குழந்தை கால போட்டு கடிச்சிட்டு இருந்திச்சிமா. எனக்கு ரொம்ப பயமா இருந்திச்சி ஆனா அந்த குழந்தை அழுகுறத பாக்க முடியாம அங்க இருந்த பெரிய கல்ல தூக்கி அந்த நாய் மேல போட்டுட்டேன். ஹீஹீ அந்த நாய் கத்திக்கிட்டே கீழ விழுந்திடிச்சி அது அந்த பாப்பாவ கடிக்கும்போது பாப்பாகும் இதே மாதிரி தான வலிச்சிருக்கும் . ஆனா அம்மா அப்றம் தான் நான் பார்த்தேன் மா ஒரு பொண்ணு இங்க என்ன பண்ற அம்மா கிட்ட வாடா செல்லம் னு சொல்லி அந்த பாப்பாவை தூக்குனாங்க , அத பாத்து எனக்கு ரொம்ப கோபம் வந்திடிச்சிமா. அம்மான்னா பாப்பாவை பத்திரமா பாத்துக்கணும்னு சொல்லுவாங்க தான. என் சாரதாம்மா கூட என்ன பத்திரமா பாத்துக்கிட்டாங்களே . எனக்கு அந்த பாப்பாவோட அம்மாவை பிடிக்கவேஇல்லை ...என்ன பண்றதுனு தெரியாம அந்த அம்மா தலையிலேயே கல்லால அடிச்சி அவங்கள நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன் மா. உன்கிட்ட காட்டணும்னு தான் கூட்டிட்டு வந்தேன் ஆனா நீ தான் இல்லையே என உதடுகளை பிதுக்கியவன் எனக்கு ரொம்ப கோபமா வந்ததுல இதோ இந்த பிளேட வச்சிதான் நிறைய முறை அவங்க உடம்புல கீறிட்டேன் . ஹீஹீ அம்மா அப்போ எவ்ளோஓஓஓ ரத்தம் தெரியுமா நிறையா நிறையா ரத்தம் ....ஆனா அம்மா அவங்க தான என்னை நண்டு இருக்க ஏரில போட்டாங்க அதுனால நானும் அவங்கள நண்டு தம்பிக்கு உணவா கொடுத்துட்டேன் . ஆனா அவங்க என்ன பெரிய நண்டு தண்ணில தான போட்டாங்களாம் ஹீஹீ நானும் அவங்கள அங்க கொண்டு போய் போட்டுட்டேன் ....ஹாஹா ஹாஹா ஹாஹா.... அப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துது தெரியுமா "மை டியர் மாதா " என அவ்வறையே அதிரும் வண்ணம் சிரித்தான் .

....................................................

காந்திநகர் என முனங்கி கொண்டே வெளியே வந்த அரசு கைபேசி ஒலித்ததில் யாரென்று பார்க்க ...முகிலின் பெயர் தெரிந்ததில் அதை எடுத்தவன் , சொல்லு முகில் நிர்மலா வீட்ல என்ன சொன்னாங்க

முகில் , பாஸ் எல்லாரையும் விசாரிச்சிட்டேன் .யாருக்கும் எதுவும் தெரியல . நிர்மலா தண்டனை முடிஞ்சி வந்த பிறகு எல்லோரும் மும்பை போய்ட்டிருக்காங்க . ஒரு வாரம் முன்னாடி தான் வந்திருக்காங்க .


அரசு , சரி நீ முதல கிளம்பி வா .

முகில் , எங்க பாஸ் ...சிசிடிவி புட்டேஜ்ல எதுனா தெரிஞ்சிதா பாஸ் .

அரசு , ஆமா டா அந்த வண்டி எந்த வழியா போச்சினு தெரிஞ்சிடிச்சி . அந்த வண்டி கடைசியா காந்திநகர் ரோடுல போயிருக்கு .

முகில் , காந்திநகர் ஆஹ் பாஸ் அங்க நிர்மலாக்கு சொந்தமான ஒரு வீடு இருக்கிறதா இப்போதான் அவங்கவீட்ல இருக்கவங்க சொன்னாங்க .

அரசு , அந்த வீடு அட்ரஸ் வாங்கி எனக்கு அனுப்பி விடுடா...நான் போய்ட்டிருக்கேன் நீ வா. .
முகில் , ஓகே பாஸ்.

சிறிது நேரத்தில் திரும்பவும் அழைத்த முகிலிடம் , என்ன டா நான் தான் அட்ரஸ் அனுப்ப சொன்னேன்ல .

முகில் , பாஸ் பாஸ் நான் சொல்றத கேளுங்க ....அந்த நிர்மலாக்கு நண்டு வளர்ப்புல ஆர்வம் அதிகமாம் பாஸ் . அந்த ஆர்வத்தில தனக்காக வாங்கி இருந்த வீட்ல நண்டுகளுக்குனு ஒரு நீச்சல் குளம் கட்டுனங்களாம் . அவங்க மும்பை போனபிறகு கூட தெரிஞ்சவங்க மூலமா அத கவனிச்சீர்ந்திருக்காங்க ....எட்டு மாசத்துக்கு முன்னாடி அத கவனிக்கிறவங்க இறந்துட்டாங்க பாஸ். ஆனா அவங்க இறந்தது இவங்க குடும்பத்துல யாருக்கும் தெரியல .பாஸ்.... நான் சரியாதான் யோசிக்கிறேன் அப்டினா அவன் அங்க ..அந்த வீட்ல தான் எல்லோரையும் கொல்றான் போல பாஸ் .

அரசு , நீ சொல்றது சரிதான் முகில் ....ஆனா அவன் அங்க நண்டுகளை விட்டு சித்ரவதை தான் பன்றான் நினைக்கிறேன் அவங்க உயிரோட வதைபடுறத பாத்து சந்தோஷ படுகிற சைகோவா மாறிட்டான் நினைக்கிறேன் . எது எப்படியோ நம்ப சீக்கிரமா அங்க போகணும் .

முகில் , நான் இன்னும் 10 நிமிஷத்துல அங்க இருப்பேன் பாஸ்...................................................

"ஹாஹா மை டியர் மாதா " என அவ்வறையே அதிரும் வண்ணம் சிரித்தவன் திடீரென சிரிப்பை நிறுத்தி ....நீ....நீயும் தான என்ன தூக்கி போட்ட அப்போ உனக்கும் வலி தெரியனும்ல ஆஆஆ என கத்தியவன் அவரை அடுத்த அறைக்கு இழுத்து சென்று அங்கிருந்த நண்டு வலையில் அவரை கட்டி நீச்சல் குளத்தினுள் தூக்கி போட்டான் .

அவரின் உடலை சிறிது சிறிதாக சூழ்ந்துகொண்ட நண்டுகளை கண்டவன் ....இப்போ எப்படி இருக்கு " மை டியர் மாதாதாதா " என கத்தியவன் வெளியில் கேட்ட அரவத்தில் அவரை வெளியே எடுக்க நேரமில்லாததை உணர்ந்து அவ்வறையின் மூலையில் இருந்த சுவரை தள்ள அது கதவாய் மாறி அவன் செல்வதற்கேற்ப வழியை கொடுத்தது .

...........................................
............


அரசுவும் , முகிலும் அவ்வீட்டினுள் நுழைந்த பொழுது அங்கு அமைதி மட்டுமே தவழ்ந்தது . அங்கு இருந்த மூன்று கதவுகளில் வலப்புறம் இருந்த கதவை திறக்க முகிலிடம் சொன்னவன் இடப்பக்கம் இருந்த கதவை திறந்தான் .
அந்த அறை சாதாரணமாக இருக்க யோசனையுடன் பார்த்திருந்தவனை பாஸ் என்ற முகிலின் சத்தம் கலைத்தது .

வேகமாய் வலப்பக்கம் இருந்த அறைக்கு சென்றவன் அந்த அறை முழுவது சிதறி இருந்த ரத்தத்தையும் .....ரத்தம் சொட்ட சொட்ட சேரில் ஊசலாடிக்கொண்டிருந்த பிளேடை கண்டு திகைத்து விட்டான் .

முகில் , பாஸ் இங்க இருக்கிறத பார்த்தா என மேலே சொல்லமுடியாமல் தடுமாற சட்டென்று எதோ தோன்ற முகில்ல்ல் என்றழைத்த அரசு , இந்த வீட்ல தான நண்டு வளக்குறதா சொன்னா என கேட்க ....

அவனை விழிவிரித்து பார்த்த முகில் , பாஸ் அப்போ அந்த மூணாவது கதவு என சொல்லும்முன்பு அக்கதவின் பக்கம் சென்றிருந்தான் அரசு.

இருவரும் சேர்ந்து உள்ளே செல்ல அந்த நீச்சல் குளமே ரத்தநிறமாய் மாறி இருந்தது .



ஒன்பது மாதங்களுக்கு பிறகு :


அம்மா என கத்திய முகில் அங்குவந்த அவனின் அன்னையிடம் , மா தயவு செஞ்சி இனிமே என்ன அரசுகூட எங்கையும் போக சொல்லாதிங்க .

இருவரின் அன்னை வசுந்தரா சிரிப்புடன் , ஏன் டா ராஜா என கேட்டார்.

முகில் , பின்ன என்ன மா ...இப்போதான் சென்னைக்கு போனவன் என்னையும் கூட கூட்டிட்டு போய் எல்லோரும் தற்கொலைனு சொன்ன கேச கொலைன்னு சொன்னான் . அத நிரூபிக்க முடிஞ்சிதா ? அங்க இருந்தவன்லாம் எங்களை தான் பைத்தியமோனு சந்தேகமா பார்த்தானுங்க . சரி எப்படியோ நம்ப வீட்டுக்கு வந்துட்டோம்னு சந்தோஷமா இருந்தேன் . அது பொறுக்குதா ?? அவருக்கு அடுத்து கேரளால ஏதோ கேசுனு போகப்போறாராம் .போறவரு போகவேண்டிதுதானா டிபார்ட்மென்ட்ல சொல்லி என் பேரையும் கோர்த்து விட்ருக்காரு என புலம்பியவனை இழுத்து கொண்டு அறைக்கு சென்ற அரசு அவன் முன் ஒரு செய்திதாளை போட்டான் . அதில் எழுதியிருந்ததை கண்ட முகிலின் கண்கள் விரிந்தது ....வாய் திரும்பவுமா பாஸ் என முணுமுணுத்தது .

அதில் ,

" கேரளாவின் *****ஏரியில் கிடைத்த பிணம் .... இது அந்த ஏரியில் கிடைக்கும் இரண்டாம் பிணம் ....முதலாம் வழக்கை தற்கொலை என முடித்த போலீசாரின் தற்போதைய நடவடிக்கை என்ன ???""

- என அந்த வலக்கை பற்றிய விவரங்களை பதித்திருந்தனர் .


7578


(வேட்டை தொடரும் )
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
ஹாய் ￰மக்காஸ் ...இந்தகதை வேறொரு தளத்தில் போட்டிற்காய் எழுதியது. சில வாசகர்களின் விருப்பத்திற்காய் இங்கு பதிந்துள்ளேன் .

உங்க எல்லோருக்கும் ஏரிக்கரை பிடிச்சிருக்கும்னு நம்புறேன் .
சில பேர்க்கு கதையோட முடிவு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் .
நான் இந்த கதை எழுதும்போதே என்னோட அக்கா, பிரண்ட் ரெண்டு பேருமே அத தான் சொன்னாங்க .

சோ....நான் எதுக்கு அப்படி ஒரு முடிவு வச்சேன்னு சொல்லணும்ன்றது என்னோட கடமைனு நினைக்கிறேன் .

ஏரிக்கரை
-இது சில நாள் முன்பு, வேளச்சேரியில் நடந்த ஒரு சம்பவத்தின் தாக்கத்தால் உருவான கதை.

இந்த கதையில் அந்த கொலைகாரனின் தாய்க்கு சொல்ல பட்ட கதை உண்மை . அந்த குழந்தை அந்த ஏரியில் இறந்தது தான் நிஜம் . அதை மாற்றி , அந்த குழந்தை உயிரோடிருந்தால் ...தனது தாயின் செயல் பற்றி தெரிந்து பாதிக்க பட்டிருந்தால் ????

இந்த கேள்விக்கு எனக்கு தோன்றிய பதிலே இக்கதை .

இவன் போன்றவர்களுக்கு எத்தனை தண்டனை கொடுத்தாலும் அவர்களின் இச்செயல் மாறப்போவதில்லை .
இந்த கதைக்காக நிறைய கேஸ்களை பற்றி தேடுகையில் தெரிந்தது , இவர்களுக்கான முடிவு அவர்களின் இறப்பு மட்டுமே.

அதனால்தான் நான் இச்சம்பவங்கள் தொடரும் என்பதுபோல் இறுதி அத்தியாயத்தை எழுதினேன் .

ஒருவேளை நான் இதன் அடுத்த பாகம் எழுதினால் , அதில் இவனுக்கு தண்டனையோ அல்லது முடிவோ கிடைக்க பெறலாம் .நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமைய வேண்டுமென விரும்புகிறேன் .

" சைகோ என்பவர்கள் தானாக உருவாகுதில்லை ....உருவாக்க படுகிறார்கள் ".


உங்களது கருத்துக்களை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள் டியர்ஸ் .உங்க கருத்துகளுக்காக நான் ஆவலோடு காத்துக்கிட்டுஇருக்கேன்
http://srikalatamilnovel.com/community/threads/ஏரிக்கரை-கருத்து-திரி.903/
 
Last edited:
Status
Not open for further replies.
Top