All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஏரிக்கரை - கதை திரி

Status
Not open for further replies.

Thoshi

You are more powerful than you know😊❤
இறைவன் படைத்ததில் இயல்பு கெடாமல் தொடரும் பட்டியலில் இன்றும் இருக்கிறது ....குழந்தையின் சிரிப்பு.....



ஏரிக்கரை 1 :



விடியற்காலை ஐந்து மணி ...

இன்று நடக்கப்போகும் நிகழ்வுகளின் சாட்சியாய் ஆதவன் உதிக்க ஆரம்பித்தான் . சென்னை மாநகரத்தின் ஏதோ ஓர் இடம் . ஏரி அல்ல குளத்தின் தயவால் குளுமையான காற்று உடலை தழுவி செல்கையில் , அதற்க்கு நேர்மாறாய் புள்ளினங்களின் அளப்பரிய சத்தங்கள் அவ்விடத்தில் பரவாலாய் ஒலித்தது.
காற்றின் குளுமையை அனுபவிக்க தடையாய் காற்றோடு கலந்து வந்தது துர்நாற்றம் .

அவ்வழியில் செல்வோர் சிலர் யோசனையுடன் அவ்விடத்தை ஆர்ய்ந்ததின் முடிவில் ஏரிக்கரையோரம் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து அங்கு சென்று பார்த்தனர் .முதலில் சென்ற ஒருவர் அங்கனவே வாந்தி எடுக்க மற்றவர் மயக்கம் அடைந்ததை கண்டு மற்றவர்களுக்கு அங்கு செல்ல ஆர்வம் இருந்தும் இவர்கள் நிலையினால் தயங்கி அவ்வூரின் காவல்துறையினருக்கு தகவலளித்தனர் .


காலை 6 மணியளவில் :

வழக்கம்போல் தாமதமாய் அவ்விடத்திற்கு வந்த போலீசார் துர்நாற்றம் அதிகமாகி இருந்ததில் மூக்கை மூடிக்கொண்டு ஏரிபக்கம் சென்று அங்கு இருந்ததை பார்த்தவர்கள் ஒரு நொடி உறைந்து விட்டனர் . அங்கிருந்தது ஒரு பிணம் ,.உடலில் ஆங்காங்கே ரத்தகாயத்துடன் அக்காயங்களும் சிதைந்த நிலையில் , முகம் முழுவதும் மீன்கள் தின்றிருக்கும் போல அவை தின்றதின் மிச்சம் மட்டுமே இருந்தது அவ்வுடலில் பார்க்கும்பொழுதே வயிற்றை பிரட்டுவது போல் .

எப்படியோ அவ்வுடலை அப்புறப்படுத்தி எரிக்கரையோரமாக சிறிது சமமான இடத்தில் கிடத்திய
சிறிது நேரதில்லெல்லாம் ￰தடயவியல்துறையை சார்ந்தவர்கள் வந்து அவ்வுடலை சற்று சோதித்து பார்த்து பிறகு கொண்டு சென்றனர் .

விசாரணையில் அது வேளச்சேரியை சேர்ந்த அகல்யா என்னும் பெண்ணின் உடல் என்று அறிந்து அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்ததில் சிறிது நாள் முன்பு அப்பெண்ணின் குழந்தை காணாமல்போனதாகவும் , குழந்தையை பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் இப்பெண் மனமுடைந்து இருந்ததாகவும் தெரிந்தது . அப்பெண்ணின் குடும்பத்தாரே இது தற்கொலை என அடித்து சொல்லினர் .

பின்பு அதை பற்றி விவாதிக்கையில் ஒரு அதிகாரி , சார் அந்த பொண்ணோட உடல்ல இருந்த காயம்லாம் பார்த்தா வெறும் மீன் கடிச்சதுனால வந்த மாதிரி தெரிலயே ....

அந்த கேசில் தலைமை தாங்குபவர் , ஆமாயா நீ சொல்றதும் சரிதான் ஆனா எங்கயா நம்பல விசாரிக்க விட்றாங்க...அந்த பொண்ணு வீட்லயே இது தற்கொலைனு சொல்லிட்டாங்க நீங்க கேஸ முடிங்கனு மேலிடத்துல சொல்லிட்டாங்களே இதுகப்புறம் நம்ப என்ன பண்ணமுடியும் . கேஸ முடிச்சப்பரும்... பணக்காரன் எவனா வந்து என் வீட்டு நாய காணும்னு கம்ப்லைன் குடுப்பான் நம்பளும் நாயா அலைஞ்சி அந்த நாய கண்டுபிடிக்கனும் சலிப்பாய் சொல்லியவர் அவரின் மேலிடம் அவருகிட்ட கட்டளையின் படி பத்திரைகைக்கு இது குடும்ப தகராறால் நேர்ந்த தற்கொலை என்று தகவலளித்துவிட்டு அந்த கேஸை முடித்துவிட்டார் .
மக்களும் அதை பற்றி மறந்து அன்றாடவாழ்வை கடக்கையில் .... மறந்ததை நினைவூட்டுவது போல் அமைந்த அச்சம்பவத்தால் அனைவரும் திடுக்கிட்டனர் . திடுக்கிடலை மரணபயமாய் மாற்ற செய்தது அதை பின் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் ....


அதே ஏரிக்கரை , அதே புள்ளினங்களின் பயம்கொண்ட சத்தங்கள் ....காற்றில் துர்நாற்றம் . ஆம் அதே ஏரிக்கரை தன்னுடைய ஐந்தாம் பிணத்துடன் .......





--------------------------------------------
 

Thoshi

You are more powerful than you know😊❤
அம்மாக்களுக்கான குழந்தைகளின் கவிதைகளும் ...குழந்தைகளுக்கான அம்மாக்களின் கவிதைகளும் முத்தங்களாலே எழுத படுகின்றன....



ஏரிக்கரை 2 :

சென்னை பேருந்து நிலையம்:

பேருந்திலிருந்து 5 அடி உயரமும் 3 அகலமுமாய் இறங்கியவனின் கண்கள் இரண்டும் ஈட்டீயாய் பார்ப்பவரின் நெஞ்சின் ஆழம் வரை சென்று துளைப்பது போல் இருக்க அதற்க்கு நேர்மாறாய் உதடுகள் புன்னைகைத்துக்கொண்டிருந்தது .

அங்கிருந்து ஆட்டோ பிடித்து அவன் வந்து நின்ற இடம் அவ்வூரின் காவல் நிலையம் . அவன் வந்த நேரம் காவல் நிலையம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டதில் அங்கிருந்த ஒரு போலீசாரிடம் கேட்ட பொழுது , அதாம்பா அந்த ஏரிக்கரை கிட்ட திரும்ப இன்னொரு பொணம் கிடக்குதாம். இந்தவாட்டி கமிஷ்னரே விசாரிக்க போறாரு அதான் எல்லோரும் அங்க கிளம்பிட்டு இருக்காங்க .

அவன் , இன்னொரு பொணம்னா ஏற்கனவே அங்க ஒரு பொணம் கிடைச்சிதா என்ன ??

இந்த உலகத்துல தான் இருக்கானா என்பது போல் இவனை ஓர் பார்வை பார்த்து, ஏன்பா நீ பேப்பர்லாம் படிக்க மாட்டியா??? இது அந்த ஏரிக்கரையில் கிடைக்குற ௫ வது பொணம்பா ... அவனிடம் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே அங்கு தன் மேலதிகாரி வருவதை கண்டு அமைதியாகி அனைவருடனும் சேர்ந்து தானும் பரபரப்பாகினார் .
ஏதோ யோசனையுடன் சிறிது நேரம் நின்றவன் பின் அங்கிருந்து கிளம்பிச்சென்றான் ....

ஏரிக்கரை இன்று மிகுந்த பரபரப்புடன் இருந்தது ... இத்துடன் இதே இடத்தில் 5 பிணங்கள் கிடைத்ததில் அங்கு சுற்றி இருந்த மக்களின் முகத்தில் பீதி அப்பட்டமாய் தெரிந்தது . அதுவும் விசாரணையின் முடிவில் அது வெவ்வேறு ஊரை சேர்ந்த பெண்களின் உடல்கள் என தெரிந்ததால் அவர்களின் அனைவருக்கும் இதை போலீஸ் கூறுவதுபோல் தற்கொலை என ஏற்றுக்கொள்ள முடியவில்லை..ஆயினும் அவர்களால் போலீசார் கூறுவதற்கு தலை ஆட்டமட்டுமே முடிகிறது .

போலீசார் முகத்திலும் இது குறித்த சிந்தனையே ....ஒவ்வொரு முறையும் இது தற்கொலை இல்லை என தோன்றினாலும் மேலே விசாரிக்க முடியாமல் ஏகப்பட்ட தடைகள் . அப்பெண்களின் குடும்ப சூழ்நிலைகளும் அதற்க்கு தக்கவாரே அமைய தற்கொலை என்றே கேஸை முடித்தனர் . வழக்கம் போல் தடவியல்துறையை சார்ந்தவர்கள் பிணத்தை பேருக்காய் சோதித்த பின் கொண்டு செல்லாமல் இம்முறை சிறுது தீவிரமாக சோதித்துப்பார்த்தனர் . போலீசாரும் அவ்விடத்தை முதல்முறையாய் ஆராய்ச்சியுடன் காண்கையில் போலீசாருடன் சேர்ந்து மற்றோரு ஜோடி கண்களும் கூர்மையாய் அப்பிணத்தையும் , அதன் சுற்றுசூழலையும் ஆராய்ந்தது . அந்த ஜோடி கண்களுக்கு சொந்தக்காரன் வேறுயாருமில்லை ...காலையில் பேருந்தில் இருந்து இறங்கியவன் தான் . அவனின் கண்கள் துள்ளியமாக அவ்விடத்தை ஆராய்ந்ததில் பிணத்தை கண்டவனுக்கு அச்சிறு வித்தியாசம் சிக்கியது . உடனே பிணத்தை நெருங்கியவன் அதை ஆராய முற்பட்டான் . இதைக் கண்ட போலீசார் ஒருவர் அவனிடம் வந்து ,

யார்பா நீ?? என்ன பண்ற ? விசாரணை போய்ட்டுஇருக்கும்போது இப்படி கிட்டலாம் வரகூடாது போபா போய் ஓரமா நில்லு .

சற்று தயங்கியவன் , சார் இந்த காயங்கள் எல்லாம் வெறும் மீன் கடித்தது போல் இல்லையே அதான் பார்க்கலாம்னு என இழுத்ததில் ....

சுற்றி இருந்த போலீசார் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டதில் பெரிய அதிகாரியாக இருந்த ஒருவர் ...ஏய் என்னபா நீ உனக்கே தெரியும் போது எங்களுக்கு தெரியாதா ?? மீன்கள் கடிச்சதுதான் இதுலாம் உடல பார்த்தாலே தெரியல ரொம்ப நாளா தண்ணில கிடக்குதுனு மேல மேல னு கடிச்சிற்கும் அதான் அப்டி இருக்கு முதல நீ தள்ளி போ பா . விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கோம்ல என்றார் .

அவர் சொல்லுவது மிக சரியாக இருந்தாலும் அக்காயத்தில் ஏதோ சிறு வித்தியாசம் உள்ளது போலவே அவனது உள்ளுணர்வு சொல்லியது . அவனது ஆராய்ச்சி பார்வை கண்ட போலீசார் தடவியல் நிறுபனர்களிடம் சோதனை முடிஞ்சிடிச்சின்னா பிணத்தை எடுத்துக்கிட்டு போலாம் என சொல்ல உடனே மற்றவர்கள் பிணத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துக் கொண்டு சென்றனர் ..

அனைவரும் சென்ற பிறகும் அங்கு இருந்த அவன் அவ்விடத்தின் சிறுசிறு இடங்களையும் விடாமல் தனது கூர்பார்வையால் ஆராய்ந்தான் . அவனது பார்வை பிணத்தைக் கிடத்தி இருந்த அந்த சமமான நிலத்தில் இருந்து ஏரிக்கரையோரம் வரை தொடர்ந்தது . இத்தொடர் சம்பவங்களுக்கு பின்னால் ஏதேனும் காரணம் கண்டிப்பாக இருக்கும் என அவனது உள்ளுணர்வு சொன்னது... அதுமட்டுமல்ல இச்சம்பவங்கள் தொடரப்போவதாகவும் சொல்லியது.....

..........................................................................................



என்னையா பண்ணிட்டுஇருக்கீங்க எல்லோரும் அந்த ஏரிக்கரை கேஸ் என்னாச்சி ...மேல்இடத்துல இருந்து கேள்வியா கேக்குறான்யா என தன் முன் இருந்த இன்ஸ்பெக்டர் . வசந்த்திடம் (ஏரிக்கரை கேஸ்களை விசாரிப்பவர் ) கேள்வி கேட்டுக்கொண்டிருந்தர் டிஜிபி.

சார் நாங்களும் விசாரிச்சிட்டோம் சார் தனி தனியா விசாரிக்கும் போது எல்லாமே தற்கொலை மாதிரி தான் இருக்கு ..

டிஜிபி , என்னய்யா சொல்ற ??

வசந்த் , ஆமா சார்

1 .மொதல்ல அங்கிருந்து நம்மளுக்கு கிடைச்ச உடல் அகல்யா என்னும் பெண்ணுடையது அவங்க குழந்தையா காணாம வருத்தத்துல தற்கொலை பணிகிட்டாங்க னு விசாரணையில் தெரிஞ்சிது .

2. கல்பனா , அவங்க வீடு தரமணில இருக்கு ரொம்ப நாளா வயத்துவலி பிரச்சனையில் கஷ்டப்பட்டவங்க அன்னிக்கு வேளச்சேரில இருக்க சொந்தகாரங்க வீட்டுக்கு வந்தப்ப அதிகமான வயத்து வலிய தாங்க முடியாம தற்கொலை பண்ணிற்காங்க .

3. பவித்ரா இவங்க தன் மாமியார் வீட்ல ரொம்ப கொடும படுத்துறதா ஏற்கனவே தன் புகுந்தவீட்டு மேல கம்ப்லைன் குடுத்துருக்காங்க ஆனா அவங்க ரொம்ப செல்வாக்கான குடும்பம்றதுனால என்ன நடந்துச்சோ கம்ப்லைன வாபாஸ் வாங்கிட்டாங்க .அந்த பிரச்சனையில அவங்க தற்கொலை பண்ணிட்டாங்க அதுக்கு அவங்க புகுந்தவீடு தான் காரணம்னு அந்த பெத்தவங்களே சொன்னதுல அதுவும் திசை மாறிடிச்சி .

4. கவிதா இவங்க கவனக்குறைவால விளையாடிட்டு இருந்த அவங்க குழந்தை வீட்ல வச்சிருந்த சின்ன தண்ணி தொட்டில விழுந்து செத்துடிச்சி தான் குழந்தை சாவுக்கு தான் தான் காரணம்னு அவங்க உளறிட்டு இருந்ததாகவும் அதுனால அவங்க அந்த ஏரில விழுந்து தற்கொலை பண்ணிகிட்டதாவும் அவங்க குடும்பத்துல இருக்கவங்களே சொல்றாங்க .

இப்படி எல்லா கேசுக்குமே தனித்தனியா ஸ்ட்ரோங் ஆன ரீசன் நடந்தது தற்கொலைனு சொல்ற மாதிரி இருக்கு சார் .

டிஜிபி , நீ சொல்றதுலாம் சரியாத்தான்ய இருக்கு ....ஆனாலும் வரிசையா எல்லாம் நடக்கிறதும் அதுவும் அதே ஏரில விழுந்து சாகுறதும் தான் இடிக்குது .தற்கொலை பண்ணிக்க எவ்ளோ இடம் இருக்க எல்லாம் இந்த ஏரில விழுந்து நம்ப உசுர வாங்குறாங்க என புலம்பி கொண்டிருக்கும்போதே அவரது தொலைபேசி அழைக்க எடுத்து பேசியவர் ,
......
எஸ் சார்.....
.......
ஓகே சார்...

பேசிமுடித்தபின் மற்ற போலீசாரை பார்த்து வரிசையா நடந்த சம்பவத்தால இந்த கேஸோடா விசாரணையை சி ஐ டி கிட்ட குடுத்துட்டாங்களாம்யா ...வசந்த் இப்போ அந்த ஆஃபீஸ்ர் வந்தவுடனே கேஸ் பத்தின டீடெயில்ஸ் அ அவர்ட்ட கொடுத்துருங்க சொல்லிக்கொண்டிருந்தவர் கதவு தட்டும் ஒலியில் அமைதியானார் .

உள்ளே வந்தவன் ...

ஹலோ சார் ஐம் இன்ஸ்பெக்டர் அரசு , from CID என தன் கம்பீரக்குரலில் கூறினான் .

அவனை கண்டவரின் கண்கள் அவனின் கம்பீரத்தில் வியப்பை வெளிப்படுத்தின. அவன் வேறுயாருமில்லை
அவன் தான் அப்பேருந்தில் வந்தவன் .ஏரிக்கரையை ஆராய்ந்தவன் . இன்ஸ்பெக்டர் from CID

.............................................
செய்தித்தாள்கள் அனைத்திலும் ஏரிக்கரையில் நடக்கும் தொடர் சம்பவங்களே குவிந்திருந்தது .

" ஏரிக்கரையோரம் மற்றோரு பிணம் !!
விசாரணை சி ஐ டி யிடம் மாறியுள்ளது . இத்தொடர் சம்பவங்களுக்கு குற்றவாளியை கண்டறிவார்களா ?? தற்கொலையென முடித்துவிடுவார்களா ??


முக்கிய செய்தித்தாள் ஒன்றை படித்துக்கொண்டிருந்தவனின் இதழ்கள் சிறிது சிறிதாக புன்னகையை சிந்தியது . செய்தித்தாளில் இருந்த பிணத்தின் புகைப்படத்தை கண்டவனின் கண்களில் வெற்றியின் பளபளப்பு .


தி கேம் ஸ்டார்ட் நௌ



----------------------------------------
 

Thoshi

You are more powerful than you know😊❤
￰மின்னல் மின்னும்பொழுது அம்மாவை கட்டி அணைக்கும் குழந்தைக்கு தெரிந்திருக்கிறது அம்மா அதைவிட பெரிய சக்தி என்று"

ஏரிக்கரை3 :

தன் கையில் இருந்த கோப்பில் ஆழ்ந்திருந்த அரசுவின் முன் இருந்த டேபிளில அதே போல் வேறு சில கோப்புகள் இருந்தன , அவை எல்லாம் அந்த ஏரிக்கரையை சார்ந்த கேஸ் கட்டுகள் . அவை அனைத்தையும் நிதனாமாய் மிக கவனமாய் படித்தவன் சேரில் இருந்து எழுந்து அவ்வறையில் ஜன்னலோரமாய் இருந்த ஒரு வெள்ளை போர்டில் இவ்வளவு நேரம் படித்ததில் தனக்கு முக்கியமாய் தோன்றியதை எல்லாம் எழுத ஆரம்பித்தான் .

1.காலை
2.ஏரிக்கரை
3.பிணம்
4.பெண்
5.உடல் காயம்
6.தற்கொலை

வரிசையாக அவன் எழுதும்பொழுதே அவ்வறையினுள் நுழைந்த மற்றொருவன் இவனிடம் , பாஸ் எதுனா கண்டுபிடிச்சிங்களா இல்லையா மணி 12 ஆகுது பாஸ் இன்னும் கொஞ்ச நேரம் ஆனா எனக்கு கண்ணு வேர்க்க ஆரம்பிச்சிடும் சொல்லிட்டேன் .... எனக்கு ரொம்ப பசிக்குது பாஸ் என்றது முகில் அரசுவின் உடன் வேலைசெய்பவன் மற்றும் நெருங்கிய நண்பன் .

அரசு , டேய் எரும.. முக்கியமா யோசிக்கும்போதுதான் குறுக்க வருவியா ??..எவ்ளோ குழப்பமான கேஸ் உனக்கு சோறு முக்கியமா ??....

முகில் , ஆமா பின்ன சோறு அதானே எல்லாம் ...சத்தமா சொல்ல ஆரம்பிச்சது அரசுவின் முறைப்பில் கடைசில வெறும் காத்துதான் வந்தது .

சிறிதுநேரம் அமைதியா இருந்தவன் ....அரசுஅந்த போர்டில் எழுத்திர்கிறத பார்த்துட்டு,

ஆமா பாஸ் நம்ப போலீஸ்காரங்களில் தான் யாரோ அந்த கொலைகாரனுக்கு ஹெல்ப் பண்றங்களோ என கேட்டான் .

அரசு , ஏன்டா ஏன் அப்டி சொல்ற ...

முகில், பின்ன என்ன பாஸ் நீங்களே பாருங்க ...6 கேஸ் ஐயும் படிச்சிட்டு தான இத எழுதுனீங்க ....இது அவங்களோட விசாரணையிலயே தெரிஞ்சிருக்கும்ல... இவ்ளோ விசயங்கள் ஒத்துப்போகும் போது அவங்க எப்படி இத தற்கொலைனு முடிவுபண்ணாங்க ..

அரசு , ம்ம்ம் சரி தான் ...ஆனா முகில் நானுமே இந்த கேஸ்களை தனி தனியா ஹேண்டில் பண்ணிருந்தா தற்கொலைனு தான் முடிவு பன்னிருபேன் .

முகில் , பாஸ் என்ன இப்டி சொல்றிங்க .

அரசு , பின்ன என்னடா இந்த கேஸ்ல ஒத்துப்போற விஷயம்னா அது அந்த ஏரி மட்டும் தான் மத்தபடி 5 கேஸ்குமே எந்த சம்பந்தமும் இல்ல . இது எல்லாம் நம்ப வரத்துக்குமுன்னாடி வந்த 4 கேஸ் ...இது இப்போ கடைசியா நம்மளுக்கு கிடைச்ச பிணத்தின் டீடெயில்ஸ் . மிஸஸ்.சுஜித்ரா சுரேந்தர் ....இவங்க முக்கிய விஐபி வீட்டு பெண் .....அவங்க வீட்ல இருக்கவங்க இந்த கேஸ முடிக்க தான் பாக்குறாங்க ...இப்படி எல்லாமே ஏதோ ஒரு ரீசன் இருக்கு .. எல்லா பெண்கள் வீட்லயும் பிரச்சனைகள் இருந்துருக்கலாம் அதுல அவங்க குடும்பத்துல இருக்கவங்களே இது தற்கொலைதான்னு நினைச்சிருக்கலாம.அதுக்கேத்த மாதிரி காரணங்களும் சரியாவே இருக்கு .

முகில், பாஸ் இப்போ என்ன சொல்ல வர்றிங்க இது எல்லாம் தற்கொலை தானா ???

அரசு , டேய் இது தற்கொலைனா நம்ப கிட்ட ஏன் கேஸ் வருது .

முகில் , அதுவா எங்க வந்திச்சி நீங்கதான் வான்டடா போய் வாங்கிட்டு வந்திங்க.

அவனை முறைத்த அரசு, இது எல்லாமே தற்கொலைனு தெரிஞ்சாலும் அடுத்தடுத்து ஒரே இடத்துல நடந்தது தான் இப்போகொலையா இருக்குமோனு சந்தேகத்தை தூண்டுது....இப்போ நம்ப வேலை இந்த 5 பேர் வீட்லயும் திரும்ப நல்லா விசாரிக்கிறது ....நீ என்ன பண்ற நாளைக்கு இவங்க ஐந்து பேர் வீட்டுக்கும் போய் விசாரிக்கிற ...

முகில், பாஸ் இது அநியாயம் என்ன மட்டும் தனியா அனுப்புறிங்க ...

அரசு , டேய் எனக்கு வேற வேல இருக்கு டா ......லாஸ்ட் ஆ கிடைச்ச மிஸஸ்.சுஜித்ரா சுரேந்தரோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கணும் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு அதுல . சோ நீ மட்டும் தான் போற சொதப்பாம விசாரிச்சிட்டு வா ...

இவன் சொன்னதை கேட்டு முகத்தை தூக்கிவச்சிக்கிட்ட முகிலை பார்த்து ...ஓ நீ சோகமா இருக்கியா சரி அப்போ சாப்பிட மாட்ட ......எனக்கு பசிக்குது நான் போய் சாப்பிட போறேன்.

துரோகி பாஸ் ...நில்லுங்க நான் எப்போ சோகமா இருந்தேன் ..எனக்கு சோறு தான் முக்கியம் சோகமா
முக்கியம் ....இந்தா வந்துட்டேன் .

..........................................................................................

மறுநாள் அரசு சொன்னது போல் தன்னிடம் உள்ள லிஸ்ட்டில் கடைசியாய் இருந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றான் முகில் . அது ஒரு விஐபியின் வீடு, வீட்டிற்குள் நுழைவதற்க்கே பல போராட்டங்கள் . உள்ளே சென்றவனுக்கு முதலில் அகப்பட்டது அங்கு ஹாலில் மாட்டி இருந்த புகைப்படம் . கணவன்- மனைவி தன் கையில் குழந்தை வைத்திருப்பது போல் இருந்தது அப்புகைப்படத்தில் மூவரின் முகத்திலும் மகிழ்ச்சி அப்பட்டமாய் வெளிப்பட்டது . அப் புகைப்படத்தில் இருந்த பெண்ணின் முகத்தை கண்டவன் ஏதோ தோன்ற தன் கையிலுள்ள பைலை பார்த்தான் ... அதில் அப்பெண்ணின் புகைப்படமே இருந்ததில் அவன் விசாரிக்க வந்தது அப்பெண்ணின் தற்கொலை
பற்றியே என அறிந்து இப் புகைப்படத்தில் இத்தனை சந்தோஷமாக இருப்பவர்களுக்கு அப்படி என்ன நேர்ந்திருக்கும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என அவனது சிந்தனை சென்றது . அவன் மூளை சிந்தித்து கொண்டிருந்தாலும் அவனது கண்கள் அவ்வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து . அப்பொழுது அங்கு தன் வயதிற்கு மிஞ்சிய அலங்காரத்துடன் வந்த பெண்மணி தன்னுடன் வந்து கொண்டிருந்த அவரின் பிஏ போன்றவரிடம், நான் சொன்னது மாதிரி எல்லாம் செஞ்சிட்டிங்களா ?? தம்பி கிட்ட எதுவும் சொல்லல தானே ... இன்னைக்கு எல்லாம் ரெடியா இருக்கணும் புரிஞ்சுதா எதுவும் தப்பாகிடக் கூடாது என சொல்லிக் கொண்டே வந்தவர் இவனைக் கண்டு,
சொல்லுங்க...நீங்க தான் உள்ளவிட மாட்டேன்னு சொன்னபிறகும் பார்க்கணும்னு அடம்பிடிச்சவரா ?? என்ன வேணும்?? எதாவது டொனேஷன் ஆஹ்? அவரது குரலில் இகழ்ச்சி வழிந்தது .

mrs .சுசித்ரா சுரேந்தர் என சொல்ல ஆரம்பித்தவனிடம் ...

சுஜித்ராவா அப்படியெல்லாம் யாரும் இங்க இல்ல என அவசரமாக சொல்லி அத்துடன் பேசி முடித்ததை போல் அவ்விடத்திலிருந்து விலக,

அதில் கோபமான முகில் தன் பாக்கெட்டில் இருந்த id யை எடுத்து காட்டி ஐம் இன்ஸ்பெக்டர் முகில் from சிஐடி ....மிஸஸ். சுஜித்ரா சுரேந்தர் கேஸ் விஷயமா விசாரிக்க வந்திருக்கேன் .

அதைக் கேட்டு சற்று அதிர்ச்சி அடைந்தது போல் இருந்தவர் அவனிடம் , அதான் அவ தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துபோய்ட்டாளே இப்போ என்னத்த விசாரிக்க வந்திங்க .

முகில் ,தற்பொழுது தான் சுஜித்ரானு யாரும் இல்லன்னு சொன்னீங்க இப்போ அவர் தற்கொலை பண்ணிகிட்டார்னு சொல்றீங்க என்ன என்ன நடக்குது ஒழுங்கா உண்மையை சொல்றீங்களா இல்ல விசாரிக்கிற விதத்துல விசாரிக்க வேண்டுமா...

அவனின் தோரணையிலும் பேச்சிலும் பயந்து விசாரணைக்கு ஒத்துக்கொண்டு ,.

சொல்லுங்க என்ன சொல்லணும் இன்னும் என்ன விசாரிக்கணும் உங்களுக்கு ....

முகில் , Mrs. சுஜித்ரா சுரேந்தர் -அ உங்களுக்கு தெரியுமா??

அவர் , ம்ம்ம் ...அவதான் முன்னாடி
என் பையனுக்கு மனைவியா இருந்தா.

இதைக் கேட்ட முகில் என்னது மனைவியாக இருந்தாங்களா என்னடா இந்தம்மா ஏதோ பதவில இருந்த மாதிரி சொல்றாங்க என மனதில் நினைத்து ....

மிஸஸ். சுஜித்ரா சுரேந்தர் தற்கொலைக்கான காரணம் என்ன ?? அது தற்கொலைனு நீங்க எப்படி சொல்றிங்க ??

அவர், அத ஏன் கேக்குறிங்க ...நான் அன்னைக்கே என் புள்ளைகிட்ட சொன்னேன் இவ வேணாம்டா னு .....கல்யாணம்னா அது இவ கூடதான்னு அடம்புடிச்சி கட்டிகிட்டான் . பாதகத்திமவ மகராசியா எங்க குடும்பத்தை சரிச்சிட்டா .....முதல்ல பெத்த புள்ளைய தொலைச்சா ...அப்றம் யாரை பத்தியும் கவலை படமா அந்த ஏரில குதிச்சி செத்துபோய்ட்டா....

அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்தவன் என்ன குழந்தைய காணோமா ?? என்னாச்சி போலீஸ்ல சொன்னிங்களா இல்லையா ??

ம்ம்க்கும் எங்க ...நம்ப கவுரவத்துக்கு போலீஸ் லாம் வேணாம்னு நான் சொன்னதை மீறி எம்புள்ள போலீஸ் ல சொல்லிபுட்டான் . ஆனா அவங்களும் ஒன்னும் கண்டுபிடிக்கல .....அது நடந்த ஒரு வாரத்துலயே இந்த பாதகத்தி உசுர விட்டுட்டா ....இதுக்கப்றம் அந்த புள்ளைய கண்டுபிடிச்சி என்ன ஆவ போகுது . நான் என் புள்ளைக்கு வேற கல்யாணம் பண்ணிவைக்க போறேன் ...அதுனால இந்த விசாரணை அது இதுனுலாம் வீட்டுப்பக்கம் வராதீங்க என சொல்லியவர் திமிராக உள்ளே சென்றுவிட்டார் .

அவர் சொல்லியதை கேட்டு ..சேய் , இந்த பொம்பளகூடலாம் இருந்தா தற்கொலை பண்ணிக்காம எப்படி இருப்பாங்க ..எல்லாம் பணம் இருக்குற திமிர் என நினைத்தவன் அக்குழந்தையை பற்றி யோசிக்க தவறவில்லை .


-------------------------------------------
 
Last edited:

Thoshi

You are more powerful than you know😊❤
உன்னுள் கருவாகி உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான்....
மண்ணுள் நான் வீழ்ந்து மெல்ல உதிரும்வரை என்னுள் நீ வாழ்வாய் அம்மா ....


ஏரிக்கரை 4 :

மங்களான ஒளியை அவ்வறையில் பரவ வைத்திருந்த அச்சிறு பல்பு , ஒரு பெரிய டேபிள் , பக்கத்துல ஒரு குட்டி சேர் அதுல இருந்த ட்ரேயில் துருப்பிடித்த பிளேடு துண்டுகள் சில . அவ்வளவு தான் அவ்வறையில் இருந்த பொருட்கள்.

அவ்வறையின் கதவை திறந்துகொண்டு மெல்லிய உடல்வாகுடன் வந்த அவன் தன் முகம் முழுவதும் நீலமும் சிவப்பும் கலந்து ஏதோ ஒரு திரவம் பூசியிருந்தான் . அது அவன் முகத்தை மிக கொடூரமாய் காட்டிக்கொண்டிருந்தது .வந்தவன் அங்கிருந்த பிளேடு துண்டுகளை ஆராய்ந்து பின் அதில் மிகவும் துரு பிடித்தது போல் இருந்ததை எடுத்தவன் ஒரு வித ரசிப்புடன் அதை தன் கன்னத்தில் தடவி பார்த்தான் ..அதில் கன்னத்தில் சிறு கீறல் பட்டு இரண்டு ரத்த துளிகள் அந்த பிளேடில் விழுந்தது . அதை கண்டு உனக்கு என்ன பிடிச்சிருக்கா என குரலில் உணர்வறியா பாவத்துடன் கூறியவன் எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு நீ என்கூடவே இருக்க போற என்றவனின் கண்கள் இரண்டும் அவ்வறையின் மங்கலான ஒளியில் வேட்டையாட போகும் சிறுத்தையின் கண்களாய் பளபளத்தது ..... அடுத்த நொடி அவ்வறையே அதிரும் வண்ணம் ஹாஹாஹாஹா என சிரித்தவனின் சிரிப்பு அவ்வறையில் மிக பயங்கரமாய் எதிரொலித்தது . எத்தகைய தைரியம் வாய்ந்தவர் அவ்விடத்தில் இருந்திருப்பினும் அவனது இச்சிரிப்பிலே நடுங்கி அவரது இறுதி நொடியை எண்ணியிருப்பர் . அந்த மங்கலான வெளிச்சத்தில் , முகம் முழுக்க நீலமும் சிவப்பும் கலந்த நிறத்தில் கன்னத்தில் ரத்தகாயமும் கண்களில் சிறுத்தையின் பளபளப்பும் என அவனது இக்கோர சிரிப்பு தனது அடுத்த வேட்டைக்கு அவன் தயார் என்பதை சொல்லாமல் சொல்லியது .

.............................................


அதே நேரம் தனது அறையில் , இரு கைகளையும் கோர்த்து அதில் தலை வைத்து கைமுட்டிகளை டேபிளில் ஊன்றியவாறு அமர்ந்திருந்தான் அரசு . உள்ளே வந்த முகில் அரசின் இந்நிலையை பார்த்து... என்ன ஆச்சு அரசு , போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கதான போன ...என்ன ரிப்போர்ட் வந்திச்சி ....எதுனா புதுசா தெரிஞ்சிதா ..என வரிசையாய் கேட்டவன் அவனிடம் மறுமொழி இல்லாததில் , பதில் சொல்லு அரசு ஒருத்தன் இங்க மூச்சுமுட்ட பேசிட்டு இருக்கேன் நீ அமைதியா இருந்தா எப்டி என முறைத்தவனை
நிமிர்ந்து பார்த்த அரசு தன் டேபிளில் இருந்த கோப்பை எடுத்து அவனிடம் கொடுத்தான். இது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தான என சொல்லிக்கொண்டே அதைப் பிரித்துப் படித்துப் பார்த்த முகிலின் முகம் வெளுத்தது . என்ன அரசு இதுல இப்டி போட்டுருக்கு ..அவங்க உடல்ல இருக்க காயங்கள் அவங்க உயிரோட இருக்கும்போது ஏற்பட்டதுனு ?? எப்பவும் தண்ணில விழுந்தவுடனே மீன்கள் கடிக்க வாய்ப்பில்லையே அதுவும் இந்த அளவுக்கு அட்லீஸ்ட் சில மணிநேரம் ஆவது ஆகிற்கும் அதுக்குள்ள நிச்சயம் அவங்க உயிர் போகிற்குமே ..அப்படி இருக்கும்போது உயிரோட இருக்கும்போது எப்படி ? அதுனால தான் அவங்க செத்துட்டாங்களா ??? அப்போ இது தற்கொலைன்ற மாதிரி தான வருது .

அரசு , டேய் லூசுப்பயலே ரிபோர்ட ஒழுங்கா படிச்சி பாரு ....அதுல என்ன போட்ருக்குனா , அவங்க எல்லோரும் தண்ணில விழுந்ததுனால தான் செத்துருக்காங்க காயத்துனால இல்ல ஆனா அந்த காயம் அவங்க உயிரோட இருக்கும்போது ஏற்பட்டிற்கு அது எப்படி ??... அத பத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன்

இடையில் குறுக்கிட்ட முகில் , அப்போ அந்த காயங்கள் மீன்கள் கடிச்சதுனால வந்தது இல்லையா ???

அவனை ஆழ்ந்து பார்த்த அரசு , மேலோட்டமாய் நம் பார்வைக்கு பட்ர காயங்கள் மீன்கள் தின்னதுனால தான் ஆனா ....

முகில் , ஆனா

அரசு , அதுக்கு முன்னாடியே அதாவது மீன்கள் தின்பதற்கு முன்பே அவர்களோட உடல்ல சின்ன சின்னதா ஆழமான காயங்கள் ம்கூம் கீறல்கள்னு தான் சொல்லணும் கிட்டத்தட்ட 108 கீறல்கள் இருந்துருக்கு ....

முகில், ஆ ஆ அரசு அது எப்படி வந்துருக்கும் அப்போ இதுக்கு முன்னாடி நடந்த நாழு கேஸ்ளையும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அப்டி எதுவும் சொல்லலயே??

அரசு , அவங்க போஸ்ட்மார்ட்டம் அ ஒரு போர்மாலிட்டி காக மட்டுமே நடைதிறக்காங்க முகில் அதான் அதுல இந்த காயங்களை அதிகமா சோதிக்கலை . அதுவும் இல்லாம அவங்க எல்லோரும் தண்ணில மூச்சுக்கு திணறி தான் இறந்துருக்காங்கனு ரிப்போர்ட் சொல்லுது .

முகில் , பாஸ் இப்போ தான் ஏதோ கீறல்கள் னு சொன்னிங்க இப்போ தண்ணில மூழ்கி செத்ததா சொல்றிங்க அப்போ இது தற்கொலை தானா?

அரசு , நீ லூசுன்னு அடிக்கடி நிரூபிக்காத டா அவங்க தண்ணில மூழ்கி செதுக்கங்கறது சரிதான் .அவங்க தானா தண்ணில குதிச்சிருந்தா எப்படிடா அவங்க உடல்ல கீறல்கள் வந்திருக்கும் .

முகில் , அப்போ அந்த காயங்கள் எப்டி வந்ததுன்னு கண்டுபிடிச்சா கேஸ் சால்வ்டு அப்படித்தான பாஸ்.

அரசு , நான் இன்னும் முடிக்கல முகில் ....அந்த கீறல்கள் மேல மீன்கள் தின்பத்திற்கு முன்பு அந்த காயங்கள் ஏற்பட்ட பின்பு வேற எதோ நடந்துருக்கு அதுல அந்த உடல்கள் இன்னும் சிதைஞ்சிற்கு .....
பேசிக்கொண்டிருந்தவன் தன்னை விழிகள் தெறிக்க பார்த்துக்கொண்டிருந்த முகிலை கண்டு அவனின் தோளில் தட்டி டேய் முழிச்சது போதும் நீ போன விசாரணை என்னாச்சி சொல்லு ???



-------------------------------------------
 

Thoshi

You are more powerful than you know😊❤
எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் தங்கியதற்கு வாடகை செலுத்த முடியாத இடம் "தாயின் கருவறை " ....

ஏரிக்கரை 5 :

கேஸ் என்ன ஆயிற்று என்ற அரசுவின் கேள்விக்கு ...

முகில் , பாஸ் நம்ப போலீஸ்காரங்க ஒழுங்கா விசாரிக்கலைனு நான் சொன்னத நானே வாபஸ் வாங்கிக்குறேன்.

அரசு , டேய் என்னனு ஒழுங்கா சொல்லு .

முகில், பாஸ் தனித்தனியா விசாரிக்கும் போது 5 கேஸும் தற்கொலைதான்னு அடிச்சி சொல்ற மாதிரி தோனிச்சு ...ஆனால் எல்லா கேஸையும் விசாரிச்சுட்டு , இப்ப நீங்க சொல்ரதையும் கேட்க்கும் போது தான் எனக்கு சந்தேகம் வருது ஒருவேளை இது எல்லாம் கொலையா இருக்குமோனு .

அரசு , விசாரணையில் முக்கியமான விஷயம் எதுனா தெரிஞ்சிச்சா முகில் ??.

அதற்கு பதில் சொல்லாமல் அங்கு இருந்த போர்டின் அருகில் சென்று , ஏற்கனவே அரசு எழுந்திருந்ததின் கீழ் ,

7.குழந்தை

என்று எழுதினான்.

அரசு கேள்வியாய் பார்ப்பதை உணர்ந்து , பாஸ் நான் விசாரிச்ச வரைக்கும் இவங்க ஐந்து பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் தெரியாது, சொல்லப்போனா அவங்களுக்குள்ள எந்த சம்மதமும் இல்ல ....ஆனா எல்லோருக்கும் ஒத்து போறது ரெண்டே விஷயம்....ஒன்னு அவங்க எல்லோருமே பெண்கள். இன்னொன்னு அவங்களோட குழந்தை .

அரசு , குழந்தையா.

முகில் , ஆமாம் பாஸ் குழந்தை தான் . இந்த ஐந்து பேர் செத்ததுக்கும் காரணம் இந்த குழந்தைகள் தான்னு அவங்க வீட்ல இருக்கவங்க நினைச்சிருக்காங்க அதுனால தான் அவங்க போலீஸ் விசாரணையில் ஏதோ ஓர் காரணத்தை சொல்லி இது தற்கொலைனு அடிச்சி சொல்லிருக்காங்க அதுக்கு மேல கேசை விசாரிக்க அவங்க ஒத்துழைப்பும் கொடுக்கல .

அரசு , டேய் நீ என்ன பேசுறேன்னு உனக்கு புரியுதா .. குழந்தைங்க எப்படி இவங்க சாவுக்கு காரணம் னு சொல்ற .

முகில் , காரணம் இருக்கு பாஸ் இவங்க ஐந்து பேரும் இறக்குறதுக்கு சரியா ஒரு வாரத்துக்கு முன்னாடி ரெண்டு பேர் குழந்தை காணாம போயிருக்கு மூணு பேர் குழந்தை இறந்து போயிருக்கு .இதுதான் பாஸ் அவங்க எல்லோருக்கும் ஒத்து போற விஷயம் .

அரசு , என்ன ???அந்த குழந்தைங்களுக்கு எல்லாம் என்னாச்சின்னு விசாரிச்சியா ?

முகில் , பாஸ் அத பத்தி விசாரிக்கறதுக்கு தான் இவ்ளோ நேரம் ஆகிடிச்சி . போலீஸ் விசாரணையில தெரிஞ்சதுக்கும் இப்போ கிடைச்சிருக்கத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு என்று சிறிது நேர அமைதியின் பின் ...முதல் முதல நம்மளுக்கு கிடைச்சது அகல்யா என்னும் பெண்ணினுடைய உடல் .அந்த பொண்ணுக்கும் அவங்க புருஷனுக்கும் ஒரு வாரமாவே பிரச்சனை அதிகமா இருந்திருக்கு , அன்னிக்கு அங்க வீட்டுல நடந்த சண்டையில புருஷன் கிட்ட கோச்சிக்கிட்டு அந்த பொண்ணு குழந்தைய தூக்கிட்டு வெளில வந்து எங்க போறதுன்னு தெரியாம போயிருக்காங்க . ஒருவாரமா சரியா சாப்பிடாம இருந்ததுல கைல குழந்தையோட ரோட்ல மயங்கி விழ அப்போ அந்த வழியா வந்தவங்க உதவுனதுல மயக்கம் தெளிஞ்சி எழுந்திரிக்கும் போது அங்க குழந்தை இல்லையாம் பாஸ் .அவங்களுக்கு உதவுனங்கள விசாரிச்சப்போ அவங்க அங்க குழந்தை எதையும் பாக்கல சொல்றாங்க ... போலீஸும் எல்லா விதத்துலையும் தேடிட்டாங்க ஆனா குழந்தை கிடைக்கல ....இது நடந்து ஒரு வாரத்துல தான் இந்த பொண்ணு ஏரில கிடைச்சுது .

ரெண்டாவது கல்பனா ...இவங்க குழந்தை மூணு நாளா காய்ச்சல்ல அவதிபட்டத்துல பக்கத்தில இருந்த ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்க . ஆனாலும் குழந்தைக்கு சரி ஆகாம இறந்து போயிருக்கு .அவங்க சொந்தம் எல்லாம் அந்த ஹாஸ்பிடல்ல தான் சரியாய் டிரீட்மெண்ட் தரல அந்த பொண்ணு புள்ள இறந்த துக்கத்துல இப்டி பண்ணிடுச்சினு சொல்றாங்க .அந்த ஹாஸ்பிடல்க்கு கெட்ட பேர் வரக்கூடாதுன்னு இந்த பொண்ணு வயற்றுவலில இறந்திடிச்சினு அவ புருஷன மிரட்டி சொல்ல வச்சிருக்காங்க .

மூணாவது , பவித்ரா இவங்க தன்னோட புகுந்தவீட்ல ரொம்ப கொடுமைப்படுத்துனதுனால தற்கொலை பண்ணிகிட்டாங்கனு போலீஸ் பைல்லே இருக்கு ...ஆனா பாஸ்... விசாரிச்சதுல இவங்க புகுந்தவீட்டுகாரங்க ரொம்ப அப்பாவிங்க , இந்த பொண்ணு தான் அவங்கள கொடும பண்ணிருக்கும் போல குழந்தை பொறந்தா அழகு போயிடும்னு சொல்லிட்டு இருந்த பொண்ணு கர்ப்பமான அப்போ அந்த குழந்தையை அழிகிறதுக்கு என்ன என்னமோ பண்ணிருக்கு. ஆனாலும் அவங்க புருஷன் சம்மதிக்காததுனால ஒன்னும் பண்ண முடில.. அப்போல இருந்தே குழந்தை மேல வெறுப்பு அதிகமாகி பிறந்த குழந்தைக்கு பால் கூட கொடுக்காம இருப்பாங்களாம் ஒரு நாள் வீட்ல யாரும் இல்லாதப்ப இப்டி தான் நடந்துருக்கு, குழந்தைக்கு அழுத்தழுது வலிப்பு வந்து இறந்துருக்கு .

இவன் சொல்வதை அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த அரசு நடுங்கிய குரலில் என்னடா சொல்லுற அந்த கு..குழந்தை ...எப்படிடா பெத்த தாய் இப்படி பண்ணுவாங்க சே...இதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் தன் குழந்தைக்காக இறந்தாங்கன்னா இந்த பொண்ணு தானே தன் குழந்தைய கொன்னுருக்கு.. ஆம் முகில் , என்ன பொறுத்தவரைக்கும் இது கொலை தான் .ஆனா நீ சொல்றத பார்குறப்ப முன்னாடி ரெண்டும் தற்கொலைனு ஒத்துக்கிட்டாலும் , இந்த பொண்ணு மட்டும் தற்கொலை பண்ணியிருப்பான்றது நம்ப முடிலயே .

முகில் , சரிதான் பாஸ் இந்த பொண்ணோட அப்பா *****கட்சியை சேர்ந்தவராம் அவர் தன் பொண்ணு பேர கெடுக்க கூடாதுனு அவ புகுந்தவீடுமேல கேச திருப்பி விட்ருக்காரு .

அரசு , ம்ம்ம் சரி மீதி ரெண்டு கேஸ் என்னாச்சி ??

முகில், நாலாவது கவிதா இவங்க கேஸ்ல போலீஸ் பைல்ல இருக்கிறது சரி தான் பாஸ் . குழந்தை விளையாடும்போது அங்கிருக்க தண்ணித்தொட்டில விழுந்துருக்கு... இவங்க குழந்தை வெளிய விளையாடுதுனு நினைச்சி வீட்டுக்குள்ள வேலையா இருந்திருக்காங்க .குழந்தை சாவுக்கு காரணம் தன் கவன குறைவு தான்னு நினைச்சி இப்டி ஒரு முடிவு .


கடைசியா மிஸஸ்.சுஜீத்ரா சுரேந்தர் இவங்க குழந்தையும் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் காணாம போயிருக்கு .அந்த குழந்தையை பத்தி போலீஸ் விசாரிச்சிட்டு இருக்காங்க பாஸ் .

அரசு , டேய் நீ சொல்றதெல்லாம் கேக்கறப்போ எனக்கே இதுலாம் தற்கொலை தானான்னு சந்தேகம் வந்துடிச்சி .ஆனா அந்த மூணாவது பொண்ணு , அப்றம் அந்த காயங்கள் அது தான் இடிக்குது .

சிறிது நேரம் யோசித்த அரசு , அப்போ இந்த கொலைகளுக்கும் அவங்களோட குழந்தைகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு சொல்ற ரைட் .
ஓகே முகில் இப்போ நம்ப கேச எப்படி மூவ் பண்ணனும்னு உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் .நடக்கிறது கொலையா இருந்தா இதெல்லாம் செய்யுறவன் யாருனு நம்ப கண்டு பிடிச்சே ஆகணும் . அவன் இனியும் இத தொடருவான்னு என் உள்மனசு சொல்லுது .... முகில் நீ சொன்னமாதிரி இந்த கொலைகளெல்லாம் இணையுற புள்ளி குழந்தையா இருகுற பட்சத்துல இதுவரைக்கும் காணாம போன அத்தனை குழந்தைங்கள பத்தின பைலும் சரியா இருபத்திநாலு மணி நேரத்துகுள்ள என் டேபிள்க்கு வந்தாகணும் .காமன் குயிக் ....நம்ப கிட்ட அதிக நேரம் இல்ல .முக்கியமா போன வாரத்துல காணாம போன குழந்தைகள பத்தின டீடெயில்ஸ் இன்னும் ரெண்டு மணி நேரத்துல எனக்கு தெரிஞ்சாகணும் .

முகில், பாஸ் அது என்ன ஒரு வார கணக்கு .

புன்னகைத்த அரசு, முகில் இந்த கேஸ்ல நீ முக்கியமானது குழந்தைகள்னு சொன்னல அதுல இதையும் சேர்த்துக்கோ ...ஒரு வாரம் ....இந்த ஐந்து கேஸ்லையும் அந்த குழந்தைங்க காணமாவோ இல்ல இறந்தோ போய் சரியா ஒரு வாரத்துல அந்த குழந்தையோட அம்மாக்கள் அந்த ஏரில நமக்கு பிணமா கிடைச்சிருக்காங்க .இதுவரைக்கும் நடந்தது எல்லாம் கொலையா இருந்தா அந்த கொலைகாரன் அடுத்து யாரை கொல்லணும்னு இந்நேரம் முடிவெடுத்துருப்பான் . ஸோ அவன் கொல்றதுக்கு முன்னாடி அது யாருனு நம்ப கண்டுபிடிச்சாகனும்.

முகில் , பாஸ் இப்போ தான் புரியுது நீங்க ஏன் எனக்கு பாஸா இருக்கீங்கன்னு ...இத நான் யோசிக்கவே இல்ல இப்பவே எல்லா போலீஸ் ஸ்டேஷன்க்கும் இன்போர்ம் பண்ணிட்றேன் .

.................................................................



சென்னையின் ஏதோ ஓர் மூலையில் உள்ள வீட்டினின் உள்ளே ,, எட்டு மாத குழந்தையை தன் மடியில் கிடத்தி அதன் நெஞ்சை நீவி கொண்டிருந்தவனின் விழிகளில் பாசம் வழிந்தது . அக்குழந்தையை தூக்கி தன் மார்போடு அனைத்து கொண்டவனின் இதழ்கள் என்றோ கேட்ட ஒரு பாடலை இன்று முனுமுனுத்தது .

" யாரோடு யாரோ

இந்த சொந்தம் என்ன பேரோ
நேற்று வரை நீயும் நானும்
யாரோ யாரோ தானோ
ஒர் ஆளில்லா வானில்
கருமேகங்களின் காதல்
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ
வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ
இது என்ன மாயம்
சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ
நதி வந்து கடல்மீது சேரும்போது
புயல் வந்து மலரோடு மோதும்போது
மழை வந்து வெயிலோடு கூடும்போது
யாரோடு யாருமிங்கே
(வஞ்சம் கொண்ட நெஞ்சம்)
இதயங்கள் சேரும்
நொடிக்காக யாரும்
கடிகாரம் பார்ப்பது இல்லையே
நீரோடு வேரும்
வேரோடு பூவும்
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே
ஓர் உறவும் இல்லாமல்
உணர்வும் சொல்லாமலே
புது முகவரி தேடுதோ
வாய்மொழியும் இல்லாமல்
வழியும் சொல்லாமல்
பாசக்கலவரம் சேர்க்குதோ
ஒரு மின்மினியே
மின்சாரத்தை தேடிவரும்போது
என்ன நியாயம் கூறு
விதிதானே
பறவைக்கு காற்று…"



பாசம் அது உறவுமுறையில் வருவதல்ல...

என்மடியின் பாதுகாப்பை உணர்கையில் நீயும்....
உன்னை உரிமையாய் என் நெஞ்சம் சாய்க்கும் வேளையில் நானும்...
உணர்ந்துகொள்வதே

அது!!!



இன்று பாசத்தில் பளப்பளக்கும் கண்களா அன்று வேட்டையாடும் சிறுத்தையாய் பளபளத்தது ???

------------------------------------------
 

Thoshi

You are more powerful than you know😊❤
காண்பவர் அனைவரையும் ரசிக்க வைக்கும் சிரிப்பு ஒன்று உண்டெனில் அது மழலையின் சிரிப்பு மட்டுமே....


ஏரிக்கரை 6 :

குழந்தையை தன் தோளில் சாய்த்து தூங்க வைத்தவன் அதன் தூக்கம் கலையாதவண்ணம் தூக்கிக்கொண்டு தானிருந்த இடத்திலிருந்து வெகுதூரம் நடந்து சென்றான் . கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த பின்பு நின்றவனின் எதிரே இருந்தது அவ்வில்லம் .
அவ்வில்லத்தின் பெயர் "இறைவனின் நிழல் " . ஆம் அது இறைவனின் நிழல் தான் பல குழந்தைகளுக்கு நிழலாய் இருந்து வருகிறது .தன் கையில் இருந்த குழந்தையை ஒருமுறை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு இல்லத்தின் வாசலில் வைத்தவன் , வாசலின் அருகில் இருந்த பெரிய மணியை ஒரு முறை அழுத்தி அடித்துவிட்டு அவ்விடத்திலிருந்து விரைந்து நகர்ந்துவிட்டான் . கடந்த இரு மாதங்களில் இதேபோல் இரண்டு தடவை நடந்ததை நினைவில் கொண்ட அவ்வில்லத்தின் நிறுவனரான அப்பெண்மணி அவசர அவசரமாக வெளியே வந்து அங்கிருந்த குழந்தையை கண்டவர் சுற்றும்முற்றும் அருகில் எவரேனும் இருக்கிறார்களா என பார்த்தார் . எவருமில்லாததில் அக்குழந்தையை தன்னுடன் அணைத்துக்கொண்டு உள்ளே எடுத்துச் சென்றார் . அக்குழந்தையின் உடலில் இருந்த சிறு சிறு காயங்களையும் அவற்றிற்கு மருந்து இடப்பட்டிருந்ததையும் பார்த்து இதுவும் வழக்கம் தான் என்பதை போல் குழந்தையை சிறிதுநேரம் தடவிக்கொடுத்தவர் அங்கு ஓர் அறையில் ஏற்கனவே இருந்த குழந்தைகளின் அருகில் சென்று இக்குழந்தையை வைத்தார். இக்குழந்தையையும் சேர்த்து அவ்வில்லத்தில் தற்பொழுது 340 பேர் உள்ளனர்.


.................................................

குழந்தையை ￰அவ்வில்லத்தில் விட்டு விட்டு மனம் கனக்க வந்தவனின் கண்கள் வீட்டினுள் நுழைகையில் சிறுத்தையாய் பளபளத்தது .

அவ்வீட்டினுள் நுழைந்தவுடன் பெரியதாய் ஒரு அறை. அதன் மூன்று பக்கமும் கதவுகள் .முதல் அறையின் கதவை திறந்து சென்றான் .அவ்வறையினுள் ஒரு சிறு பல்பு மெல்லிய வெளிச்சத்தை பரவ வைத்திருந்தது . அங்கிருந்த நாற்காலியின் அருகில் சென்று அதில் இருந்த பழைய துருப்பிடித்த பிளேடை எடுத்து ரொம்ப நேரமா உன்ன காக்கவச்சுட்டேன்ல ம்ம்ம்ம் அதுக்கு பதிலா இப்போ உனக்கு ரொம்ப பிடிச்சதை நான் தரப்போறன் என சொல்லிகொண்டே திரும்பினான் .

அருகில் அன்று வெறுமையாய் இருந்த டேபிளில் இன்று ஓர் உருவம் சுயநினைவின்றி படுத்திருந்ததை பார்த்து ...இன்னிக்கு உனக்கான பரிசு இந்த பொம்மை தான் என்ன பாக்குற இந்த பொண்ண பொம்மனு சொல்றானேனா ...பின்ன பொண்ணுனா சொல்ல முடியும் பொண்ணுனா அது நம்ப சாரதாம்மா மட்டும் தான் . சாரதாம்மா அவரின் பெயரை சொல்லும்போதே அவனின் குரலில் அத்தனை அத்தனை மென்மை . அவரை பற்றி எண்ணியதில் இளக தொடங்கிய மனம் அதனுடன் தொடர்ந்த சில நினைவுகளில் இரும்பாய் இருகியது . அவ்வேளையில் அப்பெண்ணிர்க்கு மயக்கம் தெளிவதுபோல் தோன்ற பிளேடு துண்டை மிக வேகமாக சரக் சரக் என அப்பெண்ணின் உடலில் தனக்கு தோன்றிய இடங்களில் எல்லாம் கீறினான் . ரத்தம் சொட்ட சொட்ட இருந்த பிளேடை ஆசையுடன் இதழில் வைத்து அழுத்தி ஆஆஆ இப்போவும் எனக்கு சந்தோஷமா இல்லை என அதை தூக்கியெறிந்தான் ....வெளியே வந்து மற்றொரு கதவை திறந்தவன் அங்கிருந்த வலையில் சிறு இறைச்சித்துண்டை வைத்து அருகில் இருந்த நீச்சல் குளத்தினுள் வீசினான் .அவ்வலை சாதாரணமான மீன் பிடி வலைபோல் அல்லாமல் சற்று பெரியதாய் இருந்தது ....சிறிது நேரம் கழித்து அவ்வலையை இழுத்தவன் அதனுள் நண்டுகள் பல அவ்விறைய்ச்சியை பிய்த்து கொண்டிருந்ததில் ஹாஹாஹா என பயங்கரமாய் சிரித்து, செல்லங்களா ரொம்ப பசில இருக்கீங்களோ உங்களுக்கு தேவையான உணவ இப்போ குடுக்குறன் என்று வலையில் இருந்த நண்டுகளை பிய்த்து திரும்ப அந் நீச்சல் குளத்தினுள் போட்டவன் வெளியே சென்று அப்பெண்ணை தூக்கி வருகையில் அவளின் உடலில் உள்ள கீறல்களின் வலியில் அவள் அம்மயக்க நிலையிலும் துடிப்பதை கண்டவன் ...இது போதாது உனக்கு இது போதாது ... என வெறியுடன் முனங்கி கொண்டே வலையில் அவளை சுருட்டி அந்நீச்சல்குளத்தினுள் எறிந்தான் . சிறிது மயக்கம் தெளிந்த அப்பெண்ணை சூழ்ந்த நண்டுகள் அவளின் கீறல்கள் மூலம் வந்த ரத்தத்தை சுவைத்து அதை கடிக்க ஆரம்பித்தன ..தண்ணியில் மூச்சிற்கு திணறியும் ... நண்டுகள் உடலில் ஒட்டி சதையை பிய்ப்பதில் உண்டான வழியுமென... உயிர் போகும் வலியில் மயக்கம் முழுதாய் தெளியாததால் கத்தகூட முடியாமல் தவித்தாள் . நண்டுகள் அவள் உடலை உயிருடன் பங்கிடுவதற்கு நேரம் கொடுத்தவன் சிறிது நேரம் கழித்து அவ்வலையை மேலே இழுத்தான் . உடலே தெரியாத அளவிற்கு நண்டுகள் அந்த பெண்ணின் உடலை சூழ்ந்திருந்தது ...நிதானமாக ஒவ்வொன்றாய் பிய்த்து எறிந்தவன் உயிர் போகும் வலியில் துடித்து கொண்டிருந்தவளை கண்டு "வலிக்குதா மை டியர் மாதா " என்றவனின் கண்கள் வேட்டையாடிய வெற்றியில் பளபளத்தது . அவளின் சதை பிய்ந்துபோன ரத்தம் சொட்டும் கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டு போய் வெளியில் இருந்த வண்டியின் டிக்கியில் கடாசி வண்டியை மெதுவாக ஏரிக்கரைக்கு செலுத்தியவன் . அவளை எடுத்து எரியுனுள் வீசினான் . ஏற்கனவே உயிர் போகும் வலியை அனுபவித்துக்கொண்டிருந்தவள் நீரினுள் மூச்சிற்கு திணறி சிறிது சிறிதாக தன் உயிர் நீர்த்தாள்.ஒரு சில மணி நேரங்களில் அவளின் உயிரற்ற உடலை மீன்கள் பங்கிட்டுக்கொள்ள ஆரம்பித்தன ...


--------------------------------------------
 

Thoshi

You are more powerful than you know😊❤
ஓராயிரம் பூங்கொத்துகள் தோற்றுப்போகும் மழலையின் ஒற்றை புன்னகையில் ...

ஏரிக்கரை 7 :

அவ்விரவு வேளையிலும் தன் கையில் இருந்த பைலில் ஆழ்ந்திருந்த அரசு அதிலிருந்த இரண்டு முகவரியை மட்டும் தனியாக குறித்துவைத்துவிட்டு நிமிர்ந்தவன் , தனக்கு முன்னாள் இருந்த சேரில் அமர்ந்தவாரே தூங்கி கொண்டிருந்த முகிலை கண்டு சிரித்துகொண்டே அவன் அருகில் சென்று அவனின் தலையை மென்மையாய் கோதி கொடுத்தான் . முகிலிற்கு அரசுவை தவிர வேறுஎவருமில்லை .அரசுவின் இரண்டாம் வயதில் தெருவோரத்தில் மயங்கி கிடந்த முகிலை அழைத்து சென்று சொந்த பிள்ளை போல் வளர்த்தனர் அரசுவின் பெற்றோர் . அன்றுமுதல் அரசுவின் நிழலாய் அவன் என்ன செய்தாலும் அவனிற்கு துணையாய் நிற்கின்றான் . இன்று மாலையில் காணாமல் போன குழந்தைகளின் பைலை கொடுத்த முகில் அவனிடம் , ஏன் அரசு...ஒருவேளை என்னோட அம்மா கூட அந்த பவித்ரா மாதிரி தானோ ...நான் அவங்களுக்கு பிடிக்காம பிறந்து அதுனால என்ன ரோடுல விட்டுட்டாங்களோ .

மிகவும் உணர்ச்சிவசப்படும் வேளைகளில் மட்டுமே பெயர் சொல்லி அழைப்பவனின் குரலிலே அவன் மனம் வருந்துவதை அறிந்தவன் ,

ம்ம்ம் அப்படியும் சொல்லலாம்.... ஆனா முகில் உனக்கு மத்த இறந்து போன பெண்களை நினைச்சாலும் அப்படி தான் தோணுதா என்ன ?? ஒருவேளை அதே மாதிரி ஒரு சூழ்நிலை உன்ன பெத்தவங்களுக்கும் இருந்திருக்கலாம்ல இல்லனா ....அந்த கடவுள் எனக்காக , உன்ன என் கூட சேர்க்கிறதுக்காகவும் இதெல்லாம் பண்ணிர்களாம் ...என்னை கேட்டனா ....கடவுளின் படைப்புலையே மிக சிறந்ததுனா அது தாய் தான் ....சிலநேரங்களில் அது தவறலாம் ஆனா தாயைவிட உன்னத சக்தி இந்த உலகத்துல வேற எதுவுமே இல்லை .முகிலின் தலையை கோதிக்கொடுத்துகொண்டே மாலை நடந்ததை நினைவு கொண்டவன் கடிகாரம் ஐந்து முறை அடித்ததில் களைந்து முகிலை எழுப்பினான் ...

முகில் , என்ன பாஸ் எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க இப்போ தான் அனுஷ்கா கிட்ட வரா.. அது பொறுக்காதே உங்களுக்கு ..

அரசு , டேய் காலையிலயே அசிங்கமா வாங்கி கட்டிக்காத போடா போய் பிரெஷ் ஆகிட்டு வா ....போலீஸ்ஸ்டேஷன் கிளம்பனும் , ரெண்டு குழந்தைங்க வீட்ல இன்ஸ்பெக்டர் வசந்த் அ விசாரிக்க சொல்லி அதுல கிடைக்ற டீடெயில்ஸ் வச்சிதான் கேச மூவ் பண்ண முடியும் .

கனவு கலைந்ததில் முகில் , அவர் கனவுல அனுஷ்கா வராத பொறாமையில எழுப்பிவிட்டுட்டு கடமை கண்ணாயிரம் மாதிரி சீன போடவேண்டிது என வாய்க்குள் முனங்க ..

அரசு , என்னடா அங்க முனங்குற ..

முகில் , உங்க சின்சியாரிட்டி ஆஹ் பத்தி பாராட்டிட்டு இருந்தேன் பாஸ்..

......................................................

காவல்நிலையத்திற்கு வந்த இருவரும் இன்ஸ்பெக்டர் வசந்த்திடம் தாங்கள் கொண்டுவந்திருந்த முகவரிகளை கொடுத்து ,
சார் எங்களுக்கு இவங்க குழந்தைங்க எப்படி காணாம போச்சுன்னு விசாரிச்சு சொல்ல முடியுமா என கேட்டனர் .

வசந்த் , இதுல ஒரு குழந்தை நேத்து தான் கிடைச்சுது சார் ...அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டோம் . ஆனா இன்னொரு குழந்தையோட பேரண்ட்ஸ் கிட்ட இப்போ விசாரிக்க முடியுமா தெரில சார்.

முகில் , ஏன் எதுனால விசாரிக்க முடியாது .

வசந்த் , இப்போ தான் சார் அந்த குழந்தையோட அப்பா வந்தாரு . அவரோட மனைவியை காணோமாம் . மனுஷன் ஏரிக்கரை கேச பத்தி தெரிஞ்சி ரொம்ப பயந்து போயிருக்காரு . கமிஷ்னர் வேற இப்போ என்ன வர சொல்லிருக்காரு ...உங்களுக்கு எதுனா உதவி தேவைபட்டா போன் பண்ணுங்க சார் என அவசரமாய் சொன்னவர் அங்கிருந்த ஏட்டைய்யாவை கூப்பிட்டு , சார் எந்த உதவி கேட்டாலும் செஞ்சுக்குடுங்க ஏட்டய்யா நான் கமிஷ்னர் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு வரேன் என்று வெளியே சென்றுவிட்டார் .

அதுவரை அமைதியாய் இருந்த முகில் , பாஸ் என்ன அமைதியா இருக்கீங்க அந்த கொலைகாரன் தான் கடத்திற்கனும் ...நீங்க சொன்னமாதிரியே நாளையோட ஒரு வாரம் பாஸ் அவன் அவங்கள கொல்லறதுக்குள்ள நம்ப அவனை கண்டுபிடிச்சாகனும் .

பட்டென்று எழுந்தவன் , கமான் முகில் அத்தனை போலீஸ் ஸ்டேஷன்க்கும் தகவல் சொல்லு ஏட்டய்யா எல்லா செக் போஸ்ட்டையும் அலர்ட் பண்ணுங்க குயிக் .

வெளியே செல்ல திரும்பிய அரசு ...அங்கிருந்த கான்ஸ்டபில் மற்றொருவரிடம் பேசியதில் சட்டென்று திரும்பி அவரிடம் சென்றவன் .

என்ன சொன்னிங்க ??? உங்கள தான் இப்போ என்ன சொன்னிங்கனு கேட்டேன் ...

வெளியே சென்றவன் சட்டென்று நின்றதிலே அவனை பார்த்தவர் அவனின் இக்கோபக்குரலில் ...

சார் ....அது நீங்க செக் போஸ்ட் அலர்ட் பண்ண சொன்னிங்களா ...நேத்தே அவங்க காணாம போயிருந்தா இப்போ அலெர்ட் பண்ணறதுனால எப்படி கண்டுபிடிக்க முடியும்னு .... சார் ...சார் சு...சும்மா தா...தான் சொன்னேன் சார் .

அரசு முகிலை பார்க்க அருகில் வந்தவன் அவரிடம் ....நீங்க எப்படி அவங்க நேத்து காணாம போயிருப்பாங்க சொல்றிங்க ....அவங்க ஹஸ்பன்ட் இப்போ தான கம்ப்லைன் குடுத்தாரு .

அவர் , சார் யார் சார் இப்போ சம்பவம் நடந்தவுடனே நம்ப கிட்ட கம்ப்லைன் குடுக்கிறாங்க . ஒரு நாள் முழுக்க அமைதியா இருந்துட்டு அப்பறம் தான் நம்ப கிட்ட வராங்க சார்.. அதுனால தான் நிறைய கேஸ் அப்படியே நிக்குது . இவரே போனவாரம் குழந்தைய காணோம்னு முழுசா ஒரு நாள் போனப்பறம் தானே வந்து சொன்னாரு .

அமைதியாய் அவர் பேசியதை கவனித்துக்கொண்டிருந்த இருவரும் கடைசி வரியில் என்னதுஉஉ என கத்திவிட்டனர் .
.

ஷிட் இத ஏன் முன்னடியே சொல்லல... கம்ப்லைன் குடுத்த அந்த ஆள உடனே ஏரிக்கரைக்கு வர சொல்லுங்க என சொல்லும்போதே சரியாய் அங்கிருந்த தொலைபேசி அலறியது .

அரசுவும் முகிலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர் .

போனை எடுத்து பேசியவர் இவர்களிடம் , சா...சார் ....அந்த ஏரிக்கரைல இன்னொரு பொணம் கிடக்குதாம் சார் .


ஆம் அதே ஏரிக்கரை தன்னுடைய ஆறாம் பிணத்துடன் ........



----------------------------------------------
 

Thoshi

You are more powerful than you know😊❤
செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு .....

ஏரிக்கரை 8 :

அரசுவும் ,முகிலும் ஏரிக்கரைக்கு சென்றபோது போலீசார் சொன்ன தகவலின்படி அங்கு ஏற்கனவே வந்திருந்த அப்பெண்ணின் கணவர் அப்பிணத்தின் கிழிந்த உடையை கண்டு அது தனது மனைவி தான் என அடையாளம் காட்டியவர் , குழந்தை காணாமப்போனதுல இவ இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லயே சார் ...நான் அழும்போது கூட அவ தன் துக்கத்தை மறைச்சிகிட்டு என்னை தேத்துனா சார்... குழந்தை கிடைச்சுடும்னு நம்புறானு தான நினைச்சேன் இப்படி என்ன தனியா விட்டுட்டு போவான்னு நினைக்கலயே என கதறினார். அவரின் கதறலில் சுற்றிஇருந்தோர்களின் மனமும் கலங்கியது .

அங்கு வந்திருந்த வசந்த் ,ச்சோ ...இதே வேலையா போச்சி ...வரவர இந்த ஏரி தற்கொலை பண்ணிக்கிற இடமாவே மாறிடிச்சி என சலிப்புடன் கூறியதை கேட்டு பதிலுக்கு பேசபோன முகிலின் கைபிடித்து தடுத்த அரசு , டேய் இப்போ எதையும் பேசாத ... தேவையில்லாம இங்க இருக்க மக்களோட மனசுல பயத்தை உருவாக்க வேண்டாம். எதுவா இருந்தாலும் ஸ்டேஷன் போய்ட்டு பேசிக்கலாம் .

முகில் , ஆனா பாஸ் .

அரசு , முகில்ல் ...நீ இப்போ இவங்க கூடவே போயிட்டு போஸ்ட்மார்ட்டம் சீக்கிரம் பண்ண வச்சு ரிப்போர்ட் வாங்கிட்டு வா.

முகில் , போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட் எல்லாம் உடனே தர மாட்டாங்க பாஸ் .

அரசு , அதுக்குதான் உன்ன போ சொல்றேன் எதாவது பண்ணி சீக்கிரம் ரிப்போர்ட் வாங்கிட்டு வா .

முகில் , எஸ் பாஸ் எனக்கும் அந்த காயங்களை பத்தி தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு .நான் போய் ரிப்போர்ட் வாங்கிட்டு வரேன் .

அரசு , சீக்கிரம் கண்டுபிடிக்கனும்அடுத்து அவன் யாரையும் கொல்லறத்துக்கு முன்னாடி முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமே கண்டுபிடிக்கணும் .

.................................................

இரண்டு மணி நேரங்களுக்கு பின்பு :

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அரசவிடம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டை குடுத்த முகில் , பாஸ் ரிப்போர்ட் வந்துருச்சு ஆனா இதுவரைக்கும் என்ன எழுதியிருந்ததோ அதேமாதிரிதான் இதுலயும் இருக்கு . அந்த காயங்கள் மீன்கள் கடிச்சதுனு தான் இருக்கு .

வசந்த் , அது மீன்கள் கடிச்சதுதான ....அப்போஅதான ரிப்போர்ட்ல வரும் .

முகில் , வசந்த் சார் அந்த ஏரில மீன்கள் மட்டும் தான் இருக்கா ?

வசந்த், அது முகில் சார் பொதுவா ஏரினா மீன் , நண்டு , நத்தை, குட்டிக்குட்டி புழு பூச்சிகள்லாம் நிறைய இருக்கும் ஆனா இந்த ஏரில ரெண்டுவருஷத்துக்கு முன்னாடி ***** கட்சிக்காரங்க தண்ணில ஏதோ கலந்ததுல மொத்தமா எல்லாம் செத்து போய்டிச்சி நீங்க பேப்பர்லலாம் படிச்சிருப்பிங்க . அதுக்கப்றம் இப்போ அந்த ஏரில வெறும் மீன்கள் மட்டும் தான் இருக்கு .

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை படித்து கொண்டே இவர்கள் பேசுவதை ஒரு காதில் கேட்டுக் கொண்டிருந்த அரசு , வசந்த் கடைசியாய் சொன்னதை கேட்டு ரிபோர்டின் பக்கத்தை திருப்பியவனின் கண்கள் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது .

பின் வசந்த்திடம் , ஏன் வசந்த் சார் அந்த ஏரில மீன்கள் மட்டும் தான் இருக்குனு உங்களுக்கு நல்லா தெரியுமா ?

வசந்த்....எஸ் சார் கடந்த வருஷம் கூட நீர்வளத்துறைன்னு சொல்லிக்கிட்டு ஒரு கூட்டம் வந்து ஆராய்ச்சிலாம் பண்ணி சொன்னாங்களே .

தன் கையிலிருந்த ரிப்போர்ட்டை முன்வைத்து ஒரு குறிப்பிட்ட வரியை சுட்டிக்காட்டியவன் ... இதுல போட்டிருக்கிறத நீங்க ரெண்டு பேருமே கவனிக்கலையா மீன்களும் நண்டுகளும் கடித்த தடம் அந்த உடல்ல இருக்குனு போட்டிருக்கு .

வசந்த் , ஆனா சார் இதுக்கு வாய்ப்பே இல்லையே ...

முகில் , சொப்ப்பா இந்த ஏரிக்கரை நம்பள போட்டு ரொம்ப டார்ச்சர் பண்ணுது என புலம்ப அந்த நேரத்தில் இவர்களுக்காக டீ எடுத்துக்கொண்டு உள்ளே வந்த ஏட்டைய்யா , சார் எனக்கு 25 வருஷத்துக்கு முன்னாடியே ஒருதடவை இப்படி தோணிச்சி ஏரிக்கரை கேஸ் முடியாதோன்னு ....அந்த ஏரிக்கரை பக்கம் தான் என் வீடு ஆனா அத பாக்க பிடிக்காமா தினமும் சுத்துவழியா வரேன் சார் .ஆனா என்னமோ இந்த ஆறு மாசமா ஏரிக்கரை ஏரிக்கரைனு மட்டும் தான் காதுல விழுது எல்லாம் என் தலையெழுத்து என சலித்துகொண்டே வெளியேறினார் .

வெளியேறியவரை கண்ட அரசு , வசந்த் கொஞ்சம் அவர வர சொல்லுங்க என்றான்

உள்ளே வந்த அவரிடம் வாங்க சார் ...ஏன் நீங்க அப்படி சொன்னீங்க 25 வருஷத்துக்கு முன்னாடி ஏதாவது இதே மாதிரி நடந்துதா என்ன ?

அவர் , இதே மாதிரி இல்ல சார் அது வேற ஒரு கேஸ் .

அரசு முகிலை பார்க்க அவன் , ஏட்டய்யா அந்த கேச பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா ??? அது என்ன கேஸ் ??

அவர் , ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி இருக்கும் சார் ... நான் அப்போ இந்த ஸ்டேஷன்ல கான்ஸ்டபிள் அ இருந்தேன் . ஒருநாள் காலையில் கணவன் மனைவி ரெண்டுபேர் குழந்தையைக் காணோம் கம்பளைன் குடுக்க வந்தாங்க சார் ....

காலைல ஒரு நாளு மணி போல அவங்க வீட்டுல கரண்ட் போனதாகவும் , கதவை துறந்து வச்சிட்டு தூங்குனவங்க எழுந்துபாக்கும்போது குழந்தையை காணோம்னும் கம்ப்ளைன் ல எழுதி குடுத்தாங்க சார் . அப்போ இருந்த இன்ஸ்பெக்டர் இந்த கேச எப்படியாவது கண்டுபிடிக்க நினைச்சாரு சார் . அவங்க வீட்டு பக்கத்துல இருக்கவங்கள விசாரிச்சதுல கரண்ட் போனது உண்மை தான்னு சொன்னாங்க ஆனா ரெண்டு பேர் அந்த நேரத்துக்கு ஒரு பொண்ணு தலையில முக்காடு போட்டு கைல குழந்தையோட போனதாவும் அது அந்த குழந்தையோட அம்மா மாதிரி இருந்ததாகவும் சொன்னாங்க .

இடைமறித்த முகில் , கரண்ட் இல்ல சொல்றிங்க அந்த நேரத்துல அவ்ளோ வெளிச்சமும் இருந்துருக்காதே அப்றம் எப்படி அது அந்த குழந்தையோட அம்மானு அவங்க சொல்றாங்க .

அரசு , இருட்டா இருந்தா என்ன முகில் ...நம்பளுக்கு நல்லா தெரிஞ்சவங்கள நிழலுருவத்தை வச்சே கண்டுபிடிக்கலாம். நீங்க மேல சொல்லுங்க ஏட்டைய்யா .

அவர் , முகில் சார் கேட்டதா தான் அப்போ இருந்த இன்ஸ்பெக்டரும் யோசிச்சாரு .அதுனால அவர் நேரடியாவே அந்த பொண்ண விசாரிச்சப்போ முன்னுக்கு முரணா பதில் சொன்னதுல சந்தேகப்பட்டு ஸ்டேஷன் கூட்டிட்டு வந்தோம் . அப்பரும் லேடி கான்ஸ்டபிள் வச்சி விசாரிக்கும் போது தான் சார் அந்த பொண்ணு பண்ண அந்த கொடூரமான வேல தெரிஞ்சிது .

சொன்னவர் சிறிது நேரம் அமைதியாய் இருந்தார் அந்த சிறுஇடைவெளியை கூட பொறுக்க முடியாமல் வசந்த் , ஏட்டைய்யா நடுவுல இப்படி நிறுத்துனா எப்படி ....சொல்லுங்க என்னாச்சி ?? குழந்தை கிடைச்சிதா ??

பெருமூச்சிவிட்டவர் ,அந்த பொண்ணுக்கு ரொம்ப சின்ன வயசுலையே கல்யாணம் பண்ணிவச்சிருக்காங்க சார் அவங்க வீட்ல. ரொம்ப பலவீனமா இருந்ததால ரெண்டு வாட்டி குழந்தை உருவாகியும் தங்கல ...மூணாவதாதான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த குழந்தைய பெத்துற்கு ....ஆனா அதுகப்றமும் அந்த குழந்தைக்கு பால் குடுக்கும்போது வலிதாங்க முடியாம இருந்ததுல டாக்டர் ஆஹ் பாத்து மருந்து வாங்கிட்டு வந்துருக்கு. ஆனா அவங்க வீட்ல இருக்கவங்க மருந்து சாப்பிட்டா குழந்தைக்கு சேராதுனு சாப்பிட விடாம பண்ணிர்காங்க...ஒவ்வொரு தடவையும் வலிரொம்ப அதிகாமானதுல சொந்தகாரங்க கிட்டலாம் குழந்தைய தத்தெடுத்துக்க சொல்லி கெஞ்சிருக்கு....அந்த பொண்ணு பெத்தவங்களும் பொண்ணுனா இதுலாம் சகஜம்னுன்னதுல... யாருமே நம்ப வலியை பார்கலை அதுக்கு அந்த குழந்தை தான் காரணம்னு அன்னிக்கு அவங்க வீட்ல கரண்டு போன நேரத்துல குழந்தைய தூக்கிட்டுப்போய் அந்த ஏரில போட்டுட்டு ஒண்ணும் தெரியாதமாதிரி குழந்தையை காணும்னு புருஷன் கூட சேர்ந்து கம்பளைன் பண்ணிற்கு சார் .

இதெல்லாம் கேட்டு ஒரு நொடி எங்க நெஞ்சம் எல்லாம் பதறி போச்சி சார் ....அவசரஅவசரமா கிளம்புன இன்ஸ்பெக்டர் கூடவே நாங்க எல்லோரும் போனும் ...ஆனாஎவ்ளோ தேடியும் அந்த குழந்தை கிடைக்கவே இல்ல ..அதுகப்ரும் அந்த ஏரிக்கரைய பார்த்தாலே அந்த குழந்தை நினைவு தான் என சொல்லியவர் சோக பெருமூச்சுவிட்டார் .

முகில் , ம்ம்ம் அந்த குழந்தை ரொம்பவே பாவம்ல அரசு என்றவன் அவனின் சிந்தனை முகத்தை கண்டு பாஸ் ....பாஸ் என்னாச்சி ...

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாதவன் , அவரிடம் ஏன் ஏட்டைய்யா அந்த குழந்தை உயிரோட இருக்க எதுனா வாய்ப்பிருக்கா .

அது எப்படி என தொடங்கிய முகிலை தடுத்தவன் , நீங்க சொல்லுங்க ஏட்டய்யா அப்படி நடக்க வாய்ப்பிருக்கா .

சிறிது நேரம் யோசித்தவர் , உடம்பு எதுவும் கிடைக்கலையே சார் அதுனால அதுக்கும் வாய்ப்பிருக்கு . ஆனா, சார் இப்போமாதிரி அப்பஇந்த ஏரிக்கரை இல்லை சார் . இப்போ வெறும் மீன் மட்டும் தான் அதுல இருக்கு. அப்போ என்னென்னமோ இருந்திச்சி குழந்தை தண்ணில விழுந்திருந்தா பொழைச்சிருக்க வாய்ப்பில்லை சார் .

அரசு , சரிங்க ஏட்டய்யா ரொம்ப நன்றி ....வசந்த் சார் எனக்கு அந்த கேஸ் பைல் கிடைக்குமா .

வசந்த், நிச்சயம் சார் நான் பாக்க சொல்றேன் என அவ்விடத்தை விட்டு சென்றான் .

இப்போ அந்த அறையில் அரசுவும் முகிலும் மட்டுமே இருந்தனர் .

முகில் , பாஸ் இப்போ இருக்க கேஸையே முடிக்கல நீங்க எதுக்கு அந்த கேஸ கேக்குறீங்க .

அரசு , ஏன் முகில் ஒரு வேளை அந்த குழந்தை நீயா இருந்தா ...உனக்கு இப்டிலாம் நடந்துருக்குனு தெரியவந்தா நீ என்ன பண்ணுவ .

முகில் , யோசிக்காம சொல்லட்டுமா ....நான் மட்டும் போலீஸா இல்லாம இருந்தா அவங்க எங்க இருக்காங்கனு கண்டுபிடிச்சி கொல்லநினைப்பேன்.

அரசு , ம்ம்ம் தட்ஸ் இட்.

முகில் , பாஸ்ஸ்ஸ்ஸ் .

அரசு , ஆமா முகில் ஏன் அந்த குழந்தை உயிரோட இருக்கக்கூடாது ?? நீயே யோசிச்சி பாரு ...இந்த எல்லா கொலையிலையும் குழந்தையை சரியா பாத்துக்கலைனு வருதா. அதுமட்டுமில்லை அவங்க எல்லோருமே வேற வேற ஊர சேர்ந்தவங்க அவங்களுக்கும் அந்த ஏரிக்கரைக்கு என்ன சம்பந்தம் இருக்க போகுது அவங்களுக்கு சம்பந்தம் இல்லனா அந்த கொலைகாரனுக்கு தான அது சம்பந்தமா இருக்கணும் ???

முகில், எஸ் பாஸ் ...அப்போ நம்ப அடுத்த கட்ட நடவடிக்கை என்ன பாஸ் ...

அரசு , முதல அந்த கேஸ் பைலை பார்க்கணும் ...அப்றம் அந்த ஏரிக்கரைக்கு போகணும் ....நண்டுராஜா வேற எங்க இருந்து வந்தாருனு தெரிஞ்சிக்கணுமே என்றான் .


ஆம் எங்க தொலைச்சமோ அங்க தான தேடணும் ....



----------------------------------------------
 

Thoshi

You are more powerful than you know😊❤
பூக்களும் கற்றுகொள்கிறது மென்மையை மழலையிடம்......

ஏரிக்கரை 9 :

பைல் வந்தவுடன் அதை முகிலிடம் கொடுத்த அரசு , டேய் இந்தா படிச்சு உனக்கு என்ன தோணுதுனு பாரு என்றவன் சிறிது நேரம்
கழித்து , முகில் ....அத பாத்து முடிச்சாச்சுனா நம்ப ஏரிக்கரைக்கு கிளம்பலாம் .

முகில் , எஸ் பாஸ் ...ஆனா பாஸ் ...அங்க போய் என்ன தேட போறீங்க .

அரசு , யாருக்கு தெரியும்.

முகில் , பாஸ் ....

அரசு , டேய் வாடா இங்க வெட்டியாதான இருக்க போற ... ஏதோ என் உள் மனசு சொல்லுது அங்க போய் பார்னு... போய்தான் பார்ப்போமே .

முகில் , நல்லா சொல்லுச்சு உங்க உள்மனசு என முனங்க ....
என்னடா அங்க முனங்குற என அரசு கேட்டதற்கு , ஹீஹீ ஒண்ணுமில்ல பாஸ்...உங்க உள்மனசு எம்புட்டு அறிவா சொல்லுதுன்னு புகழ்ந்தேன் பாஸ் என்றவன் ..சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாம வாங்க கிளம்பலா...என பேச்சை மாற்றினான் .

....................................................

உச்சிக்கு பொழுதில் ஏரிக்கரைக்கு கூட்டி வந்த அரசுவிடம் முகில் , பாஸ் நம்ப அப்பத்தா மேல உங்களுக்கு பாசமே இல்லை...அதான் அவங்க சொன்னதெல்லாம் மறந்துட்டீங்க போல என பொய்யான கோபத்துடன் கூறினான் .

அரசு , டேய் அடிவாங்காம என்னன்னு தெளிவா சொல்லு. நம்ப அப்பத்தா என்ன சொல்லுச்சு ?? நான் என்னை மறந்தேன் ??

முகில் , அதான் பாஸ் அப்பத்தா நம்ம கிட்ட உச்சிப் பொழுதில் யாரும் இல்லாத இடத்துக்கு போக கூடாதுன்னு சொல்லி இருக்குல... என்னை மாதிரி அழகான பையன பார்த்தா மோகினி பிசாசு வந்து கூடவே கூட்டிட்டு போய்டுமாம் ...அச்சச்சோ பாஸ் இதுக்கு எதுக்கு அம்மாம் பெரிய கல்ல தூக்குறிங்க மீ பாவம்.

அரசு , என் வாயில நல்லா வந்துறும் சொல்லிட்டேன் ...எருமை எருமை போய் ஒழுங்கா தேடுடா என சொல்லி தனியாகச் சென்று தேடத் தொடங்கினான் .

முகில் , என்னைத்த இவரு உத்து உத்துபாக்கறாரு என முனகியவனுக்கு சட்டென்று ஞாபகம் வந்தது.....பாஸ் உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? 25 வருஷத்துக்கு முன்னாடி இந்த நாளில் தான் அந்த குழந்தையை அந்த அம்மா இங்க தூக்கிப் போட்டார்களாம் .

அரசு , பைல்லே பார்த்தேன் டா ...அப்போல இருந்துதான் இந்த இடத்துல ஏதோ கிடைக்கபோதுன்னு தோணிட்டே இருக்கு .நிச்சயமாக ஏதாவது கிடைக்கும் தேடு .

முகில் , ம்ம்ம்க்கும் தேடு தேடுன்னு
சொல்றாரு ஆனா எத தேடனும்னு சொல்றாரா ?... ஆமா 25 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன குழந்தை திரும்ப இப்போ கிடைக்க போகுதா என்ன ... சரி பாஸ் சொன்னதுக்காகவாது குத்துமதிப்பா எதையோ தேடுவோம் என புலம்பிகொண்டே எத தேடறதுனே தெரியாம தேடிட்டியிருந்தான் முகில் .

வெளியே திட்டினாலும் அவனின் பேச்சை இதழில் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த அரசு , தூரத்தில் ஒருவர் ஏரிக்கு அருகில் வருவதைக் கண்டு உற்றுப் பார்த்தான் .

40 வயதிருக்கும் என எண்ணும்படியான தோற்றத்துடன் கைகளில் வலை எடுத்து வந்த அவரைக் காணும்பொழுதே மீன் பிடிக்க வந்தவர் என தெரிந்தது .

அருகில் வந்த பின்பே இவர்கள் இருவரையும் கண்டவர் தயங்கி தம்பிங்களா யாரு நீங்க ? என்ன பண்றிங்க இங்க ?

பதில் சொல்ல போன முகிலை கண்களால் தடுத்தவன் ...நாங்க சும்மா இந்த ஊரை சுத்தி பார்க்க வந்தவங்க பெரியவரே, இந்த வழியா போகும்போது ஏரிய பார்த்தோம் சரி கிட்ட வந்து பார்ப்போமேனு வந்தோம் ...நான் அரசு இவன் என் நண்பன் முகில் ....உங்க பேர் என்ன பெரியவரே ?

என் பெயர் ஜோசப் தம்பி , நான் மீன்பிடி வேலை செய்யறவன். சரி தம்பி நீங்க பாருங்க என்றவர் சற்று தள்ளி சென்று அங்கிருந்த மரத்தின் கீழ் தன் கையிலிருந்த வலையை வைத்துவிட்டு அதன் அருகிலேயே அமர்ந்து அந்த ஏரியை கண்களில் சொல்லமுடியா உணர்வுடன் பார்த்திருந்தார் .

இவரின் செய்கையை பார்த்துக்கொண்டிருந்த முகிலும் அரசுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள முகில் அவரிடம் ....பெரியவரே என்ன இப்படி உட்கார்ந்துடீங்க ...மீன் பிடிக்கலையா ஒருவேளை நாங்க இருக்கிறது தொந்தரவா இருக்கா?

ஜோசப் , அச்சோ அப்படியெல்லாம் எதுவும் இல்ல தம்பி.அது நான் இப்போ மீன்பிடிக்க வரல இந்த ஏரியை பாக்கத்தான் வந்தேன் . என்ன தம்பி இப்படி பார்க்கிறீங்க நீங்க எதுக்கு பார்க்குறீங்கன்னு புரியுது . வருஷம் வருஷம் நான் எங்க இருந்தாலும் இந்த நாள்ல இங்க வந்துஉட்கார்ந்துட்டு போவேன் தம்பி . அதில எனக்கு ஒரு திருப்தி ....

அரசு , பெரியவரே நீங்க சொல்றத பார்த்த ஏதோ விஷயம் இருக்கும்போல ... என்ன விஷயம்னு எங்களுக்கு முழுசா சொல்லுங்களேன்.

ஜோசப் , எதுக்குப்பா உங்களுக்கு அந்த கதைலாம் ....நீங்கபோய் சுத்தி பாருங்க .

முகில் , நாங்க எல்லாம் பார்த்துட்டோம் பெரியவரே நீங்க சொல்லுங்களேன் .

இரண்டுபேரும் வற்புறுத்த அவர் சொல்ல தொடங்கினார்

ஒரு இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால நடந்தது தம்பி . அப்போ எல்லாம் இந்த ஏரியில் மீன், நண்டு, நத்தைனு நிறைய இருக்கும் . அதுவும் இந்த ஏரி நண்டுகளுக்கு தனி கிராக்கி . வழக்கம் போல ஒரு நாள் நண்டுபிடிக்கதற்காக வலையை வீசிட்டு கயிற இந்த மரத்தில்தான் கட்டிட்டு போனேன் . ஒரு ஒருமணி நேரம் கழிச்சு வந்த போது வலை ரொம்ப எடையாய் இருக்கே இன்னைக்கு நிறைய நண்டு சிக்கி இருக்குன்னு நினைச்சு மேலே இழுத்து பார்த்தப்போ ஒரு நிமிஷம் என் உடம்புல இருக்க ரத்தம்லாம் உறுஞ்சி போயிடுச்சு தம்பி .

இருவரும் என்னாச்சு என பதற ...

ஜோசப் , அந்த வலையில் ஒரு குழந்தை இருந்திச்சி .அந்த குழந்தை எப்படி வந்துச்சுன்னு தெரியல குழந்தையோட உடம்பு முழுக்க நண்டுகளா இருந்திச்சி ... அந்த குழந்தையை தன்னுடைய இரையா நினைச்சு கடிச்சிட்டு இருந்துச்சிங்க . பதறி போய்... கஷ்டப்பட்டு ஒன்னொன்னா பிடிச்சு தூக்கி போட்டேன் தம்பி ஆனா அதுக்குள்ள அந்த குழந்தையோட உடம்புல நிறைய காயங்கள் ...அந்த குழந்தை மயக்கமாவேற இருந்திச்சி எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல .... உடம்புல இருந்த ரத்தத்தலாம் துடச்சு விட்டு என்துணியை கிழிச்சி கட்டு போட்டு விட்டேன். என்ன பண்றது எப்படி அந்த குழந்தையை காப்பாத்துறதுனு தெரியாம குழந்தைய தூக்கிட்டு கால் போன போக்கில் நடந்தப்ப தான் அந்த ஆசிரமத்தை பார்த்தேன் .அப்போது இருந்த நிலமைல ஒரு குழந்தையை வளர்க்கிற அளவுக்கு என்கிட்ட வசதி இல்லை அதுவும் குழந்தைக்கு உடனே மறுந்துபோடணுமே , அந்த ஆசிரமத்தில் இருந்தா மருந்தும் போட்டு குழந்தைய நல்லாவும் பார்த்துப்பாங்கனு உள்ள போய் அங்கிருந்த அம்மாகிட்ட அந்த குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அவங்க கிட்ட குழந்தை எப்படி கிடைச்சதுன்னு எல்லாம் சொல்லிட்டேன். அத கேட்டு அந்த அம்மா வருத்தப்பட்டு இனிமே அவங்களே குழந்தைய பார்த்துகிறேன் சொல்லிட்டாங்க .குழந்தை விட்ட உடனே நான் இங்கவந்து அந்த குழந்தையை யார்னா தேடுறாங்களானு பார்க்க வந்தப்ப தான் அந்த குழந்தையோட அம்மாவ பத்தி தெரிஞ்சது... என போன அத்தியாயத்தில் அந்த கான்ஸ்டபிள் சொல்லியதை அச்சுபிசகாமல் இவர்களிடம் சொன்னார்.

அதெல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் ஏனோ அந்த குழந்தையை திரும்ப கொண்டு வருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை தம்பி. அதுக்கப்புறம் ஒரு ஏழு வருஷத்துக்கு அப்புறம்தான் அந்த குழந்தையை பார்ப்பதற்காக போயிருந்தேன் . மத்த குழந்தைங்க மாதிரி இல்லாம ரொம்ப அமைதியா இருந்துச்சு.அந்த குழந்தையை பார்க்கும்போது அவனை நான் எப்படி எடுத்துட்டுவந்தேன்... உடம்பில் இருந்த காயங்களுடன் னு நினைச்சி அவனை பார்த்தபோது அவன் உடம்புல அந்த தழும்புகள் இன்னும் அப்படியே இருந்தது. அந்த துக்கத்தில் அந்த குழந்தை கிட்ட எல்லாத்தையுமே நான் சொல்லிட்டேன் .
அந்த வயசுல அதுக்கு எதுவும் புரியாம என்னையே உத்து உத்து பார்த்துச்சி. அப்புறம்தான் குழந்தைகிட்ட இப்படியெல்லாம் சொல்கிறோமே இனிமே இந்த குழந்தையை கிட்ட இப்டிலாம் சொல்லகூடாது னு கொஞ்சம் கொஞ்சமா பார்க்கிறத நிறுத்திட்டேன்.

ஆனாலும் வருஷம் வருஷம் நான் இங்கு வரும் போது அவனும் என் கூட இருக்குற மாதிரியே இருக்கும் தம்பி என கண்கள் கலங்க கூறினார் .

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த முகிலிடம் நெருங்கிய அரசு , 25 வருஷத்துக்கு முன்னாடி தொலைஞ்சது திரும்ப கிடைக்குமா கேட்டியே கிடைக்க தான் போகுது என்றவன் அவரிடம் பெரியவரே அந்த ஆசிரமம் பெயர் எதுவும் ஞாபகம் இருக்கா.

அவர் , அது தம்பி என்னமோ நிழல்னு வரும் தம்பி ....ஆங் " இறைவனின் நிழல்" அதான் தம்பி அதோட பேரு .

சரிங்க பெரியவரே ரொம்ப நேரம் ஆயிடுச்சு நாங்க கிளம்புறோம் என்று அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர் .

தங்களது பைக்கின் அருகில் வந்தவுடன் முகில் , பாஸ் நம்ப இப்போ எங்க போக போறோம் .

அரசு, அதான் அந்த பெரியவர் சொன்னாரே " இறைவனின் நிழல் " .


....................................................


" காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை அம்மா ....அன்பென்றாலே அம்மா... என் தாய்போல் ஆகிடுமா " - என ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு ஏற்ப ஒரு கையில் தாளம் போட்டுக் கொண்டே காரை ஓட்டி வந்த அவன் ஒரு வீட்டின் முன்பு அதை நிறுத்தி இறங்கிச் சென்று கதவை திறந்தான் .

அன்றொரு நாள் நாம் பார்த்த அதே வீடு . பார்வையில் பட்ட 3 கதவுகளில் மூன்றாவதாய் இருந்த கதவை திறந்து அறையை திருப்தியாய் பார்த்தவன் நிச்சயமா அம்மாவிற்கு இந்த இடம் பிடிக்கும் ...சரி சரி நாம போய் அம்மாவை கூட்டிட்டு வருவோம் என வெளியே வந்தவன் , காரின் பின்பக்கம் சென்று மயங்கிக் கிடந்த அப்பெண்ணிடம்... அம்மா நம்ப வீடு வந்துருச்சு எழுந்திருங்க மா என உலுக்கியவன் . அப்பெண் எழாமல் இருக்க , " ஓகே மை டியர் மாதா " நீங்க நல்லா தூங்கிட்டிங்களா சரி நானே உங்களை கூட்டிட்டு போறேன் என அப்பெண்ணை தன் கைகளில் அள்ளிக் கொண்டு வந்தவன் அவ்வறையில் இருந்த மெத்தையில் அவரை படுக்க வைத்தான் .சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன் ....மா எனக்கு ரொம்ப பசிக்குது உங்களுக்கும் ரொம்ப பசிக்கும்ல நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது சமைச்சு வைக்கிறேன் . நீங்க தூங்கி எழுந்து எனக்கு ஊட்டிவிடனும் நான் உங்களுக்கு ஊட்டிவிடுவேன் ஓகே வா " மை டியர் மாதா " என படுத்திருப்பவளிடம் சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான் .


------------------------------------------------
 

Thoshi

You are more powerful than you know😊❤
அதிசயங்கள் ஏதும் இல்லை ஆனாலும் வியந்து கொண்டே இருக்கிறேன்.... மழலையின் குறும்பில்......


ஏரிக்கரை 10 :

"இறைவனின் நிழல் "

வருபவர்களை வரவேற்பது போல தலை சாய்த்து நிற்கும் பூக்களையும் தலையை அசைத்தவாறு விளையாடிக் கொண்டிருந்த மழலைகளையும் நின்று ரசிக்க நேரமில்லாமல் அங்கிருந்த அலுவலகஅறையினுள் நுழைந்தார்கள் அரசுவும் முகிலும் . அங்கிருந்தது அன்று அக்குழந்தையை எடுத்து சென்ற அப்பெண்மணியே.... அவரே அவ்வில்லநிறுவனர் அவரின் முன்னிருந்த டேபிளில் சாரதாம்மாள் , நிறுவனர் என்ற பெயர் பலகை இருந்தது .

உள்ளே வந்தவர்களை கண்டவர் , வாங்க சார் உக்காருங்க ...இருவரும் அமர்ந்ததும் ....சொல்லுங்க சார் , என்ன விஷயமா வந்திருக்கீங்க ...

அரசு ,மேடம் நான் இன்ஸ்பெக்டர் அரசு... இவர் இன்ஸ்பெக்டர் முகில் ....நாங்க ஒருத்தர பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக வந்திருக்கோம் .

சொல்லுங்க சார் ...யாரை பத்தி தெரியணும் .

அரசு , மேடம் ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி மீனவர் ஒருவர் குழந்தையை கொண்டுவந்து உங்க கிட்ட ஒப்படைச்சதா தெரிஞ்சிது . நாங்க அந்த குழந்தையை பத்திதான் விசாரிக்க வந்தோம் .

சார் ...நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க .... நீங்க எதுக்காக இப்போ அதை பற்றி விசாரிக்க வந்துருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா.

அரசு , நிச்சயமா மேடம் ....அந்தகுழந்தையோட அம்மா தன் தப்ப உணர்ந்துட்டாங்க தப்புக்கான தண்டனையையும் அனுபவிச்சிட்டாங்க .... இத்தனை நாள் தன்னோட மகனை தானே கொன்னுட்டோமோன்னு தவிச்சிட்டு இருந்தவங்க இப்போ தன் பிள்ளை உயிரோட இருக்கிறதாவும் , கண்டுபிடிச்சி தர சொன்னதுனாளையும் இந்த கேச விசாரிச்சு அந்த மீனவரை சந்திச்சோம் . அவர் தான் குழந்தையை உங்க ஆசிரமத்துல விட்டதா சொன்னாரு .

இவன் சொன்னதை கேட்டு பாஸ் என்ன இப்டி அண்ட புளுகு ஆகாச புளுகு புளுகுறாரு என திறந்தவாய் மூடாமல் பார்த்திருந்த முகிலின் தொடையை அழுத்தி கிள்ளினான் .

முகில், ஆஆஆ ....என வலியில் கத்தியவன் சாரதாம்மாள் கவனிப்பதை உணர்ந்து, ஹீஹீ ஆமா அம்மா என்றான் .

சாரதாம்மாள் , அவன் இங்க தான் வளர்ந்தான் ஆனா இப்போ இங்க இல்ல ...அவன் எங்க இருக்கானும் எனக்கு தெரியாதுங்களே ..

முகில் , ஏன் அவன் இங்கிருந்து போனான்.

சாரதாம்மாள், சார் இந்த இல்ல விதிப்படி ஒருத்தர் 20 வயசு வரைக்கும் தான் இங்க இருக்க முடியும் . அதுகப்றம் தனக்கான வேலைய தேடிக்கிட்டு அவங்க இங்கேயிருந்து வெளியேறிடணும் . அதுபடிதான் அவனும் இங்கேயிருந்து போனான் .

அரசு , அவர் போகும்போது எங்க போறாருனு எதுவும் உங்ககிட்ட சொல்லலையா .

சாரதாம்மாள், இல்ல சார் அவன் அத பத்திலாம் ஒன்னும் சொல்லல ...ஆனா அவனுமே அவங்க அம்மாவை தேடிட்டு தான் இருந்தான் .

அவர் சொன்னதைக்கேட்டு ஏதோ கேட்க வந்த அரசுவை தடுத்தது குழந்தையின் அழுகுரல் .

குழந்தையை தூக்கிவந்த அவ்வில்லத்தில் பணிபுரியும் பெண் ...மன்னிச்சிக்கோங்க மா , பாப்பா அழுகையை நிறுத்தவே மாடிக்குறா உங்க கிட்ட வந்தா சமாதானம் ஆகிடுவானுதான் கூட்டிட்டு வந்துட்டேன் .

உடனே அக்குழந்தையை வாங்கி சமாதானம் செய்தவரை பார்த்து தன் தாயை பற்றி நினைத்தவனின் உதடுகள் புன்னகை பூத்தது .

அக்குழந்தையை பார்த்த முகிலிற்குகோ எங்கோ பார்த்ததுபோல் தோன்ற யோசித்தவன் சிந்தனையின் முடிவில் அதிர்ந்து அரசுவின் கையை சுரண்டினான் ....
முகில் ,பாஸ்....பாஸ்

அரசு , என்னடா

முகில் , பாஸ் இந்த குழந்தை மிஸஸ் .சுஜித்ரா சுரேந்தர் குழந்தை மாதிரியே இருக்கு பாஸ் .

அரசு , உளறாதடா

முகில் , அச்சோ பாஸ் ...நான்சொல்றத கேளுங்க. நான் அவங்க வீட்டுக்குப்போனப்போ ஹால்லயே போட்டோ மாட்டிவைச்சிருந்தாங்க பாஸ் . எனக்கு நல்ல நியாபகம் இருக்கு இது அவங்க பாப்பா தான்.இவன் சொன்னதை கேட்டு யோசனையுடன் ...மேடம் இந்த குழந்தை எப்படி இந்த இல்லத்திற்கு வந்துச்சின்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா .

சாரதாம்மாள் , நிச்சயமா ....நானும் யார்கிட்ட சொல்றதுன்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்கேன் .எங்க இல்லத்திற்கு வெளியே பெரிய மணி வச்சிருக்கோம். குழந்தைகளை விட வருகிரவங்க நிச்சயம் தன்னோட அடையாளம் வெளிப்படுத்த விரும்பமாட்டாங்க... அதுனால தான் நிறைய குழந்தைகள் குப்பைதொட்டில கிடக்குது . அதுக்காகத்தான் நாங்க அந்த மணி வச்சிருக்கோம் . குழந்தையை கொண்டுவந்து அந்த மணியடிச்சிட்டு அவங்க போய்டலாம் , நாங்க குழந்தையை கொண்டுவந்துருவோம் .ஆனா எனக்கு கடைசியா வந்த மூணு குழந்தைங்க விசயத்துல தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு .

அரசு , எதுனால மேடம்

சாரதாம்மாள் , இந்த மூணு குழந்தைகளுமே வரும்பொழுது சில காயங்களுடன் இருந்திச்சி சார் ...அதுமட்டுமில்லாம அந்த காயங்களுக்கு பக்குவமா மருந்தும் போட்டிருந்திசி .அந்த விஷயம் தான் கொஞ்சம் நெருடல் ஆஹ் இருக்கு .

முகில் , பாஸ் நான் சொன்னேன்ல அந்த குழந்தை தான் இது ...அப்றம் பாஸ் அந்த ரெண்டு குழந்தைங்களும் காணாம போன ரெண்டுகுழந்தைகள்னுதான் நினைக்கிறேன் . நம்ப உண்மைய சொல்லி குழந்தைகள கூட்டிட்டு போய்டலாமா .

அரசு , கூட்டிட்டு போய்.

முகில் , என்ன பாஸ் ...அவங்க குடும்பத்துல இருக்கவங்க கிட்ட கொடுப்போம் .

அரசு , வேணாம் டா அங்க கூட்டிட்டு போனா குழந்தைங்களோட அம்மா இல்லாததுல சரியா யாரும் பாதுக்கமாட்டாங்க ...அதுவும் அந்த சுரேந்தர் வீட்ல அவருக்கு அடுத்த கல்யாணம் பண்ண பிளான் போடறாங்கனு நீ தான சொன்ன. அவங்க எப்படி இந்த குழந்தையை பார்த்துப்பாங்க . அதுவே இங்க பாரு இந்தம்மா எவ்ளோ பாசத்தோடு அந்த குழந்தையை கொஞ்சிறாங்க . நம்ப எதுவும் சொல்ல வேணாம் ,வேணும்னா அந்த கேச ஹாண்ட்ல் பண்ற போலீஸ் கண்டுபிடிச்சா பாப்போம் .

சாரதாம்மாள் ,சாரி சார் உங்கள விசாரிக்க விடாம நான்பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் .சொல்லுங்க சார் வேற எதுனா அவனை பத்தி தெரியனுமா .

முகில் ,மேடம் அவர் பத்தி குறிப்பிட்டு சொல்ற மாதிரி எந்த விசயம்னா இருக்கா...இருந்தா சொல்லுங்ளேன் எங்களுக்கு தேட வசதியா இருக்கும் .

சிறிது நேரம் யோசித்தவர் ...சிரிப்புடன் ஒன்னே ஒன்னு இருக்கு சார் என்றார் .

அவர் சிரிப்பை அடக்குவதை கண்ட முகில் , மேடம் சிரிப்பு வர அளவுக்கு என்ன விஷயம் இருக்கு .

சாரதாம்மாள் , அது ஒண்ணுமில்லை தம்பி மை டியர் பூதம்னு ஒரு படம் வந்திச்சி தெரியுங்களா ?

அரசு , மேடம் அந்த படத்துக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் ...

சாரதாம்மாள் , ஹாஹா அதுஒண்ணுமில்லை சார் . அந்த படம் பார்த்ததுல இருந்து அவன் ஒரு வார்த்தை அடிக்கடி சொல்லுவான் .எத்தனையோ தடவ அப்டி சொல்லதனு நான் சொன்னாலும் அவன் கேக்கவே இல்ல.

அரசு , என்ன வார்த்தை மேடம் .

சாரதாம்மாள் , மை டியர் மாதா .

அவர் சொன்ன பதிலில் அதிர்ந்துபோன இருவரும் ஒரே சமயத்தில் எழுந்து நின்றனர் .


சில மணிநேரத்திற்கு முன்பு :

அரசுவின் பைக்கில் இருவரும் ஆசிரமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே மோதுவதுபோல் வந்த காரை கண்டு சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்திய அரசுவை தொடர்ந்து பைக்கில் இருந்து இறங்கிய முகில் , ஹேய் ...யார்யா அது ராங் சைட்ல அதுவும் இவ்ளோ வேகமா ஓட்டிடுவரது ? குடிச்சிருக்கியா ? இறங்குயா முதல்ல என கத்த ...காரிலிருந்து இறங்கினான் அவன் .

இறங்கும்போத "ஓ மை டியர் மாதா " என சொல்லிக்கொண்டே இறங்கியவன், மன்னிச்சுக்கோங்க சார்... அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் போயிட்டு இப்போ தான் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கேன் . அவங்கள பத்தியே யோசிச்சிட்டு வந்ததுல சரியா கவனிக்கல சாரி சார் .

தாய்க்கு உடம்பு சரியில்லை என சொன்னவுடன் அமைதியாகி விட்ட முகில், அவனின் தாய் பாசத்தை கண்டு வியந்து சரி சரி பார்த்து கார ஓட்டிட்டு போங்க என்றான் .

அமைதியாய் தங்களை பார்த்துகொண்டிருந்த அரசுவிடம் செல்ல நகர்ந்தவனின் காதில் கார்காரன், மன்னிச்சிக்கோ "மை டியர் மாதா " சீக்கிரமா வீட்டுக்கு போய்டலாம் என சொன்னதை கேட்டு அரசுவிடம் , பாஸ் எல்லோரும் இப்போ ஸ்டைல் னு சொல்லிக்கிட்டு பெத்த அம்மாவை மீ- னு கூப்டுகிட்டு திரியும் போது இவன் இன்னும் மாதா னு எவ்ளோ மரியாதையா கூப்புட்றான்ல என அந்த கார்காரனை பத்தி சிலாகித்தான் .


தற்பொழுது :

கை அருகில் கிடைத்தவனை தவறவிட்டதை எண்ணி நொந்துகொண்டே இருவரும் அவ்வில்லத்தை விட்டு வெளிவருகையில் அரசுவின் கைபேசி ஒலியெழுப்பியது .

எடுத்து பேசியவன் என்னனன என அதிர்ச்சியாய் கேட்க ..

முகில் , பாஸ் என்னாச்சி

அரசு , அந்த நிர்மலாவை காணோமாம் டா.

முகில் , நிர்மலாவா அது யாரு பாஸ்.

அரசு , டேய் அவங்க தான் டா நம்ப சந்தேகப்படற கொலைகாரனோட அம்மா .கேஸ் பைலை ல இருந்துச்சே நீ பார்க்கலையா ?? வசந்த் கிட்ட சொல்லி தண்டனை முடிஞ்சபிறகு அவங்க எங்க இருக்காங்கனு விசாரிக்க சொல்லிருந்தேன் டா ..

முகில் , பாஸ் அப்போ அந்த காருக்குள்ள இருந்த மை டியர் மாதா ??????



------------------------------------------------
 
Status
Not open for further replies.
Top