All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எ(உ)ந்தன் நெஞ்சில் சாய(வா)வா? - கதை திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் லவ்லி ப்ரண்ட்ஸ்.

என்னோட அடுத்த கதைக்கு முன்னோட்டம் பொங்கல் அன்று போட்டு பின் என்னோட முதல் கதை முடிந்தவுடன் தான் இதை எழுத ஆரம்பிப்பேன் என்று சொல்லிருந்தேன். ஆனாலும் இன்றே அதை ஆரம்பிக்க எண்ணி வந்துட்டேன்.

அதுக்கு முன் ஸ்ரீ சிஸ் க்கு எவ்வளவு நன்றிகள் நான் சொன்னாலும் எனக்கு பத்தாது என்று தான் சொல்வேன். இருந்தாலும் என்னோட நன்றியை எப்படி வெளிபடுத்தனும்னு தெரியலை. என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஸ்ரீ அக்கா. எனக்கு கதை எழுதும் வாய்ப்பு அளித்ததற்க்கு.

என்னோட முதல் கதைக்கு குடுத்து கொண்டிருக்கும் அதே ஆதரவும் இதற்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த இரண்டாவது எழுத்து பயணத்தையும் துவங்கி உள்ளேன். இன்று பதிவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது தான் பாதி டைப் செய்திருக்கிறேன். இதை இன்று காலையில் என் முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறைன்..

மன்னிச்சு ஆல் மை டியர்ஸ். ஆஃபீஸ் முடிச்சே வர இன்னைக்கு பத்து ஆகிவிட்டது அதான்

லவ் யூ ஆல்

வித் லவ் ரேவதி 😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்ட்ஸ் இதோ,எ(உ)ந்தன் நெஞ்சில் சாய(வா)வா? முதல் அத்தியாயத்தினை சொன்னது போல் இன்று பதிவிட வந்துவிட்டேன். நேரமின்மை காரணமாக தாமதம் ஆகி விட்டது, மன்னிச்சு.உங்களின் கருத்துகளை இதன் கருத்து திரியில் பதிவிடுங்கள், என்னோட அடுத்த பயணம் இது

இப்படிக்கு

உங்கள் அன்பு தங்கை ரேவதி :love:
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 1 :

சென்னையில் வசிக்கும் பெரும் புள்ளிகள் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கும் திருமணத்திற்கும் தேர்வு செய்யப்படும் மிக பிரமண்டபமான திருமணமண்டபங்களில் ஒன்றான மண்டபம் வடபழனி முருகன் கோயிலில் இருந்து சற்றே தள்ளி மிகவும் பிரமண்டபமாக அமைத்திருந்தனர்.

இந்த மண்டபம் இங்கு அமைந்துள்ள முக்கிய காரணமே எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் வடபழனி முருகன் சன்னிதானத்தில் தங்கள் வீட்டு திருமணங்களை நடத்த விரும்புவர்.அவ்வாறு கோயிலில் திருமணம் முடித்து மண்டபத்திற்கு தான் செல்வர்.அங்கு இதே பூல் நிறைய மண்டபங்கள் இருந்தாலும் சற்று மெய்னில் தான் இருக்கும்.இது மெய்னில் இருந்து தள்ளி அமைத்துள்ளதால் வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் மிக பிரமண்டபமாக அமைத்திருந்தனர்.

அந்த மண்டபத்தின் வெளியில் கார்களும்,இரு சக்கர வாகனங்களும் வந்து பார்க்கிங் ஏரியாவில் அலைமோதி கொண்டும்,சலசலத்துக்கொண்டும் இருந்தது என்றால் மண்டபத்தின் உள்ளே பெரியவர்களின் பேச்சு குரல்களும்,சிறுவர்கள் ஒரு கவலையும் இன்றி பட்டாம்பூச்சிகளாய் சந்தோஷத்துடன் சுற்றி கொண்டும்,மண்டபத்தின் ஒலிபெருக்கியில் ஒலிபரப்ப பட்ட பாடல்கள் அந்த மண்டபத்தை மட்டும் அல்லாது சுற்று வட்டாரத்தையும் அதிர செய்து கொண்டு இருந்தது.

ஆனால் அந்த விழா நாயகன் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு என்ற ஒன்றே இல்லாது,( இல்லாது என்று சொல்வதை விட சிரிக்க மறந்திருந்தான் என்று சொல்வதே பொருத்தமானது.) முகம் மட்டும் அல்லாது உடம்பும் இரும்பை போன்று இறுக காட்சியளித்து கொண்டிருந்தது.தன் முன் அமர்ந்து மந்திரத்தினை ஓத சொல்லியும்,திருமண சடங்குகளை செய்ய சொல்லியும் படாதபாடு படுத்தி கொண்டிருந்தார் ஐயர். வெளியில் பார்ப்பவர்களுக்கு அவனின் இறுக்கமான முகம் தெரிந்தாலும் உள்ளுக்குள் கண்ணாடி போல் சுக்கு நூறாக உடைந்த வேதனையுடன் அமர்ந்திருந்தான். அனாலும் அவனின் வாயும் கைகளும் மந்திரத்தை ஓதி கொண்டும்,சடங்குகளை செய்து கொண்டும் முனைப்பாய் இருந்தது.அவனின் மன வேதனையை அறிந்த மூன்று நபர்கள் தன் உடன் பிறந்த தங்கை,தன் உயிர் தோழனும் மாமன் மகனும்,மணப்பெண்ணின் தோழியும்.

மணமகன் கோலத்தில் அமர்ந்திருந்த மாப்பிளையை மண்டபம் முழுவதும் இருந்த இளம் பெண்கள் ஏக்க பெருமூச்சு விடும் அளவு சிக்கச் சிவேலென்று சிவந்த மேனியும்,கத்தி முனைகளை ஒத்த கூரிய பார்வையை தாங்கிய விழிகளும், கூர் நாசியும்,சிரிப்பை மறந்த வலிய உதடுகளும்,முகத்திற்கு ஏற்ப கத்தரித்த அளவான மேசையும்,பிரெஞ்சு பியர்ட் வைத்தும், ஆறடி அங்குலத்தை தாண்டிய அவனின் உயரமும் உள்ள ஒருவன் தங்கள் கண்முன் இருந்தால் ஏக்க பெருமூச்சு விடாது என்ன செய்ய இயலும் . ஆண்மைக்கே உரிய கம்பீரத்தின் இலக்கணமாக வெள்ளை பட்டு வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தான் ரித்தேஷ் கண்ணன். (ஒரு வருடத்திற்கு முன்பு வரை ரித்தேஷ் கண்ணன்,ஆனால் தன் தந்தையின் செயலில் அவரின் பெயரினை கூட தன் பெயரில் சேர்த்து கொள்ள விரும்பாது ரித்தேஷ் என்று மாற்றிய படு ரோஷக்காரன்.


ரித்தேஷ் ஏதேதோ நினைத்து கொண்டு இருக்கும் பொழுது "பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ" என்ற ஐயரின் குரலில் ரித்தேஷின் கவனம் மணப்பெண்ணின் அறையின் வாயிற்புறம் திரும்பியது. உடல் முழுவதும் தங்க ஜரிகையினால் ஆனா அடர் மெரூன் கலர் பட்டிற்கு தோதாக காதில்,கையில்,கழுத்தில் என்று தங்கமும்,வைரமும் மின்னி கொண்டும்,கூட்டத்தினை கண்டு எழுந்த பயத்தினால் தன் தங்கை சாத்விகாவின் கையினை ஒருபுறம் இறுக பற்றியும்,மறுபுறம் அவளின் உயிர் தோழியான அனந்திகாவின் கையினை இறுக பற்றியும் தீட்டப்பட்ட ஓவியம் போல் நடந்து வந்தவளை கண்டு தன் கோபம் அனைத்தையும் மறந்தவன் வைத்த கண் வாங்காது பார்த்து கொண்டு இருந்தான். தன் அண்ணனின் அருகில் இன்னும் சில மணி துளிகளில் தன் அண்ணியாக வர போகும் தேஜாஸ்ரீயை அமரவைத்தாள் சாத்விகா.

கூட்டத்தினை கண்டு வெளிப்படையாக கைகள் நடுங்க தன் அருகில் அமர்ந்த தன் உயிரில் கலந்தவளின் கையினை ஆறுதலாக இறுக பற்றினான்.அதில் மேலும் மிரண்டவளை கண்டவனின் உள்ளம் துடித்து போனதில் தன் பெற்றோரை உச்சகட்ட கோபத்தில் பார்த்தான். அவனின் கண் முன் ஓராண்டுக்கு முன்பு தன்னவள் பேசிய வார்த்தைகள் அலைமோதியது. அப்பொழுதும் கூட்டத்தில் தன்னவனின் அருகாமை கொடுத்த தைரியத்தில் பயம் நீங்க அனைவரையும் எதிர்கொண்டவள் கூறிய வார்த்தைகள் இதுவே "நூறு பேர் என்ன, லட்சம் பேரு இருந்தாலும் நீங்க கூட இருக்கும் போது எனக்கு என்ன பயம் வந்துரும் ரித்து,என்னோட பயத்தின் மருந்தே நீங்க தான?" என்றவள் அவனின் பரந்த மார்பில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரித்தேஷும் தன்னவளின் இந்த மாற்றம் பெரும் திருப்தியை அளித்தது, பின்னே ஒவ்வொன்றுக்கும் பயந்தவன் ரித்தேஷின் வேத வாக்கில், தன் பயத்தினை ஒதுக்கியவள் அல்லவா. "என்னோட தேஜு செல்லக்குட்டி ரொம்ப நல்ல மூடுல இருக்காங்க போல" என்று தன்னவளின் நெருக்கத்தை சீண்டி கொண்டிருந்தான். இருந்தும் அவனின் அவனின் மார்பில் மேலும் தன் முகத்தினை பதித்தாலே தவிர விலக வில்லை.

தன் கடந்த கால நினைவுகளில் இருந்து மீண்டவன் தன் பெற்றோரை கோபத்தில் பார்த்து வைத்தான், அவனின் கோப பார்வைக்கு அசைந்தால் அவனின் அன்னை இல்லையே???

தன் மகனின் அருகில் அமர கூட தகுதி இல்லாதவள் என்று பொங்கிய கோபத்துடன் ரித்தேஷின் அருகில் வந்த அவனின் அன்னை மாதங்கி “இங்க பாருடா கடைசியா சொல்றேன், இந்த பொண்ணு உனக்கு வேண்டாம், அப்படி என்னடா வெறும் அழக பார்த்து மட்டும் கல்யாணம் பண்ணுறதுக்கு சம்மதிப்ப” என்று மணமேடையில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையின் தாய் ஏகத்துக்கும் கத்தினார்.

“இந்த பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா எங்கள எல்லாம் மறந்துடு, எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தானு உன்னைய நாங்க இங்கயே தலை மூழ்கிடுறோம், ஒன்னும் இல்லாதவள கல்யாணம் பண்ணி எங்க வீட்டுக்கு மருமகளாக்க நாங்க ஒன்னும் கேனை இல்ல, உன்னால எங்க கௌரவம் தான் போக போகுது” என்று அவனின் தந்தையும் திட்டி தீர்த்தார்.


அதில் கடுப்பானவன் “இங்க பாருங்க எனக்கு யாரை கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தோணுதோ அவள தான் நான் கல்யாணம் பண்ணுவேன், அதுக்காக இவள உங்களுக்கு பிடிக்கலை, கௌரவம், அது இதுனு சொன்னா உடனே நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேனோ இல்லை உங்க சொத்துல பங்கு கேட்க மாட்டேனோ,வீட்டுக்கோ வரமாட்டேனு மட்டும் தப்பு கணக்கு போட்டா ஐ ஆம் வெரி ஸாரி” என்று கூலாக தன் பெற்றோரை பார்த்து பதில் பேசியவன் மிரண்டு விழிக்கும் ஐயரை தன் முன் எரியும் ஹோமகுண்டகத்திற்கு இணையாக கண்கள் சிவக்க அக்னிக்கு ஒத்த தன் பார்வையால் பார்த்தான். அவனின் பார்வையில் கைகளும் மந்திரம் சொல்ல முயற்சி செய்யும் வாயும் நடுங்கினாலும் அவனின் தீப் பார்வையில் தானாக “கெட்டிமேளம் கெட்டிமேளம்”என்றார்.


ஐயரின் குரலிற்கு இணங்க தன் கையில் உள்ள தாலியை ஒரு முறை பார்த்து தயங்கியவன் மறுநிமிடம் தன் முக மாறுதல்களை மாற்றிக் கொண்டு தன் அருகில் அமர்ந்து தன்னை அன்னியப் பார்வையோடு பார்க்கும் தேஜாஸ்ரீயின் கழுத்தில் கலக்கத்துடனும் இறுக்கத்துடனும் தாலியை இரண்டு முடிச்சினை போட்டவன் தன் பின் பெற்றோருக்கு பயந்து நிற்கும் தன் தங்கையை ஆழ்ந்து பார்த்தான். தன் உடன்பிறந்தவனின் பார்வையில் மருட்சியுடன் ஒரு முறை பெற்றோரை பார்த்தவள் குனிந்து மூன்றாவது முடிச்சிட்டாள் தன் உயிரான அண்ணனின் மனைவி தேஜாஸ்ரீக்கு. அதில் ஒரு நிமிடம் அவனின் மனது அமைதி அடைந்தது.

தாலி கட்டியதும் அவளின் ஆசையாக கேட்ட முதத்தினையும் நெற்றியில் பதித்தான் அனைவரின் முன்பும்.

தொடரும்.
 
Status
Not open for further replies.
Top