மிகவும் கனமான பதிவு
.உத்தமை,ஷியாமால் எத்தனை வலிகளை அனுபவித்து விட்டாள்
.அவன் கொடுத்ததை விற்காமல்
கொட்டி விட்டு அதற்கான பணத்தையும் கொடுத்து,அவனை போலிஸிலும் சிக்க வைத்து என திறமையாகவே செய்தாள்
.
ஜெயிலில் இருந்து வந்த பிறகு ஷ்யாம்,உத்தமையிடம் மனிதனாக அல்ல மிருகமாகவே நடந்து கொண்டான்
.
ஆர்யனின் உண்மையான காதலை புரிந்து கொண்டு,அவனை ஏமாற்ற வேண்டிய நிலையில் உள்ளதை நினைத்து உத்தமைக்கு
ஏற்பட்ட வேதனை ,ஆர்யன்,ஷியாமை அடித்ததை சொல்லும் போது அவளுக்கு தோன்றும் மகிழ்ச்சி ,ஷியாமினால் ஜெயிலுக்கு சென்றதை
ஆர்யனுக்கு செய்த துரோகத்திற்கு கிடைத்த தண்டனையாக ஏற்றுக் கொள்வது என உத்தமையின் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம்
சொல்ல வார்த்தைகள் இல்லை
.
ஷியாமை இடுப்பு எலும்பை உடைத்து,காலம் முழுவதும் சக்கர நாற்காலியில் என்ற நிலை வந்தும் அவன் திருந்தவில்லை
.
அவன் குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுத்து ,அவளை போல யாரும் சிக்காமல் காப்பாற்றி விட்டாள்
.
தோழனாக ராஜ் எந்த நிலையிலும் உத்தமையை கைவிடாதது அருமை
.
ஆர்யனும்,உத்தமையும் சேர தேவகி முயற்ச்சி செய்வாரா
.