All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் வானின் துருவ(வ்) நக்ஷத்தி(ரா)ரம் - கதைத் திரி

Status
Not open for further replies.

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'அதானே பார்த்தேன்.. இந்த கிரானைட் ராட்சசனுள்ள ஈரமா...ஒரு சொட்டு தண்ணி கூட கிடையாது... சரியான சஹாரா பாலைவனம்' என்று திட்டித் தீர்த்தாள், மனதில் தான்.


அவன் தனது உதவும் குணத்தைப் பறைசாற்ற விரும்பவில்லை..தேவையில்லை அவளுக்கு இப்போது என்று எண்ணிக் கொண்டான். அவனுக்குச் சொந்தமான முதியோர் இல்லம், அனாதை ஆசிரமம் எல்லாம் வெளியில் தெரியாது பாதுகாத்தான். சூர்யாவிற்கு தான் அவைகள் தெரியும். பிறந்த நாள் என்றால் அவனுக்கு அங்கே தான். ஏதோ ஒரு பாசம் அங்கே கிடைக்கிறது அவனுக்கு. அதை முக்கியமாகக் கருதினான். அவனுடைய ஏக்கம் கொஞ்சம் அங்கே தீர்ந்தது. மொத்தத்தில் ஷோபாவிடம் நக்ஷத்திரா கூறியது போல்,


'அவன் கடவுள் பாதி, மிருகம் பாதி' தான். அவளுடைய பார்வையைமாற்றும் பொருட்டு,


"என்ன பார்க்கறே ! நான் துருவ் ! ஜஸ்ட் தி சேம் ! ப்ரூவ் செய்யட்டுமா?" என்ற கேள்வியில் ஆயிரத்தெட்டு அர்த்தங்கள், அனைத்தையும் அவள் அறிவாள் . அவன் கேள்வியில் சட்டென்று அவள் மறுப்பாகத் தலையை அசைத்தாள்.


"குட் ! சோ லெட்ஸ் மீட் இன் தி ஈவினிங் !" என்று அவன் சென்றும் விட்டான். மாலைதான் அவனை மறுபடியும் பார்த்தாள். அவனுடன் சூர்யாவும் !எக்கச்சக் காகிதங்கள் அவள் முன் கொடுத்து,


"சைன் பண்ணு !" என்று சொல்ல, அவள் அந்தக் காகிதங்களை எடுத்துப் படித்துப் பார்க்க ஆரம்பித்தாள். துருவ் இதை எதிர்பார்த்தான். முகத்தில் கொஞ்சம் கூட கலக்கம் இல்லாது பார்த்துக்கொண்டான்.


"வாட் இஸ் திஸ் ?" என்று ஒருகட்டத்தில் அவள் குரல் உயர, அவன் நிதானமாக


"வாட் ஐஸ் வாட் ?" என்று கேட்டான்.


"எதுக்கு நான் உன் கூட இருக்கணும்? " என்று ரோஜாப் பூவை ஒத்தவள், அதில் இருக்கும் முள் போன்று குத்திக் கேட்க, அவன் அசராது,


"நாளைக்கு உன் அம்மாக்கு உடம்பு சரி ஆன பிறகு, எனக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் எங்கயாச்சும் நீ எஸ் ஆனா?? லுக் ! நான் ஒரு வியாபாரி! சோ அப்படித்தான் பேசுவேன்! இந்த கடனுக்கு அடகு வைக்க யு ஹேவ் நத்திங்! இட்ஸ் ஜஸ்ட் யு! சோ திஸ் டீல்! ஒகேன்னா உன் அம்மாக்கு ட்ரீட்மெண்ட்! இல்லேன்னா யு நோ..நான் சொல்ல தேவையில்லை" என்று நன்கு கலவரப்படுத்தினான்.


அவள் முகத்தில் பீதி குறையாது இல்லை. அவனுடன் அவள்! அவன் குணம், அவள் அறிந்த ஒன்று. தனக்கு என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதைப்பற்றி அவனுக்கு புரிந்து தானே இம்மாதிரி செய்கிறான்! அவளது பீதியைக் கண்டு அவனுக்கு ஒரு நிமிஷம் பாவம் தோன்றினாலும், அது ஒரு நிமிடம் மட்டுமே. அதன் பின் அவள் அவனைச் சொன்ன சொற்கள் எல்லாம் நினைவுக்கு வர



'கொஞ்சம் பயம் வேணும் இவளுக்கு' என்று அவளை ஏளனமாகப் பார்க்க நிறுத்தவில்லை. அதுவும் அந்த காகிதங்களில் இருந்த வாக்கியங்கள் வேறு! இங்கு தங்கும் பட்சத்தில்


அவளுக்கு ஏதேனும் நடந்தால், அவள் தான் அதற்கு பொறுப்பு


அவனுக்கு ஏதேனும் நடந்தால், அதற்கும் அவள் தான் பொறுப்பு


பாதியில் இவ்விடத்தை நீங்கினால், 50 லட்ச ரூபாய் அவனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.


அவளுக்கு நாளைய சிகிச்சைக்குப் பணம் செலுத்த வேண்டும். கண்முன் சரஸ்வதி இறந்த போது, பார்வதி எப்படி தன்னைப் பாதுகாத்தார், தன்னைப் படிக்க வைத்தது, அன்னையாக மடி தாங்கியது என்று எல்லாம் கண் முன் விரிய, அவன் போட்ட கெடுபிடிகள் பின்னுக்குச் செல்ல, ஒவ்வோர் காகிதமாக அவள் கையொப்பம் இட ஆரம்பித்தாள். அந்நேரம் அவள் கவனம் முழுவதும் அதில் எழுதி இருப்பதைப் படிப்பதும், கை ஒப்பம் இடுவதிலும் தான் இருந்தது. அவன் மீதோ, சூர்யா மீதோ இருக்கவில்லை.


ஒரு கட்டத்தில் துருவ் சற்று கலக்கம் அடைந்தான். ஏனென்றால் வருங்கால வக்கீல் அம்மா, ஒவ்வொரு வார்த்தையையும் படித்துக்கொண்டு இருக்க, அதை அவனால் தடுக்க முடியவில்லை. இதோ இதோ, அவன் அந்தக் காகிதங்கள் இடையே வைத்து இருந்த சட்டப்படி திருமணம் செய்வதற்கான படிவம் வந்து விடும்.



அதை அவள் பார்த்தால்… பார்த்தால்..அவனுக்கு பயமில்லை. ஆனால் அவன் செய்ய விரும்புவதை அவனால் செய்ய முடியாது போய் விடும். அவள் இடத்தில் அவளை அவனால் பாதுகாக்க முடியும், ஆனால் அதில் ஏதேனும் குறை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதில் அவளுக்கு ஆபத்து. சொன்னால் புரியுமா? அப்படியே புரிந்தாலும், நக்ஷத்திரா எனும் சிறுப் பெண்ணுக்குள் இருக்கும் அகம், அவளை அவன் பேச்சைக் கேட்க விடுமா?


ஆகையால் இந்த முடிவு என்று சொல்லி கொண்டான். அவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டான். மனதால் அவளை அவன் நினைக்க ஆரம்பித்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. அவளை மட்டுமே எண்ணிய நாட்களும் உண்டு! இருவருக்கும் பிரிவில் காதலை உணரும் பாக்கியம் போலும்!


இப்படி எல்லாம் பிரிந்து இருப்பர் என்று இருவரும் அன்று நினைக்கவில்லை. காரணம் அவன் என்றால், அவளும் உண்டு. சதி-பதி இருவரும் தவறு செய்தனர். தெரிந்தும் செய்தனர், தெரியாதும் செய்தனர்..ஆனால் பாவத்திற்கு சம்பளம் உண்டு. இதை எல்லாம் உணராது, அவள் சட்டப்படி திருமணத்தை தன்னை அறியாது செய்துக் கொள்ள முற்படும் நேரத்தில் அவளுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர, அவள் அங்கே உடனே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில்


"நான் இப்ப ஹாஸ்பிடல் போகணும். நான் அப்பறம் சைன் பண்ணட்டுமா?" என்று வினயமாகத் தான் கேட்டாள்.



ஆனால் அவன்


"நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்! இப்போ சைன் பண்ணினா டீல். அப்படியே சைன் பண்ணு" என்று அவள் அந்தப் படிவத்தைப் படிக்க கூடாதே என்று எண்ணியபடி அவன் கெத்தாக சொல்ல, அவள் கண்ணில் நீர் கோர்க்க


"நீ சாத்தானின் ஹ்யுமன் பார்ம்.. இவ்ளோ கெஞ்சறேன்..அப்படியும்..சீ! ஹெல் வித் யு! சைன் பண்ணி தொலைக்கறேன்" என்று அவசர, அவசரமாக கையொப்பம் இட்டு விட்டுச் சென்றாள், படிவத்தைப் படிக்காது!


துருவ் நிம்மதியாக உணர்ந்தான். ஆனால் சூர்யா அவ்வாறு உணரவில்லை. அதன் பின், துருவ்விடம் வேலை செய்ய விருப்பம் இல்லை என்று அவனை விட்டுச் சென்றான். முதலில் துருவ்விற்கு அது சங்கடமாக இருந்தது, ஆனால் அவனது அகம் அதை கடக்க வைத்தது.


இவ்வாறு துருவ், நக்ஷத்திராவை தன் திருமதி ஆக்கிக்கொண்டான். ஆனால் சில உறவுகள் திருமண பந்தத்தில் முடிந்தாலும் நிலைப்பதில்லை. அதுவும் இருவரின் சரித்திரம் ஒன்றற்கொன்று பிணைந்தது. ஆகையால் அவர்கள் உறவு சரித்திரமாகவே இருக்கட்டும் என்று கடவுள் நினைத்தார் போல்!


பெரிய நட்சத்திரங்களுக்கு 'சூப்பர் நோவா எக்ஸ்ப்ளோஷன்' எனும் முடிவு உண்டு, துருவ் நட்சத்திரம் அதற்கு விதி விலக்கல்ல!

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 31


புதுமணத் தம்பதியர் போல் இருவரும் இருந்தார்களா?? அவன், அவளை வீட்டிற்கு 'மணமகளே, மணமகளே வா வா' என்றெல்லாம் அழைக்கவில்லை. அவள் வலது காலை எடுத்து வைக்கவும் இல்லை.


தன்னுடைய பாதுகாப்பிற்கு ஏற்றவைகளை எடுத்துக்கொண்டு தான் வந்திருந்தாள். அவள் கவலைக்கு ஆறுதலாக, அவன் அவள் வீட்டிற்கு வந்த அதே நாள் படப்பிடிப்பு என்று வெளியூர் சென்று விட்டான். கிட்டத்தட்ட 1 மாதம் கழித்து தான் வீடு வந்தான்.


வந்தபின் அவன் கணவனாக நடந்தான். அவளுக்கு அவன் மீது கோபம், வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என்று அவனைக் கொல்லும் வேகமும் வந்தது. உடலளவில் பலசாலி அவன், அவளால் அவனை ஒன்றும் செய்ய முடியாது போயிற்று. அதுவே அவனை பாவத்தின் உச்சிக்குக் கொண்டு தள்ளியது.


அவனைக் கடுமையான முறையில் அவள் பேசவும் வைத்தாள், அவளிடம் நடக்கவும் வைத்தாள். அவள் குணம் அறிந்து அவனாவது சற்று விட்டுக்கொடுத்து நடந்திருக்கலாம். எங்கே? ஆண் என்ற அகம் அணு ஆயுதம் என்றால், பெண் என்ற அகம் அந்த அணு ஆயுதம் வெடித்தப்பின் வரும் கதிரியக்கம். தொடர்ந்து இருக்கும்.



அவன் வாங்கிக் கொடுத்த ஆடைகளை அவள் நிராகரிக்க அவன் அவள் கொண்டு வந்த உடைகளை எரித்தான். அளவுக்கு மீறிஅவள் பேசினால், பார்வதியின் நிலையை கையில் எடுத்துக்கொண்டு அவளைக் கட்டுப்படுத்தினான். தன் மனைவி என்ற உரிமை அவனிடத்தில் தாண்டவமாட, அவள் எதிர்ப்புகளை மீறி அவனுள் பொங்கும் காம உணர்வுகளை இதழ் பரிமாற்றங்களால் வெளிப்படுத்தினான்.



அது சரியல்ல என்று அவன் தன்னைத் தானே நிந்தித்துக் கொள்வான், ஆனால் அவனால் அவளை விட்டு இருக்க முடியவில்லை. பார்வதி குணமாகி வந்தபின் அவளைப் படிக்க வைக்க வேண்டும் என்று கண்டிப்பாக நினைத்துக் கொண்டான். அவள் அவனை வார்த்தைகளால் மடக்கும் போது,


'இந்த வாய் இவளுக்கு வேணும்..இல்லே வக்கீலா எப்படி பொழைப்பா ' என்றும் எண்ணுவான். ஆனால் பலமுறை அதிகப்படியாகப் பேசுவாள், அவனும் தனது கட்டுப்பாட்டை இழப்பான். ஆனால் அவள் மீது கோபம் இருந்தாலும் அவளைப் பாதுகாக்க அவன் தவறியது இல்லை. காவல்துறையில் மைக்கேல் பற்றி புகார் கொடுக்கலாம். ஆனால் அதில் 2 சிக்கல்கள்.

ஒன்று அவள் அவனை எதற்காகப் பார்க்கப் போனாள் என்று சொல்ல வேண்டி வரலாம்.



மற்றொன்று அவன் அவளது கணவன் என்று கூற வேண்டி வரலாம். இந்த இரண்டு விஷயங்கள் இப்போதைய நிலையில் அவளுக்குத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டு தன் வழியில் அவளைப் பாதுகாத்தான். வெற்றி எனும் தனது பாதுகாவலனை அவளை நிழல் போல் பின்தொடரப் பணித்திருந்தான். அவளுக்கு 2 பிரச்சனைகள். ஒன்று பார்வதியின் உடல் நிலை, மற்றொன்று துருவ் அவளிடம் நடக்கும் முறை. இந்த இரண்டைப் பற்றிய எண்ணங்களில் தனது சுற்றுப்புறங்களை அவள் அதிகம் கவனிக்கவில்லை.


அவன் அருகே அவள் மிகவும் பாதுகாப்பாக என்றும் உணர்வாள். ரஞ்சனுடன் உணவு அருந்த சென்ற இரவு அவளைத் தேடி அவன் வர, அவள் மனதில் நிம்மதி தோன்றாது இல்லை. அவளை அவன் அணைத்துக் கொண்டு சென்ற போது, அதை ஒன்றும் அவள் எதிர்க்கவில்லை. ஏனென்றால் அவன் வரும்வரை, அந்த ஆட்டோக்காரனும், போலீஸ்காரரும் பார்த்த பார்வை வேறு விதம், அவன் வந்தபின் பார்த்த பார்வை வேறு விதம்!


அது போல், தனக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருளை அவள் வாங்கச் சென்ற போதும் அவளை அரண் போல் அந்த குழப்பத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தான். அதில் அவன் காட்டிய உரிமையை அவள் உணரவில்லை. எரிச்சல் அடைந்தாள். அதன் பின் வந்த பேட்டியில், அவன் பேசிய விதம் , ஒரு விதத்தில் அவளுக்கு ஆறுதல் ஆனால் கோபம் கண்ணை மறைத்தது.


பார்வதி அவளைக் கூப்பிட்டு கேட்க, இன்னும் சங்கடம், சொல்லவும் முடியவில்லை, மெள்ளவும் முடியவில்லை. தீ மிதித்தார் போல் வேதனை! ஆனால் அவன் வந்தான், பார்வதியைத் தனிமையில் சந்தித்து அவளைத் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லிவிட்டான். பார்வதிக்கு அதில் பெருத்த நிம்மதி. துருவ்வை பற்றி அவள் கேள்விபட்டத்தை விட, நிஜம் வேறு விதம் என்று எடுத்துக்கொண்டார்.


அவரது சிகிச்சை மட்டுமின்றி, நக்ஷத்திராவை மேலே படிக்க வைப்பது என்று அவன் பேசிய விதத்தில் உண்மையான துருவ்வை அவர் கண்டுக்கொண்டார். அவளது தற்போதைய பாதுகாப்பு பற்றி சிறிதளவு அவன் கூறினான். அவர் தேக நிலை தேறி வந்த பின் முழுவதும் சொல்ல நினைத்து இருந்தான். அது போல் பார்வதி , நக்ஷத்திராவின் பெற்றோரைப் பற்றி பேச நினைக்க அன்று பார்வையாளர்கள் சந்திப்பு நேரம் முடிவடைந்தது.



ஆகையால் அடுத்த நாள், அவனை வரச் சொன்னார். ஆனால் விதி கொடுமையான முறையில் அன்று இரவு விளையாடியது. அவன் என்ன செய்தான் அல்லது அங்கு என்ன நடந்து கொண்டு இருந்தது என்று அவள் அறியாது, ரஞ்சனிடம் தனது துக்கத்தைப் பகிர்ந்துக் கொண்டு இருந்தாள்.



"சாரி ரஞ்சன்! நான் உன்னை தப்பா நினைச்சிட்டேன்.. எல்லாம் இந்த துருவ் கடங்காரன் தான்.. நீ அனுப்பின மாறி எனக்கு லவ் லெட்டர், மோதிரம் அனுப்பி வச்சான்.. நான் அதை தப்பா எடுத்துக்கிட்டு..உன் கிட்ட கத்திட்டேன்" என்று சற்று முன் துருவ்வை ஒரு நடிகையுடன், ரவி வர்மா அளித்துக் கொண்டிருந்த பார்ட்டியில் பார்த்து மனம் வெதும்பி அவனிடம் மன்னிப்பு யாசினாள்.


அன்று மாலையும், மதியமும் அவளிடம் அவன் நடந்து கொண்ட விதம் என்ன, தற்போது அவன் செய்து கொண்டு இருப்பது என்ன என்ற கோபம் அவளுக்கு. ஏதோ ஒரு விதத்தில் 'உனக்கு நான் இருக்கிறேன்' என்று அவன் மறைமுகமாக உணர்த்திக் கொண்டு இருக்க, இடையே அபஸ்வரமாக பார்ட்டியில் அவன் நடந்து கொண்ட விதம், எப்போதும் போல் உணர்ச்சி பெருக்கத்தில் அவள் தன் கட்டுப்பாட்டினை முழுவதும் இழந்தாள்.



அவளிடம் பேச்சு கொடுக்க வந்த ரஞ்சனிடம் தனது நிலையைக் கூறிக்கொண்டே அவள் கண்ணீர் உகுக்க, ஒரு கட்டத்தில் அவன் உணர்ச்சிவசப்பட்டு அவளை அணைத்துக்கொண்டான். அப்போது தான் துருவ் அவளைத் தேடிக்கொண்டு வந்தான். அவன் இந்த பார்ட்டிக்கு வந்த காரணம், அவளை தன் மனைவி என்று ரவி வர்மாவிடம் அறிமுகப்படுத்ததான்.

ஆனால் அவன் கண்ட காட்சியில் துருவ் என்ற ஆண்மகனின் முழு ஆங்காரம் சீண்டப்பட்டது.


மாற்றானின் அணைப்பில் தன் மனைவியா? அவனுக்கும் நேர்ந்த அதே பிழை, இந்தக் காலத் தாமதம். இருவருக்கும் எத்தனை பொருத்தங்கள், ஜாதகத்தில் இருக்கிறது என்று கணிக்கப்படவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்தக் காலத் தாமதப் பொருத்தம் உண்டு!


அவன் வெகுண்டு எழுந்து, பெரும்பாலும் கோபத்திலும்,சீண்டலிலும், காமத்தின் பிடியிலும், அவன் கொடுக்கும் இதழ் அச்சாரங்கள், அன்று 'நீ என்னுடையவள், எனக்குச் சொந்தமானவள்' என்ற அதீத உரிமை உணர்வில் கொடுக்கப்பட்டது. அதில் அவள், சொன்ன வார்த்தைகள்..அம்மம்மா அவனை மேலும் மூர்க்கானாக்க… முடிவு 'அவர்கள்' என்ற வார்த்தையின் அழிவு!


யாரும் தத்தம் அன்னையைப் பற்றிய அத்தகைய இழிவானச் சொற்களைத் தாங்க மாட்டார்கள். அன்னை மீது குறைவான பாசம் இருந்தாலும், அவனால் அதைத் தாங்க முடியவில்லை. அதில் அவன், அவனாக இல்லாது போனான். இது முழுக்க முழுக்கத் தவறே! கணவனாக இருந்தாலும், மனைவியின் முழு சம்மதம் அல்லாது அவளை ஆட்கொள்வது தவறு! குற்றம் தான்!



சட்டப்படி தண்டனை என்பதை விட, தன் கையால் தண்டனை என்று அவள் அப்போதே முடிவு செய்தாள் ! அதை நிறைவேற்றும் போது தான், பார்வதி மரணத்துடன் போராட்டிக்கொண்டு இருக்கும் செய்தி அவர்களை வந்து அடைந்தது ! அவளுக்கு உலகம் தட்டாமரம் சுற்ற ஆரம்பித்தது. அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவர் மட்டுமே ! அவரும் இல்லாது போனால் …! அதைக் கற்பனை கூட செய்து பார்க்க விருப்பமில்லை அவளுக்கு ! ஆனால் பார்வதியின் மனமோ, தனது பொறுப்புகள் நிறைவேறி விட்டது என்று முடிவு செய்து கொண்டது ! துருவ், நக்ஷத்திராவின் கணவன் என்று அறிந்துக்கொண்டு அவர் மிகவும் மகிழ்ந்தார் !


அவன் நல்லவன் என்று அவரது உள்மனம் கூறியது ! தனது குடிகார கணவன், தங்கையின் ஏமாற்றுக்கார கணவன் என்று அவர் கண்ட அந்த இரண்டு ஆண்களை விட, துருவ் 1000 மடங்கு நல்லவன் என்று நம்பினார் ! அதில் அவர் மனம் சாந்தி அடைந்து, ஆன்மா அவரது உடலைப் பிரிந்தது ! நக்ஷத்திரா மனம் சுக்கு நூறானது. உடலும் பலகீனமானது ! அவளை ஓர் குழந்தைப் போல் அவன் பார்த்துக்கொண்டான் ! மனதில் காதல் உள்ளதை அவன் அப்போது தான் உணர்ந்தானா ? அவனே அறிவான் !


ஆனால் அவளைப் பிரிய மனமில்லாது அலாஸ்கா சென்றான் ! அவளும் அவனை இது தான் தக்க சமயம் என்று பிரிந்தாள் ! இல்லை இல்லை, அவனை விட்டு தப்பித்துச் சென்றாள் ! அவளைப் பொறுத்தவரை அது சரி !அவள் மங்களூரு சென்றாள் ! அங்கே அவளுக்குத் தெரிந்த தோழி இருந்தாள், அவர்கள் குடும்பத்துடன் ஓர் சில நாட்கள் தங்கிக்கொண்டு தனது நிலையின் பாதியை மட்டும் அவர்களிடம் கூறி, அவர்கள் உதவியுடன் ஓர் வேலையையும் தேடிக்கொண்டாள்.


ஒரு மாலில் இருக்கும் துணிக்கடையில் சிப்பந்தி! அது தான் அவள் பார்க்க ஆரம்பித்த வேலை ! அவளை அதிகமாக யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை. தமிழ்நாட்டின் முன்னணி நடிகையாக அவள் இருந்திருந்தால், ஒருவேளை அவளைத் தெரிந்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கும், ஆனால் அவள் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாள் ! இப்படியே இங்கயே தனது வாழ்வைக் கழிக்க வேண்டும் என்றெல்லாம் அவள் திட்டம் தீட்டவில்லை! எதுவும் நிரந்திரமில்லை என்ற மனநிலையில் தான் அவள் இருந்தாள் !


வேலை செய்யுமிடத்தில் யாரிடமும் அதிகம் பழக்கமாட்டாள்! தானுண்டு, தனது வேலையுண்டு என்று தான் அவள் இருப்பாள் .



அவள் காணாமல் போன விஷயம் துருவ்வை எட்டியவுடன் அவன், மிகவும் உடைந்து போனான். அவன் மனமும் சாதாரண மனித மனம் தான் என்று கடவுள் அவனுக்கு உணர்த்தினார் ! கல் மனம், என்னை எவ்வித துக்கமும் தீண்டாது என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டு இருந்தானே, அவனுக்குக் கர்வபங்கம் !


பைத்தியம் பிடித்தால் தேவலாம் என்ற ரீதியில் அவனை ஆக்கிவிட்டுச் சென்று விட்டான். அவளைத் தேட அவன் செய்யாத முயற்சியா ! ரத்னா கொடுத்த நக்ஷத்திராவின் பொருட்களை அவன் பிரித்துப் பார்த்தான்.


அவளது டைரி தான் அவனது கையில் முதலில் கிடைத்தது ! அதில் அவன் வாசித்த முதல் வாக்கியம் !

"சாம் , நீ எப்போ வருவே !" என்பது தான் !


அதில் அவன் தடுமாறி நிற்க முடியாது, கீழே பொத் என்று உட்கார்ந்து விட்டான் ! கண்களில் நீர் கோர்க்க, அடுத்து அடுத்து அவன் வாசித்த வாக்கியங்கள், தெளிவில்லாது தெரிந்தாலும், அதில் இருக்கும் சாம் என்ற வார்த்தை அவனை உருக்கி , உருக்குலைய செய்தது ! அவன் பரிசாகக் கொடுத்த அந்தக் காவலாளி பொம்மை, அவனது பிறந்தநாளுக்கு அவள் வரைந்த வாழ்த்து அட்டைகள் என்று அவளது பொருள்களில் இருந்தது என்னவோ சாம் மட்டுமே !


தான் ஆங்கிலத்தில் படித்த புத்தங்கங்களின் வரிசை, வாங்கிய மதிப்பெண்கள், வழக்கறிஞர் ஆகி ஒடுக்கப்படும் பெண்களுக்கு நீதி செய்ய வேண்டும் என்ற தன்னுடைய ஆசை, பார்வதி மீது தனக்கு இருக்கும் அன்பு, தான் வயதுக்கு வந்த நிகழ்வு என்று பல விஷயங்களை அந்த டைரியில் கொட்டித்தீர்த்து இருந்தாள் .சில விஷங்களைப் படிக்கும் போது அவன் முகம் அவனையும் அறியாது முறுவல் சிந்தியது என்றால் சில விஷயங்களில் அவன் முகம் இளகி துக்கத்தால் சிரமப்பட்டது .


அவனுக்கும் அவளுக்கும் இருந்த அந்த பெயரிடப்படாத சொந்த உணர்வு, பரிச்சிய உணர்வு ஏன் என்று அவனுக்கு விளங்கியது ! தன்னுடைய சிக்குவிற்கு அவன் செய்தது....அதை நினைக்க அவன் மனம் நடுங்கியது ! தான் செய்தது மகா பாவம் ! நீலகண்டனுக்கு அவன் கொடுத்த வாக்கை அவன் காப்பாற்றி விட்டான். அவரது தொழிலைப் போற்றிப் பாதுகாத்தான் ! அவரிடம் கூறியது போல், கல்யாணம் செய்து கொண்டால், நேர்மையாக இருப்பேன் என்பதை அவன் இன்றுவரை நிறைவேற்றி இருக்கிறான்.



ஆனால் அதற்கு முன் அவன் செய்தது?? நல்லவனாக இருந்து என்ன லாபம் என்று நினைத்து தெரிந்தோ, தெரியாமலோ அவன் செய்தது அவனைத் திருப்பி அடிக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் கொடுத்த 'ரெடி' யை அவன் இன்றளவும் பாதுகாத்து வருகிறான். தவறு செய்த ஒரு சில தருணங்களில், ஒருவேளை தனது சிக்குவிற்கு இது தெரிந்தால் என்று அவன் எண்ணாது இருந்ததில்லை. ஆனால் அதே நேரம்,


'ஆமாம், தன்னை கண்டு பிடித்து அவள் வர சாத்தியக் கூறுகள் கம்மி' என்று சொல்லிக்கொள்வான்.


ஒருவேளை அப்படி வந்தால் என்று குத்திக் காண்பித்த மனசாட்சியின் நேர்மையானக் கேள்விக்கு அவனால் என்றும் பதில் கூற முடியவில்லை. வருந்தி ஒரு உபயோகமும் இல்லை. அவளைக் காப்பேன் என்று உறுதி எடுத்து இருந்தான். அதை 15 ஆம் வயதின் சிறுப்பிள்ளைத்தனம் என்று எண்ணாது அதை உறுதியாக எடுத்துக்கொண்டான். மைக்கேலின் ஆட்கள் அவளைப் பின்தொடர்ந்து...அதற்கு மேல் அவன் கற்பனை செய்துக் கொள்ள விரும்பவில்லை.


இன்னும் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு அவளைத் தேடினான். அவளுக்கு நட்பு வட்டம் பெரிதாகவும் இருக்கவில்லை. ரஞ்சன் இதில் ஈடுபடவில்லை என்று உணர்ந்தான். வேறு எங்கோ தான் சென்று விட்டாள், அங்கே அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொள்வான்.தூக்கம் என்பதே அவனுக்கு கிடையாது. இப்படியாக அவளைத் தமிழ்நாடு, கேரளா என்று சல்லடைப் போட்டு தேடாத குறைத்தான். நாட்கள் செல்ல அவனுக்கு எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.



"எங்கடி போனே? அப்படி என்ன உனக்கு.." என்று ஆற்றாமையில் புலம்பினான். அவளது டயரியைத் தான் மாற்றி மாற்றிப் புரட்டிப் படிப்பான்.


அவள் எழுதி இருந்த வாக்கியங்கள்


'இன்னிக்கி நான் பியூட்டி அண்ட் பீஸ்ட் ஸ்டோரி புக் படிச்சேன், உன் ஞாபகம் அதிகம் வருது'


'நான் கிளாஸ் பர்ஸ்ட் சாம். நல்ல மார்க், இங்கிலீஷில் 97%, தேங்க்ஸ் டு யு. நான் வக்கீலா ஆகணும்...ஆவேன் தானே?'



'இன்னிக்கி நான் வயசுக்கு வந்துட்டேன்னு சொல்லறாங்க..எனக்கு ஒரே வயத்த வலி..முடியல சாம்..எங்க போனே..நீ இருந்தா, ஏதாச்சும் சொல்லி மனச மாத்துவே'


இவைகளைப் படிக்கும் போது அவன் கண்கள் நிறைந்தன. அவளுக்குத் தான் செய்ததை அவனால் மன்னிக்கவே முடியாது என்று கூறிக்கொண்டு அவளைக் காணாது தவித்தான்.


அன்று அவன் அந்தப் பெட்டியில் மற்றோரு சிறிய டயரியைக் கண்டு எடுத்தான். அதை எப்படி இத்தனை நாள் காணாது விட்டான் என்று தன்னை நிந்தித்துக் கொண்டான்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதில் ஒரு மங்களூர் முகவரி இருந்தது. அங்கே தான் அவள் சென்று இருக்கவேண்டும் என்று முடிவு கட்டிக்கொண்டான். ஏனென்றால் அவளுக்கு அதிக நட்புக்கள் இருக்கவில்லை. அங்கே சென்றான். அவள் வேலை செய்யும் இடத்தைக் கண்டுபிடித்துக் கொண்டு அவள் முன் நின்றான்.


வாடிக்கையாளர் ஒருவரிடம் அவரது அளவிற்கு ஏற்ப துணியை எடுத்துக் காண்பித்துக் கொண்டு இருந்தாள்.


"ட்ரை திஸ் மேம்!" என்று புன்சிரிப்புடன் அவள் பேசிக் கொண்டு இருக்க, அவன் தூரத்தில் இருந்து அவளைப் பார்த்து, அவள் எவ்வளவு தூரம் இளைத்து இருக்கிறாள், கண்கள் உள்ளே போய், கன்னம் ஓடிப்போய், சிரிப்பு கண்களில் எட்டாது, இயந்திரம் போல் இருப்பது என்பதை எல்லாம் க்ரகித்துக் கொண்டு இருந்தான்.


அந்த வாடிக்கையாளர் அவ்விடம் விட்டுச் சென்ற பின், அவள் முன் நின்று,



"வீட்டுக்கு போகலாம்! வா!" என்று கூற, அவளோ அதிர்ச்சியில் கையில் இருந்த துணிமணிகளைக் கீழே போட்டாள்.


அதை எடுத்து அவள் கையில் கொடுத்து,


"ஃபினிஷ் யூர் வர்க். நான் வெயிட் பண்ணறேன். ஜஸ்ட் 10 மினிட்ஸ் டைம்" என்று எப்போதும் போல் அவளிடம் பேசிவிட்டு வெளியே சென்றான்.


அவளோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு இருந்தாள். அவளுடன் வேலை பார்க்கும் சிப்பந்தி அவளிடம்



"மேனேஜர் கூப்பிடறார்!போ" என்று அவள் கையில் இருக்கும் பொருட்களை வாங்கிக்கொள்ள, அதற்கு பின் நடந்தது, மிகவும் எளிதான ஒன்று.


துருவ், ஓர் நடிகன் அங்கு வந்தான், பேச வேண்டியோரிடம் பேசினான், அவளைக் கூட்டிக்கொண்டுச் சென்றான். அவளும் எவ்வித எதிர்ப்பும் இல்லாது அவனுடன் வந்தது அதிசயம் தான். எதிர்த்து நிற்பதை விட, வேறு விதமாக அவனை அணுக வேண்டும் என்ற முடிவுடன் தான் அவளும் வந்தாள்.


அதிகபட்ச மௌனம் இருவர் இடையே நிலவியது. பேசும் நக்ஷத்திராவை விட, அமைதிப்பிரியை நக்ஷத்திரா இன்னும் ஆபத்து! அவள் மனதின் ஆழம் புரியாது தவித்தான் என்றால், அவன் தான் சாம் என்று சொல்ல முடியாமலும் புழுங்கினான்.



மனைவி தான் தன்னுடைய பிரியசகி! எப்பேர்ப்பட்ட பாக்யம்! ஆனால் அது அவனுக்குப் பிடித்ததா என்று கேட்டால், அவன் துரதிஷ்டசாலி என்று தான் கூறுவான். அதற்கு முன் தீர்க்கப்படவேண்டிய சில விஷயங்கள் அவனுக்கு இருந்தன!


அதை ஒரேடியாக முடிக்க விரும்பினான்! இனி மைக்கேல்-தயாரிப்பாளர் அவர்கள் வழியில் வரக்கூடாது! அதற்குண்டான முயற்சிகளை அவன் செயலாக்கினான். ஆனால் அது அரைகுறை முயற்சியாகி போனது! அவர்களை மட்டும் தான் அவன் பார்த்தான், முக்கியமான வேறொன்றை அவன் காணாது விட்டான்..அப்படியே கண்டு இருந்தாலும்..அவனுக்குக் கல்யாணம் ஆகிய இந்த நிலையில் என்ன செய்து இருக்க முடியும்..


அதற்கு அவன் கவனச் சிதறல் தான் காரணம் என்று கூற இயலாது! அவள் தான் அவனுக்கு முக்கியமாகிப் போனாள். அதுவும் அவள் கரு கலைந்த போது, அவன் அடைந்த துக்கம்….நெடுநாள் கழித்து அவன் அழுதான்!


அன்னை இறந்த போது கொஞ்சம் அழுதான்! அவருக்கு அந்த முடிவாவது நிம்மதி கொடுக்கட்டும் என்று நினைத்தான்! அவள் காணாது போன போது, தவித்தான்! பார்வதியை இழந்து அவள் இருந்த நிலை அவனுக்குத் துக்கத்தைக் கொடுத்தது. அவள் காரணம், அவன் உள்ளம் கலங்கியது.


ஆனால் குழந்தையை இழந்து அவள் வருந்தி அழுதது, அவனைக் காரணம் கூறியது, அதில் துருவ் துவண்டுப் போனான். அவனுக்கு ஆசை இல்லையா? பாசம் இருந்தது இல்லையா? அல்லது காதல் தான் இல்லையா?


அவள் வயதும், மன அழுத்தமும் தான் இங்கே காரணம்! அவள் துக்கம் போக, அவள் கூறியதை, ஏசியத்தை எதிர்க்க வில்லை. ஏற்றுக்கொள்ளவதும் எதிர்க்காது இருப்பதும் வெவ்வேறு விஷயங்கள்.


ஒருவேளை இருவரும் சிறுவயதில் பிரியாது இருந்து இருந்தால், காதலித்து இருப்பார்களா என்று கேட்டால், அதிகமாக அது நடந்து இருக்கும். இருவர் இடையே இருக்கும் அன்பு அதற்கு வழி வகுத்து இருக்கும். அவள் மீதான அளவுக்கு அதிகமான அன்பை அவனுக்கு காட்டவும் முடியவில்லை. காட்டாது இருக்கவும் முடியவில்லை. காதலைச் சொல்ல முடியாது அவன் பட்டப் பாட்டை அவனே அறிவான் ! கணவனாகவும், நண்பனாகவும் அவனுள் சாம் மற்றும் துருவ் புகுந்து அவனை இம்சை செய்து ஒருவழியாக்க, எதிர்பாராத நேரத்தில் அவள் அவனது காதலைப் புரிந்துக்கொள்ள ஆரம்பிக்க, அங்கே சிக்கல்கள்.


அவன் மனதில் தற்போது அவளைத் தவிர யாரும் இல்லை. ஆனால் அதற்கு முன் ? அவன் அவளுக்குச் செய்த மாபெரும் குற்றம் இரண்டும் அவனை அவளை விட்டு நீங்கச் செய்தது. அவளை, அவளுடைய மேன்மைக்காகப் பிரிந்தான். வாழ்வு வேறு விதமாக அவனைக் கூட்டிக்கொண்டுச் செல்ல சிறைத்தண்டனை முடிந்து அவளை முழுவதும் பிரிந்தான்.


அவள் கணவனாக இருக்க அவனுக்குத் தகுதியில்லை என்று அவன் சென்று விட்டான் . சட்ட ரீதியாக அவளை மணந்தவன், சட்ட ரீதியாக அவளைப் பிரிந்தான் ! அவளோ அவனைத் தேட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். அவன், அவளுக்காகத் திரும்பி வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள், அவர்கள் இடையே இருக்கும் அன்பிற்கு சக்தி இருந்தால், அது நடக்கும் என்று தீர்மானமாக நம்பினாள். அந்த நம்பிக்கையில் அவளது ஒவ்வொரு நொடி இங்கே சென்னையில் !


அவள் நன்றாக என்றும் இருப்பாள், தான் நினைத்தபடி படித்து விட்டாள், இனி அவள் வாழ்வு சிறக்கும் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான். அது உதவாத சமாதானம் என்று அவனே அறிவான் ! வேறு வழியில்லை ! இனி அவனுடைய கடமைகளை அவன் சரிவர நிறைவேற்ற வேண்டும், அது தான் வாழ்வின் குறிக்கோள் என்று தன்னைத் தானே மாற்றிக்கொண்டான் .


இப்படி சிந்தனை மயத்தில், துருவ் 'ஹிடிம்பா' கோவிலில் இருக்க, தியா கோவிலைச் சுற்றிக்கொண்டு இருந்தாள். அவள் பிடிவாதம் பிடித்து இன்று இங்கே வந்து இருக்கிறாள். ஒன்று நெடுநாளாக இங்கே வர வேண்டும் என்ற அவா, மற்றொன்று துருவ்விற்கு நாளை பிறந்தநாள். துருவ்வின் கடவுள் நம்பிக்கை அறிந்து இருந்தும் அவள் அவனை இங்கே இழுத்துக்கொண்டு வந்து இருக்கிறாள்.


பிரசாத குங்குமத்தை அவன் நெற்றியில் இடப்போக, அவன் அதை மறுத்தான்.


"ப்ச் ! இதெல்லாம் வேண்டாம், உனக்கு தெரியும் , எனக்கு இது பிடிக்காதுன்னு" என்று அவன் ஆரம்பிக்க, தியாவின் முகம் சூம்பிப் போனது.


"ஒருநாள்,உன்னோட தியாக்காக இது கூட கிடையாதா ?" என்று ஏங்கும் குரலில் அவள் ஆரம்பிக்க, அவனோ அவளை முறைத்தான். அவள் அதில் சற்று எரிச்சல் அடைந்து,


"இதே வக்கீலம்மா வச்சு இருந்தா, ஈ ன்னு இளிச்சுகிட்டே முகத்தை காமிச்சு இருந்து இருப்பேலே" என்று முறுக்கிக்கொள்ள, துருவ்


"அவ என்னை மாறி ! அவளோட கடவுள் நம்பிக்கை எல்லாம் அவ சுண்டுவிரல் அளவு தான் அண்ட் இந்தமாறி வேஷம் கட்டறது அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அவளுக்கு மட்டும் தான் என்னை தெரியும் " என்று அவள் பதில் உரைக்க, அதில் தியா முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.


அவளது முகம் திருப்பல் அவனுக்கு வேதனையைக் கொடுத்தது.



"ஹேய் தியா பேபி ! இங்க பாரு " என்று அவளது தோளைத் திருப்ப, அவன் இன்னும் பிடிவாதமாக நிற்க,


'அப்படியே அப்பனை கொண்டு இருக்கா' என்று அவளை மனதில் செல்லமாக வைத்தவன், துருவ் அவள் முன் நின்றான். குட்டிப்பெண் என்றெல்லாம் கூற முடியாது, அவள் வயதிற்குச் சற்று அதிக வளர்ச்சி உண்டு அவளுக்கு. சந்தன நிறம், அழகுப் பெட்டகம்,, அவளது அன்னையைப் போல். ஆனால் எல்லாவற்றையும் ஒருவருக்கு வாரிக் கொடுக்க கடவுள் ஒன்றும் மிகமிக நல்லவர் அல்லவே ! தன்னை எல்லோரும் தினம் நினைக்க வேண்டும் என்பதற்கு ஏதேனும் செய்து வைக்கும் சாமர்த்தியசாலி அன்றோ. அது போல் அவளுக்கும் ஒன்று உண்டு ! அதன் காரணம் .....



அவன் அறியாக் காரணம் அது ! அதில் அவளும் உண்டு, அவன் மட்டுமல்ல !


அவளை அன்பாகப் பார்த்தவன்,


"நான் என் வக்கீல் அம்மாவை இதை செய்ய விட்டு இருப்பேனானு தெரியல, பட் தியா பேபி எனக்கு எப்போதும் ஸ்பெஷல் ! சோ …" என்று அவள் உயரத்துக்குச் சற்று குனிந்துக் கொள்ள, அவள் முகம் மலர்ந்து அவன் நெற்றியில் திலகம் இட்டாள்.


"மாலா அம்மா சொல்வாங்க, என்ன நடந்தாலும் கடவுள் நம்பிக்கை விட கூடாதுன்னு ! கடவுள் பாசிட்டிவ் எனர்ஜி ! அந்த பாசிட்டிவ் எனர்ஜி நமக்கு வேணும் சாம் " என்று பெரிய மனுஷி போல் அறிவுரை கொடுக்க, அவன் சிரித்துக்கொண்டே


"திடீர் பக்தனை பார்த்தா அவர் ஷாக் ஆகப்போறார் , உன்னோட கடவுள் ! சோ சோஷியல் டிஸ்டன்சிங் ரெண்டு பேரும் மெயின்டைன் பண்ணறோம் ! அவருக்கு நல்லது அது தான்" என்று கோவிலை ஒருமுறை வெளியில் இருந்து பார்த்துவிட்டு இருவரும் அவ்விடம் நீங்கினர். பீமனின் மனைவியும், கடோத்கஜனின் தாயுமான இடும்பிக்கு எழுப்பப்பட்ட கோவில் அது. இங்கே பிரபல தமிழ்ப்படம் ஒன்று எடுக்கப்பட்டது, ஆகையால் மணாலி வரும் தமிழ் அன்பர்கள் இங்கே அதிக அளவில் கண்டிப்பாக வருவார்கள். அப்படி தான் கோவிலை விட்டு கீழே இறங்கி வரும் பொது, ஒரு தமிழ் குடும்பம் மேலே ஏறிக்கொண்டு இருக்க, அந்த குடும்பத்தில் இருந்து ஒரு பெண்மணி, திடீரென்று அவனை நாடி,


"நீங்க நடிகர் துருவ் தானே " என்று அவனைப் பார்த்து கேட்டே விட்டார். அதில் துருவ் எவ்வித மன சஞ்சலத்தையம் முகத்தில் காட்டிக்கொள்ளாது,


" நீங்க என்ன சொல்லறீங்க ?" என்று தெளிவாக ஹிந்தியில் கேட்க, அவரோ அசராது,


"துருவ் சார் ஹிந்தியில் நடிச்சு இருக்காரு, அவருக்கு ஹிந்தியும் தெரியும் ! சும்மா சொல்லுங்க சார், நீங்க துருவ் சார் தானே " என்று விடாது கேட்க, இம்முறை தியா குறுக்கே புகுந்து அவரிடம்


"எங்களுக்கு நீங்க என்ன சொன்னீங்கன்னு புரியல, எங்களுக்கு போகணும்" என்று துருவ்வின் கையைப் பிடித்துக்கொண்டு அவ்விடத்தை இன்னும் வேகமாகக் கடந்தாள்.




இப்படி நடப்பது முதல் முறை அல்ல, பலமுறை நடந்து இருக்கிறது. முகத்தில் பெரும்பாலும் அதிகமாக தாடி அவன் வைத்துக்கொள்வது கிட்டத்தட்ட முகமூடி போலத்தான். அப்படியும் மக்கள் கண்டுபிடித்து அவனைக் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் தீர்க்கமாக மறுத்து விடுவான். ஒருமுறை ஒரு சுற்றுலாப் பயணி அதீத ஆர்வத்தில் அவனைப் புகைப்படம் எடுக்கப்போக, அவன் அலைபேசியை பிடுங்கி வைத்துக்கொண்டான். இது தான் இதுவரை அதிகபட்சமாக நடந்த சம்பவம். ஆனால் எதோ காரணம் இதுவரை தமிழ் பத்திரிக்கைகளில் இவர் நடிகர் துருவ்வாக இருக்க கூடுமோ என்ற ரீதியில் செய்திகள் பிரசுரம் ஆகவில்லை. மக்கள் ஒருவேளை தன்னை மறந்து விட்டார்களோ, அதுவும் நல்லது தான் என்று அவன் நினைத்துக் கொண்டான். அவன் 5 ஹிந்திப் படங்கள் செய்து இருந்தான், தமிழ் அளவு அதிகப்படங்கள் செய்யாததால் அவனை ஹிந்தி மக்கள் அதிகம் தேடவில்லையோ ?


அவன் விரும்புவது அமைதியான வாழ்வு, அவன், தியா, மற்றும் மணிமாலா, அவனது குறை நிறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் போதும் அவனுக்கு இப்போது.



8 மணிநேரம் பயணம் , ஷிம்லா வந்து ஆயிற்று . தியாவிடம் இரவு வணக்கத்தை தெரிவித்து விட்டு துருவ் உறங்க முற்பட்டான். சரியாக மணி 12 ஆக, மெல்லிய குரல் ஒன்று அவனை எழுப்பி விட்டது.


"ஹேப்பி பர்த் டே சாம் ! ஹேப்பி பர்த்டே டு யு " என்று தியா பாடி அவனை எழுப்பி விட்டாள். அவனைத் தெரிந்தோர் என்று ஒரு மாநிலமே இருந்த காலத்தில் யாரும் அவனை இப்படி எழுப்பிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியதில்லை. ஆனால் இன்று அவனுக்கு நெடுநாள் கழித்து இம்மகிழ்ச்சி!


"தேங்க யு பேபி" என்று அவளை அணைத்துக்கொண்டான். ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு வீட்டிலேயே அவள் செய்த சாதாரண கேக் ! அவள் அவனுக்காக அன்பொழுக செய்த கேக் ! அது தான் இங்கே முக்கியம்.


"இந்த க்ரீம் வச்சு எழுத தெரியலே ! முதல் தடவையா, சோ சிம்பிளா போச்சு" என்று தியா வருத்தப்பட, துருவ் கண்கள் கலங்கி இருந்தது


"கடவுள் எனக்கு கொடுத்த பெஸ்ட் கிஃப்ட் நீ ! இதுக்கு மேலே என்ன வேணும் எனக்கு" என்று மெழுகுவர்த்தியை அணைத்து, கேக்கை வெட்டி அவளுக்கும் , மணிமாலாவுக்கும் புகட்டினான்.


நிறைவான குடும்பம், ஆனால் அவனுக்கு அவள் இங்கு இல்லை. அவள் அவனுடன் இருந்தால்..இருவருக்கும் அது கஷ்டம்..தர்மசங்கடம்..வேண்டாம்..இந்த தூரமும் நல்லது தான்..



அவள் ஞாபகம் அன்று அதிகம் அவனுக்கு. ஒரு முறை கூட இருவரும் அவனது பிறந்த நாள் அன்று சேர்ந்து இருந்ததில்லை. அவள் சட்ட கல்லூரி சேர்ந்தபின் அவனது பிறந்தநாள் வந்தது. அவள் அதற்கு முன் அவனைக் கூப்பிட்டு,


"நான் சென்னைக்கு வர போறேன்.." என்று அறிவிக்க, அவன்


"எதுக்கு?" என்று காரணம் தெரிந்துகொண்டு வேண்டும் என்றே கேட்டான்.


"உன்கூட எனக்கு நாளைக்கு இருக்கணும். உன் பொறந்த நாள். ஐ வான்ட்…"என்று தொடர்ந்துப் பேசப் போனவளை தடுத்து



"விஷ் பண்ண நேரில் வரணும் இல்ல. ஜஸ்ட் ஸ்டே புட். சும்மா டிராவல் செய்ய வேணாம். உன்னை படிக்க தான் புனே அனுப்பி இருக்கேன்.சோ படி! இப்போ பை." என்று அழைப்பைத் துண்டித்து விட்டான். அடுத்தப் பிறந்தநாளுக்கு அவள் அவனை இம்மாதிரி கேட்கவேயில்லை. ரோஷக்காரி அவள்.


இப்போது அவன் ஏங்குகிறான். ஒருமுறையாவது இருவரும் சேர்ந்து இருந்திருக்க வேண்டும் அவன் பிறந்தநாள் அன்று என்று இப்போது விரும்புகிறான். முடிந்தது முடிந்ததே!



இங்கே நக்ஷத்திரா அவனது போட்டோ முன் அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு



"ஹேப்பி பர்த்டே..நல்ல பிடிவாதம் பிடிச்சு ஒருமுறை கூட நான் உன் கூட இருந்தது இல்ல..ஹேப்பி?" என்று வெறுப்பை உமிழ்ந்தாள். அதில் அவளுக்கு என்ன கிடைத்தது! வருத்தம் மட்டும் தான். கண்களைத் துடைத்துக் கொண்டு அன்று செய்ய வேண்டியதைப் பட்டியல் இட்டாள்
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலை அவன் நிர்மாணித்த முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் சென்று அவன் செய்ய விரும்பிதை அவன் துணையாக நின்று செய்தாள். அவள் உடன் சூர்யா மற்றும் ரோஹிணி. எல்லோர் முகத்திலும் பேருக்கு ஓர் மலர்ச்சி. அவ்வளவு தான்! மனதில் அவன் மட்டுமே!


திடீரென்று அஜய்யின் முகத்தை அங்கு காண, அவள் சற்று திடுக்கிட்டுப் போனாள். அஜய் தான் புன்னகைத்து,


"ஐ வில் வெயிட்! நோ ரஷ்" என்று அவளை ஆசுவாசப்படுத்தினான். வேலைகளை முடித்து விட்டு நக்ஷத்திரா வர,


"சொல்லுங்க அஜய்! என்ன விஷயம்?" என்று விசாரிக்க, அஜய்


"இன்னிக்கி பார்க்கறதா சொல்லி இருந்தீங்க! துருவ் சார் பயோ மூவி பத்தி பேச" என்று எடுத்துக்கொடுக்க, அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது!


"எஸ்..மறந்து போச்சு...சாரி. வீட்டுக்கு போய் பேசலாம். இன்ஃபாக்ட், ரோஹிணியும் இருக்காங்க, அவங்களுக்கும் ஸ்கிரிப்ட் பார்க்கணும்" என்று எல்லோரும் சேர்ந்து அவள் வீட்டிற்குச் சென்றனர். பாலா அவர்களுடன் வெளியே வரவில்லை, வீட்டில் இருந்தாள்.



ரோஹிணியின் முகத்தில் திரைக்கதையை வாசித்து பார்த்தப்பின் ஒருவித அதிருப்தி குடிக்கொள்ள, நக்ஷத்திராவும் தனது பங்கிற்குத் திரைக்கதை வாசித்துப் பார்த்து சொன்ன நேரிடையான பதில்



"நோ!" என்பது தான். அதில் அஜய் சற்று அதிர்ந்து போனான்.


"நீங்க ஓகே சொன்னீங்கன்னு பாலா சொன்னா …" என்று இழுக்க, நக்ஷத்திரா பாலாவிடம்


"ஏண்டி பொய் சொன்னே?" என்று பிடித்துக்கொண்டாள்


பாலாவோ,

"நீ தானே பார்க்காலம்னு சொன்னே..அதை தான் நான் சொன்னேன்" என்று ஆரம்பிக்க, நக்ஷத்திரா அவளைச் சாடும் முன், அஜய் அவர்கள் இடையே புகுந்து,


"ப்ளீஸ் ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க..நக்ஷத்திரா மேம் இந்த ஸ்க்ரிப்டில் என்ன பிரச்சனைனு சொல்லுங்க..கரெக்ட் செய்யலாம்" என்று சமாதானக் கொடியைப் பறக்க விட, நக்ஷத்திரா


"எங்க லைஃப், ஓபன் புக் இல்ல" என்று ஒரே வாக்கியத்தில் மறுப்பைத் தெரிவித்தாள். பாலா அதற்குள்


"அது அல்ரெடி ஓபன் புக் ஆகிடிச்சு வென் துருவ் வென்ட் டு ஜெயில்" என்று கோபத்தில் வார்த்தையை விட, நக்ஷத்திரா அவளை எரிப்பது போல் பார்த்து,


"அது எங்க பிரச்சினை! உனக்கு என்ன வந்தது. அஜய்! நோ பயோ! இது பைனல்! உங்க அசிஸ்டெண்ட் கிட்ட தெளிவா புரிய வைங்க!" என்று திரைக்கதை ஏந்திய அந்த டேப்லெட்டை அவர் கையில் கொடுத்து தனது அறைக்குள் சரண் புகுந்தாள். அவள் பின்னே செல்லப் போன பாலாவை ரோஹினியும், அஜய்யும் தடுத்து நிறுத்தி,


"பாலா, கீப் கொயட்" என்று அதட்டினர்.


"அப்போ ஷிம்லா ட்ரிப், லொகேஷன் பார்க்க…" என்று பாலா மீண்டும் ஆரம்பிக்க, அஜய்


"லுக் பாலா! நக்ஷத்திரா மேம் சம்மதம் இல்லாம ஒன்னும் செய்ய முடியாது. கெடுக்காதே! முதலில் என்ன சேஞ் செய்யணும்னு பாரு! " என்று அஜய் அறிவுறுத்த, பாலா டேப்லெட்டில் தெரிந்த


'துருவ நக்ஷத்திரா' என்ற படத்தின் தலைப்பை வெறித்து நோக்கினாள்.

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 32



காலையில் துருவ் எழுந்து வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருக்க, அவனுக்கு ஓர் அலைப்பேசி அழைப்பு ! எடுத்தவன்,


"ஓகே ! கண்டிப்பா சொல்லறேன் !" என்று மறுமுனையில் பேசியவர்க்குச் சாதகமாகப் பேசியவன், அழைப்பைத் துண்டித்து விட்டு,


"தியா " என்று கூக்குரல் இட்டான் ! அவளும் வெளியே கிளம்ப தயாரான நிலையில் இருக்க,


"ஏன் நீ ஆர்ட் காம்பெடிஷன் இல் கலந்துக்கலே !" என்று கைகளைக் கட்டிக்கொண்டு அவளை நேரே பார்த்து வினவ, அவள் தோளைக் குலுக்கியபடி


"தோணலே ! அவ்ளோ தான்" என்று பதில் கொடுக்க, துருவ் கடுப்பானான்.


"ஏன் ! உன்னோட நேச்சுரல் திறமை அது!ஏன் வேணாம் ?" என்று அவளைக் கடிய, அவள்


"பிடிக்கலே ! " என்று மீண்டும் பிடிவாதம் பிடித்தாள்.


"நீ கலந்துக்கறே ! அவ்வளவு தான் !" என்று முடிவாக அவன் பேச, அவள்


"என்னோட இஷ்டம் அது !" என்று தானும் பிடிவாதத்தில் குறைந்தவள் இல்லை என்று காட்ட, அவன்


"என்னடி பிரச்சனை உனக்கு ?" என்று எரிச்சல் அடைந்தான். அவளோ


"நீ தான் சாம் ! நான் சொன்னா, இல்ல ஏதாச்சும் வாங்கி தந்தா வேணாம்னு பிடிவாதம் பிடிப்பே ! அதே நான் பிடிவாதம் பிடிச்சா உனக்கு கோபம் வருது ! டூ பேட் ! டபிள் ஸ்டாண்டார்ட்ஸ் " என்று அவளும் கத்தினாள். இருவரின் இந்த வாக்குவாதத்தைப் பார்த்து மணிமாலா என்ன என்பது போல் அவ்விடம் வர, துருவ் அவரிடம்


"நத்திங் ! இவளுக்கு டெல்லி ஆர்ட் எக்சிபிஷனில் அவளோட பெயின்டிங் வைக்க ஓர் சான்ஸ் கிடைச்சு இருக்கு ! பட் மேடம் போக மாட்டாங்களாம்" என்று தியாவை மாட்டிவிட பார்க்க, தியாவா அசருவாள் !


"என்னோட இஷ்டம் மாலா மா ! "என்று எதிர்த்துப் பேச, துருவ் கடுப்பாகி


"நீ போறே ! கலந்துக்கறே ! இது பைனல் " என்று அவ்வீட்டின் ஆண் மகனாக அவன் பேசி முடிக்க, தியா


"மாட்டேன் " என்று கத்தியதைப் பொருட்படுத்தாது அவன் வேலைக்குச் சென்று விட்டான்.


மாலை வீடு திரும்பிய பின் , தியா வீட்டில் இருக்கவில்லை. இத்தனைக்கும் அவளுக்கு இன்று ட்யூஷன் வகுப்புகள் உண்டு ! இன்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்காது அப்படி என்ன செய்கிறாள் என்று மணிமாலாவிடம் வினவ,


"கோபம் அம்மையாருக்கு ! பக்கத்துல இருக்கிற அந்த ஓடை பக்கம் போயிருக்கா " என்று தெரிவிக்க, அவன் தேநீர் கூட அருந்தாது அவளைத் தேடிச் சென்றான். ஓர் பாறை மீது அமர்ந்து எதிரில் இருக்கும் ஓடையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் அருகே வந்து விட்டான் என்று அவளுக்குப் பழக்கமான காலடிகளில் அவள் உணர்ந்தாள். ஆனாலும் திரும்பி பார்க்கவில்லை. கோபம் ! அவன் மீது அவளுக்கு அதிகப்படியான கோபம்! முகத்தை இன்னும் திருப்பிக் கொள்ள, மூக்கு நுனி சிவக்க, வேண்டும் என்றே முகத்தை திருப்பிக் கொள்ளும் அவளைக் கண்டு அவனுக்கு ஏனோ சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.


சிரித்தும் விட்டான் ! அதில் அவள் ஓர் அனல் பார்வையை அவன் புறம் வீச, அவன்


"எலிக்கு கோபம் வந்தா எப்படி இருக்கும்னு இப்போ தான் பார்க்கறேன்" என்று கேலி செய்ய, அவள் முறைத்து


"நீ என்ன சாம்பாரில் போடற புளியா ?" என்று வேண்டுமென்றே கேட்க, அவன் அதில் இருக்கும் குதர்க்கத்தைப் புரிந்துக்கொண்டு


"புளி இல்ல, புலி !" என்று அவளைத் திருத்த, அவள் உதட்டை வலித்துக் காட்டினாள்.


சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு,


"போலாம் வா!" என்று மங்கிக் கொண்டு இருக்கும் வானத்தைக் குறிப்பிட்டு கூறினான். அவள் எங்கே கேட்டால் தானே!


"வரலே" என்று மறுத்துவிட, அவள் முன் நின்றவன்,


"தியா! இனி இங்க தனியா இருக்கறது சேப் இல்ல. புரியுதா?" என்று கடுமையாகக் கூறினான்.


"எனக்கு வீட்டுக்கு வழி தெரியும்" என்று அவள் பிடிவாதம் குறையவில்லை.


அவளது போக்கு பிடிக்கவில்லை. சொன்னால் கேட்டால் தேவலாம்! ஆனால் எங்கே?



அவளை முறைத்து விட்டு அவ்விடம் நீங்கினான். தனது காரில் அமர்ந்துக் கொண்டு அவளைக் கண்காணித்தான்.அவன் கார், சாலையின் மறுபுறத்தில் நிறுத்தி இருந்தான். அங்கே தான் நிறுத்தவேண்டும் என்பது விதி, அதை அவன் மீறவில்லை. பெரிய அகலமான சாலை அல்ல அது, ஆயினும் பேருந்து ஓடும் சாலை. சிறிது நேரம் கழித்து ஒரு கும்பல், 3-4 ஆண்கள் கொண்ட குழு ஒன்று அங்கே வந்தது! அவள் அங்கே இருக்கும் ஒற்றைப் பெண்! அந்த குழுவின் நடை அவளை நோக்கிச் செல்ல ஆரம்பிக்க, அவன் காரை விட்டு கீழே இறங்கினான்.



அவளும் தன்னை நோக்கி வரும் குழுவைக் கண்டு சற்று திகைத்தாலும் இங்கே இனி இருப்பது நலமல்ல என்று பாறையில் இருந்து கீழே இறங்க எத்தனிக்க, சற்று தடுமாறி கீழே விழப்போனாள்.



அவள் கீழே விழுவதற்குள் அந்த குழுவில் இருந்து ஒருவன் அவளைத் தாங்கிக்கொள்ள, மற்றவர்கள் அவளைச் சூழ்ந்து கொள்ள, அவள் முகத்தில் பயத்தின் ரேகைகள். தன்னைப் பிடித்துக் கொண்டிருந்தவன் பிடியில் இருந்து திமறப் பார்த்து அவள் கீழே விழ, அவளை, அவர்கள் புறாவை வேட்டை ஆட வட்டமிடும் கழுகுகள் போல் அவளைச் சுற்ற ஆரம்பித்தனர்.



இங்கே துருவ் சாலையைக் கடக்கும்முன், இரு பேருந்துகள் ஒன்றற்கொன்று எதிர் எதிரே வர, குறுகலான சாலையில் அந்த பேருந்துகள் ஒன்றற்கொன்று கடக்க அரும்பாடு பட்டன. அதில் துருவ் சாலையைக் கடக்க பெரும்பாடு பட்டான். அதற்குள் இவ்வளவு அனர்த்தங்கள்! ஒருவழியாக துருவ் சாலையைக் கடந்து அங்கே செல்ல, அப்போது தான் அவர்கள் அவளை சுற்றிக்கொண்டு அவளை எள்ளி நகையாடிக் கொண்டு அடுத்த கட்ட இழி செயலுக்கு ஆயுத்தம் ஆகிக்கொண்டு இருந்தனர்.


ஆனால் துருவ் அங்கே வந்து விட்டானே ! அதுவரை கண்கள் நீர் கோர்க்க, தன்னைக் காப்பாற்ற துருவ் இல்லையா என்று அவனை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த தியா அவனைக் கண்டு முகம் மலர்ந்தாள். கண்களை அவள் துடைத்துக் கொள்ள, அவளைச் சூழ்ந்தோர் சுதாரிப்பதற்குள் அவர்களை ஒருவழி ஆக்கினான் துருவ்.



தியாவை அடையும் வரை அவன் மனம் பட்ட பாட்டை அவனே அறிவான். தான் செய்த பாவங்கள் தன்னைச் சுற்றி இருப்போரை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்று ஏற்கனவே பார்த்தவன், தியாவிற்கு நடந்த ஓர் கொடூர நிகழ்வு போதும் , இனி அவள் எதற்கும் வாழ்க்கையில் கஷ்டப்படக்கூடாது என்று உறுதி பூண்டவன் இன்று அவளுக்கு மீண்டும் ஓர் கஷ்டமா, அதுவும் தான் உயிருடன் இருக்கும் போது என்று பொங்கி விட்டான் !


தான் நல்ல உடல்நிலையில் உயிருடன் இருக்கும் போது, அவளை எவ்வித துன்பமும் அண்டாது என்ற உறுதியின் படி, அவளைப் பத்திரமாக அவ்விடம் விட்டு நீக்கி, தன் தோள் வளைவில் அணைத்துக்கொண்டு தனது காரை நோக்கிச் சென்றான். ஆனால் அவளுக்கு நடப்பதில் சற்று சிரமம் இருக்க, ஒன்றும் யோசிக்காது, அவளை கைகளில் ஏந்திக்கொண்டான். காரில் அவளைக் கிடத்தியவன், காரைக் கிளப்ப, தியா அழுது கரைந்தாள். என்ன மாதிரி முட்டாள்த்தனம் அவள் செய்தாள், ஒருவேளை துருவ் சரியான நேரத்திற்கு அங்கே வராது இருந்திருந்தால் என்ன வேண்டுமென்றாலும் ஆகிருக்குமே !


"அழாதே ! காலில் சுளுக்கா ?" என்று அவன் அக்கறை கொண்டு கேட்டாலும் அதில் இதம் இருக்கவில்லை. கோபம், ஆம் கோபம் கண்டிப்பாக இருந்தது, ஆனால் அதை அடக்கிக் கொண்டு கேட்கிறான் என்று தியா புரிந்துகொண்டாள்.


"ம்ம் ...சாரி சாம் " என்று அவள் மன்னிப்பு கேட்க, துருவ் அதற்கு பதில் பேசாது வண்டியை ஓட்டினான். அதிகமாக மௌனம், வீட்டிலும். மணிமாலா எதோ சரியில்லை என்று புரிந்துகொண்டார்.


"என்ன ஆச்சு ?" என்று துருவ்வைக் கேட்க, அவனோ


"ஒன்னும் இல்ல ஆன்டி ! காலில் அவளுக்கு சுளுக்கு ! அப்பறம் அவளுக்கு பசிக்குது ! அவ்வளவு தான் !" என்று மழுப்பி விட்டான். அவளிடம் 'ஒன்றும் சொல்லாதே' என்று வேறு ஜாடை காட்டினான் . அவளும் மழுப்பல் பதில் தான் கொடுத்தாள். ஆனால் இவர்கள் இருவரை விட உலக அனுபவம் வாய்ந்தவருக்கா தெரியாது, இவர்களின் நடிப்பு!


இரவு உணவு உண்ணும் போது,


"என்ன நடந்ததுன்னு ரெண்டு பேரும் சொல்ல மாட்டீங்க அப்படி தானே ! தம்பி உங்க நடிப்பு திறமை எனக்கு ஏற்கனவே தெரியும் ! தியா ! நீ எப்பியிருந்து நடிக்க ஆரமிச்சே ? சரியா செட் ஆகலே" என்று போட்டு வாங்கினார். ஆனால் இவ்விருவர் கல்லுளியில் செதுக்கப்பட்ட சிலை போல் ஒன்றும் பேசாது இருக்க, மணிமாலா


"ம்ம்ம் நல்ல ஒத்துமை ! பாப்போம் எவ்வளவு தூரம் நடக்குதுன்னு " என்று பொருமித் தள்ளினார். அவளால் ஒழுங்காக நின்றோ, நடந்தோ செய்ய முடியாது போக, அவன் உணவு முடிந்தபின் அவள் செய்யும் வேலைகளையும் சேர்த்து செய்து விட்டு, சுளுக்கிற்கு உள்ள களிம்பை எடுத்துக்கொண்டு அவள் காலில் இதமாகத் தடவிவிட்டான்.



"நான் ஏற்கனவே சாரி சொன்னேன் சாம் ! நீ ஒன்னும் பதில் சொல்லலே !" என்று தனிமையில் அவள் மீண்டும் வருந்த, அவன் இறுக்கமான முகபாவத்துடன்


"நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியுமா ?" என்று வினவினான். அதற்குப் பதிலாக அவள் கண்களில் கோர்த்த நீர், தாரைதாரையாக வழிந்தது.


"ம்ம் ..தெரியும் !" என்று அவள் அழுகையில் திக்கித்திணறிச் சொல்ல, துருவ்


"தெரிஞ்சும் நீ இப்படி பண்ணறது ... எனக்கு வலிக்குது" என்றான் . அதில் வேதனை மட்டுமே !


அவன் வேதனைப் புரிந்தவள், அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவன் உடல்மொழி எப்போதும் போல் இருக்க வில்லை, ஒருவித பதட்டம் அதில் இருந்தது. அது அவளுக்கு ஏதேனும் நேர்ந்து இருந்தால் என்று யோசனையால் என்று அவள் புரிந்துகொண்டாள்.


"ஒன்னும் ஆகி இருக்காது, சாம் ! நீ டென்சன் எடுக்காதே " என்று அவனுக்கு அவள் ஆறுதல் அளிக்க, அவன் எழுந்து நின்று அவள் முகத்தை கையில் ஏந்தினான்.


"என்னால உன்னை இழக்க முடியாது சுவீட்டி !" என்று கண்கள் கலங்க , அவள் நெற்றியில் முத்தமிட்டான் . அவள் கண்கள் குளமாயின ! ஒருகாலத்தில் அவனை எப்படி எல்லாம் உதாசீனப்படுத்தினாள் ! இழிவாக நடத்தினாள் ! ஆனால் இன்று ? அவன் இல்லை என்றால் அவள் ? அதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது ! உட்கார்ந்து கொண்டே, அவன் வயிற்றோடு சாய்ந்தவளை இறுக்க அணைத்துக்கொண்டான்.


அடுத்த நாள் அவன் வேலைக்குக் கிளம்பும் முன், அவள்


"நான் ஆர்ட் எக்சிபிஷனில் சேர போறேன் " என்று அறிவிக்க, அவன் புன்முறுவல் பூத்தபடி,


"குட் !"என்று கூற, அவள்


"என்னை இன்னிக்கி கூட்டிகிட்டு போய் விட முடியுமா ! "என்று அவள் கேட்டே விட்டாள். எப்போதும் பேருந்தில் தான் செல்வாள், அதிகமாக அவனுக்கு தொந்தரவு அளிக்க மாட்டாள். இன்று எனோ மனம், அவன் வேண்டும் என்று நினைத்தது. அவனும் மறுக்காது ,


"கண்டிப்பா! வா !" என்று அவளை அழைத்துக்கொண்டு செல்ல, அவள் செல்லும் இடம் வந்தது . அவளுடைய தோழிப்பெண் எதேச்சையாக அங்கு வர, அவளிடம்


"அவளை பார்த்துப்பியா ?" என்று அவளது சுளுக்கைப் பற்றி கூற, அவள் தோழியும் ஆம் என்பது போல் தலையை ஆட்டினாள். தோழியுடன் தியா செல்ல ஆரம்பிக்க, தடுமாறி நடக்கும் அவளைப் பார்த்து துருவ்வின் மனம் வேதனையில் சுணங்கியது. திடீரென தியா அவன் புறம் திரும்பி நடக்க ஆரம்பிக்க, என்ன இது என்பது போல் அவளை நோக்கி அவனும் நடந்தான் , வேகமாக !


"நீ நான் வாங்கி தந்த ஜெர்கின்ஸ் போட மாட்டேன் சொன்னதில் எனக்கு கோபம் ! அதில் நான் செய்ஞ்ச பைத்தியக்காரத்தனம் ! அம் சோ சாரி சாம் ! எப்போ என்னை மன்னிக்கனுன்னு தோணுதோ அப்போ மன்னிச்சுக்க ! பட் உன்னை நீயே, உன்னை கெட்டவன்னு நினைக்காதே !


நீ எப்போது என் கிட்ட சொல்லுவியே ! என் வாழ்க்கையோட பெஸ்ட் திங் நீன்னு ! நான் இப்போ சொல்லறேன் ! நீ தான் என்னோட எல்லாம் ! என்னோட பெஸ்ட் திங் !


அண்ட் ஐ லவ் யு " என்று சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவனைக் கட்டிக்கொண்டாள். அதில் அவன் திகைத்து, ஒன்றும் சொல்லாது இருக்க, அவள் அவன் மார்பில் சாய்ந்தபடி


"ஒன்னு சொல்ல மாட்டியா ?" என்று வினவ, அவன்


"ம்ம் " என்று மட்டுமே சொல்ல, அவள் கடுப்பாகி


"மி டூ சொல்லலாம் " என்று நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனும் குனிந்து அவளை நோக்கி


"சொன்னா தான் தெரியுமா !" என்று ஒற்றைப்புருவம் உயர்த்தி வினவினான். அதில் முகம் மலர்ந்தவள்,


"கார் பின் சீட்டில் வச்சு இருக்கேன், அந்த ஜெர்கின்ஸ் ! போட்டுக்க ! போடணும் ஓகேவா !" என்று நிபந்தனை விதித்துவிட்டு சென்று விட்டாள். அவளது பேச்சில் புன்னகைப் பூக்க, அவன் அந்த ஜெர்க்கின்ஸை அணிந்துக்கொண்டான். அவனது ஜெர்கின்ஸ் கிழிந்து போனதைப் பார்த்து, அவள் அவனுக்காகப் பிறந்தநாள் பரிசாக ஒரு புது ஜெர்கின்ஸ், ட்யூசன் எடுத்து வரும் வருமானத்தில் வாங்கி வைத்திருந்தாள். ஆனால் அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளது கடின உழைப்பிற்கு தான் தகுதி ஆனவன் இல்லையே என்று அவன் மறுத்துவிட, அதில் அவள் பிடிவாதம் கொண்டு நடக்க, அதில் விளைந்த அனர்த்தங்கள் முடிந்து இன்று இருவரும் சமாதானம் மட்டும் ஆகவில்லை, அவர்கள் உறவில் புதிய பரிமாணத்தைக் கண்டு கொண்டனர். யார் வந்தாலும், சென்றாலும் மாறாத நிலையான உறவு அது ! நக்ஷத்திராவையும் கடந்த ஒன்று, அவர்கள் உறவு !


 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அந்த ஜெயிலர் போய் பார்த்தியா பாலா?" என்று அஜய் பாலாவை வினவ, பாலா,


"ஆளே இல்லாத டீ கடையில் எதுக்கு

அஜய், நான் ஜிஞ்சர் டீ ஆத்தனும் " என்று படம் இப்படி திரிசங்கு சொர்க்கத்தில் தொங்குவதைப் பற்றி நக்கல் அடிக்க, அஜய் என்றும் இல்லாது பொறுமை இழந்து,


"உனக்கு கொடுத்த வேலையை நீ தான் செய்யணும், உனக்கு என் கிட்ட அசிஸ்டென்ட்டா கண்டின்யு பண்ணனும்னு ஆசை இருந்தா ! டு யு கெட் இட் ?" என்று கடுமையாகப் பேச, பாலா இதை முற்றிலும் எதிர்பார்க்காது அதிர்ந்து அஜய்யைப் பார்க்க, அஜய் இன்னும் அவளை கோபமாக முறைத்து,


"உன்னோட அப்பாயிண்ட்மெண்ட் இன்னும் 1 ஹவரில் ! லீவ் நவ் " என்று தனது அதிகாரத்தைப் பூர்ணமாக அவளிடம் காண்பிக்க, பாலா வேறு வழி இல்லாது,


"எஸ் சார் " என்று கிளம்பினாள். அவள் நேரம் இன்று அவள் ஸ்கூட்டியும் அவள் பேச்சு கேட்கவில்லை.


ஆட்டோவும் கிடைக்கவில்லை. அவர்கள் அலுவலகம் வாயிலிலேயே நிற்க, வெளியே வந்த அஜய்யின் கார் அவளைக் கடந்து போகாது, அங்கே நின்று, உள்ளே இருந்த அஜய்


"வா !" என்று அவளை கட்டாயப்படுத்தி ஜெயிலரைப் பார்க்கக் கூட்டிக்கொண்டு சென்றான். அவர் பெயர் பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவர், பேச்சில் அந்த சுந்தர மதுரைத் தமிழ் தாண்டவமாடியது.


உடல் நலம் சரியில்லாது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சீராகி வீடு திரும்பி உள்ளார். வீட்டில் நுழைந்த போதே அவர்களுக்கு ஒன்று புரிந்தது, லஞ்சம் வாங்காத நேர்மையான காவல்துறை அதிகாரி என்று. பகட்டான சோஃபா இருக்கவில்லை. சாதாரண மூங்கில் சோஃபா, பிளாஸ்டிக் நாற்காலிகள் என்று வரவேற்பறை. அவரும் அவர் மனைவியும் சாதாரணமான உடையில்.


முகத்தில் ஒரு முகமூடி அணிந்து இருந்தார்.

"அந்த இளவு பிடிச்ச சீக்கு உங்களுக்கு வர வேணா , அதுக்குதே " என்று சொல்லிக்கொண்டார்.


சற்று இருமிக்கொண்டே அவர் பேச ஆரம்பிக்க, பாலா


"ஆர் யு ஓகே சார் ? இஃப் நாட், ஐ வில் ஸீ யு லேட்டர் " என்று ஆரம்பிக்க, பாண்டியன்


"ஏத்தா ! நீ தமிழ் தானே ! அப்போ தமிழில் பேசு ! இங்கன எதுக்கு இங்கிலிபீஸு " என்று அடுத்த வாக்கியத்தில் அவளை க்ளீன் போல்ட் ஆக்கினார். அஜய் வாய்க்குள் அடக்கமுடியாது சிரிக்க, பாலா அவனை முறைத்துத் தள்ளினாள். இவருடனான சந்திப்பு நிர்ணயித்து பல நாட்கள் ஆகி விட்டு இருந்தன, இப்போது நக்ஷத்திரா ஆத்தா வேறு முருங்கை மரத்தில் முறுக்கிக்கொண்டு இருக்க, இந்தப் படம் நடவாது என்று பாலா முடிவே செய்து விட்டாள்.


அஜய்யையே அவள் பார்த்துக்கொண்டு இருக்க, பாண்டியன்


"ஏத்தா ! என்னைய கேள்வி கேக்க வந்துபுட்டு, அங்கன பார்த்துகிட்டு இருந்தா எப்புடி ?" என்று வார, பாலா லஜ்ஜை அடைந்து,


"சாரி சார் ! ஆரம்பிக்கலாம் " என்று தனது திறன்பேசியில் அவரது கூற்றுக்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.



அவரிடம் துருவ் சிறையில் இருக்கும் போது எவ்வாறு இருந்தான் என்று அறிய வேண்டி இருந்தது.


"அவிங்க செயிலுக்கு ஏன் வந்தாங்கனு அல்லாருக்கும் தெரியும். ஆனா இம்புட்டு வருசம், எத்தினியோ காவாலி பயலுவியங்களை பாத்து பாத்து, என்னால அவிங்க தப்பு செஞ்சவிங்கனு ஒத்துக்க முடியல. அவிங்க உண்டு, அவிங்க வேலை உண்டு இருப்பாக. கூடியவரை அல்லாருக்கும் ஏதாச்சும் உதவி செய்வாக! நல்ல மனசு அவிங்களுக்கு !


இந்த செயிலுக்குள்ள ஏதாச்சும் வேலைய கொடுப்போம்..நீங்க படத்தில எல்லாம் காட்டி உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். அந்த மாறி, ஒரு முறை, அவிங்க கூட வேலை பார்த்துகிட்டு இருந்தவியனுக்கு அடி பட்டிடிச்சு, செத்தும் போயிட்டான்..சார், அவிங்க உதவும் மையம் மாறி ஏதோ ஒன்னு..அதிலிருந்து அவன் குடும்பத்துக்கு உதவி செஞ்சாரு.. அவய்ன், சாரும் ஒரே செல்லு!


இதுல என்னனு நீங்க கேக்கலாம் ! செயிலுக்குள்ள மனிதாபிமானம் எதிர்பார்க்க கூடத்தாத்தா ! பூராவும் களவாணிப் பயலுவ ! அதுல சார் எல்லாம்...சொக்கத் தங்கம் !


காலை எழுந்து அவர் செயிலுக்குள்ள ஓடுவாரு...அப்பறம் சொல்ல விட்டேனே, சாரி சொகுசு செல் இல் இருக்கலே , சாதா செல்லுதே ! அப்பொறம் சாரை பாக்க முதல்லே அவிங்க சம்சாரம் அடிக்கடி வருவாங்க " என்று சொல்லி ஏனோ அவர் நிறுத்த, பாலா குறுக்கிட்டு,


"முன்னாள் மனைவி !" என்று கூற, அஜய் அவளை யோசனையாகப் பார்த்தான்.


அதை அவர் நம்பாது பாலாவை கூர்ந்துப் பார்த்தார். பாலா அதில்,


"நக்ஷத்திரா என்னோட அக்கா !" என்று தகவல் கொடுக்க, அவர்


"ஓஹோ ! அவரு செயிலுக்கு வந்த புதுசுல அவிங்க அடிக்கடி வருவாங்க ! ஆனா சார் என்ன சொன்னாருன்னு தெரியல, அவிங்க அப்பறம் வரவேயில்லை !" என்று சொல்லி முடிக்கவும், பாண்டியனின் மனைவி,


"காபி தண்ணீ எடுத்துகிடுங்க !" என்று காபி கோப்பைகளைக் கொடுக்க, பாலா அதை கையில் ஏந்தும் போது, பாண்டியனின் மனைவி,


"இவிக இன்னிக்கி உசுரோட உங்க முன்ன நிக்க, அவருதே காரணம் ! இவிங்களுக்கு ஒரு முறை, ட்யூட்டியில் இருக்கும் போது, மாரடைப்பு வந்துடிச்சி ! சார் தான்...அது என்ன சொல்லுவாய்ங்க ..மாரை புடிச்சு அமுக்கி..அதுக்கு பேரு ..." என்று சற்று தடுமாற, பாலா


"சி பி ஆர் .." என்று எடுத்துக்கொடுக்க, அவர்


"ஹான்..அதேன் ! அதை செஞ்சு முதலுதவி கொடுத்தாரு ! அப்பறம் ஆம்புலன்ஸ் வந்து அட்மிட் ஆனாரு ! அவிங்க எங்கள குல தெய்வம்தே " என்று உணர்ச்சி வசப்பட, அந்தப் பேச்சை பாலா ரசிக்கவில்லை என்று அவளது முகபாவம் காட்டிக்கொடுத்தது.



அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, பாண்டியன் தனது மனைவியிடம் கண்ணைக் காட்டினார்.



"அப்பொறம், சாரை பாக்க ஒரு வயசான லேடி வருவாங்க ! அவிங்க பேரு ….! சே ! கர்மம் புடிச்ச வயசு..அம்புட்டும் மறந்து தொலையுது ! செயில் ரெகார்ட் பார்த்தா உங்களுக்கு தெரியும் ! அவிங்க தான் அப்பொறம் அடிக்கடி வந்தாய்ங்க !


நான் அப்பொறம் ரிடையர் ஆகிட்டேன் ! செயிலை விட்டு போமுன்னாடி அவிங்க கிட்ட,


ஏன் சார் உண்மையா செயலுக்கு வந்தீங்கன்னு ஒரு நாள் கேட்டே போட்டேன் !


அதுக்கு அவரு மெல்ல சிரிச்சு,

இந்த வாழ்க்கை எப்புடி இருக்குனு பாக்கதேன்னு சொல்லி போட்டாரு ! அழுத்தம் சாஸ்தி அவருக்கு !" என்று துருவ்வின் புகழ் பாட, பாலாவின் தலைக்குள் யார் அந்த வயதான பெண்மணி என்ற எண்ணம் மட்டுமே. அஜய் தான் அவர் பேச்சினைக் கூர்ந்து கவனித்தான்.


"அவர் நல்லவரு ! அவர் கூட நெருங்கி பழகினா தான் தெரியும் !" என்று அஜய் வேறு துருவ்வின் கட்சிக்குக் கொடிப் பிடிக்க, பாண்டியன் ஆமோதித்தாலும் பாலாவின் யோசனைப் படர்ந்த முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார்.



கிளம்பும் முன் பாலாவிடம்,


"உங்க அக்கா வூட்டுக்கார்ருன்னு உனக்கு கோவம் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கு, ஆனா உலகத்தை உன்னை விட அதிகம் பார்த்தவைன்ங்கற முறையில சொல்லுதேன். அவர் நீ நினைக்கற மாறி கண்டிப்பா இல்ல." என்று அழுத்தமாக அவளிடம் கூறவே செய்தார்.


அஜய்யிடம் வேறு

"அவுங்களை நல்ல விதமாக படம் புடிங்க ! அவிங்க இருக்கற இடம் அம்மிடிச்சிங்களா?" என்று கேட்க, அஜய்


"அவர் எங்க இருக்காருன்னு தெரியல, உங்க வாழ்த்துக்கு நன்றி. ஸ்க்ரீனிங் போது, உங்களுக்கு இன்விடிடேஷன் வரும். கண்டிப்பா வாங்க " என்று விடைபெற்றுக்கொண்டான்.


அலுவலகம் திரும்பும் பொது ஒரே யோசனையில் இருந்த பாலாவிடம் அஜய்,


"லுக் ! நான் சொன்னா நீ நம்ப மாட்டே ! பாண்டியன் சார் சொல்லறாரு பாரு, ஹி இஸ் குட் ! நம்பு பாலா. அவர் வாலிட் ரீசன் இல்லாம ஜெயில் போகலே !" என்று கூற, பாலா வெறும் வாய் வார்த்தையாக


"ஓகே " என்று நகத்தைக் கடித்துக்கொண்டே கூற, அஜய் சுவாரஸ்யமாக,


"லேடீஸ் ஃபிங்கர்ஸ் நல்ல இருக்கும்னு தெரியும், அதுக்காக இப்படியா ?" என்று அவளை கிண்டல் செய்ய, அவள் அவனை முறைத்துத் தள்ளினாள். அதில் அவனோ சிரித்து,


"எட்டு கழுதை வயாசாகுது உனக்கு ! இன்னும் இந்த பழக்கம் போகலே ! ஆமாம், நெயில் பாலீஷ் போட்டா, இன்னும் டேஸ்டியா இருக்குமோ " என்று அவளை விடவில்லை. அதற்கு அவள் உதட்டை வலதும், இடமுமாக சுளித்துக் காட்ட, அஜய்,


"ஓகே ! ஜோக்ஸ் அபார்ட் ! உன் அக்கா துருவ்வோட எக்ஸ்சா ?" என்று வினவினான்.


அவன் ஏன் கேட்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை, எத்தனை முறையோ அவனிடம் சொல்லி இருக்கிறாள், நக்ஷத்திரா துருவ்வைப் பொறுத்தவரை, அவனது முன்னாள் மனைவி தான். அவனுக்கு இது தெரியும். அப்படியும் எதற்கு இந்தக் கேள்வி என்று என்பது போல் பார்க்க, அஜய்


"இல்ல, நேத்து அந்த ஆர்பனேஜில் ஷி வாஸ் கால்ட் மிஸஸ். துருவ் ! அண்ட் உன் அக்கா ஒன்னும் சொல்லலே அதுக்கு ! அவங்களுக்கு அது பிடிச்சு இருந்தது . அப்படி தான் எனக்கு தோணிச்சு " என்று சொல்ல, பாலா கோபம் அடைந்தாள்.


"ஷி ஐஸ் ஸ்டுப்பிட் " என்று சன்னமாகக் கத்தினாள். அஜய் அதற்கு,


"உன்னை கூட அப்படி சொல்லலாம் பாலா. எல்லாம் நீ பார்க்கும் விதம் ! எனக்கு, பாண்டியன் சாருக்கு அவர் நல்லவர். ஆனா உனக்கு துருவ் நல்லவர் இல்ல. உன்னோட அனுபவம் அப்படி. பட் அவரை பத்தி எந்தவித முன் எண்ணம் இல்லாம இருந்தா தான் உன்னால இந்த மூவியில் வர்க் பண்ண முடியும் " என்று அழகாகக் கூற, பாலா தான் விடாக்கண்ணி ஆயிற்றே !


"அது உங்களுக்கும் பொருந்தும் " என்று மடக்கி விட்டாள் .



அலுவலகம் வந்தபின் அவள் ஷோபாவை அழைத்தாள்.


"ஆன்டி, பாலா பேசறேன் ! நீங்க துருவ்வை ஜெயிலில் நிறைய முறை மீட் பண்ணினீங்களா ?" என்று மூச்சு விடாது கேள்வி கேட்க, அவர்

"இல்லையே மா ! அவன் ஜெயிலுக்கு போன புதுசுல மீட் பண்ணினேன், அப்பறம் அவன் என்னை பார்க்க விடலே" என்று சொல்ல, அடுத்து சக்லேஷ்பூரில் இருக்கும் துருவ்வின் பங்களாவிற்கு அழைத்து, தான் யார், என்ன என்று சுருக்கமாக விவரித்து விட்டு, பாக்யத்திடம் பேச ஆரம்பித்தாள். பாக்யம் அவளை இதுவரை நேரில் பார்த்ததில்லை. நக்ஷத்திரா மூலம் கேள்விப்பட்டு இருக்கிறார். அவரும் துருவ் ஜெயில் சென்றபின் அவனை அதிகமாகப் பார்க்கவில்லையே என்று கூற, இது என்னடா இது என்று அவளுக்கு ஆனது.


உடனே நக்ஷத்திராவை அழைத்தாள். அவளுக்கும், நக்ஷத்திராவிற்கும் இந்தப்பட விஷயத்தில் இருக்கும் பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஆகையால் வீட்டில் இன்னும் மௌன யுத்தம் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. ஒரே மேஜையில் சேர்ந்து உண்பார்கள், சேர்ந்து சமைப்பார்கள், வீட்டு வேலை செய்வார்கள் ஆனால் பேசிக்கொள்ள மாட்டர்கள். அருமையான அழகான அக்கா-தங்கை சண்டை அது.


திடீரென்று இவள் எதற்கு கூப்பிடுகிறாள் என்று திகைத்தாலும், அதை ஏற்க மனமில்லாது நக்ஷத்திரா இருக்க, பாலா அழைப்பு ஏற்கப்படாது இருந்தமையால் கடுப்பானாள்.


'இடியட் ' என்று மனதார அவளைத் திட்டியவளுக்கு வந்த ஆத்திரத்தில் அவளை அதன் பின் அழைக்கவில்லை.


'போடி போ ! உன் ஆளை ஒருநாள் கண்டுபிடிச்சு அவன் சட்டையை பிடிக்கலே, என் பேரை மாத்திக்கறேன் ' என்று பாலா சபதம் பூண்டாள். உடனே ரிஷியை அழைத்தாள். அவன் எடுக்காது போனால், பின் விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்று உணர்ந்து உடனே எடுத்து விட்டான்.


"உனக்கு ஜெயிலில் யாரைச்சும் தெரியுமா" என்று 'ஹலோ' கூட உரைக்காது கேட்டாள். இம்மாதிரியான திடீர் கேள்வியில் அவன் திடுக்கிட்டுப் போனான்.


"பார்டன்!" என்று அவன் திகைத்துக் கேட்க, அவளோ இருக்கும் எரிச்சலில் பொறுமை இழந்து,


"இந்த புழல் இருக்கு தெரியுமா புழலு புழலு...அங்க ஜெயில் ஒன்னு இருக்கு..படத்துல கூட பார்த்து இருப்பியே ...ஜெயிலு..தப்பு செஞ்சவங்களை அங்க அடைச்சு வைப்பாங்க ..அங்க உனக்கு யாரையாச்சும் தெரியுமா ?" என்று கத்த. ரிஷி


"ஷூ...எதுக்கு இப்படி கத்தறே ! நான் பிசினஸ் மேன். நேர்மையா டாக்ஸ் கட்டி, பிளாக் மனி இல்லாம வியாபாரம் செய்யறவன். ரவுடிசம் பண்ணறவன் இல்ல, சோ எனக்கு ஜெயில் சம்பந்தம் யாரையும் தெரியாது." என்று அவனும் சற்று எரிச்சல் பட, அவ்வளவு தான் பாலா மாதா, காளி மாதா ஆகிவிட்டாள்.


"போடா போ ! போய் ஏதாச்சும் தப்பு பண்ணி ஜெயிலுக்கு போ ! அப்போ உனக்கு ஜெயிலில் யாராச்சும் தெரிய வரும்" என்று அவள் இன்னும் கத்த,


"மேட் ! ஸ்டுப்பிட் அண்ட் கிரேசி ! " என்று ரிஷி அழைப்பைத் துண்டிக்க, எரிச்சலில் அவள் சற்று நிமிர்ந்துப் பார்க்க, மொத்த அலுவலகமும் அவளை 'லூசா பா நீ' என்ற பார்வைப் பார்க்க, அவள் 'ஹி ஹி' என்று வழிந்தாள்.



அஜய் அவள் முன் நின்று,

"ரூமுக்கு வா" என்று இறுக்கமாக அழைக்க, அவளும் பலி ஆகப்போகும் ஆடு போல் உள்ளே சென்றாள். உள்ளே அஜய்யின் தீர்க்கமானப் பார்வையை அவள் எதிர்கொள்ள முடியாது தயங்கினாள்.


"நீ இந்த மூவிக்கு வேணாம் "என்று அவன் உறுதியாகச் சொல்ல, பாலா அதற்கெல்லாம் அடங்கும் ஆளா !


"அப்போ கண்டிப்பா இந்த மூவி உங்களால் எடுக்க முடியாது " என்று அமர்ச்சையாகச் சொல்ல, அஜய்

"ஷட் அப் பாலா " என்று சற்று வெகுண்டு எழுந்தான்.


"ஐ வில் நாட் ! கேஸ் போடுவேன் ! நானும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கேன் அஜய் ! சோ இந்த மூவி ஷூட்டிங்கை எதிர்ப்பேன் !" என்று கூலாக அவள் கூற, அஜய் பல்லைக் கடித்தான்!


"உனக்கு என்ன பிரச்சனை ?" என்று எரிச்சலுடன் வினவ, பாலா


"சிம்பிள் ! என்னை கேள்வி கேக்காதீங்க அண்ட் இந்த மூவி நான் இல்லாம வராது" என்று நேரிடையாகப் பேச,


"நீ மூவி டைரக்டர் ஆகறத விட, பிசினஸ் வுமனா ஆனா இன்னும் பெட்டர் !" என்று அஜய் கூறியே விட்டான் !


"தேங்க யு ! பட் நான் டைரக்டராக தான் போறேன் ! ரிஷிக்கு காம்படீஷன் ஆக விரும்பல ! சோ லெட் மி கெட் பேக் டு மை வர்க் ! அண்ட் இன்னொரு முறை நீ இந்த மூவியில் இல்லேன்னு ஸ்டண்ட் அடிக்க வேணாம் !" என்று சொல்லிவிட்டு அவ்விடம் நீங்க முற்பட, அஜய்


"இது ஜஸ்ட் பயோ ! இன்வெஸ்டிகேட்டிவ் டைப்ஸ் மூவி இல்ல ! " என்று சொல்ல, பாலா அவன் புறம் திரும்பி,


"ம்ம் ! பட் இதுல நிறைய விஷயம் மறைஞ்சு இருக்கு ! நீங்க ஸ்க்ரீன் பிளே மாத்தலாம், ஆனா உண்மை வேற எதோ இருக்கு ! துருவ்வுக்கு முழு விஷயம் தெரியும் ! என் அக்கா சொல்ல மாட்டா ! அவளுக்கு இதுல நிறைய விஷயம் தெரியும் ! அண்ட் நான் சரியா நினைக்கிறேன்னா, உங்களுக்கு இதுல கண்டிப்பா ஏதோ ஒரு விஷயம் தெரியும் ! அம் ஐ ரைட் அஜய் ?" என்று சாமர்த்தியமாக அவனை மடக்க, அஜய் அதில் திகைத்தாலும் அதை மறைத்துக் கொண்டு,


"உனக்கு கற்பனை வளம் அதிகம் ! போ போய் ஸ்க்ரிப்ட்டில் என்ன சேஞ்சஸ் செய்யணுன்னு பாரு !" என்று அவளை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தினான். ஆனால் அவள் கூறியதில் அவனுக்கு அந்த ஓர் நாளின் ஞாபகம் வந்தது. அன்று அவன் துருவ்விடம் ஏன் இப்படி என்று நேரிடையாகக் கேட்கவில்லை, ஆனால் பார்வையால் துளைத்தான் ! கேட்டு இருந்தாலும் அவன் பதில் கூறி இருந்து இருப்பானா ? சந்தேகம் தான் !
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புழல் சிறையில் இவர்கள் - பாலா மற்றும் ரிஷி !


"இந்த வேதாளத்துக்கு வாக்கப்பட்டா …" என்று அவன் எரிச்சலில் ஆரம்பிக்க, அவளோ அவனை முறைத்து தள்ளினாள்.


"நீ மொறச்சா ? லைசன்ஸ் வாங்கிட்டு மொறை ! அப்படித்தான்டி சொல்வேன் ! நீ வேதாளம் இல்ல ! அதையும் தாண்டி….புனிதமான ஒரு ஜீவன்...உன்னை காதலிச்ச பா…..புண்யத்துக்கு...நான் போகாத இடம் எதுவும் இருக்க கூடாது இல்லியா ...சோ..இதுவும் பார்த்தாச்சு...ஆமா அது என்ன உங்க வீட்டில் வாக்கப்படறவங்க எல்லாம் புழல் விசிட் பண்ணனுமா ? எழுதப்படாத ரூலா?" என்று வாரிவிட்டான். அதற்கு அவள் பதில் பேசுவதற்குள், காவல்துறை அதிகாரி அங்கே வர,


"நீங்க சொல்லற மாறி எல்லாம் ரெகார்ட் எல்லாம் எடுத்து பார்க்க முடியாது சார் ! இதெல்லாம் என்ன இது ?" என்று சீற, பாலா


"பேமிலி மேட்டர் சார் ! ப்ளீஸ் " என்று இறைஞ்சினாள். ரிஷி ஒன்றும் சொல்லாது அவரது மறுமொழியை எதிர்பார்க்க, அவரோ


"என்னமா ஒரே தொல்லையா போச்சு " என்று சலித்துக்கொள்ள, ரிஷி


"சொல்லுங்க சார் ! என்ன பண்ணலாம் " என்று வியாபாரம் பேச ஆரம்பித்தான். அவர்கள் வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து அவளுக்குத் தேவையான விபரங்கள் கிடைக்கவும் செய்தன !


"நீ படம் எடுக்க போறியா இல்ல துப்பறிய போறியா ?" என்று ரிஷியும் கேட்டான். அவளோ



"என் அக்கா வாழ்க்கையை சரி செய்ய போறேன் !" என்று ஒரு பதிலைக் கொடுக்க, அவனோ


"லுக் ! அவங்க ரெண்டு பேரும் மெச்சூர்ட் ! அவங்க தான் அவங்க பெர்சனல் லைப்பை பார்க்கணும் ! அதுல தலை இட கூடாது !தப்பு " என்று சொல்லவும் செய்தான். ஆனால் அவள் கேட்கவில்லை, அதை ரிஷி எதிர்பார்த்தான் !


"ஓகே ஃபைன் ! கோ ஆன் ! உனக்காக லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு என்கிற என்னோட கொள்கையை விட்டு இருக்கேன் !எனக்கு என்ன கிடைக்கும் இன் ரிட்டர்ன் " என்று வியாபார முகமூடியை இம்முறை காதலனாக அவன் அணிந்துகொள்ள, அவள்


"அதுக்கு லைசன்ஸ் வேணும் ஆபீசர் ! சோ இந்த படம் முடிஞ்சு...லைசன்சுக்கு அப்பளை செய்யலாம் " என்று மட்டும் கூற, ஒரு இதழ் அச்சாரத்திற்கான ஏக்கத்தை தன் முகத்தில் பிரதிபலிக்க, அதில் களுக்கென்று சிரித்தவள், மெல்ல அவன் புறம் நெருங்கி தனது கைகளை அவனுக்கு மாலையாக்கி , அவன் உயரத்திற்கு எம்பி, அவன் இதழை நெருங்க, அவனும் அவள் முகம் நோக்கி குனிந்தான். சட்டென்று அவன் கன்னத்தில் தனது அன்பினை அவள் பரிமாறிக்கொள்ள, அவன் திகைத்த அந்த நொடியில் அவன் பிடியை நீங்கி,


"நம்ம முதல் லவ் கிஸ்...அது ஸ்பெஷலா இருக்கணும்...சோ வெயிட்டீஸ் ! " என்று அவள் அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டாள்.


அவளுக்கு கிடைத்த விபரங்களைப் பார்த்தவளுக்கு தலையும் புரியவில்லை, வாலும் விளங்கவில்லை. ஒருநாள் அது புரிந்தது, அன்று அவள் நக்ஷத்திராவிடம்


"நீ தினம் நினைக்கற அளவு, மனசுல பூஜிக்கற அளவு ஒன்னும் உன்...அந்த துருவ் வார்த் இல்ல, ஹி இஸ் எ சீட், 420..பொறுக்கி...ஹி இஸ் எ பா ……" என்று அவள் அந்த வார்தையைக் கூறும் முன், அவள் கன்னத்தில் இடி என நக்ஷத்திராவின் கைகள் இறங்கின.! ஆனால் அவள் சொன்னதில் ஒரு சில விஷயங்கள் உண்மை என்பது போல் அதே நேரம் தொலைக்காட்சியில் ஒன்று ஒளிபரப்பாக, நக்ஷத்திரா வாயில் கையைப் பொற்றிக்கொண்டு அதிர்ச்சியில் மடங்கி உட்கார்ந்தாள் !


வாழ்வு அவளை இப்படி சுழற்றி அடிக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை ! அவள் செய்த மாபெரும் தவறு அவள் கண் முன், திரை வடிவாக !

 
Status
Not open for further replies.
Top