All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா.... - கதை திரி

Status
Not open for further replies.

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻49

“நான் வேண்டுமானால் போட்டு விடட்டுமா....” மீண்டும் கேட்டான் அத்தை மருமகள் அலம்பல்களை புன்னகையுடன் கதவில் சாய்ந்து கையை காட்டியவாறு வேடிக்கை பார்த்து நின்ற கௌதம். அவள் பதிலின்றி நிற்க அவனே மீண்டும் விளக்கமாய் கேட்டான் "ஆழாக்கில் நெல்லை போடவா என்று கேட்டேன்"

சிரிக்கும் போது அவன் மனைவி இத்தனை அழகு என்று இதுவரை அவனுக்கே தெரியாதே என்று வியக்க மனசாட்சி காறி துப்பியது ‘உன் முன்னால் அவள் எப்போது வாய் விட்டு சிரித்தாள். நீ அதை பார்க்க’.

நிலாவை இறக்கி விட்டவள் காதில் "மாமாவுடன் போங்கள் அத்தை வருகின்றேன்" என்றது அவனுக்கு தெளிவாகவே கேட்க உதடு பிரியாமல் முறுவலித்தவன் அருகே வந்த நிலாவை கைகளில் அள்ளினான். "அடடே என் அழகு நிலப்பொண்ணு" என்றவன் அசையாமல் நிற்க அத்தையின் வார்தையை நிறைவேற்ற கைகளாலும் காலாலும் மாமனை உந்தினாள் "மாமா போம் கீழே".

'அத்தை சொன்ன அதையே செய்வீங்களோ!' மனதினுள் செல்லமாய் கடிந்தவாறே “அப்ப அத்தை எங்களுடன் கோவிலுக்கு வர வேணாமா?” சத்தமாய் கேட்டவன் “விட்டுட்டு போன வரவே மாட்டா” ரகசியமாய் காதினுள் ஓதினான்.

கண் விரித்து பார்த்த நிலா "த்தை வாங்க" கை நீட்டி அழைத்தாள்.

உள்ளே ஸ்ரீனிகா விழித்து கொண்டிருந்தாள் வழமையாக இவ்வாறு நிலாவை அழைக்க நேர்ந்தால் முள் மேல் நிற்பது போல் நின்று விட்டு போய்விடுவான் இன்றானால் நிற்பதும் அல்லாமால் அவளை வேறு அழைக்கின்றான். இவனுக்கு காத்து கருப்பு ஏதும் பட்டிருக்குமோ மனம் கேட்ட கேள்விக்கு மூளை இல்லாமல் வேறு என்ன மாரியாத்தா கோவிலுக்கு கூட்டிட்டு போய் நல்லா வேப்பிலை அடிச்சு விடு என்றது.

சிலவேளை வேதாளம் இவன் உள்ளேயே இறங்கியிருக்குமோ...

நிலாவை கீழே இறக்கிவிட்டவன் “அம்மம்மாவிடம் போய் சொல்லுங்கள் மாமா இன்னும் பத்து நிமிடத்தில் வருவேன் என்று” அனுப்பிவிட்டு உள்ளே வந்தான். உள்ளே வந்தவனைப் பார்த்து ‘என்ன உள்ள வாரான்’ உள்ளுக்குள் அதிர்ந்ந்தவள் உதட்டை இழுத்துப் பிடித்து சிரித்தாள் “போவோமே” ஓரடி எடுத்து வைக்க கல்லில் முட்டி நின்றாள். நிமிர்ந்து பார்க்க அவன் கணவன்தான் மார்புக்கு குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு அழுத்தமான பார்வையுடன் நின்றான்.

“எஎ என்ன?” தடுமாறினாள்.

“அதைத்தான் கேட்கின்றேன். உனக்கு என்னதான் பிரச்சனை”

“ஒன்றுமில்லையே...” கையை விரித்தாள்.

பார்வையில் தீவிரம் கூட பெருவிரலால் நெற்றி வருடியவன் “ஸ்ரீனிகா....” அழைத்த விதமே அலாதியாய் இருந்தது. அவன் அவளை முழுப்பெயர் சொல்லி அழைப்பது குறைவு. அப்படி அழைத்தால் ஏதோ மிகமிக முக்கியமான ஒன்றைப் பேசுகின்றான் என்று அர்த்தம். “என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?”.

‘அவனுக்கு ஏதாவது தெரிந்திருக்குமா?’ மூளை யோசிக்க ‘நீ சொல்லமால் எப்படித் தெரியும்’ மனம் சண்டைக்கு வந்தது.

விழித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து சொன்னான் “நான் செய்தது பிழைதான் ஒவ்வொரு நாளும் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். பிரச்சனை இல்ல. நீ என்னை மன்னிக்கவும் வேண்டாம். ஆனா...” நிறுத்தி ஆழ்ந்து பார்த்தவன் “என்னை விட்டுப் போக முயன்றாய்... விடமாட்டேன்” தலையை குறுக்கே அசைத்தான் “நீ என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக் கொள்ளுறன் ஆனா நீ தனியா... எந்தக் காலத்திலும் உன்னைத் தனியாய் விடமாட்டேன். புரியுதா?” அழுத்தமான குரலில் கேட்டவனை தன்னை மறந்து கண்களில் நீரும் உதட்டில் புன்னகையுமாய் பார்த்திருந்தாள்.

உண்மையில் அவள் மிகப் பெரிய பயம் தனிமைதான். ஆறு வயதில் அவள் பிறப்பு பற்றி மற்றவர் பேச்சு தெரியாக் கூடாது என்பதற்காய் ஹோஸ்டலில் சேர்த்ததில் இருந்து தமிழ்நாடு வந்து கேரளாவில் தங்கியிருக்கும் போதும் அவளை மிரட்டிய அந்த தனிமை. அதை அண்ட விடமாட்டேன் என்று அவன் சொன்ன வார்த்தையே போதும் அவளுக்கு....

கண்ணீரும் புன்னகையுமாய் அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் நெற்றியில் முத்தமிட்டு “உன்னை எனக்கு பிடிக்கும்டி, நான் தேடின குட்டி பொண்ணு நீதான்னு தெரிய முன்னரே பிடிக்கும். அதை எப்படி உன்னிடமிருந்து மறைக்கிற என்று தெரியாம….. சாரிடி, ஆயிரம் லட்சம், கோடி தடவை. என்னை ஒருத்தர் ஏமாத்த நினைச்சாலே அழிச்சிருவேன். ஆனா நீ ஏமாற்றினாய் என்று தெரிஞ்சும்... ஐ மீன் நினைச்சும் உன் மேல விரல் கூட வைக்க முடியல. அந்த ஆத்திரத்தில்...” அவளை விட்டு தலையை அழுந்தக் கோதினான்.

கிட்டத்தட்ட இந்த இரண்டு மாதமாய் ஒவ்வொரு நாளும் விதவிதமாய் அவன் கேட்கும் மன்னிப்புத்தான். ஆனால் அவளால்தான் இரண்டு தடைகளை தாண்டி செல்ல முடியவில்லை. ஒன்று பயம் மற்றது....

அவள் முகத்தைப் பார்த்தவன் மறுபடியும் கன்னங்களை கையில் தாங்கிக் கேட்டான் “நீ என்னிடம் எதுவாய் இருந்தாலும் சொல்லாம். என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா ஸ்ரீனிகா?” கேட்ட விதமே அலாதியாய் இருந்தது. அப்படியே அவன் மார்பில் சாய்ந்து கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல், சிரிக்க வேண்டும் போல், மனதில் அடைத்துக் கொண்டிருக்கும் அத்தனையும் அன்று போல் கொட்டித் தீர்க்க வேண்டும் போல்... மூளை கேட்டது ‘அதன் பின்’ சட்டென சுதாரித்தவள் “விவாகரத்து வேண்டும்” என்றாள்.

அவளை விடுவித்து மார்புக்கு குறுக்கே கையைக் கட்டியவன் அவளுக்கு முதுகு காட்டி “எல்லோரும் கீழே வெயிட் பண்ணுறாங்க வா” போக காலேடுத்தவனை நிறுத்தியது அவள் குரல் “நீங்க ஸ்ரீநிஷாவை கால்யாணம் செய்து கொள்ளுங்கள்”.

“என்ன?” புருவம் மேலேற ஆச்சரியத்துடன் திரும்பினான்.

“உங்கள் அந்தஸ்து தகுதி அ.. அ அஅதோட சச.. சட்ட...” அன்று அவன் கூறிய அதே வார்த்தைகள்... அதைச் சொல்வதற்குள் அவள் கண்களில் தென்பட்ட வலியைக் கண்டு கொண்டவன் தடை இறுக கன்னத்தை இறுகக் கடித்ததில் கௌதமின் வாய்க்குள் உப்புக் கரித்தது. சட்டென குனிந்து அவள் முடிக்கும் முன் அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு மூடினான்.

‘என்ன இப்பெல்லாம் சட்டுபுட்டுன்னு முத்தம் கொடுக்கிறான். அதுவும் உதட்டில் மனம் முரண்ட மூளை ‘உப்பு கரிக்குது ரத்தம்’ என்று எடுத்துக் கொடுத்தது’.

திமிறி விலகியவள் “இரத்தம்” பதறினாள்.

“ச்சு.. ஒன்றுமில்லை விடு” என்றவன் வாஸ்ரூம் சென்று வாயைக் கொப்பளித்து கண்ணாடியைப் பார்த்தான். அவள் பதற்றம் அவன் முகத்தில் மெல்லிய முறுவலைக் கொண்டு வந்திருந்தது. நிச்சயமா அவள் மனதில் இடம் இருக்கு ஆனா வாய் திறக்க மறுக்கின்றாள். காரணம் அவனுக்கும் தெரியும். அவளின் அந்தக் காரணத்தை அறிந்த நாளை நினைக்க வேதனையில் முகம் சுருங்கியது. அவனுக்கு மன்னிப்பு வேண்டும். ஆனால் அது அந்தக் காரணத்திற்காய் இருக்க கூடாது. அதுதான் அதை தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை.

கண் மூடி வலியை விழுங்கியவன் கதவைத் தட்டிச் சத்தம் கேட்க “வாரேன்” என்றவாறே திறந்தான்.

அவள் விழிகள் பதற்றத்துடன் அவனை ஆராய்ந்தது.

அவள் உதட்டில் இருந்த இரத்ததை ஈரக் கையால் துடைத்து விட தட்டிவிட்டாள். “அதை விடுங்கள், ஆ காட்டுங்கள் பார்ப்போம்” அவனைப் பிடித்து சோபாவில் இருத்தினாள்.

வஞ்சனையின்றி கடித்து வைத்திருக்க இரண்டு பற்களின் தடம் தெளிவாய் தெரிய இரத்தம் இன்னும் கசிந்து கொண்டிருந்தது. “என்ர குருவாயுரப்பா... ஞிங்கள் எந்த சின்ன குட்டியானு, வலிக்கலயா” கண்களில் லேசாய் நீர் கோர்த்திருந்தது.

கண்மை கலையாமல் நாசுக்காய் துடைத்தவன் “வலிச்சுது இப்ப இல்லை” என்றான்.

“வா போகலாம்” திரும்பியவனைத் தடுத்தாள் “விவாகரத்து..”

“எனக்கு இன்னொரு பக்கமும் கன்னம் இருக்கு” அவள் கண்களை ஆழ்ந்து நோக்கிக் கூற சட்டெனக் கன்னத்தில் அடித்துவிட்டாள் ஸ்ரீனிகா.

“என்னடி அடிக்கிற” புன்னகையுடனே கேட்டான்.

“பிராந்தன் ஆயனு” அவனிடமிருந்து திரும்பி அமர்ந்தாள்.

“அதே பிரந்தே நீ மீதே” அவள் கன்னத்தில் சத்தமாய் அழுத்தி முத்தமிட்டவன் “என்டே பாரியா மீதே” அவள் ஏதோ மறுத்துக் சொல்ல வாயெடுக்க “வலிக்குது” என்று முகத்தைச் சுருக்கினான்.

அவனைப் பாவமாய் பார்த்து கன்னத்தை வருட “இந்த ஜென்மத்தில் நீதான் என் மனைவி நான்தான் உன் கணவன் இதை மற்ற யாராலும் முடியாது. நீ எது கேட்டாலும் தருகின்றேன் இரண்டைத் தவிர” அவன் நிறுத்த என்ன என்பது போல் பார்த்து வைத்தாள்.

“ஒன்று விவாகரத்து அடுத்தது என்னை விட்டுப் போவது” என்றவனை பெருமூச்சோடு நோக்கியவள் அருகே இருந்த செல்ஃபில் இருந்து ஒரு மருந்தை எடுத்து ஒரு விரலால் காயத்திற்கு போட்டுவிட்டாள். மருந்தில் காயம் சில்லென்று வர அவள் செயலில் மனம் சில்லென்றானாது.

மருந்தை வைத்து விட்டு விரலை எடுக்க முயன்றால் விரல் எங்கோ மாட்டிக் கொண்டது. திரும்பிப் பார்க்க பற்களிடையே அவள் விரலை வலிக்காமல் கடித்துக் கொண்டு அவளை குறும்பாய் பார்த்தான். அவன் குறும்பில் லேசாய் கன்னம் சிவந்தவள் “ச்சு விடுங்கள்” சிணுங்கினாள்.

சட்டென விலகி நின்று முகம் சிவக்க பின்தலையை அழுந்தக் கோதியவன் குரல் கெஞ்சியது “பிளீஸ் என்னை மன்னிக்கும் வரை என்னிடம் சிணுங்காதேடி”.

ஸ்ரீனிகா அவனின் இந்த அவதாரத்தில் திகைத்துப் போய் நிற்க வெட் டிஷ்யூ வைத்து அவள் விரலைத் துடைத்துவிட்டவன் “கீழே எல்லோரும் வெயிட் பண்ணுறாங்க வா போவோம்” மென்மையாய் கூறினான்.

இருவரும் சேர்ந்து வர யசோதா நெட்டி முறித்தார் “கண்ணே பட்டுடும் போல இருக்கே சே இவ்வளவு நாளும் கவனிக்கமா இருந்திட்டோம், மருமகளுக்கும் கொஞ்சம் வாங்கி போட்டு அழகு பார்க்கணும்” மனதில் எண்ணி கொண்டார்.

இருவரையும் சேர்த்து வைத்து பார்த்த போது மருமகளின் உடைகள் அத்தனை தரமில்லையோ என்று தோன்றியது. அதற்காக அழகாயில்லை என்று எண்ணவில்லை ஆனால் ஆடையின் தரமும் விலையும் தன் மகனின் அந்தஸ்துக்கு குறைவோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

மகனை யோசனையாக நோக்கினார். இது அவன் கண்ணில் படவில்லையா? இல்லை கருத்தில் எடுக்கவில்லையா? இதுவரை அவள் ஸ்கூட்டியில்தான் சுற்றுகின்றாள். தங்கையின் திருமண நாளுக்கும் பிறந்தநாளுக்கும் காரும் மில்லும் வேண்டி கொடுப்பவன் மனைவிக்கு ஒரு சாதாரண கார் வேண்டும் வசதி கூட இல்லாமாலா இருக்கின்றான்.

அந்த வீட்டில் பெண்களுக்கு தனியே தொழில் வைத்து கொடுத்திருக்கின்றார்கள். யசோதாவின் பெயரிலும் தொழில் உள்ளது அதை நிர்வாகம் செய்வதும் அவரேதான். அப்படி இருக்கையில் ஸ்ரீனிகா சாதாரணமாக இன்னொருவர் கீழ் வேலைக்கு போய்க் கொண்டிருக்கின்றாள். விரும்பினால் அவள் வேலைக்கு செல்லும் காலேஜை வாங்கும் வல்லமையில்தான் இருக்கின்றான் அவர் மகன் கௌதம் கிருஷ்ணா. அவருக்குத் தெரியாது அவன் காலேஜில்தான் அவள் வேலையே செய்கின்றாள் என்று. விரும்பி மணந்தவர்கள் சந்தோசமாய் தான் இருப்பார்கள் என்று எண்ணி கவனிக்காமல் விட்டது தவறோ....

இன்று காலை நிலாவின் அடம் குறைந்ததை பார்த்த போதுதான் குழந்தைகளிடம் போதிய கவனம் எடுக்கவில்லையே என்று ஒரு எண்ணம் தோன்றியது. அது போல் இவர்களிடமும் சற்று கவனம் எடுக்க வேண்டுமோ.

“நீ ஏனம்மா நகைகள் போடுவதில்லை” திடீரென ஸ்ரீனிகாவை பார்த்து கேட்க, “என்னடா இது இன்று கண்ணாடியில் தான் முழித்தேன் போல எல்லாமே தலைகீழா நடக்குது’ மனதினுள் நினைத்தவள் “இல்ல, எனக்கு நகை அவ்வளவா பிடித்தமில்ல அதோட தனியா போய் வாராது அதான்” புள்ளியில் நுழைந்து எதையோ கூறி சமாளிக்க பார்க்க அவர் கோலத்தில் நுழைந்து “பரவாயில்ல இன்று எல்லோரும் தானே போகின்றோம் ஏதாவது மெல்லிதாக வைர பெண்டனும் தோடும் போட்டுட்டு வாம்மா” என்றாரே பார்க்கலாம்.

அதிர்ந்து போய் பார்த்தால் ‘ஏது வைர பென்டனா, அத்தையம்மா என்னை ஹார்ட்அட்டாக் கொடுத்தே பரலோகம் அனுப்பிருவாங்களோ, தங்கத்துக்கே தகிடுதத்தம் இதில வைரம் வேறயா கிழிஞ்சுது போ! ஏதாவது ஐடியா கொடேன்’ அவசரமாக மூளையிடம் மனு போட ‘இரு யோசிக்கிறேன்’ என்றது. நீ யோசித்து முடிச்சிட்டாலும் மனம் திருப்பி கவுண்டர் கொடுக்க ‘ஆ ராசி...." என்ன ராசி ஜோதிடம் பார்க்கும் நேரமா இது?’ எரிந்து விழுந்தது மனம். அதை டீலில் விட்டவள் “என்னோட ராசிக்கு வைரம் போட கூடாது என்று நாமக்கல் நாராயண ஜோதிடர் சொல்லி இருக்கார்”.

“நாமக்கல் நாராயண ஜோதிடரா?" ஆச்சரியத்துடன் கேட்க வேகமாக தலையை ஆட்டி வைத்தாள். "ஹா நாராயண ஜோதிடர் ரொம்ப பேமஸ், உங்களுக்கு தெரியாதா? ஒருநாள் உங்களையும் கூட்டிட்டு போறன்” அவர் பேச இடமே கொடாமல் தானே பேசி முடித்தாள்.

அவள் தளும்பி நின்ற நிலை பார்த்து முகம் கன்றி நின்ற கௌதம் சமாளித்த விதத்தில் சிரிப்பை அடக்க பாடுபட்டு போனான். இப்படித்தான் எதையாவது சொல்லி எந்த சூழ்நிலையையும் குறைந்தது அப்போதைக்கு சமாளித்துவிடுவாள்.

"சரி பரவாயில்லை விடு" என்ற கணவனின் குரலில் ஸ்ரீனிகா ஆறுதலாக மூச்சு விட யசோதா மகனை கவலையுடன் பார்த்தார். அவருக்கு கண்மூடி திறந்து ஆறுதல் கொடுத்தவன், அவள் ஆறுதலை இல்லமால் செய்தான் "உனக்கு எந்த கல் ராசி என்று அந்த நாமக்கல் நாராயண ஜோதிடர் சொன்னார்" தீவிரமாய் விசாரித்தான் "சொல்லு அதையே வாங்கிறலாம்" 'அந்த நாமக்கல் நாராயண ஜோதிடர்' என்ற வார்தைகளுக்கு கொடுத்த அழுத்தியிலேயே புரிந்தது தன்னை பார்த்து நகைக்கின்றான் என்று, அவனைப் பரிதபாமாய் பார்த்தாள்.

அதற்குள் போன் அழைக்க அதை பயன்படுத்தி தப்பி சென்றாள் "சொல்லுடா"

இடுப்பில் கையூன்றி தன்னை தானே ஆசுவாசப்படுத்தியவள் அங்கே அவன் கொதித்ததில் “சரி சரி வாரன் படுத்ததடா” என்றவள் “இவன் வேற நேரம் காலம் தெரியாமா உயிரை வாங்குறான்” வாய்க்குள் முனகினாள்.

கையை பிசைந்தவள் காதருகே "போவோமா?" என்று கேட்ட குரலில் துள்ளி விலகியவள் கணவனை பார்த்து விழித்தாள். 'ஏண்டா எங்கடா இருந்தீங்க எல்லோரும் ஒன்றா வருவீங்களா என்னால முடியலடா' மூளை அலற "அது வந்து முக்கியமான ஒரு வேலை போயே ஆகனும்... வேலை முடிச்சிட்டு அப்படியே நேர கோவில் வந்துறேன்...." இழுக்க அவள் கண்ணையே பார்த்திருந்தான்.

மனமோ 'அப்ப அவன் கூட போவியா’ ஆர்வத்துடன் மான ரோஷம் இன்றி கேட்க ‘கொஞ்ச நேரம் மூடிட்டு இருக்கிறீயா அங்க போயிட்டு பைக்கை பஞ்சர் பண்ணலாம்’ காரமாய் பதிலளித்தது மூளை. அவனோ "சரி போ" சாதாரணாமாக கூறினான்.

"ஓ தாங்க்யூ" என்றவள் வெளியே பறந்திருந்தாள்.

அனைவரும் அவன் பராடோவில் ஏறியிருக்க நதியா கேட்டாள் "அண்ணி எங்கே அண்ணா?" சிரிப்பை அடக்கியவாறே கை காட்டினான்.

வருவான்....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 50

அழகாய் பைக் அருகே குந்தி கன்னத்தில் கை வைத்திருந்தவளை அள்ளி அணைக்க துடித்த கையை சிரமப்பட்டுக்கு கட்டுப்படுத்தியவன் தொண்டையை செரும "க்கும்" கணைப்பில் நிமிர்ந்து பார்த்தவள் எழுந்து நின்றாள். மனம் மூளைக்கு கவுண்டர் கொடுத்தது ‘என்ன பைக்கை இங்கேயே பஞ்சர் பண்ணிட்ட’

"திரும்பவும் காத்து போய்ட்டு" அவள் வாயிலிருந்து காற்றே வரவில்லை அழுவதை போல் சொன்னாள். அவள் குழந்தைத்தனமாக் கூறிய அழகில் கையை கட்டுப்படுத்த முடியாமல் மார்புக்கு குறுக்கே கட்டியவன் ஒற்றை சொல்லாக சொன்னான் "வா".

"இல்லை பரவாயில்ல கேப் புக்..." அவன் தீ பார்வையில் நிறுத்தினாள். ‘ஆத்தி ஒரு பத்து நாளா இவன் காணாம போய் இருந்தான் இந்த வந்துட்டனுள்ள கோபகுலநாயக’.

“எங்கே?”

“போன் அப்ல தான் இதோ இருக்கு”

"உனக்கு வேலை எங்கே என்று கேட்டேன்”

“சார் பதிவாளர் அலுவலகம்”

“போகும் வழிதான் வா”

“இல்ல லேட்டாகும்... நதியாவோட பிறந்தநாள்...” அப்போதும் சப்பைக் காரணங்களைக் கொண்டு மறுக்க “உனக்கு என்னதான் பிரச்சனை?” கடுமையாகவே கேட்டான்.

பயத்தில் விழித்தாள் “இல்ல.... நீங்க தானே சொல்லி இருக்கிறீங்க எப்படி அழைத்தாலும் வர கூடாது என்று அதான்”

கௌதமிற்கு சட்டெனெ முகம் கன்றியது, ஆயாசமாகவும் இருந்தது. “இப்ப கொஞ்சம் முந்திதானே உனக்கு சொன்னேன் நான் தெரியாம நடந்திடண்டி” பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கூறினான். அவள் பயந்த முகத்தைப் பார்த்து இறங்கிய குரலில் "இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன் வா" என்றான். அப்போதும் பயத்துடன் பார்க்க ‘குழந்தை பெண்ணை என்ன செய்து வைத்திருக்கின்றாய் மடையா’ மனசாட்சி பாரபட்சமின்றி திட்டியது.

பைக் சாவியை எடுக்க “இன்னும் என்ன?” எரிச்சலுடன் கேட்டான். “இல்ல உள்ளே திங்க்ஸ் இருக்கு எடுக்கனும்” எடுக்க பார்த்திருந்தவன் கலர் பையில் சுற்றி வைத்திருந்ததை எடுத்து முதுகில் போடும் பாக்கில் வைக்க நெற்றி சுருக்கி “இது என்ன?” என்றான்.

“காசு சார் பதிவாளர் அலுவலகத்தில் கட்டனும்” என்றவளை முறைக்க “கிளைன்ட்டோடாது” என்றாள்.

“இவ்வளவு பணம் தனியா எடுத்து கொண்டு போறீயே அறிவில்லை” திட்டியவனிடம் “அப்ப யாரு கொண்டு வருவா?” பதிலுக்கு கேட்டாள்.

“ஏன் என்னிடம் சொல்வதற்கு என்ன வாய்க்குள் கொழுக்கட்டையா இருக்கு” என்று பாய்ந்தவனிடம் “நீங்க உண்மையாவே கௌதம் கிருஷ்ணாதானே!” சந்தேகத்துடன் அவள் கேட்ட பாவனையில் சிரித்துவிட்டான்.

வாகனத்திற்கு வந்தவள் முன்னே மட்டுமே இடமிருக்க ‘இன்று உனக்கு நரகம் தாண்டி என்ன மண்ணாங்கட்டி நாளோ’ எரிச்சலுடன் நினைத்தவள் ‘எப்படி எஸ்கேப் ஆகலாம்’ யோசித்து கொண்டிருக்க அவனே கதவை திறந்து “ஏறு” என விதியே என்று ஏறி அமர்ந்தாள். மறுபுறம் ஏறி சீட் பெல்டை போட்டவனுக்கு அவள் தனக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்த விதம் முதல் தடவை கேரளாவில் சந்தித்ததை நினைவுபடுத்தியது. என்னிடம் நெருங்கி வராதே என விலகி அமர்ந்தது போல் தோன்ற கௌதம் நெஞ்சுக்குள் ஏதோ பிசைந்தது. ஒரு கணம் தயங்கி விட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

அவள் முன்னே அமர்ந்ததும் நிலா அவள் மடிக்கு தாவ சுற்றம் மறந்து குழந்தையில் மூழ்கி போனாள். மடியில் இருந்த பக்பாக் நிலாவுக்கு சிரமமாக இருக்க காலடியில் வைத்தவளைப் பார்த்தவானுக்கு புரிந்ததுதலை கீழாக நின்றாலும் டேஷ் போர்ட்டில் வைக்க மாட்டாள். “அதை தா” என்று வாங்கி அதை டாஷ் போர்டில் வைத்தான்.

சார் பதிவாளர் போர்ட் தென்படவே அதனருகே காரை நிறுத்தினான் கெளதம்.

காரை விட்டு கீழே இறங்க வசந்த் கையசைத்தவாறே அருகே வந்தான். உள்ளேயிருந்த கௌதமை அறிமுகப் புன்னகையுடன் நோக்க அவனுக்கு மெல்லிய தலையாட்டலை பதிலாய் கொடுத்தவன் ஸ்ரீனிகா கோப்பில் இருந்த ஏதோ சில டாக்குமென்களை காட்டி எதையோ சொல்லும் அழகையே ரசித்துப் பார்த்திருந்தான்.

வசந்த் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்து இரண்டு மூன்று இடத்தில் அடையளமிட, வேகமாக கார் கதவை திறந்து அவர்கள் அருகே வந்தவன் தன் பென்னை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

அதை வாங்காமல் நிமிர்ந்து பார்த்தவள் "லேட்டாகுதா? நீங்க போங்க நான் கோவிலடிக்கு வருகின்றேன்" என்றவளை லேசாய் முறைத்ததான் ‘எப்போதுடா தப்பி ஓடலாம் என்பது போல்’ இருந்தாள்.

“என்னாச்சு” என்றவனிடம் “இதோ முடியுது” என்றவள் திரும்பி “இதில் நான் சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து வாங்கி விடுங்கள். முடிந்ததும் எனக்கு கோல் எடுங்கள் யான் வரும்” என்றாள்.

மீண்டும் காருக்குள் இருவருமாய் ஏற நதியா “ரொம்ப ஹீட்ட இருக்குல்ல அம்மா” கையை விசிறி போல் விசிறினாள்.

“ஏசியை கூட்டி விடவா?” அப்பாவியாய் கேட்டாள் ஸ்ரீனிகா.

“ஹ்ம்ம்... அப்படியே டிரைவர் பக்கம் திருப்பி விடுங்க அண்ணி. அங்க இருந்து தான் ஹீட் வருது”

‘கெளதமிற்கா’ ஆனால் ‘ஏன்’ என்பது போல் அவனைப் பார்க்க அவனோ சிறு முறுவலுடன் ஸ்டியரிங் வீலை திருப்பி காரைச் செலுத்தினான்.

“ஆனாலும் அண்ணி இவ்வளவு பொசசிவ்வா” மீண்டும் தொடங்க “டாட்...” சிணுங்கலாய் அழைத்தான் கெளதம்.

நதியாவை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீனிகா விழி தெறித்தது விடும் போல் கௌதமைப் பார்த்தாள். இப்போது சிணுங்கியது இவன் தானா? கண்ணில் இன்னும் சந்தேகம் மிச்சமிருந்தது.

அவள் முகத்தை கண்ட நதியா விழுந்து விழுந்து சிரிக்க யசோதா செல்லமாய் கடிந்தார் “பார்த்துடி வயிறு சுளுக்க போது”.

அண்ணன் தங்கைக்குள் ஏதோ ஜோக் தனக்குள் நினைத்துக் கொண்ட ஸ்ரீனிகா இதழ் தாண்டாப் புன்னகையுடன் திரும்பிவிட்டாள். யாரோ போல் மீண்டும் தனக்குள் ஒடுங்கி ஒதுங்கியவளை காண கெளதமிற்கு இதயத்தை கத்தியால் கீறியது போலிருந்தது. அவன் கீழுதடு பல்லில் வதைபட்டது.

அனைவரும் இறங்கி விட நேர் எதிரே வெறித்தபடி யோசனையில் இருந்தவளை கலைத்தது கௌதமின் குரல் "ஸ்ரீனினி..." தோளை உலுக்கினான். ‘திப்’ என்று திடுக்கிட்டு பார்க்க "கோவில் வந்துட்டு வா" என்றான்.

“ஓ...” என்றவள் கீழே இறங்க படியை தவிர்த்து நேரடியாக கோவிலுக்கு முன் காரை நிறுத்தியிருந்தான். நதியா படி ஏற முடியாது என்று தான் மறுத்தது முட்டாள்தனமாய் பட உதட்டைக் கடித்தவளைப் பார்த்து லேசான கேலியுடன் சிரித்த கெளதம் காரை லாக் செய்து விட்டு நெற்றியை பெருவிரலால் கீறியவாறே அவளுடன் நடந்தான்.

வருவோர் போவோரின் பார்வை இருவர் மீதும் ‘அழகான ஜோடி’ என்பது போல் மெச்சுதலாய் விழுந்தது.

அனைவரும் உச்சியை அடையவும் பூஜை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. கண்மூடி நின்ற ஸ்ரீனிகாவின் மனதில் எண்ணங்கள் அலைமோத முகம் வேதனையை பிரதிபலித்தது. முருகனை வணங்கிவிட்டு அவள் முகத்தை பார்த்த கெளதம் தோளில் லேசாய் தட்டிக் கொடுத்தான். ஸ்ரீனிகா நிமிர்ந்து பார்க்க 'என்ன' கண்களாலேயே கேட்டான்.

லேசாய் தலையசைத்து "அம்மா ஞாபகம்" என்றாள் அமைதியாய்.

கெளதமிற்கு அவளை நெஞ்சுக்குள் பொதிந்து கொள்ளும் வேகம் வந்தாலும் இருக்கும் இடம் கருதி தன்னை அடக்கிக் கொண்டான்.

பூஜை முடித்து கோவிலை வலம் வந்து ஓரிடத்தில் அமர அனைவரையும் விட்டு சற்றுத் தள்ளி அமர்ந்தாள் ஸ்ரீனிகா. 'ஏன் இந்தப் பெண் எப்போதும் விலகியே இருக்கின்றாள்' அவளை கவலையுடன் நோக்கினார் யசோதா.

இது எதையும் கவனிக்காமல் அந்த இடைவெளியில் குழந்தைகள் அமரவே அவர்களுடன் சேர்ந்து சிரித்து விளையாடினாள். அம்மாவின் கவலை நிறைந்த பார்வையைக் கவனித்த கௌதம் "யப்பா பெரிய மனிதர்களா உங்கள் ஸ்ரீம்மாவை எங்களுக்கும் கொஞ்சம் தருவீர்களா?" விளையாட்டாய் அவர்களை வம்புக்கிழுத்தான்.

பரிவுடன் நோக்கிய அசோகன் “இங்கே வாம்மா” தன்னருகே இருந்த இடத்தைக் காட்டினார். வேகமாய் மறுத்து தலையாட்டியவள் கெளதம் அருகே அமர அனைவரும் மெல்லிய நகையுடன் கௌதமை பார்க்க அவனோ தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ வாடா மருமகனே” என்று தீப்பை நதியா அழைத்துக் கொள்ள, கௌதம் நிலாவை தூக்கி மடியில் இருத்தினான். அவனருகே கீழ் படியில் இருந்தவள் அங்கிருந்தபடியே நிலாவுடன் விளையாடினாள்.

"என்ன அண்ணி குழந்தைகளைத் தவிர வேறு யாரிடமும் பேச மாட்டீர்களா?" இப்போது நதியா அவளை பேச்சில் இழுத்தாள்.

"இல்ல அப்படியெல்லாம் இல்லை" தயக்கத்துடன் மறுத்தவளுக்கு இதற்கு மேலும் குழந்தைகளுடன் விளையாடுவது சரியில்லை எனத் தோன்ற அவர்கள் பேச்சில் கவனம் செலுத்தினாள்.

"கோவிலில் இருந்து எங்கே போகலாம்?" நதியா கேட்க "நகைகடை போய் விட்டு சாப்பிட போகலாம்" என்றார் யசோதா.

அம்மாவின் எண்ணம் புரிய சற்று முன் அவள் சமாளித்தது நினைவில் ஆட ஸ்ரீனிகாவைப் பார்த்து லேசாய் சிரித்த கௌதம் “போகலாம்” என்றான். "என்ன?" ஸ்ரீனிகா குழப்பத்துடன் கேட்க அப்பாவியாய் குறுக்கே தலையாட்டி வைத்தான்.

யசோதா நதியா வத்சலா மூவரும் பிரசாதம் நைவேத்தியம் வாங்கி வர சென்று விட ஆண்களின் பேச்சு தொழிலை நோக்கித் திரும்பியது. சிறிது நேரம் கேட்டவளுக்கு போரடித்து விட கிடைத்த இடம் மனதிற்கு இதமாய் இருக்கவே வசதியாய் சாய்ந்து கண் மூடினாள்.

காலையில் இருந்து மன உளைச்சலில் களைத்துப் போனவளுக்கு எப்போதடா எங்காவது தனியாய் சிறிது நேரம் கண் மூடி இருப்போம் என்றிருந்தது.

தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த கௌதம் தொடையில் மெல்லிய பாரத்தை உணர குனிந்து பார்த்தவன் முகம் மென்னகையை தத்ததெடுத்தது. ஸ்ரீனிகா வசதியாய் சாய்ந்து கொண்டது அவன் தொடைதான். அவள் விழாத வண்ணம் ஒரு கையால் லேசாய் அணைத்துக் கொண்டவன் தந்தையுடனும் தனயனுடனும் உரையாடலைத் தொடர்ந்தான்.

யாரோ தன் குட்டி உறக்கத்தை கலைக்க லேசாய் உதட்டைச் சுழித்து கையைத் தட்டிவிட்டாள் ஸ்ரீனிகா. இனிமையாய் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்க கண் திறந்து பார்த்தவள் கன்னம் சிவந்தது. கெளதம் மடி மீது தலை சாய்த்திருக்க யசோதா தான் எழுப்பிக் கொண்டிருந்தார். சிரித்தது அவள் மணாளனேதான்.

அவள் கையில் சிறு தொண்ணையை கொடுத்து அருகே அமர முகத்தை மூட வழியின்றி அதை கணவனின் மடியிலேயே புதைத்தாள்.

லேசாய் நடுங்கிய உதட்டை கடித்தவாறே இடது கையால் அவள் தலையை வருடிக் கொடுத்தான் கௌதம். கேரளாவில் இருந்து வந்த இரண்டு மாதங்களின் பின்னர் இன்று தான் அவள் மீண்டும் நெருங்கி வந்தது போல் உணர்ந்தான். ஒவ்வொரு நாளும் மன்னிப்பு கேட்டாலும் கூட விலகியே இருந்தது ஏனோ வலித்தது. ஆனால் வற்புறுத்தவும் மனமில்லை, போடா என்று போய்விட்டால் அவன் கதி. புளிசாதத்தை அவள் உண்ட வேகத்தை பார்த்து காலையில் உணவைத் தவிர்த்தது நினைவு வர தன் கையில் இருந்ததையும் அவளிடமே கொடுத்தவன் யோசனையாய் பார்த்தான். அன்று கேரளாவில் புளி என்று மூக்கை சுருக்கியது நினைவில் வந்தது.

மனைவியை ரசித்த மகனைப் பார்த்த பெற்றவர்களின் முகம் யோசனையை தத்தெடுத்தது. சில நாட்களாகவே மகனின் பார்வை மருமகளை ஏக்கத்துடன் தொடர்வதையும் அவள் கவனிக்கமலேயே இருப்பதையும் பார்த்தவர்களுக்கு குழப்பமாய் இருந்தது. மகன் செய்து வைத்த குளறுபடி அவர்களுக்குத் தெரியாதே.

"போவோமா?" அவள் சாப்பிட்டு முடிந்ததை பார்த்துக் கேட்டான்.

*****

அந்தப் பெரிய மாலின் முன்னே காரை நிறுத்தினான் கெளதம். கார் நின்ற இடத்தைப் பார்த்த ஸ்ரீனிகாவின் முகம் வெளுத்தது. அவர்களுக்கு கூரையும் தாலியும் வாங்க வந்த மால். அதன் பின்பும் ஒரு தடவை வந்தார்கள் தான். அனைவரும் இறங்க கெஞ்சுவது போல் பார்த்தாள். ‘என்னை விடேன்’ என்பது போலிருந்தது.

அவனோ கவனியதது போல் "இறங்கவில்லை" விசாரித்தாவாறே காரை பார்க்கிங் நோக்கிச் செலுத்தினான்.

"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கின்றது" தயக்கத்துடன் கூறினாள்.

"என்ன வேலை"

"நீதிமன்றம் போக வேண்டும் என்னை நம்பி வழக்கை தந்து இருக்கின்றார்கள் இல்லையா?"

"சரிதான்" என்றவன் தன் போனை எடுத்து "யாதவ் மிஸ்டர் சாரிக்கு சொல்லு என்னுடைய மனைவியின் வழக்கு ஒன்று நீதிமன்றுக்கு வரும். மேடம் வர முடியாது அதனால் அவரை போகச் சொல்லு" போனை கட் செய்ய விழி வெளியே விழுந்து விடும் போல் கண்ணை விரித்தாள்.

சாரி என்று அழைக்கப்படும் ரங்காச்சாரி சென்னையின் பிரபலமான உயர் நீதிமன்ற சட்டத்தரணி. மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் சிறு வழக்கு ஒன்றை அவரை எடுக்கச் சொன்னால் அவர் எடுப்பாரா என்று. அது மட்டுமில்லை அவன் கம்பனியின் பிரதான லீகல் அட்வைஸர்

'என்ன' கண்களாலேயே கேட்டான் கௌதம்.

"அவர் பெரிய வக்கீல் இது போன்ற சிறு வழக்குகள் எல்லாம்...." சொல்லி வாய் மூடுவதற்கு முன் அவள் போன் கையில் அதிர்ந்தது யாரோ தெரியாத நம்பர். கௌதம் உதட்டுக்குள் சிரிப்பை ஒளித்தபடி "அந்த போனை ஆன்சர் பண்ணு" என்றான்.

“ஹலோ நான் ரங்கசாரி நீங்கள் மிஸ்டர் ஜிகேவின் மனைவி தானே. ஏதோ வழக்கு பேச வேண்டும் என்று சொன்னார்கள். வழக்கு விவரம் கொஞ்சம் சொல்லம்மா” என்று கேட்டார்.

“இல்ல சார் அது நானில்லை யாரோ தவறான தகவலை தந்து விட்டார்கள்” அவரிடம் மறுப்பதே பிரதானாமாய் பட அருகே நின்ற கணவனை மறந்துவிட்டாள்.

காரை நிறுத்திக் கீழே இறங்கிய கெளதம் கண்களில் தீயேழ முறைத்தான்.

"தகவல் தவறாய் இருக்க வாய்ப்பில்லையே அம்மா யாதவ் தான் அழைத்து கூறினான். இந்த நம்பர் தான் தந்தான். நீ ஏன் இத்தனை நாளில் ஒரு தரம் கூட சொல்லவில்லை" லேசாய் குறைபட்டார் சாரி.

‘இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை’ மூளை எரிந்து விழுந்தது.

“இல்ல சார் பார்ட்டி சாதாரண ஆட்கள். அவர்களால் உங்கள்....” என்று தயங்கவே “இல்லம்மா பேமென்ட் அனுப்பிவிட்டார்கள்” அவர் குறுக்கிட்டார்.

அவளை ஒரு தரம் பார்த்தவன் லிஃப்ட்டை நோக்கி நடந்தான். தன் முன்னாலேயே தன் மனைவியில்லை என்று மறுத்தது அவன் கோபத்தைத் தூண்டியிருந்தது. அவளுக்காக பொறுமை காக்கத்தான் செய்கின்றான் இருந்தாலும் அது இது போன்ற நேரங்களில் காற்றில் பறந்துவிடுகின்றது. லிஃப்ட்டை திறந்தவன் வருக்கின்றாளா இல்லையா என்று கூடப் பார்க்கமால் நம்பரை அமர்த்தி விட்டு உள் நோக்கிப் பார்த்து நிற்க கதவு தானாகவே மூடிக் கொண்டது, அவள் உள்ளே வரும் முன்.

வருவான்....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 51

அவரை ஒருவாறு நம்ப வைத்து திரும்பியவள் கண்ணில் பட்டது மூடும் லிஃப்ட் கதவு. ஓடி வந்து தடுப்பதற்குள் மூடிய லிஃப்ட் கதவையே வெறித்துப் பார்த்தாள் ஸ்ரீனிகா.

‘நான்தான் எதுவும் சொல்லவில்லையே எல்லாம் இந்த யாதவ் மடையனால் வந்தது’ கரித்துக் கொட்டியவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். சுற்றிலும் அதிக வெளிச்சமின்றி பகலிலும் இருளடைந்திருந்த அந்த கார் பார்க்கை பார்க்கவே வியர்த்துக் கொட்டியது.

‘இப்போது எங்கே போவது’ யோசித்தவளின் கண்ணில் தட்டுப்பட்டது லிஃப்ட்டின் இலக்கம். எட்டாவது மாடி மற்ற லிஃப்ட்டைப் பார்த்தால் அதுவும் மேல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மானாய் மிரண்டு சுற்றிப் பார்த்தவள் கண்ணில் தென்பட்டது ஏறிச் செல்லும் படிக்கட்டு.

லிஃப்ட் நாலாம் மாடியை அடையும் வரை கோபத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்து அதற்கு மேல் முடியாமல் “உன் மனதில் நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்?” சீறியவாறே திரும்பினால் வெற்றிடம்தான் அவனை வரவேற்றது.

“ஷிட்” தன் தொடையில் குத்தியவன் லிப்ட்டை நிறுத்தி மறுபடியும் கீழே சென்றான். அவன் காதில் அவள் பயந்த குரல் ஒலித்தது ‘பிளீஸ் என்னுடன் வர முடியுமா? எனக்கு இருட்டுப் பயம்’.

கார் பார்க் வெறிச்சோடி போயிருக்க ‘மற்ற லிஃப்டில் ஏறி போயிருப்பாளோ’ யோசனையுடன் பார்த்தான். அது எட்டாம் மாடியில் இருந்து இப்போதுதான் கீழே வருகின்றேன் எனக் காட்டியது ‘அதில் போயிருக்க முடியாது’. தலையை அழுத்தமாய் கோதியவன் கண்ணில் பட்டது படிக்கட்டு.

கடகடவென ஏறிச் சென்றவன் சோர்ந்து போய் அப்படியே சுவரில் சாய்ந்தான். ஒரு படிகட்டு முடிந்து அடுத்த படி ஆரம்பிக்கும் சமதளத்தில் நிற்க அவள் அந்தப் படிக்கட்டு முடியும் இடத்தில் இரண்டு முழங்கால் கட்டிக்கொண்டு தலையை முழங்கைகளில் புதைத்து அமர்ந்திருந்தாள்.

"ஸ்ரீனி" அவன் ஆழ்ந்த குரலில் நிமிர்ந்தவள் ஓடிச் சென்று அவன் நெஞ்சில் தஞ்சமானாள். கைகளால் நெஞ்சில் அடித்தாள் “என்னை விட்டுட்டு எங்கே போனீர்கள்” அவளை தனக்குள் புதைத்த கெளதம் "சாரிமா ரொம்ப சாரி... சாரிம்மா சாரிம்மா" அவளிடம் மன்னிப்பை வேண்டியும் அவலுடல் பயத்தில் நடுங்குவதை உணர்ந்து தன்னுடன் இன்னும் இறுக அணைத்து உச்சியில் இதழ் பதித்தான்.
🎻🎻🎻🎻🎻

வாஷ் ரூமில் இருந்து வெளியே வந்தவளை பார்த்தவாறே அவளருகே நடந்தான் கௌதம். அவள் முகம் இன்னும் வெளுத்திருந்தது. அவன் தான் முகத்தைக் கழுவும்படி கூறி அழைத்து வந்திருந்தான். முகம் ஏதோ ஆழ்ந்த யோசனையை காட்ட நிறுத்திக் கேட்டான் “என்னம்மா?”

“இல்ல நீங்கள் வர சொன்னதால் தான் வந்தேன் இனி வரவே மாட்டேன்” அடி வாங்கிய குழந்தை தன்னைத் தானே திருத்திக் கொள்வது போல் இருந்தது.

நெற்றியை சுருக்கி “ஏன் என்னாச்சு?” கேட்கும் போதே விளங்க “ஷ்.... இல்லடா அப்படியில்லை நீ... அது நீ அவரிடம் என் மனைவியில்லை என்பதால் வந்த கோபம்” விளக்கம் கொடுக்க முயன்றான்.

அவள் மூளையோ இங்கிருந்து செல்ல வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுக்க சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு உட்புறமாய் கீழே இறங்கி செல்லும் படிக்கட்டு தென்பட அதை நோக்கி நடந்தாள்.

கையைப் பிடித்து நிறுத்தியவன் “எங்கே போகின்றாய்?” சிறிது கோபமாகவே கேட்டான்.

மலங்க மலங்க விழித்தவள் படிக்கட்டை கையால் காட்டி “வெளியே செல்ல பாதை” பயந்தவாறே பதிலளித்தாள்.

“நான்தான் சொன்னேனே, அது நீ மனைவி...”

அவனை முடிக்க விடமால் இடை மறித்தாள் “விவாகரத்து சீக்கிரம் கிடைத்துவிடும்”

ஏற்கனவே ஊசலாடிக் கொண்டிருந்த மனம் சற்று முன் இருளில் விட்டுச் சென்றதில், அவனுக்கு உன்னைப் பிடிக்கவில்லை. அதுதான் நிஜம் மீதி அனைத்தும் உன் வீண் கற்பனை, அந்த மில்லுக்காக அவன் ஆடும் நாடகம் என்ற மூளையின் முடிவுக்கு கட்டுப்பட்டு, மூளை மனம் இரண்டும் சேர்ந்து முடிவெடுத்துவிட்டிருந்தது. அவன் அவளை நேசிக்கின்றான் என்ற ரீதியில் எதைச் சொன்னாலும் மூளையோ மனமோ நம்ப மறுத்தது.

சட்டென இழுத்து நிறுத்தி சுவருக்கும் தனக்குமிடையில் சிறையெடுத்தவன் இருபுறமும் கையூன்றி அவள் முகம் பார்க்க விளங்கியது அவள் தன்னிலையில் இல்லை. தன் செயலிலும் பயத்திலும் தன்னிலை மறந்திருந்தாள்.

குனிந்து அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான். வெண்ணையில் விரல் புதைவது போல் அவன் இதழ் புதைந்தது.

அவன் இதழின் அழுத்தத்திலும் மீசையின் குறுகுறுப்பிலும் நடப்புக்கு திரும்பியவள் முட்டைக் கண்ணை இன்னும் விரித்தாள். அதில் கரைந்து காணாமல் போக முடியுமா என்பது போல் பார்த்திருந்தான் கௌதம்.

மிரண்டு போய் இருபுறமும் பார்த்தவள் “எல்லோரும் இருக்கிறாங்க பொது இடம்” தொண்டையை தாண்டி சத்தம் வர மறுக்க மனம் மூளையை திட்டித் தீர்த்தது ‘நீ சரியாய் வேலை செய்யுறியா இல்லையா? தொண்டையில் இருந்து காத்து தான் வருது’

“இப்ப நீ என்னோட வராட்டி, அடுத்தது இங்கேதான்” பெரு விரலால் அவள் இதழ்களைத் தடவ துள்ளி விலகியவளுக்கு அழுகை வரும் போலிருக்க தயங்கி நின்றவளை நெருங்கினான். “இல்ல வரேன்” என்றாள் கலங்கிய குரலில் கூறி மீண்டும் வாஸ்ரூம் சென்றவளையே உதட்டைக் கடித்தபடி பார்த்திருந்தான் கௌதம்.

எல்லாப் பக்கமும் பயத்தின் திரையை போட்டுக் கொண்டிருந்த அவளை எப்படி நெருங்க என்று புரியாமல் தவித்தான்.
🎻🎻🎻🎻🎻

அந்த நகைக் கடையில் விஐபி அறையில் நடுவில் இருந்த சிறு மேசையில் நகைகள் அடுக்கியிருக்க அனைவருமாய் அதை சுற்றி சோபாவில் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நீண்ட சோபாவில் இயல்பாய் அவளுக்கு இடம் விட்ட கௌதம் தங்கையின் அருகே அமர, அவளோ அருகே ஒற்றை சோபாவில் சோபாவில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததுமே இரண்டு வாண்டும் அவளிடம் ஓடி வந்துவிட்டனர்.

அருகே நின்ற பெண்ணிடம் “இவர்களுக்கு போடுவது போல் சுட்டி சூரிய சந்திர பிரபை கால் சதங்கை இருக்குதா?” கேட்டாள். நிலாவின் அடுத்து வரும் டான்ஸ் ப்ரோக்ராமிற்கு தேவையான நகையை கூற அதே போல் எடுத்து தந்தாள் அந்த விற்பனைப் பிரிவில் நின்ற பெண்.

“இந்த டிசைன் எப்படி இருக்கு?” கையிலிருந்த நகையை அவளுக்கு காட்ட திரும்பினால் அருகே வெற்றிடம் வரவேற்றது. சற்றுக் கோபத்துடன்தான் அவளைத் தேட ஒற்றை சோபாவில் அமர்ந்திருந்தாள்.

அவள் இயல்பாய் அந்த சேல்ஸ் நகைகளை காட்டும் படி கேட்க முகம் மலர்ந்து அவளருகே நகர்ந்து அமர்ந்தான். ஆச்சரியமாய் இருந்தாலும் அவளையே கனிவுடன் நோக்கியவனுக்கு அழுகையை மறைத்த தடம் கூர்மையாக நோக்க தெரிந்தது. இது போல் எத்தனை தரம் அழுகையை மறைத்தாளோ என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.

“அண்ணா, இது எப்படி” என்று கேட்டவள் அண்ணன் எண்ணம் இங்கே இல்லை என்பதைப் பார்த்து “அண்ணி நீங்கள் என்ன எடுத்தீர்கள்?” ஆர்வமாய் கேட்டாள்.

“நிலாவிற்கு டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கு, அவளுக்கு கில்ட் அலர்ஜி, தோலில் காயம் போல் வருது அதான்” தயக்கத்துடன் கூற கௌதமின் முகம் விழுந்துவிட்டது. ‘அப்படியானால் தனக்கு எடுக்கவில்லையா?’

அண்ணின் முகத்தைப் பார்த்த தங்கை “இப்போ எடுத்து முடிஞ்சுதானே நீங்கள் இங்கே வாருங்கள். அண்ணா அண்ணிக்கு ஹெல்ப் பண்ணு” என்றவாறு நதியா எழ ஸ்ரீனிகாவின் முகம் வெளுத்தது. இப்போது என்ன சொல்வானோ தங்கையின் இடத்தைப் பறித்ததாய் கோபப்படுவானோ! அன்று லேசாய் நகம் பட்டதற்கே, அதுவும் அவள் நகம், அந்த குதிகுதித்தான். அதோடு சும்மாவே அன்று நகை பணத்திற்ககாதான் இருப்பதாய் கூறினான்.

அருகே இருந்த இன்னொரு வட்ட சோபாவில் அமர்ந்து பணத்தை மிஷின் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அந்த புதுநோட்டின் வாசம் வேறு அவள் நாசியை நெருட தேகம் வியர்த்து நடுங்கியது. அதற்குள் ஆபத்பண்டவானாய் அவள் போன் அடிக்க சிக்னல் இல்லை என்று தப்பிச் சென்றாள்.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்த கௌதம் யசோதா மூன்றாம் தரமாய் ஸ்ரீனியை தேட எழுந்து வெளியே சென்றான்.

“அடேய் படுத்ததாடா, யான் வாரான் பட்டுமே என்னறியில்ல வசந்த் வரும்” போனை கட் செய்தவள் திடீரென முளைத்த சுவற்றில் மோதி நின்றாள். ‘யாருடா சுவரை இங்கே கொண்டு வந்தஹ்டு வரும் போது இல்லையே’ குழப்பமாய் நிமிர்ந்து பார்த்தால் அது அவள் மணாளான் கௌதமின் மார்பு.

நெற்றியை தடவியவாறே மலையாளத்தில் வாய்க்குள் திட்டினாள் “தெம்மகாடு” விழாமல் இடையைப் பிடித்துக் கொண்டவன் எரிச்சலுடன் கேட்டான் “யாரனு”

“ஹா...”

“அதே போனில்...”

“கேசவன் அத்தரே...” அவன் தீவிழியில் பாதியை வாய்க்குள் முழுங்கினாள்.

“வா” ஒற்றை சொல்லோடு செல்ல மேலே பார்த்தவள் ‘பப்பா’ என்று காலை தரையில் உதைத்தாள். அவன் நின்று திரும்பிப் பார்க்க “ஞிங்களோடே பின்னில் வாரானு” கை காட்டினாள். அவனுக்கு புரிந்தது கேசவனோடு பேசியதன் விளைவு. இத்தனை நாள் மறந்திருந்த மலையாளம் திரும்பவும் வந்திருந்தது.

உள்ளே ஒற்றை சோபாவில் நதியா அமர்ந்திருக்க மீதியாய் ஒரே ஒரு இரட்டை சோபா மட்டுமே இருந்தது. வத்சலாவின் அருகே இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தவளைப் பிடித்து தன்னருகே இருத்தினான்.

கையின் இறுக்கத்தில் அவனைக் கெஞ்சுவது போல் பார்த்தவள் “நான் ஒரு இடமும் போகல ப்ளீஸ் கையை விடுங்கள் வலிக்குது” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற குனிந்து பார்க்க பிடித்த இடத்தில் சிவப்பாய் கைவிரல் அடையாளம், வலிக்காமால் தேய்த்துவிட்டான்.

“நகை எடுக்க உதவி செய்” என்றான் கௌதம்.

“யாருக்கு”

“ம்ம்ம்....... என் வருங்கால மனைவிக்கு” கடுப்புடன் பதிலளித்தான் கௌதம்.

“ஒஹ்... சரி” என்று தலையாட்டியவளை சற்று யோசனையாய் பார்த்தான். ‘என்ன இலகுவாய் தலையாட்டுறாள், சம்திங் பிஷி’. சில நகைகளை அவள் பார்க்க ஒரு கைசெயினை எடுத்துக் காட்டினான் “இது எப்படி இருக்கு?”

“இல்ல இது ஸ்ரீநிஷாவுக்கு பிடிக்காது” என்றாலே பார்க்கலாம்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் “இது எல்லாம்....” என்று கேள்வியாய் நோக்க “அவளுக்குப் பிடித்தது” மண்டையை உருட்டினாள்.

சேல்ஸ் பெண்ணை சொடக்கிட்டு அருகே அழைத்து ஒரு விரலால் வட்டமிட்டுக் காட்டினான் “ஜஸ்ட் ரிமூவ் தீஸ்” அவற்றை தீண்டக் கூட விரும்பவில்லை. அந்தப் பெண் எடுத்துப் போக அவனே சில நகைகளை தேர்வு செய்தான். அவளின் தேர்வை விட சிறப்பாய் இருக்கவே விழி விரித்துப் பார்த்தாள்.

“வேறு ஏ....” வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்க திரும்பியவன் அவள் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தான். வெள்ளிக் கால்கொலுசு, மல்லிகை மொட்டுடன் மணிகள் கோர்த்து அழகாய் இருந்தது.

“வேண்டுமா?” அதைக் கையில் எடுத்தவன் கேள்வியாய் நோக்கினான் ‘இதையாவது வாய் விட்டுக் கேட்பாளா’.

ஒரு விரலால் தன்னைத் தானே சுட்டிக் காட்டி கேட்டாள் “எனக்கா?”

“வேறு யாருக்கு?”

“வேண்டாம்” பலமாய் மறுத்து தலையாட்டினாள்.

“ஏனம்மா” பரிவுடன் வந்தார் அசோகன்.

“இல்ல எனக்கு வெள்ளி அலர்ஜி கால்ல புண் வந்திரும் அதான்” தயக்கமாய் கூறினாள். அப்போதும் அவள் பார்வை அந்தக் கால்கொலுசில் ஆசையாய் பதிந்திருந்தது. ஒருதரம் புருவத்தை ஏற்றி இறக்கிய கௌதம் சேல்ஸ் பெண்ணைப் பார்த்து “கோல்ட் அங்கில் செயின் இருக்குதானே?” கேள்வியாய் இருந்தாலும் கொண்டு வா என்ற உத்தரவே மேலோங்கி இருந்தது.

“இல்ல கோல்ட் வேணாம்” அவசரமாய் மறுத்தாள் ஸ்ரீனிகா “அம்மவுக்கு பிடிக்காது, காலில் தங்கம் போடக் கூடாது என்று சொல்வார்” காரணத்தையும் சேர்த்துக் கூறினாள்.

“ஒஹ்....” என்றான் கௌதம். சற்று நேரம் அந்தக் கொலுசையே கையில் வைத்துப் பார்த்தவன் முகம் பிரகாசிக்க “இதை உடனேயே பில் போட்டுக் கொண்டு வாருங்கள்” அருகே அவன் உத்தரவிற்காய் காத்திருந்த சேல்ஸ் பெண்ணிடம் உத்தரவிட்டான்.

“யாருக்கு?” யோசனையாய் கேட்டாள் ஸ்ரீனிகா.

“நான் கொலுசு போடுவதில்லை”

“ஆங்...” விழித்தாள். ‘வேதாளம் கொலுசு எல்லாமா போடும்’ மனம் வடிவேலாய் மாறி கவுண்டர் கொடுத்தது.

“வேறு ஏதாவது எடுக்க வேண்டுமா?” பொதுவாய் கேட்டான் கௌதம்.

யாசோதா “இங்கே வாம்மா” என்று ஸ்ரீனிகாவை அழைத்தவர் “இவற்றில் உனக்குப் பிடித்த இரண்டு செட்டை எடு” என்று வைர நகை செட் சிலவற்றைக் காட்டினார். தோடு நெக்லஸ், காப்புகள், ப்ரசெலேட் மோதிரம், வெயிஸ்ட் செயின் என ஒரு பெண்ணுக்கு தேவையான அனைத்து நகைகளுடன் நெற்றி சுட்டி கூட இருந்தது.

ஏற்கனவே புதுநோட்டு வாசத்தில் வயிற்றுக்குள் ஏதோ பிசையும் உணர்வுடன் இருந்தவளுக்கு இப்போது வைரநகை வெள்ளை நிற பல்ப் வெளிச்சத்தில் பிரதிபலிக்க பயத்தில் வியர்த்து வழிந்தது. வயிற்றைப் புரட்டிக் கொண்டு சத்தி வரும் போலிருந்தது. கௌதம் அருகே இருந்ததில் ஓரளவு சமாளித்துவிட்டாள், அவனை விட்டு விலகியதும் பயம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது.

‘இப்போது எதைப் பார்த்து பயபுடுறாள்’ கௌதம் யோசனையாய் பார்க்க தீப் தன் சித்தப்பாவை சுரண்டினான்.

“என்னடா?” என்றவனிடம் காசு எண்ணும் இடத்தைக் காட்ட சட்டென புரிந்தது. அவளுக்கு புதுநோட்டு வாசம் நகை என்றால் பயம். அவள் உள்ளே வர தயங்கி முகம் வெளுத்த காரணம் புரிய ‘நீ ரெம்ப தப்பு பண்ணுற கௌதம், எப்படி இந்தப் பயத்தை மறந்த?’ தன்னைத்தானே திட்டியவனுக்கு அந்த ரண களத்திலும் குதூகலமாய் மனதில் சந்தோசம் குமிழியிட்டது. தன்னருகில் அவள் பயப்படவில்லை, அவன் அருகே இருந்தால் அவளுக்கு பயமில்லை.

சட்டென வாயைப் பொத்தியவள் “வாஸ்ரூம் போகணும்” அந்தரப்படவே சேல்ஸ் பெண் “இந்த வழி மேடம் என்று அழைத்துச் சென்றாள்.

கோவிலில் சாப்பிட்ட அனைத்தையும் வெளியே எடுத்தவள் சோர்ந்து போய் வர கூடவே வந்த யாசோதா நெட்டி முறித்து ஆர்வமாய் கேட்டார் “ஏதாவது விசேஷமாடா?”.

அவரைக் குழப்பத்துடன் பார்த்தவள் மறுத்து தலையாட்ட அருகே நின்ற கௌதமின் கண்கள் பளிச்சிட்டது. ‘அவளுக்கே இன்னும் தெரியாதா?’

மீண்டும் தன்னருகே யசோதா இருத்திக் கொள்ள கௌதமை பாவமாய் பார்த்தாள் ஸ்ரீனிகா. கொப்பளித்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன் “அப்பா, கொஞ்சம் தள்ளி இருங்கள்” என்றவாறு அவளருகே அமர்ந்து தோளைச் சுற்றிக் கை போட்டான்.

யசோதா அசோகன் இருவரும் அவனைக் குழப்பத்துடன் பார்க்க “உங்கள் மருமகளுக்கு தெனாலி மாதிரி ஒரு லிஸ்ட் பயம் இருக்கு, அதில் சிலது புதுநோட்டு வாசம் நகை” அவள் பரிதபமாய் நிமிர்ந்து பார்த்தாள். ‘இப்படி டேமேஜ் பண்ணுறானே’.

“நானிருக்கிறேன் எடு” தோளில் அழுத்தினான்.

ஒரு மரகத செட்டையும் வைர செட்டையும் தயக்கத்துடன் கைகாட்ட அதையே தேர்வு செய்த யசோதா “இது எங்களின் பரிசு” என்று தனியே பில் போட எடுத்து வைத்தார்.

“அண்ணி இது கிஃப்ட்” என்று கழுத்துடன் சேர்ந்தது போல் ஆறு மரகத கல் பதித்த மெல்லிய சங்கிலி ஒன்றைக் கொடுக்க அவளுக்கும் அது பிடித்திருந்தது முகத்தில் தெரிந்தது. “அண்ணா போட்டு விடு” கண்ணடித்தாள்.

செல்லமாய் முறைத்தாலும் சிரித்தவாறே போட்டுவிட்டான். சேல்ஸ் பெண் அவன் கொடுத்த கொலுசுடன் வர எழுந்து அவளுடன் சென்றான். அனைவருக்கும் ஜூஸ் வர ஒரு வாய் குடித்து விட்டு வைத்துவிட்டாள். அவள் கண்கள் கௌதம் சென்ற திசையையே அடிக்கடி பார்க்க குறும்பாய் சிரித்த நதியா அருகே நின்ற இன்னொரு பெண்ணை அழைத்து ஏதோ சொன்னாள்.

அவளும் சிறு சிரிப்புடன் “மாம் உங்களை கௌதம் சார் வரட்டாம்” என்று அழைத்துச் சென்றாள். அந்த ஐயயாயிரம் அடி தளத்தின் மறுபுறத்தில் அமைந்திருந்த அலுவலக அறைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்த அறைகளின் வெளியே இருந்த பெயர்களைப் பார்த்து விட்டு திகைத்து நின்றாள் ஸ்ரீனிகா ‘அப்படியானால் இது அவர்களின் சொந்தக் கடையா?’.

ராகவன் கிருஷ்ணா, வத்சலா அசோகன், யசோதா, நதியா என அனைவர் பெயரும் தனித்தனி அறைகளில் பொறிக்கப்பட்டு இருந்தது. ஒரு அறையில் கௌதம் கிருஷ்ணா ஸ்ரீனிகா என்று எழுதியிருக்க அந்த அறையின் உள்ளே கௌதம் ஏதோ செக்கில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான். முன்னே மனஜேர் போல் ஒருவர் பணிவாய் நின்றிருந்தார். சேல்ஸ் பெண் கதவைத் தட்ட நிமிர்ந்து பார்த்தான். வாசலில் நின்ற ஸ்ரீனிகாவைக் கண்டவன் புன்னகையுடன் “உள்ளே வா ஸ்ரீனி” இயல்பாய் அழைத்தான்.

அவள்தான் பட்டு வேட்டி சட்டையிலும் அந்த இடத்திற்கு கம்பீரமாய் பொருந்தியவன் அழகில் மயங்கிப் போய் நின்றாள்.

மனஜோரிடம் திரும்பி “நான் சொன்னது போல் செய்துவிடுங்கள், இதில் சொல்லியிருப்பது இன்று ஈவ்னிங் நாலு மணிக்கு முன் வேண்டும்” உத்தரவிட்டவன் “என்ன குடிக்கிறாய்? ஜூஸ்” அவளைப் பார்த்து மென்மையாய் கேட்டான்.

வேகமாக மறுத்து தலையாட்டினாள் “வேண்டாம், சத்தி வரும்” உதட்டை சுளித்தாள்.

சுளித்த உதடுகளைப் பார்த்தவன் “இம்சைடி நீ” வாய்க்குள் முணுமுணுத்தான். போனை எடுத்து ஒரு லெமன் கொண்டு வாருங்கள்” என்றவன் மேஜையில் இருந்த ஹீட்டரில் தண்ணீரைக் கொதிக்க வைத்தான். அவன் டீ போட அவள் விழிகள் கருவண்டாய் அங்கும் இங்குமாய் ஓடி அறையை அளந்தது.

அதைப் பார்த்தவன் கேட்டான் “என்னடி”

“இந்த மோல் உங்களுடையதா?” கண்களை விரித்துக் கேட்டாள்.

“இல்லையே” என்றவன் தேநீரில் லேமனைப் புழிந்து விட யோசனையாய் நோக்கினாள். “வெளியே பெயர் இருந்ததே!” குழப்பமாய் கேட்டாள்.

“என் பெயர் மட்டுமா இருந்தது?” அவளை அழுத்தமாய் பார்த்து கேட்க “ஒஹ் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பங்கு இருக்கா?” புதிருக்கு விடை கண்டு பிடித்தது போல் பார்த்தாள்.

“அதுவும் இல்லையே” மீண்டும் கூற கடுப்பாகிப் போய்க் சொன்னாள் “சொல்ல விருப்பமில்லாவிட்டால் விருப்பமில்லை என்று சொல்லுங்கள்”.

சிறு முறுவலுடன் அவள் கோபத்தை ரசித்தவன் “இந்த அறையின் முன் என் பெயர் மட்டுமா போட்டு இருக்கு” தேனீரை எடுத்துக் கொண்டு வந்தவன் அவள் முன் மேஜை மீது ஒரு காலை தொங்க போட்டு அமர்ந்தான்.

“இல்ல கௌதம் ஸ்ரீனி..” பாதியில் நிறுத்தினாள்.

“அப்படியானால் இந்த மோல் யாருடையது?” அவளையே கேட்டான். அவளை அந்நியமாய் நிற்க வைத்தது அவன்தான். அதனால் அவளை குடும்பத்தில் ஒருத்தியாக உணர வைப்பதையும் அவன்தானே செய்ய வேண்டும்.

“நம்முடையது” வாய்க்குள் முனகினாள்.

“அதேதான் குடி” கையில் கொடுக்க “எப்போதிருந்து...” எதையோ ஆர்வமாய் கேட்டவள் அவன் கண்கள் மின்னப் பார்க்க குனிந்துவிட்டாள். ‘எப்போதிருந்து என் பெயரைப் போட்டீர்கள் என்றுதான் கேட்க வந்தாள். அது அவனுக்குமே புரிந்திருந்தது.

“அப்ப ஏன் காசு கொடுத்தீர்கள்?” நீண்ட புருவத்தை சுருக்கினாள்.

“ஒவ்வொரு கடையும் ஒவ்வொருவர் பெயரில் இருக்கு நகைக் கடை நதியா வத்சலா பெயரில் இருக்கு, அடுத்ததாய் டெக்ஸ்டைல் அண்ணாவின் பெயரில் இருக்கு. சில கடைகள் வாடகைக்கு கொடுத்து இருக்கு அதன் மூலம் வரும் வருமானம் எனக்கு, சிலதில் மொத்த லாபத்தில் அனைவருக்கும் பங்கு என்று பிரித்துக் கொடுத்து இருக்கின்றார் அப்பா. அதோட பில் போட்டு வேண்டாவிட்டால் இன்கம் டக்ஸ் பிரச்சனை வரும்” அவன் நிதிநிலையைப் பற்றி தயக்கமின்றி அவளிடம் பகிர்ந்தான். இயல்பாய் கையை அவள் தலையில் வைத்து நெற்றியை பெரு விரலால் இதமாய் அழுத்திவிட்டான்.

அந்த இதத்தில் ஒரு கணம் மயன்கியவள் “அப்படியானால் அன்று வந்த போது அம்மா அப்பாவுக்கு தெரிந்து இருக்காதா?” கண்களைச் சுருக்கிக் கேட்க “தெரிய வேண்டும் என்றுதானே வந்ததே” கண்ணடித்தான்.

விழிவிரித்துப் பார்க்க “எவ்வளவு பெரிய கண்” என்று விரலால் அளந்தவன் “குடி” என்றான்.

“சத்தி வரும் வேண்டாம்” என்று மறுக்க “சத்தி வந்தால் எடுக்கலாம். இப்போது குடி வயிற்றில் ஒன்றுமே இல்லை” அதட்டினான்.

வேண்டா வெறுப்பாய் வாயில் வைத்தவள் அதன் சுவையில் முகம் மலர “உங்களுக்கு சாய் போட தெரியுமா சூப்பர்” என்றவாறே அருந்தினாள். முழுதாக குடித்து முடிக்கும் வரை பொறுமையாய் இருந்தவன் “ஸ்ரீனி..” அழைத்தான்.

“ஹ்ம்ம்..” உதட்டை துடைத்தவாறே நிமிர்ந்து பார்க்க வினவினான் “உனக்குத்தான் புளி பிடிக்காதே இப்போது எப்படிக் குடிக்கிறாய்?”

“இல்ல வாயெல்லாம் கசந்து வழியுது, காய்ச்சல் என்று நினைக்கிறேன். ஒருக்க மருந்து எடுக்கத்தான் வேண்டும்” என்றவளை உல்லாசமாய் வேடிக்கை பார்த்தான் கௌதம். அடிப்படை விடயங்கள் எதுவுமேவா தெரியாமல் இருப்பாள். சட்டென குனிந்து அவள் நெற்றியோடு நெற்றி முட்டி நாசியால் கன்னத்தில் நிரடினான். ஒரு குழந்தையை கொஞ்சுவது போல் கொஞ்சினான்.

அவள் செயலில் திகைத்துப் போய் இருந்தவளைப் பார்த்து “இன்று வீட்டிற்குப் போயிட்டு பிறகு மருந்து எடுக்கலாம்’ என்றவன் குரல் சிரிப்பை அடக்கி வைத்திருந்தது.

“எஎஎன்ன? எதாவது பிழையா சொல்லிட்டான?”

“இன்று வீட்டிற்குப் போனதும் தெரிந்து விடும் வா, எல்லோரும் காத்திருப்பார்கள்” என்று அழைத்துச் சென்றான்.

அவன் மலர்ந்திருந்த முகத்தை நோக்கியவள் முகத்திலும் ஒரு புன்னகை தானாக மலர்ந்தது.

அவனுடனான இந்தத் தருணங்கள் அவளுக்கு பொக்கிசங்கள்.

அந்த மில்லுக்கு ரிச்விளிஷ்மென்ட் எழுதி அதை ஸ்ரீராமும் ஸ்ரீநிஷாவும் சேர்ந்து கௌதமுக்கு விற்பது போலவும் கௌதம் அதை வாங்கி தங்கைக்கு பரிசாக அளிப்பது போலவும் டீட் எழுதிவிட்டாள். அதில் அவர்களும் கையெழுத்திட்டு விட்டார்கள். அதற்குரிய பேமென்ட்டும் செக் ஆகவும் பணமாகவும் அவர்களிடம் போய் சேர்ந்திருந்தது.

அவர்கள் இருவரிடமும் கையெழுத்து வாங்குவதற்குள் அவளுக்குத்தான் ஜீவன் எமனிடம் போய் ஒரு ஹாய் சொல்லி வந்துவிட்டது. அத்தனை பொய்கள்.

கௌதமும் நதியாவும் சுரேஷும் கையெழுத்து வைப்பது தான் மிச்சம். இன்று அவனிடம் சேர்ப்பித்து விட்டு இரவோடு இரவாக வீட்டை விட்டுப் போய் விடுவதுதான் திட்டம். இந்த மில் வேலையை ஒரு வழி செய்தத்தான் இரண்டு மாதங்கள் இங்கே தங்கியிருந்தாள். இல்லாவிட்டால் எப்போதே போயிருப்பாள்.

அவனைப் பிரிய வேண்டும் என்ற எண்ணம் எழவே கண்களில் நீர் திரையிட லேசாய் தலை வலிக்கும் போலிருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் தலைவலி வரவேயில்லை. அல்லது கௌதம் வர விடவில்லை என்று சொல்ல வேண்டுமோ!

நெற்றிப் பொட்டை அழுத்திவிட்டாள். “என்னடி தலை வலிக்குதா?” பதறிப் போய்க் கேட்டான் கௌதம். கண்களில் நிரம்பி நின்ற நீரைத் நாசுக்காய் துடைத்தவன் முகத்தில் வேதனை அப்பட்டமாய் தெரிய “அழாதேடி” என்றான்.

கடந்த இரண்டு மாதத்தில் அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்படி. அவனுக்கு தெரியாது என்று நினைத்து அவள் செய்யும் அனைத்து வேலைகளும். இப்போது எதை நினைத்து அழுகின்றாள் என்பதும்.

“ரெம்ப வலிக்குதா? இப்ப மருந்து போடலாமா தெரியலையே. டாக்டரிடம் போவோமா?” கேள்வி மேல் கேள்வி கேட்டவன் உடல் நடுங்க தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டான்.

அவன் நடுக்கத்தை உணர்ந்தவளுக்கு திக்கென்றது. அவன் முதுகைத் தடவி “அது சத்தி எடுத்ததால் வந்த தலையிடி. வேறு ஒன்றுமில்லை, ரிலாக்ஸ்” அவனை ஆறுதல்படுத்தினாள். மனமோ இவனுக்குத் தெரியுமா? தெரிந்தால் தாங்கிக் கொள்வானா? நெஞ்சு பதறியது.

அவன் அணைப்போ நொடிக்கு நொடி இறுகியது, விட்டால் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்வான் போலிருந்தது.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 52


சில வாரங்களுக்கு முன்னர் மாடியிலிருந்து இறங்கும் போது லேசாய் தலை சுற்றியதில் தடுமாறிவிட்டாள். நல்லவேளையாக அருகே நின்ற கௌதம் பிடித்துவிட்டான். இல்லாவிட்டால் பெரிய காயமாய்தான் போயிருக்கும். ஆனால் அந்த நேரத்தில் அவனில் ஏற்பட்ட பதற்றம்... அன்று முழுதும் அவனை விட்டு இம்மி கூட அவளை அசையவிடவில்லை, உறங்கி எழுந்தது கூட அவன் மடியில்தான். எழுந்த போது கலங்கிச் சிவந்திருந்த அவன் கண்களும் வெளிறிப் போயிருந்த அவன் முகமும் இப்போதும் நினைவிருக்கே.

அதோடு அவளிடம் கோபமாய் இருந்த நாளில் கூட அவளுக்கு ஒன்று என்றால் அவன் உடல் நடுங்கத்தான் செய்தது. இப்போதோ கேட்கவே வேண்டாம். இவனிடம் போய் எப்படி சொல்லுவாள்...

குனிந்து பார்க்க அவன் நெஞ்சில் நாடி பதித்து அண்ணாந்து பார்த்து புன்னகைத்தாள் “எனக்கு ஒன்றுமில்லை”.

தலையாட்டி ஏற்றுக் கொண்டவன், அவள் முன்னுச்சி மயிரை ஒதுக்கிவிட்டான் “மறுபடியும் சொல்றன், என்னை விட்டு போகணும் என்ற எண்ணமிருந்தால் விட்டுடு” என்றான் அழுத்தமாய்.

“என்னை பிரிந்து இருப்பதுதான் உங்களுக்கு தண்டனை என்று சொன்னால், என்ன செய்வீர்கள்?” தலை சாய்த்துக் கேட்டாள்.

“அதைத்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, அது மட்டும் முடியாது. இல்லை அப்படி பிரிந்துதான் இருக்க வேண்டும் என்றால் நீ வீட்டில் இரு நான் வெளியே போகிறேன். உன்னைத் தனியாய் ஒரு போதும் விட முடியாது” தீர்க்கமாய் கூறியவன் அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான் “போகவா?”.

சொல்வதைச் செய்வேன் என்ற உறுதி அவன் முகத்தில் பட்டவர்த்தனமாய் தென்பட்டது.

அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டவள் கையை மார்புக்கு குறுக்கே கட்டி திரும்பி நின்றாள். மெல்ல நகைத்தவன் “வா போகலாம்” கதவைத் திறந்தபடி பிடித்திருந்தான்.

இருவரும் வெளியே வந்து குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்கள். இருவர் முகமும் சற்று மலர்ந்திருக்க யாசோதா நிம்மதியுடன் அவர்களை நோக்கினார். அவர் குழந்தைகள் சந்தோசமாய் இருப்பதைத் தவிர அவருக்கு என்ன வேண்டும்.

நதியாவின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு சுரேஷ் வந்ததும் சிறிய அளவில் குடும்பத்தினரிடையே நதியாவின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர் ராகவனும் கௌதமும்.

“ஸ்ரீனிகா நீ டெஸ்ட்..” வத்சலா ஏதோ கேட்க வர கௌதம் பின்னிருந்து வேண்டாம் என சைகை செய்ததை யோசனையோடு பார்த்தாலும் அமைதியாகிவிட்டாள்.

“என்ன அக்கா?” ஸ்ரீனிகா கேட்க “இல்ல இரண்டு நாள் பார்த்து விட்டு காய்ச்சலா என்று டெஸ்ட் பண்ணுவோம் என்று சொன்னேன்” சமாளித்தாள் வத்சலா.

அனைவரும் வெளியே வந்து அடுத்த தளத்தில் இருந்த ஆடைகள் வாங்கும் கடையினுள் செல்லவே ஸ்ரீனிகாவிற்கு நெற்றியில் குறு வியர்வை வடிந்தது. அவள் தோளைச் சுற்றிக் கையை போட்டு கைகுட்டையால் வியர்வையை ஒற்றி எடுத்தவன் கேட்டான் “சேலையும் பயமா?”.

நிமிர்ந்து பார்த்தவள் “இல்ல என்னவென்று தெரியல களைப்பா இருக்கு” பதிலளித்தாள்.

பெருவிரலால் தோளை வருடிவிட்டவன் “இங்கே ரெஸ்ட் எடுக்க அறை இருக்கு. கொஞ்ச நேரம் படுத்து இருக்கின்றாயா?” கரிசனையாய் கேட்டான். எட்டு மாத வயிற்றுடன் நதியா உற்சாகமாய் முன்னே சென்றதைப் பார்த்தவள் தான் போய்ப் படுப்பது மரியாதையாய் இருக்காது என நினைத்தவளாய் “சமாளிக்க முடியும் இல்லாவிட்டால் பார்ப்போம்” என்றாள்.

இதற்கு முதலும் குடும்பமாய் வெளியே போகும் போது கேரளாவிற்கு போகின்றேன் அல்லது வேலை என்று ஏதாவது காரணத்தைச் சொல்லி ஒதுங்கினாலும் அவர்களுடன் அது போல் போக ஆசை கொண்டது உண்மைதானே! இன்று ஓர் வாய்ப்புக் கிடைக்கும் போது அதைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதுதான் நிஜம்.

கீழே கம்பளம் விரித்து வத்சலா யசோதா நதியா மூவரும் அமர்ந்து விட நிலா தீப்பும் அவர்களுடன் அமர்ந்துவிட்டார்கள். ராகவனும் அசோகனும் வேலை இருப்பதாக கூறி கழன்று விட கௌதம் லப்பை வைத்துக் கொண்டு அருகே இருந்த சோபாவில் இருந்து வேலையில் ஆழ்ந்துவிட்டான்.

“அண்ணி இந்த நிறம் உங்களுக்கு எடுப்பாய் இருக்கும்” என்றவள் சுற்றும் முற்றும் பார்க்க ஸ்ரீனிகாவைக் காணவில்லை.

“எங்கடா உங்கள் ஸ்ரீமா?” அருகே சமத்தாய் விளையாடிக் கொண்டிருந்த இருவரையும் கேட்க “சித்தப்பாவுடன்” என்றான் தீப்.

திரும்பிப் பார்க்க கௌதம் முன்னே இருந்த சிறுமேசையில் லப்பை வைத்து வேலை செய்து கொண்டிருக்க, அவன் வலது கையைக் கட்டிக் கொண்டு பின்புறத் தோளில் தலைசாய்த்திருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா.

கடுப்பாகிப் போன நதியா கையிலிருந்த சேலையை சுற்றி கௌதமை நோக்கி எறிந்தாள். அவள் சேலையைச் சுற்றவே கண்கள் விரிய கௌதமைத் தட்டி கையக் காட்ட அவனோ அப்போதுதான் அவளைப் கண்டு வியந்தவனாய் “நீ எப்போது இங்...” முடிப்பதற்குள் சேலை வந்து ஸ்ரீனிகாவின் முகத்தில் மோதியது.

அப்பாவியாய் கேட்டான் “ஏன்டா அண்ணி பாவமில்லையா தியா?” நொடியில் விலகிவிட்டிருந்தான்.

“டேய் அண்ணா அது உனக்கு எறிந்தது” கடுகடுத்தாள் நதியா “அண்ணியை சேலை எடுக்க அனுப்பு எப்ப பாரு பூனைக்குட்டி மாதிரி கைக்குள் வைச்சுக் கொண்டு”.

சேலையை தூக்கிப் போட்டவன் “நானா தியா பிடித்து வைச்சிருக்கேன்” அப்பாவியாய் கையை உயர்த்த அவன் கையேடு சேர்ந்து உயர்ந்தது அவள் கைகள்.

“எனக்கு சேலை வேண்டாம்” என்றவள் அவன் கையை இறக்கி இன்னும் இறுக பிடித்துக் கொண்டாள். அவளைப் பொருத்தமட்டில் அவனுடன் இருப்பது இன்னும் இருப்பது சில மணித்துளிகளே, அதையும் அவன் அருகாமையில் கழிக்க எண்ணினாள்.

“அண்ணிஈ....” பல்லைக் கடித்தாள் நதியா “அண்ணாவை காக்கா தூக்கிக் கொண்டு போகாது. வந்து சேலையை எடுங்கள். என் வளைகாப்புக்கு எதை கட்டுவீர்கள்?” மிரட்டினாள்.

பரிதாபமாய் பார்த்தவள் “நீங்களே எடுங்களேன், எனக்கு பட்டுசேலை பற்றி எதுவும் தெரியாது” சரணடைந்தாள்.

“அதெல்லாம் முடியாது குறைந்தது நிறமாவது நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்”

“அன்று கூறைச் சேலை எப்படி எடுத்தாய்?” புருவத்தை சுருக்கினான் கௌதம்.

“அது அந்த ஏட்டா ஹெல்ப் செய்தல்லோ” கணங்கள் மின்னக் கூறியவள் “இதே கடைதானே அந்த ஏட்டா...” அவரைத் தேட நெற்றியில் அறைந்தாள் நதியா. “அண்ணிஈ... ஒரு ஏட்டாவும் வேணாம் டாட்டாவும் வேணாம். நானே ஹெல்ப் பண்ணுறேன் நீங்க வாங்கோ” அழைத்தாள்.

இரு கைகளையும் முகத்தின் முன்னே கோர்த்து முழங்கையை முழங்காலில் ஊன்றி அவளை உல்லாசமாய் வேடிக்கை பார்த்தவன் “வா நானும் வருகின்றேன்” என்று லப்பை மூடினான்.

அவன் பெரிய கால்களை சம்மணம் போட்டு அமர்ந்ததை காண அவளுக்கு சிரிப்பாகவும் வந்தது. அவளும் அருகே அமர்ந்து சேலைகளை பார்த்தாள். உண்மையிலேயே அவளுக்கு எது எடுப்பது என்று புரியவில்லை.

“ஏனம்மா அம்மாவுடன் சேலை எடுக்க சென்றதில்லையா?” ஆதுரத்துடன் கேட்டார் யசோதா.

“அது சின்ன வயதில் இருந்தே ஹொஸ்டலில் இருந்தது. பிறகும் நோர்மல் சாரிஸ்தான். இது மாதிரி பட்டுகள் பழக்கமில்லை” தயக்கத்துடன் கூறினாள்.

“அது என்ன மொட்டையாக பேசுவது. ஒழுங்காய் அத்தை என்று கூப்பிடு” கண்டித்தாள் வத்சலா.

“ஸ்ரீமா செல” என்று ஒரு சேலையை தூக்கி வந்து மடியில் போட்டாள் நிலா. இன்னொரு சேலையை தீப் தூக்கிக் கொண்டு வர “நான் தேவையில்லை போல இருக்கே உனக்கு சாறி தேர்வு செய்ய இத்தனை பேர் இருக்கிறாங்க” கௌதம் லேசாய் பொறாமைப் பட பெண்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். சற்று நேரத்தில் ராகவனும் அசோகனும் வந்து சேர அந்த இடமே கலகலப்பாய் மாறியது.

கௌதம் போன் அதிர அதை எடுத்துக் கொண்டு விலகிச் சென்றான் “ஆஹ் யாதவ் சொல்லு”.

“நாளாந்தம் எடுக்க எடுக்க தானே பழகிடும் இது எல்லலாமே தரமான பட்டுதான், டிசைன் நிறம் இரண்டும் செலக்ட் பண்ணுங்க, ஏதாவது பிழையா இருந்தா நான் சொல்லுறேன்” உதவிக்கு வந்தாள் நதியா.

போன் பேசிவிட்டு வந்தவன் மீண்டும் அமர தன்னருகே நெருங்கி அமர்ந்தவளை ஒரு தரம் திரும்பிப் பார்த்தான். முகம் உணர்ச்சியற்று இறுகிப் போயிருந்தது.

“அம்மா சாப்பாடு என்ன மாதிரி வெளியிலா இல்லை” கேட்கவே “இல்ல கிருஷ்ணா ஹோட்டல் சாப்பாடு நதியாவிற்கு நல்லதில்லை, வள்ளி சமைத்திருப்பாள். வீட்டிக்குப் போவோம்” என்றார் யசோதா.

நகைகளை சேலைகளை உரிய பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்தவன் “போவோமா? என்று எழுந்தான். “எனக்கும் வத்சலாவுக்கும் கொஞ்சம் கணக்கு பார்க்க வேண்டும் பார்த்ததும் வருகின்றோம்” என்று ராகவ் கூறவே அவர்களிடம் விடைபெற்று மோலை விட்டு வெளியே சென்றார்கள்.

ஸ்ரீனிகாவோ கௌதமையே திரும்பிப் பார்த்தபடி வந்தாள் ‘இவ்வளவு நேரம் நன்றாகத்தானே இருந்தான். இப்போது என்னாச்சு’ யோசனை ஒடியதில் சுற்றி இருந்தோரின் பார்வையைக் கூட கவனிக்கவில்லை. அசோகனின் சிறு கண்ணசைவில் யசோதா அவளை முன்னே அழைத்துச் செல்ல “என்னாச்சுடா?” மகனின் தோளில் கை போட்டார் அசோகன்.

ஏதோ போலிருந்த முகத்துடன் “நாத்திங் டாட்” தலையாட்டினான்.

“நான் உனக்கு அப்பாடா, நீயே சொல்றியா யாதவுக்கு கோல் எடுக்கவா?” தலையில் தட்டினார்.

“எல்லாம் உங்கள் மருமகள் செய்யும் வேலைதான்” முணுமுணுமுத்தவன் “ஒரு மில் வேண்டுவது தொடர்பாய் சின்ன பிரச்சனை அவ்வளவுதான். உங்களிடம் பிறகு போல் விலாவரியாக சொல்கின்றேன்” என்றவனை உற்றுப் பார்த்தவர் “உனக்கு என்ன நடந்தது. இந்த இரண்டு மாதத்தில் இப்படி மெலிந்து… என்னிடம் கூட சொல்ல முடியாத பிரச்சனையா? உன்னுடன் சற்றுப் பேச வேண்டும். நாளை காலை பத்து மணிக்கு என்னை சந்தித்து விட்டு வெளியே செல்” பதில் உத்தரவாய் வந்தது.

தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

லிஃப்டில் இறங்கும் போதும் அவன் முகத்தை முகத்தைப் பார்த்தவளைப் பார்க்க கௌதமிற்கு பாவமாய் இருந்தது. ஆனால் அவள் செய்து வைத்திருக்கும் காரியம் நினைவுக்கு வர கடுப்பானவனாய் முகத்தைத் திருப்பினான். “செய்வதெல்லாம் செய்துவிட்டு பச்சை பிள்ளை மாதிரி முகத்தை வைச்சிருக்கிறது”.

“எதாவது சொன்னீர்களா?” அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தவாறே கேட்டாள்.

“உனக்கு என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?”

திடீரென நின்று கேட்டதில் அவன் மீது மோதி நின்றவள் “இல்லையே” என்றாள்.

“அப்ப போய் காரில் ஏறு” எரிந்து விழுந்தான். சட்டென கண்ணில் நீர் திரண்டுவிட்டது. லாவகமாய் துடைத்து விட்டு அமைதியாய் காரில் ஏறி கண்களை மூடிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

டிரைவிங் சீட்டில் ஏறியவனுக்கு கண்மூடி சாய்ந்திருந்தவளைப் பார்க்க மனம் சட்டது. ‘இம்சைடி நீ’

கார் வீட்டின் போர்டிகோவில் நிற்க அனைவரும் இறங்கியிருந்தார்கள்.

ஸ்ரீனிகாவைப் பார்க்க அவள் கண்மூடி குட்டி உறக்கத்தில் இருந்தாள். புன்னகையுடன் அவளை லேசாய் உலுக்கினான் கௌதம். உறக்கம் கலைந்தவள் வீட்டிற்கு வந்திருந்ததை பார்த்து விட்டு அவசரமாய் இறங்கியதில் சேலை முந்தானை சீட்டுக்கும் கதவிற்கும் நடுவில் மாட்டுப் பட்டு கிழிந்திருந்தது.

ஏற்கனவே கௌதம் எரிந்து விழுந்ததில் சுணங்கியிருந்த மனம் இப்போது அம்மா வாங்கிக் கொடுத்த சேலையும் கிழிந்ததில் நொந்துவிட்டது. அவசரமாய் இறங்கி மறுபுறத்தால் சுற்றி வந்தவன் “பார்த்து இறங்க மாட்டாய்” கடிந்தவன் கண்களில் நீரோடு நிமிர்ந்து பார்க்க “என்ன சேலைதானே, இதே போல் புதிது வாங்கித் தருகின்றேன்” சமாதனபடுத்தினான்.

“இது அம்மா வாங்கித் தந்த சேலை” என்றவள் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் இறங்கவே “சரி சரி அழாதே, ஏதாவது செய்கின்றேன்” அவளுக்கு ஆறுதல் கூறியவன் “இப்போது கொஞ்சம் அவசரமாய் போக வேண்டும். வந்து என்ன செய்ய முடியும் என்று பார்க்கின்றேன் சரியா” என்று கேட்க தலையை ஆட்டி வைத்தாள்.

“இந்த தலையாட்டலை மட்டும் விடாதே” அவனையும் மீறி வந்த முறுவலுடன் சொன்னவன் “நல்ல ரெஸ்ட் எடு” என்ற வார்த்தையுடன் உடை கூட மாற்றாமல் சென்றிருந்தான். அவள் செய்து வைத்த குளறுபடியை சரி செய்ய வேண்டுமே.

வேட்டி சட்டையுடன் கம்பனிக்குள் வந்தவனை அனைவரும் ஆர்வமாய் பார்க்க “ஏன் வேட்டியுடன் யாரையும் இதற்கு முன் பார்த்ததில்லையா?” எரிந்து விழுந்தவன் “ யாதவிடம் திரும்பி “நீ வேலை செய்யுறீயா இல்லை இங்க இருந்து விளையாடுறீயா? இவர்கள் அனைவரும் இன்னும் ஒரு நொடியில் அவரவர் வேலையை பார்க்க வேண்டும்” காச்மூச் என்று கத்தினான்.

கிட்டத்தட்ட பத்து வருடமாய், இந்தக் கம்பனி ஆரம்பித்த காலத்தில் இருந்து கௌதமிடம் வேலை செய்கின்றான். இத்தனை வருடத்தில் ஒரு தரம் கூட இப்படி யாரையும் கத்திப் பேசியதில்லை. யாதவ் அஜாவை பார்க்க அவனோ எதுவும் பேசாதே என்பது போல் சைகை செய்தான்.

“ஸ்ரீராம் வந்திட்டாரா?” எரிச்சலுடன் கேட்டான்.

“யெஸ் பாஸ் மீட்டிங் ஹாலில் வையிட் பண்ணுறார்” அவன் செல்ல பின் தங்கிய யாதவ் “மேடம் இந்த முறை என்ன செய்தார்கள்?” ரகசியமாய் கேட்டான்.

“உன்னிடம் பாஸ் ஒரு மில்லை விற்க விடாமல் பார்த்துக் கொள்ள சொன்னார் இல்லையா?”

“சொன்னார் அதற்...” கேட்டவன் கண்கள் விரிய அஜா பதிலளித்தான் “அந்த மில்லைதான் பாஷூக்கே விற்றுவிட்டார்கள்”.

“செத்தேன்...” தலையில் கை வைத்தான் யாதவ்.

உள்ளே சுழல் நாற்காலியில் அமர்ந்தவன் நெற்றியை தேய்த்துவிட்டவாறே “இன்று ஈவ்னிங் பார்டிக்கு ரெடி பண்ண சொல்லியிருந்தேனே என்ன மாதிரி, எல்லாம் ரெடியா?” பின்னாலேயே வந்த யாதவிடம் விசாரித்தான்.

“ரெடி சார், நீங்களும் மேடமும் ஃபமிலியும் வர வேண்டியது தான் மிச்சம்” மென்று விழுங்கினான்.

“மிஸ்டர் சாரி வந்திட்டாரா?” கேள்விகள் அடுதத்டுத்து வில்லில் இருந்து அம்பாய் வந்தது.

“வர சொல்லவா சார்”

“குவிக்...” கைகளை சுண்டினான். “ஸ்ரீநிஷாவும் வந்திட்டாளா?”

கதவைத் திறந்தவன் “யெஸ் சேர்” என்றவாறே தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடிவிட்டான்.

“ஜிகே, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு” அவன் தோளில் கைவைத்தான் அஜா.

ஒருவித அலைப்புறுதலுடன் எழுந்தவன் கண்ணாடி வழியே வானத்தை வெறித்தான் “அவள் அசாமிற்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கிறாள்”. பின்னே நின்ற அஜாவிற்கு அவன் முதுகின் விறைப்பும் இறுக்கமும் தெளிவாகவே தெரிந்தது.

“எப்படியும் நீ விடப் போவதில்லை. பின் ஏன் உன்னை நீயே வருத்திக் கொள்கிறாய்?” ஆதராவாய் தோளில் கைவைத்தான்.

பதில் சொல்வதற்குள் கதவு தட்டி சத்தம் கேட்கவே தன்னை நிதானித்தவன் “கம்மின்” அவன் இருக்கையில் வந்து அமர்ந்தான். சாரி தான் உள்ளே வந்தார்.

“ப்ளீஸ்” என்று இருக்கையை கை காட்டினான்.

“நான் என்னால் முடிந்த வரை முயற்சி செய்திட்டேன். பட் அந்தம்மா உங்கள் மனைவிக்கு மிக நெருக்கம் போல இருக்கு, அவர்கள் சொல்லாமல் எதுவும் செய்ய முடியல” உதட்டை பிதுக்கினார் “இப்போதைக்கு விவாகரத்து என்ற முடிவை தள்ளிப் போட்டிருக்கேன்” என்றவர் கையிலிருந்த கோப்பைக் கொடுக்க திறந்து பார்த்தவன் கண்ணில்பட்டது அவன் கையெழுத்து.

ஒரு பக்க உதடு துடிக்க மேஜையில் கையை ஓங்கி அடித்தவன் எழுந்து நின்றான். கோபம் யார் மீதுமில்லை அவன் மீதேதான். அன்று மட்டும் கையெழுத்து வைக்கமால் இருந்திருந்தால் இந்தளவு வந்திருக்காது.

“ரிலாக்ஸ் மை பாய், இந்தியச் சட்டம் திருமணத்தை காப்பற்ற வேண்டும் என்பதற்கு தான் முதலிடம் கொடுக்கும். இப்போதைக்கு அடுத்த ஆறு மாத காலத்திற்கு விவாகரத்து என்று முடிவாகாத மாதிரிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன். உன் மனைவியை சமதானபடுத்தினால் மீதி தானே நடக்கும்” தோளில் தட்டிச் சென்றார்.

“ஒரு நிமிடம்” அவன் குரலில் கதவருகே நின்றவரைப் பார்த்து “இது பற்றி...” என்று கௌதம் இழுக்கவே “ஒரு தகவல் என் வாய் மூலமாக வெளிவராது” இடுப்பில் கைவைத்து அமைதியின்றி நின்றவனைப் பார்த்து சிரித்து விட்டு சென்றுவிட்டார்.

அஜா வெளியே சென்றுவிட இருக்கையில் தலைசாய்த்து அமர்ந்தான். மனமோ அன்று அவளுக்கு அடிக்கடி வரும் தலையிடியின் காரணம் தெரிந்த நாளை நோக்கி சென்றது.

வருவான்....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 53


அன்று தலைவலியில் அவஸ்தைப்பட்ட நாளில் இருந்தே அவளை மருத்துவமனை அழைத்துச் செல்ல முழுமுயற்சி செய்து கொண்டு தான் இருந்தான். ஆனால் கழுவும் மீனில் நழுவும் மீனாய் நழுவிக் கொண்டிருந்தாள் அவள்.

வழமையாக காலையில் வேலை என்ற பெயரில் நேரத்திற்கு தப்பி சென்றுவிடுபவள் இன்றோ படுக்கையை விட்டு எழவே மணி எட்டைத் தாண்டியிருந்தது. அவனும் தயாராகின்றேன் என்ற பெயரில் அறையில் இங்குமங்குமாய் நடந்து பார்த்தான். அவள் எழும் வழியைத் தான் காணோம். இரண்டு தரம் பார்த்தவன் மூன்றாம் தரம் தலைமாட்டின் அருகே அமர்ந்து கன்னத்தில் லேசாய் தட்டி எழுப்பினான்.

“ஸ்ரீனி” மெல்ல அசைந்தவள் அவன் மடிமீது தலைவைத்து மீதி உறக்கத்தை தொடர்ந்தாள். தலையை இதமாய் வருடிவிட்டவன் “என்னாச்சுடா” கனிவாய் கேட்டான்.

“தலை சுத்துது” வாய்க்குள் முனங்கி அவன் வயிற்றில் முகம் புதைத்தாள்.

பாதி மயக்கத்தில் ஒன்றிய விதத்தில் அவன் முகத்தில் மெல்லியே புன்னகையின் சாயல் தோன்ற இதமாய் தலையை வருடிவிட்டவன் “டாக்டரிடம் போகலாம் என்றாலும் கேட்கற இல்ல” லேசாய் தவித்தான்.

அவன் குரலில் விழித்தவள் சட்டென எழ முயன்றதில் தலை இன்னும் வேகமாய் சுற்றியது. அப்படியே படுத்துவிட்டாள்.

“முடியல தலை இன்னும் வேகமா சுத்துது”

கவலையாய் பார்த்தவன் “சரி படுத்திரு” மருத்துவரை அழைக்க போனை எடுக்க அவளோ மீண்டும் எழும்ப முயன்றாள். போனை பொக்கெட்டில் போட்டவன் “என்னடி சொல் பேச்சு கேட்கவே மாட்டியா? கொஞ்சம் படுத்திரு என்று தானே சொன்னேன்” அதட்டினான்.

“வாஷ் ரூம் போகணும், சத்தி வரா மாதிரி... வாய் கசக்குது” பாவமாய் சொன்னாள். சட்டென கைகளில் அள்ளிக் கொள்ள அவன் கழுத்தை சுற்றிக் கை போட்டு தோளில் தலைசாய்த்தாள்.

அவள் நெற்றி ஓரத்தில் கன்னத்தால் அழுத்தியவன் “ஷ்... யு ஆர் ஓகே” மென்மையாய் அவள் காதுக்குள் முணுமுணுத்தான். வாஷ்ரூம் தரையில் இறக்கி விட வாயில் பேஸ்ட்டை எடுத்து வைத்ததுமே ஓங்காளித்தாள்.

கதவைத் திறந்து வெளியே போனவன் மீண்டும் உள்ளே வந்தான். “என்னச்சுடி...” அவள் தள்ளாடுவதைப் பார்த்து நெஞ்சில் தங்கிக் கொள்ள விலக முயன்றாள் “அழுக்காயிரும்”.

“இம்சைடி நீ கொஞ்சம் சும்மா இரு” தன் கைக்குட்டையை நனைத்து முகத்தை துடைத்துவிட்டான். “பெட்டில் படு டாக்டர் வந்து பார்க்கட்டும்” என்றவன் கையை பிடிக்க தள்ளிவிட்டாள் “பல்லு தீட்டனும்”.

“சரிஈ...” என்றவன் பிரேஷை கையில் கொடுக்க உதட்டை சுளித்து அதையும் தள்ளிவிட்டாள் “அது சத்தி வரும்”.

“இம்சைடி” மௌத்வாஸை எடுத்து அளவாய் தண்ணீர் கலந்து கொடுக்க அதன் பேப்பர்மென்ட் சுவையில் சில துளிகளை விழுங்க “அதை குடிக்கதேடி, வாய் கொப்பளித்து துப்பு” அவளை துப்ப வைக்க முயன்றதில் அவன் மீது துப்பியிருந்தாள்.

“உன்னை...” அவளை செல்லமாய் முறைத்தவன் “கஞ்சா அடிச்சவனும் தோத்திருவான்” கேலி செய்தவாறே அவளை சுத்தம் செய்து வெள்ளை ட்வலை எடுத்து துடைத்து விட பூனைக் குட்டி போல் முகத்தை காட்டியவாறு நின்றாள் ஸ்ரீனிகா. டவலை வைத்துவிட்டு அருகே வர “கிட்டே வராதே கௌதம் கிருஷ்ணா” கையை நீட்டித் தடுத்தாள்.

‘அத்தனை தூரம் வெறுத்து விட்டாளா’ இதயத்தில் ஏதோ பிசைந்தது ‘இப்போது கூட அருகே வரக் கூடாது என்கிறாள். ஆனால் இந்த கௌதம் கிருஷ்ணா...’.

“ஏன்? பிடிக்கலையா?” கம்மிய குரலில் கேட்டான்.

“அழுக்கு கிருஷ்ணா” அவன் சட்டையை ஒரு விரலால் காட்டியவள் சுவற்றோடு கன்னம் வைத்து சாய்ந்து நின்றாள்.

சட்டென நெஞ்சிலிருந்த பாரம் விலக வாய்க்குள் சிறுநகை செய்த கௌதம் சேர்ட் பட்டனை ஒவ்வொன்றாக கழட்டினான். அவன் சட்டையை கழட்டுவதை சுவற்றில் சாய்ந்து நின்று ஓரக் கண்ணால் பார்க்க “கொல்றாளே” வாய்க்குள் முனகினான்.

சட்டையை தோய்க்கும் ஆடைகளைப் போடும் கூடையில் போட்டுவிட்டு கையில்லாத வெள்ளை பெனியன் ஜீன்ஸுடன் அவளை நெருங்க அவனை விழி மலர்த்தி பார்த்தாள் ஸ்ரீனிகா.

“இப்ப ஓகேவா?”

“அப்ப ஒல்லி கௌதம் இப்ப பல்வான் கௌதம்” சோபையாய் புன்னகைத்தாள். அன்றொரு நாள் இதுபோல் பாதி மயக்கத்தில் அவள் உளறியது ஞாபகம் வர சட்டென கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் கௌதம்.

கிளுக்கிச் சிரித்தவள் மறுகன்னத்தை உப்பி அவனுக்கு காட்டினாள்.

அசையாமல் அவளையே பார்த்தவன் கேட்டான் “என்னை உனக்குப் பிடிக்குமா?”

அழகாய் மேலும் கீழுமாய் தலையை ஆட்டியவள் சுவற்றிலிருந்து அவன் மார்புக்கு சாய பதறிப் போய் பிடித்தான் “பார்த்து ஸ்ரீனி”. நாற்பத்தைந்து பாகையில் அவன் மீது சாய்ந்து நின்றவாறே அவன் நெஞ்சில் நாடி வைத்து அண்ணாந்து பார்க்க நெற்றியை சுருக்கி யோசித்தவன் கேட்டான் “நேற்று ச்லீபிங் டப்லேட் போட்டாயா?”

கண்களை சிமிட்டி கைகளில் மூன்று விரலைக் காட்டிக் கூறினாள் “தூக்கமே வரல, அதான் இரண்டு போட்டேன்”.

அவள் செயலில் புன்னகைத்தாலும் அவன் முகம் யோசனையைக் காட்டியது. சுட்டு விரலால் அவன் கன்னத்தில் குத்தினாள்.

“ஏன்டா?”

“நீ யோசிக்கத்தா, டன்ஜர்”

“என்ன ஒஹ் டேஞ்சரா?” என்றவன் சிந்தனை ‘அண்ணி நதியா தலை சுத்தல்’ எதையோ தேடி சுழல, தேடியது கிடைத்ததில் கண்கள் பளிச்சிட்டது. அவள் கன்னம் தாங்கியவன் “உனக்கு எப்போ கடைசியா பீரியட் வந்தது” ஆர்வம் பொங்கக் கேட்டான்.

உதடு கோடாய் இழுபட கன்னத்தில் ஒரு விரலால் தட்டி யோசித்தாள். பிதுங்கிய மாம்பழ கன்னங்களை கடிக்க தோன்றிய உணர்வை அடக்கியவன் “சொல்லேன்” ஊக்கினான்.

“அது ஞாபகமில்லையே” அப்பாவியாய் பதிலளித்தாள்.

அவனே அவளுக்கும் சேர்த்து யோசித்துப் பார்த்தான். கேரளாவில் இருந்து வந்த பின்னர் ஒருநாள் கூட அவளை தனியாக விடவில்லை. இத்தனை நாளில்...

கண்ணில் மெல்லிய நீர்படலமும் உதட்டில் புன்னகையுமாய் அவள் வயிற்றில் கைவைத்தான். என் உயிர் அவளுள்.... அந்த நினைவே பறப்பது போலிருந்தது. சட்டென தன்னுடன் அள்ளி அனைத்துக் கொண்டவன் முகம் முழுவதும் முத்தாட “மூச்சு முட்டுது” அவனைத் தள்ளிவிட்டு மார்பில் சாய்ந்து கொண்டாள். அழுத்தமாய் அவள் உச்சியில் இதழ் பதித்தான் கௌதம். அப்போதும் அவன் கை அவள் வயிற்றிலிருக்கவே கையை குனிந்து பார்த்தவள் கேட்டாள் “என்ன?”

“பாப்பா” குரல் தளும்பியது.

“இதுக்கேயா?” கிள்ளையாய் கேட்க ஆமோதித்தான்.

“பாப்பா வெளியே வா” வயிற்றைத் தட்டினாள் “உள்ள மூச்சு முட்டும்”.

“உனக்கு மூச்சு முட்டாதா வரை பாப்பாவுக்கும் மூச்சு முட்டாது. இப்ப வராது கொஞ்ச நாள் கழிச்சு தான் வரும்”

“அப்ப நீ கிட்ட வராதே” விலகி நின்றாள்.

‘முதலுக்கே மோசம் ஆகுதே’ புலம்பியவன் “ஏன்? நான் அப்படித்தான் கிட்டே வருவேன்” சண்டை போட்டவன் கைகளில் தூக்கிக் கொண்டு அறைக்குள் செல்ல அவன் தோளில் தலை சாய்த்து காலை மேலும் கீழுமாய் ஆட்டினாள்.

வேறொரு டிசேர்ட்டை கொண்டு வந்து கொடுக்க அதை கையில் வாங்கியவள் “நீ திரும்பி நில்” கையை நீட்டி உத்தரவிட்டாள்.

“க்கும்.. இதிலெல்லாம் நல்ல தெளிவு தேட்டம்தான்” புன்னகையுடன் திரும்பி நின்றான் கௌதம் கிருஷ்ணா.

கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தவன் மார்பில் சாய்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. இதமாய் அவள் தலையை வருடி விட மீண்டும் உறக்கம் வரும் போலிருந்தது. நேற்று இரண்டு மணிவரை உறக்கமின்றி தவித்தவள் இதற்கு மேல் விட்டால் தலைவலி வந்துவிடுமோ என்ற பயத்தில் இரண்டு ஸிலிப்பிங் டப்லேட்டை போட்டுவிட்டாள். கௌதம் தட்டி எழுப்பியதில் எழுந்தவள் கஞ்சா அடித்தவனை விட மோசமான நிலையில் இருந்தாள்.

“ஸ்ரீனி”

“ஹ்ம்ம்” நிமிர்ந்தவள் சற்றுத் தள்ளியிருந்து அவனையே விழி விரித்துப் பார்த்தாள்.

“என்னடி” நெற்றியில் சுண்டினான்.

“அழகாய் இருக்கிற கௌதம்” என்றவள் குருவியாய் தலை சாய்த்து நோக்கினாள்.

தலையை குறுக்கே அசைத்து மறுத்தவன் “சந்தோசமாய் இருக்கிறேன்” அவளைத் திருத்தினான்.

“அப்ப எப்பவுமே இப்படி சந்தோசமாய் இருக்கனும்” அவன் கன்னம் வழித்து கைகளை குவித்து உதட்டில் வைத்துக் கொஞ்சினாள்.

அவள் செய்கையில் முகம் சிவக்க பின் கழுத்தை அழுத்தியாவாறே திரும்ப “வெட்கபடுறியா கௌதம்?” புன்னகையுடன் அவன் முகத்தைப் பார்க்க முயன்றாள். “போடி” என்று திரும்பிவிட்டான்.

அவனையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் “நீ ஸ்ரீநிஷாவைக் கல்யாணம் பண்ணு கௌதம்” ஏக்கமாய் சொன்னாள்.

அவள் குரலில் திரும்பியவன் அவள் முகத்தில் இருந்த நிராசையைப் பார்த்துக் கேட்டான் “நான் கல்யாணம் செய்வதென்றால் யாரை வேண்டுமானாலும் செய்யலாம் தானே நிஷாவை ஏன்?” சரியாக நாடியைப் பிடித்தான்.

குனிந்து மடியில் கோர்த்திருந்த கைகளில் பார்வையைப் பதித்திருந்தவளைப் பார்த்தவன் உடல் ஏனென்று தெரியாமலே நடுங்கியது.

“சொல்லும்மா ஏன்?”

“அது.... அவள் என்னை மாதிரியே...”

“அதான் நீயே இருக்கிறாயே?” அவன் குரல் ஏதோ போலிருந்தது.

“நான் உன்னுடனே இருக்க முடியாது இல்லையா?”

“ஏன் முடியாது?” சினத்தை கட்டுப்படுத்தினான்.

“அதை இந்த கௌதமிடம் சொல்ல முடியாது” அவன் மார்பில் சரணடைந்தாள். தன்னியல்பாய் தோளைச் சுற்றிக் கைபோட்டவன் “எந்த கௌதமிடம் சொல்வாய்?”

“அந்த எஸ்ஜி மோலுக்கு வராதுக்கு முதல் இருந்த கௌதம்”

“ஏன் இந்த கௌதமிற்கு என்ன?”

“நீ என்னை காதலிக்கிற கௌதம்”

“உனக்கு எப்போது தெரியும்”

அன்று கை மூட்டி பிசகி” அவன் கையை வருடிவிட்டாள் “வந்தோம் இல்லையா அன்றிரவு நான் இறந்து விட்டதாக கனவு கண்டு நீ உறக்கத்தில் அழுதாய்”

“அழுதா காதலிக்கிறேன் என்று அர்த்தமா?”

“இல்ல அந்த தவிப்பு... அழுகை எனக்குத் தெரியும் அம்மா இறந்த....” அவள் குரல் தேய தன்னோடு அரவணைத்துக் கொண்டவன் “சாரி” என்று உச்சியில் இதழ் பதித்தான்.

“பரவாயில்ல விடு நான் உன்னை மன்னிச்சிட்டேன்” மார்பினுள் முகத்தைப் புரட்ட அவன் உள்ளத்திலும் உடலிலும் தோன்றிய உணர்வு மரணம் வரை வேண்டுமென்று மனம் அடம்பிடித்தது.

“அப்ப ஏன்டி மில்லுக்ககாதான் கல்யாணம் பண்ணினேன் என்று நினைத்தாய்?”

சற்று விலகி அவனை முறைத்தாள் “அது வேற இது வேற, என்னை அடையாளம் கண்டு பிடிக்கத் தெரியல பேச்சைப் பார்” என்று உரிமையாய் சண்டையிட்டவளை வெறுமையாய் பார்த்தான் கௌதம்.

அவளே தொடர்ந்தாள் “உனக்கு என்னை ரெம்ப பிடிக்கும் கௌதம், என்னை காதலிக்கிற, நீ பாவம் தாங்க மட்ட, எனக்கு உன்ன பிடிச்ச மாதிரியே அம்மாவையும் பிடிக்கும் அம்மா ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமா சாகிறத பார்த்த போது” குரல் கலங்க சற்று நிறுத்தி தொடர்ந்தாள் “அதே போல் ஒரு நிலையில் உன்னை எப்படி நிறுத்த? என்னால் முடியாது” அவன் மார்புக்குள் தலையை ஆட்டி மறுத்தாள்.

சிலையாய் இறுகிப் போனான் கௌதம்.

‘அப்படியானால் இவளும் கொஞ்சம் கொஞ்சமாய்....’ அதற்கு மேல் அவனால் யோசிக்கவே முடியவில்லை.

அவன் உடலில் இருந்த சத்த்தெல்லாம் வடிந்துவிட்டது போலிருந்தது “என்ன நடந்தது” சத்தமேயின்றி காற்றாகிப் போன குரலில் கேட்டான்.

“அது விபத்து கட்டி தலை ஒன்று மட்டும் கரையல” தனித்தனி சொற்களாய் உதிர்த்தாள்.

ஒரு கணம் எலும்புகள் அனைத்தும் நொறுங்கிவிடும் போல் அணைத்தவன் அவள் திமிற விடுவித்தான். “பாப்பாவுக்கு மூச்சு முட்டும்” என்றவளைப் பார்த்து தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து நின்றான் கௌதம்.

வருவான்.....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 53 (b)

மடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளைப் மெல்ல தலையணையில் படுக்க வைத்தவன் போனுடன் வெளியே சென்றான். அவள் பாப்பாவுக்கு மூச்சு முட்டும் என்ற போதுதான் அவளின் ஆபத்தான நிலை முழுமையாக அவனுக்கு உறைத்தது. அவள் கொடுத்த அதிர்ச்சியில் கர்ப்பம் என்பதை மறந்திருந்தவன் உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்றே நினைத்தான். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது மூளை தொடர்பான அறுவை சிகிச்சை செய்வார்களா! மனம் கலங்கியது.

வெளியே நின்றவன் பார்வையை அவள் மீது வைத்தவாறே இரண்டு மூன்று பேருடன் தொடர்பு கொண்டான்.

கடைசியாய் அஜாவுக்கு அழைத்தவன் “காரை எடுத்துக் கொண்டு தோட்டத்தில் இருந்து செல்லும் படியின் அருகே வா” உத்தரவிட்டான். அவளுக்கு இலகுவான ஆடை ஒன்றை மாற்றி பூமாலை போல் அலுங்காமல் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.

காரில் இருத்தும் போது லேசாய் சிணுங்கியவளை தட்டிக் கொடுக்க அவன் தோளில் சாய்ந்து உறங்கிவிட்டாள்.

கார் நேரே மருத்துவமனையில் நிற்க அங்கேயிருந்த மருத்துவர்களிடம் அவளை ஒப்படைத்தான். சில ஸ்கானிங் டெஸ்ட்களை எடுத்தவர்கள் அவனை அழைத்தார்கள். “இதுக்கு முதலும் ட்ரீட்மென்ட் எடுத்து இருக்கிறார்கள் போல இருக்கு. அது சம்பந்தமான ஆவணங்களும் இருந்தால் நன்றாய் இருக்கும்” என்றார் தலைமை மருத்துவர்.

போய் கார் கதவைத் திறந்தவனைத் தடுத்தான் அஜா. “தங்கச்சி மேடம் இப்போதைக்கு எழும்ப மாட்டாள். நீ விலகு நான் டிரைவ் பண்ணுறேன்” கண்டிப்பாய் சொன்னான். கௌதமுக்குமே இப்போது தான் டிரைவ் செய்தால் தன்னுடன் சேர்ந்து எதிரில் வருபவர்களுக்கும் ஆபத்து என்று தோன்றவே அமைதியாய் முன் சீட்டில் அமர்ந்து விட்டான்.

திடிரென சக்தியெல்லாம் வடிந்து விட்டது போல் சோர்ந்து போய் சீட்டில் தலைசாய்த்து கண் மூடி அமர்ந்திருந்தவனைப் பார்த்த அஜாவின் முகம் யோசனையை தத்தெடுத்தது. அன்று ஸ்ரீனிகாவிற்கு வலிப்பு வந்து ஹோச்பிடலில் சேர்த்த போது கூட இப்படித்தான் இருந்தான். “என்னாச்சு” டிரைவ் செய்தவாறே அருகே இருந்தவனைப் பார்த்துக் கேட்க அனைத்தையும் சொல்லிவிட்டான் கௌதம்.

“இப்போ டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிட்டு, தங்கச்சி மேடம் சிஸ்டர்க்கும் இதே போல் தானே தலையில் கட்டி என்று லண்டன் சென்றதாய் சொன்ன ஞாபகம். அவர்களை கேட்டுப் பார்க்கலாம்” என்றான் அஜா.

அன்று ஸ்ரீநிஷா சொன்ன பொய்யும் சேர்ந்து நினைவுக்கு வர மீண்டும் கண் மூடி சாய்ந்துவிட்டான். மனம் லேசாய் முரண்டியது ‘அவள் உதவி செய்வாளா?’

அவள் அறைக்குச் சென்றவன் அலுமாரியை ஆராய அவன் கையில் சிக்கியது அந்த சிறு நகைப் பெட்டி. திறந்து பார்க்க உள்ளே ஆண்கள் அணியும் மோதிரம். ஏதோ தோன்ற தன் விரலில் அணிந்து பார்த்தான். மிகச் சரியாக பொருந்தியது.

இன்னும் தேட வேறு சில பொருட்களும் அவள் மருத்துவ அறிக்கையுடன் கட்டாய் ஒரு கோப்பும் கையில் கிடைக்க நெற்றி சுருக்கியவன் என்னவென்று உள்ளே பார்த்தான். கைகள் நடுங்க உதட்டைக் கடித்தவன் அதை பத்திரபடுத்தி விட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.

மருத்துவரிடம் கொடுக்க அவற்றை ஆராய்ந்தவர் “இவர்களுக்கு நிறைய கட்டி இருந்திருக்கு, கவனிக்கமால் இருந்து பிறகுதான் மருந்து எடுத்து இருகின்றார்கள். ஒரு வாரம் கோமா வேறு. ஏன் ஒரு ஸ்கேன் கூட செய்யவில்லை” கண்டிப்புடன் கேட்டார் மருத்துவர்.

அவன் என்னதான் சொல்வான் வெறுமே மருத்துவரைப் பார்த்து வைத்தான்.

“அந்த ஒரு கட்டி மட்டும் ஏன்?” குழப்பத்துடன் கேட்டான்.

பழைய MRI ஸ்கேன் அறிக்கைகளை ஆராய்ந்தவர் “அந்த கட்டி பெரிதாய் இருந்து இருக்கு. அதுதான் கரைய லேட் ஆகி இருக்கு. உறுதியாய் எதுவும் சொல்ல முடியாது. கரைய மருந்து கொடுத்து ஒரு மாதம் கழித்து ஸ்கேன் செய்து பார்க்கலாம்” என்று சொல்லவே ஆறுதலாய் மூச்சு விட்டவனின் ஆறுதலை இல்லமால் செய்தார் அவர்.

“ஆனா இப்ப முடியாது. கர்ப்பமா இருக்கின்றார்கள். இன்னொரு ஆபத்தும் இருக்கு கர்ப்பமா இருப்பதால் ஹோர்மோன்கள் தொழிற்பாடும் இரத்த ஓட்டமும் வேற மாதிரி இருக்கும். சில நேரம் இது வளர வாய்ப்பு இருக்கு” சொல்லிக் கொண்டே வந்தவர் காகிதமாய் வெளுத்த அவன் முகத்தைப் பார்த்து “மிஸ்டர் ஜிகே இது வெறும் ஊகம் தான். ரிலாக்ஸ் வளராம அப்படியே கூட இருக்கலாம்” அவனை ஆறுதல்படுத்தினார்.

கௌதம் தலையை அழுந்தக் கோத, இன்னொரு ரிப்போர்டை கையில் எடுத்தவர் “இந்தியாவின் தலை சிறந்த நீயுரோலோஜிஸ்ட் தான் இவர்களைப் பார்த்து இருக்கின்றார். அவரின் ரிப்போர்ட் படி இது இருக்கும் இடம் சற்று அபாயமானது. மூளையத்திக்கு அருகே இருக்கு. மூளையை இடது வலதாக மட்டுமில்லை, ஓரளவு அதன் செயல்பாட்டை வைத்து அதைப் பிரிக்கலாம். போர்மல் lope, Partial lope, optical lope, temperal lope இதில் formal lope நெற்றிக்கு பின்னால் இருப்பது சிந்திக்க உதவுவது. டேம்பறல் காதுக்கு பின்னால் பின்தலையில் இருக்கும். இதுதான் மொழி, மொழியை விளங்கிக் கொள்ளுதல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். எந்த இடத்தில் பாதிப்பு வரும் என்பதைப் பொறுத்து அதன் தாக்கம் அல்லது விளைவு இருக்கும்”.

கௌதம் கவனமாய் கேட்டிருந்தான்.

“இது அனைத்தையும் விட முக்கியமானது மூளையம் என்று சொல்லப்படும் கழுத்துக்கு பின்னே இருப்பது. இதுதான் உடம்பின் மொத்தக் கட்டுப்பாட்டையும் வைத்திருக்கும். இதயம் துடிக்க வேண்டுமா வேண்டாமா? எந்த வேகத்தில் துடிக்க வேண்டும். எங்கே ரத்தம் தேவைபடுது. எந்த ஹோர்மனை எப்போது சுரப்பது. முள்ளு குத்தினால் காலை தூக்குவது. சுட்டுக் கொண்டால் கையை உதறுவது என அனைத்தையும் தன்னிச்சையாக முடிவு செய்யும். இதில் ஏற்படும் பாதிப்பு நிச்சயமாய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது”

அவரின் விளக்கத்தை உள் வாங்கிக் கொள்ள சிறிது நேரம் கொடுத்தவர் “இந்த ரிபோர்டில் ஆறு மாதத்தினுள் கட்டி கரையாவிட்டால் அறுவை சிகிச்சை மூலம் தான் கட்டியை அகற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார். அதோடு...” என்று சிறிது இழுக்கவே உணர்சியற்ற முகத்துடன் மேற்கொண்டு சொல்லுங்கள் என்பது போல் தலையாட்டினான்.

“இது வளர்கிறது என்றால் இதன் மூலம் தலையிடி, seizures என்று சொல்லப்படும் ஒருவகை.. என்னவென்று சொல்ல கிட்டத்தட்ட வலிப்பு மாதிரி ஆனால் வலிப்பு போல் வெட்டி இழுக்காது. அசைவில்லமால் கைகால் எல்லாத்தையும் உடலோடு கட்டிவிட்டு ரயிலில் நிற்க விட்டால் எப்படி இருக்கும் அது போல் உடல் வைப்ரட் ஆகும்” கேட்டுக் கொண்டிருந்த கௌதம் “அஅ அன்று வந்தது...” தலையாட்டினார் மருத்துவர் “அன்று உங்கள் மனைவி இதற்கு சிகிச்சை எடுப்பதாகவும் உங்களுக்குத் தெரியும் என்றும் சொன்னார்களே!” ஆச்சரியத்துடன் கேட்டார்.

சில கணங்கள் பேச்சு மறந்து இருந்தவன் “ராட்சசி” வாய்க்குள் முனங்கினான். “இது வலிக்குமா?” கவலையுடன் கேட்டான்.

“கட்டி இருக்கும் இடத்தைக் கேட்டால் இல்லை மூளையால் வலியை உணர முடியாது. ஆனால் இந்த கட்டி இருக்கும் இடம் கட்டுபடுத்தும் அங்கங்களை இது பாதிக்கும். ஐந்து நிமிடத்திற்கு மேல் seizures நீடித்தால் உடனடியாக மருத்துவ உதவி தேவை. பொதுவாக இது மயக்க நிலையில்தான் வரும். அதன் பின் உடல் முழுதும் தசை பகுதிகளில் வலியும், பயங்கரமான தலையிடியும் வரும். அதற்கு வேறாக இப்படி வந்தால் மட்டும் எடுக்க என்று மருந்து தருவோம்”.

“இது எப்போதெல்லாம் வரும்?”

“மெயின் ரீசன் ஸ்ட்ரெஸ், மருந்து ஒழுங்கா எடுக்கமால் விட்டா, சரியான நித்திரையின்மை, பெண்களாய் இருந்தால் மாதவிடாய் காலம் இப்படி சொல்லலாம். மூளையோட சம்பந்தபட்ட எந்த நோய்க்கும் ஸ்ட்ரஸ் இல்லாமல் இருப்பது முக்கியம். இப்ப கர்ப்பமா வேற இருக்கிறாங்க”.

“இது வந்தால் நான் என்ன செய்யனும்?”

“பெரிதாய் ஒன்றுமில்லை, எற்கனவே சொன்னது போல் ஐந்து நிமிடத்திற்கு மேல் என்றால் உடனடியாக மருத்துவமனையில் சேர்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பக்கமாய் சரித்து படுக்க வைத்து அந்த எபிசோட் முடியும் வரை அப்படியே பிடித்து இருக்க வேண்டும். பின் ரெஸ்ட் கொடுங்கள்” அவனின் அத்தனை கேள்விக்கும் பொறுமையாய் பதிலளித்தார்.

சற்று நேரம் மூக்கும் புருவமும் இணையும் இடத்தை பெருவிரல், ஆள்காட்டி விரலால் அழுத்தியவாறே இத்தனை நேரம் கேட்டதை மனதினுள் தொகுத்தவன் களைப்புடன் கேட்டான் “கருவைக் கலைத்துவிட்டால் என்ன?” வலிக்கத்தான் செய்தது ஆனால் அவளைவிட எதுவுமே முக்கியமில்லையே.

“செய்யாலாம் ஆனால் அவர்களுக்கு தெரியாமல் செய்ய முடியாது இல்லையா? அப்படியே செய்து பின் தெரிந்து டென்சன் ஆனால் இன்றைய நிலையில் உயிருக்கு ஆபத்து” அவனை அறிந்தவராய் பரிவுடன் கூறினார்.

“லுக் மிஸ்டர் ஜிகே இன்றைய உலகம் எவ்வளவோ முன்னேறிட்டு இதற்கு என்று விசேசமாய் ஒரு கிளிப் இருக்கு ஓரு அறுவை சிகிச்சை மூலம் அந்த கிளிப்பை கட்டி இருக்கும் இடத்தில் வைத்து இரத்த ஓட்டத்தை தடுத்துவிட்டால் குழந்தை பிறக்கும் வரை எதுவுத ஆபத்தும் இல்லை. சதரானமன பிரசவம் மூலமே பெற முடியும். குழந்தை பிறந்த பின்னர் அந்த கட்டியை அகற்றிவிடலாம். ஆனால் இருக்கும் இடம் அத்தகைய அறுவை சிகிச்சையை மேற் கொள்ளக் கூடியதா என்று மூளை சத்திர சிகிச்சை நிபுணர் தான் சொல்லவேண்டும்”.

“சிகிச்சை எப்போது செய்ய முடியும், குழந்தை பிறந்த பின்னா இல்லை..?”

“அதையும் சத்திர சிகிச்சை நிபுணர்தான் முடிவு எடுப்பார். சில பேசன்ட்ஸ்க்கு கர்ப்ப காலத்திலேயே செய்திருக்கின்றார்கள். உங்கள் மனைவிக்கு மூளையத்திற்கு அருகே இருப்பதால் கர்ப்ப காலத்தில் செய்வது தாய் சேய் இருவருக்குமே ஆபத்து. சோ உங்கள் மனைவியின் கேசில் எனது கணிப்பு குழந்தை பிறந்த பின்னர்தான்”.

“வேறு எந்த ஆபத்தும் இல்லையே” உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கேட்டான்.

“மிஸ்டர் ஜிகே...” என்று இழுத்தவர் ஆழ்ந்து சுவாசித்தார். “மூளையில் அறுவை சிகிச்சை செய்தாலும் மூளையை பற்றி முற்று முழுதாக அறிந்தவர் இல்லை. இது தொடர்பான சிகிச்சை செய்யும் போது உறுதியாக எதையும் கூற முடியாது. அதோட குளோட் மீன்ஸ் கட்டி இருக்கும் இடமும் பார்க்கலாம் என்று விட்டு விடும் இடமும் இல்லை. ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும். செய்யாமல் விட்டாலும் அதே விளைவுதான் கோமா, இறப்பு”

மௌனமாய் கண் மூடி அமர்ந்திருந்தான் கௌதம்.

“அஹ் இன்னுமொன்று உங்கள் தனிபட்ட வாழ்கையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஏதாவது தம்பாத்யத்தில் விருப்பமின்மை, வழமைக்கு மாறான வலி அல்லது அந்த நேரத்தில் ஏதேனும் ஆபத்தான மாற்றங்கள் அவரகள் உடலில் ஏற்படுகின்றதா என்று பாருங்கள். ஒரேடியாக தவிர்க்காதீர்கள். வாழ்க்கையை முடிந்த வரை இயல்பாய் வாழுங்கள். முடிந்த வரை முயற்சிப்போம் முடிவு இறைவன் கையில்” என்றவர் அவன் தோளில் தட்டிக் கொடுத்து “நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். உங்கள் மனைவிக்கும் சேர்த்து நீங்கள் தைரியமாய் இருக்க வேண்டும்” அவனின் உள்ளுணர்வை தூண்டிவிட்டார்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 54


அந்தி வான சூரியன் சிவந்து மேற்கில் சாய்ந்து கொண்ருந்தது. இன்னும் கண் மூடி அவன் மடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஸ்ரீனிகா. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததுமே யாதவிடம் கூறிவிட்டான் “எந்த தலை போகும் வேலையாய் இருந்தாலும் என்னைத் தொந்தரவு செய்யாதே” அவன் பதிலைக் கூட கேட்கமால் போனை கட் செய்துவிட்டான்.

அவன் குரலைக் கேட்ட யாதவ் நேரே அஜாவிற்கு எடுத்தான் “என்னாச்சு அஜா ஒரு நாள் கூட பாஸ் குரல் இப்படி சோர்ந்து இல்லையே”.

“பிரச்சனை கொஞ்சம் பெரிதுதான். இப்போது இல்லை பிறகு சொல்கிறேன். எப்படியும் உனக்குத் தெரியாமல் போகாது” யோசனையுடன் பதில் அளித்தவன் பதிலளித்தவன் நிமிர்ந்து கௌதமின் அறையை பார்த்தான்.

அவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது ‘ஸ்ரீனி இல்லையென்றால் கௌதமும் இல்லை’.

🎻🎻🎻🎻🎻

கண்ணின் ஓரம் நீர்த்துளி விழ “ம்ம்..” லேசாய் சினுங்கினாள் ஸ்ரீனிகா.

சட்டென கண்ணைத் துடைத்து உணர்ச்சிகளைக் மறைத்தவன் புன்னகையுடன் நோக்கினான்.

கௌதம் அருகில் இருந்ததோ இல்லை போட்ட டப்லேட்டின் விளைவோ நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்த ஸ்ரீனிகாவிற்கு கண்முன் தென்பட்டது, மடித்த கால் முட்டியில் கையூன்றி, மடியில் இருந்த அவள் முகத்தையே இமை வெட்டாமல் பார்த்திருந்த கௌதம்தான். மெல்லிய கொட்டாவியுடன் புன்னகைத்தவளுக்கு சில நொடிகள் கழித்தே அவன் மடியில் படுத்திருப்பது புரிய அவசரமாய் எழ முயன்றாள். இடையோடு அள்ளி கைவளைவில் சாய்ந்தால் போல் இருக்க வைத்தான். விலக முயன்றால் அசைய கூட முடியவில்லை.

‘என்ன’ கண்களால் கேட்க அப்போதுதான் கவனித்தாள் அவன் கண்கள் கலங்கி சிவந்தது போலிருந்தது.

“என்னாச்சு கெளதம்” அவன் முகத்தையே உற்றுப் பார்த்தவள் நுனி விரலால் கன்னம் வருடிக் கேட்டாள் “கண் ஏன் சிவந்திருக்கு? அடிபட்டிச்சா?”

அவளிடம் கேட்க பேச ஆயிரம் விடயம் இருந்தது. ஆனாலும் உதடு துடிக்க வார்த்தையின்றி தவித்தவன் அவளை நெஞ்சுக்குள் புதைத்துக் கொள்ள அவளோ கைகளுக்குள் நெளிந்தாள். “இம்சைடி நீ, கொஞ்ச நேரம் சும்மா இருகிறீயா?” செல்லமாய் கடிந்தான்.

அதன் பிறகு அவளுக்கே தெரியாமல் அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான். அதற்கு முழு மனதுடன் வசந்தும் ஜானகியும் உதவினார்கள்.

கதவில் யாரோ தட்டும் சத்தத்தில் நிகழ்காலம் வந்தவன் “யெஸ் கம்மின்” என்றான்.

தன் முன்னே அமர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிஷா இருவரையும் கண்டனத்துடன் நோக்கினான் கௌதம். “உங்கள் இருவரிடமும் படித்து படித்து சொன்னேன் அவள் கொண்டு வரும் ஆவணங்களில் கையெழுத்து வைக்காதீர்கள் என்று” முகத்தில் இருந்த கண்டனம் குரலிலும் இருந்தது.

“கிட்டத்தட்ட இருபது தரம் திருப்பி அனுப்பிவிட்டேன். அவள் என்ன என்ன பொய் எல்லாம் சொன்னாள் தெரியுமா?” விடயத்தின் தீவிரம் புரிந்திருந்தாலும் அவள் குழந்தைத்தனமான பொய்யில் சிரிப்பத்தான் வந்தது ஸ்ரீராமுக்கு.

“கடைசியில் உங்கள் அத்தான் சுரேஷை கொடுமைகாரன் ஆக்கிவிட்டாள், தெரியுமா?”

குழப்பத்துடன் பார்க்க “இந்த மில்லை நீங்கள் வாங்கிக் கொடுக்காவிட்டால் சுரேஷ் நதியாவை கொடுமைபடுத்துவாராம். அது பிள்ளையை பாதிக்குமாம். இரண்டு குழந்தைகளையும் இங்கேயே விட்டு சென்றுவிடுவாராம்” ஸ்ரீராம் ஸ்ரீனியை போல் சொல்லிக் காட்டிய விதத்தில் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீநிஷாவிற்கும் சிரிப்பு வந்தது.

“நான் பிசினசை வெறும் அதிர்ஷ்டத்தை வைத்து செய்கின்றேன் என நினைக்கிறாள்” என்றான் ஸ்ரீராம் சிரித்தவாறே.

“இவளை” வாய்க்குள் நகைத்தவன் “அவளிடம் பேசினீர்களா?” ஸ்ரீராமை பார்த்துக் கேட்டான்.

ஸ்ரீனிகா அவனுக்கு சொல்லமால் தனியாக திருமணம் செய்ததை சாரதா ஏற்றுக் கொண்ட அளவு ஸ்ரீராமினால் ஏற்க முடியவில்லை. இன்னும் அவளிடம் கோபமாய் தான் இருந்தான். அவன் மௌனமாய் விரல்களால் மேசையில் தாளம் போட்டவாறே எதையோ கண்மூடி யோசித்தவன் “ஸ்ரீநிஷா வீட்டிற்குச் சென்றதும் நீ அதை அவரிடம் சொல்லிவிடு” என்றான்.

உண்மையில் ஸ்ரீநிஷாவின் மேல் கொலை வெறியில்தான் இருந்தான் கௌதம். அவளை ஏதாவது செய்தால் ஸ்ரீனிகாவிற்கு பிடிக்காது என்ற ஒரே காரணத்திற்காய் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருந்தான். அன்று அஜா ஸ்ரீநிஷா லண்டனில் சிகிச்சை எடுத்தாக சொன்ன பிறகு அவனே அவளை தொடர்பு கொள்ள தான் செய்த தவறிற்கு பிரயசித்தமாய் அவளே முன் வந்து சிகிச்சை தொடர்பாக கௌதமிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தாள்,

ஸ்ரீனிகா எதிர்பாராத விதமாய் அவர்களை ஒன்றாக சந்தித்தித்த போதெல்லாம் ஸ்ரீனிகாவின் சிகிச்சை தொடர்பாக பேசத்தான் போயிருந்தான். அதிலும் அன்று அவள் அவனுக்குத் தெரியக் கூடாது என்பதற்கான காரணத்தை சொன்ன பின்னர் முடிந்த வரை மறைப்பது என்று தீர்மானித்திருந்தான்.

யோசனையாய் பார்த்த ஸ்ரீராமிடம் “உங்கள் தங்கை சொல்வாள். ஆனால் நான் சொல்லும் வரை உங்களுக்கு தெரியும் என்பது ஸ்ரீனிக்கு தெரியவே கூடாது கவனம்” என்றதுடன் முடித்தக் கொண்டான்.

அவர்கள் இருவரும் விடைபெறவே வசந்திடம் “ஸ்ரீனிகாவின் மில் தொடர்பான பத்திரப் பதிவை நிறுத்திவிடுங்கள். தங்கைக்கு என்று வாங்கிய மில்லை நதியாவின் பெயரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுங்கள். இன்று பின்னேரத்தினுள் அனைத்தும் முடிய வேண்டும்” உத்தரவிட்டான்.

அனைவரும் சென்று விட ஏதோ யோசனையுடன் சாரி வைத்துச் சென்ற கோப்பை எடுத்துப் புரட்ட அவன் கண்களில் விழுந்தது திகதி.

சட்டென இன்று முழுவதும் அவளின் புரியாத பார்வைகள் நினைவு வர போனை எடுத்துப் பார்த்தவன் புயல் வேகத்தில் வெளியேறினான்.

🎻🎻🎻🎻🎻

வேட்டி முனையை ஒரு கையில் பிடித்தவாறே போன் பேசிக் கொண்டே வந்தவன் “யாதவ் நான் சொன்னபடியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விடு, லாஸ்ட் டைம் வேலைதான். பட்...” என்றவனை இடைமறித்தான் யாதவ் “விடுங்க பாஸ் நான் பார்த்துக் கொள்கிறேன்”.

ஹாலில் இருந்த அப்பா அம்மாவைக் கூட கவனிக்காமல் படியேறி சென்று கதவைச் சாற்ற அசோகனும் யசோதாவும் ஒருவரை ஒருவர் யோசனையாக பார்த்தார்கள். இன்று வயிறு சரியில்லை என்று சொல்லி ஸ்ரீனிகா உணவை மறுத்துவிட்டாள். கடந்த இரண்டு மாதமாய் இவனது நடவடிக்கையே சரியில்லை, எதையோ தங்களிடம் மறைக்கிறான். ஆனால் என்ன இத்தனை நாளில் எதையுமே அசோகனிடம் மறைத்ததில்லை. இவனுக்கு ஏதாவதா, இல்லை? அவர்கள் பெற்றவர்களாய் கவலைப்பட்டனர்.

அவளுக்கு என்று இருக்கும் அறையின் பிரெஞ்ச் ஜன்னலில் சாய்ந்து ஆழ்ந்த யோசனையில் சுற்றம் மறந்து வானத்தை பார்த்திருந்த ஸ்ரீனிகாவும் இன்னும் உடை மாற்றியிருக்கவில்லை. சேலை முந்தானையை ஒற்றை பட்டையில் தொங்க விட்டு கேசத்தை முன்னே போட்டிருக்க ரவிவர்மன் தீட்டிய தமயந்தி ஓவியமாய் ஒய்யாரமாய் அந்த நிலையிலும் அவன் மனதை அள்ளினாள்.

இடையை பின்னிருந்து ஒரு வலிய கரங்கள் சுற்றிக் கொள்ள திடுக்கிட்டு கத்த முயன்றவளுக்கு அது கௌதம் என்பது புரிய நெஞ்சில் கைவைத்து தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தினாள்.

“பயந்திட்டேன்” கொஞ்சம் மூச்சுவிட்டவள் அவன் பிடி இடையைச் சுற்றி இறுகவே லேசாய் திமிறினாள்.

இடையை சுற்றிய கைகளின் பிடி இன்னும் இறுக “ப்ளீஸ்டி கொஞ்ச நேரம்” என்றான் கரகரத்த தொண்டைக் குரலில் கூறியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவன் குரலில் அவள்தான் உறைந்து போய் நின்றாள்.

‘அழுகின்றானா ஆனால் ஏன்?’ இயல்பாய் கையை உயர்த்தி அவன் தலையை கோத கழுத்தில் சூடான ஈரத்தை உணர்த்தவள் திடுக்கிட்டு போய் பலவந்தமாய் தன்னை விடுவித்துக் கொண்டு அவனை நோக்கித் திரும்பினாள்.

நீர் நிரம்பிய கண்களோடு நிமிர்ந்து பார்த்தவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு “ஹாப்பி பர்த்டே ஸ்ரீனி” என்றான்.

‘எப்படித் தெரிந்து கொண்டான்’ ஆச்சரியத்துடன் கண் விரித்து பார்த்தவாறு நின்றிருந்தாள் ஸ்ரீனிகா.

“என்னதாண்டி உன் பிரச்சனை” சோர்ந்து போய்க் கேட்டான் கௌதம் “என்னலா முடியலடி”

ஸ்ரீனிகா விழித்தாள் ‘நான் என்ன செய்தேன்?’.

“சொல்லுடி என்ன மன்னிக்க முடியலையா? பரவயில்ல ஆனா ஆனா என்னை விட்டுப் போக நினைச்ச கொன்னுருவேன்” என்றான் இயலாமை கலந்த ஆத்திரத்துடன்.

அவளோ இமைக்க மறந்து கலங்கிச் சிவந்திருந்த அவன் கண்களையே பார்த்திருந்தாள்.

“உனக்கு என்னதான்டி பிரச்சனை. நீ செய்யுற வேலையெல்லாம்...” அவளிடம் இருந்து விலகியவன் லேசாய் தள்ளடினான்.

“பார்த்து” சட்டென அவன் புஜத்தை பிடித்து அருகே இருந்த சோபாவில் அமரவைத்து தானும் நிலத்தில் மண்டியிட்டாள்.

இரு கைகளையும் காற்றில் விரித்தவன் “நான் செய்தது தப்புத் தாண்டி ஆனா எந்த தண்டனை என்றாலும் கூடவே இருந்து தா. நீயில்லமால்...” சொல்ல முடியாமல் தவிக்கவே அவளுக்கோ அவளின் மூளையில் இருக்கும் கட்டியின் நினைவு வர முகம் வெளுத்தது.

‘விட்டுப் போவேன் என்பதற்கே இப்படி தவிக்கின்றான். சிலவேளை ஓரடியாக...’ அவளால் மேற்கொண்டு சிந்திக்கவே முடியவில்லை.

சோர்ந்து போய் அவள் முகத்தைக் கைகளில் ஏந்திய கெளதம். “மறுபடியும் நான் உன்னை அது போல் நடத்துவேன் என்று நினைக்கிறாயா?” வருத்தத்துடன் குரல் கம்மக் கேட்க இல்லை என்று அவன் கைகளுக்குள் தலையாட்டினாள்.

“பின்…”

அதற்கும் அமைதியாய் இருக்க “நான் எல்லா விதத்திலும் என் காதலை உணர்த்திட்டேன். இனி என்ன தான்டி நான் செய்ய?” தவித்தான் “ என் மீது நம்பிக்கை இல்லையா?”

“இல்ல அப்படில்லாம் இல்ல” அவன் கலங்கிச் சிவந்திருந்த கண்களைப் பார்த்தவள் பொறுக்க முடியாமல் அவன் கன்னத்தை நுனி விரலால் வருடினாள். ஒரு பக்கமாய் தலை சாய்த்து அவள் கையை கன்னத்தோடு அழுத்தி பிடித்தவன், சட்டை பட்டனை ஒவ்வொன்றாய் கழட்டியவாறே அவளையே பார்த்தான்.

“எனக்குத் தெரிந்த எல்லா வழியிலும் என் காதலை உனக்கு உணர்த்திட்டேன். இப்ப இந்த ஒரு வழிதான் மிச்சம். இதிலாவது என் காதல் உனக்கு புரியுதா என்று பார்ப்போம்” என்றவன் சட்டையை கழற்றி கீழே போட குண்டு கண்கள் இன்னும் பெரிதாய் விரிய அவனைப் பார்த்தாள் ஸ்ரீனிகா.

குனிந்து அவள் இதழோடு இதழ் கலந்தவன் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு அறையை நோக்கிச் சென்றான்.

🎻🎻🎻🎻🎻

நேரத்தை பார்க்க அது மாலை நான்கை காட்டியது. இனிய கூடலில் களைத்து சோர்ந்து போய் நெஞ்சில் சாய்ந்திருந்தவளைப் பார்த்தவன் அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் ஒற்றினான் கௌதம்.

அவனே எதிர்பார்க்காதது அவளின் ஒன்றல். சிறு எதிர்ப்பாவது இருக்கும் என நினைத்தான். ஆனால் அவளோ கழுத்தைச் சுற்றிக் கைகைளைப் போட்டுக் கொண்டு அவனுடன் இன்னும் ஒன்றி இழைந்தாள். மெதுவே அவன் தவிப்பு வேட்கையாய் மாற அவன் ஆசையையும் காதலையும் உணர்த்த முயன்றான். அவளோ தயக்கமின்றி வாங்கிக் கொண்டு அவனுக்கும் அள்ளிக் கொடுத்தாள்.

சற்று முன்னர்தான் மயக்கத்தின் உச்சத்தில் உறங்கியிருந்தாள். அன்றைய நாளிற்கான நிகழ்வுகள் இன்னும் மிச்சமிருக்க, அதற்கு மேல் அவளுடன் இருக்க முடியாத சூழ்நிலையை வெறுத்தவனாய் எழுந்து குளித்து வந்திருந்தான்.

அவளை எழுப்ப அருகே அமர அவளோ பூனைக்குட்டியாய் அவன் மார்பில் சுருண்டாள். நெடிய பெருமூச்சை விட்டவன் “ஸ்ரீனி..” மென்மையாய் கன்னம் தட்டினான்.

“ம்ம்” முகத்தை புரட்டியவள் சிணுங்கினாள் “குளிருது”.

“ஈவ்னிங் பார்டி இருக்கு போகனும்டா” கொஞ்சினான்.

“வேண்டாம் கௌதம், இப்படியே..” என்று மீண்டும் கண் மூட முயல மூக்கில் சுண்டினான்.

மூக்கைத் தடவியவாறே கண்ணைத் திறந்தவள் கௌதமைப் பார்த்து விட்டு அவன் கழுத்தைச் சுற்றிக் கையைப் போட்டாள். அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த கட்டுப்பாடு காற்றில் பறக்க அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் அவள் காதருகே ஏதோ கிசுகிசுத்தான்.

“ச்சீ...” என்றவாறே வெட்கத்துடன் விலகியவளுக்கு அவள் இருக்கும் நிலையும் சற்று முன் நடந்த கூடலும் நினைவில் வர முகம் சிவக்க சிறு பயத்துடன் கௌதமை நோக்கினாள். அவனுக்கோ மனதின் மூலையில் எங்கோ வலித்தது. இன்னும் தன்னை பார்த்து அச்சப்படுகின்றாளே.

போர்வையால் அவளை சுற்றியவன் அப்படியே தூக்கிச் சென்று வாஷ்ரூமில் விட்டான். “பாத்டப்பில் சுடுநீர் நிரப்பி இருக்கின்றேன் அதில் குளி” என்றான். தலை குனிந்தவாறே தலையாட்டியவள் கன்னத்தை பெருவிரலால் வருடிக் கேட்டான் “கோபமா?”

“ஹா” நிமிர்ந்து பார்த்தாள்.

லேசாய் முகம் சிவந்தவன் தடுமாறினான் “அதுதான் உன் அனுமதி....”.

தலையை மட்டும் குறுக்கே ஆட்டிவைத்தாள்.

“ஏதாவது காயம்..” சின்னக் குரலில் பின் கழுத்தை வருடியவாறே எங்கோ பார்த்துக் கேட்க “முரடு” வாய்க்குள் முனகியவள் அவனைப் பிடித்து வெளியே தள்ளினாள்.

அவன் இனிமையான சிரிப்புச் சத்தம் சங்கீதமாய் ஒலித்தது. அவளுக்கு அவன் சிரிப்பு எப்போதுமே பிடிக்கும். அவன் சிரித்து சத்தம் கேட்டால் தூரத்தில் நின்றாவது ரசித்துக் கேட்டுத்தான் செல்வாள். கதவைச் சாற்றி போர்வையை விலக்க இடையில் அவன் கைத்தடம்.

குளித்து பாத்ரோப்பை இரு கைகளாலும் இறுகப் பிடித்தவாறே வெளியே வந்தவள் கண்மணி மட்டும் உருண்டு அவனைத் தேடியது. கட்டிலின் உறை மாற்றியிருக்க அழுக்கானதை வாசலில் நின்ற வள்ளியிடம் கொடுத்து விட்டுத் திரும்பினான்.

அருகே வர பாதி திரும்பி நின்று கடைக்கண்ணால் பார்த்தவளுக்கு கையில்லாத பெனியன் ஜீன்ஸ் அணிந்து அருகே வந்தவனை கண்டு அவள் அறைக்குள் ஓடித் தப்ப முயன்றாள். சட்டென வழி மறித்தவன் “எங்கே” வம்பு செய்தான்.

“அறை உடை” பாதிபாதி வார்த்தைகளாய் வர ஒரு பக்க உதட்டால் சிரித்தவன் “அதுக்கு முதல் கொஞ்சம் வேலை இருக்கே” என்றான் வேண்டுமென்றே குரலில் இரட்டை அர்த்தத்தை தடவி.

“எஎன் என்ன வேலை?” பயமும் ஆர்வமுமாய் கேட்க “வா சொல்கிறேன் கை பிடித்து அழைத்துச் சென்று ட்ரெஸ்சிங் டேபிள் முன் இருத்தி ஈர தலையை ஹேர்ட்ரையர் மூலம் காயவைத்தான். அவன் கண்ணில் நிரந்தரமாய் ஒரு சோகம் இருப்பது போலவே தோன்ற ஒரு புருவ முடிச்சுடன் கண்ணாடியில் அவன் பிம்பத்தையே பார்த்தவாறு இருந்தாள்.

மனமோ அது பாட்டில் சிந்தித்தது ‘இவனுக்கு ஏதாவது தெரியுமா? ஆனால் எப்படி நான் சொல்லாமல் தெரிய வழியே இல்லையே’.

“டன்” என்றவாறே அவள் உள்ளங் கையில் எதையோ வைத்தான். விரித்துப் பார்க்க கர்ப்பத்தை உறுதிப்படுத்த உதவும் சிறு சாதனம். சும்மாவே தாமரை வண்ண முகம் செந்தாமரையாய் சிவக்க அவனைப் பார்க்காமலே திருப்பிக் கொடுத்தவள் வாய்க்குள் முனகினாள் “ஒரு தரத்தில் எல்லாம்..”

“ஒரு தரம் தானா” அவன் சிறு கேலி விரவிய குரலில் அதிர்ந்து போய்ப் பார்த்தாள்.

‘போ’ கண்ணைக் காட்டினான். அவள் வாஷ்ரூம் உள்ளே சென்று அதில் உள்ளது போல் செய்து விட்டு பதிலுக்காக காத்திருக்க இரண்டு கோடுகள் வந்தது.

தன் குட்டி வயிற்றைத் தொட்டுப் பார்த்தவள் கண்களில் சந்தோசக் கண்ணீர் மின்ன நெஞ்சு விம்மித் தணிந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாகிய உயிர் அவள் வயிற்றில். மிக மிக மென்மையாய் தடவியவள் வேகமாய் வெளியே வந்து அழைத்தாள் “கௌதம்”.

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி டென்சனாய் நின்றவன் அவள் அழைப்பிலும் முகத்தில் தென்பட்ட உணர்விலும் கைகளை விரித்து கண்களால் அழைத்தான்.

ஓடிவந்து கட்டிக் கொண்டவளை அப்படியே தன்னுடன் தூக்கிக் கொண்டவன் அணைப்பு நொடிக்கு நொடி இறுகியது. இருவரும் முதல் முறையாக எதுவித சஞ்சலமும் இன்றி அணைப்பில் பொருந்தியிருக்க காலம் இப்படியே நின்றுவிடாதா என்று ஏங்கினான் கௌதம்.

“ஸ்ரீனி”

“ஹ்ம்ம்”

“கருவைக் கலைத்து விடுவோமா?”
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 55

நான்கு மாத வயிறு லேசாய் மேடிட்டுருக்க, ஊஞ்சலில் கண் மூடி அமர்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. அவள் நீண்ட கூந்தல் ஊஞ்சலின் பின் பக்கமாய் மயில் தோகையாய் நிலத்தை தொட்டது. யாரோ அவள் கூந்தலை அளைய கண்ணைத் திறக்கமாலே புன்னகைத்தாள். இப்படி அவள் கூந்தலை அளையும் உரிமை ஒருவனுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அவன் எதோ வேலை இருப்பதாக கூறி டெல்லி சென்றிருந்தான்.

‘எப்போது வந்தான்’ வியப்புடன் தன்னை தானே கேட்டுக் கொண்டவள் கண்ணைத் திறப்பதற்குள் குளித்து வந்த ஷம்போவாசம் நாசியை நிரட குறுகுறுப்புடன் இதழ்கள் நெற்றியில் பதிந்தது.

“ஸ்ரீகுட்டி வல்லிய சுந்தரமயிட்டு உண்டல்லோ” அவன் குரல் காதில் கிசுகிசுத்தது. பதின்னான்கு நாட்கள் பார்க்கததில் மயங்கி அவன் தலையைக் கோதிக் கொடுத்தவள் சட்டென தள்ளிவிட்டாள்.

“போடா”

பரிதபமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தவன் அடாவடியாய் மடியில் படுத்தான். அன்று கருவைக் கலைப்போமா என்று கேட்டதில் இருந்தே இப்படித்தான் நடக்கிறாள்.

அன்று கருவைக் கலைப்போமா என்று கேட்டதுமே சட்டென விலக கௌதம் தடுக்கவில்லை அவளையே பார்த்திருக்க மறு நொடியே அவன் கன்னத்தில் அடித்து சட்டையை கொத்தாய் பிடித்தாள்.

“மனசாட்சி இல்லை” ‘எத்தனை இலகுவாக கூறிவிட்டான். சிறு உயிர் அவனுடையும் தானே! அதை அழித்து அவள் எப்படி உயிர் வாழ்வாள்’.

“என்னடி இப்பெல்லாம் சட்டென்று கை நீட்டுறா?” அவன் கேட்டதும்தான் தான் செய்த செயல் உறைக்க சற்றுப் பயத்துடன் அவனைப் பார்த்தவாறே கையை எடுக்கப் போக அதை தடுத்து “ஷ்.. நீ என் மனைவி அடிக்க மட்டுமில்லை, அனைத்திற்கும் உரிமை இருக்கு” கண்ணடித்தான்.

‘என்ன இப்படி வெட்கம் கெட்டவனாய் இருக்கிறான்’ மனம் கேட்க குழம்பினாள். அவனுக்கும் வேண்டியது அதுதானே அருகே நெருங்கி அவள் வயிற்றில் கை வைத்து “இப்ப என்ன இந்த பேபி உனக்கு வேணும் அவ்வளவுதானே ஆனா ஒரு நிபந்தனை” என்று நிறுத்தவே என்ன என்பது போல் பார்த்து வைத்தாள்.

போக்கேட்டில் இருந்து அவள் விமான பயண சீட்டை எடுத்தவன் “நீ இங்கிருந்து எங்கும் போக கூடாது. அப்படி போவதென்றால் என் பேபியை என்னிடம் தந்து விட்டுத்தான் போக வேண்டும். இல்லையா கருவை கலைத்து விட்டுப் போ” சலனமின்றி நிபந்தனை விதித்தான்.

ஸ்ரீனிகா சந்தேகமாய் பார்த்தாள். ‘இவனுக்கு தெரியும்! ஆனால் எப்படி?’ ஏனென்றால் திருமணமானவள் என்று அவளுக்குமே மருத்துவர் எச்சரித்திருந்தார். கருத்தரித்தால் கட்டி வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே சீக்கிரமே சிகிச்சை செய்ய வேண்டும் அல்லது கருவைக் கலைக்க வேண்டி வாரலாம்.

எதையோ கேட்க வர அவள் உதட்டின் மீது ஒரு விரலை வைத்து தடுத்தவன் “கீழே எல்லோரும் உனக்காக தான் வெயிட்டிங் வா” என்றான்.

அவன் கையை தட்டி விட்டு மார்புக்கு குறுக்காய் கையைக் கட்டி திரும்பி நின்றாள். அவளுக்கே அவளை நினைத்து ஆச்சரியமாய் இருந்தது. அவனிடம் எத்தனை உரிமையாய் கோபபடுகிறாள். அன்று அவன் மன்னிப்பு கேட்ட போதே இளக தொடங்கிய நெஞ்சம் அடுத்து அவன் செயல்களில் பாகாய் உருகிவிட்டது. அவளின் மூளையில் இருக்கும் கட்டி மட்டும் இல்லாவிட்டால்...

இன்றைய அவனின் தவிப்பில் கரைந்துதான் போய்விட்டாள். அதனால்தான் கருவைக் கலைக்க வேண்டும் என்று சொன்ன போது கூட கோபம் வந்தாலும் அவனைத் தவறாக நினைக்கமால் உண்மை தெரிந்திருக்குமோ என்று ஐயுற்றாள்.

உரிமை நிறைந்த கோபத்தை சந்தோசமும் புன்னகையுமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கௌதமின் போன் சத்தம் போட பார்வையை அகற்றாமல் காதுக்கு கொடுத்தான்.

யாதவ்தான் “பாஸ் நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் தயார்” என்றவனிடம் “இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்போம்” போனை கட் செய்துவிட்டு கட்டிலில் இருந்த ஒரு பார்சலை எடுத்து அவள் கையில் கொடுத்தவன் “இதை கட்டிட்டு வா” என்றான்.

ஏதோ மறுத்து சொல்ல வர “இன்னும் ஓர் மூன்று மணி நேரம் நான் சொல்வதை மட்டும் செய் அதன் பின் ஆறுதலாய் பேசலாம். ஹ்ம்ம்” கொஞ்சலாய் பார்த்தான்.

உதட்டை சுளித்து விட்டு வாங்கியவள் இதழ்கள் நொடியில் சிறைப்பட விழித்தாள் ஸ்ரீனிகா.

“சொல்லியிருக்கேன் இல்லையா? என் முன்னால் உதட்டை சுளிக்கதே என்று” பெருவிரலால் வருடி விலக பார்சலை நெஞ்சோடு அணைத்து பிடித்துக் கொண்டு சற்று முன்னே குனிந்து கேட்டாள் “எப்போதிருந்து..?”.

தன் சட்டையை எடுத்துப் போட்டவாறே திரும்பியன் அவள் ஆர்வம் நிறைந்த முகத்தைப் பார்த்து கன்னத்துக்குள் சிரித்தான்.

“உன்னை முதன் முதலில் கேரளா அலுவலகம் அழைத்துச் சென்றேன் இல்லையா அப்போதிருந்து” நெற்றியில் விளையாட்டாய் ஊதியவாறே சேர்ட் பட்டனைப் போட்டான்.

“கௌதம் கள்ளம் பறைஞ்சில்லா” கழுத்தை வெட்டினாள்.

“ஹ்ம்ம்” என்று அருகே நெருங்க தள்ளிவிட்டு அவளறையினுள் ஓடிவிட்டாள்.

பார்சலை பிரித்துப் பார்த்தால் அழகிய மயில் பச்சை வண்ணச் சேலையும் அதற்குரிய நகைகளும் இருக்க ‘எங்கே போகிறோம். நதியாவின் பிறந்தநாள் வீட்டில் எளிமையாய் செய்வது என்பது ஏற்கனவே எடுத்த முடிவு பின் எங்கே’ யோசித்தவாறே சேலையை அணிந்து கண்ணாடியைப் பார்த்தவள் ஏதோ தோன்ற பின்னாமல் கேரளா பாணியில் விரித்துவிட்டாள்.

எங்கோ கவனமாய் கையில் வைத்திருந்த நான்காய் மடித்த டையில் விரல்கள் அதுபாட்டில் விளையாட கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.

மயில் பச்சைபட்டில், நீண்ட கூந்தல் தோகை போல் விரிந்திருக்க, காதில் முத்து வைத்த ஜிமிக்கி, கழுத்தில் டாஸ்கி கோல்ட்டில் முத்தாரம், இடையில் மெல்லிய ஓட்டியனமும், கைகளில் வளையல்களுமாய் மயிலென நின்றவளைப் பார்த்து திறந்திருந்த வாயை மூடி பின் கழுத்தைத் தேய்த்தான் கௌதம்.

தொண்டையை கனைத்து குரலை சரி செய்தவன் கண்களில் அவள் மெட்டியும் கொலுசும் இல்லாத பாதம் படவே “இங்கே வா” என்று அழைத்துச் சென்று அவளைக் கட்டிலில் இருத்தி அவள் முன் மண்டியிட்டு காலைத் தூக்கி மடியில் வைத்தான். அருகேயிருந்த நகைப்பெட்டியில் இருந்து கொலுசை எடுத்தான்.

இன்று காலையில் கடையில் பார்த்த அதே கொலுசு கூடவே மெட்டி.

அழகாய் உதட்டைப் பிதுக்கியவள் “காயம் வருமே அதைப் போட முடியாது” செல்லமாய் குறைபட்டாள்.

“வராது, இது இரண்டிற்கும் மேலாய் வைட் கோல்ட், பிளட்டினத்தை கோட் செய்திருக்கிறேன், சோ வெள்ளி நேரடியாக காலில் படாது. இதேபோல் இன்னொன்று உள்ளே வெள்ளியும் வெளியே பிளாட்டினமும் கலந்து செய்ய சொல்லி இருக்கின்றேன். அது வர சிறிது நாளாகும். அதுவரை இதை பயன்படுத்து” என்றவன் அவள் காலில் கவனமாய் போட்டு தொங்கிய மணிகளை விரலால் சுண்டிவிட்டான்.

அடுத்ததாய் மெட்டியையும் போட்டு விட அவனையே வைத்த கண் எடுக்காது பார்த்தால் ஸ்ரீனிகா. அவள் சேலைக்கு பொருத்தமாய் அவனும் அதே நிற சேர்ட் அணிந்து மேலே கருப்பு நிற வேஸ்ட் கோட்டும் பண்ட் அணிந்து இடையில் கருநிற பெல்ட், கையில் ரோலெக்ஸ் வாட்ச் மறு கையில் பஞ்சலோக காப்பு, கட்டான உடல் என ஆண்மையின் இலக்கணமாய் இருந்தவனையே ஏக்கத்துடன் பார்த்தது அவள் விழிகள்.

எழப் போனவன் சேட்டை நுனி விரலால் பிடித்து இழுக்க அசையாமல் அவளைப் பார்த்தவனுக்கு அவள் விழியில் தென்பட்ட ஏக்கத்தில் தொண்டையில் கரித்துக் கொண்டு வரும் போலிருந்தது. “என்னடி பார்வையெல்லாம் பலமாய் இருக்கு, இன்னொரு..” என்று வார்த்தையை பாதியில் விட்டாலும் அவன் கண்களில் கார்கால கடலாய் கொந்தளித்த உணர்ச்சியில் மீதி சொல்லாமலே புரிய செந்தாமரையாய் சிவந்தவள் “ச்சு அதில்லை” என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டினாள் “டை”.

“கட்டி விடு”

வேகமாய் மறுத்து தலையாட்டியவள் அவன் மீண்டும் எழப் போக சம்மதமாய் அவன் கையிலிருந்து வாங்கினாள். தொண்டைகுழி ஏறி இறங்க அவளையே பார்த்திருந்தான்.

“வா போவோம்” கையைப் பிடித்து அழைத்துச் சென்றவனையே ஆயிரம் கேள்வியை தாங்கிப் பார்த்திருந்தது அவள் விழிகள். அவள் கைகளை தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டவன் “என்னை நம்புகிறாயா?” அவள் கண் பார்த்துக் கேட்டான்.

“என்ன நடந்தாலும் சரி நீ என்னை விட்டுப் போகவும் முடியாது. உனக்கு எதுவும் நடக்கவும் விடமாட்டேன் போதுமா?”.

எத்தனயோ கேள்விகள் அந்தரத்தில் நின்றாலும் அவன் ஒரு வார்த்தையில் உள்ளம் அமைதி கொள்ள தலையை மேல்கீழாய் ஆட்டியவள் தன் வயிற்றை தொட்டுக் கொண்டு அவனைக் கேள்வியாய் பார்க்க அவளிடம் பொய் சொல்ல முடியாமல் “பார்க்கலாம்” என்றான்.

சட்டென கையை உதறி விட்டு வெளியே சென்று விட பரிதபமாய் முகத்தை வைத்துக் கொண்டு நின்றான் கௌதம். பணயம் வைக்க வேண்டியது அவன் உயிர் என்றால் கவலையின்றி பணயம் வைத்து விடுவான். அவள் உயிரை வைத்து எப்படி விளையாடுவது.

கீழே இறங்கி வர மொத்த குடும்பமும் தயாராய் நின்றார்கள். அனைவர் முகத்திலும் கேள்விக் குறியுடன்.

ஸ்ரீனிகாவைப் பார்த்ததும் முன்னே வந்த யசோதா கன்னம் வழித்து “நான் நினைச்ச மாதிரியே அழகா வந்திருகிறாடியம்மா” என்று பாராட்ட “அண்ணி சூப்பர்” என்றாள் நதியா. மைதிலியும் அருகே வந்து “அழகாய் இருக்றீங்க, சும்மாவே உங்களை கைக்குள் வைத்திருப்பார் என் கொழுந்தனார். இப்படி வேறு வந்தால்” என்று இழுக்கவே பெண்களிடையே சிரிப்பலை பரவியது.

“ஸ்ரீமா, ஸ்ரீமா” என்று சுற்றி வந்தர்கள் தீப்பும் நிலாவும்.

கேள்வியாய் பார்த்த தந்தைக்கும் தனயனுக்கும் “ஒரு பிசினெஸ் பார்ட்டி” சுருக்கமாய் சொன்னவன் “நீங்கள் அனைவரும் அஜாவுடன் போங்கள். சின்ன வேலை ஒன்று இருக்கு முடித்து விட்டு ஸ்ரீனியை நான் அழைத்து வருகின்றேன்” என்றான்.

“எந்த வேலையாய் இருந்தாலும் நாளை நாம் பேசுகின்றோம்” மகனின் கண்களில் ஒளிந்திருந்த கவலையைக் கண்டு தந்தையாய் கண்டித்தார் அசோகன்.

மௌனமாய் ஏற்றுக் கொண்டவன் அருகே நின்ற ஸ்ரீனிகாவை தேட அவளோ சத்தமின்றி அஜாவின் அருகே சென்றிருந்தாள்.

“ஏட்டா”

“ஸ்ரீகுட்டி சோதரி சுந்தரமாயிட்டு உண்டு”

“ச்சு... எந்தா விசேஷம்”

“பர்த்தாவு பரஞ்ஞில்லே”

“எவ்விடே அ ஸத்யகாரன் விட்டுக் கொடுக்கில்லா”

“அரை மணிகூர் கழிஞால் அறியாம்”

மேலிருந்து கீழாய் பார்த்தவள் “க்கும் நல்ல சாடிகேத்த மூடி” வாய்க்குள் முனகினாள்.

“அஜா” அவள் அஜாவிடம் பேசுவதைப் பார்த்துவிட்டு சத்தமாய் அழைத்தான்.

அவன் தப்பித்த நிம்மதியுடன் “பாஸ்” என்று அருகே வர “இவர்களை அழைத்துக் கொண்டு முன்னால் போ. நான் ஸ்ரீனியுடன் வருகின்றேன். அப்படியே சொல்ல வேண்டியதையும் சொல்லிவிடு” உத்தரவிடவே ஸ்ரீனிகா குறுகுறுவென்று அஜாவைப் பார்த்தாள்.

‘இந்த இருவரும் சேர்ந்து ஏதோ சதி செய்கின்றார்கள், என்னவாய் இருக்கும்’ யோசனையாய் பார்க்க அவள் பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் அஜா வெளியே சென்றுவிட்டான். அவனுடன் மீதிப் பேரும் சென்று விட “நாங்கள் எங்கே போகிறோம்?” விசாரித்தாள் ஸ்ரீனிகா.

“ஒரு அரைமணி நேரம் பொறுத்தால் தானே தெரிகிறது” அலட்சியம் போல் சொன்னான்.

“ஸத்யாகாரன்” வாய்க்குள் திட்டிவிட்டு அமைதியாகிவிட்டாள்.

அருகே அவள் வழமையாக செல்லும் கோவிலில் காரை நிறுத்தி இறங்கிச் செல்ல ஆச்சரியத்துடன் பார்த்தாள் ‘காலைதானே கோவில் சென்று வந்தோம்’. பூக்கடையில் மல்லிகை வாங்கிக் கொண்டு உள்ளே ஏற அவன் போன் சத்தம் போட்டது. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தில் பதிலளித்தான் “சொல்லு யாதவ்” அந்தப் பக்கம் என்ன சொன்னனே “சரி பத்து நிமிடத்தில் அங்கே இருப்போம்”. ஸ்டீரிங் வீலை வளைத்து திருப்பியவாறே வேகத்தை அதிகப்டுத்தினான். இன்று முழுவதுமே அவன் நடவடிக்கை வித்தியாசமாகதான் இருந்தது. இவ்வளவு நேரம் ஊர்வலம் போல் மெதுவாய் காரோட்டினான். இப்போது ரேஸ் ஓடுவது போல் ஒட்டுகின்றான்.

அவன் தன் கையில் தந்த மல்லிகையை தலையில் சூடியவாறே யோசனையுடன் பார்த்தாள் ஸ்ரீனிகா.

கார் ஓர் ஏழு நட்சத்திர ஹோட்டலின் முன் வந்து பிரேக் அடித்து நின்றது. இருவரும் இறங்க அஜாவுடன் நின்ற வலெட் காரை எடுத்துக் கொண்டு பார்கிங் செய்ய சென்றான்.

“நதியாவின் பிறந்தநாளை எளிமையாய் தானே” என்று தொடங்கவே கௌதம் முறைத்தான். “அதில்லை, சுரேஷ் அண்ணாவின் அப்பா சீரியஸ்...” மீண்டுமாய் வாக்கியத்தை பாதியில்விட்டாள்.

சற்று நின்று “என் கைகளை பிடித்துக் கொள், நான் பக்கத்திலேயே இருப்பேன் தைரியமாய் இருக்கனும். கமராவின் பிளாஷ் லைட்டைப் பார்க்காதே, நேராய் பார்” என்றவனையே கண்ணை விரித்து பார்த்தாள் ஸ்ரீனிகா.

அவள் கையை எடுத்து தன் வலது கையை பிடிக்கும்படி வைத்துக் கொண்டவன் “என்ன தைரியமாய் இருப்பாய் தானே” விசாரித்தான். அதிக நேரம் கொடுத்தால் யோசித்து பயந்தாலும் பயபடுவாள் என்று யோசித்தவனாய் “அஜா” உத்தரவாய் அழைத்தான்.

“யெஸ் பாஸ்” என்ற அஜாவையே யோசனையாய் பார்த்தாள் ஸ்ரீனிகா. வழமை போலில்லமால் கருப்பு நிற கோர்ட் சூட்டுடன் கண்ணில் கருப்பு கண்ணாடி, காதில் ப்ளூடூத், இடையில் தூப்பாக்கி வாக்கி சகிதம் நின்றவனை அருகில் நெருங்கவே பயமாய் இருந்தது.

அவள் பார்வையில் ஒரு கணம் மென்மையான ஒரு சிரிப்பைக் கொடுத்தவன் முகம் மீண்டும் இறுகி போக மிரண்ட மானாய் கௌதமிடம் நெருங்கினாள். அவள் கையில் தட்டிக் கொடுத்தான்.

முன்னும் பின்னுமாய் செக்யூரிட்டி கார்ட்ஸ் வர உள்ளே காலடி எடுத்து வைக்கவே கன்ஃவட்டி வெடித்து சிதற பளபளவென கேமரா பிளாஷ்கள் மின்னியது. வெடித்த சத்தத்தில் அவன் மார்பினுள் ஒளிந்தவள் கலர் பேப்பர்கள் விழவே நிமிர்ந்து கௌதமைப் பார்த்தாள்.

“ஹாப்பி பர்த்டே அண்ட் ஹாப்பி வெடிங் அனிவேர்சரி” என்றான்.

சுற்றிலும் பார்க்க யசோதா அசோகனுடன் குடும்பத்தினருடன் சாரதா, ஸ்ரீநிஷா, ஸ்ரீராம், அலுவலகத்தில் வேலை செய்யும் உயர் நிலை பணியாளர்கள் கூடவே அந்த கார் கம்பனிகாரன். அவள் இடையை சுற்றி கையை போட்டு மேடை போல் அமைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடக்கவே பிரமிப்பில் இருந்த ஸ்ரீனிகாவும் அவனோடு நடந்தாள்.

மேடை ஏறியதும் அஜா ஒரு மைக்கை கொடுக்க அதைக் கையில் வாங்கியவன் குரல் கம்பிரமாய் ஒலித்தது.

“ஹலோ எவெரிஒன், இன்று என் வாழ்கையில் ஒரு முக்கியமான நாள். அதை உங்களுக்கும் தெரியபடுத்தனும் என்று ஆசைப்படுகின்றேன்” நிறுத்தி அனைவரையும் நிதனாமாய் பார்த்தவன் “ஒரு சில தவிர்க்க முடியாத காரனங்களால் என் திருமணம் பெரிய ஆரவாரமின்றி நடந்திட்டு. எனக்கு திருமணம் முடிந்தது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சோ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைவருக்கும் என் மனைவியை அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். மீட் மை வைப் மிஸ்ஸஸ் ஜிகே, ஸ்ரீனிகா கௌதம் கிருஷ்ணா”

அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் வாயில் கையை வைத்தார்கள். தங்களுடன் சாதரணமாய் சிரித்து பழகி வேலை செய்த ஸ்ரீனிகாவா ஜிகேயின் மனைவி.

“இன்றுடன் எங்களின் திருமணம் முடிந்து ஒருவருடம் முடிகிறது. அது மட்டுமில்லை இன்று என் மிஸ்ஸசின் பிறந்தநாள். கல்யாண நாள் பிறந்தநாள் இரண்டும் ஒன்றாய் வந்திருக்கு அவர்களுக்கு ஏதாவது பெரிய கிபிட் கொடுக்க வேண்டும் இல்லையா?”

மைக்கை சபையை நோக்கி நீட்டினான். அனைவரும் சேர்ந்து ஒ என்று சத்தமிட சிரித்தவாறே “அதான் புதிதாய் நான் ஆரம்பித்து இருக்கும் கார் கம்பனியின் பிப்டி ஒன் பெர்சென்ட் பங்குக்கு சொந்தக்காரி என் மிஸ்ஸஸ்” என்றான்.

ஏற்கனவே பிரமிப்பில் இருந்த ஸ்ரீனிகா திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள். இதுதான் அந்த கார் கம்பனி தொடர்பான ஒப்பந்தங்களை அவளிடம் தராத காரணமா!

அவள் பிரமித்த நிலையை பார்த்து லேசாய் நெற்றியில் ஊதி விட்டு “அது மட்டுமில்லை, அவள் மாமா ஏமாற்றிய அசாமில் உள்ள அவர்களின் அம்மா வழி பூர்வீக சொத்துகளான தேயிலை தோட்டங்கள், ஆற்றில் இருக்கும் கப்பல்கள், கோவையில் உள்ள அவளின் அப்பா வழித் தாத்தா கொடுத்த மில் அத்தனையும் மீட்டு பரிசாக கொடுக்கின்றேன்” என்று அறிவிக்கவே சபையில் சலசலப்பு கூடியது.

அவனின் மனைவியாக வெளியில் வரும் போது நிச்சயமாய் அவளின் பின்புலம் அலசப்படும் என்பதை உணர்ந்த கௌதம். அதை தவிக்கவும் நெறிமுறையற்ற பிள்ளை என்ற அவளின் பெயரை இல்லமால் செய்யவும் பணத்தையும் அந்தஸ்தையும் கையில் எடுத்திருந்தான்.

அஜா மொத்த மொத்தமாய் சில கோப்புகளைக் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி அவள் கையில் கொடுத்தான். ஸ்ரீனிகாவிற்கு உலகம் கிறுகிறுவென வேகமாக சுற்றும் போலிருந்தது. தனக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த சொத்துக்கள் அனைத்தும் கௌதமை சேர வேண்டும் என்று எழதி வைத்திருந்தாள். இவை எப்படி இவன் கையில்...

கேள்வியாய் நிமிர்ந்து நோக்க ஒரு நொடி கண்ணில் கோபத்துடன் நோக்கினான் கௌதம்.

‘வேதாளம் முருங்கை மரம் ஏறிட்டே’ வழிந்த அசடை மறைக்க மெலிதாய் புன்கைத்தாள்.

அதற்குள் அருகே வந்த ஜானகி “மேடம்” என்று அழைத்து கையை நீட்ட முழுதாய் பிரமை நீங்காமல் அவள் கையில் அந்தக் கோப்புகளைக் கொடுத்தாள். மனமோ ‘இன்னும் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றானே!’ மூளையைக் கேட்டது.

அது ‘அவனுக்கு எல்லாமே தெரியும் போல்தான் இருக்கு’ என்றது பதிலுக்கு.

மைக்கை அஜாவின் கையில் கொடுத்து விட்டு அவளை நோக்கி வந்தவனை கண்கள் விரிய நோக்கினாள். இன்னும் என்ன செய்ய போகிறான்!

அவள் முன் ஒற்றைக் காலில் மண்டியிட்டு வலது கையை நீட்ட அவளையறியமாலே அவன் கையில் தன் இடது கையை வைத்தாள். போகேட்டில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்து அவள் கையில் போட அதைப் பார்த்தவளுக்கு கண்ணில் நீர் அரும்பியது. அன்று அவன் தேர்ந்தெடுத்த அதே மோதிரம்.

மென்மையாய் போட்டு விட்டவன் “ஐ லவ் யு” அவள் புறங்கையில் இதழ் பதித்தான். தலையை வேகமாய் ஆட்டி அமோதித்தாள். எழும் போதே அவள் உள்ளங் கைகளுக்குள் எதையோ வைக்க திறந்து பார்த்தாள்.

அவள் அவனுக்காய் வாங்கிய மோதிரம். அவள் கபோர்டில் இருந்தது இவனிடம் எப்படி! ஏற்கனவே பெரிய கண்கள் அவளுக்கு ஆச்சரியத்தில் இன்னும் விரிய கௌதம் அதில் கரைந்து போகாமல் இருக்க கஷ்டப்பட்டான். ஆச்சரியத்துடன் பார்த்தாலும் அவன் கையை நீட்ட நடுங்கும் விரல்களால் போட்டுவிட்டாள். நிமிர்ந்து பார்க்க கண் சிமிட்டி சிரித்தான்.

அடுத்தடுத்து கொடுத்த இன்ப அதிர்ச்சியில் உடல் நடுங்க அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்க வேண்டும் போலிருந்த உணர்வை அடக்க முடியாமல் ஓரடி எடுத்து வைக்கப் போனவள் கைதட்டல்களின் ஒலியில் அப்படியே நின்றாள்.

அவள் நிலை புரிந்தாவனாய் “ப்ளீஸ் என் மனைவி ஓவர் செப்ரைசில் இருக்கிறாள். ஜஸ்ட் கிவ் ஹேர் பியு மினிட்ஸ் டு ரிகவர், அண்ட் டேபிள் அரேஜ்மென்ட் ஆர் கோயிங் ஒன் வீ வில் கட் தி கேக் இன் எ வைல்” அவளையும் அழைத்துக் கொண்டு சற்று தனிமையான இடத்திற்கு செல்ல பாதுகாவலர்கள் வேறு யாரும் அவர்களை தொல்லைப்படுத்தாமல் பார்த்துக் கொண்டனர்.

உடல் நடுங்க நின்றவளைப் பார்த்துக் கேட்டான் “என்னம்மா”

இறுகிப் போய் நின்றவள் அந்த அழைப்பில் இளகி உடைந்தவளாய் பாய்ந்து அவன் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டாள். பதிலுக்கு அணைத்தவன் தானும் உணர்ச்சி வசப்பட்டால் இன்னும் உடைந்து விடுவாள் என்பது புரிய “ஷ்.. என் ப்ரோபோஸ் அவ்வளவு மோசமாவா இருந்தது” சிறு கேலியாய் கேட்டான்.

“அதில்லை” கண்ணைத் துடைத்தாள்.

ப்ளூடூதில் “அஜா ஜானகியை வெளியே வெயிட் பண்ண சொல்லு” என்றவன் அதை அணைத்து விட்டு “பார்த்து கண் மையெல்லாம் கரையப் போகுது. நாளை மீடியா முழுக்க ஜிகே பெண்டாட்டி அழுகிறாள் என்று கதை கட்டி விடுவாங்கள்” லேசாய் எச்சரித்தவன் “நீ என் மனைவி என் பெட்டெர் ஹல்ப், உன்னை இன்னொருவர் பேச எப்படி அனுமதிப்பேன். ஹ்ம்ம்” அவளின் கேளாத கேள்விக்கும் பதிலளித்தான்.

அவள் அவனிடம் இருந்து விலக நினைத்த காரணங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அதையும் அறிந்து இத்தனை நாள் கேள்விக் குறியாய் இருந்த பிறப்பையும் சரியாக்கி சமுதாயத்தில் ஒரு அந்தஸ்த்தில் இருத்திய அவனையே விழி அசையாது பார்த்தவள் அவன் சேர்ட்டை நுனி விரலால் பிடித்தவாறே சொன்னாள் “உங்களுடன் வாழ வேண்டும்”.

உடல் எஃகாய் இறுக சட்டென விலகியவன் “ஜானகி” சத்தமாய் அழைத்தான்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 56

உடல் எஃகாய் இறுக சட்டென விலகியவன் “ஜானகி” சத்தமாய் அழைத்தான்.

உள்ளே வந்தவளிடம் “ஸ்ரீனியின் மேக்கப் ஒருக்கா பார்த்து சரி செய்யுங்கள்” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.

“ஷ்... மேடம் கண்ணை துடையுங்கள் மீடியாவில் எங்கே என்று காத்திருப்பார்கள்” அவளுக்கு உதவி செய்தாள் ஜானகி.

இருவருமாய் வெளியே வர அவளை ஒரு பார்வையில் அளந்தவன் நெற்றியில் ஊதி கையை நீட்ட அவளையும் அறியாமல் மலர்ந்த சிறு சிரிப்புடன் தன் கையை அவன் கையில் வைத்தாள்.

“இப்போது என்ன?”

“கேக் கட் பண்ணிட்டு சாப்பிட்டு போவதுதான்”

“ஒஹ்” என்றவள் “அப்ப தியா கேக் கட் பன்றது” கவலையாய் விசாரிக்க “இருவரும் ஒன்றாய் கட் பண்ணுங்கள்” என்றான் கேலியாய்.

“ஒ.. செய்வோமே” என்று தியாவின் கையை பிடிக்க “அண்ணி அண்ணா விளையாடுறான். எனக்கு இன்னொரு கேக் இருக்கு. இது உங்களுக்கான ஸ்பெஷல் டே நீங்கள் என் அண்ணாவுடன் கேக் கட் பண்ணுங்கள் நான் உங்கள் அண்ணாவுடன் கேக் கட் பண்ணுறேன்” பதிலளித்தாள் நதியா.

அதன் பிறகு நிகழ்வு இலகுவாய் சென்றது. கேக்கை கட் செய்து அவன் வாயில் வைக்க வாங்கிக் கொண்டவன் முகம் உணர்ச்சியற்று இருந்தது.

அவளருகே வந்த சாரதா கன்னம் வழித்து “அன்று வேலை அதனால் ரிசப்சனை பெரிதாக வைக்கப் போவதாக் சொன்ன போதும் மனதிற்கு சங்கடமாகவே இருந்திச்சும்மா. இப்பதான் நிம்மதியா இருக்கு. இருவரும் நூறு வருஷம் நல்லா இருக்கணும்” வாழ்த்தினார்.

‘அன்று ஏதோ சொல்லி சமாளித்து இருக்கிறாள்’ தன்னருகே நின்றவளை ஆழ்ந்து பார்த்த கௌதம் அவள் தலையை வருடிவிட்டான். அவள் அவர் காலில் விழுந்து வணங்க தயக்கமேயின்றி கூடவே கௌதமும் வணங்கினான்.

“சாரதாம்மா” சலுகையாய் அழைத்தவளையே இமைக்காது பார்த்தான் கௌதம். “நிஷாவை மன்னிச்சிருங்க” கௌதம் கையை கட்டிக் கொண்டு தோளில் தலை சாய்த்து “இப்ப நாங்கள் இருவரும் சந்தோசமாய் தானே இருக்கிறோம்” கெஞ்சலாய் பார்த்தாள்.

சாரதா கௌதமை பார்க்க கண் மூடி தலையாட்டினான் “இந்த குளறுபடிக்கு காரணம் அலன். அவர் விரும்பியது ஸ்ரீனியை போலவே இருக்கும் ஸ்ரீநிஷாவை ஆனால் கேரளாவில் ஸ்ரீனியை பார்த்து ஸ்ரீநிஷா என நினைத்துவிட்டார். இங்கே வருவார் உங்களுக்கு பிடித்தால்..” என்று நிறுத்தியவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ஸ்ரீனிகா.

“அது சரி மாப்பிளை உங்கள் மாப்பிள்ளை எங்கே சொல்லுங்கள் அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்” கையை மடக்கி காட்ட ஸ்ரீனிகா விழித்தாள். இவன் சுரேஷை சந்தித்தால் தன் பொய்கள் எல்லாம் அம்பலத்திற்கு வந்து விடும் என்பதை உணர்ந்தவளாய் “அண்ணா என்ன இருந்தாலும் அவர் வீட்டு மாப்பிள்ளை, இப்படி” எதையோ சொல்லி சமாளிக்கப் பார்த்தவள் அடுத்துக் கேட்ட குரலில் உறைந்து போய் நின்றாள்.

“கௌதம், ஸ்ரீராம்” சுரேஷ்தான் பிளைட்டால் நேராய் ஹோட்டல் வந்திருந்தான்.

விருக் என்று திரும்பிப் பார்த்தவள் கௌதமை சுரண்டினாள்.

அவள் புறமாய் சரிந்தவன் கண்ணில் சிரிப்புடன் கேட்டான் “என்ன?”.

“அது... அண்ணாவிற்கு ஏற்கனவே உங்கள் அத்தானைத் தெரியுமா?”

“என்னைக் கேட்டால் எனக்கு எப்படி தெரியும்”

“ச்சு” அவன் தோளில் அடித்தாள்.

“அது சரி ஸ்ரீராம் ஒருத்தன் மில்லை எழுதி தராவிட்டால் ஒருவன் மனைவி பிள்ளைகளை அம்மா வீட்டில் விட்டு போய் விடுவானாம் உனக்குத் தெரியுமா?” தீவிரமாய் விசாரித்தான் சுரேஷ்.

“அச்சோ” கௌதமின் முதுகில் புதைந்தாள்.

கௌதம் குமிழியிட்ட சிரிப்பை தொண்டைக் குழிக்குள் அடக்கியவாறே தோளுக்கு மேலால் பார்க்க மற்றவர்கள் வாய்விட்டே சிரித்து விட்டார்கள்.

“மேடம் கொஞ்சம் வெளியே வாங்கோ” அழைக்க அவன் முதுகில் இன்னும் புதைந்து கொண்டு மறுத்து தலையாட்டினாள். யாரோ காதைப் பிடித்து இழுக்க சிவந்த முகத்துடன் வெளியே வந்தவள் யாரெனப் பார்க்க ஸ்ரீராம்.

“ஏட்டா” குரலில் மெல்லிய நடுக்கத்துடன் அழைக்க கையை நீட்ட கட்டிக் கொண்டாள் “என் மீது கோபம் போச்சா”.

பதிலுக்கு உச்சி முகர்ந்து “போயே போச்சு” என்றான் ஸ்ரீராம். அருகே நின்ற சுரேஷிடம் காதை பிடித்து மன்னிப்பு கேட்டாள் “சாரி அண்ணா, அந்த மில்..” தொடங்கவே “புரியுதும்மா ஆனா உனக்கு அந்தக் கவலையே தேவையில்லை. கௌதம் அந்த மில்லை விலை கொடுத்தே வாங்கிவிட்டான்” புன்னகைத்தான்.

கண்கள் விரிய திரும்பி கௌதமைப் பார்க்க பண்ட் போக்கேடினுள் கையை விட்டு கண்களில் காதலுடன் புன்னகையில் விகாசித்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மீதி நேரம் சிரிப்பும் கும்மாளமுமாய் கழிந்தது.

ஒரு வழியாய் பார்டி முடிவுக்கு வர அனைவரும் ஒன்றாகவே வீடு வந்து இறங்கினார்கள்.

இடுப்பில் கை வைத்து சாய்ந்து நின்ற நதியா பயணத்தில் களைத்து போயிருந்த சுரேஷ் இருவரையும் கவலையாய் நோக்கியவன் “நீங்கள் இருவரும் சற்று நேரம் ஓய்வு எடுங்கள்” கரிசனையாய் கூற “பரவாயில்லை அண்ணா, இது போல் எல்லோரும் ஒன்றாக இருப்பது அரிது. வேண்டுமானால் நாளை சற்று நேரம் கூடுதலாக படுத்துக் கொள்கிறேன்” என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.

அவளையும் யசோதாவையும் யோசனையாய் பார்த்த ஸ்ரீனிகா கிச்சின் செல்லவே பின்னாலேயே வந்தான் கௌதம் “எல்லோரும் அங்கே இருக்கிறார்கள், நீ இங்கே என்ன செய்கிறாய்?”

அவள் பேச்சின்றி தண்ணீரை கொதிக்க வைத்து காபேர்டில் எதையோ தேட “டீ போட போறீயா? நான் எடுத்து தாரேன்” தேயிலை டப்பாவில் கை வைக்க அவன் கையை தட்டிவிட்டவள் கண்ணில் பட்டது அவள் தேடியது. எம்பிப் பார்த்தால் எட்டவில்லை. திரும்பி கௌதமை பார்க்க அவனோ கையை மார்புக்கு குறுக்காய் கட்டி சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டிருந்தான்.

அவள் முறைக்கவே “முறைச்சே மனுசனை ஆப் பண்ணிடு” வாய்க்குள் முணுமுணுத்தவன் “உண்மையில் நான்தான் கோபமாய் இருக்கனும்” என்றவாறே ஹாட் பாக்கை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

அவள் வெந்நீரை நிரப்புவதைப் பார்த்தவன் கவலையாய் கேட்டான் “கால் வலிக்குதா?”

‘இல்லை’ தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

“ஐயாம் ஓகே, எனக்கு கால் வலியெல்லாம் இல்லை” என்றவனை மேலிருந்து கீழாய் பார்த்து விட்டு வெளியே சென்றவளைப் பார்த்து இருபுறமும் தலையாட்டி காற்றை ஊதிவிட்டு இன்னொரு ஹோட் பாக்கில் சுடு நீர் நிரப்பி எடுத்துக் கொண்டு பின்னே சென்றான்.

ஹாலில் சுரேஷ் நதியா, வத்சலா ராகவன், யசோதா அசோகன் என அனைவரும் ஜோடியாக அமர்ந்திருக்கநதியாவிடம் ஒன்றையும் யசோதாவிடம் ஒன்றையும் கொடுத்துவிட்டு எங்கே இருப்பது என விழித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்தவனுக்கு மீண்டும் சிரிப்புத்தான் வந்தது.

கோர்ட் எதுவுமின்றி சேர்ட் மட்டும் அணிந்து, சேர்ட் கையை அலட்சியமாய் கை முட்டிவரை ஏற்றி, டை கழுத்தில் லூசாக தொங்க களைத்து போன முகத்துடன் வந்த மகனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் அசோகன்.

ஸ்ரீனிகாவின் கையைப் பிடித்து இழுத்தவாறே நிலத்தில் கால் நீட்டி அப்பாவின் அருகில் அமர்ந்தான். அவள் கையில் ஹோட் பாக்கை கொடுத்தவன் “இது உனக்கு” என்றான்.

காலை குத்திட்டு அமர்ந்து பாதத்திற்கு ஒத்தடம் கொடுத்தவள் வத்சலாவை பார்த்துக் கேட்டாள் “உங்களுக்கும் ஒன்று தரவா அக்கா!”

“நான் எடுத்து வந்திட்டேன்மா” என்று ராகவன் இன்னொரு பாக்கை வத்சலாவிடம் கொடுக்க புன்னகையுடன் தன் பாக்கை நிலத்தில் வைத்து அதன் மேல் கால் வைக்க இதமாய் இருந்தது. கண்மூடி ரசித்தவள் கௌதமை ஒரு விரலால் சுரண்டினாள்.

ஒரு புறமாய் சாய்ந்து அப்பாவின் மடியில் கண் மூடி படுத்திருந்தவன் திறக்கமாலே கேட்டான் “என்ன ஸ்ரீனி”.

“சொல்லுங்களேன்”

“என்ன சொல்ல? எதுவாய் இருந்தாலும் நீயே சொல்லு” என்றான் சோம்பலாய். அந்த விவாகரத்து பத்திரத்தின் பிரதியைப் பார்த்த போதுதான் அவள் பிறந்தநாள் தங்கள் திருமண நாள் இரண்டும் சேர்ந்து இருப்பதைக் கண்டு கொண்டான். வீட்டுக்கு வருவதற்கு முன் குறுகிய நேரத்தில் பார்டிக்கு ஏற்பாடு செய்து, அந்த கார் கம்பனிகாரர்களுடன் பேசி என களைத்துப் போயிருந்தான்.

“நான் எப்படி? நீங்களே சொல்லுங்களேன்”

“என்ன அண்ணி ஏதாவது விசேஷமா?” அவளின் கன்னச் சிவப்பை பார்த்து மகிழ்ச்சியாய் இடையிட்டது நதியாவின் குரல்.

“ராட்சசி” சட்டென எழுந்தவன் உடல் தூக்கிவாரிப் போட்டது அசோகனுக்கு தெளிவாகவே புரிய மகனை அழுத்தமாய் பார்த்தார் அசோகன்.

அவள் புறம் குனிந்தவன் “இப்போது வேண்டாம்” கிசுகிசுத்தான்.

“அச்சோ ஞான் பறைஞில்ல” வராத வெட்கத்தை இழுத்து வைத்து வெட்கபட்டாள்.

“ஸ்ரீனி வேண்டாம்” அவன் ஆழ்ந்த குரல் எச்சரிக்க நிமிர்ந்து கண்களில் ஒரு சவால் பார்வையுடன் அவனை நோக்கினாள்.

‘வேண்டுமென்றே செய்கிறாள், இவளை’ பல்லைக் கடித்தான் கௌதம். தாழ்ந்த குரலில் “இப்ப நீ ஏதாவது சொன்னால் உன் மூளையில் இருக்கும் கட்டி பற்றி எல்லோருக்கும் சொல்லிருவேன் முடிந்தால் சொல்லு” என்றான் பதிலுக்கு.

அதிர்வு இருந்தாலும் பெரிதாய் இல்லை. அவன் தெரிந்து கொண்டான் என்பதை ஏற்கனவே ஓரளவு எதிர்பார்த்திருந்தாள்.

“பரவாயில்ல சொல்லுங்க” அவன் கண்களைப் பார்த்து சவாலிட்டாள். அவள் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறாள் அவனின் தவிப்பை. அப்படியே விட்டு விட முடியாது இல்லையா?

“சொல்ல மாட்டேன் என்ற தைரியம்” அடிக் குரலில் சீறினான்.

“கிட் வேணுமா என்னிடம் இருக்கு” ஆவலாய் கேட்டாள் வத்சலா.

“உண்மையாவா?” என்று யசோதா நெட்டி முறிக்க “அப்படி எதுவுமில்லை, அவளுக்கு அனிமியா இருந்தது. எதற்கும் நாளை மருத்துவமனையில் பரிசோதித்து விட்டு முடிவு எடுப்போம்” குறுக்கிட்டான் கௌதம்.

“நேரமாகிவிட்டது அத்தான் வேறு நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருக்கிறார்” என்றவன் யார் பதிலுக்கும் காத்திரமால் ஸ்ரீனியை நொடியில் கையில் ஏந்திக் கொண்டு மேலே சென்றிருந்தான்.

யசோதாவும் இளையவர்களும் நகைக்க நெற்றி சுருக்கி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அசோகனை யோசனையாய் பார்த்தார் அவர் மனைவி. அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று விட “என்ன ஏதாவது பிரச்சனையா?” கேள்வி கனவரிடமிருந்தாலும் பார்வை கௌதமின் அறையை நோக்கி இருந்தது.

“இல்லம்மா இது வேறு. எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு. இந்த திடீர் பார்டியால் கவனிக்க முடியவில்லை. நீ போய் படும்மா வருகிறேன்” என்று மனைவியை அனுப்பி வைத்துவிட்டு அஜாவின் இலக்கத்தை அழுத்தினார்.

“உன்னுடன் இப்போதே பேச வேண்டும்”

“நீங்கள் எப்போது அழைப்பீர்கள் என்றுதான் காத்திருந்தேன். எங்கே வர” நிம்மதியுடன் கேட்டான் அஜா. அவன்தான் தனியாய் கௌதம் படும் பாட்டை நிதமும் பார்க்கிறானே.

🎻 🎻 🎻 🎻 🎻

பஞ்சு மூட்டையை தூக்குவது போல் இலகுவாய் தூக்கிச் சென்றவன் சற்று மூர்க்கதனமாய் ஸ்ரீனியை கட்டிலில் விட்டான். மெத்தையில் துள்ளி உருண்டவள் “பார்த்து உள்ள பாப்பா இருக்கு” உதட்டை சுளித்தாள்.

“உனக்கு என்னதான் பிரச்சனை?”

“எனக்கு பாப்பா வேணும்” பிடிவாதமாய் சொன்னாள்.

இயலாமையுடன் முகத்தை அழுத்தி தேய்த்தவன் “சரி என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்வாய்?” கேட்டான்.

நிச்சயமாய் குழந்தையை விட அவன் உயிரைத்தான் தேர்ந்தெடுப்பாள். அவளுக்கு அவன் நிலை புரிந்தாலும் குழந்தையை விட்டுக் கொடுக்க முடியவில்லை. அவர்கள் காதலின் பரிசு அதோடு....

“எனக்கு குழந்தைதான் முக்கியம். குழந்தையை தான் தேர்ந்தெடுப்பேன்” அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் திருமூய் கையைக் கட்டிக் கொண்டு வேண்டுமென்றே சொன்னாள். முகத்தில் ஓங்கி அறை வாங்கியது போல் லேசாய் தள்ளடினான்.

“நான் வேணாம்ல்ல” அவன் குரலில் திரும்பிப் பார்த்தவள் அவன் முகத்தில் தென்பட்டுக் கொண்டிருந்த வேதனையில் பேச்சிழந்து பார்க்க அவனே தொடர்ந்தான் “நீயில்லாமா என்னால் முடியாது. எனக்கு நீயும் உன் விருப்பமும் தான் முக்கியம். நாளை எல்லோரிடமும் சொல்லிவிடு” என்றவன் ப்ரெஷ் ஆக வாஷ்ரூம் சென்றான்.

ஸ்ரீனிகா பிரெஷ் ஆகி வந்த போது கண்ணுக்கு மேல் முழங்கையை வைத்து படுத்திருந்தான் கௌதம்.

‘உறங்கிவிட்டானா? கோபமாய் இருக்கிறானா?’ மனம் கேட்க `அருகே அமர்ந்தவள் விரல் நுனியால் அவன் டீசேர்ட்டை பிடித்து இழுத்து அழைத்தாள் “கௌதம்”

கையை விலக்கமாலே தன் மீது இழுத்துப் போட்டுக் கொண்டவன் “தூங்கும்மா, இன்று களைத்துப் போய் இருப்பாய்” உச்சியில் நாடி பதிக்க என்ன சொல்வது என்று தெரியாமல் “கௌதம் நான்..” தடுமாறினாள்.

“ஓகே எனக்குப் புரியுது. இத்தனை நாள் உன்னை அலட்சியப்படுத்தியதில் உனக்கு நானும் முக்கியம் என்ற எண்ணமே போயிருக்கும். உன்னால் அந்த அளவுக்கு என்னை நேசிக்கவோ உயிராய் நினைக்காவோ முடியாது. பரவாயில்ல விடு உனக்கும் சேர்த்து நான் லவ் பண்ணிட்டு போறேன்” அவன் குரலில் இருந்த வேதனை புரிய செய்வதறியாது விழித்தாள் ஸ்ரீனிகா.

ஒரு வேகத்தில் வார்த்தையை விட்டுவிட்டாள், அதற்காக இப்படியா தன்னைத்தானே வருத்துவான்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா🎻 57

அவன் மீது முழுமையாக ஏறிப் படுத்து மார்பில் கையை ஊன்ற, அவள் மலர்ப் பாரத்தை உணர்ந்தவன் கண்ணிலிருந்து கையை எடுத்து ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.

“கௌதம் கிருஷ்ணா” எரிச்சலுடன் அழைக்க சற்று எம்பி அவள் நாசியை நாசியால் நிரடியவன் “என்னடி” என்றான் கிறக்கமாய்.

“எனக்கு பாப்பா வேணும்”

“அதுதான் சரி என்றேனே” முகத்தை திருப்பினான்.

அவன் முகத்தை பிடித்து தன்னைப் பார்க்க வைத்தவள் “அது சிரிச்சிட்டே சொல்லனும்” நிபந்தனை விதித்தாள்.

“ச்சு” மீண்டும் முகத்தை திருப்பியவன் கை அவள் வயிற்றை வருடியது “எனக்கும் பாப்பா தானே! ஆனா உன் உயிரா?” சொல்லிக் கொண்டிருந்தவனை இடைமறித்தாள் “எனக்கும் தெரியும்”.

லேசாய் முறைக்க “நீங்கள் என் நிலையில் இருந்து யோசித்து பாருங்கள். என்ன முடிவு எடுப்பீர்கள்? உங்களுக்கு பிறகு உங்கள் அம்மா அப்பா பாவம் இல்லையா?” என்றவளை குழப்பமாய் பார்த்தான் “என்ன என் அம்மா அப்பா பாவம்!”.

“எனக்கு ஏதாவது நடந்தால்” சொல்லி முடிப்பதற்குள் வாயை பொத்தி கண்டித்தான் “அபசகுனமா ஏதாவது பேசாதே”.

“உங்களுக்கு என்ன நினைப்பு நான் போனா இன்னொரு கல்யாணம் செய்யாலாம் என்றா? கொன்னுருவேன், ஆவியா வந்தாவது என்னோட கூட்டிட்டு போயிருவேன்” என்றவளையே திகைத்துப் போய் வாய் திறந்து பார்த்திருந்தான் கௌதம்.

“என்ன என்னை விட்டுட்டு புது மாப்பிள்ளை ஆகிற பிளானா?” தலை சாய்த்துக் கேட்க, அவளைக் கீழே தள்ளி அவளுள் புதைந்தவன் அவள் ஏதோ சொல்ல வர அதை தன் தொண்டைக் குழிக்குள் விழுங்கிக் கொண்டான்.

“பாப்பாவுக்கு மூச்சு முட்டும்” தள்ளி விட தன்னைத் தானே நொந்து கொண்டான் கௌதம். அன்று சொன்ன வேறு எதுவும் நினைவில் இல்லை பாப்பாவுக்கு மூச்சு முட்டும் என்பது மட்டும் நினைவு இருக்கு. மீண்டும் அவன் மீது ஏறிப் படுக்க ஒரு புருவத்தை தூக்கினான்.

“ம்ம் இது என் இடம்” என்று மார்பில் சாய்ந்து கொள்ள “ஹ்ம்ம் எத்தனை நாள் இதுபோல் படுக்க முடியும்” ஒரு கையை தலையின் கீழ் வைத்து மறு கையால் அவள் தலையை வருடியவாறே கேலியாய் கேட்டான்.

“ஏன் என் வாணாள் முழுதும்” கண் மூடிச் புன்னகையுடன் சொல்ல அவன் தொண்டைக் குழி ஏறி இறங்கியது. “இங்கே பேபி பம் வருமே” வயிற்றின் அருகே கை கொண்டு வர தட்டிவிட்டாள்.

“பாப்பா வெளியே வரும் வரை கொஞ்ச நாள் உங்களுக்கு விடுதலை. வந்த பிறகு” என்றவளை இடைமறித்தான் “அப்போதும் கஷ்டமே பாப்பா படுக்க கேட்டால்” என்றவனை முட்டைக் கண்ணால் முறைத்தாள்.

“பாப்பாவுக்கு தோள்தான்” பிடிவாதமாய் சொன்னவளை தன்னுடன் அரவணைத்து கொண்டான்.

“கௌதம்” கிள்ளையாய் அழைத்தவளை சற்று எம்பிப் பார்க்க “இல்ல இன்று மேடையில் வைத்து ஏன் கோபப்பட்டீங்க” அவன் சட்டை பொத்தனை கையில் வைத்து சுழற்றினாள். “அதெப்படி சொத்தெல்லாம் எனக்கா? நீயே இல்லமால் அதை வைத்து என்ன செய்ய?” கோபமாய் கேட்க அவனைக் கட்டிக் கொண்டு அவன் கோபத்தை தணிக்க முயன்றாள்.

சற்று நேரம் அமைதியில் கழிய கௌதம் அழைத்தான் “ஸ்ரீனி”

“ம்ம்ம்”

“ஏன் அப்பா அம்மாவிடம் சொல்ல அவசரபட்டாய்? அப்படி உன் விருப்பத்தை மீறி கலைத்து விடுவேனா? எனக்கு இரண்டு மாதமாய் தெரியும் தெரியுமா? உனக்குத் தெரியாமலே செய்திருக்க முடியும் என்னால்” லேசாய் கம்மிய குரலில் கேட்டவனை நிமிர்ந்து பார்த்து ரகசிய புன்னகையுடன் சொன்னாள் “நாளை உங்களுக்கே தெரியும்”.
🎻🎻🎻🎻🎻

நீரைக் கொதிக்க வைத்துவிட்டு அதையே சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. பாலைக் கொதிக்க வைத்தால் அதன் மனத்தில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. அதுதான் வெறும் கோப்பி அல்லது தேனீர் குடிப்போம் என்று போடுவதற்கு ஆயத்தம் செய்தாள்.

பின்னிருந்து வலிய கரங்கள் இடையைச் சுற்றிக் கொள்ள காதருகே ஒலித்தது கௌதமின் குரல் “குட் மோர்னிங்”. இன்னும் உறக்கம் மிச்சமிருக்க நாசியால் கழுத்து வளைவில் நிரடி கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

தோளுக்கு மேலாய் திரும்பியவள் எம்பிக் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னாள் “குட் மோர்னிங்”. ஒரு கணம் உறைந்தவன் அணைப்பு இறுகிப் போனது. குனிந்து அவள் வயிற்றில் முத்தமிட்டு “குட் மோர்னிங் பாப்பா” என்றவனைத் தள்ளிவிட்டாள் “பாப்பா வேணாம் சொன்ன இல்ல, சோ நோ குட் மோர்னிங்”.

சிரித்தவாறே விலகியவன் அவள் தண்ணீர் கொதிக்க வைப்பதைப் பார்த்து புருவம் சுருக்கினான் “ஏன் பால் இல்லையா?”.

“இருக்கு அந்த ஸ்மெல்க்கு வொமிட் வருது” முகத்தை சுளித்தாள்.

சட்டென தூக்கி அடுப்புக்கு பக்கத்தில் இருத்தியவன் “இன்று நான் சாய் போடுறேன் ஸ்ரீகுட்டி” என்றவாறே தேநீர் தயாரிக்க தொடங்கினான். கரம்பு ஏலம் என்று எதையேதையோ போட்டவன் கடைசியாய் சில துளி லெமன் சாறும் பிழிந்து விட்டு அதை ஒரு கப்பில் ஊற்றி “நிறம் மனம் சுவையுடன் கொஞ்சம் லவ்” கண்ணாடித்து கையில் கொடுக்க தலை சாய்த்துப் பார்த்து புன்னகையுடன் டேஸ்ட் பார்த்தாள்.

கண்கள் விரிய “ஹ்ம்ம் யம்மி வேறு இருக்கா?” கப்பை எட்டிப் பார்க்க மூக்கில் சுண்டி “இருக்கு ஆனா இந்த சத்தி எத்தனை நாள் இருக்கும்” கவலையாய் கேட்டான்.

“எனக்கும் தெரியலையே” அப்பாவியாய் கையை விரித்தாள்.

“சிலருக்கு இரண்டு மாதம் இருக்கும் சிலருக்கு பேபி கிடைக்கும் வரை இருக்கும்” என்ற குரலில் இருவருமே திடுக்கிட்டுப் போய் பார்த்தார்கள்.

யசோதா நதியா வத்சலா என பெண்கள் அனைவரும் நின்றார்கள், கூடவே அசோகனும்.

யசோதா கையில் உப்பும் மிளகாயும் எடுத்து இருவருக்கும் சேர்த்து சுற்றிப் போட்டவர் “வள்ளி இதை வெளியே நெருப்பில் போடு” என்று கொடுக்க அசோகன் கௌதமையே அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் பார்வையில் லேசாய் நெளிந்தவன் “அப்பா” என்றான் கவனமாய்.

“எப்போதிருந்து என்னிடம் மறைக்க தொடங்கினாய்?” கடுமையான குரலில் கேட்க குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். கௌதம் அவருக்கு மட்டுமில்லை வீட்டுக்கே செல்லப் பிள்ளை, இந்த முப்பது வயதினுள் அவனை ஒரு நாள் கூட அதிர்த்து பேசியதில்லை. இருவருக்குள்ளும் அப்படி ஒரு பந்தம். ஏன் ஸ்ரீனிகாவை சொல்லமால் கொள்ளாமல் திருமணம் செய்ததை கூட அவரிடம் சொல்லிவிட்டுதான் செய்தான்.

“அஜா” பல்லைக் கடிக்க “அஜா இல்லை” என்றார் அசோகன் கடுமையான குரலில்.

கண்கள் விரிய ஸ்ரீனிகாவைப் பார்த்தான் கௌதம். சட்டென நேற்று அவள் ‘நாளை உங்களுக்கே தெரியும்’ என்றது நினைவில் மின்னி மறைய அவளைப் பார்க்க அவளோ அப்போதுதான் ரசித்து ருசித்து தேநீர் பருகினாள்.

“ராட்சசி” வாய்க்குள் முணுமுணுத்தவன் “அப்பா இ வில் எக்ஸ்ப்ளைன்” முன்னே வர “யு பெட்டெர் கிவ்” என்றார் கடினமாய்.

பெண்கள் அனைவரும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல் புரியாமல் பார்த்திருந்தனர்.
🎻🎻🎻🎻🎻

அவனின் ஜிம் அறையினுள் அமர்ந்திருக்க கௌதமையே கூர்ந்து பார்த்த அசோகன் “சொல்லு” என்றார்.

டிரேட் மில்லில் இருந்து இறங்கியவன் “அப்பா என் மீது நம்பிக்கையில்லையா?” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். முடிந்த வரை அவர்களிடம் சொல்லமால் விடுவது என்றுதான் முடிவு எடுத்திருந்தான். ‘இந்த அஜாவும் ஸ்ரீனியும் சேர்ந்து செய்த வேலை’ இப்போது பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.

‘உங்களுடன் வாழனும்” என்று சொன்ன போது அவன் விலகிச் சென்றதை சரியாகவே புரிந்து கொண்டாள் ஸ்ரீனிகா. அந்த ஒரு கணத்தில் அவன் கண்ணில் வெளிப்படையாக தென்பட்ட தவிப்பு இயலாமை தன் மீதே கொண்ட கோபம் என அனைத்தையும் கண்டிருந்தாள். அதோடு இந்த இரண்டு மாதங்களில் அவன் மெலிவு சகிக்க முடியவில்லை. அவளாவது பாப்பா வந்ததால் மெலிந்திருந்தாள். அனைத்தையும் உள்ளேயே வைத்து மறுகியவனை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவள் இன்று அவன் அப்பாவின் மடியில் படுத்திருந்ததை பார்த்ததும் முடிவெடுத்துவிட்டாள். எப்படியாவது அசோகனுக்கு இந்த அவனின் மெலிவின் காரணத்தை அறியச் செய்வது என்று.

பார்டியில் இருந்து வரும் போதே அஜாவிடம் நைசாக சொல்லிவிட்டாள் “மாமா கேட்டால் அனைத்தையும் சொல்லுங்கோ ஏட்டா மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று.

அதே போல் அவன் குளிக்க சென்ற இடைவெளியில் அசோகனுக்கு போன் எடுத்தவள் “மாமா ஏன் எதுக்கு என்று கேட்காதீர்கள். அஜாவிடம் உடனேயே பேசுங்கள் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். மீதியை விபரமாக பிறகு சொல்கிறேன்” அவசரமாய் கூறி வைத்துவிட்டாள்.

அவளுக்குத் தெரியும் சந்தர்ப்பம் கிடைத்தால் அசோகனிடம் அனைத்தையும் சொல்லிவிடுவான். மனதுக்கு நெருக்கமான ஒருவரிடம் கிடைக்கும் ஆறுதலை விட வேறு என்ன வேண்டும். அவள் ஆறுதல் கொடுக்க முடியாது என்பதில்லை. ஆனால் அதை அவன் மனம் இலகுவில் ஏற்றுக் கொள்ளாது.

“நம்பிக்கை தும்பிக்கை எல்லாம் இருக்கட்டும் கேட்டதற்கு பதில் சொல்” அழுத்தமாய் கேட்டார்.

தொடை மீது கை முட்டியை ஊன்றி சற்று முன் குனிந்து அமர்ந்தவன் நடுக்கம் வெளிப்படையாகவே தெரியவே “கிருஷ்ணா” என்று அவன் தோளில் கைவைத்தார் அசோகன். அவர் கையின் பலத்தில் ஸ்ரீனியின் விபத்து தொடங்கி அதனால் அவள் மூளையில் ஏற்பட்ட கட்டி இப்போது கருவுற்றதால் ஏற்படக் கூடிய அபாயம் என அனைத்தையும் சொல்லிவிட்டான். மகனின் நிலை முழுதாக புரிய “இங்கே வா” என அணைத்தவர் தோளில் சாய்ந்தவன் உடல் லேசாய் குலுங்கியது.

“ஷ் நீ தைரியமா இருந்தால் தானே அவளும் தைரியமா இருப்பாள் ஹ்ம்” முப்பது வயது மகனை மூன்று வயது குழந்தையைப் போல் தேற்றியாவாறே நிமிர்ந்து பார்க்க தன் பெரிய கண்களால் அவரையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீனிகா தென்பட்டாள்.

அவளை உள்ளே அழைக்க வாயெடுத்தவரை உதட்டில் கைவைத்து குறுக்கே தலையசைத்து தடுத்தவள் வந்த சுவடு தெரியாமல் திரும்பி அறைக்கு வந்திருந்தாள்.

ஜிம்மால் வந்து குளித்து உடை மாற்றி என்று அலுவலகத்திற்கு தயாரானவனை சோபாவில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் திரும்பிப் பார்க்கவே சட்டென போனில் பார்வையைப் பதித்தவளைப் பார்த்து மெல்ல வாய்க்குள் நகைத்தவன் “ஒரு காஃபி கிடைக்குமா” கேட்டான்.

“ஆங்..”

“காஃபி” கையால் ‘கப்’ போல் பிடித்துக் காட்டினான்.

அவனையே திரும்பி திரும்பி பார்த்தவாறே கீழே சென்றவளை புன்னகையுடன் பார்த்திருந்தான். கௌதம். உண்மையில் நேற்றிருந்த வருத்தம் போன இடம் தெரியவில்லை. தனக்காகதான் அப்பாவிடம் பேசியிருக்கின்றாள் என்பது புரிந்ததுமே சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. சந்தோசத்தை தேக்கி வைக்க நெஞ்சு கூடு காணாது என்பது போல் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

கூடவே அப்பாவிடம் எச்சரித்து இருந்தான் “அப்பா இப்போதைக்கு வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம். சிலவேளை அதனால் டென்சன் வந்தால் கூடாது. கட்டி ரிமூவ் பண்ணுவதற்கு முன் சொல்வோம். எப்படியும் வீண் மனக் கஷ்டம் தானே” என்றதை அவரும் ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீனிகா காஃபியுடன் மேலே வந்த போது வெளியே நின்று யாதவிடம் போனில் உரையாடியவன் கண்ணாடியூடே அவளைப் பார்த்துவிட்டு “ஐ வில் கால் யு பக்” போனை கட் செய்து உள்ளே வந்தான்.

அவன் கையில் கொடுத்துவிட்டு தள்ளி அமர்ந்த ஸ்ரீனிகாவின் அருகே அமர மீண்டும் தள்ளி இருந்தாள். மெல்லிய சினத்துடன் “ச்சு என்ன?” என்றவனிடம் “இல்ல அந்த ஸ்மெல் சத்தி வருது” மூக்கைச் சுருக்கினாள்.

“ஒ’ என்று மெல்லச் சிரித்தவன் “சரி நீ என்ன குடிப்பாய்?” விசாரித்தான்.

“அதான் நீங்க போட்டுத் தந்தீங்களே லெமன் டீ”

“சரி அப்ப இனிமேல் எனக்கும் லெமன் டீயே போடு” என்றவனிடம் “எனக்கு லெமன் டீ போடா வராது” அப்பாவியாய் பொய் சொன்னாள். அவளுக்காக அவன் டீ போட்டுத் தருவது மனதினுள் ரகசியமாய் பிடித்து தொலைத்தது.

அவளைக் கண்டு கொண்டவனாய் தலையில் கை வைத்து ஆட்டி விட அவன் முகத்தையே திரும்பி திரும்பி பார்த்தவளை பார்த்து “கேள்” என்றான் ஒற்றைச் சொல்லாய்?”

“ஆங்”

“இல்ல எதையே கேட்கதானே இவ்வளவு கஷ்டப்படுறாய்? கேள் என்றேன்”

“ஒ.. அது... வந்து...” தயங்கியவள் “யூ ஒகே” கேட்டுவிட்டாள்.

அவள் கண்களையே சில நொடி ஆழ்ந்து பார்த்தவன் ஒரு கையை நீட்டி அழைத்தான் “இங்கே வா”. அருகே வரமால் தண்ணீர் போத்தலை கொடுக்க வியப்பாய் பார்த்தன் கௌதம்.

“முதலில் இதை குடித்து வாய் கொப்பளியுங்கள்” என்றவளைப் பார்த்து “உன் அலப்பறை தாங்க முடியல” நகைத்தாலும் அவள் சொல்லை தட்டாமால் நிறைவேற்றியவன் வெட் டிஷ்ஷுவால் வாயைத் துடைத்து விட்டு அவள் இதழ்களை தொட்டு விடும் தூரத்தில் நெருங்கிக் கேட்டான் “ஏன் கூப்பிட்டேன் என்று நினைத்தாய்? வேண்டுமா?’ குறும்பாய்க் கேட்க அவன் வாயில் கைவைத்து தள்ளிவிட்டாள் ஸ்ரீனிகா.

“அந்த பால் மணத்திற்கு சத்தி வரும்” குழந்தை போல் கூற உச்சி வகிட்டில் முத்தமிட்டு தன்னோடு அனைத்துக் கொண்டவன் “ஐம் ஒகே” என்றான்.

அவளோ அவன் மார்பில் சாய்ந்து வாசம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“இது சத்தி வராதா?” அவள் காதில் ரகசியமாய் கேட்க “வராது” வேகமாய் தலையாட்டி வைத்தவளை நெஞ்சோடு அனைத்துக் கொண்டான்.

“ஸ்ரீனி”

“ஹ்ம்ம்”

“அலுவலகம் போகனும்” மெதுவாய் கூற அவளோ மறுத்து இன்னும் அவனுள் புதைந்தாள். எழுந்த பெருமூச்சை சத்தமின்றி வெளியேற்றியவன் போனை சைலெண்டில் போட்டு விட்டு யாதவிற்கு ஒரு மெசேஜை தட்டி விட்டான் ‘இன்று வர நேரமாகும்’.

அவள் ஆழ்ந்து உறங்கியிருக்க பெட்டில் படுக்க வைத்தவன் நெற்றியில் இதழ் பதித்து சென்றுவிட்டான்.

“அம்மா ஸ்ரீனி உறங்கிறாள் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்” கீழே அம்மாவிடம் சொன்னவன் வெளியே வர அஜா காரின் அருகே அசட்டுச் சிரிப்புடன் நின்றான்.

“டேய் உனக்கு நான் பாஸா இல்லை ஸ்ரீனியா?” அவனிடம் லேசாய் எகிறினான்.

“உங்களுக்கே பாஸ் தங்கச்சி மேடம் அதனால் எனக்கும் தங்கச்சி மேடம் தான் பாஸ்” பயமின்றி சொன்னான் அவன்.

“இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் அநியாயங்களுக்கு அளவு கணக்கு இல்லமால் போகுது. இருங்கள் ஒரு நாள் இருவருக்கும் சேர்த்துத் தாரேன். இப்ப காரை எடு” என்றவாறே உள்ளே ஏறினான்.
 
Status
Not open for further replies.
Top