All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "இளைப்பாற நிழல் தாராய்" கதை திரி 🌳🌳

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 20:

இரவு ஒன்பது மணிக்கு ஒரு ஜூஸ் கடையில் சிவதேவ்வும் காவியாவும் நின்றிருந்தனர்.

"சூடா காஃபி வாங்கி தரேன் ஸ்ரீ. இந்த நேரத்துக்கு ஊட்டியில் யாராவது ஜூஸ் குடிப்பாங்களா..? படுத்தாத டி..!" என கெஞ்சி கொண்டிருந்தான் சிவதேவ்.

"அதெல்லாம் முடியாது. நீ வாங்கு.." என்றவள் முகத்தை மூடி இருந்த ஷாலை இன்னும் நன்றாக இழுத்து மூடி கொண்டாள்.

"நாளைக்கு உடம்புக்கு ஏதாவது ஆகட்டும்.. இருக்கு உனக்கு..!" என்று திட்டிக்கொண்டே தான் சிவதேவ் ஜூஸ் ஆர்டர் செய்தான்.

சென்னையை பொறுத்தவரை அவர்களுக்கு ஆஸ்தான ஜூஸ் கடை ஒன்று உண்டு.

இரவு நேரங்களில் சந்திக்கும் போது, அங்கே சென்று விடுவார்கள்.

அங்கிருக்கும் பருவநிலைக்கு ஒரு பிரெச்சனையும் இல்லை.

இங்கு குளிரில் அவள் அடம் பிடிப்பது தான் சிவதேவ்விற்கு பயமாக இருந்தது.

ஜூஸ் வாங்கி வந்தவன் வழக்கம் போல் முதலில் தனக்கானதை அவளிடம் கொடுக்க, அவளும் அதை கொஞ்சம் குடித்து விட்டு தன்னுடையதை வாங்கி கொண்டாள்.

"ஐஸ் எல்லாம் இல்லாமல் எப்படி தான் குடிக்கரையோ போ..!"

"இந்த குளிரில் பைத்தியம் தான் ஐஸ் போட்டு குடிக்கும்.." சிரிக்காமல் அவன் கூற, அதற்கும் அசராமல், "பரவாயில்லை" என நொடித்துக்கொண்டாள் அவனவள்.

சிவதேவ் போன் அடிக்க, அவன் அதை எடுத்தான்.

"சொல்லு விஷ்ணு"

"நீ ரூமில் இல்லையா சிவா..?"

"இல்ல விஷ்ணு. ஏன்..?"

"ஒரு சீன் தோணிச்சு. உன் கூட டிஸ்கஸ் பண்ணனும்.."

"ஓகே. ஒரு டென் மினிட்ஸ். அங்க இருப்பேன்.." என்றுவிட்டு சிவதேவ் போனை வைத்து விட்டான்.

அவன் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த காவியா, "காலையில் பேச கூடாதா டா..? நாம டைம் ஸ்பென்ட் பண்ணுறதே கொஞ்ச நேரம் தான். அதிலும் டிஸ்டர்பன்ஸ்னா எப்படி..!" என்றாள் கவலையுடன்.

"ரிஸ்க் வேண்டாம் ஸ்ரீ. நீயும் நானும் சேர்ந்து வந்திருக்கிறது யாருக்கும் தெரியாது. காசிப்க்கு வழி வகுக்க வேண்டாம். போலாம்." என்றுவிட்டான் சிவதேவ்.

காவியாவும் முனகிக்கொண்டே தான் கிளம்பினாள்.

ஷூட்டிங் என ஊட்டி வந்து ஒரு மாதம் ஓடி இருந்தது.

வந்த நாளில் இருந்து வேலையே சரியாக இருந்தது. ஏதோ இன்று தான் இருவரும் அமைதியாக வெளியே வந்திருந்தனர். அதுவும் கெடுகிறதே என்ற வருத்தம் அவளுக்கு.

இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் வேறு முடிந்து விடும்..

காவியாவை தனியாக ஹோட்டலில் இறக்கி விட்டுட்டு, சிறிது நேரம் கழித்தே சிவதேவ் சென்றான்.

************

இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த காவியா, தன் போன் அடிக்கும் சத்தத்தில் தான் எழுந்தாள்.

"என்ன டா..?" என தூக்கம் கலையாமல் அவள் கேட்க,

"வெளிய வா" என்றான் சிவதேவ்.

"தூக்கம் வருது தேவ்.."

"நாளைக்கு மதியம் தான் ஷூட். மார்னிங் தூங்கிக்கலாம். இப்போ வா."

"படுத்துவ டா நீ..!" என புலம்பி கொண்டவள், எழுந்து சென்று முகம் அலம்பி வெளியே வந்தாள்.

அந்த ஹோட்டல் முழுவதும் பெரும் அமைதியில் இருந்தது.

அவர்கள் இருவர் மட்டுமே அந்த இடத்தில் நடந்தனர்.

கீழே சிவதேவ் ஒரு பைக் ஏற்பாடு செய்திருந்தான்.

"ஏறு" என அவன் கூற, அவளும் அவன் பின்னால் ஏறி அவனை அழுத்தமாக அணைத்து கொண்டாள்.

"திரும்ப தூக்கம் வருது டா"

சிவதேவ் வண்டியை எடுத்ததுமே அவள் சுகமாக அவன் முதுகில் சாய்ந்துகொள்ள, "நான் திருப்பி எழுப்புவேனே..!" என்றான் அவன்.

"சரியான சேடிஸ்ட் டா நீ..!"

"ஆமா டி. உன்னை கடிச்சு சாப்பிட போறேன்.."

"நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட தல..!" அவள் கலகலவென சிரிக்க,

"எனக்கு தேவை தான் டி" என புலம்பி கொண்டவன் உதட்டிலும், புன்னகையே உறைந்திருந்தது.

ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தியவன், இறங்கி கை நீட்ட, அவளும் அவன் கையை பிடித்து கொண்டாள்.

நின்ற இடத்தில் இருந்து காட்டு பகுதி போல் இருந்த இடத்தில் சிறிது தூரம் சிவதேவ் நடக்க, அவளும் அவனை ஒன்றி கொண்டே நடந்தாள்.

இருவரும் சென்று நின்ற இடம், ஒரு அழகான குன்று போல் இருந்தது.

அன்று முழு நிலவு வேறு.

நன்றாக குளிர தொடங்க, தன்னவன் கையை அழுத்தமாக அணைத்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் காவியா.

"அழகா இருக்கு தேவ் இந்த இடம்"

"ம்ம். உனக்காக தேடி கண்டுபிடிச்சேன். எனக்கு ஒன்னும் கிப்ட் கிடையாதா..?"

"நானே பெரிய கிப்ட் தான் டா உனக்கு" அவனை நிமிர்ந்து பார்த்து அவள் கண்ணடிக்க, "அப்போ உன்னையே தரியா?" என்றான் அவன் மென்குரலில்.

"உனக்கு இல்லாமையா..! எடுத்துக்கோ.." என அவள் சட்டென கூறி விட,

"பயமே இல்ல டி உனக்கு" என அவள் நெற்றியில் முட்டினான் சிவதேவ்.

"உன்கிட்ட என்ன பயம் தேவ். என்னிக்கென்றாலும் நான் உனக்கு தான். தாலி எல்லாம் வெறும் பார்மாலிட்டி தான்." அவள் பதிலில் மனம் நெகிழ்ந்து விட, அவளை மேலும் தனக்குள் இறுக்கி கொண்டான் சிவதேவ்.

மலை முகட்டில் முழு நிலவுடனான அந்த அமைதியான இரவு, இருவருக்குள்ளும் அழகான நினைவாக பதிந்து போனது.

"சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாமா ஸ்ரீ..?" திடீரென சிவதேவ் கேட்க,

"உன் இஷ்டம் தான் தேவ்" என்றாள் அவள்.

"லேட் ஆகட்டும்னு கேட்டயே டி..!"

"உனக்கு லேட் ஆக வேண்டாம்னு தோணினா, எனக்கு ஓகே தான்.."

"உன் இஷ்டத்துக்கு வேணும்னு சண்டை எதுவும் போட மாட்டியா...?" அவள் பக்கம் திரும்பி அவன் கேட்க, அவளோ வேகமாக மறுப்பாக தலையசைத்தாள்.

"இப்படி ஒரு வைப் யாருக்கு கிடைக்கும்..!"

அவன் பெருமைபட்டுக்கொள்ள, "ரொம்ப சந்தோசப்படாத கண்ணா. எல்லாத்துக்கும் இப்படி சொல்ல மாட்டேன். நான் அடம் பிடிச்சா நீ தாங்க மாட்ட."

"அதெல்லாம் தாங்குவேன்"

வீராப்பாக அவன் கூறியதில், இருவரும் சிரித்து கொண்டனர்.

*************

அந்த பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே சுகந்திக்கும் விஷ்ணுவிற்கும் காதல் மலர்ந்து விட்டது.

சிவதேவ் காவியா போல் அவர்கள் பெரிதாக தங்கள் காதலை மறைக்கவில்லை.

இருவரும் வெளிப்படையாகவே பழகினர்.

விஷ்ணு கூட ஒரு முறை சிவதேவ்விடம் அவனும், காவியாவும் காதலிக்கிறார்களா என்று கேட்டு பார்த்தான்.

"ஏதாவது நல்ல விஷயம் என்றால் நானே சொல்லுவேன் விஷ்ணு" என சிவதேவ் முடித்துவிட, அதற்கு மேல் விஷ்ணுவும் அவனை வற்புறுத்தவில்லை.

நல்ல நட்பு அனைவருக்குள்ளும் ஏற்பட்டு விட்டதால், அந்த படம் முடியும் வரை நாட்கள் மிக அழகாகவே சென்றது.

விஷ்ணு படத்தின் ஷூட்டிங் டப்பிங் எல்லாம் முடிந்திருந்த நிலையில், அவார்ட் பங்க்ஷன் ஒன்று அறிவித்தனர்.

இந்த வருடம் சிறந்த நடிகனாக சிவதேவ்வும், சிறந்த நடிகையாக காவியாவும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

சிவதேவ் சென்ற வருடமே விருது வாங்கி இருந்தான். இப்போது மீண்டும் அவனுக்கு தான் கிடைத்திருந்தது.

அவன் நடிப்பு திறமை, அவன் தேர்ந்தெடுக்கும் கதைகள் என அனைத்தும் சேர்ந்து அவனை உச்ச நட்சத்திரமாக அமர வைத்திருந்தது.

அன்று அவார்ட் பங்க்ஷன்.

அதற்கு சேர்ந்து வந்தால் ஊரே பார்க்கும் என்பதால், சிவதேவ்வும் காவியாவும் தனி தனியாக தான் சென்றனர்.

சிவதேவ் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து நான்கு சீட் தள்ளி காவியா அமர்ந்திருந்தாள்.

சிவதேவ் கண்கள் வந்ததுமே அவளை தான் தேடியது.

ஒரே ஒரு நொடி அவன் அவளை பார்க்க, சரியாக அவளும் அவனை பார்த்தாள்.

யார் கவனத்தையும் கவராமல் சிவதேவ் கண்ணடிக்க, அவளும் பதிலுக்கு குறும்புடன் புன்னகைத்தாள்.

பங்க்ஷன் தொடங்கியதும் அனைவர் கவனமும் அதில் திரும்பியது.

"ஹாய் சிவதேவ்.." என்ற குரலில் சிவதேவ் திரும்பி பார்த்தான்.

அவன் பக்கத்தில் ராகவன் அமர்ந்திருந்தான்.

எப்போது வந்து அமர்ந்தான் என்று கூட சிவதேவ்விற்கு தெரியவில்லை.

பிரபல நடிகன், விஷ்ணுவின் அண்ணன் என்னும் அளவு சிவதேவ்விற்கு அவனை பற்றி தெரியும்.

"ஹாய்" சிவதேவ்வும் மறுக்காமல் கைகொடுத்தான்.

"பல வருஷமா நான் தக்க வைத்திருந்த இடத்தை ரொம்ப சுலபமா பிடிச்சுடீங்களே சிவதேவ்..!" சிரித்து கொண்டே கூறினாலும் ராகவன் குரலில் ஏதோ ஒன்று சிவதேவ்விற்கு உறுத்தியது.

"சுலபமா எதுவுமே கிடைக்காது ராகவன். உயிரை கொடுத்து உழைச்சிருக்கேன்..!" அழுத்தமாக சிவதேவ் கூற,

"ம்ம்.. ஆமா.. ஆமா.." என்ற ராகவன் ஒரு மாதிரி சிரித்து கொண்டான்.

சிவதேவ்விற்கு விருது வழங்க ராகவனை தான் மேடைக்கு அழைத்தனர்.

முதலில் ராகவன் கையில் விருதை கொடுத்துவிட்டு, சிவதேவ்வை மேடைக்கு அழைத்தனர்.

சிவதேவ் மேடை ஏறிய தருணம், அந்த அரங்கம் முழுவதும் கைதட்டலும் கூச்சலுமாக அதிர்ந்தது.

தன் கையில் இருந்த விருதை சிவதேவ் கையில் கொடுத்த ராகவன், "அடுத்த வருஷம் இது என்னிடமே வந்துடும் சிவதேவ்" என அடிக்குரலில் கூற,

"வாழ்த்துக்கள் ராகவன்" என்றான் சிவதேவ் நிதானமாக.

அவனுக்கு தன் உழைப்பின் மேல் நம்பிக்கை இருந்தது.

தந்தை பணத்தில் வந்த ராகவனோ, அந்த நம்பிக்கை இல்லாமல் எரிச்சலில் இருந்தான்.

இருந்தும் இருவரும் முகத்தை மட்டும் சிரிப்பது போலவே வைத்து கொண்டனர்.

அதன் பின் காவியாவிற்கும் அவார்ட் கொடுத்தனர்.

அன்று பாதி நிகழ்வு மட்டுமே முடிந்திருந்தது.

கடைசியாக அனைவரும் சாப்பிடும் இடத்திற்கு சென்று விட்டனர்.

விஷ்ணுவை ராகவன் தனியாக அழைத்து சென்றான்.

"அந்த சிவதேவ் வச்சு படம் எடுத்திருக்கயா டா..?" என அவன் தம்பியிடம் கேட்க, "ஆமா" என்றான் அவன்.

"அவனை எல்லாம் ஏன் டா வளர்த்து விடற..? நேத்து வந்த பய..!" என ராகவன் திட்ட தொடங்க, விஷ்ணு கவனமோ சற்றே தள்ளி நின்றிருந்த சுகந்தி மேல் தான் இருந்தது.

"என் விஷயத்தில் தலையிடாதே ராகவ்" என்றுவிட்டு விஷ்ணு நகர்ந்து சென்று விட்டான்.

தம்பியை முறைத்த ராகவன், சிவதேவ்வை தேட, அவனோ காவியாவுடன் நின்றிருந்தான்.

இருவரும் சிரித்து பேசி கொண்டிருந்ததை பார்த்து அவனுக்கும் இன்னும் வயிறு எரிந்தது

இப்போதைக்கு தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஹீரோயின். அவளும் இவனுடன் பேசுவதா..!

'ம்ஹ்ம்! விட கூடாது..' என ராகவன் மனம் கருவிக்கொண்டது.

இங்கு காவியாவும் சிவதேவ்விடம் ராகவன் பற்றி தான் கேட்டாள்.

"அந்த ராகவன் என்னவோ மாதிரி இருந்தாரே..! எதுவும் பிரெச்சனையா தேவ்..?" என அவள் கேட்க,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை ஸ்ரீ. அவனுக்கு தலைவலியாம்.." என சிவதேவ் சமாளித்துவிட்டான்..

அப்போதைக்கு ராகவனை சிவதேவ் தேவையில்லாத டாப்பிக்காக தான் பார்த்தான்.

அவன் ஒரு விஷப்பாம்பு என அப்போது யாருமே கவனிக்கவில்லை.

சிவதேவ்வையே பார்த்து கொண்டிருந்த ராகவன் கண்கள், பெரும் கோபத்திலும் பொறாமையிலும் சிவந்து போனது.

'உன்னை மொத்தமா ஒழிக்கறேன் பாரு டா!' என மனதில் அழுத்தமாக சபதம் எடுத்து கொண்டான் ராகவன்..

இளைப்பாறும்..

 
Status
Not open for further replies.
Top