All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "இளைப்பாற நிழல் தாராய்" கதை திரி 🌳🌳

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10:

நந்தினியை அனுப்பி விட்டு, தான் வழக்கமாக அமரும் பாறையில் வந்து அமர்ந்தான் சிவதேவ்.

அவன் மனம் முழுவதும் அத்தனை வலி.

எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் திராணி அவனுக்கு உடனடியாக இருக்கவில்லை.

சில நிமிடங்கள் முன்பு வரை கூட அவனுக்கு விடை தெரியாமல் இருந்த சில கேள்விகளுக்கு, இப்போது விடை கிடைத்திருந்தது.

கிடைத்த விடை தான் அப்படி ஒன்றும் உவப்பாக இல்லை.

எல்லாம் முடிந்ததா..! அப்படியே விடுவதா..! அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

தலையை அழுத்தமாக பிடித்துக்கொண்டு அமர்ந்தவன் கண்கள், தன்னை அறியாமல் கலங்கியது.

அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் தான்..! ஆனால் முழுதாக விஷயம் தெரியாமல் எதையும் குதறிவிட கூடாதே என்ற பயம் அவனுக்கு.

அவன் வாழ்க்கை மட்டும் என்றால் யோசிக்க மாட்டான். மாட்டி இருப்பது அவள் வாழ்க்கை அல்லவா..! அதான் வெகுவாக குழம்பி போனான்.

விடிய விடிய யோசித்தும் அவனால் உருப்படியான தீர்வு ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை..

காத்திருப்பதை தவிர அவனுக்கு வேறு எந்த வழியும் விட்டுவைக்கப்படவில்லையே..! அதற்காக ஒன்றுமே தெரிந்துகொள்ளாமல் காத்திருக்க அவன் தயாராக இல்லை.

குறைந்தது வெளியில் என்ன நடக்கிறது என்றாவது அவன் தெரிந்துகொள்ள வேண்டாமா..!

அந்த மலைக்கிராமத்தில் யாரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கவில்லை. சாதா போன் தான் வைத்திருந்தனர். இங்கு பேச டவர் கிடைப்பதே பெரிது, நெட் எல்லாம் வராது..!

மறுநாள் சொக்கனிடம் வியாபாரத்துக்கு தன் கைவினை பொருட்கள் கொடுக்கும் போதும், "இனி தினமும் பேப்பர் வாங்கிட்டு வாங்க சொக்கா" என்று கூறி அனுப்பி வைத்தான் சிவதேவ் .

*******

காவியா அவள் பாட்டிற்கு தன் வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்.

ராகவன் சில சமயம் கணவனாக மோகத்துடன் அவளை நெருங்குவதோடு சரி.

மற்றபடி அவனுக்கும் வேலை சரியாக தான் இருந்தது..

சொல்லப்போனால், சில நாட்களாக அவனிடம் இருந்த மோகம் கூட குறைந்து தான் போய் இருந்தது.

அவள் கிடைக்கும் வரை அவன் காட்டிய முகத்திற்கும், இப்போது அவன் காட்டும் முகத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

ஆசைப்பட்ட ஒரு பொருளை நல்லபடியாக வாங்கி வீட்டில் வைத்துவிட்டதோடு வேலை முடிந்தது என்பது போல் தான் அவன் நடந்துகொண்டான்.

இதை எல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால், காவியா ஒன்றும் அதிர்ந்து விடவில்லை.

சொல்லப்போனால் நிம்மதியாக தான் இருந்தாள்.

ஒரு நாள் அனைவரும் இரவு உணவிற்கு அமர்ந்திருந்த போது, அருள்குமரன் பேசினார்.

"நாளை சோபிதா பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். எல்லாரும் வந்துரனும். முக்கியமா ராகவ் காவியா நீங்க தான் முன்னாள் நின்று செய்யணும். சோ ஈவினிங் கரெக்ட் டைமுக்கு வந்துடுங்க. நிறைய செலிபிரிட்டிஸ் வருவாங்க. விஷ்ணு எப்படியும் வர மாட்டான். நீங்க இருக்கனும். மீடியா இருக்கும். எதுவும் கேள்வி வருவது போல் வச்சுகாதீங்க." என அவர் கூற,

"சரி பா" என்றான் ராகவன் உடனடியாக.

அவர் காவியாவை பார்க்க, அவளும் தலையாட்டி வைத்தாள்.

சோபிதா அருள்குமரன் தங்கை.

பாதி நேரம் இங்கேயே தான் இருப்பார்.

அண்ணனுக்கு தப்பாத அகந்தை கொண்டவர்.

அருள்குமரன் சொன்னது போல் விஷ்ணு வீட்டிற்கே அதிகம் வருவதில்லை.

அவன் உலகமே தனி.

அது காவியாவிற்கு ஒரு வகையில் நிம்மதியாக தான் இருந்தது.

அவள் தோழி இந்த கூட்டத்தில் மாட்ட வேண்டி இருக்காதே..!

தங்கள் அறைக்கு வந்தது ராகவனும், தனியாக ஒரு முறை காவியாவிடம் தந்தை கூற்றை நினைவுபடுத்தினான்.

"நாளைக்கு எங்க ஷூட் காவியா..?"

"இங்க சென்னையில் இருக்கும் செட்டில் தான்.."

"ம்ம். ஈவினிங் சொல்லிட்டு வந்துடு.."

"ஓகே ராகவ்" என்றவள் அமைதியாக படுத்துவிட, அவன் போனை எடுத்துக்கொண்டு நகர்ந்து விட்டான்.

*********

மறுநாள் மாலை பங்க்ஷன் தொடங்கும் நேரம் ஆகியும் காவியா வராமல் போக, ராகவன் உடனடியாக அவளுக்கு போனில் அழைத்து விட்டான்.

"இதோ ஷூட் முடிஞ்சுது ராகவ். கிளம்பிட்டேன்.." என காவியா வேகமாக கூற,

"உன்னை சீக்கிரமே கிளம்ப சொன்னேன் தானே காவியா..! இங்க ஆட்கள் வரவே ஆரம்பிச்சுட்டாங்க. வேணும்னே பண்ணுறையா..?" என கோபத்தில் பல்லை கடித்தான் ராகவன்.

"வந்துறேன் ராகவ். வந்துறேன்.." என்று மட்டுமே கூறி அவள் போனை வைக்க, "ச்சை.." என எரிச்சலுடன் முணுமுணுத்து கொண்டு போனை கட் செய்தான் ராகவன்.

நிச்சய பங்க்ஷன் தொடங்கிய பின்பும் காவியா வந்த பாடில்லை.

அருள்குமரன் மகனை முறைத்து கொண்டே தான் இருந்தார்.

ஒருபக்கம் சோபிதா முகத்தை தூக்கிக்கொள்ள, மற்ற பக்கம் மீடியா வேறு இவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையா என செய்தி பரப்ப தொடங்கியது.

சரியாக இரவு பங்க்ஷன் முடியும் நேரம் வந்து சேர்ந்தாள் காவியா.

ஏற்கனவே கோபத்தில் இருந்த ராகவானோ, வெறும் ஜீன்ஸ் டீ ஷர்டில் உயர்த்தி கட்டிய கொண்டையுடன் எந்த மேக்அப்பும் இல்லாமல் வந்து இறங்கியவளை பார்த்து, கொதி நிலைக்கே சென்று விட்டான்.

'எவ்வளவு திமிர் இவளுக்கு!' என அவளை அர்ச்சித்து கொண்டே வந்தவன், அவள் வீட்டுக்குள் நுழைந்த போதே அவள் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்று விட்டான்.

"ட்ராபிக் ராகவ்" என அவள் சத்தமாக கூறியதை அவன் கவனித்தது போலவே தெரியவில்லை.

அதே நேரம் சில மீடியா கேமரா அவர்களை ரகசியமாக தொடர்ந்ததையும், அவன் கவனிக்கவில்லை.

ஹாலை விட்டு சற்றே மறைவாக பின்னால் காவியாவை அழைத்து வந்தவன், அவள் எதுவும் சொல்லும் முன் அவளை ஓங்கி அறைந்து விட்டான்.

"ஹவ் டேர் யு காவியா! வேணும்னே எங்களை அவமானப்படுத்தணும்னு பண்ணிட்டு இருக்கயா..? நானும் அப்பாவும் தெளிவா தான சொன்னோம். எவ்வளவு திமிர் உனக்கு..!" கோபத்துடன் அவன் கர்ஜிக்க, அவளோ எறிந்த கன்னத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்டு அமைதியாக அவனை வெறித்தாள்.

அதற்குள் மகனை கவனித்திருந்த அருள்குமரன், அங்கு வந்து விட்டார்.

"போய் டிரஸ் மாத்திட்டு வா" என காவியாவை பார்த்து கூறியவர், மகன் கையை பிடித்து இழுத்து வந்து விட்டார்.

"அப்பா அவளுக்கு கொழுப்பு அதிகமாகிடுச்சு...!" என அவன் இன்னுமும் கோபம் குறையாமல் துள்ள,

"அதை அடக்க இது நேரம் இல்ல ராகவ். அமைதியா இரு. யார் கண்ணிலாவது பட்டால் குடும்ப மானம் தான் போகும்." என்றார் அவர் மென்குரலில்.

அவர் சொல்வது புரிய, அவனும் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டான்.

தன் அறைக்கு வந்து உடை மாற்றிக்கொண்ட காவியா, தன் கன்னத்தை கண்ணாடியில் பார்த்தாள்.

ராகவனின் விரல்கள் ஐந்தும் அழுத்தமாக பதிந்திருந்தது.

அதை பார்த்து நக்கலாக சிரித்து கொண்டவள், 'செத்தடா நீ!' என நக்கல் குறையாமல் கூறி கொண்டாள்.

தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ப்ரெக்னென்சி கிட்டை எடுத்தவளுக்கு, அதை பார்த்ததும் மேலும் புன்னகை விரிந்தது.

எல்லாம் முடிய போகிறது..!

அடுத்து வர போகும் நாட்களுக்காக அவள் இந்த நொடியில் இருந்தே காத்திருக்க தொடங்கினாள்.

அவள் கண்களில் வன்மத்துடன் நின்றிருக்க, "காவியா.." என்ற சௌமியா குரல் அவள் கவனத்தை கலைத்தது.

முகத்தை வேகமாக முகத்தை மாற்றிக்கொண்டவள், கையில் இருந்ததை ஹேண்ட் பேக்கில் வைத்துவிட்டு திரும்பினாள்.

"வந்துட்டேன்" என்றவள் அவருடன் நடக்க,

"சீக்கிரம் வர கூடாதா மா..! இவங்க கோபத்தை போய் ஏன் மா கொட்டிக்கற..?" கவலையுடன் கேட்டவரை பார்த்து, அவளுக்கு பாவமாக இருந்தது.

"விடுங்க ஆண்ட்டி. இன்னும் எத்தனை நாளைக்கு ஆட போறாங்க..! ஆடும் வரை ஆடி ஓயட்டும்.." என காவியா ஒரு மாதிரி குரலில் கூற, அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்ன சொல்லுற காவியா நீ..?" என அவர் பயத்துடன் கேட்க,

"சீக்கிரமே உங்களுக்கும் விடுதலை கிடைக்கும் ஆண்ட்டி.. இப்போதைக்கு நீங்க தனியா போங்க.." என்றவள், தான் வேறு பக்கம் விலகி சென்று விட்டாள்.

அந்த வீட்டில் இருந்த அனைவருமே அவளிடம் சரியாக பேசாதது, ராகவன் ஒதுக்கம், முக்கியமாக அவள் கன்னத்தில் இருந்த கைதடம் என அனைத்தையும் கேமராக்கள் அமைதியாக உள்வாங்கி கொண்டிருந்தது.

ஒருவழியாக பங்க்ஷன் முடிந்து அனைவரும் கிளம்ப, வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

அருள்குமரன் தங்கை சோபிதா நேரடியாகவே கத்த தொடங்கி விட்டார்.

"இவள் வேணும்னே தான் பண்ணுறா அண்ணா. இங்கீதம் தெரியாதவ..! நம்மை அவமானப்படுத்தணும்னே பண்ணுறா. பிச்சைக்கார குடும்பத்தில் சம்மந்தம் வைக்காதன்னு எவ்வளவு சொன்னேன்! கொஞ்சமாவது கேட்டியா..?" அருள்குமரனிடம் அவர் கத்த, அவரோ ராகவனை முறைத்தார்.

"தப்பு தான் பா பண்ணிட்டேன். ஸ்டேட்டஸ் முக்கியம்னு நீங்க சொன்னப்ப, எனக்கு கொஞ்சமும் புரியல. இப்போ தான் புரியுது.." என்றான் அவனும் எரிச்சலுடன்.

இதெல்லாம் எதிர்பார்த்தே இருந்ததால், காவியா எதற்கும் அசரவில்லை.

யாருக்கு வந்த விருந்தோ என்று தான் நின்றிருந்தாள்.

"இவ்ளோ பேசறோம், உன் பொண்டாட்டி வாயை திறந்து மன்னிப்பாவது கேட்கறாளா பாரு...!" என சோபிதா மீண்டும் தொடங்க,

"அவளுக்கு திமிரு ஷோபி. இவள் இன்னுமும் உனக்கு வேணுமா டா..?" என்றார் அருள்குமரன்.

அவர் கேள்வியில் அதிர்ந்து விழித்தது என்னவோ சௌமியா மட்டும் தான்.

ராகவன் எதுவும் சொல்லும் முன், "என்னங்க பேசறீங்க நீங்க..!" என சௌமியா அதிர்ச்சியுடன் கேட்க,

"அப்பா சொல்லுறதில் எந்த தப்பும் இல்லை. நீங்க சும்மா இருங்க.." என்ற ராகவன்,

"எனக்கும் உனக்கும் இனி ஒத்துவராது காவியா. பேசாமல் டைவர்ஸ் பண்ணிக்கலாம்.." என்றான் தெளிவாக.

"எது! டைவெர்ஸா..! என்ன ஈஸியா சொல்லுறீங்க ராகவ்..?" காவியா குரலில் வெறும் நக்கல் தான் இருந்தது.

அப்போதைக்கு அது யாருக்கும் புரியவில்லை.

"இதில் கஷ்டப்பட்டு சொல்ல என்ன இருக்கு..! உனக்கு வேணும்னா ஒரு அமௌன்ட் செட்டில் பண்ணுறேன். கெட் லாஸ்ட்.." என்றான் அவன் அசால்டாக.

"அண்ணா என்ன பேசிட்டு இருக்க..?" என திடீரென வாசல் பக்கம் கேட்ட குரலில், அனைவருமே அதிர்ந்து திரும்பினர்.

விஷ்ணு தான் நின்றிருந்தான்.

அன்று அதிசயமாக சீக்கிரம் வந்திருந்தவனுக்கு, மொத்த குடும்பமும் பேசி கொண்டிருந்ததை கேட்டு பெரும் அதிர்ச்சி தான்.

அண்ணன் புத்தி தெரிந்து தானே அவன் ஆரம்பத்திலேயே காவியாவை தடுத்தது.

இப்போது அவன் பயந்தது போல் தான் நடக்கிறது...!

"ராகவ் என்ன பேசிட்டு இருக்க நீ..!" என விஷ்ணு கத்த,

"நீ என்ன டா அதிசயமா வீட்டு பக்கம் எல்லாம் வந்திருக்க..?" என்றான் ராகவன் கிண்டலாக.

"வந்ததுனாலா தான உன் லட்சணம் தெரிஞ்சது. இப்போ எதுக்கு டைவர்ஸ் அது இதுனு பேசிட்டு இருக்க..? காவியா மாதிரி ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு கிடைச்சதே அதிர்ஷ்டம். அறிவுகெட்டவனே..!" விஷ்ணு கோபத்துடன் பேச,

"டேய், ரொம்ப ஆடாத டா..! என்ன ஒரேடியா வக்காலத்து வாங்குற..! அவளை பத்தி ரொம்ப தெரியுமோ..! ரொம்ப தான் பழக்கமோ..!" ஒரு மாதிரி இழுத்து ராகவன் கேட்க,

"விஷ்ணு நீங்க பேசாதீங்க" என்றாள் காவியா.

"இல்ல, காவியா இவன்.." என விஷ்ணு ஏதோ சொல்ல வர,

"வேண்டாம் விஷ்ணு. என் மேல் மரியாதை இருந்தால் அமைதியா இருங்க. நான் பார்த்துக்கறேன்.." என அவள் அழுத்தமாக கூற, அவனும் வெறுப்புடன் வாயை மூடி கொண்டான்.

"பாரு டா, அவ சொன்னதும் கேட்கற..! என்ன கருமமோ, எனக்கு தேவையில்லை. ஹேய் காவியா, இனி உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை. நீ கிளம்பு. நான் டைவர்ஸ் அப்பளை பண்ணுறேன்.." என்றான் ராகவன் மீண்டும்.

"அப்படி எல்லாம் நீங்க சொன்னதும் கிளம்ப முடியாது. டைவர்ஸ் கொடுக்க முடியாது." கொஞ்சமும் பதட்டம் இல்லாமல் அவள் கூற,

"டேய் அவளை கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளு டா" என்றார் அருள்குமரன்.

ராகவனும் கொஞ்சமும் யோசிக்காமல் வேகமாக வந்து அவள் கையை பிடித்து இழுக்க, அவளோ அவனுக்கு அதிகம் சிரமம் வைக்காமல் அவனை நக்கலாக பார்த்துக்கொண்டே அவனுடன் நடந்தாள்.

வீட்டு வாசலில் அவளை விட்டவன், "ஒழுங்கா போய் சேறு. இனி உனக்கு இந்த வீட்டில் இடம் கிடையாது." என்றுவிட்டு கதவை சாத்திவிட, அடுத்த நொடி விஷ்ணு வந்து கதவை திறந்தான்.

"நீ வா காவியா.. அவன் கிடக்கறான். நான் பேசிக்கறேன்." என அவன் கூற,

"இல்ல விஷ்ணு. எனக்கு வேற ஒரு ஹெல்ப் வேணும்.."என்றாள் காவியா.

"சொல்லு மா" என விஷ்ணு கேட்க, அவள் தனக்கு தேவையான உதவியை நிதானமாக கூறினாள்.

அவள் கூறியதை கேட்டு விஷ்ணு பெரிதாக அதிர்ந்து தான் போனான்..!

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11:

"காவியா இந்த அளவு போகணுமா மா..?" என விஷ்ணு மெதுவாக கேட்க,

"என்ன விஷ்ணு, அண்ணா பாசமா..?" என்றாள் காவியா.

"ப்ச் அவன் மனுஷனே இல்லைனு எனக்கு தெரியும். உனக்கு இது தேவையான்னு தான் கேக்கறேன்."

"தேவை தான் விஷ்ணு. இன்னும் சிலதும் சொல்லுறேன். முழுசா கேட்டுட்டே போங்க.." என்றவள், தான் ராகவனை திருமணம் செய்து கொண்ட காரணத்தையும் கூறினாள்.

"நியாயமாக பார்த்தால் உங்க அண்ணாவை நான் கொலை தான் பண்ணி இருக்கணும் விஷ்ணு. ஆனால் சாவு என்னும் விடுதலையை கூட அவனுக்கு கொடுக்க நான் விரும்பலை. படட்டும். செஞ்ச தப்புக்கெல்லாம் வட்டியும் மொதலுமா படணும்." அவள் கண்களில் இருந்த வெறியை பார்த்து விஷ்ணுவே ஒரு நொடி பயந்து தான் போனான்.

"சிவா உயிருடன் தான் இருக்கானா..?"

"ம்ம்" என்று மட்டும் காவியா கூற, அதை ஜீரணித்துக்கொள்ளவே விஷ்ணுவிற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

லேசாக கலங்கிவிட்ட கண்களை துடைத்து கொண்டவன், "எல்லாம் சரி தான் காவியா. ஆனால் உன் வாழ்க்கையை ஏன் மா பணயம் வச்ச..? இன்னும் நீ சொல்வதை செய்தால் உன் பெயரும் தான் கெடும் காவியா.." அக்கறையுடன் அவன் கூற, அவளோ விரக்தியாக சிரித்து கொண்டாள்.

"இன்னுமும் என்னிடம் இழக்க என்ன இருக்கு விஷ்ணு. எல்லாம் இழைந்தாச்சு. பேச வேண்டியதை நான் பாத்துக்கறேன். நீங்க என் பக்கம் நின்றால் மட்டும் போதும்." அழுத்தமாக காவியா கூறிவிட, அதற்கு மேல் விஷ்ணு எதுவும் பேசவில்லை.

மேலும் சில நிமிடங்கள் எடுத்து முதலில் தன் மனதை சமன் செய்து கொண்டான்.

"வா காவியா" என விஷ்ணு கூற, அவளும் அவனுடன் நடந்தாள்.

இருவரும் நேராக சென்ற இடம் ஐ.ஜி ஆபிஸ் தான்.

அங்கு விஷ்ணுவிற்கு தெரிந்த மேல் அதிகாரி ஒருவர் இருந்தார்.

அவரிடம் தான் காவியா கம்பளைண்ட் கொடுத்தாள்.

அவள் கம்பளைண்ட் மட்டுமில்லாமல், முழு உண்மையையும் அவரிடம் கூறிவிட்டாள்.

அவருக்கு விஷ்ணுவை நன்றாக தெரியும். ஏன், ராகவன் அருள்குமரன் பற்றியும் அவர் தெரிந்து தான் வைத்திருந்தார்.

"கேஸ் ஸ்ட்ராங்கா இருக்கணும் மா. நீ இடையில் ஏதாவது சொதப்பினால், எல்லாமே மொத்தமா வீணாகிடும்.." என ஐ ஜி ராம்சரண் கூற,

"ஒரு வார்த்தை சொதப்ப மாட்டேன் சார். நீங்க கம்பளைண்ட் எடுத்துக்கோங்க.." என்றாள் அவள் தெளிவாக.

அவர் விஷ்ணுவை பார்க்க, "நானும் சாட்சி சார்" என்றான் அவன்.

"ஓகே. அப்போ நீங்க கிளம்புங்க. நான் உங்க ஏரியா இன்ஸ்பெக்ட்டர் கூட்டிட்டு பின்னாடியே வரேன்." என்று கூறிக்கொண்டே அவர் எழுந்து விட்டார்.

***************

நன்றாக உறங்கி கொண்டிருந்த ராகவன், தன் அறை கதவு வேகமாக தட்டப்பட்டதில் அதிர்ந்து எழுந்து அமர்ந்தான்.

இந்த நேரத்தில் யார் என்று குழம்பியவன், காவியாவாக தான் இருக்கும், கெஞ்சுவாள் என்ற எண்ணத்துடன் அசால்டாக தான் கதவை திறந்தான்.

அங்கு போலீசை பார்த்ததும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"சார் என்ன..?" என அவன் வாயை திறந்த போதே,

"ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வாங்க" என்றார் இன்ஸ்பெக்டர் இரவு உடையில் இருந்தவனை பார்த்து.

அப்போது தான் கீழிருந்து வந்த சத்தத்தையும் அவன் கவனித்தான்.

அவன் தந்தையும் வேறு போலீசுடன் வாதிட்டு கொண்டிருந்தார்.

அதை பார்த்தவன் வேகமாக உடையை மாற்றி கொண்டு கீழே வந்தான்.

"அவ என்ன வேணும்னாலும் சொல்லுவா..! அதுக்காக எங்களை அர்ரெஸ்ட் பண்ணனும்னு வந்து நிப்பீங்களா...?" என அருள்குமரன் கத்திக்கொண்டிருக்க,

"அது எங்க கடமை சார். உங்க மகன் உங்க மருமகளை அடிச்ச ஆதாரம் இருக்கு. நீங்க எல்லாரும் அவங்களை மதிக்காமல் நடத்தியதை ஊரே பாத்திருக்கு. அதெல்லாம் உண்மை என்னும் போது, அவங்க கொடுத்த காம்ப்ளைன்ட்டும் உண்மையா தான் இருக்கும். ஒழுங்கா நீங்களே வந்துருங்க. இழுத்துட்டு போக வச்சுராதீங்க.." ராம்சரண் சொல்லி கொண்டிருந்த போதே, வெளியே வேறு சலசலப்பு கேட்டது.

மீடியா தான் வந்திருந்தனர்.

"மீடியாக்கு எப்படி அதுக்குள்ள நியூஸ் போச்சு..?" என அருள்குமரன் அதிர,

"இதை நீங்க மருமகளை துரத்தும் முன் யோசிச்சிருக்கணும் மிஸ்டர்.." என்றார் ராம்சரண்.

வெளியில் காவியா முன் பலர் நின்றிருந்தனர்.

"என்ன ஆச்சு மேடம்..?"

"ஏன் உங்க வீட்டில் போலீஸ் இருக்காங்க..?"

"நீங்க ஏன் வெளியில் நிக்கறீங்க..?"

"இங்க என்ன நடக்குது..?"

"உங்களை அடிச்சதுக்கு கம்பளைண்ட் கொடுத்தீங்களா..?" என வரிசையாக கேள்விகள் கேட்கப்பட,

"கொஞ்சம் நிதானமா இருந்தீங்கன்னா முழுசா சொல்லுறேன்" என்றாள் காவியா.

அதே நேரம் அனைத்தையும் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்த ராகவன், "என்ன கம்பளைண்ட்..?" என ராம்சரண் பக்கம் திரும்பி கேட்க,

"நீங்க அவங்களை கட்டாயப்படுத்தி வாழ்ந்ததா கம்பளைண்ட் பண்ணி இருக்காங்க. அவங்க இப்போ ப்ரெக்னன்ட். கர்ப்பமா இருக்கும் நேரத்தில் அடிச்சு கொடுமை பண்ணி இருக்கீங்க. உங்களை சும்மா விடுவாங்களா..?" கோபத்துடன் ராம்சரண் கூற, ராகவன் மேலும் அதிர்ந்து போனான்.

அதே விஷயத்தை தான் காவியா விரிவாக வெளியில் கூறினாள்.

"எங்களுடையது காதல் கல்யாணம் தான். ராகவனுக்கு இருந்தது வெறும் உடல் ஆசை தான் என்று தெரியாமல் ஏமாந்துட்டேன். என்னை பிசிக்கலா அபியுஸ் பண்ணினான். என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. இப்போ நான் ரெண்டு உயிர். இனி இவன்கிட்ட அவஸ்தைப்பட முடியாது. அதான் கம்பளைண்ட் பண்ணிட்டேன். டைவர்ஸ்சம் பண்ண போறேன். இவனை சும்மா விட மாட்டேன்.." என அவள் தெளிவாக கூற, அவள் கூறியதில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

ராகவன் அவளிடம் கோபமாக நடந்து கொண்டதை தான் அனைவரும் பார்த்திருந்தனரே..!

"இப்போ என்னை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்க. நான் ஏன் சும்மா போகணும்..!" கண்களில் கக்கிய கனலுடன் அவள் நிறுத்த, 'சும்மா போக தான் கூடாது' என மீடியாவிலேயே இருந்த பெண்கள் சிலர் முணுமுணுத்தனர்.

அதுவரை அதிர்ச்சியில் நின்றிருந்த ராகவன், யாரும் எதிர்பார்க்காத நொடி வேகமாக காவியா அருகில் வந்து அவள் கையை அழுத்தமாக பிடித்து தன் பக்கம் திருப்பினான்.

"நான் உன்னை ரேப் பண்ணினேனா டி..?" என அவன் கோபத்துடன் கேட்க,

"நீ ஒன்னும் காதலில் உருகலை ராகவ். இதே பழியை எந்த தப்பும் பண்ணாதவன் மீது போட்ட போது இனிச்சதா..!" என்றாள் காவியா மென்குரலில்.

அவள் சொல்ல வருவது புரிந்து ராகவன் கை மெதுவாக தளர்ந்தது.

"சிவதேவ்" என அவன் முணுமுணுக்க, "என் தேவ் டா" என்றாள் அவள் அழுத்தமாக.

அடுத்த நொடி போலீஸ் வந்து ராகவனை இழுத்து சென்று விட, "ஏய்! உன்னை சும்மா விட மாட்டேன் டி.." என அவன் கத்திகொண்டே போனதும் தெளிவாக பதிவானது.

காவியாவிற்கு சிரமமே வைக்காமல் அவன் அரெஸ்ட் ஆகி சென்று விட்டான்..

*********

அந்த இரவு பெரும் களேபரமாக தான் சென்றது.

அருள்குமரன் வக்கீல் ஒரு பக்கம் ஸ்டேஷனுக்கு செல்ல, விஷ்ணுவும் ஒரு பிரபல வக்கீலை காவியாவிற்கு சாதகமாக ஏற்பாடு செய்தான்.

மீடியாவிடம் பேசி அனுப்பிவிட்டு காவியா திரும்பிய போது, சௌமியா மருமகளிடம் வந்தார்.

"ஏன் இப்படி பண்ணின காவியா..?" என அவர் வெறுமையாக கேட்க, அவரிடமும் மறைக்காமல் காவியா அனைத்தும் கூறி விட்டாள்.

"இவங்களை இப்படியே விட்டு வைத்தால் இன்னும் என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க மா.." என விஷ்ணுவும் சேர்ந்து கூறினான்.

மகன் கணவனை பற்றி அவருக்கு ஓரளவிற்கு தெரியும் தான். ஆனால் கொலைக்கு கூட அஞ்சாத பாவிகள் என்று இப்போது தானே தெரிகிறது..!

"உங்களுக்கு நானும் மகன் தான் மா..! நான் போதாதா..?" என விஷ்ணு கேட்க,

"போதும் டா. அவங்க ஆட்டம் ஒரு முடிவுக்கு வரட்டும்.." என மகனை அணைத்துக்கொண்டார் சௌமியா.

விஷ்ணுவும் அவரை ஆறுதலாக அனைத்து கொண்டான்.

"வீட்டில் வந்து யார் கேள்வி கேட்டாலும், எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லுங்க மா.. சுகந்திக்கு போன் பண்ணி இருக்கேன். அவ இப்போ வந்துடுவா. உங்க கூட இருப்பா. நாங்க ஸ்டேஷன் போகணும். ஏதாவது பிரெச்சனைனா உடனே கூப்பிடுங்க.." என்றான் விஷ்ணு.

அவன் பேசி முடிக்கும் போதே சுகந்தி வந்து விட்டாள்.

நேராக காவியா அருகில் வந்தவள், "ஏன் டி இப்படி பண்ணின..?" என கோபமும் கவலையுமாக கேட்க,

"எல்லாம் சொல்லுறேன் சுகி. இப்போ ஆண்ட்டி கூட இரு. உனக்கு புதுசா சொல்ல ஒன்னும் இல்லை. இப்போ போகணும் டி.." என்றாள் காவியா அமர்தலாக.

"சிவா அண்ணா இருக்கும் போது நீ இதை பண்ணி இருக்க வேண்டாம் கவி..!" ஆற்றாமையுடம் சுகந்தி கூற,

"அவன் நல்லதுக்கு தான் டி செய்தேன்.." என்றாள் காவியா.

"நாங்க போய்ட்டு வரோம் சுகா. வந்து பேசிக்கலாம்.." என்ற விஷ்ணு காவியாவை அழைத்துக்கொண்டு சென்று விட்டான்.

இருவரும் ஸ்டேஷன் வந்த போது, அங்கு ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.

ஐ.ஜி ராம்சரண் ராகவன் அருள்குமரனை விட முடியாது என்று தெளிவாக இருந்ததால் மட்டும் தான், அங்கு அவர்களை பிடித்து வைக்க முடிந்தது.

அருள்குமரன் மீதும் தன்னை கொடுமைப்படுத்தியதாக காவியா கேஸ் கொடுத்திருந்தாள்.

அதே நேரம், வரதட்சணை கொடுமை என்றும் கேஸ் கொடுத்திருந்தாள்.

திருமணத்திற்காக அவள் ஏற்கனவே ஒரு பெரும் பணத்தை அருள்குமரனுக்கு அனுப்பி இருந்தாள்.

அது சாட்சியாக அமைந்து போனது.

எந்த வகையிலும் அவர்கள் தப்பிக்க கூடாது என பார்த்து பார்த்து அல்லவா அவள் செய்திருந்தாள்..!

'விசாரணைக்கு இருந்து தான் ஆக வேண்டும். அனுப்ப முடியாது' என ஒரே முடிவாக ஸ்டேஷனில் கூறி விட்டதால், வேறு வழி இல்லாமல் ராகவனும் அருள்குமரனும் அங்கு இருந்தனர்.

அவர்கள் வக்கீல் மறுநாள் கட்டாயம் ஜாமீன் வாங்கி விடுவதாக வாக்கு கொடுத்தார்.

"இவங்களுக்கு ஜாமீன் கிடைக்க கூடாது சார்" என காவியா தன் வக்கீலிடம் கூற,

"கிடைக்காது மேடம். அபியுஸ் கேஸ் அப்படி எல்லாம் விட மாட்டாங்க. நான் பார்த்துக்கறேன்.." என்றார் அவரும் தெளிவாக.

விஷ்ணுவிற்கு தெரிந்தவர் என்பதால், விஷ்ணு அவரிடம் தெளிவாகவே நிலையை கூறி இருந்தான்.

கிட்டத்தட்ட விடியற் காலையில் தான் விஷ்ணுவும் காவியாவும் கிளம்பினர்.

"என் வீட்டுக்கு போய்டலாம் விஷ்ணு. என்னை அங்கே விட்டுட்டு, நீங்க போய் ஆண்ட்டி சுகியையும் கூட்டிட்டு அந்த வீட்டை பூட்டிட்டு வந்துடுங்க. அங்க யாரும் இப்போதைக்கு இருக்க வேண்டாம். ஒரு ரெண்டு நாள் இங்கேயே இருக்கலாம். அதான் சேப்டி.." என காவியா கூற,

"சரி மா" என்றவன், அவளை அவள் வீட்டில் விட்டான்.

அந்த நேரத்தில் அவளை எதிர்பார்க்காமல் ராஜலக்ஷ்மியும் அதிர்ந்து தான் போனார்.

அவரிடம் காவியா நிதானமாக தான் எல்லாம் கூறினாள்.

"எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது டி. அதுக்காக இவ்வளவு தூரம் இறங்கணுமா..? என்னவோ போ..!" என அவரும் கவலைகொள்ள, காவியா அவரையும் சமாதானம் செய்தாள்.

சிறிது நேரத்தில் விஷ்ணு அனைவரையும் அங்கு அழைத்து வந்து விட்டான்.

இடையில் அருள்குமரன் தங்கை ஷோபிதா ஒரு கலாட்டா செய்திருந்தார். அவரையும் மற்ற சொந்தங்களையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் விஷ்ணு வந்தான்.

அதற்கு மேல் எங்கிருந்து தூங்க..!

ஆளுக்கொரு பக்கம் விழித்து தான் அமர்ந்திருந்தனர்.

ராஜலக்ஷ்மி சௌமியா இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசிக்கொள்ள, சுகந்தி காவியாவுடன் இருந்தாள்.

சிவதேவ் பற்றி காவியா சுகந்தி விஷ்ணுவிடம் அப்போது தான் மெதுவாக கூறினாள்.

"எனக்கு சிவாவை பாக்கணும் காவியா" என விஷ்ணு கூற,

"ம்ம். அவ்வளவு தான் விஷ்ணு. எல்லாம் முடிஞ்சது. அந்த ராகவனுக்கு அருள்குமரனுக்கும் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்கட்டும். அப்புறம் தேவ்வை வர சொல்லிடலாம். அவன் விட்ட இடம் அவனுக்காக காத்துட்டு இருக்கு. அவன் தான் வரணும். அவனுக்கு இனிமே நல்லது மட்டும் தான் நடக்கும். நல்லா இருப்பான்." மெலிதாகி போன குரலில் காவியா கூற,

"உன் வாழ்க்கை டி..!" என்றாள் சுகந்தி கவலையுடன்.

"ஒரு சின்ன வேலை பார்த்திருக்கேன் சுகி. அங்க போக போறேன். நானும் அம்மாவும் என் குழந்தையும் மட்டும். வேற யாரும் வேண்டாம்.." என்றாள் காவியா.

"சிவா உன்னை விட மாட்டார் கவி..", சுகந்தி

"பழைய தேவ் இல்ல டி. அவருக்கு ஞாபகம் வந்து என்னை கேட்டால், எங்க போனேனு தெரியலைனு சொல்லிடுங்க.."

சுகந்திக்கும் விஷ்ணுவிற்கும் என்ன சொல்வதென்று ஒன்றும் புரியவில்லை.

காவியாவிற்கு தெரியாத ஒரே ஒரு விஷயம், சிவதேவ்வின் தற்போதைய நிலை.

அவள் நினைப்பது நடக்குமா..? அவவளவன் வருவானா..? மாற்றங்கள் வந்து வாழ்வு மாறுமா..?

அனைத்தும் விதியின் கையில்.

இளைப்பாறும்..


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12:

மறுநாள் கேஸ் கோர்ட்டுக்கு வந்து விட்டது.

விசாரணையில் இவர்கள் மேல் சந்தேகம் இருப்பதாக ராம்சரண் தெளிவாக கூறினார்.

மற்றொரு பக்கம் காவியா கொடுத்த சாட்சிகள் வேறு இருக்க, ராகவன் அருள்குமரன் இருவருக்குமே ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

குற்றம் நிரூபணமானால், தண்டனை தான் என்று கூறி விட்டனர்.

விசாரணைக்கு என்று ஒதுக்கப்பட்ட நாட்களில் ராகவனும், அருள்குமரனும் போலீஸ் கஸ்டெடியில் தான் இருக்க வேண்டும் என்று கோர்ட் கூறி விட்டது.

அருள்குமரன் வாரி இறைத்த பணம் முழுவதும் வீணாக தான் போனது.

காவியா பக்கம் அனைத்து ஆதாரங்களும் வலுவாக இருந்தது.

இன்னுமும் வக்கீல் கேட்ட ஆதாரங்களும் அவள் புரட்டி கொடுத்தாள்.

முதல் முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ராகவன் அடிக்க வந்தது, பங்கஷனில் அடித்தே விட்டது மட்டுமில்லாமல், பங்க்ஷன் முடிந்து அவளை பார்த்துக்கொள்ளலாம் என அருள்குமரன் பேசியதெல்லாம் வீடியோ ஆதரமாகவே கிடைத்தது.

அவளை வீட்டை விட்டு துரத்தியதற்கு விஷ்ணுவே சாட்சி.

அவனுக்கு தெரிந்து அவர்கள் செய்த சில ஏமாற்று வேலையும் அவன் கூறினான்.

முக்கியமாக காவியா கர்ப்பமாக இருந்ததும், அவளை ராகவன் கட்டாயப்படுத்தியதாக அவள் கூறியதும், அவர்களை ரீலிஸ் பண்ணாமல் இருக்க பெரிய காரணமாகி போனது.

ஒருவாறு எல்லாம் முடிந்தாலும், இன்னும் தண்டனை முடிவாகாததால் அனைவரும் கவனமாக தான் இருந்தனர்.

*************

அன்று காலை சொக்கன் கொண்டு வந்து கொடுத்த பேப்பரை சிவதேவ் மாலையில் தான் எடுத்து புரட்டினான்.

சாதாரணமாக பார்த்து கொண்டு வந்தவன், காவியா ராகவன் படங்களை பார்த்ததும் அந்த நியூஸ்ஸை கவனமாக படித்தான்.

படிக்க படிக்க அவன் முகன் இறுகி போயிற்று.

அவன் பயந்தது போலவே அல்லவா நடந்து தொலைத்திருந்தது.

'எனக்கு சரியே ஆகாதுன்னு முடிவு பண்ணிட்டா போல் ராட்சசி!' என மனதில் தன்னவளை திட்டிகொண்டவன், சில நொடிகள் எடுத்து ஒரு தெளிவான முடிவெடுத்தான்.

நேராக வனராஜனிடம் வந்தவன், "சார் நான் கிளம்பறேன்" என்று கூறிவைக்க,

"எங்க போற சிவா..? காவியா இன்னும் எதுவும் சொல்லலையே..!" என்றார் அவர் புரியாமல்.

தன் கையில் இருந்த பேப்பரை அவரிடம் கொடுத்தவன், "இதை படிங்க" என்றான்.

அதை வாங்கி படித்துவரும், அதிர்ந்து தான் அவனை பார்த்தார்.

"நான் நினைச்சது தான் சார் நடந்திருக்கு. நான் போகணும்.." என அவன் மீண்டும் கூற,

"எதுக்கும் காவியா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே சிவா..!" என்றார் அவர் தயக்கத்துடன்.

"நான் பாத்துக்கறேன் சார்" என்றவன் திரும்பி நடக்க தொடங்கி விட்டான்.

நந்தினியும் அங்கு தான் இருந்தாள்.

அவளிடம் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவள் தான் வேகமாக அவன் பின்னால் வந்தாள்.

"சிவா உங்களுக்கு எதுவும் ஆபத்து...!" என அவள் இழுக்க,

"இன்னொரு முறை நான் சாகக்கிடந்து நீ பார்த்தால் கூட, என்னை காப்பாத்திடாத..! அது தான் நீ எனக்கு செய்ய கூடிய பெரிய உதவியா இருக்கும்.." என்றவன், அதற்கு மேல் நிற்காமல் வேகமாக சென்று விட்டான்.

அவன் வாழ்வின் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள போகிறான்.

அதற்கு அடிப்படை காரணமாக அமைந்தவளை கொஞ்சும் அளவு அவனுக்கு பெரிய மனது இருக்கவில்லை.

************

பர்வதம் அப்போது தான் காலை டிபனை முடித்துக்கொண்டு
ஓய்வாக அமர்ந்திருந்தார்.

ரங்கநாதன் பாத்திரங்கள் தேய்த்து மனைவிக்கு உதவி கொண்டிருந்தார்.

வாசல் கதவு தட்டுப்பட, பர்வதம் தான் வந்து திறந்தார்.

வாசலில் நின்றிருந்தவனை பார்த்து, அவருக்கு மயக்கம் வராத குறை தான்.

"அம்மா" என சிவதேவ் அழைக்க, அவரோ கண்சிமிட்ட கூட மறந்து மகனை பார்த்து கொண்டிருந்தான்.

எங்கே கண்ணை சிமிட்டிவிட்டால் மறைந்து விடுவான் என்று பயந்தார் போல்..!

"அம்மா..." என சிவதேவ் அவரை உலுக்க, "சி... சிவா" என திணறியவருக்கு, அதற்கு மேல் வார்த்தைகளே வரவில்லை.

மகனை வெறிக்க வெறிக்க பார்த்தவர், ஒரு கட்டத்திற்கு மேல் அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விட, சிவதேவ் அவர் கீழே விழுந்து விடாமல் பிடித்து கொண்டான்.

"யாரு பர்வதம்..?" என கேட்டுக்கொண்டே வந்த ரங்கநாதனும், மகனை பார்த்து ஒரு நொடி பெரிதாக அதிர்ந்து தான் போனார்.

"சிவா.." என அவரும் ஒன்றும் புரியாமல் திணற,

"உள்ள வாங்க பா" என்றவன், அன்னையை தூக்கி வந்து சோபாவில் படுக்க வைத்தான்.

மகன் பின்னால் மந்திரித்து விட்டது போல் நடந்துவரும், நடப்பதெல்லாம் கனவு தான் என திடமாக நம்பினார்.

தன் படத்திற்கு மாலை போட்டிருப்பதை பார்த்தவனுக்கு, பெற்றோரின் அதிர்ச்சி புரிந்தது.

தானே உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்தவன், பர்வதம் முகத்தில் வேகமாக தெளித்தான்.

அவன் தண்ணீரை தெளித்த வேகத்தில் அவரும் கண் விழித்தார்.

கையில் சொம்புடன் நின்ற மகனை பார்த்து, அவருக்கு மீண்டும் மயக்கம் வரும் போல் இருந்தது.

"சிவா.." என அவன் முகத்தை தொட்டு பார்த்தவர், தன் அருகில் அமர்ந்தவனை வேகமாக அணைத்து கொண்டார்.

கனவோ! நினைவோ! இது கலைவதை அவர் விரும்பவில்லை.

அவனும் அன்னையை ஆறுதலாக அணைத்து கொண்டான்.

"நான் செத்துட்டேன்னு சொல்லிட்டாங்களா பா..?" என ரங்கநாதனை பார்த்து அவன் கேட்க, அவனையே பார்த்து கொண்டிருந்தவர், அவன் குரலில் ஒருவாறு இந்த உலகிற்கு வந்தார்.

"அப்போ இது காணவில்லையா சிவா..!" என அவர் நொடியில் கலங்கிவிட்ட கண்களுடன் கேட்க,

"இல்ல பா" என்றான் அவன் தெளிவாக.

"என்னை கொல்ல முயற்சி நடந்தது வரை உண்மனை தான். ஆனால் நான் சாகலை. என்னுடைய யூகம் சரினா, காவியா என்னை காப்பாத்தி யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கணும். உங்ககிட்ட சொல்லி, உங்க மூலமா வெளியில் தெரிந்தால் கூட மீண்டும் என் உயிருக்கு ஆபத்து வரலாம்னு சொல்லாமல் விட்டிருப்பா.."

"அப்போ அந்த உடல்! உன் டிரஸ் செயின் எல்லாம் இருந்ததே..! உன்னை போலவே உடல் கூட..!" ரங்கநாதன் திணற,

"எல்லாமே காவியா தான் பா பண்ணி இருக்கணும். நான் செத்துட்டேன்னு தெரிஞ்சா தான் என்னை தேட மாட்டாங்கன்னு பண்ணி இருப்பா." அவள் மனதை படித்தது போல் அவன் அனைத்தும் கூறினான்.

அவனுக்கு அவளை தெரியாதா என்ன..!

"சிவா.." என்ற பர்வதம் அழைப்பில் அவன் இப்போது அன்னை புறம் குனிந்தான்.

"இந்த கனவில் இருந்து என்னை எழுப்பவே எழுப்பாத சிவா." என்றவர் மகனுடன் மேலும் ஒன்ற,

"கனவில்லை பாரு.. எப்படி உங்களை நம்பவைக்கலாம்..?" என யோசித்தவன், அவர் கையை வலிக்காமல் கிள்ளினான்.

அவன் அழைப்பு ஒருவாறு அவருக்கு சூழ்நிலையை உணர்த்தியது.

அவர் கணவனை, "பார்க்க நிஜம் தான் மா" என்றவர் மகனின் மற்றொரு பக்கம் அமர்ந்தார்.

"எங்ககிட்ட ஏன் டா மறைக்கணும்..! மனசளவில் செத்தே போய்ட்டோம் டா..!" என்றவர், தானும் ஒரு பக்கம் மகனை அணைத்துக்கொண்டார்.

பெரியவர்கள் இருவரும் நடப்பதை தாங்க முடியாமல் கதறிவிட, அவனும் கலங்கிய கண்களுடன் அவர்களை அணைத்து கொண்டான்.

மூவருமே சமாதானம் அடைய சிறிது நேரம் ஆனது.

ஒருவாறு ரங்கநாதன் தான் முதலில் சற்றே சமாதானம் அடைந்தார்.

"என்ன தான் நடந்தது சிவா...?" என அவர் கேட்க, அவனும் தனக்கு தெரிந்தவரை எல்லாம் கூறினான்.

அவன் கூறி முடித்ததுமே, "ஐயோ! அந்த ராகவனை தான் காவியா கல்யாணம் பண்ணி இருக்கா சிவா.." என பதட்டத்துடன் பர்வதம் கூற,

"உங்க போன் கொடுங்க பா" என்றான் சிவதேவ்.

அவரும் தன் போனை எடுத்து கொடுக்க, அதில் அன்றைய செய்தியை சிவதேவ் இருவரிடமும் காட்டினான்.

இருவரும் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்துவிட்டு அதை வாசித்தனர்.

"கடவுளே! இந்த ராகவன் இவ்வளவு மோசமானவனா..! காவியா பாவம். அவளை பார்க்கணும்.." என பர்வதம் கவலையுடன் கூற, ரங்கநாதன் சில நொடிகள் அமைதியாக ஏதோ யோசித்தார்.

"காவியாவும் நீயும் விரும்பினீங்களா சிவா..?" என அவர் யோசனையுடன் கேட்க, தந்தை புரிந்துணர்வில் எப்போதும் போல் அவன் மனம் நெகிழ்ந்து போனது.

"ம்ம்" என்று மட்டும் அவன் கூறியதில், மற்ற இருவருக்குமே ஓரளவு விஷயம் புரிந்து போனது.

"காவியாவை கூட்டிட்டு வந்துடு சிவா" என ரங்கநாதன் உடனடியாக கூற, "தேங்க்ஸ் பா" என தந்தை கையை அழுத்தமாக பிடித்து கொண்டான் சிவதேவ்.

அவள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும், அவர்கள் புரிந்து ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பது பெரிய விஷயம் அல்லவா..!

"முதலில் அந்த ராகவன் அருள்குமரனுக்கு ஒரு முடிவு கட்டுறேன் பா. அப்புறம் ஸ்ரீகிட்ட பொறுமையா பேசிக்கலாம். இப்போ நான் போகணும் பா.." என்றவன் எழுந்துவிட,

"இரு டா. நாளைக்கு இதெல்லாம் பார்க்க கூடாதா..! இன்னிக்கு ஒரு நாள் எங்களுடன் இரேன்.." என்றார் பர்வதம் பாவமாக.

"முடிஞ்சவரை நைட் வரேன் மா. எப்படியும் ராகவன், அருள்குமரனை விசாரணைக்கு அனுப்பி இருப்பாங்க. அவனுங்க வெளியில் வரவே கூடாது. லேட் பண்ணாமல் பண்ணனும் மா. எனக்கு யாராவது ஒருத்தர் போன் கொடுங்க.." என சிவதேவ் கேட்க, ரங்கநாதன் தன் போனை கொடுத்தார்.

"ஒரு வாய் சாப்பிட்டுட்டு போ டா" என பர்வதம் கெஞ்சலாக கேட்க,

"கொண்டு வாங்க மா" என்றான் சிவதேவ்.

அவரும் வேகமாக சென்று சாதத்தை கலந்து எடுத்து வந்தார்.

அவர் ஊட்ட, அவனும் அமைதியாக வாங்கி கொண்டான்.

"நானும் வரவா சிவா..?" என ரங்கநாதன் கேட்க,

"வேண்டாம் பா. அலையனும். நீங்க ரெண்டு பேருமே ஹெல்த்தியா இருக்கற மாதிரி தெரியல. ரெஸ்ட் எடுங்க. நான் வந்துருவேன். எனக்கும் போக மனசில்லை பா. ஆனால் வேற வழி இல்லை. ஸ்ரீயோட தாயகம் வீணாகிட கூடாது."

அவன் சொல்வது புரிந்து, அவரும் அமைதியாகி விட்டார்.

தன் கார் சாவியை எடுத்து கொண்ட சிவதேவ், காவியாவிற்கு போனில் அழைத்தான்.

நந்தினி போனில் இருந்து காவியா நம்பரை குறித்து கொண்டு தான் கிளம்பி இருந்தான்.

அப்போது தான் வெளியில் சென்று இருந்து வந்திருந்தவள், தன் வீட்டு ஹாலில் தான் அமர்ந்திருந்தாள்.

ரங்கநாதன் நம்பரில் இருந்து கால் வரவும், அவர் விசாரிக்க அழைக்கிறார் என்று நினைத்து தான் காவியா போனை எடுத்தாள்.

"சொல்லுங்க அங்கிள்" என அவள் தொடங்க,

"எங்க இருக்க ஸ்ரீ..?" என்றான் சிவதேவ்.

அவன் குரலிலும், பிரத்யேக அழைப்பிலும் அவளுக்கு தூக்கிவாரி போட்டது..

இளைப்பாறும்.


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 13:

காவியா பதிலே சொல்லாமல் அதிர்ச்சியுடன் நின்று விட, "எங்க இருக்கன்னு கேட்டேன் ஸ்ரீ..?" என்றான் சிவதேவ் மீண்டும்.

"எ.. என் வீட்டில்.." என அவள் திக்கி திணறி கூற,

"விஷ்ணு இருக்கானா..?" என அடுத்த கேள்வி வந்தது.

அவன் பேசியதெல்லாம் ஒருவாறு தலைக்குள் ஏற, "உனக்கு சரி ஆகிடுச்சா..?" என்றாள் காவியா அதிர்ச்சியுடன்.

"ம்ம். விஷ்ணு இருந்தால் போனை கொடு.." என சிவதேவ் தொடர்ந்து கூற, அவளுக்கு அதீத அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை.

இதை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லையே..!

அவனுக்கு எப்படி சரி ஆகும்..! சரியாவது கஷ்டம் என்று தங்கராஜ் சொல்லி இருந்தாரே..!

யோசித்துக்கொண்டே நகர்ந்தவள், போனை விஷ்ணுவிடம் நீட்ட, "யாரு மா" என்று கேட்டுக்கொண்டே போனை வாங்கினான் அவன்.

"தேவ்" என்று மட்டும் கூறியவள் அங்கு நிற்காமல் நகர்ந்து விட, விஷ்ணு அவளை பார்த்துக்கொண்டே போனை காதில் வைத்தான்.

"நான் அங்க வரேன் விஷ்ணு. வீட்டிலேயே இரு. உன் கிட்ட பேசணும்.." இறுக்கமாக ஒலித்த நண்பன் குரலை உள்வாங்க விஷ்ணுவிற்கும் சில நிமிடங்கள் பிடித்தது.

"எப்படி இருக்க சிவா..? உனக்கு சரி ஆகிடுச்சா டா..?" நெகிழ்வுடன் விஷ்ணு கேட்க,

"ஆகி தொலைஞ்சிருச்சு. வரேன் வை.." என எரிச்சலுடன் கூறிவிட்டு
தான் சிவதேவ் போனை வைத்தான்.

விஷ்ணு அவன் கோபத்தை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இறந்துவிட்டான் என நினைத்து கொண்டிருந்த நண்பன், உயிருடன் இருந்ததே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

காவியா வேகமாக தன் அறைக்குள் வந்துவிட்டாள்.

அவளால் சுத்தமாக தன் நிலையை கட்டுப்படுத்த முடியவில்லை.

கதவை மூடி கொண்டு அதில் சாய்ந்து நின்றவளுக்கு, அதிர்ச்சியில் மனம் எல்லாம் அடைத்துவிட்டது போல் இருந்தது.

அவள் நினைத்தது என்ன! இங்கு நடந்துகொண்டிருப்பது என்ன..!

சிவதேவிற்கு அதற்குள் நினைவுகள் மீண்டதே அதிர்ச்சி என்றால், இந்த சூழலில் அவன் வந்து நின்றது மற்றொரு அதிர்ச்சி.

எப்படி அவன் முகத்தில் விழிக்க போகிறாள்..! அவளை பற்றி என்ன நினைப்பான்..! மனம் எல்லாம் அவளுக்கு படபடவென்று அடித்துக்கொண்டது.

ஏதோ தோன்ற, வேகமாக தன் போனை தேடினாள்.

அதை விஷ்ணுவிடம் கொடுத்தது நினைவு வர, கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தவள், விஷ்ணு டேபிளில் வைத்திருந்த போனை வேகமாக எடுத்தாள்.

"காவியா" என விஷ்ணு ஏதோ சொல்ல வர, அதை வாங்காமல் மீண்டும் தன் அறைக்கு வந்து கதவை சாத்தி விட்டாள்.

அவள் நிலை விஷ்ணுவிற்கு புரிந்தது.

சுகந்தியும் காவியாவை பார்த்து கொண்டே, அப்போது தான் சமையல் அறையில் இருந்து வந்தாள்.

"ஏன் என்னவோ மாதிரி போறா விஷு...?" என அவள் கேட்க, விஷ்ணு சிவதேவ் பேசியதை கூறினான்.

"அவருக்கு சரியாகிடுச்சா..! கடவுளே, இவ அதுக்குள்ள என்ன என்னவோ சொன்னாளே விஷு..!" என சுகந்தியும் பதற,

"ம்ம். நாம நினைப்பதெல்லாம் நடந்துட்டா, அப்புறம் கடவுள் எதுக்கு..!" என்றான் விஷ்ணுவும் கவலையுடன்.

மீண்டும் அறைக்குள் வந்து கதவை அடைத்துக்கொண்ட காவியா, தங்கராஜுக்கு தான் அழைத்தாள்.

"சார் தேவ்க்கு சரியாவது கஷ்டம்னு சொன்னீங்க தானே..? இப்போ சரியாகிடுச்சு. எப்படி ஆகி இருக்கும்..? ஏன் உங்களால் சரியா சொல்ல முடியல..?" அவள் படபடவென பொரிந்து தள்ள,

"பொறுமை. பொறுமை மா. சிவதேவ்க்கு இருந்தது மறதி. அதை எல்லாம் நூறுசதவீகிதம் சரியாகும், ஆகாதுன்னு யாராலும் சொல்ல முடியாது. நானும் ஆகாதுன்னு சொல்லவே இல்லையே..! நான் பார்த்தவரை அவர் மனநிலை மாறும் சாத்தியதுடன் இல்லை. மே பீ, ஏதாவது சம்பவத்தில் நினைவு வந்திருக்கலாம். ஏதோ ஒரு விஷயம் நினைவு வந்து, ஒன்றன் பின் ஒன்றா கூட நினைவு வந்திருக்கலாம். இது என்ன வெளி காயமா மா, சரியா தேதி சொல்ல..!" அவர் நிதானமாக எடுத்து கூற, எல்லாம் புரிந்தாலும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவருக்கு பதிலே சொல்லாமல் போனை அனைத்து தூக்கி எறிந்தவள், அப்படியே சரிந்து அமர்ந்து விட்டாள்.

அடுத்து என்னவென்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் உயிரானவனுடன் சேர முடியாத நிலையில் மாட்டிக்கொண்டாளே..!

ஏற்கனவே இருந்த நிலை தான். அப்போது அவன் நிம்மதியாக இருப்பான் என்ற ஒரு ஆறுதலாவது இருந்தது. இப்போது அதுவும் இல்லாமல் போய்விடாதே..!

உள்ளுக்குள் இருந்து ஓவென அழுகை வர, சத்தம் வராமல் கதறி அழுதுவிட்டாள் காவியா.

தலையை அழுந்த பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தவள் மனம், பல குழப்பத்திற்கு பின் மெதுவாக நிதானமடைந்தது.

அவளால் அழுது கொண்டு அமர்ந்திருக்க முடியாது.

எந்த நேரம் என்றாலும் சிவதேவ் வந்துவிடுவான். அதற்குள் சரியாக வேண்டும்.

ஊசி வைத்து குத்துவது போல் வலித்துக்கொண்டிருந்த மனதை முயன்று ஓரம் காட்டியவள், முகத்தை துடைத்து கொண்டு எழுந்தாள்.

தண்ணீர் அடித்து நன்றாக முகத்தை அலம்பிக்கொண்டு அவள் வெளியில் வர, விஷ்ணுவும் சுகந்தியும் ஏற்கனவே அவளுக்காக காத்திருந்தனர்.

"கவி.." என சுகந்தி காவியா பக்கத்தில் வர, காவியாவும் சுகந்தியை அணைத்து கொண்டாள்.

அவளுக்கும் தோள் சாய ஒரு ஆறுதல் தேவைப்பட்டது.

"சிவா அண்ணா புரிஞ்சுப்பாரு டி" என அவள் முதுகை நீவி கொண்டே சுகந்தி கூற,

"தெரியும்" என்றாள் காவியா.

ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து கொண்டு நகர்ந்தவள், "நான் சொல்லுறதை ரெண்டு பேரும் கவனமா கேளுங்க" என்றுவிட்டு பேசினாள்.

அவள் பேச பேச இருவர் முகமும் கவலையுடன் சுருங்கி போனது.

"வேண்டாம் கவி. இப்போவாது என் பேச்சை கேளு. உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..!" கவலையுடன் சுகந்தி கேட்க,

"என் நிலையில் நீ இருந்தால் விஷ்ணுக்கு என்ன பண்ணி இருப்ப சுகி..?" என்றாள் காவியா திடமாக.

"நான் என் சுகாவை விட மாட்டேன் காவியா" விஷ்ணு அழுத்தமாக கூற,

"கேள்விக்கு சுகந்திக்கு விஷ்ணு" என்றாள் காவியா.

சுகந்தியால் பதில் கூற முடியவில்லை.

காவியா அளவு மனவலிமை எல்லாம் அவளுக்கு கிடையாது.

இந்த அளவு இறங்கி இருக்க மாட்டாள். இறங்கினாலும், இறுதி முடிவு காவியா போல் தான் எடுத்திருப்பாளோ, என்னவோ..!

அவள் திருதிருவென விழிக்க, "உனக்கு புரியும்னு நினைக்கறேன். எதுவும் சொல்ல மாட்டேன்னு ரெண்டு பேரும் சத்தியம் பண்ணுங்க.." என கை நீட்டினாள் காவியா.

சுகந்தி யோசனையுடன் சத்தியம் செய்ய, விஷ்ணு அதுவும் செய்யவில்லை.

"எனக்கு சரியா படலை மா" என அவன் திடமாக கூற,

"நான் உயிருடன் இருக்கணும்னா தயவு செஞ்சு எதுவும் சொல்லாதீங்க விஷ்ணு. என் மனம் தாங்கவும் ஒரு அளவு இருக்கு. இருக்கும் வலி காலத்துக்கும் போதும்னு நினைக்கறேன்.. என் தேவ் நல்லா ஒரு வாழ்க்கை வாழனும். எனக்கு அது மட்டும் தான் வேணும். முடிஞ்சா அவன் மனசை மாத்துங்க. எனக்கு அது போதும்." கண்கள் கலங்க பேசுபவளிடம், வாக்குவாதம் பண்ணவும் அவனுக்கு மனம் வரவில்லை.

"இதுவரை எல்லாமே சரி காவியா. ஆனால் நீ இப்போ எடுக்கும் முடிவு தப்புனு தோணுது. யோசிச்சுக்கோ." என்றதுடன் விஷ்ணு முடித்து விட்டான்.

காவியாவோ கசப்பாக ஒரு முறை புன்னகைத்து கொண்டாள்.

அவள் நிலை அவளுக்கு தானே தெரியும்..!

அனைத்தையும் மூன்றாம் மனிதர்களிடம் சொல்லிவிட முடியாதே..!

சிறிது நேரத்தில் சிவதேவ் வந்து விட்டான்.

கார் சத்தம் கேட்டதுமே, விஷ்ணு வாசலுக்கு சென்று விட்டான்.

ஏற்கனவே ராஜலக்ஷ்மியிடம் அவன் வருவதை காவியா கூறி இருந்தாள்.

விஷ்ணு சுகந்தியிடம் வாங்கிய சத்தியத்தை அவள் அன்னையிடமும் அவள் வாங்க தவறவில்லை.

எஞ்சி இருந்த உண்மை தெரிந்த ஆள் சௌமியா மட்டும் தான்.

அவர் அப்போது வீட்டில் இல்லை. அவர் நெருங்கிய தோழி விஷயம் கேள்விப்பட்டு அவரை பார்க்க வந்திருந்த போது, தன் ஊருக்கு அழைத்து சென்று விட்டார்.

மனம் மாறினால் நன்றாக இருக்கும் என அவரும் சென்றிருந்தார். அவர் வர பத்து நாள் ஆகும். வந்ததும் சொல்லிக்கொள்வோம் என காவியா அப்போதைக்கு விட்டுவிட்டாள்.

விஷ்ணுவை தொடர்ந்து சுகந்தி காவியா இருவரும் வெளியே சென்றனர்.

சிவதேவ் காரில் இருந்து இறங்கியதுமே, விஷ்ணு அவனை சென்று அணைத்து விட்டான்.

சிவதேவ்வும் நண்பனை அணைத்து கொண்டாலும், அவன் கண்கள் காவியா மீது தான் படிந்திருந்தது.

அவளும் அவனை பார்த்து மெலிதாக புன்னகைக்க, அவன் பதிலுக்கு சிரிக்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

"வா சிவா" என்ற விஷ்ணு குரலில் நினைவிற்கு மீண்டவன்,

"ம்ம். வா டா. நல்லா இருக்கையா..?" என கேட்டுக்கொண்டே அவனுடன் நடந்தான்.

இருவரும் காவியா அருகில் வர, "உனக்கு எப்போ சரியாச்சு தேவ்..?" என்றாள் காவியா சாதாரணம் போல்.

"உன் கல்யாணம் நடந்த அன்று" என அவள் கண்களை பார்த்து கொண்டே அவன் கூற, அவளுக்கு உள்ளுக்குள் தூக்கிவாரி போட்டது.

'அப்போதே சரியாகி விட்டதா' என மனதிற்குள் நினைத்துக்கொண்டவள், வெளியில் எந்த உணர்வும் காண்பிக்காமல் இருக்க திண்டாடி போனாள்.

"எனக்கு சரியாவே போகாதுனு முடிவே பண்ணிட்ட இல்லையா..?" அவளுக்கு எதிரில் தன் முழு உயரத்திற்கு திடமாக நின்று அவன் கேள்வி கேட்க, மனதை முயன்று கட்டுப்படுத்திகொண்டு அவளும் அவனை பார்த்தாள்.

"அப்படி எல்லாம் இல்ல தேவ்.."

"அப்புறம் எதுக்கு அவளை கல்யாணம் பண்ணின..?"

"அவரை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணினேன். அப்புறம் தான் குணம் சரி இல்லைனு தெரிந்தது." அவள் பதிலில் அவன் முகம் கோபத்துடான் இறுகியது.

"சோ நீ அவனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணின, அவன் உன்னை கொடுமை படுத்தினானு விலகிட்ட. இது மட்டும் தான் காரணம். இதை நான் நம்பனும் இல்லையா..?"

ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக அவன் கேட்க, அவள் வெகுவாக தவித்து தான் போனாள்.

சில நொடிகள் முன்பு வரை இருந்த திடம் எல்லாம் அவன் அழுத்தத்தில் ஆட்டம் காண தொடங்கியது.

"ஆ.. ஆமா.." என அவள் விடாமல் கூற,

"ஓங்கி அரைஞ்சேன்னா தெரியும்..!" என கோபத்துடன் கூறியவன், அடிக்க கையே ஓங்கி விட்டான்.

"தேவ்.." என பயத்துடன் அவள் கத்தியதில், அவள் கைகள் தானாக தளர்ந்து விட்டது.

"என்ன டி, வாய்க்கு வந்த பொய்யை எல்லாம் சொல்லிட்டு, என்னை நம்ப வேற சொல்லிட்டு இருக்க..! நீ என்ன சொன்னாலும் கேட்டுட்டு கேனயன் மாதிரி போய்டுவேன்னு நினைச்சியா..! இல்லை அந்த நந்தினி கூட குடும்பம் நடத்துவேன்னு நினைச்சிருந்தயா..! வர கோவத்துக்கு உன்னை என்ன பண்ணுறதுனே எனக்கு தெரியல..! ஏதாவது பேசின, கொன்னுருவேன் பாத்துக்கோ..! நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு. கேசில் அவன் என்னை கொலை பண்ண ட்ரை பண்ணினதும் சொல்லி இருக்கையா..?" அவன் கத்திய கத்தில் அதிர்ந்து விழித்து கொண்டிருந்தவளுக்கு, ஒரு வார்த்தையும் வரவில்லை.

அவளவன் முன் குழந்தையாக மாறி போனது போல் ஒரு தோற்றம் அவளுள்..!

அவள் நிலை புரிந்தோ என்னவோ, சிவதேவ் விஷ்ணு பக்கம் திரும்பி விட்டான்.

"விஷ்ணு கேஸ்ஸில் கொலை கேஸ் கொடுத்திருக்கீங்களா இல்லையா..?" என சிவதேவ் கேட்க, விஷ்ணு மறுப்பாக தலையசைத்தான்.

"அவன் உன்னை கொல்ல பார்த்தானா..?" ஒருவாறு மெதுவாக காவியா கேட்டுப்பார்க்க, அவளை திரும்பி சலிப்புடன் பார்த்த சிவதேவ், "ஸ்ரீ ஏதாவது லூசு மாதிரி ட்ரை பண்ணி என் கோபத்தை ஏத்தாத.. பேசாமல் இரு. இனி நான் பார்த்துக்கறேன்.." என அழுத்தமாக கூறினான்.

அவன் பதிலில் அவள் முகம் சுருங்கி போக, அவனுக்கும் மனம் கேட்கவில்லை.

ஒற்றை கையால் அவள் எதிர்பார்க்காத நொடி அவளை பிடித்து இழுத்தவன், "போதும் டி. நான் பாத்துக்கறேன். விட்டுரு.." என மென்மையாக அணைத்துக்கொள்ள, அவளோ சட்டென்று அவன் கையில் இருந்து விலகினாள்.

அதற்கு மேல் தாங்க முடியாமல் அவள் ஒரு பக்கம் சென்று அமர்ந்து விட்டாள்.

மற்றவர்களுக்கெல்லாம் சிவதேவ் செய்வது தான் சரியாக பட்டது.

அதனால் அனைவரும் அமைதியாகவே இருந்தனர்.

சொல்லப்போனால், அவன் அதிரடி மற்றவர்களுக்கு ஒரு வித நிம்மதியை தான் கொடுத்தது.

"கிளம்பு விஷ்ணு. கம்பளைண்ட் பண்ணிடலாம். எல்லா கம்பளைண்ட்டும் சேர்ந்தால், அவங்களால் தப்பிக்க முடியாது. அப்படியே ஒரு பிரஸ் மீட்டும் கொடுத்துடலாம்.."

"அவங்களுக்கு தண்டனை உறுதியாகும் வரை, இவன் உயிருடன் இருப்பது வெளிய தெரிய வேண்டாம்.." நிமிராமல் காவியா கூற,

"ஏன் மேடம்..?" என்றான் சிவதேவ் புரியாதவன் போல்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், "வேண்டாம் ப்ளீஸ்" என்று மட்டும் கூற,

"இது பதில் இல்லையே!" என்றான் அவன் நக்கலாக.

"ப்ச். உன்னை திரும்ப கொல்ல ட்ரை பண்ணுவானுங்க.." எரிச்சலுடன் அவள் கூற,

"இப்போ தான் யாரோ ராகவன் கொலை முயற்சி பத்தி தெரியாதுனு சொன்னாங்க. அது யாருனு பாத்தியா விஷ்ணு..!" என சிவதேவ் தேட, விஷ்ணு மெலிதாக சிரித்து கொண்டான்.

அவன் செயலில் காவியாவிற்கு இயலாமையாக போய் விட, அவள் விறுவிறுவென தன் அறைக்குள் சென்று விட்டாள்.

அவளை பார்த்து பெருமூச்சு விட்ட சிவதேவ், "நீ வா டா" என்று கூற,

"காவியா சொன்னது சரி தான் சிவா.." என்றான் விஷ்ணு.

"தெரியும் விஷ்ணு. மாஸ்க் கேப் எல்லாம் இருக்கு. அடையாளம் காட்டாமல் போயிட்டு வந்துடலாம்.." என்ற சிவதேவ், சுகந்தி ராஜலக்ஷ்மியிடம் ஒரு தலையசைப்புடன் நகர்ந்து விட்டான்..

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 14:

விஷ்ணுவும் சிவதேவ்வும் நேராக ராம்சரணை பார்க்க தான் சென்றனர்.

அவரிடம் சிவதேவ் தனக்கு நடந்த அனைத்தும் தெளிவாக கூறினான்.

"கொலை கேஸ் ரெண்டு பேர் மேலையும் பைல் பண்ணுங்க சார். சாட்சி நான் இருக்கேன். சம்பவம் நடந்த இடம், இவனுங்க அடியாட்கள் அடையாளம் எல்லாம் நினைவிருக்கும் வரை சொல்லுறேன். அந்த சாட்சியும் காலெக்ட் பண்ண பாருங்க சார்.." என சிவதேவ் கூற,

"ம்ம். அதெல்லாம் பிடிச்சுடலாம். சாட்சியுடன் பிடிச்சுட்டா, அவனுங்க அவ்ளோ ஈஸியா தப்பிக்க முடியாது. பிடிச்சுடலாம் சிவதேவ். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கும் வரை, நீங்க மீடியாக்கு போக வேண்டாம். கவனம்." என்றார் அவரும் தன் பங்குக்கு.

"ஓகே சார். தேங்க்ஸ்.." என்றவன், தனக்கு நினைவிற்கு வந்த அனைத்து விஷயங்களும் கூறி விட்டான்.

"நான் விசாரிச்சுட்டு கால் பண்ணுறேன் சிவதேவ். போதுமான சாட்சி கிடைச்சுட்டா, இந்த கேஸும் பைல் பண்ணிடலாம்.." என ராம்சரண் உறுதியாக கூறிவிட, மற்ற இருவரும் நிம்மதியுடன் கிளம்பினர்.

சிவதேவ் சற்றே தள்ளி இருந்த ஒரு டீ கடையில் காரை நிறுத்தினான்.

விஷ்ணு மட்டும் இறங்கி சென்று டீ வாங்கி வர, இருவரும் உள்ளே அமர்ந்தே பேசினர்.

"ஏன் டா அவ தான் உன் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுறானா, உனக்கு அறிவு வேண்டாமா..! நீ அவளை தடுத்திருக்க வேண்டாமா..?" கோபத்துடன் தான் சிவதேவ் கேட்டான்.

"தடுக்காமல் இருப்பேனா சிவா! நானும் சுகாவும் எவ்வளவோ சொல்லி பார்த்தோம். சுகா கொஞ்ச நாள் பேசாமல் கூட இருந்தா. காவியா ரொம்ப அழுத்தம் டா. யார் பேச்சும் கேட்கலை. உன்னை ராகவன் கொலை பண்ண நினைச்சதெல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனால் காவியா சொன்ன காதல் மேலையும் எங்களுக்கு நம்பிக்கை இல்ல. உன்னையும் அவளையும் நான் பாத்திருக்கேன். நீ இல்லைனு ஆனதும், ராகவன் மாதிரி ஒருத்தனை காவியா விரும்ப மாட்டான்னு தோணிச்சு. அவ யார் பேச்சையும் கேட்கல டா. இப்போ கூட அடம் தான்." சலிப்புடன் விஷ்ணு முடிக்க,

"இப்போ என்னவாம்?" என்றான் சிவதேவ்.

"ராகவனை பழிவாங்க தான் கல்யாணம் செஞ்சான்னு உனக்கு தெரிய கூடாதாம். சுகா கிட்ட சத்தியம் வேற வாங்கிட்டா. ராஜலக்ஷ்மி அம்மா கிட்ட கூட சத்தியம் வாங்கி வச்சிருந்தா. நல்ல வேள நீயே கண்டுபிடிச்சுட்ட.."

"ஒருவேளை நான் கண்டுபிடிக்கலைனா..?"

"நான் சொல்லி இருப்பேன் டா.
பழிவாங்க இருக்கும் தைரியம் வாழவும் இருக்கணும்.. "

"எல்லாருக்கும் ஏதோ ஒரு வீக்னஸ் இருக்கும் விஷ்ணு. ஸ்ரீக்கும் இருக்கு. சமூதாயம் பெண்கள் மேல வலுக்கட்டாயமா திணிச்சு வச்சிருக்கும் வீக்னஸ் அது. என் மேல இவ்ளோ காதல் வச்சிருக்கரவளுக்கு அவ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லைனு மட்டும் புரியல பாரு. பைத்தியக்காரி..!" விளையாட்டு போல் கூறினாலும், சிவதேவ் வார்த்தைகள் வேதனையுடன் ஒலித்தது.

"அவளும் பாவம் சிவா. ரொம்ப மனஉளைச்சலில் இருக்கா. அவ கடந்து வந்த பாதை சுலபமானது இல்ல. உனக்கு நான் சொல்ல தேவையில்ல. கோவப்படாம பேசு டா.."

"ம்ஹ்ம். அவளை கொஞ்ச காலம் முழுக்க இருக்கு விஷ்ணு. இப்போ கொஞ்சினா, என் பேச்சை கேட்க மாட்டா. அவ முழுசா என் கைக்குள் வரட்டும். அதுவரை கொஞ்சம் அதிரடி தான் சரிப்பட்டு வரும்."

சிவதேவ் எதுனாலும் சரியாக தான் செய்வான் என்ற நம்பிக்கை இருந்ததால், விஷ்ணுவும் அதற்கு மேல் ஆர்கியு பண்ணாமல் விட்டுவிட்டான்.

இருவரும் வீடு வந்து சேர்ந்த போது, வீடே அமைதியாக தான் இருந்தது.

கார் சத்தம் கேட்டு சுகந்தி தான் வெளியே வந்தாள்.

"ஸ்ரீ எங்க சுகந்தி..?" என சிவதேவ் கேட்க,

"நீங்க போனப்ப உள்ள ஓடியது தான் ண்ணா. இன்னும் வெளிய வந்த பாடில்லை. மதிய சாப்பாடுக்கு கூப்பிட்டு கூப்பிட்டு சலிச்சு போய் உட்காந்துட்டேன்.." என்றாள் அவள்.

"நீ புட் எடுத்து வை சுகந்தி. நான் அவளை கூட்டிட்டு வரேன்." என்ற சிவதேவ், நேராக காவியா அறை நோக்கி சென்றான்.

"ஸ்ரீ..." என அழைத்துக்கொண்டே அவன் கதவை தட்ட, உள்ளிருந்து ஒரு பதிலும் வரவில்லை.

"இப்போ நீ வரியா, இல்ல நான் உயிருடன் தான் இருக்கேன்னு பிரெஸ் மீட் வச்சு சொல்லிடவா..?" நிதானமாக சிவதேவ் கேட்க, அடுத்த நொடி அந்த கதவு பட்டென திறந்தது.

"என்ன வேணும் உனக்கு..?" அவனை முறைத்துக்கொண்டு காவியா கேட்க,

"பசிக்குது" என்றான் அவன்.

"போய் சாப்பிடு"

"நீங்களும் வரணும் மேடம்"

"எனக்கு பசிக்கல"

"அதுக்கு என் குழந்தை என்ன டி பண்ணும்..? அதை ஏன் பட்டினி போடற..! ஒழுங்கா வா.." அவன் கூற்றில் அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள்.

"உ.. உன் குழந்தை ஒன்னும் இல்ல.." திணறலாக அவள் கூற,

"ம்ம்.. அப்புறம்..?" என்றான் அவன் கையை கட்டிக்கொண்டு.

அவன் தோரணையில் அவளுக்கு தான் தவிப்பாக இருந்தது.

"இது என் குழந்தை மட்டும் தான்.."

"நீ இப்படி சொல்லுறது இதுவே கடைசியா இருக்கணும் ஸ்ரீ. இப்போ வர போறியா? இல்ல மூணு பேரும் பட்டினி கிடந்து சாக போறோமா..? நீ யாரை பழிவாங்க நினைச்ச? ராகவனையா! இல்லை என்னையும் என் பிள்ளையையுமா..?" அவன் பேச பேச, அவள் கண்கள் கலங்கி போனது.

சிவதேவிற்கோ அவளை அணைத்து ஆறுதல் சொல்ல கைகள் பரபரத்தது.

என்ன செய்ய..! காயத்திற்கு மருந்திட்டு கொண்டிருக்கிறான். வலிக்கு பாவம் பார்க்க முடியாதே..!

"வரியா என்ன..?" என அவன் மீண்டும் கேட்க,

"வரேன்" என்றவள், முகத்தை தூக்கி கொண்டே வந்து அமர்ந்தாள்.

ஒருவாறு அனைவருமே மதிய உணவை முடித்து கொண்டு எழுந்து விட, காவியா முதல் ஆளாக தன் அறைக்குள் ஓடி விட்டாள்.

"உன் ரூம் கதவை கழட்ட போறேன் பாரு..!" என சிவதேவ் கத்தியது அவள் காதிலும் விழ தான் செய்தது.

அவளுக்கு தனிமை தேவைப்பட்டது.

அவளும் என்ன தான் செய்வாள்..! சிவதேவை பார்க்கும் போதெல்லாம், அவனை அணைத்துக்கொண்டு அவனுடனே ஒன்றிவிட வேண்டும் என அவள் மனம் பாடாய் படுத்தியது.

அவனும் உயிராய் பார்த்துக்கொள்வான் தான்.

ஆனால் அவன் விரும்பிய ஸ்ரீ இப்போது இல்லையே..!

அவள் நிலைக்கு இப்போது அவனுடன் சேர்ந்தால், அவளால் அவனுக்கு கஷ்டம் தான் அதிகமாகும்.

அதுக்கு எப்படியாவது அவனை விட்டு விலகிவிட்டால், உடனடியாக இல்லாவிட்டாலும், காலப்போக்கில் மறந்து விட மாட்டானா என்று தான் அவளுக்கு நப்பாசையாக இருந்தது.

அவனுக்காக மட்டுமே பார்த்து பார்த்து யோசித்த அவள் காதல் மனம், அவன் காதலின் ஆழம் உணராமல் போனதோ..! இல்லை உணர விரும்பாமல் பயந்து ஒளிந்து கொண்டதோ..!

மாலை வரை அவளை அவள் போக்கில் விட்ட சிவதேவ், அதற்கு மேல் விடவில்லை.

மீண்டும் அவள் அறை கதவை தட்டினான்.

இந்த முறை அவளும் அமைதியாக திறந்தாள்.

அவள் வெளியே வந்ததுமே அவன் கதவில் ஏதோ செய்ய, அவள் அவனை புரியாது பார்த்தாள்.

கையில் ஸ்க்ரூ ட்ரைவர் எடுத்து வந்திருந்தவன், அவள் அறை கதவின் தாழ்ப்பாளை தான் கழட்டிக்கொண்டிருந்தான்.

"என்ன பண்ணுற தேவ் நீ..?"

"பார்த்தால் தெரிஞ்சிருக்குமே..!" என்றவன், இப்போது குனிந்து கீழ் பக்கம் இருந்த தாழ்ப்பாளும் கழட்டிவிட்டான்.

"நான் கிளம்பனும் ஸ்ரீ. நீ பாட்டுக்கு எப்போ பாரு கதவை பூட்டிக்கர. எல்லாரும் பயப்படறாங்க. உன் அம்மா முகத்தை பார்க்க முடியலை. நான் இங்கேயே கூட இருந்துடுவேன். ஆனால் அம்மாவும் அப்பாவும் என் கூட இருக்க ஆசைப்படறாங்க. சோ வேற வழி இல்லை." என அவன் தோளை குலுக்க,

"தற்கொலை எல்லாம் செய்துக்கொள்ளும் அளவு நான் கோழை இல்லை தேவ்.." என்றாள் காவியா திடமாக.

அதில் மெலிதாக சிரித்து கொண்டவன், "அதெல்லாம் தெரியும். நீ விட்டால் நாலு கொலை கூட பண்ணுவ. உடம்புக்கு எதுவும் முடியாமல் போய்டுமோனு பயம் தான். எனக்கு என் குழந்தை முக்கியம் மா." என்றான் அவன்.

"திரும்ப திரும்ப அப்படி சொல்லாத தேவ். என்னவோ மாதிரி இருக்கு." காவியா முகத்தை சுழிக்க,

"அப்படி தான் சொல்லுவேன். நீயும் ஞாபகம் வச்சுக்கோ. ஏதாவது மாத்தி பேசலாம்னு நினைச்சா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.."

அவன் கோபத்தை வெறுமையாக பார்த்தவள், "இது யார் குழந்தைனு ஊருக்கே தெரியும் தேவ்" என மெதுவாக கூற, அத்தனை நேரம் இருந்த கோபம் மறைந்து சிவதேவ் முகம் யோசனையுடன் சுருங்கியது.

ஏதோ யோசித்தவன், அவளிடம் எதுவும் கூறவில்லை.

அவன் என்ன நினைக்கிறான் என்று அவளுக்கும் புரியவில்லை.

"குழந்தை மனம் பற்றி யோசிக்கணும் தான். அதை நான் பாத்துக்கறேன். ஆனால் இது என் குழந்தை தான். என் குழந்தையா தான் பிறக்கும். என் குழந்தையா தான் வளரும். முதலில் நீ மாத்தி பேசாத." என அவன் தெளிவாகவே கூற, எதற்கும் அசராமல் நின்றவனை பார்த்து பெருமைப்படுவதா, வருத்தப்படுவதா என்றே அவளுக்கு தெரியவில்லை.

"தேவ்" என அவள் மென்மையாக அழைக்க, ஏதோ நினைவில் இருந்தவன், அவள் அழைப்பில் சட்டென அவளை பார்த்தான்.

அவள் அழைப்பது எப்போதுமே அவனுக்கு பிடிக்கும்.

மனதில் இருந்து வரும் அவள் ஒவ்வொரு அழைப்பும், அவனுக்கு சிலிர்க்கும்.

இத்தனை அன்பை ஒரு வார்த்தையில் காட்ட முடியுமா என ஆச்சர்யப்பட வைப்பவள் அவள்.

பல நாட்களுக்கு பின் இப்போது தான் முன்பு போல் அழைத்திருக்கிறாள்.

அவனுக்கு இப்போதும் உள்ளுக்குள் ஏதோ நெகிழ்ந்தது.

"சொல்லு டா" என அவனும் மென்மையாக கேட்க,

"என்னை விட்டுரு தேவ். நான் ஏற்கனவே கல்யாண வாழ்க்கை வாழ்ந்துட்டேன் டா. தெரிஞ்சோ தெரியாமலோ, என் மேரேஜ் லைப் முடிஞ்சு போச்சு. திரும்ப ஒரு வாழ்க்கை என்னால் முடியாது. நான் பாட்டுக்கு ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துக்கறேன். நீ பழைய மாதிரி கண்டிப்பா வருவ. உன் முன்னேற்றத்தை பார்த்து நான் சந்தோசப்பட்டுப்பேன். ஒரு நல்ல ப்ரெண்டா இரு தேவ். அது போதும்." ஆசையுடன் பேச ஆரம்பித்தவனுக்கு, அவள் பேசியதை கேட்டதும் இந்த முறை உண்மையாகவே கோபம் வந்தது.

அவள் இதை தான் பேசுவாள் என்று அவனுக்கு தெரியாதா..! அதையே தான் செய்து தொலைத்து, அவன் வயித்தெரிச்சலை கொட்டிக்கொண்டாள்.

"நான் வேணா பெட்டெர் ஐடியா சொல்லவா..?" அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கேட்க, அவளோ அது புரியாமல் அவனை பார்த்தாள்.

"நீ எதுக்கு ஸ்ரீ நான் இருக்கும் போதே தனியா வாழ்ந்து தியாகி பட்டம் வாங்கணும்..! ஒன்னு பண்ணுவோம், நான் உண்மையாவே செத்துறேன். இந்த முறை எந்த ட்ராமாவும் வேண்டாம். எதுவும் பாய்சன் கிடைக்குதான்னு பாக்கறேன். முகம் கூட தெளிவா இருக்கும். அப்புறம் நீ ஆசைப்பட்ட மாதிரி தனியா நிம்மதியா இருக்கலாம். யோசிச்சு சொல்லு. நான் கோழை தான் மா. உன் அளவு தைரியம் எல்லாம் இல்ல.."

எந்த பதட்டமும் இல்லாமல் பேசியவன், "ஐயோ தேவ், வாயை மூடு..!" என அவள் கத்தியதை பொருட்படுத்தாமல் வேகமாக வெளியேறி விட்டான்.

அவனுக்கு அத்தனை ஆத்திரம். விட்டால் அடித்து விடுவோமோ என பயமாக இருந்தது.

நன்றாக அழட்டும் என்று தான் விட்டுவிட்டு வந்து விட்டான்.

'தனியா இருப்பாளாம்..! பைத்தியகாரி..! இவளை விட்டு நான் சந்தோசமா வேற வாழணுமாம்..! இஷ்டத்துக்கு பேச வேண்டியது' எரிச்சலுடன் தான் சிவதேவ் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வீட்டில் அன்னை தந்தையை பார்த்ததும் அவன் மனம் கொஞ்சம் சமாதானம் ஆகி விட்டது.

"காவியாவை கூட்டிட்டு வரலையா?" என்று தான் ரங்கநாதன் முதல் கேள்வியே கேட்டார்.

"முறைப்படி கூட்டிட்டு வந்துருவோம் பா. கொஞ்சம் பொறுங்க. இந்த கேஸ் முடிஞ்சுடட்டும்.." என அவன் கூற,

"சரி டா" என்றுவிட்டார் அவர்.

அதற்கு மேல் அன்னை தந்தையுடன் தான் அவன் பொழுதை கழித்தான்.

இரவு படுக்கும் முன் மறக்காமல் காவியாவிற்கு போனில் அழைத்தான்.

புது போன் ஒன்று வாங்கி இருந்தான்.

புது எண்ணில் இருந்து கால் வந்ததும் காவியாவும் எடுத்தாள்.

"ஹலோ" என அவள் தொடங்க,

"நான் தான். வச்சுடாத. அப்புறம் நேரில் வருவேன்." என முன்னெச்சரிக்கையாக கூறினான் சிவதேவ்.

அவளும் வைக்கவில்லை.

"சொல்லு" என்றாள்.

"ஒழுங்கா சாப்பிட்டுட்டு படுத்தயா..?"

"அதை பார்க்க தான் ஆள் வச்சிருக்கையே..!"

விஷ்ணு ஒழுங்காக சாப்பிட சொல்லி படுத்திய கடுப்பில் அவள் கூற, அவன் சிரித்துக்கொண்டான்.

"நான் நினைவில்லாமல் இருந்த கொஞ்சநாளில் பூச்சி மருந்து விலை எல்லாம் ஏறிப்போச்சு ஸ்ரீ."

என்ன உளருகிறான் என முதலில் யோசித்தவளுக்கு, மெதுவாக தான் புரிந்தது.

"என்னை பேசியே கொண்ணுறணும்னு நினைச்சுட்டு இருக்கையா நீ..?" கோபத்துடன் அவள் கேட்க,

"யாரு, நானா..! நீ ரொம்ப ஒழுக்கம்..!" என சிவதேவ் நொடித்து கொண்டான்.

"எல்லாத்தையும் மறந்துட கூடாதா ஸ்ரீ..!"

"நான் மறப்பது இருக்கட்டும். நீ ஏன் நந்தினியை அம்போன்னு விட்ட..? நினைவில்லாத போது அவளை விரும்பின தானே..! அவள் பாவம் தேவ்.."

ஆம். மெதுவாக தான் காவியாவிற்கு நந்தினி நினைவே வந்தது.

காலையில் வந்ததில் இருந்து சிவதேவ் செய்து கொண்டிருந்த அதிரடியில், அவளுக்கு தங்கள் காதல் நினைவுகள் மட்டும் தான் இருந்தது.

அவன் கிளம்பி சென்றதும் தான், நந்தினி நினைவே வந்தது.

அதான் உடனடியாக அவனிடம் கேட்டாள்.

அவள் விலக நினைப்பதற்கு அதுவும் ஒரு காரணம் ஆயிற்றே..!

"நீ புத்திசாலின்னு எனக்கு ரொம்ப பெருமை உண்டு ஸ்ரீ. அந்த நந்தினி சொன்ன பொய்யை நீ நம்பி இருக்கனு கேள்விப்பட்ட போது, அந்த பெருமை போயே போச்சு..!" சலிப்புடன் அவன் கூற, அவளுக்கு திக்கென்றிருந்தது.

"பொய்யா..?" குரலே எழும்பாமல் அவள் கேட்க,

"பச்சை பொய். உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க ஆதாரமா அமைஞ்ச பொய். நல்லா கேட்டுக்கோ ஸ்ரீ, எனக்கு நினைவே வராமல் போய் இருந்தால் கூட, நான் வேறு யாரையும் விரும்பி இருப்பேனா என்று சந்தேகம் தான்.. அந்த பொண்ணு மேல் நான் காட்டியது வெறும் பாசம் தான் ஸ்ரீ.. மிஞ்சிப்போனால் சாமியாரா வேணா போய் இருப்பேன்..!" விளையாட்டு போல் அவன் கூறினாலும், அது தான் உண்மை.

நந்தினி பொய்க்கான காரணம் காவியாவிற்கு புரிந்தது.

தன் பொய்யின் வீரியம் தெரியாமல் சொல்லி இருக்கிறாள்.

அதை நம்பி தானே காவியா பல முடிவுகள் எடுத்தது.

அவளுக்கு தலை சுத்தி மயக்கமே வரும் போல் ஆகி விட்டது.

"ஏன் தேவ் எனக்கு மட்டும் இப்படி நடந்துடுச்சு..?" எதுவுமே யோசிக்க தோன்றாமல் அவனிடமே அவள் கேட்க, அவள் வேதனை புரிந்தது போல் அவன் கண்களும் கலங்கியது.

"ஏன்னா நீ தேவதை ஸ்ரீ. சுயனமில்லாத அன்பு மட்டுமே காட்ட தெரிஞ்ச தேவதை. இந்த கலிகாலத்தில் இவ்வளவு நல்லவளா இருக்க கூடாது டி.."

"நான் நினைச்ச எதுவுமே நடக்கலையே..!" அவள் இன்னுமும் புலம்ப,

"அதை விட நல்ல விஷயங்கள் தான் நடக்கும் ஸ்ரீ மா" என்றான் அவன் மென்மையாக.

"வச்சுடறேன் தேவ்" என்றவள் அதற்கு மேல் பேச தெம்பில்லாமல், போனை வைத்துவிட, அவனும் ஒரு பெருமூச்சுடன் போனை வைத்தான்.

இளைப்பாறும்..

 
Status
Not open for further replies.
Top