All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அக்க்ஷரா தேவ் "காலமெல்லாம் உன்னுடன் நான்" கதை திரி

Status
Not open for further replies.

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8
அன்று காலையில் அவசர அவசரமாக கிளம்பினான் ராம். கையில் ஒரு புகைப்படத்தை எடுத்து தன் பையில் வைத்தான். அப்போது அங்கே அர்ஜுன் வந்தான்.

"என்னண்ணா கிளம்பிட்டீங்களா?" என்று கேட்டான்.

"ஆமாடா எப்படியாவது பர்மிஷன் வாங்கிடனும். அப்புறம் அவ கூட சந்தோசமா வாழனும்" என்று ராம் கூற

"என்ன ஒரே பகல் கனவா இருக்கு. எனி வே உங்க கனவு நனவாக வாழ்த்துக்கள். வாங்க சாப்பிட போகலாம். அப்பா வெயிட் பண்றாங்க" என்று கூறி விட்டு முன்னே நடந்தான் அர்ஜுன். அவனை பின் தொடர்ந்தான் ராம்.

டைனிங் டேபிளில் பிரகாஷ் காத்துக்கொண்டு இருந்தார். ராம் வந்து அமர்ந்ததும் அர்ஜுன் பரிமாறினான்.

"நீயும் உட்கார்ந்து சாப்பிடு டா" என்று ராம் கூற அர்ஜுன் தனக்கு ஒரு தட்டில் உணவை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

"சீக்கிரமே வேலையெல்லாம் நடக்கிறதே ராம். அவ்வளவு ஆசையா? கல்யாணம் பண்ணிக்கோ னு சொன்னப்போ எல்லாம் தட்டிக் கழிச்சுட்டு இப்போ திடீர்னு பொண்ண ரெடி பண்ணிட்டியே. செம்ம பார்ஸ்ட் டா நீ" என்றார் பிரகாஷ்.

"எந்த ஒரு நல்ல காரியத்தையும் தள்ளிப் போடக்கூடாது னு நீங்க தான அப்பா அடிக்கடி சொல்லுவீங்க. அத தான் நானும் ஃபாலோவ் பண்ணுறேன் " என்று சொல்லி சிரித்தான் ராம்.

"எதுல நான் சொல்லுறத கேட்கிறியோ இல்லையோ இதுல கரெக்ட்டா ஃபாலோவ் பண்ணுற" என்று சிரித்தவர் எழும்பி கை கழுவச் சென்றார்.

"என்னண்ணா தத்துவம் எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க? இனி எங்கள் பாடு திண்டாட்டம் தான் " என்று அர்ஜுனும் எழ ராம் சிரித்துக்கொண்டே சென்றான்.

அனைவரிடமும் விடை பெற்று வத்தலகுண்டு நோக்கி பயணித்தான்.

"வத்தலகுண்டு உங்களை அன்போடு வரவேற்கிறது" என்ற அறிவிப்பு பலகையை தாங்கி நின்றது ஊர். பேருந்தில் இருந்து இறங்கியவன் கீர்த்தனா கொடுத்த முகவரியை எடுத்தான் . பக்கத்தில் இருந்த டீக்கடை காரரிடம் முகவரியை காட்டி வழி கேட்டு நடந்தான். அவர் சொன்ன வீட்டின் முன் நின்று அதை பார்த்தான்.

எளிமையான வீடு சுற்றிலும் மரங்கள் நல்ல காற்றோட்டமான பகுதி. பக்கத்தில் வயல் நிலங்களும் இருந்தன. அதை பார்த்ததும் விவசாய பூமி என்று தெரிந்து "நல்ல ஊர்" என்று நினைத்தவன் கீர்த்தனாவின் வீட்டை பார்த்தான். வீடு பூட்டி இருந்தது.

"வீடு பூட்டி இருக்கிறதே வீட்டில் யாரும் இல்லை" என்று நினைத்தவன் பக்கத்து வீட்டு அம்மாவிடம் கேட்டான்.

"வணக்கம்மா நான் சென்னைல இருந்து வந்திருக்கேன். அருணாச்சலம் அங்கிள் வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டி இருக்கு. எங்க போயிருக்காருன்னு தெரியுமா?" என்று கேட்டான்.

அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு "சென்னைல இருந்தா? அங்க தானே கீர்த்தி பொண்ணு படிக்கிறா. நீங்க அவளுக்கு தெரிஞ்சவங்களா?" என்று கேட்டார்.

அவர் கேட்க வருவது ராமிற்க்கு புரிந்தது. இந்த கிராமத்து மக்களிடம் இது ஒரு பிரச்சனை. வீட்டில் இருக்கும் பெரியவர்களை பற்றி கேட்டால் உடனே அந்த விட்டு பெண்ணை சம்பந்தபடுத்தி விடுவார்களே என்று எரிச்சலாக இருந்தது ராமிற்க்கு.

"அங்கிள் பொண்ணு சென்னையிலயா படிக்கிறா? இது தெரியாதே.. நான் வேற ஒரு விசயமா பார்க்க வந்தேன். வீட்டில வேற யாரும் இல்லையா?" என்று கேட்டான்.

"வேற யாருன்னா யாரு? அவர் மனைவி அந்த அம்மா இறந்து கொஞ்ச வருசமாச்சே. அவரும் அவர் பொண்ணும் மட்டும் தான். இப்போ அந்த பொண்ணும் ஊருல இல்லாத காலெஜ் னு சென்னைல படிக்க போயிருக்கு. பாவம் அப்பா தனியா இருப்பாரேன்னு கவலை இருந்துச்சா. பாவம் அவரே நெஞ்சு வலில அவதி படுறார். மகளை கூப்பிடவான்னு கேட்டால் படிப்பு கெட்டுடுமாம் என்ன படிப்போ? அப்பா விட அது பெருசா போச்சு" என்று புலம்பினார் அந்த பக்கத்து வீட்டு அம்மா.

ஏன்டா இவங்க கிட்ட கேட்டோம் என்று இருந்தது ராம் க்கு. அவன் எரிச்சலுக்கு முற்றுப்புள்ளி யாக அந்த நேரம் அருணாசலம் வந்தார்.

"கீர்த்தி அப்பா உங்கள பார்க்க யாரோ சென்னைல இருந்து வந்து இருக்காங்க." என்று சொல்லிவிட்டு ராமிற்க்கும் அவரை அவரை அடையாளம் காட்டி விட்டுச் சென்றார் அந்த அம்மா.

சென்னை என்று சொன்ன உடன் அருணாச்சலத்திற்கு புரிந்தது. இது தான் கீர்த்தி சொன்ன ராம் என்று. "வாங்க தம்பி" என்று வரவேற்று அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவருடன் நடந்தான் ராம். வீட்டிற்குள் சென்று அவனை சோபாவில் அமரச் சொல்லி விட்டு கிச்சனுக்குள் சென்று இரண்டு கப் காபிகளுடன் வெளியே வந்தார். அவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்தார்.

அருணாசலம் வீட்டை பார்த்தான் ராம். எல்லா பொருட்களும் அதனதன் இடத்தில் நேர்த்தியாக இருந்தது.

அவன் பார்வையை கவனித்தவர் "என் மனைவி எப்பவும் எல்லாம் நேர்த்தியா இருக்கனும் னு நினைப்பாள். அதுவே அவ இறந்த பிறகும் செய்யுறேன்" என்று விளக்கம் சொன்னார்.

பெருமிதத்துடன் அவரை பார்த்தான் ராம். "மனைவி மேல் எவ்வளவு பாசம் வைத்து இருக்கிறார்" என்று நெகிழ்ந்து போனான்.

"யாரை தம்பி தேடி வந்தீங்க?" என்று கேட்ட அருணாச்சலத்தின் கேள்வியில் உணர்வு பெற்றவனாய் "என் சொந்தகாரர் ஒருத்தர் 23 வருசத்துக்கு முன்னாடி இங்க வந்து இருந்தாங்க. அப்புறம் ஊருக்கு திரும்பி வரல. இங்கேயே கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டாங்க. அப்புறம் எந்த விவரமும் இல்லை அதான் தேடிக்கிட்டு இருக்கேன்". என்று விவரம் சொன்னான் ராம்.

"23 வருசத்துக்கு முன்னாடி இங்க வந்தவங்கள இப்போ தேடி வர்றீங்களா?" அவங்க பேர் போட்டோ இப்படி எதாவது காட்ட முடியுமா?" என்று கேட்டார் அருணாச்சலம்.

தன் பையை திறந்து போட்டோவை எடுத்து "அவங்க பேர் பூரணி இது தான் அவங்க போட்டோ" என்று நீட்டிய போட்டோவை வாங்கி பார்த்த அருணாசலம் அதிர்ந்தார். ஏனெனில் அந்த புகைப்படம் அவருடைய மனைவி பூரணியுடையதாகும்.

"இவங்க பூரணிக்கு நீங்க என்ன சொந்தம்?" என்று தடுமாறிக் கேட்டார்.

"இவங்கள தெரியுமா அங்கிள்? இவங்க என்னோட அத்தை நான் அவங்க அண்ணன் மகன் " என்றான் ராம்.

"அப்போ என் மருமகனா?" என்று நினைத்தவாரே "நல்லாவே தெரியும்" என்று அவனுக்கு பதிலளித்தார்.

"தெரியுமா அங்கிள்? இவங்க இப்போ எங்க இருக்காங்க?" என்று ஆர்வத்துடன் கேட்டான்.

"இப்போ.." என்று யோசித்தவர் பக்கத்து அறையை கை காட்டி உள்ளே போகச் சொன்னார்.

இவர் எதற்கு அங்கே போகச் சொல்கிறார் என்று யோசித்தாலும் மறுக்காமல் உள்ளே சென்றான். அங்கே சிரித்த முகத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு இருந்த பூரணி அத்தையின் புகைபடத்தை பார்த்து அதிர்ந்தான்.

"பூரணி அத்தை இறந்துட்டாங்களா?" என்று சோகமாக வெளியே வந்தவன் அருணாசலம் அருகில் சென்று "மாமா" என்று அவர் கையை பிடித்தான்.

அவன் "மாமா" என்று அழைத்ததிலேயே அவன் மன்னித்து விட்டதை உணர்ந்தவர் "சாரி தம்பி "என்று மன்னிப்பு கோரினார்.

"நீங்க எனக்கு மாமா அப்படின்னா நான் உங்களுக்கு யாரு? அந்த முறைய வச்சு கூப்பிடுங்க மாமா" என்றவன் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்க "சரி மருமகனே" என்றார்.

அவரது அந்த அழைப்பில் மகிழ்ந்தவன் "ஏன் மாமா இவ்வளவு வருசம் எங்களை எல்லாம் மறந்து வாழ்ந்தீங்க? நீங்க ஒரு முறை யோசிக்காம முடிவெடுத்துட்டாலும் நல்லா வாழுகிற போதாவது எங்க கூட வந்து இருக்கலாமே? ஏன் இவ்ளோ நாள் வரல" என்று கேட்டான்.

"பூரணிக்கு அவ அண்ணா மேல எவ்வளவு மதிப்பு இருக்குமோ அவ்வளவு பயமும் இருந்துச்சு . நீங்க பிரிச்சு வச்சிடுவீங்களோ னு பயம். அது தான் நான் எவ்வளவோ சொல்லி பார்த்தும் அவ வரல" என்று கூறினார்.

"சரி மாமா இனி நீங்க தனியா இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்கு வாங்க. கீர்த்தியும் அங்க தான படிக்கிறா. எல்லாம் ஒன்னா இருக்கலாம்." என்று வீட்டிற்கு கூப்பிட்டான் ராம்.

"கீர்த்தி" என்று ஒரு முறை நினைத்தவர் "கீர்த்தி வர மாட்டாள். அவளுக்கு நீங்க அவ அம்மாவ ஒதுக்கி வைச்சிட்டதுல ரொம்ப கோபம். உங்கள பத்தி பேசுனாலே கோபப்படுவாள்" என்றார்.

"அய்யோ.. இது வேறயா" என்று நினைத்தவன் "மாமா கீர்த்தி....... கீர்த்திய..... எனக்கு " என்று தடுமாறினான்.

"புரியுது ராம். கீர்த்திய உங்களுக்கு பிடிச்சு இருக்கு . எனக்கு சம்மதம். ஆனா அவ இந்த விசயம் தெரிஞ்சு ஒத்துக்குவா னு தோனல. அவள வழிக்கு கொண்டு வர வேண்டியது உங்க சாமர்த்தியம்" என்றார் அருணாசலம்.

தான் வந்த இரண்டு வேலையும் இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்று ராம் எதிர் பார்க்கவில்லை.

"தேங்க்ஸ் அலாட் மாமா. கீர்த்திக்கு இப்போ விசயம் தெரிய வேணாம். நான்.அவள ஒத்துக்க வைக்குறேன்." என்றான்.

"சரி மாப்பிள்ளை" என்றார் அருணாசலம்.

"மாமா கீர்த்தி போட்டோ இருக்கா? வீட்டில கேட்டா காட்டுறதுக்கு" என்று இழுத்தான் ராம்.

"வீட்டில காட்டுறதுக்கா? இல்ல உங்களுக்கா?" என்று அருணாசலம் கேட்க "நீங்க ரொம்ப பிரிலியன்ட் மாமா" என்று சொல்லி சிரித்தான்.

சிரித்துக் கொண்டே கீர்த்தியின் போட்டோவை கொடுத்தார் அருணாசலம். பாவாடை தாவணியில் தலையில் முல்லை சரம் சூடி அழகு தேவதையாக இருந்தாள். அவள் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் சுய உணர்வு பெற்றவன் தன் மாமானாருடன் நேரத்தை கழித்து விட்டு வீட்டிற்கு கிளம்பினான். வீட்டிற்கு வந்தவனுக்கு பயங்கர வரவேற்பு. அர்ஜுன் வானத்தில் பறந்து கொண்டு இருந்தான்.

"என்ன அண்ணா ஆச்சு? கீர்த்தனா அப்பா ஓகே சொல்லிட்டாங்களா?" என்று பரபரத்தான்.

அர்ஜுனிடம் எதையும் ஷேர் பண்ணும் ராம் இதையும் சொன்னான். அர்ஜுனுக்கு கீர்த்தி அத்தை பெண் என்பது மேலும் குதூகலத்தை ஏற்படுத்தியது.

"பூரணி அத்தை பொண்ணு தான் கீர்த்தனாவா.." என்று ஆச்சரியப்பட்ட அர்ஜுன் "ஆனால் உன் காதலுக்கு அப்பா இனி போர்க் கொடி உயர்த்துவாரே" என்று கவலைப்பட்டான்.

ராம் யோசிக்க அர்ஜுன் "ஏற்கனவே அப்பா க்கு பூரணி அத்தை மேல கோபம். அவங்க பேர் கூட இந்த வீட்டில சொல்ல அனுமதிக்க மாட்டாங்க. ஆனா நீங்க பூரணி அத்தை பொண்ணயே கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னா ஒத்துப்பாங்களா? இனி அப்பாவ தான் சமாளிக்க முடியாது" என்று புலம்பினான்.

"அப்பா மட்டும் இல்ல கீர்த்தியும் சம்மதிக்க மாட்டாள். அவளையும் சமாளிக்கனும்" என்று ராம் கூற "முடியுமா அண்ணா?" என்று கேட்டான் அர்ஜுன்.

"எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டாமோ" என்று ராம் விஜய் பாணியில் கூற "ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வையிட் பார்க்குறியா.. பார்க்குறியா.." என்று சூர்யா பாணியில் கூறி கையை ஓங்கினான் அர்ஜுன்.

"டேய் என்ன டா இது ? நான் உன் அண்ணன் டா" என்று ராம் கூற "அண்ணன் மாதிரியா நடந்துக்குறீங்க? எவ்வளவு சீரியசான மேட்டர் பற்றி பேசி கிட்டு இருக்கோம் நீங்க காமெடி பண்ணுறீங்களா " என்று கடுப்புடன் கேட்டான்.

"சரிடா சமாளிப்போம். இப்போ உனக்கு கீர்த்திய பார்க்கனுமா? வேணாமா?" என்று ராம் கேட்க அர்ஜுன் வாசலை பார்த்தான்.

"அங்க என்னடா பார்க்குற?"

"கீர்த்திய பார்க்குறியானு கேட்டீங்களே அது தான்" என்று அர்ஜுன் கூற ராம் அவன் முதுகில் ஒரு அடி வைத்தான்.

"இப்போ எதுக்கு அடிக்குறீங்க?"

"கீர்த்திய நேருல மட்டும் இல்ல போட்டோல கூட பார்க்கலாம்" என்று புகைப்படத்தை காட்டினான்.

போடோவை வாங்கி பார்த்தவன் "அத்தை பொண்ணு அம்சமா தான் இருக்குறா" என்றான்.

ராம் முறைத்து பார்த்த உடன் "பொறாமைய பாரு.. உங்க சொத்த யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க. இந்தா நீங்களே வச்சிக்கோங்க" என்று கூறி போட்டோவை கொடுத்து விட்டு அவன் அப்பா அறைக்குள் சென்றான்.

ராமும் பின் தொடர்ந்து சென்று தந்தையிடம் போட்டோவை காட்டினான். "நீ ரொம்ப ரொம்ப பார்ஸ்ட்டா. பொண்ணு அம்சமா குடும்ப பொண்ணு மாதிரி நல்லா இருக்குறா. சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோ. எப்போ பொண்ணு பார்க்க அவங்க வீட்டுக்கு போகலாம்?" என்று கேட்டார் பிரகாஷ்.

"அவ படிப்பு முடியட்டும்பா . இரண்டு வருசம் தானே வெயிட் பண்ணலாம். நான் மாமா கிட்ட பேசுறேன்" என்று கூறி விட்டு ராம் நாக்கை கடித்துக் கொண்டான்.

"மாமா வா" என்று யோசித்த பிரகாஷ் "இப்பவே மாமனாருக்கு ஐஸ் வைக்க ஆரம்பிச்சுட்டியா? நடத்து.. நடத்து.." என்று கூறி சிரித்தார்.

"அப்பாடா" என்று பெரு மூச்சு விட்டு விட்டு சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினான் ராம். அர்ஜுன் தந்தையுடன் உலக விசயங்களை அலசி ஆரய ஆரம்பித்து விட்டான்.

இனி எப்படியாவது கீர்த்தனாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தன் அறைக்கு சென்றான் ராம்..

காதல் கண்மணியே..!
நீ இல்லா வாழ்வு எனக்கு நரகம் என
புரியவைத்து விட்டாயடி.
காதல் எனும் வார்த்தையை வெறுப்பாக பார்க்கும் நீ
என் காதலை ஏற்று கொள்வாயா?
உன் ஒற்றை பதிலுக்காக காத்திருக்கிறேன்..
உன் பதிலில் தான் என் உயிர்மூச்சு
இனியும் சுவாசிக்க வேண்டுமோ
எனக்கான பதிலை சொல்லி விடு
உயிர் உள்ளவரை உன்னை பொத்தி பாதுகாக்கிறேன்..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9

அருண் வகுப்பறையில் இருந்து அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான்.. "எப்படி கீர்த்தனா கிட்ட பேசுறது?" என்ன யோசனையின் போது தருண் அவன் முதுகில் தட்டினான்.

"என்ன அருண் தீவிர யோசனையா இருக்கே?"

"எதைப் பற்றி யோசிப்பேன்? எல்லாம் கீர்த்தி பற்றி தான்" என்றான் அருண்.

"அட மறந்துட்டேன். அன்னைக்கு கீர்த்தி கிட்ட பேசுறேன்னு போனியே.. என்னாச்சு? பேசுனியா?"என்று ஆர்வமாய் விசாரித்தான் தருண்.

“எங்கேடா பேச முடிந்தது? அனு இடையில் வந்து கெடுத்துட்டா.. அவளுக்கு அப்போ தான் அம்மாக்கு கிஃப்ட் வாங்க ஞாபகம் வந்துச்சு.. சே.. நல்ல சான்ஸ் மிஸ் பண்ண வச்சிட்டா.." என்று தங்கையை திட்டினான்.

"சரி விடுடா..இன்னொரு சான்ஸ் கிடைக்காமலா போகும்?" என்று தேற்றினான் தருண்..

இன்னைக்கு அனுக்கு டிரஸ் எடுக்க போகணும்..அதுக்கு செலக்ட் பண்ண கீர்த்தியை கூப்பிட்டால் என்ன? என்று யோசித்தான் அருண்..

"அனுக்கு ட்ரெஸ்ஸா? இப்போ எதுக்குடா? எதாவது ஸ்பெஷல்??” என்று கேட்டான் தருண்..

"எந்த ஸ்பெஷல் இல்ல... வாய்ப்புகள் எப்பவும் தேடி வராதுடா..நாம தான் தேடி போகணும்.. சோ கீர்த்தியை வெளில கூட்டிட்டு போய் பேச இது ஒரு சான்ஸ்" என்ற அருண், "அதோ கீர்த்தி வர்ரா..நான் போய் கேக்குறேன் " என்று நடந்து வந்து கொண்டிருந்த கீர்த்தியை நோக்கி சென்றான்.

"என்னவோ பண்ணு.. நல்லா இருந்தா சரி" என்று நினைத்த தருண் அவ்விடம் விட்டு அகன்றான்..

அருண் கீர்த்தியை நோக்கி சென்றான்.. கீர்த்தியின்￰ பக்கத்தில் சென்றவன் "ஹாய் கீர்த்தி" என்றான். பின் அங்கும் இங்கும் பார்த்தான்..

பக்கத்தில் சட்டென கேட்ட சத்தத்தில் ஒரு வினாடி ஸ்தம்பித்த கீர்த்தி அருண் நின்றவுடன் நிம்மதி அடைந்தவளாய் "ஹாய் அருண் அனு கிளாஸ்ல இருக்கா" என்று அவன் கேட்காத கேள்விக்கு பதில் அளித்தாள்..

'அனு இல்லாத நேரம் தானே பேச முடியும்..இப்போ எதுக்கு அவளை இழுக்குறா' என்று நினைத்தவன் "அனு கிளாஸ்ல இருக்கானு தெரியுமே கீர்த்தி..நான் உன்கிட்ட தான் பேச வந்தேன்.." என்றான்..

"என்கிட்டயா?? என்ன பேசணும்?" என்று புரியாமல் கேட்டாள் கீர்த்தி..

"இன்னைக்கு ஈவினிங் என் கூட பக்கத்துல இருக்குற ஷாப்பிங் மாலுக்கு வர முடியுமா?" என்று கேட்டான்..

அவனை பார்த்து முறைத்தாள் கீர்த்தனா..

'என்னடா இவ முறைக்கிறா? பக்கத்துல இருக்குற மாலுக்கு தானே கூப்பிட்டேன்.. வேற எங்கேயும் இல்லயே' என்று யோசித்தவன் 'ஓ.. நான் முழுசா சொல்லாததால் தான் தப்பா நினைக்கிறாளோ' என்று நினைத்தவன் வேகமாக "அனுவுக்கு ஒரு ட்ரெஸ் செலக்ட் பண்ணணும்.. செலக்ட் பண்ணி கொடுக்க நீ வருவியான்னு தான் கேட்டேன்" என்றான்..

"இவன் என்ன லூசா?" என்கிற மாதிரி அவனை பார்த்தாள் கீர்த்தி..

" என்ன கீர்த்தி? பதிலயே காணோம்.." என்றான் அருண்..

"ட்ரெஸ் செலக்ட் பண்ண அனு தானே வரணும்.. அவளை விடவா நான் நல்லா செலக்ட் பண்ணுவேன்??" என்று கேட்டாள்..

"அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் அவளை கூப்பிடல. அதுவும் இல்லாம நீ போடுற ட்ரெஸ்ஸஸ் நீ எவ்வளவு ரசனையானவன்னு காட்டுதே.. அதுதான் உன்னை கூப்பிட்டேன்.." என்றான். கூடவே அவள் ரசனையானவள்னு ஒரு ஐஸ் வேற.

அதில் சீக்கிரம் உருகுவாளா கீர்த்தி.. கொஞ்ச நேரம் யோசித்தவள் "சரி சீக்கிரம் கிளாஸ் முடிஞ்சா வரேன்.. ஆனா சீக்கிரம் ஹாஸ்டலுக்கு திரும்பிடணும்.. வார்டன் திட்டுவாங்க" என்றாள்.

"சரி கீர்த்தி.. நீ கிளாஸ் முடிஞ்ச உடனே சொல்லு. போகலாம்.." என்றவன் "பை" சொல்லி விட்டு கிளம்பினான்.

கிளாஸ்க்கு வந்தவள் அனுவிடம் "ஈவினிங் ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கு.. சோ நான் வர கொஞ்சம் டைம் ஆகும்" என்றாள். "சரி கீர்த்தி" என்ற அனு அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

மாலை 4 மணிக்கு கீர்த்தி அருணுடன் ஷாப்பிங் போனாள். அருண் கேட்ட மாடலில் அவனுக்கு துணிகளை தேர்வு செய்ய உதவினாள். அருண் துணிகளை பில் போட்டு வாங்கிய பின் மணியை பார்த்தான். 4:30 என்று காட்டியது. அரை மணி நேரமே கடந்திருந்தது. அவளிடம் பேச வாய்ப்பு இதுவே என எண்ணியவன் "5 மணிக்கு கிளம்பினால் போதுமா கீர்த்தி?" என்று கேட்டான்.

"சரி" என்றாள் கீர்த்தி..

"வா காபி குடிக்கலாம்" என்று கூறி விட்டு முன்னே நடந்தான்.

'இவன் ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்குறானே' என்று நினைத்தவள் அவன் பின்னே நடந்தாள்.

ஒரு டேபிள் ல அமர்ந்து காபி ஆர்டர் செய்தனர். ‘எப்படி பேச்சை ஆரம்பிப்பது’ என்று யோசித்து கொண்டிருந்தான் அருண். ‘அரை மணி நேரம் லேட் ஆக்கிட்டு யோசிசிகிட்டு இருக்கான’ என்று மனதில் திட்டி கொண்டிருந்தாள் கீர்த்தனா.

ஒரு வழியாக “கீர்த்தி உனக்கு லவ்...” என்று தொடங்கும் போதே கீர்த்தியின் செல்போன் ஒலித்தது. திரையில் “அப்பா” என்று காட்டியதும் "எக்ஸ்க்யூஸ் மி" என்று அருணிடம் கூறி விட்டு தந்தையிடம் பேச ஆரம்பித்தாள். அரை மணி நேரம் பேசியவள் பேச்சை முடித்து விட்டு மணியை பார்த்தாள். மணி 5:1௦... ‘அய்யோ’ என்று கூறி விட்டு “சாரி அருண். டைம் ஆயிடுச்சு கிளம்பலாமா?” என்று கேட்டாள்.

“உனக்கு லவ் பிடிக்குமா? அதை பத்தி என்ன நினைக்குற?” என்று கேட்க வந்தவன் அவள் அவசரத்தை பார்த்து “சரி கிளம்பலாம்” என்று கூறி பில்லை வைத்து விட்டு எழும்பினான். அவனை விட அதிக அவசரத்தில் இருந்த கீர்த்தி திரும்பும் போது ஒருவன் மீது மோதி விட்டாள். “பார்த்து மெதுவா போ கீர்த்தி” என்று கூறிய அருண் அவளுடன் வேகமாக நடந்தான்.

அவள் யார் மீது மோதினாலோ அவன் சிலையாய் நின்றான். அவன் வேறு யாரும் இல்லை. அர்ஜுன் தான். தன் நண்பர்களுடன் ஷாப்பிங் வந்திருந்தான். கீர்த்தியை பார்த்தவன் ‘அட நம்ம அத்தை பொண்ணு’ என்று ஆச்சர்யபட்டான். ஆனால் கூட வந்தவனை பார்த்ததும் ‘நம்ம அண்ணாக்கு போட்டியா... இதை அண்ணா கிட்ட சொல்லணும்.’ என்று நினைத்தவனாய் ராமிற்கு போன் செய்தான்.

விசயத்தை கேட்ட ராமிற்கு ஆச்சர்யமாய் இருந்தது. கீர்த்தி அவளவு சீக்கிரம் யாருடனும் வெளியே செல்பவள் அல்ல. கூட வந்தவனின் அடையாளங்களை கேட்டு அறிந்தவன் ‘அன்று பார்த்தவனும் இவனும் ஓன்று தான்’ என்று எண்ணி கொண்டான். “இவனுடன் எதற்கு வெளியே சென்றாள் அதுவும் மாலை நேரத்தில் தனியாக” என்று எண்ணியவன் அர்ஜுனிடம் “இது அவளோட நண்பன் அர்ஜுன்.. நான் இதுக்கு முன்னாடியும் பார்த்திருக்கிறேன்.” என்றான்

“ப்ரெண்ட் தானா? ஆனால் அவனை பாக்க அப்படி தோனல அண்ணா. உங்க ரூட்ல கிராஸ் ஆகாம பாத்துகோங்க” என்றவன் கார்த்திக் கூப்பிடும் சத்தம் கேட்டு “பை அண்ணா” என்று போனை வைத்தான்.

‘இது என்னடா புது குழப்பம்?’ என்று புலம்பிய ராம் “சீக்கிரமே கீர்த்தி கிட்ட பேசணும்” என்று முடிவெடுத்தான்.

அடுத்த நாள் ராம் தனது நண்பனை பார்க்க அவன் வீட்டிற்கு சென்றிருந்தான். அவனுடைய நண்பனின் மனைவிக்கு புடவை எடுக்க ராமை துணைக்கு அழைத்தான். தானும் கீர்த்தனாவுக்கு எதாவது டிரஸ் எடுக்கலாம் என்ற எண்ணத்துடன் அவனுடன் சென்றான் ராம்.

அவன் நண்பன் ஹரி புடவையை தேர்வு செய்யும் போது ராமின் கண்களில் ஒரு புடவை பட்டது. அழகான வேலைபாடுகளுடன் கீர்த்தனாவுக்கு பொருத்தமாக இருந்தது. அந்த புடவையை பில் போட சொன்னான் ராம். ஹரி சந்தேகமாக பார்த்தான்.

“என்னடா இப்டி பாக்குற? நான் என்ன கொலை குற்றமா பண்ணிட்டேன்?” என்று கேட்டான் ராம்.

“இல்லடா புடவை எல்லாம் எடுக்குறியே.. உன் வீட்ல வேற பெண்கள் யாரும் இல்லையே.. என்ன மேட்டர்? லவ் பண்றியா?” என்று கேட்டான் ஹரி.

“லவ் இல்ல.. கல்யாணமே பண்ண போறேன்” என்றான் ராம் புன்னகைத்து கொண்டே.

“என்னது கல்யாணமா? இவ்வளவு நேரம் கூடவே இருந்தியேடா.. இத சொல்லவே இல்ல” என்று குறைப்பட்டான் ஹரி.

“சொல்ல கூடாதுன்னு இல்லடா.. நான் இன்னும் அவகிட்ட பேசல. எல்லாம் பிக்ஸ் ஆன பிறகு சொல்லலாம்னு நினச்சேன்” என்றான் ராம்.

“அது சரி ஆல் தி பெஸ்ட்.. சீக்கிரம் இன்விடேஷன் குடு” என்று வாழ்த்தினான் ஹரி. அவனும் புடவையை செலக்ட் பண்ணவே இரண்டு பேரும் பில் போட்டு புடவையை வாங்கி கொண்டு வெளியேறினர். ஹரி தனது காரில் வீட்டுக்கு கிளம்பினான்.

ராம் தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்ப எத்தனிக்கும் போது பக்கத்தில் இருந்த பார்க் பெஞ்சில் மாலதி அமர்ந்திருப்பதை பார்த்தான். முகமெல்லாம் வாடி இருந்தது. மாலதி வேறு யாரும் அல்ல. ராமின் கூட வேலை பார்க்கும் நிகிலனின் மனைவி தான்.

‘மாலதி எதுக்காக இவ்வளவு களைச்சு போய் உக்காந்திருக்கா?’ என்று எண்ணிய ராம் பைக்கை நிறுத்தி விட்டு அவள் அருகில் சென்றான்.

“என்ன மாலதி இங்க வந்து ஒரு மாதிரியா உக்காந்திருக்க?” என்று கேட்டான். பின்னால் திடீரென கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்த மாலதி, ராமை கண்டவுடன் “ஒன்னும் இல்ல அண்ணா. சும்மா தான் வீட்டுல போர் அடிச்சிதுன்னு வந்தேன். கொஞ்சம் தலை சுத்தின மாதிரி இருந்துச்சு. அதான் அப்படியே உக்காந்துட்டேன்” என்றாள்.

“ஹேய் என்னாச்சு?ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்று பதறினான் ராம்.

“அதெல்லாம் வேண்டாம் அண்ணா. நிகில் வரேன்னு சொன்னார். அது தான் வெயிட் பண்றேன்.. அவர் சீக்கிரம் வந்துடுவாரு.. நீங்க கிளம்புங்க” என்றாள் மாலதி.

“உன்னை இப்படியே விட்டு போறதா? சரி எழும்பு.. ஜூஸ் குடிச்சா சரி ஆகும்”

“இல்ல அண்ணா எனக்கு ஒன்னும் இல்ல”

“நீ இப்டி சொன்னா கேக்க மாட்ட.. இங்கயே இரு. நான் வாங்கிட்டு வரேன்.” என்றவன் அவள் கையை அழுத்தி அமர வைத்து விட்டு சென்றான்.

அந்த நேரத்தில் பார்க்கில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த கீர்த்தனாவின் கண்களில் இந்த காட்சி பட்டது.

“யார் இது? இவர் வேற கைய பிடிச்சு இருத்திகிட்டு போறாரு.. எங்க போனாரு?” என்று தேடியவளின் கண்களில் கையில் ஜூஸ் உடன் வந்த ராம் பட்டான்.

“ஆமா இவங்க பெரிய வேங்கை நாட்டு இளவரசி. இவர் தான் ஜூஸ் வாங்கி கொண்டு போய் குடுக்கணும். நடந்து போய் வாங்கிக்க மாட்டாங்களோ..” என்று எரிச்சலுடன் பார்த்தாள்.

மாலதியிடம் ராம் ஜூஸ் கொடுத்தான். அவள் வாங்க மறுக்கவே கண்டித்து அவள் கையில் அதை திணித்தான்.

“ஆமா கொடுக்குற ஜூஸ்-அ வாங்கி குடிக்க கூட இவ்ளோ பில்டப். என்கிட்டே கண்ணாலேயே கவிதை படிக்றது என்ன? இவகிட்ட இப்டி கொஞ்சுறது என்ன? இனி ஒருதரம் கண்ணை கொண்டு லவ் பண்ண வரட்டும். அப்புறம் இருக்கு கச்சேரி” என்று பொருமிய கீர்த்தி பார்க்கை விட்டு வெளியேறினாள்.

இதை எல்லாம் அறியாமல் மாலதியை ஜூஸ் குடிக்க வைப்பதில் முனைப்புடன் இருந்தான் ராம். நிகிலன் வந்ததும் அவனுடன் மாலதியை அனுப்பி விட்டு தனது பைக்கில் வீட்டுக்கு கிளம்பினான் ராம்.
----------------------

சுரேஷ் அன்று ரொம்ப கோபமா இருந்தான்.. ஓயாமல் அவன் அம்மா அறிவுரை சொல்லி கொண்டிருக்கவே எரிச்சலுடன் கத்தினான்.

“உனக்கு வேற வேலையே இல்லையம்மா? சும்மா சும்மா அட்வைஸ் பணிகிட்டு இருக்குற. எனக்கு தெரியும் நான் எப்படி வாழணும்னு. நீ ஒன்னும் எனக்கு அட்வைஸ் பண்ண தேவை இல்லை” என்று எரிச்சலுடன் கூறினான்.

“ஏன் டா இப்படி இருக்குற? நான் சொல்லுற ஒரு விஷயத்தையாவது காது கொடுத்து கேக்குறியா? எல்லா கெட்ட பழக்கத்தையும் கத்து வச்சிருக்க. இப்போ பொண்ணுங்ககிட பிரச்சனை பண்ணி சஸ்பெண்ட் வரைக்கும் வந்துடுச்சு. ரெண்டு நாளைல காலேஜ்க்கு திரும்பவும் போகணும். இனியாவது ஒழுங்கா படிக்குற வேலைய பாரு” என்று கவலை பட்டார் அவன் அம்மா

“ஒழுங்கா படிக்கணுமா? அதுவும் நான்... ஹா ஹா .. இனி என் முதல் வேலையே அந்த கீர்த்தனாவை கொல்றது தான், என்னையே அவமானபடுத்திட்டா. காலேஜ் ல ராஜா மாதிரி சுத்திட்டு இருந்த என்னை வீட்டுல தனியா உக்காந்து புலம்ப வச்சுட்டா. அவளை நான் சும்மா விட மாட்டேன். இந்த சுரேஷ் யாருன்னு அவளுக்கு காட்டுவேன்.. ஏன் டா சுரேஷ் அ பகைச்சிட்டோம்னு அவ தினம் தினம் அழணும்.” என்று சூளுரைத்தவன் முத்துவை கூப்பிட்டான்.

முத்து வரும் முன் “டேய் சரி இல்லடா அந்த பொண்ணு எந்த தப்பும் பண்ணல. நீ பண்ணுன தப்புக்கு இது சரியான தண்டனை தான். உன் தப்புக்கு அந்த பொண்ணு என்னடா பாவம் பண்ணினா?"’ என்று கேட்டார் சுரேஷின் அம்மா.

“என்னை பகைச்சிகிட்டது தான் தப்பு” என்றவன் முத்து வரவும் அவனுடன் வெளியேறினான்.

“அய்யோ இவன் அப்பா செல்லம் குடுத்து அவன் தப்புகளை கண்டுக்காம விட்டு இந்த நிலமைக்கு வந்துடானே.. இனி என்ன நடக்க போகுதோ?” என்று கவலை பட்டார்.

சுரேஷின் தந்தை கன்ஸ்ட்ரக்ஷன் வேலை எடுத்து செய்வார். நல்ல வருமானம் வரவே வீட்டில் மகனை கவனிக்க தவறினார். கேட்கும் போது பணம் கொடுப்பதொடு சரி. முத்து அவருடைய வலது கை மாதிரி. எதற்கும் அவன் தான் அவருடன் நிற்பான். அவருடன் சேர்வதற்கு முன் திருட்டு வழிப்பறி என்று பல வேலைகளில் கை தேர்ந்தவன். எப்படியோ விடுபட்டு சுரேஷ் அப்பாவுடன் சேர்ந்து நல்லா வாழ்கிறான். இபோதும் கீர்த்தியை பழிவாங்க சுரேஷ் முத்துவிடம் போய் உதவிக்கு நின்றான்.

“என்ன சுரேஷ் எதோ பெருசா பிளான் போடுற போல?” என்று கேட்டான் முத்து.

“அந்த கீர்த்தனாவை பழி வாங்கணும்.. அவ வாழக்கை முழுசும் அழணும். அப்படி ஒரு தண்டனை கொடுக்கணும்.” என்றான் சுரேஷ்.

“என்ன தண்டனை கொடுக்க போற?”

“அவளுக்கு மனசுல பெரிய அழகினு நினைப்பு. அந்த அழகை இல்லாம பண்ணும்”

“அதுக்கு??”

“எனக்கு அவ முக அழகை உருகுலைக்கணும். அவ அதுக்கு அப்புறம் வெளிய வரவே யோசிக்கணும்.

“அதுக்கு நான் என்ன பண்ணனும்?”

“எனக்கு ஆசிட் வேணும். உனக்கு தான் நிறைய பேரை தெரியுமே. வாங்கி கொடு. அவ அழியணும்.”

“கண்டிப்பா இத பண்ணியே ஆகணுமா?”

“நான் காலம் முழுக்க ஜெயில்ல கிடந்தாலும் பரவாயில்லை. எனக்கு அவளை அழிக்கணும். அப்போ தான் நான் பட்ட அவமானத்தை கொஞ்சம் மறக்க முடியும். “

“சரி நான் வாங்கி தரேன். நீ அதை பண்ண வேண்டாம். அத பண்றதுக்கு ஆள் இருக்காங்க. நீ இதுல மாட்ட மாட்டாய். நீ சந்தோசமா காலேஜ் போ. அவளை நீ சொன்ன மாதிரி அழிக்கிறது என் பொறுப்பு.” என்ற முத்து அவனை வீட்டிற்கு அழைத்து சென்றான்.

இரண்டு நாட்கள் கழித்து காலேஜ்கு சென்றான் சுரேஷ். வழக்கமாக அவன் அமரும் வேப்பமரத்தடியில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் நண்பர்கள் யாரையும் காணவில்லை. “இன்னைக்கு ஏன் இவளவு லேட் ஆகுது? எப்பவுமே சீக்கிரமே வருவானுகளே” என்று நினைத்து கொண்டிருக்கும் போதே வினய் வருவதை பார்த்தான்.

“டேய் மச்சான்.. எப்படிடா இருக்க?” என்றான் சுரேஷ்.

திரும்பி அவனை பார்த்த வினய் “ஹாய் டா நல்ல இருக்கேன். நீ எப்படி இருக்க? என்று கேட்டான்.

“பார்த்தால் எப்டி இருக்கு? அந்த கீர்த்தனா மேல இருக்குற கோபம் துளியும் குறையாமல் அப்டியே இருக்கேன்” என்றான் சுரேஷ் கோபமாய்.

சுற்றும் முற்றும் பார்த்தான் வினய். அவன் கண்களில் ஒரு வித பயம் கலந்த கலக்கம் தெரிந்தது.

“என்னடா அங்கயும் இங்கயும் பாக்குற? எதாவது பிரச்சனையா?” என்று கேட்டான் சுரேஷ்.

“நீ தான் பிரச்சனையே” என்று சொன்ன வினய் அவனை பார்த்து “என்னடா சொல்ற? நான் என்ன பன்னுனேன்?” என்று கேட்டான் சுரேஷ்.

“நீ இப்போ வரைக்கும் ஒண்ணும் பண்ணல.. இனிமேலும் பண்ணாமல் இருந்தா நல்லது” என்ற வினயை புரியாமல் பார்த்தான் சுரேஷ்.

“டேய் புரியுற மாதிரி சொல்லுடா நீ மட்டும் தானே என்னோட பிரண்ட்.. உனக்கு நான் என்ன கெடுதல் பண்ணுவேன்னு நினைக்குற?”

“நீ இப்போ என்கிட்டே பேசுறதே பிரச்சன்னை தான். யாரவது பாத்து என் அப்பாகிட்ட சொல்லிட்டா இன்னையோட நான் காலி.” என்ற வினய் அங்கிருந்து நகர்ந்தான்.

“டேய் நில்லுடா” என்று அவன் கை பற்றி நிறுத்தினான் சுரேஷ்.

“இப்போ எதுக்கு நீ பயபடுற? ஏன் என்கிட்ட பேச மாட்டேன்னு சொல்ற? பதில் சொல்லிட்டு போ” என்றான் சுரேஷ்.

“உங்கிட்ட பேசுனா உன் குணம் எனக்கு வந்துடும்.. பொண்ணு கையை பிடிச்சு இழுத்தவன் கூட பேச கூடாதாம். உன் கூட பேசுனத பாத்தாலோ அல்லது யாரவது சொல்லி அறிந்தாலோ படிப்பை நிறுத்திடுவேன்னு என் அப்பா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. உனக்கே தெரியும் நான் எவ்ளோ போராடி இங்க படிக்க வந்தேன்னு. உன்னால அது கெடனுமா? அதனால இனி உனக்கும் எனக்கும் இடைல எந்த சம்மந்தமும் இல்ல. இனி என்கிட்டே பேசாத. சாரி சுரேஷ்” என்றவன் திரும்பி பார்க்காமல் நடந்தான்.

சுரேஷ் எரிமலையாய் கொந்தளித்து கொண்டிருந்தான். ‘எல்லாத்துக்கும் காரணம் அந்த கீர்த்தனா தான்’ என்று கருவியவன் முத்துவிற்கு அழைப்பு விடுத்தான்.

“என்ன சுரேஷ் காலேஜ்ல எல்லாம் நல்லா தானே போயிட்டு இருக்கு.. எதுவும் பிரச்சனை இல்லையே” என்று கேட்டான் முத்து.

"எல்லாமே பிரச்சனையா இருக்கு முத்து. இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?" என்று நிகழ்ந்த அனைத்தையும் சொன்னவன்.

"எனக்கு அனு மேல் கூட கோபம் இல்லை. ஆனால் அந்த கீர்த்தனா என்னை அடிச்சு அவமானப்படுத்திட்டா. அசிங்கமா இருக்கு. என்னை பார்த்து பயந்தவன் எல்லாம் என்னை புழுவை பாக்குற மாதிரி பாக்குறான். என்னால தாங்க முடியல. அந்த கீர்த்தனாவை பழிவாங்கியே தீரனும். நான் சொன்னதை பண்ணிட்டியா?"என்று கேட்டான் சுரேஷ்.

"எல்லாமே ரெடி, ஆள் கூட ரெடி. ஆனால் என்ன காரணத்துக்கு பண்றான்னு சொல்ல தான் எதுவும் ஐடியா தோணலை"என்றான் முத்து.

"அவ எல்லா வாரமும் செவ்வாய், சனி இரண்டு நாளும் பக்கத்துல இருக்குற பார்க்குக்கு போவாள்.. அன்னைக்கு அவகிட்ட ஏதாவது பிரச்சனை பண்ண சொல்லு. கண்டிப்பா அவ வயலன்ட் ஆவாள். அதுக்கு பழிவாங்கதான்னு சொல்லு. சீக்கிரமா வேலைய முடி. என் பேர் வரக்கூடாது"என்றான் சுரேஷ்.

"பக்கா பிளான் சுரேஷ்" என்ற முத்து, "நான் அவன்கிட்ட சொல்லிடுறேன். இந்த வாரமே அவ கதை முடிஞ்சுடும். நீ கவலைபடாம இரு" என்று கூறி போனை வைத்தான்.

"ஏய் கீர்த்தனா.. சீக்கிரமே உன் கதை க்ளோஸ்" என்று சிரித்தவன் வகுப்பறைக்கு சென்றான் .

அன்று செவ்வாய்கிழமை.. மாலை பார்க் போக கிளம்பி கொண்டிருந்தாள் கீர்த்தனா.. அப்போது அனு அங்கே வந்தாள்.

"கீர்த்தி ரெடியா?"

"நான் ரெடி.. ஆமா நீ எங்க வர்ற?"

"ஏன் நான் உன்கூட வர கூடாதா? எல்லா வாரமும் நீ தனியாவே போற.. அங்கே என்ன ரகசியம் இருக்குனு நானும் பார்க்க வேணாமா?"

"ரகசியம் ஒன்னுமில்லை.. சும்மா மன அமைதிக்காக தான் போறேன். இயற்கையை ரசித்தால் மைண்ட் ஃப்ரி ஆகும்.. அதுக்காக தான்.. சரி நீயும் கிளம்பிட்டேனா வா சீக்கிரம் போய்ட்டு வந்துடலாம்".

"இதோ நான் ரெடி வா போகலாம்."

அனன்யாவும் கீர்த்தனாவும் பார்க்கில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே ஒருவன் வநதான். வந்தவன் கையில் ஒரு ரோஜா இருந்தது. கீர்த்தனாவின் அருகில் வந்தவன் அவள்முன் ஒரு காலை மடக்கி மண்டியிட்டு அவளிடம் ரோஜா பூவை நீட்டி "கீர்த்தி ஐ லவ் யூ டியர்" என்றான்.

திடீரென ஒருவன் தன் முன் வந்து அப்படி சொன்னதும் கீர்த்தனாவிற்க்கு கோபம் தலைக்கேறியது. அனு அதிர்ச்சியுடன் நின்றாள்.

"ஹேய் மேன் நீ யாரு? உன்னை எனக்கு தெரியவே தெரியாதே.. எவ்வளவு தைரியம் உனக்கு?" என்று கோபமாக கேட்டாள்.

"உனக்கு என்னை தெரியாது, பட் உன்னை எனக்கு நல்லாவே தெரியும். உன்னை நான் நாலு மாசமா ஃபாலோ பணறேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ” என்றான் அவன்.

"நீ என்ன லூசா? உன் பேர், ஊர் எதுவுமே எனக்கு தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் நான் உன்னை லவ் பண்ற ஐடியா எல்லாம் இல்லை. மரியாதையா கிளம்பு." என்றாள் கீர்த்தி.

"என் பேரு அரவிந்த்... சென்னை தான்... நான் உன்னை ரொம்ப சின்சியரா லவ் பண்றேன். ப்ளிஸ் அக்செப்ட் மை லவ்" என்று அவள் கரம் பிடித்த அடுத்த நொடி, கீர்த்தியின் கைவிரல்கள் அவன் கன்னத்தை பதம் பார்த்திருநதன..

கன்னத்தை பிடித்து கொண்டு நின்றவனை பார்த்து "அதுதான் ஒழுங்கா கிளம்புனு சொல்றேன்ல.. எதுக்கு கையை பிடிக்குற? ஈவ்டீசிங் கேஸ்ல உள்ளே போயிடுவே மைன்ட் இட்" எனறவள் கூடி வநதிருந்த கூட்டத்தை விலக்கி கொண்டு பார்க்கை விட்டு வெளியேறினாள்.

அரவிந்த் ஒரு சிரிப்புடன் கைப்பேசியை எடுத்து முத்துவிற்கு அழைத்தான்.

"என்ன அரவிந்த்?" என்று கேட்ட முத்துவிடம் "சக்ஸஸ்" என்று கூறி சிரித்தான்.

"சூப்பர்டா... இனி அவளோட கதையை முடிச்சுருடா. அவ இந்த உலகத்தை பாக்கவே வெட்கபடனும்" என்று முத்து கூற "இனிமேல் நான் பாத்துக்குறேன்" என்று கூறி விட்டு போனை கட் செய்தான்.

அடுத்த சனிக்கிழமைக்கு அரவிந்த் காத்திருக்க, இது எதையும் அறியாமல் அனுவிடம் நடந்தவற்றை பற்றி புலம்பி தீர்த்தாள்... அனுவும் ஒருவழியாக அவளை அமைதிப்படுத்தி தூங்க வைத்தாள்.

உன் கண்களில் கண்ட காதல் பொய்யோ?
உன் கரங்கள் இன்னொருத்தியை தீண்டும் நேரம்
என் தேகம் தகிக்கிறதடா..
நீ எனக்கானவன் மட்டுமே
அதை நீ புரிந்து கொள்ளும் நேரம்
நமக்கான காலம் முடியாமல் இருக்க வேண்டுமே
காலத்தின் கையில் நம் காதல்
காத்து கொள்ளடா என் காதலனே..!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10

சனிக்கிழமை அன்று வெளியே கிளம்பி கொண்டிருந்தான் ராம். கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டிருந்தவனின் அருகில் அர்ஜுன் வந்தான்.

"என்ன பிரதர் ரொம்ப ஸ்மார்ட்டா தான் இருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும்.. அப்புறம் எதுக்கு இந்த லுக்?" என்று சிரித்த படியே கேட்டான்.

"வர வர உனக்கு வாய் ரொம்ப நீளுதுடா.. நான் இன்னைக்கு எங்கே போவேன்னு உனக்கு தெரியும் தானே" என்றான் ராம்.

"தெரியுமே கீர்த்தனா மேடம் பார்க்க போவீங்க.." என்ற அர்ஜுனனை பார்த்து,

"தெரியுதுல அவ முன்னாடி கொஞ்சம் அழகாக தெரிய வேணாமா?" என்று கேட்டான் ராம்.

"அழகு முகத்துல இல்லை.. மனசுல தான்னு சொன்ன அண்ணனா நீங்க?" என்று வியப்புடன் கேட்டான் அர்ஜுன்..

"அவனே தான்.. ஆனாலும் அவகிட்ட இன்னும் நான் என்னை பத்தி சொல்லலையே.. அது தான் கொஞ்சம் டென்சன்." என்றான் ராம்.

"ஏன் அண்ணா உங்க எக்ஸ்ப்ரசென்ஸ் கொஞ்சம் கூடவா அவளுக்கு புரிய வைக்கல..?" என்று கேட்டான் அர்ஜுன்..

"அவளுக்கு புரியுதுடா.. ஆனா அவ அதை வெளிகாட்டல.. என் பார்வையே அவளுக்கு எல்லாத்தையும் உணர்த்தும்.. அவ என்கிட்ட பேசுறப்ப ஒரு சார் ஸ்டூடண்ட் மாதிரி பேசல.. அதையும் தாண்டி சகஜமா பேசுறா.. கண்டிப்பா நான் சொன்ன அவ நோ சொல்ல மாட்டா" என்றான் ராம். ஆனாலும் அவன் முகம் தெளிவில்லை..

"அப்புறம் ஏன் டென்சன்?" என்று அர்ஜுன் கேட்க,

"சாதாரண ராம் இல்ல இப்போ நான் அவளுக்கு... அவளோட மாமா பையன்.. சும்மாவே நம்ம அப்பா மேல அவளுக்கு கோபம்.. இப்போ போய் நான் உண்மையை சொன்னால் அவள் கண்டிப்பா என்னை ஏத்துக்க மாட்டாள். அத்தை பட்ட கஷ்டம் அவளுக்கு நம்ம மேல வெறுப்பை உருவாகியிருக்கு.. நம்ம அப்பா அவங்கள சேர்த்திருந்தா அத்தையோட கஷ்ட நேரத்தில் கை குடுத்திருப்பார்களே.. அப்பா அவங்க கல்யாணத்தை ஏத்துகாம போனதால் தான் அத்தை குடும்பம் தனியா கஷ்ட பட வேண்டிய நிலமை வந்துச்சுனு கீர்த்தி நினைக்குறா.. அவளோட எண்ணத்தை மாற்ற டைம் ஆகும்.. உண்மைய புரிய வச்சு அவளை இந்த வீட்டுக்கு கூட்டிகிட்டு வரணும்.. அதுதான் என்னோட டென்ஷன்.." என்றான் ராம்..

"அப்பாவை எப்படி சமாளிக்க போறீங்க?? அவங்களுக்கும் அத்தை குடும்பத்தை பிடிக்காதே.." என்று கவலை பட்டான் அர்ஜுன்.

"அப்பா கிட்ட சொன்னால் புரிஞ்சுகுவாங்க.. அதை நான் பாத்துக்கிறேன்.." என்ற ராம் "சரிடா.. டைம் ஆச்சு.. போன வாரம் அவளை மீட் பண்ண முடியல.. இந்த வாரம் மிஸ் பண்ண கூடாது.. நான் கிளம்புறேன். எக்சாம் வருதுல.. ஒழுங்கா புக் எடுத்து படி.. வெளில எங்கேயும் போகாத.." என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

பார்க் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து வாசலையே பார்த்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கீர்த்தனா உள்ளே நுழைந்தாள்.. அவள் கண்களில் எதோ பயம் தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவாறே உள்ளே நடந்தாள்.

"என்னாச்சு இவளுக்கு எதுக்கு பயப்படுறா?"என்று நினைத்த ராம் அவள் கண்களில் படும் இடத்தில் போய் நின்று கொண்டான். அங்கும் இங்கும் பார்த்த கீர்த்தியின் கண்களில் ராம் தென்பட்டான். அவள் கண்களில் பயம் நீங்கி ஒரு தைரியம் தென்பட்டது. அதை ராமும் கவனித்தான்.

"என்னாச்சு இவளுக்கு?"என்று யோசித்தவன் அவளை நோக்கி நடந்தான்.

அவன் நடந்து வருவதை பார்த்த கீர்த்தி கோபத்தை தன் முகத்தில் கொண்டு வந்தாள்.. பின்னே.. போன வாரம் அவள் கண்முன் இன்னொரு பெண்ணிடம் கொஞ்சியவன் ஆயிற்றே..

அவள் முன் வந்தவன் "ஹாய் கீர்த்தி" என்றான்.

முகத்தில் கஷ்டபட்டு வருவித்து கொண்ட இறுக்கத்தோடு "ஹாய் சார்" என்றாள்..

'இவ ஒருத்தி சார் சார்னு சொல்லியே அடுத்தவன் மாதிரி ஃபீல் பண்ண வைக்குறா..' என்று நினைத்தவன் "என்ன கீர்த்தி எக்ஸாம் வருதே படிக்கலையா? பார்க்ல வந்து உக்காந்திருக்க.." என்று கேட்டான்.

"எப்பவுமே படிச்சிட்டு இருந்தா போர் அடிக்குது சார்.. அதான் கொஞ்சம் மைண்ட் ப்ரீயாக இங்க வந்தேன்" என்றவள் கண்களில் கலக்கம் தென்பட்டது.

"இதுவரை நல்ல தானே பேசிட்டு இருந்தாள்.. இப்போ என்னாச்சு?' என்று நினைத்தவன் அவள் பார்வை சென்ற இடத்தை நோககி தன் பார்வையை செலுத்தினான். அங்கே ஒரு இளைஞன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

'இவன் யாரு? இவனை பாத்து எதுக்கு பயபடுறா?" என்று நினைத்து கீர்த்தியை திரும்பி பார்த்தால் அவள் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

"கீர்த்தி கீர்த்தி" என்று அவளை உலுக்கி கூப்பிட்ட பிறகே "எ..என்ன சார்?" என்று பதட்டத்துடன் கேட்டாள்.

"யாரை பாத்து பயப்படுற? யார் அவன்?"என்று கேட்டான் ராம்..

"இல்ல சார் அவன்.. அவன்.." என்று திக்கி திணறினாள் கீர்த்தி.

"அவன் யாரு?" என்று மீண்டும் கேட்டான் ராம்.

"அவன்.." என்று தொடங்கி அன்று பார்க்கில் அரவிந்த் பண்ணினதையும் இவள் அடித்ததையும் கூறினாள்..

"ஓ.. இவன் தான் அரவிந்தா?"என்று கேட்டான் அவள் "ஆம்" என்று தலை ஆட்டியதும்,

"நீ தான் ரொம்ப தைரியசாலி ஆச்சே.. எதுக்கு பயப்படு்ற?" என்று கேட்டான்.

"கோபத்துல அடிசிட்டேன்.. பட் இப்போ அவன் வரத பார்த்தா ஏதோ பெரிய பிளான் பண்ற மாதிரி தோணுது.. அவன் கண்ணுல கோபம் தெரியுது" என்றாள் கீர்த்தி.

"அவன் ஒன்னும் பண்ண மாட்டான்.. கூட ஆள் இருக்குறதால அந்த தைரியம் அவனுக்கு வராது" என்று அவளுக்கு தைரியமூட்டினான்.

ஆனால் அரவிந்த் பக்கத்தில் வர வர ராம் மனதில் ஒரு எச்சரிக்கை மணி அடுத்தது.

அரவிந்த் கீர்த்தியின் பக்கத்தில் வந்தான். ராமை மேலும் கீழும் பார்த்தவன், கீர்த்தியை பார்த்து "இவனுக்காக தான் அன்னைக்கு நான் லவ் சொன்னப்போ அச்செப்ட் பண்ணிகலையா?" என்று கேட்டான்..

கீர்த்தனா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

'பதில் சொல்லு கீர்த்தி.. நீ சொல்ற பதிலில் தான் எனக்கும் விடை கிடைக்கும்' என்று மனதில் நினைத்த ராம் கீர்த்தியை பார்த்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு தலைகுனிந்தாள்..

'இவ சொல்ல மாட்டா' என்று நினைத்த ராம் அரவிந்திடம் " ஹே மிஸ்டர்.. உனக்கு என்ன வேணும்? அவளுக்கு தான் உண்ண பிடிக்கலைல.. அப்புறம் எதுக்கு அவளை டிஸ்டர்ப் பண்ற?" என்று கோபமாக கேட்டான்..

"நான் ஒன்னும் அவளை டிஸ்டர்ப் பண்ண வரல.. என்னை அவமானபடுதியவளுக்கு தண்டனை கொடுக்க வந்துருக்கேன். இனி அவ இந்த உலகத்தை பாக்கவே வெட்கபடணும்.. ஏன்டா அரவிந்தை அடிச்சோம்னு துடிக்கணும்" என்றவன் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த திராவகத்தை கீர்த்தியின் மேல் வீச, ஏற்கனவே சுதாரித்திருந்த ராம் அவளை பக்கவாட்டில் தள்ளி விட்டான்.

கீர்த்தி பக்கத்தில் இருந்த புதரின் மேல் விழ, ஆசிட் அங்கிருந்த இருக்கையின் மேல் பட்டு தெறித்தது.. அரவிந்த் தன் நோக்கம் நிறைவேறாததால் அங்கிருந்து ஓட முற்பட்டான்.

ராம் அவன் சட்டையை பிடிக்க அவன் சட்டையை கழற்றி விட்டு தப்பித்து ஓடினான். ராம் கையில் அவன் சட்டை மட்டும் சிக்கியது.. அதை தூக்கி எறிந்தவன் வேகமாக கீர்த்தியின் அருகில் வந்தான். அவள் பயத்தில் வெலவெலத்து போயிருந்தாள்.

'ஒரு வினாடி அவள் வாழ்வையே நாசம் ஆகியிருக்கும்.. நல்ல வேளை ராம் காப்பாற்றினான். இல்லை என்றால் அவள் கதி என்ன ஆகியிருக்கும்?' அப்படியே அமர்ந்து இருந்தவளை உலுக்கி எழுப்பினான் ராம். அவன் கைத்தாங்கலில் நின்றவள் அவன் கைகளில் முகம் புதைத்து அழுதாள். அவளை தேற்றும் வழி தெரியாமல் தவித்தான் ராம்.

"ஹேய் கீர்த்தி ஒன்னும் ஆகலை.. நீ நல்லா தான் இருக்க.. வா போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் குடுக்கணும்" என்றான் ராம்.

ஒரு வழியாக நிமிர்ந்து பார்த்தவள் "போலீஸ் ஸ்டேஷன்கா?" என்று பயத்துடன் கேட்டாள்.

"பின்னே ரெயில்வே ஸ்டேஷன்கா? கேக்குறா பாரு கேள்வி... அந்த அரவிந்த் இந்த அளவுக்கு போயிருக்கான்.. அவன சும்மா விட சொல்றியா? கிளம்பு.. ம்ம்ம்" என்று அதட்டவும்

"அதில்லை சார்.. எக்சாம் ரெண்டு நாளைல இருக்கு.. இந்த நேரம் போலீஸ், கேஸ் அப்டின்னா என் படிப்பு வீணாகிடுமே.. அது தான் யோசிகுறேன்" என்றாள்.

"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ என் கூட வா" என்று கூறி அந்த நேரமே அவளை காவல் நிலையத்துக்கு சென்றான்.

அங்கு சென்று புகார் எழுதி கொடுத்த பின் அவன் ஃபோட்டோ ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார் காவல் துறை அதிகாரி..

"சாரி சார்.. அவனோட ஃபோட்டோ எதுவும் இல்லை.. அவன் சொன்ன விவரம் மட்டுமே எங்களுக்கு தெரியும்" என்றான் ராம் ஃபோட்டோ எடுக்கவில்லையே என்ற வருத்தத்துடன்..

"அது பரவாயில்லை சார்.. உங்களால அவனை அடையாளம் காட்ட முடியும் தானே" என்று கேட்ட அதிகாரிக்கு "கண்டிப்பா சார்.. அவன் முகத்தை எங்க பாத்தாலும் அடையாளம் காட்டுவேன்" என்று பதில் அளித்தாள் கீர்த்தி..

"ஓகே மேடம் நாங்க ஆக்சன் எடுக்கிறோம்.. எப்போ கூப்பிட்டாலும் நீங்க ஸ்டேஷன்கு வர வேண்டியிருக்கும்." என்று அதிகாரி சொன்ன உடனே கீர்த்தி முகத்தில் பயம் தெரிந்தது..

அதை கவனித்த ராம், "சாரி சார்.. இவ ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்.. இப்போ எக்சாம் ஸ்டார்ட் ஆயிடிச்சு.. இந்த ஸ்ட்ரெஸ் அவளை பாதிக்க வேண்டாம்.. இது என்னோட விசிட்டிங் கார்டு.." என்று தனது கார்டை நீட்டினான்.. அவர் வாங்கியதும் "நான் காலேஜ்ல ஒர்க் பண்றேன்.. நீங்க எப்போ வேணாலும் என்னை இந்த கேஸ் விஷயமா கான்டாக்ட் பண்ணலாம்.. நானும் ஒரு விட்னஸ் தான்.. பிளீஸ் கீர்த்தியை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.." என்று சொன்னான்..

"நீங்க இவங்களுக்கு...." என்று அதிகாரி கேட்டதும், "நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. இவ என்னோட வருங்கால மனைவி" என்றான் ராம்..

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் கீர்த்தி.. அவள் கையை அழுத்திய படியே அமைதியாக இருக்க உணர்த்தினான். அதை உணர்ந்து கீர்த்தியும் தலையாட்டினாள்..

"ஓகே சார்.. இந்த கேஸ் விஷயமா எப்போ கூப்பிட்டாலும் வரணும்.. கீர்த்தனாவை கூட்டிட்டு வரணும்னா நீங்க கூட்டிகிட்டு வருவீங்க தானே?" என்று கேட்டார் அதிகாரி.

"சுயர் சார்.." என்ற ராம் கீர்த்தி உடன் வெளியேறினான். வெளியே வந்த உடன் ராமிடம் சீறினாள் கீர்த்தி..

"என்ன சார் நினைச்சிட்டு இருக்கீங்க? நீங்க ஏன் அப்படி சொன்னீங்க? நான் உங்களை கல்யாணம் பண்ண போறேன்னு எப்போ சொன்னேன்?" என்று கோபத்துடன் கேட்டாள்..

"ஹேய் கூல் கீர்த்தி.. இப்போ இதுல இருந்து உன்னை விடுவிக்க தான் அப்படி சொன்னேன்.. இனிமேல் நீ உன் படிப்புல கான்சென்ட்ரேட் பண்ணலாம்.. உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்க.. டென்ஷன் ஆகாத.." என்று கூல் பண்ணினான்..

"அதுக்கு இது தான் வழியா?? ஃப்ரெண்ட்ஸ்னு கூட சொல்லி இருக்கலாமே.. ஏன் வருங்கால மனைவினு சொன்னீங்க?" என்று மீண்டும் கேட்டாள் கீர்த்தி..

"கீர்த்தி பிளீஸ்.. வருங்கால மனைவின்னு தானே சொன்னேன்.. இப்போ நீ என் மனைவின்னு சொல்லலையே.. சோ டோண்ட் வொர்ரி.. நீ ஹாஸ்டலுக்கு கிளம்பு" என்றவன் அவளுடன் அவள் ஹாஸ்டலை அடையும் வரை கூட சென்றான்.. பின் வீட்டிற்க்கு கிளம்பினான்.

வீட்டிற்க்கு வந்ததும் அர்ஜுன் அவனிடம் வந்தான்.

"என்ன அண்ணா ரொம்ப சோகமா இருக்கீங்க?"

"இன்னைக்கு கீர்த்தி மேல ஒருத்தன் ஆசிட் வீசிட்டான் டா.. நல்ல வேளை நான் அங்க இருந்தேன்.. இல்லன்னா என் கீர்த்தி நிலமை என்ன ஆகிருக்கும்?" என்று வருத்தபட்டான் ராம்.

"யார் அது? அவன் எதுக்காக கீர்த்தனா மேல ஆசிட் வீசினான்?" என்று கேட்டான் அர்ஜுன்.

"அவன் பேரு அரவிந்த்" என்று தொடங்கி கீர்த்தி தன்னிடம் சொன்னவைகளையும் பார்க்கில் நடந்ததை கூறினான்.

"அவனை சும்மாவா விட்டீங்க? போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளையின்ட் குடுக்கலயா?" என்று கேட்க

"கம்ப்ளையின்ட் குடுத்திருக்கு.. அவன் ஃபோட்டோ இருந்திருந்தா கண்டு பிடிக்க ஈசியா இருந்திருக்கும்" என்றான் ராம்.

"ஃபோட்டோ இல்லைன்னா என்ன? போலீஸ் கண்டு பிடிசிருவாங்க.. பாவம் கீர்த்தனா தான் ரொம்ப பயந்திருப்பாங்க.." என்று கவலை பட்டான் அர்ஜுன்..

"முதல்ல ரொம்பவே பயந்தா.. ஸ்டேஷன் ல இருந்து வெளில வந்ததும் பயம் போய் என் மேல கோபம் வந்துடுச்சு.." என்றான் ராம்..

"ஏன் என்னாச்சு? உங்க மேல எதுக்கு கோவம்?"

"அது.." என்று தொடங்கி அவன் காவல் துறை அதிகாரியிடம் சொன்னதை சொன்னான்.

"அய்யோ வருங்கால மனைவினு சொன்னதுக்கு இவளோ கோபம்னா நீங்க கல்யாணம் பண்ண கேட்டா எவ்வளவு எதிர்ப்பு வரும்?" என்று அர்ஜுன் கவலைபட்டான்

"இல்லடா அவ்வளவு எதிர்ப்பு வரும்னு எனக்கு தோணல.. அவ படிப்பு முடியட்டும்.. அப்பறம் பொறுமையா சொல்லி புரிய வச்சுக்கலாம்.." என்றான் ராம்.

"ஓகே இப்போ மாமாவுக்கு இன்பார்ம் பண்ணனுமா?" என்று கேட்டான் அர்ஜுன்..

"நாம சொல்ல வேண்டாம்.. சும்மாவே அத்தையை இழந்து தனியா கஷ்டபடுறாங்க. இதை விட சொல்லி கஷ்ட படுத்த வேண்டாம்.. கீர்த்திக்கு சொல்லனும்னு தோணுச்சுனா அவ சொல்லட்டும்.." என்றான் ராம்..

"சரி அப்பா கிட்ட” என்று அர்ஜுன் தொடங்கவும் "ஏன்டா ஊருக்கே சொல்ல போரியா? அப்பாக்கு தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவாங்க.. நானே பாத்துக்குறேன்.. நீ பொய் செமஸ்டருக்கு படி" என்றான் ராம்..

"சரி அண்ணா" என்றவன் படிக்க சென்றான்

ராம் இனி கீர்த்தியிடம் சொல்லி எப்டி புரிய வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தான் கீர்த்தி மனம் ஏற்கனவே இவன் மேல் சாய்ந்து விட்டதை அறியாமல்.

உன் விழியில் விழுந்து உனக்குள் கரைந்து
உன்னை எனக்குள் புதைக்கின்றேன்
உன்னோடு பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
பொக்கிஷமாக சேர்த்து வைக்கறேன்
உன்னை அடையும் அந்த நாள்
என்னை உனக்கு தந்து என் ஆசையை
உனக்கு உணர்த்தி உன்னை முழுதாக
என்னுள் அமிழ்த்தி கொள்வேன் என்னுயிரே..!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11

ரூமில் அனு படித்து கொண்டிருந்தாள். அப்போது கீர்த்தி அங்கே வந்தாள். அவள் மிகவும் பதற்றத்துடன் காணபட்டாள். அனுவின் அருகில் அமர்ந்தவள் அவள் கையை பிடித்தாள். கீர்த்தியின் கை நடுங்கி கொண்டிருப்பதை கண்டு அனு பதறி விட்டாள்

“ஹேய் கீர்த்தி என்னாச்சு? ஏன் கையெல்லாம் நடுங்குது?” என்று கேட்டாள் அனு.

“அது......” என்று கூறி பக்கத்தில் இருந்த பாட்டிலை எடுத்து வேகமாக தண்ணீர் குடித்தாள். அப்புறம் கொஞ்சம் அமைதியாகி பார்க்கில் நடந்ததை கூறினாள்.

“என்ன?” என்று அதிர்ந்து விட்டாள் அனு.

“கீர்த்தி அவனை சும்மாவா விட்ட? எவ்வளவு தைரியம் அவனுக்கு? ராம் சார் மட்டும் இல்லன்னா உன் நிலைமை என்ன ஆகிருக்கும்? நினைக்கும் போதே சிலிர்க்குது” என்று அனு கூற கீர்த்திக்கும் படபடப்பு அடங்கவே இல்லை. ‘ராம் மட்டும் இல்லை என்றால் அவள் இன்றைக்கு இல்லை’

“அப்புறம் அவனை என்ன பண்ணுனீங்க?” என்ற அணுவின் கேள்வி கீர்த்தியை நடப்பிற்கு கொண்டு வந்தது.

“போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளயன்ட் குடுத்திருக்கு” என்றாள் கீர்த்தி.

“போலீஸ் ஸ்டேஷனா? இனி அவங்க விசாரணை, அப்படி இப்படின்னு உன்னை தொந்தரவு பண்ணுவாங்களே.. எக்ஸாம் வேற வருது” என்று கவலை பட்டாள் அனு.

“அதெல்லாம் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. ராம் சார் இதை பாத்துக்குறேன் சொல்லிட்டாங்க” என கீர்த்தி சொல்லவும் “ராம் சாரா? அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனாலும் உன் விசயத்துல ராம் சார் ரொம்ப கேர் எடுத்துக்குறாங்களே.. சம்திங் சம்திங்” என்று கவலை அகன்றவளாக அவளை வம்புக்கு இழுத்தாள் அனு.

“நத்திங்” என்று வாய் சொன்னாலும் “சம்திங் தானோ?” என்று மனது நினைத்தது. “நான் படிக்க போறேன்” என்று புக்கை எடுத்தாள் கீர்த்தி. சரியென அனுவும் படிக்க ஆரம்பித்தாள். படிக்க போகிறேன் என்று சொன்ன கீர்த்தியோ படிக்காமல் ராமின் கண்கள் சொல்லும் காதல் கவிதையை நினைத்து கொண்டிருந்தாள்.

----------------------------

சுரேஷ் வீட்டில் ரொம்ப கோபமாக இருந்தான். முத்து அவனுக்கு அருகில் வந்தான். “விடு சுரேஷ் இன்னொரு சான்ஸ் கிடைக்காமலா போகும்?” என்று கூறி அவனை சமாதான படுத்தினான்.

“சாரி முத்து.. நான் கரெக்டா தான் பண்ணினேன். ஆனா கூட இருந்தவன் அவளை தள்ளி விட்டுட்டான். அது தான் மிஸ் ஆகிடுச்சு” என்று காரணம் கூறினான் அரவிந்த். பளாரென அவன் கன்னத்தில் அறைந்தான் சுரேஷ். “ ஒரு வேலைய ஒழுங்கா பண்ணி முடிக்க தெரியல. இப்போ வந்து காரணம் சொல்லிக்கிட்டு நிக்குற” என்று கோபமாக கத்தினான்.

முத்து தான் அவனை தேற்ற வேண்டி இருந்தது. “சரி விடு சுரேஷ்.. இந்த டைம் மிஸ் ஆகிடுச்சு.. இனிமேல் சரியா ப்ளான் பண்ணி அவளை தீர்த்து கட்டலாம்..” என்றவன் அரவிந்திடம் திரும்பி “இனிமேல் கொஞ்ச நாளைக்கு இங்க இருக்காத.. அவன் எப்படியும் கம்ப்ளயன்ட் குடுத்திருப்பான்.. போலீஸ் உன்னை தேடிட்டு இருக்கும்... ஏற்கனவே உன் மேல் நிறைய வழக்கு இருக்கு. பிடிச்சா மொத்தமா கம்பி எண்ண வச்சிருவாங்க.. அதனால நீ கஞ்ச நாளைக்கு கேரளாவுல இருக்குற உன் மாமாகிட்ட போ.. பணத்தை உனக்கு நான் அனுப்பி வைக்குறேன்” என்று கூறினான்.

“ஒகே முத்து..” என்று கூறிய அரவிந்த் சுரேஷை பார்த்து `’சாரி சுரேஷ்” என்று கூறி விட்டு கிளம்பினான்.

“ச்சே இப்படி ஆயிடுச்சே” என்று தன் வலதுகையை மேசையின் மேல் குத்தினான் சுரேஷ். முத்து அவனது கையை பிடித்து தடுத்து “இப்பவே எல்லாம் முடியல சுரேஷ்.. பாத்துக்கலாம்” என்று கூறி அழைத்து சென்றான்.

---------------------------------------

இரண்டு நாள் கழித்து காலேஜ்க்கு கிளம்பி கொண்டிருந்தான் அர்ஜுன்.. அவன் அருகில் வந்த ராம் அவன் வாயில் சாக்லேட்டை திணித்தான். “என்ன அண்ணா இது?” என்று சாக்லேட்டை மென்றவாறே கேட்டான் அர்ஜுன்.

“சாக்லேட் அர்ஜுன்.. எக்ஸாம் எழுத போறியே அதுதான் இனிப்பு..” என்றான் ராம்.

“அதுக்கு பாயாசம் தானே பண்ணி தந்திருக்கணும்.. ஒரு ரூபா சாக்லேட் குடுத்து முடிச்சிடீங்களே” என்று குறைபட “இன்னைக்கு டைம் இல்லடா.. எனக்கும் காலேஜ் போகணும்” என்றான் ராம்.

“சரி விடுங்கண்ணா.. சும்மா தான் சொன்னேன் இதுவே போதும்” என்றவன் தன் தந்தையிடமும் ஆசீர்வாதம் வாங்கி விட்டு தனது அண்ணன் சொன்ன “ஆல் தி பெஸ்ட்” உடன் பைக்கில் கல்லூரி கிளம்பினான். அவன் பின்னாடியே ராம் தனது காரில் கல்லூரிக்கு சென்றான்..

கல்லூரிக்கு சென்று வழக்கமாக அமரும் இருக்கையில் அமர்ந்து புக்கை புரட்டி கொண்டிருந்தான் அர்ஜுன். “டேய் அர்ஜுன் இது உனக்கே ஓவரா தெரியலையா” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தான் அர்ஜுன்.

கார்த்திக் தனது நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தான். அர்ஜுனின் பக்கத்தில் வந்தவன் அவன் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கினான். அதில் அர்ஜுன் படித்து கொண்டிருந்த பக்கத்தை பார்த்தவன் அதிர்ச்சியானான். “டேய் டேய் இது உனக்கு ரொம்ப ஓவர்டா.. நான் செகண்ட் சேப்டர் கூட ஒழுங்கா முடிக்கல. நீ என்னடான்னா லாஸ்ட் சேப்டரை விழுந்து விழுந்து படிக்கிறியே” என்று புலம்பினான்.

அதை கேட்டு அர்ஜுன் சிரித்தான். “நீ படிக்கலைனாலும் மார்க் மட்டும் எப்படிடா வாங்குற?” என்று கேட்க “அதுக்கு தான் என் பின்னாடி ஒரு ஜீவன் இருக்கே.. அதை பார்த்து எழுதி நாம முன்னேற வேண்டியது தான்” என்றான் கார்த்திக்.

“யாருடா அது?” என்று அர்ஜுன் கேட்க “அது நான் தான்டா.. இவன் கேட்க கேட்க காட்டி குடுக்குற ஏ டி எம்” என்றான் கிருஷ்.

“பார்த்தியாடா? அவனே முன் வந்து ஹெல்ப் பண்ணும் போது வேண்டாம்னு சொல்ல நான் என்ன ஹெச்.ஓ.டி தம்பி அர்ஜுன்னு நினைச்சியாடா? கார்த்திக்டா..” என்று கார்த்திக் சொல்ல அவன் முதுகில் ஓர் அடி வைத்தான் அர்ஜுன்.

“இதென்னடா பழக்கம் என்ன சொன்னாலும் அடிக்குற? டூ பேட்.. டூ பேட்..” கார்த்திக் புலம்ப “அடிக்காம என்ன பண்ண சொல்ற? செமெஸ்டெர்னு ஒரு சீரியஸ்னஸ் இருக்கா உன்கிட்ட.. எப்போ பார்த்தாலும் விளையாட்டு பிள்ளையாவே இருக்க” என்று கேட்டான் அர்ஜுன்.

“நான் விளையாட்டு பிள்ளையா இல்லன்னா நீங்க எப்பவோ மெண்டல் ஹாஸ்பிட்டல் போயிருப்பீங்க..” என்று கார்த்திக் முகத்தை திருப்பி கொள்ள “அதுவும் சரி தான்டா.. நம்ம என்டர்டைனர் இவன் தான்” என்று அகிலன் சிரித்தான்.

“டேய் டேய் ஆனாலும் நீ என்னை காமெடி பீஸ் ஆக்கிட்டியேடா.. பாரு உன்னை விட இந்த செம்ல ரெண்டு மார்க் அதிகமா எடுத்து காட்டுறேன்” – கார்த்திக் சொல்ல

“ஆமா படிச்சதே ரெண்டு சேப்டராம்.. இதுல என்னை விட ரெண்டு மார்க் அதிகமா எடுக்கிறாராம்.. போடா போய் வேற ஏதாச்சும் உருப்படியான வேலைய பாரு” என்று அகிலன் சிரிக்க

“நான் படிச்சிருக்கிறது வேண்டுமானா ரெண்டா இருக்கலாம்.. ஆனா எனக்குன்னு ஒரு அடிமை பிடிச்சு வச்சிருக்கேன் பாரு அவன் எல்லாம் படிச்சிருப்பான்.. அவனை வச்சே நான் முன்னேறிடுவேன்டா” என்றான் கார்த்திக் கெத்தாக..

“அடிங்க நான் உனக்கு அடிமையா? நீ எப்படி என்கிட்டே கேட்டு எழுதுறன்னு நான் பார்க்குறேன்” என்று கிருஷ் கோவப்பட “நண்பா இப்படி எல்லாம் பல்டி அடிக்க கூடாது. நீ என் அடிமை இல்ல. நான் தான் உன் அடிமை.. காப்பாத்துடா” என்று கார்த்திக் சரணாகதி அடைய “அப்படி வா வழிக்கு.. சரி டைம் ஆச்சு.. எக்ஸாம் ஹாலுக்கு போவோம்” என்று கிளம்பினான். அவனுடன் எல்லாரும் சென்றனர்.

பாதி தூரம் சென்றதும் அர்ஜுன் கீழே கிடந்த ஒரு பேப்பரை கையில் எடுத்தான். “என்னடா அது?” என்று கார்த்திக் கேட்க

“தெரியலையேடா” என்ற அர்ஜுன் அதை திருப்பி பார்த்து “டேய் இது நிஷாவோட ஹால்டிக்கெட்டா.. பாவம் இதை தொலைச்சிட்டு அங்கே என்ன பண்றாளோ? எக்ஸாம் எழுத முடியாதேடா” என்று வருத்தபட்டான்.

“இப்போ என்ன பண்ண போற?” என்று அகிலன் கேட்க “இதை போய் குடுத்துட்டு வரேன்.. நீங்க முன்னாடி போங்க” என்றான் அர்ஜுன்.

“அர்ஜுன் அவ உன்னை பார்த்தாலே கத்துவாளே..” என்று கிருஷ் கேட்க “இப்போ கத்த அவளுக்கு நேரம் இருக்காதுடா.. அவளே டென்சன்ல இருப்பா. நான் கொடுத்துட்டு வரேன்” என்று சென்றான்.

அங்கே நிஷா அழுது கொண்டிருந்தாள்.. வீணா அவள் அருகில் நின்று அவள் புத்தகத்தை புரட்டி தேடி கொண்டிருந்தாள்.. “எங்கே வச்சேன்னு தெரியலையே.. இந்த புக்ல தான் வச்சேன்.. வர்ற வழியிலே கூட விழுந்துதான்னு தெரியல” என்று புலம்பி கொண்டே நிஷாவும் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தாள்.

அர்ஜுன் அவள் அருகில் சென்று “நிஷா” என்று கூப்பிட்டது தான் தாமதம் திட்ட தொடங்கி விட்டாள்.

“உனக்கு இப்போ என்னடா வேணும்? நேரம் காலம் தெரியாம வந்து கூப்பிடுகிட்டு நிக்குற? நானே டென்சன்ல இருக்கேன் மரியாதையா கிளம்பு” என்று திட்டினாள்.

“ஹேய் நான்...” என்று மீண்டும் தொடங்கும்முன்,

“ஏய் உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா? கிளம்புன்னு சொல்றேன்ல.. சும்மா நின்னு என்னை கோவக்காரி ஆக்காத.. கிளம்பு ப்ளீஸ்” என்றாள் நிஷா

“உன் ஹால்....” என்று அர்ஜுன் தொடங்கும் முன் “கெட் அவுட் ஆப் மை சைட்” என்று கத்தினாள் வேறு வழி இல்லாமல் கிளம்பிய அர்ஜுன் வழியில் ஸ்ரீஷாவை பார்த்து “நிஷாவோட ஹால்டிக்கெட்.. வழியில் கிடைத்தது... கொடுத்திடு” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.. ஸ்ரீஷாவும் அதை கொண்டுவந்து நிஷாவிடம் கொடுத்தாள்.

“ஹேய் இது உன்கிட்ட எப்படி வந்துச்சு? நான் இவ்வளவு நேரமா இதை காணாம தேடிட்டு இருந்தேன்” என்றாள் நிஷா ஹால்டிக்கட்டை வாங்கியபடி.

“கீழே கிடந்துச்சுன்னு அர்ஜுன் கொண்டு வந்து கொடுத்துட்டு போனான்” என்று சொல்லிய ஸ்ரீஷா தேர்வறைக்கு சென்றாள்.. நிஷாவை முறைத்த படியே வீணாவும் செல்ல நிஷா கவலையுடன் நின்றாள்.. பின் தேர்வு முடிந்து வந்து பேசிக்கொள்ளலாம் என்று உள்ளே சென்றாள்.

தேர்வு முடிந்து வந்த அர்ஜுனை சூழ்ந்து கொண்டனர் அவன் நண்பர்கள். “என்ன அர்ஜுன் எக்ஸாம் எப்படி எழுதுனாய்?” என்று கேட்டதும் “படிப்பாளி வர்க்கம் அதன் இனம் கூட தானே சேரும்” என்று கிண்டலடித்த கார்த்திக்கின் முதுகில் ஓர் அடி வைத்தான் கிருஷ்.

“மவனே ஒரு எக்ஸாம் தான் முடிஞ்சிருக்கு,, நியாபகம் இருக்கட்டும்” என்று கிருஷ் சொல்ல “இதை சொல்லியே எப்பவும் ஆப் பண்றான்” என்று சலித்து கொண்டான் கார்த்திக்.

இதை பார்த்து சிரித்த அர்ஜுன் “கிருஷ் நீ தான்டா இவனுக்கு சரியான ஆள்.. இப்படி கிடுக்குபிடி போட்டா தான் இவன் அடங்கி இருப்பான்” என சொல்லி விட்டுநேரத்தை பார்த்தவன் கிளம்பினான்..அப்போது அவனை நோக்கி வந்தாள் நிஷா..

“இவ எதுக்கு இப்போ வர்றா” என்று அர்ஜுன் யோசிக்கும் போதே அவன் அருகில் வந்தவள் “சாரி அர்ஜுன் புரிஞ்சிக்காம பேசிட்டேன் அண்ட் தேங்க்ஸ் ஹால் டிக்கெட்டை கொடுத்து அனுப்பியதுக்கு” என்றவள் ஒரு புன்னகையுடன் சென்றாள்..

“இவ என்ன இப்படி திடீர்னு மாறிட்டா?” என்று யோசித்து கொண்டே அருகில் நின்ற பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.. அவன் அவளை மீண்டும் பார்க்க, அவள் திரும்பி பார்த்து புன்னகைத்தாள்.. ஏதோ ஓர் இனம் புரியாத சந்தோசத்தில் வீட்டுக்கு கிளம்பினான். நிஷாவை எதிர்கொண்டு வந்த வீணா அவளை தடுத்து நிறுத்தினாள்..

“நிஷா நான் ரொம்ப நாளா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு நினச்சிட்டு இருந்தேன்..” என்று இழுத்தாள்.

“என்ன விசயம் வீணா?”

“அது வந்து... அது.. நீ அன்னைக்கு அர்ஜுனை லவ் லெட்டர் வச்சான்னு திட்டினியே.. அது அவன் உனக்கு கொடுத்தது இல்லை.. அவன் நண்பன் கிருஷ்ணா எனக்கு எழுதினது.. தெரியாம உன் நோட்ல வச்சிட்டான்.. அதை எடுக்க தான் அன்னைக்கு அர்ஜுன் வந்தான்.. நீ புரிஞ்சிக்காம அவன் மேல கோப்பட்டுட்ட..” என்று சொன்னாள் வீணா..

“அய்யோ புரிஞ்சிக்காம அவனை கஷ்டபடுத்திட்டேனே.. ஆனா அவன் எனக்கு இன்னைக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணிருக்கானே.. என்னை பழிவாங்க ஒண்ணும் நினைக்கலையே.. என்னோட கோபத்தால அவன் மனசை கஷ்டபடுத்திட்டேனே” என்று வருந்தினாள் நிஷா..

“சாரி நிஷா இதை அப்பவே சொல்லிருக்கணும்.. நீ கோபப்படுவியோன்னு சொல்லல.. பட் இன்னைக்கும் சொல்லலைன்னா என் மனசாட்சியே என்னை கொன்னுடும்.. சாரி” என்றவள் கிளம்பி சென்றாள்..

நிஷா அர்ஜுன் சென்ற திசையிலேயே பார்த்து கொண்டு நின்றாள்.. பின் “சாரி அர்ஜுன்” என்று மனதளவில் சொல்லிவிட்டு புன்னகையுடன் கிளம்பினாள்..

அவனை காயப்படுத்திய போதும் எனக்காக யோசித்தவன்
என்னை ஒருபோதும் காயப்படுத்த விரும்பாதவன்
என் மனதின் ஓரத்தில் பாசம் துளிர்விட
உனக்காக வாழ நினைக்கிறேன்
என் அன்பை புரிந்து கொள்வாயா?
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12

செமஸ்டர் எக்ஸாம் முடித்து அனைவரும் வீட்டுக்கு செல்ல தீர்மானித்தனர்... அனுவும் அருணும் தங்கள் வீட்டிற்கு செல்லவே, கீர்த்தி ஒரு நாள் கழித்து வீட்டிற்கு சென்றாள். பேருந்து நிலையத்திற்கு வந்து அவளை வீட்டிற்கு அழைத்து சென்றார் அருணாசலம்.

வீட்டிற்குள் நுழைந்ததும் "என்னம்மா நீ? பஸ்ல வர்றதுக்கு பதில் டிரைன்ல வந்திருக்கலாம்ல?" என்று கேட்டார் அருணாசலம்.

"பஸ்ல வரணும்னு தோணுச்சுப்பா அதான் நேத்து கிளம்பினேன். இல்லைன்னா அதுக்கு முந்தின நாளே கிளம்பி இருப்பேன்" என்றவள் தன் அறையை நோக்கி சென்றாள்.

குளித்து முடித்து வெளியே வந்தவள் சமையலறைக்குள் சென்று சமைக்கலானாள். சமைத்து முடித்து விட்டு தந்தையை அழைத்தவள் அவருக்கு உணவு பரிமாறினாள். ருசித்து சாப்பிட்ட அருணாசலம் "இந்த சமையலை தான் கடந்த 5 மாசமா மிஸ் பண்ணினேன்மா" என்றார்.

கீர்த்திக்கு கஷ்டமாக இருந்தது. தன்னால் தானே கஷ்டம் என்று நினைத்து சாப்பிடாமல் கொறித்து கொண்டிருந்தாள். மகளின் நிலமையை கண்டவர் அவளின் மனபோக்கை மாற்ற எண்ணி "எக்சாம் எல்லாம் எப்டிமா எழுதிருக்க?" என்று கேட்டார்

"நல்லா எழுதிருக்கேன்பா" என்றாள் கீர்த்தி.

"காலேஜ் பிடிச்சிருக்கா? எல்லாரும் நல்லா பழகுறாங்களா? எதுவும் பிரச்சனை இல்லையே" என்று அருணாசலம் கேட்டவுடன்,

"ரொம்ப பிடிச்சிருக்குபா.. அனன்யானு ஒரு பொண்ணு என்னோட க்ளோஸ் பிரெண்ட் ஆகிட்டா" என்று பதில் அளித்தாள். பின்னர் அன்று பார்க்கில் நடந்தவற்றை பற்றி சொல்ல வேண்டுமா என்று யோசித்தாள்.. பின் எதற்கு அவருக்கு வீண் கவலை என்று நினைத்தவள் அதை சொல்லாமல் மறைத்தாள்.

ஆனால் அருணாசலம் ராம் பற்றி எதாவது அவள் மூலமாக அறிய வேண்டும் என்று ஆசை. ஆனால் அவள் சொல்லாததால் அவர் அவன் குடும்பத்தை பற்றிய பேச்சை எடுத்தார்.

"கீர்த்தி உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்" என்று தொடங்கினார்.

"என்னப்பா?" என்று கேட்டாள் கீர்த்தி.

"அது.. அது வந்து.. உன் மாமா வீட்ல இருந்து நம்மள தேடி வந்த்ருந்தாங்க" ஒரு வழியாக சொல்லி முடித்தார்.

"மாமா வீட்ல இருந்தா? யாருப்பா அது? உங்க வீட்டுக்கு நீங்க ஒரே பையன் தானே?" என்று சந்தேகமா கேட்டாள் கீர்த்தி.

"என் வீட்ல இருந்து இல்லம்மா. அம்மாவோட அண்ணா பையன் வந்திருந்தான்" என்றார் அருணாசலம்.

"எதுக்கு? செத்துட்டாங்களா உயிரோட இருக்காங்களா? என்று பார்க்கவா?" கோபமாக கேட்டாள் கீர்த்தி.

"அப்படி எல்லாம் இல்லமா.. ரொம்ப நாளாவே தேடுறாராம்.. அன்னைக்கு தான் கண்டு பிடிச்சிருக்காரு.. நம்மள அவங்க வீட்டுக்கு கூப்பிடுறார்" என்று மெதுவாக சொன்னார்.

பொங்கி எழுந்தாள் கீர்த்தி. " இப்போ எதுக்குபா தேடி வர்றாங்க.. இருபது வருஷத்துக்கு மேல நம்மள தேட தோணலயா? அம்மா உயிரோடு இருக்கும் போது ஒரு தடவையாவது வந்து பாத்தாங்களா? நீங்க கஷ்டதுல இருக்கும் போது யாருக்காவது வந்து எட்டி பாக்க தோனுச்சா? அம்மா எவ்ளோ கஷ்ட பட்டாங்க இங்கே.. அப்போ யாருக்கும் அவங்க நினைப்பு வர்ல.. இப்போ எந்த முகத்தை வச்சிகிட்டு வராங்க.. ஒதுக்கி வச்சவங்க அப்படியே ஒதுங்கி இருக்க வேண்டியது தானே.. கஷ்டத்துல வராதவங்க இனியும் வர வேண்டாம்.. அம்மா அவங்க தங்கச்சி தானே. உண்மையான பாசம் இருந்திருந்தா எப்பவோ தேடி வந்துருப்பாங்க.. இனிமேலும் அவங்க உறவு நமக்கு வேண்டாம்" என்று சொன்னாள் கீர்த்தி.

அவள் கோபம் அருணாச்சலத்திற்கு புரிந்தது. ஆனாலும் இவள் கோபம் இவள் வாழ்வை பாதித்து விட கூடாதே.. ராம் உண்மையான பாசம் வைத்திருக்கிறான். இவளுக்கு எப்டி புரிய வைப்பது? என்று குழம்பி போனார் அருணாச்சலம்.

ஆனாலும் விடாமல் "அவங்க நிலமையில் இருந்தும் யோசிக்கணும்மா.. ஆசையா பாத்து பாத்து வளர்த்த தங்கச்சி திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டா எந்த அண்ணாக்கு பிடிக்கும்?? அதுவும் அவருக்கு தெரியாம திருட்டு தனமா பண்ணினா எந்த வீட்ல ஒத்துக்குவாங்க?" என்று கேட்டார்.

"நீங்க ஒன்னும் அம்மாவை கல்யாணம் பண்ணிகிட்டு கை விடலயே அப்பா.. நல்ல தானே பாத்துகிட்டீங்க.. ஏழையா இருந்தாலும் அம்மா உங்க கூட சந்தோஷமா தானே வாழ்ந்தாங்க. உங்க கூட வாழ்ந்த சந்தோஷத்தை வேற யார் அவங்களுக்கு குடுத்திருக்க முடியும்?" என்று கேட்டாள் கீர்த்தி.

"உண்மை தான்மா.. உன் அம்மா சந்தோஷமா தான் இருந்தாள். ஆனால் உன் அம்மா அவ வாழுற இடத்தை பற்றி அவ வீட்டுக்கு சொல்லலையே.. எங்கே வந்து பிரிச்சிடுவாங்களோனு கடைசி வர ஊரை அவ வீட்டுக்கு சொல்லலை.. அப்புறம் எப்படி வந்து பாப்பாங்க.. அவங்க மேலயும் தப்பு சொல்ல முடியாது.. இத்தனை வருடம் கழித்தும் தேடி வர்றாங்க அப்டின்னா அவங்க பாசத்தை புரிஞ்சிக்கணும். எனக்கு எதாவது ஆயிடுச்சின்னா அவங்க தான் உனக்கு எல்லாம்" என்று அருணாசலம் சொன்னவுடன்

"ஏன் அப்பா இப்டி எல்லாம் பேசுறீங்க.. உங்களுக்கு எதுவும் ஆகாது" என்று அழுதாள் கீர்த்தி.

"நேரம் காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காதுமா.. விதி முடியும் போது போய் தான் ஆகனும்" என்ற அருணாச்சலம் "நான் சொன்னதை கொஞ்சம் யோசிம்மா.." என்று சொல்லி விட்டு சென்றார். கீர்த்தி அழுது கொண்டே ரூமிற்க்கு சென்றாள்.

அருணாச்சலம் ராமிற்கு போன் பண்ணினார். ரெண்டு ரிங்கிலேயே எடுத்தவன், "ஹலோ மாமா கீர்த்தி பத்திரமா வீட்டுக்கு வந்தாளா?" என்று கேட்டான்.

அவனது அக்கறையில் நெகிழ்ந்தவர், "வந்துட்டா ராம். இன்னைக்கு உங்க வீட்டு பேச்சு எடுத்தேன். ஆனா அவ நியாயத்தை புரிஞ்சிக்க நிலமையில் இல்ல. என்ன பண்றதுன்னு தெரியல." என்று கவலை பட்டார்.

"ஏன் மாமா நீங்க அதை பற்றி பேசி அவளை டென்ஷன் படுத்துறீங்க? நான் அவளுக்கு புரிய வச்சுக்குறேன். நீங்க இந்த லீவ் அவ கூட நல்ல படியா ஸ்பெண்ட் பண்ணுங்க." என்றான் ராம்.

"இப்போ புரிய வைக்காம எப்போ பண்றது? எனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா அவ அனாதையாக நிற்க கூடாதே" என்றார் அருணாசலம்.

"ஏன் மாமா இப்படி பேசுறீங்க? இப்படி தான் அவகிட்டயும் சொன்னீங்கலா? அழுதே கரைஞ்சிடுவா. பிளீஸ் இனிமேல் இப்படி பேசாதீங்க" என்றான் ராம்.

"இல்ல ராம்.. எனக்கு வர வர உடம்புக்கு முடியல. இந்த நெஞ்சு வலி வேற பயமா இருக்கு" என்றார். உண்மையான வலி அதில் தெரிந்தது.

"அய்யோ மாமா உடம்புக்கு என்னாச்சு? நான் கிளம்பி வரவா?" என்று பதறினான்.

"இல்லை ராம்.. உங்களுக்கு வேற எதுக்கு கஷ்டம்?" என்று இழுத்தார். ஆனால் அதில் வந்தால் நல்லா இருக்கும் என்ற தோரணை இருந்தது.

"மாமா நான் உடனே கிளம்புறேன். நீங்க எதுவும் நினச்சு மனச குழப்பிக்காதீங்க. எதாவது பிராப்ளம் வந்தா எனக்கு ஃபோன் பண்ணி சொல்லுங்க" என்றான்.

"சரி ராம்.. இந்த நேரத்துல உங்கள வேற கஷ்டபடுத்துறேன் சாரி." என்று மன்னிப்பு கேட்டார்.

"என்ன மாமா நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு இருக்கீங்க. நான் உங்க மருமகன். உங்கள கவனிக்குற பொறுப்பு எனக்கும் இருக்கு. எதுக்கும் கவலை படாதீங்க. நான் அங்க வந்து பேசிக்குறேன்" என்றவன் போனை கட் செய்து விட்டு தந்தையை தேடி சென்றான்.

"என்ன ராம் எதுக்கு டென்ஷனா இருக்க?" என்று கேட்ட பிரகாஷிடம்

"கீர்த்தி அப்பாவுக்கு உடம்புக்கு முடியலயாம். நான் அங்க போகனும்பா. கீர்த்தியால தனியா சமாளிக்க முடியாதுபா" என்றான்.

"சரி டா.. நீ எதுக்கு தனியா கிளம்பி போற? அர்ஜுன் சும்மா தானே இருகுறான். அவனையும் கூட்டிகிட்டு போ" என்றார் பிரகாஷ்.

அவர் சொல்வதும் சரி என்பதால் அர்ஜுனிடம் கேட்டான். சும்மாவே அத்தை மாமான்னு சொன்னவன் சான்ஸ் கிடைச்சா விடுவானா?? உடனே கிளம்பி விட்டான்.

இருவரும் சென்னையில் இருந்து வத்தலகுண்டு செல்ல கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆனது. இரவு கிளம்பியதால் விடியற்காலை கீர்த்தியின் வீடு வந்து சேர்ந்தனர். ஆனால் விடியற்காலை என்பதால் தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்ப மனம் இன்றி வாசலில் அமர்ந்திருந்தனர். விடிந்தும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் கதவை தட்டினான் ராம். எந்த பதிலும் வராமல் போகவே சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த பக்கத்து வீட்டு அம்மா கோலம் பொட கோலப்பொடியுடன் வெளியே வந்தார்.

"நீ இங்கேயே இருடா" என்று அர்ஜூனிடம் சொன்னவன் அந்த அம்மாவை நாடி சென்றான்.

அவனை கண்டதும் அடையாளம் கண்டு கொண்டவர் "என்ன வேணும் தம்பி?" என்று கேட்டார். அவன் கீர்த்தியின் வீடு பூட்டியிருப்பதை சொன்னதும் "கீர்த்தி அப்பாக்கு நெஞ்சு வலி ராத்ரியே ஹாஸ்பிடல் போய்ட்டாங்க" என்று விவரம் சொன்னார். உடனே பதறி "எந்த ஹாஸ்பிடல்?" என்றவனுக்கு அட்ரஸ் கொடுத்தார் அந்த அம்மா. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அர்ஜுனை நோக்கி நடந்தான்.

"சே இவ்வளவு நடந்திருக்கு ஏன் நமக்கு போன் பன்னனும்னு தோணலயே?" என்று நினைத்தவன்.. "அவளுக்கே நம்ம உறவுமுறை தெரியாது. அப்ரம் எப்டி போன் பண்ண தோணும்?" என்று தேற்றிக் கொண்டான். அர்ஜுனிடம் விவரத்தை சொல்லி மருத்துவமனைக்கு சென்றார்கள். வரவேற்பறையில் விசாரித்துவிட்டு ICU-ல் உள்ள அருணாச்சலத்தை பார்க்க விரைந்தனர். ICU அறைக்கு வெளியே கீர்த்தி அழுது கொண்டு நின்றிருந்தாள். அவளருகே சென்று "கீர்த்தி" என்று அழைத்தான்.

பழக்கப்பட்ட குரலால் திரும்பி பார்த்தவள் ராமை கண்டதும் ஆச்சர்யபட்டாள். அதே சமயம் தான் தனித்து விடபடவில்லை என்ற நிம்மதி உணர்வும் மனதில் தோன்றியது..

அழுது அவள் கண்கள் சிவந்திருந்தன."சார் நீங்க எப்டி இங்க?".. என்று அவள் கேள்வி கேட்ட பின் தான் அதற்கான பதிலை யோசிக்கவில்லையே என்று ராமிற்கு தோன்றியது... ஆனால் அவள் முன் பொய் சொல்ல வேண்டியிருக்கே என்று அவன் நினைக்கும் போதே டாக்டர் வெளியே வந்தார். கேள்வியை மறந்தவளாய் டாக்டரை நோக்கி ஓடினாள்.

"டாக்டர் என் அப்பாவுக்கு என்னாச்சு எப்படி இருக்காங்க?"என கேட்டாள்.
அவள் முகத்தை வைத்தே அவள் தாங்க மாட்டாள் என்பதை கணித்த டாக்டர் "உன் கூட யாரும் பெரியவங்க வந்துருக்காங்களாமா?" என்று கேட்டார். அவள் "இல்லை" என்று பதிலளிக்கும் முன் ராம் "நான் இருக்கேன் சார் அவர் என் மாமா தான்" என்றான். கீர்த்தி அவனை ஏறிட்டு பார்த்தாள்."இவன் என்ன ஒரு முறை புருஷன்னு சொல்றான் இப்போ மருமகன்னு சொல்றான்"என்று நினைத்து கொண்டாள். பின்னர் டாக்டர் சொல்வதை கவனித்தாள். "உங்க பேர்"என்று டாக்டர் ராமிடம் கேட்க "என் பேர் ராம் டாக்டர்" என்றான்.

"ஓகே மிஸ்டர் ராம் உங்க மாமாவுக்கு கார்டியா அரெஸ்ட்.. இது 3வது டைம்.. முதல்லே கவனிக்கல. இப்போ எங்களால காப்பாத்த முடியாத நிலமைக்கி போய்டார். நாங்களும் எவ்ளோ போராடி பார்த்துட்டோம். எந்த முன்னேற்றமும் இல்ல. அவர் உயிரோட இருக்கபோவதே கொஞ்ச நேரம் தான் சார்" என்றார் டாக்டர். "டாக்டர்" என்று கதறிவிட்டாள் கீர்த்தி.

“வேற எதுவும் பண்ண முடியாதா டாக்டர்?” என்று கேட்டான் ராம்...

“முடிஞ்ச அளவுக்கு டிரீட்மெண்ட் குடுத்திருக்கோம்.. இதுவரை எந்த அளவு முன்னேற்றமும் இல்லை..” என்ற டாக்டர் "யாராவது ஒருத்தர் அவரை போய் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு சென்றார்.

ராம் வெளியிலேயே நிற்க, கீர்த்தி உள்ளே சென்றாள்... அருணாசலத்தை சுற்றி முழுவதும் மருத்துவ உபகரணங்களை கண்டு பயந்து அப்படியே இருக்கையில் அமர்ந்து அழுதாள்.

அவளது அழுகை சத்தத்தினாலோ என்னவோ மெதுவாக கண்களை திறந்த அருணாசலம், கீர்த்தியை கண்டதும் கலங்கினார். சுற்றிலும் யாரும் இல்லாததை கவனித்தவர் வெளியில் கதவு துளை வழியே பார்த்து கொண்டு இருந்த ராமை கண்டு கண்களால் அழைத்தார்.

உள்ளே வந்த ராம் "மாமா” என்று அழைக்கவும் திரும்பி பார்த்த கீர்த்தி, அருணாசலத்தை நோக்கினாள். அவர் கண்கள் திறந்திருந்தன. ’அப்பா” என்று அழுதவளின் கையை பிடித்த அருணாசலம் அதை ராமின் கைகளில் வைத்தார்.

கீர்த்திக்கு எல்லாமே வித்தியாசமானதாக பட்டது. ஆனால் புரிந்துகொண்ட ராம் “கீர்த்தி இனிமேல் என் பொறுப்பு மாமா.. அவளை எப்பவும் நான் விட மாட்டேன்” என்றான்..

அந்த வார்த்தைகளே அவருக்கு நிம்மதியை தர அருணாசலம் தன் கண்களை மூடினார். அவரது கடைசி ஆசையும் நிறைவேறியது..

இதில் முற்றிலும் நிலைகுலைந்து போனது கீர்த்தி தான். என்ன நடக்கிறது என்றே அவளுக்கு புரியவில்லை.. தந்தையின் கடைசி காரியங்கள் எல்லாம் முடிந்தபின் ராம் கீர்த்தியை அழைத்தான்.

“என்ன சார்? என்று வந்து நின்றவளிடம் இந்த சாரை முதல்ல விடு.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

‘பேசுங்க” என்றாள் கீர்த்தி.

”நான்... இது என் தம்பி அர்ஜுன்.. நாங்க வேற யாருமில்ல.. உன் மாமாவோட மகன்கள்.. அதாவது பூரணி அத்தையோட அண்ணன் பிள்ளைகள்” என்றதும் கீர்த்தியின் முகம் கோபத்தில் சிவந்தது..

அவளது தந்தை இறப்பதற்கு முன்பு நடந்த பேச்சு இவர்களை பற்றி அல்லவா?அதனால் தானே அருணாசலம் டென்ஷன் ஆனார்? அது தானே அவரின் மரணத்திற்கு காரணம்?

"நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? உங்களால் தான் என் அப்பா இறந்தாங்க.. உங்களை பற்றி பேசினதால தான் என் அப்பா அன்னைக்கு டென்ஷன் ஆனாங்க. அதுனால தான் நெஞ்சு வலி வந்துச்சு.. இப்போ யாரை கொல்ல வந்திருக்கீங்க?” என்று கத்தினாள்.

"புரிஞ்சுக்காம பேசாத கீர்த்தி.. மாமாவுக்கு ஏற்கனவே இரண்டு தடவை நெஞ்சு வலி வந்திருக்கு.. அப்பவே கவனிச்சிருந்தா இப்படி ஆகிருக்காது.. இப்போ நான் அதை பற்றி டிஸ்கஸ் பண்ண வரலை.. நீ எங்க கூட சென்னைக்கு கிளம்பு” என்றான் ராம்.

"நான் ஏன் உங்க கூட வரணும்?நான் வரமாட்டேன்” என்றாள் கீர்த்தி.

"அடம் பிடிக்காத கீர்த்தி.. என்னால் உன்னை இப்படி விட்டுட்டு போக முடியாது. ஒழுங்கா கிளம்பு” என்று மீண்டும் சொன்னான் ராம்.

"யார் சார் நீங்க? உங்க கூட நான் ஏன் வரணும்?”

"நான் யாரா? உன் வருங்கால புருஷன்.. சரியா? அடம் பிடிக்காம கிளம்பு.. ஈவ்னிங் போகணும்” என்றவன் அர்ஜுனிடம்.. "நீயும் கிளம்புடா” என்றான்.

"சரிண்ணா” என்ற அர்ஜுன் "அப்பாகிட்ட என்ன சொல்ல போறீங்க?” என்று கேட்டான்.

"அதை நான் பாத்துக்குறேன்” என்றவன் வெளியேறி விட்டான்..

பிரகாஷிற்கு ஏற்கனவே அருணாசலத்தின் மரணத்தை தெரிவித்திருந்தான். இப்போதும் கீர்த்தியுடன் அங்கு வரப்போவதை மட்டுமே சொன்னான். அவரும் ஒத்துக்கொண்டார்.

உன்னோடு காதலாக வாழ விரும்பும் என்னை
உன் வார்த்தைகளால் வதைக்காதே பெண்ணே
உன் வெறுப்பை தாங்கி கொள்ள முடிந்த நான்
உன் வார்த்தைகளின் வீரியம்
சாகடிக்க என்னை நானே வெறுக்கிறேன்
உன்னை உண்மையான அன்போடு காதலிக்கிறேன்..
என் அன்பை ஏற்று கொண்டு
என்னை உன்னுள் அணைத்து கொள்
ஆருயிரே..!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13

அடுத்த நாள் காலையில் கீர்த்தியுடன் வீட்டுக்கு சென்றான் ராம்.. அவனையும் கீர்த்தியையும் உள்ளே வரவேற்றார் பிரகாஷ்.

அறைக்குள் கீர்த்தியை அனுப்பி ப்ரெஷ் ஆக சொல்லிவிட்டு ஹாலில் அமர்ந்திருந்தனர் பிரகாஷ் மற்றும் அவரது மகன்கள்.. அப்போது ராம் தயங்கியவாறே "அப்பா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான் ராம்.

"என்ன விஷயம் ராம்?” என்று கேட்டார் பிரகாஷ்.

"கீர்த்தி யாருன்னு உங்ககிட்ட நான் சொல்லலைப்பா” என்று தயங்கினான் ராம்.

"அய்யோ .. அண்ணா சொன்ன பிறகு என்ன நடக்குமோ?” என்று ஒரு வித பதட்டத்துடன் இருந்தான் அர்ஜீன்..

"அவ தான் என் மருமகள்னு சொல்லிட்டியே ராம்.. அப்புறம் என்ன விசாரணை வேண்டியிருக்கு?” என்றார் பிரகாஷ் மகன் மீது முழு நம்பிக்கையுடன்..

"அப்பா கீர்த்தி.. கீர்த்தி பூரணி அத்தையோட பொண்ணு” என்று ஒருவழியாக விஷயத்தை சொல்லி முடித்தான் ராம்.

"என்ன?” என்று கோபத்துடன் எழுந்தார் பிரகாஷ்..

"அப்பா பிளீஸ்ப்பா.. அத்தை பண்ணின தப்புக்கு கீர்த்தி என்ன பண்ணுவா?” என்று கேட்டான் ராம்..

"நீ இதையெல்லாம் என்கிட்ட இருந்து எதுக்கு மறைச்ச?அப்போ தெரிஞ்சு தான் அவளை காதலிச்சியா?” என்று கோபத்துடன் கேட்டார் பிரகாஷ்..

"உங்ககிட்ட இருந்து மறைக்கணும்னு நினைக்கலப்பா.. அப்புறமா புரிய வைச்சுக்கலாம்னு தான் சொல்லல .. அவளை நான் காதலிச்ச பிறகு தான் அவ குடும்பம் பற்றி எனக்கு தெரிஞ்சது.. மாமாவ பார்க்க போன அன்னைக்கு தான் தெரிய வந்ததது.. அவ தான் என் மனைவின்னு முடிவு பண்ணின பிறகு இந்த விஷயத்தால எப்படிப்பா என்னால அவளை மறக்க முடியும்? புரிஞ்சுக்கோங்கப்பா பிளீஸ்” என்று கெஞ்சினான் ராம்..

பிரகாஷ் அர்ஜீனை பார்த்தார்.. அவன் தலைகுனிந்து "சாரிப்பா” என்றான்..

"ஓ.. எல்லாருமா சேர்ந்து தான் என்கிட்டே இருந்து மறைச்சீங்களா? சரி.. அந்த பொண்ணு இந்த வீட்ல இருக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் அதிகமா என் முன்னாடி வராம இருந்தா போதும்.. அவளை பார்க்கும் போது அவ அம்மா செய்த தப்பு தான் என் கண் முன்னாடி வரும்” என்றவர் தனது அறைக்கு சென்று கதவை அடைத்தார்..

"என்னண்ணா இப்படி ஆயிடுச்சு?” என்று வருத்தப்பட்டான் அர்ஜீன்.

"எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்டா.. வா நாம சமையலை பார்ப்போம்” என்று ராம் அவனை கூட்டி சென்றான்..

இங்கு நடந்தவைகளை எல்லாம் அறையில் இருந்து கேட்டு கொண்டிருந்த கீர்த்தி "நானே பார்க்க கூடாதுன்னு தான் நினைச்சேன்.. நீங்களே அதுக்கு வழி சொல்லும்போது நான் ஏன் உங்க முகத்துல முழிக்க போறேன்?” என்று நினைத்து கதவை மூடி கொண்டாள்..

அறைக்குள் சென்ற பிரகாஷ் இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்று நடந்ததை நினைத்து பார்த்தார்..

இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்பு:

பிரகாஷ்க்கு அன்று அலுவலகத்தில் அதிக வேலை இருந்தது. சோர்வுடன் வீட்டிற்க்கு வந்தவர் சோபாவில் அமர்ந்தார். அப்போது அவர் தங்கை பூரணி மெதுவாக அவர் அருகில் வந்து அமர்ந்தார்.

"என்னடா பூரணி சாப்டியா?" என்று அன்பாக கேட்டார் பிரகாஷ்.

"சாப்பிட்டேன்னா.." என்று சொல்லி விட்டு ஏதோ சொல்ல தயங்கினார் பூரணி.

"என்ன பூரணி அண்ணா கிட்ட எதாவது சொல்லனுமா?" என்று பூரணியின் தயக்கத்தை புரிந்து கேட்டார் பிரகாஷ்.

"அது வந்து.. அண்ணா எங்க காலேஜ்ல இருந்து NSS கேம்ப் வத்தலகுண்டு போறாங்க. பத்து நாள் கேம்ப். நானும் பெயர் குடுத்துருக்கேன்" என்று தயங்கி தயங்கி சொன்னாள் பூரணி.

கடகடவென சிரித்தார் பிரகாஷ். "அட இதுக்கா இவளோ டென்ஷன் ஆகிட்டு இருக்க? நீ போய்ட்டு வா" என்று சொன்னார் பிரகாஷ்.

"தாங்க்ஸ் அண்ணா" என்ற பூரணியை பார்த்து சிரித்து கொண்டே "அண்ணா கிட்ட எதுவா இருந்தாலும் பயபடாம சொல்லுமா.. எதுக்கு பயபடுற? நான் உனக்கு நல்ல பிரெண்ட் தான்" என்றார்.

"சரி அண்ணா" என்று தலை ஆட்டிய பூரணியை பார்த்து சிரித்து கொண்டே "உங்க அண்ணி எங்க போனா?" என்று கேட்டார்.

"அண்ணி ராமை குளிக்க சொல்லி கூட்டிகிட்டு போயிருக்காங்க.. இப்போ வந்த்டுவாங்க.." என்றார் பூரணி.

“சரிமா என்னைக்கு கேம்ப் போகணும்?”

“அடுத்த வெள்ளிகிழமைல இருந்து பத்து நாள் அண்ணா”

“சரிடா நீ போய் படி எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்ல தயங்காதே”

“சரின்னா “ என்று கூறி விட்டு உள்ளே சென்றார் பூரணி.

கேம்ப் போக வேண்டிய நாளும் வந்தது. சிரித்த முகத்துடனே அனுப்பி வைத்தனர் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சாரதா. ஆனால் கேம்ப் சென்று வந்த பூரணியின் முகமே சரி இல்லை. எதையோ மறைக்க பெரும்பாடு பட்டு கொண்டிருபதாக தெரிந்தது பிரகாஷ் எவ்ளோ கேட்டும் பதில் இல்லை.எதயோ சொல்ல தயங்குகிறார் என்பது மட்டும் புரிந்தது. தானாகவே ஒருநாள் வெளியே வரும் என்று காத்திருந்தார். அந்த நாளும் வந்தது.

அன்று மலை அலுவலகத்தில் இருந்து ஒருவித படபடப்போடு வந்தார் பிரகாஷ். பின்னே இருக்காதா? அவருடைய அருமை தங்கையை பெண் கேட்டு ஒருவர் வந்திருந்தாரே. நல்ல குடும்பம். வசதிக்கு குறைவில்லை, அங்கு தான் தங்கை வாழ்ந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார் பிரகாஷ். வீட்டில் மனைவியிடம் விஷயத்தை பகிர்ந்தவர் தங்கையிடம் சம்மதம் கேட்க பூரணியை தேடினார்.

“பூரணி காலையிலேயே அவ பிரண்ட்-அ பாக்க போறேன்னு போனா இன்னும் வரல”என்றார் சாரதா தன் மகன் ராமிற்கு சாப்பாடு ஊட்டியவாறே

"காலையிலேயே போனவ இன்னும் வரலயா?” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே அலைபேசி ஒலித்தது.

அலைபேசியை எடுத்தவர் புது நம்பராக இருக்கவே சந்தேகத்துடன் ஆன் செய்தார். மறுபக்கம் பூரணி தான்.

"ஹலோ அண்ணா” என்றதும் பதறிவிட்டார் பிரகாஷ்.

"பூரணி .. பூரணி என்னடா ஆச்சு? புது நம்பர்ல இருந்து போன் பண்ணிருக்க.. எதாவது பிராப்ளமா?” என்று கேட்டார்.

"இல்லைண்ணா.. அப்படி எல்லாம் இல்லை.. நான்.. நான்..” என்று தயங்கினார் பூரணி..

"என்னம்மா? எதுவா இருந்தாலும் சொல்லு..” என்றார் பிரகாஷ். அவர் மனைவி சாரதா மகனுக்கு ஊட்டி கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு கலக்கத்துடன் கணவன் முகத்தை பார்த்தார்.. அந்த பக்கம் பூரணியின் குரல் பயத்துடன் ஒலித்தது.

"அண்ணா நான்.. எனக்கு.. நான் என் மனசுக்கு பிடிச்சவரை கல்யாணம் பண்ணிகிட்டேன்...” என்று சொன்னதும் "என்ன?” என்று அதிர்ச்சியில் போனை தவறவிட்டார்..

"அண்ணா.. அண்ணா..” என்று பூரணி கத்தியது அவர் காதில் கேட்கவே இல்லை.

"என்னங்க.. என்னாச்சு?” என்று சாரதா ஓடி வரவும் கூடவே வந்தான் ராம்.

"பூரணி.. பூரணி நம்மள ஏமாத்திட்டா.. யாரோ அவ மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணிகிட்டாளாம். அதை நேர்ல கூட வந்து சொல்ல முடியல போன்ல சொல்றா. இனி அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவளை பற்றிய பேச்சே இந்த வீட்டில் பேச கூடாது” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார்.

அன்று கோபத்துடன் பேசிவிட்டு சென்றவர் தான்.. அதன்பிறகு அந்த வீட்டில் இதுவரை பூரணியின் பேச்சு வந்ததில்லை. ஆனால் இன்று தன் மகனே பூரணியின் மகளை மருமகளாக்க முடிவோடு வந்திருக்கிறான். இனி அவள் மகளை வேறு இந்த வீட்டில் தினமும் பார்க்கணுமா? என்று கோபத்தில் பொங்கினார். கடைசியில் ராமும் அவன் கல்யாண விஷயத்தில் தன் பேச்சை கேட்க போவதில்லை என்று ஆதங்கத்தில் ரூமிலேயே இருந்து விட்டார்.

இன்னொரு பக்கம் கீர்த்தனா கோபத்தில் பொங்கி கொண்டிருந்தாள். ராமின் தந்தை பேசியதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த கீர்த்தனாவிற்கு மனம் பொங்கியது. "நான் கேட்டேனா இங்கே கூட்டிகிட்டு வர? எல்லாம் அவங்களே பண்ணிகிட்டு என்னை பார்க்க பிடிக்கலையாம். என்ன நினைச்சிட்டு இருக்காங்க.. என் அம்மாவை இருபத்திமூன்று வருஷமா ஒதுக்கி வைத்தது போதாதுனு இப்போ என்கிட்ட வேற ஓவரா பண்ணுறாங்க.. நீங்க என்ன என்னை பார்க்காம இருக்கறது. நானே உங்க கண் முன்னாடி வரமாட்டேன். எல்லாமே இந்த ராம் பண்ணுன வேலை.. நான் கேட்டேனா என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு. அவனா வந்தான் காதல் கல்யாணம்னு சொல்றான். எனக்கு பிடிக்க வேணாமா? எனக்கு மனசு இல்லையா? நான் யாரை காதலிக்கணும் காதலிக்க கூடாதுன்னு எனக்கு தெரியாதா? இவனை இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணுறதா இல்ல.. சே.. இவன் எல்லாம் ஒரு ஆளு..” என்று மனம் ஒருபுறம் திட்டிகிட்டு இருக்க "அவனை கண்களால் பார்த்து மனசுல நிறைச்சுகிட்டது நீ இல்லையா கீர்த்தி?” என்று இன்னொரு மனம் கேட்டது..

"ஹான்...”என்று விழித்தாள் கீர்த்தி.. அது உண்மை தானே.. கண்களாலேயே கவிதை பேசியது என்ன? இப்போ திட்டுறது என்ன?

"எல்லாம் எனக்கு தெரியும்.. நீ பேசாம போ” என்று இன்னொரு மனதிற்கு தடை போட்டுவிட்டு கோபத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அப்போது அங்கு அர்ஜூன் வந்தான்..

"ஹலோ கீர்த்தனா..” என்று அர்ஜூன் சொல்ல திரும்பி பார்த்தாள்.. வாசலில் சிரிப்புடன் அர்ஜூன் நின்று கொண்டிருந்தான்.

"இவன் வேறயா?” என்று மனதிற்குள் நினைத்தாலும் “ஹாய்” என்றாள்.

"என்னடா இவன் வேற தொல்லை பண்றானேனு நினைக்கிறீங்களா? நான் யார் கூடவும் சேரமாட்டேன்.. முக்கியமா உங்க எதிர்கூட்டணி கூட.. சோ நீங்க தாராளமா என்கூட பேசலாம்” என்றான்..

"யார் இவனா சேர மாட்டான்? அண்ணன் ஒரு சொல் சொன்னாலும் தவறாமல் செய்யுற இவனா ராம் கூட்டணி கூட சேரமாட்டான்.. ஆனாலும் பேசுறதுக்கு பழகியிருக்கான்.. இவனை எதுக்கு வெறுக்கணும்? இவன் அண்ணா அப்பா மேல தானே கோபம்.. இவன் என்ன பண்ணுனான்? பாவம் அப்போ பிறந்திருக்கவே மாட்டான். இவனை ஒதுக்கி வச்சா தான் பாவம்..” என்று மனதிற்குள்ளேயே பேசி கொண்டிருந்தாள் கீர்த்தி..

"என்ன கீர்த்தனா மனசுக்குள்ளேயே பட்டிமன்றம் வைப்பீங்க போல நான் பேசுனதுக்கு திரும்பி பேச்சே காணோம்?” என்றான் அர்ஜூன்.

"அப்படி எல்லாம் இல்லை அர்ஜூன். வேற ஒரு தாட்.. அவ்ளோ தான்” என்றாள் கீர்த்தி.

"ஓகே.. அப்போ பிரண்ட்ஸ்” என்று கை நீட்டினான் அர்ஜூன். "பிரண்ட்ஸ்” என்று தானும் தன் கையை நீட்டினாள் கீர்த்தி.

"ஓகே கீர்த்தனா சாப்பிட வரீங்களா?” என்று கேட்டான் அர்ஜூன்.

"இல்லை..பசிக்கல” என்றாள் கீர்த்தி.

"இவ்ளோ நேரம் ட்ராவல் பண்ணிட்டு வந்திருக்கீங்க.. இப்படி பசிக்கலைன்னு பொய் சொல்லலாமா? அப்பாக்கு ரூம்ல சாப்பாடு போய்டும்.. சோ நீங்க இப்போ சாப்பிட வரலாம்.. சீக்கிரமா வாங்க..” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

"இவனுக்கு மட்டும் எப்படி நான் மனசுல நினைக்குறது தெரியுது?” என்று சொல்லிவிட்டு சாப்பிட போனாள்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ராமிற்கு புரிந்தது ஒன்றே ஒன்று தான் அவளை பழைய கீர்த்தியாக கொண்டு வர இப்போது அர்ஜூனால் மட்டுமே முடியும்.. அதனால் தானே அவனை அவள் ரூமிற்கு அனுப்பினான். அவள் சாப்பிட வந்ததும் தனக்கும் தந்தைக்குமான சாப்பாட்டை எடுத்து கொண்டு பிரகாஷின் ரூமிற்கு சென்றான்.. சாப்பிட மறுத்தவரை சாப்பிட வைத்து விட்டு வெளியே வரும் போது கீர்த்தி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. எதுவும் பேசாமல் அவள் அருகே போய் அமர்ந்தான்..

அவன் அமர்ந்தது தெரிந்தும் எதுவும் தெரியாதது போல் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.. அர்ஜூனுக்கு சிரிப்பாய் வந்தது. சாப்பாட்டு மேசைக்கு வந்ததும் அவள் கண்கள் ராமை தேடியதென்ன?இப்போது எதுவும் தெரியாதது போல் அமர்ந்திருப்பது என்ன? அர்ஜூன் சாப்பாட்டை வேகமாக முடித்துவிட்டு எழும்பினான்.. தம்பிக்கு மனதில் நன்றி சொல்லியவாறே "கீர்த்தி” என்று அழைத்தான் ராம்.. எதுவும் பேசாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தாள் கீர்த்தி..

"கீர்த்தி” என்று மீண்டும் அழைத்தவன் பதில் இல்லாமல் போகவே "கீர்த்தி நாளை காலைல வெளில போகணும்.. ரெடியா இரு” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்..

"எல்லாருக்கும் மிரட்டுறதே வேலையா போச்சு” என்று ராமை மனதில் திட்டியவாறே சாப்பிட்டுவிட்டு எழும்பினாள் கீர்த்தி..

அடுத்த நாள் காலையில் சீக்கிரமாவே விழித்து விட்டாள் கீர்த்தி. புதிய இடமானதால் தூக்கம் சரியாக வரவில்லை குளித்து முடித்து உடை மாற்றி வெளியே வரும்போது சமையலறையில் இருந்து சத்தம் கேட்டது. ராமும் அர்ஜூனும் சமைத்து கொண்டு இருந்தனர்.

"என்ன அண்ணா? இன்னைக்கும் சப்பாத்தி தானா?” என்று கேட்டான் அர்ஜூன் முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொண்டு.

"கீர்த்திக்கு சப்பாத்தி ரொம்ப பிடிக்குமாம்டா. அவ இப்போ தானே நம்ம வீட்டுக்கு முதல்முறையா வந்திருக்கா.. அவளுக்கு பிடிச்சதை பண்ணி கொடுப்போமே” என்றான் ராம்..

‘ஓகோ.. உங்க ஆளுக்கு மட்டும் ஸ்பெஷல் சாப்பாடா?” என்று அர்ஜூன் கேட்டதும் ராம் அவசரமாக "உனக்கும் பிடிக்குமேடா” என்றான்

"பட் இது இன்னைக்கு எனக்கு ஸ்பெஷல் இல்லையே.. தி கிரேட் கீர்த்தனாக்கு தானே” என்றான் அர்ஜூன்.

"நீ எப்போதுல இருந்துடா அவமேல பொறாமைபட ஆரம்பிச்ச? நேத்து கூட நல்லா தானே பேசிட்டு இருந்த?” என்றான் ராம். அவன் குரலில் ஒருவித படபடப்பு இருந்தது.

"நீங்க எப்போதுல இருந்து அண்ணா நான் பேசுறது எல்லாம் சீரியசா எடுக்க ஆரம்பிச்சீங்க?” என்று கேட்டான் அர்ஜூன்..

"அது வந்து.. நீ அப்படி சொன்னதும் உனக்கு பொசசிவ் ஸ்டார்ட் ஆயிடுச்சோன்னு பயந்துட்டேன்.. அவ நம்மள நம்பி வந்திருக்கிற பொண்ணு.. அவ மனசு எப்பவும் நிம்மதியா இருக்கணும்.. கஷ்டபடுற மாதிரி எப்பவும் நடந்துக்க கூடாது” என்றான் ராம்..

அவன் கைகளை பிடித்து அழுத்தியவாறே "எனக்கு கீர்த்தனாவை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா.. அவங்க கோபமும் நியாயம் தான்.. பட் உங்களை தண்டிக்குறது தான் தப்பு சீக்கிரம் புரிஞ்சுப்பாங்க. நான் எப்பவுமே கீர்த்தனா மேல பொறாமை பட மாட்டேன். ஏன்னா நாம அண்ணா தம்பிங்குறத யாராலயும் மாத்த முடியாது” என்றான். அவனை ஆரத்தழுவி கொண்டான் ராம்.

பின் அவர்கள் சமையல் வேலையில் இறங்க, இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த கீர்த்தனா அவர்களின் பாசத்தில் நெகிழ்ந்து போனாள்.. ஆனால் ஏனோ ராமை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.

அவ்வளவு ஆசையாக ராம் செய்த சப்பாத்தியை கீர்த்தி தொட கூட இல்லை. அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்து இருந்தவள் எழும்பி சென்றாள்.. ஆனால் அவள் கவனிக்காமல் இருந்தது ராம் தட்டிலும் சப்பாத்தி அப்படியே இருந்தது. இதையெல்லாம் பார்த்த அர்ஜூனுக்கு தான் பாவமாக இருந்தது. பிரகாஷ் இதை கவனித்தாலும் "எவ்வளவு திமிர் இவளுக்கு?” என்று நினைத்து கொண்டே கை கழுவ சென்றார்..

"அண்ணா..” என்று அர்ஜூன் கூப்பிட்ட உடன் "சாரிடா” என்ற ஒரு சொல்லுடன் எழும்பி தன் அறைக்கு சென்றான் ராம்..

அண்ணனை சமாதான படுத்துவதை தவிர அவன் வழியிலேயே விடுவது மேல் என்று எண்ணிய அர்ஜூன் கையில் சாப்பாட்டை எடுத்து கொண்டு கீர்த்தியின் அறைக்கு சென்றான்..

அங்கு கீர்த்தி மடமடவென தண்ணீர் குடித்து தன் வயிற்றை நிரப்புவதை பார்த்த அர்ஜூன் "என்ன கீர்த்தனா இவ்வளவு பசியை வச்சுகிட்டா சாப்பிடாம எழும்பி வந்தீங்க?” என்று கேட்டான்.

திடீரென கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தவள் அவனை கண்டதும் விழித்தாள். "ஹேய் பாத்து பாத்து கண் ரெண்டும் வெளில வந்துட போகுது.. இப்படியா கண்ணாலயே எரிக்கறது..?” என்று கேட்டான்..

"நான் ஒண்ணும் கண்ணால உன்னை எரிக்கல. சட்டென சத்தம் கேட்டதும் பயந்துட்டேன்” என்றாள்..

"சரி சரி அத விடுங்க எதுக்காக சாப்பிடாம எழும்பி வந்தீங்க .. என் சமையல் அவ்வளவு மோசமாகவா இருக்கு?” என்று கேட்டான் அர்ஜூன்..

"என்ன நீயா சமைச்சது?” என்று கேட்டவளின் தோரணையிலேயே அவள் ராம் சமைத்ததால் தான் சாப்பிடாமல் வந்தாள் என்பது புரிந்தது.

"எஸ் அஃப்கோர்ஸ் நானே தான்..” என்றான்.

"அப்போ உன் அண்ணா..” என்று அவள்இழுக்கும் போதே "அண்ணா மாவு மட்டும் தான் பிசைஞ்சு வப்பாங்க.. சமையல் நான் தான்” என்று நன்றாக பொய் சொன்னான்.

‘ஓ...” என்று கீர்த்தி இழுத்தவுடன் "என்ன ஓ..ன்னு இழுக்குற.. சாரி இழுக்குறீங்க.. ஒழுங்கா சாப்பிடுங்க” என்றான்..

"ஹேய் நீ என்னை வா போன்னு கூப்பிடலாம்.. நாம் ப்ரெண்ட்ஸ் தானே” என்றாள்..

"ஓகே.. என்னை ப்ரெண்டா நினைச்சா சாப்பிடுங்க.. சாரி சாப்பிடு” என்றான்..

"சரி சரி சாப்பிடுறேன்..விட மாட்டியே” என்றவள் அவன் கையில் இருந்த தட்டை வாங்கி உணவை உண்டாள்..

அவள் சாப்பிட்டு முடித்ததும், "சரி நீ கிளம்பி இரு.. அண்ணா வெளில போகணும் சொன்னாங்களே” என்று ஞாபகப்படுத்திவிட்டு சென்றான்.

"அய்யோ இவன் கூட வெளில வேற போகணுமா?” என்று சலித்தவாறே ரெடியானாள் கீர்த்தனா..

கீர்த்தனாவை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தவன் ராமை தேடி சென்றான்.. ராம் ஜன்னல் வழியே வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான்..

"அண்ணா" என்று அர்ஜூன் அழைத்தும் ராம் திரும்பாமல் இருக்கவே அருகில் சென்று அவன் தோளை தொட்டான்.. திரும்பி பார்த்தவனின் கண்கள் கலங்கியிருந்தன..

"அண்ணா” என்று பதறி விட்டான் அர்ஜூன்..

‘ஒண்ணும் இல்லடா.. அவ வெளில போக கிளம்பிட்டாளா?சாப்பிட்டாளா?” என்று கேட்டான் ராம்..

அண்ணன் மனதை மறைப்பதை அறிந்தும் "சாப்பிட்டாச்சு அண்ணா.. நீங்களும் சாப்பிட்டு கிளம்புங்க” என்றான்.

"பசிக்கலடா.. வெளில பாத்துக்குறேன்” என்றவன் கீர்த்தனாவை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.

கீர்த்தனாவிற்கும் அவன் கூட வெளியே போக எரிச்சலாக இருந்தது. அவளது கல்லூரியில் உள்ளவர்கள் ஏதாவது கேட்டால் என்ன சொல்வது என்ற எண்ணத்திலேயே இருந்தாள். எங்கே போகிறோம் என்று கூட கேட்க தோன்றவில்லை. ஆனால் அவள் பயந்தது போலவே அவள் ஹாஸ்டல் முன் வந்து கார் நின்றது.

இங்கே எதற்காக வந்திருக்கிறான் என்பது போல அவனை திரும்பி பார்க்க, "உன் ஹாஸ்டல்ல பேசிட்டேன் போய் உன் லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வா” என்றான் எங்கேயோ பார்த்தபடி.

"தனியாகவா?” என்று தனக்குள்ளே முணுமுணுத்தாள் கீர்த்தி..

"கூட வந்திருப்பேன் தான்.. ஆனால் நான் உனக்கு யாருன்னு யாராவது கேட்டா நீ சொல்ல தயங்குவ எதுக்கு கஷ்டம்? எனக்கு அவமானம்.. நான் கார்லயே இருக்குறேன் போய் எடுத்துட்டு வா” என்றான்..

"சரி” என்று சொல்லிவிட்டு சென்றாள். அனன்யா மட்டுமே அவளுக்கு நெருக்கம். அவளும் ஊருக்கு போனதால் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் பொருட்களை எடுத்து கொண்டு கிளம்பினாள்..

அவளை அழைத்து கொண்டு பக்கத்திலிருந்த பார்க்-க்கு சென்றான்.

"வீட்டுக்கு போகலயா?” என்று கேட்டாள் கீர்த்தனா..

"இல்லை உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

"என்கிட்ட பேச உங்களுக்கு என்ன இருக்கு? வீட்டுக்கு போகலாம் டையர்டா இருக்கு” என்றாள்..

அவள் பேச்சை கவனிக்காத மாதிரி "பேச இருக்கு நீ இப்போ வந்திருக்கிறது யார் வீட்டுக்கு அப்படின்னு தெரியும் தானே.. உன் மாமா வீடு.. இங்கே நாங்க ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை வாழுறோம்.. எங்களுக்குள் சண்டை வந்ததே இல்லை. கலகலப்பாக வாழ்ந்தோம். இப்போ நீயும் எங்ககூட ஜாயின் பண்ணியிருக்க. ஒரே வீட்டில் இருக்க போறோம் எதுக்கு இந்த கோபம்.. எப்பவோ நடந்து முடிந்த விஷயத்தை ஏன் மீண்டும் தோண்டுற? அத்தை பண்ணுனதும் தப்பு தான்.. அவ்வளவு நம்பின என் அப்பாவ அவமானபடுத்துனாங்க. அப்பா கோபப்படுறதுல என்ன தப்பு இருக்கு? இது உன்னோட சொந்த வீடு. நீ உரிமையா இரு கோபப்படாத பிளீஸ்” என்றான் ராம்.

அதுவரை பேசாமல் கேட்டு கொண்டிருந்த கீர்த்தி, "எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா?” என்று கேட்டாள்

புரியாமல் பார்த்த ராமை பார்த்து கோபத்துடன் "என் அம்மா பண்ணுனது தப்பு தான். இதே அவங்க மனசுக்கு பிடிக்காத ஒருத்தரை கல்யாணம் பண்ணி வச்சிருந்தா உயிரோட இருக்க மாட்டாங்க. அப்போ நீங்க சந்தோஷ பட்டிருப்பீங்களா?அவங்களுக்கு பிடிச்சவரை கல்யாணம் பண்ணிட்டாங்க. அத உங்களுக்கு சொல்லாம பண்ணுனது மட்டும் தான் தப்பு. அதுக்காக நீங்க குடுத்த தண்டனை எத்தனை வருஷம் தெரியுமா? இருபத்து மூன்று வருஷம்.. ஒவ்வொரு நாளும் மனசுல படுற கஷ்டம் உங்களுக்கு தெரியுமா? உங்க அப்பா நியாயத்தை சொல்ல வந்தவங்க என் அம்மாவோட வலியையும் புரிஞ்சிக்கோங்க... கிளம்பலாம்... தென் ஒரு விஷயம். நீங்க எனக்கு என்ன உறவு முறைன்னு யாருக்கும் வெளில தெரியகூடாது. அப்படி தெரியுற அன்னைக்கு தான் நான் உங்க வீட்ல இருக்குற கடைசி நாள்" என்று சொன்னவள் விறுவிறுவென காருக்கு சென்றாள்.

"ஐய்யோ இவள வழிக்கு கொண்டு வரது ரொம்ப கஷ்டம் போலவே” என்று எண்ணியவன் காரைக் கிளப்பி வீட்டுக்கு சென்றான்.

வீட்டிற்குள் சென்ற கீர்த்தனா நேரடியாக தனது அறைக்குள் சென்றாள். அவனது அறைக்கு செல்ல எத்தனித்த ராமை தடுத்த அர்ஜூன் "அண்ணா சாப்பிட்டீங்களா?” என்று கேட்டான்.

ஒரு முறை தயங்கிய ராம் "சாப்பிட்டேன்டா” என்று கூறி விட்டு சென்றான்.

இதை கேட்ட கீர்த்தனாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. ராம் சாப்பிடாமலா வந்தான்? இப்பவும் சாப்பிடலையே என்று எண்ணியவள் "சாப்பிட்டால் என்ன சாப்பிடலைனா என்ன?ஒருநாள் சாப்பிடலைன்னா என்ன ஆகிடுவார் சார்..” என்று நினைத்து விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள்.

இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரிக்கு செல்ல வேண்டும். அனுவிடம் என்ன சொல்லி சமாளிப்பது? இவர்களை எப்படி தவிர்ப்பது? என்ற யோசனையிலேயே அவள் தலை வலித்தது. ஒரு கப் காபி கிடைத்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்தவள் இதுவே தன் வீடாக இருந்தால் தானே சமையலறைக்கு சென்று காபி போட்டிருக்கலாம். எல்லாம் நேரம் என்று சலித்து கொண்டாள்.

பிரகாஷின் ரூமிற்கு சென்ற ராம் அவரிடம் பேசலாம் என்று நினைத்தான். "அப்பா” என்று அழைத்தவனிடம் உடனே "இப்போ என்ன விஷயம் மறைச்சிட்டு சொல்ல வந்திருக்க?” என்று கோபமாக கேட்டார்.

"அப்பா” என்று அதிர்ந்தான் ராம்.

"சாரி ராம்.நீ பேசுற எதையும் நான் கேட்க போறது இல்லை. பெட்டர் நீயும் என் முன்னாடி வராதே.. என்னை தனியா விடு.. உங்களோட பொய்யை எல்லாம் நம்பி இதுவரை ஏமாந்ததை என்னால அக்செப்ட் பண்ண முடியல.. கொஞ்ச நாள் என்னை இப்படியே விட்டுடு. நானே என்னை மாத்திக்க ட்ரை பண்றேன்” என்றார்.

"நீங்க மாறவேண்டாம் அப்பா. நீங்களாவே இருங்க” என்றவன் தந்தையிடமும் புரிய வைக்க முடியாத வருத்தத்தில் வெளியேறினான்.

என்னவளே..!
உன் அன்பை முழுதாக அனுபவிக்க
உன் காலடியில் தவமிருக்கும் என்னை
உதைத்து தள்ளும் நீ
ஒருநாள் என் காதலை புரிந்து வருவாய்
அன்றும் என் மனம் உன்னை மட்டுமே
நினைத்து காத்திருக்கும்..
நான் என்றும் உனக்கானவன் மட்டுமே
என் காதலியே..!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14

அன்று கல்லூரியில் செகண்ட் செமஸ்டர் தொடங்கும் நாள். சீக்கிரமாகேவே கிளம்பி வந்தான் ராம். அர்ஜுனும் அவன் அருகில் வந்து நின்று கீர்த்தியின் வருகையை எதிர்ப்பார்த்தான். அவர்களின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காது அழகிய தேவதையாக வந்த கீர்த்தி யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றாள்.

பின்னாடியே வந்த ராம் “கீர்த்தி ஒரு நிமிஷம்” என்றான்.

நடந்து கொண்டிருந்தவள் நின்று திரும்பி பார்த்தாள். கண்களில் ‘என்ன?’ என்ற கேள்வி இருந்தது.

அதையே புரிந்தவன் “கார்ல காலேஜ் க்கு போ” என்றான்.

அவனை முறைத்தவள் “நான் அன்னைக்கு என்ன சொன்னேன்னு நியாபகம் இல்லையா? நீங்க எனக்கு யாருன்னு யாருக்கும் தெரிய கூடாது. இப்போ நான் கார்ல போய் இறங்கினா என்ன எல்லாம் கேள்வி வருமோ? இப்பவே ஹாஸ்டல் காலி பண்ணுனதுக்கு என்ன கேட்பாளோ அனு? எல்லாம் நானே சமாளிக்கிறது எப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன். இப்போ எனக்கு எதுவும் தேவை இல்ல. இதுவரை எப்படி காலேஜ்கு போனேனோ அப்படியே போறேன்” என்று சொல்லி விட்டு நடந்தாள்.

என்ன சொல்வது என்று புரியாமல் அர்ஜுன் நிற்க, “என்னடா இவளுக்கு அவ்வளவு ரோஷம்? நாம என்ன அவளுக்கு விரோதியா? ரொம்ப ஓவரா பண்றா” என்று புலம்பிய படி ராம் கிளம்பினான்.

கல்லூரிக்கு வந்த கீர்த்தி நேரா தனது வகுப்பிற்கு சென்றாள். அங்கே கோவமே உருவாக நின்றாள் அனு. தயங்கி கொண்டே அவள் அருகில் சென்ற கீர்த்தி “அனு” என்று அவள் தோளை தொட்டாள்.

அவள் கைகளை சட்டென தட்டி விட்ட அனு “என்னை தொடாத” என்றாள் கோபத்துடன்.

“ஹேய் என் செல்லம்ல சொல்லுறத கேளு. நான் உங்கிட்ட சொல்லாம போனது தப்பு தான். பட் அந்த நிலைமைல எனக்கு எதுவும் தோனல. அப்பாவை இழந்துட்டு நின்னப்போ ரிலேஷன் ஒருத்தங்க அவங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துட்டாங்க. இப்போ அங்க தான் தங்கியிருக்கேன். நீ லீவ்ல இருந்ததால் சொல்ல முடியல. சாரிடா பிளீஸ் பேசு” என்றாள்

கோபம் இருந்தாலும் அவள் நிலைமையில் யோசித்தாள் அனு. அவளுக்கும் எவ்வளவு கஷ்டம் என்று எண்ணியவள் “சரி விடு யார் அந்த ரிலேஷன்? எப்படி திடீர்னு உன்னை பத்தி தெரிஞ்சது”? என்று கேட்டாள்

ஒரு நிமிஷம் தயங்கிய கீர்த்தி, “அம்மாவோட அண்ணன் தான். இங்க தான் சென்னையில் செட்டில்ட்” என்றாள்.

“ஒ... சரி கீர்த்தி வா போகலாம்” என்று அழைத்து கொண்டு கேன்டீனுக்கு சென்றார்கள்.

அங்கே இன்னொரு பக்கம் அருண் புலம்பி கொண்டிருந்தான்.

அருணிடம் வந்த தருண், “என்னடா மச்சி ரொம்ப புலம்புற? என்னாச்சு?” என்று கேட்டான்.

“கீர்த்தி ஹாஸ்டல் விட்டு போய்ட்டாடா” என்றான் வருத்தத்துடன்.

“ஹாஸ்டல் விட்டு தானே போனா. கல்யாணம் பண்ணிகிட்டு போகலையே” என்றான் தருண்.

“டேய்” என்றான் அருண் கோபத்துடன்.

“என்னடா உன் பிரச்சனை? அவகிட்ட போய் உன் காதலை சொல்லவும் இல்ல. அவ மனசுல என்ன இருக்குனே தெரியாம நீ ஏன்டா உன் மனசுல ஆசைய வளத்துட்டு கஷ்டபடுத்துற? எதுவா இருந்தாலும் நேரடியா அவகிட்ட பேசு. அப்புறம் முடிவெடு” என்றான்.

“கொஞ்சம் தயக்கமா இருக்கு டா.. அவ அக்சப்ட் பண்ணலைனாலும் என்னால தாங்க முடியாது” என்றான்.

“டேய் உன்னை” என்று தருண் ஆத்திர பட்டாலும் “எதோ பண்ணு என்று கூறி விட்டு சென்றான்.

அருண் எப்படி கீர்த்திகிட்ட சொல்றது என்று யோசித்து கொண்டே வகுப்புக்கு சென்றான்.

கல்லூரியில் வழக்கமாக அமர்ந்திருக்கும் பெஞ்சில் அமர்ந்து நண்பர்களை எதிர் பார்த்து கொண்டிருந்தான் அர்ஜுன். சிறிது நேரத்தில் அவன் நண்பர்கள் வரவே இடம் கலகலத்தது.

“ஹேய் அர்ஜுன் எப்டிடா இருக்க? செமஸ்டர் லீவ் எல்லாம் எப்படி போச்சு?” என்று கேட்டான் கார்த்திக்.

“சூப்பர் டா. ரொம்ப என்ஜாய் பண்ணுனேன்” என்றான் அர்ஜுன்.

“என்னடா இவன் இவளவு ஹாப்பியா இருக்கான்? ஏதாவது சம்திங் சம்திங்?” என்று கேட்டான் அகிலன்.

“டேய் அப்படி எல்லாம இல்லடா இதுக்கு இடைல ஓன் சேட் திங் ஆல்சோ ஹேப்பன்ட்.. என் மாமா இறந்துட்டாங்க” என்றான்.

“அதுக்கு நீ ஹேப்பியா இருக்கியாடா?” என்று கேட்டான் கிருஷ்.

`’சீ.. வாய மூடுடா. ஒரு சாவுல சந்தோஷ படுற பிறவி இல்லடா நான். அவளவு நல்ல மனுஷன் செத்துடாறேன்னு ரொம்ப பீல் பண்றேண்டா. ஆனா என் சந்தோஷத்துக்கு காரணம் வேற” என்றான் அர்ஜுன்.

“அத என்னன்னு தான் சொல்லி தொலையேன்” என்றான் கார்த்திக் கடுப்புடன்

“எங்க வீட்டுக்கு ஒரு தேவதை வந்துருக்காடா” என்றான் அர்ஜுன்

“யாரடா அது?” என்று விழிகள் விரிய கேட்டான் கார்த்திக்

“என் மாமா பொண்ணு. நேம் கீர்த்தனா.” என்றான்

“என்னது மாமா பொண்ணா? பொண்ணு அழகா இருப்பாளா?” என்று ஆவலுடன் கேட்டான் கார்த்திக்.

“காயத்ரி விட அழகுடா” என்றான் அர்ஜுன்.

“டேய் ஏன் டா இந்த நல்ல நேரத்துல அவளை பத்தி பேசிகிட்டு” என்று எரிச்சலுடன் கூறினான் கார்த்திக்

“ஏண்டா?” என்று கேட்டான் அர்ஜுன்

“நீ தான் உன் மாமா பொண்ணு பத்தி சொல்லிட்டியே.. இனி காயத்ரி எதுக்கு?” என்ற கார்த்திக் அசால்டாக கேக்க,

“டேய் உன்னை கொலை பண்ண போறேன்.. இன்னும் ஒரு முக்கியமான இன்பர்மேஷன். கீர்த்தனா என்னோட அண்ணி. புரிஞ்சுதா விஷயம்?” என்று அர்ஜுன் கேக்க,

“என்னது?” என்று எல்லாரும் வாயை பிளந்தனர்.

“என்னடா எல்லாரும் ஒரே நேரத்துல வாயை ஆன்னு காட்டுறீங்க?”

“உன் அண்ணினா ராம் சாருக்கு மனைவியா?” என்று கேட்டான் அகிலன்.

“பின்னே யாருக்குடா? எதோ நான் நாலு அஞ்சு அண்ணா வச்சிருக்குற மாதிரி கேட்குற? இருக்குறது ஒரே ஒரு அண்ணன். அவங்களுக்கு தான் கீர்த்தனா வருங்கால மனைவி” என்றான்

“அப்போ எனக்கு அதிர்ஷ்டம் இல்ல. எனக்கு அந்த பச்சை மிளகாய் காயத்ரி போதும்” என்று கார்த்திக் சொல்லி கொண்டே திரும்ப அங்கே காயத்ரி வந்து கொண்டிருந்தாள்.

“மச்சி அவ வர்ற நேரத்துல இங்க நடந்த எதையும் போட்டு உடச்சிடாதடா. அப்றம் என் காதலை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடுவா. சோ கீப் சைலன்ட்.” என்று கார்த்திக் சொல்லி விட்டு “ஹாய் காயத்ரி” என்று காயத்ரியிடம் சென்று பேசினான்.

அந்த நேரம் நிஷா அந்த வழியாக வந்தாள். வந்தவள் அர்ஜுனை பார்த்து புன்னகைத்தாள். பார்த்த அர்ஜுனுக்கு மயங்கி விழாத குறை தான். “என்னடா இவ ஒரே வாரத்துல இப்படி மாறிட்ட?” என்று அதிசய பட “எல்லாம் காதல் பண்ற வேலை மச்சி” என்றான் அகிலன்.

“யாருக்கு யார் மேல காதல்டா?” என்று கேட்டான் அர்ஜுன்.

“வேற யாருக்கு? நிஷாவுக்கு உன் மேல தான்” என்றான் அகிலன்.

“ச்சே ச்சே.. இவளாவது ஒருத்தனை காதலிக்கிறதாவது... வேற எதாவது புதுசா சொல்லு மச்சி” என்றான் அர்ஜுன் சிரிப்புடன்.

இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்க, அவர்களை நோக்கி வந்தாள் நிஷா. அர்ஜுனுக்கு ஒரு நிமிஷம் இதயம் நின்று விட்டது போல உணர்ந்தான்.” இனியும் என்ன பிரச்சனை கொண்டு வர போறாளோ?” என்று கலக்கத்துடன் நின்றான்

அவன் அருகில் வந்த நிஷா “ஹாய் அர்ஜுன்” என்று தனது வலது கையை நீட்டினாள். இன்னும் அதிர்ச்சி விலகாத அர்ஜுன் கை தன்னிச்சையாக தான் கைகளை அவள் கைகளுடன் கோர்த்தது. வாய் “ஹாய்” சொன்னது.

“என்ன அர்ஜுன் அப்படி பாக்குற? அதே நிஷா தான்.. என்ன ஒரு வித்தியாசம்னா இப்போ உன் மேல கோப பட மாட்டேன். பிகாஸ் நீ எந்த தப்பும் பண்ணலன்னு எனக்கு லேட்டா தான் புரிஞ்சது. அண்ட் தேங்க்ஸ் பார் ஆல் யுவர் ஹெல்ப்ஸ்” என்றவள் “பை.. கிளாசுக்கு டைம் ஆச்சு.. பை அகில்” என்று சென்றாள்.

அகிலனுக்கு சிரிப்பாய் வந்தது. “இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தேன்.. ஏதாவது பேச தோனுச்சுதா? பேசுனது எல்லாம் அர்ஜுன்கிட்ட.. கடைசியில் பார்மாலிட்டிக்கு ஒரு பை” என்றவன் “மச்சி இது எதோ லவ் மாதிரி தான் தெரியுது.. என்ஜாய்” என்று கூறி விட்டு வகுப்புக்கு சென்றான்... அர்ஜுன் யோசனையில் ஆழ்ந்தான்.

------------------------------

கீர்த்தனா வகுப்பறையில் இருக்கும் போது அங்கே சுரேஷ் வந்தான்.

“ஹாய் கீர்த்தனா வெல்கம் பேக். உன் அப்பா இறந்துட்டாராமே. கேள்வி பட்டேன். ரொம்ப கஷ்டமா இருக்கு. இனிமேல் யாரும் இல்லாம அனாதையா எப்படி தான் வாழ போறியோ.. எல்லாம் நீ எனக்கு பண்ணினதுக்கு தான்.. நல்லா அனுபவி” என்றான்.

அவனை வெறுப்புடன் பார்த்தாள் கீர்த்தி. அவள் மனதில் “ராம் இருக்குற வரை நான் அநாதை இல்லடா” என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. அவளுக்கே அது ஆச்சர்யம். ஆனாலும் அதை ஒதுக்கி விட்டு “அடுத்தவங்க கஷ்டத்துல குளிர் காயுற நீ எல்லாம் நல்லா இருக்கும் போது நான் நல்லா இருக்க மாட்டேனா? நீ போடா.. எனக்கு உங்கிட்ட பேசுறத விட ரொம்ப முக்கியமான வேலை இருக்கு” என்றாள்

“ஏய்... “ என்றான் சுரேஷ் கோபத்துடன்

“கிளம்புடா.. சும்மா சும்மா கத்துறதே வேலையா போச்சு.” என்றாள் கடுப்ப்புடன்.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படி.. ஒருநாள் கதற போற” என்று கூறி விட்டு கோபத்துடன் வெளியேறினான் சுரேஷ்.

“இனியும் எத்தனை பெற சமாளிக்கணுமோ” என்ற அலுப்புடன் வேலையை தொடர்ந்தாள் கீர்த்தி.



அன்று கல்லூரிக்கு விடுமுறை . கீர்த்திக்கு வீட்டில் போரடித்தது. வீட்டில் யாரும் இல்லை. ராம் கல்லூரிக்கு சென்றிருந்தான். அர்ஜுன் தன் நண்பனை பார்க்க வெளியே போயிருந்தான். வீட்டில் பிரகாஷ் தான் இருந்தார். அவர் தன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. கீர்த்திக்கு போரடித்ததால் அனுவுக்கு கால் பண்ணி பேசலாம் என்று நினைத்தாள். ஆனால் அவளிடம் செல்போன் இல்லை. அருணாசலம் அடுத்த ஆண்டு வாங்கி தருவதாக சொல்லி இருந்தார். தேவைக்கு அனுவின் போன் தான் உபயோகித்துக் கொண்டிருந்தாள். இப்போதும் தந்தை இல்லாததை வருத்தத்தோடு உள்வாங்கிய படி அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கே தொலைபேசி இருந்தது. பேசலாமா வேண்டாமா என்று யோசித்தாள். பின் ராம் வந்தால் சொல்லிக் கொள்ளலாம் என் தொலைபேசி அருகில் சென்றாள். வெளியே செல்லவும் வழி இல்லை . மழை பெய்து கொண்டிருந்தது. இல்லையெனில் நேரடியாக அனுவை பார்க்க சென்றிருக்கலாம். தொலைபேசியில் அனுவை அழைத்தவள் அவள் அழைப்பை எடுப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் பிரகாஷ் தண்ணீர் குடிப்பதற்காக தன் அறையை விட்டு வெளியே வந்தார். வந்தவர் கண்ணில் தொலைபேசியின் அருகில் நின்ற கீர்த்தி பட்டாள். அவருக்கு கோபம் தலைக்கேறியது. "ஒருத்தி இப்படி தான் போனில் குண்டை தூக்கி போட்டாள். இவள் அடுத்தது யார் குடும்பத்த கெடுக்க போன் பண்ணுறா.. இவ அம்மா மாதிரியே பண்ண போறா." என்ற கோபத்துடன் அவள் அருகில் வந்து கையில் ரிசீவரை பிடுங்கினார். சட்டென இதை எதிர்பார்க்காத கீர்த்தி கொஞ்சம் தடுமாறித்தான் போனாள்.

"ஏய்.. உன் அம்மா பண்ணுன வேலை போதாதா? இப்போ நீ யார் குடும்பத்த கெடுக்க போற.? இங்கே போன் பண்ணுற வேலை எல்லாம் வச்சுக்காத. கோபம் வந்து எதையாவது சொல்லிட போறேன்." என்று கத்திவிட்டு ரிசீவரை போனில் பொருத்தினார்.

கீர்த்தி மலைத்து போய் நின்றாள். கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் தன் தந்தை வயதில் இருப்பவரிடம் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தாள். "என்ன வார்த்தை சொல்லி விட்டார்? நான் அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க போறேனா? இந்த வீட்டில் இனிமேலும் இருந்தால் கேவலம் எனக்கு தான்.. என் அப்பாவுக்கும் வேற வேலை இல்லாமல் ராமை கல்யாணம் பண்ண சொல்லி விட்டார். என்ன பண்ணுவது?" என்று யோசித்தவள் விடுவிடுவென வீட்டை விட்டு வெளியேறினாள். கொட்டும் மழையில்.

மழையில் வெளியே சென்ற கீர்த்திக்கு அழுகை தான் வந்தது. "என்ன மாதிரி ஒரு இடத்தில் வந்து மாட்டிக் கொண்டாள். வெறுப்பை மட்டுமே உமிழும் குடும்பம். இனியும் அங்கே இருந்தால் என்னால் சகிக்கவே முடியாது. இன்றே ஒரு முடிவெடுக்க வேண்டும்" என்று எண்ணியவள் மழையில் ஒரு பேருந்து நிலையத்தில் அருகில் நனைந்து கொண்டிருந்தாள்.

நண்பனை பார்த்து விட்டு வந்த அர்ஜுன் கீர்த்தி வீட்டில் தனியாக இருப்பாளே என்ற எண்ணத்தில் அவள் அறைக்கு சென்றான். அங்கே அவள் இல்லாமல் போகவே "எங்கே போனாள்?" என்று யோசித்து வீடு முழுவதும் தேடினான். கீர்த்தி அவன் கண்ணில் படவேயில்லை.

பதற்றமடைந்த அர்ஜுன் ராமிற்கு போன் செய்ய விரைந்த போது ராமின் கார் வரும் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடினான். நேரம் மாலையை கடந்து கொண்டிருந்தது.

காரை போர்டிகோவில் நிறுத்தி விட்டு வந்த ராம் அர்ஜுன் பதற்றமாய் இருப்பதை கண்டு என்னவென்று விசாரித்தான். அர்ஜுன் கீர்த்தியை காணவில்லை என்றதும் "இங்கே தான்டா எங்கேயாவது இருப்பா.. நல்லா தேடி பாத்தியா?" என்று கேட்டான்.

"வீடு முழுவதும் தேடியும் அவள் கிடைக்கல" என்றதும் பதற்றம் ராமையும் தொற்றிக் கொண்டது.

"சரி வா .. அப்பா வீட்டுல தானே இருந்தாங்க .. கேட்கலாம்." என்றவன் தந்தையின் அறைக்கு சென்றான்.

"என்ன?" என்று கேட்டவரிடம் "கீர்த்திய பார்த்தீங்களா ?" என்று கேட்டான் ராம்.

"அவ எங்கே போக போறா? இங்கே தான் எங்கேயாவது இருப்பா" என்று அலட்சியமாக சொன்னவரின் பதிலில் ஏதோ மறைந்திருப்பது போல் தோன்றியது ராமிற்கு.

அவனின் ஆழமான பார்வையை சந்தித்தவருக்கு தன் தவறு புலப்பட "டேய் என்னடா ஏதோ நானே அவளை விரட்டியடித்த மாதிரி பாக்குற?" என்று கேட்டார்.

விரட்டியடித்திருக்க மாட்டார் தான். ஆனால் ஏதோ நடந்திருக்கிறது என்று யூகித்தவன் இதற்கு மேலும் தாமதித்ததால் கீர்த்திக்கு எதுவும் ஆபத்து வந்து விடும் என்று அஞ்சியவனாய் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். மழை வேறு நிற்காமல் பெய்து கொண்டிருந்தது.

"இந்த மழையில் எங்கே போய் மாட்டிக்கிட்டாளோ?" என்று பதற்றத்துடன் காரை ஓட்டினான் ராம்.

அதிக நேரம் அவனை கவலைக்கு ஆளாக்காமல் ஒரு பேருந்து நிலையத்தின் அருகில் மழையில் நனைந்து கொண்டு நின்றிருந்தாள் கீர்த்தி. "எவ்வளவு நேரமாக இப்படி மழையில் நனைகிறாளோ?" என்ற எண்ணத்தில் அவள் அருகில் போய் காரை நிறுத்தினான் ராம். தன் அருகில் ஒரு கார் வந்து நின்றதும் பயந்துவிட்டாள். பின் அதில் இருந்த ராமை பார்த்ததும் மனது அமைதி ஆனது. ராம் காரின் உள்ளேயிருந்தே அவளை காரில் ஏறுமாறு சைகை காட்டினான். எல்லாம் புரிந்தும் வேண்டுமென்றே தனியாக நடந்தாள் கீர்த்தி. பொறுமையை இழந்த ராம் காரை விட்டு இறங்கி அவள் அருகில் வந்தான்.

"என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ? ஒழுங்கா வந்து கார்ல ஏறு" என்றான்.

"ப்ரொஃபசர் சார் இந்த குடும்பத்த கெடுக்குற பொண்ணு உங்க வீட்டுக்கு தேவை இல்ல. பேசாம கிளம்புங்க." என்றாள்.

"என்ன?" என்று அதிர்ந்தவன் “வீட்டில என்ன நடந்துச்சு கீர்த்தி?" என்று கேட்டான்.

கீர்த்தி பதில் சொல்லாமல் நிற்கவே "கீர்த்தி உன் கிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன்" என்றான் அழுத்தமாய்.

அவன் அழுத்தத்தில் ஒரு வழியாக வீட்டில் நடந்ததை சொன்னாள் கீர்த்தி. கஷ்டமாக இருந்தது ராமிற்கு. "ஏன் இப்படி அப்பா பேசுனாங்கன்னு எனக்கே புரியல கீர்த்தி. நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன்னு சொன்னப்போ யார்ன்னு கூட கேட்கல. அவ தான் என் மருமக அப்படின்னு தான் சொன்னாங்க. இப்போ நீ பூரணி அத்தை பொண்ணுனு சொன்னதும் அவங்க மேல இருந்த கோவம் உன் மேல் வந்துடுச்சு... அப்பா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன்.. ப்ளீஸ் வீட்டுக்கு வா.. அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்..” என்றான்.

அவன் மன்னிப்பு கேட்பதும் அவளுக்கு கஷ்டமாக இருக்க எதுவும் பேசாமல் காரில் ஏறினாள். காரை கிளப்பியவன் "கீர்த்தி" என்று அழைத்தான். "என்ன?" என்று கேட்கவும் "உனக்கு நாளைக்கு நான் மொபைல் வாங்கி தரேன்" என்றான்.

"ஒன்னும் தேவையில்லை" என்றாள் கீர்த்தி.

"அப்பா பேசுனதால வேண்டாம்னு சொல்லுறியா கீர்த்தி?" என்று கேட்டான் ராம்.

"சே.. சே.. நீங்க யாரு எனக்கு? நீங்க ஏன் எனக்கு போன் வாங்கி தரனும்?" என்று கேட்டாள் கீர்த்தி.

"நீ என்னை பத்தி என்ன நினைச்சுருக்கனு எனக்கு தெரியல. ஆனால் நான் என்னைக்கு உன்ன முதல் முதலா பார்த்தேனோ அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் எனக்கு எல்லாமுமே நீதான்னு. அதே ஃபீலிங் உன் கண்ணுலேயும் நான் பார்த்திருக்கேன். அந்த அரவிந்த பிரச்சனைல அவ்வளவு பேருக்கு மத்தியிலும் பார்க்ல என்னை பார்த்ததும் உன் கண்ணுல இருந்த பயம் போனப்பவே உன் மனசுல என் இடம் எனக்கு புரிஞ்சது... நான் உன் அழகை விரும்பல கீர்த்தி.. அதையும் தாண்டி என் மனசுல நீ ஒரு தேவதையா இருக்க... எப்பவுமே நான் என் அப்பா பேச்ச மீற மாட்டேன்.. பட் இந்த விசயத்துல நான் உன்னை இழக்க கூடாது னு நான் என் அப்பாவோட வெறுப்பை சம்பாதிக்கிறேன். நீ என் வாழ்க்கையில இல்லைன்னா என் லைஃப் ஃபுல்பில் ஆகாத மாதிரி ஃபீல் பண்ணுறேன். ஐ லவ் யூ கீர்த்தி.. உன் லைஃப் லாங் நான் உன் கூட வரனும் னு ஆசை படுறேன். இதை சொல்ல தான் இவ்வளவு நாள் தயங்குனேன். பட் இனிமேலும் உனக்கு யாரும் இல்ல அப்படிங்குற ஃபீல் வர கூடாது உனக்கு எப்பவுமே நான் இருக்கேன்.கடைசிவரை உன் கூட தான் இருப்பேன் நீ கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டாலும் இல்லைனாலும் கடைசிவரை உன் நினைவோட தான் வாழ்வேன்" என்று மனதார தன் காதலை வெளியிட்டான் ராம். வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

கீர்த்தனாவிடம் காதலை சொன்ன ராமிற்கு அவள் இப்போது சம்மதிப்பாள் என்று தோன்றவில்லை.. ஆனாலும் இத்தனை நாளாக தனக்குள் புதைந்துகிடந்த நேசத்தை வெளிப்படுத்தியதால் நிம்மதியாக உணர்ந்தான். தன் காதல் ஒரு நாள் ஜெயிக்கும் என்று நம்பினான். அந்த நம்பிக்கையில் சந்தோஷமாக வீட்டிற்கு காரை செலுத்தினான். ஓரக்கண்ணால் கீர்த்தியை பார்த்தவனுக்கு அவள் குளிரில் நடுங்கி கொண்டிருப்பது தெரிந்தது.

பின்னே இருக்காதா? கிட்டதட்ட நான்கு மணி நேரமாக மழையில் நனைந்து கொண்டிருந்தாள். பின் சீட்டில் இருந்த தனது கோட்டை எடுத்து நீட்டினான் ராம். அவனை பார்க்காமலேயே அதை வாங்கி அணிந்தாள் கீர்த்தி.. "வெட்கமோ?” என்று முதலில் நினைத்த ராம் "இன்னும் என்ன எல்லாம் யோசிக்கிறாளோ?” என்று கலங்கினான்.

அவன் நினைப்பு பொய்யாகவில்லை. ராமின் காதலை ஏற்கனவே அறிந்தவள் தான் கீர்த்தி.. ஆயினும் அவன் குடும்பத்தினால் அவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை கீர்த்தியால்..

எதுவும் பேசாமல் அமைதியாக யோசித்து கொண்டிருந்தாள். வீடு வந்ததும் ராம் "கீர்த்தி வீடு வந்திடுச்சு..” என்றான். சட்டென உணர்வு பெற்றவளாய் காரை விட்டு இறங்கினாள். இறங்கியவள் விடுவிடுவென வீட்டிற்குள் சென்றாள். வாசலில் நின்றிருந்த அர்ஜூனை கூட கவனிக்கவில்லை. நேராக தன் அறைக்கு சென்று அறையின் உள்ளே பூட்டி கொண்டாள். "என்னாச்சு இவளுக்கு” என்று யோசிக்கும்போதே அர்ஜுன் வந்தான்.

‘என்னாச்சு அண்ணா?” என்று கேட்டவனிடம் "வெளில போயிருக்கப்போ நனைஞ்சிட்டா” என்று கூறிவிட்டு உள்ளே நடந்தான். அவனை பொறுத்தவரையில் அர்ஜூனுக்கு தந்தையின் மேல் இருக்கும் மதிப்பு குறையகூடாது.

கதவை தட்டியவன் அவள் திறக்காததை கண்டு மீண்டும் பலமாக தட்டினான். ஒருவழியாக திறந்தவள் ஆடை கூட மாற்றாமல் அதே ஆடையுடன் பார்த்தவன் கடுப்பானான். "இன்னும் டிரெஸ் கூட சேஞ்ச் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்க? இப்படியே குளிர்ல இருந்தன்னா காய்ச்சல் வந்துடும்” என்றான்.

"எனக்கு காய்ச்சல் வந்தா உங்களுக்கு என்ன? உங்க வேலையை பாருங்க” என்றாள்..

"ஏய்..." என்று கத்தி விட்டான் ராம்.

"இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?” என்று கேட்டாள் கீர்த்தி..

"இது என் வீடு. நான் எங்கேயும் வருவேன்” என்றான் ராம்..

"அது தான் நானும் சொல்றேன். இது உங்க வீடு. நான் ஏன் இங்க இருக்கணும்?”

"சோ..” என்று ஒரு மாதிரியாக கேட்டான் ராம்..

"நான் வீட்டை விட்டு போறேன்” - கீர்த்தி

"எங்க தங்குறதா உத்தேசம்?” - ராம்

"எங்கேயும் தங்குவேன் லேடிஸ் ஹாஸ்டலுக்கா பஞ்சம்?” -கீர்த்தி

ராமுக்கு கோபம் தலைக்கேறியது.

"ரவுடி பசங்களுக்கு கூட தான் பஞ்சம் இல்ல" என்றான் ராம்.. அவன் பேச்சில் அடக்கபட்ட கோபம் இருந்தது.

"நான் அதெல்லாம் பாத்துக்குறேன்” என்றாள் கீர்த்தி

"ஆமா.. நானும் பார்த்தேனே என்னத்த பார்த்து கிழிச்சன்னு.. அன்னைக்கு மட்டும் நான் வரலைன்னா இந்நேரம் நீ செத்திருப்ப..” என்றான் ராம்.

"ஆமா இங்க தினம் தினம் சாகுறத்துக்கு அன்னைக்கு ஒரேடியா செத்துருக்கலாம்”

"ஏய் கீர்த்தி என்ன பேச்சு பேசற?” என்று பதறிவிட்டான் ராம்..

"உண்மைய தான் சொல்றேன்” என்றாள் கீர்த்தி அவனின் பதட்டத்திற்கு எந்தவொரு சலனமும் இல்லாமல்..

"இப்போ உனக்கு என்ன தான் வேணும்?” ஒரு கட்டத்திற்கு மேல் ராமால் தாங்க முடியவில்லை.

"நிம்மதி” என்றாள் கீர்த்தி..

"அது இங்கே இல்லையா உனக்கு?”

"கண்டிப்பா இல்லை.. எனக்கு உங்களை பிடிக்கலை.. இந்த வீட்டை பிடிக்கலை.. இந்த கல்யாணம் பிடிக்கலை..”

வெறுத்துவிட்டான் ராம்.. "என்ன சொன்னாலும் நீ இந்த வீட்டுல தான் இருந்தாகணும்.. ஆனா உன் விருப்பம் இல்லாம கல்யாணம் மட்டுமில்லை எதுவுமே நடக்காது.. அதுக்கு நான் கேரண்டி.. இப்போ போய் தூங்கு.. நான் பேச வந்ததை கேட்கிற மூடுல நீ இப்போ இல்லை.. நாளை பேசிக்கலாம். குட்நைட்..” என்று கூறிவிட்டு சென்றான்..

---------------------------


அந்த அறை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் வண்ணமலர்கள். வண்ண விளக்குகள். பலூன்கள் அங்கங்கே காற்றில் பறந்துகொண்டிருந்தன. முதலிரவு அறையை போல காட்சியளித்தது. கட்டிலில் வண்ண மலர்கள் தூவப்பட்டிருந்தன. ராம் அந்த கட்டிலில் அமர்ந்து தன் மனம் கவர்ந்தவளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவனவள் கொஞ்சும் கொலொசொலியுடன் வந்தாள். வெட்கத்துடன் அவனருகில் வந்தாள். அவள் கையை பிடித்து தன்னருகில் அமரவைத்தான் ராம். மனம் கவர்ந்தவளின் அழகை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான் அவன். அவளோ வெட்கத்தில் தலை குனிந்தாள். அவள் வெட்கத்தை ரசித்தவாறே அவள் கையை தன் கைக்குள் கொண்டு வந்தான். அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான். அவள் முகத்தை மறுபக்கமாக திருப்பி கொண்டாள் தன் கைகளால் அவள் முகத்தை தன்புறம் திருப்பியவன் அவள் கன்னத்தில் முத்தமிட சென்ற நேரம் அவன் செல்போன் அலறியது..

"சே..இந்த நேரத்தில் இது வேற” என்று சலிப்புடன் திரும்பிப்படுத்தவனுக்கு அப்போது தான் புரிந்தது தான் கண்டது கனவு என்று..

செல்போன் அலறியது கனவில் அல்ல.. நிஜத்தில்.. அலாரம் வைத்துவிட்டு படுத்திருந்தான்.. மணி விடியற்காலை 4.00 என்பதை உணர்த்தவே அலாரம் அடித்தது..

சோம்பல் முறித்து எழும்பினான் ராம். எழும்பி அமர்ந்தவனின் நினைவில் கனவு தான் இருந்தது. அந்த பெண்ணின் முகம் மட்டும் அவனுக்கு தெளிவாக ஞாபகம் இல்லை.. யாராக இருக்கும்? அது கீர்த்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது..

"அய்யோ.. இவள் பேசிய பேச்சுக்கு கல்யாணம் முடிச்சுகிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பா” என்று சலித்தவன் அன்றைக்கான வேலைகளை கவனிக்க சென்றான்..

காலை எட்டு மணி ஆன அப்பறம் தான் கவனித்தான் கீர்த்தி இன்னும் வெளியே வரவில்லை என்று.. "என்னாச்சு இவளுக்கு?சண்டை போட வேண்டியாவது சீக்கிரம் வருவாளே” என்று நினைத்தவன் அர்ஜூனிடம் சமையலை கவனிக்க சொல்லிவிட்டு கீர்த்தி அறையை நோக்கி சென்றான்..

"கீர்த்தி..”என்று அழைத்துப் பார்த்தான் எந்த பதிலும் இல்லாமல் போகவே மீண்டும் பலமாக தட்டினான். "கீர்த்தி” என்று அழைத்தான். சத்தமில்லை. பயந்துவிட்டான் ராம்..

"என்னாச்சு இவளுக்கு?”நேத்து வேற மழைல நனைஞ்சாளே. பீவர் வந்துருச்சோ” என்று பயந்து மீண்டும் மீண்டும் அழைத்தான்..

"கீர்த்தி..கீர்த்தி..” - பதிலில்லை..

பலமாக மீண்டும் கதவை தட்டினான்.. இப்போ உள்ளே காய்ச்சலில் படுத்திருந்த கீர்த்தனாவுக்கு யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.. தட்டு தடுமாறி வந்து கதவை திறந்தாள். திறந்தவளின் நிலமையை பார்த்தவுடன் கலங்கிவிட்டான் ராம். அவளின் விழிகள் எல்லாம் சிவந்து நடுங்கி கொண்டிருந்தாள்..

"என்னாச்சும்மா?” என்று அவன் கேட்ட கேள்வியில் தன் தந்தையை நினைவு கூர்ந்தாள்.. அவன் தோள்களில் அப்படியே சாய்ந்தாள். எதுவுமே பண்ண முடியாமல் தவித்தான். உடனே அர்ஜூனை அழைத்தவன், அவளை படுக்கையில் படுக்க வைத்து கை கால்களை பரபரவென தேய்த்துவிட்டான். அர்ஜூன் வரவும் அவனிடம் இருந்து மாத்திரையை வாங்கி அவளின் வாயில் போட்டு தண்ணீரை ஊற்றினான். அவள் மாத்திரை விழுங்கியதும் அவளை தன்னிடமிருந்து பிரித்து படுக்கையில் படுக்க வைத்தான்.. ஆனாலும் அவள் கை அவன் சட்டையை பற்றியிருந்தது.. வியப்புடன் பார்த்தவன் அவள் கைகளை தன்னிடமிருந்து பிரித்துவிட்டான்..

மாத்திரையின் விளைவால் தூங்கியும் விட்டாள் கீர்த்தி.. அவளின்அருகிலேயே நின்று அவளை பார்த்தான்.. "பேசுற பேச்செல்லாம் பேசுற.. அப்பறம் என்கிட்டயே வந்த சேருற.. காலையில் கண்ட கனவு பலிச்சு அதுல மணப்பெண்ணா நீ இருக்கணும்” என்றவன்அவளுக்கு உணவு தயாரிக்க வெளியே சென்றான்..

கல்லூரிக்கு விடுப்பு சொன்னவன் அன்று முழுவதும் அவளுடன் இருந்து அவளை கவனித்துக்கொண்டான். எல்லாவற்றையும் உணர்ந்த கீர்த்தியால் அவனை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்த நாள் ராம் சொல்ல சொல்ல கேட்காமல் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

என்னவளே..!
எதற்காக இந்த கோபம்?
எதற்காக இந்த பிடிவாதம்?
உன்னை புரிந்து கண்டு உன்னை அணைக்க
உன்னை பாதுகாக்க உன்னவன் இருக்கையில்
உன்னை நீயே வருத்திக்கும் செயல்
என்னை உயிரோடு புதைக்கிறதே..
இனியும் வேண்டாம் கண்மணி
உனக்காக நான் இருக்கிறேன்
என்னுள் புதைந்து விடு கண்ணம்மா..
உன்னை கண்ணின் கருவிழி போல்
காத்து கொள்வேன்..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15

காய்ச்சலால் அவதிப்பட்ட கீர்த்தியை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் ராம். ஆனால் அவன் அன்பு புரிந்தும் கீர்த்தி அவனை ஏற்க மறுத்துவிட்டாள். அவள் மனதில் அவன் இல்லாமல் இல்லை. ஆனால் அவன் தந்தையின் வார்த்தைகள் அவளை மேலும் கஷ்டபடுத்தின என்றே சொல்லலாம். அதனால் மட்டுமே ராம் சொல்ல சொல்ல கேட்காமல் கல்லூரிக்கு சென்றுவிட்டாள்.

ராம் வழக்கம் போல் புலம்ப ஆரம்பித்துவிட்டான். இது ராமின் கேரக்டர் இல்லை. ஆனால் அவளை நோகடிக்க கூடாது என்று அவன் தனக்குள்ளயே புதைக்கும் கோபம் ஆதங்கம் எல்லாம் புலம்பலாக வெளி வந்துவிடும். இன்றும் அப்படி தான்.

"சே... என்ன நினைச்சிகிட்டு இருக்கா இவ? ஒருத்தன் வேலை மெனக்கெட்டு சொல்லிட்டு இருக்கேன்.. அலட்சியம் பண்ணிகிட்டு போறா.. காய்ச்சல் சரியாக வேற இல்ல.. இப்போ காலேஜ் போய் என்ன கஷ்டபட போறாளோ? ஹெச்.ஓ.டி. கிட்ட கவனிக்க சொல்லலாம்னா யார்கிட்டயும் உறவுமுறையை சொல்ல கூடாதுன்னு பெரிய இவ மாதிரி கன்டிஷன் வேற போடுறா.. டேய் அர்ஜூன்.. நீ போய் பாத்துட்டு வாடா..” என்றவன் பின் "ஹையோ அதுக்கும் வழியில்லை. ஹெச்.ஓ.டிக்கு நீ தான் என் தம்பின்னு தெரியும். அவர் தோண்டி தோண்டி கேள்வி கேட்டா நீ உளறிடுவ. இதுக்கு நானே போயிருக்கலாம்..” என்று படபடத்தான்.

ஆச்சர்யமாக இருந்தது அர்ஜூனுக்கு. "இந்த அளவுக்கு ஒரு பெண் தன் அண்ணனை ஆட்டி படைத்து வைத்திருக்காளா?” என்று. அதே சமயம் கீர்த்தனா மேல் கோபமும் வந்தது. அவளால் தானே இப்போ அண்ணா புலம்புகிறார் என்று.. விழித்து கொண்டு நின்றான் அர்ஜூன்..

சிறிது நேரத்தில் தன்னிலை வந்த ராம், அர்ஜூன் விழித்து கொண்டு நிற்பதை பார்த்து சிரித்தான். "என்னடா என்னை பார்த்து முழிச்சிட்டு இருக்க? காலேஜ்க்கு போகணும்ல. கிளம்பு” என்றான்..

அவனை பார்த்து முறைத்தான் அர்ஜூன். "என்னடா?” என்று கேட்ட ராமிடம் "இவ்வளவு நேரம் என்னை இங்கே அங்கே அசையவிடாம காதுல ரத்தம் வராத அளவுக்கு புலம்பிட்டு இப்போ காலேஜ்க்கு போன்னு விரட்டுறீங்க.. ஆனாலும் கீர்த்தி உங்களை இவ்வளவு மாத்தியிருக்க கூடாதுண்ணா..” என்றான்.

சிறிது வெட்கத்துடன் சிரித்தான் ராம்.. "பார்ரா.. என் அண்ணாக்கு வெட்கம் எல்லாம் வருது.. ஜமாய்..” என்று சிரித்தபடியே கல்லூரிக்கு சென்றான்.
கல்லூரிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவன் வகுப்பு மாணவனுக்கு விபத்து எனத் தகவல் வர, அவனை அனுமதித்திருந்த மருத்துவமனைக்கு புறப்பட்டான். அங்கு தான் அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.


அருண் தனது நண்பர்களுடன் பேசிகொண்டு வரும்போது கீர்த்தனாவின் வகுப்பில் சத்தம் கேட்பதை கேட்டு அங்கு விரைந்தான். அங்கு கீர்த்தனா மயங்கி கீழே கிடந்தாள். அவள் தோழிகள் அவளை இருக்கையில் அமரவைத்து எழுப்பி கொண்டிருந்தனர். அனு தண்ணீர் எடுத்து வந்ததும் அவள் முகத்தில் தெளிக்க கண்ணை திறந்தவள் "ராம்” என முனகிக்கொண்டே மீண்டும் சரிந்தாள். அவள் மிக மெதுவாகவே முனகியதால் யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை.

பதற்றத்தோடு வந்த அருண் என்னவென்று கேட்க, அவள் மயங்கி விழுந்ததாகவும் காய்ச்சல் கொதிப்பதாகவும் கூறினர். உடனடியாக ஹெச்.ஓ.டி கல்லூரி முதல்வர் என எல்லாரையும் தொடர்பு கொண்டவன் அவளை மருத்துமனையில் அனுமதிக்கும் வரை விடவில்லை. அவளை மருத்துவ அறைக்கு அனுப்பி விட்டு வெளியே காத்திருந்தனர் அனு, அருண் மற்றும் அவளது சில தோழிகள்.

அந்த நேரம் ராமும் தன் வகுப்பு மாணவனுக்கு விபத்து என அறிந்து அதே மருத்துவமனைக்கு வந்தான். அவன் நல்ல நேரம் கீர்த்தியும் அங்கு தான் அனுமதிக்கபட்டிருந்தாள். தன் வகுப்பு மாணவனை பார்த்து பைக்கை வேகமாக ஓட்டி வந்ததற்காக அறிவுரை சொல்லிவிட்டு வெளியே வந்தவனின் கண்களில் அனு மற்றும் அருண் பட்டனர். "இவங்க ஏன் இங்க வந்திருக்காங்க? யாருக்கு என்னாச்சு?” என்ற யோசனையுடன் அவர்களை நெருங்கினான்.

"ஹலோ..நீங்க VMR காலேஜ் ஸ்டுண்ட்ஸ் தானே.. இங்கே என்ன பண்றீங்க?” என்று கேட்டான்.

அவன் அருகில் வரும்போதே அவனை அடையாளம் கண்டுகொண்ட அனு "என் ப்ரண்ட் கீர்த்தனாவுக்கு பீவர் சார்.. மயங்கி விழுந்துட்டா.. இங்கே தான் அட்மிட் பண்ணிருக்கோம்” என்றாள்..

"என்னது? கீர்த்தி மயங்கி விழுந்துட்டாளா? காலையில அவ்வளவு சொன்னபிறகும் கேட்காம வந்தாளே.. இப்போ எப்படி இருக்கோ? அவளை போய் உரிமையா பார்க்க கூட முடியாத நிலமையில நான் இருக்கேனே” என்று தன்னையே நொந்துகொண்டான்.

"ஓ..இப்போ எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் யாரோ என்பது போல்.

"உள்ளே ட்ரீட்மெண்ட் நடந்துகிட்டு இருக்கு சார்.. டாக்டர் இன்னும் வெளியே வரல” என்று அனு சொல்லி முடிப்பதற்குள் டாக்டர் வெளியே வந்தார்.

"டாக்டர்” என்று அழைத்து கொண்டு அவரை நோக்கி ஓடினான் அருண்..

"இவன் ஏன் இவ்வளவு எமோஷனலாகுறான்?” என்று யோசிக்கும்போதே "டாக்டர் இப்போ கீர்த்தனாவுக்கு எப்படி இருக்கு? கண் திறந்துட்டாளா?” என்று பதற்றத்தோடு கேட்டான் அருண்..

"ஹேய்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. ஷி இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்” என்று அருணின் மனதில் மட்டுமல்ல ராமின் மனதிலும் பாலை வார்த்தார்..

தொடர்ந்து "அவங்க உடம்புல குளுக்கோஸ் லெவல் கம்மியா இருந்ததால தான் அவங்க மயக்கமாகிட்டாங்க.. இப்போ டிரிப்ஸ் போட்டிருக்கோம்.. இன்னும் ஒன் அவர்ல நீங்க அவங்கள போய் பார்க்கலாம்” என்றார் டாக்டர்.

"தேங்க்யூ டாக்டர்” என்று சொன்ன அருண் இருக்கையில் அமர்ந்தான். அவன் கண்களின் ஓரத்தில் ஆனந்த நீர்த்துளி. இதை கவனித்த ராம் அதிர்ந்தான். 'இவனுக்கும் கீர்த்திக்கும் என்ன சம்மந்தம்? இவன் ஏன் கீர்த்திக்காக கண்ணீர் சிந்துகிறான்?' மனதில் பல கேள்விகள் வந்த போதும் இப்போது கீர்த்தியின் உடல்நிலையே முக்கியம் என்று நினைத்தபடி "எக்ஸ்கியூஸ் மீ” என்று சொல்லியபடி டாக்டரை பின் தொடர்ந்து சென்றான். அவரிடம் அவளின் உடல்நிலை பற்றி விரிவாக கேட்டுவிட்டு கல்லூரிக்கும் விடுப்பு சொல்லிவிட்டு மீண்டும் கீர்த்தி இருந்த அறைக்கே வந்தான்..

அவள் அப்போது தான் கண் விழித்ததாக நர்ஸ் கூற அனைவரும் உள்ளே சென்றனர். ராமும் அவள் உடல்நலம் விசாரிக்க செல்வதுபோல சென்றான். ஆனால் கண் திறந்து பார்த்த கீர்த்தியின் கண்களில் முதலில் தென்பட்டது ராம் தான்.. அவள் வாய் "ராம்” என்று முணுமுணுத்தது.

ஆனால் அவன் கண்களிலோ கோபம்.. தன்னை கட்டுபடுத்தி கொண்டு இருப்பது அவன் கண்களிலே தெரிந்தது.

"எப்படி இருக்க கீர்த்தி?” என்று அன்பாக கேட்டாள் அனு..

அவள் கரிசனையில் கீர்த்திக்கு அழுகை வந்தது.. "இப்படித்தானே தானே ராமும் எல்லா விஷயத்திலும் அவளுக்கு கரிசனம் காட்டுகிறான்?” அழுகையில் முகத்தை மறுபக்கம் திருப்பிகொண்டாள்.

அருணுக்கு அவள் நன்றாக இருப்பதே சந்தோஷத்தை தர வெளியே சென்றான். அனு மற்றும் ராம் தான் அறையில் இருந்தனர். அனு ராமை பார்க்க அவனோ கீர்த்தியை கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அனுவுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் சார் அவளை கோபமா பாக்குறீங்க?” என்று கேட்டாள்.

"கேக்குறாங்க இல்ல..சொல்லு” என்றான் ராம்.. அவன் கோபத்தில் உறவுமுறையை சொல்லமாட்டேன் என்ற வாக்கும் காற்றோடு கலந்தது..

அவன் சொன்னதும் கீர்த்தி மௌனமாய் இருந்தாள். அனு தான் புரியாமல் "என்ன சார்?அவளை மிரட்டுறீங்க?” என்று கேட்டாள்.

ஒரு விரக்தி சிரிப்பில் "உனக்கு என்ன கீர்த்தி அவ்வளவு திமிர்? நான் சொல்லியும் கேட்காம காலேஜ் போயிட்ட.. இப்போ இப்படி ஹாஸ்பிட்டல் வந்து படுத்திருக்கியே.. இப்போ நான் இங்கே வந்திருக்கலைன்னா இது எனக்கு என்னைக்குமே தெரிஞ்சிருக்காது.. ஏன் கீர்த்தி என்னை இப்படி சாகடிக்கிற? உனக்கு போன் வாங்கி தரேன்னு சொன்னப்புறமும் கேட்கல. இப்போ எனக்கு தகவலும் சொல்லிருக்க மாட்ட.. உன்ன இந்த நிலமைல பாக்குறதுக்கு பதிலா நான் செத்திருக்கலாம்.. ஐ ஹேட் மைசெல்ஃப்.. இப்பவும் நான் உனக்கு யாருன்னு உனக்கு சொல்ல தோணலைண்ணா யார்கிட்டேயும் சொல்லாத அனு உட்பட.. ஆனா இன்னைக்கு சொல்றேன் என்ன நடந்தாலும் நான் உன்கூட மட்டும் தான் இருப்பேன்.. இட்ஸ் எ ப்ராமிஸ்..” என்றவன் விடுவிடுவென வெளியேறினான்.

கீர்த்தி குலுங்கி குலுங்கி அழுதாள். அவளை தேற்றும் வழி தெரியாது தவித்த அனு "யார் கீர்த்தி அது?” என்று கேட்டாள்..

அழுகையினூடே "சாரி ராம் அத்தான்” என்றவளின் வார்த்தை அனுவிற்கு தெள்ள தெளிவாய் கேட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் கீர்த்தியிடம் ராம் பேசியதை கேட்ட அனுவிற்கு குழப்பமாக இருந்தது. 'ராம் என்ன சொல்றார்? எதுக்கு கீர்த்தியை திட்டுறார்? அவங்க ரெண்டு பேருக்கும் இடையே என்ன ரிலேஷன்ஷிப்?' என்று புரியாமல் தவித்தவளுக்கு கீர்த்தியின் அழுகை வருத்தத்தை கொடுத்தது. அதைவிட கீர்த்தியின் "சாரி ராம் அத்தான்" என்ற அழைப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அவள் கீர்த்தியை பார்க்க, கீர்த்தி இன்னமும் அழுது கொண்டு இருந்தாள். பார்க்க பாவமாக இருந்தது அனுவிற்கு.

"கீர்த்தி.. கீர்த்தி" என்று உலுக்கினாள் அனு.

அனுவை பார்த்து விழித்தாள் கீர்த்தி. ஆனால் அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

"கீர்த்தி இப்போ எதுக்கு அழற? அழுகையை நிறுத்து.. " என்று கத்தினாள் அனு.

அவளை ஏறிட்டு பார்த்த கீர்த்தியிடம் "சொல்லு யார் உனக்கு ராம் சார்? அவருக்கும் உனக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர் உன்னை திட்டிட்டு போறார்? அவரை நீ ஏன் அத்தான்னு சொல்ற? சொல்லு." என்று அதட்டினாள் அனு.

அவளை குழப்பமாக பார்த்தாள் கீர்த்தி. இவளுக்கு எப்படி "அத்தான்" கூப்பிட்டது தெரியும் என்று. பிறகு தான் நினைவு வந்தது தான் அழுகையினூடே சொன்னது.

"சொல்லு கீர்த்தி" என்று கேட்டாள் அனு. இனிமேலும் மறைப்பதில் பலன் இல்லை என்பதை அறிந்து ராம் தனது மாமா மகன் என்பதும் தந்தையின் மரணத்திற்கு பிறகு நடந்ததையும் கூறினாள்.

எல்லாத்தையும் கேட்ட அனு "இப்போ நீ எங்க தங்கியிருக்க?" என்று கேட்டாள்..

"ராம் அத்தான் வீட்டில்" என்று தலை குனிந்து மெதுவாக பதில் அளித்தாள் கீர்த்தி.

அனுவுக்கு அவள் மேல் கோபம் வந்தது எல்லாத்தையும் மறச்சுட்டாளேன்னு.. ஆனால் இப்போது கோபபட்டு அவள் மனதை வருத்த பட வைக்க விரும்பல. அதே சமயம் ராம் மேல் மரியாதை அதிகம் ஆகியது. எவ்வளவு கண்ணியமான காதலன் அவர். அவர் இவள் மேல் கோபபட்டதில் தவறே இல்ல என்று நினைத்தாள் அனு. இனிமேல் இவள் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டாள்.

அழுது அழுது வீங்கிய கண்களுடன் அப்படியே தூங்கி விட்டாள் கீர்த்தி. வெளியே வந்த அனுவிடம் கீர்த்தியை பற்றி விசாரித்தான் அருண்.. "இவன் ஏன் அவ மேல இவ்வளவு கேரிங்கா இருக்கான்?" என்று யோசித்த படியே அவள் பற்றிய விவரம் சொன்னாள் அனு. பெருமூச்சு விட்டான் அருண்.

"ஹேய் உனக்கு என்ன திடீர்னு கீர்த்தி மேல இவ்வளவு கேர்?" என்று நேரடியாக கேட்டாள் அனு..

"அது.. அது வந்து.." என்று திணறினான் அருண்.

"என்ன வந்து போய் அப்படினு சொல்லிட்டு இருக்க.. உளராத" என்றாள் அனு.

"என்கிட்ட இப்போ எதும் கேக்காத அனு. அது அப்படி தான். நான் இப்போ கிளம்புறேன். ஈவினிங் டிஸ் சார்ஜ் பண்ணலாம்னு சொன்னாங்க.. அவ வீட்ல கொண்டு போய் விடலாம்" என்றான் அருண்.

"சரி" என்று தலை ஆட்டிய அனுவின் மனதில் "சம்திங் ராங்" என்று தோன்றியது.

அருண் கிளம்பி விட்டான். அனு கீர்த்தியின் அறைக்கு சென்றாள். கீர்த்தி தூங்கி கொண்டு இருந்தாள். அனு ஈவினிங் ராமை வர சொல்லலாம் என்று நினைத்தாள். ஆனால் ராம் ஃபோன் நம்பர் அவளுக்கு தெரியாதே. கீர்த்தியின் பேக்ல எதாவது இருக்குமா? என்று தேடி பார்த்தாள். அப்போது ஒரு குட்டி டயரி அவள் கையில் மாட்டியது. என்னவாக இருக்கும் ? என்று யோசித்தவள் அதை திறந்தாள். முதல் பக்கமே அவளை வியப்பில் ஆழ்த்தியது. அதில் "ஐ லவ் யூ ராம்" என்று எழுதி அதில் கீழே ராமின் புன்னகை நிறைந்த ஃபோட்டோ ஒட்ட பட்டிருந்தது. உள்ளே அவளின் மனதில் இருந்த உணர்வுகள் வார்தைகளாய் வடிவம் பெற்றிருந்தன..


"ஒரு கள்வனின் பார்வை
என்னை காதலோடு
பின்தொடர்கிறது.."

வாசித்த அனு "அடிப்பாவி" என்று சிரித்தாள்.

"உன்னை முதன் முதலில்
சந்தித்த இடத்தில்
என் மனதை தொலைத்து விட்டேன்
இன்னமும் தேடி கொண்டிருக்கிறேன்
அதை நீ பத்திரமாய் திருடி
உன் இதயத்தில் பூட்டி வைத்திருக்கிறாய்
என்பதை அறியாமல்.."

"ஆ.." வென வாயை பிளந்தாள் அனு இவளுக்குள் இப்படி ஒரு நேசமா என்று..

"உன்னோடு வாழ ஆசை தான்
ஆனாலும் என் மனம்
உன் அன்பை ஏற்க மறுக்கிறது
காரணம் உன் குடும்பம்"

அவள் ராமை காதலிக்கும் அளவிற்கு அவன் குடும்பத்தை வெறுக்கிறாள் என்பதும் புரிந்தது.

"தேடி வந்தேன்
உன் கண்களில் கண்ட காதலை
என்னுடையதாக்கும் எண்ணத்தில்
அன்று நான் கண்ட காட்சி
யாரோ ஒருத்திக்கு உன் கையால்
பருக வைத்த குளிர்பானம்
முற்றிலும் உடைந்து விட்டது என் மனம்"

"ஓ.. மேடம்க்கு பொசசிவ் வேற வருமா? சூப்பர்.." என்று சிரித்தாள்..

"உன் காதலை சொன்ன நேரம்
என்னுள் எழுந்த வேகம்
உன்னை கட்டி அணைத்து
முத்தமிட தோன்றியது
அடக்கி கொண்டேன்-உன்
மேல் நான் கொண்ட கோபத்தால்"

"அப்படி என்னடி உனக்கு கோபம்.. பாவம் ராம் சார்" என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் அனு. அடுத்த பக்கத்தை புரட்டும் முன் கீர்த்தி மெதுவாக அசைந்தாள். பிறகு தான் நியாபகம் வந்தது எதற்காக கீர்த்தியின் பேக்கை எடுத்தாள் என்று. ராமின் போன் நம்பர் அந்த டைரியின் கடைசி பக்கத்தில் இருந்தது. போன் நம்பரை தனது மொபைலில் குறித்து கொண்டவள் ராமை அழைத்தாள்.

தனது வகுப்பு மாணவனை பார்த்து விட்டு காலேஜிற்கு போக வேண்டும் என்று நினைத்தவன் மருத்துவமனையில் கீர்த்தியின் நிலமையை பார்த்து காலேஜிற்கு போகாமல் வீட்டிற்க்கு வந்தான். வீட்டிற்க்கு வந்தவனை பார்த்ததும் பிரகாஷ்க்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.. என்னதான் பேசாம இருந்தாலும் அவன் அவருடைய பாசமிகு மகன் அல்லவா? ஆனால் என்னவென்று கேட்பது? எதுவாக இருந்தாலும் சரி.. அவன் வருத்தத்திற்கு காரணம் கேட்டே ஆக வேண்டும் என்று வெளியே வந்தார் பிரகாஷ்..

ராமிற்கும் மனது மிகவும் கஷ்டமாக இருந்தது.. யாரிடமாவது சேர் பண்ணலாம் என்றாலும் இப்போது தனக்காக யாரும் இல்லை என்ற உணர்வு அவனை கொன்றது. ஒருத்தி தன் மனதை புரிந்து கொள்ளாமல் வருத்துகிறாள். அப்பாவும் தன்னிடம் பேசாமல் புறக்கணிக்கிறார் என்றவன் அப்படியே சோஃபாவில் அமர்ந்து விட்டத்தை வெறித்தான். அப்போது ஒரு கை அவன் தோள் மேல் பட்டது. யாரென திரும்பி பார்த்ததும் தந்தை என்பதை உணர்ந்து அவர் வயிற்றை கட்டி அணைத்து அழுதான். பிரகாஷ் பதறி விட்டார்.

"என்னாச்சு ராம்? எதுக்காக அழுற?" என்று பதறினார் பிரகாஷ்.

"அப்பா ஹாஸ்பிடல்ல..... " என்று அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் மீண்டும் அழுதான் ராம்..

"ஹாஸ்பிட்டலா? யாருக்கு‌ என்னாச்சு? அய்யோ அர்ஜுன்.. அர்ஜூனுக்கு ஒண்ணும் இல்ல தானே" என்று அவனை உலுக்கினார் பிரகாஷ்.


நிமிர்ந்து தந்தையை பார்த்தான் ராம்.. கண்ணீரை துடைத்து கொண்டு "அர்ஜுனனுக்கு எதுவும் இல்லப்பா.. ஆனா இப்போ நம்ம வீட்ல அர்ஜுன் மட்டும் தான் இருக்கானாப்பா?" என்று கேட்டான்.

அவருக்கு புரிந்து விட்டது கீர்த்திக்கு என்னவோ ஆகி விட்டது என்று.. மனம் என்னவோ என்று பதறினாலும் அவரது ஈகோ அதை வாய் வழியாக கேட்க அனுமதிக்கவில்லை.

அவரையே வெறித்து பார்த்தான் ராம். "இப்பவும் யாருக்கு என்னாச்சு அப்படினு உங்களுக்கு கேட்க தோணலையா அப்பா? கீர்த்தி உங்களுக்கு முக்கியம் இல்லையா ப்பா?? அவ யாரு உங்களுக்கு? உங்க தங்கச்சி பொண்ணு.. உங்க தங்கச்சி தப்பு பண்ணிட்டாங்க.. அது தப்பு தான். நான் மறுக்க மாட்டேன். ஆனா அதுக்கு கீர்த்தி என்ன பண்ணுவா? அவளை தண்டிக்கிறீங்களே.. அவளும் நம்ம குடும்பத்தை புரிஞ்சிக்கல.. அத்தை பண்ணுன தப்புக்கு நம்ம குடும்பம் தலை குனிந்த படி நின்னதை அவளும் புரிஞ்சிக்கல.. ரெண்டு பேரும் இப்படியே இருங்க.. அவ என் அன்பை புரிஞ்சிக்காம என்னை சாகடிக்குறா.. காலையில் நான் அவளவு சொல்லியும் கேட்காமல் காலேஜ் போய் மயங்கி விழுந்து அதை என்கிட்ட சொல்ல கூட அவளுக்கு தோணலை.. அவ்வளவு வெறுப்பு என் மேல.. நான் என்ன தான் பண்ணட்டும்?? முடியல அப்பா என்னால.. அவள என்னைக்குமே என்னால விட்டு குடுக்க முடியாது. அவ எனக்கு வேணும். அதே நேரம் உங்களையும் விட மாட்டேன்.. புரிஞ்சிக்கோங்க.. ப்ளீஸ் யாராவது ஒருத்தர் விட்டு குடுங்க.. அவ சின்ன பொண்ணு மன்னிச்சிடுங்கப்பா.. ப்ளீஸ்" என்றவன் தனது கைபேசியில் அழைப்பு வரவும் புது எண்ணாக இருக்குதே என்ற நினைவுடன் எழுந்து தன் அறைக்கு சென்றான்.

தன் மகனின் பேச்சை கேட்ட பிரகாஷ் இனிமேலும் தன்னால் மகன் வேதனை பட கூடாது என்று முடிவெடுத்தார்..

உன் விலகலில் என் மனம் மொத்தமும்
உடைந்து விட்டது பெண்ணே..
என் காதலை நீயும் புரிந்து கொள்ளும் நாள் என்றோ?
காலம் கடந்து விடாமல் இருக்க
இறைவனிடம் வேண்டுகிறேன்..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16

தந்தையுடன் பேசி கொண்டிருந்தவன் தன் கைப்பேசிக்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும் தனது அறைக்கு சென்றான். அதற்குள் அழைப்பு துண்டிக்கப் பட்டு விட்டது. யாராக இருக்கும் என்று யோசித்தவனின் கைகளில் மீண்டும் அதிர்வு ஏற்படவே அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்தவன் "ஹலோ" என்றதும் மறு முனையில் "ஹலோ ராம் சார் நான் அனு பேசுறேன். நான்...." என்று முடிப்பதற்குள் "எந்த அனு? " என்று கேட்டான் ராம்.

சிரித்து கொண்டே "என்ன சார் முழுசா சொல்ல விட மாட்டேங்குறீங்க? நான் உங்க கீர்த்தி ப்ரண்ட் அனு. ஹாஸ்பிடலில் பார்த்தோமே" என்றாள்.

"ஓ.." என்றவன் உடனே ஞாபகம் வந்தவனாய் "சொல்லு அனு.. கீர்த்திக்கு ஏதாவது?" என்று பதறினான்.

"அட என்ன சார் இப்டி பதறுறீங்க? அவளுக்கு ஒண்ணுன்னா இப்டி கூலா நான் பேசிட்டு இருப்பேனா?? ஷி இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்.. நான் போன் பண்ணுனது எதுக்குனா...."

"அத முதல்ல சொல்லுமா.." என்றான் ராம்.

" என்னை எங்க சார் முழுசா பேச விடுறீங்க.. கீர்த்திய ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணுறதா டாக்டர் சொன்னாங்க. நீங்க வந்து கூட்டிட்டு போறீங்களா? இல்லன்னா நான் கூட்டிட்டு வரவா?" என்று கேட்டாள்.

"எங்க வீட்டு அட்ரஸ் உனக்கு எப்படி தெரியும்?"

"சார் என்ன சின்ன புள்ள மாதிரி கேள்வி கேக்குறீங்க? கீர்த்திக்கு வாயில எதுவும் அடி படல.. அவ சொல்லுவா." என்றாள் கீர்த்தி.

"சரி மா.. சரி.. நீ அவ்ளோ கஷ்ட பட வேணாம்.. ஈவினிங் 5:30 க்கு நான் அங்க இருப்பேன்.. அது வரைக்கும் மட்டும் அவளை பத்திரமா பாத்துக்கோ" என்றான்

"கண்டிப்பா சார். நான் போனை வைக்கிறேன்" என்றவள் அழைப்பை துண்டித்து அறையினுள் சென்றாள். கீர்த்தி தூங்கி கொண்டு இருந்தாள்.. பக்கத்திலேயே அமர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.

அர்ஜுன் கல்லூரியில் இளைப்பாறும் மரத்துக்கு அடியில் அமர்ந்து இருந்தான். அவன் அருகில் வந்தான் கார்த்திக்.

"என்ன மச்சி ஒரே யோசனை யா இருக்க? எதாவது சீரியஸ் மேட்டரா?" என்று கேட்டான்.

"கொஞ்சம் சீரியஸ் தான்டா.." என்ற அர்ஜுனை வியப்புடன் பார்த்தான் கார்த்திக்.

"என்னடா அப்படி பாக்குற?" என்று கேட்டான் அர்ஜுன்.

"இல்லடா.. நீ எப்பவும் எல்லாத்தையும் ரொம்ப சீரயஸாக பாக்க மாட்டியே. அதோட வழியிலே விட்டு பிடிப்பியே. இப்போ சீரியஸ்னு சொல்லுற. அது தான் அப்படி பாக்குறேன்." என்றான்.

"எல்லா விஷயத்திலும் அப்படி இருக்க முடியாதுடா. இப்போ நான் யோசிக்கிறது என் அண்ணன் லைஃப் பத்தி." என்றவனை விழி விரிய பார்த்தான் கார்த்திக்.

"என்னடா மறுபடியும்?"

"இப்போ என்னடா உங்க லைஃப்ல பிராப்ளம்? உங்க வீட்ல சண்டையே வராதே. நான் கூட இப்படி ஒரு குடும்பம் எனக்கு கிடைக்கலையே அப்படின்னு ஃபீல் பண்ணிருக்கேன். சொல்லனும்னு நினைச்சா சொல்லுடா" என்றான்.

அர்ஜுனுக்கு மனதில் அழுத்தி கொண்டிருப்பதை யாரிடமாவது சொல்லணும் என்று தோன்றியது. கொட்டி விட்டான் கார்த்திக்கிடம். அதிர்ச்சியாக பார்த்தான் கார்த்திக்.

"என்னடா சொல்ற? அங்கிள் ராம் சார் கிட்ட பேசுறது இல்லையா? உன் அண்ணி பண்ணுறது ஒரு வகைல தப்புன்னா அதுக்கு கொஞ்சமும் குறையாமல் அங்கிள் இப்படி பண்ணுறாங்களே. ரெண்டு பேருக்கும் இடையில மாட்டிகிட்டு யாரையும் விட்டு குடுக்க முடியாம பாவமடா ராம் சார். ஏன் அவர எல்லாரும் இப்படி படுத்துறாங்க? உன் அண்ணி இப்போ வந்தவங்க. அங்கிள்க்கும் ஏன் டா புரியல? இவ்வளவு வருஷம் வளர்த்தவர் தானே.. அவரும் புரிஞ்சிக்கலைன்னா யாருகிட்ட புலம்புவார் ராம்? ஏன் டா நீயும் அவரை வெறுக்கலையே?" என்று ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டான் கார்த்திக். அதிர்ந்து விட்டான் அர்ஜுன்.

"டேய் என்னடா நினச்ச என்னை பத்தி? என் அப்பாவுக்கு மேல எனக்கு என் அண்ணன் மேல் பாசம் இருக்குடா. அவர் யார்கிட்டேயும் எதுவும் சொல்ல முடியாம மனசுக்குள்ளேயே கஷ்டபடறதை பார்த்து எனக்கு தாங்கிக்க முடியலடா. பாவம் ராம் அண்ணா. யாரும் புரிஞ்சிக்காம அவரை கஷ்டபடுத்துறாங்க. எப்போ சரியாகுமோ?" என்று பெருமூச்சு விட்டான்.

"சாரிடா. எதோ ஆதங்கத்துல அப்படி கேட்டுட்டேன். எப்பவுமே நீ அவர் கூட இரு போதும்" என்றான் கார்த்திக்.

"ப்ச்.. விடுடா" என்றவன் கண்களில் நிஷா இவனை நோக்கி வருவது தெரிய "சே இவ வேற.. நேரம் காலம் தெரியாம டென்ஷன் படுத்த வரா" என திட்டினான் அர்ஜுன்.

"யாரை சொல்றான் இவன்?" என்று திரும்பி பார்த்த கார்த்திக் குறும்பாக சிரித்தான் .

"அவளுக்கு உன்னை விட்ட யாரடா தெரியும். நீ தான் அவளோட காதல் மன்னன். மனம் நிறைந்த மணாளன்" என்று கார்த்திக் கிண்டல் அடிக்க அவனை முறைத்தான் அர்ஜுன். அதற்குள் அவன் அருகில் வந்தாள் நிஷா.

"ஹாய் அர்ஜுன் .. ஹாய் கார்த்திக்." என்றாள்.

"சரிடா கார்த்திக். கிளாசுக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன். கிளாஸ்ல பார்க்கலாம்." என்று எழும்பி சென்று விட்டான் அர்ஜுன். நிஷாவின் முகத்தை திரும்பி கூட பார்க்கவில்லை.

முகத்தில் அறை வாங்கியவள் போல் உணர்ந்தாள் நிஷா. அவள் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது கார்த்திக்கு.

"சாரி நிஷா. அவன் ஃபேமிலில கொஞ்சம் பிராப்ளம். அது தான் அவன் மனசு சரி இல்ல. அப்படி பிகேவ் பண்ணிட்டான்." என்றான் கார்த்திக்.

ஒரு சிறு புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள் நிஷா.

"ச்சே இவனுக்கு என்னாச்சு? ஏன் அவகிட்ட இப்படி பிகேவ் பண்ணிட்டான்?" என்று எரிச்சலுடன் அர்ஜுனை திட்டிய படி வகுப்புக்கு சென்றான் கார்த்திக்.

சந்தோசமாக சென்ற நிஷா சோகத்துடன் திரும்பி வந்ததை பார்த்த வீணா என்னவென்று கேட்டாள்.

"ப்ச்.. ஒன்னும் இல்ல வீணா. அர்ஜுன் கிட்ட பேச போனேன். அவன் கோபமா போய்ட்டான்" என்றாள் வருத்தத்துடன்.

"ஓ.. நீ எதுக்கு அவன்கிட்ட இப்படி நெருங்கி நெருங்கி போற?" என்று கேட்டாள் வீணா.

"தெரியலடி பட் அவன் கூட ப்ரண்ட்ஷிப் வசுக்கணும்னு தோணுது. ஆனா அவன் பழச எல்லாம் மனசுல வச்சிட்டு இப்படி பிஹேவ் பன்றான்னு தோணுது. கேட்டால் ஃபேமிலி பிராப்ளம் அப்படின்னு கார்த்திக் சொல்றான்." என்று சலிப்புடன் சொன்னாள் நிஷா.

"ஏதோ சரி இல்ல. இவள் அவனை ப்ரெண்ட் ஆ மட்டும் நினைக்குறாளா?" என்று வீணாவிற்கு சந்தேகம் வந்தாலும் அதை கேட்காமல் விடுத்தாள் வீணா.

"சரி அவனுக்கு ஃபேமிலி பிராப்ளம் ஆ கூட இருக்கலாம்." என்று நிஷாவை சமாதான படுத்திய வீணா வகுப்புக்கு அழைத்து சென்றாள்.

அவள் அறியாத ஒன்று அர்ஜுன் மனதிலும் சிறு நெருடல் இருந்தது. அதிலும் கார்த்திக் "நிஷாவின் மனம் நிறைந்த மணாளன்" என்று சொன்ன போது இன்பமாக உணர்ந்தான். ஆனால் மீண்டும் இவனும் காதலில் விழுந்து குடும்பத்தில் பிரச்சனை வருமோ என்று அஞ்சியவன் எழுந்து வந்து விட்டான்

வகுப்புக்கு வந்த கார்த்திக் அவனை முறைத்து கொண்டே தனது இருப்பிடத்திற்கு சென்றான். அவன் முக கலக்கத்தை கண்டவன் மனதில் அவன் பிரச்சினைகள் எல்லாம் சீக்கிரம் சரியாக வேண்டும் என்று வேண்டினான்.

மருத்துவமனையில் இருந்து கல்லூரிக்கு வந்து கீர்த்தி உடல்நிலை பற்றி சொன்னான் அருண். அவன் கீர்த்தியை பற்றி பேசும் போது அவன் கண்களில் தெரிந்த வலி, பாசம் எல்லாத்தையும் குறிப்பெடுத்து கொண்டான் தருண். ஆனாலும் இவ்வளவு பாசம் இருக்கிறவன் அவளிடம் தன் காதலை சொல்லாமல் மறைப்பது தவறு என்றே பட்டது அவனுக்கு. ஆனால் அதை அருணிடம் சொன்னால் 'அவ மனசுல இடம் பிடிக்கணும். இம்ப்ரஸ் பண்ணணும்' னு எதாவது உளறுவான்.

இந்த முறையும் எதாவது முயற்சிக்கலாம் என்று எண்ணிய தருண் " டேய் மச்சி.. நீ ஹாஸ்பிடல் இருந்து கீர்த்தியை வீட்டுக்கு கூட்டிட்டு போகும் போது உன் மனசுல இருக்கிறத சொல்லிடேன். அப்புறம் அவ மனசுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சிட்டு மேல முடிவு பண்ணலாம். நீ சொல்லு பர்ஸ்ட்" என்றான் தருண்.

சிறிது யோசித்த அருண் "சரி மச்சி பேசுறேன்" என்றான். பாவம் அருண் அறியாத ஒன்று அவன் மருத்துவமனை செல்லும் போது கீர்த்தி அங்கு இருக்க மாட்டாள் என்பது தான்.

மாலை 5 மணிக்கு தனது காரை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் ராம். அனுவிடம் சொல்லி இருந்த படியே 5.30 க்கு கீர்த்தியின் அறையில் இருந்தான். கீர்த்திக்குமே ஆச்சரியம் ராம் இங்கே எப்படி வந்தான்? இப்போ டிஸ்சார்ஜ்னு யார் சொல்லி இருப்பாங்க? அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே அவள் அருகில் வந்த ராம் "எப்படி இருக்குற கீர்த்தி?" என்று கேட்டான். அவன் வாய் தான் அப்படி கேட்டதே தவிர அவன் கண்கள் அவளை பார்க்கவில்லை. எங்கேயோ பார்த்த படி கேட்டான். உள்ளுக்குள் வலித்தது கீர்த்திக்கு. ஆனாலும் அதை காட்டி கொள்ளாமல் "இப்போ ஓகே" என்றாள்.

திரும்பி அனுவை பார்த்தவன் " நீ எல்லாத்தையும் எடுத்து வச்சிடு அனு. நான் பில் எல்லாம் செட்டில் பண்ணிட்டு வரேன்" என்றவன் திரும்பியும் பாராமல் வெளியே சென்றான். அவனையே வலியுடன் வெறித்து பார்த்தாள்.

அவன் வெளியே சென்றதும் கீர்த்தியை திரும்பி பார்த்தாள் அனு. அவள் கண்களில் கேள்வி இருந்தது.

"என்ன கீர்த்தி?" என்று அவள் அருகில் வந்தாள் அனு.

"ராம் அத்தான் நம்பர் உனக்கு எப்படி கிடச்சுது?" என்று கேட்டாள்.

" இதோ இப்படி தான்" என்று டயரியை கீர்த்தி கைகளில் வைத்தாள் அனு

"இது.. இது எப்படி நீ எடுத்த?" என்று திணறினாள்.

"உன் பேக்ல இருந்து தான். நீ தூங்கிட்டு இருந்த. சோ அவர் நம்பர் கேக்க முடியல. சரின்னு உன் பேக்ல தேடினேன். டயரி கிடைச்சது. லாஸ்ட் பேஜ் ல அவர் நம்பர் இருந்துச்சு. கால் பண்ணி சொல்லிட்டேன். வரேன்னு சொன்னார். சரி நீ போய் ஃபிரஷ் ஆகு.. கிளம்பலாம்." என்றாள்.

"இவ பர்ஸ்ட் பேஜ் பார்க்கலையோ?" என்ற எண்ணத்துடன் ரெஸ்ட் ரூம் போனாள் கீர்த்தி.

"பார்றா ராம் அத்தானாம்.." என்று சிரித்தாள் அனு. அப்போது ராம் வந்து "கிளம்பலாமா?" என்று கேட்க "ஓகே சார்" என்று கிளம்பினர்.

மருத்துவமனையில் இருந்து கீர்த்தியை அழைத்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தான். அனுவை அவள் விடுதியில் பாதுகாப்பாக விட்டுட்டு கீர்த்தியும் அவனும் காரில் பயணித்தனர். அவர்கள் பயணம் முழுதும் மௌனமே தொடர்ந்தது. ராம் கீர்த்தி திரும்பி கூட பார்க்கவில்லை. கீர்த்திக்கு‌ "ஐயோ திட்டவாச்சும் பேச மாட்டானா?" என்று இருந்தது. ராம் மனதிலோ "இனிமேலும் அவள் முன்னால் போய் நின்று அவளை கஷ்ட படுத்த கூடாது" என்று நினைத்தான். எப்படியோ அவரவர் நினைவுகளில் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். பிரகாஷ் வெளியிலேயே அமர்ந்திருந்தார். இவர்கள் வருவதை கண்டதும் எழும்பியவர் "எப்படி கீர்த்தி இருக்குற?" என்று கேட்டார். கீர்த்தி அவரை ஆச்சர்யத்துடன் ஏறிட்டு பார்த்தாள். ராமும் தான். ஆனால் கீர்த்தி எதுவும் சொல்லாமல் முறைத்து விட்டு உள்ளே சென்றாள். ராமுக்கோ தர்ம சங்கடமான நிலை. வேதனையுடன் தந்தையை பார்த்தான். அவர் சிரித்தார். "தெரியும் டா அவளை பத்தி. அவ கோவம் தானாகவே சரி ஆகட்டும். இனிமேல் நான் எதும் பண்ண மாட்டேன். எனக்கு உன் சந்தோசம் தான் முக்கியம்." என்றவர் அறைக்கு சென்றார். ராம் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் மருந்துகளை எடுத்து கொண்டு கீர்த்தியின் அறைக்கு சென்றான். அங்கு அவள் சோகமாக கட்டிலின் மீது அமர்ந்து இருந்தாள். முகத்தில் ஏதோ வலி தெரிந்தது. "ஒருவேளை நம்மால் தான் இப்படி இருக்கிறாளோ?" என்று ஒரு நொடி நினைத்தவன் "சே சே நான் போய்ட்டா தொல்லை ஒழிஞ்சதுன்னு சந்தோசமா இருப்பாள்." என்று வலியுடன் நினைத்தவன் உள்ளே சென்றான்.

ராம் வருவதை பார்த்ததும் கீர்த்தி முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது. ஆனால் ராம் அதை கண்டு கொள்ளவில்லை. நேராக டிரெஸ்ஸிங் டேபிள் பக்கம் சென்றவன் மருந்து மாத்திரைகளை அதில் வைத்து விட்டு ஒரு பேப்பரை எடுத்து அதில் மருந்து சாப்பிடும் நேரத்தை குறித்தான். எல்லாவற்றையும் அவள் பார்த்து கொண்டு தான் இருந்தாள். "பேச மாட்டானாம்.. பெரிய இவன்.." என்று மனதில் திட்டி கொண்டிருந்தாள். ஆனால் ராம் வேலையே குறியாக இருந்தான். எழுதியவன் அதை அவளின் கைகளில் திணித்து விட்டு வெளியே சென்றான். மனதில் வலி எழுந்தாலும் அதை ஒதுக்கி விட்டு அவன் கையெழுத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் கீர்த்தி.

மாலை 6:30 மணி ஆனதும் மருத்துவமனைக்கு கிளம்ப தயார் ஆனான் அருண். "இன்னைக்கு எப்படியாவது அவன் மனதை அவளிடம் தெரிவித்து விட வேண்டும்" என்ற எண்ணத்தில் கிளம்பினான். மருத்துவமனையை அடைந்து கீர்த்தியை அட்மிட் செய்திருந்த அறைக்கு விரைந்தான். அங்கு யாரும் இல்லாமல் வெறுமையாக இருப்பதை கண்டவன் அதிர்ந்தான். "எங்க போனாங்க ரெண்டு பேரும்?" என்று யோசித்தவன் வரவேற்பறைக்கு சென்று விசாரித்தான். அவளை டிஸ்சார்ஜ் செய்து கூட்டி கொண்டு போய் விட்டார்கள் என்ற செய்தி அடுத்த இடி. "யாராக இருக்கும்?" என்று யோசித்தவன் அதை அவர்களிடமே கேட்டான். "மிஸ்டர். ராம் குமார்" என்ற பதில் வந்தது. "யார் அது?" என்று தலையை பிய்க்காத குறையாக யோசித்தவன் மூளையில் "ராம்" என்ற பெயர் பொறி தட்டியது. "இது அந்த ஹெச் ஓ டி பெயர் தானே?" என்று யோசித்தவன் அனுவுக்கு ஃபோன் பண்ணினான்.

துணிகளை மடித்து வைத்து கொண்டு இருந்த அனு மொபைலில் அழைப்பை பார்த்ததும் துணியை அப்படியே வைத்து விட்டு அழைப்பை எடுத்தாள். அருணின் நம்பரை பார்த்ததும் "இவன் எதுக்கு ஃபோன் பண்ணுறான்?" என்று மனதில் நினைத்து " ஹலோ சொல்லு அருண்." என்றாள்.

மறுபக்கத்தில் அருண் பயங்கர கோபத்தில் இருந்தான். "என்ன சொல்ல சொல்ற? இப்போ நீ எங்க இருக்க? நான் தானே ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணினேன்? கிளம்பும் போது என்கிட்ட சொல்லிட்டு போகனும்னு கொஞ்சமும் தோனலையா? நான் தான் ஈவ்னிங் வரேன்னு சொன்னேன் ல.. அப்புறம் எதுக்கு கீர்த்திய யார் கூடவோ அனுப்புன? அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் தங்கச்சின்னு கூட பாக்க மாட்டேன்." என்று கத்தினான்.

அனுவுக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. இவனை இப்படியே விட்டால் வீண் கற்பனையில் வாழ்க்கையை கெடுத்து கொள்வான் என்று நினைத்தவள் "இப்போ எதுக்கு இப்படி கத்துற? உன்கிட்ட சொல்லாம வந்தது தப்பு தான். ஆனால் நாங்க யார் கூடவோ வரல. கீர்த்தியோட ரிலேஷன் கூட தான் வந்தோம். சோ நோ வொரீஸ். நீ எங்க இருக்க‌ இப்போ? நான் ஹாஸ்டல்க்கு வந்தே அரை மணி நேரம் ஆகுது" என்றாள்.

"என்னது ராம் சார் கீர்த்தியோட ரிலேஷனா?" என்று அதிர்ந்தவன் பின் அவள் கேள்வியில் உணர்வு பெற்றவனாய் "நான் ஹாஸ்பிடல் ல இருக்கேன்." என்றாள்.

"ஓ சரி சரி.. சீக்கிரம் கிளம்பு. எனக்கு வொர்க் இருக்கு. நான் அப்புறம் பேசுறேன்." என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்தாள். அருண் ஒரு நொடி திகைத்தாலும் பின்னர் கீர்த்தியிடம் தன் அன்பை சீக்கிரம் வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் கிளம்பினான்.

அர்ஜுன் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தான். கார்த்திக், அகிலன் அவன் கூடவே வருவார்கள். அவர்களை வீட்டில் ட்ராப் பண்ணி விட்டு தான் அர்ஜுன் வீட்டுக்கு போவான். பைக்கை தன் காலால் உதைக்க அது ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்றது. "ச்சே இது என்னடா இன்னைக்கு இப்படி ஒரு சோதனை" என்று சலித்து கொண்டே மீண்டும் உதைத்தான். எந்த பலனும் இல்லை. கார்த்திக், அகிலன் அவனை பாவமாக பார்த்தனர்.

"ஏய் என்னடா லுக் இங்க?" என்று கடுப்புடன் கேட்டான் அர்ஜுன்.

"நாங்க எதயும் பாக்கல.. யார் திட்டுனதையும் கேக்கல." என்று இருவரும் கோரசாக பதில் அளித்தனர்.

"டேய் உங்களை..." என்று கோப பார்வை பார்த்தவன் "சாரிடா இன்னைக்கு ஒருநாள் வேற எப்படியாச்சும் போய்க்கோங்க.. நான் அண்ணாவுக்கு கால் பண்ணி சொல்லிடுறேன்" என்றான்.

"சரி டா. நீ பத்திரமா கிளம்பு. நாங்க பாத்துக்குறோம்" என்று கிளம்பினர்

அர்ஜுன் ராமுக்கு கால் பண்ணி சொல்லி விட்டு ஆட்டோ பிடித்து போகலாம் என்று வெளியே வந்தான். அப்போது யாரோ திட்டும் குரல் கேட்டு திரும்பி பார்த்தான். அங்கு ஒரு பெண் ஒரு வாலிபனை திட்டி கொண்டு இருந்தாள். அவள் கையில் ஒரு பார்பி டால் இருந்தது. ஆட்டோ வருவதை கூட கவனிக்காமல் அவர்கள் சண்டையை ரசித்தான்.

"டேய் உன்கிட்ட நான் என்ன கலர்ல டா கேட்டேன்? பிங்க் கலர் பார்பி டால் கேட்டேன். நீ என்னடான்னா எல்லோ கலர்ல வாங்கிட்டு வந்திருக்க? போடா போய் இத குடுத்துட்டு பிங்க் கலர் வாங்கிட்டு வா" என்று கத்தினாள்.

"அடியேய் குட்டி பிசாசு.. நீ என்ன நினைச்சிட்டு இருக்குற? இத வாங்குறதுக்கே நான் நாலு கடை ஏறி இறங்கிட்டேன். அதுவும் நீ பூசணிக்காய் மாதிரி உன் சைஸ் ல கேட்டுட்ட.. நான் போய் கடை காரன் கிட்ட கேட்டா அவன் என்னை லூசுன்னு நினைக்குறான். நான் இனிமேல் போய் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்க மாட்டேன். வேணும்ன்னா நீ போய் வாங்கிக்கோ." என்றான் கெளதம்.

"ஹே என் செல்ல மாமா.. உன் செல்ல குட்டிக்கு இது கூட பண்ண மாட்டியா? எனக்கு பிங்க் தான் டா பிடிக்கும். ச்சே இது கூட பண்ணிக்காம நீ ஏண்டா என்ன கல்யாணம் பண்ணிக்குற?" என்று கெஞ்சலில் தொடங்கி கோபத்தில் முடித்தாள் ஆர்த்தி.

(புதுசா ஒரு கெஸ்ட் ரோல் தான். திஸ் இஸ் டெடிக்கேட்டட் டு மை குட்டி ராக்க்ஷஷி ஆர்த்திகா)

அவள் கோபபடும் போது சிலிர்த்த முடியை அவள் காதுக்கு பின்னால் ஒதுக்கி விட்ட படியே அவள் அருகில் வந்தான் கெளதம்.

"டேய் மாமா என்னடா பண்ண போற? இது பப்ளிக் பிளேஸ். அடேய் கெளதம் உனக்கு என்னடா ஆச்சு?" என்று பின்னால் நகர்ந்தாள் ஆர்த்தி.

"அடியே என் குட்டி பிசாசு.. உன்கிட்ட எத்தன தடவ சொல்றது இப்படி எல்லாம் பப்ளிக் பிளேஸ் ல மாமான்னு கொஞ்சாதன்னு.. அப்புறம் என் மூட் மாறிடும். சொன்னா கேக்குறியா நீ?" என்று அவள் நெற்றியில் முட்டினான்.

அவன் அருகாமையை ரசித்தவள் "மாமா ஏண்டா.. இல்ல இல்ல கெளதம் போதும்டா. வீட்டுக்கு போகலாம்" என்றாள்.

அவளை பார்த்து புன்னகைத்த படியே "சரி வா.. வீட்டுக்கு போகலாம்" என்று காரை நோக்கி சென்றான்.

அப்போது தான் சட்டென நினைவு வந்தவளாய் "டேய் கெளதம் எனக்கு பிங்க் கலர்ல பார்பி டால் வாங்கி குடுடா. என்னை ஏமாத்த பாக்குறியா? இன்னைக்கு நீ வாங்கி குடுக்காம இந்த பிளேஸ் விட்டு நகர மாட்டேன் நான்" என்று அப்படியே ஐஸ் வண்டியை பார்த்ததும் காலை உதைத்து அழும் சின்ன பிள்ளை போல கண்களில் கெஞ்சலுடன் நின்றாள் ஆர்த்தி.

"அய்யோ இவ விட மாட்டாள் போல" என்று நினைத்த கெளதம் ஏற்கனவே சாலையை கடந்திருந்தான். மீண்டும் அவளுக்காக திரும்பி வந்தான். அவள் வருவதையே சின்ன சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த ஆர்த்தி தான் நடுரோட்டில் நிற்பதை மறந்து விட்டிருந்தாள்.

இவர்களின் செல்ல சண்டை கொஞ்சல் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

ஆர்த்தி அவனிடம் கொஞ்சுவதையும் கெளதம் அவளுக்காக விட்டு கொடுப்பதையும் மனதார பாராட்டினான். என்னவோ அவன் மனதில் எப்பவுமே கோபமாக இருக்கும் நிஷாவும் இப்போது தன்னிடம் வந்து வந்து பேசும் நிஷாவும் கண் முன் வந்து சென்றனர்.

கெளதம் ஆர்த்தியை திட்டிய படியே சாலையை கடக்கும் போது தான் அவள் இடது பக்கத்தில் இருந்து ஒரு கார் வருவதை கவனித்தான். "ஹே ஆர்த்தி.. விலகி போ.. போ.." என்று கத்தி கொண்டே ஓடி வந்தான். ஆர்த்தி எதுவும் புரியாமல் திருதிருவென முழிக்க அவனின் பதற்றத்தையும் கத்தலையும் கேட்ட அர்ஜுன் அவளை பார்க்க, கார் வருவதை கவனித்தவன் ஓடி சென்று அவளை மறுபக்கம் தள்ளி விட்டான்.

எதிர்பாராதது நடந்ததில் ஆர்த்தி அதிர்ச்சியாய் நின்றாள். கார் அவளை தாண்டி சென்றது. அதற்குள் கெளதம் அவள் அருகில் வந்து திட்ட ஆரம்பித்தான். "லூசாடி நீ? கார் வரது கூட கவனிக்காமல் பாத்துட்டு நிக்குற? உனக்கு ஏதாவது ஆனால் அப்புறம் என் நிலமை என்ன ஆகும்? ச்சே கிளம்புடி.. வீட்டுக்கு போகலாம்.. இன்னைக்கு வெளில வந்ததே தப்பு" என்று கத்தியவன் திரும்பி அர்ஜுனை பார்த்து "ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்க மட்டும் இல்லைன்னா என் ஆராவ நான் இன்னைக்கு.. நினைச்சாலே உடம்பெல்லாம் உதருது. ரொம்ப தேங்க்ஸ் சார்." என்றான்

அர்ஜுன் புன்னகையுடன் "இட்ஸ் ஓகே.. அவங்கள பாத்துக்கோங்க" என்றான். திரும்பிய கௌதமின் கண்களில் அவள் கையில் இருந்த பார்பி டால் பட்டது. "குட்டி பிசாசு என்ன தான் நடந்தாலும் டாலை விட மாட்டியே.. வா வாங்கி தரேன்" என்றதும் "ஹை தாங்க்ஸ் மாமா" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அர்ஜுன் பக்கத்தில் நிற்கவே எதுவும் பண்ண முடியாமல் தவித்தான் கெளதம். "இவ வேற.. மாமா மாமான்னு சொல்லியே மனுஷன உசுப்பேத்தி விடுறா" என்று நினைத்தவன் "ஓகே சார். தேங்க்ஸ் அகைன்.. அப்புறம் நெக்ஸ்ட் மந்த் 15th எங்க மேரேஜ். கண்டிப்பா நீங்க வரணும்" என்றவன் தனது காருக்கு சென்று இன்விட்டேஷன் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான். சிறிது தயங்கினாலும் அர்ஜுன் அதை வாங்கி கொண்டான்.

"கண்டிப்பா வரேன்" என்றவன் ஆட்டோ பிடித்து வீட்டிற்க்கு கிளம்பினான்.

" நீ வாடி என் செல்லகுட்டி.. உனக்கு பப்ளிக் பிளேஸ் ல கூட எப்படி பிகேவ் பண்றதுன்னு தெரியல. மாமா கத்து தரேன்" என்றவன் ஆர்த்தியை அழைத்து கொண்டு கிளம்பினான்.

உன் கண்ணில் காணும் காதலில்
கரைந்திடவே விரும்புகிறேன்
நெஞ்சம் முழுவதும் உன் மேல் காதல் கொட்டி கிடக்குது
அதை உன் மேல் அளவில்லாமல்

கொட்டும் நாளுக்காக காத்து கொண்டிருக்கிறேன்..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17

அருண் சோகமாக கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தான். அவன் மனம் முழுவதும் கீர்த்தியின் நினைவே நிறைந்திருந்தது. “கீர்த்தி எப்படி யார் ஒருவருடன் செல்ல சம்மதித்தாள்? ஒருவேளை அனு சொன்னது போல ராம் சார் கீர்த்தியின் ரிலேசனா? அப்படி என்றாள் அவளுக்கு என்ன முறை வரும்? கல்யாணம் பண்ணிப்பாரோ? அப்போ என் நிலைமை” என்று பலவாறாக அவன் மனதில் யோசனை போய் கொண்டிருந்தது. யோசனையுடனே நடந்து வந்து கொண்டிருந்தவனை வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்த தருணின் குரல் தடுத்தது.

“டேய் மச்சி நீ என்னடா பண்ணுற இங்க? கீர்த்திய வீட்டுல கொண்டு போய் விடணும்னு போன. என்னாச்சு? வீட்டுல டிராப் பண்ணிட்டியா?” என்று கேட்டான்.

“ப்ச்..” என்று உச்சு கொட்டினான் அருண்.

“டேய் என்னடா ஆச்சு? ஏன் இப்படி எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்க” என்று அவனை உலுக்கினான் தருண்.

“அவளை அல்ரெடி டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிகிட்டு போய்ட்டாங்கடா.” என்றான் அருண்.

“என்னது?” என்ற அதிர்ந்த தருண் “ சரி யார் கூட்டிட்டு போனது? அவ இப்போ யாரோ ரிலேசன் வீட்டுல இருக்குறதா சொன்னாங்களே அவங்களா?” என்று கேட்டான்.

“ஆம்” என்று தலையாட்டிய அருணை பார்த்து “அவ ரிலேசன் தானே கூட்டிட்டு போயிருக்காங்க. நீ எதுக்கு பீல் பண்ணுற?” என்றான்

“அவளை கூட்டிகிட்டு போனது யார்னு தெரியுமா? ராம் குமார். இந்த நேம் எங்கயாவது கேள்வி பட்டுருக்கியா?”

“ராம் குமார்” என்று சிறிது யோசித்தவன் “டேய் அன்னைக்கு செமினார் வந்தாரே அவரா?” என்று கேட்டான் தருண்

“ம்ம்.. அவர் தான்” என்றான் அருண்.

“அவர் தான்னு உனக்கு எப்படி தெரியும்?”

“ஹாஸ்பிட்டல்ல சொன்னாங்க..”

“அவர் மட்டும் தான் உலகத்துலேயே ராம் குமரா? வேற யாரவது கூட இருக்கலாம். நீ பீல் பண்ணுற அளவுக்கு எல்லாம் எதுவும் சீரியஸ் இல்ல. அடுத்த டைம் பாக்கும் போது உன் லவ்வ அவகிட்ட சொல்லிடு” என்றான் தருண்.

சிறு யோசனையுடனே “சரி” என்று தலையாட்டினான் அருண். “கொஞ்சம் சிரிடா. சரி வா. கிளம்பலாம்” என்று மெயின் கேட்டுக்கு வரும் பொது சுரேஷ் அங்கே வந்தான்.

“ஹாய் தருண்” என்றான்

தருண் அவனை பார்த்து முகத்தை சுழித்தான்.

“டேய் என்னடா இவன் முகத்த சுழிக்குறான் இவன் முகம் சுழிக்குற அளவுக்கு நான் கேவலமாவா இருக்கேன்? நானும் கொஞ்சம் ஹேண்ட்சம் தானேடா..” என்று பக்கத்தில் நின்றிருந்த அபிலாஷிடம் கேட்டான் சுரேஷ்.

“நீ அழகு மச்சி..” என்றான் அபிலாஷ்

“இப்போ உனக்கு என்னடா வேணும்?” என்று கடுப்புடன் கேட்டான் அருண்.

“ம்ம் கீர்த்தி வேணும்” என்று முணுமுணுத்தவன் “கீர்த்தனாவுக்கு எப்படி இருக்குதுன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்றான்.

“அவ எப்படி இருந்தா உனக்கு என்ன?நீ உன் வேலைய பாத்துட்டு கிளம்பு” என்றான் அருண்

“அவளை காலி பண்றது தானே என் வேலை” என்று மனதில் நினைத்தவன் “எதுக்குடா நீ டென்சன் ஆகுற?நம்ம காலேஜ்ல படிக்குற பொண்ணுக்கு உடம்பு சரி இல்லன்னா எப்படி இருக்குதுன்னு கேக்குறதுல எந்த தப்பும் இல்லையே` சரி தானே அபி?” என்று பக்கத்தில் இருந்த அபிலாஷிடம் கேட்க அவனும் “ஆமா மச்சி.. ஆமா” என்றான்.

“டேய் நீ முதல்ல உன் பக்க வாத்தியத்தை ஸ்டாப் பண்ணு.” என்று அபிலாஷிடம் எரிந்து விழுந்தவன் “அவளுக்கென்ன? அவ ரொம்ப நல்லா இருக்கா. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு கிளம்பிட்டா.” என்றான் சுரேஷை பார்த்த படியே

“அவ வீடு எங்க இருக்கு?” என்று அடுத்த கேள்விக்கு “அது உனக்கு தேவை இல்லாத விஷயம்” என்றவன் “வா தருண் கிளம்பலாம்” என்று தருணை அழைத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

“என்ன மச்சி இவன் இப்படி சொல்லிட்டு போறான்?” என்ற அபிலாஷின் கேள்விக்கு “தெரியல மச்சி.. பயபுள்ள அவளை லவ் பண்ணுதோ என்னவோ.. அது தான் குதிக்குறான். சரி வா நாமளும் கிளம்பலாம்” என்றவன் முத்துவிடம் சொல்லி விசாரிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு கிளம்பினான்.

அர்ஜுன் வீட்டுக்கு வரும் போது எதோ ஒரு பரவசத்துடனே இருந்தான். அது ஆர்த்தி கெளதமை பார்த்ததாலா? அல்லது நிஷாவின் நினைவுகளா என்று அவனுக்கே புரியவில்லை. அவர்களின் திருமணத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டிற்குள் நுழைந்தான். வீடே அமைதியாக இருந்தது. ராம் சோபாவில் படுத்திருந்தான்.

“என்னடா இது அதிசயமா இருக்கு ஹெச்.ஓ.டி சார் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டார் போல.” என்று கூறி கொண்டே உள்ளே வந்தான்.

“அவன் இன்னைக்கு காலேஜ்கே போகலடா. அதுதான் வீட்டுல இருக்கான்” என்றார் பிரகாஷ்.

“என்னாச்சுப்பா உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று கேட்டு கொண்டே அவன் பக்கத்தில் போய் நெற்றியில் கை வைத்து பார்த்தான். காய்ச்சல் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தந்தையை பார்த்தான்

அவர்கள் பாசத்தில் நெகிழ்ந்தவராய் “கீர்த்திக்கு உடம்புக்கு முடியல. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருந்தாங்க. அது தான் அவளை கவனிக்க இவன் காலேஜ் க்கு லீவ் சொல்லிட்டான்” என்றார்.

அவரை ஆச்சர்யமாக திரும்ப பார்த்தான் அர்ஜுன். பின்னே? அவர் வாயில் இருந்து “கீர்த்தி” என்று பாசமான அழைப்பு. ராம் மேல் கோவம் இல்லை.

“என்னடா நடக்குது இங்கே? ஒரே நாள்ல என்னவோ சேன்ஜ்” என்றவன் கீர்த்தியின் அறைக்கு சென்றான்

அங்கு அவள் சோகமே உருவாய் எங்கயோ வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். “இவ மட்டும் மாறவே மாட்டாளா?” என்று நினைத்தவன் “கீர்த்தி” என்று கூப்பிட்டான்.

சட்டென திரும்பி பார்த்தவள் முகத்தில் அர்ஜுனை பார்த்ததும் எதிர்பார்ப்பை மீறிய ஏமாற்றம் தெரிந்தது. “ஓ நீங்களா?” என்றவளின் கேள்வியில் “வேற யாரை எதிர் பார்த்த?” என்று குறும்புடன் கேட்டான்.

வெட்கத்தில் தலை குனிந்தாள் கீர்த்தி.

“ஹா ஹா வெட்கம்” என்று சிரித்தவன் “அண்ணா ஹால்ல தூங்குறாங்க” என்றான்.

“ஓ” என்றவள் அப்புறம் எதுவும் சொல்லவில்லை.

சிறிது நேரம் அவளின் அமைதியை கண்டவன் “ஏன் இப்படி பண்ணுன கீர்த்தி? உன் கோவம் நியாயம்னு தான் அண்ணன் பொறுத்துகிட்டு இருந்தாங்க. ஆனா அவங்க உன் பேமிலிய தேட எந்த முயற்சியும் எடுக்கலைன்னு நினைக்காத. ஒவ்வொரு மாசமும் லீவ் போட்டு உங்கள தேடி தான் வருவாங்க. ஆனா அத்தை உயிரோட இல்லாததால கண்டு பிடிக்க முடியல. மாமாவை அண்ணா பார்த்ததே இல்ல. உன்னையும் அத்தை பொண்ணுன்னு தெரியாது. ஆனா எல்லாம் தெரியுரதுக்கு முன்னாடியே அண்ணா உன்ன காதலிக்க ஆரம்பிச்சிடாங்க. உன்னை பத்தி பேசும் போது அவங்க கண்ணுல தெரியுற காதல் நீ எங்கயும் பாத்திருக்க மாட்ட. அவ்ளோ லவ் உன் மேல. அப்பாவையே எதிர்குற அளவுக்கு உன்னை லவ் பண்ணுறாங்கன்னா அவங்க பாசத்தை புரிஞ்சிக்கோ. உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டாங்க. உனக்கும் அவங்க மேல லவ் இருக்குனு எனக்கு தெரியும். அப்பா நிலைமையும் கொஞ்சம் யோசிச்சு பாரு. அத்தை பண்ணினது சரியா? அதுவும் யார்கிட்டையும் சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு யாரோ மாதிரி இன்பாரம் பண்ணுனா கோவம் வராதா? அவங்க கண்ணுக்குள்ள பொத்தி வளத்த தங்கச்சி இப்படி ஒரு காரியம் பண்ணுன்னா எந்த அண்ணன் பொறுத்துபார்? என் அப்பா ஒன்னும் விதி விலக்கல்ல. அதே போல என் அண்ணா நிலைமையும் யோசி. இன்னைக்கு உனக்கு அவருக்கு இன்பார்ம் பண்ணனும்னு கூட தோனல. அவர் லவ்க்கு அவ்ளோ தானா மதிப்புன்னு அவங்க நினைக்க மாட்டாங்களா? சரி லவ்வரா வேண்டாம். ஒரு ரிலேசனா மதிச்சியா?அதுவும் பண்ணல. அண்ணா தூங்கும் போது கூட ஒரு அமைதி இருக்கும். ஆனால் இன்னைக்கு அதுல ஒரு வெறுமை தெரியுது. ப்ளீஸ் இனிமேலும் அவங்கள ஹர்ட் பண்ணாத. புரிஞ்சிக்க ட்ரை பண்ணு. ஹெல்த் பாத்துக்கோ” என்றவன் வெளியே சென்றான்.

அர்ஜுன் வெளியில் சென்றதும் அவன் சொன்னதை யோசித்து பார்த்தாள் கீர்த்தி. ராமின் காதலை தான் புரிஞ்சிகலையோ என்ற கேள்வி மனதில் எழ “இல்லையே நானும் அவரை லவ் பன்னுறேனே. பேமிலி மேட்டர்ஸ் போட்டு எனக்குள்ளே குழப்பி அவரையும் ஹர்ட் பண்ணிட்டேன்” என்றவள் காதலுடன் அவனை மாடியிலிருந்து பார்த்தாள்.

சோபாவில் தூங்கி கொண்டிருந்த அவன் முகத்தில் அர்ஜுன் சொன்னதை போல் வெறுமையே தெரிந்தது. அவன் நெற்றியில் முத்தமிட வேண்டும் போல எழுந்த உணர்வை கஷ்டபடுத்தி அடக்கினால். அமைதியாக அறைக்குள் சென்றாள்.

“நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்
எனக்கு என்னானது மனம் தடுமாறுது
விழி உன்னை தேடி தான் ஓடுது தேடுது”

எங்கோ ஒலித்த பாடலின் வரிகளை முணுமுணுத்தபடியே இனிமேல் ராமின் கோபத்தை குறைக்கும் வழிகளை யோசித்த படியே படுத்தாள்.

அடுத்த நாள் காலையில் ராம் சமைத்து கொண்டிருக்க “ராம் அத்தான்.. எனக்கு சப்பாத்தி வேணும்” என்ற குரலில் தடுமாறி திரும்பினான் ராம். கண்களில் காதலுடன் நின்று கொண்டிருந்தாள் கீர்த்தி.

சமையலறையில் நின்று அர்ஜுனுடன் பேசிக் கொண்டிருந்த படியே சமைத்தான் ராம். தீடீரென "ராம் அத்தான்.... எனக்கு சப்பாத்தி வேணும்" என்ற குரலில் திட்க்கிட்டு திரும்பினான். அவன் கண்ணில் ஒரு நொடி ஓரே நொடி அவ்வளவு காதல் தெரிந்தது. இருக்காதா பின்னே? உறவுமுறையை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்றவள், யாரோ மாதிரி நடந்து கொண்டவள் முதல் முறையாக "அத்தான்" என்று சொல்லி இருக்கிறாள். ஆனால் அந்த காதல் அடுத்த நொடி மறைந்து அந்த இடத்தில் கோபம் வந்தது. எதுவும் சொல்லாமல் ராம் சமைத்துக் கொண்டிருந்தான்.

அர்ஜுனுக்கோ எதுவும் செய்ய முடியாத நிலை. வெறுமனே "அத்தான்" என்றிருந்தால் இதன் பதில் சொல்லி இருப்பான். ஆனால் வார்த்தை தெளிவாக அல்லவா வந்தது "ராம் அத்தான்" என்று. சரி.. என்ன தான் பண்ண போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

எதுவுமே நடக்காதது போல "அத்தான் எனக்கு இன்னைக்கு சப்பாத்தி சாப்பிடனும் னு ஆசையா இருக்கு. தட்ஸ் மை பேவ்ரட் ப்ளீஸ்.." என்றாள். அவள் கேட்ட விதம் ராமை இளக்கினாலும் அவன் ஏற்படுத்தி வைத்திருந்த கோபத்தால் அவளிடம் பதில் சொல்லாமல் அர்ஜுனிடம் பேசினான்.

"அர்ஜுன் நான் சமைச்சு முடிச்சுட்டேன். நீ டைனிங் டேபிள்ல எடுத்து வச்சுட்டு அப்பாவ கூப்பிட்டுட்டு எல்லாரும் சாப்பிடுங்க. நான் ரெடியாகி வந்துடுறேன். இன்னைக்கு சீக்கிரம் காலேஜ்க்கு போகனும். நேத்து பண்ண வேண்டிய வேலையே நிறைய இருக்கு". என்று சொன்னவன் கீர்த்தனா என்கிற ஒருத்தி அங்கே நிற்பதாகவே எண்ணாமல் அவளை தாண்டி தன் அறைக்கு சென்றான்.

அவனையே ஏக்கமாக பார்த்தாள் கீர்த்தி. அதை பார்த்த அர்ஜுனுக்கு பாவமாக இருந்தது. ராம் மேல் கோபமாக வந்துது. "சே இந்த அண்ணனுக்கு அறிவே இல்லையா?. அவ தான் இறங்கி வராளே அப்போவாச்சும் அவ கிட்ட பேச கூடாதா?. பாவம் அவ.. அவளுக்கு பிடிச்ச ஒரு விசயத்தை உரிமையா இன்னைக்கு தான் கேட்டு இருக்கா... அத கூட பண்ணி கொடுக்காம போறாங்க" என்று பொருமினான்.

பாவம் அர்ஜுன் அறியாதது ராம் மனதிலும் அதே எண்ணம் தான் என்பது. ஆனாலும் அவள் தன்னை மட்டுமல்லாது தனது தந்தையும் குடும்பத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினான். அப்போது தான் அது அவன் காதலுக்கான வெற்றி.

கீர்த்தியின் அருகில் வந்தான் அர்ஜுன். "சாரி கீர்த்தி.. அண்ணா எதோ டென்சன்ல அப்படி பேசிட்டு போறாங்க. இன்னைக்கு நைட்டு சாப்பாடு சப்பாத்தி தான். நீ போய் ரெஸ்ட் எடு " என்றான்.

"இல்ல வேண்டாம் அர்ஜுன் சப்பாத்தி சாப்பிடுற ஆசையே போச்சு " என்றவள் சோர்ந்த நடையுடன் தன் அறைக்கு சென்றாள்.

காலேஜ்க்கு ரெடியாகி வந்த ராம் , அர்ஜுனும் தந்தையும் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்து அருகில் வந்தான்.

"கீர்த்தனா சாப்பிட்டாளா அர்ஜுன்?"

"அவ சாப்பிட்டா என்ன? சாப்பிடலன்னா என்னண்ணா ? நீங்க சாப்பிட்டு கிளம்புங்க. காலேஜ்க்கு டைம் ஆகுது" என்றான் அர்ஜுன்.

"ஓ" என்றவன் தான் சாப்பிட்டு விட்டு ஒரு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு கீர்த்தியின் அறைக்கு சென்றான்.

அவள் கட்டிலில் சோர்வாக படுத்திருப்பதை பார்த்தான்."கீர்த்தனா" என்று அழைத்தான். சட்டென திரும்பி பார்த்தாள் கீர்த்தி. அவள் கண்ணில் இருந்த ஏக்கம் அவனை என்னவோ செய்தது. அவள் அருகில் சென்றவன் தட்டை நீட்டி "சாப்பிடு" என்றான்.

"வேண்டாம் பசிக்கல" என்றாள் கீர்த்தி

அவளை தன் பக்கம் திருப்பி "லுக் கீர்த்தனா. ஐ டோன்ட் வான்ட் ஸி எனி ஸ்பெஷல் பெர்பாமன்ஸ் ஃப்ரம் யூ.. டோன்ட் ஆக்ட் டூ மச்.." என்று கோபமாக கூறியவன் "இப்போ இந்த சாப்பாட்ட நீ சாப்பிடுற அவ்வளோ தான்" என்று கூறிவிட்டு வெளியேறினான்.

கண்களில் வழிந்த கண்ணீரை கூட துடைக்காமல் தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள் கீர்த்தி. அதை வலியுடன் பார்த்தவாறே காலேஜ்க்கு கிளம்பினான் ராம்.

சாப்பிட்டு விட்டு சமையல் அறைக்கு சென்றவள் தட்டை கழுவி வைத்து விட்டு மீண்டும் தன் அறைக்குளே சென்று முடங்கினாள். மாத்திரை சாப்பிடவில்லை என்றால் அதற்கும் எதாவது திட்டுவான் என்று எண்ணியவள் மாத்திரையை விழுங்கி விட்டு தூங்கினாள்.

அண்ணனின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டே இருந்த அர்ஜுனுக்கு அது புதிதாக இருந்தாலும் கீர்த்தி சாப்பிட்ட மன நிறைவுடன் காலேஜுக்கு கிளம்பினான்.

-----------------------------

கல்லூரியில் கார்த்திக் ரொம்ப சோகமாக அமர்ந்திருந்தான். அவன் அருகில் வந்த அர்ஜுன் "என்னடா உன் காட்டுல சோக மழை?" என்று கிண்டலடித்தான்.

"ச்சு .. போடா இன்னைக்கு நான் ரொம்ப அப்செட்"

"என்னாச்சு மச்சி? கார்த்திக்னாலே கலகலப்பு தான். இந்த டல்னெஸ் உனக்கு செட் ஆகலயே"

"அது வந்து.. காயத்ரி.. காயத்ரி கிட்ட இன்னைக்கு என் லவ் சொல்லிட்டேன் டா. ஆனா அவ எதுமே சொல்லாம முறைச்சிட்டு போயிட்டா" என்றான் கார்த்திக் சோகமாக.

"ஹேய் மச்சி.. வாவ்.. குட் நியூஸ் டா.. எப்போ சொன்ன? அகில் க்ரீஷ் எல்லாம் உன் பக்கத்தில இல்லையா? இப்போ நல்லா ஓட்டிருப்பானுங்களே" என்றான் அர்ஜுன் . அவன் மனதிலும் சந்தோசம்.

"டேய் நீ வேற ஓட்டாதடா.. இரு கதைய சொல்லுறேன்" என்று எங்கேயோ பார்த்தான்.

"மச்சி.. நானும் பார்க்கனுமா?" என்று கூறியவாரே கைகளால் ரீல் விட்டான் அர்ஜுன்.

"டேய் உன்ன.." என்று அடிக்க வந்தாலும் அவன் காயத்ரியிடம் காதலை சொன்னதை பகிர்ந்து கொண்டான்.

(சரி கொஞ்சம் பின்னாடி போய் கார்த்திக்-காயத்ரி கதையை பார்க்கலாம்)

கார்த்திக்- நல்ல அழகான பையன். கொஞ்சம் நடுத்தர குடும்பத்துல இருந்து வந்தவன் தான். வீட்டுக்கு ஒரே பையன். அவனோட பிளஸ் பான்ட் எந்த விசயமா இருந்தாலும் சாதாரணமா கையாளுவான்.. அவன் இருக்குற இடம் எப்பவுமே கலகலப்பா இருக்கும்.

காயத்ரி- கொஞ்சம் வசதியான குடும்பத்து பெண். அப்பா மட்டும் தான். ஒரு அக்கா.. அக்காவுக்கு மேரேஜ் முடிஞ்சுடுச்சு. அப்பா பிசினஸ் மேன். காயத்ரி ரொம்ப அமைதியான பொண்ணுனு சொல்ல முடியாது. பட் கொஞ்சமே கொஞ்சம் அமைதி. நிஷா கூட சேர்ந்தா பட் பட் பட்டாசு தான்.

காலேஜ்க்கு வந்த முதல் நாளே காயத்திரிக்கு கார்த்திக்கை தெரியும். (எப்படின்னு எல்லாம் கேட்க கூடாது.. அது அப்படி தான்.. அப்புறம் சொல்லுறேன்). அவளுக்கு அன்னைக்கு அவனை பார்த்ததில இருந்து அவன் கூட பேசனும் பழகனும் ப்ரண்ட்ஸிப் வச்சிக்கனும் தோனுச்சு. காரணம் கார்த்திக் தான் .. அவன் கலகலப்பு தான்.. பட் எப்பவுமே தானாய் போய் பேசுறது பெண்களுக்கான சின்ன மானப் பிரச்சனை (சண்டைக்கு எல்லாம் வரக்கூடாது) அது எப்பவுமே அப்படி தான். காதலை சொல்லுறதுலயும் சரி .. ஒரு பையன் கிட்ட போய் பேசுறதுலயும் சரி.. ஒரு தயக்கம் இருக்கும். எங்கே நம்மல அலட்சியப் படுத்திடுவானோ அப்படின்னு ஒரு சின்ன தயக்கம். பட் பேச ஆரம்பிச்சா யாரு சொன்னாலும் நிறுத்த மாட்டாங்க. அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும் அந்த ரிலேஷன்ஷிப்.அது போல தான் காயத்ரி நிலைமையும்.. பேச தயக்கம்.. ஆனா அவளே எதிர் பார்க்காம தான் கார்த்திக் அவ கிட்ட பேச வந்தான்.

முதல் நாள் கல்லூரி. வழக்கம் போல பர்ஸ்ட் இயர் பசங்கள சீனியர்ஸ் கலாய்ச்சுட்டு இருந்தாங்க. "அண்ணா என்னண்ணா நீங்க? சின்னபுள்ள மாதிரி டாஸ்க் குடுக்குறீங்க? இதெல்லாம் ஒரு டாஸ்க்கா? என்று எகிறி குதித்தவன் வேறு யாரும் இல்லை சாட்சாத் நம்ம கார்த்திக் தான்.

"டேய் என்னடா வாய் ரொம்ப நீளுது" என்று கத்தினான் சீனியர் ஒருவன்.

"இல்லையே.. வாய் எல்லாம் நீளலையே.. உனக்கு கண்ணும் தெரியாதா அண்ணா?" என்று கார்த்திக் கேட்க பக்கென்று சிரித்தான் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த அர்ஜுன்.

"டேய் என்னடா உனக்கு சிரிப்பு? சொன்ன வேலைய ஒழுங்கா பண்ணு." என்றான் சீனியர்.

"மவனே என் அண்ணன் மட்டும் யார்னு மட்டும் உனக்கு தெரியனும் அப்புறம் இந்த வேலைய நீ பார்ப்ப" என்று முணுமுணுத்தவாரே தரையில் அழகாக ரங்கோலி போட்டுக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

"கண்ணு தெரியாதா?" என்று கேட்டதற்கு தலையில் கொட்டிய சீனியரை முறைத்தவாரே கீழே அமர்ந்து "யார் உன் அண்ணா? ரவுடியா?" என்று கேட்டான் கார்த்திக்.

"ஆ".. என்று வாயை பிளந்த அர்ஜுன் "ரவுடி இல்ல. ஹெச்.ஓ.டி" என்றான்.

"என்ன ? இங்கே யா?" என்று கேட்டான் கார்த்திக்.

"இல்ல வேற ஒரு காலெஜ் . சரி நீ எதுக்கு அவன் கிட்ட வம்புக்கு போய் கொட்டு வாங்குக்கிற? ஒழுங்கா அவன் சொல்லுறத பண்ண வேண்டியது தான" என்றான் அர்ஜுன்.

"அட இதெல்லாம் காலேஜ் லைஃப்ல சகஜம் பா. சும்மாவே படிப்ஸ் ஆக இருக்க கூடாது. அப்பப்போ வாய் பேசனும்.. ஜாலியா என்ஜாய் பண்ணனும்.. உன்ன மாதிரி கோலம் போட்டா பொண்ணுங்க நம்மல பத்தி என்ன நினைக்கும்?" என்றவன் அவன் கையில் இருந்த கோலப் பொடியை தட்டி விட்டான். அது அப்போது தான் அங்கு வந்து நின்ற ஒரு பெண்ணின் கால்களில் பட்டு தெரித்தது.

"ச்சு.. ஆ.." என்று முனகியவளை நிமிர்ந்து பார்த்த கார்த்திக் அவள் மிரண்டவிழிகளில் தன்னை தொலைத்தான்.

அவள் கண்களில் ஆச்சரியம் தெரிந்தது.இவனை சந்திக்கவே மாட்டோமா? என்று நினைத்தாளே இப்போ அவள் முன்னாடியே இருக்கிறான். "வாவ் என்ன பார்வை.. இப்படியே பார்த்துட்டு இருந்தால் இப்பவே கூட்டிகிட்டு போயிடுவேனே.. உன்ன காணாமல் நான் தவிச்சேன்ல.. நீயும் என்னை தொடரனும்" என்று நினைத்தவள்

"சே.. என் ட்ரஸ் எல்லாம் வீணா போயிடும் போல லூசுங்க " என்று சொல்லிவிடு நகர்ந்தாள்.

அவள் "லூசு" என்று சொன்னதில் அர்ஜுன் கோபத்தில் சிலிர்க்க கார்த்திக்கின் பார்வை அவளையே தொடர்ந்தது.

அதை அவள் கவனித்தாலும் கவனிக்காத மாதிரியே சென்றாள். அர்ஜுன் கார்த்திக்கை முறைக்க "லவ்ல இதெல்லாம் சகஜம்பா" என்று சிரித்தான்.

"என்னது லவ்வா?" என்று அதிர்ந்தான் அர்ஜுன்.

"எஸ் அப்கோர்ஸ்" என்ற கார்த்திக் காயத்ரியை தேடிச் சென்றான்.



உன் அன்பு மட்டும் போதும்
வேறு எதுவும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை
காலம் முழுவதும் இதே அன்புடன்
உன்னுடன் வாழ்வேன் என்னுயிரே..!
 
Status
Not open for further replies.
Top