All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அக்க்ஷரா தேவ் "காலமெல்லாம் உன்னுடன் நான்" கதை திரி

Status
Not open for further replies.

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 18

கார்த்திக் காயத்ரியை "லவ்வர்" என்று சொன்னதும் அர்ஜுன்க்கு வாயடைத்து போனது. "பார்த்து ரெண்டு நிமிஷம் இருக்குமா? அதுக்குள்ள லவ்வா?" என்று வியந்தான்.

"லவ் ல ஏது மச்சி டைமிங்.. இது கண்டதும் காதல் தான். ஆனா தெய்வீக காதல்." என்றவன் முதுகில் ஓர் அடி வைத்தான்.

"ஹே மச்சி உனக்கும் ஒரு நாள் காதல் வரும். அன்னைக்கு நீயும் இப்படி அவஸ்தை படுவ.. வா. வா.. எனக்கும் உன்னை அடிக்க சான்ஸ் கிடைக்காமல் போகும்?" என்றவன் காயத்ரியின் பின்னால் ஓட ஆரம்பித்தான்.

எப்படியோ அவகிட்ட கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சான். எப்பவும் சண்டை தான். இவன் ஓவரா லவ் பண்ணுனாலும் அதோட பிரதிபலிப்பு கொஞ்சம் கூட காயத்திரி பக்கத்துல இருந்து வரல. ரொம்ப பொறுமை காத்தவன் இன்று தான் அவளிடம் நேரடியாக காதலை வெளி படுத்தினான். ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் இது காயத்ரிக்கு கொஞ்சம் அதிரடி ஆச்சர்யம் தான்.

நிஷா கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்தாள். அதனால் காயத்திரி தனிமையை போக்க கேன்டீனுக்கு சென்றாள். இன்று எப்படியாவது இவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் அவள் பின்னால் சென்றான் கார்த்திக். அவள் ஒரு இருக்கையில் அமர்ந்ததும் அவள் எதிரில் போய் நின்றான்.

"ஹேய் கார்த்திக் வாட் எ சர்ப்ரைஸ்? நீயெல்லாம் என் முன்னாடி உன் வானரங்கள் கூட்டம் இல்லாம தனியா வந்து நிக்குர? என்ன விசயம்?" என்றாள்.

"இவ ஒருத்தி என் லவ் மூடையும் கெடுத்துடுவா போல" என்றவன் “நான் உன்கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும்" என்றான்.

"பேசு"

"நான் உன்னை.. உன்னை.." என்று திக்கி திணறி ஒரு வழியாக சமாளித்து "நான் உன்னை லவ் பண்றேன் காயத்திரி.. உன்னை முதன் முதலில் பார்த்தப்பவே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. லவ் அட் பர்ஸ்ட் சைட்னு கூட சொல்லலாம். நீ என்கிட்ட கோபமா பேசினாலும் அதுல ஒரு உரிமை இருக்குற மாதிரியே தோணும். யார்கிட்டேயும் போய் நான் உன்கிட்ட பண்ணுற மாதிரி வம்பு பண்றது இல்ல. அது உன்கிட்ட மட்டும் தான் பண்ண தோணுது. உன்னை மட்டும் தான் என்னவளா நினைக்க தோணுது. லைஃப் லாங் உன்கூட மட்டும் வாழ ஆசை படுறேன். ஐ லவ் யூ .. ஐ வான்ட் டூ மேரி யூ" என்றான்.

அவன் சொல்வதை எல்லாம் ஒரு பிரமிப்புடன் கேட்டு கொண்டிருந்தவள் அவன் சொல்லி முடித்ததும் அவனை முறைத்தாள்.

"என்ன காயு எதும் பதில் சொல்லாம இருக்குற?" என்று கேட்டவனிடம் "ஏற்காடு நியாபகம் இருக்கா? லாஸ்ட் இயர் இந்த காலேஜ் ல இருந்து டூர் போனீங்களே.. அங்க ஒரு பொண்ணை நீ காப்பாத்துனியே நியாபகம் இருக்கா?" என்று கேட்டாள்.

"ம்ம்?" என்று சிறிது யோசித்தவன் "ஆமா அது எப்படி உனக்கு தெரியும்?" என்று கேட்டான்.

"எப்படியோ தெரியும்.. சாரி இப்போ உன் லவ் ப்ரபோஸ்க்கு என்கிட்ட பதில் இல்லை" என்று முறைத்தவள் வேகமாக அவ்விடம் விட்டு அகன்றாள்.

கவலையுடன் திரும்பி நடந்தான் கார்த்திக். எல்லாத்தையும் அர்ஜுன் கிட்ட சொல்ல அவன் "அங்கே நடந்தது உனக்கு நியாபகம் இருக்கா டா.. அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா?" என்று கேட்டான்.

"சரியா முகம் நியாபகம் இல்லடா.. ஆனால் இவளுக்கு எப்படி தெரியும்?" என்று யோசித்தான்.

"அது நீ அவகிட்ட தான் கேட்கணும்" என்றான் அர்ஜுன்.

"கேட்கணும் டா.. எப்படி இருந்தாலும் அவளை தவிர வேற ஒருத்தி என் லைஃப்ல இல்ல." என்றவன் வகுப்பிற்கு சென்றான்.

பாவம் கார்த்திக் அறியவில்லை ஒரு வருடத்திற்கு முன்பே அவன் காயத்திரி மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்ததை.

காயத்திரி தனது வகுப்பில் யோசனையில் மூழ்கியிருந்தாள். அது ஃப்ரீ அவர் என்பதால் அவளுடைய யோசனையை யாரும் தடுக்கவில்லை.. அவள் நினைவுகள் ஒரு வருடம் பின்னோக்கி சென்றது.

அன்று காயத்ரியின் பிறந்தநாள். அவள் பிறந்தநாளை கொண்டாட அவள் தந்தை குடும்பத்துடன் ஏற்காடு சுற்றுலா சென்றார். அங்கு தான் அந்த விபரீதம் நடந்தது.

தாயும் தமக்கையும் முன்னே செல்ல இயற்கை அழகை ரசித்தவாறே சென்றுகொண்டிருந்தாள். பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அந்த அழகு. இவள் அழகை இரு வேறு கண்களும் ரசித்தது. அவன் கண்களில் பிங்க் கலர் சல்வார் அணிந்து வந்த காயத்ரி வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதையாகவே தெரிந்தாள். அவள் அழகு அவனை உசுப்பேற்ற அவள் அருகில் சென்றான்.

"ஹாய் பியூட்டி" என்று தன் காதுமடலுக்கு மிக அருகில் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் காயத்ரி.

"ஹேய்.. யார் நீ..?" என்று அவள் குரல் தந்தி அடித்தது. இருள் சூழும் நேரம் தாயும் தமக்கையும் ஏற்கனவே முன்னே சென்றிருந்தனர்.

"இப்படி ஒரு அழகை நான் பார்த்ததே இல்ல. வாவ் வாட் அ பியூட்டி. ஐ லைக் இட் சோ மச்" என்றவன் அவளை நெருங்கினான்.

"ஏய் பக்கத்துல வராத" என்றவள் பின்னால் நகர்ந்தாள்.

"ஹேய் பியூட்டி.. இப்படி ஒரு அழகை பக்கத்தில வச்சுட்டு நெருங்கி வராம எப்படி இருக்கது? சோ ப்ளீஸ் டோன்ட் லீவ் மீ" என்றான்.

"ச்சீ..." என்று அவன் கண்ணத்தில் பளாரென அறைந்தாள் காயத்ரி.

"ஏய்.." என்று நிமிரந்த அவன் கண்ணில் கோபக்கனல் தெரிந்தது.

"நீயே அடிச்சு என்ன டச் பண்ணிட்ட? இனிமேல் நான் பண்ணினால் என்ன தப்பு?” என்றவன் அவள் கையை பிடித்தான்.

பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் கண்களுக்கு யாரும் தென்படவில்லை.

"என்ன டியர் பார்க்குற? இங்க யாரும்இல்ல.. இன்னைக்கு நாம நல்லா என்ஜாய் பண்ணலாம்" என்றவன் அவளை தன்னோடு அனைத்துக்கொள்ள "அம்மா.. அம்மா" என்று கத்தினாள்.

"யாரும் வரமாட்டாங்க ... ஏய் நீ வாடி" என்று அவளை இழுக்கவும் அவன் பக்கத்தில் ஒருவன் வந்து நின்றான்.

ஒருவன் வாட்டசாட்டமாக பக்கத்தில் வந்து நின்றதும் காயத்ரிக்கு தைரியம் வந்தது. "ஹேய்.. கைய விடுடா" என்று கையை பிடித்து இருந்தவனிடம் கத்தினாள்.

அவன் படி தளராமல் நிற்கவும் "ப்ளீஸ் சார் காப்பாத்துங்க" என்றாள் புதியவனிடம்.

புதியவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு "கையை எடுங்க சார்" என்றான்.

"ஹேய்.. நீ யாருடா.. இது எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான் . சோ.. நீ கிளம்பு" என்றான் .

"இவனை தெரியுமா?" என்று அவன் காயத்ரியிடம் கேட்க அவள் "தெரியாது" என்றாள்.

"அவங்க தான் தெரியாது என்கிறார்களே அப்புறம் என்னடா கையை எடு" என்று அவன் கூற " என்னை யாருன்னு தெரியாது... உன்னை தெரியுமா அவளுக்கு?" என்று கேட்க புதியவன் அவளை பார்க்க அவள் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது.

"ஷி இஸ் மை பியான்ஷி" என்றவன் அவள் கையை பற்றினான். அவளும் பயம் இல்லாமல் அவன் கையை பற்றினாள்.

அவளுக்குள் எதோ ஒரு புதிய உணர்வு பரவியது. அதற்குள் இவர்கள் பேச்சு அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

"இப்போ நம்புறியா" என்று புதியவன் கேட்ட முறைத்துக் கொண்டே சென்றான் அவன்.

காயத்ரியிடம் திரும்பியவன் "இயற்கை அழகை ரசிக்குறது தப்பு இல்ல... ஆனா நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னும் கவனிக்கனும்.. சீக்கிரம் உன் அம்மா அப்பா கிட்ட போ.. இருட்டிடுச்சு.." என்றவன் அவள் கையை விலக்கி விட்டு சென்றான்.

ஏதோ தன்னை விட்டு பறிபோனது போல் உணர்ந்தாள். பின்னர் தான் அது தன் மனது என்று அவளுக்கு புரிந்தது. மீண்டும் பார்க்கமாட்டோமா என்று ஏங்கியபோது தான் கல்லூரியில் அவனை சந்திக்க நேர்ந்தது. அவன் பெயரும் கார்த்திக் என அறிந்தாள்.

"கார்த்திக்.." என்று அவள் முனக பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த ஸ்ரீஷா அவளை விசித்திரமாக பார்த்தாள். அவள் காயத்ரியை உலுக்க கனவிலிருந்து விழித்தாள் காயத்ரி. "என்னடி எதோ கனவுலகத்தில இருக்க. ஏதோ முணுமுணுக்குற?" என்று ஸ்ரீஷா கேட்க "ஒன்னுமில்ல" என்று பதிலளித்தாள் காயத்ரி.

"என்னவோ பண்ணு" என்ற ஸ்ரீஷா தன் வேலையை தொடர்ந்தாள். காயத்ரி மீண்டும் கார்த்திக்கின் நினைவுகளில் மூழ்கினாள். அவனாக வந்து சொல்லும் வரை அவன் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற முடிவுடன் இருந்தாள்.

கார்த்திக் எப்படி காயத்ரிக்கு புரிய வைப்பது என்ற குழப்பத்துடன் நின்றான்.

அர்ஜுன் அறைக்குள் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தான். அவனுமே ராம் கீர்த்தியின் ஊடலை பார்த்து கொண்டு தானே இருக்கின்றான். எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும் என்று மனதிற்குள் நினைதவாறே வெளியே வந்தான்.

"அண்ணா ரெடியா? டைம் ஆச்சு இன்னமும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க கிளம்பி வரத்துக்குள்ள அங்க மேரேஜ் முடிஞ்சு ஜோடி ஹனிமூன் போய்டும்" என்று அர்ஜுன் கத்த

"டேய் என்னடா கத்துற? நான் அப்பவே ரெடி. கீர்த்தி ரெடி ஆகிட்டாளன்னு பாரு" என்று கூறி கொண்டே வெளியே வந்த ராமின் அழகில் கம்பீரத்தில் அர்ஜுன் ஒரு நிமிடம் அசந்து நின்றான்.

பிளேக் கலர் சர்ட், அதற்கு பொருத்தமான பேண்ட் , கையில் கோல்டன் வாட்ச் என அக்மார்க் அழகனாய் இருந்தான் ராம்.

"அய்யோ இன்னைக்கு கல்யாண மண்டபம் தண்ணில மூழ்க போகுது. எதுக்கும் போட் சர்வீஸ் சொல்லி வச்சிட்டுறேன்" என்று எழப்போன அர்ஜுனை "ஏன்டா?" என்று அதிர்ச்சி ஆக கேட்டான் ராம்.

"உங்க அழகுல மயங்கி பொண்ணுங்க விட போகுற ஜொள்ளுல தான் மூழ்க போகுது. ஆனாலும் சிலரோட வயித்துல இருந்து வர்ற புகைல எல்லாம் ஆஃப் ஆயிடும் (லாஜிக் இடிக்குதுல) சரி சரி கண்ணுல நெருப்ப வச்சிட்டு சுத்துறாங்களே.”

"என்னடா உளறுற? கீர்த்தி ரெடி ஆயிட்டாளா? சீக்கிரம் வர சொல்லு. உன் பிரண்ட் ஹனிமூன் போன அப்புறம் வந்து நின்னா உனக்கு தான் அவமானம்.. ஹா ஹா" என்று ராம் சிரிக்க

அவனை முறைத்த அர்ஜுன் மாடிப்படிகளில் அப்சரஸ் மாதிரி வந்த கீர்த்தனாவை பார்த்து விட்டு ராமை அசட்டு சிரிப்புடன் நோக்கினான்..

அவனின் சிரிப்பை கண்ட ராமின் கண்களும் மாடியை நோக்கின. பார்த்தவன் இன்பமாய் அதிர்ந்து நின்றான். பிங்க் கலர் காட்டன் சில்க் புடவையில் எளிய அலங்காரத்துடன் அவனை நோக்கி வந்த கீர்த்தியை பார்த்து அவன் கண்கள் இமைக்க மறந்தன. அதிர்ச்சியோடு பார்த்து நின்றவனை கண்ட அர்ஜுன் அவன் கைகளில் அழுத்தம் கொடுத்தான். அதில் தன் நிலை மீண்டவன் பின் அவள் மேல் இழுத்து பிடித்து வைத்திருந்த கோவத்தை கஷ்ட பட்டு நியாபகத்திற்கு கொண்டு வந்து "அர்ஜுன் உன் பிரண்ட்டை சீக்கிரம் வர சொல்லு. டைம் ஆகுது" என்றவன் அவளை பார்க்காமல் வெளியே சென்றான்.

அவன் கண்டு கொள்ளாமல் சென்றதும் கீர்த்தி முகம் வாடி விட்டது. அதை தாங்கி கொள்ள முடியாமல் அவள் அருகில் வந்த அர்ஜுன் "இவ்ளோ நேரம் அண்ணா உன்ன சைட் அடிச்சத பாத்துட்டு தானே கீழ வந்த. அவர் உன் அழகில் தடுமாறி தான் எதுவும் பேச முடியாம கிளம்புறாங்க. இனிமே உன் காதலை புரிய வைக்க வேண்டியது உன் பொறுப்பு.. எப்படி அதை செயல் படுத்துறதுன்னு யோசி" என்றவன் அவளை அழைத்து கொண்டு கிளம்பினான்.

ராமை எப்படி சமாதானம் செய்வது என்று குழம்பி கொண்டிருந்தவள் அறையை விட்டு வெளியே வந்த பிரகாஷை பார்த்து "போயிட்டு வரோம் மாமா" என்று கூறி சென்றாள். அது அவளையும் அறியாமல் வந்த வார்த்தை. ராம் அதை கேட்டதும் அதிர்ந்தான்.. ஒரு நொடி அவன் கண்களில் மின்னல் இன்பமாய் வந்து போனது.. ஆனால் அதுவும் பொய்யோ என்று நினைக்கும் வண்ணம் அவன் முகம் இறுகி போனது..

கீர்த்தி தனக்காக தான் தன் தந்தையிடம் பேசினாளோ முழு மனசுடன் பேசவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது..எதுவும் யோசிக்க தோன்றா முன் அவர்களையும் அழைத்து கொண்டு ஆர்த்தி கௌதம் திருமண வரவேற்புக்கு கிளம்பினான்.

மணமேடையில் அழகு நிலையப் பெண்களின் கை வண்ணத்தில் ஜொலித்தாள் ஆர்த்தி. அவன், அவளின் சரிபாதி கௌதம் ஆண்மைக்கே உரிய அழகுடன் அவள் அருகில் கம்பீரமாய் நின்றிருந்தான். காலையில் தாலிகட்டும் போது அவன் கைவிரல் அவள் கழுத்தில் உரசும் போது ஏற்பட்ட சிலிர்ப்பு இன்னும் அவளில் மிச்சமிருந்தது போலும்... மாலையின் மறைவில் அவன் கை அவள் கையை கிள்ளும் போது அதே சிலிர்ப்பை உணர்ந்தாள். ஒரு மாதத்திற்கு முன்பு சின்ன பிள்ளையாய் பார்பி டாலுக்கு அடம்பிடித்த அந்த ஆர்த்தியா இது என யோசிக்கும் அளவிற்கு வெட்கம் அவளை பாடாய் படுத்தியதில் முகம் குங்கும பூவாய் சிவந்து இன்னும் அழகுற செய்தது.

"ஹேய் டார்லு என்னடி முகமெல்லாம் இப்படி சிவக்குது? லிப்ஸ்ல போடுறதுக்கு பதிலா முகத்துக்கு லிப்ஸ்டிக் போட்டியா?” கௌதம் சிரிக்க, அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்... அவளது ஒவ்வொரு அசைவையும் அழகாக உள்வாங்கி கொண்டது புகைப்படமாக...

"அண்ணா சீக்கிரம் உனக்கும் இப்படி கல்யாணம் பண்ணி வைக்கணும்ணா.. பாரு அவங்க எவ்ளோ அழகா ரொமான்ஸ் பண்றாங்க.. நீங்களும் இருக்கீங்களே சும்மா டெரர் பீஸ் மூஞ்சியை வெச்சிகிட்டு.. பாவம் கீர்த்தி உங்களை கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ண போறாளோ?" என்று அர்ஜுன் புலம்ப, ராம் கீர்த்தியை பார்க்க அவள் அவனை பார்த்து கண்ணடித்தாள்.

அவளின் செய்கையை பார்த்து அதிர்ந்தவன் அதை உள்ளுக்குள் ரசித்து கொண்டே வெளியில் முறைத்தான். ஆனாலும் அவனை பற்றி தெரிந்தவள் ஆயிற்றே. முதல் முறையாக அவள் மனம் கவர்ந்தவனை பார்த்து யாரும் அறியாவண்ணம் உதட்டசைவிலேயே "லவ் யூ அத்தான்" என்றாள். ராமின் மனதில் ஆயிரம் பூக்களை தூவினது போல் சாரலடித்தது.. அவன் மனம் அந்த தருணத்தை மிகவும் ரசித்தது.. அவளை அள்ளி அணைத்து கொள்ள தோன்றியது.. ஆனால் தான் இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு மென்னகையுடன் அவள் அருகில் சென்றான்.. அர்ஜுன் சந்தோசமாக அந்த காட்சியை அனுபவித்தான். அவன் நினைத்ததும் அது தானே.

"சரி சரி உங்க ரொமான்ச வீட்டில போய் வெச்சிக்கோங்க. இப்போ இன்னையோட ஜோடியை கவனிப்போம்." என்றதும் ராம் அவனை பார்த்து முறைத்தான்.

"ஹலோ பாஸ்.. நான் உங்க தம்பி.. அதுவும் கல்யாணம் ஆகாத சின்ன பையன்.. என்னை முன்னாடி வச்சிட்டு இப்படியெல்லாம் பண்ணாதீங்க.. மீ பாவம்" என்றதும் ராம் சிரித்தான்.. கூடவே கீர்த்தியும்..

"கீர்த்தி யூ டூ.." என்று அர்ஜுன் போலியாக முறைக்க கீர்த்தி இன்னும் அதிகமாக சிரித்தாள்.

அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்த ராம் அர்ஜுனை பார்த்து "போகலாமா?" என்று கேட்க.. "ஹையோ ஒரே நாள்ல ஒரு பச்ச மண்ணு எவ்ளோ தான் தாங்கும்?" என்றாலும் "ஐ ஆம் ஹேப்பி ஃபார் யூ அண்ணா" என்று அவனை அணைத்து கொண்டான்.

கீர்த்தியும் வெட்கத்தில் தலைகுனிய அவளின் வெட்கத்தை ரசித்தவாறே அழைத்து சென்றான் ராம்.

அர்ஜுனை பார்த்த கௌதம் அவனை உடனே அடையாளம் கண்டு கொண்டான். ஆனால் ஆர்த்தி தான் திருதிருவென முழித்தாள். அதை ரசித்தவாறே அவளுக்கு அர்ஜுனை ஞாபக படுத்தினான் கௌதம்..

"டார்லு அன்னைக்கு ரோட் க்ராஸ் பண்ணும் போது உன்னை காப்பாத்துனாரே அந்த அர்ஜுன். நீ கூட பிங்க் கலர் பார்பி டால் தான் வேணும்னு சண்டை போட்டியே.. முக்கியமா என்னை மாமான்னு கூப்பிட்டியே.. ஞாபகம் இருக்கா?"

" இவன் கிட்ட ஒரு பார்பி டால் கேட்டிருந்தா ஞாபகம் இருக்கும்.. வாரத்துக்கு ஒண்ணு கேப்பேனே.." என்று விழிக்க,

அதை புரிந்து கொண்ட அர்ஜுன் அவளை தன் தங்கை போலவே நினைத்தான்.. "சோ இன்னசென்ட்" என்று நினைத்து "ரொம்ப கஷ்டபடாதீங்க சிஸ்டர்.. ஐ ஆம் அர்ஜீன்.. கௌதம் ப்ரண்ட்.. இது என்னோட அண்ணா ராம்.. அண்ணி அன்ட் மை ப்ரண்ட் கீர்த்தனா" என்று அறிமுக படுத்தினான்.

ஆர்த்தியும் பதிலுக்கு ஹாய் சொல்லி விட்டு கீர்த்தியுடன் பேச ஆரம்பித்து விட்டாள்.. ஒரு புறம் கௌதம் முறைத்தான் என்றால் இன்னொரு புறம் ராம்.. இரண்டு பேரையும் பார்த்து அர்ஜுன் வயிறு வலிக்க சிரித்தான்.

அவன் சிரிப்பில் பேச்சை விட்டு வெளியே வந்த பெண்கள் இருவரும் கேள்வியாக பார்க்க அர்ஜுன் இரு ஆண்களையும் கை காட்டினான். அப்போது தான் கீர்த்திக்கும் ஆர்த்திக்கும் தங்கள் இணைகளின் பொறாமை புரிந்து சிரிப்புடன் அவர்களின் அருகில் போய் நின்றனர்.

"டார்லு இன்னைக்கு நைட் இருக்குடி உனக்கு" என்று கௌதம் கோபப்படவும் "என் செல்ல மாமா என்னை எப்பவுமே கஷ்ட படுத்த மாட்டாங்க" என்று அவன் நெஞ்சில் இதழ் பதித்தாள்.

ராம் கீர்த்தியை பார்க்க "அத்தான் அவங்க லைசன்ஸ் எடுத்துகிட்டாங்க" என்று வெட்கத்துடன் கூறவும், அவள் பேச்சை புரிந்தவன் அவளை தன்னோடு அணைத்து கொண்டான்.

மூவரும் திருமண வரவேற்பை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தனர்.. அர்ஜுன் தூங்க செல்லவும், கீர்த்தி பிரகாஷின் ரூமிற்கு சென்று அவரை சாப்பிட்டு விட்டாரா என்று விசாரித்து விட்டு வந்தாள்.. அதை கண்டதும் ராமிற்கு மனதில் இதமாக தான் இருந்தது.. தனக்காக என்றாலும் தந்தையிடம் அவள் பேசுவது சந்தோசமே..

பேசிவிட்டு தன்னறைக்கு சென்றவளை இழுத்து கொண்டு அவனது அறைக்கு சென்றான்.. அவள் பின்புறம் சென்றவன் அவள் கழுத்தில் ஒரு செயினை அணிவித்தான்.. அது அவளுக்காக அவன் வாங்கியது தான்.. வெளியில் இருந்து பார்க்க சாதாரண செயின் மாதிரி தெரிந்தாலும் டாலரில் ஒரு கிராமிற்கு மாங்கல்யம் மாதிரி பண்ணியிருந்தான்..

அவள் அதை பார்த்து கண் கலங்க, அவளை அணைத்தவன் "உன் விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று சொன்னேன் தான். ஆனால் எப்போ நீ உன் காதலை சொன்னியோ அப்பவே என் மனைவி.. ஊர் மெச்ச நான் உன்னை கல்யாணம் பண்ணலை தான்.. ஆனால் இந்த நிமிடம் முதல் நீயும் நானும் கணவன் மனைவி.. இனிமேல் சந்தோஷத்திற்கு கூட உன் கண் கலங்க கூடாது.. என் உயிரின் சரிபாதி நீ.. என் உயிர் இருக்றே வரைக்கும் உன்னை கண் கலங்காம பாத்துப்பேன்.. லவ் யூ அம்மு.." என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.. அதில் அவள் உருகி நின்றாள்.. அவள் கன்னம், கண் என்று முத்தமிட்டு வந்தவன் அவள் உதடுகளில் தயங்கினான்.. பின் அவளை விடுவித்தவன் "இது கல்யாணத்துக்கு அப்புறம்" என்றவன் அவளை இறுக அணைத்தான்.. "லவ் யூ சோ மச் அத்தான்" என்று அவளும் அணைத்து கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் உனக்கான தேடலில்
தொலைந்து போவது என் மனம் தான்
ஆனாலும் உனக்கான தேடல்
இன்றுடன் முடிந்து போவதில்லை
காலம் காலமாக தொடரும் பந்தம் அது..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 19

அடுத்த நாள் காலை மிகவும் அழகாக விடிந்தது கீர்த்தனாவுக்கு. காலை கடன்களை முடித்தவள் தன் மனம் கவர்ந்தவனை பார்க்க கிச்சனிற்கு வந்து விட்டாள். அவள் மனம் அவளிடம் இல்லை அதுவும் அவனை இந்த கோலத்தில் பார்த்த பின்பு அவனை கட்டியணைத்து முத்தமிட தோன்றியது. மேலும் நேற்றைய நிகழ்வில் அவள் கன்னங்கள் சிவப்பேறியது. ராம் தனது கல்லூரிக்கு செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தான். ஆனாலும் வீட்டு சமையல் அவன் பொறுப்பாயிற்றே. குளித்து முடித்தவுடன் இடுப்பில் ஒரு துண்டுடன் கிச்சனிற்கு வந்து விட்டான். அடுப்பில் வைத்த குழம்பை மறந்திருப்பான் போலும். அதே போல் தன் வீட்டில் தனக்கானவளாக ஒரு பெண் இருப்பதையும் மறந்து விட்டானோ. அவனை அந்த கோலத்தில் பார்த்ததும் அவன் நெஞ்சில் சரணடைய கீர்த்தியின் மனம் பரபரத்தது. அவன் கழுத்தில் அணிவித்த செயின் அதற்கான உரிமையை கொடுத்திருந்தும் ஊரறிய நிகழவில்லையே. அதனால் அவனையே ரசித்தபடி நின்றிருந்தாள். ஏதோ உள்ளுணர்வு உணர்த்த திரும்பி பார்த்தான் ராம். அங்கே தன்னவளை கண்டதும் அவன் மனதில் சாரல் அடித்தது.

அவளின் ரசனையை ரசித்தவாறே அருகில் வந்தான் அவன். கீர்த்தி வெட்கத்தில் தலை குனிந்தாள். அவன் முகவாயில் கை வைத்து நிமிர்த்தியவாறே "என்ன அம்மு ரசனை எல்லாம் பலமா இருக்குதே? அத்தானை அப்டியே விழுங்கிடுவபோல" என்று கேட்டான் அவன் கண்களிலும் அதே ரசனை.

"அத்தான் இது கிச்சன்.. எப்போ வேணாலும் அர்ஜீன் வரலாம்.. நீங்க சமையல் வேலையை பாருங்க முதல்ல போய் டிரெஸ் மாத்திட்டு வாங்க. இல்லைனா" என்று அவள் இழுக்க

"இல்லைனா....."

"இல்லைனா உங்களை அப்படியே கடத்திட்டு போய் என்னன்னவோ பண்ணிடுவேன். நானும் உணர்வும் காதலும் உள்ள பெண் தானே. அதுவும் உங்க மனைவி.. இப்படி ஒரு கோலத்துல உங்களை பார்த்த அப்புறமும் என்னை நானே கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. சோ நல்ல பையனா போய் கிளம்புங்க.. மீதி சமையலை நான் பார்த்துக்குறேன்" என்று அவள் கூற.

"என்னடி நான் சொல்ல வேண்டிய டயலொக் எல்லாம் நீ சொல்லிட்டு இருக்க, உன்னை நான் அவ்ளோ பாதிச்சிருக்கேனா?"

"நீங்க மட்டும் தான் என்னை தொல்லை செய்ய முடியும் அத்தான்.. உங்க காதல் மட்டும் தான் என்னோட பலம்.. நான் எவ்வளவோ கோபப்பட்டிருக்கேன்.. உங்களை கஷ்ட படுத்திருக்கேன்.. ஆனாலும் நீங்க ஒவ்வொரு சமயத்துலேயும் எனக்காக மட்டும் தான் துணையாக இருந்தீங்க.. எனக்காக மாமாவை எதிர்த்து பேசுற அளவுக்கு இருந்திருக்கீங்க.. உங்க அளவுக்கு இல்லைன்னாலும் நான் சாகுற வரைக்கும் என்னோட முழு காதலையும் உங்களுக்கு உணர்த்துவேன்.. லவ் யூ அத்தான்.. லவ் யூ சோ மச்" என்று அவன் மார்பில் சாய்ந்தாள். (கடைசியா நினைச்சத சாதிச்சிட்டமா கீர்த்தி)

அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “என்னோட காதலுக்கு கொஞ்சமும் குறையாத காதல் தான் உன்னுடையது அம்மு. அத நீ ஒவ்வொரு முறையும் எனக்கு உணர்த்தணும்னு அவசியம் இல்ல.. நீ என்னுள் கலந்தவள்.. என்னால் உன் காதலை உணரமுடியும்" என்றவன் தன்னுள் அவளை அழுத்தி கொண்டான்.

"எவ்ளோ நேரம் இன்னும் இப்படியே ரொமான்ஸ் பண்றதா ஐடியா?" என்ற கேள்வியால் இரண்டு பேரும் விலகினர்.

அங்கே அர்ஜீன் தான் நின்று கொண்டிருந்தான். அவனும் பாவம் சாப்பிட வந்து விட்டு இவர்களின் உரையாடலில் வெளியே சென்றவன் அரைமணி நேரம் கழித்து இப்போ தான் மீண்டும் வந்தான். ஆனாலும் இவர்களின் ரொமான்ஸ் தொடர்ந்து கொண்டிருக்கிறதே.

"சாப்பாடு ரெடி தான்டா.. குழம்பு மட்டும் ரெடி பண்ணணும். நீ அதை பண்ணு. நான் போய் காலேஜுக்கு கிளம்புறேன்." என்றவன் மெதுவாக நழுவினான்.

"சரி சரி நான் பார்த்துக்குறேன். நீங்க கிளம்புங்க" என்றவன் "கீர்த்தி நீ அப்பாவை சாப்பிட கூப்பிடு" என்று சமையலை கவனிக்க சென்றான்.
கீர்த்தியும் அவனிடம் இருந்து தப்பித்து பிரகாஷ் அறைக்கு சென்றாள்.

"மாமா சாப்பிட வாங்க" என்ற குரலில் திரும்பி பார்த்த பிரகாஷின் மனம் தனது தங்கையை நினைத்து வருந்தியது.

"கீர்த்தி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா"

"சொல்லுங்க மாமா"

"உனக்கு என்மேல இருந்த கோபம் போயிருச்சா,"

சிறிது நேரம் யோசித்தவள் "என் அம்மா தன்னோட குடும்பத்தைபத்தி பேசி வருத்தப்படும் போது கோவமா வரும். எனக்கு தெரியும் தான் அவங்க வீட்டை எதிர்த்து அப்பாவை கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னு ஆனாலும் நீங்க எல்லாருமே அவங்கள ஒதுக்கி வச்சது தான் என்னோட கோபம் மாமா"

"அவ இருந்த இடமே எனக்கு தெரியாதுமா"

"தெரிஞ்சிக்க நீங்க எந்த முயற்சியும் எடுக்கலை மாமா" அவள் பதிலில் பிரகாஷிற்கு குற்ற உணர்ச்சியாய் இருந்தது.

"எனக்கு எல்லார் மேலயும் கோபம் தான் மாமா ஆனால் ராம் அத்தானை நேசிச்ச அப்புறம் என்னோட கோபத்தால அத்தான் கஷ்ட பட கூடாதுன்னு நினைக்குறேன்.. இனி மேல் நாம அதபத்தி பேச வேண்டாம் மாமா.. இப்போ இருக்குற சந்தோஷம் இதனால் கெட வேண்டாம்.. சாப்பிட வாங்க அத்தானும் அர்ஜுனும் வெயிட் பண்றாங்க" என்றவள் வெளியே சென்றாள்.

இவள் பேச்சை கேட்டு கொண்டிருந்த மற்ற இருவருமே புன்னகைத்து கொண்டனர்.

ராம் கல்லூரிக்கு கிளம்பி சென்றதும் கீர்த்திக்கு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. அர்ஜுன் தனது அறைக்கு சென்று விட கீர்த்தி தவித்து போனாள்.. இன்னும் படிப்பு முடிய ஆறு மாதங்களே உள்ளன.. முடிந்தவுடன் ராமுடன் ஊரறிய திருமண கனவுகளில் மிதந்து கொண்டே தூங்கி விட்டாள் கீர்த்தனா.

கல்லூரிக்கு வந்த ராமிற்கும் அதே எண்ணம் தான்.. காதலை வெளிப்படுத்தி விட்டான்.. இன்னும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்ற தவிப்பு மட்டுமே இருந்தது.. அடுத்த மாதம் வரும் கீர்த்தனாவின் பிறந்தநாளில் தந்தையிடம் திருமணத்தை உறுதிபடுத்த பேச வேண்டும் என நினைத்தான்.. அதன் பின் கல்லூரிக்கு வேலைகள் அவனை உள்ளிழுக்கவே அதில் ஐக்கியமாகி விட்டான்.

கார்த்திக் அர்ஜுனிற்கு போன் பண்ணிருந்தான்.

"சொல்லு மச்சி"

"எங்கடா இருக்க?" என்று கார்த்திக் கேட்கவும்

"வீட்டில இருக்குறேன் டா" என்று பதில் அளித்தான்.

"மச்சி இன்னைக்கு லீவ் தானேடா அவுட்டிங் போவலாமா?"

"அவுட்டிங்கா, கீர்த்தி வீட்டில் தனியா இருப்பாளேடா" என்று சிறிது தயங்கினான் அர்ஜுன்

"அவங்களையும் கூட்டிட்டு வாடா மகாபலிபுரம் போயிட்டு வரலாம்.. நான் நிஷாவையும் காயத்ரியையும் கூப்பிடுறேன். ப்ளீஸ் பா" என்று கார்த்திக் கெஞ்ச

டேய் உன் ஆள பார்க்கணும்னு இப்படி ஒரு ஐடியாவா?" என்று கிண்டல் செய்தவன் "சரிடா நான் கீர்த்திகிட்ட கேட்டு சொல்றேன் வெயிட் பண்ணு" என்று அவள் அறைக்கு சென்றான்.

அங்கு கீர்த்தி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

"மச்சி கீர்த்தி தூங்குறாடா"

"டேய் எழுப்புடா.. இன்னைக்கு விட்டா என் காயுவை ஒரு வாரம் பார்க்க முடியாதுடா"

"உனக்காக நல்லா தூங்கிட்டு இருக்குற பொண்ணை அடிச்சு எழுப்ப முடியுமாடா?"

"மச்சி.. ப்ளீஸ்.. ப்ளீஸ்"

"டேய் கெஞ்சாத உனக்கு அது செட் ஆகாது.."

"என்னாச்சு அர்ஜுன்?" என்றபடியே எழுந்தமர்ந்தாள் கீர்த்தி.

"ஹேய் நான் டிஸ்டர்ப் பண்ணிடேனா? என் ப்ரண்ட் கார்த்திக் குரங்கு மகாபலிபுரம் போகலாம்னு சொன்னான். உன்னை தனியா விட்டுட்டு போகனுமேன்னு யோசிச்சேன் அதான் உன்கிட்ட கேக்கலாமனு வந்தேன்" என்றான்.

"மகாபலிபுரம் தானே.. போயிட்டு வா" என்றாள் கீர்த்தி

"உனக்கும் போர் அடிக்குமே.. நீயும் வா கீர்த்தி"

"ராம் அத்தான் வருவாங்களே.." என்று அவள் இழுக்க

"அண்ணா வர லேட்டாகும்.. நீ கிளம்பி வா.. நான் வெயிட் பண்றேன்" என்றவன் கீழே சென்றான்.

ராமிற்கு அழைத்து சொல்லலாம் என்று அழைப்பு விடுக்க அவன் எடுக்கவேயில்லை.. வகுப்பு எடுத்து கொண்டிருந்ததால் சைலண்ட் மோடில் போட்டிருந்தான். சரி அப்புறமாக சொல்லி கொள்ளலாம் என்று எண்ணி கிளம்பி அர்ஜுனோடு மகாபலிபுரம் சென்றாள்.

மகாபலிபுர சிற்பங்கள் எப்போதுமே புகழ் வாய்ந்தவை தான். ஒவ்வொரு சிற்பத்தையும் பார்க்கும் போது தோன்றும் எவ்ளோ அழகு என்று (நான் பூரித்து போன விஷயம் சிற்பங்கள் தான்) ஒவ்வொரு சிற்பமும் ஒரு வரலாறை பத்தி பேசினாலும் அதை வடிவாய் செதுக்கிய சிற்பிகளுக்கு நன்றிகளை கூறியே ஆக வேண்டும். ஒவ்வொரு சிற்பத்தையும் தொட்டு பார்த்த கீர்த்திக்கும் அதே எண்ணம் தான்.. பாதையின் படிகட்டுகள், அழகிய கோவில்களும் இன்றும் அழியாத என்றும் அழிக்க முடியாத சிற்ப கலையை ஒவ்வொன்றையும் பார்த்து வியந்து போனாள் கீர்த்தி.

அருங்காட்சியம், கலங்கரை விளக்கம் என பார்த்து விட்டு கடற்கரைக்கு சென்றனர்.. கார்த்திக், காயத்ரி, நிஷா மூன்று பேரும் ஒரு புறம் செல்ல அர்ஜுன், கீர்த்தி மறுபக்கம் சென்றனர்.

"என்ன அர்ஜுன் ஐந்து பேரும் ஒன்றாக தானே வந்தோம்? அவங்க ஒருபக்கம் போறாங்க நாம இன்னொரு பக்கம் வரோம் ஏன்?" என்று கீர்த்தி கேட்க

"கார்த்திக் காயத்ரியை லவ் பண்றான்.. எனக்கு தெரிஞ்சு அவளும் தான் பண்றா.. ஆனா இவன் சொல்லிட்டான்.. அவ சொல்லல.. சோ கொஞ்சம் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்காக வந்திருக்கான். நிஷா துணைக்கு தான் அவ கூட வந்தாள்" என்றான்.

"ஓ... அப்போ நிஷா தனியா நிற்பாளே.. நீ போய் கூட்டிட்டு வா.. எனக்கு கொஞ்சம் ட்யர்டா இருக்கு இங்கேயே இருக்கேன்" என்றாள்.

"கீர்த்தி என்னாச்சு? ஆர் யு ஓகே?" என்று பதறினான் அர்ஜுன்

"எனக்கு ஒண்ணும் இல்லடா நீ போய் கூட்டிட்டு வா நான் அத்தான்கிட்ட பேச போறேன்" என்றவள் அங்கேயே உட்கார்ந்தாள்.

"இதோ அவளை கூட்டிகிட்டு ஐந்து நிமிஷத்துல வாரேன்.. நீ பத்திரமா இரு" என்றவன் விரைவாக சென்றான். தனியாக கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நிஷாவை அழைத்து கொண்டு கீர்த்தி இருந்த இடத்திற்கு வந்தான். அங்கு கீர்த்தியை காணவில்லை. பதறி அங்கும் இங்கும் ஓடி தேடினான் பலன் தான் பூஜ்ஜியம்.

"அய்யோ அண்ணாவுக்கு என்ன பதில் சொல்வேன்" என்றவன் ராமிற்கு அழைத்து விஷயத்தை கூறினான்.

பதறிய ராம் அர்ஜுனை நன்றாக திட்டிவிட்டு அவனும் மகாபலிபுரத்திற்கு வருவதாக சொன்னான். அர்ஜுன் காயத்ரிக்கும் விஷயத்தை சொல்லி விட்டு காவல்துறையை அணுகினர். இரண்டு மணி நேரத்தில் ராம் வந்து சேரவும் எல்லாரும் அவளை தேடினர் ஆனால் அவர்களின் தேடலுக்கு காரணமானவளோ ஒரு குடோனில் கைகால்கள் கட்டபட்டு மயக்கத்தில் இருந்தாள்.

என்னவளே..!
என் காதலை உணர்த்தி நாம் என சேரும் நேரம்
என்னை தவிக்க விட்டு சென்றது தான் நியாயமா?
நீ இல்லா ஒவ்வொரு நொடியும்
என் உடல் உறுப்பை இழந்த மாதிரி வலிக்கிறது
என் இதயம் அதன் துடிப்பை நிறுத்தும் முன்
என்னுடன் வந்து சேர்ந்து விடு என்னுயிரே..!
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20

அர்ஜுனை நெருங்கிய ராம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவன் கன்னத்தில் அறைந்திருந்தான்..அர்ஜுன் பிறந்ததில் இருந்து இதுவரை தன் கைகளில் பொத்தி வளர்த்தவன் இன்று அறைந்து விட்டான்.. அர்ஜுன் கலங்கிய கண்களுடன் ராமை பார்க்க,

"உனக்கு அவளோட நிலமை தெரியும் தானே? அவ பின்னாடி எப்போ அவள சாகடிக்கலாம்னு சுத்திகிட்டு ஒரு கூட்டம் திரியுதுன்னு உனக்கும் தெரியும் தானே? அப்புறம் எதுக்குடா வெளில கூட்டிட்டு வந்த? எனக்கு டைம் இல்லாமலா நான் அமைதியா இருக்கேன்? அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ண அவ்ளோ ஆசை இருந்தும் வீட்டுக்குள்ளேயே வெச்சு பார்த்துகிட்டேனே.. இப்படி தொலைச்சிட்டு நிக்கிறியே.. அப்பாக்கு என்ன பதில் சொல்ல போறேனோ? அம்மு எங்கடி இருக்க?" என்று தானும் அழுதான்.

இவர்களின் நிலையை பொறுக்காத கார்த்திக் "சாரி சார் அவன் வரலன்னு தான் சொன்னான்.. நான் தான் கட்டாயபடுத்தி வர வச்சேன்.. கீர்த்தனா கண்டிப்பா கிடைப்பாங்க.. போலீஸ் தேடுறது இருக்கட்டும் நாமளும் தேடலாம்.. ப்ளீஸ் இப்போ சண்டை போட்டுட்டு இருந்தா அவங்களுக்கு ஆபத்தா முடியலாம்.." என்று நிலமையை புரிய வைக்க,

அர்ஜுன் "சாரிண்ணா என்னோட கீர்த்தியை நானே உங்ககிட்ட கொண்டு வந்து சேர்ப்பேன். இதுக்கு கண்டிப்பா சுரேஷ் தான் காரணமா இருப்பான்.. அவனை விசாரிச்சா தெரியும்" என்று சொல்ல,

ராமிற்கும் தெளிவு வந்தது.. யாரிடமும் எதுவும் பேசாமல் ஒரு முடிவுடன் கிளம்பி விட்டான்.. அர்ஜுன் நிஷாவையும் காயத்ரியையும் அனுப்பி விட்டு கார்த்திக்குடன் கீர்த்தியை தேட கிளம்பினான்.


மயக்கத்தில் இருந்து தெளிந்த கீர்த்திக்கு ஒரு நொடி தான் எங்கே இருக்கிறோம் என்ற நினைவே எழும்ப மறுத்தது.. கை கால்கள் அசைக்க முடியாமல் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தவுடன் தான் கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தாள்..

கடற்கரையில் இருந்த தான் எப்படி இங்கே? என்று யோசித்தவளுக்கு கடைசியாக தன்னிடம் பேசியவனை நினைவு வர மறுத்தது.. ஆனாலும் இதற்கு முன்பு எங்கோ அவனை பார்த்த உணர்வு.. யோசித்து கொண்டிருக்கும் போதே அவள் முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள்.

யார் என்றே தெரியாத ஒருவன்.. அவன் பின்னே நினைவில் வர மறுக்கும் மற்றொருவன்.. அவனுக்கு பின்.. அவன்.. அவளை ஜென்ம எதிரியாக நினைக்கும் சுரேஷ்.. கடைசியில் இது இவன் செயல் தானா? அத்தான்கிட்ட சொல்லாமல் வந்தது எவ்ளோ பெரிய தவறு.. இப்போ நான் எங்கே இருக்கேன்னு தெரியாம எவ்ளோ கஷ்டபடுவாங்களோ என்று மனம் கலங்கியது.. அவளின் யோசனையை கலைத்தது அவன் குரல்..

"என்ன மேடம் யோசனை பலமா இருக்கே? இங்க இருந்து எப்படி தப்பிக்கலாம்னு யோசிக்கிறியா? நீ கனவுல கூட அப்படி நினைக்காத.. ஏன்னா இந்த இடம் என் அப்பாவுக்கு கூட தெரியாது.. உன்னோட உறவுகள் என்னை கண்டுபிடிக்கவே முடியாது.. இனிமே தான் இந்த சுரேஷோட ஆட்டம் ஆரம்பம்.. நீ பண்ணுன எல்லாத்துக்கும் இன்னைக்கு தண்டனை அனுபவிக்க போற.. ரொம்ப அழகின்னு திமிர்டி உனக்கு.. அத அடக்க தானே நான் இருக்கேன்" என்றவன் அவளை நெருங்கி அவள் துப்பட்டாவில் கை வைக்கவும் அவள் ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

கைகளோடு கால்களையும் அல்லவா கட்டி போட்டிருக்கிறான் இந்த வெறி பிடித்தவன்.. எழும்ப கூட முடியாமல் பின்னால் நகர்ந்தாள்.

"ஏய் என்னடி சீன் போடுற? இன்னைக்கு நீ எங்களுக்கு விருந்து.. உன்னை அனுபவிச்சு உன் திமிரை அடக்கலைன்னா நாங்க என்னடி ஆம்பள? அன்னைக்கு அடிச்ச கையால என்னை அணைக்கபோற? இத நினைச்சு நினைச்சு நீ தினம் சாகனும்.. அப்போ தான்டி எனக்கு நிம்மதி" என்று அவளை மீண்டும் நெருங்கினான்.

கீர்த்திக்கு பயத்தில் வியர்த்து உடம்பெல்லாம் நடுங்க தொடங்கியது.. ஒரு நாள் அவனை எதிர்த்து நின்றதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? "என் அத்தான் கூட என் அனுமதி இல்லாமல் நெருங்க மாட்டாரே.. அவருக்கு சொந்தமான நான் இன்னொருவனை என்னை தொட விடுவதா? கண்டிப்பாக இல்லை?" தைரியமாக நிமிர்ந்தவள்

"ஹேய் என்ன நினைச்சி இருக்றே நீ? இப்படி எல்லாம் நீ சொன்னால் நான் பயந்துடுவேன்னு நினைச்சியா? உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது.. அப்படி ஏதாவது நடந்தாலும் என் குடும்பத்தினர் உன்னை சும்மா விடமாட்டாங்க.. கடைசி வரைக்கும் ஜெயில் களி சாப்பிட வேண்டியது தான்.. அதை சாப்பிட கூட உயிரோட விடமாட்டாங்க என் அத்தான்" என்று ஆவேசமாக பேச

" யாருடி உன் அத்தான்.. உன்னை இந்த நிலமைல பார்த்தால் இவ வேணாம்னு சொல்லிட்டு போவான்.. அப்படி ஆக்க போறோம் உன்னை" என்றவன் திரும்பி பார்த்து,

"அரவிந்த் பர்ஸ்ட் இவ உனக்கு தான்.. இவ்ளோ நாளா மறைஞ்சு வாழ்ந்தல்ல.. இப்போ இவள என்னவேணாலும் பண்ணிக்கோ.. இனி மேல் இவ வெளில வரவே யோசிக்கணும்" என்றவன் அவளை ஒரு அறையில் தள்ளி விட்டு வெளியே சென்றான்.

"அப்புறம் கீர்த்தி டார்லிங்.. இந்த ரூம்ல கேமரா இருக்கு என்ஜாய்" என்றவன் முத்துவுடன் வெளியேறினான்.

கீர்த்திக்கு அரவிந்த் என்ற பெயரை கேட்டவுடன் பொறி தட்டியது.. இவன் தானே அன்று பார்க்கில் காதல் சொல்லியவன்.. அப்போ இவன் சுரேஷ் ஆளா? ஆனாலும் இப்போ அவளின் மானம் பெரிதல்லவா? கால்களின் கட்டு அவிழ்க்க பட்டிருந்தது.. அந்த அறையை சுற்றி ஒடினாள்.. ஆனாலும் ஒரு அறையை எவ்வளவு நேரம் தான் சுற்றுவது? எதிரில் இருப்பவன் தெளிவாக அவள் ஒன்றே குறி என துரத்தி கொண்டிருந்தான்.. கீர்த்திக்கு மூச்சு வாங்கியது.. கடைசியில் இவன் கையால் சீரழிக்கபட்டுவிடுவோமோ என்ற பயம் வர இருக்கும் தெம்பை எல்லாம் திரட்டி தள்ளி விட்டாள்.. ஆனாலும் புலியிடம் மான் சிக்கிய கதை தான்.. அவளை ஒரே எட்டில் பிடித்தவன் கட்டிலில் கிடத்தி அவள் மேல் படர தொடங்கினான்.


--------------------------------
ராம் கீர்த்தனாவை எல்லா இடத்திலும் தேடி பார்த்தான்.. காவல் துறையிடம் இருந்தும் எந்த தகவலும் இல்லை என்றவுடன் மனம் சோர்ந்து போனது.. நேற்று காதலை சொன்னாள் அது இந்த பிரிவிற்காகவா என்று தவித்தான்.. தந்தையிடம் விஷயத்தை கூற அவரும் பதறி விட ஏற்கனவே நடந்த சம்பவங்களை ஏன் தெரியபடுத்தவில்லை என திட்டி தீர்த்து விட்டார்.. இனியும் தாமதிக்க முடியாது என மீண்டும் சுரேஷின் வீட்டிற்கு சென்றான்.. ஏற்கனவே சென்ற பொழுது அவன் தாய் மட்டும் தான் இருந்தாள்.. இவன் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டான்.

இப்போது சுரேஷின் வீட்டில் அவன் தந்தையுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.. அப்போது ராம் அங்கே வர, எதுவோ புரிவது போல் இருந்தது சுரேஷிற்கு "ஓ இவன் தான்
அவள் அத்தானா? எப்படி தான் இவனுகளுக்கெல்லாம் அப்படி ஒரு அழகி கிடைக்கிறாளோ ஆனால் இனிமேல் அவளால் நிம்மதியாக வாழ முடியாது" என்று நினைத்தவன் எதுவும் அறியாதவன் போல் தந்தையின் அருகில் வந்தான்.

"யாருப்பா நீ?" என்ற கேள்விக்கு சுரேஷை முறைத்தான் ராம்..

"யாரு நீ? எதுக்கு என் பையனை முறைக்குற?" என்று சுரேஷின் தந்தை குரலை உயர்த்த

"நான் கீர்த்தியோட புருஷன் " என்றான் ராம். அவன் சொன்னதில் அவனை அதிர்ந்து பார்த்தான் சுரேஷ்.. புருஷனா, அப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" மனதில் நினைப்பதாய் வாய்விட்டு சொல்ல அவன் தந்தை அவனை புரியாமல் பார்த்தார்.

"என்ன சுரேஷ் சொல்ற? யாரு இந்த பையன்? கீர்த்தி யாரு? எதுக்காக நம்ம வீட்ல வந்து இப்படி பேசிட்டு இருக்குறான்?" என்று கோபத்தோடு கேட்க சுரேஷின் தாய் அதிர்ந்து மகனை பார்த்தார்.. அவருக்கு கீர்த்தி யார் என தெரியுமே..

தந்தையின் கோபத்தை கண்ட சுரேஷ் "கீர்த்தி எங்க காலேஜ்ல தான்பா படிக்குற எனக்கு நல்ல பிரண்டும் கூட" என்று சமாளித்தான்.

ராம் அவனை கோபமாக பார்த்தான்.. "நல்ல பிரண்ட பழி வாங்க தான் ஆசிட் வரைக்கும் போவாங்களா?" என்று கேட்க

"வாட் நான்சன்ஸ் யு ஆர் டாக்கிங்? அவ எனக்கு யாரு? நான் எதுக்கு அவளை கொல்லணும்" என்று சுரேஷ் கேட்க

"அத நான் சொல்றேன்" என்று முன்னால் வந்தாள் அனு..

சுரேஷிற்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது.. அனு சுரேஷின் தந்தையிடம் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்கவும் அவர் அவனை உக்கிர பார்வை பார்த்தார்.

"இப்போ அந்த பொண்ணு எங்கே?" என்ற அவரின் கேள்விக்கு "எனக்கு தெரியாதுப்பா அவளை பழிவாங்க நினைச்சது உண்மை தான்.. ஆனா நான் இன்னும் எதுவும் பண்ணலப்பா.. இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல" என்று பயத்தோடு கூற

"இப்போ அந்த பொண்ணு எங்கே? அத மட்டும் தான் கேட்டேன்.. முத்து?" என அழைக்க

"முத்து எதுக்குப்பா?" என்றான் பயத்துடன்

"அவனுக்கு நீ பண்ற எல்லாமே தெரியும் சோ அவனோட துணை நீ பண்ணிருக்க முடியாது"

முத்து அவர் முன் வர "கீர்த்தி எங்கே?" என கேட்டார்.

அவன் தயங்க "இப்போ நீ சொல்லலைன்னா இங்க ஒரு கொலை விழும்.. பையன்னு கூட பார்க்க மாட்டேன், அவன் சாவது உறுதி" என சொல்ல

"நம்ம குடோன்ல இருக்கறா" என்றான் முத்து

ராம் அவன் கழுத்தை பிடித்து நெரித்தான் "என் அம்முவ என்னடா பண்ணுனீங்க? சொல்லுடா" என அவனை நெருக்க, முத்து தலை குனிந்தான்.

"சொல்லு முத்து" என சுரேஷின் தந்தை கர்ஜிக்க

"அங்கே சுரேஷ் பிரண்ட் அரவிந்த் கூட" என்று அவன் சொல்லி முடிக்கவில்லை "நோ...." என்று அலறினான் ராம்..

"சே நீ என் வயித்துல தான் பிறந்தியாடா?" சுரேஷின் தாய் சுரேஷை நெருங்கி வந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.. அவன் தந்தை கூனிகுறுகி போனார்..

ராமின் தோளை தோட, "என் கீர்த்திக்கு எதாவது ஆயிருந்தா உங்களுக்கு வாரிசு இருக்க மாட்டான்" என்றவன் அனுவை வீட்டுக்கு போக சொல்லி விட்டு குடோனிற்கு விரைந்தான்.

அர்ஜுனிற்கும் தகவல் சொல்ல அவனும் கார்த்திக்குடன் அங்கு சென்றான்.. அங்கு அவர்கள் கண்ட நிலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

கீர்த்தி எங்கேயோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.. அவள் பக்கத்தில் அரவிந்த் உயிருக்கு போராடி கொண்டிருந்தான்..

என்னவளே..
எனக்காக உன் காதலை பரிசாக கொடுத்துவிட்டு
நீ என்னை விட்டு ஏன் பிரிந்து சென்றாய்?
உனக்காகவே உன்னை மட்டுமே நினைத்து
உனக்கானவன் காத்திருக்கிறேன்
எந்த நிலைமையாக இருந்தாலும்
நம் காதலை நினைவில் வைத்து
மீண்டு வந்து விடு அன்பே..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21

கீர்த்தியை காப்பாற்றி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.. அன்று எங்கோ வெறித்து கொண்டிருந்தவள் தான் இன்றும் அதே நிலை .. ராம் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை பழைய கீர்த்தனவாக பார்க்க முடியவில்லை.. அர்ஜுனும் பழியை தன்மேல் போட்டு கொண்டு அவளை இயல்பாக்க முயற்சிக்கிறான் பலன் தான் இல்லை.. காலேஜிற்கு போனால் சரியாகி விடுவாள் என்று எண்ணிய ராம் அவளை அங்கே கொண்டு போய் விட்டால் இவன் கையை பிடித்து கொண்டு திரு திருவென முழிப்பாள்.. அதையும் மீறி கல்லூரிக்கு அனுப்பினால் அவளை வந்து அழைத்து செல்லும் படி அழைப்பு தான் வரும் அங்கே ஓர் மூலையில் அழுது கொண்டிருப்பாள்.. ராமிற்கு அவள் நிலையை பார்த்து அவளை இந்த நிலமைக்கு ஆளாக்கியவனை கொல்லும் அளவிற்கு வெறி வந்தது.. ஆனால் ஏற்கனவே நடைபிணமாய் இருப்பவனை என்ன செய்வது? ஆம் அரவிந்த் கோமாவில் இருக்கிறான்.. அன்று அவன் துரதிஷ்டமோ கீர்த்தனாவின் அதிர்ஷ்டமோ தெரியவில்லை அரவிந்த் அவள் கை கட்டை அவிழ்த்து விட்டு அவள் திமிருவதை அடக்கி அவளை ஆள நினைத்தான்.. அந்தோ பரிதாபம் அது அவன் உயிருக்கே உலை வைத்து விட்டது.. ஓடி ஓடி களைத்த கீர்த்தி ஒரு கட்டத்தில் பக்கத்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவன் தலையில் அடித்தாள்.. அதில் மயங்கி விழுந்தவனின் இடுப்பில் மீண்டும் அடித்தாள்.. வெறி கொண்ட வேங்கை போல் அவள் அடித்த அடியில் கடைசி அடி அவன் உயிர் நாடியில் பட்டு அவன் மொத்தமாக தன்னிலை இழந்தான்..

எதையோ நினைத்த கீர்த்தனா அருகில் வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.. காவல் துறையினருடன் ராம் வர அவனின் அழைப்பில் "அத்தான்" என்று ஓடி வந்து அவனை கட்டிபிடித்து கதறினாள்.. ராமின் கண்களும் கலங்கியது.. அவன் அவளை எவ்வளவோ சமாதான படுத்த நினைத்தும் முடியாமல் இழுத்து கொண்டு வெளியே வந்தான்.. காரினுள் அவளை அமர்த்தி டோரை லாக் செய்தவன் அவள் இதழ்களை சிறை செய்தான் திருமணத்திற்கு பின் தான் என்று அவள் போட்டிருந்த கட்டுபாடுகள் அனைத்தும் தகர்தெறிந்து அவளுள் ஆழ புதைந்தான்.. ஒரு கட்டத்தில் அவள் மூச்சுக்கு திணறவே அவளை விடுவித்தான்.. இப்போது அவள் கண்களில் கண்ணீர் இல்லை.. மனதில் நிறைவுடன் கண்களில் வெறுமையும் சூழ்ந்து கொண்டது.. கார் கதவை திறந்து வெளியே வந்தவள் காவல் துறையினரிடம் சென்று அவனை அடித்ததை சொன்னாள்.. நடந்த எல்லாவற்றையும் சொன்னாள் அவர்களுடன் காவல் நிலையம் செல்ல தயாரானாள்..

இதை பார்த்த அர்ஜுன்,ராமின் நெஞ்சம் பதறியது.. "கீர்த்தி...." என இருவரும் ஒரு சேர கத்தினர்.. "என்ன தான் என் பாதுகாப்பு என்றாலும் நான் பண்ணுனது தப்பு தான் அத்தான் அதுக்கான தண்டனையை நான் அனுபவிக்கனும்.." என்றவள் காவல் துறையுடன் சென்றாள்..

ராம் கதறி விட்டான் "அம்மு ..." என்று தலையில் அடித்து அழுதான்.. அவனை சமாதானம் பண்ண வந்த அர்ஜுனையும் தள்ளி விட்டான்.. சிறிது நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தவன் போல் அவர்களது குடும்ப வக்கீலை சந்தித்து எவ்ளோ வேகமாய் முடியுமோ அவ்ளோ வேகமாய் அவளை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தனர்.. அரவிந்த கோமாவிற்கு சென்று விட்டதால் அவன் கண் முழித்த பின் தான் இந்த விசாரணை தொடரும்.. சுரேஷ் தனது தந்தையின் பண பலத்தால் கேசை விட்டு வெளியே வந்தவன் மீண்டும் திருந்தாமல் பழிவாங்க நேரம் எதிர் பார்த்து கொண்டிருந்தான்..

கீர்த்தனா வெளியே வந்ததும் முதல் வேலையாக அவளை பதிவு திருமணம் செய்து கொண்டான் ராம்.. அவனுக்கு தெரியும் இன்னும் நாள் கடத்தினால் நடந்து முடிந்த விஷயத்திலிருந்து வெளியே வர மாட்டாள் என்று. பிரகாஷ் தனது மகனின் எல்லா முடிவுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.. அர்ஜுனும் தன்னால் முடிந்த அளவு தனது தோழியை தேற்ற பாடுபடுகிறான்..

இன்று:

காலையில் தூக்கத்தில் விழித்த ராம் தனது அருகில் கைகளால் துளவினான்.. அவன் தேடியது கிடைக்காததால் ஏமாற்றதுடன் குளிக்கச் சென்றான்.. கிச்சனில் அர்ஜுன் சமைத்து கொண்டு இருந்தான்..

குளித்து முடித்து கீழே வந்த ராம் "என்னடா நீ சமைக்கிற? அம்மு எங்க?" என்று கேட்டான்.."பின்னாடி தோட்டத்துல இருப்பா அண்ணா" என்றவன் காலைக்கு தோசையும் தக்காளி சட்னியும் மதியத்திற்கு சாதம்,ரசம்,உருளைக்கிழங்கு பொரியல் பண்ணியிருந்தான்.. காலை சாப்பாட்டை டைனிங் டேபிளில் வைத்தவன் மதிய சாப்பாட்டை அவனுக்கும் ராமிற்கும் டிபன் பாக்சில் அடைத்தான்..

இதை வேதனையோடு பார்த்து கொண்டிருந்தான் ராம்.. அன்று அவன் அர்ஜுனை அடித்ததில் இருந்து ராமிடம் பேசுவதை குறைத்து கொண்டான்.. அது அவன் மேல் உள்ள குற்ற உணர்ச்சியால் மட்டுமே.. ராம் எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் அர்ஜுனிற்கு கீர்த்தி பழையபடி மாறினாலே சந்தோஷம்.. அர்ஜுன் பிரகாஷிற்கு சாப்பிட கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டான்.. ராம் அவனுக்கும் கீர்த்திக்குமான உணவை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றான்..

"அம்மு..." குரல் கேட்டு திரும்பினாள் கீர்த்தி.. அவள் அருகில் வந்து அமர்ந்தவன் "சாப்பிடு அம்மு" என்று ஊட்டி விட ஆரம்பித்தான்.. அவர்களுக்குள் அதிக பேச்சு இல்லை.. ஆனால் அவனின் அணைப்புகளும் மௌனபாஷைகளும் அவளுக்கு அவன் மனதை புரிய வைத்து விடும்.. அமைதியாக சாப்பிட்டாள்.. அவள் சாப்பிட்டு முடித்த பின் அவனும் சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்தான்..

"இன்னும் எவ்வளவு நாளைக்குடா இப்படியே இருப்ப? எனக்கு என்னோட பழைய அம்மு வேணும்.. எப்பவும் என்கிட்ட சண்டை போட்டுட்டு என்னை காதலோடு சுத்திவர அம்மு வேணும்.. அந்த அரவிந்த் சுரேஷ்னு எத்தனை பேர் வந்தாலும் நான் எப்பவுமே உனக்கு துணையாகி இருப்பேன்டா.. நீ பழையபடி மாறனும் அம்மு.. அப்பா அர்ஜுன் எல்லாரும் வருத்த படுறாங்கடா.. எல்லாரும் பழைய அம்முவை மிஸ் பண்றோம்" என்றவன் கண்கள் கலங்கியிருந்தன.. அவளை தோளோடு அணைத்து கொண்டவன் "ஐ லவ் யூ அம்மு.. உனக்காக நான் எப்பவும் இருப்பேன்கிற நம்பிக்கை உனக்கு இருந்தால் நீ பழையபடி காலேஜுக்கு போகணும்.. யாரையும் நீ பார்த்து பயபட கூடாது.. உன் தைரியம் தான் உன்கிட்ட முதல்ல பிடித்தது.. நீ அவனை கொன்று போட்டிருந்தாலும் தப்பில்லை.. உனக்கு அவன் கோமாவில் இருக்கிறான்னு குற்ற உணர்ச்சி இருக்க கூடாது.. ஒரு பெண்ணோட கற்பை சூறையாட நினைக்குறவன் உயிரோடவே இருக்க கூடாது.. அவனுக்கு இன்னும் நிறைய காத்துட்டு இருக்கு.. ஆனா என் அம்மு ஒரு தேவதை .. அவ எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்.. அடுத்தவங்களையும் சந்தோஷமா வெச்சிருக்கணும் எல்லாத்தையும் மறந்துட்டு என்னோட அம்முவா இந்த வீட்டோட மருமகளா அர்ஜுனோட ப்ரண்டா வாடா" என்றவன் அவள் எழும்புவதற்கு கை கொடுத்தான்.. அதை பிடித்து எழுந்தவள் "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா அத்தான்?" என்று கேட்டாள்.. ராமிற்கு ஒன்றும் புரியவில்லை "நாம ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டோம் அம்மு" என்றான்..

"அது யாருக்கும் தெரியாதே அத்தான்.. ரெஜிஸ்டர் பண்ணுனது கூட நம்ம வீட்டுக்கு மட்டும் தானே தெரியும்.. காலேஜ் போனா எல்லாரும் பரிதாபமா பாக்குறாங்க சிலர் ஏளனமா பாக்குறாங்க.. நான் நம்ம வீட்ல இருக்குறது கூட நிறைய பேருக்கு தெரியாது.. அனுவுக்கு மட்டும் தான் தெரியும்.. எல்லாரும் நானே ஆசை பட்டு இப்படி நடந்துகிட்ட மாதிரி பேசுறாங்க.. என்னால முடியல அத்தான்.. என் புருஷன் நீங்க இருக்கும் போது இன்னொருத்தன் கூட இணைச்சு வச்சு பேசுறது கஷ்டமா இருக்கு அத்தான்.. ஊருக்கே சொல்ற மாதிரி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க அத்தான் ப்லீஸ்" என்றவள் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்..

ராம் கோபத்தை அடக்கியவாறு நின்றான்.. "என் மனைவியை பத்தி பேச அவங்க யாரு?" என்றவன் "அம்மு இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோடா.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. அதுவரைக்கும் நீ காலேஜ் போ.. யார் என்ன சொன்னாலும் கண்டுகாத.. நான் உன்னை நம்புறேன்.. நம்ம குடும்பம் நம்புது வேற யாரோட நம்பிக்கையும் தேவை இல்ல.." என்றவன் அவளை அழைத்து கொண்டு கிளம்பி கல்லூரிக்கு சென்றான்.. அவளை கல்லூரியில் விட்டான்.. "டோன்ட் கேர் அபௌட் அதர்ஸ்" என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு சென்றான்..

மனதில் தைரியம் வந்தவளாக வகுப்பை நோக்கி நடந்தவளை அருணின் குரல் தடுத்தது.. "என்ன அருண்?" என்றவளிடம் "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கீர்த்தனா" என்றான்..

"இப்போ கிளாசுக்கு டைம் ஆச்சு.. லஞ்ச் டைம் பேசலாமா?" என்று அவள் கேட்க சரியென்றவன் ஒரு முடிவுடன் அவன் வகுப்புக்கு சென்றான்.. இதை பார்த்த அனு யோசனையுடன் சென்றாள்.. அவளுக்கு ராம் கீர்த்தி யார் என்று தெரியும்.. கீர்த்தியை காப்பாற்றிய அன்று அனு அவளுக்கு கால் செய்ய அதை எடுத்தவன் ராம்.. கீர்த்தியின் மொபைலை வீட்டிலேயே வைத்து விட்டு சென்றிருந்தாள்.. அதனால் தான் ராமிடம் பேசுவதற்கு அர்ஜுன் போனை வாங்கி விட்டு கடற்கரையில் அவர்கள் வரும் வரை காத்திருந்தாள்.. கீர்த்தி காணாமல் போனதை ராம் அனுவிடம் சொன்னவுடன் அவளுக்கும் சுரேஷ் மீது சந்தேகம் வந்தது.. எனவே ராமுடன் அவளும் கிளம்பி சென்றாள்.. கடைசியில் ராம் அவள் புருஷன் என்று சொன்னதில் அவளுக்கும் அதிர்ச்சி.. பின் பதிவு திருமணம் பற்றி அனுவிடம் சொல்லி கீர்த்தியை பார்த்து கொள்ளுமாறு ராம் சொல்லி இருந்தான்.. எனவே அனுவுக்கு தனது அண்ணன் காதல் தோற்று போக போவதை நினைத்து வருத்தமாக இருந்தது.. ஆனாலும் கீர்த்தியே சொன்னால் அவன் நம்புவான் என்பதால் எதுவும் சொல்லாமல் கிளம்பினாள்.


அர்ஜுன் மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருந்தான் கார்த்திக் அவனருகில் வந்து "நீ எதையோ இழந்த மாதிரி இருக்க? எல்லாம் சரி ஆகிடும்" என்று சொல்ல "கீர்த்தி பழைய மாதிரி மாறினால் தான் எனக்கு நிம்மதி .. இல்லைன்னா என்னோட குற்ற உணர்ச்சியே என்னை சாகடிச்சிடும்டா" என்று வருந்தினான்..

அப்போது அங்கே காயத்ரி நிஷாவுடன் வந்தாள்.. "கார்த்திக்" என காயத்ரி அழைக்க "என்ன?" என்று கோபமாக கேட்டான் கார்த்திக் அதில் அவள் முகம் சுருங்கி விட்டது..

அவளை பார்த்த கார்த்திக் "உன்னை எனக்கு ஏற்கனவே தெரியும்.. பட் நான் உன்னை காப்பாத்தினேங்குற காரணத்துக்காக உனக்கு என் மேல் லவ் வர கூடாது.. உனக்கும் என்னை மனசார பிடிக்கணும்னு தான் தெரியாத மாதிரி நடிச்சேன்.. பட் உனக்கு அது தெரியல.. என் மேல காதல் இருந்தும் இவ்ளோ நாள் அலைய விட்டிருக்க. அர்ஜுன் அன்னைக்கு எனக்காக தான் அவங்க அண்ணிய கூட்டிட்டு வெளிய வந்தான்.. அன்னைக்கும் உன் மனசுல என்ன இருக்குன்னு நீ சொல்லல.. பட் நமக்காக வந்தவன் இப்போ குற்ற உணர்ச்சியில் செத்துட்டு இருக்கான்.. இனி மேல் நான் உன்னை தேடி வர மாட்டேன்.. ப்யூச்சர்ல நாம சேரணும்னு விதி இருந்தால் அப்போ பார்க்கலாம்" என்றவன் விறு விறுவென நடந்து சென்றான் காயத்ரியும் அழுது கொண்டே பின்னால் சென்றாள்..

நிஷா அர்ஜுன் பக்கத்தில் வந்தாள் "அர்ஜுன்" என அவள் அழைக்க அர்ஜுன் அவளை திரும்பி பார்த்தான்.. இப்போதெல்லாம் அவள் கண்களில் காதல் தெரிகிறது.. அர்ஜுனிற்கும் அவளை பிடிச்சிருக்கு அவள் வாழ்க்கை துணையாக வந்தால் நல்லாயிருக்கும் என தோன்றியது உண்டு.. ஆனால் இப்போ இருக்குற பிரச்சனையில் அவனுக்கு கீர்த்தி மட்டுமே நினைவில்..

" நிஷா உனக்கும் நான் கார்த்திக் சொன்னது தான் சொல்வேன் எதிர்காலம் நமக்கு என்ன வெச்சிருக்குன்னு தெரியல இப்போ படிப்பு தான் முக்கியம்.. எனக்கும் இன்னும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.. இன்னும் ஒரு மாசம் தான்.. நீ எங்கேயோ இருப்ப நான் எங்கேயோ இருப்பேன்.. விதி நம்மள மறுபடியும் சந்திக்க வச்சா அப்போ பார்க்கலாம்" என்று எழுந்தவனை கையை பிடித்து நிறுத்தியவள்..

"ஐ லவ் யூ அர்ஜுன்.. இந்த காதல் எப்போ எப்படி வந்துச்சுன்னு கேட்டால் என்கிட்ட பதில் இல்ல.. பட் நான் சொல்ல வர்றதை என் கண் பார்த்தே புரிஞ்சிகிட்டு நீ பேசுன பார்த்தியா? அப்பவே புரிஞ்சிடுச்சு என் வாழ்க்கை துணை நீ தான்னு.. என் அப்பா எனக்கு மாப்பிள்ளை பாக்றேன் சொன்னாங்க.. நான் உன்மேல இருக்குற காதலை சொல்லிட்டேன்.. ஒருத்தனை காதலிச்சிட்டு இன்னொருத்தன் கூட வாழ்ந்து அந்த காதலை கொச்சபடுத்தவும் விரும்பல.. என் அப்பா அம்மாவுக்கு மன கஷ்டத்தை கொடுக்கவும் பிடிக்கல.. அப்பாவுக்கு ராம் சாரை தெரியும்.. பேசுறேன்னு சொன்னாங்க நான் தான் உங்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னேன்.. உனக்காக நான் காத்துகிட்டு இருப்பேன்.." என்றவள் வகுப்புக்கு சென்று விட்டாள்.. அர்ஜுன் மலைத்து நின்று விட்டான்.. அவனுக்கு அவள் மேல் காதலா என்று கேட்டால் அவனுக்கே தெரியாது.. என்றும் நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தவன் உள்ளே சென்றான்.

என்னவனே..!
நீ எனக்காக பார்த்து பார்த்து
செய்யும் ஒவ்வொரு விசயத்திலும்
என் மீது வைத்திருக்கும் அதீத காதலை
மட்டுமே உணர்கிறேன்..
நீ எனக்கானவன்
நான் உனக்கானவள்
நம் காதலை கொண்டாட காத்திருக்கிறேன்
காதலுடன் நான்..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22

கல்லூரியின் மதிய இடைவேளையின் போது கீர்த்தியை தேடி வந்தான் அருண் கீர்த்தி அனுவுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்..

"கீர்த்தி ஆர் யூ ஒகே நௌ? ராம் சார் சொன்னார்ன்னு தான் காலேஜூக்கு வரியா?" என்று அனு கேட்க

"புருஷன் சொல்லை பொண்டாட்டி மீற கூடாது அனு பேபி" என்று புன்சிரிப்புடன் கூறினாள் கீர்த்தி.. அவள் நினைவில் ராமின் காதலை சுமந்த முகம் தோன்றியது..

"ஹேலோ மேடம் கனவுல இருந்து வெளில வாங்க.. நெக்ஸ்ட் அவர் க்ளாஸ் இருக்கு" என்று அனு கிண்டலடிச்சிட்டே சாப்பிட்டு முடித்தாள் கீர்த்தி..

சாப்பிட்டு முடிக்கவும் "ஹாய் கீர்த்தி" என்று வந்து நின்றான் அருண்..

"ஹாய் அருண்.. சாப்டிங்களா?"

"சாப்பிட்டேன் கீர்த்தி.. நான் உங்கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும்" என்றான் தயங்கியபடியே

அதை கேட்ட அனு "பேசிட்டு வாங்க கீர்த்தி" கூறி விட்டு எழுந்தாள்..

"ஹே நீ அவரோட தங்கச்சி தானே.. உனக்கு தெரியாம என்ன பெர்சனல்? அதுவும் என்கிட்ட பேசுற அளவுக்கு.. நீ இங்கேயே இரு" என்று கீர்த்தி அவள் கை பிடித்து தடுத்தாள்..

"அண்ணன் தங்கச்சியா இருந்தாலும் அவனுக்கு பெர்சனல்னு இருக்க கூடாதா?" எனறவள் "பேசிட்டு வா" அண்ணன் பட போகும் வேதனையை நேரில் காணும் தைரியம் இல்லை..

அனுவை வித்தியாசமாக பார்த்த கீர்த்தி அருணிடம் திரும்ப "சொல்லுங்க அருண் என்கிட்ட என்ன பேசணும்?" என்று கேட்டாள்..

"அது வந்து" என்று திணறிய அருண் கடைசியில் "ஐ லவ் யூ கீர்த்தி" சொல்லியே விட்டான்.. கீர்த்தி அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ச்சியாகி விட்டாள்..

"கீர்த்தி...கீர்த்தி..." என அருண் பல தடவை கூப்பிட்ட பிறகே அவள் தன்னிலைக்கு வந்தாள்..

"நீங்க இப்போ என்ன சொன்னீங்க" என்று திக்கி திணறிய படி கேட்டாள்..

"நான் உன்னை காதலிக்கிறேன்.. இது இப்போ வந்தது இல்ல.. நான் முதல் முதல்ல உன்னை பார்த்தப்போ எனக்குள் ஒரு தடுமாற்றம்.. அனுக்காக சுரேஷ எதிர்த்து நின்னப்போ உன் செய்கையில் ஒரு பிரமிப்பு.. நீ பாட்டு பாடினப்போ அந்த குரல்ல ஒரு வசீகரம் அப்பவே உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்.. நீ இல்லாமல் நான் இல்லைங்குற அளவுக்கு நீ எனக்குள் வந்துட்ட.. அப்பவே சொல்லணும்னு நினைச்சேன் பட் நீ என்னை வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு ஒரு பயம் ஆனால் இப்பவும் சொல்லலைன்னா நீ கடைசி வரைக்கும் எனக்கு கிடைக்காமல் போயிடுவன்னு பயமா இருக்கு.. அனுவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. எங்க வீட்ல இருக்குறவங்களும் நம்ம காதலை எதிர்க்க மாட்டாங்க.. நான் உன்னை கடைசி வரைக்கும் என் உயிரா பாத்துப்பேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா கீர்த்தி" என்று இவன் ஆவலுடன் கேட்க

கீர்த்தியோ இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் "அத்தான்" என்ற கூவலுடன் மயங்கி விழுந்தாள்..

இவளுடைய கதறலை கேட்ட அனு என்னவோ என்று ஓடி வர கீர்த்தியை பார்த்து பதறி விட்டாள்.. "கீர்த்தி... கீர்த்தி..." என அவள் கன்னத்தில் தட்ட கொஞ்சம் கண் விழித்தவள் “அத்தான் கிட்ட கூட்டிட்டு போ அனு.. இப்பவே" என்று கூறி மறுபடியும் மயங்கினாள்.. அடுத்து அனுவின் "கீர்த்தி" என்ற சத்ததிற்கு எந்த பதிலும் இல்லை.. கேன்டீனில் இருந்தவர்கள் என்னவோ ஏதோ என்று கூடி வர.. அங்கு வந்த பிரின்சிபாலை பார்த்து "சார் ராம் சாரை உடனே வர சொல்லுங்க" என்றாள் அனு.. அவருக்கும் விஷயம் தெரியுமாதலால் உடனே அவனை அழைத்தார்..

"சொல்லுங்க சார்" என்ற ராமிற்கு "ராம் கீர்த்தி மயங்கி விழுந்துட்டாங்க.. உடனே காலேஜிற்கு வா" என்றார்.. அந்த பக்கம் பதறிய ராம் "டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன் சார் அதுவரைக்கும் பார்த்துகோங்க" என்றவன் மறுபடியும் ஏன்? என்ற குழப்பத்துடன் கிளம்பினான்..

இங்கு அருணோ பதட்டத்தில் இருந்தான்.. அவள் காதலுக்கு பதில் சொல்லாமல் அவள் எதற்காக மயங்கி விழுந்தாள்.. ராம் சார் எதற்காக இவளுக்காக இங்க வர வேண்டும் என்ற கேள்வியுடன் பதட்டதுடன் நின்றான்.. பத்து நிமிடத்திற்குள்ளாகவே வந்த ராம் கீர்த்தியை நெருங்கினான்.. அவள் தலையை தன் மடியில் வைத்து கொண்டவன் "அம்மு... அம்மு" என்று அழைத்து பார்த்தான்.. அவளிடம் இருந்து வராமல் போகவே மீண்டும் அவள் கன்னத்தை தட்டி "அம்மு.. அத்தான் வந்திருக்கேன்டா நீ கூப்பிட்டதும் வந்துட்டேன் பாரு.." என்றவன் மீண்டும் அவள் கன்னங்களை மிருதுவாக வருடினான்.. அதில் கண் திறந்தவள் சுற்று புரம் மறந்து அவனை கட்டிபிடித்து அழுதாள்.. பிரின்சிபால் அனைவரையும் வகுப்புக்கு போக சொல்லிருந்தார்.. இவளும் ஓய்வெடுக்கும் அறையில் இருந்ததால் அனுவும் அருணும் தவிர யாரும் இல்லை.. ஆனால் அருணுக்கு அவள் ராமை கட்டிபிடித்து அழுததும் மனதுக்குள் அவன் கட்டியிருந்த காதல்கோட்டை சுக்குநூறாய் உடைந்தது.. கண்ணீருடன் அனுவை பார்த்தான். அவன் பார்வையை புரிந்தவள் "கீர்த்தியோட ஹஸ்பண்ட் அவர்" என்றாள். அருணுக்கு அதிர்ச்சி கீர்த்திக்கு திருமணமாகி விட்டதா? திருமணம் ஆன ஒரு பெண்ணிடம் போய் காதல் சொன்னேனா? தன்னையே வெறுத்து உள்ளுக்குள் வெதும்பினான்..

ஒரு வழியாக கீர்த்தி அழுகையை நிறுத்தியதும் ராம் "அம்மு என்னாச்சுடா? யார் என்ன சொன்னது? ஏன் மயங்கி விழுந்த?" என்று கேட்டதும் அவள் பார்வை அருணிடம் சென்றது.. அவள் பார்வையை பார்த்தவன் அருணின் சட்டையை பிடித்து விட்டான்..

"என் அம்மு கிட்ட என்ன சொன்ன?"

"சார்..." என்று அவன் தயங்க "சொல்லு" என்று கத்தினான் ராம்..

அருண் அவன் பேசியதை சொன்னதும் ராம் கீர்த்தியை திரும்பி பார்த்தான்.. அவள் கண்களில் பரிதவிப்பு தெரிந்தது.. அது ராம் அவளை நம்புவானா என்று புரிந்ததும் ராமிற்கு வலித்தது.. "அவ்வளவு தானா என் மீதான நம்பிக்கை?"

"அருண் நீ உன்னோட காதலை எப்போ சொல்லிருந்தாலும் கீர்த்தி ஏற்று கொண்டிருக்க மாட்டாள்.. நீ அவளை பார்ப்பதற்கு முன்பே நான் அவளை பார்த்துட்டேன்.. என் மீதான காதலை அவ மனசுகுள்ள விதைச்சுட்டேன்.. அவ என்னை தான் காதலிச்சா.. என்னை தவிர வேற யாரும் அவ மனசுக்குள் வர முடியாது.. அவ படிப்பு முடிஞ்ச அப்புறம் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருந்தோம்.. பட் சுரேஷ் பண்ணின வேலையால் உடனே கல்யாணம் பண்ண வேண்டியதாக போச்சு" என்றவன் எல்லா நிகழ்வுகளையும் அவனிடம் சொன்னான்..

என்ன தான் ராம் சொன்னாலும் அருணின் காதல் மனம் வலித்தது.. "சாரி சார்... சாரி கீர்த்தி" என்றவன் அறையை விட்டு வெளியே சென்றான்..

அங்கே தருணின் முன் அருண் அழுது கொண்டிருந்தான்.. அங்கு நடந்தது அனைத்தும் தருணிற்கும் தெரியும்.. ஆனால் அழும் அவனை தேற்றும் வழி தெரியாமல் அமைதியாக அழ விட்டான்..

"அருண் எல்லாரோட காதலும் வெற்றியடையாது.. இப்போ எல்லாம் ஆறு ஏழு வருஷம் காதலிச்சிட்டு நீ தான் எல்லாம்னு வாழ்ந்துட்டு ஒரு நாள் வந்து என்னோட சூழ்நிலை இப்படி, வீட்ல ஒத்துகலன்னு வேற கல்யாணம் பண்ணிட்டு போறாங்க.. அப்போ அவங்க மனசுல எவ்ளோ வலி இருக்கும்ல.. ஆனால் ஒரு குடும்ப சூழ்நிலைக்குள்ள போன அப்புறம் எல்லா வலியையும் தனக்குள்ளேயே விழுங்கிட்டு கிடைச்ச வாழ்க்கையை வாழ ஆரம்பிக்குறாங்க. உயிரா காதலிச்ச இரண்டு பேருக்குமே இந்த நிலமை தான். இத விட உன் கஷ்டம் கொஞ்சம் கம்மி தான். உன் காதலை அப்பவே சொல்லுன்னு நான் தான் சொன்னேன்.. முதல்லயே சொல்லிருந்தால் அவளோட பதில்ல நீயும் இவ்ளோ ஃபீல் பண்ணிருக்க மாட்ட. வலி கொஞ்சம் குறைவா தான் இருக்கும்.. அவ உன்னை காதலிக்கவே இல்ல.. அவளோட மனசுல அப்பவும் இப்பவும் ராம் சார் தான் இருக்காரு.. அவர் தான் அவளுக்கு பெஸ்ட் சாய்ஸ்.. அதுக்காக நீ கெட்டவன் அவங்களுக்கு கரெக்ட் பெர்சன் இல்லன்னு நான் சொல்லல.. நீ ரொம்ப நல்லவன் உன்ன மனசார ஏத்துகிட்டு உன்னையே சுத்தி சுத்தி வந்து லவ் பண்ண ஒருத்தி வருவா.. அவளை மனசார ஏத்துக்கோ உன் லைஃப் நல்லா இருக்கும்.. அவளை நல்ல ப்ரெண்டா மட்டும் நினை.. கீர்த்தியோட நட்பு உனக்கு தேவை "என்றவன் எழுந்து சென்றான்..

"அருணுக்கும் அதுவே சரி எனபட்டது.. விருப்பமில்லாத ஒரு பெண்ணை கட்டாயபடுத்தி காதலிக்க வைப்பது தவறு.. கீர்த்தி கல்யாணமானவள் இனிமேலும் அவளை மனசில் நினைப்பது பாவம்” என்று நினைத்தவன் காதல் வலித்தாலும் அதை ஏற்று கொண்டு அவளுக்கு ஒரு நண்பனாய் மாற நினைத்தான்.. (வஞ்சமில்லாத காதல் வலி எப்போதும் அழகு தான்)


அர்ஜுன் அருகில் வந்து அமர்ந்தான் கார்த்திக்.. "என்ன மச்சி இப்போலாம் அகிலன், கிருஷ் எல்லாரையும் காணோம்.. நீ மட்டும் அடிக்கடி என் பக்கத்துல வர்ற என்ன மேட்டர்?"

கார்த்திக் "இப்போவாச்சும் உனக்கு கேக்கணும்னு தோணுச்சே.. கிருஷ் வீட்ல அவன் லவ்க்கு ஓகே சொல்லிட்டாங்க காதலிக்கும் போதே அவன் செம பாஸ்ட்.. இப்போ கல்யாணத்தை தள்ளி போட்டா பாவம் பையன் என்ன பண்ணுவான்? அதான் வேலைக்கு ட்ரை பண்ணினான்.. இது லாஸ்ட் செமஸ்டர் தானே.. எப்டியோ ஹைதரபாத்ல ஒரு கம்பெனில ஜாப் கரெக்ட் பண்ணிட்டான்.. சோ அதுக்கான வேலைகளை பார்க்க போயிட்டான்.. சார் ரொம்ப பிசி.. அகிலன் வழக்கம் போல மீனா பின்னாடி சுத்திட்டு இருக்கான்.. அவன் வீட்லயும் இவங்க லவ் ஓகே தான்.. பட் இவன் தான் அது தெரியாம மீனாவை கரெக்ட் பண்றேன் .. காதல் பண்றேன்னு சுத்துறான்" என்றவன் சிரிப்புடன் அர்ஜுனை பார்த்தான்..

"நீ ஏன்டா என்னை இந்த லுக் விடுற?"

"நிஷாவுக்கு ஓகே சொல்லிட்டியா மச்சான்?”

அர்ஜுன் மனதில் சிறு சந்தோஷம்.. அது அவன் கண்களை எட்டியதை கார்த்திக்கும் கவனித்தான்..

"அவ லவ் சொன்னா.. பட் நான் தான் பதில் சொல்லாம அனுப்பினேன்.. எனக்கும் லைஃப்ல செட்டில் ஆகணும் மச்சி.. நானும் மும்பைல ஒரு கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன்.. அது கிடைக்கட்டும்.. அப்புறம் பார்க்கலாம்.." என்றவன் கார்த்திக் முறைப்பதை பார்த்து சிரித்தான்..

"ஏன்டா முறைக்கிற?"

"உனக்கு மட்டும் வேலைக்கு அப்ளை பண்ணிருக்க அப்போ நான்?"

"உனக்கும் சேர்த்து தான்டா.. ஜஸ்ட் போட்டுருக்கேன்.. கால் வந்துச்சுனா ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம் நீயும் அதுக்குள்ள காயத்ரிகிட்ட பேசு"

"எனக்கும் நான் செட்டில் ஆன அப்புறம் தான் கல்யாணம்.. காயத்ரி எங்கேயும் போயிட மாட்டா.. போன வாரமே அவ வீட்ல பேசிட்டாங்க என் அப்பா" என்றவன் கண் சிமிட்டியபடி எழுந்து சென்றான்..

"அடப்பாவி நமக்கு தெரியாம இதுங்க எல்லாம் எவ்ளோ வேலை பாக்குதுங்க" என்று நினைத்தவன் வீட்டிற்கு கிளம்பினான்..


மாலை 4 மணிக்கு கீர்த்தியை அழைத்து செல்ல ராம் வந்தான்.. வகுப்புகள் முடிந்து வெளியே வந்த கீர்த்தியும் அவனை கண்டதும் ஓடி அவனருகே வந்தாள்.. அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன் அனுவை பார்த்து சிரித்தான்.. அனுவும் "ஏய் கீர்த்தி இவ்ளோ நேரம் என்கூட தானே பேசிட்டு இருந்த? அது என்ன உன் வீட்டுகாரரை பார்த்ததும் அவர்கிட்ட போய் கட்டிபிடிச்சிகிட்டு நிக்குற? இது எல்லாம் ரொம்ப மோசம்.. அண்ணா இவ தான் உங்களுக்கு வேணுமா?" என்று கேட்க

அவளை பார்த்து சிரித்தவன் "இவளே தான் வேணும்.. இவ மட்டும் தான் வேணும்.. எவ்ளோ தான் திட்டினாலும் அக்செப்ட் பண்ணிப்பா.. என்னை அவ்ளோ டார்ச்சர் பண்ணுவா.. ஆனாலும் என் மேல அவளுக்கு நிறைய லவ்.. அவளால மட்டும் தான் என்னை சந்தோஷமா வச்சுக்க முடியும்" என்றவன் அவளை இன்னும் தன்னோடு இழுத்து அணைத்தான்..

அருண் அதை ஏக்கமாக பார்த்து பின் தனக்குள் சிரிப்பதை உணர்ந்தவன் "ஏன் அனு உன் அண்ணாவுக்கு தான் எப்பவே காலேஜ் முடிஞ்சு போச்சே.. ஏன் மறுபடியும் இங்கே வந்திருக்கான்?" என்று கேட்க அனு விரக்தியாய் சிரித்தாள்..

"அவன் முடிச்சிட்டான் அண்ணா.. இந்த வருஷம் அவன் படிக்க வரல கடந்த ஆறு மாசமா வேலைக்கு ட்ரை பண்றான் கிடைக்கல.. இங்க சீனியர் ப்ரோபசர் அவனுக்கு ஒரு ஜாப் பார்த்து சொல்றேன் சொல்லிருந்தாங்க அதுக்காக தான் அடிக்கடி வரான்.. பட் அதுவும் செட் ஆகல.. க்ளாசுக்கு எல்லாம் போக மாட்டான்.. அவர்கிட்ட பேச வரான்.. அவரும் வீட்ல பார்த்தா ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேங்குறார்.."

"இப்போலாம் எவ்ளோ வெப்சைட் இருக்கு.. அதுல ஏதாச்சும் பண்ணலாமே.. இது வேஸ்ட்னு தோணுது"

"இனி அத பண்ணுவான் அண்ணா.. இன்னைக்கு தான் எல்லாம் முடிவுக்கு வந்துருச்சே" என்று அர்த்தமாய் அவனை பார்த்தாள்..

அதில் அவளை புரிந்து கொண்டவன் "அம்மு ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுடா.. இதோ வந்துடுறேன்" என்றவன் அருணை நோக்கி சென்றான்..

ராம் அருணை நோக்கி வந்ததும் அருணுக்கு பயமாக இருந்தது.. மதியம் கீர்த்தியின் முன் பேச முடியாமல் போனதிற்கும் சேர்த்து இப்போ திட்டுவாரோ என்றிருந்தது.. அவன் அருகில் வந்த ராம் "ஹாய் அருண்.. உங்ககிட்ட அட்வைஸ் பண்ண எனக்கு பெருசா எதுவும் இல்லை.. பட் ஒரு வெல்விஷரா சொல்றேன் உனக்காக லைஃப் வாழு.. நீ எதுக்காக வேலைங்குற போல இங்க வந்தன்னு எனக்கு தெரியும்.. இனி அது உனக்கு கிடைக்காத விஷயம்.. உனக்கு கிடைக்கிற விஷயத்தை உனக்கு பிடிச்சதா மாத்திக்கோ.. ஒருமுறை தோற்ற பின் வாழ்க்கைல எதுவுமே இல்லைன்னு கிடையாது.. அதுக்கு அப்புறம் தான் வாழ்க்கையே இருக்கு. சில விஷயம் எட்டாக்கனி தான்.. அத புரிஞ்சிகிட்டு இனி இருக்குற உன் வாழ்க்கையை வாழு" என்றவன் அவன் தோள்களில் தட்டிவிட்டு கீர்த்தியை நோக்கி சென்றான்

அவன் கூறிவிட்ட வார்த்தைகளில் கொஞ்சம் தெளிந்தாலும் மனதில் ஏறிய பாரத்துடன் வெளியே சென்றான் அருண்..

கீர்த்தி ராமை முறைத்து கொண்டே இருந்தாள்.. "என்னாச்சு அம்மு? எதுக்கு என்னை அவ்வளவு பாசமா பாக்குற?"

"நீங்க ஏன் அத்தான் அந்த அருண்கிட்ட பேசுனீங்க?"

"இது என்னடி வம்பா போச்சு? அவன் என்ன கொலைகாரனா? பேசாம தள்ளி நிற்க.. அவன் எந்த தப்பும் பண்ணலையே.."

"அவன் என்கிட்ட காதல் சொல்லிருக்கான்"

"அவனுக்கு புடிச்சிருந்தது.. சொன்னான் நீயும் பதில் சொல்லியாச்சு.. அப்புறம் என்ன?"

"உங்களுக்கு கோவம் வரலையா அத்தான்?" அந்த கேள்வியிலயே தெரிந்தது உங்களுக்கு கோபம் வர வேண்டும் என்று சொல்லிருந்தாள்..

"அவனுக்கு நம் கல்யாணம் பத்தி தெரியாதே.. நம்ம காதல் பத்தி தெரியாது.. தெரிஞ்சிருந்தால் அப்பவே மனச மாத்திட்டு இருப்பான்.. இப்போ தெரிஞ்சதும் வலிச்சாலும் அமைதியா இருக்கான்.. அவன் நல்லவன் தான் அம்மு.." என்றவனை அமைதியாக பார்த்தாள்..

இவனால் மட்டும் தான் இப்படி இருக்க முடியும்.. கட்டின பொண்டாட்டியை இன்னொருத்தன் காதலிக்கிறேன் சொன்ன அப்புறமும் அவன் பக்கம் உள்ள நியாயத்தை யோசிக்குறான்.. இவன் கிடைக்க நான் நிறைய புண்ணியம் பண்ணிருக்கேன்..

"லவ் யூ அத்தான்" என்று அவன் தோள் சாய "லவ் யூ அம்மு" என அவள் நெற்றியில் இதழ் பதித்தான்..

அப்பழுகில்லாத உன் காதலில் என்னை வீழ்த்தி
என்னுள் உன் காதலை எனக்கு உணர்த்திய
என் காதலன் உன்னை
என்றென்றும் தீராத காதலுடன்
என் அன்பில் மூழ்கடித்து
நிறைவான வாழ்வு வாழ
என்னுள் உன்னை புதைத்து கொள்கிறேன்
என்றும் காதலுடன் உன்னவள்..
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 23

ஒரு மாதம் கடந்த பின் இன்று தான் கீர்த்தனாவின் கல்லூரி வாழ்க்கைக்கு கடைசி நாள்.. மேற் கொண்டு அவளை படிக்க சொன்ன பிறகும் அவள் முழு நேரமும் ராமிற்காகவே செலவிட விரும்பியதால் அவனும் அவளை படிக்க சொல்லி வற்புறுத்தவில்லை.. தேர்வுகள் முடியும் முன் பிரிவு நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுக்க விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.. இப்போதெல்லாம் கீர்த்தனா வழக்கம் போல் ராமை காதல் டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விட்டதால் அவனுக்கும் நிம்மதியே.. அவள் பார்வை வீச்சில் அவன் தன்னையே தொலைத்து விடுவான்.. திருமணமானது முதல் இருவரும் ஒரே அறையில் தான் தங்கினர்.. ராம் ஒரு சுயகட்டுபாட்டிற்கு இருவருக்கும் இடையில் தலையணை சுவர் வைத்திருப்பான்.. இப்போது கீர்த்தி அதை உடைத்துவிட்டு அவனை நெருங்கி அணைத்து தூங்குவாள்.. ராம் தான் ஒரு மாதம் எப்போது முடியுமோ என்று ஏங்க ஆரம்பித்து விட்டான்.. இதோ ஒரு மாதமும் முடிவுக்கு வந்து விட்டது.. நாளை அவர்களது திருமணம் ஊரறிய..

கல்லூரிக்கு கிளம்பிய கீர்த்தி ராமிடம் வந்தாள்.. "அத்தான் ஒண்ணே ஒண்ணு பிளீஸ்" என்று அவன் பின்னாடியே கெஞ்சி கொண்டிருந்தாள்..

"நோ அம்மு.. அப்புறம் நீ தான் கஷ்டபடணும்.. ஒழுங்கா காலேஜ் கிளம்பி போ" என்று அவளை ராம் விரட்டி கொண்டிருந்தான்..

"அத்தான்....." என்ற சிணுங்கலுடன் அவள் அவன் அருகில் வரவும் "நோ....." என்று ராம் பின்னடைந்தான்..

மீண்டும் அவள் கெஞ்சவும் அதை ரசித்தாலும் வெளியில் பொறுக்காதவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு கப் ஐஸ்கிரீம் எடுத்து அவளிடம் கொடுத்தான்..

விரைந்து சென்று அவனிடம் வாங்கியவள் அதை ருசிக்க ஆரம்பித்தாள்.. அவளுக்கு பிடித்த சாக்லேட் ப்ளேவர் அவள் உதட்டோரம் வழிந்த ஐஸ்கிரீமை சுவைக்க அவன் இதழ்கள் துடித்தாலும் தன்னை கட்டுபடுத்தி கொண்டு அவள் உதட்டை தன் கையால் துடைத்தவன் அதை ருசித்து விட்டு "சோ ஸ்வீட்" என்றான்.. அதில் அவள் வெட்கம் வந்தவளாய் தலை குனிய அவள் கன்னத்தை கிள்ளியவன் "சீக்கிரம் சாப்பிடு அம்மு.. அர்ஜுன் அல்லது அப்பா பார்த்தால் எனக்கு தான் திட்டு கிடைக்கும்" என்றான்.. அவனுக்கு தான் தெரியுமே கடந்த முறை அவள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு சளித் தொல்லையால் கஷ்டபட்டதை..

அவள் சாப்பிட்டு முடிக்கவும் அவளை காலேஜிற்கு கொண்டு வந்து விட்டு சென்றான்.. அவளும் அவனை ரசித்தவாறே உள்ளே செல்ல முற்பட அவள் முன் ஒருவன் வந்து நின்றான்.. அவள் அவன் யார் என்று நிமிர்ந்து பார்க்கும் முன்பே அவளை அவன் கத்தியால் வயிற்றில் குத்தியிருந்தான்.. கீர்த்தி "அம்மா..." என்ற அலறலுடன் மயங்கி கீழே சரிந்தாள்..

எப்போதுமே அவளின் ரசனையை ரசிக்கும் ராம் இன்றும் அவளை திரும்பி பார்க்க அவன் கண்களில் பட்ட காட்சி அவள் கத்திகுத்துப்பட்டு கீழே சரியும் காட்சி தான் கண்களில் பட்டது.. நொடியும் தாமதிக்காமல் "அம்மு" என்ற கூவலுடன் அவள் அருகில் விரைந்தான்.. அதற்குள் அவளை குத்தியவனை அங்குள்ள மாணவர்கள் பிடித்திருந்தனர்.. அவன் முகத்தை பார்த்த ராம் அதிர்ந்தான்.. அவன் சுரேஷ்.. தவறு செய்து விட்டோம் என்ற எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் எதையோ சாதித்த உணர்வுடன் சிரிப்புடன் நின்றிருந்தான்.. அவனை கொலை செய்யும் வெறி வந்தாலும் இப்போது கீர்த்தியின் நிலமையே பெரிதாக பட அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.. அவன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது..

மருத்துவமனையை அடைந்தவன் அவளை அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றதும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.. அவன் மனம் முழுவதும் கீர்த்திக்கு எதுவும் ஆக கூடாது என்ற நினைப்பே குடி கொண்டிருந்தது.. இரண்டு மணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்ததும் அவரிடம் ஓடினான்..

"டாக்டர் அம்முக்கு எப்படி இருக்கு? அவள் பிழைச்சிடுவா தானே?" கண்களில் உயிரை தேக்கியபடி கேட்டான்..

"நீங்க" என டாக்டர் கேட்கவும் "நான் அவளோட ஹஸ்பண்ட்" என்றான்..

"அவங்களுக்கு பெரிய அளவில் எதுவும் இல்லை சார்.. குத்தினவன் நேரடியா குத்தாம பக்கவாட்டுல குத்திருக்கான்.. அது அவங்களுக்கு பெருசா ஆபத்தை கொண்டு வரல்ல.. குத்தும் ஆழமா படல.. சோ அவங்களுக்கு கர்ப்பப்பையிலயும் எதுவும் பாதிப்பு வரல.. ஆபரேஷன் முடிஞ்சிருக்கு.. அவங்க கண் முழிச்சதும் போய் பாருங்க" என்றவர் தன் அறைக்கு சென்றார்..

இருக்கையில் தொப்பென அமர்ந்தான் ராம்.. பின் தந்தை அர்ஜுன் நியாபகம் வந்தவனாக அவர்களை அழைத்து விவரத்தை சொன்னவன் சுரேஷ் இனிமேல் வெளியில் வராதபடி வழக்கு பதிவு செய்து ஜெயிலில் போட வழி செய்தான்.. பின் கீர்த்தியின் அறை பக்கத்தில் அமர்ந்திருந்தான்.. அர்ஜுன் உடனே மருத்துவமனை வந்துவிட்டான்..

கீர்த்தி கண் விழித்துவிட்டதாக நர்ஸ் சொன்னதும் உள்ளே விரைந்தான் ராம்.. அங்கு வாடிய கொடிபோல் துவண்டு இருந்தாள் கீர்த்தி.. "அம்மு" என ராம் வரவும் தன் கை நீட்டி அவனை அருகில் அழைத்தாள் கீர்த்தி.. அவள் கை பற்றியவன் அவள் அருகில் அமர்ந்தான்..

"பயந்துட்டீங்களா அத்தான்"

"உயிரே போயிடிச்சுடி.. நீ இல்லாம எனக்கு என்ன வாழ்க்கை.. டாக்டர் வெளியில் வந்து உனக்கு ஆபத்து இல்லைன்னு சொன்னதும் தான் ஒழுங்கா மூச்சு விடவே முடிஞ்சது.. உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கின அந்த சுரேஷை கொல்லும் வெறி வந்திச்சு.. ஆனாலும் நீ இருந்த நிலமை பார்த்து விட்டுடேன்.. இனி அவனுக்கு மொத்தமும் ஜெயில் வாழ்க்கை தான்.. அவன் என் அம்முமேல கைவச்சதுக்கு அணுபவிக்கனும்.. இதுக்கு முன்னாடி உன்மேல ஆசிட் வீச வந்த எல்லாத்தையும் சேர்த்து அவனை உள்ளே தள்ளிட்டேன்.." என்றவன் அவள் கை பிடித்து வருடினான்..

எப்பவும் போல் அவன் காதலில் உருகியவள்.. அர்ஜுன் , மாமா எங்கே என்று கேட்க அவனுக்கு அப்போதான் அர்ஜுன் நியாபகம் வந்துச்சு.. "இங்கே தான் இருக்கான்.. அப்பா லாயரை பார்க்க போயிருக்கார்" என்றவன் அர்ஜுனை வர சொல்லி விட்டு வெளியேறினான்..


இரண்டு மாதம் கழித்து..

கீர்த்திக்கும் ராமிற்கும் இன்று திருமணம்.. மருத்துவமனையிலிருந்து வந்த உடனே அவள் திருமணத்தை பற்றி கேட்டதும் உடல்நிலை சரியான பின் என்று மறுத்து விட்டான்.. அவளும் அதுவரை அவன் காதலை அனுபவிக்கலாம் என்று சரி சொல்லி விட்டாள்.. அவளை அவன் தாயாய் இருந்து கவனிக்க சீக்கிரமே தேறிவிட்டாள் கீர்த்தி.. கல்லூரி தேர்வுகளும் அவனே கூட்டிட்டு போய் எழுத வைத்தான்.. இன்று அவர்கள் எதிர்பார்த்த திருமண நாள்..

ஊரறிய அவன் மற்றும் அவள் கல்லூரி உறவுகள் சூழ கீர்த்தியின் கழுத்தில் மங்கலநாணை மூன்று முடிச்சு போட்டு பூட்டி தன்னவளாக்கி கொண்டான் ராம்.. கேள்வி கேட்ட எல்லா உறவுகளுக்கும் அவன் ஏற்கனவே அவள் கணவன் என்றும் பதிவு திருமணத்தை பற்றியும் சொல்லி அமைதியாக்கி விட்டான்..

திருமணத்திற்கு வந்த நிஷாவின் கண்கள் அர்ஜுனை தேடின "யாரை தேடுறீங்க நிஷா?" என்ற கீர்த்தியின் கேள்விக்கு "அர்ஜுன்" என்று பதிலளித்தாள் நிஷா.. கீர்த்தி சந்தேகமாக பார்க்கவும் சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் நிஷா.. இதை பற்றி ராமிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள் கீர்த்தி..

அன்று இரவு.. கால் கொலுசு சலசலக்க அன்னப்பறவை போன்று அமைதியாக நடந்து அறைக்குள் வந்தாள் கீர்த்தி.. ஏற்கனவே தங்கிருந்த அறை தான் ஆனாலும் இன்று ஏதோ புதிதாக வெட்கம் அவளை சூழ்ந்து கொண்டது.. அவள் உள்ளே வந்ததும் அவள் பின்னால் இருந்து அணைத்து கொண்டான் ராம்..

"லவ் யூ அம்மு" எனறவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.. வெட்கத்தில் அவனை விட்டு நகர்ந்தவள் கட்டிலில் போய் அமர்ந்தாள்.. அவள் அருகில் வந்து அமர்ந்தவன் அவளை தன்னுடன் அணைத்து கொண்டான்..

"பயமாயிருக்கா அம்மு"

"இல்ல" என்றவாறு அவள் அவன் நெஞ்சில் முகம் புதைக்க அவளை தன்னுடன் அணைத்து கொண்டவன் அவளோடு சேர்ந்து கட்டிலில் சரிந்தான்.. அன்று அவன் கண்ட கனவில் தெளிவில்லாமல் தெரிந்த தேவதை இன்று அவன் கண் முன்.. அதை ரசித்தவன் மேலும் அவளோடு புதைய அவளும் அவனுக்கு வாகாக இசைந்து கொடுத்தாள். அவர்கள் வாழ்க்கைக்கான புது அத்தியாயம் அங்கே தொடங்கியது..


மூன்று வருடங்களுக்கு பிறகு

"யாழ் பேபி எங்கடா இருக்க? அம்மா பாவம்ல.. எவ்ளோ நேரம் பாப்பாவை அம்மா தேடுறது" என்று கூறியவாறே கட்டிலுக்கு அடியிலும் மேசைக்கு அடியிலும் தேடி கொண்டிருந்தாள் கீர்த்தி.. அவள் செல்ல சிட்டு யாழ் பேபியோ அவள் கண்களில் படாமல் தன் சித்தப்பாவின் அறைக்குள் சென்று அர்ஜுனின் சட்டையை தன் மேல் போட்டு மூடிக்கொண்டு கிளுக்கி சிரித்து கொண்டிருந்தாள்..

குளித்து முடித்து வெளியே வந்த அர்ஜுன் தன் அறையில் இருந்த பூங்குவியலின் அருகே சென்று அமர்ந்தான்.. அவள் மேல் இருந்த சட்டையை அகற்றியதும் அவனை பார்த்து சிரித்தவள் "ப்பா....ப்பா" என்று அவனிடம் தாவினாள்.. அவனின் தேவதை யாழிசை.. இரண்டே வயதான செல்ல சிட்டு.. அவளை தூக்கி கொண்டு வெளியே வந்தவன்

"யாரை தேடுற கீர்த்தி? யாழ் பேபி என் ரூம்ல இருந்தா" என்றவன் கீர்த்தி திரும்பும்முன் ஓடிவிட்டிருந்தான் யாழ்பேபியுடன்..

அவனுக்கு தெரியும் அவள் கண்களில் தான் பட்டால் யாழ்பேபியை மறந்துவிட்டு அவனின் திருமணத்தை பற்றி பேச்செடுப்பாள் என்று மூன்று வருடங்களுக்கு முன் அவன் மும்பைக்கு வேலைக்கு செல்கிறேன் என்று சொன்ன போது.. போகவே கூடாது என்று பிடிவாதம் பிடித்தவள் பின்னர் ராம் தலையிட்டு இது அவன் வாழ்க்கை பிரச்சனை என்று சமாதானபடுத்தி அனுப்பி வைத்தான்.. பின்னர் நிஷாவின் காதலை பற்றி ராமிடம் கீர்த்தி சொல்லிவிட்டதால் அவள் வீட்டிலும் பேசி விட்டனர்.. இதோ மூன்று வருடங்கள் முடித்து இன்னும் ஆறு மாதத்தில் அர்ஜுன் நிஷா திருமணம்.. ஆனால் இன்னும் அர்ஜுன் காதலை உணரவில்லை.. அவனுக்கு அவளை பிடிக்கும் தான்.. ஆனால் காதல்? ஒரு வேளை திருமணத்திற்கு பின் வருமோ என்னவோ..

யாழிசையை தூக்கிகொண்டு தோட்டத்திற்கு வந்தவன் அவளுடன் விளையாடி கொண்டிருந்தான்.. யாழிசை ராம்-கீர்த்தியின் அளவில்லா காதலுக்கு கிடைத்த பரிசு.. கீர்த்தியை அச்சில் வார்த்தாப்போல் இருந்தாள் யாழிசை.. எனவே ராமிற்கும் அர்ஜுனிற்கும் அவள் தான் தேவதை.. யாழிசைக்கு சாப்பாடு எடுத்து வந்து ஊட்டி கொண்டிருந்தாள் கீர்த்தி.. அர்ஜுன் பார்த்து கொண்டிருந்தான்..

"நீ எப்போ நிஷாகிட்ட உன் காதலை சொல்ல போற அர்ஜுன்"

"இது காதலான்னு நான் இன்னும் உணரவே இல்ல கீர்த்தி.. எனக்கு அவள பிடிச்சிருக்கு.. அவகூட இருந்தால் சந்தோஷமா இருப்பேன்.. நீ ராம் அண்ணா மேல காட்டுற காதல் மாதிரியே அவளும் என்கிட்ட காட்டுறா.. ஆனால் எனக்கு அவமேல காதல் வந்துச்சான்னு தெரியல.. ஆனால் கடைசி வரைக்கும் அவளை கண்கலங்காம காப்பாத்துவேன்.."

"நீ அவளை நல்லா வெச்சுக்கணும்.. அவ சந்தோசமா இருக்கணும்னு நினைக்குறதே அவ மேல உள்ள காதல் தான்.. சீக்கிரமே அத உணருவ"

"பார்க்கலாம்.." என்றவன் யாழ்பேபியை தூக்கி கொண்டு உள்ளே சென்றான்.. ராம் வந்ததும் அவனிடம் சென்றாள் கீர்த்தி..

ஆறு மாதம் கழித்து நிஷா அர்ஜுன் திருமணம் ரொம்ப விமர்சையாக நடந்தது.. அர்ஜுன் தாலி கட்டும் போது நிஷா பார்த்த பார்வையில் அவள் அவன் மேல் வைத்த எல்லையில்லா காதல் தெரிந்தது.. அதில் தெரிந்தே விழுந்தான் அர்ஜுன்.. அந்த ஆறு மாதத்தில் நிஷாவிடம் கொஞ்சம் அதிகபடியான உரிமையை காட்டினான் அர்ஜுன்.. அவளும் தன் காதலை அவனுக்கு உணர்த்த அர்ஜுனும் புரிந்து கொண்டான்.. அவளை மனசார விரும்பியே ஏற்று கொண்டான்..


கார்த்திக்-காயத்ரி தம்பதியினருக்கும் ஒரு வருடம் முன்பு திருமணம் நடந்திருந்தது.. காயத்ரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.. அவளுடன் தன் நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டான் கார்த்திக்.. ஆர்த்தி-கௌதம் தம்பதியினரும் அவர்கள் மூன்று வயது மகன் துர்வா வர்மனுடன் வந்திருந்தனர்.. துர்வா துறுதுறுவென அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருக்க ஆர்த்தி அவன் பின்னால் ஓடி கொண்டிருந்தாள்.. துர்வா ஆர்த்தியின் குறும்புதனமும் கௌதமின் சுறுசுறுப்பான குணமும் கலந்து பிறந்தவன்.. அவனுக்கும் யாழிசையை பிடித்திருந்ததால் "யாழ் பேபி" என அவள் கை பிடித்து திரிந்தான்.. ராம் எப்பவும் போல் தன் மனைவின் பின் சுற்றி கொண்டிருந்தான்..

"அம்மு நீ எதுக்கு அங்கேயும் இங்கேயும் ஓடிகிட்டு இருக்குற? ஒரு இடத்துல அமைதியா இருந்து இந்த ஜூஸை குடி" என்று அவளை பிடித்து இருக்கையில் அமர வைத்தவன் அவள் கையில் ஜூஸை கொடுத்தான்.. அதை குடித்தவள் "உங்க பையன் உங்கள மாதிரி அத்தான்.. என்னை எப்பவுமே கஷ்டபடுத்த மாட்டான்" என்றவள் தன் ஆறு மாத மேடிட்ட வயிற்றை பிடித்து கொண்டு எழுந்தாள்..

அவளுடன் தானும் எழுந்தவன் " என் பையன் உன்னை கஷ்ட படுத்த மாட்டான் தான்.. அதே போல நீயும் ரொம்ப வேலை பார்த்து உன்னை நீயே கஷ்ட படுத்திக்காத.. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்.." என்றவன் அவளை அமர வைத்து விட்டு சென்றான்..

இவர்கள் காதலை பார்த்த மற்ற ஜோடிகளும் தங்களுக்குள் புன்னகைத்து கொண்டனர்.. பின்னர் வீணா-கிருஷ், அகிலன்-மீனா ஜோடி தங்கள் செல்வங்கள் ராகுல் மற்றும் அஸ்வத்துடன் வர இடம் மீண்டும் கலகலப்பானது.. அனு அவள் காதல் கணவன் செழியன் மற்றும் ஒரு வயது குழந்தை மித்ரா உடன் வந்தாள்.. நிகிலன்-மாலதி தம்பதியினருக்கு நான்கு வயதில் கிரண் என்ற பையனும் ரெண்டு வயது அஸ்வதி என்ற மகளும் இருக்கின்றனர். அவர்களும் வந்து திருமணத்தை சிறப்பித்தனர். அருண் தன் மனைவி வித்யாவுடன் வந்திருந்தான்..ராம் அவனிடம் பேசிய பிறகு தெளிவு பெற்றவன் தன் அத்தை மகளை திருமணம் செய்து கொண்டான்.. கீர்த்திக்கு நல்ல நண்பன் அவன்.. இதையெல்லாம் மனநிறைவுடன் பார்த்து கொண்டிருந்தார் பிரகாஷ்..

இரவு தன் அறைக்கு வந்ததும் கீர்த்தியின் கால்களை எடுத்து தன் மடியின் மீது வைத்து அமுக்கி விட்டான் ராம்..

"அத்தான்.."

"சொல்லு அம்மு"

"இத்தனை வருஷம் ஆகியும் எப்படி அதே காதலோடு என்னையும் யாழ் பேபியையும் பாத்துக்குறீங்க.. சில சமயம் நான் உங்க காதலுக்கு தகுதியா இல்லைன்னு தோணுது"

ராம் அவள் பாதங்களை நீவி விட்ட படியே சொன்னான் "நீ இல்லாமல் நான் இல்லை அம்மு.. நான் உங்கிட்ட அதிகமாக காதலை வார்த்தைகளால் உணர்த்தாமல் இருந்திருக்கலாம்.. ஆனால் என்னோட ஒவ்வொரு அணுவும் உனக்கானது.. அது எப்போதும் என் காதலை உனக்கு உணர்த்தும்.. அதே போல் நீ உன் காதலை வார்த்தைகளால் நிரூபிக்க வேண்டியது இல்லை.. உன் கண்கள் என் மீதான உன் காதலை எப்பவுமே எனக்கு காட்டும்.. நம்ம காதல் சமமானது.. அதுக்கு பரிசா நமக்கு கிடைச்ச யாழ் பேபி சாட்சி.. இனி வரப்போற ஜூனியர் ராம் கூட நம் காதலுக்கான பரிசு.. சோ எதை பத்தியும் நினைக்காம எப்படி என் பையனை சமாளிக்குறதுன்னு யோசி.."

கீர்த்தியின் கண்கள் கலங்கியிருந்தன.. "லவ் யூ சோ மச் அத்தான்.. இந்த உலகத்தில் நான் ரொம்ப கொடுத்து வச்சவ.. உங்க காதல், அர்ஜுன் நட்பு, மாமாவோட பாசம் எல்லாம் கிடைக்க நான் ரொம்ப லக்கி.. இன்னும் நிறைய வருஷம் உங்க கூட வாழணும்.. உங்க காதலை நிறைய அனுபவிக்கனும்.." என்றவள் அவன் மடியில் தலை வைத்து படுத்தாள்..

அவள் தலையை கோதி விட்டவன் நினைவில் அவள் டைரி வந்தது.. அனு அதை பற்றி ராமிடம் கூறியிருந்தாள். அதை கீர்த்தியின் அறையில் இருந்து எடுத்தவன் அதை படிக்க படிக்க அவன் கண்கள் கலங்கியது. அவள் அவனை சந்தித்தது, காதலை உணர்ந்தது என அனைத்தும் எழுதியிருந்தாள். மாலதி மீதான பொறாமை உணர்வு கூட இவனுக்கானது என உணரும் போது ராம் வானில் பறந்தான். அதில் அவள் கூறியிருந்த வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு அவன் மீதான காதலையே வெளிப்படுத்தியது..

அதை நினைத்து பார்த்தவன் "லவ் யு டூ அம்மு" என்றவன் குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.. என்றும் போல் இன்றும் இருக்கும் அவன் மாறாத காதலை எண்ணி மகிழ்ந்தவாறே அவனை அணைத்து கொண்டாள் கீர்த்தி...

முற்றும்..
...............................

உன்னோடு வாழும் காலங்கள் எல்லாம் நிஜமான பொக்கிஷம்.. நீ என் கனவாக கூட இருக்கலாம் ஆனால் என் காதல் கனவாக போய் விடாது. நீயே போதும் என்று கூறி திகட்டும் அளவுக்கு என் காதலை திகட்டாத கனியாய் உனக்கு பரிசளிப்பேன். சில நேரம் கோபம் வரலாம். சில நேரம் ஊடல் வரலாம். கோபமும் ஊடலும் இல்லாத காதல் ஏது? ஆனால் அதையும் தாண்டி என் காதல் நம் காதல் அதை சரி செய்யும். உனக்கு நல்ல மனைவி மட்டுமல்ல. நல்ல காதலும் நல்ல தோழி ஏன் உனக்கு தாயுமானவளாக கூட இருப்பேன். தாயும் தாரமும் வேறில்லையே. அதிக காதல் சிறிய சீண்டல் அதிலும் உன் மனம் காயபடாதவாறு எப்போதும் உனக்கு துணையாக நானிருப்பேன். எத்தனை உறவுகள் நமக்கிடையே வந்தாலும் காதல் எனும் உறவு நமக்குள் இருக்கும் வரை பிரிவென்பதே நமக்கில்லை..
காதலுடன்
கீர்த்தனா ராம்
 
Status
Not open for further replies.
Top