All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na உயிரே Nuvve!!!’ - இரண்டாம் பாகம் கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
"அதான் அவள் எல்லாம் சொல்லித்தானே உன்னை அனுப்பி விட்டு இருக்கிறாள். பிறகு எதுக்குக் கேள்வி கேட்கிற?" ராணியம்மா முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டார்.


"உதய் நீ சொல்லு..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆளுமையுடன் தம்பியை கண்டு கேட்டான். அவன் ராணியம்மாவை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.


"அண்ணா..." என்றபடி அவன் முன் வந்த உதய்பிரகாஷ் பணிவுடன் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான். தனது கணவன் சிம்மஹாத்ரி சத்யநாராயணா முன் பவ்யமாய் நிற்பதை கண்டு ஜெகதீஸ்வரிக்கு வெறுப்பாய் இருந்தது. அதேசமயம் சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆளுமை கண்டு தங்கை மீது பொறாமை வந்தது.


"எல்லாத்துக்கும் சக்தி பதில் சொல்லிட்டாள்ன்னு நினைக்கிறேன். ஆனால் அவள் சொல்லாதது சிலது இருக்கு. அதை நான் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்." என்றவன் ஜெகதீஸ்வரியை சொடக்கு போட்டு அருகில் அழைத்தான்.


"அவள் உன் தம்பி பொண்டாட்டி. இப்படித்தான் சொடக்கு போட்டு கூப்பிடுவியா?" ராணியம்மா சத்தம் போட்டார்.


அவரது வார்த்தைக்கு மரியாதை இல்லாதது போல் ஜெகதீஸ்வரி அடுத்த நொடி அவன் முன் வந்து நின்றாள். கணவனே அவனைக் கண்டு பயப்படும் போது அவள் எல்லாம் எம்மாத்திரம்...


"நீ சக்தியை வந்து அழைக்கலை. அவள் பவிசை காட்டத்தான் இங்கே வந்தாள். அப்படித்தானே?" அவன் அழுத்தி கேட்க...


"அப்படி இல்லை..." அவளுக்கு வார்த்தைகள் தந்தி அடித்தது.


"பின்னே எப்படி? நீ பொய் சொல்லலாம். ஆனால் அங்கே மாட்டியிருக்கும் சிசிடிவி உண்மையைச் சொல்லும். அதைக் காட்டவா?" அவன் தனது அலைப்பேசியை எடுக்கப் போக...


"வேண்டாம்... நான் தான் ஆதியை கூப்பிட்டேன்." ஜெகதீஸ்வரி அவசரமாக மறுத்து கூற...


"எதுக்கு? அவளைக் கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தவா?" அவன் சரியாகக் கேட்டதும் எல்லோரும் திடுக்கிட...


"அரண்மனை சுவருக்குக் கூடக் காது உண்டு... இந்தச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கும் எல்லாம் பக்கமும் ஆள் உண்டு. நீங்க போட்ட பிளான் எல்லாம் எனக்குத் தெரியும். இப்படிப் பிளான் போட்டு ஒரு பொண்ணை அவமானப்படுத்த உங்களுக்கு எல்லாம் அசிங்கமா இல்லை." அவன் அனைவரையும் சாட...


"அவள் என்ன ஒழுங்கா? அவள் முறையா இங்கு வந்திருந்தால் நாங்க எதுக்குக் கேள்வி கேட்க போகிறோம்?" ராணியம்மா அருவருப்புடன் முகத்தைச் சுளிக்க...


"அவளைப் பேசும் முன் ஒரு விசயத்தை நீங்க எல்லாம் நல்லா யோசிச்சிட்டு பேசுங்க. உங்களில் யாருக்காவது தைரியம் இருந்தால்... முதலில் என்னைப் பேசிட்டு என்னைத் தாண்டி, அதுவும் தைரியம் இருந்தால் சக்தியை பேசுங்க." அவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்ல... ஆதிசக்தீஸ்வரி கண்கள் பனிக்க அவனைப் பார்த்தாள். இதோ அவள் எதிர்பார்த்த நம்பிக்கை... இது தானே அவள் அவனிடம் எதிர்பார்த்தது. அவள் அவனது கையைப் பற்றித் தோளில் சாய்ந்து கொள்ள... அவனது கரம் தானாக அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டது.


"அவள் கேவலம்ன்னா... நானும் கேவலம் தான். ஏன்னா நானும் இந்த வாழ்க்கை தான் வாழ்றேன். என்னைப் பேசும் தைரியம் உள்ளவங்க தாராளமா அவளைப் பேசலாம்." அவனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கு இருக்கிறது. எல்லோரும் வியப்புடன் அமைதி காத்தனர். அவன் அவளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்திலேயே தெரிந்து போனது, அவர்களது உறவுக்கான அர்த்தம்... ஆதிசக்தீஸ்வரி அவனைப் பெயர் சொல்லி வா, போ என்று பேசியதன் அர்த்தமும் இப்போது எல்லோருக்கும் புரிந்தது.


"ராயல் என்பது குடும்பத்தில் இல்லை. அது பிறப்பில் இருக்கிறது. அப்படிப் பார்த்தால் சக்தி ராயல் தான். எனக்கு மட்டுமே லாயலாக இருப்பவள்." அவன் சொன்னது கேட்டு ரச்சிதா, ஜெகதீஸ்வரி இருவரது முகமும் கருத்துப் போனது.


சிம்மஹாத்ரி சத்யநாராயணா கடைசியாகத் தங்கை அருகில் வந்தான். இப்போதும் அவன் கையணைவில் ஆதிசக்தீஸ்வரி இருந்தாள்.


"நீ இப்படிப் பேசுவன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை செல்லி." என்று அவன் வருத்தத்துடன் சொன்னான்.


"அண்ணய்யா..." அண்ணனின் வருத்தம் கண்டு பூஜிதா திகைத்தாள்.


"சக்தியை பேசினால் அதை என்னைப் பேசியது போலன்னு உனக்குத் தெரியலையா?" அவனது கேள்வியிலேயே அவளும், அவனும் ஒன்று என்பதைச் சொல்லாது சொன்னான்.


"நீ உன் அண்ணனையும் சேர்த்து அசிங்கப்படுத்தி இருக்கச் செல்லி." இதைத் தானே சற்று முன்பு ஆதிசக்தீஸ்வரியும் சொன்னது. அதையே அவனும் சொன்னது கண்டு பூஜிதா அதிர்ந்து போய் நின்றாள்.


"நீ பேசியதுக்கு வருந்தும் காலம் வரும். அப்போ நீயே வந்து மன்னிப்பு கேட்ப. ஆனா அப்போ இந்த அண்ணனோட பாசம் இப்படியே இருக்குமான்னு எனக்குத் தெரியலை." அவன் சொல்லும் போதே அவனது கண்கள் கலங்கியது.


"அண்ணய்யா, ஐயம் சாரி." பூஜிதா கண்ணீரோடு மன்னிப்பு கேட்டாள்.


"அண்ணனோட கடமையை சரியா செய்வேன்." என்றவனைக் கண்டு பூஜிதா கலங்கி போய் நின்றாள். ரச்சிதாவுடன் இணைந்ததற்கு அவளுக்குச் சரியான பரிசு கிடைத்து விட்டது.


"இங்கே யார் அந்தப்புரம் பற்றிப் பேசியது?" அடுத்து சிம்மஹாத்ரி தனது குரலினை உயர்த்திட... ஆதிசக்தீஸ்வரியை கண்டு அப்படிச் சொன்னவர் பதுங்கிட நினைக்க... அவரது மனைவியே,


"இவர் தான் சத்யா..." என்று காட்டி கொடுத்திட...


"சக்தி இருப்பது அந்தப்புரமா? இல்லை நீங்க இருக்கும் இந்த இடம் அந்தப்புரமா?" என்று அவன் கேள்வி கேட்க... ஆதிசக்தீஸ்வரி வியப்புடன் அவனைப் பார்த்தாள். ராணியம்மா அவனது கேள்வியில் தலைகுனிந்தார். அவரது நினைவில் கணவரது அந்தப்புர லீலைகள் எழுந்து கோபத்தைக் கிளறியது.


"நானும், சக்தியும் இருப்பது என் தாத்தாவும், பாட்டியும் காதலுடன் மனமொத்து வாழ்ந்த இடம். அது அவர்களது தாஜ்மகால். இது உங்க எல்லோருக்கும் தெரியும். இது ஒன்று போதும், அவளின் நிலையை உணர்த்துவதற்கு... வேற சந்தேகம் எதுவும் இருக்கிறதா?" அவன் கேட்க... எல்லோரும் அமைதி காத்தனர். அவன் சொன்ன விசயம் ஆதிசக்தீஸ்வரிக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது. அவளும் அதை அந்தப்புரமாக எண்ணித்தானே உள்ளம் குமைந்தது. இப்போது அவளுக்கு எல்லாமே தெளிவாகப் புரிந்தது. அவன் ஆதிசக்தீஸ்வரி அழைத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க...


விஷ்ணு ஓடி வந்து அவனது கால்களைக் கட்டி கொண்டான். சிம்மஹாத்ரி சத்யநாராயணா கீழே குனிந்து சின்னவனைப் பார்க்க... அவனோ, "தூக்குங்க மாமா..." என்றபடி தனது இரு கரங்களையும் விரித்தான். சின்னவன் ஏமாந்து விடக் கூடாதே என்றெண்ணி ஆதிசக்தீஸ்வரி அவனைத் தூக்க போக... சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவளை விலக்கி விட்டு தானே சின்னவனைத் தூக்கினான். விஷ்ணு அவனது கன்னத்தில் முத்தமிட்டான்.


"எதுக்கு இந்த முத்தம்?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா புன்னகையுடன் கேட்டான்.


"அத்தையை இவங்க எல்லாம் அழ வச்சாங்க. நீங்க வந்து எல்லோரையும் திட்டிட்டீங்க. அதுக்குத் தான்." சின்னவன் புன்னகையுடன் தலைசரித்துச் சொல்ல...


"இப்போ சொல்லு... நான் குட் பாயா? பேட் பாயா?" அன்று விஷ்ணு சொன்னதை வைத்து இன்று அவன் கேட்டான்.


"இப்போ நீங்க குட் மாமா..." என்ற சின்னவன் அவனது கழுத்தை கட்டி கொண்டவன், "அன்னைக்கு அத்தையை அழ வச்சப்போ நீங்க பேட் பாய்." என்க...


"உன் கிளாசில் நீ குட் பாயா? பேட் பாயா?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா சின்னவனிடம் கேட்டான்.


"குட் பாய்..." விஷ்ணு யோசித்துவிட்டுப் பதில் சொல்ல...


"குட்... நீ குட் பாய் தான். உன் கூட இருக்கிற பேட் பாய் உன்னை அடிச்சா நீ என்ன பண்ணுவ?"


"ம், நானும் பதிலுக்கு அடிப்பேன். எனக்கும் வலிக்கும்ல." என்ற விஷ்ணுவை கண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா புன்னகைத்தான்.


"அப்போ எனக்கு மட்டும் வலிக்காதா விஷ்ணு?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா கேட்கவும்... ஆதிசக்தீஸ்வரிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.


"உங்களை யார் அடிச்சது?" விஷ்ணு கவலையாய் கேட்டான். பிறந்ததிலிருந்து அவனது அன்பை கண்டு வளர்ந்தவனாயிற்றே! மாமாவின் வலி கண்டு அவனுக்கும் வலித்ததோ!


"வேறு யார்? உன் பாட்டி, உன் அத்தை..." என்றவனின் பார்வை காயத்ரி புறம் திரும்பியது. "உன் அம்மா கூட..." என்று சொல்ல... காயத்ரி குற்றவுணர்வு தாங்காது தலைகுனிந்தாள். ஆதிசக்தீஸ்வரிக்கும், ஜெய்பிரகாஷிற்கும் நடக்கவிருந்த திருமணத்தைப் பற்றி அவள் அவனிடம் சொல்லாது மறைத்து விட்டாளே! அவனுக்கு அவளும் துரோகியன்றோ!


"இப்போ சொல்லு... அவங்களைத் திருப்பி அடிக்கணுமா? வேண்டாமா? என்னோட வலியை அவங்களும் உணரணும் இல்லையா?"


"ம்..." சிறுவன் யோசித்தான்.


"நீயே சொல்லு... மன்னிச்சு விட்டுரலாமா? இல்லை பதிலுக்குப் பதில் அடி கொடுக்கலாமா?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா மீண்டும் சின்னவனிடம் கேட்க...


"அடி கொடுக்கலாம் தப்பில்லை." சின்னவன் சொன்னதும் அவனது முகம் மலர்ந்து போனது.


"அம்மா, அத்தை பாவம்... வலிக்காம அடிங்க." விஷ்ணு சொல்லவும் இராஜராஜேஸ்வரிக்கு உடம்பு எல்லாம் பற்றி எரிந்தது.


'வாண்டு கண்ணுக்கு கூட நான் தெரியலை. அம்மாவும், அத்தையும் பாவமாம். அப்போ நான் யாருடா உனக்கு?' அவர் பேரனை கண்டு முறைத்து பார்த்தார்.


"அடிக்கிறதுன்னு முடிவாகிருச்சு... அப்புறம் வலியில் என்ன சின்னது, பெரிது? வலின்னா எல்லாமே வலி தான்." என்றவன், "இப்போ சொல்லு, மாமா குட் ஆர் பேட்?" என்று கேட்க...


"நீங்க குட் தான்." என்ற விஷ்ணு மீண்டும் அவனது கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான். காயத்ரி கண்கள் கலங்க இருவரையும் பார்த்திருந்தாள்.


"நீயாவது என்னைப் புரிந்து கொண்டாயே!" என்று சிம்மஹாத்ரி சத்யநாராயணா முணுமுணுத்தது வேறு யாருக்கும் கேட்கவில்லை. ஆனால் அருகில் நின்றிருந்த ஆதிசக்தீஸ்வரிக்கு கேட்டது. அவளது விழிகள் தன்னவனைக் கண்டு கலங்கியது.


சிம்மஹாத்ரி சத்யநாராயணா விழாவுக்கு என்று வைக்கப்பட்டு இருந்த சாக்லேட்டை எடுத்துச் சின்னவனிடம் நீட்டினான். அவனும் அதை வாங்கிக் கொண்டு நன்றி சொன்னான்.


"இனி உன் அத்தையை அழ விட மாட்டேன். பிராமிஸ்..." என்று சிம்மஹாத்ரி சத்யநாராயணா சொல்லவும்... சின்னவன் இறங்கி அன்னையிடம் ஓடி விட்டான்.


"இனி யாரும் சக்தியை கை நீட்டி பேசும் வேலையை வச்சுக்காதீங்க. அதன் விளைவுகள் வேறு மாதிரியாய் இருக்கும்." என்று எல்லோரையும் எச்சரித்து விட்டு ஆதிசக்தீஸ்வரியை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.


வீட்டிற்கு வந்து தங்களது அறைக்குள் வந்ததும் ஆதிசக்தீஸ்வரி அவனைக் காற்று கூடப் புகாதபடி இறுக அணைத்து கொண்டாள். அவனும் அவளது அணைப்பை விலக்காது அமைதியாக இருந்தான்.


"என் மேல் எந்தத் தப்பும் இல்லையே சத்யா?"


"இல்லை... தவறில் ஆண் என்ன? பெண் என்ன? இருவரது தவறும் சரி சமம் தான். நீ தவறுன்னா, நானும் தவறு தான்..." என்றவனைக் கண்டு உள்ளார்ந்த புன்னகையுடன் பார்த்தவள்,


"அப்போ நான் சரின்னா..."


"நானும் சரி தான்." என்று சம்மதுவம் பேசியவனைக் கண்டு காதல் பெருக்கெடுக்காது இருக்குமா!


"எஸ், நீ சரி தான் சத்யா." என்றவள் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு அவனது நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள். அவனது கரங்களும் பதிலுக்கு அவளை அரவணைத்துக் கொண்டது.


"சத்யா..." அவள் மெல்ல அவனை அழைக்க...


"என்ன?" என்று கேட்டவனின் விழிகளில் சிறு எதிர்பார்ப்பு...


"பசிக்குது சத்யா..." அவள் பாவமாகச் சொல்ல... அதைக் கேட்டு அவனது இதழ்களில் சிறு புன்னகை தோன்றியது. அவன் அதை அவளுக்குக் காட்டாது மறைத்தான்.


"சரி, சாப்பிட போகலாம்."


"எனக்கு... எனக்கு..." என்று அவள் இழுக்க...


"என்ன வேணும்?"


"நீ சுட்டு தரும் நெய் மசாலா தோசை வேணும். நீ தான் ஸ்பெசலா சுட்டு தருவ."


"சரி, வெயிட் பண்ணு..." என்றவன் இன்டர்காமை எடுக்கப் போக...


"ஆனா இங்கே எப்படி?"


"உனக்கு வேண்டியது கிடைக்கும்." என்றவன் இன்டர்காமில் தெலுங்கில் ஏதோ சொல்லிவிட்டு அவள் கேள்வி கேட்கும் முன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


குளித்து முடித்து வந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரியை அழைத்துக் கொண்டு சமையலறைக்கு வந்த போது அங்கு வேலைக்காரர்கள் யாரும் இல்லை. அவன் சொன்ன பொருட்கள் மட்டும் தயார் நிலையில் இருந்தது. அவன் அவளுக்காக மசால் வைத்து, தோசையை முறுகலாய் கல்லில் ஊற்றிட... அவள் சமையல் மேடையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனது கவனம் சமையலில் இருக்க... அவளது கவனமோ அவனில் இருந்தது. தனக்காகப் பார்த்து பார்த்து செய்யும் அவனைக் கண்டு காதல் அதிகரிக்காது இருந்தால் தான் ஆச்சிரியம்...


"ம், சாப்பிடு..." என்றவன் சுட சுட நெய் மசால் தோசையை அவள் முன் நீட்டிட...


அதை வாங்கியவள் தான் உண்ணாது அவனுக்கு ஊட்ட... அவனும் அவளையே பார்த்தபடி உணவினை வாங்கிக் கொண்டான்.


"இங்கே வாயேன் சத்யா..." அவள் அவனை அழைக்க... அவன் ஏனென்று புரியாத போதும் அவள் அருகில் வந்தான். அவள் இடக்கையால் அவனை அணைத்து அவனது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டாள். தன்னை மகாராணியாய் உணர செய்தவனைக் கண்டு அவளது காதல் பெருக்கெடுத்தது.


"ஐ லவ் யூ சத்யா." இதழொற்றலில் கிடைக்காத ஏதோ ஒன்று இந்த நெற்றி முத்தத்தில் கிடைத்தது. அவன் இமைக்க மறந்து அவளைப் பார்த்திருந்தான்.


சமையலறைக்கு வெளியில் நின்றிருந்த வேலைக்காரர்களின் விழிகளுக்கு இந்தக் காட்சி தப்பவில்லை. முதலில் ஆதிசக்தீஸ்வரி மீது அவர்களுக்குமே பெரிதாக மதிப்பு இருந்தது இல்லை. ஆனால் இப்போது இந்தக் கணம் அவளுக்காகச் சேவகனாக மாறிய தங்களது இளவரசனை கண்டு அவர்களுக்கு எல்லாமே புரிந்து போனது. இருவருக்கும் இடையிலான உறவும் என்னவென்று தெரிந்து போனது. தங்களது இளவரசனுக்குப் பிடித்த பெண்ணை அவர்களுக்கும் மிகவும் பிடித்துப் போனது. அவர்களுக்கு ஆதிசக்தீஸ்வரி மீதான மரியாதையும் அதிகரித்தது.


"பெண்ணவளின் மதிப்பு ஆணின் செயலில்,

பெண்ணவளின் மரியாதை ஆணின் நடத்தையில்,

பெண்ணவளின் காதல் ஆணின் பார்வையில்,

ஆணவன் சரியாக இருந்தால், பெண்ணவள்

எங்கும் தலைகுனிய வேண்டியதில்லை!"


நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 33

ராணியம்மா தன் முன் நின்றிருந்த அண்ணன் மகளை முறைத்துக் கொண்டிருந்தார். இப்போது ரச்சிதா அத்தையின் பார்வையைத் தைரியமாக எதிர் கொண்டாள். அதைக் கண்டு ராணியம்மாவின் கோபம் இன்னமும் அதிகரித்தது.

"இது எப்போ நடந்தது?" அவர் கோபமாக ரச்சிதாவிடம் கேட்க...

"எது அத்தை? கேட்கிறதை தெளிவா கேளுங்க." அவள் எரிச்சலில் முகத்தைச் சுளித்தாள்.

"நீ சத்யாவை விரும்பியது." ராணியம்மா ரச்சிதாவை உறுத்து விழித்தார்.

"சத்யாவும் தான் என்னை விரும்பினான்." அவள் அசால்ட்டாகத் தோள்களைக் குலுக்கினாள்.

"என்னை ஏமாத்திட்டீங்க... அண்ணாவும், நீயும் சேர்ந்து என்னை நல்லா ஏமாத்திட்டீங்க. இப்பவே நான் அண்ணா கிட்ட போய் நியாயம் கேட்கிறேன்." என்றவர் உடனே அண்ணனுக்கு அழைத்தார். ரச்சிதா அதைக் கண்டு அலட்டி கொள்ளாது நின்றிருந்தாள்.

மறுமுனையில் வேங்கடபதி தேவா அழைப்பை எடுத்ததும் ராணியம்மா கோபத்தில் திட்டி தீர்த்து விட்டார். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த வேங்கடபதி தேவா,

"உன் மாமனாரும், நானும் சேர்ந்து எடுத்த முடிவு அது ராணி." என்று அமைதியாகச் சொல்ல...

"எல்லாம் அந்தக் கிழவன் வேலை தானா? நீங்க கூட என் கிட்டயிருந்து இதை மறைச்சிட்டீங்கல்ல." ராணியம்மா ஆதங்கத்துடன் அண்ணனிடம் கேட்டார்.

"அப்படி இல்லை ராணி... மாமா இதை யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டார்."

"ஏனாம்? எதற்காம்?" ராணியம்மாவுக்குக் கோபம் வந்தது.

"நீ ஜெய்யை வச்சுச் சண்டை போடுவ... ஜெய்க்கு ரச்சிதாவை கல்யாணம் பண்ணி வையின்னு சண்டை போடுவ. அதான் சொல்லலை." வேங்கடபதி தேவா சொல்லவும்,

"ஜெய்க்கு உரிமை இல்லையா? அவனுக்குப் பெண் கொடுப்பதில் என்ன தவறு இருக்கு?" என்ற ராணியம்மாவிடம் உண்மையைக் கூற இயலாது தவித்தார் வேங்கடபதி தேவா.

"வேங்கடபதி, இது என்னோட ஆசை. உன் மகள் ரச்சிதாவை சிம்மாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு..." அன்று தாத்தா ஆதித்ய சத்யநாராயணா சொன்ன போது வேங்கடபதி தேவாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

"ராணிக்கு தெரிந்தால் வருத்தப்படுவாள். ஜெய்க்கும் ரச்சி முறைப்பெண்." அப்படியிருந்தும் வேங்கடபதி தேவா இழுக்கத் தான் செய்தார். அவருக்குத் தங்கை பாசம் இருக்கத்தான் செய்தது.

"உனக்கே தெரியும், உன் தங்கை பிள்ளைகளை விடத் தொழிலை திறம்பட நடத்துவது சிம்மா தான். அவனை நம்பி தான் இங்கே எல்லாம் இருக்கிறது. அப்படிப்பட்டவனுக்கு இந்தக் குடும்பத்தோடு பிணைப்பை ஏற்படுத்துவதற்கு இது தான் சரியான வழி. உன் மகள் என்றால் அத்தை குடும்பத்து ஆட்களையும் அனுசரித்து நடந்து கொள்வாள். அவள் எப்போதும் அவர்களை விட்டு கொடுக்க மாட்டாள். இந்தக் குடும்பம் ஒற்றுமை குலையாது இருக்க வேண்டும் என்றால்... இது தான் ஒரே வழி." என்ற ஆதித்ய சத்யநாராயணாவை கண்டு வேங்கடபதி தேவாவும் தனது சம்மதத்தைச் சொன்னார்.

"இது இப்போதைக்கு நமக்குள் இருக்கட்டும். ராணிக்கு தெரிய வேண்டாம்." என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதை எல்லாம் எப்படித் தங்கையிடம் சொல்ல முடியும்? அதனால் வேங்கடபதி தேவா மென்று முழுங்கினார்.

"அண்ணா..." ராணியம்மா குரலை உயர்த்த...

"பழசை விடு ராணி. இப்போது நடக்கும் கதையைப் பார். உன்னிடம் பேசி தான் திருமணத்துக்கு நாள் குறித்தது. இனி இதை மாற்றிப் பேசினால் உன் அண்ணனோட இன்னொரு முகத்தை நீ காண வேண்டி வரும்." வேங்கடபதி தேவா தங்கையைக் கண்டு மிரட்டும் தொனியில் கூற...

"அதுக்காகத் தான் நானும் அமைதியா இருக்கேன். இல்லைன்னா நடக்கிறதே வேற..." இருந்தாலும் ராணியம்மா தன்னை விட்டு கொடுக்காது கெத்தாகக் காட்டி கொண்டார்.

"நான் இந்தத் திருமணத்தைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை ராணி. நீ தான் சொன்ன... ஜெய் ரச்சியை விரும்பறதா... அதுக்காகத் தான் சம்மதித்தது." வேங்கடபதி தேவாவும் தனது நிலையை அழுத்தி சொன்னார்.

"ரச்சியும் தான் ஜெய்யை விரும்புகிறதா சொன்னாள்." ராணியம்மா ரச்சிதாவை முறைத்துக் கொண்டு சொன்னார்.

"இப்போதும் நீ சொல்வதை நான் நம்பவில்லை. ரச்சியின் விருப்பம் சத்யா மட்டும் தான். எனக்கு நல்லா தெரியும். ஆனால் அது முடிந்து போன கதை. அவனுக்காக என் மகள் கல்யாணம் பண்ணாம அப்படியே இருக்க முடியாது. அதனால் தான் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கிட்டேன்." அவரும் சலிக்காது பதில் கொடுத்தார்.

இதற்கு மேல் பேசினால் அண்ணன் இந்தத் திருமணத்தை நிறுத்தி விடுவார் என்று உணர்ந்த ராணியம்மா, "நானும் அப்படித்தான்... ஜெய்க்காகத் தான் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கிட்டேன்." என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.

ராணியம்மா திரும்பி பார்க்கும் முன் ரச்சிதா அங்கிருந்து சென்று விட்டாள். ராணியம்மா மனதிற்குள் அண்ணன் மகளை வசைபாடி கொண்டிருந்தார்.

வேங்கடபதி தேவாவோ சிம்மஹாத்ரி சத்யநாராயணா தன்னிடம் பேசியதை பற்றி எண்ணி கொண்டிருந்தார். அவர் அவன் மீது கோபமாகத் தான் இருந்தார். ஆனாலும் அவன் அழைத்ததும் அவரால் அழைப்பை எடுக்காது இருக்க முடியவில்லை. அழைப்பை எடுத்தவரால் இயல்பாகப் பேசத்தான் முடியாது போனது.

"மாமாகாரு..." என்றழைத்த சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் ஒற்றை அழைப்பில் அவனது அன்பு அப்படியே தெரிந்தது. அன்றும், இன்றும், என்றும் அவனது அன்பு மாறவில்லை. அவனது குரலில் அவரது மனம் நெகிழ தொடங்கியது. சிறு பிணக்கு அன்பினை தடை செய்யுமோ!

"நான் நேரே விசயத்துக்கு வர்றேன் மாமாகாரு. நான் சக்தியோடு நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனால் உங்க மகள் ரச்சிதா என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு என் நிம்மதியை கெடுக்கிறாள். எனக்கும், அவளுக்குமான உறவு எப்போதோ முடிந்து போயிற்று. என்னுடைய உறவு, பந்தம் எல்லாம் இப்போது சக்தியோடு மட்டும் தான். இனியாவது நான் நிம்மதியா வாழணும்ன்னா நீங்க ஜெய், ரச்சிதா திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும்." அவன் உறுதியான குரலில் எடுத்துரைத்தான்.

"ஜெய்யா?" அவருக்குத் திகைப்பாக இருந்தது.

"ஆம், ஜெய் தான். நான் எல்லாவற்றையும் இழந்த போது ரச்சிதா ஜெய்யை காதலிப்பதாகக் கூறித்தான் என்னிடம் இருந்து விலகினாள்."

"முட்டாள் பெண்..." அவருக்கு மகளை நினைத்துக் கோபம் வந்தது.

"இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான் மாமா. அதனால் தான் எனக்குச் சக்தி கிடைத்து இருக்கிறாள். உண்மையான காதல் எனக்குக் கிடைத்து இருக்கிறது." என்றவனது வார்த்தைகளில் தான் எத்தனை நேசம்! அதை அவரும் உணர்ந்தார்.

"உன் சந்தோசத்திற்காக இதைச் செய்கிறேன்." என்றவர் அழைப்பை துண்டித்து விட்டார்.

வேங்கடபதி தேவா மகளின் திருமணத்தைப் பற்றித் தங்கையிடம் பேச எண்ணியிருந்த போது தான் ராணியம்மாவே அண்ணனுக்கு அழைத்துத் திருமணத்தைப் பற்றிப் பேசினார். இருவரும் முடிவு பண்ணி திருமணத் தேதியை உறுதி செய்தனர்.

இதை எல்லாம் நினைத்து பார்த்த வேங்கடபதி தேவா மகளை நினைத்து கசந்து போனார்.

ரச்சிதா தனது அறைக்குச் செல்ல வேண்டி வரவேற்பறையைத் தாண்டி போக எத்தனிக்க... ஜெய்பிரகாஷின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

"ரச்சி நில்லு..." அவன் அதிகாரமாக அவளை அழைக்க...

"என்ன?" அவள் அதைவிட அதிகாரமாய் அவனைக் கண்டு கேட்டாள்.

"இப்போ இந்தக் கல்யாணம் தேவை தானா?" அவன் பட்டென்று எடுத்தெறிந்து கேட்டதில் அவளது பெண் மனம் சற்று உடைந்து தான் போனது. நல்லவளோ, கெட்டவளோ பெண்ணவளுக்கும் ஒரு மனமுண்டு அல்லவா!

"எனக்குத் தேவை இல்லை... என் அப்பாவும், உன் அம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவு இது..." அவளும் அவனைப் போன்றே எடுத்தெறிந்து பதில் கூற... இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்திருந்தனர்.

அன்று சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை விட்டுத் தன்னிடம் வந்த ரச்சிதாவை கண்டு கர்வம் கொண்ட ஜெய்பிரகாஷ் மனது இப்போது எரிச்சலில் இருந்தது. அன்றிருந்த ஆர்வம் இன்றில்லை. அன்றிருந்த காதல் இன்றில்லை. அன்றிருந்த எதுவுமே இன்றில்லை. அது தான் உண்மை. அவன் செய்த ஒரே தவறு ரச்சிதாவை விரும்பியது. விரும்பியது என்பதை விட அவளைச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் இருந்து தட்டி பறிக்க முயன்றது. 'அவள் என்னுடைய மாமா பெண், எனக்குத் தான் உரிமை' என்று உரிமையை நிலை நாட்டிட எண்ணி அவன் அவளைத் தன்வசப்படுத்தியது. இன்று அது தான் அவனுக்குப் பெருத்த தலைவலியாக மாறிப் போனது. ஏனெனில் ரச்சிதா அவனின் எண்ணத்திற்கு ஏற்ற பெண் இல்லை என்று இப்போது தான் அவனுக்கே புரிகின்றது.

"உனக்கும், எனக்கும் ஒரு நொடி கூட ஒத்து போகாது. இதில் காலம் முழுவதும் ஒன்றாக... ப்ச், என்னால் யோசித்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பேசாம இந்தக் கல்யாணத்தை நிறுத்திரலாம்." அவனுக்கு இந்த முடிவே சரியென்று தோன்றியது. அவனது பேச்சில் அவளது தன்மானம் அடிப்பட்டது.

"வேணும்ன்னா நீயே நிறுத்திக்கோ. என்னால் முடியாது." என்று அலட்சியமாகச் சொன்னவளின் மனதில் அவனைத் திருமணம் செய்து கொண்டு பழிவாங்கினால் என்னவென்று விபரீத எண்ணம் தோன்றியது.

"என்னாலும் முடியாது. ரெண்டு பேரும் சேர்ந்து தான் இதைச் செய்ய வேண்டும்." என்றவன் பின்பு, "எல்லாம் உன்னால் வந்தது. எதுக்குச் சத்யா கிட்ட போய் வம்பு பண்ணின? அவன் தான் நம்ம கல்யாணத்தைப் பேசி முடிச்சிருக்கணும். நீ அமைதியா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது." என்று கோபத்தோடு கத்தினான்.

"எனக்குச் சத்யா வேணும். அதான் அவனைத் தேடி போனேன். அதுக்கு என்ன இப்போ? உன்னை மாதிரி ஒரு வெத்துவேட்டை கல்யாணம் பண்ணிக்க நான் ஒண்ணும் தவம் இருக்கலை." ரச்சிதா கோபத்துடன் கத்தினாள்.

"நான் வெத்துவேட்டா? நீ ரொம்ப யோக்கியமா? சத்யாவை லவ் பண்ணினேன்னு சொல்றவ, எதுக்குடி என் பின்னாடி வந்த?" அவன் கேட்டதும் அவளது முகம் கருத்துப் போனது.

"பணம்... எல்லாம் பணம். அப்போ என் கிட்ட பணம் இருந்தது. அதான் வாயெல்லாம் பல்லாக இளிச்சிக்கிட்டு என் கிட்ட வந்த... இப்போ அந்தப் பணம் என் கிட்ட இல்லைல்ல. அதான் நான் உனக்குக் கசக்குறேன். இப்படிப்பட்ட உன்னைக் கல்யாணம் பண்ண எந்த ஆம்பளையும் விரும்ப மாட்டான்." ஜெய்பிரகாஷ் வார்த்தைகளைக் கடுமையாக விட்டான்.

"நான் உன் அண்ணனை காதலிக்கிறேன்னு தெரிஞ்சும் என்னைப் பேசி மயக்கினியே. நீ ரொம்ப ஒழுங்கா? நல்ல ஆம்பளை செய்ற காரியமா இது?" அவளும் பதிலுக்கு அவனை வார்த்தைகளால் காயப்படுத்தினாள்.

"நீ காதலிச்சியா? குட் ஜோக்... நீ காதலித்தது பணத்தை... என்னை விட வேறு ஒருத்தன் கிட்ட பணம் இருந்தால் நீ அவன் பின்னே போயிருவ... நீ எல்லாம் பக்கம் பக்கமா டயலாக் பேசாதே." என்று அவளைக் காறி உமிழாத குறையாகத் திட்டியவன் அங்கிருந்து சென்று விட்டான்.

இருவருமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொண்டு காயப்பட்டுப் போயினர். இருவருக்குமே தெரியும், வேங்கடபதி தேவாவின் வார்த்தைகளை மீற முடியாது என்று... இருவருமே திருமணத்திற்குப் பலியாடு போல் தயாராகினர்.


******************************
 

ஶ்ரீகலா

Administrator
ஆதிசக்தீஸ்வரி இதய வடிவில் தோசையை ஊற்றி சிம்மஹாத்ரி சத்யநாராயணா தட்டில் வைத்தாள். அவனோ எதுவும் கூறாது அமைதியாக உண்டான். அவள் ஆர்வமாக அவனையே பார்த்திருக்க... அவனோ உணவில் கவனமாக இருந்தான்.

"சத்யா..." அவள் அவனை அழைக்க...

"தோசை கல்லு கருகுது பார்." என்றவன் பேச்சை கத்தரித்தான்.

"இங்கே என் மனசு கருகுது." அவள் புலம்பி கொண்டே தோசையை ஊற்றினாள். அவன் அவளுக்குத் தோசை ஊற்றிக் கொடுத்தது போல் அவளும் அவனுக்குத் தோசையை ஊற்றி கொடுக்கிறாளாம். தோசையை ஊற்றி விட்டு திரும்பியவள் அவனது தட்டில் இருந்த இதய வடிவ தோசையைக் காணாது திகைத்தவள்,

"சத்யா, என்னுடைய இதயத்தைக் காணலை." என்று பதட்டத்துடன் கேட்க...

"அது உள்ளுக்குள்ள பத்திரமா இருக்கு." என்றவனது பார்வை அவளைத் துளைத்து எடுத்தது.

"உனக்குக் கொஞ்சமும் ரசனை இல்லை சத்யா. எவ்வளவு ஆசையா இதய வடிவில் தோசையை ஊத்தி கொடுத்தேன். அது என்னுடைய இதயம்." அவள் அங்கலாய்த்தபடி சொல்ல...

"தோசையைப் பிய்ச்சு சாப்பிட தான் தோணும். அழகு பார்க்கவா தோணும்." அவன் நக்கலாய் சொல்ல...

"அப்படிச் சொல்லலை சத்யா... என்னுடைய இதயத்தில் நீ தான் இருக்கேன்னு சிம்பாலிக்கா சொன்னேன்." அவள் இழுக்க...

"அப்படியா? ஜெய்யை கல்யாணம் பண்ண தயாரானியே. அப்போ உன் இதயத்தை அவனுக்கு வாடகைக்குக் கொடுத்து இருந்தியா?" அவன் அவளைக் குத்தி காட்ட வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் அவனால் அவளது செயலை மறக்க முடியவில்லை. அந்தக் கோபம் இது...

"சத்யா? நான்..." அவள் என்னவென்று பதில் சொல்வாள்?

"ப்ச், வேண்டாம் விடு." என்றவன் எழுந்து சென்று விட்டான்.

ஆதிசக்தீஸ்வரி செல்லும் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பார்த்தபடி நின்றவள் பின்பு சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு தங்களது அறைக்குச் சென்றாள். அங்கு அவன் படுக்காது அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் அவன் அருகே சென்று அமர்ந்தாள். அவள் வந்ததை உணர்த்தும் அவன் அவளைத் திரும்பி பார்க்கவில்லை. அவன் அவளிடம் எப்போதும் இறுக்கமாகத் தானே இருப்பான். அதனால் அவள் கவலை கொள்ளாது அவனது தோளில் தலைசாய்ந்து கொண்டாள்.

"சாரி சத்யா..." அவள் எத்தனை தடவை மன்னிப்புக் கேட்டாலும் அவளது செயலை அவளாலேயே மன்னிக்க முடியாது எனும் போது அவனால் எப்படி மன்னிக்க முடியும்! ஆனால் மன்னிப்பை தவிர அவளிடம் வேறு வார்த்தை இல்லையே!

"நீயும் உன் வாழ்க்கையில் குடும்பத்துக்காகச் சில முடிவுகளை எடுத்து இருக்கலாம். அது எல்லாம் மனசார எடுத்த முடிவா இருக்காது. குடும்ப நலனுக்காக எடுத்த முடிவாக இருக்கலாம். அது மாதிரி தான் நானும்... குடும்பத்துக்காக அந்த முடிவை எடுத்தேன்." அவளது பேச்சை அவன் கேட்கிறான் என்பதற்கு அடையாளமாக அவன் அலைப்பேசியை அணைத்து விட்டு அமைதியாக அமர்ந்து இருந்தான்.

"ஆனா இப்போ ஒரு விசயம் புரியுது. உன் மேல எனக்குக் காதல் இருக்கு. என் மனதுக்குள்ள நீ இருக்க. அப்படி இருந்தும் கடமையா நீ என்னைத் தொட்டப்போ என்னால் தாங்க முடியலை. அப்படி இருக்கும் போது யாரோ ஒருத்தன் என்னைத் தொட்டு இருந்தால்... அடுத்த நொடி நான் செத்து போயிருப்பேன்." அவள் சொன்னதும் அவனது உடல் இறுகியது. அதை அவள் உணர்ந்தாளோ என்னவோ!

"என் மனசு, உடம்பு எல்லாம் உனக்கு மட்டும் தான் சொந்தம் சத்யா. நீ என்னைப் பெரிய இக்கட்டில் இருந்து காப்பாத்தி இருக்கச் சத்யா." என்றவள் தனது கரங்களில் அவனது முகத்தைத் தாங்கி, "தேங்க்ஸ் சத்யா... எல்லாத்துக்கும்... முக்கியமா நீயும், நானும் ஒண்ணுன்னு எல்லோருக்கும் புரிய வச்சதுக்கு... முக்கியமா எனக்குப் புரிய வச்சதுக்கு..." என்க... பெண்ணவள் காதல் ஆணவனுக்குப் புரியாது இருக்குமா! அவனது பார்வை அவளைக் குறுகுறுவெனப் பார்த்தது.

"என்ன சத்யா?" அவள் புரியாது கேட்டாள்.

"என் கிட்ட ஏதாவது சொல்லணுமா? இல்லை ஏதாவது கேட்கணுமா?" என்று அவன் கேட்க...

"ம்..." என்று பலமாகத் தலையாட்டியவளை கண்டு அவன் ஆர்வமாகப் பார்த்தான்.

"நான் செஞ்ச தப்பை மன்னிச்சு மறக்க கூடாதா சத்யா? நீ இப்படிச் சொல்லி காட்டும் போது எல்லாம் ரொம்பக் குற்றவுணர்வா இருக்கு. இந்தக் குற்றவுணர்வு என் காதலை சாகடிச்சு, உன் கூட என்னை வாழ விடாம செஞ்சிருமோன்னு எனக்குப் பயமா இருக்கு." அவள் கண்ணீரோடு சொல்ல... அடுத்த நொடி அவனது கரம் அவனையும் அறியாது அவளை இறுக அணைத்துக் கொண்டது. இது தான் அவன்... அவனது உயிரை அவனால் கஷ்டப்படுத்த முடியுமா! சில நேரங்களில் அவளது செய்கை நினைவில் நின்று அவனுள் கோபத்தைக் கிளப்பி விடுகிறது. அவனும் என்ன செய்வான்!

"நீ மன்னிக்கிற அளவுக்குப் பெரிய தப்பு எல்லாம் பண்ணலை. ஆனா மறக்க முடியலை. நீ என்னை விட்டுட்டு..." என்றவனின் குரல் கரகரத்து ஒலித்தது.

"அப்படி இல்லை சத்யா... ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்தில் அப்படிப் பண்ணிட்டேன். நிச்சயம் என் கழுத்தில் அடுத்தவன் தாலி ஏறும் முன்னே நான் என் உயிரை விட்டிருப்பேன் சத்யா. உனக்கு நான் துரோகம் செஞ்சிருக்க மாட்டேன். என் காதலுக்கும் நான் துரோகம் செஞ்சிருக்க மாட்டேன்." என்றவள் பெரும் கேவலோடு அவனது நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.

இது தான் அவனுக்குத் தெரியுமே! அவன் இல்லை என்றால் அவளில்லை என்பது... அவனது அணைப்பு மேலும் இறுகியது. இருவருமே மோனநிலை கலையாது அப்படியே இருந்தனர். முதலில் அவள் தான் தன்னுணர்வு பெற்று அவனை அண்ணாந்து பார்த்தாள். அவன் பார்வையால் என்னவென்று கேட்க...

"வேண்டாமா?" என்று அவள் கேட்க...

"என்னது?" அவனுக்குப் புரியவில்லை.

"நான்..." என்றவள் அவன் மடி மீது ஏறியமர்ந்து அவனது கழுத்தை கட்டி கொண்டு அவனது முகத்தோடு தனது முகத்தைப் பதித்துக் கிறக்க குரலில் கேட்டாள். அவனோ பதில் சொல்லாது அவளது இதழ்களைச் சிறை செய்தான். சில நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவன்,

"ஏதாவது வேணுமா?" என்று அவன் மீண்டும் கேட்க...

"ஆமா, வேணும்..." என்றவளை கண்டு அவனது விழிகளில் எதிர்பார்ப்பு தோன்றியது.

"நீ..." என்றவள் இப்போது அவனது செயலை தனதாக்கி கொண்டாள். அவளது பதில் அவனுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் அவள் வேண்டியது தன்னைத் தான் என்பதை அறிந்தவன் முழுமனதுடன் அவளிடம் தன்னை ஒப்படைத்தான்.

வெறும் தாலிக்கயிறு காதலுக்குத் தடை போட முடியுமோ!

மறுநாள் காலையில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா அலுவலகத்திற்குக் கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது ஆதிசக்தீஸ்வரி பரபரப்புடன் அறையினுள் நுழைந்தாள். அவளது பரபரப்பை அவன் கண்டாலும் ஏனென்று வாய் விட்டு கேட்காது அவளையே பார்த்திருந்தான்.

"சத்யா, உன் தங்கை பூஜிதாவுக்கு உடம்பு சரியில்லையாம். ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு போயிருக்காங்களாம்." அவள் சொன்னது கேட்டு அவன் ஒன்றும் பதில் பேசாது இருந்தான். ஏனெனில் இந்த விசயம் அவனுக்கு ஏற்கெனவே தெரியும்.

"நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பதில் பேசாம இருந்தால் என்ன அர்த்தம்?" அவள் அவன் முன் வந்து நின்று கொண்டு கோபத்தில் குதிக்க...

"சரி, இப்போ நான் என்ன பண்ணணும்?" அவன் நிதானமாகக் கேட்க...

"போய்ப் பார்த்துட்டு வா சத்யா... நேத்து அவள் ரொம்ப ஃபீல் பண்ணினாள்."

பூஜிதா மனதை போட்டு உழட்டி கொண்டு தான் காய்ச்சலை இழுத்து கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கும் தெரியும். ஆனால் தங்கையைப் போய்ப் பார்க்கத்தான் மனம் ஒப்பவில்லை.

"எதுக்கு? விடு..." என்றவன் அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரானான்.

"என்னது விடணுமா? அவள் உன் தங்கை சத்யா. பாவம், உடம்பு சரியில்லாம இருக்கிறாள்."

"அதெல்லாம் சரியாகி வீட்டுக்கு வந்திருவாள். நீ கவலைப்படாதே." என்றவன் தனது பர்சை எடுத்து திறந்து எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்த்துவிட்டுப் பேண்ட் பாக்கெட்டில் வைத்தான்.

"சத்யா, ஏன் இப்படி நடந்துக்கிற? அவள் என்ன தப்பு செய்தாள்? என்னையவே மன்னிச்சிட்ட... அவளை மன்னிக்கக் கூடாதா?" என்று கேட்டுக் கொண்டே போனவள் அப்படியே அமைதியாகி அவனது முகத்தைச் சிறு திடுக்கிடலோடு பார்த்தாள். அவன் அவளைப் பார்த்தபடி அலைப்பேசியை எடுத்துச் சட்டை பையில் போட்டவன்,

"நீ வேறு, அவள் வேறு..." என்று அழுத்தி பதில் சொல்ல...

"அவள் என்னைப் பேசியதற்கா இந்தக் கோபம் சத்யா?" அவளுக்கு அத்தனை திகைப்பாக இருந்தது.

"பூஜா உன்னை மட்டும் பேசலை... என்னையும் சேர்த்து பேசி இருக்கிறாள்." என்றவனை அவள் இமைக்க மறந்து பார்த்தாள்.

தனக்கு ஒரு அவமானம் என்றால்... அவளது அவமானம் அவனையே சேரும் என்பதைச் சொல்லாது சொன்னவனின் வார்த்தைகளில் இருந்த காதல் அவளுக்குப் புரிந்தது. காதல் வார்த்தைகளில் இல்லை, செயலில் இருக்கிறது என்பதைச் செய்து காட்டும் அவனைக் கண்டு காதல் பெருகாது இருந்தால் தானே ஆச்சிரியம்!

"சத்யா..." அவள் பெரும் கூவலோடு அவனை அணைத்து கொண்டவள் பிறகு அவனது முகத்தைப் பற்றியிழுத்து அதில் லட்சம் முத்தங்களைப் பரிசாக வாரியிறைத்தாள். அவனும் அவளது செயலில் அடங்கி அமைதியாக முத்தங்களைப் பெற்றுக் கொண்டான்.

"நான் வேலைக்குப் போகணுமா? வேண்டாமா?" அவள் முத்த யுத்தத்தை நிறுத்தாதது கண்டு அவன் கேட்க...

"போகணுமா?" அவள் கிறக்க குரலில் கேட்க...

"அததுக்கு ஒரு நேரம், காலம் இருக்கு." என்றவனுக்கும் போக மனதில்லை தான்.

"ம், அதுவும் சரி தான்." என்றவள் அவனது விழிகளை உற்று நோக்கி, "ஐ லவ் யூ சத்யா." என்று காதலோடு சொல்ல... அவனோ அவளையே பார்த்திருந்தான்.

"பதிலுக்குக் காதலை சொல்லலைன்னாலும் பரவாயில்லை. இது என்ன குறுகுறுன்னு பார்க்கிறது?" அவள் அவனது பார்வையில் நாணத்தில் சிவந்தாள்.

அவனோ பதில் சொல்லாது அவளது இடையில் கை கொடுத்து இன்னமும் அவளை இறுக்கி அணைத்து கொண்டவன், "ஏதாவது வேணுமா?" என்று கேட்க...

"எல்லாம் இருக்கு சத்யா. ஒண்ணும் வேண்டாம்." என்றவளை ஒருமாதிரியாய் பார்த்தவன் அவளது முன்னெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு விட்டு அவளிடம் விடைபெற்று சென்று விட்டான்.

"எல்லாம் சரி தான். ஆனா ஏதோ ஒண்ணு மிஸ்ஸாகுதே." செல்லும் அவனைப் பார்த்தபடி அவள் யோசித்தாள்.

"ஆங், ஞாபகம் வந்திருச்சு. சத்யாவோட சிரிப்பு மிஸ்ஸிங். என்னோட சத்யா சிரிக்கும் போது அவனது கண்ணும் சேர்ந்து சிரிக்கும். இப்போ அவன் சிரிப்பது வெறும் உதட்டளவில் மட்டும் தான் இருக்கு. அந்தளவுக்கு நான் அவனைக் காயப்படுத்தி இருக்கேன். அவனைச் சந்தோசமா வச்சுக்கணும். அவனது சிரிப்பை மீட்டெடுக்கணும்." என்று அவள் தனக்குள் சொல்லி கொண்டாள்.

அவனது புன்னகையை, மனதை மீட்டெடுக்கும் ஒரே வழி அவள் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும். அவள் அவனை முழுமனதாக நம்ப வேண்டும். அவள் அவனை நம்பும் போது அவனது கையால் தாலி கேட்பாள். அவர்களது திருமணத்தை விரும்புவாள். அந்தக் கணம் இருவரது காதலும் உயிர் பெறும். இருவரது வாழ்க்கையும் முழுமையடையும்.

****************************
 

ஶ்ரீகலா

Administrator
பூஜிதா மருத்துவமனை அறையில் சோர்வாகப் படுத்திருந்தாள். அவள் மனதை போட்டு உழட்டி கொண்டதில் காய்ச்சல் அதிகரித்து இருந்தது. அண்ணன் பேசிய வார்த்தைகள் அவளைப் பெரிதும் வருத்தியிருந்தது. அவள் தனது தவறை உணர்ந்து கொண்டாள். ஆனால் அண்ணனின் அன்பை இழந்து விட்டாளே! அது தான் அவளது மனதினை போட்டு உழட்டி கொண்டிருந்தது. அவள் விழி மூடி படுத்திருந்த போதும் உறங்கவில்லை. அவளது விழியோரம் கண்ணீர் கசிந்தது.

அப்போது ராஜ்குமார் அவளது அறைக்குள் நுழைந்தான். பூஜிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. நொடி நேரம் கூடத் தாமதியாது அவன் அவளைக் காண ஓடி வந்துவிட்டான். பூஜிதாவின் துணைக்கு இருந்த ராணியம்மா, ரச்சிதாவை கஷ்டப்பட்டு அப்புறப்படுத்தி விட்டு அவன் உள்ளே வந்தான். அறையினுள் நுழைந்தவன் அவள் அருகே நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தான். அந்தச் சத்தத்தில் அவள் தனது விழிகளை மெல்ல மலர்த்தினாள்.

"திடீர்ன்னு என்னாச்சு?" அவன் மெல்ல கேட்டான். ஏனோ அவளது நலிந்த தோற்றம் அவனை மிகவும் வருத்தியது. அவள் பதில் பேசாது கண்ணீர் வடித்தாள்.

"எதுக்கு அழுற?" அவன் பதற்றத்துடன் அவளது கரத்தினைப் பற்ற... அவ்வளவு தான் பெண்ணவள் உடைந்து தான் போனாள்.

"அண்ணய்யா, அண்ணய்யா..." என்றவள் அழுகையுடன் அனைத்தையும் அவனிடத்தில் சொல்லி முடித்தாள். அவள் கூறுவதை முழுவதும் பொறுமையாகக் கேட்டவன்,

"என்ன இருந்தாலும் நீ பேசியது தவறு பூஜா." அழுத்தம் திருத்தமாய்த் தவறினை சுட்டிக்காட்டியவனை அவள் திகைப்புடன் பார்த்தாள்.

"சிம்மா சொன்னது போல் நீ அந்தப் பெண்ணை மட்டும் அசிங்கப்படுத்தலை. அவனையும் சேர்த்து தான் அசிங்கப்படுத்தி இருக்க."

"நான் அண்ணய்யாவை அப்படி நினைக்கலை." அவளுக்கு அழுகை வந்தது.

"அப்போ அந்தப் பெண்ணை அப்படி நினைச்சியாக்கும்." அவன் சுள்ளென்று கேட்க... அவள் மிரண்டு விழித்தாள்.

"இங்கே பார் பூஜா... அந்தப் பெண் யார், எவரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உன் அண்ணனை பத்தி எனக்கு நல்லா தெரியும். ஏன்னா..." என்று நிறுத்தியவன் எங்கோ தனது பார்வையை நிலைத்தபடி, "ஏன்னா அவன் என் நண்பன்." என்றான். அதைக் கேட்டு அவளது முகம் மலர்ந்தது. இருவரும் நண்பர்களாக இருந்தால் தானே அவளுக்கு மகிழ்ச்சி.

"சிம்மா நிச்சயம் தப்பு பண்ண மாட்டான்." என்றவனை அவள் வியப்பாய் பார்த்தாள்.

"என்ன ஆச்சிரியமா இருக்கா? அவனுக்கும், எனக்கும் இடையில் சில பிரச்சனைகள் இருக்கு தான். அதுக்காக அவன் தப்பானவன்னு நான் சொல்லலை. இந்த விசயத்தில் நீ கொஞ்சம் கட்டுப்பாடா இருந்திருக்கணும்." அவன் அவளுக்கு அறிவுரை கூற... அவளுமே அது பற்றித் தானே யோசித்துக் கொண்டு இருக்கிறாள். தாமதமாக வருந்தி என்ன பயன்!

"நான் பேசியது தப்பு தான். அதுக்காக அண்ணய்யா எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டாம். அவர் என்னைப் பார்க்க வரவே இல்லை." சொல்லும் போதே அவளது அழுகை அதிகரித்தது.

"என்னது?" அவனுக்குமே திகைப்பாகத் தான் இருந்தது. சிம்மஹாத்ரி சத்யநாராயணா தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை அவன் அறிந்தவனாயிற்றே!

"அண்ணய்யா என்னை வெறுத்து விட்டார்." என்று தேம்பியவளை கண்டு அவனுக்குப் பாவமாக இருந்தது.

"அப்படி எல்லாம் இருக்காது. நான் சிம்மா கிட்ட பேசறேன்." என்றவன் அவளுக்கு மேலும் சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்து ராஜ்குமார் நேரே சென்றது சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை சந்திப்பதற்காகத் தான். அவன் வந்திருப்பது அறிந்து சிம்மஹாத்ரி சத்யநாராயணா உடனே அவனை அழைத்தான். உள்ளே வந்த ராஜ்குமார் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை கோபமாய் முறைத்தான். சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுடன் இருந்த பவன்ராம் ராஜ்குமாரை முறைத்துப் பார்த்தான்.

"திரும்பச் சண்டை போட வந்திருக்கியா ராஜ்?" பவன்ராம் கோபமாய்க் கேட்க...

"பவன், அமைதியா இரு." சிம்மஹாத்ரி சத்யநாராயணா பவன்ராமை அடக்கியவன் ராஜ்குமாரை கண்டு, "உட்கார் ராஜ்..." என்று உபசரித்தான்.

"நான் உட்கார வரலை. பூஜா சார்பா பேச வந்திருக்கேன்." என்ற ராஜ்குமாரை கண்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் புருவங்கள் உயர்ந்தது.

"நீ பார்க்க வரலைன்னு பூஜா ரொம்ப வருத்தப்படுகிறாள். அவள் பேசியது தப்பு தான். அதுக்காக அவள் மேல் கோபம் கொண்டு பார்க்க போகாம இருப்பியா?" என்று கேட்ட ராஜ்குமாரை கண்டு,

"நீயும் அதே வார்த்தைகளைத் தானே பேசின. இப்போ என்ன புதுசா பூஜாவுக்குப் பரிஞ்சிக்கிட்டு பேசுற?" பவன்ராம் கேலியாய் கேட்டான்.

"அது எனக்கும், சிம்மாவுக்கும் இடையில் இருக்கும் பகை. நான் அப்படித்தான் பேசுவேன். நாளைக்கே எனக்குத் தேவைன்னா அந்தப் பெண்ணைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன்." என்ற ராஜ்குமாரை கண்டு,

"சக்தியை பற்றிய பேச்சு வேண்டாம் ராஜ்." என்று கோபமாய் முற்றுப்புள்ளி வைத்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா, "நீ பூஜாவை பார்க்காமல் இருப்பது நல்லது." என்றான் சற்றுக் கடுமையான குரலில்...

"அது என் விருப்பம்." என்ற ராஜ்குமாரை கண்டு விழிகளால் பொசுக்கினான் சிம்மஹாத்ரி சத்யநாராயணா.

"பூஜாவை வருத்தப்பட வைத்தால் நான் கேள்வி கேட்பேன்." என்றவனைக் கண்டு மற்ற இருவருக்குமே திகைப்பாய் இருந்தது. முடிந்து போனதாக எண்ணியது மீண்டும் தொடர போகின்றதோ? என்று...

"என் தங்கைக்கு எப்போ, என்ன செய்யணும்ன்னு எனக்குத் தெரியும். நீ உன் வேலையைப் பார்." சிம்மஹாத்ரி சத்யநாராயணா சூடாய் பதிலடி கொடுத்தான்.

"என் வேலையைத் தான் பார்க்க போகிறேன். உன்னைப் பழிவாங்கும் வேலையை..." ராஜ்குமார் ஆத்திரத்துடன் மொழிந்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.

"இவன் கிட்ட உண்மையைச் சொல்லிவிடலாம் சத்யா." பவன்ராம் கவலையாய்ச் சொன்னான்.

"சொல்லி என்ன பண்ண? என்னை மாதிரி நிம்மதி இல்லாது அவனும் தவிக்கவா? அவன் இப்படியே சந்தோசமா இருக்கட்டும் பவன்."

"அந்த முட்டாள் கோபத்தில் ஏதாவது செய்திர போறான். அதில் நீ பாதிக்கப்பட்டால்..." பவன்ராம்க்கு கவலை அதிகரித்தது.

"நான் பார்த்துக்கிறேன்." என்றவன் வேலையைப் பற்றிப் பேச... பவன்ராமும் ராஜ்குமாரை மறந்தவனாய் வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.

பவன்ராம் சென்றதும் சிம்மஹாத்ரி சத்யநாராயணா யோசனையில் ஆழ்ந்தான். ராஜ்குமாரை நினைத்து அவனுக்குப் பாவமாக இருந்தது. அவனது மனம் பழைய நினைவுகளை நோக்கி ஓடியது. அதேநேரம் தந்தை புகைப்படம் முன் நின்றிருந்த ராஜ்குமாரும் பழைய நினைவுகளை எண்ணி பார்த்தான்.

"இங்கு இரையாகும் மானுக்கும்
ஒரு நியாயம் உண்டு,
அப்பாவி மானை புசிக்கும் புலிக்கும்
ஒரு நியாயம் உண்டு,
மானின் நியாயம் உயிர் என்றால்,
புலியின் நியாயம் பசியாகுமே...
இரண்டுமே உயிர் வாழத்தான்...
நியாயங்கள் மாறுபடும், அவரவர்
சூழ்நிலையைப் பொறுத்து...
அவரவர் நியாயம் அவரவருக்கு..."

நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 34

கடந்த காலம் :

"ஜெய், இன்னும் ஒரு வாய் தான்... இங்கே வா..." ராணியம்மா அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்த எட்டு வயது சிறுவனான ஜெய்பிரகாஷை கண்டு புன்னகையுடன் பாசத்தோடு அழைத்தார். அவர் அருகில் ஐந்து வயதான உதய்பிரகாஷ் சமத்தாக அமர்ந்திருந்து அன்னை ஊட்டும் உணவினை உண்டு கொண்டு இருந்தான். ராணியம்மா வயிறு சற்று மேடிட்டு இருந்தது. அவர் மூன்றாவது குழந்தை உண்டாகி இருந்தார்.

"ம்மா, ஆஆஆ..." ஜெய்பிரகாஷ் அன்னை அருகில் வந்து தனது வாயை திறந்து காட்ட... ராணியம்மா மகனுக்கு ஆசையாக ஊட்டி விட்டார். எப்போதுமே மூத்த மகன் மீது அன்னைக்கு அதிகப் பாசம் இருக்கும் தானே.

இதை எல்லாம் தொலைவில் இருந்து பார்த்தபடி ஏக்கத்துடன் நின்றிருந்தான் சிம்மஹாத்ரி சத்யநாராயணா. அவனுக்கும் அன்னை ஊட்டி விட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அது ஒரு போதும் நடந்தது இல்லை. ராணியம்மா அவனிடம் பேசவே மாட்டார். பின்னே எங்கே இருந்து ஊட்டிவிட... அவர் எப்போதும் அவனிடம் ஒருவித ஒதுக்கத்துடன் தான் நடந்து கொள்வார். சின்னவனான அவனுக்கோ எதுவும் புரியவில்லை. அம்மா ஏன் தன்னை மட்டும் ஒதுக்கி வைக்கிறார்? என்கிற கேள்வி மட்டும் அவனது மனதில் எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கும். ஆனால் அவன் அதை யாரிடமும் கேட்காது தனக்குள் பூட்டி வைத்து கொள்வான்.

"அடடே, சிம்மா நீ இங்கே தான் இருக்கியா? நான் உன்னை எங்கே எல்லாம் தேடுவது?" தாத்தா ஆதித்ய சத்யநாராயணாவின் குரலில் அவன் முகம் மலர திரும்பி பார்த்தான்.

"ஜெய், உதய் கூட விளையாட வந்தேன்." அவன் ஓடி சென்று தாத்தாவின் கால்களைக் கட்டி கொண்டான்.

"சாப்பிட்டு விட்டு வந்து விளையாடலாம்." என்றவர் அவனை அழைத்துக் கொண்டு நகர முற்பட...

"வாங்க மாமா..." ராணியம்மா பவ்யத்துடன் மாமனாரை வரவேற்றார்.

"உடம்பு எப்படி இருக்கும்மா? செக்கப்புக்கு போறியா?" மாமனார் மருமகளிடம் பாசத்துடன் வினவினார்.

"எல்லாம் நல்லா இருக்கு மாமா. நீங்க சாப்பிட்டுட்டு போங்களேன்." என்று ராணியம்மா மாமனாரிடம் கூற...

"நான் இங்குச் சாப்பிட்டால்... என் பேரன் சிம்மா எங்குச் சாப்பிடுவான்?" ஆதித்ய சத்யநாராயணாவின் கேள்விக்கு ராணியம்மாவிடம் பதிலில்லை. அவருக்குச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா மீது வெறுப்பும் இல்லை, அதேசமயம் பாசமும் இல்லை. அவனின் பிறப்பின் ரகசியம் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது கணவன் தான் அவனுக்குத் தந்தை என்று மட்டும் தெரியும். அதனால் வந்த ஒதுக்கம் இது...

"இன்னும் உன் மனசு இரங்கலைல்ல. எப்போ நீ சிம்மாவுக்கு ஒரு வாய் சாப்பாடு போடுறியோ... அப்போ நானும் இங்கு வந்து சாப்பிடறேன்." ஆதித்ய சத்யநாராயணா பதில் கூறிவிட்டு நகரப் போனார்.

"என் பிள்ளைகளை விட அவன் என்ன உசத்தி?" ராணியம்மாவுக்குக் கோபம் வந்தது. தனது பிள்ளைகளிடம் கூட மாமனார் இப்படிப் பாசத்தைப் பொழிந்தது இல்லையே!

"என்னுடைய முதல் பேரன்... எனக்குக் கொள்ளி வைக்கப் போகும் பேரன். அப்படி என்றால் சிம்மா உசத்தி தானே." தாத்தா கூறியதன் அர்த்தம் புரியாது சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவரைப் பார்த்திருந்தான்.

"முறையில்லாது வந்த இவன் உங்களுக்குக் கொள்ளி வைக்கப் போறானா?" ராணியம்மா அருவருப்புடன் அவனைப் பார்த்தார்.

"சிம்மா முறைப்படி வந்திருந்தால்... இப்போது நீ இந்த இடத்தில் இருந்திருக்க மாட்ட ராணி." பெரியவர் வார்த்தைகளைக் கடுமையாய் சொன்னார்.

"ஓஹோ... அரண்மனையின் ராணியான நானும், கண்டவளும் ஒண்ணா?" ராணியம்மாவுக்கு உள்ளம் கொதித்தது. முறையற்று குழந்தையைப் பெற்ற ஒருத்தியும், தானும் ஒன்றா? என்று...

"அவள் ஒன்றும் கண்டவள் இல்லை. அவளும் உன்னைப் போல்..." என்று ஏதோ கூற வந்தவர் அப்படியே அமைதியாகி விட்டார்.

"என்ன சொல்ல வந்தீங்க மாமா? சொல்லுங்க... உங்க மகனை அனுசரிச்சு போக என்னால் மட்டும் தான் முடியும். வேறு யாராலும் முடியாது. அது உங்களுக்கே தெரியும்."

"அனுசரிச்சு போக வேண்டாம். தவறை தட்டி கேட்டால் போதும். முதலில் அதை நீ செய்." என்றவர் பேரனை அழைத்துக் கொண்டு தன்னுடைய அரண்மனைக்குச் சென்று விட்டார்.

தாத்தாவுடன் உணவு உண்டு விட்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணா மீண்டும் இங்கு ஓடி வந்து விட்டான். ஜெய்பிரகாஷ், உதய்பிரகாஷுடன் சேர்ந்து விளையாடுவதற்காக... தாத்தா நிறுவனங்களுக்குப் போனால் இனி இரவு தான் வருவார். அதுவரை அவன் இங்கே தான் இருப்பான். அதற்கு எல்லாம் ராணியம்மா தடை சொன்னது இல்லை.

இரவு சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் தந்தை ரவிவர்மன் வீட்டிற்கு வரும் போதே முழுப் போதையில் வந்தார். உடன் விலைமாது ஒருத்தி வேறு... அவர் அவளது இடையை அணைத்துக் கொண்டு தனது அறைக்குச் செல்ல முயல... என்றும் இல்லாத திருநாளாய் ராணியம்மா மாமனாரின் வார்த்தைகளில் கொதித்துப் போயிருந்தவர்... இன்று கணவனைத் தடுத்து நிறுத்தினார்.

"இனி இது மாதிரி எல்லாம் வீட்டுக்குள் வச்சுக்காதீங்க. அவளை வெளியில் அனுப்புங்க." என்று ராணியம்மா சத்தம் போட...

"நீ யாருடி அதைக் கேட்க?" ரவிவர்மன் மனைவியை ஓங்கி அடித்தார். அதில் ராணியம்மா அலறிக் கொண்டே கீழே விழுந்தார்.

அன்னையின் அலறலில் மூன்று குழந்தைகளும் ஓடி வந்தது. ஜெய்பிரகாஷ், உதய்பிரகாஷ் இருவரும் தந்தையைக் கண்டு பயந்து அப்படியே நின்றுவிட்டனர். சிம்மஹாத்ரி சத்யநாராயணா மட்டும் தான் ஓடிவந்து அன்னை எழ உதவி செய்தான். ராணியம்மா எழுந்து நின்றதும் தான் அவரது நெற்றியில் இருந்து இரத்தம் வழிவதை கண்டான் அவன். அவ்வளவு தான் அவனுக்கு எங்கே இருந்து தான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ! கண் இமைக்கும் நேரத்தில் அங்குச் சுவற்றில் அலங்காரத்திற்கு மாட்டப்பட்டு இருந்த வாளை உருவி தந்தையின் கழுத்தில் வைத்து அழுத்தினான். அவனது செயலை ரவிவர்மன், ராணியம்மா இருவருமே எதிர்பார்க்கவில்லை. ரவிவர்மனுடன் வந்த பெண் வாளை கண்டதும் அலறிக் கொண்டு ஓடி விட்டது.

"அம்மா மேல் கை வச்சீங்க... நான் உங்களைக் கொன்னுருவேன்." என்று சிம்மஹாத்ரி சத்யநாராயணா தந்தையை மிரட்டினான். பத்து வயது சிறுவனைக் கண்டு ரவிவர்மன் சற்று பயந்து தான் போனார். ஏனெனில் அவனது ஆக்ரோசம் அப்படியிருந்தது.

"சபாஷ் சிம்மா..." என்று கைத்தட்டியபடி அங்கு வந்தார் ஆதித்ய சத்யநாராயணா.

"தாத்தா..." அவன் வாளை கீழே போட்டு விட்டு தாத்தாவை நோக்கி ஓடினான்.

"அப்பா அம்மாவை அடிச்சு கீழே தள்ளி விட்டுட்டார். அம்மாவுக்கு ரத்தம் வருது." அவன் தாத்தாவிடம் தந்தையைப் பற்றிப் புகார் வாசித்தான்.

"அப்பா எப்போதுமே பிள்ளைங்களுக்கு ரோல் மாடலா இருக்கணும். ஆனால் இங்கே... தகப்பனுக்கு மகன் புத்தி சொல்ல வேண்டியிருக்கு. இனியாவது திருந்த பார். இல்லைன்னா...?" என்று கேள்வியோடு நிறுத்தியவர் மகனை முறைத்து பார்த்தார்.

"இல்லைன்னா என்ன பண்ணுவீங்க?" இதுவரை பம்மி கொண்டிருந்த ரவிவர்மன் எகிறிக் கொண்டு வந்தார்.

"நான் ஒண்ணும் பண்ண மாட்டேன். ஏன்னா நான் உன்னைப் பெத்துத் தொலைச்சுட்டேன். ஆனா நீ பெத்த மகன் உன்னைக் கேள்வி கேட்பான். தேவைப்பட்டால் அவன் உன்னை அடிச்சும் திருத்துவான்." ஆதித்ய சத்யநாராயணா கேலியாய் சொன்னார்.

"இந்தப் பொடி பயலுக்காக நான் என்னை மாத்திக்கணுமா? நோ நெவர்..." ஆங்காரமாய் உருமிய ரவிவர்மன் அங்கிருந்து சென்று விட்டார்.

மகனை வருத்தத்துடன் பார்த்த ஆதித்ய சத்யநாராயணா பின்பு பேரனிடம் திரும்பி, "வா சிம்மா..." என்று அவனை அழைத்துக் கொண்டு செல்ல நினைக்க...

"அவனைச் சாப்பிட கூப்பிடுங்க மாமா. அப்படியே நீங்களும் வாங்க." ராணியம்மா இருவரையும் உணவு உண்ண அழைத்தார்.

"ராணி..." பெரியவருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கு அதைவிடச் சந்தோசமாக இருந்தது.

அதற்குப் பிறகு வந்த நாட்களில் ராணியம்மா சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் பாசத்தைப் பொழியவில்லை என்றாலும் அவனை ஒத்துக்கவில்லை. தன்னுடைய பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வந்தால் அவனுக்கும் வாங்கி வருவார். பிள்ளைகளோடு பிள்ளைகளாக அவனுக்கும் உணவு பரிமாறினார். தாயன்பு இல்லாது தவித்தவனுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. அவனுக்கு ராணியம்மாவை மிகவும் பிடித்துப் போனது. அவர் பேசவில்லை என்றாலும் அவனே வலிய சென்று பேசுவான். அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவான்.

சில மாதங்களில் ராணியம்மாவுக்குப் பிரசவ வலி எடுத்துப் பூஜிதா பிறந்தாள். சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்குத் தங்கை மீது அத்தனை பாசம். பூஜிதாவும் வளர வளர உடன்பிறந்த சகோதரர்களை விடச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் அதிகம் ஒட்டி கொண்டாள்.

பதினைந்தாவது வயதில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா படிப்பதற்காக மேல்நாடு சென்றான். உடன் தோழன் பவன்ராமும் சென்றான். இருவரும் வெளிநாடு செல்லும் விசயம் அறிந்து ராஜ்குமாரும் தந்தையை நச்சரித்து அவர்களுடன் வெளிநாடு சென்று விட்டான்.

********************************

இருபத்தியிரண்டு வயதில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா படிப்பை முடித்து விட்டு விசாகப்பட்டிணம் வந்ததும் தாத்தா அனைத்து தொழில்களையும் அவன் வசம் ஒப்படைத்தார். இதற்கு ரவிவர்மன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஏனெனில் அவர் பல தொழில்களை நஷ்டப்படுத்தி இருந்தார். அப்படியே அவர் ஆட்சேபம் தெரிவித்தாலும் ஆதித்ய சத்யநாராயணா அதைச் சிறிதும் கண்டு கொள்ளப் போவதும் இல்லை. அதனால் ரவிவர்மன் அடக்கி வாசித்தார். ஆனால் ராணியம்மா ஆட்சேபம் தெரிவித்தார்.

"சிம்மாவுக்கே எல்லாத்தையும் கொடுத்துட்டீங்கன்னா... என் மகன்களுக்கு என்ன மிஞ்சும்?" ராணியம்மா மாமனாரிடம் சண்டை போட்டார்.

"கொடுக்கலைன்னா உன் புருசன் எல்லாத்தையும் அழிச்சிருவான். அப்புறம் எல்லோரும் ரோட்டில் பிச்சை தான் எடுக்கணும்." ஆதித்ய சத்யநாராயணா நிலைமையை எடுத்து சொன்னார்.

"அந்த நிலை ஏன் வர போகுது? நீங்க இருக்கீங்க தானே." ராணியம்மா விடாது கேள்வி கேட்க...

"உனக்குச் சில விசயங்கள் சொன்னால் புரியாது ராணி." மாமனார் மருமகளை அடக்கினார்.

"சொல்லுங்க... புரியுதா இல்லையான்னு பார்க்கிறேன்." ராணியம்மா தன் பிடியில் நிலையாய் நின்றார்.

"ராணி, மாமா சொன்னால் உன் நல்லதுக்காகத் தான் இருக்கும்." என்றபடி அங்கு வந்தார் வேங்கடபதி தேவா.

"அண்ணா, நீங்களே கேளுங்க இந்த அநியாயத்தை." என்று ராணியம்மா விசயத்தைச் சொல்ல...

"நிச்சயம் சிம்மா துரோகம் பண்ண மாட்டான். அதனால் தான் மாமா யோசிச்சு இந்தக் காரியத்தைப் பண்ணி இருக்கார்." வேங்கடபதி தேவா சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். அவருக்கு அவனை மிகவும் பிடிக்கும். அவன் பண்பானவன், நல்லவன்... தங்கை கணவனின் மகன் தான் அவன் என்றாலும்... அவரால் அவனை ஒருநாளும் வெறுத்து ஒதுக்க முடியவில்லை. ஏனெனில் மாமாகாரு, மாமாகாரு என்று தன் காலை சுற்றும் அவனிடம் அவரால் பாசத்தைக் காட்டாது இருக்க முடியுமோ!

"அப்போ என் மகன்களின் நிலை?" ராணியம்மாவுக்குப் பதற்றமாக இருந்தது.

"அவங்களுக்குப் பொறுப்பு வரும் போது பார்க்கலாம்." ஆதித்ய சத்யநாராயணா அத்துடன் முடித்துக் கொண்டார்.

இந்த விசயம் கேள்விப்பட்டு ஜெய்பிரகாஷுக்குமே அண்ணன் மீது கோபம் வந்தது. உதய்பிரகாஷ் இது பற்றி எல்லாம் யோசிக்கவில்லை. அவன் பள்ளி படிப்பில் இறுதியாண்டில் இருந்தான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா தொழில் பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டான். அவனுக்குத் துணையாகப் பவன்ராம் அவனது செயலாளராக நியமிக்கபட்டான். இருவரும் இணைந்து தொழிலை திறம்பட நடத்தினர். தொழிலில் அவன் தாத்தாவிடமும், மாமாவிடமும் இருந்து பல அறிவுரைகளைப் பெற்று அதன்படி நடந்தான். அதனாலேயே அவர்கள் இரண்டு பேரிடமும் அவனுக்கு நல்ல பெயர் இருந்தது.

சரியாக ஒரு மாதம் கழித்துச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஒரு ஒப்பந்த விசயமாகக் கிளம்பி கொண்டு இருந்தான். அவன் முதல் முறையாகத் தொழில் போட்டியில் நேரடியாகப் பங்கு பெற போகின்றான். வெளியில் செல்லும் முன் அவன் தாத்தாவிடம் வந்து அவரது ஆசிர்வாதம் பெற்றான். அவர் அவனைப் பூரிப்புடன் பார்த்தார்.

"உன் அம்மா உனக்குச் சிம்மஹாத்ரின்னு பெயர் வச்சதுக்குப் பொருத்தமா நீ இன்னைக்கு வெற்றி பெற்றுவிட்டு வரணும் சிம்மா." அவர் மகிழ்ச்சியோடு அவனை வாழ்த்தினார்.

சிம்மஹாத்ரி லெக்ஷ்மி நரசிம்மர் மலைக்கோவிலில் படியேறிச் செல்லும் போது தாத்தா இந்தக் கதையை அவனிடம் அடிக்கடி கூறுவார். அப்போது எல்லாம் அன்னை என்றதும் அவனுக்கு ராணியம்மா ஞாபகம் தான் வரும். ஆனால் வளர வளர அவனது அன்னை அவரல்ல என்று அவனுக்குப் புரிந்து போனது. ஆனால் இதுவரை அவன் தாத்தாவிடம் தனது அன்னையைப் பற்றிக் கேள்வி கேட்டு அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது இல்லை. தாத்தாவும் அவனிடம் இது பற்றி எதுவும் கூறியதில்லை.

"நிச்சயம் தாத்தா... வெற்றியோடு வருகிறேன்." என்றவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.
 

ஶ்ரீகலா

Administrator
சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஒப்பந்த இடத்திற்கு வந்து காத்திருந்தான். அங்கு நிறையப் பேர் வந்திருந்தனர். ஆனால் அவன் எதிர்பார்த்த நபர் வரவில்லை. அவர் பவதாரிணி... அவர்களது தொழிலுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குபவர் அவர் ஒருவர் மட்டுமே... எதிலும் அவர் தான் முதன்மையாக இருந்தார். அவனது நிறுவனம் கூட அவருக்கு அடுத்து தான் இருந்தது. அதனால் அவனுக்கு அவரைக் காணும் ஆவல் இயல்பாக ஏற்பட்டது. ஆனால் அன்று அவர் வரவில்லை. அதனால் அவன் சுலபமாக அந்த ஒப்பந்தத்தில் வெற்றி பெற்று விட்டான். இதையறிந்த தாத்தா மிகவும் மகிழ்ந்தார். பேரன் தங்களது தொழில்களை முதல் இடத்திற்குக் கொண்டு வந்து விடுவான் என்று அவர் பெருமிதம் கொண்டார்.

ஆனால் பேரனோ பவதாரிணியைச் சந்திக்க அவரது அலுவலகத்தில் காத்திருந்தான். அவனது வருகையை அறிந்து பவதாரிணி அவனை உடனே உள்ளே அழைத்தார். அவன் அவரது அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். மிகவும் வயதானவரை எண்ணி வந்தவனுக்கு அவரைக் கண்டு ஆச்சிரியமாக இருந்தது. அவருக்கு நாற்பது வயது இருக்கலாம். ஆனால் அவர் மிகவும் இளமையாக இருந்தார்.

"கங்கிராட்ஸ் யங் மேன்." அவர் புன்னகையுடன் அவனைக் கண்டு வாழ்த்தியபடி நாற்காலியில் அமர சொன்னார்.

"தேங்க்ஸ் மேடம்..." என்றபடி நாற்காலியில் அமர்ந்தவன், "நீங்க விட்டு கொடுத்ததால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது." என்று உண்மையை ஒத்துக் கொண்டான்.

"இனி உனக்கு வெற்றி மட்டுமே..." என்றவரின் குரல் கரகரத்து ஒலித்ததோ! அவரது விழிகள் கலங்கி போனதோ!

"போட்டி இல்லாம ஜெயிக்கிறதில் என்ன சுவாரசியம் இருக்கு? நீங்க போட்டிக்கு வந்தால் தான் தொழில் விளையாட்டு சுவாரசியமா இருக்கும் மேடம்." என்று புன்னகைத்தவனை ஒரு நிமிடம் கண்ணிமைக்காது பார்த்தவர்,

"எனக்குக் கொஞ்சம் பெர்சனல் வொர்க் இருக்கு. அதனால் தான் விலகினேன்." அவர் அவனிடம் உண்மையைச் சொன்னார்.

"உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் மேடம்." என்றவனைக் கண்டு கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

"நானும் தான் சிம்மா." என்று அவர் சொல்ல...

அவன் சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் சென்றதும் அவர் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்.

தொழிலில் மூழ்கி போனவனுக்கு அதன்பிறகு பவதாரிணி பற்றி நினைக்கக் கூட நேரம் இல்லை. ஆனால் அவரோ அவனைச் சந்தித்ததில் இருந்து அவனை மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தார்.

*********************************

"எப்படி உன்னைக் கண்டுபிடிச்சேன்னு பார்த்தியா? அத்தனை வெள்ளையாடுகளுக்கு மத்தியில் ஒரு கருப்பாடை கண்டுபிடிக்கிறது என்ன கஷ்டமா?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா படகின் நடுவே நடுநாயகமாக அமர்ந்து கொண்டு எதிரில் கை, கால் கட்டப்பட்டு இருந்தவனைக் கண்டு கேட்டான். அவன் தொழிலை கையில் எடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் அவன் அவனது எதிரிகளை எதிர்கொள்ளும் இடம் இது. இந்த இடம் பற்றியோ, இங்கு நடக்கும் சம்பவங்கள் பற்றியோ பவன்ராமுக்கு கூடத் தெரியாது.

"நீ அளவுக்கு அதிகமா கூழைக்கும்பிடு போடும் போதே எனக்கு உன் மீது சந்தேகம் தான். அதைவிட நீ அளவுக்கு அதிகமா என்னைப் புகழ்ந்து பேசின பாரு... அப்பவே உன் மேல் ஒரு கண்ணு வச்சிட்டேன். சொல்லு, யார் சொல்லி நீ கம்பெனிக்குள் வந்த? எதுக்காக வந்த?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா கேட்டதும் அவன் பயத்தில் நடுநடுங்கி போனான். அவன் அருகில் நின்றிருந்த இரண்டு பேரின் கைகளில் இருந்த துப்பாக்கி கண்டு அவனுக்குப் பயம் வராது இருக்குமோ!

"சார், உங்கப்பா தான் என்னை அனுப்பி வச்சார். அவர் சொல்லி தான் நான் உள்ளே வந்தது. உங்க ரகசியத்தைத் திருடி போட்டி கம்பெனிக்குக் கொடுக்கச் சொன்னாரு உங்கப்பா. இதைச் செய்றது மூலம் நீங்க கீழே விழணும்ன்னு அவர் நினைத்தார்." பயத்தோடு சொன்னவனைக் கண்டு,

"சோ, நீ நம்பிக்கை துரோகம் செஞ்சிருக்க... இதுக்கு உனக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா யோசித்தான்.

"சார், நான் பிள்ளை, குட்டிக்காரன்." என்று அவன் கெஞ்ச...

"அதை நீ துரோகம் பண்ணுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்." என்றவன் தனது ஆட்களை நோக்கி கண் காட்டினான்.

"ஐயோ வேண்டாம்." என்று எதிரி உயிர் பயத்தில் அலற...

"உனக்குக் கொடுக்கப் போற தண்டனையைப் பார்த்து அடுத்தத் துரோகி உருவாகக் கூடாது." என்ற சிம்மஹாத்ரி சத்யநாராயணா அங்கு வந்து நின்ற மற்றொரு படகில் ஏறி செல்ல... அவன் முதலில் இருந்த படகில் இருந்து அந்தத் துரோகியின் கடைசி அலறல் சத்தமாகக் கேட்டது. சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவனது அலறலை கண்டு கொள்ளாது சென்றான். தந்தையை நினைத்து அவனது மனம் கொதித்தது.

வீட்டிற்குள் நுழைந்ததும் சிம்மஹாத்ரி சத்யநாராயணா நேரே தந்தையைத் தேடி செல்ல... அங்கிருந்த தாத்தா அவனின் பின்னே பதற்றத்துடன் சென்றார். அவன் ஆத்திரத்துடன் தந்தையின் அறைக்குள் நுழைந்து அதே ஆத்திரத்துடன் அங்கு அமர்ந்திருந்த தந்தையின் சட்டையைப் பிடித்துக் கொத்தாகத் தூக்கினான்.

"சிம்மா, அவனை விடு." தாத்தா கத்தினார்.

"அவரை விடு." ராணியம்மா பயத்தில் அலறினார்.

"இவர் பண்ணிய வேலைக்குக் கொன்னால் தான் தகும்." என்றவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து ரவிவர்மன் நெற்றியில் வைத்தான்.

"ஆ..." என ராணியம்மா அலற...

"துப்பாக்கியை கீழே போடு சிம்மா." தாத்தா அவனைச் சத்தம் போட... ரவிவர்மன் பயத்தில் விழித்தார்.

"இவர் எனக்கு அப்பாவான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. இவர் என்னோட பிசினசை அழிச்சு என்னை அழிக்க ஆள் அனுப்பி இருக்காரு." அவன் கோபத்தில் மூச்சு வாங்கியபடி சொல்ல...

"அது எனக்கும் சொந்தமான பிசினஸ் தான்." ரவிவர்மன் மெல்ல வாயை திறந்தார்.

"ரவி, உன்னால் திறம்பட நடத்த முடியலைன்னு தானே நான் சிம்மா கிட்ட எல்லாத்தையும் கொடுத்தேன். பிறகு எதுக்கு நீ இப்படி நடந்துக்கிற?" தாத்தாவுக்கு மகன் மீது கோபம் வந்தது.

"இவன் எனக்குச் செலவுக்குப் பணம் கொடுக்க மாட்டேங்கிறான்." ரவிவர்மன் கோபத்தில் குதித்தார்.

"கண்டவ கூட நீ படுக்கிறதுக்கு நான் பணம் தரணுமா? முடியாது போடா." அவன் முதல் முறையாகப் பெற்ற தகப்பனை எடுத்தெறிந்து பேசினான். அவர் மீது அவ்வளவு கோபம் அவனுக்கு...

"பார்த்தீங்களா எப்படிப் பேசுறான்னு... எல்லாம் நீங்க கொடுக்கும் இடம்..." ரவிவர்மன் தந்தையிடம் எகிறினார்.

"அவன் சரியா தான் இருக்கான். நீ தான் சரியில்லை ரவி. இனியும் நீ இப்படி நடந்துக்கிட்டேன்னா... உனக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு மீடியா முன்னாடி சொல்லிருவேன். அதுக்குப் பிறகு இந்தச் சுகபோக வாழ்க்கையும் உனக்குக் கிடைக்காது." பெரியவர் மகனை மிரட்டவும் ரவிவர்மன் அமைதியாகி விட்டார்.

"சிம்மா, ரவியை விடு... இனி அவன் உன் விசயத்தில் தலையிட மாட்டான்." தாத்தா பேரனிடம் கூற...

"துரோகிக்கு மரணம் தான் பரிசு தாத்தா." அவன் தந்தை நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்த... ரவிவர்மா மரணப் பயத்தில் இருந்தார்.

"சிம்மா, என் மீது ஆணை... நீ அவனை விடு..." தாத்தா சொன்னதும் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் கரம் வேறுவழியின்றித் துப்பாக்கியை கீழே இறக்கியது. ரவிவர்மன் உயிர் பயத்தில் அங்கே இருந்து ஓடி விட்டார்.

"என்னைக்கா இருந்தாலும் உங்க மகன் உயிர் என் கையில் தான் போகும் தாத்தா." என்று கோபத்தோடு மொழிந்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.

முதல் முறையாகத் தாத்தாவிற்குப் பேரன் பற்றிய அச்சம் எழுந்தது. அந்த நொடி அவர் அந்த முடிவினை எடுத்தார். அதாவது பேரனுக்கும், வேங்கடபதி தேவா மகள் ரச்சிதாவுக்கும் திருமணம் பேசி முடிக்க வேண்டும் என்று... உடனே வேங்கடபதி தேவாவிடம் பேசி முடிவும் செய்தார். அதைப் பேரனிடம் கூறி உறுதி செய்தவர்... ராணியம்மாவுக்குத் தெரியாது மறைத்து விட்டார். ஏனெனில் ராணியம்மா ஜெய்பிரகாஷை போட்டிக்குக் கொண்டு வருவார். ஜெய்பிரகாஷுக்கு ரச்சிதாவை திருமணம் செய்து வைப்பதை விட, அவளைச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்குத் திருமணம் செய்து வைப்பதே சரி... அப்போது தான் சொத்துகளும் விட்டு போகாது, உறவும் விட்டு போகாது. ஏனோ தாத்தாவுக்குப் பேரன் தன்னை விட்டு விலகி போகும் ஒரு உணர்வு...

இந்த விசயம் கேள்விப்பட்டு ரச்சிதாவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவளுக்குச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை கண்டால் கதாநாயகனை காண்பது போல் ஒரு மயக்கம் இருந்தது. அதனால் அவள் உடனே சம்மதம் சொல்லிவிட்டாள். அதன்பிறகு இருவரும் அலைப்பேசியில் பேசி கொண்டனர். அவன் ஹைதராபாத்திற்குச் செல்லும் போதும், அவள் விசாகப்பட்டிணம் வரும் போதும் இருவரும் நேரில் சந்தித்துத் தங்களது காதலை பரிமாறி கொண்டனர். காதலர்களுக்கே உண்டான கிளுகிளுப்பு அவர்களிடையே இருந்தது. சிறு அணைப்பு, முத்தம் என்று அவர்களது காதல் வளர்ந்தது.

அன்று நண்பர்கள் மூவரும் ராஜ்குமாரின் திரைப்படத்தின் 'ப்ரீமியர் ஷோ'வில் சந்தித்துக் கொண்டனர். ராஜ்குமார் மற்ற இருவரையும் வற்புறுத்தி அழைத்து இருந்தான். அதனால் மற்ற இருவரும் வந்திருந்தனர். படம் பார்த்து முடித்து விட்டு மூவரும் நட்சத்திர விடுதி அறையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பவன்ராம் அலைப்பேசி அழைத்தது. அவனது அன்னை அழைத்து இருந்தார். அவன் அழைப்பை எடுத்து உற்சாகமாகப் பேச தொடங்கினான்.

"ம்மா, இன்னைக்கு ராஜ் படத்தில் வந்த ஹீரோயின் அப்படியொரு அழகும்மா." என்று அவன் சொல்ல...

"உனக்குப் பிடிச்சிருந்தா அவளையே கல்யாணம் பண்ணிக்கோடா." அவன் அம்மா சம்மதம் கூற... அதைக் கேட்டு நண்பர்கள் இருவரும் பவன்ராமை ஓட்டினர்.

அதற்குள் ராஜ்குமாருக்கு அவனது தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. அவனும் அழைப்பை ஏற்றுத் தந்தையுடன் நட்பாகப் பேசி கொண்டிருக்க... சிம்மஹாத்ரி சத்யநாராயணா மட்டும் அமைதியாக அமர்ந்து இருந்தான். இவர்களைப் போன்று அவனால் யாரிடமும் மனம் விட்டு பேச முடியாது. அப்படிப் பேசுவதற்கு அவனுக்கு யாரும் இல்லை. ஏனோ அவனது மனதில் பெரும் பாரம் ஒன்று அழுத்தியது. அதற்கு மேல் அங்கிருக்க முடியாது அவன் வீட்டிற்குக் கிளம்பி விட்டான்.

வீட்டிற்கு வந்தவனுக்குத் தலைவலிப்பது போலிருக்க... அவன் ஆயாசத்துடன் வெறுமையான மனநிலையில் படுக்கையில் படுத்து விழிகளை மூடினான். அநாதை போன்று உணர்வு தோன்றியதில் அவனுள் கழிவிரக்கம் எழுந்தது. அப்போது மெல்லிய விரல்கள் அவனது தலையை நீவிவிட... அவன் விழிகளைத் திறந்து பார்த்தான். அங்கு ரச்சிதா அவன் அருகில் அமர்ந்து இருந்தாள். அவளைக் கண்டதும் அவனது முகம் மலர்ந்தது.

"நீ எப்போ வந்த? நீ வர்றேன்னு சொல்லவே இல்லை."

"மதியம் தான் வந்தேன். சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னு சொல்லலை." என்றவள் "தலைவலிக்குதா பாவா?" என்றவள் அவனது தலையை மென்மையாய் வருடி விட...

அவளது செயலில் அவனது அகமும் மலர்ந்து போனது. அவன் அவளது பின்னங்கழுத்தின் மீது ஒற்றைக் கை வைத்து அழுத்தி அவளது முகத்தைத் தனது முகம் நோக்கி கொண்டு வந்தான். அவள் இமைகள் படபடக்க அவனைப் பார்த்தாள். அவளது இமை படபடத்ததில் அவனது இதயம் படபடவென அடித்துக் கொண்டது. இருவருக்குமே இளம் வயது... புத்தியை விட உணர்வுகளுக்கு அடிமையாகும் வயது... பெண்ணவள் அருகாமையில் ஆணவன் மதியிழந்து தான் போனான். அவன் அதிரடியாய் அவளது இதழ்களைச் சிறை செய்தான். அவனது அதிரடியை அவளுமே எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளும் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாள்.

அநாதை போன்று வெறுமையுடன் இருந்தவனுக்கு உறவாக வந்தாள் அவள்... அந்த நொடி பெண்ணவள் ஆணவனுக்கு உயிராய் மாறி போனாள். தாத்தா சொன்னதற்காகச் சம்மதித்த திருமணப் பந்தம் என்றாலும் இப்போது இந்தப் பந்தம் அவனுக்கு உயிர் பந்தமாக மாறிப் போனது. அவன் அவள் மீது உயிரையே வைத்தான்.

அவன் அவளுள் மேலும் மேலும் புதைந்து கொண்டே போக... அவளும் அவனுக்கு ஏற்ப ஒத்துழைத்தாள். இறுதியில் ஆணவன் தான் சுதாரித்துக் கொண்டு விலகினான். சிறு பெண்ணால் அவ்வளவு எளிதில் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் அவனை விட்டு விலக மறுக்க... அவன் தான் சிரித்தபடி விலகினான்.

"என் நிலைமை கண்டு உங்களுக்குச் சிரிப்பா இருக்கா பாவா?" அதற்கும் ரச்சிதா கோபித்துக் கொண்டாள்.

"எனக்காக நீ இருக்கிற... நீ மட்டும் தான் இருக்கிற என்பதால் வந்த சிரிப்பு இது." அவன் சொன்னதன் அர்த்தம், அதன் பின்னே இருந்த வலியை அவள் உணர்ந்தாளோ என்னவோ!

"நீங்க என்னைக் கேலி செஞ்ச மாதிரி இருந்தது."

"நான் உன்னைக் கேலி செய்வேனா?" என்றவனைக் கண்டு அவள் காதல் பார்வை பார்த்தாள். அவளது பார்வை அவனைக் காந்தம் போல் இழுத்தது.

"இதற்கு மேல் இங்கிருப்பது நல்லதல்ல... வா, ஷாப்பிங் போகலாம்." அவன் அவளை வெளியில் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

தாத்தா மேலிருக்கும் மரியாதை, மாமா மேலிருக்கும் மதிப்பு எல்லாம் சேர்ந்து தான் தன்னைக் கட்டுப்படுத்தி இருக்கிறது, நல்லவனாக வைத்திருக்கிறது என்று அவனாக எண்ணி கொண்டான். விதியோ அவன் வேறு ஒருத்திக்கு சொந்தமானவன் என்பதால் விலகியிருக்கச் செய்திருக்கிறது என்பதை அந்த நொடி அவன் அறியவில்லை, உணரவில்லை. வாழ்க்கையே புதிர் விளையாட்டு தானே!

"யாரோ யாருக்கிங்கு யாரோ,
அவனுக்கு இங்கு அவளே,
அவளுக்கு இங்கு அவனே,
மாற்ற முடியாத பந்தம்,
உடைக்க முடியாத சொந்தம்,
கடவுள் போட்ட முடிச்சு,
விதி பிணைத்த பிணைப்பு,
அவனும், அவளும் மட்டுமே...!!!"

நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 35

"சிம்மா, நீ எனக்கு ஒரு உதவி பண்ணணுமே?" ராஜ்குமார் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் மெல்ல தயக்கத்துடன் கேட்டான்.

"எதுக்கு இத்தனை தயக்கம் ராஜ்? செய் என்று சொன்னால் செய்துவிட்டு போகிறேன்." என்றவனைக் கண்டு ராஜ்குமாரின் முகம் மலர்ந்தது.

"இந்த முறை எலெக்சனில் நீ என்னோட அப்பாவுக்குச் சப்போர்ட் பண்ணணும். ஊரில் உங்க குடும்பத்துக்குத் தான் அதிக மரியாதை. நீங்க சொன்னால் தான் மக்கள் கேட்பார்களாம். முன்பு உன்னோட அப்பா தான் என்னோட அப்பாவுக்கு ரொம்பச் சப்போர்ட்டா இருந்திருக்கிறார். இடையில் என்ன நடந்ததுன்னு தெரியலை. இருபத்தியைந்து வருசமா அப்பாவால் தேர்தலில் நிற்க முடியலை. ஆனா இந்த முறை தேர்தலில் நிற்கணும்ன்னு அவர் ஆசைப்படுறார். அப்பா உன் தாத்தா கிட்ட சப்போர்ட் கேட்டு இருப்பார் போல... இப்போ நீ தான் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறதா தாத்தா சொல்லிவிட்டார். அதான் உன்னிடம் உதவி கேட்கிறேன். நீ தான் எனக்கு உதவி பண்ணணும் சிம்மா." ராஜ்குமார் இறைஞ்சி கேட்டுக் கொண்டான்.

ராஜ்குமார் சொன்ன விசயங்கள் ஏதோ தெளிவில்லாதது போலிருந்தது. அதனால் சிம்மஹாத்ரி சத்யநாராயணா யோசித்தான்.

"எனக்கு அரசியல் பத்தி எந்த ஐடியாவும் இல்லை. யோசித்துச் சொல்கிறேன்." என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா நேரே தாத்தாவிடம் வந்து ராஜ்குமார் தந்தை ஜனார்த்தனன் பற்றிக் கேட்டான்.

"ஜனாவால் இருபத்தியைந்து வருசமா தேர்தலில் நிற்க முடியவில்லை. இதுக்கு மேல் அவன் தேர்தலில் நின்னு எப்படி ஜெயிக்கப் போகிறான்? எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தான் அவனுக்குச் சப்போர்ட் பண்ணுறதை பத்தி யோசிச்சேன். ஒத்து வராதுன்னு தெரிஞ்சு விலகி விட்டேன்." என்று தாத்தா மழுப்பலாகப் பதில் சொன்னார். அந்த இருபத்தியைந்து வருட கணக்கும் அவனது வயதும் ஒன்றாக இருப்பதை இணைத்து பார்க்க அந்தக் கணம் அவனுக்குத் தோன்றவில்லை. யோசித்து இருந்தால் அப்போதே அவனுக்கு விடை தெரிந்திருக்கும். தனக்கும், ஜனார்த்தனனுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது? என்று நினைத்து அவன் அதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவில்லை. சிந்தித்து இருந்தால் இதன் பின்னணியில் இருக்கும் பெண் சிங்கத்தைப் பற்றி அவன் அறிந்திருப்பான்.

அப்படியிருந்தும் சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஜனார்த்தனை பற்றித் தொகுதியில் விசாரித்தான். மேலோட்டமாகப் பார்த்தால் அவரை எல்லோரும் நல்லவர் என்றனர். ஆனால் ஆழ்ந்து விசாரிக்கும் போது தான் தெரிந்தது, அவரது சாதி வெறி... தனது சாதிக்காக அவர் எதையும் செய்யத் துணிபவர் என்று... ஒருமுறை அவர் நடத்திய கலவரத்தில் பல உயிர்கள் பறி போனதை பற்றிச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா அறிந்து கொண்டான். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவனது தொகுதியில் நேர்மையான ஒருவருக்குத் தனது ஆதரவினை தெரிவித்தான். இதனை அறிந்த ராஜ்குமார் நண்பன் மீது கோபம் கொண்டான். சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவனுக்கு விளக்கம் கூற முற்பட்ட போது கூட அவன் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை.

"விடுடா சிம்மா... அவனுக்கு அவன் அப்பா உசத்தி. நமக்கு மக்கள் உசத்தி. அவனே திருந்தி வருவான்." பவன்ராம் இந்த விசயத்தை விட்டுவிடச் சொல்ல... சிம்மஹாத்ரி சத்யநாராயணா அமைதியாகி விட்டான்.

இப்படியே நாட்கள் சென்ற போது தான் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்குப் பவதாரிணியிடம் இருந்து அழைப்பு வந்தது. அன்றைய சந்திப்பிற்குப் பிறகு அவன் அவரைப் பற்றி நினைக்க மறந்தே போனான். அவனது வேலைப்பளு அப்படி... உடனே அவன் அவரைச் சந்திக்க எண்ணி அவரது வீட்டிற்குச் சென்றான். அது வீடு இல்லை. அரண்மனை... அவர்களைப் போன்றே பவதாரிணியும் அரண்மனையின் வாரிசு போலும்... இதை அவர் எங்கேயும் வெளிப்படுத்தியது இல்லை. அவனுக்கு மிகுந்த ஆச்சிரியமாக இருந்தது.

உள்ளே வந்தவனை நேரே அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர். அவரது அறைக்குள் நுழைந்தவன் அங்குக் கட்டிலில் படுத்திருந்த அவரைக் கண்டு அதிர்ந்து போய் நின்றான். பவதாரிணி எத்தனை அழகு... ஆனால் இப்போது அவரது அத்தனை அழகும் அழிந்து, முடிகள் கொட்டி, தேகம் கருத்து மெலிந்து சிறு உருவமாக அவர் படுத்து இருந்தார்.

"வா சிம்மா..." அவர் மெல்லிய குரலில் அவனை அழைத்த போதும் அவரது கம்பீரம் சிறிதும் குறையவில்லை.

"உங்களுக்கு என்னவானது மேடம்?" அவன் ஓடிவந்து அவர் அருகில் அமர்ந்து அவரது கையைப் பற்றிக் கொண்டு கவலையாகக் கேட்டான்.

"புற்றுநோய்... இறுதி நிலை..." என்றவர் அவனைக் கண்டு மென்மையாகப் புன்னகைத்தார்.

"மேடம்..." அவனது விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது. அவனுக்கே அவனது அழுகை ஏனென்று தெரியவில்லை. அவன் கண்ணீரை கூடத் துடைக்க இயலாது அமர்ந்து இருந்தான்.

"அம்மா..." என்று அவர் அவனது அழைப்பினை திருத்தினார். அதைக் கேட்டு அவன் திகைத்துப் போனான். இப்போது புரிந்தது, அவனது கண்ணீருக்கான காரணம்... உரிமையான உறவை கண்டு வந்த கண்ணீர் இது என்று...

"அம்மா..." என்று மனதார அழைத்தவன், "நீங்க எப்படி?" அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னால் அதிகம் பேச முடியாது சிம்மா. இந்த டைரியை படித்துத் தெரிந்து கொள். நான் உனக்காக எழுதியது." அவர் தனது தலைப்பக்கம் இருந்து ஒரு நாட்குறிப்பை எடுத்து அவனிடம் நீட்டினார்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா கைகள் நடுங்க அதை வாங்கியவன் மெல்ல பிரித்துப் பார்த்தான். முதல் பக்கத்திலேயே 'அன்பு மகன் சிம்மாவுக்கு' என்று ஆரம்பித்து இருந்தது. அடுத்தப் பக்கத்தைப் படிக்க ஆரம்பித்தான். அவர் தனது வாழ்க்கையைப் பற்றி எழுதியிருந்தார்.

பவதாரிணியும், ஜனார்த்தனன் மனைவி லெக்ஷ்மியும் நல்ல தோழிகள்... லெக்ஷ்மியின் தந்தை அவர் பள்ளி படிப்பு படிக்கும் போதே ஜனார்த்தனனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார். திருமணம் நடந்தாலும் இவர்களது நட்பு அப்படியே தான் தொடர்ந்து கொண்டு இருந்தது. ஜனார்த்தனனும் அதைப் பெரிதாக ஆட்சேபிக்கவில்லை. ஜனார்த்தனனுக்குப் பவதாரிணி பற்றிய உண்மை தெரியாது. பவதாரிணியும் தான் அரண்மனையின் இளவரசி என்கிற அடையாளம் இல்லாது சாதாரணப் பெண்ணாகத் தான் வலம் வந்தார்.

அப்படியொரு நாளில் தான் ரவிவர்மன் ஜனார்த்தனனை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்திருந்த பவதாரிணியை அவர் பார்த்து விட்டார். பெண் பித்தனான அவர் பவதாரிணியின் அழகில் மயங்கித்தான் போனார். பவதாரிணியை அனுபவிக்க வேண்டும் என்று அவர் ஆசை கொண்டார். உடனே அவர் தனது நண்பனிடம் இந்த விசயத்தைச் சொன்னார். ஜனார்த்தனனுக்கு ரவிவர்மன் நட்பு வேண்டும். ஏனெனில் ரவிவர்மனின் ஆதரவில் தான் அவர் இதுவரை தனது தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். அரசியல் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள ஜனார்த்தனன் இந்த ஈனத்தனமான காரியத்திற்குச் சம்மதித்தார். பவதாரிணி சாதாரண வீட்டுப் பெண் என்றெண்ணி... ஏதேனும் பிரச்சினை வந்தால் எளிதில் சமாளித்து விடலாம் என்று அவர் சாதாரணமாக நினைத்து விட்டார்.

அதற்காக ஒரு நாளை தேர்ந்தெடுத்து ஜனார்த்தனன் தனது அன்னை, மனைவியை வெளியூர் அனுப்பி வைத்து விட்டு... லெக்ஷ்மி அழைத்தது போன்று பவதாரிணியைத் தனது வீட்டிற்கு அழைத்தார். பவதாரிணியும் விசயம் தெரியாது அங்கு வந்தார்.

"லெக்ஷ்மி இப்போ வந்திருவாள். நீ உட்காரும்மா." என்று அன்போடு சொன்னவர் அவருக்குப் பருக பழச்சாறு கொடுத்து உபசரித்தார்.

பழச்சாறு பருகிய அடுத்தச் சில நிமிடங்களில் பவதாரிணி மயங்கி விழ... அங்கு ஏற்கெனவே அறையில் காத்திருந்த ரவிவர்மனுக்குப் பெண்ணவள் இரையாகப் படைக்கப்பட்டாள். மயக்கம் தெளிந்து எழுந்த பவதாரிணிக்கு மெல்ல தான் விசயம் உறைத்தது. தனது அருகில் போதை மயக்கத்தில் படுத்திருந்த ரவிவர்மனை தீயாய் முறைத்து பார்த்தவர் அடுத்த நொடி அருகிலிருந்த தலையணையை எடுத்து ரவிவர்மன் முகத்தில் வைத்து அழுத்தினார். மூச்சு திணறி எழுந்த ரவிவர்மன் மெல்லிய பெண்ணவளை தள்ளி விட்டு விட்டு கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடி வந்தார். அங்கு அமர்ந்திருந்த ஜனார்த்தனன் நண்பனை கண்டு பதட்டத்துடன் எழுந்தார். பின்னால் ஓடி வந்த பவதாரிணியைக் கண்டு,

"ஏய் பொண்ணு, அமைதியா இரு." என்று அதட்ட...

"என்னைக் கொலை பண்ண பார்க்கிறாள்டா ஜனா." கோழை ரவிவர்மன் பயத்தில் நடுங்க...

"உன்னைக் கொன்னால் தான்டா எனக்கு நிம்மதி." என்று எகிறிய பவதாரிணியை அங்கு இருந்த அடியாட்கள் பிடித்துக் கொண்டனர்.

"இவளை பிடிச்சு வெளியில் தள்ளுங்க." ஜனார்த்தனன் உத்தரவிட...

"என்னைச் சாதாரணமா நினைச்சிட்டீங்கல்ல... நான் யாருன்னு காட்டுறேன்." பவதாரிணி வீர பெண்மணியாய் சபதம் போட்டார்.

"உன்னால் என்ன பண்ண முடியும்?" ஜனார்த்தனன் அலட்சியமாகச் சொல்ல... ரவிவர்மன் அவளைக் கண்டு நக்கலாய் சிரித்தார். எல்லாம் பணம், பதவி இருக்கும் தைரியம்...

பவதாரிணி வீட்டிற்கு வந்தவர் தலை முழுகிய பிறகு நிதானமாகச் சிந்தித்தார். அடுத்து வந்த நாட்களில் அவர் நிதானமாய்ச் சிந்தித்துப் பெண் சிங்கமாய்த் தனது தந்தை முன் வந்து நின்றார். அவருக்கு அன்னை இல்லை. அவருக்கு அம்மா, அப்பா எல்லாம் அவரது தந்தை மட்டும் தான்.

"என்ன பவா? என்ன விசயம்?" அன்போடு கேட்ட தந்தையைக் கண்டு அவருக்குக் கண்கள் கரித்தது. தான் சொல்ல போகும் விசயத்தை அவரால் எப்படித் தாங்க முடியும் என்று அவருக்கு யோசனையாக இருந்தது. ஆனாலும் இந்த விசயத்தை மறைக்க இயலாதே. அதனால் பவதாரிணி மனதை கடினப்படுத்திக் கொண்டு தந்தை முன் வந்து அமர்ந்தார்.

"அப்பா, நான் சொல்ல போகும் விசயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைய கூடாது." என்று அவர் பீடிகை போட...

"என்னம்மா சொல்ல போற?" மகளின் பீடிகையைக் கண்டே அந்த அன்பு தந்தைக்கு உள்ளம் பதறியது.


தந்தையின் பதற்றம் கண்டு அவர் அருகில் சென்று அமர்ந்த பவதாரிணி அவரது தோளில் தலைசாய்ந்து அவரது கரத்தினை இறுக பற்றி ஆறுதல் கூறியவர்... மெல்ல தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லலானார். அதைக் கேட்டு அந்தத் தந்தையின் இதயம் சுக்குநூறாய் உடைந்து போனது. அவரது விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது. மகளை அணைத்திருந்த அவரது கரங்கள் தனது அணைப்பினை மேலும் இறுக்கியது. ஆணல்லவா! அந்தப் பெற்றவரால் மகளின் நிலையறிந்து ஓவென்று கதறியழ முடியவில்லை. அதைவிட அப்படி அழ முடியாது மகளின் கரம் அவரை ஆறுதலாய்ப் பற்றியிருந்தது. நியாயத்திற்குத் தந்தை தான் மகளுக்கு ஆறுதல் கூற வேண்டும். இங்கோ நிலைமை தலைகீழ்... அந்த நிலையிலும் மகளின் நிதானம், தைரியம் கண்டு தந்தையும் நிதானத்தைக் கையில் எடுத்தார்.
 

ஶ்ரீகலா

Administrator
"அவன்ங்க இரண்டு பேரையும் நான் உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன். இவன்ங்க எல்லாம் உயிர் வாழவே தகுதி இல்லாதவங்க." தந்தைக்கு அந்தக் கயவன்கள் மேல் அத்தனை வெறுப்பு...

"உயிர் போனால் வலியை எப்படி அனுபவிக்க முடியும்ப்பா?" என்று கேட்ட மகளை அவர் புரியாது பார்த்தார்.

"அவங்களைப் போலீசில் பிடிச்சு கொடுத்து சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கவா பவா?"

"சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்குப்பா. ஏதாவது ஒரு ஓட்டையின் வழியே தப்பிச்சு வெளியில் வந்திருவாங்க. அதைவிட உங்க மகள் ஒருமுறை அசிங்கப்பட்டது போதும். கோர்ட் படியேறி தினமும் அசிங்கப்பட வேண்டாம்." என்ற மகளின் கருத்து ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அதனால் தந்தை அமைதி காத்தார்.

"அவன்ங்க ரெண்டு பேரும் உயிரோடு இருக்கும் போதே வலியை அனுபவிக்கணும். நான் விசாரிச்ச வரை ஜனார்த்தனன் தனது அரசியல் லாபத்துக்காக என்னைப் பகடைக்காயா பயன்படுத்திக்கிட்டான். எந்த அரசியலுக்காக அவன் இதைச் செய்தானோ... அந்த அரசியலை விட்டே அவனை ஓட வைக்கணும்ப்பா." என்ற பவதாரிணியின் விழிகளில் பழிவெறி மின்னியது.

"நிச்சயமா பவா... அவனால் எந்த அரசியல் கட்சியிலும் இருக்க முடியாதபடி பண்ணிர்றேன்." அவரது தந்தை உறுதி அளித்தார். தந்தையின் செல்வாக்கு பவதாரிணிக்கு தெரியும். அதனால் அவர் சற்று நிம்மதி புன்னகை புரிந்தார்.

"ரவிவர்மனுக்குப் பணம் இருக்கும் திமிர். அந்தப் பணத்தை அழிக்கணும். அவனது திமிரை அடக்கணும்ப்பா."

"செஞ்சிரலாம் பவா. இப்பவே அவன் ஒரு செல்லாக்காசு தான். அவனது அப்பாவுக்காகத் தான் நான் தொழிலில் போட்டி போடாது அமைதியாக இருந்தேன். இனி விட மாட்டேன்." என்று தந்தை மகளுக்கு ஆறுதல் கூறினார்.

"போதும்ப்பா... எனக்கு இது போதும்." பவதாரிணி புன்னகை மீண்டது.

"ஆனால் உன் வாழ்வு...?" தந்தைக்கு மகளை நினைத்து வருத்தமாக இருந்தது.

"என் வாழ்வுக்கு என்னப்பா? அது நன்றாக இருக்கும். கவலைப்படாதீங்க." என்ற மகளைக் கண்டு அவருக்குக் கவலையாக இருந்தது.

தந்தை சொன்னது போல் அனைத்தையும் செய்தார். ஜனார்த்தனன் அரசியல் கனவு பாதியில் கலைக்கப்பட்டது. இந்தக் கட்சி இல்லை என்றால் அந்தக் கட்சி என்று தாவ நினைத்தவருக்கு எந்தக் கட்சியிலும் இடம் இல்லாது போனது. அதற்குப் பவதாரிணியின் தந்தை வாரியிறைத்த நன்கொடை பணம் உதவியது. அப்போது தான் ஜனார்த்தனனுக்கு இதன் பின்னணியில் பவதாரிணி மற்றும் அவரது தந்தை இருப்பது தெரிந்தது. பெண் சிங்கமான பவதாரிணி சொன்னதைச் செய்து காட்டி விட்டார். ஜனார்த்தனன் அவமானத்தில் தலைகுனிந்தார். ஜனார்த்தனால் பவதாரிணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் எட்ட முடியாத உயரத்தில் பெண் சிங்கம் இருந்தது.

அதே போன்று ஆதித்ய சத்யநாராயணாவுக்கு எதிராகக் காய்களை நகர்த்தித் தொழிலிலும் வெற்றி பெற்று காட்டினார் பவதாரிணியின் தந்தை. இது எல்லாம் ஏதேச்சையாக நடக்கிறது என்றே நினைத்தார் ஆதித்ய சத்யநாராயணா. சிம்மஹாத்ரி சத்யநாராயணா பிறக்கும் வரை... ஆனால் ரவிவர்மனுக்குத் தான் செய்த தவறு நினைவில் நின்று உயிர் பயத்தில் குள்ளநரி பதுங்கி கொண்டது. பவதாரிணி மற்றும் அவரது தந்தை கண்டு பயந்து நடுங்கியது அந்தக் குள்ளநரி.

அந்த நிகழ்வுக்குப் பிறகு பவதாரிணி லெக்ஷ்மியை சந்திக்கச் செல்லவில்லை. லெக்ஷ்மி தான் தோழியைச் சந்திக்க வந்தார். அதற்கு மேல் தோழியிடம் உண்மையை மறக்க இயலாது பவதாரிணி அனைத்தையும் கூறி கதறியழுதார். லெக்ஷ்மி விசயம் கேள்விப்பட்டுத் துடிதுடித்துப் போனார். தோழிக்கு ஆறுதல் கூறிவிட்டு வீட்டிற்கு வந்தவர் கணவரிடம் சண்டை போட...

"என்னமோ நான் அவளைத் தொட்டு உனக்குத் துரோகம் பண்ணிட்ட மாதிரி சண்டைக்கு நிற்கிற. இந்த விசயத்தில் நான் ராமன்னு உனக்குத் தெரியாது?" ஜனார்த்தனன் கொஞ்சமும் குற்றவுணர்வு இல்லாது பேசினார்.

"அதைவிடப் பெரிய துரோகம் நீங்க பண்ணியிருக்கீங்க. நம்பிக்கை துரோகம்... பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு திமிரா வேற பேசுறீங்களா?" லெக்ஷ்மி சண்டை போட்டார். ஜனார்த்தனன் அன்னை சாரதா வேறு மகனை திட்டி தீர்த்தார்.

அதற்கு எல்லாம் ஜனார்த்தனன் அசையவில்லை. அதன் பிறகு லெக்ஷ்மி கணவனிடம் இருந்து ஒதுங்கி விட்டார். ஆனால் அவரது வயிற்றில் கரு தங்கி இருந்ததை அவர் உணரவில்லை. கணவரிடம் இருந்து பிரிந்திருப்பவருக்கு ஆறுதலாக இருப்பதற்காக இந்தக் குழந்தையைப் பரிசாகக் கடவுள் அளித்தாரோ என்னவோ!

சில மாதங்கள் கழித்துத் தான் பவதாரிணிக்கு தான் குழந்தை உண்டாகி இருப்பது தெரிய வந்தது. அதை அவமான சின்னமாகக் கருதி அவர் அழிக்க நினைக்கவில்லை. மாறாகக் குழந்தை என்ன தவறு செய்தது என்றெண்ணி அவர் அதைப் பெற்றெடுக்க முடிவு செய்தார். மகளின் எல்லா முடிவுக்கும் தந்தை உறுதுணையாக இருந்தார். அடுத்த ஆறாவது மாதம் பவதாரிணி அழகான மகனை பிரசவித்தார். மகனை கைகளில் ஏந்திய போது அவருக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

"இதுவரை எல்லாவற்றையும் மறைத்துச் செய்து விட்டோம் பவா. இனி இந்தப் பாவத்தை மறைக்க முடியாது. என்ன செய்யப் போகிறாய்?" என்று அவரது தந்தை கேட்டார். அவருக்குப் பேரன் மீது வெறுப்பு தான் வந்தது. முறையாய் வந்த பேரனில்லையே!

தந்தையின் வார்த்தைகளில் பவதாரிணி விழிகளைச் சுருக்கி யோசித்தவர் பின்பு, "அப்பா, ஆதித்ய சத்யநாராயணாவை வர சொல்லுங்க." என்று உறுதியான குரலில் சொன்னார்.

"அவர் எதுக்கும்மா?" தந்தைக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"இவன் பாவம் இல்லைப்பா. இவன் நான் தினமும் கும்பிடும் லெக்ஷ்மி நரசிம்மன். இவனுக்கான முறையான அங்கீகாரத்தை என்னால் கொடுக்க முடியாது. கழுத்தில் தாலி இல்லாது, கணவன் இல்லாது என்னால் இவனுக்கு நற்பெயரை வாங்கிக் கொடுக்க இயலாது. இவன் மதிப்பும், மரியாதையுமா வளரணும்ன்னா இவன் அங்கே இருப்பது தான் ஒரே வழி." பவதாரிணி திடமாய் முடிவெடுத்தார்.

"பவா, நான் ஏதோ தெரியாம பேசிட்டேன்." தந்தை மன்னிக்கும் குரலில் இறைஞ்ச...

"உங்க மனநிலையை என்னால் உணர முடியுதுப்பா. உங்களுக்கு உங்க மகள் முக்கியம். எனக்கு என் மகன் எதிர்காலம் முக்கியம்." என்ற மகளின் வார்த்தைகளை உடனே தந்தை நிறைவேற்றினார்.

பவதாரிணியின் தந்தை ஆதித்ய சத்யநாராயணாவை சந்தித்து அனைத்து உண்மைகளையும் கூறி... தனது மகளைக் காண வருமாறு அழைத்தார். ஆதித்ய சத்யநாராயணா பதறியபடி உடனே ஓடி வந்தார். ஏனெனில் பவதாரிணியின் தந்தையின் செல்வாக்கு பற்றி அவருக்குத் தெரியும். அப்படிப்பட்டவர் உண்மையைத் தான் கூறுவார் என்று அவர் நினைத்தார். அதைவிட மகனின் பொறுக்கித்தனமும் அவர் அறிந்த ஒன்று தானே.

ஆதித்ய சத்யநாராயணா பவதாரிணியைச் சந்தித்தார். அவருடன் இருந்த பேரனையும் கண்டார். அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வார்த்தைகளற்று அமைதியாக இருந்தார்.

"நாங்கள் சொல்வதில் உண்மை இல்லை என்று நீங்க நினைத்தால்... தாராளமாக டிஎன்ஏ டெஸ்ட் செஞ்சு பாருங்க." பவதாரிணி அவரிடம் தன்மையுடன் சொல்ல... அந்த நிலையிலும் தன்மை மாறாது இருந்த பவதாரிணியைக் கண்டு அவரது மனம் நெகிழ்ந்தது.

"டிஎன்ஏ டெஸ்ட் எதுக்கும்மா? அதான் குழந்தையின் சாயலே சொல்லுதே... அவன் எங்க பரம்பரைன்னு..." என்றவரை கண்டு பவதாரிணியின் முகம் மலர்ந்தது.

"நான் ஒண்ணு சொன்னால் தப்பா நினைக்காதேம்மா." என்றவரை கண்டு பவதாரிணி புரியாது பார்த்தார்.

"உன்னை என் மகனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறேன். உன் களங்கத்தை நான் துடைக்கிறேன். அதுவும் குழந்தைக்காக..." பெரியவர் நடந்த தவறை சரி செய்ய முனைந்தார்.

"முறையற்று நடந்த ஒன்றை முறையோடு நடத்த சொல்றீங்களா சார்." பவதாரிணியின் ஏளன குரலில் ஆதித்ய சத்யநாராயணா திகைத்துப் போனார்.

"என் குழந்தைக்கான அங்கீகாரத்தை உங்களால் தான் கொடுக்க முடியும். அதனால் தான் அவனை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன். அதுக்காக நான் என் வாழ்க்கையை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. என் வழி தனிவழி சார்." என்று நிமிர்வாகச் சொன்ன பெண்ணவளை அவருக்கு நிரம்பப் பிடித்திருந்தது. அவள் தனது மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தார். நினைவு மட்டுமே... நனவாக்க முடியாதபடி அவரது மகனது செயல் இருந்தது.

"நீ சொல்வது சரி தானம்மா. குழந்தைக்கு மூன்று மாதங்கள் முடிந்ததும் நான் வந்து வாங்கிக் கொள்கிறேன்." என்றவரை புரியாது பார்த்தனர் தந்தையும், மகளும்...

"மூன்று மாதங்கள் வரையாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கட்டும் என்கிற நல்ல எண்ணம் தான். அது மட்டுமல்ல இந்த மூன்று மாதங்களுக்குள் என் மகனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி முடிக்க வேண்டும் என்கிற சுயநலமும் கூட... அவன் கெட்டவன் தான். ஆனால் என் மகனாகப் போய்விட்டானே." பெரியவர் மனம் நொந்து சொன்னவர் கிளம்பி சென்று விட்டார்.

இடைப்பட்ட மூன்று மாதங்களில் ஆதித்ய சத்யநாராயணா சொன்னது போல் மகனது திருமணத்தை முடித்து விட்டு வந்து பேரனை வாங்கிக் கொள்ள வந்தார்.

"இவனுக்கு நான் சிம்மஹாத்ரின்னு பெயர் வைத்திருக்கிறேன்." என்ற பவதாரிணியைக் கண்டு அவரது முகம் மலர்ந்தது.

"நல்லது... எங்க குலதெய்வ பெயரம்மா."

"இந்தப் பெயருக்குக் காரணம் அதுவல்ல சார்." என்று கூறிய பவதாரிணி மர்மமாகப் புன்னகைத்தார். அந்தப் புன்னகைக்கான அர்த்தம் அப்போது அவருக்கு விளங்கவில்லை. பின்னாளில் தான் விளங்கியது.

"கூடவே உங்க பரம்பரை அடையாளமாய்ச் சத்யநாராயணா பெயரையும் இணைத்து இருக்கிறேன்." என்ற பவதாரிணியைக் கண்டு அந்தப் பெரியவர் கையெடுத்து கும்பிட்டார். ஏனோ தெரியவில்லை அந்தச் சிறுபெண் அவரது கண்களுக்கு தெய்வமாகத் தெரிந்தாள்.

"இனி நீ என்ன பண்ண போறம்மா?" ஆதித்ய சத்யநாராயணா கேட்டார்.

"மேலே படிக்கப் போறேன். எங்களது தொழில்களைத் திறம்பட நடத்த போறேன்." என்றவர், "இனி தான் உங்க மகனுக்குக் கெட்ட காலம் ஆரம்பம்ன்னு அவர் கிட்ட சொல்லி வைங்க." பவதாரிணி விழிகள் பழிவெறியில் பளபளக்க கூறினார்.

ஆதித்ய சத்யநாராயணா மகனது நிலையை எண்ணி வருந்தியபடி பேரனை தூக்கி கொண்டு சென்றார்.

சில வருடங்களில் தொழிலை கையில் எடுத்த பவதாரிணி ஆதித்ய சத்யநாராயணாவுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். பவதாரிணி எண்ணம் புரிந்து அவரும் அமைதியாக இருந்தார். இடைப்பட்ட நாட்களில் பவதாரிணி மறந்தும் மகனை காண முயலவில்லை. அதற்கு அடுத்து வருடங்கள் கடந்தும் அவர் மகனை காண விரும்பவில்லை. வயதின் காரணமக அவரது தந்தை இறந்த போதும் கூட அவர் தனியாகத் தைரியமாக அனைத்தையும் கையாண்டார். தனக்குத் தீமை செய்த இருவரையும் வளர விடாது தடுத்து விட்டார் அந்தச் சிங்கப்பெண். கேவலம் பெண் தானே என்று நினைத்துத் தன்னை அசிங்கப்படுத்திய ஆண்கள் இருவரையும் அவரவர் தொழிலில் தோல்வியடையச் செய்து பதிலுக்கு அசிங்கப்படுத்தி விட்டார். பெண் சிங்கத்தின் உறுமல் அத்தனை சக்தி மிக்கதாய் இருந்தது.


ஆனால் ஆதித்ய சத்யநாராயணா தந்திரமாகப் பவதாரிணியின் மகனையே அவருக்கு எதிராகக் கொண்டு வந்து புத்திசாலித்தனமாகக் காயை நகர்த்தினார். அதை உணர்ந்து பவதாரிணியும் மகனுக்காக ஒதுங்கி வழி விட்டார். அவரது மகன் வெற்றி பெற்றால் அவரும் வெற்றிப் பெற்றது போலத்தானே. அவரது உடல்நிலையும் அதற்கு ஏற்றார் போன்று மாறியிருந்தது. மனதளவில் துயரத்தை கொடுத்த கடவுள் உடலளவிலும் கஷ்டத்தைக் கொடுத்தார். அதையும் இந்த மூன்று வருடங்களாக அவர் திடமான மனதுடன் எதிர் கொண்டு வருகிறார். இதோ அவரது உயிர் ஜோதி அணையும் நேரம் வந்துவிட்டது. ஆனால் அவரது பழிவெறி இன்னமும் அணையவில்லை. அதனால தான் அவர் தனது மகனை காண நினைத்தது.
 

ஶ்ரீகலா

Administrator
அனைத்தையும் படித்து முடித்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா விழிகள் கலங்க, "அம்மா..." என்று கதறியழுதான். இதுநாள் வரை கிடைக்காத தாயன்பை நினைத்து அழுதான். தாயன்பு கிடைத்த போதும் அவரது மடி சாய முடியாத தனது துர்பாக்கியத்தை எண்ணி அவன் அழுதான்.

"சிம்மா, எனக்கு நேரம் ரொம்ப இல்லை. நான் என் இறுதி நிமிடங்களை எண்ணி கொண்டு இருக்கிறேன். எனக்காக நீ ஒன்று செய்ய வேண்டும்."

"சொல்லுங்கம்மா செய்கிறேன்." அவன் கண்ணீரோடு சொல்ல...

"உனக்கு ஏன் சிம்மஹாத்ரின்னு பெயர் வைத்தேன் தெரியுமா? அந்த நரசிம்மர் போன்று நீ அநியாயத்தைக் கண்டு கொதித்து எழுந்து வதம் செய்ய வேண்டும் என்று... எனக்கு நடந்த அநியாயத்தை நீ தான் தட்டி கேட்கணும். அந்த அரக்கர்களை நீ தான் வதம் செய்யணும். அதற்காகத் தான் நான் இத்தனை வருடங்களாக அவங்களை வதம் செய்யாம பொறுமையாகக் காத்திருந்தது. அவர்கள் எனக்கு அளித்த பாவத்திற்கான சம்பளத்தை உன் மூலமாகக் கொடுக்கத்தான் நான் காத்திருந்தேன். எனக்காக நீ இதைச் செய்வாயா?" பவதாரிணி மெலிந்திருந்த தனது கரத்தினை மகன் முன் நீட்டினார்.

"நிச்சயம் செய்வேன்ம்மா." மகன் நொடி நேரம் கூடத் தாமதியாது கூறியவன் அவரது கரம் மீது தனது கரத்தினை வைத்துச் சத்தியம் செய்தான்.

"உன் அப்பா என்ற இரக்கம்...?"

"அவன் எல்லாம் மனிதனே இல்லை." அவன் வெறுப்புடன் சொல்ல... அதைக் கண்டு பவதாரிணி முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

"அம்மா மீது கோபமா?" அவர் கேட்கவும் அவன் மறுப்பாகத் தலையை ஆட்டினான்.

"அந்த விதி மீது தான் எனக்குக் கோபம். உங்க பக்க நியாயம் எனக்குப் புரிகிறது." என்று புரிதலோடு சொன்னவனைக் கண்டு,

"நன்றிப்பா..." என்றவர் அவனை அருகில் அழைத்தார்.

அவனும் புரியாது அவர் முன் குனிந்தான். அவர் அவனது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டார். அன்னை மகனுக்குக் கொடுக்கும் முதல் முத்தம் இது... அன்னையிடம் இருந்து மகன் பெறும் முதல் முத்தமும் இது தான். இருவரது விழிகளும் கலங்கியது. அவர் மகனது கரத்தினை இறுக பற்றிக் கொண்டார். அவன் ஏனென்று அவரை நிமிர்ந்து பார்த்த போது அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.

"அம்மா..." என்று அவன் கதறிய கதறல் அந்த நான்கு சுவற்றுக்குள் பலமாய் எதிரொலித்து அடங்கிப் போனது.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா அன்னைக்கு மகனாய் தனது கடமையைச் செய்தான். பவதாரிணி தனது அனைத்து சொத்துகளையும் மகனது பெயருக்கு மாற்றி எழுதியிருந்தார். ஆனால் அவன் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அனைத்தையும் மாற்றாது அப்படியே இயங்க செய்தான். அதனால் தான் யாருக்கும் இந்த விசயம் தெரியாது போனது.

*****************************

பவதாரிணி இறந்ததை ஜனார்த்தனன் வெடி வெடித்துக் கொண்டாடினார். அவர் மீண்டும் அரசியலில் இறங்கினார். அவரது ஆசை நிறைவேறும் நாள் வந்துவிட்டதே. அவர் முன்பிருந்த அரசியல் கட்சி அவரை மீண்டும் தங்களோடு சேர்த்துக் கொண்டது. அரசியலில் இறங்கிய ஜனார்த்தனன் வழக்கம் போல் சாதி அரசியல் செய்ய எண்ணி அவரது தொகுதியில் கலவரத்தை உண்டு பண்ணி அதில் அவர் சுகமாய்க் குளிர் காய்ந்தார். அதில் பறிப் போனது பல அப்பாவி உயிர்கள்.... இதையறிந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவர் மீது பெரும் கோபம் கொண்டான். ஏற்கெனவே அன்னையால் எழுந்த கோபம் வேறு இருந்தது. இப்போது ஜனார்த்தனன் மக்களைக் கொன்ற கோபமும் சேர்ந்து கொள்ள... ஜனார்த்தனன் செய்த கலவர தீயில் அவரைத் தள்ளி சுட்டு பொசுக்கி விட்டான். அவனது ஆட்கள் அவன் இட்ட கட்டளையைக் கனகச்சிதமாகச் செய்து முடித்து விட்டனர்.

ஆனால் அரைகுறையாக உயிர் ஊசலாடி கொண்டிருந்த ஜனார்த்தனன் தனது மகனிடம் சிம்மஹாத்ரி சத்யநாராயணா தான் இதற்குக் காரணம் என்று போட்டு கொடுத்து விட்டு உயிரை விட்டு விட்டான். அதிலிருந்து ராஜ்குமார் நண்பன் மீது பகை வளர்த்துக் கொண்டு திரிகின்றான்.

அடுத்து சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் குறி தந்தை மீது திரும்பியது. குடிகார தந்தையை ஒரு பெண்ணைக் காட்டி வலையில் வீழ்த்துவது ஒன்றும் கடினமான காரியமாக இல்லை. சுலபமாக அவரைத் தனது இடத்திற்குத் தூக்கி வர செய்தான்.

அதே படகு, அதே இடம்... சிம்மஹாத்ரி சத்யநாராயணா நாற்காலியில் அமர்ந்திருந்து எதிரில் மண்டியிட்டு இருந்த தந்தையைக் கோபமாகப் பார்த்திருந்தான்.

"டேய், நான் உன் அப்பாடா... என்னை என்ன பண்ண போற?" அந்தச் சூழல் ரவிவர்மனுக்குப் பயத்தை உண்டு பண்ணியது.

"ஓ, இப்போ தான் நீ எனக்கு அப்பான்னு நினைவுக்கு வந்ததா? என் அம்மா யாருன்னாவது நினைவு இருக்கா?"

"உன் அம்மா யாரு?" ஒரு பெண் என்றால் பரவாயில்லை... பல பெண்களைப் பெண்டாண்டவனுக்கு யாரென்று தெரியவில்லை.

"பவதாரிணி..." என்றவனைக் கண்டு,

"யாரது?" என்று தலையைச் சொரிந்தான் அந்தப் பொம்பளை பொறுக்கி... குடிகாரன் பவதாரிணியை மறந்தே போனான் போலும்.

"யாரு, என்னன்னு கூடத் தெரியாம பொம்பளை சுகம் கேட்குதா உனக்கு?" அவன் விரைந்து எழுந்து வந்து தந்தையை ஓங்கி மிதித்தான். அதில் அவர் சுருண்டு விழுந்தார். பவதாரிணியைப் பற்றி அவன் சொல்ல சொல்ல... அவரது விழிகள் ஆச்சிரியத்தில் விரிந்தது.

"அவளா?" என்று அவர் வியப்புடன் பார்க்க...

"அவங்களே தான்... என்னை எதுக்குப் பெத்தெடுத்தாங்க தெரியுமா? உன்னை அழிக்கத்தான். அவங்க வாழ்க்கையை அழிச்ச உன்னை அழிக்கத்தான்." அவன் ஆத்திரமாய்க் கர்ஜிக்க...

"என்னை விட்டுரு..." ரவிவர்மன் மகனிடம் கெஞ்ச...

"என் அம்மாவும் இப்படித்தானே உன் கிட்ட கெஞ்சி இருப்பாங்க. நீ அவங்களை விட்டியா? இல்லைல்ல.. அப்போ நீ உயிரை விடு. அப்போ தான் என் அம்மா ஆன்மா சாந்தியடையும்." என்றவன் தனது ஆட்களிடம்,

"இவனோட உயிர் ஒரேடியா போகக் கூடாது. இவன் அணு அணுவாய் துடிதுடிச்சு சாகணும்." என்று ஆக்ரோசத்துடன் சொல்ல... அவர்கள் சரியென்று ரவிவர்மனை இழுத்துக் கொண்டு சென்றனர்.

அன்றிரவு முழுவதும் ரவிவர்மனின் அலறல் அந்தச் சமுத்திரம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அதைச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா கேட்டபடி இறுகிய முகத்துடன் நின்றிருந்தான். விடியற்காலையில் ரவிவர்மனின் உயிர் பிரிந்தது என்பதைக் கேட்ட பின்பே அவன் அங்கிருந்து கிளம்பினான். நேரே வீட்டிற்கு வந்தவன் தாத்தாவிடம் நடந்ததை அப்படியே கூறி விட்டான். அவனுக்கு மறைக்கத் தோன்றவில்லை.

"இதற்காகத் தான் அவள் உனக்கு இந்தப் பெயரை வைத்தாளா? கடைசியில் என் மகன் உயிரை பறித்து விட்டாளே." ஆதித்ய சத்யநாராயணா அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்தார். அவரால் பேரனின் செயலை ஜீரணிக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் ரவிவர்மன் அவரது மகனல்லவா!

சிம்மஹாத்ரி சத்யநாராயணா உடனே அவரைக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தான். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இங்கோ ரவிவர்மன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. சிம்மஹாத்ரி சத்யநாராயணா மூன்றாம் மனிதன் போல் அங்கு வந்து நிற்க...

"நீ தான் என் புருசனை கொன்னுட்ட... அன்னைக்குச் சொன்ன மாதிரி செஞ்சிட்ட." என்று ராணியம்மா ஆக்ரோசமாய் அவனைப் பிடித்து அடித்தார். அவன் அதைத் தடுக்கவில்லை. அவரது உப்பை தின்ற நன்றி விசுவாசம் அவனிடம் மிச்சம் இருந்தது. தந்தையைக் கொன்ற குற்றவுணர்வும் அவனுள் குடைந்தது. அதனால் அவன் அமைதியாக நின்றான்.

போதிய ஆதாரங்கள் இல்லாது வெறும் குற்றச்சாட்டுக்காகச் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் அவன் மீது கை வைக்கக் காவல்துறை தயங்கியது.

ரவிவர்மன் இறுதி காரியத்தை ஜெய்பிரகாஷ் தான் செய்தான். ஆதித்ய சத்யநாராயணா இன்னமும் மருத்துவமனையில் தான் இருந்தார். எல்லாக் காரியமும் முடிந்த பிறகு ராணியம்மா ஜெய்பிரகாஷிடம் தனியே ஆலோசனை நடத்தினார்.

"இன்னமும் நாம சும்மா இருந்தால் நம்ம உயிருக்கு உத்திரவாதம் இல்லை ஜெய். அவன் நம்மளை கொன்றுவிட்டு சொத்துகளை எடுத்து கொள்வான். அதுக்கு முன்பு நாம முந்தி கொள்ளணும்." ராணியம்மா மகனிடம் சொல்ல... அவனுக்குமே அது தான் சரியென்று தோன்றியது.

ஜெய்பிரகாஷ் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை கொல்ல ஆட்களை அனுப்பினான். ஆனால் அதிலிருந்து தப்பிய சிம்மஹாத்ரி சத்யநாராயணா அந்த ஆட்களிடம் அவர்களை யார் அனுப்பியது? என்று தன்னுடைய பாணியில் விசாரித்துக் கேட்க... அவர்கள் ஜெய்பிரகாஷ், ராணியம்மா பெயரை சொல்ல... அவனுக்குப் பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. உயிரற்ற சொத்துகளுக்காக உயிருள்ள அவனைக் கொல்ல துணிந்தார்களா! அவன் மனதளவில் மிகவும் உடைந்து தான் போனான். தந்தையைக் கொன்ற குற்றவுணர்வு வேறு சேர்ந்து கொள்ள... அவன் ராணியம்மாவுக்கு நியாயம் செய்ய நினைத்தான். பெற்ற அன்னைக்கு நியாயம் செய்தவன், வளர்ப்பு அன்னைக்கு நியாயம் செய்யாது இருப்பானோ! அவன் என்றுமே நியாயவான் தான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா நேரே அவர்களைக் காண வந்தான். அவன் அங்கு வந்த போது ரச்சிதாவும் அங்குத் தான் இருந்தாள். வேங்கடபதி தேவாவும், அவரது மனைவியும் மட்டுமே ஊருக்கு கிளம்பி சென்றிருந்தனர். சிம்மஹாத்ரி சத்யநாராயணா தனது கரத்தில் இருந்த பத்திரங்களை ராணியம்மாவிடம் கொடுத்தான். அவர் புரியாது அதை வாங்கிப் பார்த்தவர் அதைப் படித்துப் பார்த்து விட்டு முகம் மலர்ந்தார்.

"கேவலம் சொத்துகளுக்காக நீங்க இந்தளவுக்கு இறங்கி இருக்கத் தேவையில்லை. நீங்க கேட்டு இருந்தால் நானே கொடுத்து இருப்பேனே." என்றவனைக் கண்டு அவர் அமைதியாக இருந்தார். ஜெய்பிரகாஷ் அண்ணனை முறைத்துப் பார்த்திருந்தான்.

"நான் இந்தச் சொத்துகளை உங்களுக்குக் கொடுத்ததற்குக் காரணம், நான் உங்க மீது வைத்த பாசம். ஆனால் அதேசமயம் நீங்க எனக்குச் செய்த செயலுக்கான எதிர் வினை நிச்சயம் உண்டு. மீண்டும் வந்து இந்தச் சொத்துகள் அனைத்தையும் மீட்டெடுப்பேன். அப்போது தெரியும், இந்தச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா யாரென்று..." என்றவனை அம்மா, மகன் இருவரும் அலட்சியமாகப் பார்த்தனர்.

"அது நடக்கும் போது பார்க்கலாம்." ராணியம்மா அவனைக் கேவலமாகப் பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

"ரச்சி..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா ரச்சிதாவை கண்டு ஏதோ பேச வர... ரச்சிதா முகத்தைச் சுளித்தபடி உள்ளே சென்று விட்டாள். அதைக் கண்டு அவனது மனம் உடைந்து போனது. ஜெய்பிரகாஷ் அண்ணனை கண்டு இளக்காரமாய்ச் சிரித்தான். சிம்மஹாத்ரி சத்யநாராயணா சோர்வுற்றவனாய் அங்கிருந்து கிளம்பினான்.


ஜெய்பிரகாஷுக்கு சிம்மஹாத்ரி சத்யநாராயணா, ரச்சிதா இருவர் மீது சிறு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இருவரும் ஒன்றாகச் சுற்றுவதும், சுற்றுப்புறம் மறந்து பேசி கொண்டிருப்பதும் என்று காதலர்கள் போன்று இருப்பதை அவனே கண்டு இருக்கின்றான். அவர்கள் காதலிப்பதை தெரிந்து கொண்டவனுக்கு அது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. அது ரச்சிதா மீதான ஆசையினால் அல்ல. சிம்மஹாத்ரி சத்யநாராயணா மீதிருந்த துவேசம் தான் அதற்குக் காரணம். சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கு என்றுமே நல்லது நடக்கக் கூடாது, நடந்துவிடக் கூடாது என்பதில் ஜெய்பிரகாஷ் குறியாய் இருந்தான். அதைச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா காதலில் காட்டிட அவன் எண்ணினான். விளைவு, அன்றே ஜெய்பிரகாஷ் ரச்சிதாவிடம் தனது காதலை சொல்லி... இத்தனை சொத்துகளுக்கும் அவன் மட்டுமே அதிபதி என்பது போல் பில்டப் செய்து சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பிச்சைக்காரன் போன்று சித்தரித்தான். அவனது பேச்சை கேட்ட ரச்சிதாவின் மனம் இங்கும் அங்குமாய் ஊஞ்சலாட தொடங்கியது.
 

ஶ்ரீகலா

Administrator
சிம்மஹாத்ரி சத்யநாராயணா தாத்தாவை காண மருத்துவமனைக்கு வந்திருந்தான். அவர் கண் விழித்த செய்தி அறிந்து தான் அவன் அங்கு வந்தது. ஆதித்ய சத்யநாராயணா அவனைக் கண்டதும் எடுத்தவுடன்,

"உன்னிடம் இருக்கும் சொத்துகளை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடு... உன் கையில் சொத்துகளை ஒப்படைத்ததுக்கான காரணம்... உன் அம்மா பவதாரிணியை அடக்குவதற்காக... தொழில் வட்டாரத்தில் நான் இழந்த மதிப்பை திரும்பப் பெறுவதற்காக... ஏன்னா உன் அம்மா உன்னை எதிர்க்க மாட்டாள் என்று நினைத்தேன். அதே தான் நடந்தது." அவர் பேச பேச அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

"அதே போன்று தான் ரச்சிதாவை உனக்கு மணம் முடிக்க நினைத்ததும்... முறைப்பையன் ஜெய்யை விட்டுட்டு உன்னைத் தேர்ந்தெடுத்ததுக்கான காரணம், நீ இந்தக் குடும்பத்தை விட்டு விலகக் கூடாதுன்னு... எல்லோரையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் நீ இது எதையும் செய்யவில்லை. எனக்குத் துரோகம் பண்ணிட்ட... பெத்த தகப்பனை கொன்னுட்ட... என் மகனை நீ கொன்னுட்ட..." அவர் வெடித்து அழுதார். அவரது துக்கம் அவருக்கு...

"தாத்தா உங்க அன்பு தூய்மையானதுன்னு நினைத்தேன். ஆனா அதிலும் இவ்வளவு சுயநலம் இருக்கும்ன்னு எனக்குத் தெரியாது போயிற்று" சிம்மஹாத்ரி சத்யநாராயணா கண் கலங்கினான். எல்லோருமே சுயநலமாக இருந்து துரோகம் செய்ததை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

"இனி பேச்சு வேண்டாம். சொத்துகளைத் திருப்பிக் கொடு..." ஆதித்ய சத்யநாராயணா கறார் குரலில் கூற...

"கொடுத்து விட்டேன்... எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்து விட்டேன். அம்மாவும், ஜெயும் என்னைக் கொலை பண்ணி சொத்துகளை அடைய முயற்சி செய்தே போதே நான் செத்து விட்டேன் தாத்தா." இதைக் கேட்டு ஆதித்ய சத்யநாராயணாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அவர் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.

"ஆனால் நான் எல்லாவற்றையும் மீட்டெடுப்பேன் தாத்தா. நான் யாரென்று உங்களுக்கு எல்லாம் காட்டுவேன். துரோகத்துக்குப் பரிசு கொடுப்பேன் தாத்தா." அவனது குரலில் தெரிந்த உறுதியில் தாத்தாவின் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது. அவரது குடும்பம் சிதறி போகப் போவதை உணர்ந்தவராய் அவர் வேதனையில் தனது உயிர் துடிப்பை நிறுத்தி கொண்டார்.

தாத்தா தனது இறுதி சடங்கை ஜெய்பிரகாஷ் தான் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார். தனது மூத்த பேரன், கொள்ளி வைக்கப் போகும் வாரிசு என்று கொண்டாடிய சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை தனது மகனுக்காக, அதுவும் ஒரு கேடுகெட்டவனுக்காக அவர் தூக்கி எறிந்தார். இறுதியில் அவரும் சுயநலமாய் மாறிப் போனார். சிம்மஹாத்ரி சத்யநாராயணா கல்லை விழுங்கியது போல் அனைத்தையும் ஜீரணித்துக் கொண்டான். அதற்கு மேல் அவனுக்கு இந்த அரண்மனையில் என்ன வேலை இருக்கிறது? அவன் அங்கிருந்து கிளம்பத் தயாரானான்.

கிளம்பும் முன் அவன் ரச்சிதாவை காண சென்றான். அவள் ஜெய்பிரகாஷுடன் பேசி கொண்டு இருந்தாள். அவன் அவள் முன் போய் நின்றான். அவள் அவனைக் கண்டு பேயை கண்டது போல் அரண்டு போய் ஜெய்பிரகாஷின் பின்னே சென்று மறைந்தாள். துயரத்தில் இருந்தவன் மூளையில் அவளது செயல் பதியவில்லை.

"என் நிலை உனக்குத் தெரியும் ரச்சி. என்னை நம்பி என் கூட வருகிறாயா?" அவன் தனது கரத்தினை அவள் முன் நீட்டினான்.

அரண்மனை இளவரசியான அவள் ஒன்றும் இல்லாத அவன் பின்னே போகப் பயந்தாள். சுகபோக வாழ்க்கைக்கு அடிமையான அவள் அவனோடு சென்று கஷ்டப்படத் தயாராக இல்லை. அந்த நொடி அவள் ஜெய்பிரகாஷின் காதலுக்குப் பச்சை கொடி காட்டிட நினைத்தாள். தன்னைக் காத்துக் கொள்ள அவள் எண்ணினாள். அவள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துச் சுயநலமாகச் செயல்பட்டாள்.

காதல் சுயநலம் பார்க்காது. காதலில் சுயநலம் வந்தால்... அது காதலே இல்லை.

"நீ ஒரு லூசர். பிச்சைக்காரனான உன்னை நம்பி நான் எப்படி வருவது?" அவளது வார்த்தைகளில் அவன் மொத்தமாய் உடைந்து போனான். அவன் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லையா? சொத்துகள் இல்லை என்றால் என்ன? அவனது படிப்பு இருக்கிறதே! அவன் வேலைக்குச் சென்று அவளை ராணி போல் பார்த்து கொள்வானே! அவள் ஏன் அவனை நம்பாது போனாள்? அப்போது கூட அவன் அன்னை அளித்த சொத்துகளைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அந்த விசயம் தெரிந்து இருந்தால் ரச்சிதா அவனை விட்டு விலகியிருக்க மாட்டாளோ என்னவோ!

"ரச்சி..."

"நீ எனக்கு வேண்டாம். எனக்கு ஜெய் பாவா போதும்." அவளது வார்த்தைகளில் ஜெய்பிரகாஷுக்கு தானாகக் கர்வம் வந்தது. பின்னே எல்லாவற்றிலும் சிறந்தவனான சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை வேண்டாம் என்று கூறிவிட்டு அவள் அவன் பின்னே வருவது கர்வமான விசயமல்லவா!

துரோகம் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்குப் பழகிய ஒன்று தான்... ஆனால் இந்தக் காதல் துரோகத்தை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

"ரச்சி, நீயும் நானும் காதலிக்கிறோம்." அவன் அவளிடம் மன்றாட...

"அதான் அவளே வேண்டாம் என்கிறாளே... போ இங்கிருந்து..." ஜெய்பிரகாஷ் அவனை அடித்து விரட்டாத குறையாக விரட்டினான்.

சொத்துகளை இழந்த போது மீட்டு விடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் காதலை இழந்த போது மீட்டெடுத்து விட முடியும் என்கிற நம்பிக்கை இல்லாது போனது. சிம்மஹாத்ரி சத்யநாராயணா உடைந்த இதயத்துடன் கலங்கிய விழிகளுடன் அங்கிருந்து கிளம்பினான். அவனது மனம் முழுவதும் விரக்தி... அவன் ஆதரவற்று அநாதையாய் நடந்து சென்றான். இறுதியாக அவன் சென்றடைந்த இடம் சிம்மஹாத்ரி லெக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். அவன் விழிகள் கலங்க அங்கே அமர்ந்தான். அன்று முழுவதும் அவன் அங்கே தான் இருந்தான். மறுநாள் தான் அவன் காசிக்கு கிளம்பி சென்றது. அவனுக்கு வாழ்க்கை மீது விரக்தி இருந்தது. ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் ஒன்றும் கோழை அல்ல...

அப்போது தான் அவன் சோமசுந்தரத்தை சந்தித்தது. மதுரை வந்தது. அங்கு வந்தவன் சோமசுந்தரம், ஆதிசக்தீஸ்வரி அன்பில் தெளிந்தான். முக்கியமாகப் பெண்ணவளின் நம்பிக்கையான அன்பில் அவனது மனம் தெளிவுற்றது. ஏனெனில் ஆதிசக்தீஸ்வரி முதல் பார்வையிலேயே அவனது விழிகளைக் கண்டு அவனைப் புரிந்து கொண்டாளே! அந்தச் சிறு பெண்ணை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதன் பிறகே அவன் பவன்ராம்க்கு அழைத்துப் பேசினான். பவதாரிணி சொத்துகளைப் பவன்ராமை கவனித்துக் கொள்ளச் சொன்னவன்... அதன் வருமானத்தின் மூலம் ஜெய்பிரகாஷிடம் இருந்த சொத்துகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றினான். ஜெய்பிரகாஷின் திறமையின்மை அதற்கு உதவியது.

தாயின் மூலமாக உலகிற்கு மனிதனாக வந்தவன் இப்போது அவரது சொத்துகளின் மூலம் புது மனிதனாக மீண்டும் பிறப்பெடுத்தான். அவரின்றி அவனில்லை என்பது எத்தனை உண்மை! அவர் நினைத்து இருந்தால் அவனைக் கருவிலேயே அழித்திருக்கலாம். சொத்துகளைக் கொடுக்காது அவனைப் புறம் தள்ளி இருக்கலாம். ஆனால் இது எதையும் அவர் செய்யவில்லை. அவனை விட்டுப் பிரிந்திருந்தது கூட அவனது அங்கீகாரத்திற்காக மட்டுமே... அத்தகைய தாயை பெற்ற அவன் பாக்கியசாலியே!

அவன் எல்லாவற்றையும் மீட்டெடுத்த பிறகும் கூட விசாகப்பட்டிணம் செல்லாது இருந்ததற்குக் காரணம் சோமசுந்தரத்தின் அன்பு... அதன் பிறகு ஏற்பட்ட திருமணத் தோல்வி, அவமானம் எல்லாமே அவனை நிலைகுலைய செய்த போதும்... ஆதிசக்தீஸ்வரியின் காதல் மட்டுமே அவனை மீண்டும் மனிதனாக மாற்றியது. இதோ அவன் எல்லாவற்றையும் மீட்டெடுத்து விட்டான். தனக்கான காதலையும் கூட... துரோகத்தை மட்டுமே சுமந்தவனுக்கு ஆதிசக்தீஸ்வரியின் காதல் மட்டுமே வரம்... அவளது காதல் மட்டும் இல்லை என்றால் அவன் உயிரற்ற உடலுக்குச் சமம்...

கடந்த காலத்தை நினைத்திருந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா தன்னவள் நினைவில் புன்னகை புரிந்தான். அவள் மட்டுமே அவனது வாழ்க்கையின் பற்றுக்கோள்... அவள் மட்டுமே அவனது உயிர்... உயிர் உறவாகி உலகிற்கு அடையாளப்படுத்த போகும் நாளிற்காக அவன் ஆசையுடன் காத்திருக்கின்றான்.

"சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லு பொம்மாயி. உன் மாமா தாலியுடன் காத்திருக்கிறேன்." அவனது இதழ்கள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டது.

பெண்ணுக்கு தான் திருமணக் கனவு இருக்குமா? ஆணுக்கும் திருமணக் கனவு உண்டு. அந்தக் கனவில் ஆயிரம் எதிர்பார்ப்புகள், ஆசைகள் இருக்கின்றது.

“கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்மணியே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே”
(ஆனந்த தாண்டவம் திரைப்படப் பாடலிலிருந்து சில வரிகள்... கண்ணாளனே என்ற வார்த்தை மட்டும் கண்மணியே என்று மாறியிருக்கிறது.)

நீயாகும்...!!!
 
Status
Not open for further replies.
Top