All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na உயிரே Nuvve!!!’ - இரண்டாம் பாகம் கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
"அப்போ உன் பணத்துக்கும்..." என்ற இராஜராஜேஸ்வரியை கண்டு,


"மரியாதை, மரியாதை..." என்றவனின் பார்வை அங்குச் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த துப்பாக்கியை பார்த்தது. அதைக் கண்டதும் இராஜராஜேஸ்வரி மனதில் பயம் எழத்தான் செய்தது. இருந்தாலும் காட்டி கொள்ளாது,


"பணத்துக்கும், சொத்துகளுக்கும் சரியா போச்சு இல்லையா? பிறகு நீ எதுக்குடி இங்கே இருக்க?" என்று மகளிடம் கோபமாய்க் கேட்டார்.


"குழந்தைக்காகக் கையெழுத்து போட்டுக் கொடுத்தது மறந்து போச்சா மேடம்? அந்த ஒரு கையெழுத்து போதும் உங்களை நாறடிக்கிறதுக்கு..." அவன் நக்கலாய் சொல்ல... உண்மையில் அவன் சொன்னதைச் செய்து விடுவான் என்று ஆதிசக்தீஸ்வரிக்கு தெரியாதா!


"அம்மா, எதுக்கு இங்கே வந்து பேசிக்கிட்டு இருக்கீங்க? அவன் ஒண்ணும் பழைய சத்யா இல்லை. தி கிரேட் சிம்மஹாத்ரி சத்யநாராயணா. நீங்க சொல்றது எதுவும் அவன் காதில் ஏறாது. நீங்க செஞ்ச பாவத்துக்கு நான் பரிகாரம் தேடிக்கிறேன். நீங்க அவனை அவமானப்படுத்தினீங்க. திருட்டுப் பட்டம் கட்டுனீங்க. அவன் குழந்தையைக் கலைச்சீங்க. எல்லாப் பாவமும் நம்ம பக்கம் தான்ம்மா இருக்கு. அவன் பக்கம் இருப்பது நியாயம் மட்டும் தான். நீங்க செஞ்ச அநியாயத்துக்கு நான் பதிலுக்கு நியாயம் செய்யத்தான் வேணும்மா. இப்போ சத்யாவோட டர்ன். நாம அனுபவிச்சு தான் ஆகணும். நீங்க கிளம்புங்க." என்ற மகளை இளக்காரமாய்ப் பார்த்தார் அவர்...


"என்னமோ அவன் கையால தொங்க தொங்க தாலி வாங்கிக் கட்டிக்கிட்ட மாதிரி இந்தப் பேச்சு பேசுற. தாலி வாங்காமலேயே அவனுக்கு இப்படி வக்காலத்து வாங்கிறியே. அவன் மட்டும் உன் கழுத்தில் தாலி கட்டியிருந்தால் நீ என்னென்ன பேச்சு பேசுவ?கடைசியில நீ பணத்துக்கு அடிமையாகிட்ட... பணத்துக்காக நீ..." மேலே அவர் என்ன சொல்லியிருப்பாரோ!


"செக்யூரிட்டி..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆக்ரோசமாய்க் கத்திய கத்தலில் பவுன்சர்கள் இரண்டு பேர் அங்கே ஓடி வந்தனர்.


"முதலில் இவங்களைப் பிடிச்சு வெளியில் தள்ளு." கோபமாய் இரைந்தவன் எழுந்து உள்ளே சென்று விட்டான்.


பவின்சர்கள் இருவரும் இராஜராஜேஸ்வரியின் புறம் வந்து அவரது கரங்களைப் பிடித்து வெளியேற்ற முயல... காயத்ரி, விஷ்ணுவுடன் அவரின் பின்னேயே சென்றாள். ஆதிசக்தீஸ்வரி அண்ணியிடம் சென்றவள்,


"அண்ணி, உங்க ஃபோனை கொடுங்க." என்று கேட்க... காயத்ரி என்னவென்று புரியாத போதும் அலைப்பேசியைக் கொடுத்தாள்.


ஆதிசக்தீஸ்வரி அலைப்பேசியை வாங்கி ஏதோ ஒரு எண்ணை பதிந்தவள், "இது மயூ நம்பர். அவள் உங்களுக்கு உதவி செய்வாள்." என்று சொல்ல...


"இல்லை ஆதி. நாங்க மதுரைக்கே போயிர்றோம்." காயத்ரி மறுத்து சொல்ல...


"அங்கே போயி என்ன பண்ண போறீங்க? மயூவும், சந்தோஷும் வீடு பார்த்து தருவாங்க. நான் உங்களுக்கு மாதா மாதம் பணம் அனுப்பி வைக்கிறேன். விஷ்ணு படிப்பு பத்தி கவலைப்படாதீங்க. அவனுக்கு நான் இருக்கிறேன்." என்றவள் அண்ணன் மகனை அணைத்து முத்தமிட்டு, "சாரி விஷ்ணு... இந்த அத்தையால் உனக்கு ஒரு வாய் சோறு கொடுக்க முடியாது போயிற்று." என்று கண்கலங்கினாள்.


"அழாத அத்தை... இந்த மாமா வேண்டாம். நீ எங்க கூட வா." என்று வாண்டு அவளது விழிகளைத் துடைத்து விட்டது.


"மாமா கிட்ட ஒரு பொருளை ஒப்படைக்கணும். ஒப்படைச்சதும் நான் வந்து விடுவேன்." என்று அவள் புன்னகைக்க முயன்றாள்.


"அத்தை பேசியது தப்பு தான் ஆதி. அதான் அண்ணாவுக்குக் கோபம் வந்திருச்சு." காயத்ரி அவளைச் சமாதானப்படுத்தினாள்.


"சொன்னாலும் சொல்லைன்னாலும் அது தானே உண்மை அண்ணி. அம்மா சொன்னதில் என்ன தப்பிருக்கு?"


"பிறகு ஏன் இங்கே இருக்க ஆதி?"


"சத்யா இப்படி மாறியதில் பெரும் பங்கு எனக்குத் தான் இருக்கு. அதனால் அதனோட விளைவுகளை நான் மட்டுமே அனுபவிக்கணும். அனுபவிச்சிட்டு போறேன். ஆனால் இதை எல்லாம் மீறி நூலளவு நம்பிக்கை ஒட்டிக்கிட்டு இருக்கு. அந்த நம்பிக்கை என்னை இங்கே வாழ வைக்கும். நீங்க கவலைப்படாதீங்க அண்ணி. நீங்க பத்திரமா போங்க." என்றவள் இருவரையும் அனுப்பி வைத்து விட்டு அந்தக் குட்டி அரண்மனையினுள் நுழைந்தாள்.


வரவேற்பறையைத் தாண்டி முற்றத்தினுள் நுழைந்து மாடிப்படியில் காலடி எடுத்து வைக்கப் போனவளை, "இங்கே வா..." என்ற அவனது அதிகார குரல் அழைத்தது. அவள் சுற்றும் முற்றும் பார்க்க... சற்றுத் தள்ளியிருந்த உணவு மேசையில் சிம்மம் கம்பீரமாய் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தது. அவளது கால்கள் தானாக அவன் புறம் சென்றது. அவள் அருகில் வந்ததும் அவனது கரங்கள் அவளை இழுத்து அணைத்து தனது மடியில் அமர்த்திக் கொண்டது.


"அச்சோ, யாராவது பார்க்க போறாங்க..." அவள் பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள்.


"என்னைக் கேட்காம யாரும் இங்கே வர மாட்டாங்க." அவனது வார்த்தைகளில் அவள் அப்படியே அசையாது அமர்ந்தாள். அடுத்து அவன் காதல் சித்ரவதை செய்யப் போகின்றான் என்று அவளது மனதில் பட்சி ஒன்று அடித்துச் சொல்லியது.


"பேபி..." என்றவனது முகம் அவளது கழுத்தடியில் புதைந்தது. அவனது இடது கரம் அவளது இடையைச் சுற்றி தழுவி தனது தேடலை தொடங்கியிருந்தது.


"வேண்டாம் சத்யா..." அவள் அவனது தலைமுடியை பிடித்து இழுத்துத் தன்னிடம் இருந்து அவனை விலக்க... அவனும் புன்னகையுடன் விலகினான். ம்ஹூம், அவனது கோபத்தை விட இந்தப் புன்னகை ஆபத்தானதாயிற்றே! அவள் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.


"டைனிங் டேபிள் ரொமான்ஸ் சரியா பண்ணினேன்னா?" அவன் கேட்டதும் அவள் தூக்கிவாரி போட நிமிர்ந்தாள்.


"உனக்கு எப்படித் தெரியும்?" திகைப்பில் அவளது விழிகள் விரிந்தது.


"டைரியில் காதல் சொட்ட சொட்ட நீ தானே எழுதியிருந்த. நேத்து நைட் ரூம் அலங்காரம் நல்லாயிருக்குன்னு சொன்னியே. அது கூட நீ எழுதி வச்சது தான்." அவன் கண்சிமிட்டி சொல்ல...


'அடப்பாவி!' அவள் வாயை பிளந்தபடி அவனைப் பார்த்திருந்தாள். இறுதியில் அவளது வார்த்தைகளை வைத்தே அவளை வதைத்து விட்டானே!


"சாப்பிடு..." அவன் சொன்னதும் தான் அவன் தனக்கு ஊட்டி விட்டதை அவள் உணர்ந்தாள். வாயிலிருந்த தோசையைக் கல்லை போல் விழுங்கி வைத்தாள்.


"இப்படி எல்லாம் ஊட்டி விட்டால் தான் காதலாமே. இதுவும் நான் சொல்லலை. நீ சொன்னது தான்." என்றவன் கை விடாது ஊட்ட... சிலதை அவள் உண்டாள். சிலதை அவள் வாயிலிருந்து அவன் உண்டான், இதழோடு இதழ் பொருத்தி... காதலோடு செய்ய வேண்டிய அனைத்தும் இங்கே கேலி பொருளாய் மாறிப் போனது. அதைக் கண்டு அவளுக்கு மனம் கனத்துப் போனது. ஆனாலும் அவள் எதையும் வெளிக்காட்டி கொள்ளவில்லை.


"இவ்வளவு தான் காதலா? காதல் இவ்வளவு ஈசியா இருக்கும்ன்னு தெரியாம போச்சே." கையைக் கழுவி கொண்டு வந்தவன் கேலியாய் சொன்னபடி அவளது புடவை முந்தானையில் தனது ஈரக்கையைத் துடைத்தான். அவள் பதில் பேசாது இரும்பாய் நின்றாள்.


சிம்மஹாத்ரி சத்யநாராயணா பேசாமடந்தையாய் நின்றிருக்கும் அவளைக் கண்டு ஒரு மாதிரியாய் பார்த்தவன் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தான். அவள் அவசரமாக அவனின் பின்னேயே வந்தவள்,


"நான் வேலைக்குப் போகணும்." என்று கூற...


"எதுக்கு? உனக்கு வேண்டியது எல்லாம் இங்கே கிடைக்கும்." என்றவன் மேலே நடக்க... வேகமாய் அவனின் முன் சென்று அவனது வழியை மறைத்தபடி நின்றவள்,


"எனக்கு உழைச்சு சாப்பிடணும். இப்படிப் படுத்து வேசி போல்..." மேலே என்ன பேசியிருப்பாளோ... அடுத்து அவனது செய்த செயலில் அவள் பேச்சற்று அதிர்ந்து போய் நின்றாள்.


அவள் பேசியது கேட்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவளை அடிக்கத் தனது கையை ஓங்கியவன் பின்பு அடக்கி கொண்டு அருகில் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படத்தின் மீது ஓங்கி குத்தினான். அவன் குத்தியதில் புகைப்பட மீதிருந்த கண்ணாடி உடைந்து சுக்கு நூறாகியது. அவன் மட்டும் அவளை அடித்திருந்தால் நிச்சயம் அவளது கன்னம் கிழிந்திருக்கும். கண்ணாடி துண்டுகள் அவனது கரத்தினைக் குத்தி காயமாக்கி அதிலிருந்து இரத்தம் ஒழுகியது.


"ஐயோ, ரத்தம்..." என்று அலறியவள் தனது புடவை முந்தானையைக் கொண்டு அவனது கரத்தினை இறுக கட்டினாள்.


"ஃப்ர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்கே இருக்கு?" அவள் பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவனோ அவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தான்.


"உன்னைத் தான் கேட்கிறேன் சத்யா?" அவள் அவனைப் பிடித்து உலுக்க...


"ரூமில் இருக்கு..." அவன் சொன்னதும்...


"வா என் கூட..." என்றவள் அவனை இழுத்துக் கொண்டு அறையை நோக்கி ஓடினாள். அவனும் அவளைப் பார்த்தபடி அவளின் பின்னேயே சென்றான்.


அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் அவனை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவள், "எங்கே இருக்கு?" என்று அவனிடம் மீண்டும் கேட்க...


"அங்கே..." என்றவனின் கரம் முதலுதவி பெட்டி இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்ட...


ஆதிசக்தீஸ்வரி அங்கிருந்து நகரப் போனாள். அந்தோபரிதாபம்! அவளது புடவை முந்தானை அவனது கரத்தினை அல்லவா சுற்றி இருக்கிறது. புடவையை மீறி அவனது கையில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்க... அவள் நொடி நேரம் கூடத் தாமதியாது புடவையைக் கழற்றி வீசியெறிந்து விட்டு முதலுதவி பெட்டியை எடுக்கச் சென்றாள். வேகமாய் முதலுதவி பெட்டியை எடுத்து வந்தவள் அவனது காயத்தைச் சுத்தப்படுத்தி மருந்திட்டு கட்டு போட்டாள்.


"ரெண்டு நாளைக்காவது தண்ணி படாம இருக்கணும் சத்யா. செப்டிக் ஆகாம பார்த்துக்கோ." அவள் சொன்னதற்கு அவனிடம் இருந்து பதில் இல்லை.


அவள் யோசனையாய் அவனது முகத்தினை ஏறிட்டு பார்க்க... அவனது பார்வையோ அபாயகரமாய் அவளது மேனியை பார்த்திருந்தது. அவனது துளைக்கும் பார்வையில் அவளுக்குத் தான் மூச்சடைத்தது. அதுவரை அவன் முன் குனிந்து நின்றிருந்தவள் சட்டென்று திரும்பி நின்று கொண்டாள். கீழே கிடக்கும் புடவையைக் கையில் எடுக்கக் கூட அவளால் இயலவில்லை. அத்தனை கூச்சமாக இருந்தது அவளுக்கு... அவளின் பின்னால் இருந்து அவனது கரங்கள் அவளை ஆக்டோபஸாய் வளைத்துக் கொண்டது.


"வேண்டாம் சத்யா..." அவளது குரல் கோபமாய் ஒலிக்காது பலகீனமாய் ஒலித்தது.


அன்னையிடம் அவனுக்காக வாதாடிய அவளது காதல் மனம் இன்னமும் உள்ளுக்குள் மிச்சமிருந்ததோ! இல்லை காயத்ரியிடம் சொன்ன சிறு நம்பிக்கை இன்னமும் அவளுள் ஒட்டியிருந்ததோ! ஏதோ ஒன்று அவள் அதிசயமாய் அவனை ஏற்றுக் கொண்டாள். ஏனோ ஆணவன் அவளை வதைக்காது மௌனமாய் ஆட்கொண்டான். பெண்ணவள் விழிகளை மூடி அவனது தொடுகையை மட்டுமே உள்வாங்கிக் கொண்டு இருந்தாள். அங்கு இளமை உணர்வுகள் காட்டாறு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடியது. இறுதியாய் கூடல் முடிந்த பிறகு அவன் அவளது காதருகில் குனிந்து,


"ஐ லவ் யூ பேபி." என்று சொல்ல... அதில் பெண்ணவளின் அத்தனை நேர இன்ப உணர்வுகள் அறுந்து விழுந்தது. அவள் மெல்ல விழி திறந்து உணர்வில்லாது அவனைப் பார்த்தாள்.


சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவளது பார்வையைக் கண்டு கொள்ளாது உடையை மாற்றியவன் பின்பு அவள் அருகில் வந்து போர்வையைப் போர்த்தி விட்டான். அது கூட அவளுக்கு உறைக்கவில்லை. அவள் அவனையே வெறித்துப் பார்த்திருந்தாள்.


"நீ வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. நீ சம்பாதிச்சு தான் நான் சாப்பிடணும்ங்கிற எந்த அவசியமும் இங்கில்லை." என்றோ அவள் சொன்னதற்கு இப்போது பதில் சொல்லுகிறான் போலும். அவளது உதடுகள் விரக்தியாய் வளைந்தது.


"எனக்காக இல்லை. அண்ணி, விஷ்ணுவுக்காக..." அவள் கவனமாக அம்மா என்ற வார்த்தையைத் தவிர்த்தாள்.


"எத்தனையோ அநாதைகளுக்குச் செய்கிறேன். அது போல் அவங்களுக்கும் நானே செஞ்சிட்டு போறேன்." அவன் அலட்சியமாகச் சொல்ல...


"அவங்க ஒண்ணும் அநாதை இல்லை. அவங்களுக்கு நான் இருக்கிறேன்." என்றவளுக்கு அழுகை வந்தது.


"நீ இப்போ என் கஸ்டடியில்... நீ எப்படி அவங்களுக்குச் சொந்தமாவ?" அவன் கேள்வியாய் புருவத்தை உயர்த்தினான்.


"காயூ உன்னைத் தானே அண்ணான்னு கூப்பிடுகிறாள். அந்தப் பாசம் கூட உனக்கு இல்லையா?" அவள் சொன்னதும் அவளை ஒரு பார்வை பார்த்தவன்,


"சத்யா தான் அவளுக்கு அண்ணன். சிம்மன் இல்லை. சிம்மன் இந்தச் சாம்ராஜ்ஜியத்துக்கு அரசன்." என்று கர்வம் பொங்க சொன்னவன் அவளது பதிலை கேட்க கூட விரும்பாது அங்கிருந்து வேகமாய்ச் சென்று விட்டான்.


ஆதிசக்தீஸ்வரி செல்லும் அவனையே பார்த்தபடி படுத்திருந்தாள். அவன் என்று அவளது சத்யாவாக மாறுவான் என்று அவளது மனம் கதறியது. அந்த நாள் எப்போது? என்று தான் அவளுக்குத் தெரியவில்லை.


அன்பிற்கு ஏங்கும் குழந்தை முதலில் கெஞ்சும், அதன் பிறகே விஞ்சும். வன்முறையைக் கையில் எடுத்துக் கவனத்தை ஈர்க்கும். சிம்மஹாத்ரி சத்யநாராயணாவும் அப்படித்தான். முன்பு கெஞ்சினான்... இப்போது மிஞ்சுகிறான். அவனுக்கு என்ன வேண்டும் என்பதை அவள் தான் உணர வேண்டும்.


"காதலால் காதலை கொன்று புதைக்க முடியுமோ!

ஆணவனின் செயற்கை காதல் பெண்ணவளின்

இயற்கை காதலை கொன்றுவிட்டதே!

இருவரின் காதலும் உயிர்த்தெழ

பெண்ணவளால் மட்டுமே முடியும்!

அதற்குள் பெண்ணவள் எத்தனை முறை

மரணிக்கப் போகின்றாளோ!"


நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 28


இராஜராஜேஸ்வரி ஜெகதீஸ்வரியை காண வேண்டும் என்று அடம்பிடிக்க... வேறுவழியின்றிக் காயத்ரியும் அவருடன் சேர்ந்து ஜெகதீஸ்வரிக்காக அரண்மனை வாயிலில் காத்திருந்தாள். உடன் விஷ்ணுவும்... ஜெகதீஸ்வரியை காண வேண்டும் என்று வேலையாள் மூலம் சொல்லி விட்டாகி விட்டது. ஆனால் இன்னமும் அவள் வரவில்லை.


"அத்தை, எதுக்கு இங்கே வந்து நின்னுக்கிட்டு? அவங்களுக்கு நம்ம மேல கோபம் இருக்கும். நிச்சயம் நம்மளை அவமானப்படுத்த தான் போறாங்க. நாம கிளம்பலாம். வாங்க..." என்று காயத்ரி அப்போதும் மாமியாருக்கு எடுத்து சொன்னாள்.


"நான் மத்தவங்களைப் பார்க்க வரலை. என் மகளைப் பார்க்க வந்திருக்கிறேன். ஜெகா நிச்சயம் என்னைக் காண வருவாள்." இராஜராஜேஸ்வரி சட்டமாய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.


எப்படி இருந்த பெண்மணி? புத்தி சரியில்லாத காரணத்தால் இப்படியொரு அவலநிலை. அவரை நினைத்து காயத்ரியால் பெருமூச்சு தான் விட முடிந்தது. அவர்களை வெகுநேரம் காக்க வைத்துவிட்டே ஜெகதீஸ்வரி தாமதமாய் அங்கு வந்து சேர்ந்தாள்.


"இப்போ எதுக்கு இங்கே வந்தீங்க? என் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடவா? என் மாமியார், உதய் ரெண்டு பேரும் உங்களை இங்கே பார்த்தால் என் மேல் தான் கோபப்படுவாங்க. முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க." ஜெகதீஸ்வரி சுயநலமாய்த் தன் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே யோசித்தாள். அத்தனை தன்னலம்...


"எங்க மேல் என்னடி தப்பு? சத்யா கடன்காரன்..." என்று ஆரம்பித்த இராஜராஜேஸ்வரியை கண்டு ஜெகதீஸ்வரி,


"அம்மா, இங்கே காற்றுக்கும் காது இருக்கும். பார்த்து பேசுங்க. அவர் நம்ம பழைய சத்யா இல்லை. பார்த்தீங்க தானே, அவரோட தோரணையை." சொல்லும் போதே அவளுக்குச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை நினைத்துப் பயம் வரத்தான் செய்தது.


"எல்லாம் அவன் பண்ணிய வேலை... இல்லைன்னா இந்நேரம் இந்தக் கல்யாணம் ஜாம்ஜாம்ன்னு நடந்து முடிஞ்சிருக்கும்." என்று பெருமூச்சு விட்ட இராஜராஜேஸ்வரி, "உன் தங்கச்சி மேனாமினுக்கியை பார்த்தியா? பட்டு என்ன? வைர நகைகள் என்ன? ரொம்பத் தான் அலட்டிக்கிறாள். பணத்துக்காக அவன் கூடப் படுக்கிறாள். கொஞ்சம் கூட வெட்கம் இல்லை." சின்ன மகளை நினைத்துக் கோபத்தில் குதித்தார்.


"அத்தை, என்ன இருந்தாலும் ஆதி உங்க பொண்ணு... இப்படிப் பேசாதீங்க." காயத்ரிக்கு சட்டென்று கோபம் வந்தது.


"என் பொண்ணுன்னா என் பின்னாடி வந்திருக்கணும். அதை விட்டுட்டு அந்தப் பயலுக்குச் சப்போர்ட் பண்ணி பேசுகிறாள். இவள் எல்லாம் என் வயித்தில் தான் பிறந்தாளா?"


"அப்படியாம்மா சொல்றீங்க?" ஜெகதீஸ்வரிக்குப் பொறாமை எழுந்தது. அன்னை சொன்ன பட்டு, வைர நகைகளில் அவளது எண்ணம் இருந்தது.


"பின்னே நான் என்ன பொய்யா சொல்லுறேன்? நீயே உன் தங்கச்சியைப் போய்ப் பார். ஆனா ஒண்ணு இவளால நமக்குத் தான் கெட்ட பெயர்." இராஜராஜேஸ்வரி ஆத்திரம் அழ கொள்ள...


"அது என்னவோ உண்மை தான். அவளால் எனக்குத் தான் கெட்ட பெயர். இப்போ பாருங்க, பக்கத்திலேயே இருந்துட்டு என் உயிரை வாங்க போகிறாள். அவளை வச்சு எங்க வீட்டில் என்னைக் கேவலமா பார்க்க போறாங்க." ஜெகதீஸ்வரி போலியாய் கண்களைக் கசக்கினாள்.


"நீ அழாதே ஜெகா. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லவிதமா நடக்கும்." இராஜராஜேஸ்வரி மூத்த மகளைத் தேற்றினார். இந்தக் கூத்தை காயத்ரி சற்று எரிச்சலுடன் பார்த்திருந்தாள்.


"சரி, நீங்க கிளம்புங்க... மாமியாரும், உதயும் பார்த்தால் பிரச்சனையாகிரும்." ஜெகதீஸ்வரி அவர்களைக் கிளம்பச் சொல்லி அவசரப்படுத்தினாள்.


"ஊருல எங்களுக்கு என்ன இருக்கு? நாங்க இங்கேயே இருக்கிறோம். நீ கொஞ்சம் எங்களுக்கு உதவி பண்ணு ஜெகா." இராஜராஜேஸ்வரி மகளிடம் உதவி கேட்டார்.


"நான் என்ன உதவி பண்ண முடியும்? என் கிட்ட பணமா இருக்கு? இல்லை நீங்க கொடுத்து வச்சிருக்கீங்களா? நான் உதவி பண்ண?" ஜெகதீஸ்வரி சாமர்த்தியமாகக் கடமையில் இருந்து கழண்டு கொண்டாள். அதில் எல்லாம் அவள் கெட்டிக்காரி தான்.


"அத்தை ஏதோ தெரியாம கேட்டுட்டாங்க அண்ணி. எங்க கதையை நாங்க பார்த்துக்கிறோம்." காயத்ரி ஜெகதீஸ்வரியிடம் சொல்லியவள் இராஜராஜேஸ்வரியிடம், "நாம கிளம்பலாம் அத்தை." என்று கூறினாள். அதற்கு மேல் இங்கிருந்து மதிப்பை இழக்க அவளுக்கு விருப்பம் இல்லை.


"உடம்பை பார்த்துக்கோ ஜெகா. நீயாவது புத்திசாலித்தனமா பொழைச்சுக்கோ." இராஜராஜேஸ்வரி மகளைத் தவறாது நினைக்காது அவளுக்கு அறிவுறுத்திவிட்டு கிளம்பினார்.


ஆதிசக்தீஸ்வரி கொடுத்த மயூரி அலைப்பேசி எண்ணுக்கு காயத்ரி அழைத்தாள். மறுப்பக்கம் பேசிய மயூரி அவளிடம் நட்சத்திர விடுதி முகவரியை கொடுத்து அவர்களை அங்கே வர சொன்னாள். இருவரும் அங்கே சென்றனர். மயூரியும், சந்தோஷும் இணைந்து அவர்களுக்கு நல்ல வீடு ஒன்றை பார்த்து கொடுத்தனர். அப்படியே காயத்ரிக்கு ஒரு நல்ல வேலைக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதி கூறிவிட்டு சென்றனர்.


இருவரும் சென்ற பிறகு காயத்ரி அந்த வீட்டினை சுற்றி பார்த்தாள். அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் அந்த வீடு இருந்தது. ஒற்றைப் படுக்கையறை கொண்ட சிறிய வீடு தான். ஆனால் அவர்கள் மூன்று பேருக்கும் தாராளமாய்ப் போதும். 'ஃபுல்லி பர்னீஷ்டு' என்பார்களா... அது போன்றதொரு வீடு அது. வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களும் அங்கு இருந்தது. சமைக்கும் பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டி இருந்தது. மற்றபடி எல்லாமே அங்கு இருந்தது. விஷ்ணுவுக்கு அந்த வீடு மிகவும் பிடித்துப் போனது. அவன் சந்தோசமாய் வீட்டை சுற்றி வந்தான். இராஜராஜேஸ்வரி கால் வலிக்கிறது என்று அறையில் சென்று படுத்துக் கொண்டார். காயத்ரி அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் அமர்ந்து இருந்தாள்.


இங்கோ ஆதிசக்தீஸ்வரிக்கு இருப்பு கொள்ளவில்லை. அன்னை, அண்ணி, விஷ்ணு என்னவானார்களோ என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் பேச வேண்டும் என்றால் அவளிடம் அலைப்பேசி இல்லை. திருமணத்தின் போது அவள் தனது அலைப்பேசியைக் காயத்ரியிடம் கொடுத்து இருந்தாள். அதன் பிறகு நடந்த கலவரத்தில் அவள் அலைப்பேசியை மறந்தும் போனாள். என்ன செய்வது? என்று தெரியாது விழித்தவள் பின்பு முடிவு செய்தவளாய் வெளியில் கிளம்பத் தயாரானாள். அவளுக்கு என்று சிம்மஹாத்ரி சத்யநாராயணா உடைகள், நகைகள் என்று நிறைய வாங்கிக் குவித்து இருந்தான். ஆனால் எல்லாமே புடவைகளும், வைர நகைகளும் தான். புடவைகளில் மிகவும் சாதாரணமாக இருந்த ஒன்றை எடுத்து கட்டி கொண்டாள். அதுவே பல ஆயிரங்களை விழுங்கி இருந்தது. அதே போன்று சாதாரணமாய் இருந்த நகையை அணிந்து கொண்டாள். ஒற்றைக் கல் என்றாலும் வைரத்திற்குத் தனி மதிப்பு அல்லவா!


ஆதிசக்தீஸ்வரி கிளம்பி வரவும்... ஜெகதீஸ்வரி அவளைத் தேடி வரவும் சரியாக இருந்தது. அக்காவை கண்டதும் அவளது முகம் யோசனையைத் தத்தெடுத்தது. ஜெகதீஸ்வரி தங்கை அணிந்திருந்த வைர நகைகளைக் கண்டு வயிறு எரிந்தாள். இவளுக்கு எப்படி இப்படி ஒரு வாழ்க்கை? என்று...


"வா ஜெகா... உட்கார். என்ன குடிக்கிற?" ஆதிசக்தீஸ்வரி சம்பிரதாயமாக அக்காவை வரவேற்று உபசரித்தாள். வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பது தானே தமிழர் மரபு.


"என்னமோ உன் சொந்த அரண்மனை மாதிரி நீ உபசரிக்கிற? நீ இங்கே என்ன மாதிரியான நிலையில் இருக்கிறன்னு உனக்குத் தெரியும் தானே. உன்னால் எனக்குக் கெட்ட பெயர். எல்லோரும் உன்னைத் திட்டுறாங்க. எனக்குத் தான் அசிங்கமா, அவமானமா இருக்கு. இப்படி வாழ்றதுக்கு நீ நாண்டுக்கிட்டு செத்து போயிரலாம்." ஜெகதீஸ்வரி சந்தர்ப்பம் பார்த்து விசத்தைக் கக்கினாள்.


அக்காவை பற்றி ஆதிசக்தீஸ்வரிக்கு தெரியும் தான். ஆனால் இப்படி எடுத்தெறிந்து பேசுவாள்? என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. உடன்பிறந்தவளை பற்றி ஜெகதீஸ்வரிக்கு தெரியாதா என்ன? அப்படியிருந்தும் வார்த்தைகளால் காயப்படுத்த அவளுக்கு எப்படி மனம் வந்தது?


"ஜெகா வார்த்தையைப் பார்த்து பேசு." ஆதிசக்தீஸ்வரி அடக்கப்பட்ட கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.


"இன்னும் என்னத்தை வார்த்தையைப் பார்த்து பேச சொல்ற... அதான் உன் பிழைப்புச் சிரிப்பா சிரிக்குதே. இந்த லட்சணத்தில் இருந்துட்டு நீ என்னை அடக்கிறியா?" ஜெகதீஸ்வரி ஆத்திரத்தில் எகிறினாள்.


"உனக்கு என்ன வேணும்?" ஆதிசக்தீஸ்வரி பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.


"நீ இங்கே இருந்து போகணும்."


"ஏன்?" ஆதிசக்தீஸ்வரி அக்காவை உறுத்து விழித்தாள்.


"ஏன்னு கேட்டால்... என்னத்த சொல்ல? உன்னால் என்னோட மதிப்பு, என்னோட பெயர் எல்லாம் கெடுது." ஜெகதீஸ்வரி வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள்.


"நீ செய்த பாவத்தை நான் சுமக்கிறேன் ஜெகா. இந்த விசயம் உதய் மாமாவுக்குத் தெரிந்தால் உன் நிலை?" என்று கேள்வியோடு நிறுத்தி விட்டு அவள் அக்காவை பார்க்க... ஜெகதீஸ்வரி முகம் இருண்டு போனது.


"என் நிலையை விட உன் நிலை அசிங்கமா, அவமானமா போயிரும். நானாவது சத்யாவை மட்டும் தான் நேசிச்சேன். அவன் கூட மட்டும் தான் வாழுறேன். ஆனா நீ? அப்போ உனக்குப் பெயர் என்ன ஜெகா?" ஆதிசக்தீஸ்வரி சாட்டையாய் வார்த்தைகளைச் சுழற்றினாள்.


"ஏய், என்ன ரொம்பத்தான் வாய் நீளுது? தாலி கட்டிட்டு முறைப்படி வந்த நானும், ஒப்பந்தம் போட்டு குழந்தைக்காக வந்த நீயும் ஒண்ணா?" ஜெகதீஸ்வரி கோபமாய்க் கத்தினாள்.


"நீ சொல்றது சரி தான். குழந்தைக்காக ஒப்பந்தம் போட்டு வந்தவள் தான் நான்... ஆனா மனசளவில் உன்னை விட நான் சுத்தமானவள். நான் எப்படின்னு உன் கிட்ட நிரூபிக்க வேண்டிய எந்த அவசியம் இல்லை." ஆதிசக்தீஸ்வரி அழுத்தமாய்ச் சொல்ல...


"ஓஹோ, அப்படிச் சுத்தமானவள் தான் ஜெய் மாமாவை கட்டிக்கச் சம்மதிச்சியாக்கும். அப்போ எங்கே போச்சு உன் காதல்?" ஜெகதீஸ்வரி கிண்டலாய் கேட்க...


"அப்படி நடக்காமல் என்னோட சத்யா என்னைக் காப்பாற்றி விட்டானே. அந்த ஒன்றுக்காக நான் காலம் முழுவதும் அவனது காலுக்குச் செருப்பாய் இருப்பேன்." ஆதிசக்தீஸ்வரி முழுமனதுடன் மனதார சொல்ல...


"இப்போ மட்டும் என்ன வாழுதாம்... அதை விடக் கீழான நிலை தான் உன் நிலை. பட்டும், வைரமும் போட்டால் மட்டும் உன் நிலை மாறப் போறது இல்லை." ஜெகதீஸ்வரி பொறாமையில் பொங்கினாள்.


"பட்டும், வைரமும் உங்க கிட்ட இல்லாததா மிஸஸ் உதய்பிரகாஷ்? இங்கே வந்து எதுக்குப் புலம்பிக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்டபடி அங்கு வந்தது சாட்சாத் சிம்மஹாத்ரி சத்யநாராயணா தான். அவனைக் கண்டதும் ஜெகதீஸ்வரி முகம் பயத்தில் வெளிறிப் போனது. அவனது அன்னையையே அப்படி ஆட்டுவித்தவன் அவன்... அவனுக்கு அவள் எல்லாம் எம்மாத்திரம்!


"பேபி, கண்டவங்களை எல்லாம் எதுக்கு உள்ளே விட்ட?" என்றவனது பார்வை ஜெகதீஸ்வரியை சுட்டுப் பொசுக்கியது. பிறகு சட்டென்று பார்வையை மாற்றியவன் ஆதிசக்தீஸ்வரி புறம் திரும்பி,


"இந்தப் புடவையில் நீ ரொம்ப அழகா இருக்கத் தெரியுமா? பசிக்குதுன்னு சாப்பிட வந்தேன். ஆனா இப்போ வேற பசி பசிக்குதே." என்றவன் அவளின் இதழ் மீது இதழ் பொருத்த... ஏனோ அந்த நொடி ஆதிசக்தீஸ்வரிக்கு அவனது அருகாமை தேவைப்பட்டது போலும்... அவள் அமைதியாக விழி மூடி நின்றாள்.


சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் செய்கையைக் கண்டு விதிர்த்து போன ஜெகதீஸ்வரி அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள். அவள் சென்றதை கூட இருவரும் கவனிக்கவில்லை. மாறாக இருவரும் இதழ் யுத்ததில் மூழ்கி இருந்தனர். இறுதியில் அவன் தான் அவளை விட்டு விலகினான். அவளோ விலகாது அவனது நெஞ்சில் முகம் புதைத்து அவனை அணைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவனும் அதிசயமாக அமைதியாக நின்றிருந்தான்.


"சத்யா..." அவனை அழைத்தபடி அவனது நெஞ்சில் நாடியை பதித்து அவனை அண்ணாந்து பார்த்தாள் அவள்... அவன் குனிந்து கேள்வியாய் அவளைப் பார்த்தான்.


"எனக்கு இங்கே எல்லாம் கிடைக்கும்ன்னு சொன்னேல்ல..."


"ம்..." என்று அவன் தலையாட்டினான்.


"எனக்கு ஒரு ஃபோன் வேணும்." அவள் தயக்கம் ஏதுமின்றி அவனிடம் கேட்டாள்.


"வேற..." அவன் அவளையே பார்த்திருந்தான்.


"கொஞ்சம் பணம்..."


அவள் கேட்டதற்கு அவன் ஏன்? எதற்கு? என்று கூடக் கேட்கவில்லை. அவன் தனது பர்சை திறந்து கற்றைப் பணத்தை எடுத்து அவளது கையில் வைத்தவன், "ஃபோனும் சேர்த்து வாங்கிக்கோ." என்றான்...


"தேங்க்ஸ் சத்யா." என்று முகம் மலர நன்றி சொன்னவளை அவன் உற்றுக் கவனித்தான்.


"என்ன?" அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.


"பசிக்குது வா..." என்றான்...


"சாரி, சாப்பிட வந்தவனைச் சாப்பிட விடாம பேசிட்டு இருக்கேன்." என்றவள் அவனை அழைத்துச் சென்றாள்.


அவனை உணவு மேசையில் அமர வைத்து உணவை பரிமாறியவள் அவனை உண்ண சொல்ல... அவனோ கட்டுப் போட்டிருந்த வலக்கையைத் தூக்கி காட்டினான். அப்போது தான் அவனது நிலை அவளுக்குமே உறைத்தது. அவள் அவனுக்கு ஊட்டிவிட... அவனும் மறுக்காது உணவினை உண்டான்.


"நீயும் சாப்பிடு." என்றவனைப் பார்த்தவள்,


"எனக்குப் பசிக்கலை. பிறகு சாப்பிடறேன்." என்று மறுத்து விட்டாள்.


சிம்மஹாத்ரி சத்யநாராயணா உணவு உண்டதும் அவள் அங்கிருந்து செல்ல முயல... அவன் அவளது புடவையைப் பிடித்து இழுத்து தன்னருகே வர செய்தவன் அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.


"கொடுத்த பணத்துக்கு மீட்டர் வட்டி போட்டு வசூலிக்க வேண்டாமா?" என்று அவன் கிசுகிசுப்பாய் கேட்க... அவள் அவனைக் கண்ணீரோடு பார்த்தவள்,


"ப்ளீஸ் சத்யா... நீ சிம்மனாவே இருந்துக்கோ. ஆனா நான் என் சத்யாவோடு வாழ்ந்துட்டு போறேன். தயவுசெஞ்சு நீ இப்படிப் பேசி என்னை வதைக்காதே. இந்தச் சின்னச் சந்தோசத்தையாவது எனக்குக் கொடு." அவள் கெஞ்சி கேட்டுக் கொள்ள...



"சிம்மனுக்கு இப்படிப் பேசி தான் பழக்கம்." என்றவனது கரங்கள் அவளை அள்ளி கொண்டது. இனி திமிறி பிரயோஜனம் இல்லை. அவள் பாந்தமாய் அவனது கரங்களில் அடங்கிப் போனாள்.
 

ஶ்ரீகலா

Administrator
சில மணி நேரங்களில் அவன் தன்னை விடுவித்ததும் அவள் புடவையைக் கட்டி கொண்டு வெளியில் செல்ல தயாரானாள்.


"எங்கே?" அவன் சற்று கடுமையுடன் கேட்டான்.


"அம்மா, அண்ணி, விஷ்ணுவை பார்க்க..."


"எதுக்கு?"


"என்ன பண்றாங்கன்னு தெரியலை? அவங்களுக்கு வேண்டியது வாங்கிக் கொடுக்கணும்." அவள் தயக்கத்துடன் தான் சொன்னாள்.


"அதுக்குத் தான் பணம் கேட்டியா?"


"ஆமா..." என்றவள் தலை பலமாக ஆடியது.


"நான் போகக் கூடாதுன்னு சொன்னால்...?" அவன் கேள்வியாக நிறுத்த...


"எதிர்த்துட்டு போக என்னால் முடியும். ஆனால் நான் அப்படிப் போக விரும்பலை."


"அப்பப்போ உனக்கும் புத்தி வேலை செய்யுதே." அவன் அவளைக் கேலி செய்து சிரித்தான்.


"நான் போகவா?" அவள் மறுபடியும் அனுமதி கேட்டாள்.


"தேவையில்லை. எத்தனையோ பேருக்கு நான் உதவி செய்து இருக்கிறேன். அள்ளி கொடுத்திருக்கிறேன். நான் பார்த்துக்கிறேன்." என்றவன் உடை மாற்றி விட்டு வெளியில் செல்ல கிளம்பத் தயாரானான். அவள் யோசனையுடன் தன்னைப் பார்ப்பதை கண்டு,


"இன்னும் என்ன?" என்று அவன் கேட்க...


"ஃபோன் பண்ணி கேட்கவா? உன் ஃபோனை கொடுக்கிறியா?" அவள் விழிகளையும், மூக்கையும் சுருக்கி கொண்டு கெஞ்சிய அழகினை காண கண் கோடி வேண்டும். அவன் அவளையே பார்த்தபடி தனது அலைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.


அவள் முகம் மலர அலைப்பேசியை வாங்கியவள் உடனே காயத்ரிக்கு அழைத்துப் பேசினாள். மயூரியும், சந்தோஷும் உதவி செய்ததைக் காயத்ரி சொல்லவும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆதிசக்தீஸ்வரி நிம்மதியுடன் அழைப்பை துண்டித்தாள். அலைப்பேசியை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவள் அறையில் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை காணாது திகைத்தாள். பின்பு அவள் அவனைத் தேடி அறையை விட்டு வெளியில் வர... அதே நேரம் அவனும் அங்கு வந்தான். இருவரும் முட்டி கொண்டு நின்றனர்.


"ஃபோன்..." அவன் எதுவும் சொல்லி விடுவானோ என்று அவள் பயத்துடன் அவனது அலைப்பேசியை நீட்ட...


அதேநேரம் அவனும், "ஃபோன்..." என்று புது அலைப்பேசியை அவள் முன் நீட்டி இருந்தான்.


"தேங்க்ஸ்..." என்றவள் சங்கோஜம் கொள்ளாது அலைப்பேசியை வாங்கிக் கொண்டாள். அவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்.


ஆதிசக்தீஸ்வரி தனது கரங்களில் தவழ்ந்து கொண்டிருந்த புது அலைப்பேசியைப் பார்த்திருந்தாள். வாழ்க்கையின் சூட்சுமத்தை உணர்ந்து கொண்டாளா! அல்லது அவனின் சூட்சுமத்தை உணர்ந்து கொண்டாளா! ஏதோ ஒன்று அவனுடன் இருக்கும் காலத்தை வெறுப்பு இல்லாது ஓட்ட வேண்டும். அது தான் அவளது வேண்டுதல்... அவளது சத்யாவை அவள் எந்தக் காரணம் கொண்டும் வெறுத்துவிடக் கூடாது.


***************************


தனது அறைக்கு வந்த ஜெகதீஸ்வரி உள்ளம் கொதித்துப் போய் நின்றாள். ஏதோ ஒன்று அவளைப் பொறாமையில் பொசுங்க செய்தது. தங்கையை விட அவளது வாழ்விற்கு என்ன குறை? அரண்மனை இளவரசன் அவளது தாலி கட்டிய கணவன்... பட்டும், வைரமும் தங்கைக்கு மட்டும் சொந்தம் இல்லை. அவளுக்கும் உரித்தானது தான். பிறகு ஏன் இந்தப் பொறாமை? என்று யோசித்தவளின் விழிகளில் அந்நேரம் அறைக்குள் நுழைந்த கணவன் தென்பட்டான்.


உதய்பிரகாஷ் அறைக்குள் நுழைந்ததும் களைப்பில் சோபாவில் அமர்ந்து விழிகளை மூடினான். அவன் மனைவியைச் சிறிதும் கண்டு கொள்ளவில்லை. அப்போது தான் ஜெகதீஸ்வரிக்கு அது புத்தியில் உறைத்தது. சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் இருந்த ஆளுமை, கம்பீரம் எதுவுமே தனது கணவனிடம் இல்லை என்று... அவன் பட்டத்து இளவரசன் அன்றோ... வருங்கால அரசனன்றோ! அது மட்டுமா? அவனிடம் இருக்கும் அந்தக் காதல் தனது கணவனிடம் இல்லையே! (ஆதிசக்தீஸ்வரியிடம் அவன் நடந்து கொண்ட முறை அவளுக்குக் காதலாகத் தெரிந்தது போலும்.) வந்ததும் வராததுமாய்த் தங்கையின் இதழில் புதைந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் ஆளுமையான தோற்றம் அவளது மனதில் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை வதைத்தது. முன்பு அவன் சத்யாவாக இருந்த போது கூட அவளிடம் அன்பாகத் தான் இருந்தான். அக்கறையாகத் தான் இருந்தான். அவளுக்குத் தான் அறிவில்லாது போயிற்று. பணத்தை நம்பி ஏமாந்து மோசம் போய்விட்டாளே! அவளது விழிகள் கணவனை வெறுப்புடன் பார்த்தது. கையில் கிடைத்த பொக்கிசத்தைத் தொலைத்து விட்டாளே. மீண்டும் அது அவளுக்குக் கிடைக்காது என்று தெரியும். ஆனால் அது கிடைக்கப் பெற்றவர் நிம்மதியாய் வாழ விடாது செய்யும் வழி அவளுக்குத் தெரியுமே! அதைவிட ஆதிசக்தீஸ்வரி தன்னைப் பற்றிக் கணவனிடம் போட்டு கொடுத்து விடுவாளோ என்கிற பயமும் அவளுக்கு இருந்தது.


'ஆதி, என்னையவா கேவலமா பேசுற? உன்னை இங்கே இருந்து விரட்டி விடலை என் பெயர் ஜெகதீஸ்வரி இல்லை.' தங்கை மீது வன்மம் வளர்ந்தது.


'டேய் சத்யா, என்னையவா கண்டவங்கன்னு சொல்லுற? உன்னை என்ன பண்றேன்னு பார்.' அவளுக்கு ஏனோ அவன் மீதும் கோபம் வந்தது. தான் ஏமாந்து விட்ட கோபமோ?


அரண்மனையின் மற்றொரு அறையில் ராணியம்மா அலைப்பேசியில் அண்ணனிடம் புலம்பி கொண்டு இருந்தார்.


"எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கா அண்ணா? ஜெய் கல்யாணம் இப்படி நின்னு போனதில் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. வெளியில் தலை காட்ட முடியாது அவமானமா இருக்கு. எனக்கு நீங்க தான் ஒரு வழி சொல்லணும்?" ராணியம்மா புலம்ப...


"நான் என்ன சொல்லணும் ராணி?" வேங்கடபதி தேவா புரியாது கேட்க...


"நம்ம ரச்சிதாவை ஜெய்க்குக் கல்யாணம் பண்ணி வைங்க. அது தான் எனக்கு வேணும்."


"ரச்சிதா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்." வேங்கடபதி தேவா இந்தளவிற்குச் சொன்னதே ராணியம்மாவிற்குப் போதுமானதாய் இருந்தது. அவர் நிம்மதியுடன் அழைப்பை துண்டித்தார்.


வேங்கடபதி தேவா மகளிடம் இந்த விசயத்தைச் சொல்ல... அவளோ எதையோ யோசித்தவளாய், "நான் அத்தை வீட்டுக்குப் போகிறேன். திருமணம் பற்றிப் பிறகு பேசுகிறேன்." என்றவள் விசாகப்பட்டிணம் செல்ல ஆயத்தமானாள்.


தனது அலமாரியில் பத்திரமாக வைத்திருந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா புகைப்படத்தைக் கையில் எடுத்த ரச்சிதா அவனுக்குக் காதல் மயக்கத்தில் முத்தமிட்டாள்.


"குழந்தைக்காக மட்டும் தானே அவளை வச்சிருக்கீங்க. வச்சுக்கோங்க பாவா. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனா நான் மட்டுமே உங்கள் மனைவி. அது மட்டும் எனக்குப் போதும்." என்றவள் விழிகளில் காதலும், தாபமும் வழிந்தோடியது.


இரு பெண் புயல்களும் சிம்மஹாத்ரி சத்யநாராயணா என்னும் சிங்கத்தை அசைக்கப் போகின்றது என்றால்... இடையில் சிக்கி கொள்ளும் மானின் நிலை என்னவோ! ஒருத்தியை காதலித்து மணக்கும் வரை சென்றதையே தாங்கி கொள்ள முடியாத ஆதிசக்தீஸ்வரிக்கு இன்னமும் ரச்சிதா கதை தெரியாது. தெரியும் போது அவளின் நிலை என்னவோ!


*****************************


ராஜ்குமார் ஆந்திர மாநில முதலமைச்சரின் முன் பவ்யமாக அமர்ந்து இருந்தான். முதலமைச்சரோ அவனை யோசனையாய்ப் பார்த்திருந்தார்.


"இந்த முறை எனக்குச் சீட் கட்டாயம் வேண்டும் தலைவரே." அவன் பவ்யமாய் அமர்ந்து இருப்பதற்கும், அவனது வார்த்தையில் இருக்கும் மிரட்டலுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை. அவன் நடிகன் அல்லவா! அதுவும் மகா நடிகன் அல்லவா! அவனுக்கு நடிக்கச் சொல்லி கொடுக்கவா வேண்டும்!


"உங்கப்பா சீட் உனக்குக் கொடுக்கிறதா தான் பேச்சு. உங்கப்பாவும் இதையே தான் விரும்பினார். அதனால் தான் உன்னைச் சினிமாவில் நடிக்க வைத்தார். நீ அதன் மூலம் மக்களுக்குப் பரிச்சயமாகி பிரபலமாகணும்ன்னு அவர் நினைச்சார்." முதலமைச்சர் பேசி கொண்டே போக...


"அவர் நினைச்சது நடந்திருச்சு தானே. கிட்டத்தட்ட பத்து வருடங்களாகச் சினி இன்டஸ்ட்ரியில் இருக்கிறேன். மக்கள் அவங்க வீட்டு பிள்ளையாய் என்னைக் கொண்டாடுறாங்க. இதைவிட வேறு என்ன வேணும் தலைவரே?" அவன் இடையிட்டு பேச...


"நல்லா தான் பேசுற... ஆனா இப்போ எல்லாம் உன் படங்கள் எதுவும் சரியா ஓட மாட்டேங்குதுன்னு கேள்விப்பட்டேனே." முதலமைச்சர் இழுத்தார்.


"அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?" அவன் விழிகளைச் சுருக்கி அவரைக் கேள்வியாய் பார்த்தான்.


"நிச்சயம் சம்பந்தம் இருக்கு. நீ புகழின் உச்சத்தில் இருந்திருந்தால் நான் தாராளமா உனக்குச் சீட் கொடுத்திருப்பேன். ஆனா உன்னை மாதிரி தோத்துப் போனவங்களுக்குச் சீட் கொடுத்து என்னோட கட்சி தோத்து போறதை நான் விரும்பலை. தொடர்ந்து ஐஞ்சு முறை நான் தான் ஜெயிச்சு இருக்கேன். இந்த முறையும் நான் தான் ஜெயிக்கணும். அதுக்கு உன்னை விடப் பெட்டரான ஆள் தான் என்னோட சாய்ஸ்." முதலமைச்சர் தயவுதாட்சண்யமின்றிச் சொல்லிவிட...


"எங்க சாதி ஓட்டு எனக்குத் தான் தலைவரே... ஞாபகம் வச்சுக்கோங்க." அவன் மிரட்டலாய் சொல்ல...


"ஆனா மக்களிடம் சிம்மா வாக்கு தான் செல்லுபடியாகும். உன் சாதி வெறி இல்லை." முதலமைச்சர் சளைக்காது பதில் கொடுத்தார். அதைக் கேட்டு அவனுக்குச் சினம் ஏறியது.


"நீங்களே வந்து என் கிட்ட கெஞ்சிக்கிட்டு நிப்பீங்க. அப்போ நாம சந்திக்கலாம். இப்போ நான் வர்றேன் தலைவரே. நன்றி..." என்றவன் பெரிய கும்பிடு போட்டு விட்டு அங்கிருந்து சென்றான்.


ராஜ்குமார் வெளியில் வந்த போது ஊடகங்கள் அவனைச் சூழ்ந்து கொண்டது. எல்லோரும் எதற்கு இந்தச் சந்திப்பு? என்று கேட்க...


"மரியாதை நிமித்தமாய் முதலமைச்சரை சந்தித்துப் பேசினேன்." என்று அவன் நழுவினான்.


"உங்கப்பா இந்தக் கட்சியில் தொடர்ந்து அமைச்சரா இருந்தவர்... உங்களுக்கும் அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா?" ஊடக நிருபர் ஒருவர் கேட்க...


"இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. அப்படியொரு எண்ணம் வந்தால் நான் முதலில் சொல்ல போவது பத்திரிக்கை நண்பர்களுக்குத் தான்." அவன் பெரிய புன்னகையோடு சொன்னான்.


"அடுத்தடுத்து ஒரே புரொடக்சனில் நீங்க நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து இருக்கிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?"


"வெற்றி, தோல்வி சகஜம்... அடுத்தப் படத்தில் பார்க்கலாம்." என்றவன் கை கூப்பி விட்டு காரினுள் ஏறினான்.


இந்தப் பேட்டி தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதைச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான்.


"என்னைச் சந்திக்க ஆவலாக இருக்கிறியா நண்பனே? சந்தித்து விடலாமே..." என்று கேலியாய் சொன்னவனின் முகத்தில் மருந்துக்கும் கேலி இல்லை. மாறாக அவனது முகம் ஆத்திரத்தில் இறுகி இருந்தது.


"செங்கோல் மன்னன் மக்களுக்காக

உயிரையும் கொடுப்பான், ஆட்சியின்

நியாயம், தர்மம் நிலைக்க...

ஜனநாயக மன்னன் மக்களின்

உயிரை எடுப்பான், ஆட்சியின்

ஆதாய அரசியலுக்காக...

மக்களைக் காக்க முடிசூடா மன்னன் மீண்டும்

செங்கோல் எடுப்பதில் தவறில்லையே!

தெய்வம் நின்று கொல்லும்!

அரசன் அன்றே கொல்வான்!

இந்த அரசன் என்றும் துணை நிற்பான்,

தன் மக்கள் பக்கம்...!"


நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 29


ஆதிசக்தீஸ்வரி சிம்மஹாத்ரி சத்யநாராயணா பின்னேயே அலைந்து கொண்டிருந்தாள். அவனோ அலைப்பேசியில் பேசுவதில் பிசியாக இருந்தான். அவன் அழைப்பை எப்போது வைப்பான் என்று அவள் அவனையே பார்த்திருந்தாள். அவளது பார்வையை உணர்ந்தார் போன்று அவன் அந்த அழைப்பை வைத்து விட்டு அவளைக் கேள்வியாகப் பார்த்தான். அப்போது மீண்டும் அவனுக்கு அழைப்பு வர... அவன் அழைப்பை உயிர்ப்பித்து அலைப்பேசியைக் காதில் வைத்தான்.


"சத்யா..." அவள் மெல்ல அவனை அழைக்க... என்னவென்று விழிகளால் வினவியவன் அழைப்பை வைக்கவில்லை.


'ப்ச்...' என்று தனக்குள் முணுமுணுத்தவள் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.


பத்து நிமிடங்கள் கழித்தே அழைப்பை வைத்து விட்டு அவள் அருகே வந்தவன், "என்ன?" என்று கேட்க...


"நான் போய் விஷ்ணுவை பார்த்துட்டு வரவா?" அவளது விழிகளில் ஆர்வம் தெரிந்தது.


"தேவையில்லை. அவங்க எல்லோரும் நல்லா இருக்காங்க." அவன் கூறிக் கொண்டே செல்ல...


"எனக்கு என்னமோ ஜெயில்ல அடைஞ்சு கிடக்கிற மாதிரி இருக்கு. வெளியில் போகக் கூட எனக்கு உரிமை இல்லையா? சுதந்திரம் இல்லையா?" அவள் வீர முழக்கமிட...


"உன்னைப் பொறுத்தவரை இது ஜெயில் தானே?" அவன் கேலியாய் அவளைப் பார்த்தான்.


"நான் அப்படிச் சொன்னேனா?"


"பின்னே இல்லையா? சீதையைச் சிறையெடுத்த ராவணனை பார்க்கிற மாதிரி தானே நீ என்னைப் பார்த்து வைக்கிற." அவனது கேலி குறையவில்லை.


"நீ என் ராமனாக, என் சத்யாவாக மாறும் போது என் பார்வையும் மாறும்." அவள் கோபம் போல் சொல்ல...


"எதுக்கு? பைத்தியக்கார சத்யா தலையில் மிளகாய் அரைக்கவா? ஏற்கெனவே அரைச்ச வரை போதும்." என்று இறுதியாய் முடித்தவன் வரவேற்பறைக்கு வந்தான். ஆதிசக்தீஸ்வரியும் கோபத்தோடு அவனின் பின்னேயே வந்தாள்.


அங்கு வரவேற்பறையில் பூஜிதா அமர்ந்திருந்தாள். கூடவே ரச்சிதாவும்... ஆதிசக்தீஸ்வரிக்கு பூஜிதாவை தெரியும். பூஜிதாவை அக்காவின் திருமணத்தில் அவள் பார்த்தது. உடன் இருக்கும் ரச்சிதாவை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. அக்காவின் வரவேற்பிற்குப் போயிருந்தால் அவளுக்கு ரச்சிதா பற்றித் தெரிந்திருக்கும். அதன் பிறகு இப்போது தான் அவளது திருமணத்திற்கு ரச்சிதா வந்திருக்கிறாள். அப்போதும் அவள் ரச்சிதாவை கவனிக்கவில்லை. கவனிக்கும் நிலையில் அவள் இல்லையே!


"செல்லி..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா முகம் மலர மகிழ்ச்சியோடு தங்கையை அழைத்தபடி அவள் அருகே சென்று அமர்ந்தான். எல்லோரிடமும் இறுக்கம் காண்பித்தாலும் தங்கையிடம் அப்படி இருக்க அவனால் முடியவில்லை.


"அண்ணய்யா..." அண்ணனை அணைத்துக் கொண்ட பூஜிதாவுக்கும் விழிகள் கலங்கி போனது.


"அண்ணய்யா, நான் உங்களைத் தப்பா நினைச்சிட்டேன்." என்று பூஜிதா சொல்லவும் அவன் ஒன்றும் தங்கையைத் தவறாக எண்ணவில்லை. அதன் உள்ளர்த்தத்தையும் அவன் உணரவில்லை. மாறாகத் தன்னைப் பேசியது தவறு என்று தங்கை உணர்ந்து விட்டாள் என்றே அவன் நல்லவிதமாகக் கருதினான்.


ஆனால் நடந்ததோ வேறு அல்லவா! ரச்சிதா பூஜிதாவிடம் ஆதிசக்தீஸ்வரி பற்றிக் குறை கூறி அவளது நிலையைக் கீழிறக்கி விட்டாள். அதற்கு ஒத்து ஊதியது ஜெகதீஸ்வரி. உடன்பிறந்த அக்கா தனது தங்கையைப் பற்றித் தவறாகக் கூறினால்... பூஜிதா நம்பாது இருப்பாளோ! பூஜிதா அவர்கள் கூறியதை நம்பி ஆதிசக்தீஸ்வரி மீது குரோதம் வளர்ந்து கொண்டாள்.


ரச்சிதா இங்கு வந்தவுடன் ராணியம்மாவுடன் சேர்ந்து திட்டம் வகுக்க ஆரம்பித்தாள். ராணியம்மாவிற்கு ஆதிசக்தீஸ்வரி இலக்கு இல்லை. ஆனால் ஆதிசக்தீஸ்வரியை அவமானப்படுத்துவதன் மூலம் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை அவமானப்படுத்திப் பழிவாங்க முடியுமே! அதனால் அவர் அண்ணன் மகளுடன் கரம் கோர்த்துக் கொண்டார். ஆனால் ரச்சிதாவிற்கோ ஆதிசக்தீஸ்வரி மட்டுமே இலக்கு... அவளை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பி விட்டால் போதும். அதன் பிறகு தந்தை மூலம் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை சுலபமாக அடைந்து விட முடியும். அவள் மாஸ்டர் மைண்ட்டுடன் திட்டம் தீட்டினாள்.


ராணியம்மா ஜெகதீஸ்வரியின் மனதினை ஆழம் பார்க்க எண்ணினார். அதனால் அவளை அழைத்து வைத்து வேண்டுமென்றே ஆதிசக்தீஸ்வரி பற்றிய பேச்சை எடுத்தார். அவளோ தனது சொகுசு வாழ்க்கைக்குப் பஞ்சம் வந்துவிடும் என்று அஞ்சி... தங்கைக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவள் கூறினாள். அத்தோடு அவள் ஆதிசக்தீஸ்வரி பற்றிக் கேவலமாகப் பேசி தங்கைக்குச் சாபம் விட்டாள். அவளால் தனது வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாய் அவள் நீலிக்கண்ணீர் வடித்தாள். அது போதாதா ராணியம்மா, ரச்சிதாவிற்கு... அவளையும் தங்களது கூட்டணியில் சேர்த்து கொண்டனர். ஜெகதீஸ்வரியும் சிம்மஹாத்ரி சத்யநாராயணா மற்றும் ஆதிசக்தீஸ்வரி இருவரின் நிம்மதியை குலைக்க எண்ணி அவர்களோடு இணைந்து கொண்டாள்.


இப்போது தனித்து இருக்கும் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை அவர்களால் நெருங்க முடியாது என்று அவர்கள் மூவருக்கும் தெரியும். அதனால் ரச்சிதா தான் பூஜிதா எனும் துருப்புச்சீட்டு பற்றி முதலில் சொன்னது. பிறகு ஜெகதீஸ்வரி மூலம் ஆதிசக்தீஸ்வரி பற்றிய தவறான எண்ணத்தைப் பூஜிதா மனதில் திணித்து அவளைக் கெட்டவளாக்கி விட்டனர்.


"யாரோ ஒருத்திக்காக நீ ஏன் உன் அண்ணய்யாவை விட்டு கொடுக்கணும்? அவள் முன்னே நீ உன் முக்கியத்துவத்தைக் காட்டு. வா பூஜா..." ரச்சிதா அவளை அழைத்துக் கொண்டு இங்கே வந்துவிட்டாள்.


ரச்சிதா நினைத்தது போல் சிம்மஹாத்ரி சத்யநாராயணா தங்கையைக் கண்டதும் உருகி விட்டான். இரும்பு இளகி விட்டது. அவளுக்கு அது தானே வேண்டும்.


"அண்ணய்யா, எனக்குப் போர் அடிக்குது. வாங்க, வெளியில் போகலாம்." தங்கை அழைக்க...


"கட்டாயம் போகலாம் செல்லி... உன்னை வெளியில் அழைத்துப் போவதை விட வேறு என்ன வேலை எனக்கு இருக்கு. வா..." அவன் சொன்னது கேட்டு மற்ற இருவர் முகமும் மலர்ந்து போனது என்றால்... ஆதிசக்தீஸ்வரி முகமோ கோபமாய் அவனை முறைத்துப் பார்த்தது. அவள் கேட்டதற்கு வேண்டாம் என்று அவன் மறுத்து விட்டான். அதுவும் அவள் தனியே செல்வதாகத் தான் கூறினாள். ஆனால் அவனுடைய தங்கையை மட்டும் வெளியில் கூட்டி செல்கின்றான். அவளுக்குப் புசுபுசுவென்று வந்தது.


"பாவா, நானும் வரவா?" ரச்சிதா ஈயென்று இளித்தபடி கேட்க...


"ம்..." என்று அவன் ஒற்றைச் சொல்லோடு பதிலளிக்க... அதைக் கண்டு ஆதிசக்தீஸ்வரிக்கு இன்னமும் கோபம் அதிகரித்தது. 'பாவா' என்பதன் அர்த்தம் அவளுக்கும் புரியுமே. ரச்சிதாவிற்கு அவன் 'பாவா' என்றால்... அவளுக்கு அவன் யார்? விடை தெரியா வினாவில் அவளது கண்கள் கலங்கியது.


"பாவா, அப்படியே சினிமா, பீச் எல்லாம் போயிட்டு வரலாமா?" அவனிடம் இயல்பாகக் கேட்பது போல் ரச்சிதா எழுந்து வந்து அவனது மறுப்பக்கம் அமர்ந்து அவனது கரத்தினைப் பற்றிக் கொண்டாள். அவனால் சட்டென்று எழ முடியாத நிலை. ஏனெனில் அவனது இன்னொரு கரம் தங்கையை அணைத்து இருந்தது.


"கிளம்பலாமா செல்லி?" தங்கையை எழுப்பியவன் அடுத்த நொடி ரச்சிதாவின் கரத்தினை விடுவித்து விட்டு எழுந்து விட்டான்.


மூவரும் கிளம்பி வெளியில் சென்றனர். ஆதிசக்தீஸ்வரி கோபத்தோடு நின்றிருந்தாள். அவன் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. அவளைக் கண்டு கொள்ளவும் இல்லை. முதல் முறையாக அவனது உதாசீனம் அவளுக்கு அழுகையை வரவழைத்தது. அவள் முறையாகத் தாலி கட்டி அவனது மனைவியாக வந்திருந்தால் அவன் அவளுக்கு மதிப்பு கொடுத்து இருப்பான். ஆனால் அவள் வந்ததோ வேறு வேலைக்கு... பிறகு எப்படி அவன் அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பான்? அவள் தேவையில்லாததை நினைத்து தன்னையே வருத்தி கொண்டாள்.


ஆதிசக்தீஸ்வரி சோபாவில் அமர்ந்து கொண்டு முணுமுணுவென்று அவனை வசைபாடி கொண்டிருந்தாள். அப்போது தன் முன் நிழலாடவும் அவள் நிமிர்ந்து பார்த்தாள். சிம்மஹாத்ரி சத்யநாராயணா தான் அங்கு நின்றிருந்தான். அவள் அவனைக் கோபமாய் முறைத்து பார்த்தாள்.


"கார் கீ..." என்றவன் அவள் அருகே இருந்த கார் சாவியை எடுத்தான். அவள் ஒன்றும் பேசாது அவனைக் கண்டு கொள்ளாது அமர்ந்து இருந்தாள்.


அவன் ஒற்றைக் காலை சோபாவின் மீது மடக்கி வைத்து அவள் அருகே நெருங்கி வந்தான். அவள் பேவென விழிக்க... அடுத்த நொடி அவன் அவளது முகம் நோக்கி குனிந்து அவளது இதழ்களைச் சிறை செய்தான். அவள் என்ன, ஏதென்று உணரும் முன் அவள் முற்றிலும் அவனது ஆளுகைக்குள் அடங்கியிருந்தாள். சில நிமிடங்களில் அவளை விட்டு விலகியவன்,


"நீ என்னைத் திட்டின தானே?" என்று கேட்க... திகைப்பில் இருந்தவள் தலையோ தானாக ஆமென்று ஆடியது.


"அதுக்குப் பனிஷ்மென்ட் தான் இது..." என்றபடி அவன் எழுந்து நின்றான்.


"அப்போ தினம் படுக்கையில் கொடுக்கும் பனிஷ்மென்ட் எதுக்குச் சத்யா?" அவனது பதிலில் அவளுக்கு அழுகை வந்தது. அவள் அடக்கி கொண்டு கேட்டாள்.


"அது உன் அம்மா பேசிய பேச்சுக்கும்... நீ செய்த செயலுக்கும்..." அவன் சளைக்காது பதில் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.


சிறை கைதியின் நிலையை ஒத்துயிருந்தது அவளது நிலை... தன்னை நினைத்தே அவளுக்குக் கழிவிரக்கம் தோன்றியது.


இரவு தான் மூவரும் திரும்பி வந்தனர். அதுவும் கை நிறையப் பைகளுடன்... கார் சத்தம் கேட்டு வெளியில் வந்த ஆதிசக்தீஸ்வரி இந்தக் காட்சியைக் கண்டு அப்படியே நின்று விட்டாள். அவளது மனம் வெதும்பி போய்விட்டது. ஆனாலும் அவள் எதையும் வெளிக்காட்டி கொள்ளாது இருந்தாள்.


"பை..." என்று இரண்டு பெண்களும் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் விடைபெற்று விட்டு அவளைக் கண்டு கொள்ளாது சென்று விட்டனர்.


ஆதிசக்தீஸ்வரி கோபம் கொண்டு அவனைக் கண்டு கொள்ளாது தங்களது அறையை நோக்கி செல்ல... அவனும் அவளின் பின்னேயே வந்தான். அறைக்குள் நுழைந்தவனின் கரம் உடையை மாற்றினாலும் அவனது பார்வை அவளையே மொய்த்திருந்தது. அவளோ அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள். அவனும் அவளைக் கண்டு கொள்ளாது குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அவன் தன்னைக் கண்டு கொள்ளாதது கண்டு அவளுக்கு இயலாமையில் கண்ணீர் வந்தது.


'போ, எனக்கும் நீ வேண்டாம்.' அவளது மனம் அவனிடம் செல்லமாய் முறுக்கி கொண்டது.


குளியலறை கதவு திறக்கும் ஓசையில் அவள் விழிகளை இறுக்கமாய் மூடி கொண்டாள். அவன் அவள் அருகே வந்து படுத்துப் பின்னால் இருந்து அணைத்து அவளது முதுகில் முகம் புதைத்தான்.


"எனக்குத் தூக்கம் வருது." அவள் மறுக்க...


அவளைத் தன் பக்கமாய்த் திருப்பியவன், "எனக்குத் தூக்கம் வரலையே." என்றவன் அவளது முகத்தில் முத்த கோலமிட ஆரம்பித்தான்.


"அவள் யார்?" என்று கேள்வி கேட்டவளை ஒரு பார்வை பார்த்தவன்,


"என் தங்கை..." என்றுவிட்டு முத்தத்தைத் தொடர்ந்தான்.


"நான் பூஜிதாவை சொல்லலை. கூட இருந்தாளே இன்னொரு பெண். உன்னைக் கூடப் பாவான்னு சொன்னாளே."


"என்னோட மாமா பொண்ணு." அவன் பேசி கொண்டே முத்தத்தைத் தொடர...


"நீ அவளுக்குப் பாவான்னா... அப்போ எனக்கு நீ யார்?" அவளது கேள்வியில் அவன் முத்தமிடுவதை நிறுத்தி விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.


"சொல்லு சத்யா?" அவள் விடாது கேட்க...


"அதை நீ தான் சொல்லணும்." என்றவன் அவளையே பார்க்க... அவள் பதில் பேசாது மௌனமாக இருந்தாள். அடுத்த நொடி அவன் தனது வேலையைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தான். அதாவது அவளது இதழின் ஆழமாய்ப் புதைந்து போனான்.


அவள் அவனிடம் இருந்து திமிறிக் கொண்டு விடுபட்டவள், "என்னை வெளிய கூட விட மாட்டேங்கிற. ஆனா அவங்களை மட்டும் வெளியில் கூட்டிட்டு போற. அதிலேயே என் நிலை என்னன்னு எனக்குப் புரிஞ்சி போச்சு." என்று அவள் கத்த... அவன் புரியாது அவளைப் பார்த்திருந்தான்.


"என்னை வெளியில் கூட்டிட்டுப் போகக் கூட உனக்கு அசிங்கமா இருக்குல்ல. நான் அந்த மாதிரி பொண்ணுன்னு நினைச்சு தானே. நீ என்னை வெளியில் அனுப்ப மாட்டேங்கிற." அவள் அழுகையும், ஆங்காரமுமாய்க் கத்தினாள்.


"படுக்கையில் இப்படி இருந்துட்டு என்னடி கேள்வி இது?" என்றவன் நக்கலாய் அவளைச் சுட்டிக்காட்ட...


அவள் குனிந்து தன்னைப் பார்த்தவள் உடனே வேகமாய்ப் போர்வை கொண்டு ஆடைகள் விலகியிருந்த தனது மேனியை மூடி கொண்டாள்.


"நான் இருக்கும் போது உனக்குப் போர்வை எதுக்குப் பேபி?" என்று மையலுடன் சொன்னவன் அவள் மூடியிருந்த போர்வையை அகற்றி விட்டு தானே அவளுக்குப் போர்வையாக மாறிப் போனான். அதன் பிறகு அங்குப் பேச்சுக்கு இடமேது!


அப்போதாவது அவன் ரச்சிதா பற்றிய உண்மையை அவளிடம் சொல்லியிருக்கலாம். அவன் சொல்லாது போனான். பெண்ணவள் மனம் புரியாதும் போனான்.



*********************************
 

ஶ்ரீகலா

Administrator
"இப்போ எதுக்கு ராஜை பார்க்கணும் துடிக்கிற? அவனுடனான பிரெண்ட்ஷிப் ஏழு வருசத்துக்கு முன்னேயே கட்டாகி விட்டது. இடையில் அவன் நம்ம தங்கச்சி கிட்ட நடந்துக்கிட்டது எல்லாம் உனக்கு நினைவு இருக்கா? இல்லையா சத்யா?" பவன்ராம் காரை ஓட்டியபடி அருகில் அமர்ந்திருந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் கோபமாய்க் கேள்வி கேட்டான்.


"ஏன் நினைவு இல்லாம? நல்லா நினைவு இருக்கு." என்றவனது முகத்தில் புன்னகை தோன்றியது. பவன்ராம் அவனை விசித்திரமாகப் பார்த்து வைத்தான்.


"காலேஜ் படிக்கும் போது எவ்வளவு ஜாலியா இருந்தோம். இல்லையா? அப்படியே இருந்திருக்கலாம்ன்னு தோணுது பவன்." சிம்மஹாத்ரி சத்யநாராயணா பழைய நினைவுகளின் தாக்கத்தில் விழி மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தான்.


"இப்பவும் நீ சந்தோசமா, ஜாலியா இருக்கலாம் சத்யா. நீ தான் லைஃபை காம்ப்ளிகேட் பண்ணிக்கிற."


"யாரு நானா? எப்பவுமே நான் என் லைஃப்பை டிசைட் பண்ணியது இல்லை. சுற்றி உள்ளவங்க தான் டிசைட் பண்ணியிருக்காங்க. இப்போ தான் முதல் முறையாக நான் எனக்குன்னு வாழ ஆரம்பிச்சு இருக்கேன்." என்றவன் நினைவில் ஆதிசக்தீஸ்வரி முகம் தோன்றியது.


"இது எல்லாம் ஒரு வாழ்க்கையா? முறையற்ற வாழ்க்கை. இது எப்படிச் சந்தோசத்தைக் கொடுக்கும்?" பவன்ராம் அடக்கப்பட்ட கோபத்தில் கேட்க...


"எனக்குக் கொடுக்கும். நீ மூடிட்டு காரை ஓட்டு." அவன் எரிச்சலுடன் மொழிய...


"என்னைக்கு உன்னோட பிரெண்ட்டா ஆனேனோ... அப்ப இருந்து இதைத் தான்டா பண்ணிட்டு இருக்கேன். ஐயம் பாவம் கட்டை பிரம்மச்சாரிடா. நீ வாழ்க்கையில் செட்டிலாகாம நானும் எனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கக் கூடாதுங்கிறதில் நான் ரொம்பத் தீவிரமா இருக்கேன்."


"தீவிர ராமன் பக்தன் மாதிரி. நீ தீவிர சிம்மன் பக்தனாடா?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா சிரித்தபடி நண்பனது தோளில் விளையாட்டாய்த் தட்டினான்.


"நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் அது தான் உண்மை."


"இப்போ என் லைஃப் செட்டில்ட் பவன். இனியாவது நீ உன் வாழ்க்கையைப் பார்."


"என் வாயில் நல்ல வார்த்தை வந்திரும். என்னைக் கோபப்பட வைக்காதே."


"எனக்கு என்னடா குறைச்சல்? இன்னும் கொஞ்ச நாள் போனால் எனக்குக் குழந்தை வந்திரும். நான் குழந்தை, குட்டின்னு சந்தோசமா இருக்கப் போறேன். அதே மாதிரி நீயும் இருக்கணும்ன்னு தான் பிரியப்படறேன்."


"தேவையில்லை... நீ சிம்மாவா இருந்தாலும் சரி, சத்யாவா இருந்தாலும் சரி... என்னோட நண்பன் எவ்வளவு நல்லவன்னு எனக்குத் தெரியும். பழைய நண்பன் எனக்கு வேணும். அப்படி நீ மாறும் போது நான் என் வாழ்க்கையைப் பத்தி யோசிக்கிறேன்." பவன்ராம் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான். சிம்மஹாத்ரி சத்யநாராயணா பதில் கூறாது மௌனம் சாதித்தான்.


அதற்குள் வர வேண்டிய இடம் வந்துவிட்டது. இருவரும் காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றனர். அங்கு ஏற்கெனவே ராஜ்குமார் அமர்ந்து இருந்தான். அவனோடு அவனை வைத்துப் படம் எடுத்த தயாரிப்பாளர் இருந்தார். நேற்று வெளியான படம் சரியாக ஓடவில்லை. அது பற்றிப் பேச தான் இருவரும் அங்கு வந்திருந்தனர். ஆனால் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் வருகையை ராஜ்குமார் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


"என்ன நண்பா, நலமா?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா அட்டகாசமான புன்னகையுடன் ராஜ்குமாரை வரவேற்றபடி உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் ராஜ்குமார் திகைப்புடன் எழுந்து நின்றான். உடனிருந்த தயாரிப்பாளரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றார்.


பவன்ராம் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பல்லை கடித்துக் கொண்டு பார்த்திருந்தான். ஏழு வருடங்களுக்கு முன்பு ராஜ்குமாரிடம் சிம்மஹாத்ரி சத்யநாராயணா பேச முயன்ற போது அவன் முகத்தில் அடித்தார் போன்று பேசி விட்டான். அதை விட ராஜ்குமார் பூஜிதாவிடம் நடந்து கொண்ட முறை பவன்ராமை கொதிக்கச் செய்தது. எல்லாம் சேர்த்து அவன் கோபத்துடன் ராஜ்குமாரை முறைத்து பார்த்து இருந்தான்.


"நீ எப்படி இங்கே?" ராஜ்குமார் கோபத்தில் பற்களைக் கடித்தபடி சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பார்த்தான்.


"கேசவன், வெளியில் போறீங்களா? நான் சார் கூடப் பெர்சனலா பேசணும்." சிம்மஹாத்ரி சத்யநாராயணா சொன்னதும் அந்தத் தயாரிப்பாளர் உடனே அங்கிருந்து வெளியேறி விட்டார். அதைக் கண்டு ராஜ்குமாரின் திகைப்பு அதிகரித்தது.


"ரொம்ப யோசிக்காதே ராஜ். அவர் என்னோட பினாமி..." என்று புதிரை விளக்கிய சிம்மஹாத்ரி சத்யநாராயணா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.


"ஏன் ரெண்டு பேரும் நின்னுக்கிட்டு இருக்கீங்க? உட்காருங்க." அவன் சொன்னதும் பவன்ராம் அமர்ந்து கொள்ள... ராஜ்குமார் உறுத்து விழித்தபடி நின்றிருந்தான்.


"மரியாதை மனசில் இருந்தால் போதும் நண்பா. உட்கார்..." அவன் சொன்னதும் சட்டென்று ராஜ்குமார் அமர்ந்தான். 'இவனுக்கு எல்லாம் மரியாதை ஒரு கேடு' ராஜ்குமார் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.


"என்னோட பினாமி வச்சு தொடர்ந்து நாலு ஃபிளாப் படங்கள் எடுத்தது எதுக்குன்னு இப்போ உனக்குப் புரிஞ்சிருக்குமே ராஜ்?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா கேட்டதும் ராஜ்குமாருக்கு புரிந்து போனது.


'இதுக்குத் தான் கேசவன் படமெடுக்கப் பணம் கொடுக்கச் சொன்னானா? நான் தான் புரிந்து கொள்ளவில்லை.' பவன்ராமுக்கு இப்போது எல்லாம் புரிந்தது.


"நான் அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன் ராஜ்... நீ நல்ல நடிகனா வரணும்ன்னு நினைச்சேன்னா... அதுக்கு நானே உதவுறேன். உன்னை வச்சுப் படம் எடுத்து பெரிய அளவில் ஹிட் கொடுக்கிறேன்."


"நீ எனக்குப் பிச்சை போடுறியா? என் திறமைக்குக் கிடைக்காத வெற்றி... உன் மூலம் எனக்கு வர வேண்டாம்." ராஜ்குமார் கோபத்தில் கடுகாய்ப் பொரிந்தான்.


"உனக்குத் தோல்வி கொடுத்த என் கிட்டேயே பேசுறியா ராஜ்? ச்சோச்சோ..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா போலியாய் பரிதாபப்பட்டான்.


"என் விசயத்தில் தேவையில்லாம தலையைக் கொடுக்கிற சிம்மா." ராஜ்குமார் குரலை உயர்த்தினான்.


"என் நண்பன் நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறது தப்பா? இப்பவும் உன் மேல் எனக்கு அக்கறை இருக்கு. நீ நல்லவன். உன் அப்பா பேச்சை கேட்டு அரசியலுக்கு வரணும், அரசியல் பண்ணலாம்ன்னு நினைக்காதே. அது தான் தப்புன்னு சொல்றேன்."


"நான் என்ன பண்ணணும்ன்னு நீ சொல்லாதே."


"சொல்றது என் கடமை. சொல்லிட்டேன். ஒண்ணு நல்ல நடிகனா இரு. இல்லையா நல்ல அரசியல்வாதியா இரு. நானே உனக்குச் சப்போர்ட் பண்றேன். இது ரெண்டும் இல்லாம ஏதாவது வில்லத்தனம் பண்ண நினைச்ச... உன்னை இல்லாம ஆக்கிருவேன்." சிம்மஹாத்ரி சத்யநாராயணா அத்தனை நேர இலகுத்தன்மை அகன்று இறுகிய குரலில் சொன்னான்.


"அதையும் பார்க்கலாம்." ராஜ்குமார் சவால் விட...


"நீ சொன்னால் கேட்க மாட்ட... பட்டு தான் திருந்தணும்ன்னு இருந்தால்... யார் என்ன செய்ய?" என்ற சிம்மஹாத்ரி சத்யநாராயணா நாற்காலியில் இருந்து எழுந்தவன் பவன்ராமை கண்டு, "போகலாம் பவன்..." என்றுவிட்டு முன்னால் நடந்தான்.


"பவன், நீ கூட என்னை யாரோ மாதிரி நடத்துறல்ல?" ராஜ்குமார் கேள்வியில் நின்ற பவன்ராம்,


"நண்பனின் தங்கை நமக்கும் தங்கை மாதிரி. நீ பூஜிதாவை தங்கைன்னும் நினைக்கலை. சின்னப் பெண்ணுன்னும் நினைக்கலை. உன்னை மாதிரி மோசமான ஒருவனை நான் பார்த்தது இல்லை." பவன்ராம் கோபமாய்ச் சொன்ன போதும் அவன் ராஜ்குமாரை திரும்பி பார்க்கவில்லை.


"என்னைக் கேள்வி கேட்கிற நீ ஏன் சிம்மாவை கேள்வி கேட்க மாட்டேங்கிற? அவனும் சின்னப் பொண்ணைத் தானே வச்சிக்கிட்டு இருக்கான். அவன் மட்டும் என்ன உத்தமனா?" ராஜ்குமார் நக்கலாய் கேட்கவும்... சிம்மஹாத்ரி சத்யநாராயணா பார்வையால் அவனைச் சுட்டுப் பொசுக்கினான் என்றால்... பவன்ராம் ஆத்திரத்துடன் அவனது சட்டையைப் பிடித்தான்.


"அவனும், நீயும் ஒண்ணா? ச்சீ... தப்பித் தவறி கூட அப்படிச் சொல்லாதே. சத்யா என்ன பண்ணினாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும். இப்போது அவன் இப்படிப் பண்ணுறதுக்கும் நிச்சயம் ஒரு நியாயமான காரணம் இருக்கும். அது எனக்கு நல்லா தெரியும். அவனைப் பத்தி நீ பேசாதே." பவன்ராம் ஆக்ரோசத்துடன் சொல்ல...


"பவன், வேண்டாம் விடு..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா சொல்லவும் பவன்ராம் ராஜ்குமாரின் சட்டையை விடுவித்தான்.


இருவரும் வெளியேற... ராஜ்குமார் அவமானம் தாங்காது நின்றிருந்தான். அவன் இப்படி ஏமாந்து போனானே! படத்திற்குச் சம்பளமாய்ப் பணத்தை வாரியிறைக்கும் போதே அவன் சுதாரித்து இருக்க வேண்டுமோ! படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை... நமக்குப் பணம் வருகிறது என்று இருந்தது தவறோ! தன்னோட திரைப்பட வாழ்க்கையை ஒட்டுமொத்தமாய் ஒழித்து விட்டானே இந்தச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா! அது மட்டுமா, அவனது அரசியல் பிரவேசமும் இப்போது கேள்விக்குறியாகி போனதே!


இவன் அவனை வேட்டையாட நினைக்க... சிங்கமோ ஏற்கெனவே இவனை வேட்டையாடி முடித்து விட்டதே!


ராஜ்குமார் அதே கோபத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வரவேற்பறையில் அவனது அன்னை லெக்ஷ்மியும், பாட்டி சாரதாவும் அமர்ந்து இருந்தனர்.


"ராஜூ, இங்க வாப்பா..." இருவரும் அவனை அழைக்க.. அவன் எரிச்சலுடன் அங்கு வந்தவன் பாட்டியின் மடியில் உரிமையாய் படுத்துக் கொண்டான்.


"ராஜூ கோபமா இருக்கிற மாதிரி இருக்கு?" சாரதா அவனது தலையைக் கோதி கொடுக்க... அதில் அவனது மனம் சிறிது ஆறுதல் அடைந்தது.


"ஒண்ணும் இல்லை பாட்டி... சும்மா வொர்க் டென்சன்." அவன் சமாளிக்க...


"இதுக்குத் தான் ஒரு கால்கட்டுப் போடணும்ங்கிறது. உனக்குன்னு ஒருத்தி வந்தால் இந்தக் கோபம் எல்லாம் காணாமல் போயிரும்."


"எதுக்கு? இன்னும் டென்சனை அதிகப்படுத்துறதுக்கா?" என்று கேட்டு விட்டு அவன் எழுந்து அமர்ந்தான்.


"இன்னைக்குப் புரோக்கர் வந்தார். இந்தா... இந்த ஃபோட்டோக்களைப் பார். உனக்கு ஏதாவது ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்தால்... மேற்கொண்டு பேசலாம்." லெக்ஷ்மி ஒரு கவரை மகன் முன் நீட்ட...


"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்." என்றவன் இருவரும் மேலே பேசும் முன் அங்கிருந்து சென்று இருந்தான்.


அறைக்குள் நுழைந்த ராஜ்குமார் யோசனையுடன் கட்டிலில் அமர்ந்தான். அவனது நினைவில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா நின்று அவனை வதைத்தான். ஒரு காலத்தில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவனது நண்பன் தான். அதன் பிறகே எதிரியாகி போனான். அதனால் தான் அவனது தங்கை மூலம் அவனைப் பழிவாங்க எண்ணியது. ஆனால் சிம்மஹாத்ரி சத்யநாராயணா சுதாரித்துக் கொண்டு அவனது தங்கையைக் காப்பாற்றி விட்டான். இப்போது அவனை எப்படி அடக்குவது என்று தெரியாது இவன் அமர்ந்திருந்தான்.


அவனுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் ஆதிசக்தீஸ்வரி மட்டுமே. அவளை வைத்து தான் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பழிவாங்க வேண்டும். அது சரி வரவில்லை என்றால்... இறுதியில் பூஜிதா என்கிற அஸ்திரத்தை உபயோகப்படுத்த வேண்டியது தான். வன்மம் ஒருவனை எந்த நிலைக்கும் கீழிறக்கி விடும் என்பதற்கிணங்க அவன் பகை குறையாது இருந்தான்.


*****************************


இன்னமும் சிம்மஹாத்ரி சத்யநாராயணா வீடு திரும்பவில்லை. ஆதிசக்தீஸ்வரி எத்தனை நேரம் தான் உள்ளேயே அடைந்து கிடைப்பது? அதனால் அவள் அங்கிருந்த தோட்டத்தில் வந்து அமர்ந்தாள். நல்ல பெரிய பூந்தோட்டம்... விதவிதமான பூக்கள் காற்றில் நர்த்தனமாடியது காண்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. பூக்கள் மலர்ந்து வாசனை பரப்பியதில் யாரின் மனமாக இருந்தாலும் விரும்பியே மயங்கும். மின்விளக்குகளின் ஒளியில் தோட்டம் இந்திரலோகம் போன்று காணப்பட்டது. அது எல்லாம் அவளது கருத்தில் பதியவில்லை. அவள் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். ரச்சிதாவிற்குச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் இருந்த உரிமை, உறவு எல்லாம் தெரிந்து அவளுள் ஏதோ ஒன்று உடைந்து போனது. அவள் ரச்சிதாவை நினைத்து மருகி போனாள்.


அப்போது சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் கார் வந்து அங்கு நின்றது. அவள் எழாது பார்வையை மட்டும் அங்கே பதித்தாள். அவன் காரிலிருந்து இறங்கியதும் எங்கிருந்து தான் ரச்சிதா வந்தாளா!


"பாவா..." என்றபடி அவள் ஓடி வந்து அவனை அணைத்து கொண்டாள். திடுமென நடந்த நிகழ்வில் திகைத்து நின்றவன் அடுத்த நொடி அவளது கரத்தினை விலக்கி விட்டு விலகி நின்றான்.


அவர்கள் இருவரும் ஆதிசக்தீஸ்வரியை காணவில்லை. ஆனால் அவள் அவர்கள் இருவரையும் தான் பார்த்திருந்தாள். ரச்சிதா அவனை அணைத்தது கண்டு அவளது விழிகள் கலங்கி போனது. கண்ணீர் பார்வையை மறைத்ததில் அவன் ரச்சிதாவின் கரத்தினை விலக்கி விட்டதை அவள் காணாது போனாள். அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.


சிம்மஹாத்ரி சத்யநாராயணா ரச்சிதாவிடம் எதுவும் பேசாது விலகி போக நினைக்க... அவளோ அவனைப் போக விடாது வம்படியாய் வழியை மறைத்துக் கொண்டு நின்றாள். அவன் அவளை முறைத்துக் கொண்டு நிற்க...


"பாவா, உங்க கோபம் எனக்குப் புரியுது." என்றவளை அவன் புருவம் உயர்த்திக் கேள்வியாய் பார்த்தான்.


"அவங்க பண்ணிய வேலைக்கு நீங்க இப்படித்தான் அவமானப்படுத்தணும்." என்று ஆரம்பித்த ரச்சிதாவை கண்டு,


"இது என்னோட பெர்சனல். நீ உன் வேலையைப் பார்." என்றவன் அங்கிருந்து செல்ல முயல...


"ஆனா இது நம்ம குடும்பக் கௌரவம் சம்பந்தப்பட்டது பாவா. குழந்தைக்காக அவளை வச்சுக்கோங்க. ஆனா குடும்பக் கௌரவத்துக்காக என் கழுத்தில் தாலி கட்டுங்க பாவா." என்றவளின் கழுத்தை நெறித்துக் கொல்லும் வெறி அவனுள் எழுந்தது. அதற்குக் கூட அவன் அவளைத் தொட வேண்டுமே! அதைக் கூட அவன் விரும்பவில்லை.


'நீ என்னமும் பேசிட்டு போ...' என்று அவளை அலட்சியப்படுத்தியவன் அங்கிருந்து விறுவிறுவெனச் செல்ல...


"போங்க பாவா போங்க... உங்க மனசில் முதலில் இடம் பிடித்தவள் நான் தான். எப்பவுமே முதல் காதலை மறக்க முடியாதுன்னு சொல்லுவாங்க. அது நம்ம விசயத்தில் உண்மை. என்னால் உங்களை மறக்க முடியலை பாவா. நீங்க தான் என் கழுத்தில் தாலி கட்டணும். நான் உங்களுக்காகத் தான் காத்திருக்கிறேன்." ரச்சிதா கத்தி சொல்ல... அவன் அசராது நடந்து சென்றான்.


"உங்க மாமாவுக்காக நீங்க என் கழுத்தில் தாலி கட்டுவீங்க. நான் கட்ட வைப்பேன்." ரச்சிதா இன்னமும் சத்தமாய்க் கத்தினாள். 'மாமா' என்ற வார்த்தையில் அவனது நடை ஒரு நொடி நின்றது. அடுத்த நொடி அவன் வேகமாய்ச் சென்றுவிட்டான்.


ரச்சிதா கூறிய வார்த்தைகள் அவன் காதுகளில் விழுந்ததோ என்னவோ! ஆனால் மிகச் சரியாக ஆதிசக்தீஸ்வரியின் காதுகளில் விழுந்து தொலைத்து அவளை நிலைகுலைய வைத்தது. ஆதிசக்தீஸ்வரியின் இருண்ட முகத்தினைப் பார்த்த ரச்சிதா தான் வந்த காரியம் வெற்றி பெற்ற திருப்தியுடன் அங்கிருந்து சென்றாள்.


முதலில் ரச்சிதா, பிறகு ஜெகதீஸ்வரி, இப்போது ஆதிசக்தீஸ்வரி... இனி அடுத்து யாரோ??? பெண்ணவள் மனதில் இந்தக் கேள்வி தான் ஓடி கொண்டிருந்தது. சத்யா மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவளுக்கு இந்தச் சிம்மன் மீது நம்பிக்கை வர மறுத்தது. முதல் முறையாக அவள் தனது நிலையை எண்ணி அவமானத்தில் மனம் குமைந்து போனாள்.


"துலாக்கோலில் தட்டுகள் சமனாய் நிற்க,

இரு தட்டுகளின் எடை சமமாக வேண்டும்.

காதல் துலாக்கோலில் தட்டுகள் சமமாக,

இரு காதல் நெஞ்சங்கள் வேண்டும்.

இங்குக் காதலை விடக் காயங்களே அதிகம்.

துலாக்கோல் என்று சமனாகுமோ?

வாழ்க்கை என்று நேராகுமோ?

விடையறிய காத்திருப்போம்,

அவர்களைப் போன்றே!"


நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 30


சிம்மஹாத்ரி சத்யநாராயணா மருத்துவமனையில் விழிகளை மூடி படுத்திருந்த ஆதிசக்தீஸ்வரியை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான். அவனது விழிகள் கலங்கி சிவந்திருந்தது. சத்யாவாக அவன் நிறைய அழுதாயிற்று. இப்போது அவன் சிம்மனாக அழாது நிமிர்வாக இருந்தான். ஆனாலும் இந்தச் சில்வண்டு சின்னப் பெண் அவனை ஒரு கலக்குக் கலக்கித்தான் விட்டாள். சற்று நேரத்திற்கு முன்பு நிகழ்ந்தது அவனது மனக்கண்ணில் காட்சியாக ஓடியது.


ரச்சிதா அவனிடம் பேசிவிட்டு சென்ற பிறகு அவன் நேரே தங்களது அறைக்குத் தான் வந்தான். அங்கு ஆதிசக்தீஸ்வரியை காணாது விழிகளைச் சுருக்கி யோசித்தவன் மீண்டும் கீழே வந்தான். அங்கும் அவளில்லை என்றதும் அவன் தோட்டத்திற்கு வந்து பார்க்க... அங்குத் தான் அவனது பைங்கிளி சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தது. நேரே அவள் முன் வந்து நின்றவன்,


"இங்கே என்ன பண்ற? உள்ளே வா." என்று அவளை அழைக்க... அவளோ விழிகள் கலங்க அவனை ஏறிட்டு பார்த்தாள். அவளது கலக்கம் ஏனென்று அவனுக்குப் புரியாது அவன் அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.


"ரச்சிதா உனக்கு யார்?" அவள் அப்படிக் கேட்டதும் அவனுக்குப் புரிந்து போனது.


ரச்சிதா அவனிடம் பேசியதை ஆதிசக்தீஸ்வரி கேட்டு இருக்கிறாள் என்று... இல்லை ரச்சிதா ஆதிசக்தீஸ்வரியிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் பேசினாளா? அது அவனுக்குத் தெரியவில்லை. அவன் பதில் கூறாது அவளையே பார்த்திருக்க...


"மாமா பொண்ணுன்னு மட்டும் பொய் சொல்லாதே." அவள் கண்ணீரோடு சொல்ல...


"எனக்கும் பொய் சொல்லி பழக்கமில்லை. மாமா பொண்ணு மட்டும் தான்." இப்போது அவனுக்கும், ரச்சிதாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே! அதைத் தான் அவன் அப்படிச் சொன்னது.


"திரும்பத் திரும்பப் பொய் சொல்லாதே சத்யா. அவள் தான் சொல்லுகிறாளே. நீயும், அவளும் காதலித்ததாய். உன்னோட முதல் காதல் அவள் தான்னு சொல்கிறாளே. அதுக்கு நீ என்ன பதில் சொல்ல போற?" ஆதிசக்தீஸ்வரி கேட்டது கண்டு அவனுக்கு அத்தனை அவமானமாக இருந்தது. தகுதி இல்லாத இடத்தில் இதயத்தைப் பறிகொடுத்த அவனது முட்டாள்த்தனத்தை அவன் எப்படிச் சொல்லுவான்?


"உன்னோட வார்த்தைகளிலேயே பதில் இருக்கு. நான் வேறு தனியா பதில் சொல்லணுமா?" அவன் சொன்னது உண்மை தானே... 'நீயும், அவளும் காதலித்ததாய்' என்று அவள் சொன்ன இந்த வார்த்தைகளில் அவளுக்கான பதில் அடங்கி இருக்கிறதே! 'காதலித்ததாய்' என்ற வார்த்தை இறந்த காலத்தைக் குறிப்பது போல்... ரச்சிதா காதலும் இறந்த காலம் தான் என்பதை அவள் தான் உணர வேண்டும்.


"உன் மாமா சொன்னா நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்குவியா சத்யா?" என்றவளை அவன் உணர்வில்லாது பார்த்தான்.


"சொல்லு சத்யா? நீ கல்யாணம் பண்ணிக்குவியா?" ஆதிசக்தீஸ்வரி எழுந்து வந்து அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு கேள்வி கேட்க...


"என் குழந்தைக்கு அம்மா வேணும்ல்ல. நிச்சயம் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்." என்றவனது பார்வை அவளையே மொய்த்தது.


"ஓ, அப்போ குழந்தைக்காக மட்டும் தான் நானா...?" என்றவளது கரங்கள் தளர்ந்தது. அவன் என்னவென்று யோசிக்கும் முன் அவள் மயங்கி கீழே விழ போக... அவன் சுதாரித்துக் கொண்டு அவளைத் தனது கரங்களில் தாங்கி கொண்டான்.


அடுத்தச் சில நிமிடங்களில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரியை மருத்துவமனையில் சேர்த்து விட்டான். அவளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் அவளது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறியதும் அவனுக்கு நிம்மதியாய் இருந்தது.


"ஆனா இப்படி அடிக்கடி பிரஷர் அதிகமாகி மயங்கி விழுறது சரியில்லை. கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க. இல்லைன்னா பிரையின் டேமேஜாகச் சான்ஸ் இருக்கு." என்று அவர் அவனிடம் அறிவுறுத்தி விட்டு சென்றார்.


அதைக் கேட்டதில் இருந்து அவன் இப்படித்தான் அவளை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான். இரண்டு முறை அவள் மயங்கி விழுந்த போது பதறியடித்துக் கொண்டு அவள் அருகே தவித்திருந்தது போல் இப்போது அவன் நடந்து கொள்ளவில்லை. மாறாக அவன் அவளைத் தொடாது தள்ளியிருந்து அழுத்தமாய் அமர்ந்திருந்தான். அவனுக்குத் தெரியும், அவன் தொட்டால் அவளது மனம் விழித்து விடும் என்று... அவன் ஸ்பரிசத்தில் அவளது உணர்வுப்பூ மலரும் என்று... ஆனாலும் அவன் அவள் அருகில் செல்லும் ஆசை இல்லாது இறுகி போய் அமர்ந்து இருந்தான்.


ஆனால் அவனுக்குத் தெரியாதே... அவனின் மூச்சுக்காற்றும், அவனது பிரத்யேக வாசமும் அவளை உயிர்ப்பிக்கப் போதுமென்று... அருகில் இருந்தவனின் அருகாமையை, இதத்தை, ஸ்பரிசத்தை அந்தக் காற்று அவளுக்குக் கடத்தி சென்றதை அவன் அறிவானா! அதை உணர்ந்தவளாய் தானே அவள் நிம்மதியாய் மூச்சு விட்டு கொண்டிருக்கிறாள்.


"சத்யா..." பவன்ராம் பதற்றத்துடன் அங்கு வந்து சேர்ந்தான். சற்று முன் பவன்ராம் அவனுக்கு அலைப்பேசியில் அழைக்க... அவனோ மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். அதைக் கேட்ட பவன்ராம் என்னமோ ஏதோவென்று இங்கு ஓடி வந்தான். அங்குப் படுக்கையில் விழி மூடி படுத்திருந்த ஆதிசக்தீஸ்வரியை கண்டு அவன் அதிர்ந்து போனான்.


"திடீர்ன்னு என்னடா ஆச்சு? நீ எதுவும் திட்டினியா?" பவன்ராம் படபடப்புடன் கேட்டான். ஆதிசக்தீஸ்வரி நிலை கண்டு அவன் பயந்து போனான்.


'இல்லை' என்பது போல் சிம்மஹாத்ரி சத்யநாராயணா மறுப்பாய் தலையை ஆட்டினான்.


"பிறகு எப்படிடா?" பவன்ராம் கேட்டதற்கு... அவன் நடந்ததைக் கூற...


"யாரா இருந்தாலும் இது தான் நடக்கும் சத்யா. நீ தங்கச்சி விசயத்தில் கொஞ்சம் மனமிரங்கினால் நல்லா இருக்கும். பாவம்டா, சின்னப் பொண்ணு." பவன்ராம்க்கு ஆதிசக்தீஸ்வரியை கண்டு இரக்கம் தோன்றியது.


"மனமிரங்கி...? அவளை அப்படியே விட்டுரணுமா? சொல்லு விட்டுரணுமா?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா கோபமாய்க் குரலை உயர்த்தினான்.


"அப்படிச் சொல்லலை சத்யா..." பவன்ராம் நண்பனது கோபம் கண்டு விழித்தான்.


"நான் அப்படியே விட்டு இருந்தால் அவள் செத்து போயிருப்பாள்டா. அது அவளுக்குத் தான் புரியலை. உனக்குமா புரியலை?" அவன் பெருங்குரலெடுத்துக் கத்தினான்.


"சத்யா?" பவன்ராம் திகைத்தான்.


"அவள் மயங்கிய மூணு முறையும் எதனால்ன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு. உனக்குப் புரியும்." என்றவனைக் கண்டு,


"புரியலைடா சாமி. நீயே சொல்லிரு." பவன்ராம் புரியாது தலையைச் சொரிந்தான்.


"முதல் முறை குழந்தை கலைந்த போது மயங்கி விழுந்தாள். நிச்சயம் குழந்தைக்காக இருக்காது. என்னோட உயிர் கலைந்து போனதுக்காகத் தான் இருக்கும். அது எனக்கு இருநூறு சதவீதம் தெரியும். அடுத்த முறை லெக்ஷ்மி நரசிம்மர் ஃபோட்டோ பார்த்து என் ஞாபகத்தில் தான் மயங்கி விழுந்தாள். இதோ இப்போதும் என்னை நினைத்து தான், எனக்காகத் தான் அவள் மயங்கி விழுந்து இருக்கிறாள்." என்று சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவளைப் பற்றி நன்கு அறிந்தவனாய்த் துல்லியமாகச் சொல்ல... பவன்ராம் வாயடைத்தானோ இல்லையோ! அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிசக்தீஸ்வரி மனம் வாயடைத்துப் போனது.


"இவ்வளவு அவளைப் புரிஞ்சு வச்சிருக்கிறவன் எதுக்குடா அவளைப் போட்டு படுத்துற? அவள் கிட்ட அன்பாய் இருந்தால் தான் என்ன?" பவன்ராம்க்கு நண்பனின் எண்ணம் இன்னமும் புரியவில்லை.


"உனக்கே தெரியும் சத்யாவா நான் அவளிடம் எத்தனை முறை கெஞ்சி கேட்டு இருப்பேன்னு... அவள் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாளா? இல்லையே. சிம்மனா அதிரடி காட்டிய பிறகு தானே அவள் என்னிடம் வந்தாள். அவளுக்கு அமைதி சத்யா சரிப்பட்டு வர மாட்டான். அதிரடி சிம்மன் தான் சரிப்பட்டு வருவான். அவளை என் கூடத் தக்க வைக்க நான் சிம்மனா தான் இருக்கணும்ன்னா... என் இறுதி மூச்சு வரை நான் சிம்மனா இப்படித்தான் இருப்பேன்." என்றவனைக் கண்டு பவன்ராம் வியப்பாய் பார்த்தான்.


"நீ தங்கச்சியைக் காதலிக்கிறியா சத்யா?" என்ற பவன்ராமை முறைத்தான் அவன்...


"தப்பு, தப்பு..." என்று கன்னத்தில் போட்டுக் கொண்ட பவன்ராம், "உன் பாசையில் காதல்ன்னா கெட்ட வார்த்தை இல்லையா?" என்று கூறிவிட்டுச் சிரித்தான்.


"இப்போ எதுக்கு இந்தத் தேவையில்லாத ஆராய்ச்சி?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா மீண்டும் நண்பனை முறைத்தான்.


"சரி, நீயே உன் ஆராய்ச்சியைப் பத்தி சொல்லு."


"என் கிட்ட வர கூடாதுங்கிற வீம்புல அவள் ஜெய்யை கல்யாணம் பண்ண சம்மதிச்சாளே. கல்யாணம்ங்கிறது அவளுக்கு விளையாட்டா போச்சு இல்ல... கழுத்தில் தாலி ஏறுவது மட்டும் கல்யாணம் இல்லை. அதுக்குப் பிறகு வாழும் வாழ்க்கை தான் கல்யாணம். ஜெய் மட்டும் அவளைத் தொட்டு இருந்தால் அடுத்த நொடி இப்படித்தான் விழுந்து கிடந்திருப்பாள். ஆனால் மூச்சை நிறுத்தி பிணமாக..." என்ற நண்பனை அதிர்வுடன் பார்த்தான் பவன்ராம்.


"அது தான் நடந்து இருக்கும். அவளைப் பத்தி அவளுக்கே தெரியலை. முட்டாள்..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவளைத் திரும்பி பார்த்துத் திட்டினான்.


"என்னையவே அடுத்தவளிடம் விட்டு கொடுக்க முடியலை. இந்த லட்சணத்தில் அம்மையார் வேறு ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கத் தயாராகிட்டாங்க. என்னையவே விட்டு கொடுக்க முடியாதவள்... வேறு ஒருத்தனிடம் அவளது உள்ளத்தையும், உடலையும் எப்படி விட்டு கொடுப்பாள்? அடுத்த நொடி மூச்சை நிறுத்தி விடுவாள் பாவி... அதைத் தடுக்கத் தான் சிம்மன் ஸ்டைலில் அதிரடி காட்டினேன். நிச்சயம் சத்யாவா நான் அங்கே போய்க் கெஞ்சிக்கிட்டு இருந்திருந்தால் அவள் என்னை அலட்சியப்படுத்திவிட்டு ஜெய்யை தான் கல்யாணம் பண்ணி இருந்திருப்பாள். ஆனால் அன்றே அவள் உயிரையும் விட்டு இருப்பாள்டா." என்று சொன்ன சிம்மஹாத்ரி சத்யநாராயணா முகத்தில் அத்தனை வேதனை...


"சத்யா, நான் கூட உன்னைத் தப்பா நினைச்சிட்டேன். சாரிடா." பவன்ராம் நண்பனது தோளில் கை வைத்தான்.


"நீ எதுக்குச் சாரி கேட்கிற? இனி சத்யாவா என்னால் மாற முடியுமான்னு தெரியலை. இனி நான் இப்படித்தான். சிம்மனா தான் இருப்பேன். எப்படி இருந்தால் என்ன? எனக்கு அவள் வேண்டும் அவ்வளவு தான்..." என்றவன் திரும்பி ஆதிசக்தீஸ்வரியை பார்த்தான்.


"ரச்சிதா, ஜெகாவை காதலிச்சேன், காதலிச்சேன்னு சொல்கிறாள். ஆமா, நான் அவங்களை நேசிச்சேன் தான். இல்லைங்கல்ல... அவங்க யாரும் என்னை இப்படிக் காதலிக்கலையேடா. இந்தப் பைத்தியக்காரி மாதிரி என்னைக் கிறுக்குத்தனமா யாரும் காதலிக்கலையே. இப்படிப்பட்டவளை எப்படிடா அடுத்தவனுக்கு விட்டு கொடுக்க முடியும்? இந்த முட்டாளுக்கு ஏன் இது எல்லாம் புரிய மாட்டேங்குது? ஒருத்தனுக்குக் காதல் தோல்வின்னா அப்படியே செத்து போயிரணுமா? திரும்ப அன்பை தேட கூடாதா? இல்லை அந்த அன்பிற்குக் கூட நான் அருகதை இல்லாதவனாகி விட்டேனா?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா பேசிய வார்த்தைகள் அத்தனையும் உண்மை...


"இவ்வளவு பேசுற நீ... தங்கச்சியைக் கௌரவமா உன் கூட வைத்து இருக்கலாமே?" பவன்ராம் தயங்கி தயங்கி தான் கேட்டான்.


"அவளுக்கு என்ன வேணும்ங்கிறதை அவள் தான் கேட்கணும். அவள் என் மேல் நம்பிக்கை வைத்து வாய் திறந்து கேட்கட்டும்... அவளுக்கான அங்கீகாரத்தை, கௌரவத்தை நான் கொடுக்கிறேன்."


"சரிடா... நீ சொல்றது எல்லாம் சரி தான். இருந்தாலும் கொஞ்சம் சாஃப்ட்டா ஹேன்டில் பண்ணு. உன் கோபத்தைத் தங்கச்சி கிட்ட காட்டாதே."


"அவள் தான் எனக்குக் கோபத்தை வரவழைக்கிறாள். முதல்ல உன் தங்கச்சி கிட்ட சொல்லு... என்னைக் கோபப்படுத்த வேண்டாம்ன்னு..."


"ம்ஹூம், இது எங்கே போய் முடிய போகுதோ?" பவன்ராம் தனக்குள் புலம்பியவன் நண்பனுக்குத் துணையாக அங்கேயே இருந்தான்.


சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரியை பார்த்தபடி அமர்ந்து இருந்தாலும் அவளை நெருங்க வில்லை. சில மணி நேரங்கள் கழித்து ஆதிசக்தீஸ்வரி மயக்கத்தில் இருந்து மெல்ல கண் விழித்தாள். அவள் முதலில் கண்டது தன்னை இறுக்கமான முகத்துடன் பார்த்திருந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை தான்.


"சத்யா..." அவள் அவனை அழைக்க... அவன் அசையாது அப்படியே அமர்ந்து இருந்தான்.


"இங்கே வா..." அவள் எழுந்தமர்ந்து கொண்டு கை நீட்டி அவனை மீண்டும் அழைக்க... அவன் எதுவும் பேசாது அவள் அருகில் சென்று அமர்ந்தான்.


"சாரி சத்யா... நான் உன்னை ரொம்பப் படுத்தி எடுக்கிறேன் இல்லையா? சாரி..." என்று அவனிடம் மன்னிப்பு கேட்டவள் அவனை இறுக அணைத்துக் கொண்டு அவனது கழுத்தில் முகம் புதைத்து கொண்டாள். அவன் திரும்ப அவளை அணைக்காது அமைதியாக இருந்தான்.


பவன்ராம் சத்தம் இல்லாது வெளியேறி விட்டான். அவனுக்கு இருவரையும் கண்டு அத்தனை பிரமிப்பு. சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் இத்தனை நேர மனக்குமுறலுக்கு விடையாக அவளது செய்கை இருந்தது. இது தான் காதலோ! ஒன்றுபட்ட மனமுடையவர்களின் எண்ண வரிசை ஒன்று போல் யோசிக்குமோ? அவனுக்கு வியப்பாக இருந்தது. நண்பனது நிலை கண்டு காதலை வெறுத்து இருந்தவனுக்கு முதல் முறையாகக் காதல் மீது சிறு நம்பிக்கை வந்தது.


"எதுக்குச் சாரி?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரியிடம் கேட்க...


"தெரியலை கேட்கணும்ன்னு தோணுச்சு." அவள் அவனிடம் இருந்து விலகி உதட்டை பிதுக்கினாள்.


"அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கலாம் தானே." அவன் அவளையே பார்த்தபடி கேட்க...


"பண்ணிக்கலாம் தான்." என்றவளது முகத்தில் சோகம் படர்ந்தது.


'சுத்தம், இது திருந்தாத கேஸ்...' என்று மனதிற்குள் நினைத்து கொண்டவன் அவளை விட்டு விலகி எழுந்தான்.


"எங்கே போற?"


"இங்கேயே இருக்க முடியுமா? வீட்டுக்கு போக வேண்டாமா? ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு வர்றேன்." என்றவன் அறையை விட்டு வெளியில் வந்தான்.



அடுத்தச் சில நிமிடங்களில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரியை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து கிளம்பினான். அவன் எப்படி இரகசியமாக வந்தானோ... அதே போன்று இரகசியமாகவே கிளம்பி விட்டான். நண்பனை அனுப்பி வைத்துவிட்டு பவன்ராமும் கிளம்பி விட்டான்.
 

ஶ்ரீகலா

Administrator
காரில் பயணம் செய்து கொண்டிருந்த இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் நிலவியது. சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரி புறம் திரும்பாது சாலையில் கவனம் பதித்து இருந்தான். அவள் தான் அவனைப் பார்ப்பதும் பின்பு ஏதோ யோசிப்பதுமாய் வந்தாள். அவளது யோசனையை ஓரக்கண்ணால் அவன் கண்ட போதும் பெரிதாக அலட்டி கொள்ளாது அமர்ந்து இருந்தான்.


"சத்யா..." அவள் மெல்ல அவனை அழைக்க...


"ம்..." என்று மட்டுமே அவனிடம் இருந்து பதிலாக வந்தது.


"உன் கையைப் பிடிச்சிக்கவா?"


"தேவையில்லை..." அவன் முகத்தில் அடித்தார் போன்று சொல்ல...


"நீ என்ன சொல்றது... நான் என்ன கேட்கிறது? அப்படித்தான் உன் கையைப் பிடிப்பேன். இப்படி உன் தோளில் சாய்ஞ்சுக்குவேன்." அவள் கத்திவிட்டு வேண்டுமென்றே அவனது கரத்தினை இறுக பற்றிக் கொண்டு அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் அதிசயமாக அவளை விலக்கவில்லை. அவனை ஆச்சிரியமாய் ஏறிட்டு பார்த்தவள் பின்பு அவனது நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள். அவனது பிரத்யேக நறுமணம் அவளது நாசியில் சுகமாய் ஏறியது. இன்னும் இன்னும் அவனுள் அழுந்த புதைந்தவள் பின்பு ஞாபகம் வந்தவளாய் அவனை ஏறிட்டு பார்த்து,


"என்னை எப்படி ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு போன சத்யா?" என்று கேட்க...


"இது என்ன கேள்வி? காரில் தான்..." அவன் சிடுசிடுவென்று பதில் சொன்னான்.


"அது தெரியுது? எப்படி?" அவள் மீண்டும் கேட்க...


"பின் சீட்டில் படுக்க வைத்து..." அவன் வேண்டுமென்றே தெரிந்தே தான் பொய் சொன்னான். அவளிடம் உண்மையை மறைப்பது அவனுக்குச் சுவாரசியமாக இருந்தது. இதோ இப்போது அவள் அமர்ந்து இருக்கிறாளே... இப்படித்தான் அவன் ஒற்றைக் கையால் அவளைத் தனது நெஞ்சோடு அழுத்தி பிடித்துக் கொண்டு காரை ஓட்டினான். பதட்டத்தில் இருந்தவன் அப்போது அதை உணரவில்லை. இப்போது அவள் கேட்கவும் தான் அவனுக்குமே ஞாபகம் வந்தது.


"ஓ..." என்றவள் மேலே பேசாது அமைதியாக அவனுள் புதைந்து கொண்டாள்.


எப்போதுமே நம் உள்மனது உணரும் உள்ளுணர்வுக்கு ஒரு சக்தி உண்டு. அவளது உள்ளுணர்வு அவனைக் கண்டு கொண்டதோ! அதனால் வந்த அமைதியோ இது!


கார் அவர்களது அரண்மனை முன் வந்து நின்றது. முதலில் காரில் இருந்து இறங்கிய சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவள் இறங்கும் முன் வேகமாய் அவள் பக்கம் வந்து கார் கதவை திறந்து அவளைத் தனது கரங்களில் ஏந்தி கொண்டான்.


"நான் நல்லா தான் இருக்கேன் சத்யா." என்றவளை பார்வையால் அடக்கியவன்,


"திரும்ப மயக்கம் போட்டு விழுறதுக்கா?" என்றவன் அவளைத் தூக்கி கொண்டு சென்றான்.


இந்தக் காட்சியைக் காலை நடைப்பயிற்சிக்காக அங்கே நடந்து கொண்டிருந்த ரச்சிதா, ஜெகதீஸ்வரி விழிகளில் சரியாக விழுந்து அவர்களது பொறாமையைத் தூண்டி விட்டது.


********************************


நட்சத்திர விடுதியில் தோழிகளைச் சந்திக்க வந்திருந்த பூஜிதா அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினாள். அதே நேரம் ராஜ்குமார் அங்கு வந்து சேர்ந்தான். எதிர்பாராத விதமாகச் சந்தித்ததில் இருவருமே திகைப்பில் அப்படியே நின்று விட்டனர். முதலில் சுதாரித்தது ராஜ்குமார் தான்...


"எப்படியிருக்கப் பூஜா?" அவன் புன்னகையுடன் கேட்டான். அவனது பழிவெறி எல்லாம் சிம்மஹாத்ரி சத்யநாராயணா மீது மட்டும் தான். ஏனோ பூஜிதாவை கண்டால் அவனது பழிவெறி தெறித்து ஓடி விடும்.


"நல்லா இருக்கேன். நீங்க...?" அவளுக்கு அவனிடம் பேசவே தயக்கமாக இருந்தது. அண்ணனின் அறிவுரை அவளது காதுகளில் ஒலித்து ராஜ்குமாரை விட்டு விலகி போகச் சொன்னது.


"என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது?" அவன் புன்சிரிப்புடன் கேட்டான்.


"நல்லா இருக்கீங்கன்னு தான் தெரியுது." அவளோ அவனது உடல்நலத்தைப் பற்றிச் சொல்ல...


"நீ சொன்ன பிறகு தான் நான் அழகுன்னே உணர்றேன்."


"ஐயோ, நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. உங்களுக்கு ஒண்ணும் இல்லை. நல்லா தான் இருக்கீங்கன்னு சொன்னேன்." அவள் பதட்டத்தோடு சொல்ல...


"ஓ, அப்படியா நான் வேற மாதிரி நினைச்சிட்டேன்." என்றவன், "அரண்மனை இளவரசி என்ன இந்தப் பக்கம்?" என்று கேட்க...


"பிரெண்ட்ஸை பார்க்க வந்தேன்."


"பாய் பிரெண்டா? கேர்ள் பிரெண்டா?" அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க...


"கேர்ள் பிரெண்ட்ஸ் தான்..." அவள் அவசரமாகச் சொல்ல...


"ஓகே பை..." என்றவன் அவளது கார் வரும் வரை அவளோடு காத்திருந்தான். அவளது கார் வந்ததும் அவன் கதவை திறந்துவிட... அவள் மகாராணி போன்று காரினுள் ஏறியமர்ந்தாள். அவளது அரண்மனைக்கு அவள் இளவரசி மட்டுமே... ஆனால் அவனால் மட்டுமே அவளை மகாராணியாய் உணர வைக்க முடியும். அதை அவளும் உணர்ந்து இருந்தாளோ!


"வர்றேன்..." பட்டாம்பூச்சியாய் இமைகள் படபடக்க அவனிடம் இருந்து அவள் விடைபெற்றாள். அவனும் சிரித்தபடி விடை கொடுத்தான்.


இருவருக்குமே முதல் ஈர்ப்பு இது... முதல் தடுமாற்றம் இது... அதனால் இருவராலும் மற்றவரை மறக்க இயலவில்லை. ஆனால் அதை அவர்கள் உணரவில்லை. உணரும் போது இங்கும் காதல் பூ மலர்ந்து மணம் பரப்பும்.


வீட்டிற்கு வந்த பிறகும் ராஜ்குமார், பூஜிதா இருவருமே பரவசத்தில் சுற்றிக் கொண்டு இருந்தனர். ஏனென்று இருவருக்கும் புரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது மட்டும் உண்மை!


*************************


அடுத்த ஒரு வாரம் அமைதியாகக் கழிந்தது. ஆதிசக்தீஸ்வரி சிம்மஹாத்ரி சத்யநாராயணா முகம் பார்த்து நடந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். அவனுமே அவளை அதிகம் குத்தி பேசாது அமைதியாக இருந்தான். தெளிந்த நீரோடை போல் வாழ்க்கை நிம்மதியாகச் சென்று கொண்டிருந்தது. அன்று சிம்மஹாத்ரி சத்யநாராயணா வீட்டிற்குள் நுழைந்ததும் ஆதிசக்தீஸ்வரி முகம் மலர எழுந்தாள்.


"வா சத்யா..." என்று முகம் மலர மகிழ்ச்சியோடு தன்னை வரவேற்கும் ஆதிசக்தீஸ்வரியை அவனுக்கும் பிடித்துத் தான் இருந்தது.


ஆதிசக்தீஸ்வரி அவனுக்குக் காபி கொண்டு வர எண்ணி உள்ளே செல்ல முயல... அவளது கரத்தினைப் பிடித்துத் தடுத்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா,


"இங்கே வந்து உட்கார்." என்றவன் தானும் சோபாவில் அமர்ந்து அவளையும் தன்னுடன் இருத்தி கொண்டான்.


"என்ன சத்யா?" அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.


அவன் பதில் கூறாது தனது அலுவலகப் பெட்டியை திறந்தான். அவளுக்கோ ஆர்வம் தாங்க முடியவில்லை.


"எனக்குக் கிப்ட்டா சத்யா?" என்று அவள் எட்டிப்பார்க்க...


"ஆமா, கிப்ட் தான்... திருமண அழைப்பிதழ்..." என்றவன் அவளது கரத்தினைப் பிடித்து அழைப்பிதழை வைத்தான். அதைக் கண்டு அவளது முகம் சுருங்கி போனது.


"பிரிச்சு பார்..." என்றவனது முகத்தில் அரிதாய் புன்னகை அரும்பியது.


ஆதிசக்தீஸ்வரி யோசனையுடன் பிரித்துப் பார்த்தவள் உள்ளே இருந்த சாராம்சத்தைக் கண்டு மகிழ்ச்சியில் விழி விரித்தாள். அவள் கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள். அது ரச்சிதாவிற்கும், ஜெய்பிரகாஷுக்குமான திருமண அழைப்பிதழ்...


"நீ கேட்ட கேள்விக்கான பதில். ரச்சிதா என் மாமா பொண்ணு மட்டும் தான்." என்றவனை அவள் அழைப்பிதழை தூக்கி போட்டு விட்டு பாய்ந்து வந்து அணைத்து கொண்டாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டான். இருவரது இதயத்துடிப்பு மட்டுமே அங்கே சத்தமாய்க் கேட்டது. ஒருவரின் துடிப்பு மற்றவருக்கானது என்பதை அவர்கள் உணர்ந்தார்களோ! அந்த மோனநிலை கலையாது இருவரும் அமைதியாக இருந்தனர்.


"என்னை அழ வைத்து விட்டு இங்கே நீங்க இவளை கொஞ்சிக்கிட்டு இருக்கீங்களா பாவா?" ரச்சிதாவின் குரல் ஆவேசமாய் ஒலித்தது.


ரச்சிதா குரல் கேட்டு ஆதிசக்தீஸ்வரி திடுக்கிட்டு அவனது மடியில் இருந்து எழ போக... அவனோ அவளை எழ விடாது தடுத்தான். அவள் விழிகளால் அவனிடம் இறைஞ்ச... போனால் போகிறது என்று அவளை விடுவித்தவன் அவளைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.


"பின்னே உன்னையவா கொஞ்ச முடியும்?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா நமட்டு சிரிப்புடன் கேட்டான்.


"பாவா, பழசை எல்லாம் மறந்துட்டு பேசுறீங்க."


"நீயே பழசுன்னு சொல்லிட்ட... பழையதை தூக்கி எறியறது தான் வீட்டுக்கும், மனசுக்கும் நல்லது."


"குழந்தைக்காக வந்த இவளை விட நான் எந்த விதத்தில் குறைஞ்சு போயிட்டேன்?" ரச்சிதா அடங்காது கேட்க...


அவனது பார்வை ஆதிசக்தீஸ்வரியை பார்த்தது. இந்த முறை அவளது முகம் இருண்டு போகவில்லை. அவள் அமைதியாக இருவரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். அதைக் கண்டவன் ரச்சிதா புறம் திரும்பி,


"அதற்குக் கூட நீ தகுதி இல்லை என்று அர்த்தம்." அவன் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்ல... ஆதிசக்தீஸ்வரி தலையில் கூடை நிறையப் பூக்களைக் கொட்டியது போன்று அவளுள் அத்தனை மகிழ்ச்சி... அவனுக்கு அவள் மட்டும் தான்... எப்போதும், எந்த நிலையிலும்...



"பாவா, நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா நான் உயிரை விட்டுருவேன்." ரச்சிதா தனது கரத்தில் சிறு கத்தியை வைத்து அழுத்தி கொண்டு அவனை மிரட்ட...


"நல்லது... முதலில் அதைச் செய்." அவன் அலட்சியம் போல் சொன்னான். ஆதிசக்தீஸ்வரி தான் பயத்துடன் ரச்சிதாவை பார்த்தாள். அவள் ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிடுவாளோ என்கிற பயம்.


சட்டென்று ரச்சிதா தனது மணிக்கட்டில் கத்தியை வைத்து அழுத்தி கீற... கையிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அதைக் கண்டு ஆதிசக்தீஸ்வரி அச்சம் கொள்ள... சிம்மஹாத்ரி சத்யநாராயணாவோ அலட்டி கொள்ளாது அமர்ந்து இருந்தான்.


"பாவா, எனக்கு ஒரு பதிலை சொல்லுங்க." ரச்சிதா அழுத்தமாய்க் கேட்க...


"இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். உயிர் பயம் இருந்தால் நீயே உன்னைக் காப்பாத்திக்கோ. இல்லைன்னா இங்கே விழுந்து செத்து போ. எனக்கு ஒன்றும் இல்லை." என்றவன் எழுந்து நின்று ஆதிசக்தீஸ்வரி நோக்கி தனது கரத்தினை நீட்ட...


ஆதிசக்தீஸ்வரி ரச்சிதாவை பார்த்துக் கொண்டே தனது கரத்தினை அவனது கரத்தோடு சேர்த்து வைத்தாள். அவன் அவளை எழுப்பி நிற்க செய்து அடுத்த நொடி தனது கரங்களில் அவளை ஏந்தி கொண்டான். அவளது பார்வை இன்னமும் ரச்சிதா மீது தான் இருந்து. அவன் ரச்சிதாவை கண்டு கொள்ளாது ஆதிசக்தீஸ்வரியை ஏந்தியபடி உள்ளே செல்ல... இனி இங்கே இருந்தால் மரணம் நிச்சயம் என்றெண்ணி பயந்த ரச்சிதா தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி வெளியில் தெறித்து ஓடினாள். அதைக் கண்ட ஆதிசக்தீஸ்வரிக்குப் பயம் அகன்று சிரிப்பு வந்தது. இவள் எல்லாம் என்ன பெண்? என்று...


"என்ன போய்விட்டாளா?" அவன் கேட்டதும் ஆதிசக்தீஸ்வரி ஆமென்று தலையாட்ட... அவன் புன்சிரிப்புடன் அவளைத் தூக்கி கொண்டு தங்களது அறைக்குச் சென்றான்.


நேரே சென்று அவளைப் படுக்கையில் படுக்க வைத்தவன் தானும் அவள் அருகில் படுத்தான். ஆதிசக்தீஸ்வரி புரண்டு வந்து அவனது முகத்தைத் தனது கரங்களில் தாங்கி அவனையே பார்த்திருந்தாள்.


"என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு?" அவன் கேட்க...


"எனக்குப் பிடிச்சிருக்கு நான் பார்க்கிறேன். உனக்கு என்ன?" அவள் அலட்சியமாய் உதட்டை சுளித்தாள்.


"சரி, நீ பார்த்துட்டே இரு. நான் தூங்க போறேன்." என்றவன் விழிகளை மூடினான்.


"ஐ லவ் யூ சத்யா." அவளது வார்த்தையில் அவன் வேகமாய் விழிகளைத் திறந்தான்.


அன்று அவள் முதல் நாள் இங்கு வந்த போது காதலை சொன்னாள் தான்... ஆனால் அதில் இல்லாத உயிர்ப்பு இதில் இருந்தது. அதில் இல்லாத உண்மை இதில் தெரிந்தது.


"எதுக்கு இந்த ஐ லவ் யூ?" அவன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி கேட்க...


"சொன்னால் அனுபவிக்கணும் மிஸ்டர் சிம்மஹாத்ரி சத்யநாராயணா. ஆராய்ச்சி பண்ண கூடாது."


"கட்டிலில் ஆராய்ச்சி பண்ணாம இருக்க முடியாதே." என்றவனது கரங்கள் அவளது மேனியில் ஆராய்ச்சியில் இறங்கியது.


இருவரும் இணைந்து ஈடுபட்ட ஆராய்ச்சியின் முடிவில் இருவரின் உடல்கள் மட்டும் இணையாது. உள்ளங்களும் இணைந்து பிணைந்து ஒன்றாகி போனது!


"பெண் இல்லாத ஊரிலே

அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் இல்லாத ஊரிலே

கொடி தான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில்

இந்தப் பூமி பூப்பூத்தது...

இது கம்பன் பாடாத சிந்தனை

உந்தன் காதோடு யார் சொன்னது”

(ரோஜா படப் பாடலில் இருந்து சில வரிகள்...)


நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 31


ராஜ்குமார் தன்னைக் காண வீட்டின் முன் குவிந்த ரசிகர்களைச் சந்திக்க வேண்டி வெளியில் வந்தவன் அவர்களைக் கண்டு பறக்கும் முத்தத்தைக் கொடுத்தான். அதைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவன் ஒவ்வொரு ரசிகனிடமும் தனித்தனியே பேசி, கை குலுக்கி அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டான். ஒருசிலர் 'நா பங்காரம் (என் தங்கம்)' என்று அவனது கன்னத்தில், கையில் முத்தமிட்டு தங்களது வெறித்தனமான அன்பை வெளிப்படுத்தினர். அதைக் கண்ட அவனது பவுன்சர்கள் அவர்களை எல்லாம் விலக்கி விட... அவனோ அதைத் தடுத்து ரசிகர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தான். அவனது இந்த எளிமை தான் அவனது வெற்றிக்குக் காரணம்.


அப்போது கை ஊனமான, வாய் பேச முடியாத ஒருவன் அவனை நோக்கி வந்தான். அவனது உடையையும், அவனையும் பார்த்த பவன்சர்கள் அவனை ராஜ்குமார் அருகில் வர விடாது தடுத்தனர்.


"அவரை விடுங்க..." ராஜ்குமார் சொன்னதும் பவுன்சர்கள் அவனை விட்டனர்.


ராஜ்குமாரை நோக்கி விரைந்து வந்தவன் உணர்ச்சிப்பெருக்கில் ஏதோ கூற முற்பட்டான். ராஜ்குமாருக்கு அவன் கூறியது எதுவும் புரியவில்லை. வந்தவனோ வீட்டின் முகப்பில் பெரிதாக வைக்கப்பட்டு இருந்த பேனரில் புன்னகைத்துக் கொண்டிருந்த அவனது தந்தை புகைப்படத்தைக் காட்டி ஏதோ கூறிட முயன்றான். அதுவும் ராஜ்குமாருக்கு புரியவில்லை.


"சார், பைத்தியம் மாதிரி தெரியுது. உங்களை எதுவும் பண்ணிடாம..." பவுன்சர்கள் அவனது நலனை கருதி கூற...


"ப்ச், பாவம்... அப்படி எல்லாம் சொல்லாதீங்க." என்ற ராஜ்குமார் தனது உதவியாளன் மூலம் அவனை ஒரு நல்ல காப்பகத்தில் சேர்க்க முன்வந்தான். அதைக் கேட்டு அவனை நாடி வந்தவனோ அருகிலிருந்த சுவற்றில் தலையை முட்டி கொண்டு அழுதான்.


"பைத்தியம் முத்திருச்சு..." என்று எல்லோரும் அவனைப் பிடித்துத் தள்ள முயன்றனர்.


"பவுன்சர்ஸ், அவரைப் பாதுகாப்பா கூட்டிட்டு போங்க." என்று ராஜ்குமார் உத்தரவிட... அவனது பவுன்சர்கள் அழுதவனைப் பிடித்துக் கொண்டனர்.


"அழாதே... காப்பகத்தில் உன்னை நல்லா பார்த்துக்குவாங்க." ராஜ்குமார் அவனுக்கு ஆறுதல் அளிக்க... அவனோ ராஜ்குமாரை கண்டு விரக்தியாய் சிரித்தான். அதற்குள் பவுன்சர்கள் அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். அவன் வண்டியில் ஏறும் போது ராஜ்குமாரின் தந்தையின் புகைப்படத்தைக் கண்டு வாய்விட்டு சிரித்தபடி சென்று விட்டான். இதை எல்லாம் எல்லா ஊடகங்களும் தங்களது புகைப்படக் கருவியில் அழகாய் படம்பிடித்துக் கொண்டது.


அவன் தான் தனது தந்தையின் மரணத்தைக் கண்ட முக்கியச் சாட்சி என்பதைப் பற்றி ராஜ்குமார் அறியவில்லை. அதைவிடச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கு எதிரான முக்கியச் சாட்சி என்பதைப் பற்றியும் அவன் அறியவில்லை. காலம் தாழ்த்தி அறியப்படும் உண்மையால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.


ராஜ்குமார் மீண்டும் வீட்டிற்குள் வந்தவனை அவனது அன்னை லெக்ஷ்மி உணவு உண்ண அழைத்தார். பாட்டி சாரதாவும் உடனிருந்தார்.


"இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருப்ப ராஜூ?" சாரதா பேரனிடம் கேட்க...


"இப்போதைக்கு எந்தப் படமும் கமிட் ஆகலை பாட்டி. அதனால் இங்கே தான்." என்றவனைக் கண்டு இரு பெண்களின் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.


"அரசியலுக்கு வரலாம்ன்னு இருக்கேன். அதுக்கு நான் இங்கே இருந்தால் தான் சரிப்படும். அப்பா விட்ட இடத்தை நான் பிடிக்க வேண்டாமா?" ராஜ்குமார் சொன்னது கேட்டு மற்ற இருவரது முகமும் இருண்டு போனது.


"எதுக்குப்பா உனக்கு அரசியல் எல்லாம்? அதுவும் இத்தனை வருசம் இல்லாத ஆசை இப்போது எதற்கு?" சாரதா மெல்ல பேரனிடம் கேட்டார். லெக்ஷ்மியின் முகத்தில் இருந்த உணர்வு அதை ஆமோதித்தது.


"அப்போ அதுக்கான வயசு இல்லை பாட்டி. இப்போ அரசியலுக்கு வர சரியான வயசுன்னு நினைக்கிறேன்."


"அரசியல் இருக்கட்டும் ராஜூ... முதல்ல கல்யாணத்தைப் பண்ணிக்கோயேன்." லெக்ஷ்மி மகனிடம் இறைஞ்சும் குரலில் கூறினார். மருமகள் வந்தால் மகனது மனம் அரசியலுக்குச் செல்லாது என்று அவர் எண்ணினார் போலும்.


"அம்மா சொல்றதும் சரி தானே ராஜூ..." சாரதாவும் அதை ஆமோதித்துச் சொன்னார்.


இருவரும் திருமணத்தைப் பற்றிச் சொன்னதும் என்றும் இல்லாத திருநாளாய் இன்று அவனது மனக்கண்ணில் பூஜிதாவின் முகம் மின்னி மறைந்தது. அவன் தனது தலையைக் குலுக்கி கொண்டான்.


"நான் அரசியலுக்கு வர போறதை பத்தி பேசறேன். நீங்க கல்யாணத்தைப் பத்தி பேசறீங்க." அவன் சலித்துக் கொள்ள...


"அரசியல் சாக்கடை நமக்கு வேண்டாம்ப்பா..." சாரதா பேரனுக்கு எடுத்து சொல்ல...


"அப்பா அரசியலில் தானே இருந்தார். நீங்க ஏன் அவருக்கு இதே புத்திமதி சொல்லலை?" அவன் பாட்டியை மடக்க...


"உங்கப்பா யார் சொல்லி கேட்டு இருக்கார்? நீயாவது கேளு ராஜூ." லெக்ஷ்மி இருண்ட முகத்துடன் சொன்னார்.


"அப்பாவுக்கு என்ன? நல்லா அரசியல்வாதியா தானே இருந்தார்." ராஜ்குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கு மேல் பெரியவர்களால் சில விசயங்களைச் சின்னவனிடம் விளக்கி சொல்ல முடியவில்லை. அதனால் அவர்கள் இருவரும் அமைதி காத்தனர்.


ராஜ்குமார் உணவு உண்டு விட்டு எழுந்து சென்று விட்டான். லெக்ஷ்மி ஓய்ந்து போனவராய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.


"லெச்சு..." சாரதா மருமகளின் தோளில் ஆதரவாய் கை வைக்க...


"அவரை மாதிரியே இவனும் மாறிடுவானா அத்தை? எனக்குப் பயமாயிருக்கு." லெக்ஷ்மி கண்கலங்கினார்.


"தாரிணியோட கதறல் என் காதுகளில் இன்னமும் ஒலிச்சிக்கிட்டே இருக்கு அத்தை. தாரிணி மாதிரி எத்தனை பெண்களை அவர் தன்னோட அரசியல் லாபத்துக்காகக் காவு கொடுத்து இருக்கிறாரோ. எங்கே அந்தப் பழி, பாவம் எல்லாம் என் மகன் தலையில் விடியுமோன்னு நானே பயந்துட்டு இருக்கேன். இதில் ராஜூ வேற இப்படிச் சொல்லிட்டு போறான்." லெக்ஷ்மி விழிகளில் கண்ணீர் நிறைந்தது. பவதாரிணி அவரது உயிர்த்தோழி அல்லவா! தோழியின் துன்பத்திற்கு அவரது கணவர் தானே காரணம்.


"ராஜூ அப்படிப்பட்ட பிள்ளையா? நீ அவனை அருமையா வளர்த்திருக்க. நல்லவேளை ஜனார்த்தனன் பிள்ளை வளர்ப்பில் தலையிடாம இருந்தான், இல்லைன்னா அவனை மாதிரியே உருப்படாம வளர்த்து இருப்பான்." சாரதா பேரன் வளர்ந்தவிதம் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டார்.


"அவருக்கு அதுக்கு எல்லாம் எங்கே நேரம் இருந்தது அத்தை? அவரைப் பொறுத்தவரை பாசம்ங்கிற பெயரில் ராஜூ கேட்டதை வாங்கிக் குவித்தது மட்டும் தான் செய்தார். அவனும் அதைத் தான் உண்மையான பாசம்ன்னு நினைச்சிட்டு இருக்கான்." லெக்ஷ்மி குரலில் மிதமிஞ்சிய வெறுப்பு மட்டுமே இருந்தது. ராஜ்குமாருக்காக மட்டுமே அவரது உயிர் உடம்பில் இருக்கிறது. மற்றபடி திருமணம், கணவன், குடும்ப வாழ்க்கை எல்லாம் அவரைப் பொறுத்தவரையில் நரகம் தான்.


"அப்படியே ராஜூ இருந்துட்டு போகட்டும் லெச்சு."


"இல்லை அத்தை... ராஜூ அரசியல் சாக்கடைக்குள் விழ நினைத்தால்... நானே அவனோட அப்பாவை பற்றி அவனிடம் சொல்லி அவனுக்கு அரசியல் வேண்டாம்ன்னு சொல்லுவேன்." லெக்ஷ்மி உறுதியான குரலில் கூற...


"லெச்சு..." சாரதா திகைத்துப் போனார்.


"எனக்கு என் மகன் முக்கியம் அத்தை." இறுகிய குரலில் கூறிய லெக்ஷ்மி அங்கிருந்து சென்று விட்டார்.


மருமகளின் எண்ணம் சரியே என்று சாரதாவுக்கும் தோன்ற... அவர் அதை அப்படியே விட்டு விட்டார்.


*********************************


அன்று மாலை ஊடகங்களில் ராஜ்குமார் 'ஆன் த ஸ்பாட்டில்' செய்த உதவியானது வைரலானது. இதைக் கண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா விழிகளைச் சுருக்கினான். ஏனெனில் வாய் பேச முடியாத, கை ஊனமானவன் அன்று நடுக்கடலில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆட்களால் இந்தக் கதிக்கு ஆளானவன்... சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் கோபத்திற்கு ஆளானவன்... அவனைக் கண்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கு இப்போதும் கோபம் வந்தது. நல்லவேளை அவன் சைகை பாசையில் கூறியதை ராஜ்குமாரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைக் கண்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் உதடுகள் கேலியாய் வளைந்தது.


அப்போது அவனது அலைப்பேசி அழைத்தது. அதில் ஒளிர்ந்த தங்கையின் எண்ணை கண்டதும் அவன் புன்னகையுடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.


"பக்கத்தில் இருந்துட்டே ஃபோன் பண்ணுகிறாயா செல்லி? இங்கே வந்தால் என்ன?" அவன் புன்னகை மாறாது கேட்டான்.


"அது வந்து அண்ணய்யா..." பூஜிதா திணறவும் அவனது விழிகள் கூர்மையடைந்தது.


"என்ன விசயம் செல்லி?"


"அண்ணய்யா, அன்னைக்கு ராஜ்குமாரை ஹோட்டலில் வைத்து பார்த்தேன்." என்றவள் அன்று நட்சத்திர விடுதியில் ராஜ்குமாரை சந்தித்துப் பேசியதை ஒன்றுவிடாது அண்ணனிடம் கூறினாள். அவனும் பொறுமையாகக் கேட்டவன் பிறகு,


"எனக்குத் தெரியும் செல்லி." என்றான் அமைதியாக...


"தெரிந்திருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்கலையே அண்ணய்யா." தங்கைக்கு மிகவும் சங்கடமாகி போனது.


"நீயே சொல்லுவேன்னு நினைச்சேன்." என்றான் அவன் அமைதியாக...


"சாரி அண்ணய்யா... அன்னைக்கே சொல்லியிருப்பேன். எனக்குப் பயமா இருந்துச்சு."


"அதான் இப்போது சொல்லிட்டியே செல்லி." அவன் சொன்னதும் பூஜிதா நிம்மதியானாள்.


"தப்புப் பண்ணினால் தான் பயப்படணும் செல்லி." அவன் மீண்டும் சொல்லவும் அவள் திடுக்கிட்டு விழித்தாள்.


"அண்ணய்யா..." பூஜிதா பயத்துடன் அழைக்க...


"என் செல்லி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு." என்ற அண்ணனை கண்டு தங்கை நிம்மதியானாள். தங்கையிடம் மேலும் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான் சிம்மஹாத்ரி சத்யநாராயணா. தங்கையின் தாமதமான ஒப்புதல் வாக்குமூலம், ராஜ்குமார் சந்திப்பு எல்லாவற்றையும் அவன் யோசித்தபடி அமர்ந்து இருந்தான்.


"சத்யா..." ஆதிசக்தீஸ்வரி அவனை அழைத்தபடி அவன் அருகில் வந்தமர்ந்தாள். அவன் என்னவென்று அவளைத் திரும்பி பார்த்தான்.


"ஜெகா இங்கே வந்தாள்."


"எதற்கு?" அவன் விரைப்பாகக் கேட்டான்.


"நாளைக்கு அவளுக்குப் பேர்த்டே. நைட் பார்ட்டி வைக்கிறாங்களாம். அதுக்கு இன்வைட் பண்ண வந்திருந்தாள்." சந்தோசமாகச் சொன்ன ஆதிசக்தீஸ்வரியை யோசனையாய் பார்த்தவன்,


"அன்னைக்கு உன்னால் அசிங்கம், அவமானம்... இங்கே இருந்து போயிரு. இப்படி வாழ்றதுக்கு நாண்டுக்கிட்டு செத்து போன்னு சொன்ன உன் அக்கா... அவளோட பிறந்தநாள் விழாவுக்கு அழைக்க வந்திருக்கிறாளா? ஆச்சிரியமா இருக்கே?" என்று அவன் போலி வியப்புடன் பரிகசிக்க...


"ப்ச், அவளைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே. நிலையில்லாத புத்தி உள்ளவள்ன்னு... அதை எல்லாம் மறந்திட்டு அவளே அழைத்து இருக்கிறாள். நான் போயிட்டு வரவா?"


"வேண்டாம்..." அவன் ஒற்றைச் சொல்லில் மறுத்தான்.


"அம்மா, அண்ணி, விஷ்ணு எல்லாம் வர்றாங்களாம். இதைச் சாக்கு வச்சு நான் அவங்களைப் பார்த்துட்டு வர்றேனே." அவள் கெஞ்ச...


"அதெல்லாம் தேவையில்லை." அவன் முடிவாய் மறுத்தான்.


"ஏன்?" ஆதிசக்தீஸ்வரிக்குக் கோபம் வந்தது.


"காரணம் எல்லாம் சொல்ல முடியாது. சொன்னதைக் கேட்டு நடந்துக்கோ. அவ்வளவு தான்." என்றவன் அறைக்குச் செல்ல...


அவனின் பின்னேயே வந்தவள், "உனக்கு அவங்களைப் பிடிக்கலை. நானும் அதை ஒத்துக்கிறேன். ஆனா என்னை ஏன் பார்க்க போகக் கூடாதுன்னு சொல்லுற? அவங்களை மட்டும் இல்லை. வேற எங்கேயும் போகக் கூட விட மாட்டேங்கிற? எனக்கு இங்கே உள்ளுக்குள்ளேயே இருக்கிறது ஜெயில்ல இருக்கிற மாதிரி இருக்கு." அவள் கோபமாய்ப் படபடக்க... அவனோ அவளை நிதானமாய்த் திரும்பி பார்த்தான். ஏதோ அவள் மனது வருத்தப்படுவது போல் ஏடாகூடாமாகப் பேச போகிறான் என்று அவளது மனம் அடித்துக் கொண்டது.


"அது உண்மை தானே. நான் உன்னைச் சிறை எடுத்து இருக்கேன். அப்போ இது ஜெயில் தானே." அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி வினவிட... அவளே மறந்து போயிருந்த நினைவுகளை அவன் ஞாபகப்படுத்திவிட... அவளது பிஞ்சு மனம் காயப்பட்டுப் போனது.


"அதையே ஏன் பேசுற? நானே அதை எல்லாம் மறந்துட்டு நிம்மதியா இருக்கேன்." அவளது விழிகளில் விழிநீர் கரையிட்டது.


"எனக்கு மறக்காது." என்றவன் அறைக்குள் நுழைந்ததும் அவளை அணைக்க வர...



அவளோ அவனை உதறி தள்ளிவிட்டு சென்றாள். அவனோ வலுக்கட்டாயமாக அவளைத் தனது அணைப்பின் கீழ் கொண்டு வந்தவன் அவளுள் மோகத்தில் முத்தாட... அவளது உள்ளம் முரண்டு பிடித்த போதும்... அவளது உடல் அவனுக்குச் சாதகமாய் வளைந்து கொடுத்தது. அவனுக்கு வேண்டியது கிடைத்து விட்டது. அவன் திருப்தியுடன் அவளிடம் இருந்து விலகி உறங்க... அவள் தான் கோபத்துடன் உறங்காது விழித்திருந்தாள்.
 

ஶ்ரீகலா

Administrator
மறுநாள் காலையில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா எழுந்ததும் ஆதிசக்தீஸ்வரியை தேட... அவளோ அறையில் இல்லை. அவன் தோள்களைக் குலுக்கி கொண்டு குளியலறைக்குள் சென்று புகுந்து கொண்டான். பிறகு அவன் குளித்து முடித்து வந்து உடை மாற்றிய பிறகும் அவளைக் காணவில்லை. அவன் அறை கதவை பார்த்தான். கதவு உள்பக்கமாய்த் தாழிடப்பட்டது அப்படியே இருந்தது. அப்படி என்றால் அவள் இங்கே தான் இருக்கிறாள். அவன் செயற்கை நீரூற்றுப் பக்கம் சென்று பார்க்க... அங்கே தான் அவள் நீச்சல் குளம் அருகில் கோபமாய் அமர்ந்து இருந்தாள்.


"இங்கே என்ன பண்ணுற? வந்து பரிமாறு." அவன் அவளை அழைக்க...


"நான் ஒண்ணும் நீ தாலி கட்டிய பொண்டாட்டி இல்லை. என்னை அதிகாரம் பண்ணுறதுக்கு... குழந்தைக்காகத் தானே வந்தேன். ராத்திரி அந்த வேலையைக் கச்சிதமாய்ச் செஞ்சு முடிச்சாச்சு. என்னோட டியூட்டி டைம் முடிஞ்சது." அவள் அவனது முகம் பார்க்காது கோபமாய்ச் சொன்னாள்.


"வர போறியா இல்லையா?" அவன் அழுத்தமாய்க் கேட்க...


"முடியாது..." என்றவள் சட்டமாய் முழங்காலை கட்டி கொண்டு அமர்ந்து விட்டாள்.


சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஒன்றும் பேசாது அவளைப் பார்த்தபடி அங்கிருந்த கண்ணாடி தடுப்புச் சுவரில் சாய்ந்து நின்றபடி அலைப்பேசியில் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுகளைப் பேச ஆரம்பித்தான். அவள் அவனைக் கண்டு கொள்ளாது அமர்ந்து இருந்தாள். சிறிது நேரம் சென்ற போதும் அவள் அமர்ந்த இடத்தில் அப்படியே அமர்ந்திருக்க... அவன் தான் அங்குமிங்கும் தள்ளி தள்ளி நின்று கொண்டு இருந்தான். அதை ஓரக்கண்ணால் கண்டவள் கோபமாய் உதட்டினை சுளித்தாள்.


'கால் வலிக்குதா? நல்லா வலிக்கட்டும். நீ பேசுறது கேட்டு எனக்கும் இப்படித்தான் வலிக்குது.' அவள் மனதிற்குள் அவனை வசைபாடியபடி அமர்ந்து இருந்தாள். நேரம் சென்று கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல அவளது கோபம் குறைந்து அவளது காதல் மனம் மெல்ல வெளிவர ஆரம்பித்தது.


'பாவம் சத்யா... எவ்வளவு நேரம் தான் நின்னுட்டே இருப்பான்.' என்று நினைத்தவள் எழ போக... அதைக் கண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா சட்டென்று சற்று நகர்ந்து நின்றான். அப்போது தான் ஆதிசக்தீஸ்வரிக்கு அந்த விசயமே உறைத்தது. இவ்வளவு நேரம் அவள் வெயிலில் வந்து அமர்ந்து இருக்கிறாள். அதைக் கூட உணராத முடியாத அளவிற்கு அவளுக்குக் கோபம்... ஆனால் அதை உணர்ந்தவனாய் அவன் அவள் மீது வெயில் படாதவாறு அவனது நிழலில் அவளை அடைகாக்கின்றான். அவளுக்கு முதன்முதலில் அவனைச் சந்தித்த நிகழ்வு தான் நினைவில் வந்து போனது. அவ்வளவு தான் அடுத்த நொடி அவள் ஓடிவந்து அவனை அணைத்து கொண்டாள். அவளது கோபம் எல்லாம் காற்றில் கரைந்து போனது.


"கோபம் போயிருச்சா?" அவன் அவளை விலக்கிவிட்டு அவளது முகத்தைப் பார்த்து கேட்டான். வெயிலில் நின்றதால் அவனது முகம் சிவந்து காணப்பட்டது. அவனது முகத்தில் வியர்வை துளிகள் துளிர்த்து இருந்தது.


"நீ மாறவே இல்லை சத்யா." என்றவளது கரம் புடவை முந்தானையால் அவனது வியர்வை துளிகளைத் துடைத்து விட்டது. அவன் அவளையே பார்த்திருந்தான்.


"என்ன?" என்று அவள் கேட்க...


"இப்படித் துடைக்கக் கூடாது. எப்படித் துடைக்கிறது நான் சொல்லி தரவா?" என்றவனது உதடுகள் அவளது முகம் நோக்கி குனிந்தது. அவள் பேவென விழிக்க... அவனது உதடுகள் அவளது உதட்டின் மேல் பகுதியில் துளிர்த்திருந்த வியர்வை துளிகளை மென்மையாய் அழகாய்த் துடைத்தது. சில நிமிடங்களில் அவளிடம் இருந்து விலகியவன் அவளையே பார்த்திருக்க...


"சாப்பிடணும்ன்னு சொன்ன..." அவளால் அவனது முகத்தை ஏறிட்டு காண முடியவில்லை. நாணத்தில் முகம் சிவக்க அவள் வேறெங்கோ பார்த்தபடி கூறினாள்.


"இப்போ பசி வயிற்றில் இல்லை." என்றவனது பார்வையே சொன்னது அவனின் பசி வேறு என்று... அவள் அதைக் காணவில்லையே!


"வேறெங்கே?" அவள் கேட்கும் முன் அவளது இதழ்களை அவன் முழுதாய் விழுங்கி இருந்தான். அவனது அகோர பசிக்கு அவளே உணவானாள். இனிமையான தாம்பத்தியம் அழகாய் நடந்தேறியது அங்கு...


சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவ்வளவு சொல்லியும் ஆதிசக்தீஸ்வரி மாலையில் தனது உறவுகளைக் காண புறப்பட்டு விட்டாள். அவன் வந்து அவளைச் சத்தம் போட்டால்... அவனது கோபத்தினைக் குறைக்கும் வித்தை தான் அவளுக்குத் தெரியுமே. அதனால் வந்த தைரியம் அவனது வார்த்தைகளை மீற சொன்னது. அவன் அவள் முன்னே ஒரு கோடு போட்டு அதைத் தாண்டாதே என்றால்... அதற்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும். அதைப் பெண்ணவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.


அழகான ஆகாய நிற டிசைனர் புடவை கட்டி கொண்டு, அதற்குப் பொருத்தமாக வைர நகைகள் அணிந்து, குட்டை முடியை கிளிப்பில் அடக்கி, மிதமான ஒப்பனையில் தயாராகினாள். தன்னைக் கண்ணாடியில் பார்த்து திருப்தி கொண்டவளாய் அவள் அங்கே சென்றாள். வெளியில் சென்று அக்காவிற்காகப் பரிசு பொருள் வாங்க முடியாத நிலை. அதனால் அவள் தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களை வைத்து அழகான பூங்கொத்து தயார் செய்து அதை எடுத்துக் கொண்டு சென்றாள்.


எல்லோரும் விழா நடக்கும் இடத்தில் குழுமியிருக்க... காயத்ரி மட்டும் அங்கே இருக்க விருப்பம் இல்லாததவளாய் வெளியில் இருந்தாள். அப்போது ஆதிசக்தீஸ்வரி வருகை கண்டு அவளது முகம் மலர்ந்தது.


"ஆதி, எப்படி இருக்க?" காயத்ரி முகம் மலர கேட்டாள்.


"எனக்கு என்ன அண்ணி? நான் நல்லா இருக்கேன். சத்யா என்னை நல்லா பார்த்துக்கிறான்." ஆதிசக்தீஸ்வரி மகிழ்ச்சியுடன் கூறினாள். அவள் கூறுவது உண்மை என்று அவளது முகத்தில் தெரிந்த பொலிவை கண்டே உணர்ந்து கொண்டாள் காயத்ரி.


"அண்ணா நல்லவங்கன்னு நான் தான் சொன்னேன்ல." என்ற காயத்ரி அவளிடம் பேசி கொண்டிருக்க... அதற்குப் பதில் அளித்த ஆதிசக்தீஸ்வரி,


"அம்மா, விஷ்ணு எங்கே?" என்று கேட்க...


"அதை ஏன் கேட்கிற? ஜெகா மாமியார் அத்தை கிட்ட கோபப்படுவாங்கன்னு நினைச்சேன். ஆனா அப்படி எல்லாம் நடக்கலை. நேத்து அவங்க அத்தைக்கு ஃபோன் பண்ணி, பழசை எல்லாம் நினைச்சு வராம இருந்துராதீங்க. இது உங்க பொண்ணு பிறந்தநாள் விழா, கண்டிப்பா வரணும்ன்னு சொன்னாங்க. அவங்க மனசு மாறியது எனக்கே ஆச்சிரியமா இருக்கு. இதோ இப்போ கூட அவங்க கூடத் தான் அத்தை பேசிக்கிட்டு இருக்காங்க. கூடவே விஷ்ணு அவங்க கூட இருந்துட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கான். எனக்குத் தான் அங்கே இருக்க மனசு ஒப்பலை. எப்படியும் நீ வருவன்னு நினைச்சேன். அதான் உனக்காக இங்கே காத்துட்டு இருந்தேன்."


"சரி அண்ணி... உள்ளே வாங்க போகலாம்..." ஆதிசக்தீஸ்வரி அண்ணியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


விழா அரண்மனை தோட்டத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜெகதீஸ்வரிக்கு இது போன்ற ஆடம்பரம் பிடிக்கும் என்பதால்... உதய்பிரகாஷ் மனைவிக்காக இதை எல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தான். அத்தோடு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்து இருந்தான். விழா ஏற்பாட்டினை கண்டு ஜெகதீஸ்வரி மிகவும் மகிழ்ந்து போனாள். கணவன் மீது காதல் பெருக்கெடுத்து ஓடியது. எல்லாம் ஆதிசக்தீஸ்வரியை காணும் வரை தான். ஆதிசக்தீஸ்வரி வைர நகைகள் ஜொலிக்க அங்கு வந்ததைக் கண்டு ஜெகதீஸ்வரி மனம் பொறாமையில் பொசுக்கியது.


ஏனெனில் ஜெகதீஸ்வரி அணிந்திருந்தோ இப்போது வாங்கிய வைர நகைகள். ஆனால் ஆதிசக்தீஸ்வரி அணிந்திருந்தது பழமையான வைர நகைகள். அதன் வடிவமைப்பில் இருந்து அதைத் தெரிந்து கொள்ளலாம். அதுவும் நகைகள் எல்லாம் அத்தனை ராயலாக இருந்தது. வைரத்திற்கு மட்டும் வயதாக வயதாகத் தான் மதிப்பு. ராணியம்மாவும் ஆதிசக்தீஸ்வரியின் தோற்றத்தினைக் கண்டு கோபம் கொண்டார். ஆதிசக்தீஸ்வரியை காணும் போது எல்லாம் சிம்மஹாத்ரி சத்யநாராயணா தன்னையும், தனது மகன் ஜெய்பிரகாஷையும் அவமானப்படுத்தியது தான் அவருக்கு ஞாபகம் வந்தது. அவர் கோபத்தோடு அவளை முறைத்து பார்த்தார். ரச்சிதா தனது கைக்கட்டினை வருடியபடி ஆதிசக்தீஸ்வரியை வன்மமாய்ப் பார்த்தாள். பூஜிதாவின் பார்வை கூட ஆதிசக்தீஸ்வரி மீது வன்மமாய்ப் பதிந்தது. நல்லவேளை ஜெய்பிரகாஷ் இந்தப் பெண்கள் கூட்டணியில் கலந்து கொள்ளவில்லை. இல்லை என்றால் அவன் வேறு அவன் பங்கிற்கு வன்மத்தை கக்கி இருப்பான்.


ஆதிசக்தீஸ்வரி இதை எல்லாம் கருத்தில் கொள்ளாது நேரே அக்காவிடம் சென்று பூங்கொத்தை நீட்டியவள், "ஹேப்பிப் பேர்த்டே ஜெகா..." என்று வாழ்த்த...


"எல்லோரும் விலையுயர்ந்த பரிசு பொருட்களைக் கொண்டு வந்திருக்காங்க. இப்போ நீ பரிசு கொடுக்கலைன்னு யார் அழுதா? இது எல்லாம் ஒரு பரிசா?" அவள் தங்கையைப் பரிகாசம் செய்தபடி அந்தப் பூங்கொத்தை கீழே போட போக...


"பரிசில் சின்னது, பெரியது என்ன இருக்கு? கொடுக்கும் மனசில் தான் இருக்கு." உதய்பிரகாஷ் மனைவியிடம் இருந்து பூங்கொத்தை வாங்கிக் கொண்டு ஆதிசக்தீஸ்வரியை கண்டு புன்னகைத்தான். ஆதிசக்தீஸ்வரி ஜெகதீஸ்வரி குணம் தெரிந்த ஒன்று என்பதால் அவளுக்காகப் பெரிதாக அலட்டி கொள்ளாது, அக்காள் கணவனைக் கண்டு புன்னகைத்தாள்.


முதலில் விருந்தினர்கள் ஆதிசக்தீஸ்வரியை ஜெகதீஸ்வரியின் தங்கையாகத் தான் பார்த்தனர். அதற்குப் பிறகு தான் அவளது விசயம் அங்கு மெல்ல பரவலானது. எல்லோரின் பார்வையும் வேறு மாதிரியாய் அவள் மீது படிந்தது. அவளோ யாரையும் கண்டு கொள்ளாது தாயின் அருகே அமர்ந்திருந்த விஷ்ணுவை நோக்கி சென்றாள். அவள் விஷ்ணுவை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அவனிடம் பேசலானாள். அவள் அன்னையைக் கூடக் கண்டு கொள்ளவில்லை.


"உனக்கு எங்களை எல்லாம் கண்ணுக்கு தெரியாதே." இராஜராஜேஸ்வரி குத்தலாய் கேட்க...


"பேசினால் மட்டும்... நீங்க அப்படியே சந்தோசமா பேசிருவீங்களா? எப்படியும் சண்டை தான் போடுவீங்க. எதுக்கு வீணே மனசு கஷ்டப்படுக்கிட்டு..." அவள் பதிலளித்துக் கொண்டே விஷ்ணுவிடம் விளையாடி கொண்டு இருந்தாள். காயத்ரி புன்னகையுடன் இருவரையும் பார்த்திருந்தாள்.


அப்போது ராணியம்மா ரச்சிதாவிடம் விழிகளைக் காட்டி விட்டு ஆதிசக்தீஸ்வரியிடம், "நீ எதுக்கு இங்கே வந்திருக்க? உன்னோட தராதரம் என்னன்னு தெரியுமா? உன் எல்லை தெரிஞ்சு நீ நடந்துக்கோ." என்று உரத்த குரலில் உச்சஸ்தானியில் கத்த துவங்கினார். விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களது பேச்சினை நிறுத்திவிட்டு இவர்களை வேடிக்கை பார்த்தனர். அப்போதும் ஆதிசக்தீஸ்வரி நிமிர்வாக,


"என்னோட அக்கா என்னை அழைத்து இருந்தாள். அதனால் தான் வந்தேன்." என்று சொல்ல...


"அம்மா, எதுக்குப் பிரச்சினை பண்றீங்க? அமைதியா இருங்க." உதய்பிரகாஷ் அன்னையை அடக்கினான். அவனுக்குச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பற்றி நன்கு தெரியும். இப்போது ஆதிசக்தீஸ்வரி சிம்மஹாத்ரி சத்யநாராயணா உடமை... அவளைப் பற்றித் தரக்குறைவாகப் பேசினால்... அதன் விளைவுகளை அவர்கள் தான் சந்திக்க வேண்டி வரும். அதை அவன் நன்கு உணர்ந்திருந்தான்.


"நான் பிரச்சினை பண்றேன்னா... கண்ட கழிசடைங்களைக் கூட்டிட்டு வந்து உன் பொண்டாட்டி தான்டா பிரச்சினை பண்ணுகிறாள். முதல்ல அவளைக் கேட்கணும். ஜெகா இங்கே வா..." ராணியம்மா மருமகளை அழைத்தார்.


"அம்மா, தேவையில்லாது பேசாதீங்க. அண்ணாவுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான்..." அப்போதும் உதய்ப்ரகாஷ் அன்னையிடம் மன்றாடினான்.


"ஜெகா, நீ இவளை இந்த விழாவுக்குக் கூப்பிட்டு இருந்தியா?" ராணியம்மா மகன் கூறியதை பொருட்படுத்தாது மருமகளிடம் கேட்டு தனது நாடகத்தினை ஆரம்பித்து வைத்தார்.


"நான் கூப்பிடலை அத்தை." ஜெகதீஸ்வரி பொய் சொன்னவள் தங்கையைக் கண்டு இறைஞ்சும் பார்வையைப் பார்த்தாள். எல்லாமே நடிப்பு...


"கேட்டுக்கோ உதய்... நான் கேட்டது சரி தானே. தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் இவள் எல்லாம் நல்ல குடும்பத்துப் பெண் தானான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு." ராணியம்மா என்கிற நச்சுப் பாம்பு விசத்தைக் கக்க தொடங்கியது.


ராணியம்மா பேச்சை கேட்டு ஜெகதீஸ்வரி, ரச்சிதா இருவரும் மனம் மகிழ்ந்தனர். பூஜிதா பார்வை ஆதிசக்தீஸ்வரி மீது அருவருப்பும், நக்கலுமாய்ப் பதிந்தது. உதய்பிரகாஷும், காயத்ரியும் தான் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர்.


"அதே தான் நானும் இவள் கிட்ட கேட்கின்றேன். எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வான்னு... வர மாட்டேங்கிறாள். நீங்களே நல்ல புத்திமதி சொல்லுங்க." இராஜராஜேஸ்வரி தன் பங்கிற்கு மகளைக் குத்தி காட்டினார். மகள் தன் பேச்சு கேட்காது எதிரி பேச்சு கேட்பதால் வந்த ஆத்திரம் இது...


"அத்தை..." காயத்ரி அதிர்வுடன் மாமியாரை பார்த்தாள். அதை அவர் கண்டு கொண்டால் தானே...


"இதனால் தான் இவளை நான் கூப்பிடலை அத்தை. ஆனா இவள் இவளோட பவிசை காட்ட மினுக்கிட்டு வந்துட்டாள்." ஜெகதீஸ்வரி தன் பங்கிற்கு விசத்தைக் கக்கினாள்.


"நம்மளை மாதிரி ராயல் பரம்பரையில் பிறந்து இருந்தால் நல்ல குணம் இருந்திருக்கும். இவள் தான் கேடுகெட்ட..." ரச்சிதா மேலே என்ன பேச போனாளோ...


"அண்ணி வாயை மூடுங்க." உதய்பிரகாஷ் அண்ணியாக வர போகிறவளை கண்டு கத்தினான்.


"என்ன குரல் உயருது உதய்? அவள் உன்னையும் மடக்கி போட்டு விட்டாளா?" என்று ரச்சிதா கேலியாய் கேட்க... கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது.


"அப்படிக் கேளுங்க வதின... சத்யா அண்ணய்யாவை தொடர்ந்து உதய் அண்ணய்யாவையும் இவள் வளைத்துப் போட்டாலும் போட்டிருப்பாள்." பூஜிதா தன் பங்கிற்கு விசத்தைக் கக்கினாள்.


"இவ்வளவு மோசமான பெண்ணா இவள்? இவள் எதுக்கு இங்கே வந்தாள்?" என்று எல்லோரும் ஆதிசக்தீஸ்வரியை அருவருப்பாய் பார்த்தனர்.


"நீ அந்தபுரத்து அழகின்னா... அங்கே தான் இருக்கணும். உனக்கான இடம் அது தான். இங்கே எல்லாம் நீ வர கூடாது." அங்கிருந்த ஒருவர் அவளைக் கண்டு சத்தம் போட...


ஆதிசக்தீஸ்வரி எல்லோரையும் அழுத்தமாய்ப் பார்த்தபடி நின்றிருந்தாளே தவிர... எதுவும் வாய் திறந்து பேசவில்லை. அவளுக்கு இது வேண்டும் தான்... அவனின் பேச்சை மீறி இங்கு வந்ததற்கு அவளுக்கு இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும். அந்த நிலையிலும் கூட அவள் தனது நிமிர்வை கைவிடவில்லை. அதற்குக் காரணம் அவனோ! அவன் மீதிருந்த நம்பிக்கையோ!


"அவனின் நம்பிக்கை அவளென்றால்,

அவளின் நம்பிக்கை அவனன்றோ!

நம்பிக்கை கொடுப்பது சாமானிய காரியமல்ல,

இங்கு அவன் கொடுத்திருப்பது நம்பிக்கை மட்டுமல்ல,

அவளின் பெண்மைக்குப் பாதுகாப்பையும்,

பெண்ணவளின் உணர்வுகளுக்கு மதிப்பையும்...

வெளியில் இருந்து பார்ப்போருக்கு தெரியாத ஒன்றை

வாழும் அவள் உணர்கிறாள்... அதனால் வந்த

திமிரும், நிமிர்வும் அவளது! காரணம் அவனன்றோ!!!"


நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 32


ஆதிசக்தீஸ்வரியின் நிமிர்வை கண்டு காயத்ரி, உதய்பிரகாஷ் இருவரை தவிர மற்றவர்களுக்கு ஆத்திரம் வந்தது. இப்படி முறையற்று இருக்கும் போதே இவளுக்கு இப்படியொரு திமிரா? என்று...


"எல்லோரும் பேசி முடிச்சாச்சா? இல்லை எதுவும் பேச வேண்டியது பாக்கி இருக்கா?" அவள் தனது இரு கரங்களையும் கட்டியபடி எல்லோரையும் கண்டு அழுத்தமாய்க் கேட்டாள். அவளது பேச்சினை கேட்டு எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.


"இப்படி இருக்கும் போதே திமிரை பார்." ஒரு சிலர் தங்களுக்குள் முணுமுணுத்து கொண்டனர்.


ஆதிசக்தீஸ்வரி முதலில் ராணியம்மா புறம் வந்தவள், "என் எல்லை எதுன்னு கேட்டீங்கல்ல... சொல்லவா? இல்லை செஞ்சு காட்டவா?" என்றாள் திமிரோடு... அவளது பேச்சில் ராணியம்மா தான் திகைத்துப் போனார்.


"ஏய், என்ன ரொம்பத்தான் பேசுற?" ரச்சிதா இடையில் குறுக்கிட...


"அட, கொஞ்சம் இரும்மா... வரிசையா தான் வர முடியும். ஏன்னா நான் ஒரே ஒரு ஆள் பாரு. எல்லோரையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது. அதனால் கடைசியா உன் கிட்ட வர்றேன்." ஆதிசக்தீஸ்வரி நக்கலாய் ரச்சிதாவை கண்டு சொன்னவள் ராணியம்மா புறம் திரும்பி,


"ஏதாவது ஒரு ஆப்சனை சூஸ் பண்ணுங்க அத்தை." என்று ராகம் போட்டு இழுக்க...


"யாருக்கு யாருடி அத்தை?" ராணியம்மா கோபமாய்ச் சீறினார்.


"உங்க மகன் கூட நான் வாழும் வாழ்க்கையைப் பார்த்துமா நீங்க இப்படி ஒரு கேள்வி கேட்கிறீங்க?" அவள் தனது புருவத்தை உயர்த்த...


"நீ வாழுற வாழ்க்கையைப் பத்தி தான் எனக்குத் தெரியுமே." ராணியம்மா அத்தனை அருவருப்புடன் சொன்னார்.


"ரொம்ப அருவருப்பு படாதீங்க. நான் சொன்னால்... இல்லை இல்லை நான் நினைச்சாலே போதும். அடுத்த நொடி என் சத்யா என்னை இந்த அரண்மனைக்கு மகாராணியா, அதாவது உங்க இடத்தில் என்னை உட்கார வைப்பான். என்ன செஞ்சு காட்டட்டுமா?" அவள் தலையை இருபுறமும் ஒரு மாதிரியாய் ஆட்டியபடி ராணியம்மாவை உறுத்து விழித்தபடி கேட்டாள். ராணியம்மா பதில் பேச இயலாது வாயடைத்துப் போனார். ஆதிசக்தீஸ்வரி சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பெயர் சொல்லி அழைத்து அவன், இவன் என்று ஒருமையில் பேசியது கண்டு எல்லோரின் புருவங்களும் வியப்பில் உயர்ந்தது.


"நான் அருவருப்புன்னா... நீங்களும் அருவருப்பு தான்." அவள் நிமிர்வாகச் சொல்ல...


"ஏய், நீயும், நானும் ஒண்ணா?" ராணியம்மா அவளைக் கண்டு சத்தம் போட...


"ஒண்ணு இல்லை தான்... அடுத்தவங்க மனசை காயப்படுத்துற நீங்களும்... மனுசனை மதிக்கிற நானும் ஒண்ணு இல்லை தான்." என்றவள், "நான் சொன்னதிலேயே தெரிந்து இருக்கும்... சத்யாவுக்கு நான் எவ்வளவு முக்கியம்ன்னு..." என்று உறுதியான குரலில் சொன்னாள் அவள்...


"குழந்தைக்காக வந்த நீயெல்லாம் பேசாதே." ராணியம்மா அடங்காது சீற...


"அஃப்கோர்ஸ் நான் குழந்தைக்காக வந்தவள் தான். ஆனா என்னைத் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகுதி இல்லை. சத்யாவும் அந்தத் தகுதியை கண்டவங்களுக்கு எல்லாம் கொடுத்திர மாட்டான். இப்ப புரிஞ்சிருக்குமே என் தகுதி பத்தி..." அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் மீதான நம்பிக்கை பளிச்சிட்டது.


ஆதிசக்தீஸ்வரி இப்போது அக்கா பக்கம் திரும்பியவள், "நீ பச்சோந்திங்கிறதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிற ஜெகா." என்றவளின் பார்வை உதய்பிரகாஷையும், அக்காவையும் மாறி மாறிப் பார்த்தது. அதிலேயே ஜெகதீஸ்வரி வெலவெலத்து போனாள்.


"சத்யாவும், நானும் வாய் திறக்காத வரை தான் நீ சேஃப். புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்." என்ற தங்கையைக் கண்டு ஜெகதீஸ்வரி பலமாகத் தலையாட்டி வைத்தாள். இனி ஜென்மத்துக்கும் அவள் தங்கையிடம் வம்பிழுக்க மாட்டாள். கிடைத்த வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே. அந்தப் பயம் அவளுக்கு...


அடுத்து ஆதிசக்தீஸ்வரியின் பார்வை ரச்சிதா பக்கம் திரும்பியது. ரச்சிதா தெனாவெட்டாய் அவளைப் பார்த்திருந்தாள்.


"வாங்க மேடம், அடுத்து நீங்க தான்... இப்போ நீங்க பேசலாம்." என்ற ஆதிசக்தீஸ்வரியை கண்டு,


"நீ யாருடி எனக்குப் பெர்மிசன் கொடுக்கிறதுக்கு?" ரச்சிதா கோபமாய் எகிறினாள்.


"என் கிட்ட பேச, என்னைப் பத்தி பேச நான் தான் பெர்மிசன் கொடுக்கணும்." திமிராய் பதில் சொன்ன ஆதிசக்தீஸ்வரி ரச்சிதாவை கண்டு, "என்ன சொன்ன? நீ ராயல் பேமிலின்னா... அதனால் நல்ல குணத்தோடு இருக்கியா? பேஷ், பேஷ் ரொம்ப நன்னா இருக்கு கேட்கிறதுக்கு..." என்று கை தட்டிய ஆதிசக்தீஸ்வரியை கண்டு ரச்சிதாவின் புருவங்கள் யோசனையாய் நெரிந்தது.


"சத்யா இன்னும் உன்னைப் பத்தி என் கிட்ட தெளிவா சொல்லலை. ஆனா நீ சொன்னதை வச்சு எனக்குக் கொஞ்சம் புரிஞ்சது. அது என்னன்னா, நீயும், சத்யாவும் லவ் பண்ணியிருக்கீங்க. அதுக்குப் பிறகு பிரிஞ்சிருக்கீங்க. அந்தப் பிரிவுக்குக் காரணம் நிச்சயம் சத்யாவா இருக்க மாட்டான். எனக்கு நூறு சதவீத நம்பிக்கை இருக்கு. அதுக்கு முழுக்கக் காரணம் நீ மட்டும் தான். அப்போ நீயே அவனை விட்டு பிரிஞ்சிட்டு... இப்போ நீயே அவனைத் தேடி வந்து கையை வெட்டி மிரட்டி அவனை அடைய பார்க்கிறியே... இது எந்த விதத்தில் நியாயம்?" ஆதிசக்தீஸ்வரியின் விழிகள் ரச்சிதாவின் கை கட்டினை நக்கலாய்ப் பார்த்தது.


"ரச்சி, என்னதிது? ஜெயை தானே நீ லவ் பண்ணின?" ராணியம்மா கோபத்துடன் அண்ணன் மகளைக் கண்டு கேட்டார். அவருக்கு இந்தச் செய்தி புதிது. ரச்சிதா பதில் சொல்ல முடியாது திருதிருவென விழித்தாள்.


"ஒருத்தனை லவ் பண்ணி கழட்டிவிட்டுட்டு... அவனோட தம்பியை கரெக்ட் பண்றதுக்குப் பெயர் தான் ராயல் பேமிலியோ... அப்படிப்பட்ட நல்ல குணம் எனக்கு வேண்டாம்ப்பா." ஆதிசக்தீஸ்வரி அருவருப்புடன் முகத்தைச் சுளித்தபடி சொன்னாள். ரச்சிதாவால் பதில் பேச முடியவில்லை. அத்தனையும் மெய் எனும் போது மறுத்து என்ன கூற இயலும்?


"உன்னைக் கம்பேர் பண்ணும் போது நான் நல்ல பேமிலியில் தான் பிறந்து வளர்ந்து இருக்கேன். என் அப்பா வளர்ப்பு நான்..." என்றவளின் பார்வை அம்மா, அக்காவை உறுத்து விழித்தது. இராஜராஜேஸ்வரி ஆதிசக்தீஸ்வரியை முறைத்து பார்க்க... ஜெகதீஸ்வரி தலையைக் குனிந்து கொண்டாள்.


"ஒருத்தனையே நேசிச்சு, அவன் கூட மட்டும் தான் வாழ்ந்துட்டு இருக்கேன். இந்த வாழ்க்கையை நான் ஒருநாளும் கேவலமா நினைச்சது இல்லை. ஏன்னா கல்யாணம்ங்கிற பெயரில் யாரோ ஒருத்தன் கூட வாழ்ந்து தினம் தினம் செத்து மடியறதை விட இந்த வாழ்க்கை எவ்வளவோ மேல். அப்படிப் பார்த்தால் சத்யா என்னைக் காப்பாத்தி இருக்கான். அந்த நன்றிக்கடனுக்காகவாவது அவனது காலடி செருப்பா இருக்கச் சொன்னாலும் நான் இருப்பேன். இதில் எனக்கு எந்த ஈகோவும் இல்லை. எஸ், ஐ லவ் சத்யா." அவள் கடைசி வரியை அழுத்தம் திருத்தமாய் உரக்க சொன்னாள்.


அப்போது தான் அங்கு உள்ளே நுழைந்த ஜெய்பிரகாஷ் காதில் இந்த வார்த்தைகள் விழுந்து அவனை நன்றாகக் கடுப்பேற்றியது. 'சத்யாவை விட நான் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டேன்' என்று அவன் கொதித்துப் போனான்.


இறுதியில் ஆதிசக்தீஸ்வரி பூஜிதாவை பார்த்து, "என்ன சொன்ன? நான் உன் சின்ன அண்ணனையும் மடக்கி போட்டு இருக்கேன்னா? என் அக்கா கணவர் எனக்கு அப்பா மாதிரி. உதய் மாமாவுக்கு என் அப்பா ஸ்தானத்தை நான் கொடுத்து இருக்கேன். அந்த உறவை போய்க் கொச்சைப்படுத்திட்டியே. உன் கிட்ட இதை எதிர்பார்க்கலை." என்று வருத்தத்துடன் சொல்ல...


"நீ என்னைப் பற்றிப் பேச தேவையில்லை." பூஜிதா எரிச்சலுடன் சொல்ல...


"சரி, நான் உன்னைப் பத்தி பேசலை. உன் அண்ணாவை பத்தி பேசறேன். உன் அண்ணா உன் மீது அவ்வளவு பாசம் வைத்து இருக்கிறார். ஆனால் நீ கூட அவரைப் பற்றிப் புரிஞ்சிக்கலையே." என்று ஆதிசக்தீஸ்வரி விரக்தியுடன் கேட்க...


"என் அண்ணய்யாவை பத்தி எனக்கு நல்லா தெரியும். நீ ஒண்ணும் சொல்ல தேவையில்லை." என்ற பூஜிதாவை கண்டு கேலியாய் சிரித்த ஆதிசக்தீஸ்வரி,


"நீ என்னைக் கேவலப்படுத்துறதா நினைச்சு உன் அண்ணாவை கேவலப்படுத்துற..." என்று சொல்ல... அதைக் கேட்டு பூஜிதா முகம் இருண்டு போனது.


இராஜராஜேஸ்வரி மகளிடம் வந்தவர், "என்னடி ரொம்பப் பேசிட்டே இருக்க. எங்கே வந்து என்ன பேசறோம்ன்னு ஒரு வரைமுறை வேண்டாம். முதல்ல இங்கே இருந்து போடி..." என்று ஆதிசக்தீஸ்வரியின் முதுகில் கை வைத்து தள்ளினார். அவளோ அழுத்தமாய் அசையாது நின்றவள்,


"போறேன்... நான் ஒண்ணும் இங்கே விருந்தாட வரலை. ஜெகா கூப்பிட்டதால் தான் நான் உங்களை எல்லாம் பார்க்க இங்கே வந்தேன். அப்பவே சத்யா சொன்னான், அங்கே போகாதேன்னு... நான் தான் கேட்கலை. அதுக்கு எனக்கு இந்த அவமானம் தேவை தான். இப்பவும் நீங்க எல்லாம் சொன்ன மாதிரி நான் கேடுகெட்டவளோ, அருவருப்பானவளோ இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கு. என் சத்யா எது செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்ன்னு... என்னை இப்படி அவன் கூட வச்சிருக்கான்னா... நிச்சயம் அதுக்கும் ஒரு காரணம் இருக்கும். அவனை நான் முழுசா நம்பறேன்." என்று நிறுத்தியவள் மொத்த கூட்டத்தையும் ஒரு பார்வை பார்த்து,


"நீங்க என்னை ஒழுக்கம் கெட்டவள்ன்னு சொல்வதால்... எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. என் சத்யா என்னைச் சொல்லட்டும். அவனிடம் நான் தீக்குளிச்சு என்னை நிரூபிக்கிறேன். உங்க கிட்ட என்னை நிரூபிக்கணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை." என்று திமிராக, தெனாவெட்டாகச் சொன்னவள் அங்கிருந்து சென்று விட்டாள். அவள் தலைகுனியும் அளவிற்கு எந்தத் தவறும் செய்யவில்லையே.


அடுத்த என்ன நடக்கப் போகிறதோ என்று உதய்பிரகாஷ் கவலையுடன் நின்றிருந்தான். அவனது அண்ணனது கோபம் பற்றித் தான் அவனுக்குத் தெரியுமே. இப்படி ஆதிசக்தீஸ்வரி அழைத்து வந்து அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம் என்றே அவனுக்குத் தோன்றியது. இந்தச் செயலை செய்த மனைவி மீது கொலைவெறி வந்தது. காயத்ரியும் செய்வதறியாது நின்றிருந்தாள். மற்றவர்கள் யாரும் இதைப் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.


****************************


சிம்மஹாத்ரி சத்யநாராயணா காரிலிருந்து இறங்கும் போதே அவனது விழிகள் தோட்டத்தை அலசி ஆராய்ந்தது. இப்போது எல்லாம் அவன் இப்படித்தான்... அவனுக்குத் தெரியும், ஆதிசக்தீஸ்வரி இங்குத் தான் இருப்பாள் என்று... அவன் நினைத்தது போன்றே அவள் அங்குத் தான் அமர்ந்து இருந்தாள். அவன் நேரே அவள் அருகில் சென்று அமர்ந்தான். எப்போதும் ஆதிசக்தீஸ்வரி அவன் வந்தாலே அவனது கரம் பற்றிக் கொண்டு தோளில் சாய்ந்து கொண்டு காலை முதல் மாலை வரை நடந்த விசயங்கள் ஒவ்வொன்றையும் மறைக்காது அப்படியே கூறுவாள். அவன் பதில் பேசாது இருந்தாலும் பொறுமையாக அனைத்தையும் கேட்பான். அவளது ஒரே பொழுதுபோக்கு அவன் மட்டுமே... அதனால் அவன் அமைதியாக அவள் சொல்வதைக் காது கொடுத்து கேட்பான். ஆனால் இன்றோ அவன் வந்ததைக் கூட அறியாது வேறு சிந்தனையில் இருந்தவளை கண்டு அவன் யோசனையாய் அவளைப் பார்த்தான்.


"சக்தி..." அவன் அவளை அழைக்க... திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள் அவனைக் கண்டதும் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்,


"எப்போ வந்த சத்யா?" என்று கேட்டாள்.


அவன் பதில் பேசாது அவளையே பார்த்தான். அவள் அணிந்திருந்த உடை அவளது அமைதிக்கான காரணத்தைச் சொல்லாது சொல்லியது. அதைவிட அவளது கலங்கிய கண்கள் அவனிடம் ஆயிரம் கதை கூறியது.


"நான் சொல்ல சொல்ல கேட்காம அங்கே போனியா?" அவன் கோபத்தில் உரும...


"இல்லை சத்யா... சும்மா உனக்காகத் தான் புதுப் புடவை கட்டினேன்." அவள் சமாளிக்கப் பார்த்தாள்.


"எனக்கு வேண்டியது உண்மை மட்டுமே. போனியா? இல்லையா?" அவனது அதட்டலில் அவளது தலை தானாகக் குனிந்தது.


"ஆமா..." என்றவளை ஒரு பார்வை பார்த்தவன் பிறகு எழுந்து விறுவிறுவெனச் சென்றான்.


"சத்யா எங்கே போற?" அவள் பதறியபடி அவன் பின்னேயே செல்ல...


"அவங்க என்ன பேசியிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும்." என்றவன் தனது நடையை நிறுத்தவில்லை.


"வேண்டாம் சத்யா... நானே பதிலடி கொடுத்துட்டு வந்துட்டேன்." அவள் கெஞ்சும் குரலில் மன்றாட...


"நீ போ..." என்றவன் மேலே செல்ல... அவளும் மனது கேட்காது அவனைப் பின்தொடர்ந்தாள்.


சிம்மஹாத்ரி சத்யநாராயணா விழா நடக்கும் இடத்திற்குச் சென்றதும் அங்கே அப்படியொரு நிசப்தம் நிலவியது. அவனைக் கண்டதும் எல்லோரும் திகைத்து போய் அமர்ந்து இருந்தனர். ராணியம்மா அவனின் அருகே நின்றிருந்த ஆதிசக்தீஸ்வரியை உறுத்து விழித்தார்.


"இங்கே என்ன நடந்துச்சு?" அவன் அடிக்குரலில் உரும...
 
Status
Not open for further replies.
Top