ஶ்ரீகலா
Administrator
இரண்டாம் பாகம்...
உயிர் : 23
சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவனது நட்சத்திர விடுதியில் இருந்த பாரில் அமர்ந்து இருந்தான். அவன் முன் சில காலியான மது பாட்டில்கள் இருந்தது. அதிலிருந்த மது அத்தனையும் அவனது வயிற்றுக்குள் அடைக்கலம் புகுந்திருந்தது. இன்னும் சில பாட்டில்களில் மது அப்படியே இருந்தது. அதுவும் அவனது வயிற்றுக்குள் போவதற்குத் தயாராக இருந்தது. அவன் கையில் மது கோப்பையோடு விழிகள் சிவக்க அமர்ந்து இருந்தான். அது மது போதையினாலா? இல்லை மாது போதையினாலா? என்பதை வரையறுத்து கூற முடியவில்லை. அவன் அருகில் பவன்ராம் கவலையுடன் அமர்ந்து இருந்தான். அவர்கள் இருவர் மட்டுமே அந்தப் பெரிய பாரில் அமர்ந்து இருந்தனர். நண்பனின் அலப்பறையைக் கண்டு பவன்ராம் அங்கு வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கத் தடை போட்டு விட்டான். அதனால் இருவரை தவிர வேறு யாரும் அங்கில்லை. பவன்ராம்க்கு கூடச் 'சோசியல் டிரிங்க்கிங்' பழக்கம் இருக்கிறது. ஆனால் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கு அந்த மாதிரி எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. நல்லொழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் அவனைச் சுட்டிக்காட்டலாம். அந்தளவிற்குப் பையன் அக்மார்க் நல்லவன். அப்படிப்பட்டவனையும் பெண்ணவள் மதுவை நாட வைத்திருந்தாள்.
"சத்யா, போதும்... இதுவே லிமிட் தாண்டிருச்சு." பவன்ராம் நண்பனை கிளப்ப முயன்றான்.
"நோ லிமிட் பவன்... நோ லிமிட்..." என்றவன் கையிலிருந்த மது கோப்பையை அப்படியே வாயில் சரித்தான்.
"இதுக்கு மேல குடிச்சா நல்லதுக்கு இல்லை சத்யா." பவன்ராம் அவனது கையிலிருந்த மது கோப்பையைப் பிடுங்கி தள்ளி வைக்க... சிம்மஹாத்ரி சத்யநாராயணா அங்கிருந்த மது பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் சரித்தான்.
"போச்சுடா..." பவன்ராம் தலையில் கை வைத்தான்.
அந்தப் பாட்டிலில் இருந்த மது அனைத்தையும் ஒரே மூச்சில் குடித்து முடித்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா அங்கு மேசையில் பளபளவென்று இருந்த திருமண அழைப்பிதழை கையில் எடுத்துப் பார்த்தான்.
"பாருடா பவன்... என்னோட பொம்மாயிக்குக் கல்யாணமாம். அதுவும் யார் கூட? ஜெய்பிரகாஷ் கூட... எனக்கு அடுத்துப் பிறந்த சின்னப் பையன் அவன்... அவன் கூட அவளுக்குக் கல்யாணமாம். அவனுக்கு முன்னாடி பிறந்த என்னை யாருமே கண்டுக்கலையேடா." சிம்மஹாத்ரி சத்யநாராயணா நண்பனிடம் புலம்பி தள்ளினான்.
பவன்ராம் நண்பனை பாவமாகப் பார்த்தான். ஒரு புறம் உயிராய் எண்ணியிருந்த காதலியை இழக்க போகும் வேதனை அவனைத் தாக்கியது என்றால்... இன்னொரு புறம் தன் உறவாய் எண்ணியிருந்த குடும்பத்தினர் காட்டிய வேறுபாடு அவனை வருத்தப்பட வைத்தது. எல்லாம் இருந்தும் அநாதையாய் நின்ற நண்பனை கண்டு அவனுக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.
"ப்ச், போனால் போகிறாள்டா... இவள் இல்லைன்னா இன்னொரு பெண்... விட்டு தள்ளு." பவன்ராம்க்கு ஆதிசக்தீஸ்வரி மீது அப்படியொரு கோபம் வந்தது.
"அப்படி விட முடியாம தானே குடிச்சிட்டு இருக்கேன். முடியலையேடா." அவன் மேலும் புலம்ப...
"என்னமோ புதுசா காதல் தோல்வி மாதிரி அலப்பறை விடுற... ஏற்கெனவே ரெண்டு பேரை காதலிச்சு இருக்கச் சத்யா. அவங்க உன்னை வேண்டாம்ன்னு தூக்கி போட்டதும் நீயும் அவங்களை வேண்டாம்ன்னு ஒதுங்கி வந்துட்டல்ல. இப்போ மட்டும் நீ ஏன் இவளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற? காலுக்கு உதவாத செருப்பைக் கழட்டி தூர எறி." பவன்ராம் கோபத்தோடு சொல்ல...
"ஏன்னா, என் பொம்மாயி சம்திங் ஸ்பெசல்டா." என்றவனது விழிகள் கலங்கி போனது. அதை நண்பனுக்குக் காட்டாது மறைத்துக் கொண்டான்.
"ஆனா அவள் உன்னை மனுசனா மதிக்கலையே." என்ற பவன்ராம் நண்பனது அலைப்பேசியை எடுத்து அதிலிருந்த குறுஞ்செய்தியை எடுத்து அவனிடமே காட்டினான்.
சற்று முன்னர்த் தான் ஆதிசக்தீஸ்வரியிடம் இருந்து அந்தக் குறுஞ்செய்தி வந்திருந்தது. 'விலகி போயிரு' என்ற வார்த்தைகளுடன்... அவன் கேட்ட 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' என்ற கேள்விக்கு அவளிடம் இருந்து வந்த பதில் இது... அந்த வார்த்தைகளைப் படித்த சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் மனதில் வலி எழுந்தது. நெஞ்சை நீவி விட்டு கொண்டவன்,
"கடைசியில் அவளும் மத்த பொண்ணுங்க மாதிரி மாறிட்டாள்ல. என் மேல் நம்பிக்கை இல்லாம பணத்துக்காக அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாள்ல. அப்போ அவள் என்னை உருகி உருகி காதலிச்சது எல்லாம் பொய்யா பவன்?" என்றவன் கோபத்தில் மது பாட்டிலை எடுத்து கண்ணாடி மேசை மீது ஓங்கி அடித்தான். பாட்டில் மட்டும் இல்லாது கண்ணாடி மேசையும் சேர்ந்து உடைந்து நொறுங்கியது.
"சத்யா..." பவன்ராம் நண்பனது கோபத்தைக் கண்டு திகைத்தான்.
"சிம்மன்னு கூப்பிடு பவன்..." என்ற நண்பனை கண்டு பவன்ராம்க்குப் பயம் வந்தது.
"வேண்டாம் சத்யா..." பவன்ராம் ஏதோ சொல்ல போக...
"சத்யா இல்லை. சிம்மன்... சிம்மன் மட்டுமே..." என்று அவன் கர்ஜிக்க... பவன்ராம் வாயை மூடி கொண்டான்.
"என்னைய என்ன கேனைன்னு நினைச்சிட்டாளா? அவளா வருவாளாம். காதலா அவளையே கொடுப்பாளாம். பிறகு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு டாட்டா காட்டிட்டு போவாளாமா? அப்படி நடக்க விட்டுருவேனா இந்தச் சிம்மன்... நான் யாருன்னு உனக்குக் காட்டுறேன்டி." சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆத்திரம் தாங்காது கத்தினான்.
"சொன்னால் கேளு சிம்மா... உன்னோட இன்னொரு பக்கத்தைத் தாங்கிக்கிற சக்தி அந்தப் பொண்ணுக்குக் கிடையாது. அமைதியா இரு. அவள் வாழ்க்கை அவளோட விருப்பம். நீ விட்டு விலகிரு." பவன்ராம் நண்பனுக்கு எடுத்துச் சொன்னான்.
"அவளுக்குன்னு தனி வாழ்க்கை கிடையாது. இனி அவளோட வாழ்க்கை இந்தச் சிம்மாவோட தான்." என்றவனைக் கண்டு பவன்ராம்க்கு கிலி பிடித்தது. நண்பன் எதையாவது செய்து பெண்ணவள் மனதினை காயப்படுத்தி விடக் கூடாதே என்கிற பயம் பவன்ராம்க்கு...
இருந்தாலும் நண்பனின் வார்த்தைகளில் விழி மூடி தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா பின்பு விழிகளைத் திறந்து நண்பனை பார்த்தவன், "லாஸ்ட் சான்ஸ்..." என்றவன் தனது அலைப்பேசி வாயிலாக ஆதிசக்தீஸ்வரிக்குத் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.
பவன்ராம் வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் நண்பனது அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டு இருந்தான். சில நிமிடங்களில் அவளிடம் இருந்து பதில் வந்தது. 'நோ' என்ற ஒற்றை வார்த்தையைத் தாங்கி...
"போதுமா?" என்று கேட்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா விழிகள் இரண்டும் ஆத்திரத்தில் சிவந்தது.
"அதே தான்டா நானும் சொல்றேன்... போதும்... அந்தப் பொண்ணை விட்டுரு."
"பணம் தான் காதலையும், கல்யாணத்தையும் நிர்ணயிக்கிறதுன்னா...?" என்று நிறுத்திய சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பவன்ராம் கேள்வியுடன் பார்த்தான்.
"அந்தப் பணம் பண்ணும் மேஜிக் என்னன்னு காட்ட வேண்டாமா?" என்று விழிகள் சிவந்த நண்பனை கண்டு பவன்ராம் தலையில் கை வைத்தான்.
"அதைப் பிறகு காட்டலாம். இப்போ நீ எழுந்திரு." பவன்ராம் நண்பனை அழைத்துக் கொண்டு அங்கிருந்த அவனது பிரத்யேக அறைக்குச் சென்றான்.
"சரிடா, குட்நைட்... எதை நினைச்சும் கவலைப்படாதே. மார்னிங் பார்க்கலாம்." பவன்ராம் நண்பனிடம் இருந்து விடைபெற்றுச் சென்றான்.
பவன்ராம் சென்ற பிறகும் உறங்காது சிவந்திருந்த விழிகளுடன் அப்படியே அமர்ந்து இருந்தான் சிம்மஹாத்ரி சத்யநாராயணா. அவனது மனக்கண்ணில் ஆதிசக்தீஸ்வரி புன்னகையுடன் வலம் வந்தாள். அவனோடு காதலோடு உறவாடினாள். இத்தனை நாட்களாக அவன் அவளோடு உறவாடியதை ஒருபோதும் நினைத்துப் பார்த்தது இல்லை. அவளது மோக அழைப்பு மட்டுமே அவனது காதுகளில் அவ்வப்போது ஒலிக்கும். அதுக்கே அவன் தடுமாறி விடுவான். எப்போது ஆதிசக்தீஸ்வரிக்குத் திருமணம் என்று கேள்விப்பட்டானோ! அப்போதிருந்து அவளோடு கூடிய கூடல் அடிக்கடி நினைவுக்கு வந்து அவனது உணர்வுகளைக் கண்டபடி தூண்டிவிட்டது. அவளால் மட்டுமே அவனது உணர்வுகளைத் தூண்ட முடியும் என்பதை இப்போது அவன் கண்டு கொண்டான். வேறு எந்தப் பெண்ணும் அவனது உணர்வுகளுடன் விளையாட முடியாது என்பதை இப்போது சில நாட்களாக அவன் புரிந்து கொண்டான். அவனுக்கு அவள் வேண்டும். அவள் மட்டுமே வேண்டும்.
"நான் நல்லவனா இருக்கிறது உனக்குப் பிடிக்க மாட்டேங்குதேடி. நான் என்ன செய்ய? என் குழந்தையை அழித்த உன் அம்மாவுக்கும், என் உணர்வுகளை மதிக்காத உனக்கும் நான் பாடம் எடுக்கலைன்னா நான் சிம்மஹாத்ரி சத்யநாராயணா இல்லைடி. நல்லவனான சத்யா உனக்கு அவ்வளவு லேசா போயிட்டான்ல. உன்னோட சத்யா எப்போவோ செத்து போயிட்டான். நீ ஜெய்யை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சியே அப்பவே சத்யா செத்து போயிட்டான். இப்போ இருக்கிறது சிம்மன் மட்டும் தான். அவனுக்குத் தோல்வியே தெரியாது. தோல்வியே கிடையாது. அவனுக்கு வெற்றி ஒண்ணு தான் இலக்கு. இப்போ என்னோட இலக்கு நீ மட்டும் தான்டி. வர்றேன்டி... வந்து தூக்கிறேன்டி உன்னை, என் ஸ்டைல்ல... அப்போ தான் நான் யாருன்னு உனக்குத் தெரியும்." என்றவன் கோபமாய்த் தனது மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான். அவனது விழிகளில் பழிவெறி மின்னியது.
ஒரு ஆண் எத்தனை தடவை தான் மண்டியிட முடியும்? ஒரு பெண்ணின் காதலுக்காக அவன் அதையும் செய்தானே! அவள் கால்களில் செருப்பாய் இருக்கக் கூடச் சித்தம் கொண்டானே. ஆனால் அவளோ அவனைக் குப்பையாய் எண்ணி ஒதுக்கி விட்டாளே! வலித்தது, அவனுக்கு மிகவும் வலித்தது. வலியை தாங்கி தாங்கி அவன் தன்னையே திடமாய்ச் செதுக்கி கொண்டான். காதலில் தோல்வி, திருமணத்தில் தோல்வி என்று இரண்டு முறை தோல்வி கண்டவன் தான் அவன்... இரண்டு பெண்களையும் விட்டு விலகி வந்தவன் தான் அவன். ஆனால் இந்தப் பெண்ணை விட்டு விலக முடியாதபடி அவளது காதல் அவனைக் கட்டியிழுத்தது. அவள் மட்டுமே வேண்டும் என்று அவனது மனம் பிடிவாதம் பிடித்தது. ஆனால் அந்தக் காதலையே கேள்விக்குறியாக்கி விட்டவளை அவனால் அவ்வளவு எளிதில் மன்னிக்க முடியவில்லை.
"வர்றேன்டி ஆதிசக்தீஸ்வரி... காத்திரு..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆத்திரமாய் அறை அதிர கத்தினான்.
***************************