All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.​

நிலா ஶ்ரீதரின் "உன்...
 
Notifications
Clear all

நிலா ஶ்ரீதரின் "உன்னில் சரணடைந்தேன்...!" - கதை திரி

Page 3 / 3
 

(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  
அத்தியாயம் - 16
 
என்ன தான் மகன் அவளை பார்க்க கூடாது, அவளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று சொல்லியிருந்தாலும் கனியால் எப்படி மருமகளை பார்க்காமல் இருக்கமுடியும். இப்போது அவள் எப்படி இருக்கிறாள் என்ற நினைப்பிலேயே இரவை கழித்தவர் அடுத்த நாள் காலை அனைத்து வேலைகளையும் நேரத்திலே முடித்துக் கொண்டு சரண் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக காத்திருந்தார்.
 
சரணும் கிளம்பியதும் தான் வேலை செய்யும் இடத்திற்கு சென்று, வேலைகளை நேரத்திலே முடித்துவிட்டவர், நேராக மகனின் வீட்டிற்கு தான் சென்றார்.
 
அங்கு அழைப்பு மணியோசை கேட்டதும் கணவனிடம் தான் விசை அட்டை இருக்குமே, அவன் தானே திறந்துக் கொண்டு வந்துவிடுவான் என்பதெல்லாம் மறந்து, அதுவரை அவன் விட்டு சென்ற இடத்திலேயே இரவெல்லாம் வெறும் தரையில் படுத்திருந்தவள் ஓடி வந்து ஆவலாக கதவை திறக்க, வாசலில் கனி தான் நின்றிருந்தார்.
 
அவரை பார்த்ததும் நேற்றிலிருந்து தேக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் பொங்கி எழ, “அத்தை… சரண் என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்” என்று விசும்பியவள், அவர் தோளில் சாய்ந்து கதறி விட்டாள்.
 
மருமகளின் கண்ணீரில் தானும் கலங்கி விட்டவர் அவளை கை தாங்கலாய் அழைத்து வந்து சோபாவில் அமர்த்தினார். அவள் அப்போதும் அவர் மீது சாய்ந்து அழுது துடித்தாள்.
 
“அழாத வரு மா” என்று மருமகளை தேற்றி, அவள் அழுகை சற்று ஓய்ந்ததும் அவளுக்கு தண்ணீர் எடுத்து வர சமையலறைக்கு செல்ல, அங்கே நேற்று சமைத்த உணவெல்லாம் உண்ணாமல் வீணாகி போயிருந்தது.
 
முதலில் வருவிற்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவர், “வரு, என்னம்மா ஆச்சு? சரணை கேட்டாலும் வாயையே திறக்க மாட்டறான். உங்களுக்குள்ள என்னமா பிரச்சனை?” என்று தவிப்புடன் கேட்டார்.
 
அவனே இதை வீட்டில் சொல்லாத போது அவள் மட்டும் எப்படி சொல்வாள். அவர்களை காயப்படுத்த வேண்டாமென்று தான் கணவன் இதை மறைத்திருப்பான் என்று சரியாக அனுமானித்தவள் ஒன்றும் பேசாமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.
 
மருமகளிடம் வெவ்வேறு விதமாக கேட்டு பார்த்து ஓய்ந்த கனி, அவளது சோர்ந்த முகத்தை கருத்தில் கொண்டு முதலில் அவளை சாப்பிட வைக்க எண்ணினார். அங்கே வீணான உணவை எடுத்து கொட்டி விட்டு, புதிதாக உணவு தயார் செய்து எடுத்து வந்தார்.
 
அவள் வேண்டாம் என்று மறுத்தும் கனி அவளுக்கு உணவை ஊட்ட, ஒவ்வொரு கவளத்திற்கு இடையேயும் “சரண் சாப்பிட்டானா அத்தை.. ஆபீஸ் போயிருக்கானா.. நைட் தூங்கினானா.. கைல அடிப்பட்டுச்சே, ஹாஸ்பிடல் போனானா.. அவனுக்கு என்னை பிடிக்கலல.. நான் வேண்டாம்ல அவனுக்கு..” என்று கணவனை பற்றியே பிதற்றிக் கொண்டிருந்தவளை எப்படியோ சமாதானப்படுத்தி உணவை ஊட்டிவிட்டவர், அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வந்து அவள் எதிரே அமர்ந்தார்.
 
மருமகளை தன் மடியில் படுக்க வைத்து, அவள் தலையை வருடி கொடுத்துக் கொண்டே “என்னாச்சும்மா வரு.. எதாவது சொன்னா தான தெரியும். அவன் அங்கயே தங்கிடுற அளவுக்கு அப்படி என்னம்மா நடந்துச்சு?” என்று நடந்ததை அறிய மீண்டும் அவளிடம் கேள்வி எழுப்பினார்.
 
வருவோ எதற்கும் வாய் திறக்காமல் அமைதியாக இருக்க.. “நீ அத்தை கிட்ட சொல்லு. நான் அவனை கேக்கறேன்” என்று அனைத்து விதத்திலும் முயற்சி செய்து தோற்றவர், இனி இவளிடம் கேட்டு பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து, மாலை மகனிடம் மீண்டும் பேசி பார்க்கலாம் என்ற தீர்மானத்துடன், வருவிற்கு இரவு உணவும் தயார் செய்து வைத்துவிட்டே தன் வேலையை பார்க்க சென்றார்.
 
இரவு, நேரம் தாழ்ந்தே வீட்டிற்கு வந்த சரணை வந்ததும் வராததுமாக நிறுத்தி, என்ன பிரச்சனை என்று சொல், எதற்கும் பிரிவு தீர்வாகாது, அனைத்தையும் பேசி தீர்த்து கொள், இப்போதே வீட்டிற்கு செல் என்று எவ்வளவோ அறிவுறுத்தியும் அவன் பிடி கொடுப்பதாக இல்லை.
 
தாயையும் எதிர்பார்க்காது தானே உணவை எடுத்து போட்டு சாப்பிட்டவன் தன் பாய், தலையணையுடன் மாடியில் படுப்பதாக சொல்லிவிட்டு சென்றுவிட, இதிலும் தோல்வியே கண்டார்.
 
அனைத்து கதவுகளும் மூடிவிட்டது போல் உணர்ந்த கனி, தன் பர்சில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு மகளிடம் வந்தவர் “சுசி.. இது அண்ணன் நம்பர்.. எதோ வாட்ஸாப்ல ஃபோன் போட்டா காசில்லாம பேசிக்கலாம்னு சொல்லுச்சு. கொஞ்சம் போட்டுக் கொடேன்” அண்ணன் வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு ஓர் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் அவளிடம் அக்காகிதத்தை நீட்டினார்.
 
அவளும் தாய் சொன்னது போல் மாமனின் எண்ணிற்கு அழைத்து தர, அவர் அழைப்பை ஏற்றதும் “அண்ணா.. இங்க என்னென்னமோ நடந்து போச்சு. சரண் ரெண்டு நாளா இங்க தான் இருக்கான். இவனும் எதுவும் சொல்லமாட்டறான். வருவும் வாய் திறக்க மாட்டேங்கிது” என்று விசும்பிக் கொண்டே ஆரம்பித்தவர், நேற்றிலிருந்து நடந்த அனைத்தையும் அழுகையினூடே சொல்லிவிட்டு “நீ வா ண்ணா.. நீ வந்தா தான் எல்லாம் சரியாகும்” என்று அண்ணனை இங்கு அழைத்தார்.
 
விஷயத்தை கேட்டு நெற்றியை நீவிய ரகு, “நீ கவலைபடாத. சின்ன பசங்க சண்டையா தான் இருக்கும். சரி பண்ணிடலாம். நான் கிளம்பி வரேன். நீ பயப்படாம இரு” மனதிற்கு எதுவோ தவறாக பட்டாலும் தங்கையிடம் அதை காட்டி கொள்ளாமல் பேசி வைத்தார்.
 
உடனே ரகு மகளுக்கு அழைக்க, அவள் அலைபேசி அணைக்கப் பட்டிருப்பதாக தகவல் சொல்லவே, இன்னும் பதறிப் போனவர் கிடைத்த விமானத்தில் இந்தியா புறப்பட்டார்.
 
நேற்று போல் இன்றும் அலுவலகத்திற்கு செல்லாத வரு, எதுவும் பிடிக்காது வாழ்வே மாயமாக சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள். இரண்டு நாட்கள் முன்பு வரை தன்னை பாப்பா, பாப்பா என்று ஆராதித்தவன் இந்த இரு தினங்களாக தான் என்ன செய்கிறோம், என்ன சாப்பிட்டோம் என்று கூட கண்டு கொள்ளாமல் இருக்க தொடங்கிவிட்டானே என்று நினைக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது.
 
ஒவ்வொரு முறை அழைப்பு மணி அலறும் சத்தம் கேட்கும் போதும் கணவனோ என்ற ஆவலோடு கதவை திறந்து பார்க்க, அங்கே பால் கொண்டு வந்து தருபவரையும், செய்தித்தாள் போடும் இளைஞனையும் பார்க்கும் போதெல்லாம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
 
அவனோடு இருந்த நினைவுகளில் மனம் உழன்றுக் கொண்டிருக்க, அப்போது அழைப்பு மணி ஒலிக்கும் ஓசை கேட்டதும் இம்முறையும் அதே ஆர்வத்துடன் ஓடி சென்று கதவை திறக்க, வாசலில் ரகு நின்றிருந்தார்.
 
“வரு.. எப்படிடா இருக்க?” அவர் மகளை கேட்டுக் கொண்டிருக்க, அவளோ அவனில்லை என்று உதட்டை பிதுக்கியவள் தந்தையை சிறிதும் கண்டு கொள்ளாது அமைதியாக சோபாவில் சென்று அமர்ந்துவிட்டாள்.
 
தானே உள்ளே வந்தவர் “வருமா.. என்னம்மா ஆச்சு? அப்பா மேல இன்னும் கோபம் போகலையா?” மகளின் கன்னம் தாங்கி கேட்க, நீர் குளம் கட்டியிருந்த கண்களோடு இல்லையென்று தலையாட்டினாள்.
 
“அப்புறம் ஏன்டா அப்பாவை பார்த்ததும் ஒரு வார்த்தை கூட பேசாம உள்ள வந்துட்ட?” என்று அவர் மகளை கேட்டது தான் தாமதம், இரு நாட்களாக அவன் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்த வலியில் அழுதுக் கொண்டே ரகுவரனை கட்டிக் கொண்டவள்
 
“டாடி.. சரண் போய்ட்டான் டாடி.. அவனுக்கு என்னை பிடிக்கலையாம்.. என்னை அவன் லவ் பண்ணலையாம் டாடி. என்னை திட்டிட்டு போய்ட்டான்” தந்தையின் மார்பில் முகம் புதைத்து கதறிவிட்டாள்.
 
வரு இதுபோல் அழுது ரகு பார்த்ததே இல்லை. சொல்லபோனால் இதுவரை அவள் எதற்கும் கலங்கியதே இல்லை. ரகுவும் மைதிலியுமே தங்கள் மக்களை ஒரு குறையும் இல்லாமலே வளர்த்திருக்க, அதிலும் எதையும் எந்தவொரு பயமுமின்றி கையாளும் வருவின் குணத்திற்கு, அவளுக்கு அழ தெரியுமா என்று தான் ரகு முதலில் பார்த்தார். 
 
அதுவும் வலியில் துடித்து அழும் மகளின் கண்ணீரை கண்டவரது நெஞ்சில் குருதி வழிய, அவளை நிமிர்த்தி அவள் கண்களை துடைத்துவிட்டவர் “சரண் ஏன்ம்மா போனான்? கனி எல்லாம் சொன்னா மா. உனக்கும் சரணுக்கும் என்னமா பிரச்சனை? இதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒற்றுமையா தானே இருந்தீங்க” என்று அவளை விசாரித்ததும் வர்ணிகாவிற்கு இப்போது முகமே மாறிபோனது.
 
“அது டேட்.. ம..னு.. மனு..” என்று வார்த்தைகள் வராது அவள் தயங்கி நிறுத்த
 
“மனுவை கல்யாணத்தன்னைக்கு நீதான் அனுப்பி வச்சேனு சரணுக்கு தெரிஞ்சிடுச்சா?” என்றார் மகளை கூர்மையாக பார்த்து.
 
அதில் வரு தந்தையை அதிர்ந்துப் பார்க்க, “என் பையன் என்ன பண்ணுவான். என் பொண்ணால என்ன பண்ண முடியும்னு எனக்கு நல்லாவே தெரியும் வரு. மனு மெசேஜ் பார்த்ததும், அவன் லவ் பண்றது உனக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு, அதான் அவனை அனுப்பி வச்சிருக்கேனு புரிஞ்சது மா” என்று நடந்ததை நேரில் பார்த்தவர் போல் சொல்லும் தன் தந்தையை வியந்துப் பார்த்தாள் வர்ணிகா.
 
“இப்போ அது எப்படிம்மா சரணுக்கு தெரிஞ்சது. நீ தான் சொன்னியா?” என்றும் கேட்க, இல்லையென்று தலையாட்டிய வரு நடந்த அனைத்தையும் கூறினாள்.
 
அதை கேட்ட ரகு “ஹி இஸ் சச் ஆன் இடியட்” என்று மகனை எண்ணி பற்களை நறநறத்தார்.
 
அதோடு தன் கைபேசியை எடுத்து மகனுக்கு அழைத்தவர் “ஹவ் கம் யு பிகேம் சச் எ செல்பிஷ் மனு? உன் தங்கச்சிகிட்ட பணம் கேட்டு அவளை டிரபிள் பண்ணிருக்க. இங்க உன்னால என்னலாம் நடந்திடுச்சுனு தெரியுமா. உன் தங்கச்சி வாழ்க்கையையே அழிச்சிட்டியேடா. இப்போ என்ன, நீ திரும்ப நம்ப பிசினஸ்ல சேரனும். நம்ப வீட்டுலயும் இருக்கணும். அதானே. தாராளமா வா. உன் ப்ராப்ளம் சால்வ்ட். இப்ப நம்ம வரு லைஃப்க்கு என்ன பண்ற போற. இடியட்.. எதையும் யோசிச்சி செய்ய மாட்டியா” என்று மகனிடம் கோபமாக பொரிந்துவிட்டு அழைப்பை துண்டித்தார்.
 
ரகு மகளை திரும்பி பார்க்க அவள் கவலையே வடிவாக அமர்ந்திருந்தாள்.
 
“இது மாதிரி ப்ராப்ளம் வர கூடாதுனு தான் அன்னைக்கு சரண் மனு கூட எந்த கான்டாக்ட்டும் வச்சிக்க கூடாதுனு கண்டிஷன் போட்டப்போ நீ எதையும் சொல்றதுக்கு முன்னாடி நான் பதில் சொன்னேன். அப்படியிருந்தும் என்னையும் மதிக்காம, சரணையும் மதிக்காம மனுகிட்ட பேசினியா. நான் என் பசங்கள நல்லா தானே வளர்த்தேன். நான் என் அப்பாவை ஏமாத்தினேன். என் பசங்க என்னை ஏமாத்திட்டாங்க” கோபமாக ஆரம்பித்தவர் விரக்தியாக முடித்தார்.
 
அதற்கு இல்லையென்று தலையாட்டியவள் “சரணோட நேச்சர் தெரிஞ்சி தான் அவன்கிட்ட இத சொல்லனும்னு நிறைய டைம் திங்க் பண்ணி, லேட்டர் ஐ டிராப்ட் தட் ஐடியா. எனக்கு சரணும் வேணும், மனுவும் வேணும். யாராவது ஒருத்தரை என்னால எப்படி டேட் சூஸ் பண்ணமுடியும்” என்று ஆற்றாமையாக தந்தையை பார்த்தாள்.
 
“சூஸ் பண்ணி தான் ஆகணும். நீ செஞ்ச காரியத்தால உன்னால யாராவது ஒருத்தரை தான் சூஸ் பண்ணமுடியும். அது சரணா இருக்கணும்னு தான் நான் விரும்புறேன். யு நோ, வாட் யு டிட் வாஸ் அன் அன்ஃபர்கெட்டபிள் மிஸ்டேக். ஒரு கல்யாணத்தை நிறுத்துறது அவ்ளோ ஈஸினு நினைச்சியா. ஒரு பொண்ணோட வாழ்க்கை. அதுக்கு அப்புறம் அந்த பொண்ணை யார் கட்டிப்பா. நல்லவேளை பார்த்திபன் தானே வந்து சுசியை கல்யாணம் பண்ணிக்கிட்டார். இல்ல, குடும்பத்தோட தற்கொலை தான் பண்ணிக்கணும். பார்த்திபன் சுசியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்போ சரண் அவர் காலுலயே விழுந்துட்டான்” மகளிடம் ஆவேசமாக சத்தமிட்டார் ரகு.
 
தந்தை இறுதியாக சொன்னதை கேட்ட வரு, அன்று உணராத தன் குடும்பத்தின் வேதனையை இன்று உணர்ந்தாள். அதுவும் தன்னவன் பார்த்திபனிடம் மண்டியிட்டிருக்கிறான் என்று கேட்ட நொடி அவனுக்கு தான் செய்த துரோகம் புரிந்தது.
 
“கிளம்பு வரு.. நாம சரண்கிட்ட பேசலாம்” ரகுவரன் மகளை அழைக்க “இல்ல டேட், நான் வரல. நாம லண்டன் கிளம்பலாம்” கண்களில் உறுதியோடு சொன்னாள்.
 
“வரு, என்ன பேசற”
 
“என் சரண் அன்னைக்கு அழுதான் டேட். அதை பார்த்து எனக்குள்ள என்னென்னமோ பண்ணிடுச்சு. அதான், நாம செஞ்ச தப்புக்கு இந்த கல்யாணம் பிராயசித்தமா இருக்கட்டும்னு நீங்க சொன்னப்போ நான் அதை அக்ஸ்செப்ட் பண்ணிக்கிட்டேன். இப்பவும் என்னால என் சரண் அழுதான். என் மேல கோவப்பட்டான் தான். ஹவ்எவர், ஐ குட் சீ தி பெயின் இன் ஹிஸ் ஐஸ். திரும்ப அவன் முன்னாடி நின்னு அவனை கஷ்டப்படுத்த மாட்டேன்”
 
“வரு மா”
 
“நேத்தே ஜாபை ரிசைன் பண்ணிட்டேன். இப்போ என் சரண், பார்த்தி அண்ணா காலுல விழுந்தான்னு சொன்னதுக்கு அப்புறம் என் டெசிஷன் கரெக்ட்னு புரிஞ்சது. ஆபீஸ்ல காம்பென்சேஷன் கேக்கறாங்க. அத மட்டும் நீங்க கொடுத்துட்டீங்கன்னா நாம கிளம்பிடலாம் டேட்” கண்ணீரை துடைத்துக் கொண்டு திடமாக சொன்னாள்.
 
இதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாத ரகு, மகள் சொன்ன அனைத்தையும் செய்து முடித்தவர் விமானநிலையத்திற்கு செல்லும் முன் தங்கையின் வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றார்.
தடம் மாறி சரணின் வீடிருக்கும் வழியில் வண்டி பயணித்துக் கொண்டிருக்க, தந்தையை குழப்பமாக திரும்பி பார்த்தாள் வரு.
 
“நான் பொண்ண பெத்தவன் டா. நீ சொன்னேனு உன்னை அப்படியே கூட்டிட்டு போறது முறை கிடையாது. சரண்கிட்ட பேசி பார்ப்போம்” என்றார்.
 
சரணின் வீடு வந்ததும் இறங்கிய ரகு குனிந்து மகளை பார்க்க, கைகளை பிசைந்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் “இல்ல டேட், நான் வரல. நீங்க போயிட்டு வாங்க” என்றுவிட்டாள்.
 
அப்போதே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்த சரண் தன்னை சுத்தம் செய்துக் கொண்டு உடை மாற்றியிருந்தான். ரகுவரன் உள்ளே வருவதை பார்த்ததும், கனி “அண்ணா..” என்று அழுதுக் கொண்டே ஓட, தாயை முறைத்துக் கொண்டே வெளியே வந்தான் சரண்.
 
மாமனை கண்டதும் அவன் முகம் இறுகி நிற்க “சரண், வரு பண்ணது தப்பு இல்லனு சொல்லமாட்டேன். அவ அந்த விஷயத்தோட வீரியம் தெரியாம பண்ணிட்டா..” ரகு சரணிடம் மகளுக்காக பேச துவங்க
 
அவரை கை நீட்டி தடுத்தவன் “எனக்கு வருனு யாரையும் தெரியாது” என்றான்.
 
“என்னப்பா இப்படி பேசற. என் பொண்ணுங்கிறத தாண்டி இப்ப அவ உன் பொண்டாட்டி. என்னை விட உனக்கு தான்ப்பா அவ மேல அதிக உரிமை இருக்கு” ஒரு தந்தையாக மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவனுக்கு நிதானமாக எடுத்து சொன்னார்.
 
“பொண்டாட்டி..” என்று பல்லை கடித்தவன் “உங்க பொண்ணு என்னை ஏமாத்தி இருக்கா. எனக்கு மட்டுமில்ல, என் குடும்பத்துக்கே துரோகம் பண்ணிருக்கா. அவ செஞ்சத, இன்னும் என் வீட்டு ஆளுங்க கிட்ட கூட சொல்ல முடியாம தவிச்சிட்டு இருக்கேன்” என்று வார்த்தைகளை மென்று துப்பினான்.
 
மகன் சொன்னதை கேட்டு பதறிவிட்ட கனி ‘மகனுக்கு தெரிந்துவிட்டதா’ என்று அதிர்ந்து அண்ணனை பார்க்க, அவரும் ஆமென்று கண்களை மூடி திறந்தார்.
 
அண்ணனுக்கும் தங்கைக்குமான பேச்சுகளற்ற விழி மொழியாயினும் சரண் அதை கவனித்தேவிட்டான்.
 
“ச்சீ..” என்று தலையில் அடித்துக் கொண்டவன் “அப்பா, பையன், பொண்ணுன்னு குடும்பமே பித்தலாட்டக்காரங்களா இருக்கீங்க. இதுல உங்க பாசத்தை முன்ன நிறுத்தி எங்க அம்மாவையும் துணை போக வச்சிருக்கீங்க. அவங்களும் பெத்த பொண்ணோட வாழ்க்கை பாழா போயிருக்குமேனும் பார்க்காம உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க” என்று ஆதங்கத்தில் கத்தினான்.
 
அதை கேட்ட கனி திருதிருவென விழிக்க, சுசி தாயையும் தம்பியையும் புரியாமல் பார்த்திருந்தாள். இதில் பாலனும் திகைப்பார் என்று பார்த்தால் அவரோ தானே மகனுக்கு முன் வந்து நின்றார்.
 
ஆம், பாலன் என்றைக்கு கனிக்கு பின் இல்லாமல் இருந்திருக்கிறார். மனைவியை சொன்னதும் பொங்கி எழுந்தவர் “சரண், மச்சான் கல்யாணம் முடிஞ்ச மூணாம் நாளே எல்லாத்தையும் சொல்லி, மருமக பண்ண தப்புக்கு மன்னிப்பும் கேட்டார். நான் தான் நீ கோவப்படுவனு உனக்கு தெரிய வேண்டாம்னு சொன்னேன்” என்று குற்றத்தையும் ஒத்து கொண்டார்.
 
தந்தை பேசியதை கேட்ட சரணுக்கு அழகிய குருவி கூடாய் இருந்த தன் குடும்பத்தை இவர்களது குடும்பம் எப்படியெல்லாம் ஆட்டி வைத்திருக்கிறது என்று ரகுவின் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் ஆத்திரம் கிளம்பியது. அதேநேரம் “இங்க என்னம்மா நடக்குது? என்ன, என் வாழ்க்கை பாழாகியிருக்கும். அம்மாவும், அப்பாவும் எத சரண் நம்மகிட்ட இருந்து மறைச்சாங்க” என்று சுசி பதைபதைத்து கேட்க..
 
சற்றும் தாமதிக்காது அக்காவை அணைத்துக் கொண்டவன் “என்னை மன்னிச்சிடு சுசி. எனக்கு தெரியாமலே உன் வாழ்கையை அழிக்க பார்த்தவளை கல்யாணம் பண்ணி, அவளோட ஒரு வருஷம் வாழ்ந்தும் இருக்கேனே. எல்லாத்துக்கும் அவ தான் சுசி காரணம்..” என்று கண்ணீரோடு அனைத்தும் சொல்லியிருந்தான்.
 
அதை கேட்ட சுசி அதிர்ச்சியில் வாயடைத்து போக, கனியும் பாலனும் கவலையாக நின்றிருந்தனர். இனி சரணிடம் பேசி பயனில்லை என்பதை புரிந்த ரகு, கலங்கிய மனதோடு தங்கையிடம் வந்து “கனி, வரு கார்ல தான் இருக்கா. லண்டனுக்கே திரும்ப போயிடலாம்னு ஒத்த காலுல நிக்கறா மா” என்று மகளின் வாழ்க்கையை குறித்த வேதனையில் சொல்ல, அதை கேட்ட சரணுக்கும் மனதை சுருக்கென்று தைக்க தான் செய்தது.
 
இருந்தும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இறுக்கமாக நிற்க, “வரு வெளில தான் இருக்கா?” என்று கேட்ட கனி, மருமகளை அழைத்து வர வாசலை நோக்கி ஓட
 
“அம்மா” கணீரென ஒற்றை குரல் கொடுத்தான் சரண். அதில் வாய் பொத்தி அழுதுக் கொண்டே தான் இருந்த இடத்திலே மீண்டும் வந்து அமைதியாக நின்றுக் கொண்டார் கனி.
 
தங்கையின் செயலை ரகு அதிர்ந்து பார்க்க, கண்களில் கர்வத்தோடு மாமனாரை பார்த்தவன் “இனி எங்க அம்மா இந்த விஷயத்துல உங்களுக்கு துணையா நிற்க மாட்டாங்க. அவங்களுக்கு தெரியும், அப்படி அவங்க தலையிட்டா உங்க பொண்ணுக்கு மட்டுமில்ல, அவங்களுக்கும் நான் இருக்கமாட்டேன்னு. உங்க பொண்ணு எங்க போனாலும் எனக்கு அதப்பத்தி கவலை இல்ல. ஏன்னா, எனக்கு அவ வேண்டாம்” என்று ஆணித்தரமாக சரண் சொல்ல, கனி தன் அண்ணனை பார்க்கமுடியாமல் தலை குனிந்துக் கொண்டார்.
 
மகளின் வாழ்க்கை விஷயத்தில் தோற்று போன தந்தையாக கலங்கிய கண்களோடு அவ்வீட்டை விட்டு வெளியேறினார் ரகுவரன்.
 
 
தொடரும்...

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  
அத்தியாயம் - 17
 
தன் துணிமணிகளை எடுக்க அலுவலகத்திலிருந்து அவர்கள் இருந்த வீட்டிற்கு சென்றிருந்தான் சரண்.
 
அங்கே அவர்கள் அறையில் அவள் உடமையென்று எதுவுமில்லை. அனைத்தையும் எடுத்துக் கொண்டே கிளம்பியிருந்தவள், தன் கரடி பொம்மையை மட்டும் விட்டுவிட்டு சென்று இருந்தாள்.
 
அவனில்லாது இனி தனக்கு நிம்மதியும் கிடையாது, நிம்மதியான உறக்கமும் கிடையாது என்பதை உணர்ந்தே விட்டுவிட்டு சென்றிருந்தாள் வரு.
 
அவனுக்கோ, அவளது உடமைகளற்ற அலமாரியை பார்த்த போது, சில தினங்கள் வேடந்தாங்கல் வரும் வெளிநாட்டு பறவையை போல், தன் வாழ்வில் வந்து அனைத்தையும் மாற்றி அமைத்துவிட்டு பறந்துவிட்டாள் என்று மனது பிசைந்தது. அங்கிருந்த பொம்மையை எடுத்து அணைத்துக் கொண்டவன் தன் பூனை குட்டியின் ஸ்பரிசத்தை அதில் உணர்ந்தான்.
 
சேயாய் அவனிடம் உணவு கேட்கும் நேரம், பாவையாய் தன்னை சீண்டி இன்பம் கொடுத்து இன்பத்தை பெறும் நேரம், தோழியாய் தன் முன்னேற்றத்திற்கு யோசித்து அறிவுரை கூறும் நேரம் என்று அவளுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் அவன் கண்முன் வந்து கண்கள் கலங்கியது.
 
அன்பை காட்டி தன்னை வதைக்கும் சக்தி அவள் ஒருத்திக்கு மட்டுமே என்று வெற்று புன்னைகையை சிந்திக் கொண்டே கண்ணீரை துடைத்தவன், தன் உடமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
 
அன்றிரவு வீட்டிற்கு வந்த சரண் யாருடனும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இரவு உணவையும் வேண்டாமென்று சொல்லிவிட்டு அறைக்குள் வந்தவன், கரத்தை தலையணையாக்கி தரையில் படுத்து, விட்டத்தை வெறித்திருந்தான். அவள் கொடுத்து விட்டு போன வெறுமையில் மனமது உழல, கண்களிலிருந்து கண்ணீர் தாமாக வழிந்துக் கொண்டிருந்தது.
 
இதற்கு மேலும் விட்டால், தன்னை கொன்று திண்ணாமல் விடமாட்டாள் என்று வெளியே எழுந்து வந்தால், அங்கே தாயிடம் பாலை குடித்துவிட்டு, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் உறக்கத்திலும் சிரித்துக் கொண்டே உறங்கியிருந்தான் அவனது சேம்ப்.
 
இது போல் குழந்தையாகவே இருந்து விட்டிருந்தால், கவலைகள் ஏது, வலிகள் ஏது, வேதனைகள் ஏது, ஏமாற்றங்கள் தான் ஏது என்று எண்ணிக் கொண்டவன், பூ பந்து போல் குழந்தையை கையில் ஏந்தி வந்து கட்டிலில் படுக்க வைத்து, தானும் அதற்கு வலிக்காதவாறு அணைத்து படுத்துக் கொண்டான்.
 
சிறிது நேரத்தில் அறையின் உள்ளே வந்தாள் சுசி. அங்கே சரண் நிலவனை அணைத்தாற்போல் படுத்திருக்க, அவனின் கண்ணிலிருந்து கண்ணீர் இறங்கி மூக்கு வழியாக வழிந்திருந்தது. அதை துடைக்கவும் தோன்றாமல் கண் மூடி படுத்திருக்கும் தம்பியை கண்டு தானும் கலங்கிப் போனாள்.
 
அவனருகில் சென்று தம்பியின் தலையை வருடி கொடுக்க, அந்த தொடுதலில் திரும்பி பார்த்த சரண், அக்கா நின்றிருப்பதை கண்டு கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்தான்.
 
அவளும் அவனருகில் அமர்ந்தவள் “மாமா வருவை கூட்டிட்டு வந்தாரு தான. அது மேல இவ்ளோ அன்பை வச்சிக்கிட்டு எதுக்கு ஊருக்கு போக விட்ட” என்று கேட்க, அமைதியாக மெத்தையை பார்த்திருந்தான்.
 
“உங்களை பொறுத்தவரைக்கும் ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருந்தீங்க. அப்புறம் எதுக்கு எப்பவோ நின்ன கல்யாணத்தை மனசுல போட்டு உன்னையும் கஷ்டப்படுத்தி, வருவையும் கஷ்டப்படுத்தற”
 
“அவளுக்கு தெரியும் என் அக்கா எனக்கு அம்மா மாதிரின்னு, அப்படியிருந்தும் ஏமாத்திட்டா. நம்ப குடும்பத்துக்கும் துரோகம் பண்ணிட்டா” குழந்தை அருகில் உறங்குவதால் தாழ்ந்த குரலில் சொன்னாலும் அவனது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.
 
“வரு அத செஞ்சப்போ அதுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க போறோம்னு தெரியாது சரண். தான் அண்ணன் வாழ்க்கையை காப்பாத்த அப்படி செஞ்சிடுச்சு. உன் பொண்டாட்டியா ஆனதுல இருந்து உன் மேலயும் நம்ப குடும்பத்து மேலயும் அன்பா தான இருந்துச்சு” தம்பிக்கு புரியவைக்க முயற்சி செய்தாள் சுசி.
 
அவனோ “ஒரு வருஷத்துக்கு மேல ஒண்ணா தான இருந்தோம், சொல்லனும்னு அவளுக்கு தோணலல. என் அக்கா கல்யாணத்தை நிறுத்தினவ கூட வாழுறது எனக்கு எவ்ளோ பெரிய தண்டனைனு கூட அவ புரிஞ்சிக்கல” என்று விடாக்கண்டனாக மனைவியின் தவறை எடுத்து கூறினான்.
 
“கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை நேசிக்க ஆரம்பிச்சிட்டு இருக்கும். அதான், உன்னை இழந்திட கூடாதுனு சொல்லிருக்காது. சரி, இத வரு உங்கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப?”
 
“இப்போ செஞ்சத அப்போ செஞ்சிருப்பேன்” என்றான் நிர்தாட்சயண்யமாய்.
 
சுசி தம்பியை ஆற்றாமையாக பார்க்க “வலிக்குது சுசி. இனி அவ தான்னு வாழ்ந்திட்டு இருந்தப்போ, அவ கொடுத்த வலி பச்சை மரத்துல ஆணி அடிச்ச மாதிரி ஆழமா பதிஞ்சிடுச்சு” என்று கண்கள் கலங்கினான்.
 
அவன் கண்ணீரை துடைத்தவள், அவனை மடியில் படுக்க வைத்து “தப்பு பண்ணாத மனுஷங்களே இல்ல சரண். என் வாழ்க்கை கெட்டிருந்தா, நீ கோவப்படுறதுல அர்த்தம் இருக்கு. நான் இப்போ நல்லா தான இருக்கேன். மனோ மாமாவை கட்டியிருந்தாலும் உங்கள எல்லாம் பிரிஞ்சி தான் இருந்திருக்கணும். அந்த வாழ்க்கை எனக்கு சிறப்பா இருந்திருக்குமானும் தெரியாது. இப்போ உங்க மாமா என்னையும் நம்ப நிலவனையும் உள்ளங்கையில வச்சி தாங்கறார்” என்று தம்பியின் தலை கோதிக் கொண்டே சொன்னவள்,
 
“என்னை பத்தி யோசிச்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்காத. எனக்கு நீயும் வருவும் சந்தோஷமா இருக்கணும். வருவுக்கு ஃபோன் போட்டு பேசு. அத இங்க வரச்சொல்லு. என் மனசு சொல்லுது, அது உன் வார்த்தைக்காக தான் காத்துட்டு இருக்கும்” என்றும் அறிவுறித்தினாள்.
 
முதலில் தன் கண்ணீரை ஒன்றிரண்டு முறை துடைத்தவன் அக்கா பேசுவதை அமைதியாக கேட்டிருந்தது போல் தான் இருந்தது. பேச்சு முடிந்து வெகுநேரமாகியும் தம்பியிடம் இருந்து எந்த பதிலும் வராதிருக்க, அவனை குனிந்து பார்த்தால் நிலவனின் பிஞ்சு விரல்களை பிடித்துக் கொண்டு உறங்கியிருந்தான் சரண்.
 
அவனது சோர்ந்த முகத்தை பார்த்தவள், இப்படி உறக்கமில்லாமல் தவிக்கிறானே என்று கலங்கி விட்டாள். கண்ணீரை துடைத்துக் கொண்டே நிமிர, வாசலில் கனி புடவை முந்தானையில் வாய் பொத்தி அழுதுக் கொண்டு நின்றிருந்தார்.
 
தம்பியின் உறக்கம் கலையாது அவனை தலையணையில் படுக்க வைத்தவள் வெளியே வந்து கதவை மெதுவாக சாற்றினாள்.
 
அந்த சிறிய வீட்டில், வெளியே பேசினால் உள்ளே கேட்கும். அதனால் தாயை கையோடு இழுத்துக் கொண்டு அவர்கள் சிறு வயது முதல் வளர்ந்த மேகலா அத்தை வீட்டிற்கு வந்தாள் சுசி.
 
“இப்போ உனக்கு சந்தோஷமா? அண்ணன் அண்ணன்னு சொல்லி என் தம்பி வாழ்க்கையை ஒரே அடியா அழிச்சிட்ட” என்று தாயிடம் சீறினாள்.
 
“ஹேய் சுசி, என்ன பேசுற.. அவ உன் அம்மாடி” என்று குறுக்கே வந்தார் மேகலா.
 
“நீங்க எங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க அத்தை. என் தம்பி படற எல்லா கஷ்டத்துக்கும் இந்த பொம்பளை தான் காரணம். சரியான வில்லி அத்தை இவங்க. என் கல்யாணம் நின்னு போச்சு தான். அதான் நிலவன் அப்பா வந்து பேசி எப்படியோ என் கல்யாணம் தான் நடந்திடுச்சே. அதோட விடவேண்டியது தான. சீரியல் வில்லி மாதிரி என்னென்னமோ பண்ணி சரணுக்கும் வருவுக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிட்டாங்க” மகள் சத்தமிட இப்போதும் கனி வாய் பொத்தி அழுதிருந்தார்.
 
“ஏம்மா, நான் தெரியாம தான் கேக்குறேன். உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் மட்டும் தான் கூட பொறந்த பாசமெல்லாம் இருக்கணுமா.. எங்களுக்கெல்லாம் இருக்க கூடாதா.. உன்னால என் தம்பி தான் கஷ்டப்படுறான். வரு கூட வாழவும் முடியுமா, அவளை மன்னிக்கவும் முடியாம தவிக்கிறான். அந்த பொண்ணு வரு மட்டும் என்ன பண்ணிடுச்சு. அவ அண்ணனுக்காக தான இந்த கல்யாணத்தை நிறுத்துச்சு. இன்னைக்கு அது அங்கயும் இவன் இங்கயும் தவிச்சிட்டு இருக்காங்க”
 
“மனோ மாமாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கானு கேக்காம கல்யாணம் முடிவு பண்ணது உன் தப்பு, மாமா தப்பு. அதுக்கு அந்த சின்னஞ்சிறுசுங்க தண்டனையை அனுபவிக்கணுமா?” மகள் கேட்கும் எதற்கும் பதிலில்லாமல் தலை குனிந்தார் கனி.
 
“மாமா வந்து உண்மையை சொன்னப்போ மட்டும் புருஷனும் பொண்டாட்டியும் தியாகிங்க மாதிரி மன்னிச்சி விட்டீங்கல, அத பக்குவமா சரண்கிட்ட சொல்லியிருக்கணும்னு தோணலயா. என்கிட்டயாவது சொல்லியிருக்கலாம். நான் அவனுக்கு புரிய வச்சிருப்பேன். எதையும் செய்யல. இப்போ மட்டும் எதுக்கு நீலி கண்ணீர் விட்டுட்டு இருக்க. கல்யாணம் பண்ணி வைக்க டிராமா பண்ணல, இப்போ டிராமா பண்ணி வருவை இங்க வர வை. என் தம்பியோட சேர்த்து வை. அத விட்டுட்டு அழுது கடுப்பேத்தாத” என்று மனதாராமல் தாயை திட்டி தீர்த்தவள்,
 
“நான் வரேன் அத்தை, என் பையன் முழிச்சிக்குவான்” என்று அந்த வீட்டின் வாசலுக்கு தான் சென்றிருப்பாள், சட்டென எதுவோ தோன்றியவளாக திரும்பி “என் தம்பி தூங்கறான். அவன் முன்னாடி வந்து அழுது பாரு” என்றுவிட்டு விறுவிறுவென தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
 
இங்கே வரு யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. உணவு உண்பதற்கு கூட வெளியே வராமல் எப்போதும் தன் அறையிலேயே முடங்கி கிடந்தாள்.
 
தந்தை அழைத்து பிரச்சனையை சொல்லி அவனை திட்டியதும் தங்கையை காண மித்ராவுடன் லண்டன் கிளம்பி வந்துவிட்டான் மனோஜ். அண்ணனை பார்த்ததும் கதறிவிட்டாள் வரு.
 
படிக்கும் காலத்திலிருந்தே தந்தையுடன் அலுவலகம் சென்று சிங்கம் போல் தொழிலை நடத்தியவள், இன்று எதிலும் நாட்டமில்லாமல் இருப்பதை கண்டு தான் செய்த தவறு தன் தங்கையின் வாழ்க்கையை சூறையாடி விட்டதே என்று மனம் வெம்பினான். மித்ராவிடம், தங்கையிடம் பேச்சு கொடுத்து அவள் கவலை கொள்ளாமல் பார்த்துக் கொள்ள சொல்லியிருந்தான்.
 
மித்ரா தானே வருவிடம் பேச்சு கொடுத்தாலும் தலையசைப்பிலேயே பதிலளித்து விட்டு வாசலை பார்க்கும் போது அவளாலும் அதற்கு மேல் அங்கே இருக்கமுடியுமா?
 
இதற்கு ஒரே தீர்வு சென்னை சென்று சரணை சந்தித்து தன் தங்கையின் வாழ்க்கைக்காக மன்னிப்பு கேட்பதே என்பதை புரிந்த மனோஜ் இந்தியா வந்தான்.
 
மனோஜின் கெட்ட நேரமோ என்னமோ அன்று சனிக்கிழமையாக போய்விட, சரண் வீட்டிலேயே இருந்தான். கனியும் பாலனும் தத்தம் வேலைகளுக்கு சென்று விட, சுசி மட்டுமே அவனுடன் இருந்தாள். வீட்டிற்கு வந்த மனோஜை பார்த்த சரணுக்கு புஜங்கள் விடைக்க, இரத்தம் கொதிக்க, கண்கள் சிவப்பு வரிகளை கொண்டது.
 
“அப்பாவுக்கும் பையனுக்கும் வேற வேலையே இல்லையா, எதுக்கு சும்மா சும்மா எங்க வீட்டு வாசற்படியை மிதிக்கறீங்க?” என்று சரண் அலட்சியமாக கேட்டான்.
 
அதை மனோஜ் அவமானமாக உணர்ந்தாலும் தங்கையின் வாழ்க்கையே முதன்மை என்பதை புரிந்து “வரு பாவம் சரண். என்மேல இருக்குற பாசத்துல தான் நான் மித்துவ லவ் பண்றேன்னு தெரிஞ்சதும் அனுப்பி வச்சிட்டா. ஷி லவ்ஸ் யு எ லாட். உன்னை ரொம்ப மிஸ் பண்றா. எதோ மாதிரி எப்பவும் ரூம்லயே இருக்கா” என்று தங்கையின் நிலையை அவனுக்கு புரிய வைக்க முயன்றான்.
 
அதை கேட்ட சரணுக்கும் தன்னவளை எண்ணி வேதனையாக தான் இருந்தது. நடையில் தளர்வு ஏற்பட, மனோஜிடம் சென்றான். வந்தவனை அமர சொல்வான் என்று சுசி எதிர்பார்த்திருக்க, அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் மனோஜ் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் சரண்.
 
அதை கண்டு அதிர்ந்துவிட்ட சுசி “சரண்” என்று குரல் கொடுக்க, அடி வாங்கிய மனோஜும் தன்னுள் பொங்கி எழுந்த கோபத்தை தன் தங்கையின் வாழ்க்கையை எண்ணி கட்டுப்படுத்தினான்.
 
எதை பற்றியும் கவலை கொள்ளாத சரண் “இது உன் தங்கச்சி பத்தி பேச வந்ததுக்கு இல்ல. என் அக்காவை மணமேடை வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு போனதுக்கு. அவ பேச்சை கேட்டு விட்டுட்டு போனவனுக்கே இந்த அடினா, அவளுக்கு என் வாழ்க்கைல இடம் இருக்கும்னு நினைக்கிற. மரியாதையா வெளிய போயிடு” என்று வாசலை காண்பித்தான்.
 
மனோஜ் குனிந்த தலையாக வீட்டை விட்டு வெளியேற, சரண் சேம்பை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான்.
 
“மாமா.. மனோ மாமா” மனோஜிற்கு பின்னால் ஓடி வந்த சுசி மூச்சிரைக்க நிற்க..
 
குரல் கேட்டு திரும்பியவன் “சுசி..” என்றான். அவனுக்கு அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் போக, தரையை பார்த்துக் கொண்டு “ஐ ஆம் சாரி சுசி.. நான் உனக்கு பண்ணது ரொம்ப பெரிய தப்பு. ஆனா, நம்ம மேரேஜ் டேட் நெருங்க நெருங்க என்னால மித்துவ மறக்க முடியும்னு தோணல. அதான் போய்ட்டேன். உன் லைஃப்ப ஸ்பாயில் பண்ணிட்டு நாங்க ஹேப்பியா இருக்கணும்லாம் நினைக்கல. ஸ்டில், நானும் மித்துவும் ஒண்ணா இருந்தாலும் மேரேஜ் பண்ணிக்கல. எல்லாரோட சம்மததோட தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” அவளிடம் தன் தவறுக்கு வருந்தினான்.
 
அனைத்தையும் அமைதியாக கேட்டவள் “அந்த கல்யாணம் நின்னது எனக்கும் சந்தோஷம் தான். என்னை பிடிக்காதவரை கட்டிக்கிட்டு கஷ்டப்படறத விட, என்னை விருப்பினவரை கட்டிக்கிட்டு நிம்மதியா இருக்கேன். என் ஹஸ்பெண்ட் என்னை தங்க தாம்பாளத்துல வச்சி தாங்குறார்” என்று கர்வமாக சொல்ல, அவன் தலை அவமானத்தில் தானாய் கவிழ்ந்தது.
 
“நான் சரண் அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்க தான் வந்தேன். இது தயவு செஞ்சு வருவுக்கு தெரிய வேண்டாம். ஏற்கனவே அவங்களுக்குள்ள பல பிரச்சனை. என் தம்பி செஞ்சதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன்” என்றுவிட்டு வேகமாக வீட்டிற்குள் வந்துவிட்டாள்.
 
அன்றொரு நாள் இரவு சரண் வீட்டிற்கு வந்த நேரம், கனி உணவு பரிமாற, வீட்டிலிருந்தவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அயர்ந்த முகமாய் உள்ளே வந்தவன் அங்கே வர்ணிகாவும் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ந்தான்.
 
ஒரு மனம் அவளை அள்ளி அணைத்துக் கொள்ள துடித்தாலும், இன்னொரு மனம் கோபத்தில் கொந்தளித்தது. வேகமாக அவளிடம் வந்தவன் “நீ எதுக்குடி இங்க வந்த?” என்று அவள் கையை பிடித்திழுத்து வெளியே தள்ள எத்தனிக்க, இதை சற்றும் எதிர்பாராதவளோ அவனது அழுத்தமான இழுப்பிற்கு ஈடு தர முடியாமல் அலங்க மலங்க எழுந்து நின்றாள்.
 
இதை சற்றும் எதிர்பாராத சுசியும் பாலனுமே அதிர்ச்சியில் திகைத்தெழுந்து நின்று விட, “என்ன பண்ற சரண்? மாசமா இருக்குற பொண்ணுகிட்ட முரட்டு தனமா நடந்துக்கிற” என்று வருவின் நலனில் பதறிப் போன கனி தான் மகனை சத்தமிட்டார்.
 
தாய் சொன்னதை கேட்ட நொடி பெரிய இடியே தலையில் இறங்கியது போல் அதிர்ந்து போனவன், வர்ணிகாவை தான் கூர்மையாக நோக்கினான். அவளோ அவன் பார்வையை தாளாது விழி தாழ்த்திக் கொள்ள, தலையில் அடித்துக் கொண்டவன் வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
 
நான்கு நாட்களுக்கு முன்..
 
அதுவரை உணவிற்கு கூட அறையை விட்டு வெளியே வராத வர்ணி, மனம் எதையோ தேடுவதையும், உடல் அதற்கு ஒத்துழைக்காமல் முரண்டு பிடிப்பதையும் உணர்ந்தாள். அதனால் இரண்டு நாட்களாக கொஞ்சம் தோட்டத்தில் நடப்பதும், ஓவியம் வரைவதும், எல்லோரோடும் ஒன்றாக உணவு உண்பதும் என்றிருந்தாள். இருந்தும் யாருடனும் ஒரு வார்த்தையும் பேசமாட்டாள்.
 
தட்டில் வைப்பதை அமைதியாக உண்டுவிட்டு எழுந்து செல்கின்றவளுக்கு அன்று நாவிற்கு எதுவும் சுவை தரவில்லை.
 
“மாம், இங்க எனக்கு எதுவும் பிடிக்கல” என்று முகத்தை சுளித்தவள் “சரண் குக் பண்ணி சாப்பிட்டு இருக்கீங்க தானே. எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இது என்னது மாம். இதுக்கா நாம குக்ஸுக்கு அவ்ளோ பௌண்ட்ஸ்ல சேலரி கொடுக்குறோம். ப்ளீஸ், என்னனு பாருங்க” என்று சிடுசிடுத்து விட்டு உணவின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டாள்.
 
செல்லும் மகளையே பார்த்திருந்த மைதிலி, இரவு கணவரிடம் “இதுவரைக்கும் சரணை பத்தி பேசாத வரு, இன்னைக்கு பேசினா ரகு. ஷி இஸ் லாங்கிங் ஃபார் ஹிம். ஐ திங்க் வரு இஸ் ப்ரெக்னெட்” என்றார். அதை கேட்ட ரகுவிற்கு குழப்பத்தில் புருவ முடிச்சுகள் விழுந்தது.
 
தாயும் தந்தையும் வழக்கமான உடல் பரிசோதனைக்கு அழைத்து செல்வது போல் வருவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவளை பரிசோதித்த அவர்களின் குடும்ப மருத்துவர் அவள் கருவுற்றிருப்பதை உறுதி செய்தார்.
 
விஷயத்தை கேட்ட வருவிற்கு இப்போது மகிழ்ச்சிக்கு பதில் குழப்பம் தலை தூக்கியது. அவள் தான் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இருந்தாளே. பின் எப்படி என்று யோசித்தவளுக்கு அப்போதே அவர்கள் பிரிவிற்கு முந்தைய நாள் இரவு அவளது மாத்திரை கைதவறி கீழே விழுந்து விட, அதை அவள் எடுப்பதற்குள் சரண் அவளை நெருங்கிவிட்டது நினைவிற்கு வந்தது.
 
ஒருநாள் தானே என்று அஜாக்கிரதையாக விட்டது இன்று எத்தனை பெரிய பிரச்சனைக்கு வித்திட போகிறதோ என்று தவித்துப் போனாள். அதேநேரத்தில் தன் மணிவயிற்றில் சிறு உயிர் உருவாகி இருக்கிறது என்று எண்ணும் போதே சிலிர்ப்பாகவும் இருந்தது. உடனே சரணுக்கு சொல்லவேண்டும் என்று துடித்தாள்.
 
வீட்டிற்கு வந்ததும் வராததுமாக “நான் எங்க வீட்டுக்கு போறேன் டேட். இந்தியா கிளம்பறேன்” என்றாள்.
 
‘இட்ஸ் நாட் குட் ஃபார் யு டு டிராவல் இன் திஸ் கண்டிஷன், வரு" மைதிலி கவலையாக மகளிடம் சொல்ல
 
“எனக்கு என் சரணை பார்க்கனும் மாம்” என்றவள், தன் வயிற்றை வருடி “அவன்கிட்ட சொல்லணும். ப்ளீஸ் டோன்ட் செ நோ. டேட், நான் இந்தியா போக டிக்கெட்ஸ் புக் பண்ணுங்க” என்று சிறுபிள்ளையாய் கலங்கி சொன்னாள்.
 
மகளை சோபாவில் அமர்த்திய ரகு, அவளுக்கு தண்ணீர் கொடுத்து “வருமா, நீ அங்க போனாலும் தனியா தான் இருக்கணும். சரண் உங்க வீட்டுக்கு வரமாட்டான் டா. இந்த கண்டிஷன்ல உன்னால உன்னை தனியா பார்த்துக்க முடியாது” என்று அறிவுறுத்த..
 
“சரண் இருக்க வீடு தான் டேட் எங்க வீடு. நான் எங்க வீட்டுக்கு போறேன்” என்றாள் அழுத்தமாக.
 
அதற்கு மேலும் அவள் பிடிவாதத்தை கரைத்து விட முடியாதென்று தோன்ற, மருத்துவரை ஆலோசித்தனர். அவரும் சில சோதனைகளை செய்துவிட்டே அவளை பயணம் செய்ய அனுமதித்தார்.
அவள் கருத்தரித்திருக்கும் விஷயத்தை அறிந்ததில் இருந்து நிலை கொள்ளாமல் மொட்டை மாடியில் நடந்திருந்தான் சரண்.
 
“குழந்தை வேண்டாம்னு படிச்சு படிச்சு சொன்னேன். எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிட்டு ஏமாத்திட்டா. சேம்ப்க்கு இன்னும் மூணு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள.. ச்சே” என்று தரையில் காலை உதைத்தான்.
 
“இப்போ எதுக்கு சீன் போட்டுட்டு இருக்க. குழந்தை வந்திடுச்சு.. ‘நான் செய்த குறும்பு.. உண்டாச்சு கரும்புனு’ பாட வேண்டியது தான” ஒய்யாரமாக கைபிடி சுவற்றில் சாய்ந்து நின்று அவனை கேலி செய்தது அவனது மனசாட்சி.
 
“கடுப்புல இருக்கேன்.. போயிடு” என்று பற்களை நறநறத்தான் சரண்.
 
“அவ்ளோ அக்கா குழந்தை மேல பாசம் இருக்கிறவன் பொத்திட்டு இருந்திருக்க வேண்டியது தான”
 
“உனக்கு என்ன தெரியும், அவ பக்கத்துல வந்தாலே, உடம்புல இருக்க எல்லாம் செல்லும் அவ வேணும்னு கேட்கும்” என்று எரிந்து விழுந்தான்.
 
“கரெக்ட்டு தான்” என்று ஏக்க பெருமூச்சு விட்ட மனசாட்சி “ஏன்டா, அதான் தெருவுக்கு தெரு மெடிக்கல் ஷாப் இருக்கே. அது எதாவது யூஸ் பண்ணி தொலைச்சிருக்க வேண்டிய தானே” என்று நியாயம் பேச..
 
“நான் அவளை நம்பினேன். ஏமாத்திட்டா. குழந்தை விஷயத்துலயும் என்னை ஏமாத்திட்டா” என்று கையை மடக்கி அங்கிருந்த சுவற்றில் குத்தினான்.
 
“ஆனா சரணு, உன் வயசு பசங்க வேலை கிடைக்கலயேனு பைத்தியமா அலைஞ்சிட்டு இருக்கானுங்க. நீ பாரு, கல்யாணம் ஆச்சு.. உன் பேர்ல வீடு வந்துச்சு.. எப்படியோ வேலையும் வாங்கிட்ட. இப்போ, அப்பாவும் ஆக போற” என்று வாய் பொத்தி சிரித்தது.
 
“ச்சை.. மனசு சரியில்லனு மேல வந்தா நீயும் என்னை சாவடிக்கிற” என்று மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க கீழே ஓடினான்.
 
வீட்டிற்குள் வந்தவன் உடை மாற்ற அறையினுள்ளே செல்ல, அங்கே வரு அசதியாக உறங்கியிருந்தாள். என்ன தான் குளிரூட்டி இயங்கிக் கொண்டிருந்தாலும் அவள் நெற்றியில் வியர்வை பூக்கள் பூத்திருந்தது.
 
அதை பார்த்தவனுக்கு கவலையாகி போக “ஏன்டி நீயும் கஷ்டப்பட்டு என் குழந்தையையும் கஷ்டப்படுத்தற” என்று துண்டு கொண்டு அவள் நெற்றியில் இருந்த வியர்வை துளிகளை ஒற்றி எடுத்தான்.
 
அவளையே பார்த்திருந்தவனுக்கு ஆசை வருவதற்கு பதில் கோபமே எழ, உடை மாற்றி வெளியே வந்தால் அங்கே சுசி தரையில் பாயை விரித்துக் கொண்டிருந்தாள்.
 
“நீ ஏன் சுசி இங்க படுக்கற? சேம்பை தூக்கிட்டு போய் உள்ள படு” என்றான் சரண். அவளை உள்ளே படுக்க சொன்னபோது வருவும் இதையே தான் சொன்னாள். சுசி தான் கேட்காமல் அவளையே உள்ளே படுக்க சொன்னாள். அவளும் பயண களைப்பில் படுத்ததும் உறங்கிவிட்டாள். இருந்தும் குளிரூட்டியை உயிர்ப்பித்து, அதன் குளிர்ச்சி வெளியே வரும்படி கதவை திறந்தே வைத்திருந்தாள்.
 
“நீ வரு கூட படு, நாங்க இங்க படுத்துக்கிறோம். கூலர் இருக்குல. காத்து நல்லா தான் வருது” என்றாள் சுசி.
 
“ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல. உங்களுக்காக தான் ஏசியே வாங்கினது. நீ உள்ள படு”
 
“அது இல்ல சரண், வரு மாசமா இருக்கு. மனசுக்கு நீ கூட இருக்கனும்னு கேட்கும்” என்று தம்பிக்கு புரிய வைக்க முயல..
 
கண்களை மூடி திறந்தவன் “எங்களுக்குள்ள அப்படி எதுவும் இல்ல சுசி. நீ சேம்போட உள்ள போய் கட்டில்ல படு. நைட்ல சேம்ப் அழுதா உதவியா இருக்க அம்மாவும் உள்ள படுத்துக்கட்டும். நானும் அப்பாவும் வெளிய படுத்துக்கிறோம். கதவை சாத்திக்கோங்க” என்றிருந்தான் சரண்.
 
 
தொடரும்...

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  
அத்தியாயம் - 18
 
அடுத்த நாள் சரண் அலுவலகத்திற்கு தயாராகி கொண்டிருக்க, அவன் முன்னே வந்து நின்றாள் வரு. அவனோ அவளை சிறிதும் கண்டுகொள்ளாது கண்ணாடியை பார்த்து தலை சீவிக் கொண்டிருந்தான்.
 
“சரண்.. இந்த பேபி.. பேபி எப்படி..” குழந்தை உருவானதில் தான் வேண்டுமென்று எதுவும் செய்யவில்லை என்பதை அவனுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
 
அவளை பேசவிடாமல் கை நீட்டி தடுத்தவன் “எத்தனை தடவை குழந்தை வேண்டாம்னு சொல்லிருப்பேன். உன்னை நம்பினதுக்கு மறுபடியும் என்னை முட்டாள் ஆக்கிட்ட” என்று விரக்தியாக புன்னகைத்தவன் அங்கிருந்து நகரப் போனான்.
 
“ப்ளீஸ் சரண்.. நில்லு” என்று அவன் கைப்பிடித்து நிறுத்த, அவள் பிடித்திருந்த கையை அவன் அழுத்தமாய் பார்த்தான். அதில் அவள் கை தானாக அவன் கையை விட்டது.
 
அவள் விட்ட நொடி, சரண் அங்கிருந்து வேகமாக நகர, “சரண் ப்ளீஸ்.. இந்த பேபி..” என்று வரு மீண்டும் சொல்ல ஆரம்பிக்க..
 
“ஒரு வார்த்தை பேசாத..” என்று அவள் முன் விரலை உயர்த்தினான்.
 
அதில் வரு அவனை திகைத்துப் பார்த்திருக்க, “வினோத் தங்கச்சி கல்யாணத்துல அவங்க அப்பாம்மா முகத்தை பார்த்த தான. எங்களை மாதிரி காசு பணம் இல்லாதவங்களுக்கு அதான் சந்தோசம், கெளரவம் எல்லாம். எங்க அப்பா, அம்மாவுக்கும் அப்படி ஒரு சந்தோசம் கிடைச்சிருக்கணும் தானே. அதை அவங்கள அனுபவிக்க விடாம கலங்கடிச்சது யாரு. எங்க அக்கா என் படிப்புக்காக இருபத்தாறு வயசாகியும், வந்த வரனையெல்லாம் தட்டிக் கழிச்சிட்டு இருந்துச்சு. அது கண்ணீர் விட்டா நாம நல்லா இருப்போமா..” அவன் பேச பேச வருவின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.
 
“என்னை லவ் பண்றேன்னு சொல்றியே.. காதலிக்கிறவங்கள ஏமாத்தறது தான் உங்க காதலா? இந்த குழந்தை விஷயம் வரைக்கும் நான் சொன்ன எதையும் கேட்காம தான இருந்த. அப்படியே இரு. எங்கிட்டயும் ஒரு வார்த்தை பேசிடாத” அவள் கண்ணீரை சிறிதும் பொருட்படுத்தாது அனைத்தையும் பேசி முடித்தவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
 
அலுவலகம் சென்ற சரண் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தான். மனம் யோசனையில் உழல, மாலை நேரத்திலேயே வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
 
இங்கே வரு சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து “அண்ணி.. இப்ப சேம்பை மடியில கொடுக்கறீங்களா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
 
சரண் பேசிவிட்டு சென்றதிலிருந்து அதையே எண்ணி மனம் கலங்கியிருந்தவளை சுசி தான் மகனை காட்டி திசை திருப்பியிருந்தாள்.
 
மடியிலிருந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு எப்போது தங்கள் குழந்தை இப்பூவுலகில் ஜனிக்கும் என்று பேராவல் எழுந்தது.
 
சரண் வீட்டினுள்ளே நுழைந்த போது, “பேபி.. யு ஆர் வெரி க்யூட்” என்று குழந்தையின் கன்னத்தை தடவி கொடுத்துக் கொண்டிருந்தாள் வரு. அவளை ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்தவனுக்கு, தங்கள் குழந்தையும் ஒரு நாள் இது போல் தானே அவள் மடியில் தவழும் என்ற எண்ணம் வந்து புன்னைகைத்துக் கொண்டான்.
 
அந்நேரம் எதேச்சையாக நிமிர்ந்த வரு சரண் புன்னகைப்பதை கண்டு தானும் புன்னகைக்க, தன் தலையை உலுக்கி உள்ளே சென்றுவிட்டான்.
 
அவளிடம் வந்த சுசி “வரு, நீ குழந்தையை வச்சிருக்கிறத பார்த்து தான் சிரிச்சிட்டு போறான்” என்று சொல்லிக் கொண்டிருக்க..
 
அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் மடித்து விட்டிருந்த சட்டையின் கையை பிரிந்து விட்டுக் கொண்டே “வர்ணிகா..” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தான் சரண்.
 
“நான் சொன்னேன்ல.. உள்ள போ. கொஞ்ச கொஞ்சமா அவன் கோபம் கரைஞ்சிடும்” என்று தம்பி மனைவிக்கு கை கொடுத்தாள் சுசி.
 
வர்ணிகாவும் சிரித்துக் கொண்டே நிலவனை அவளிடம் கொடுத்தவள், சற்று வேகமாகவே எழுந்திருந்தாள்.
 
“வருமா.. இந்த மாதிரி நேரத்துல இவ்ளோ வேகமா எழுந்துக்க கூடாது” மருமகள் செய்ததை கண்டு கனி பதற, நாக்கை கடித்த வரு, “சாரி அத்தை” என்றுவிட்டு உள்ளே சென்றாள்.
 
வரு உள்ளே வந்ததும் “கதவை சாத்து” என்றான் உணர்ச்சிகள் துறந்த குரலில் சரண்.
 
வெளியே சிரித்துவிட்டு சென்றவனா இப்போது முகம் இறுகி காண்கிறான் என்று யோசனையாகவே கணவன் சொன்னதை செய்தாள் வர்ணி.
 
அவள் அவனருகே வந்து நின்றதும் “நான் நல்லா யோசிச்சிட்டேன்.. நமக்கு இந்த குழந்தை வேண்டாம். கலைச்சிடலாம்” என்றிருந்தான் சரண். என்ன தான் அலுவலகத்திலேயே முடிவு செய்த ஒன்றாயினும், இப்போது குழந்தை வேண்டாம், கலைத்துவிடலாம் என்று சொன்ன போது தன்னையும் மீறி அவனது குரல் தழுதழுத்துவிட்டது.
 
அவன் சொன்னதை கேட்ட நொடி வருவின் கண்களில் களுக்கென்று கண்ணீர் துளிர்த்து விட, “வாட் ரப்பிஷ் ஆர் யு டாகிங், சரண்? என்னை உனக்கு பிடிக்கல. ஓகே, ஐ அக்ஸ்செப்ட் இட். அதுக்காக பேபிய வேண்டாம்னு சொல்ற” என்று துடிதுடித்துப் போனாள்.
 
“ப்ளீஸ் வர்ணிகா, புரிஞ்சிக்கோ. நீயும் நானும் இருக்குற நிலைமைக்கு முகம் தெரியாத குழந்தையும் கஷ்டப்படணுமா. வேண்டாம். அபார்ஷன் பண்ணிடலாம்” என்று மீண்டும் சொன்னான். இம்முறை எந்த உணர்ச்சியும் இன்றி பாறையாய் இறுகியிருந்தான்.
 
அதில் கண்களை மூடி கண்ணீரை உள்ளிழுத்தவள், முகத்தை இறுக்கமாக்கி கொண்டு “எனக்கு இந்த பேபி வேணும் சரண். ஐ வில் நாட் அபார்ட் திஸ் பேபி” என்றிருந்தாள் தீர்க்கமாக.
 
“ஹேய், இது என்ன உங்க ஊருனு நினைச்சியா, நீ மட்டும் குழந்தையை வளர்த்துக்க? என் குழந்தைக்கு அப்பாவும் இருக்கணும் அம்மாவும் இருக்கணும். நம்மளால அது முடியாது. என் குழந்தை ஏங்கி தவிக்கணும்னு நினைக்கிறியா டி நீ. போதும். குழந்தையை கலைச்சிடலாம்” உரத்த குரலில் கத்தினான் சரண்.
 
அது வெளியில் இருந்த கனிக்கும், சுசிக்கும் கேட்டு அவர்கள் அதிர்ந்துப் போக, மாமனின் குரல் உயர்ந்து ஒலித்ததில் என்னவென்று புரியாமல் நிலவனும் அழ தொடங்கிவிட்டான். சுசி மகனை சமாதானப்படுத்த முயல, கனியோ தன் மகனை என்னவென்று கேட்க கதவை தட்ட சென்றுவிட்டார்.
 
மகனை தூக்கிக் கொண்டே அன்னையிடம் வந்தவள் ‘ஒன்றும் ஆகாது. பார்த்து கொள்ளலாம்’ என்று சைகையில் அவரை ஆசுவாசப்படுத்தி கதவை தட்ட விடாமல் தடுக்க, உள்ளே இன்னும் கார சாரமாகவே வாக்குவாதம் தொடர்ந்தது.
 
அதுவரை இப்படி குழந்தை வேண்டாம் என்று நிற்கிறானே என்ற தவிப்பிலிருந்த வரு, அவன் மீண்டும் மீண்டும் குழந்தையை கலைக்க சொன்னதில் அவன் சட்டையை பிடித்திருந்தாள்.
 
“நம்ப பேபிக்கு ஏன் மாம் அண்ட் டேட் இல்ல. டேட் நீ இருக்க, மாம் நான் இருக்கேன். அப்புறம் ஏன் சரண்.. ஏன்டா இப்படி பேசற?” ஆவேசமாக ஆரம்பித்தவள் அழுகையோடு முடித்தாள்.
 
“நமக்குள்ள எதுவும் இருக்க போறதில்ல. அத நான் விரும்பவும் இல்ல. அப்போ எப்படி குழந்தைக்கு ரெண்டு பேரும் இருப்போம். நான் உன்னை கட்டின பாவத்துக்கு என் குழந்தையும் தண்டனை அனுபவிக்கணுமா?” என்று அவளுக்கு வலிக்க செய்தான்.
 
“வில் யு ஸ்டாப் இட், சரண்? ஐ டிட் மிஸ்டேக். யெஸ், ஐ டிட். அதுக்காக நான் நல்ல வைஃப் இல்லயா. உன் கூட நல்லா வாழலயா. அப்புறம் ஏன்டா இப்படிலாம் பேசற. கான்ட் யு அன்டர்ஸ்டாண்ட் தட் இட்ஸ் ஹர்டிங் மீ?”
 
“நல்ல வைஃப்?? அதுக்கு அர்த்தம் தெரியுமாடி உனக்கு. என்னோட வாழ்ந்த ஒரு வருஷமும் ஏமாத்திட்டும், பொய் சொல்லிட்டும், உண்மையை மறைச்சிட்டும் தான இருந்த. இதுக்கு மேல உன் கூட பேச எனக்கு இஷ்டமில்ல. இதான் என் முடிவு. நாளைக்கு நாம ஹாஸ்பிடல் போறோம்” சரண் தன் முடிவை தீர்மானமாக சொல்லிவிட, உள்ளிருந்த வருவும், வெளியே நின்றிருந்த கனியும், சுசியும் அதிர்ந்துப் போனார்கள்.
 
அதற்கு மேல் பொறுக்க முடியாத கனி கதவை தட்டிவிட, திறக்க போனான் சரண்.
 
அவன் பேசியதில் கண்களின் குளம் கட்டியிருந்த கண்ணீரை துடைத்த வரு “ஒன் செகன்ட் சரண்” என்றதும் அவனும் அவளை திரும்பி பார்க்க, “நான் என் பேபிய அபார்ட் பண்ண மாட்டேன். வெதர் யு லைக் இட் ஆர் நாட், ஐ வில் நாட் அபார்ட் மை பேபி” என்று ஆணித்தரமாக வார்த்தைகளை உதிர்த்திருந்தாள்.
 
அதை கேட்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்றிருந்தவன் “என்னடீ, என்னை கார்னர் பண்ண இந்த குழந்தையை பெத்துக்க போறியா? இதுக்காக தானே குழந்தை வேண்டாம்னு சொல்லியும் எனக்கே தெரியாம கர்ப்பமாகி இருக்க. உன் அண்ணனுக்காக கல்யாணத்தை நிறுத்தினவ தான, நீயெல்லாம் எதையும் செய்ய கூடியவ” என்று அவன் பாட்டிற்கு பேசி கொண்டிருக்க, அவளோ கைகளை கட்டிக் கொண்டு அவன் முன்பு அலட்சியமாக நின்றிருந்தாள்.
 
அதில் இன்னும் கடுப்பானவன் “ஆடு.. ஆடு.. எவ்ளோ ஆடுறியோ ஆடு. உன் முடிவை சொல்லிட்டல, என் முடிவையும் கேட்டுக்கோ. நீ என் குழந்தைய சுமக்கறதுல எனக்கு சுத்தமா விருப்பமில்ல. எங்க உன்னை மாதிரியே என் குழந்தையும் ஒரு குடும்பத்தை அழிக்க துணிஞ்சதா வளர்ந்திருமோனு இருக்கு” என்று பற்களை கடித்துக் கொண்டு சொன்னவன், கதவை திறந்துக் கொண்டு யார் வார்த்தைக்கும் நிற்காமல் வெளியே சென்றுவிட்டான்.
 
என்ன தான் குழந்தை விஷயத்தில் தன் முடிவை திடமாக சொல்லியிருந்தாலும், தன்னை என்னவெல்லாம் பேசிவிட்டான் என்று வரு மனமுடைந்து போனாள்.
 
அன்றைக்கு பிறகு சரணும் அவளிடம் பேசவில்லை, வர்ணிகாவும் அவனிடம் பேச முயற்சி செய்யவில்லை. அதே நேரம் அவளுக்கு அவனது அருகாமை தேவைபட்டது. அவன் குளித்து முடித்து தயாராகும் வரை அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பாள்.
 
“ச்சீ.. டிரஸ் மாத்தறேன்னு வெளிய போறாளானு பாரு. அசிங்கம் இல்லாதவ, இங்கயே உட்கார்ந்துக்க வேண்டியது. நான் என்ன நடு கூடத்துலயா டிரஸ் மாத்த முடியும்” என்று சரண் முணுமுணுக்க..
 
‘ஒரு காலத்துல அவ முன்னாடி தான டிரஸ் மாத்துவ. அப்போ உனக்கு அசிங்கம் இருந்துச்சா?’ என்று அவனது மனசாட்சியும் முணுமுணுக்க, அத்துடன் அடங்கிப் போனான்.
 
தன் திருமண விஷயத்திலும் தாயிடம் கோபம் பாராட்டாத சரண், இப்போது மாமாவுடன் சேர்ந்து உண்மையை மறைத்திருக்கிறார்களே என்று தாய், தந்தை இருவரிடமும் ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே நிறுத்திக் கொண்டான். சுசி சொன்னது போல், தன்னால் தான் அனைத்து பிரச்சனையும் என்று வருந்திய கனியும் அனைத்தையும் மௌனமாகவே கடக்க தொடங்கியிருந்தார்.
 
அன்றும் நிலவன் தூங்கியதும் வருவும் சுசியும் காலாற நடந்துவிட்டு வர வெளியே செல்ல, தன் வேலைகளை செய்துக் கொண்டிருந்த தாயை அழைத்தான் சரண்.
 
அவரும் வெளியே வர “இங்க அப்பா இருக்காரு. சுசியை பார்க்க பார்த்தி மாமா வருவாரு. அவங்க முன்னாடி இப்படி தான் டிரஸ் போட்டுட்டு இருப்பாளா. இதென்ன அவ வீடா, எப்படி வேணா இருக்குறதுக்கு. ஒழுங்கா சுடிதார் போட சொல்லுங்க” என்று சிடுசிடுத்தான்.
 
முன்பை போல் தொடை அளவு சார்ட் ஸ்கர்ட்டோ, டிரௌசரோ அணியவில்லை என்றாலும் கர்ப்ப காலத்தில் தனக்கு சௌகரியமாக இருக்கும் முட்டி தொடும் கவுன் தான் அணிகிறாள் வர்ணி. அதை குறித்து தான் சரண் தாயிடம் சொல்லிக் கொண்டிருக்க..
 
“அதுவா சரண்.. அது மேல தப்பில்ல.. மாசமா இருக்க பொண்ணு. தழைய தழைய டிரஸ் போட்டு தடிக்கிட போகுதுனு நான் தான் வருமா கிட்ட சொன்னேன்” என்றிருந்தார் கனி.
 
“எதே, தடுக்கிட போகுதுனு முட்டி வரைக்கும் டிரஸ் போடுறாளா” என்று அதிருப்தியாக தலையை ஆட்டியவன் அறைக்குள் சென்றுவிட்டான்.
 
இதை அப்போதே வீட்டிற்கு வந்த வரு வாசலில் நின்று கேட்டுவிட, உடை விஷயத்தில் தான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். அன்றிலிருந்து சற்று இறக்கமாக இருக்கும் உடைகளை அணிய தொடங்கினாள்.
 
வரு இங்கு வந்து ஒரு மாதமாகி இருந்தது. அதுவரையிலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருக்கும் சேம்ப் தான் ஒரே ஆறுதலாக இருந்தான். நடப்பதனைத்தையும் பொறுத்து பொறுத்து பார்த்த சுசி, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, யாரும் இல்லாத நேரத்தில் வருவிடம் வந்தாள்.
 
“உன்னை நான் புத்திசாலி பொண்ணுன்னு நினைச்சேன். அவன் தான் கோவமா இருக்கான்னா, நீயும் அவன்கிட்ட பேச முயற்சி செய்யாம இருக்க” சுசி கேட்டதும் கண்களில் நீர் நிறைந்துவிட அவளை வேதனையாக பார்த்தாள் வரு.
 
“நீ பண்ணது தப்பு. அப்போ அவன் மனசு கரையிற வரைக்கும் நீ தான் முயற்சி பண்ணனும். அத விட்டுட்டு நீயும் முரண்டு பிடிச்சி பேசாம இருந்தா என்ன அர்த்தம். இதுக்காக தான் ஊர்ல இருந்து கிளம்பி வந்தியா?” தம்பியின் மனைவியை கேள்வி கேட்டு துளைத்துவிட்டாள் சுசி.
 
“சரணுக்கு தான் என்னை பிடிக்கலயே அண்ணி” என்றாள் குனிந்த தலையாக..
 
அதிருப்தியாக தலையை ஆட்டிய சுசி “வெளிநாட்டுல இருக்குற பொண்ணுனாலும் இந்த விஷயத்துல எல்லாம் ஒண்ணு தான்ல” என்று வருவின் தலையை நிமிர்த்தி, “அவன் உன் புருஷன். அவனை நீ தான் கொஞ்சம் கொஞ்சமா உன் அன்பால கரைக்கணும். கேள்விபட்டதில்ல, எறும்பு ஊற கல்லும் தேயும்னு” என்றுவிட்டு சுசி அங்கிருந்து நகர,
 
“உங்களுக்கு என் மேல கோவம் இல்லயே அண்ணி. நான் மனு லைஃப்பை மட்டும் யோசிச்சு செய்யல. உங்க கூட பழகலனாலும், உங்களுக்காகவும் தான் கேர் பண்ணேன்” என்றிருந்தாள் வரு.
 
அதை கேட்டு அவள் கன்னம் தாங்கிய சுசி “கல்யாணம் நின்னத நினைச்சி எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஆனா ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத, எங்க அம்மா, அப்பா, தம்பி பட்ட அவமானத்தை என்னால மறக்க முடியாது வரு. அதுக்கு கொஞ்சமே கொஞ்சம் உன் மேல வருத்தம் இருக்க தான் செய்யும்” என்று மெலிதாக இதழ் விரித்து புன்னகைத்தாள்.
 
சுசி சொன்னது போல் இப்போது அனைத்தும் தன் கையில் தான் இருக்கிறது என்பதை புரிந்து அவனை தானே நெருங்கும் முடிவை எடுத்தாள் வரு.
 
அடுத்த நாள் காலை “நீ இங்க வந்து ஒரு மாசம் ஆகுது வருமா. அங்க செக்கப் பண்ணி, சத்து மாத்திரை கொடுத்ததா சொன்ன. இங்க நாம டாக்டர்கிட்ட காட்ட வேணாம்?” என்று கனி மருமகளை கேட்டுக் கொண்டிருக்க, அவள் அங்கிருந்தே வெளியே எட்டி பார்க்க, சரண் கூடத்தில் அமர்ந்து காலை சிற்றூண்டி சாப்பிட்டு கொண்டிருந்தான்.
 
வேகமாக எழுந்து வந்தவள் அவன் எதிரே நிற்க, அவனும் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான், “ஹாஸ்பிடலுக்கு செக்கப் போகணும். நான் என் ஜாப்பை ரிசைன் பண்ணிட்டேன். பேபி மட்டும் கொடுக்க தெரிஞ்சதுல, என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ” என்று அவன் முன் சண்டித்தனம் செய்து நின்றாள்.
 
அவளை ஏற இறங்க பார்த்தவன், சாப்பிட்டு கை கழுவி வந்து “அம்மா, அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க” என்று தன் வாலட்டில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டி “இத ஆட்டோவுக்கு வச்சிக்கோங்க. இதான் இருக்கு. எப்படியும் அவ பர்ஸ்ல நிறைய நம்ம நாட்டு பணம் இருக்கும். அத அங்க கொடுத்துட்டு, எவ்ளோனு சொல்ல சொல்லுங்க. அக்கௌன்ட் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுறேன்” என்று அவளிடம் பேசாமல் தாயிடம் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டான்.
 
அதை பார்த்த வருவிற்கு இவனை எப்படி தான் சரி செய்வதென்று அழுகை அழுகையாக வந்தது.
 
இப்படியே நாட்களும் நகர, கணவனை தன்னிடம் எப்படி ஒன்ற வைப்பது என்று எண்ணி தவித்துப் போனாள் வரு.
 
அன்று கனியும் பாலனும் உறவினர் விஷேசத்திற்கு சென்றிருக்க, சுசி தான் வருவிற்கு பழம் நறுக்கி கொடுத்துக் கொண்டிருந்தாள். தம்பி அறையினுள்ளே வருவதை பார்த்தவள் “உங்க மாமா ஃபோன் பண்ணுவாரு. நான் வெளிய இருக்கேன்” என்று தூளியில் உறங்கிக் கொண்டிருந்த மகனை தூக்க போக, சரண் அவளை தடுத்துவிட தான் மட்டும் வெளியே சென்றாள்.
 
சுசி அப்படி சென்றதும் எழுந்து சென்று கதவை அடைத்தாள் வரு. அதை சரண் குழப்பமாக பார்த்திருக்க, அவனை நெருங்கி இருந்தாள் அவனது மனையாள்.
 
என்ன செய்ய போகிறாள் என்ற திகைப்பில் இருந்தவன் “பக்கத்துல வராத, தள்ளி போயிடு” பதற்றத்தில் அவன் அவளை தடுக்க, அவனெதிரில் நின்றவள் அவனையே இமைக்காது பார்த்திருந்தாள்.
 
“வேண்டாம் வர்ணிகா.. குழந்தை வேற தூங்கறான்” என்று அவளை மீண்டும் எச்சரிக்க, “மாமா, என்னை மன்னிச்சிடு.. உன்னை இவ்ளோ காயப்படுத்தும்னு தெரியாம பண்ணிட்டேன். தயவு செஞ்சு என்னை மன்னிப்பியா மாமா” காலையிலிருந்து ஆங்கிலம் கலக்காத தமிழில் சொல்ல மனப்பாடம் செய்து வைத்திருந்ததை அவனிடம் ஒப்பித்தாள்.
 
அவளது மாமாவென்ற அழைப்பில் சில நொடிகள் அவன் அமைதியாகி விட, அதை தனக்கு சாதகமாக்கி கொண்டவள் தன் முழு உடலையும் அவன் இரு கைகளுக்குள் புகுத்தி அவன் மேல் வாகாக சாய்ந்துக் கொண்டு, அவன் கையை எடுத்து தன் மணிவயிற்றில் வைத்து அழுத்திக் கொடுத்தாள்.
 
“நம்ப பேபி மாமா. அப்பா வேணும்னு கேக்குது. இந்த குழந்தைக்காகவாவது என்னை மன்னிக்க கூடாதா மாமா?” என்று ஏக்கமாக கேட்டாள்.
 
தன் பிள்ளையும் தன்னை பலவீனம் ஆக்குகிறதே. அவளை மன்னிக்க கூடாது என்றா நினைக்கிறான். மன்னிக்க முடியாமல் தானே தவிக்கிறான்.
 
அவன் பக்கம் திரும்பியவளின் கண்கள் கலங்கியிருக்க, மன்னிப்பிற்காக அவனையே சில வினாடிகள் பார்த்திருந்தவள் “ஐ நீட் யு, மாமா” என்று அவனது செவ்விதழ்களை கவ்வியிருந்தாள்.
 
அவள் செய்துக் கொண்டிருக்கும் காரியத்தில் சரணுக்கு கோபம் தலை தூக்க, சிவந்த கண்களோடு முறைத்துக் கொண்டே அவளை விட்டு விலக முயற்சி செய்ய, அவளோ அவனது கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்து தடவி கொடுத்தாள்.
 
தன் குழந்தை என்ற உணர்வு அவனது கோபத்தீயை தண்ணீர் ஊற்றி அணைத்ததோ என்னவோ, தன்னை அவளிடம் ஒப்புவித்து அமைதியாக இருந்தான்.
 
வெகுநாட்களுக்கு பிறகான கணவனின் ஸ்பரிசத்தில் மன மகிழ்ந்து போனவளுக்கு மூச்சு முட்ட, சிலிர்த்த தேகத்துடன் அவனை விட்டு விலகி மூச்சு வாங்கி நிற்க, அவளை உணர்ச்சிகள் இல்லா பார்வை பார்த்தான் சரண்.
 
அவள் கணவனது பார்வையின் வீரியத்தை கணிக்கும் முன், இடதும் வலதும் பார்த்தவன் அங்கே பழத் தட்டில் இருந்த கத்தியை எடுத்து தன் உள்ளங்கையில் ஒரு கோடு இழுத்திருந்தான்.
 
அதை பார்த்து துடித்துப் போன வரு “வாட் ஆர் யு டூயிங், சரண்?” அலறியடித்து கொண்டு அவன் கையை பிடிக்க போக, அவளை தன்னை தொடவிடாமல் தடுத்தவன்
 
“இனி நீ என்னை தொட்டாலோ, இப்படி நடந்துக்க முயற்சி செஞ்சலோ என்னையே காயப்படுத்திப்பேன்” கண்கள் சிவக்க சொன்னான்.
 
“ஓ காட்.. யு ஆர் பிலீடிங் சரண். நான் பர்ஸ்ட் எயிட் மட்டும் பண்றேன். ப்ளீஸ் அலௌவ் மீ” அவனிடம் மன்றாடி கொண்டே அவன் கையிலிருந்து நிற்காமல் வழியும் இரத்தத்தை துடைக்க போனாள்.
 
அவனோ “புரியாதா டி.. என்னை தொடாதேனு சொன்னேன். கைக்கு வைச்ச கத்தி கழுத்துக்கு வைக்க ரொம்ப நேரம் ஆகாது” என்று கர்ஜித்தான்.
 
கணவன் பேசியதில் வர்ணிகா மடிந்தமர்ந்து குலுங்கி அழ, மாமனை காப்பாற்ற அவன் மருமகன் வீரென்று அழ தொடங்கிவிட்டான்.
 
அப்போதே சுசியின் ஞாபகம் வர, கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தவள் “அண்ணி.. சீக்கிரம் வாங்களேன்” வெளியே கணவரிடம் பேசிக் கொண்டிருந்த நாத்தனாரை அழைத்தாள்.
 
அவளும் பதறியடித்துக் கொண்டு ஓடிவர “அண்ணி.. சரண் கை.. பர்ஸ்ட் எயிட் பண்ணுங்க” அழுகையினூடே சொன்னாள்.
 
இருவரது முகத்தை வைத்தே விஷயத்தை புரிந்துக் கொண்ட சுசி “உனக்கு ஏன்டா இவ்ளோ கோபம் வருது, நான் தான்டா உன்கிட்ட பேசி உன் மனசை மாத்த சொன்னேன்” சொல்லிக் கொண்டே ஈரத்துணியை கிழித்து அவன் கையில் கட்டினாள்.
 
“அண்ணி, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க. கட் டீப்பா தெரியுது” வர்ணி சுசியிடம் கலங்க

வரமாட்டேன் என்று வீம்பு பிடித்த தம்பியை “ஒழுங்கா வா சரண்” என்று அதட்டியவள் “வரு, நிலவன் அழறான் பார்த்துக்கோ. இப்போ தான பால் குடிச்சான். முதுகுல போட்டு தட்டி கொடு, தூங்கிடுவான். நாங்க போயிட்டு வந்திடறோம்” என்று தம்பியை மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றாள்.

இருவரும் செல்வதையே கலங்கிய கண்களோடு பார்த்திருந்த வரு, அழும் குழந்தையை சமாதானம் செய்வதற்காக தன் தோளில் போட்டு தட்டிக் கொண்டே கணவனை எண்ணி தானும் அழுதிருந்தாள்.
 
 
தொடரும்...

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  
அத்தியாயம் - 19
 
இப்போது தனக்கென்று எதற்காகவும் வரு கணவனை அணுகுவதில்லை. அவன் தான் தன்னையே காயப்படுத்திக் கொள்ள துணிந்துவிட்டானே. பின் என்ன செய்வது என்ற பயம் அவளுக்கு.
 
பெரும்பாலும் தன் நாட்களை மாமியாருடனும் நாத்தனாருடனுமே கழிக்க துவங்கிவிட்டாள். அதிலும் அவள் தன் மனக்குறைகளை சொல்லும் ஒரே நபர் சேம்ப் மட்டும் தான். அதுவும் மாமி ஏதோ சொல்கிறாள் என்று தன் பொக்கை வாயை காட்டி சிரிக்கும். அந்த சிரிப்பில் தன் கவலையை தொலைக்கின்றாளோ என்னவோ?
 
இங்கே ரகுவரனும் மைதிலியும் மகளின் கவலையிலேயே உழன்றனர். என்ன தான் கனி தான் பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்தாலும், மாதமாக இருக்கும் பெண்ணாயிற்றே. அவளின் வருத்தம் அவர்களையும் வருத்தத் தான் செய்தது.
 
இதில் மனோஜ் வேறு மித்ராவை திருமணம் செய்யாமல் வீட்டில் வைத்திருந்தான். இதற்கு முன்னும் அவள் இங்கு படிக்கும் போது அத்தை வீட்டில் தங்கியிருந்தாள் தான். அப்போது தான் இருவரும் காதலிக்கவும் தொடங்கினர். ஆனால், அப்போது அவள் தன் மச்சானின் மகள். இப்போதோ அவர் மகளை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருக்கிறாரே. இந்நிலையில் திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பது ரகுவிற்கு அத்தனை உவப்பாக இல்லை.
 
மகனை அழைத்து மித்ராவை திருமணம் செய்துக் கொள்ள சொல்ல, அவன் “வரு லைஃப் என்னால தான் ஸ்பாயில் ஆகிருக்கு டேட். அவ சரண் கூட ஹேப்பியா இருக்கானு கன்பார்ம் ஆன அப்புறம் தான் எங்க மேரேஜ். அதுவும் நீங்க தான் பண்ணி வைக்கணும்” என்றான்.
 
அதில் கடுப்பான ரகு “நான் ஏன் உனக்கு பண்ணி வைக்கணும். என்னை கேட்டா மேரேஜ் ஹாலை விட்டு ஓடி போன” கோபத்தில் பொரிந்தார்.
 
“அப்போ யாரை கேட்டு ஓடினேனோ, அவ முன்னாடி நின்னு என் கல்யாணத்தை பண்ணி வைப்பா. கூட நீங்க எல்லாரும் இருப்பீங்க" என்று உறுதியாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
 
சரணிடம் பேசவில்லை என்றாலும் அவன் அருகாமைக்கு, அவனது தொடுகைக்கு மனம் அதிகமாக ஏங்கியது.
 
அன்று சரண் அறையினுள்ளே நுழைந்த போது, அங்கிருந்த மின்விசை பலகை சுற்றியிருந்த சுவற்றில் வரு தன்னையே ஓவியமாக வரைந்து வைத்திருந்தாள். அதிலும் தன்னை மேடிட்ட வயிற்றோடு வரைந்திருந்தாள். சரண் மின்விளக்கு அல்லது மின்விசிறியை உயிர்பிக்க வேண்டுமென்றால், தன் உயிரை தீண்டி விட்டே செய்ய முடியும். ஆம், வருவின் வயிற்று பகுதி பலகைக்கு பக்கத்திலேயே இருந்தது. அவன் கை தன்னை தான் தீண்டவில்லை, தன் ஓவியத்திலிருக்கும் மணி வயிற்றையாவது தொட்டு, தடவி, வருடட்டும் என்றே அவ்வாறு வரைந்திருந்தாள்.
 
அவ்வோவியத்தை பார்த்தவனின் கால்கள் வேரூன்றி போக, கண்களிலிருந்து தன்னை அறியாமல் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
 
நடுங்கிய கைகளோடு அடி மேல் அடி வைத்து ஓவியத்தின் அருகே சென்றவன், அவளது மேடிட்ட வயிற்றை தடவி கொடுத்தான்.
 
அப்படியே மேலெழுந்து அவள் சுருண்ட கேசத்தை வருடி கொடுத்தவன், மூக்குத்தியில் முத்தம் வைத்தான்.
 
அவள் இதழ்களிலும் முத்தம் வைத்தவன், மார்பு கூடு ஏறி இறங்க “ஏன்டி என்னை உயிரோட வதைக்கிற” கண்ணீரோடு அவள் கன்னம் தாங்கி கேட்டவன், அப்படியே அவள் ஓவியத்தின் மீதே சாய்ந்துக் கொண்டான்.
 
அந்நேரம் வரு அறைக்குள் வர, அவளது அரவம் உணர்ந்து கண்களை துடைத்து கொண்டே விலகி வந்தவன், அவளை கடந்து வேகமாக வெளியே சென்றான்.
 
இவளும் அவன் பின்னே செல்ல, அங்கிருந்த கனியை பார்த்து “இப்போ எதுக்கு ரூமெல்லாம் கிறுக்கி வச்சிருக்கா. இதென்ன அவ வீடா? ஹவுஸ் ஓனர் பார்த்துட்டு வீட்டை காலி பண்ண சொல்லணுமா?” என்று சத்தம் போட்டு விட்டு சென்றுவிட்டான்.
 
வரு கலங்கிய கண்களாக அங்கேயே நின்றுவிட, அவளருகில் வந்த சுசி அவளை ஆறுதலாக தாங்கி பிடித்து “அவன் சொல்றதையெல்லாம் கண்டுக்காத வரு. அவன் கண்ணும் கலங்கி தான் இருந்துச்சு. ஹவுஸ் ஓனர் கேட்டா பெயிண்ட் அடிச்சு கொடுத்திடலாம்” என்று சமாதானம் செய்தாள்.
 
உண்மையில் கணவனின் கண்கள் கலங்கி தான் இருந்ததா என்று யோசிக்கும் நொடியில், நாத்தனார் தனக்காக பொய்யுரைத்திருப்பார் என்று முடிவு செய்து கொண்டாள் வரு.
 
ஆனால் சரணோ அவளுக்கே தெரியாமல் அவளது ஓவியத்திடம் தினமும் அன்பு பாராட்டிக் கொண்டிருந்தான்.
 
ஒரு வெள்ளிக்கிழமை பூஜை வேலையில் ஈடுப்பட்டிருந்தார் கனி. அவருக்கு சற்று தள்ளி அமர்ந்து மகனை கவனித்தப்படியே பூ தொடுத்துக் கொண்டிருந்தாள் சுசி. வரு இருவர் செய்வதையும் பார்த்துக் கொண்டே சேம்ப்க்கும் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்.
 
இதற்கிடையில் மசக்கையாக இருக்கும் மருமகளுக்கும், குழந்தைக்கு பால் கொடுக்கும் மகளுக்கும் பசிக்குமென உடலுக்கு சத்து தரும் கேழ்வரகு அடையை ஒவ்வொன்றாக சுட்டு எடுத்து வந்து இருவருக்கும் மாறி மாறி கொடுக்க, அதை உண்ட வரு “இது என்ன ஸ்னாக் அத்தை? ரொம்ப யம்மியா இருக்கே. சரண் எனக்கு இதெல்லாம் செஞ்சி தந்ததில்லயே” என்று கேட்டாள்.
 
அதை கேட்ட சுசி சிரித்து விட, கனியோ “இதுக்கு பேர் கேழ்வரகு அடை மா. முருங்கை கீரையும் சேர்த்திருக்கேன். உடம்புக்கு வலு தரும்” என்றார்.
 
இருவரும் உண்டு முடித்ததும், தாயும் மகளும் தத்தமது வேலைகளை தொடர, வரு கனியின் அருகில் வந்தமர்ந்து கொண்டு இன்னும் உன்னிப்பாக அவரை கவனித்துக் கொண்டிருந்தாள்.
 
“நீங்க ஒண்ணு இல்ல இன்னொரு வேலை செஞ்சிட்டே இருக்கீங்க அத்தை. காலைல வீட்டுல பிரேக்ஃபாஸ்ட் பண்ணி வச்சிட்டு, போய் வேலை செய்யற இடத்துல பிரேக்ஃபாஸ்ட் செய்யறீங்க. அப்புறம் இங்க வந்து மத்த வேலையெல்லாம் பார்க்கறீங்க. திரும்ப லஞ்ச் செஞ்சிட்டு அங்க போய் லஞ்ச் செய்யறீங்க. ஆஃப்டர்நூன் வந்து சுசி அண்ணிய தூங்க சொல்லிட்டு சேம்பை பார்த்துக்கறீங்க. ஈவ்னிங் திரும்ப வீட்டை சுத்தம் செஞ்சி, வெசெல்ஸ் வாஷிங் எல்லாம் பண்றீங்க. திரும்ப நைட் இங்க டின்னர், அவங்க வீடுங்கள்ல டின்னர். அப்புறம் நைட்டும் தூங்காம சேம்ப் முழிச்சா, அவனை பார்த்துக்கறீங்க” இத்தனை மாதங்களாக மாமியார் செய்வதை குறிப்பெடுத்து சொன்னாள். அதேநேரத்தில், கணவன் முன்பே சொன்னதை மனதில் வைத்து, அவரிடம் பேசும் போது வார்த்தை பிரயோகத்தில் ஆங்கிலம் கலக்காதவாறு கவனமாகவே இருந்தாள்.
 
“இதுல மாமாவுக்கு ஜூஸ், சூப் எல்லாம் செஞ்சி, ரெடி பண்ணி தர்றீங்க. க்லோத்ஸ் வாஷ் பண்றீங்க. யாராவது கேட்டா வீட்டுலயே சுத்தமா ஹெல்தி ஸ்னாக்ஸ் செஞ்சி தர்றீங்க. அப்புறம் ஃப்ரைடேஸ்ல இந்த மாதிரி பிரே(Pray) பண்றீங்க. எங்க வீட்டுல சரண் இந்தமாதிரி பிரேயரெல்லாம் பண்ணதே இல்லையே..” என்று உதட்டை பிதுக்கினாள்.
 
அதை கேட்ட கனியும் சுசியும் ஒன்று சேர சிரித்துவிட, வருவோ என்ன என்பதாய் இருவரையும் பார்த்தாள்.
 
அவளது கன்னம் தாங்கிய கனி “இதெல்லாம் சுமங்கலி பொண்ணுங்க அவங்க வீட்டுக்காரங்க நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக பண்றது வருமா” என்றார்.
 
அப்போதே வருவிற்கு இந்த பூஜையின் அர்த்தம் புரிய “அப்போ நானும் உங்கள மாதிரி மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்ட ஸ்கிப் பண்ணிட்டு, இத பண்ணட்டுமா?” என்று கேட்டாள் வரு.
 
“நீ மாசமா இருக்க மா. அதான் உங்க சுசி அண்ணியும் சாப்பிடறா. குழந்தையெல்லாம் பொறந்து, அதுக்கு பால் கொடுக்கறது குறைஞ்சதும் பண்ணிக்கலாம்” என்று கனி அறிவுறுத்தினார்.
 
அதை கேட்டவள் முகம் சட்டென சுருங்க “அதுக்குள்ள சரண் என்னை போக சொல்லிட்டான்னா?” கண்கள் கலங்க பாவமாக கேட்டாள்.
 
அவள் பேசியது கனியின் மனதையும் வலிக்க செய்ய “அதெல்லாம் போக சொல்லமாட்டான். உங்களுக்கு குழந்தை பொறக்கட்டும். அத்தை எதாவது பண்ணி அவனை உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடறேன்” அவள் கண்ணீரை துடைத்து சொன்னார்.
 
அதுவரை இருந்த இயல்பு நிலை மாறி கனியும் சுசியும் அமைதியாக வேலைகளை பார்த்தனர். அதை உணர்ந்த வருவிற்கு தன் பேச்சால் தான் என்று குற்றவுணர்வாகி போனது.
 
அவர்களை இயல்பாக்கும் பொருட்டு “எப்படி அத்தை நீங்க இவ்ளோ வேலையையும் டயர்ட் ஆகாம செய்யறீங்க.. உங்களுக்கு கஷ்டமா இல்லையா?” என்று மாமியாரிடம் கேட்டாள்.
 
“சின்ன வயசுல இருந்து செய்யறேன் வருமா. அப்படியே பழகிடுச்சி. ஐம்பது வயசாகுது. தூரம் படுறது இன்னும் நிக்கல. அந்த நேரத்துல மட்டும் கொஞ்சம் அசதியா இருக்கும். என்ன பண்றது, வேலைக்கு போனா தானே குடும்பத்தை பார்க்க முடியும்” என்று அத்தை சொன்னதை இமைக்க மறந்து கேட்டிருந்தவள்..
 
“வேற வேலை போகணும்னு தோணினதில்லயா அத்தை?” என்று கேட்டாள்.
 
அதை கேட்டு சிரித்த கனி “வேற வேலைக்கு போற அளவுக்கெல்லாம் அத்தை பெரிய படிப்பு படிக்கலயே வருமா. நான் வேலைக்கு போற ஒரு வீட்டுல இருக்கிற அம்மா, என் கூட ஏழாவது வரைக்கும் படிச்ச ப்ரண்டோட தங்கச்சி தான். எனக்கு அவங்கள தெரியுது. இன்னுமே அவங்க என்னை தெரிஞ்சா மாதிரி காட்டிக்கல. தெரிஞ்சவங்கனா வேலை வாங்க முடியாதுனு யோசிக்கறாங்களா, இல்ல இவளை போய் எப்படி தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறதுனு நினைக்கிறாங்களோ என்னமோ? அதே இன்னும் மூணு வீடுங்கள்ல வேலை பார்க்கறேன். அங்க அவ்ளோ மரியாதையா நடத்துவாங்க” தன் மனப்போக்கில் பேசினார்.
 
அதோடு “என் ப்ரண்ட் அவ தங்கச்சி வீட்டுக்கு வந்தப்ப, என் நம்பர் வாங்கினா. எப்போவாவது எங்கிட்ட பேசவும் செய்வா. அவ சென்ட்ரல் கவர்மென்ட் வேலைல இருக்கா. அவ தங்கச்சியும் கவர்மென்ட் வேலைல தான் இருக்காங்க. இந்த கஷ்டமோ(கஸ்டம்ஸ்) என்னமோ சொல்வாங்களே, அந்த வேலை. அவங்க வேலைக்கு போகறப்போ காட்டன் சேலையை கஞ்சி போட்டு கட்டிட்டு போவாங்க. பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கும். எனக்கும் ஒரு காட்டன் சேலை எடுத்து கட்டனும்னு ஆசை தான். நான் செய்யற வேலைக்கு அதெல்லாம் கட்டினா கசங்கி தான் போகும்னு எனக்கு நானே சிரிச்சிக்குவேன்” என்று தன் இத்தனை வருட வேதனைகளையும் ஆசைகளையும் சொல்லிவிட்டவர், மகளும் மருமகளும் தன்னையே பார்த்திருப்பதை கண்டு,
 
“நானும் உங்க மாமாவும் கஷ்டப்பட்டாலும் சுசியும் சரணும் நல்லா படிச்சி, நல்ல வேலைக்கு போறாங்கல, அது போதும். நான் காட்டன் சேலை கட்டலனா என்ன, இதோ என் பொண்ணும் மருமகளும் நீட்டா டிரஸ் பண்ணிட்டு பெரிய வேலைக்கு எல்லாம் போகறீங்களே..” என்று கண்களில் பெருமிதத்தோடு சொன்னார்.
 
அவரை அப்படியே அணைத்துக் கொண்ட வரு “சாரி அத்தை” என்று என்றோ அவரை வேலைகாரி என்று பேசியதற்கு இன்று மன்னிப்பு கேட்டதோடு “நான் உங்களுக்கு பிசினஸ் வைச்சி தரவா அத்தை?” என்று பட்டென்று கேட்டுவிட்டாள்.
 
மருமகள் சொன்னதை கேட்டு திகைத்த கனி “அட, சும்மா என் மனசுல இருந்ததை சொல்லிட்டேன். சுசி, சரண்கிட்டலாம் எதுவும் சொல்லி வச்சிடாத. அப்புறம் அந்த அம்மா வீட்டுக்கு போய் சண்டை போட்டுட்டு வந்திடுவான்” என்று மகளிடமும் சொன்னார்.
 
“இல்லத்தை, நான் உண்மையா கேக்கறேன். நீங்களும் நல்லா படிச்சிருந்தா அவங்கள மாதிரி பப்ளிக் செக்டர்ல ஒர்க் பண்ணிட்டு இருந்திருப்பீங்க. இட்ஸ் நாட் டூ லேட். நாம பிசினஸ் பண்ணலாம். நீங்க செய்யற அதே வேலையை உங்க கீழ இருந்து நிறைய பேர் செய்வாங்க. நீங்க அவங்கள வேலை வாங்கணும்”
 
“வரு.. எனக்கு அதெல்லாம் வராது” கனி படபடக்க
 
“ஏன் வராது? என் கீழ யாராவது ஒர்க் பண்ணாலும், எனக்கு அவங்க சரியா செய்யறாங்களானு தெரியாது. பிகாஸ் ஐ டோன்ட் நோ தி வொர்க்” என்றுவிட்டு கனி அவளை பார்ப்பதை கண்டு “ஏன்னா எனக்கு வேலை தெரியாது. ஆனா உங்களுக்கு தெரியும். நீங்க வேலை வாங்குங்க. நானும் சரணும் உங்களுக்காக மத்ததெல்லாம் பார்த்துக்கிறோம்” என்று ஊக்குவித்தாள்.
 
அதை கனி பயம் கலந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்க, “இதுக்கு பணம் நான் தரல. உங்க அண்ணன் உங்களோட சேக்ரிஃபைஸ்காக.. சாரி.. சாரி.. அது என்ன சொல்வாங்க? ஹான்.. தியாகம்.. அதுக்காக அவர் உங்க பேர்ல போட்டு வச்ச பணம். நீங்க உங்க பணத்துல பிசினஸ் தொடங்க போறீங்க அத்தை. இந்த உலகம் ரொம்ப சாதாரணமானவங்கனு நினைச்சி ஒதுக்கினவங்க தான் பெருசா சாதிச்சி இருக்காங்க. பெரிய பெரிய கம்பெனிஸ் எல்லாம் எதோ ஒரு சின்ன ரூம்ல தான் ஆரம்பிச்சிருப்பாங்க. அதுக்கு ரொம்ப பெரிய பிசினஸா இருக்கணுமோ, இன்வெஸ்ட்மென்டோ தேவையில்ல. என் அத்தைய பார்த்தா யாருன்னு தெரியாத மாதிரி ஆக்ட் பண்றாங்க? நீங்க பெரிய ஆள் ஆனதுக்கு அப்புறம் கனினு பேசாம போனவங்க எல்லாம், அட நம்ம கனி, இவ என் ப்ரண்ட்னு ஊர் முழுக்க சொல்லிப்பாங்க. என்ன, பண்ணிடலாமா?” என்று வெற்றி குறி காட்டி கேட்க,
 
சிறிது நேரம் கையை பிசைந்தவாறு இருந்தவர் “நீ கூட இருப்பேனா எனக்கு பயமில்ல வருமா” என்று வெட்கப்பட்டுப் கொண்டே தன் கட்டை விரலை உயர்த்தி காண்பித்துவிட்டு மருமகளை கட்டிக் கொண்டார்.
 
இவையனைத்தையும் மனமகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுசி.
 
இரண்டு நாட்கள் கழித்து “சரண், நான் உங்கிட்ட பேசணும்” என்றிருந்தாள் வரு.
 
அவனோ அவளை சிறிதும் கண்டுக் கொள்ளாது அறையை விட்டு வெளியே செல்ல, “நில்லு சரண். ஐ நீட் டு டாக். நான் எனக்காகவோ, நம்ப லைஃப்காகவோ பேசணும்னு சொல்லல. சுசி அண்ணிய பத்தி பேசனும்” என்று அவன் முன் வந்து நின்றாள்.
 
என்ன பேசவேண்டும் என்பதாய் சரண் தன் புருவம் உயர்த்தி நிற்க, “சுசி அண்ணிக்கு ஹேர் எவ்ளோ லென்தியா, டென்சிட்டியா இருக்கு..” என்றுவிட்டு தன் சுருண்ட கேசத்தை வருடி ஏக்கமாக பார்த்தாள்.
 
‘இந்த சுருட்டை முடியை வச்சே என்னை வாரி சுருட்டி என் வாழ்க்கைய வீணாக்கினது போதாதா? இதுல ஏக்கத்தை பாரு’ அவன் மனம் தன் போக்கில் அவளை திட்டிக் கொண்டிருந்தது.
 
“சுசி அண்ணி வீட்டுலயே எதோ ஆயில் செஞ்சி யூஸ் பண்றாங்க. அப்புறம் அவங்க பேஸ் கேருக்கு கூட எதோ ஆர்கானிக் பவுடர் வீட்டுலயே பண்ணிக்கிறாங்க. ஹேருக்கும் ஹேர் மாஸ்க் பண்ணிக்கிறாங்க. இதை எல்லாம் ரீசனபிள் காஸ்ட்லயே செஞ்சிக்கிறாங்க” என்று சுசியை பற்றியே சொல்லிக் கொண்டிருக்க, என்னவாயிற்கு இவளுக்கு, இதுவரை நன்றாக தானே இருந்தாள் என்று குழப்பமாக பார்த்திருந்தான் சரண்.
 
“சேம்ப்க்கு யூஸ் பண்ற டயபர் கூட அண்ணி அவங்களே ஸ்டிட்ச் பண்ணிக்கிட்டாங்க. அத யூஸ் பண்றதால ரேஷஸ் வராம, சேம்ப் எவ்ளோ கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றான் தெரியுமா. அப்புறம் அவனுக்கு தேவையான காஜல், பாடி லோஷன், சோப்பு, ஷாம்பு வரைக்கும் எல்லாமே வீட்டுல செஞ்சது தான் யூஸ் பண்றாங்க. அதான் சுசி ப்யூட்டி அண்ட் பேபி ப்ராடக்ட்ஸ் லான்ச் பண்ணலாம்னு இருக்கேன்” என்று பூரித்துச் சொன்னாள். அதுவரை எதற்கென்று புரியாமல் கேட்டிருந்தவனின் முகம் இப்போது இறுகி போனது.
 
“ப்ச்.. நீ என் அக்காவுக்கு இதுவரைக்கும் செஞ்ச நல்லதே போதும். அது வாழ்க்கையை அது பார்த்துக்கும்” இத்தனை மாதங்களாக நாத்தனாருடன் ஒன்றாக இருந்ததில் அவளுக்கு எது சரியாக இருக்கும் என்று அலசி ஆராய்ந்து சொல்ல, அதை நொடியில் வேண்டாம் என்று சரண் மறுத்துவிட்டதில் வருவின் மனம் சுணங்கி போனது.
 
“என்ன சரண் இப்படி பேசற? அத்தைக்கு நாம பிசினஸ் ஸ்டார்ட் பண்றதா தானே இருந்தோம். நடுவுல என்னால கான்சென்ரேட் பண்ண முடியல. நவ், ஐ வாண்ட் டு மேக் இட். அத்தைக்கு நாம நினைச்ச மாதிரி ஒரு ஏஜென்சி ஸ்டார்ட் பண்ணனும். கூடவே அண்ணிக்கும் இப்போ பிசினஸ் லான்ச் பண்ண போறோம்” கணவனுக்கு புரியவைக்க முயன்றுக் கொண்டே நெகிழ்வாக சொன்னாள்.
 
“அன்னைக்கு உனக்கு சரினு சொன்னது உன்மேல இருந்த நம்பிக்கைல. இப்போ உனக்கும் நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு ஆகிடுச்சு. இனி நீ என் குடும்பத்துக்காக எதுவும் செய்யவேண்டாம்” நிர்தாட்சயண்மாய் சொன்னான்.
 
“ஏன் சரண் பிரிச்சி பேசற. அத்தை, மாமா எல்லாம் எவ்ளோ கஷ்டப்படறாங்க. அவங்க ஹேப்பியான ஒரு லைஃப் வாழனும்னு தான செய்யறேன். இதுல நிறைய பேரோட லைவ்லிஹுட்டும் இருக்கு. நாம அன்னைக்கு சிக்னல்ல பார்த்தோமே, பேபி வச்சிட்டு ஒரு லேடி. அந்த மாதிரி சிச்சுவேஷன்ல கஷ்டப்படறவங்கள தான் நாம ரெக்ரூட் பண்ண போறோம்”
 
“ஹேய் நாசக்காரி.. எங்க அம்மாவும் அக்காவும் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலயா? அசோசியேஷன் காரங்க வெளி ஆட்களை உள்ளயே விடமாட்டாங்க. நீ யாரையோ வேலைக்கு எடுத்து, எங்க அம்மாவையும் அக்காவையும் உள்ள தள்ள போற”
 
“அப்படி இல்ல சரண். ஏஜென்சிக்கு நாம பேக்ரவுண்ட் வெரிஃபைட் ப்ரொபைலா தான் எடுக்க போறோம். ப்ராடக்ட்ஸ் பிரிப்பேர் பண்ற இடத்துல, பேக்கிங் பண்ற இடத்துல எல்லாம் இவங்கள யூஸ் பண்ணிட்டு, அவங்களோட த்ரெஸ்ட்ஒர்தினஸ் பார்த்துட்டு நாம ஏஜென்சிக்கு மூவ் பண்ணிக்கலாம். அதுக்கு இயர்ஸ் ஆகும். நீ தானே யாரும் விருப்பப்பட்டு இப்படி ஆகறதில்லனு சொன்ன. நாம அவங்களுக்கு வாழ ஹெல்ப் தான பண்றோம். பிலீவ் மீ சரண், ஒன்லி குட் திங்ஸ் வில் ஹாபென்” வரு கணவனுக்கு புரிய வைக்க முயல, அவனை பொறுத்தவரை அது விதண்டாவாதமாகவே பட்டது.
 
“போதும், நிறுத்தறியா.. பொண்ண நம்பி அழிஞ்சி போனவங்கனு நிறைய சொல்லி கேட்டிருக்கேன். உன்னால அழிஞ்சதுனு நான் மட்டும் இருக்கட்டும். என் குடும்பம் பாவம், விட்ரு. சின்ன வயசுல தமிழ் புக்ல படிச்சது, பாவசெயல், பெருங்குற்றம்னு.. இப்போ எனக்கு உன்னை கட்டினது தான் பாவசெயலா தோணுது. உன்னை நல்லவனு நம்பி உன் கூட வாழ்ந்தேனே, அதான் பெருங்குற்றம்.. அதனால தான் இன்னைக்கு என் குழந்தை உன் வயித்துல வளர்ந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கு” தன் வார்த்தைகளில் கட்டுப்பாடின்றி அனைத்தையும் கொட்டி தீர்த்தான்.
 
அதுவரை அவனுக்கு புரியவைக்க பேசிக் கொண்டிருந்தவள் அவனது கடுஞ்சொற்களில் துடித்துப் போக “நம்ப மேரேஜ் உனக்கு பாவமா சரண்? நம்ப லைஃப் உனக்கு அஃபென்ஸா..? அப்புறம் ஏன் என்னை இன்னும் இந்த வீட்டுல வச்சிருக்க, அனுப்பிட வேண்டியது தானே?” என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தினாள்.
 
“என்னமோ என் கை கோர்த்துக்கிட்டு முன் வாசல் வழியா வந்த மாதிரி பேசற? எங்க அம்மா சப்போர்ட்ல பின் வாசல் வழியா தானடி வந்த. உன்னை இன்னும் வச்சிருக்கறதுக்கு ஒரே காரணம் என் குழந்தை. அது பொறந்து வரட்டும், உன் கழுத்தை பிடிச்சி வெளிய தள்ளுறேன்” ‘தவறையும் செய்துவிட்டு சத்தமிடுவதை பார்’ என்ற ஆத்திரத்தில் சொல்லிவிட்டான்.
 
அவன் சொன்னதை கேட்டு கண்கள் இரண்டும் கலங்கிவிட்டாலும், ‘நீ செய்து விடுவாயா?’ என்று தெனாவட்டாக அவனை பார்த்தாள் வரு.
 
“என்னடி... செய்வேனானு பார்க்கறியா? உன்னை அனுப்பிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன். என்ன, உன் புண்ணியத்துல நான் செகண்ட் ஹேண்ட் ஆயிட்டேன். என் புள்ளையும் தாயில்லா பிள்ளை ஆகப்போகுது” அள்ள முடியாத வார்த்தைகளை கொட்டினான். அதற்கும் அவள் செய்து தான் பாரேன் என்று கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு கைகளை கட்டி திமிராக நின்றாள்.
 
அவன் வாய் தான் அவளிடம் முரணாக பேசி கொண்டிருந்தது. மனம் ‘உன்னை தவிர வேறொருத்திக்கு என் வாழ்விலும் இடமில்லை, என் பிள்ளைக்கும் இன்னொருத்தி தாயாக முடியாது’ என்று அவளிடமே நிலைத்திருந்தது. அதை உணர்ந்து தான் அவளும் திமிராக நிற்கின்றாளோ என்னவோ..
 
அவளது திமிர் அவனுக்கு இனம் புரியாத கோபத்தை தான் கொடுத்தது. “என்னடி, முடியாதுனு நினைக்கிறியா?” என்றவன் அவளை இழுத்து வந்து கனியின் முன் நின்றான்.
 
“அம்மா, எனக்கு பொண்ணு பாருங்க. அதிகமா படிக்கலனாலும் பரவாயில்ல. படிச்சிட்டு எல்லா ப்ராடு தனமும் பண்றவங்கள விட, ப்ளஸ் டூவோ, ஒரு டிகிரியோ படிச்சிருந்தாலும் போதும். என் கலருக்கு ஏத்த மாதிரி பாருங்க.. கல்யாணம் மட்டும் குழந்தை பிறந்ததும் இவளை ஒதுக்கி வச்சிட்டு வச்சிக்கலாம்னு சொல்லுங்க” என்று சொன்னது தான், அதுவரை மகன் பேசியதில் அதிர்ச்சியில் உறைந்திருந்த கனி, தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை என்றும் பாராமல் அவன் கன்னத்தில் அறைந்திருந்தார்.
 
அதை கண்ட சுசி தம்பிக்காக வரிந்துக் கட்டி கொண்டு வர, மகளையும் ஒற்றை பார்வையில் அடக்கினார்.
 
சரணோ அதிர்ந்து தன் தாயை பார்த்திருக்க, “ஏதோ வருமா தப்பு பண்ணிடுச்சி, நீயும் கோவமா இருக்கனு பார்த்தா, இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியாமே.. எங்க அண்ணன்கிட்ட தங்கமா பார்த்துக்கிறேன்னு சொல்லி தான் உனக்கு கட்டி வைச்சேன். உன் வாழ்க்கைல இன்னொரு கல்யாணம் கிடையாது” என்று மகனை கனி சத்தமிட்டு கொண்டிருக்க..
 
“என் முன்னாடியே எப்படி அத்தை நீங்க சரணை அடிப்பீங்க?” என்றிருந்தாள் வரு.
 
தாயிடம் அறை வாங்கியதில் சற்று அடங்கியிருந்த சரண், வரு பேசியதும் மீண்டும் வீறுக் கொண்டு எழுந்து, “எங்க அம்மா என்னை அடிப்பாங்க.. நீ யாருடி கேட்க? எனக்கு இன்னொரு கல்யாணம் இல்லனு தான் சொன்னாங்களே தவிர உன் கூட வாழ சொல்லல. ஒழுங்கா என் குழந்தைய பெத்து கொடுத்துட்டு, விவாகரத்து பேப்பர்லயும் சைன் போட்டுட்டு கிளம்பு” என்றதும், வரு ‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான்’ என்பதாய் அதிர்ச்சியில் விழி விரித்தாள்.
 
அவனோ “ஓ, துரையம்மால.. விவாகரத்துனா புரியாது. குழந்தை பிறந்ததும் டிவோர்ஸ் நோட்டீஸ்ல சைன் பண்ணிட்டு, நீ கிளம்பலாம்னு சொன்னேன்” என்றுவிட்டு அறைக்குள் புகுந்துக் கொண்டான்.
 
அவன் அப்படி செய்யமாட்டான் என்று ஒரு மனம் சொன்னாலும், தன்னை காயப்படுத்த எந்த எல்லைக்கும் சென்றுவிடுவானோ என்று இன்னொரு மனம் திடுக்கிட, வருவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.
 
 
தொடரும்...
 

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  

ஹலோ ப்ரண்ட்ஸ்,

இன்னும் நான்கு எபிசோட்களில் கதை முடிவுறும். இறுதி அத்தியாயம் பதிந்த இரண்டே நாளில் கதையை எடுத்துவிடுவேன்.. படிக்காதவர்கள் படிக்க ஆரம்பித்து விடுங்கள்..

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  
அத்தியாயம் - 20

சரணின் செயல்களை கண்டு பாறையாய் இறுகிப் போனாள் வரு. அவனும் அவளை உயிருக்கு உயிராக நேசித்து, அவள் கொடுத்த ஏமாற்றத்தை தாளமுடியாமல் தான் தவிக்கின்றான். இருந்தும், ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் அவளை குத்தி கிழித்தால், அவளும் எவ்வளவு தான் பொறுத்துப் போவாள். அமைதியாக இருக்க தொடங்கிவிட்டாள். ஒரு பெண்ணின் வார்த்தையை விட அவளது மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். சொல்லப்படாத வலியும் ஒளிந்திருக்கும். அதை அவன் என்று உணருவான்.

மகளின் கவலையில் வாடிய மைதிலி சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார். அவருடன் ரகுவும் வந்துவிட, இங்கு ஒரு வீடு எடுத்து இருவரும் தங்கியிருந்தனர். அந்த வீட்டிற்காவது வந்து இரண்டு நாட்கள் இருக்க சொன்னால், அதற்கும் வரு மறுத்துவிட்டாள்.
 
அன்றொரு நாள், சரணை வெளியிடத்தில் சந்தித்து பேசும் முடிவில் இருந்தார் ரகு. அதற்காக அவன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அவன் வண்டியை பின் தொடர்ந்து சென்று, எப்படியோ மருமகனை நிறுத்தியும் விட்டார்.
 
வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தியவன், ரகுவின் கார் கண்ணாடியை தட்டி, அது இறங்கியதும் “எனக்கு உங்க வருவை பத்தின எந்த கதையும் தேவையில்ல. தயவுசெஞ்சு என்னை ஃபாலோ பண்ணாதீங்க” என்று எரிந்து விழுந்தான்.
 
“நான் என் பொண்ணு வருவை பத்தி பேசவே வரல சரண். என் பொண்ணு அவ ஹஸ்பென்ட் கூட நல்லா இருக்கா. இனி அவளை என் மருமகன் பார்த்துப்பார்” கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவனுக்கு எதிர்சொல்லாற்ற, கடுப்பானான் சரண்.
 
அத்துடன் வண்டியை கிளப்ப வேகமாக அதனருகில் செல்ல, அவனுக்கு பின்னே வந்த ரகுவரன் “உங்கிட்ட பேசனும் சரண். பக்கத்துல எதாவது ரெஸ்டாரண்ட்ல பேசலாம். ஐ ப்ராமிஸ், உன் பொண்டாட்டிய பத்தி பேசமாட்டேன்” என்று புன்னகைத்தார்.
 
தந்தையும் மகளும் நினைத்ததை சாதிக்காமல் தன்னை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் என்று பற்களை நறநறத்தவன், பைக்கின் பின் இருக்கையை பார்க்க, ரகுவும் தான் வந்த வண்டியை அனுப்பிவிட்டு மருமகனின் பின்னால் அமர்ந்துக் கொண்டார்.
 
மாமனை அருகிலிருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றான் சரண்.
 
“நானும் மைதிலியும் இப்போ இந்தியால தான் இருக்கோம். நான் மட்டும் எதாவது பிசினஸ் நீட்(need) இருந்தா, லண்டன் போயிட்டு வரேன்” என்று காப்பியை அருந்திக் கொண்டே ரகு சொல்ல, இதை எதற்கு தன்னிடம் சொல்கிறார் என்று தன்னெதிரே இருந்த காப்பியை தொட்டும் தீண்டாத சரண் புருவம் சுருக்கினான்.
 
அது ரகுவிற்கும் புரிய, “இந்தியால பிசினஸ் தொடங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கு இப்போ தான் நேரம் கூடி வந்திருக்கு. இங்க ஒரு ஐடி கம்பெனி தொடங்கலாம்னு இருக்கேன் சரண்” என்றார்.
 
‘அப்பாவும் பொண்ணும் சரியான பிசினஸ் பைத்தியங்களா இருக்கும் போலயே.. இதுல என்கிட்ட வேற சொல்லி கடுப்பேத்துதுங்க’ தன் மனதில் எண்ணிக் கொண்டே சரண் ரகுவரனை பார்த்திருக்க..
 
“இந்த கம்பெனிய நீதான் பார்த்துக்கணும் சரண்” என்று தன் ஆசையையும் சொன்னார்.
 
அதை கேட்டவனின் இரத்தம் கொதிக்க, “உங்க பொண்ணு சொன்னாளா, சரணுக்கு பிசினஸ் வச்சி தாங்கனு? அதுக்கு தான் சுத்தி வளைச்சு பேசிட்டு இருக்கீங்களா? கஷ்டமோ நஷ்டமோ ஒரு வேலைக்கு போயிட்டு இருக்கேன். அங்க என் குடும்பத்துக்கு போதுமான அளவுக்கு சம்பளமும் கொடுக்கறாங்க.. ஒருவேளை, இந்த வேலை போனா கூட, எங்க அப்பாவை மாதிரி ஜூஸ் கடையோ, சூப் கடையோ வச்சி பொழைச்சிப்பேனே தவிர, உங்க பிசினஸோ, உங்க பொண்ணு பிசினஸோ எனக்கு வேண்டாம்” அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்றும் பாராமல் படபடவென பொரிந்து தள்ளிவிட்டு, இருவருக்கும் வந்த காப்பிக்கு பணத்தை மேசை மீது வைத்துவிட்டு கிளம்பினான்.
 
ரகுவும் அவனை பின் தொடர “இப்போ எதுக்கு என் பின்னால வர்றீங்க?” என்று சரண் எரிந்து விழ..
 
“என்னை நீ தானே கூட்டிட்டு வந்த.. விட்டுட்டு போனா எப்படி” என்று கைகளை கட்டிக் கொண்டு கேட்டார்.
 
‘இவரை மாதிரி தான் இவர் பொண்ணும் பொறந்திருக்கா போல’ என்று தலையில் அடித்துக் கொண்டவன், வண்டியை நோக்கி சென்றான்.
 
ரகுவும் அவன் பின்னே சென்றவர், அவனை வண்டியை இயக்கவிடாமல் தடுத்து “என் பொண்ணு தனக்காகவே எதுவும் கேட்டதில்ல. அவ ஹஸ்பெண்டுக்காக கேட்டிருவாளா என்ன? வருவை பொறுத்தவரை நீ தனி, அவ தனி இல்ல. உங்களுக்கு ஒண்ணு வேணும்னு எப்போவும் என்கிட்ட வரமாட்டா. இது என் தங்கச்சி பையனுக்கு, என்னோட இன்னொரு பையனுக்கு நான் செய்யணும்னு நினைக்கிறது” அவனுக்கு புரியும் படி சொன்னார்
 
அவர் சொன்னதை கேட்டவனுக்குள் ஏதோ ஒன்றை தட்டி எழுப்புவது போல் இருந்தாலும், மறுத்து பேச வாய் திறக்க, அவனை கை நீட்டி தடுத்தவர் “நான் பேசி முடிச்சிடுறேன். உன்னை பார்த்தா, அப்படியே எங்க அப்பாவை பார்த்த மாதிரி இருக்கு. அவருக்கு வர அதே கோபம் உன்கிட்டயும் இருக்கு. அவருக்கு என்மேல இருக்குற கோபம் கூட ஒரு விதத்தில நியாயம். உனக்கு ஏன் சரண், என்மேல இவ்ளோ கோவம்?” என்றதும் சரண் தன் பார்வையை தழைக்க..
 
“மைதிலியை நான் காலேஜ் படிக்கறதுல இருந்து லவ் பண்ணேன். அவ உங்க அம்மா கல்யாணத்துக்காக காத்திட்டும் இருந்தா. அப்படியிருக்கறப்போ, கனிக்காக அவளை விடறது எவ்ளோ பெரிய துரோகம்” என்று சரணை பார்த்து கேட்டார்.
 
அதுவரை அமைதியாக இருந்தவன், இப்போது தனக்கும் பேச இருக்கிறது என்பது போல் “அதான் கனிக்கு துரோகம் பண்ணிட்டீங்களா?” என்று பற்களை கடித்தான். 
 
“என் கனிக்கு நான் துரோகம் பண்ணனும்னு நினைக்கல.. கல்யாணத்துக்கு நல்ல வரனை பார்த்துக் கொண்டு வந்து கொடுத்தா, இப்போ நான் செய்யறேன்னு சொன்னதும், என்ன, ஏதுன்னு கூட கேட்காம பிசினஸ் வேண்டாம்னு சொன்னியே, அதே போல தான் அன்னைக்கு என் அப்பாவும் சொன்னார். தப்பு செஞ்சவனுக்கு அத திருத்திக்க வாய்ப்பே கிடையாதா சரண்? இதை அன்னைக்கு என் அப்பாகிட்ட கேட்க தைரியம் இல்ல. நீயாவது என் இடத்துல இருந்து யோசிச்சு பாரு. நானும் வலியோட தான் வாழ்ந்திட்டு இருக்கேன்னு புரியும். என் கனி இழந்த எல்லாத்தையும் கொடுக்க முடியலனாலும், இனியாவது அவளை ராணி மாதிரி பார்த்துக்கணும்னு நினைக்கிறேன்.. அதே நேரத்துல பணத்தை வைச்சு வசதிய கொடுத்து உங்களை அசிங்கப்படுத்த விரும்பல. அதான் கனியை, சுசியை பொருளாதாரத்துல மேலேத்த பிசினஸ் தொடங்கறோம்” என்றார்.
 
அனைத்திற்கும் ஒன்றும் பேசாமல் சரண் அமைதி காக்க, “ஆனா உனக்கு பிசினஸ் தொடங்கறது முழுக்க முழுக்க என் விருப்பம். என் பொண்ணுக்கு தெரிஞ்சா என்னை சத்தம் போடுவா. அவளுக்கு, அவ சரண் தன் அப்பாவான என்கிட்ட இருந்து கூட, எதையும் வாங்கறது பிடிக்காது. உனக்கும் சுசிக்கும் சின்ன வயசுல இருந்து ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்கணும், முடியல.. சுசியை மனுக்கு என் மருமகளா இல்ல, மகளா கட்டி கூட்டிட்டு போகணும்னு நினைச்சேன். இப்போ அத பேசறதே தப்பு. உனக்காச்சும் நான் பண்ணி பார்க்க வேண்டாமா?” என்று ஏக்கமாக கேட்டவர்
 
“இப்பவும் உன்னால ஏத்துக்க முடியலைன்னா, நான் உங்கிட்ட ஒரு உதவி கேக்கறதா நினைச்சிக்கோ. என்னால இங்கிருந்து பார்த்துக்க முடியாததை, நீ இருந்து பார்த்துக்கிட்டா, நான் நிம்மதியா அங்க இருக்க பிசினஸை பார்ப்பேன்ங்கற ஒரு உதவி” அவனை வேறு விதத்தில் தான் கையாள வேண்டும் என்று சொன்னார்.
 
அப்போதும் ஒன்றும் சொல்லாத சரண் தன் பின் இருக்கையை பார்க்க, ரகுவும் ஏறி அமர்ந்துக் கொண்டார். அவரது வசிப்பிடத்தின் முகவரி கேட்டு வாசலில் விட்டுவிட்டு சென்றானே தவிர, அவர் கேட்டதற்கு ஒரு வார்த்தையும் வாய் திறக்கவில்லை.
 
வருவிற்கு இப்போது ஐந்தாம் மாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. கனி, சுசியையும் நிலவனையும், குழந்தைக்கு ஏழாம் மாதம் பிறந்ததும் அவளது மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். ஏற்கனவே ஐந்தாம் மாதத்தின் முடிவில், சுசியின் மாமியார் இதை பற்றி பேசிய போது, இன்னும் சிறிது காலம் அக்காவும் மருமகனும் தங்களுடனே இருக்கட்டும் என்று சரண் வேண்டுகோள் வைக்க, அவர்களும் சரியென்றுவிட்டனர்.
 
ஆனால் சுசி இருக்கும் வரை, மகன் இரவு அறையிலும் தங்கமாட்டான், வருவுடனும் நெருக்கம் பிறக்காது என்று யோசித்த கனி, அதை மகளிடமும் பேசி, அவளை ஏழாம் மாதம் தொடங்கியதும் கனத்த மனதோடு புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இருந்தும் வீட்டிற்கு வந்து போக இருக்கவேண்டும் என்று சரண் அக்காவிற்கு அன்புக்கட்டளை இட, அவளும் ஞாயிறு காலை வந்து மாலை பார்த்தியுடன் கிளம்பி விடுவாள்.
 
சுசி இருந்த வரை, அவள் வருவை பார்த்துக் கொண்டாள். அவள் மனநிலையை மாற்ற சேம்பும் உடனிருந்தான். இப்போது இருவரும் இல்லாமல் போக, வருவிற்கு மன அழுத்தம் கூடிக் கொண்டே போனது. அதில் சரியாக சாப்பிடாமலும் இருந்தாள். சமைத்து வைப்பது அப்படியே இருப்பதை கண்டு கனி கேட்டாலும், வாந்தி வருவது போல் இருக்கிறதென்று எதையாவது சொல்லி சமாளிப்பாள்.
 
அந்த மாத இறுதியில், மருமகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற கனி, மாலை சரண் வீட்டிற்கு வந்ததும் “டாக்டர் அம்மா உன்னை பார்க்கணும்னு சொல்றாங்க சரண்” என்று தெளிவில்லாத முகத்தோடு சொன்னார்.
 
அவர் சொன்னதை கேட்டு மனம் தடதடத்தாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல், என்ன என்பதாய் சரண் தாயை பார்க்க, “பார்த்தாலே தெரியலையா.. நம்ப வரு சரியா சாப்பிட  மாட்டேங்கிது. ரொம்ப மெலிஞ்சி போச்சு.. அதான் டாக்டர் அம்மா உன்னை நாளைக்கு கண்டிப்பா பார்க்கணும்னு சொல்லிட்டாங்க” என்றார் கவலை தோய்ந்த குரலில்.
 
அதை கேட்டவன் அறையை எட்டி பார்க்க, அங்கே வரு அசதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்வையால் வருடிக் கொண்டே சரியென்று தலையாட்டி இருந்தான் சரண்.
 
அடுத்த நாள் காலை, நண்பனிடம் கார் கேட்டு வாங்கி வந்து, வருவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுக் கொண்டிருந்தான் சரண்.
 
ஓரக்கண்ணால் அவளை தலை முதல் பாதம் வரை ஆராய, ஏற்கனவே சைஸ் ஜுரோவில் இருந்தவள், இப்போது கிள்ளினால் கைக்கு சதை வருமா என்ற அளவில் மெலிந்திருந்தாள். இதை எப்படி கவனிக்காமல் போனோம் என்று தன்னையே கடிந்துக் கொண்டவனுக்கு அதேநேரம் அவள் தோற்றத்தை பார்க்க பார்க்க கோபம் வர, “உனக்கு என் புள்ளைய ஒழுங்கா பெத்து கொடுக்கணும்ங்கிற எண்ணம் இருக்கா, இல்லையா? சாப்பிடறதுக்கு என்ன கேடு? இப்போ வெயிட் குறைச்சு போச்சு, சத்து இல்லைனு டாக்டர் கூப்பிட்டிருக்காங்க” விழி தாழ்த்தி அமைதியாக அமர்ந்திருந்தவளிடம் கோபமாக சத்தமிட்டான்.
 
அதில் வருவிற்கு கண்கள் கரித்துக் கொண்டு வர, அவனை நிமிர்ந்து பார்த்தாலும் ஒருவார்த்தையும் பேசவில்லை.
 
இருவரும் மருத்துவரின் அறையில் இருக்க, “உங்க மதர்கிட்ட நிறைய டைம் உங்களை பார்க்கனும்னு சொல்லிட்டேன் மிஸ்டர். சரண். அவங்களும் ஒவ்வொரு முறையும் அடுத்த டைம் கூட்டிட்டு வரேன்னு சொல்லுவாங்க. அப்படி இல்லைன்னா உங்க வைஃப், எதுவா இருந்தாலும் என்கிட்டயே சொல்லுங்கன்னு சொல்றாங்க” என்று அதிருப்தியாய் இருவரையும் பார்த்தார்.
 
சரணோ கைகளை பிசைந்துக் கொண்டு அமர்ந்திருக்க, “உங்க வைஃப் ஃபார்ட்டி த்ரி கேஜிஸ் தான் இருக்காங்க. இப்படியே இருந்தா பேபிக்கு என்ன சத்து போகும். இதுல பிரஷர் வேற ஏறியிருக்கு. பிளட் பிரஷர் ப்ரெக்னென்சில என்னென்ன பாதிப்பை கொடுக்கும்னு தெரியுமா..?” என்று அவனை கேள்வி மேல் கேள்வி கேட்க, திரும்பி வருவை பார்த்தவன் மீண்டும் மருத்துவரிடம் பார்வையை திருப்பினான்.
 
“உங்க வைஃப்போட பிளட் குரூப் என்னனு தெரியுமா மிஸ்டர். சரண்?” அவர் அடுத்த கேள்வியை கேட்க, தெரியாது என்பதாய் குற்றவுணர்வில் தலை கவிழ்ந்தான்.
 
அவனை முறைத்துவிட்டு “சரி உங்க பிளட் குரூப் என்னனு தெரியுமா?” என்று கேட்டதும் “பி.. பி பாஸிட்டிவ்..” என்று திணறி சொன்னான்.
 
“என்ன ஹஸ்பெண்ட் நீங்க.. அவங்க உங்க பிளட் குரூப் சரியா சொல்றாங்க” என்று அதிருப்தியாக தலையை ஆட்டியவர் “உங்க வைஃப்போட ப்ரெக்னென்சில இருக்கற காம்ப்ளிகேஷன்ஸ் தெரியுமா மிஸ்டர். சரண்? அவங்களது ஆர்எச் நெகட்டிவ் ப்ரெக்னென்சி” என்று அழுத்தமாக கூற, அப்படியென்றால் என்னவென்று கூட தெரியாமல் திகைத்து விழித்தான் சரண்.
 
நடுங்கிய குரலில், புருவ முடிச்சோடு “எங்க குழந்தை..க்கு எதாவது பிரச்சனையா டாக்டர்? வர்ணி.. வர்ணிகாவுக்கு எந்த சிக்கலும் இல்லல” என்று துடித்து அவரிடம் கேட்க..
 
“உங்க வைஃப்போட பிளட் டைப், ரீசஸ் நெகட்டிவ்.. உங்களது, ரீசஸ் பாஸிட்டிவ். இந்த மாதிரி பேரண்ட்டால கன்சீவ் ஆகற பேபி, ரீசஸ் பாஸிட்டிவா இருக்க நிறைய பாஸிபிலிட்டிஸ் இருக்கு. உங்க பேபி ரீசஸ் நெகட்டிவா இருந்துட்டா, அம்மா குழந்தை ரெண்டுபேருக்குமே எந்த ப்ராப்ளமும் இல்ல. ஒருவேளை, உங்கள மாதிரி ஆர்எச் பாஸிட்டிவா இருந்துட்டா, அம்மாவுடைய இரத்தமும் பேபியோட இரத்தமும் கலக்க கூடாது. அப்படி கலந்தா, அது குழந்தைக்கு நிறைய பாதிப்பை கொடுக்கும்” என்றார்.
 
அவர் சொல்வது என்னவென்று கூட புரியாத போதும், தன் குழந்தைக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்த்தவனுக்கு கண்கள் கலங்கி விட்டது.
 
கலங்கிய கண்களாகவே “நீங்க சொல்றது சரியா புரியல டாக்டர். குழந்தையை காப்பாத்திடலாம்ல?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.
 
“ஒருத்தரோட சிவப்பு இரத்த அணுக்களோட மேல்பரப்புல புரதம் இருந்தா, அத ஆர்எச் பாஸிட்டிவ்னு சொல்லுவோம். அப்படி இல்லைன்னா, அது ஆர்எச் நெகட்டிவ். அப்படி ஆர்எச் நெகட்டிவ் மதர் கன்சீவ் ஆகறப்போ, அவங்க பார்ட்னர் ஆர்எச் பாஸிட்டிவா இருந்தா, மதருக்கும் பேபிக்கும் ஆர்எச் இன்காம்பட்டமிலிட்டி(Rh incompatibility) ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கு”
 
“உங்களோடதும் அந்த கேஸ் தான். நீங்க, பி-பாஸிட்டிவ்.. உங்க வைஃப், ஏபி-நெகட்டிவ். பெரும்பாலும் மதரோட பிளட் பேபியோட பிளடோட கிராஸ் ஓவர் ஆகாது. ஒருவேளை கலந்துட்டா, மதரோட பாடி ஆர்எச் பாஸிட்டிவ் பிளட்டை பாரின் பாடியா தான் பார்க்கும். அதோட ஆர்எச்-ஆன்டி என்கிற ஆன்டிபாடிஸ்ஸயும் உருவாக்க தொடங்கிடும். அப்படி உருவாகுற ஆன்டிபாடீஸ், குழந்தையோட பிளட் செல்ஸை அழிக்க ஆரம்பிக்கும். இதன் மூலமா குழந்தைக்கு ஜான்டிஸ், பிரைன், ஹார்ட் ப்ராப்ளமெல்லாம் வரலாம். இல்ல, செவித்திறன், பேச்சுதிறன் இல்லாத குறைபாடுகளோடவும் பிறக்கலாம். அதுக்கு தான் அடிக்கடி ஆன்டிபாடீஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் எடுப்போம். அதுல ஆன்டிபாடீஸ் உருவாகிட்டத கண்டிபிடிச்சிட்டா, குழந்தையை முன்னாடியே கூட ஆப்ரேட் பண்ணி எடுக்குற மாதிரி இருக்கும்” மருத்துவர் சொல்ல சொல்ல, சரணுக்கு கண்களெல்லாம் இருண்டு, தலை சுற்றியது.
 
அவன் முகத்தை வைத்தே அவனது நிலையை புரிந்த மருத்துவர் “டோன்ட் வொர்ரி மிஸ்டர். சரண். பர்ஸ்ட் ப்ரெக்னென்சில மினிமல் டூ நோ ரிஸ்க்னு சொல்லலாம். ஆனா லேபர் டைம்ல கண்டிப்பா மதர் அண்ட் பேபி பிளட் கன்டாக்ட்ல வரும். அப்போ உருவாகுற ஆன்டிபாடீஸ், அடுத்தடுத்த ப்ரெக்னென்சிய பாதிக்கும். உங்க வைஃப் கேஸ்ல, இப்ப வரைக்கும் ஆன்டிபாடீஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்ல நெகட்டிவ்னு தான் வந்திருக்கு. ஆனா லேட்டர் பார்ட் ஆஃப் தி ப்ரெக்னென்சில நிறைய வாய்ப்புகள் இருக்கனால, டூவென்டி எயிட் வீக்ஸ்ல ஒரு இன்ஜெக்ஷன் போடணும். ஆர்எச் இம்முனோகுளோபுலின்(Rho(D) immunoglobulin) இன்ஜெக்ஷன். அது பாடி, ஆன்டிபாடீஸை உற்பத்தி பண்றத தடுக்கும். பேபி பிறந்ததும், ஆர்எச் பாஸிட்டிவ் பேபியா இருந்தா, செவன்டி டூ ஹவர்ஸ்குள்ள இன்னொரு இன்ஜெக்ஷன் போடணும்” என்று அடுத்தடுத்த சிக்கலையும், அதற்கான தீர்வையும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
 
தான் கேட்ட விஷயத்திலிருந்து முழுமையாக வெளிவராதவன், சிக்கலை தீர்க்கும் வழி இருப்பதாய் அவர் சொன்னதை கேட்டதும் “அந்த இன்ஜெக்ஷன் போட்டா எங்க குழந்தைக்கும், வர்ணிக்கும் ஆபத்து வராதுன்னா அத போட்டுடலாம் டாக்டர்” மறுநொடியும் தாமதிக்காமல் சொன்னான்.
 
மருத்துவரை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது, வர்ணிகா ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, சரண் தான் அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்.
 
“உனக்கு இது முன்னாடியே தெரியுமா?” என்று அவளிடம் சரண் கேட்க..
 
அவன் குரல் கேட்டு அவனை திரும்பி பார்த்தவள் “லண்டன்ல செக்கப் பண்ணும் போதே சொல்லிட்டாங்க. நான் இந்தியா போகணும்னு சொன்னதும், இங்க இருக்க டாக்டருக்கு லெட்டர் கொடுத்தாங்க” என்றாள்.
 
‘ப்ச்..’ அனைத்தும் தன் தவறென்று அதிருப்தியாக தலையாட்டியவன் “எங்க அம்மாவும் உங்க அப்பாவும் நமக்கு எப்படிப்பட்ட பொருத்தமான கல்யாணத்தை பண்ணி வச்சிருக்காங்கனு பார்த்தியா..” என்று வெறுமையாக புன்னகைத்தான்.
 
நேராக வீட்டிற்கு செல்வான் என்று பார்த்தால், கோவிலின் வாசலில் கொண்டு போய் வண்டியை நிறுத்தினான் சரண். எதற்கு இங்கு வந்துள்ளோம் என்பதாய் வரு அவனை திரும்பி பார்க்க, “இறங்கு, சாமி கும்பிட்டுட்டு போகலாம்” என்றான்.
 
இருவரும் சாமி சன்னிதானத்தில் நிற்க, இமைக்கவும் மறந்து கடவுளை பார்த்திருந்த சரணின் கண்களில் கண்ணீர் தேங்கியது.
 
“குழந்தையை கலைச்சிடலாம்னு ஒரு கோவத்துல சொல்லிருந்தாலும் அதுல எங்க குழந்தையோட நலன் தான் இருந்துச்சு. ப்ளீஸ், எங்க குழந்தை நல்ல படியா பிறக்கணும். என்னை விட அவ தான் குழந்தை மேல ஆர்வமா இருக்கா. அவளுக்காகவாவது, வர்ணிக்கும் எங்க குழந்தைக்கும் எந்த பாதிப்பும் வர கூடாது” என்று மனமார இறைவனிடம் வேண்டுதல் வைத்து விட்டே மனைவியுடன் வீடு திரும்பினான் சரண்.
 
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும், அதுவரை வேலைக்கும் செல்லாமல் பதைப்புடன் இவர்களை எதிர்பார்த்திருந்த கனி, இருவரையும் நோக்கி ஓடிவந்து என்ன சொன்னார்கள் என்பதாய் தவிப்புடன் பார்க்க, “நாற்பத்திமூணு கிலோ தான் இருக்காலாம். அதான் நல்லா டோஸ் விட்டு அனுப்பினாங்க” என்று உண்மையை மறைத்துவிட்டான்.
 
கேட்ட விஷயங்கள் செரிக்க தனக்கே நேரமெடுக்கும் என்ற போது, அன்னைக்கு மட்டும் தெரிந்தால் அதிலேயே மனம் உழல்வார் என்று சொல்லாமல் மறைத்தான்.
 
வர்ணிகா உள்ளே ஓய்வெடுத்து கொண்டிருந்தாள். கனியும் மருமகளுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் நிம்மதியாக வேலைக்கு கிளம்பி சென்றிருந்தார். வெகுநாட்களுக்கு பிறகு தன் கையாலே அவளுக்காக சமைத்திருந்த சரண், அதை தட்டில் போட்டு எடுத்து வந்து அவளை எழுப்பினான்.
 
அவள் எழுந்தமர தானும் அவளெதிரே அமர்ந்து அவளுக்கு உணவை ஊட்டிவிட்டு கொண்டே “ஏன்டி உன்னோட ப்ரெக்னென்சில இருக்கற சிக்கலை என்கிட்ட சொல்லல?” என்று ஆற்றாமையாக அவளிடம் கேட்டான்.
 
“நீ தான் உங்கிட்ட எதுவும் பேச கூடாதுன்னு சொல்லிட்டியே சரண்” என்று பாவமாக சொன்னாள்.
 
“என்னமோ என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவ மாதிரி.. பிசினஸ் ஆரம்பிக்கனும்னா வளவளன்னு பேசுவியே.. அப்ப இதையும் சொல்ல வேண்டியது தான.. உன் கூட வாழ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே உன் பிளட் குரூப் என்னனு பயோடேட்டா வாங்கி பார்த்திருக்கணும்” என்று நெற்றியை தேய்த்தவன்..
 
“போனது போகட்டும், இனி உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட தான் கேட்கணும்” என்று உரிமையாக சொன்னான். அவளோ அவனை பார்த்து திகைத்து விழிக்க, அவளை தன் நெஞ்சிலும் சாய்த்துக் கொண்டான்.
 
அப்போதும் திகைப்பு குறையாமல் அவனை விட்டு விலகியவள் “உன் பாப்பாக்காக என்னை மன்னிச்சிட்டியா சரண்?” என்று ஆர்வமாக கேட்டாள்.
 
“தப்பு.. என் பாப்பாங்களுக்காக” என்று அவள் புறங்கையில் முத்தம் வைத்தான்.
 
“நிஜமாவே நீ என்னை மன்னிச்சிட்டியா சரண்?” நம்ப முடியாமல் அவள் மீண்டும் கேட்க..
 
“கோபத்தை காட்டுறதுக்கான நேரம் இது இல்லைனு புரிஞ்சிக்கிட்டேன்” புரியாத புதிராகவே பதிலளித்தான்.
 
அது உண்மையும் தான். அவளை மன்னிக்க கூடாதென்று அவன் நினைக்கவில்லையே. மன்னிக்க முடியாமல் தானே அவனும் கஷ்டப்பட்டு, அவளையும் கஷ்டப்படுத்தினான். இப்போது வருவும் சில முடிவுகளை எடுத்துவிட்டிருக்கிறாள் என்பதை அறியாமலே, தன் கண்மணிகளுக்காக வீம்பென்ற வளையத்திலிருந்து வெளியே வரும் முடிவை எடுத்தான் சரண்.
 
 
தொடரும்...
 

   
Joedeepan reacted
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 66
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
Joedeepan reacted
ReplyQuote
Page 3 / 3
Scroll to Top