All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
கவி தில்லையின் "ரன் பிரின்சஸ் ரன் ..." - கதை திரி
ஹாய் என்ன கதையோட பேர மாத்திட்டேன் பாக்குறீங்களா, எஸ் "ரன் பிரின்சஸ் ரன் ..." இது வேற கதை, லாஜிக் பாக்காம கருத்து சொல்லாம படிக்க வேண்டிய கதை. ஒவ்வொரு எபி போடும் போதும் உங்களோட ஊக்கத்தை காட்டினா எனக்கு எழுதா தெம்பா இருக்கும். வாங்க கதைக்குள்ள போகலாம்.
ரன்- 1
அடர்ந்த காடு, எங்கும் கும்மிருட்டு. சற்று முன்பு பெய்த மழை, குளிர்ச்சியை தர தவளைகளும் பூச்சிகளும் மகிழ்ச்சியில் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. ஆந்தைகளின் அலறல், சற்று தொலைவில் ஊளையிட்டுக் கொண்டிருந்த ஓநாய், திரும்பிய பக்கமெல்லாம் ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் உயிரை குடிக்க காத்திருக்கும் பேய் பிசாசாய் காட்சியளிக்க, அந்த இடமே கர்ண கொடூரமாய் காட்சியளித்தன.
இலைகளில் இருந்து சொட்டு சொட்டாய் சொட்டிய மழை நீரின் விடா முயற்சியால் மெல்ல விழிகளை திறந்து பார்த்தவள் எதிரே தெரிந்த உருவத்தை கண்டு "வீல்" என்று அலறினாள். அடுத்த நொடி சத்தம் வந்த திசையை நோக்கி சர்ர் சர்ர் என்று சீறி பாய்ந்து வந்து விழுந்தன அம்புகள்.
ஏற்கனவே இருட்டில் அருகில் தெரிந்த மரத்தை கண்டு பேய் என்று நினைத்து பயத்தில் அலறியவள், இந்த திடீர் தாக்குதலை கண்டு அதிர்ந்து போனாள். பயத்தில் நிலை தடுமாறி கீழே விழ போனவள் அப்பொழுதுதான் தான் ஓங்கி வளர்ந்திருந்த மரத்தின் கிளை ஒன்றில் படுத்திருப்பது தெரிந்தது.
"இங்க எப்படி ...' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
"சத்தம் அந்த பக்கம் தான் கேட்டது ... நன்றாக தேடுங்கள் ..." என்ற குரல் சற்று தொலைவில் கேட்க, அதை தொடர்ந்து சரக் சரக் என்ற காலடி சத்தத்தை கேட்டதும் பயத்தில் மரக்கிளையை தன் இருக்கைகளை கொண்டு கீழே விழாதவாரு அணைத்துக் கொண்டாள்.
"யாரு இவனுங்க ... இது எந்த இடம், இங்க எப்படி வந்தேன் ..." என்று தனக்குள்ளே கேள்விகளை கேட்டபடி சுற்றியும் பார்வையை சுழலவிட்டவளின் முதுகு தண்டு அந்த இடத்தை கண்டு பயத்தில் சில்லிட்டது.
"தீப்பந்தத்தை நன்றாக உயர்த்தி பிடித்து தேடுங்கள் ..." என்ற குரலில் மெல்ல தலையை உயர்த்தி பார்த்தாள். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தீப்பந்தங்கள் தெரியவும்,
'கஞ்ச பிசினாரிங்களா ... டார்ச் லைட் வச்சுக்க கூட துப்பு இல்ல ... இதுல என்ன போட வேற அம்பு வில்ல தூக்கிட்டு வந்துட்டானுங்க ... யாரு இவன்க கிட்ட அசைன்மெண்ட் கொடுத்தது ...' என்று நினைத்தவள்,
'வாட் ... உன்ன தான் போட வந்தாங்கனு முடிவு பண்ணிட்டியா ... ஆமா நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா ...' என்று மனசாட்சி கேள்வி கேட்கவும், கையில் தீப்பந்தத்துடன் பத்திற்கும் மேற்பட்ட ஆட்கள் அவள் இருக்கும் மரத்தின் அருகில் குவிந்தனர்.
"என்ன மாறா ... அப்பெண் மாயவித்தைகள் தெரிந்தவளோ ... நம் கண் முன்னே மறைந்துவிட்டாளே ..." என்று ஒருவன் அலுத்துக் கொள்ள,
"ஆமாம் எங்கு தேடியும் அப்பெண்ணை காணவில்லை ...' என்று மற்றொருவன் குரல் கொடுக்க,
"அஹ்ஹா ... சிறு பெண் ... இருட்டில் எங்கே சென்றிருக்க போகிறாள் ... பேசுவதை விட்டுவிட்டு சத்தம் வந்த இந்த இடத்தை நன்றாக தேடி பாருங்கள் ..." என்று அந்த கூட்டத்திற்கு தலைவன் போல காட்சியளித்த மாறன் அவர்களுக்கு உத்தரவிட்டான்.
மரக்கிளையில் படித்திருந்தபடி, கீழே நடப்பதை தான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இருக்கும் இடத்தை மரத்தின் மேல் ஏறி வந்து பார்த்தால் மட்டுமே மற்றவர்களின் கண்களுக்கு அவள் புலப்படுவாள், அந்தளவிற்கு படர்ந்து விரிந்திருந்த உயந்த கிளையில் ஒழிந்துக் கொண்டிருந்தாள்.
'யாரு இவனுங்க ... உண்மையிலயே பஞ்சத்துல அடிபட்ட கொலக்கார கும்பல் தான் போல ... பேண்ட் சட்ட கூட போட முடியாம, வெறும் வேட்டிய கால சுத்தி கட்டிட்டு வந்துருக்கானுங்க ... குளிர் நடுங்குது மே சட்ட கூட போடல ...' என்று அவர்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அருகில் உள்ள புதரில் இருந்து சலசலப்பு கேட்க தன் பார்வையை அங்கே நகர்த்தியவளின் விழிகளில், நிதான நடையுடன், தன் பாதையின் குறுக்கே வளர்ந்திருந்த சிறு செடிகளை கையில் உள்ள வாளைக் கொண்டு வெட்டியபடி நடந்து வந்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
அவனை கண்டதும் அதுவரை சலசலத்துக் கொண்டிருந்தவர்கள் அமைதியாகி உடலை குறுக்கி தலை வணங்கி நின்றனர்.
"மன்னியுங்கள் இளவரசே ... எமக்கு கொடுத்த பணியை முடிக்க முடியாமல் தோல்வியை தழுவி நிற்கும் இந்த பாவியை தண்டியுங்கள் இளவரசே ..." என்று தன் இடையில் சொருகியிருந்த வாளை இருக்கைகளில் ஏந்தியபடி இளவரசன் என்று அழைக்கப்பட்டவன் முன் மண்டியிட்டான் மாறன்.
அவர்களை நெருங்கியவன் எதுவும் பேசாமல் அமைதியாக அந்த பெரிய மரத்தில் சாய்ந்து நின்று கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி நிதானமாக தன் முன்னே மண்டியிட்டு வணங்கிய மாறனை தன் கூர் விழிகளால் அளந்துக் கொண்டிருந்தான்.
அந்த இடமே சற்று நேரத்தில் அமைதியாகி போக, காட்டு பூச்சிகளின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
"யாருடா அந்த அப்பாடக்கர் இளவரசன் ..." என்றவாறே
தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தாள். அதே நொடி அவனும் தலை நிமிர்த்தி பார்க்க, அவளின் இதயம் பயத்தில் துடிப்பதை நிறுத்தியிருந்தது. பதட்டத்துடன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டவள், அவசரமாக தன் மார்பை நீவிவிட்டவாறே,
"வெரி டேன்ஜரஸ் பெல்லோவ் ... கொஞ்ச நேரத்துல மரண பயத்த காட்டிட்டான் ..." என்று முணுமுணுத்தவள் அவனை ஆராய தொடங்கினாள்.
மற்றவர்கள் அனைவரும் சாதாரண வெள்ளை வேஷ்டியை காலில் சுற்றி கட்டியிருக்க, இளவரசன் என்று அழைக்கப்பட்டவன் மட்டும் பளபளக்கும் சிகப்பு நிற வேஷ்டியில் தோலை தழுவிய பட்டு வஸ்திரத்துடன் கம்பீரமாய் நின்றிருந்தான்.
அனைவரின் தலைமுடியும் விரித்து விட்டிருக்க, இவன் மட்டும் சிறு தங்கநிற கிளிப் போன்ற ஒன்றில் முடி கலையாதவாறு சிண்டு போட்டிருந்தான்.
"ஓஹ் ... இந்த சிண்டுக்காரன்தான் இளவரசனா ... சரியா தெரியாத போதே செம்ம கிக்கு கொடுக்குறானே ... நேர்ல பார்த்தா எப்படியிருக்கும் ..." என்று சூழ்நிலையை மறந்து நினைத்துக் கொண்டிருக்கும் போதே,
'ம்ம்ம் ... உன் தல போயிருக்கும் ...' என்று மனசாட்சி உள்ளிருந்து காரி துப்ப, அது சொன்னது உண்மைதான் என்பது போல பேசிக் கொண்டிருந்தான் அந்த இளவரசன்.
"உம் தலையை வெட்டி எடுத்துவிட்டால் நான் நினைத்த காரியம் நிறைவேறிவிடுமா ... ஹ்ம்க் ... சிறு பெண் ... உங்கள் அனைவர் கண்களிலும் மண்ணை தூவி விட்டு மறைந்திருக்கின்றாள் அவளை வெறிக் கொண்டு தேடுவதை விட்டுவிட்டு மன்னிப்பா கேட்கின்றாய். மன்னிப்பு கேட்பதை விட்டுவிட்டு கொடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கின்ற வழியை பார் ..." என்று அதிகாரமாய் உத்தரவிட்டான்.
'படுபாவி பய அவன்களே தேட முடியாம சோர்ந்து போய் இருக்கானுங்க, இவன் வெறி ஏத்திவிடுறான் பாரு சிண்டுக்கார வில்லன் … ' என்று மனதில் அந்த இளவரசனை கருவிக் கொண்டிருக்க,
"என்ன ஆனாலும் பொழுது விடிவதற்குள் அவள் உயிர் பூவுலகத்தை விட்டு மேலோகம் செல்ல வேண்டும் ... இது என் உத்தரவு ..." என்று மீண்டும் அவன் குரல் அவள் காதுகளில் கருண கொடூரமாய் ஒலித்தது.
"உத்தரவு இளவரசே ..." என்று அனைவரும் ஒன்று போல கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து கலைய முற்பட,
"உயிரை எடுத்தால் மட்டும் போதாது ... உடலை சிறு சிறு துண்டுகளாய் வெட்டி காட்டு விலங்குகளுக்கு உணவிடுங்கள் ..." என்று கண்கள் வெறியில் சிவக்க மீண்டும் அதிகாரமாய் உத்தரவிட்டான்.
"ஆகட்டும் இளவரசே ..." என்று அவன் கட்டளையை ஏற்றுக் கொண்ட அனைவரும் வணங்கி விடைபெற்று சென்றனர்.
"அட சண்டாள கொலைகார பாவி ... கொலகாரங்கல்லையே ரொம்ப கொடூரமான கொலைகாரனா இருக்கியேடா ... இளவரசானம் இளவரசன் ... பெரிய சோழ நாட்டு இளவரசன் நினைப்பு ... இருடா கீழ இறங்கி வந்து உன் மண்டையை ஒடைச்சு கபாலத்தை வெளியே எடுக்கல, என் பேரு என் பேரு ..." என்று வாய்விட்டு சபதம் எடுத்தவள் திகைத்து போய் அசைவற்று அமைதியாகிவிட்டாள்.
'அய்யோ என் பேரு என்ன ... ஞாபகத்துல வரலையே ... நா யாரு ... இங்க எப்படி வந்தேன் ... அந்த சிண்டுக்காரன் யாரு ... என்ன எதுக்கு தொறத்துறாங்க ...' என்று தனக்குள் கேள்விகளை கேட்டபடி குழம்பிப் போனவள் தலையை வேகமா தட்டிக் கொண்டாள்.
"நா யாரு ... நா யாரு ... என் பேரு என்ன ..." என்று கண்ணை மூடி தன்னை பற்றி ஞாபகத்திற்குள் கொண்டுவர முயன்றவளின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
'ஓஹ் காட் ... இது என்ன கொடுமையான விளையாட்டு ... ஒன்னும் இங்க என்ன நடக்குதுன்னு புரிய வச்சிருக்கணும் இல்ல நா யாருனு ஞாபகத்த கொடுத்துருக்கணும் எதுவும் இல்லாம இது என்ன அந்த சிண்டுக்கார இளவரசனோட ரொம்ப கொடுமைக்காரனா இருக்க ...' என்றவளுக்கு உண்மையில் கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலைதான். இல்லை இல்லை மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலைதான்.
சற்று நேரம் கண்ணை மூடி என்ன செய்வது என்று நிதானமாக யோசித்தவளின் மனம் சற்று சமநிலைக்கு வந்திருக்க, மெல்ல கண்ணைத் திறந்து பார்த்து மூச்சை இழுத்து விட்டாள்.
"ஓகே ... இங்க நடக்குறத வச்சு பாத்தா ... கண்டிப்பா இது கனவாதான் இருக்கும் ..." என்று சொல்லிக் கொண்டவள், தன் கையை அழுத்தமாக கிள்ளி பார்க்க, உயிர் வலியில் ஆஆ என்று சத்தம் போட போனவள் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க பெரிதும் போராடினாள்.
"அப்போ இது கனவில்லையா ..." என்று என்னும் போதே பயத்தில் வேர்வைகள் முத்து முத்தாய் அவள் முகத்தில் பூத்தன.
"அப்போ கனவு இல்லனா, வேற என்னவா இருக்கும் ... நா தூங்கிட்டு இருக்கும் போது எனிமிஸ் என்ன கடத்திட்டு போய் காட்டுவாசிங்க இருக்க இடத்துல விட்டுட்டாங்களா ..."
"இல்ல இல்ல கண்டிப்பா இது ஒரு ரியாலிட்டி ஷோவா தான் இருக்கனும், கேம்ல என்டர் ஆனதுல இருந்து நம்மள மறந்து எப்படி சூழ்நிலையை சமாளிக்கிறோம் இதான் டாஸ்கா இருக்கனும் ... எதுவா இருந்தா என்ன ப்ரைஸ் மணிகுத்தானே இவ்வளவும், கண்டிப்பா இவன்க கைல மாட்டமா வெளியே வந்து ஜெயிச்சு காட்டுறேன் ... அடேய் போலி பிரின்ஸ் இருடா என்னையா துண்டு துண்டா வெட்டி அணிமல்ஸ்க்கு கொடுக்க சொன்ன ... ஜெயிச்சுட்டு வந்து உன் சிண்ட புடிச்சு ஆட்டி நாக்க புடுங்குற போல நாலு கேள்வி கேட்கல ... நா நா ..." என்று கோபத்தில் மூக்கு விடைக்க சபதம் எடுத்தவளுக்கு தன் நிலை கண்டு அழுகை வந்தது.
கன்னத்தில் வழிந்த கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்டே,
"எதுக்கு அழுகணும், அழுதா மட்டும் எல்லாம் சரியாகிடுமா ... கேம்ஸ் ரூல்ஸ் தெரிஞ்சுதானே உள்ள வந்துருக்கேன் ... தைரியமா எல்லாத்தையும் பேஸ் பண்ணனும் ..." என்று உறுதியெடுத்தவள்,
"ம்ப்ச் இவ்வளவு ஹய்ட்ல இருக்க மரத்துல இருந்து எப்படி கீழ இறங்குறது ... ஏத்தி விட்டவங்களே இறக்கி விடுவாங்களா ... ஏதாவது லைப் லைன் இருக்கா ..." என்று தான் இருக்கும் இடத்தை நன்றாக சுற்றி பார்த்தாள். கண்ணுக்கு எதுவும் புலப்படாததால் பெருமூச்சை விட்டவள்,
"நாமளே தான் இறங்கணும் போல ..." என்று தனக்குள் பதிலளித்துக் கொண்டவள் மீண்டும் மரக்கிளையில் பத்திரமாக படுத்தவாறே,
"இப்போ கீழ இறங்கினாலும் ஒரு ப்ரோஜனும் இல்ல ... ஒரே இருட்டா இருக்கு அந்த சிண்டு கேங் போயிருந்தாலும், கொடூரமான அணிமல்ஸ் இருக்க வாய்ப்பிருக்கு ... கொஞ்சம் வானம் தெரிஞ்சதும் அவங்க கண்ணுல படமா தப்பி ஓடிடனும் ... அதுவரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம் ..." என்று தீர்மானித்து கண்ணை மூடி தூங்க முயன்றாள்.
கண்ணை மூடியும் தூங்க முடியாமல் பயங்கரமான கனவு வந்து பயம் காட்ட, திடுக்கிட்டு போய் கண் விழித்தவளின் முன் படம் எடுத்தவாறே தன்னை கொத்த காத்திருந்த கருநாகத்தை கண்டு உயிர் பயத்தில் "அய்யோ பாம்பு ..." என்று அலறிக் கொண்டே மரத்தில் இருந்து கீழே விழுந்தாள்.
"போச்சு போ இன்னும் பியூ செகண்ட்ஸ்ல மண்ட சிதறி ரத்த வெள்ளத்துல கிடக்க போறேன் ... " என்று நினைத்துக் கொண்டே கீழே விழுந்தவளை இரு வலிய கரம் தாங்கிக் கொண்டன. மண்டை சிதறாமல் காப்பாற்றப்பட்டதை உணர்ந்ததும் சந்தோஷத்தில் தன்னை தாங்கியவரின் கழுத்தை இறுக்கமா கட்டிக் கொண்டவள் கண்ணை திறந்து யார் அது என்று பார்க்க முயல, முகத்தை பார்க்க முடியாதளவிற்கு அந்த இடமே இருட்டாக இருந்தது.
கருமேகம் சூழ்ந்த அடர்ந்த காடு கடுகளவிற்கு கூட வெளிச்சம் இல்லாமல் கும்மிருட்டாக இருந்த போதும், அவன் தலையில் தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்ததை கண்டு அது யாரு என்று புரிந்ததும், உடல் சில்லிட்டு போய் இதயம் பந்தய குதிரை வேகத்திற்கு துடித்ததை அவனும் அறிந்துக் கொண்டான்.
அந்த இருட்டிலும் அவன் கண்களில் தெரிந்த பளபளப்பை கண்டு நடுங்கிக் போனவள் பயத்தை காட்டிக் கொள்ளாமல் மெல்ல அவன் கைகளிலிருந்து இறங்கினாள். திடீரென்று
"வேடுவனின் வலையிலிருந்து தப்பியோடிய புள்ளி மான், சிங்கத்திடம் சிக்கிக் கொண்டதே ... அந்தோ பரிதாபம் ..." என்று போலியாக உச்சு கொட்டி வருந்தினான் அந்த இளவரசன். அது வரை பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவள், அவன் நக்கலில் சிலிர்த்து நிமிர்ந்தவள்,
"சும்மா லூசு போல சிங்கம் பூனைனு உளறிட்டு இருக்காதீங்க ப்ரோ ... இவ்வளவு பயங்கரமான காட்டுல விட்டுருக்காங்கன்னா ப்ரைஸ் அமௌண்ட் ஜாஸ்தியாதான் இருக்கும் ... உனக்கு எவ்வளவு கிடைக்க போகுது சொல்லு ... பேசமா நமக்குள்ள ஒரு டீலிங் போட்டுக்கலாமா ..." என்று தன்னிடம் டீலிங் பேசியவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
"இப்போ என்ன சொல்லிட்டேன்னு என்ன லுக்கு விட்டுட்டு இருக்க ... ம்ப்ச் கொஞ்சம் கிட்டக்க வா ப்ரோ ... எங்க கேமரா வச்சுருக்கான் தெரில ..." என்றவளுக்கு பதில் கூறாமல் பார்த்திருந்தவனை கண்டு சலிப்பாக தலையாட்டிக் கொண்டவள்,
"ச்ச ... கேம்கு வரும் போது யாரு முகத்துல முழிச்சுட்டு வந்தேன் தெரில, எல்லாம் சொதப்பல் இருக்கு ..." என்று அலுத்துக் கொண்டே அவன் மேனி உரச நெருங்கி நின்றவள்,
"கொஞ்சம் காத மவுத் கிட்ட கொண்டு வா ப்ரோ, ஓவர் ஹெயிட்டா இருக்க ..." என்றவளுக்கு பதில் கூறாமல் புருவங்கள் இடுங்க பார்த்துக் கொண்டிருந்தவனின் சிண்டை திடீரென்று பிடித்து இழுத்து தன் உயரத்திற்கு கொண்டு வந்து,
"இங்கபாரு ப்ரோ ... ப்ரைஸ் மணிய நாம ஷேர் பண்ணிக்கலாம் ... வர்றதுல உனக்கு டுவென்டி எனக்கு எயிட்டி ... என்ன சொல்ற ..." அவன் காதருகில் கிசுகிசுத்தவளின் நாசியை தாக்கியது அவன் மேனியிலிருந்து வந்த நல்ல நறுமணம்.
'அய்யோ வாசனையே ஆள கொல்லுதே ...' என்று சற்று தடுமாறிப் போனவள், தொண்டையை கனைத்து தன்னை நிதானித்துக் கொண்டவள்,
"ம்ப்ச் என்ன ப்ரோ மரமண்ட போல நின்னுகிட்டு இருக்க ... டைம் இல்ல சொல்லிட்டேன் ... உன்கிட்ட இருந்து என்னால ஈஸியா தப்பிச்சு போக முடியும், சரி போனா போகுதேன்னு பாவம் பாத்தா என்னையே ஆழம் பாக்குற ...' என்று அலுத்துக் கொண்டவள், அவன் வாய் திறக்க போவதில்லை என்று தெரிந்ததும்,
"ஓகே எனக்கு செவென்ட்டி உனக்கு தேர்ட்டி இந்த டீலிங் ஓகேவா ... ம்ப்ச் சரி உனக்கும் வேணா எனக்கும் வேணா ஆளுக்கு பிப்டி பிப்டி ஓகே ..." என்று உதட்டில் நிறைந்த புன்னகையுடன் கட்டை விரலை தூக்கி காட்டியவளை கண்கள் சிவக்க பார்த்திருந்தவனை கண்டு அரண்டு போனவள், எச்சில் கூடி விழுங்கியபடி,
"சரி இதான் லாஸ்ட் டீல் உனக்கு எயிட்டி எனக்கு டுவெண்ட்டி எப்படி ..." என்றவளுக்கு கோப பார்வையே பதிலாக கிடைக்க,
"ஊப்ஸ் சரி மனச திடப்படுத்துகிட்டு சொல்றேன், எனக்கு அந்த அமௌண்ட் வேணா எல்லாத்தையும் நீயே வச்சுக்க ப்ரோ ... என்ன மட்டும் போக விடேன் ... ப்ளீஸ் ..." என்று கெஞ்சியவளை உக்கிரத்துடன் பார்த்தபடி தன் இடுப்பில் சொருகியிருந்த வாளை கையில் எடுத்தவனின் முகத்தில் திடீரென்று ஓங்கி குத்தி, அவனை பிடித்து கீழே தள்ளிவிட, எதிர்பாரத தாக்குதலில் நிலைதடுமாறி கீழே விழுந்த இளவரசனின் காலில் ஓங்கி ஒரு உதைவிட்டாள்.
"பிராடு பிரின்ஸ் ... போனா போகுதுனு டீலிங் பேசினா ஓவரா போற ... இப்பவும் நீ என்ன கண்டு புடிக்கலடா நானா உன் கைல வந்து விழுந்தேன் இல்லனா இந்த ஜென்மத்துல என்ன உன்னால புடிக்க முடியாது ... முடிஞ்சா புடிச்சு பாருடா டுபுக்ஸ் ..." என்றவள் சிட்டாய் பறந்து ஓடினாள்.
வேகமாக ஓடியவளின் காதுகளில் வினோதமான விசில் சத்தம் கேட்கவும், "அந்த சிண்டுக்கார இளவரசன் ஆளுங்கள கூப்பிட்டுட்டான் போல ... அவன் கைல மாட்டாம ஓடிடுடி ..." என்று தன் பெயர் தெரியாமல் முழித்தவள், பின்
"பேரா முக்கியம் உசுருதான் முக்கியம் ஓடு கைப்புள்ள ஓடு ..." என்றவளை முந்திக் கொண்டு சறுக் சறுக் என்று அம்புகள் சீறி பாய உயிர் பயத்தில் கண்மண் தெரியாமல் ஓடினாள்.
காட்டு பாதையில் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக உருண்டு பிரண்டு மென்மையான பாதத்தை ரத்தம் வருமளவிற்கு கிழித்து கொண்டு உயிர் வலி வலித்தாலும் பொறுத்துக் கொண்டு ஓடியவள் இறுதியாக வந்து சேர்ந்த இடம் காட்டை பிளந்துக் கொண்டு பாய்ந்து சென்ற அருவியின் அருகில்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றவளுக்கு அனைத்து வழிகளும் மூடப்பட்ட நிலை. நீண்ட நேரமாய் ஓடியதால் உடம்பில் உள்ள சத்துக்கள் எல்லாம் வடிந்துவிட்ட உணர்வு. உடலில் ஏற்பட்ட காயங்கள் வேறு வலியை கொடுக்க அந்த நொடி நரகமாய் தோன்றியது.
தன்னை விரட்டிக் கொண்டு வந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்துவிட, இவ்வளவு நேரமும் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் வீணாக போகின்றதே என்ற நினைப்பில் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றன.
இன்னும் இருட்டு விலகாததால் இளவரசன் என்று அழைக்கப்பட்டவனின் முகம் தெரியவில்லை என்றாலும் அவன் இறுகி போய் நின்றிருப்பது மட்டும் அவன் உடல் மொழியை கொண்டு அறிந்துக் கொண்டாள்.
தன் கண் முன்னிருக்கும் இரையை வெறியோடு வேட்டையாட காத்திருக்கும் ஓநாய்களை போல் தனக்காக காத்திருந்தவர்களை கண்டவளுக்கு அவர்களின் கைகளில் தன் தோல்வியை சமர்ப்பிக்க விரும்பாதவள், சில அடிகள் தள்ளி நின்றிருந்த இளவரசனை நிதானமாக பார்த்தபடி அடி மேல் அடி வைத்து பின்னல் நடந்தபடி விளிம்பிற்கு சென்றவள், கண்ணிமைக்கும் நொடியில்
"முடிஞ்சா புடிச்சு பாருடா சிண்டு ..." என்று கத்தியவாறே அருவியில் குதித்திருந்தாள். தன்னை எப்படியாவது ரியாலிட்டி ஷோ டீம் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையில் புன்னகையுடன் விழுந்தவளின் உடலை துளைத்தது, மேலிருந்து இளவரசன் ஏவிவிட்ட அம்பு.
அதுவரை ரியாலிட்டி ஷோ என்று நம்பிக் கொண்டிருந்தவளுக்கு, அம்பு துளைத்தது உயிர் வலியை கொடுக்க, இவ்வளவு வலியை தன் வாழ் நாளில் உணராதவளின் உடல் துடி துடித்து தண்ணீருக்குள் விழு, தன்னையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தவனை சிவப்பேறிய விழிகளால் பருகியபடி மெல்ல மெல்ல மயக்கத்திற்கு சென்றவளின் நினைவுகளில்,
"மலர் மலர் ..." என்று குரல் எதிரொலிக்கவும்,
"விஷ்வா ..." என்று முணுமுணுத்தவள் முழுதாக நீரில் மூழ்கிப் போனாள்.
சாரி ப்ரெண்ட்ஸ் அடுத்த பதிவு போட லேட் ஆகிடுச்சு. உண்மைய சொல்லனும்னா கடந்த நாலு மாசமா பல சைனீஸ் ட்ராமா பார்த்து அதுல இன்ஸ்பியர் ஆகித்தான் இந்த கதையை எழுத தொடங்கினேன். எங்க நா போடுற எபிய படிச்சு பார்த்துட்டு இங்கிருந்து சுட்டுருக்காங்க அங்கிருந்து சுட்டுருக்காங்கனு சொல்லிடுவாங்களோனு பயம். அதால ஏற்பட்ட தயக்கம் தான் தாமதித்திற்கான காரணம். கதையை படிச்சுட்டு மறக்காம உங்க கருத்த என்கிட்ட ஷேர் பண்ணிக்குங்க. நன்றி.
ரன்- 2
"மலர் மலர் ..." என்ற குரலை தொடர்ந்து, "மதுமலர்ர்ர் ..." என்ற அதட்டலில் திடுக்கிட்டு போய் கண்விழித்து பார்த்தாள் மதுமலர். தன் முன்னே தெரிந்த உருவத்தை கண்டு கோபத்தில் பல்லை கடித்து,
"ஆஆஆஆ ..." என்று கத்தியவள்,
"லூசு லூசு .... இப்போ எதுக்குடா எழுப்புன ... நானே கிளைமாக்ஸ் எப்படி எழுதுறதுனு தெரியாம முழிச்சுகிட்டு இருந்தேன் ... நல்ல நல்ல சீன்ஸ் கண்ணு முன்னாடி வந்து போனுச்சு எழுப்பி விட்டுட்டியே, ச்சி போ ..." என்று கோபத்துடன் எழுந்தவளை கண்டு சத்தம் போட்டு சிரித்த விஷ்வேஸ்வரன்,
"உண்மையை சொல்லு க்ளைமாக்ஸ் மட்டுமா உனக்கு எழுத வரல ..." என்று நக்கலாக சிரித்தவனை பார்த்து பொய்யாக முறைத்தவள்,
"டேய் விச்சு ... ஒரு உண்மையை சொல்லட்டா ... ரியல் லைப்ல நீ ஒரு டம்மி பீஸ்டா ... " என்றவளை அடப்பாவி என்ற பார்வை பார்த்தவனிடம்,
"உண்ம கசக்கத்தான் செய்யும், ஆனாலும் நம்ம ப்ரெண்ட்ஷிப்புக்கு மதிப்பு கொடுத்து உன்னையும் மதிச்சு என் கதைல உன்ன ஒரு மாஸ் ஹீரோவா போட்டுருக்கேன் ..." என்று கையை நீட்டி திமிர் முறித்தவள்,
"இளவரசன் விஷ்வேஸ்வரன் ... இந்த பேரு எவ்வளவு பேமஸ் தெரியுமா ... என் கத படிக்கிற ஆண்டீஸ்ல இருந்து காலேஜ் பொண்ணுங்க வரைக்கும் உனக்கு பேன்ஸ் ... உன்ன பாத்து எத்தன பேரு ஜொள்ளு விடுறாங்க, இது எதுவும் தெரியாம இன்சல்ட் பண்ற ..." என்று பெருமையடித்து கொண்டவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன்,
"ஹலோ செல்ப் டப்பா நிறுத்து நிறுத்து ... போன கதைல சரவணனனை வச்சு கத எழுதுறேன் சொல்லி என்ன செஞ்சேன்னு தெரியும் ..." என்று நக்கலாக பார்த்தவனிடம்,
"அது என் தப்பு இல்ல ... நானும் அவன ஒரு லவர் பாயா நல்ல லவ்லி ஹஸ்பண்ட்டா காட்டலாம்னு தான் நினைச்சேன் பட் ராயபுரம் ப்ராஜெக்ட்ல ரொம்ப ஓவரா ஆடிட்டான் ... பேனா மையோட பவர் தெரியுமா ... ஒரு நாட்டோட சரித்தரைத்தையே மாத்தும் ... இவன்லால் ஜுஜுபி அதான் இவன இங்க இருக்க ஆண்டிஸ் வாய்க்கு அவுலா கொடுத்துட்டேன் ... எவ்வளவு சாபம் எவ்வளவு திட்டு படிக்கும் போதே … வாவ் … அதெல்லாம் சும்மா வார்த்தையால சொல்ல முடியாது ... பீல் பண்ணாத்தான் புரியும் ..." என்று சிரித்தவளின் கையை பிடித்து முறுக்கியவன்,
"ப்ரெண்டுனு பேர்ல இருக்க சைக்கோவா நீ ... ஒழுங்கு மரியாதையா என் பேரு வச்ச கேரக்டர சாவடிக்கிற ..." என்றவனை வேகமாக இடைமறித்தவள்,
"வாட்ட்ட்ட்ட ... என்ன சாகடிக்கிறதா ... கொன்னுடுவேன் பாத்துக்கோ ... இங்கதான் உன் தம்பிகிட்ட போட்டி போடாம கம்பெனி பொறுப்ப தூக்கி கொடுத்துட்ட ... ஒரு ப்ரெண்ட்டா இதெல்லாம் பார்த்து ரத்தம் கொதிச்சாலும் என்னால என்ன பண்ண முடியும் அதான் என் பவர காட்டிட்டேன் ... “
"பாரு உனக்காக கற்பனைல ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிருக்கேன், சும்மாலாம் இல்ல ரொம்ப கஷ்டப்பட்டு டம்மி இளவரசனா அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமா மாஸ் ஹீரோவா உருமாறி ஹீரோயின் மனசுல மட்டுமில்ல படிக்கிறவங்க மனசுளையும் பச்சக்குனு ஒட்டிருக்கிற மாதிரி எழுதிருக்கேன் ... என்ன பாராட்டுறத விட்டுட்டு இன்சல்ட் பண்ற மேன் ...." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இவர்களை கடந்து சென்றான் சர்வேஷ்வரன்.
"போச்சு போ ... இன்னும் செங்கல்பட் வில்லா ப்ராஜெக்ட் கொட்டேஷன் முடிக்கல, ஹைதராபாத்ல இருந்து நாளைக்கு தான் இவன் கிளம்புறதா இருந்தது ... இப்போ திடிர்னு சொல்லாம கொள்ளாம வந்து நிக்குறான் ..." என்று புலம்பிய நண்பனை கொலைவெறியுடன் பார்த்தவள்,
"உனக்கு இன்னுமா புரியல ... நம்மள மாட்டிவிடத்தான் திடிர்னு வந்துருக்கான் சதிகாரன் ... அவன பாத்து எதுக்குத்தான் நீ பயப்படுறன்னு தெரியல ... உனக்கும் இந்த கம்பெனில ஷேர் இருக்கு அத மண்டைல நல்லா ஏத்திக்கோ ... உங்கப்பா ஒன் ஆப் தி போர்டு மெம்பெர் ..." என்ற தோழியை முறைத்து பார்த்தவன்,
"ரொம்ப அறிவா பேசுறதா நினைப்பா ... கொடுத்த வேலையை முடிக்காம இருந்தா, கம்பெனிக்கு எம்டியா இருந்தாலும் பயந்து தான் ஆகணும் ..." என்றவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் தான் இடத்திற்கு சென்றான்.
சர்வா விச்சுவின் சித்தப்பா மகன். ஏஒன் கன்ஸ்ட்ரக்ஷன் சென்னையில் உள்ள முக்கியமான கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளில் ஒன்றாகும். சர்வாவின் தந்தையின் முயற்சியால் பல பெரிய பெரிய ப்ராஜெக்டுகளை எடுத்து வெற்றிகரமாக முடித்து கொடுத்து அசுர வளர்ச்சி கண்டதால் அவரிடமே தலைமை பொறுப்பை கொடுத்திருந்தார் விச்சுவின் தந்தை.
தம்பி இறந்தபின் அவரை போலவே கம்பெனியின் வளர்ச்சிக்காக முழு மூச்சாக ஈடுபட்ட சர்வாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். விஷ்வேஸ்வரனுக்கு இதில் சிறிதும் வருத்தமில்லை என்றாலும் அவன் நண்பர்களுக்கு அதில் உடன்பாடில்லை. அதிலும் மதுமலர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் அதிருப்தியை நேரடியாகாவே சர்வாவிடம் பல முறை காட்டியிருக்கிறாள்.
விச்சு கல்லூரியில் நான்காம் வருடம் படிக்கும் பொழுது முதல் வருடத்தில் சேர்ந்தாள் மலர். ராக்கிங் மூலமாக இருவருக்கும் நட்பு உருவாக அது இன்றுவரை எல்லை தாண்டாத அழகிய நட்பாக தொடரும் நட்பாகும். மலர் உரிமையுடன் எவ்வளவு மோசமாக திட்டினாலும் அதை மனதில் ஏற்றுக் கொள்ளாமல் சிறு சிரிப்புடன் கடந்து விடுவான் விச்சு.
ஆனால், மலரின் அதிகப்படியான உரிமை, சர்வேஷ்வரனுக்கு எப்பொழுதும் நெருடலையே கொடுக்கும். அதுவும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தன்னை மட்டம் தட்டி பேசும் மதுமலரை சுத்தமாக பிடிக்காமல் போனது.
இவனும் பலவழிகளில் மலரை இங்கிருந்து வெளியேற்ற முயன்றும், தோற்றுப் போனவனுக்கு அட்டைபோல விச்சுவை ஒட்டிக் கொண்டு திரிபவளை கண்டு பல்லைதான் கடிக்க முடிந்தது.
மதுமலரை பற்றி நன்கு அறிந்தவனுக்கு தெரியும் எப்படியும் அவள் செங்கல்பட்டு ப்ராஜெக்ட் கொட்டேஷனை முடித்திருக்கமாட்டாள் என்று அதனாலயே அவசர அவசரமாக நாளை முடிக்க வேண்டிய வேலையும் முடித்துக் கொடுத்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி வந்திருந்தான்.
விச்சு சென்றதும் தன் இடத்தில் உட்கார்ந்துக் கொண்டவள் மொபைல் போனை கையில் எடுத்துபப் பார்க்க மெசஞ்சரில் இருந்து பல குறுஞ்செய்தி வந்தது தெரிந்தது. சலிப்புடன் மொபைலை சற்று தள்ளி வைத்துவிட்டு கணினியை உயிர்ப்பித்தவளின் சிந்தனை முழுவதும் இன்று பதிவிட வேண்டிய கதையின் இறுதி அத்தியாயத்திலே சுழன்று கொண்டிருந்தது.
"ம்ப்ச் ... கதையை என் இஷ்டத்துக்கு எழுதி தள்ளிட்டேன் இப்போ எப்படி முடிகிறதுன்னு தெரியலையே ..." என்று புலம்பியபடி யோசித்துக் கொண்டிருந்தவளின் மேஜையை தட்டி கூப்பிட்டான் ஆபீஸ் பாய்.
"என்னடா ..." யோசித்துக் கொண்டிருந்ததை கலைத்த கோபத்தில் அவனிடம் தன் கோபத்தை காட்டினாள்.
"சர்வா சார் கூப்பிடுறார் ..." என்றவனை முறைத்து பார்த்தவள்,
"இது லஞ்ச் டைம் ... இப்போ பாக்க முடியாது ..." என்று திமிர் காட்டியவளின் மேஜையை எட்டி பார்த்துவிட்டு தன் முகத்தை பார்த்தவனை கண்டு பல்லை கடித்தவள்,
"டேய் நண்டு கொஞ்சம் விசுவாசத்த கம்மியா காட்டு … பார்த்து ஓவர்ப்லோவ் ஆகி கழுத்த நெரிச்சுட போகுது ..." என்று நக்கலடித்தபடியே சர்வாவை காண சென்றாள்.
சர்வாவின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றவளை நிமிர்ந்து பார்க்காமல் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் கவனத்தை செலுத்தினான் சர்வா. ஐந்து நிமிடங்கள் கடந்தும் தன்னை ஏறிட்டு பார்க்காதவன் மேல் கொலைவெறி எழ,
"உங்க மூஞ்ச உத்து பாக்கத்தான் என்ன வர சொன்னீங்களா ..." என்று பல்லை கடித்தவளை, மெல்ல தலை நிமிர்த்தி பார்த்தவன் எதுவும் பேசாமல் தன் வலக்கையை அவள் முன் நீட்டினான்.
'எதுக்கு இந்த லூசு கைய நீட்டுது ...' என்று புரியாமல் பார்த்தவளிடம்,
"கொட்டேஷன் ..." என்று அவள் முகத்தை பார்த்தபடி பதிலளிக்க, நக்கலாக பார்த்தவள்,
"நம்ம என்ன எயிட்டீஸ் செவென்டீஸ்லயா வேல பாக்குறோம் பேப்பர்ல கொட்டேஷன காட்ட ..." என்றாள் திமிராய். இதழ் பிரியாமல் சிரித்தவன்,
"பேப்பர் மட்டுமில்ல பென்ட்ரைவையும் கைல கொடுக்கலாம் ..." என்கவும், 'அய்ய சார் புத்திசாலித்தனமா பதில் சொல்லி என்ன மடக்கிட்டாராம் ... சிப்பு வேற வருது ...' என்று மனதில் கருவியவள்,
"சாருக்கு ஹைட்ரபாத்ல மண்டைல அடி பட்டுடுச்சா ஆபீஸ் ரூல்ஸ்லாம் மறந்து போச்சு ..." என்று நக்கலாக கூறியவளை கண்டு இதழ் வளைய சிரித்தவன்,
"அப்படி நடக்கணும்னு ரொம்ப எதிர்பார்த்திருப்பீங்க போல ... வாய்ஸ்ல ஏமாற்றம் நல்லாவே தெரியுது ..." என்றவனை கண்டு ஏக்க பெருமூச்சை விட்டவள்,
"நாம மனசுல நினைச்சா மட்டும் போதுமா ... நடக்குனமே ..." என்று போலியாக வருத்தப்பட்டவளை கண்டு,
"டோண்ட் லூஸ் யுவர் ஹோப்ஸ் ... உங்க நல்ல மனச பாத்து கடவுள் கருணை காட்டுனாரும் காட்டுவார் ..." என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தவனின் முகத்தில் கேலி புன்னகை தாண்டவமாடியது.
'அப்போ எனக்கு நல்ல மனசு இல்லனு சொல்லாம சொல்றியாடா ஓணான் மூஞ்சு ... கடவுள் வழி காட்டுவார்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்க நா என்னா உன்ன போல அற்ப பிறவினு நினைச்சியா ... எழுத்துலக பிரம்மா டா நானு ... எத்தன பேர என் கற்பனை திறனால திணற அடிச்சுருக்கேன் ... நீ ஏற்கனவே என்கிட்ட சிக்கிக்கிட்டது தெரியாம நக்கல் அடிச்சுகிட்டு இருக்கியா ...' என்று நினைத்தவளுக்கு அவளை மீறி சிரிப்பு வந்துவிட முகத்தில் அது நன்றாகவே தெரிந்தது.
அவள் முகத்தையே சில நொடிகள் புருவம் இடுங்க பார்த்தவன்,
"எந்த போல்டெர்ல சேவ் பண்ணிருக்கீங்க ..." என்றபடி லாப்டாப்பில் தலையை கவிழ்த்துக் கொண்டான். சில நொடிகள் அமைதி காத்தவள் பின்,
"நெட்ஒர்க்ல போடல ...' என்றாள் சற்று திமிராக. மெல்ல தலை நிமிர்த்தி பார்த்தவனின்,
"வொய் ..." என்ற ஒற்றை கேள்வியில்; அதுவரை கஷ்டப்பட்டு பொறுமை காத்தவள் பொங்கிவிட்டாள்.
"வாட் வொய் ... டெட்லைனுக்கு இன்னும் டூ டேஸ் இருக்கு இப்போ வந்து கேட்டா எப்படி காட்ட முடியும் ..." என்று சீறியவள்,
"இன்னும் டூ டேஸ்ல கம்ப்ளீட் கொட்டேஷன் உன்ன முன்னாடி இருக்கும் ..." என்றபடி அவன் பதிலுக்காக கூட காத்திராமல் வாசலை நோக்கி நடக்க தொடங்கியவளை,
"நா எதிர்பார்த்தபடி டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன ஒழுங்கா படிக்கல போல ... பாவம் விச்சு, அவன சிஇஓ ஆக்குறேன் சொல்லி ஒரு மெம்பெரா கூட இருக்க விடாம பண்ணிட்டியே ... சோ சேட் ... அவன நினைச்சா கஷ்டமாதான் இருக்கு, பட் உன் கூட ப்ரெண்ட்ஷிப் வச்சதுக்கு இது தேவதான் ..." என்றவனின் வார்த்தைகள் அவளை மேலே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது.
அவன் வார்த்தைகள் பயத்தை தந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல், மெள்ள திரும்பி பார்த்தவள்,
"என்ன விச்சு பேர சொன்னா பயந்துடுவேன் நினைச்சுட்டிங்களா ..." என்றவளை தன்னருகில் அழைத்தவன், லேப்டாப் திரையை காட்டி,
"நீயே படிச்சு பாரு ..." என்றவனை இடித்துக் கொண்டு திரையில் தெரிந்ததை படித்தவளுக்கு அவனை உரசிக் கொண்டு நிற்பது புத்தியில் ஏறவில்லை.
"ஹலோ நா ஒன்னும் விச்சு இல்ல ..." என்று நக்கலாக கூறியவன் சற்று தள்ளி நின்றுக் கொண்டான்.
செங்கல்பட் அருகில் உள்ள இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட வில்லாவை கட்டிக் கொடுக்க டெண்டர் விட்டிருந்தார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான கொட்டேஷனை அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான பொறுப்பை விச்சுவிடம் ஒப்படைத்திருந்தான் சர்வா.
முதன் முதலில் நடந்த கூட்டத்தில் நாளை மறுநாள் கொட்டேஷனை சர்வாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால் மறுநாளே, டெட்லைனுக்கு ரெண்டு நாள் முன்னமே தன்னிடம் அந்த ப்ராஜெக்டுக்கான மொத்த கொட்டேஷனை தனக்கு அனுப்பிவிடுமாறு ஈமெயிலை அனைவருக்கும் அனுப்பியிருந்தான்.
விச்சுவிற்கு இது தெரிந்தாலும் சர்வா ஹைட்ரபாத் சென்றதால் அவனும் சற்று அலட்சியம் காட்டியிருந்தான். மதுமலரும் வழக்கம் போல சர்வாவிடம் வந்திருந்த ஈமெயிலை கண்டுக் கொள்ளாமல் தன் வேலையை பார்த்திருந்தாள்.
நீண்ட நேரமாய் லேப்டாப்பில் தலையை கொடுத்திருந்தவளை கண்டு, தொண்டையை செறுமியவனை மெல்ல திரும்பி பார்த்தவள் அங்கிருந்து நகர்ந்து நின்றுக் கொண்டாள்.
"என்ன பாத்தாச்சா ... இன்னைக்கு ஆபீஸ் விட்டு போறதுக்குள்ள என் கைக்கு கொட்டேஷன் வந்தாகணும் ..." என்று சாதாரண தோனியில் அவன் சொன்னது அவளுக்கு மிரட்டலாய் தெரிய, முகம் கோபத்தில் சிவந்து போனது.
"நாளைக்கு ஈவினிங் சப்மிட் பண்றேன் ..." எங்கையோ பார்த்தபடி முகத்தை தூக்கிவைத்து கொண்டு கூறியவளை சிறு சிரிப்புடன்,
"ஓகே ..." என்றவனை திரும்பியும் பார்க்காமல் கதவை நோக்கி நடந்தவளிடம்,
"அப்படியே ஈவினிங் ஆபீஸ் விட்டு போகும் போது, ஐ அம் இன்காம்பேட்ன்ட் அட் மை ஒர்க் சோ ப்ளீஸ் அக்ஸப்ட் மை ரெசிகினேஷனு ஒரு லெட்டர ஹெச்ஆருக்கு தட்டிவிட்டு போய்டு ..." லேப்டாப்பை தட்டியபடி பேசியவனை கொலைவெறியுடன் திரும்பி பார்த்தவள்,
"ஐ க்நொவ் ... நீங்க வேணும்னே இப்படி பண்றீங்க ... நா விச்சுவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறது புடிக்கல, எப்போடா என்ன வெளியேத்தலாம் காத்துகிட்டு இருந்து நேரம் பார்த்து பழி வாங்குறீங்க ..." என்று தொண்டையடைக்க கத்தியவளை பார்த்தவனுக்கு ஏனோ சிரிப்புதான் வந்தது.
"அப்படி நீ நினைச்சா அதுக்கு நா ஒன்னும் பண்ண முடியாது ..." என்றவனிடம்,
"என்ன நா அப்படி நினைக்கிறேனா ... ரொம்ப நல்லவன் வேஷம் போட வேணா ... நா ஒன்னும் முட்டாளில்ல உங்க தாட்ஸ் புரியாத அளவுக்கு ... சாடிஸ்ட் ... உனக்கு யார் கூடவும் பழக புடிக்கலைனா மத்த யாரும் பேச கூடாதா ... அப்பப்பா நா பாத்ததில்லையே ஒண்ணாம் நம்பர் சைக்கோ நீங்க தான் ..." என்று முகம் சிவக்க கத்திக் கொண்டிருக்கும் போதே கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் விச்சு.
உள்ளே கோபத்தில் முகமும் கண்களும் சிவந்திருக்க மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்த மலரை கண்டதும்,
"என்னடா மலர் ..." என்றபடி அவள் அருகில் சென்றவனை கண்டு கடுப்பான சர்வா,
"இவன் ஒருத்தன் என்னடா நொன்னடானு, பொண்டாட்டிய கொஞ்சுறது போல கொஞ்சுறான் ..." என்று முணுமுணுக்க, அந்த நேரத்தில் விச்சுவை கண்டதும் அதுவரை அடக்கிவைத்திருந்த அழுகை எல்லாம் பீறிட்டு வர, அழுதபடி அங்கே நடந்தது முழுவதையும் கூறி முடித்திருந்தாள் மதுமலர்.
"என்னடா சர்வா இதெல்லாம் ... கொட்டேஷன் வேணும்னா என்கிட்ட கேட்குறதுதானே, எதுக்கு இந்த சின்ன விஷயத்துக்கு மலர சீண்டுற ..." என்று குற்றம் சாட்டியவனை கண்டு பல்லை கடித்த சர்வா,
"விச்சு என்ன பேசுற ... கொட்டேஷனுக்கு யாரு இன்சார்ஜ் ... சும்மா எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காத ... வேலையில ஒரு சின்சியாரிட்டி கிடையாது எப்போ பார்த்தாலும் போன நோண்டிகிட்டு இருக்கிறது ஓபிஸ் வேலையை விட சொந்த வேலைய தான் பார்த்துகிட்டு இருக்காங்க ... நீ ஓவர் பார்சியாலிட்டி காட்டுற ..." கோபமாக பேசியவனின் அருகில் சென்ற விச்சு,
"இந்த சின்ன விஷயத்துக்கு டென்ஷன் ஆகாத சர்வா ... எனக்கு மலர பத்தி நல்லாவே தெரியும் கொடுத்த வேலைய முடிக்காம அலட்சியம் காட்டுற ஆள் இல்ல ... ஏதோ ஒரு ப்ராஜெக்ட்ல மிஸ் ஆகிடுச்சு அதுக்கு எதுக்கு இவ்வளவு சீன் ... மலர் தான் இதுக்கு இன்சார்ஜ் பட் ஓவர்ஆல் பொருப்பு என்னோடது ... நா ஏற்கனவே முடிச்சுட்டேன், நீ பார்த்துட்டு ஓகேவா இல்லையானு சொல்லு ..." என்றபடி சர்வாவின் லேப்டாப்பில் தான் ஷேர் செய்திருந்த பைலை திறந்து காட்டினான்.
மதுமலருக்கு விச்சுவின் செய்கை குற்றவுணர்வை உண்டு பண்ண கண்கள் கலங்க அமைதியாக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தன் தவறும் புரிந்தது.
சர்வாவை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்ற வெறி தீயாய் பரவ, கண்கள் ஜொலிக்க அவனையே பார்த்திருந்தாள். விச்சுவிடம் பேசிக் கொண்டிருந்த சர்வா திடீரென்று திரும்பி மலரை பார்த்தவன் அவள் தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்து,
"ஹலோ ஆச தீர பார்த்தாச்சுன்னா, போய் உங்க வேலையை பாக்குறீங்களா ... சும்மா விச்சு கூட கடல போடவும் என்ன சைட் அடிக்கவும் சம்பளம் கொடுக்கல ..." என்று நக்கலடித்தவனை கண்டு சத்தம் போட்டு சிரித்த விச்சு,
"சும்மா இருக்க மாட்டியா ..." என்று தம்பியை போலியாக கண்டித்தவன், மலரிடம்,
"மலர், நா கொட்டேஷன் ரெடி பண்ணியிருந்தாலும் நீயும் ஒருதடவ பாரு எங்கையாவது மிஸ் ஆகியிருக்க போகுது ..." என்று சமாதானமாக பேசி அங்கிருந்து அவளை அனுப்பி வைத்தான்.
தன்னிடத்தில் வந்து உட்கார்ந்தவளுக்கு கொஞ்சம் கூட வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தளவிற்கு சர்வாவின் நக்கல் பேச்சு காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அந்த தலைவலி போதாது என்று 'பைனல் எபி எப்போ போடுவீங்க ...' என்று கேட்டு தொடர் வண்டி போல விடாமல் வந்து விழுந்த குறுந்செய்திகள் வேறு அவளை மனஉளைச்சலுக்கு ஆளாக்கின.
கணினியில் வில்லா ட்ராயிங்கை திறந்து பார்த்து கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது வாட்ஸ்அப்பில் வந்து விழுந்த மெசேஜ்.
பிரியா: 'க்கா பைனல் எபி எப்போ போடுவீங்க ...'
மலர்: 'சாரிடா கொஞ்சம் பர்சனல் ஒர்க் நைட் டைப் பண்ணி போட்டுடுறேன் ...'
பிரியா: 'டேக் யுவர் ஒன் டைம் க்கா ... பட் மறக்காம நைட் எபி போட்டுடுங்க ...'
மலர்: 'கண்டிப்பா டா ...' என்று டைப்பிக் கொண்டிருக்கும் போதே, தன் கேபினில் இருந்து வெளியே வந்து மலரை எட்டி பார்த்தான் சர்வா.
'இவன் ஒருத்தன் சிஐ டி போல வேவு பார்த்துகிட்டு இருக்கான் ...' என்று கருவியவள் மொபைலை தூக்கி தூர வைத்துவிட்டு வேலையில் மூழ்கினாள்.
"ச்ச இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சேன் தெரில ஒரே குஷ்டமா போச்சு ..." என்று புலம்பியபடி தன் அறையில் உள்ள கட்டிலில் விழுந்தாள் மலர்.
கண்ணை மூடி படுத்திருந்தவளின் சிந்தனை முழுவதும் கதை பற்றிய சிந்தனை மட்டுமே. அலைபாயும் மனதை நிலைப்படுத்துவதற்காக முகப்புத்தகத்திற்கு நுழைந்தவள் அங்கே வரிசைகட்டி நின்ற நோட்டிபிகேஷனை கண்டு மலைத்து போனாள்.
அதற்கு பதில் தராமல் மற்ற எழுத்தாளர்கள் வாங்கிய பொங்கல் பதிவுகளை மனம் குளிர படித்து ரசித்து மனதை குதூகலமாக்கி கொண்டாள்.
மீண்டும் வாட்ஸப்பில் நுழைந்தவளை பிரியாவின் மெசேஜ் வரவேற்றது. மதியம் அவள் அனுப்பிய பதிலுக்கு பைக்கா என்று அனுப்பியிருந்தாள். சிறு சிரிப்புடன் தன் அதிதீவிர ரசிகைக்கு, 'சாரிடா இப்போதான் பார்த்தேன் ...' என்று பதிலளித்தாள். அடுத்த நொடி,
ப்ரியா: 'க்கா எழுதி முடிச்சுடீங்களா ...'
மலர்: 'இல்லடா இப்போதான் ஆரம்பிக்க போறேன் ...'
பிரியா: 'சூப்பர்க்கா ... மை டார்லிங் சர்வாவுக்கு வைட்டிங் ...' என்ற பதிலில் திடுக்கிட்டு போனாள் மலர்.
"வாட்ட் ... டார்லிங் சர்வாவா ..." என்று வாய்விட்டு கத்தியவள்,
மலர்: 'என்னடா வில்லன போய் மை டார்லிங் சொல்ற ... ஹீரோயின எவ்வளவு கொடும படுத்திருக்கான் ... போடா ...'
பிரியா: 'போங்கக்கா ... எங்க ஹாஸ்டல் கேர்ள்ஸ் சர்வாவுக்கு பேன்ஸ் ... அவன் வில்லனா இருந்தாலும் நீங்க ரசிக்கிறது போல காட்டிடீங்க என்ன பண்றது ...' என்ற பதிலில் அவள் இதயம் நொறுங்கி போனது.
மலர்: 'டேய் .... நீயே நிறைய தடவ அவன திட்டி மெசேஜ் அனுப்பியிருக்க ... ஞாபகம் இருக்கா.'
பிரியா: 'தப்பு பண்ணான் திட்டினேன் பட் அவன் பண்றதுலையும் ஒரு நியாயம் இருக்குகா ஆன்டி ஹீரோன்னா அப்படிதான் திட்டு வாங்குவாங்க உங்களுக்கு தெரியாததா ... போங்க போங்க வெட்டியா அரட்ட அடிக்காம செல்லகுட்டிய கூட்டிட்டு வாங்க ... பை ...' என்றுவிட்டு ஆப்லைனுக்கு சென்றுவிட பலத்த யோசனைக்கு சென்றாள் மலர்.
சர்வா மேலிருந்த கடுப்பில் தான் அவனை வில்லனாகவும் விச்சுவை ஹீரோவாகவும் வைத்து கதையை எழுதியிருந்தாள். அப்பாவியான பட்டத்து இளவரசனிடமிருந்த பட்டத்தை பறிக்க ஐந்தாவது இளவரசனான சர்வேஷ் மேற்கொள்ளும் கொடூர பயணம் தான் கதையின் கரு.
பட்டத்து இளவரசனுக்கு நிச்சயிக்கப்பட்ட பல்லவ இளவரசியை ஏமாற்றி தன் வலையில் விழ வைத்து வஞ்சகமாக திருமணம் செய்துக் கொண்ட சர்வேஷ்வரனிடமிருந்து தன் காதலால் இளவரசியையும் பட்டத்தையும் எப்படி காத்துக் கொண்டான் விஷ்வேஸ்வரன் என்பதே மீதி கதை.
இளவரசியின் மனமாற்றத்தை அறிந்து மனம் கலங்கிப் போன ஐந்தாம் இளவரசன், நாட்டையும் இளவரசன் பட்டத்தையும் துறந்துவிட்டு கால் போன போக்கில் தன் பயணத்தை தொடர்வதாக முடிவு செய்திருந்தாள்.
ஆனால் இன்று சர்வாவின் மேல் உள்ள கோபத்தால், தான் என்ன எழுதினாலும் மக்கள் படிப்பார்கள் என்ற மமதையில் இறுதி அத்தியாயத்தில் தன் வஞ்சத்தை கொட்டி முடித்திருந்தாள்.
"எனக்கு பட்டமும் வேண்டாம் ஆட்சியும் வேண்டாம் ... பாவையை மட்டும் என்னிடம் தந்துவிடு ..." என்று கண்ணீருடன் சபை முன் மண்டியிட்டு தன் தமையனிடம் மன்றாடினான் பட்டத்து இளவரசன்.
அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் இந்த கொடுமையை பார்க்க முடியாமல் தலைகவிழ்ந்து நின்றிருக்க, ஹாஹாஹா இடியென முழங்கி சிரித்தான் சர்வேஷ்வரன்.
"பார்த்தீர்களா அண்ணா ... இந்த விதி செய்யும் சதியை, தாங்கள் உண்ட தங்க தட்டில் உணவருந்திய என்னிடம் , நா பயன்படுத்திய எச்சில் இலையை கேட்க வைத்துவிட்டது ... ம்ம்ம் ... விரோதிக்கு கூட இந்த கொடுமை வர கூடாது அண்ணா ... நீங்கள் கேட்டு மறுப்பதா ... அழைத்து செல்லுங்கள் ..." என்று பெருந்தன்மையுடன் தன் கோரிக்கையை ஒத்துக் கொண்ட தம்பியை இறுக்கி அணைத்துக் கொண்ட விஷ்வேஸ்வரன், அங்கே சற்று தள்ளி கண்ணீருடன் மண்டியிட்டு தரையில் அமர்ந்திருந்த பாவையை நோக்கி ஓடியவன் அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.
இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கவ்விக் கொண்டது. நீண்ட நாட்களாய் நீடித்த போராட்டம் ஒரு முடிவுக்கு வந்த மனநிறைவு அவர்கள் முகத்தில் புன்னகையாக மலர செய்ய மெல்ல சபை கூடத்தின் வாசலை நோக்கி நடந்து சென்றான் விஷ்வேஸ்வரன். வாயிற்படியை நெருங்கியவனை நோக்கி,
"அண்ணா ..." என்று அழைத்தான் சர்வேஷ்வரன். என்னவென்று திரும்பி பார்த்தவனின் கைகளில் இருந்து இளவரசியும் இறங்கிக் கொள்ள இருவரையும் பார்த்து மென்னகை புரிந்தவன்,
"உங்கள் இருவரின் திருமணத்திற்கான பரிசை வாங்கிக் செல்லுங்கள் அண்ணா ..." என்றவனை இன்முகத்துடன் எதிர்கொண்டவர்களை நோக்கி பாய்ந்து வந்த அன்பு இருவரின் இதயத்தையும் துளைத்து சென்றது.
சில நொடிகளில் நடேந்தேறிய கோரத்தை கண்டு துடித்து போன அமைச்சர் பெருமக்கள் சர்வேஷ்வரனுக்கு எதிராக குரல் கொடுக்க, அனைவரின் உடல்களும் வேரறுந்த மரம் போல கீழே சரிந்து விழுந்தது.
சற்று நேரத்தில் அந்த இடமே ரத்த ஆராய் காட்சியளிக்க முகத்தில் படிந்த ரத்த கரையை துடைத்தபடி பிண குவியலுக்கு மத்தியில் சிம்மாசனத்தில் உட்கார்ந்தான் சர்வேஷ்வரன். என்று கதையை முடித்திருந்தாள் மலர்.
"அப்பாடி ஒருவழியா கதையை முடிச்சாச்சு ..." என்றவாறே கதையின் இறுதி அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டு லேப்டாப்பை மூடி வைத்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
"நாளைக்கு காலைல பேஸ்புக் பக்கம் போனா சர்வாவ நாரடிச்சுருப்பாங்க ... ஜாலி ... இப்போதான் நிம்மதியா இருக்கு ..." என்றவள் அன்று பட்ட மனஉளைச்சலால் உடனே தூங்கிக் போனாள்.
பாவம் மறுநாளில் இருந்து தன் நிம்மதி போன இடம் தெரியாமல் அலைய போவதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள் மதுமலர்.
Our newest member: Susi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed