All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
ஸ்ரீ மா.. எபிக்கு எபி.. ராம் பாசம்.. கூடிட்டே போகுதே.. என்ன செய்வேன்💞💞💞🥰🥰🥰💕💕💕💕💕💕💕💕💕 ஆத்மி நிச்சயத்தை அவன் எதிர் கொள்ளும் விதமும், அடுத்து அமர் சொத்துக்களை கொடுத்தும் அவனின் உணர்வும், குழந்தை போல படுத்தும் ஆத்மியிடம் புரிய வைக்க நினைப்பதும்.. ஹைய்யோ.. செம்ம செம்ம..

ஆத்மி ஒரு நேரம் மெச்சூர்டா யோசிக்கிறா, பல நேரம், சிறு பிள்ளை போல.. க்யூட்.. தத்தி🤭🤭🤭🤭🤭 இதுக்கு ஏதோ செல்லமான,வில்லங்கமான விளக்கம், ராம் கிட்ட இருக்குன்னு என்.. ஏழாம் அறிவு ஜொள்ளுது ஸ்ரீ மா🥰💕🥰💕🥰💕🥰

என்னாது.. அமர் தான் ராம் அனாதையானதுக்கு காரணமா😳😳😳😳😳😳
இந்தப்பக்கம் நிர்மலா, அரவிந்தன் வேற, ராமின் ஆதிமூலம், (ராகவேந்தர்) பற்றி.. தெரிஞ்சவங்களா இருககாங்க, அவங்க தான் அவனோட எதிரிகள் போல , இங்கே அமரை செல்லம் போஸ்ட்ல வச்சே ஒற்றே காரணத்துக்காக, அதையும், அவன் மேலேயே போட்டுக்க வைக்கறீங்க.

"நான் தான் ஜாரி, எல்லா ஜாரியும்..என்னால தான் ஆச்சு.."ன்னு தேவர் மகன் ரேவதி போல புலம்ப விடுறீங்களே..🥺🥺🥺🥺🥺🥺

அடுத்த எபில்ல, ராம் ஆக்ஷ்ன்ஸ் படிக்க.. ஆவலாக வெயிட்டிங்.
நன்றி தாமரை :)
ஹா ஹா அவள் உண்மையில் தத்தி தான்... அதான் திட்டுகிறான். ஹா ஹா இந்த கதைக்கும் அமர் தான் என்னோட செல்லம்.
 

ஶ்ரீகலா

Administrator
வாவ்😍😍😍சூப்பரா மூவ் ஆகுது ...
😃😃நிறைய ட்விஸ்ட் இருக்கு போலயிருக்கே ....நிர்மலா அவங்க அம்மா பேசுறத பார்த்தா ஏதோ பெருசா ராம் க்கு எதிரா நடந்திருக்கும் போல ...கேடிங்க என்ன பண்ணிச்சுகளோ 😖

அமர் அப்பிடி என்ன தான் பண்ணான் ராமுக்கு இப்பிடி பீல் பண்றான்....:unsure: ஏதோ நடந்திருக்கு...

டேய் ராம் உன்னோட க்ரிமினல் மூளை ஏதோ பெருசா ப்ளான் பண்ணுது ...எப்பிடியும் நீ ஆத்மிய கஷ்டபடுத்தாத போல எதையும் செய்ய போறது இல்ல ...அவள எவ்வளவு அழ வைக்க முடியுமோ அவ்ளவு அழ வைப்ப...😡😠 என்ன இருந்தாலும் ஆத்மி பாவம்டா....தத்தி தத்தினு சொல்ற ...அந்த தத்தி வந்தாதான் உனக்கு பணம் வரும் :sneaky::sneaky: அத புரிஞ்சுக்கோ...

அவ நட்பையும் புரிஞ்சுக்கல அவ மேல காதலும் இல்ல ஏன் அவள மனுஷியா கூட மதிக்கல ....ஆனா அப்பிடிபட்டவன தூக்கி பெரிசா நினைக்குற ஆத்மி தத்தி தான்😖

என்ன பொண்ணுமா நீ கோபப்பட்ட கோவமா இரு ....அவன் தான் வேணும்னா வேணும்னு சொல்லு அதவிட்டுடு மாறிமாறி பேசுற ...லூசு...

ஹாஹா ....ஓவரா புலம்புறனா😝😜😜என்ன பண்ண உங்க கதைக்குள்ள ஒருத்தரா பயணிக்குற போல ஒரு பீல் வருது அதான் இப்பிடி....

சூப்பர் ஸ்ரீ மேம் ...அடுத்து என்ன நடக்கும்னு ஊகிக்கவே முடியாத அளவு கதை பயணம் தான் உங்களோடது..வேற லெவல் மூவிங்...செம்மயோ செம்ம ❤❤❤❤❤❤❤❤❤
நன்றி லக்‌ஷு :)
ஹா ஹா ராம், ஆத்மியா மாறி மாறி புலம்பியாச்சு... சரியா வருவாங்க ரெண்டு பேரும்... வெயிட் பண்ணுங்க.
 

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நிறைய புதிர்களை தனக்குள் கொண்ட பதிவு..

அடிக்கடி நினைத்து கொள்வேன் ஸ்ரீ மேம் யோசிப்பதில் நீங்க வேற லெவல் என்று... அப்படியே தான் இப்போது எங்கள் கண் முன்னே... ஹா! ஹா! அருமை ஸ்ரீ மேம்...

அரவிந்த் ஒரு முறை சொல்வார் சரித்திரம் திரும்புகிறதோ என்று.. அப்பொழுதே யோசித்தேன் ராமிற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்று... அச்சோ! ஏதோ செய்து எங்கள் நாயகனை வில்லன் வேலை பார்க்க வைத்து விட்டார்களே.. அவன் தனியாக தன்னை தானே செதுக்கி கொண்டு போராட்டமே வாழ்க்கை என்று உள்ளானே? இதில் வேறு அமர் அவனுக்கு செய்த துரோகம் என்று வேற பேசுகிறான்... என்ன தான் நடக்கிறது இங்கே?????

தன்னை திருமணம் செய்து கொள்ள நினைத்த பெண்ணை அதுவும் பணத்திற்காகவே என்றாலும் மற்ற ஆண் அவள் கையில் மோதிரம் போடுவதை பார்ப்பது எந்த ஆண் மகனையும்???? அதுவும் ராம் நளபாகத்தில் இறங்கி இனிப்பு செய்து பறிமாறுவது... அப்பப்பா! நடிகன்டா! நிர்மலாவிற்கு பதில் கொடுக்கவும் தப்பவில்லை...

அமர் ரன்வீர் வந்து ராம் எந்த கேள்வியும் கேட்காதவாறு தொழிலை அவன் பெயருக்கு மாற்றியது... அமர் என்றுமே உதவும் மனப்பான்மை உள்ளவனே...

ராம் ஆத்மியை தவிர்த்து, ஆத்மிக்கு நிதர்சனத்தை புரிய வைக்கிறானா? புரிந்து அவனிடம் வந்து விடுவாளா? ஏன் என்றால் அவளை அமரிடம் கேட்க சொல்லி முதலிருந்தே வற்புறுத்தி கொண்டுள்ளான் ராம்...

அபாரமான பதிவு ஸ்ரீ மேம் தங்கள் பாணியில் ஆர்ப்பாட்டமாய்...
நன்றி சாந்தி :)
ராம் நடிகன் தான்... அவன் என்ன நினைக்கிறான்? என்ன செய்ய போகிறான் என்பதை அமரால் கூட ஊகிக்க முடியாது. உங்க கேள்விக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.
 

ஶ்ரீகலா

Administrator
Epi super srima... Aathmi manasula ram mela friendship apadingaratha thandi onu iruku... Athanala than Avan kastapadratha avanala parka mudiyala... Avala thathinu ram solran but Avaloda manasa purunjukama Ava mela koba pati Ivan than thathiya irukanonu thonudhu... Parkalam yari thathinu... Ram pathi ella visayamum marmave iruke.... Nirmalava pathi Avan therinjukitan... But enna ranvir love than kappal kadalla mooluhura mathiri aaha poguthu... Ivalavu naal pathukappu koduthu vachavala nethu vandhavan thookitu poha vitruvana ram....
நன்றி தேவ் :)
ஹா ஹா செகண்ட் ஹீரோன்னா அப்படின்னா தான் 😜😜😜
 

ஶ்ரீகலா

Administrator
ராமின் கடந்த காலம் எப்படி இருக்கும் அதற்கு காரணம் அமரா இல்லை நிர்மலா குடும்பமா?

ராம் நினைத்தது போல் சொத்து கை வந்து விட்டது இனி ஆத்மியை என்ன செய்ய போகிறான்?

நிர்மலாவை கண்டு கொண்டானா ராம்?

கேள்விகள் பல விடை ஸ்ரீமா கையில்

ஆத்மி ராம் சொல்வது போல் தத்தி தான்
நன்றி பானுமதி :)
விடை ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருக்கிறது.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி நிலா :)
ஹா ஹா என்னே ஒரு நம்பிக்கை அமர் மீது... நீங்க அமரோட தீவிர ரசிகைன்னு ப்ரூப் பண்றீங்க 😝😝😝 நிர்மலா கோஷ்டி பத்தி போக போக புரியும்... ராம் ஆத்மி கிட்ட தான் எல்லாம் பேசுறான். அமர் கிட்ட இன்னும் பணிவா தான் இருக்கான். இப்போதைக்கு கவலை இல்லை. ஹா ஹா அவங்க ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா கதைக்கு நான் எங்கே போறது 😁😁😁 யாராவது ஒருத்தருக்கு பல்ப் எரியுதான்னு பார்க்கலாம்.
அமருக்கு மட்டும் கஷ்டத்தைக் கொடுத்தா அம்புட்டு தான் இந்த ராமை 😷
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!



இனிய தோழி,

ஆத்ம பந்தத்தின்
ஆபத்பாந்தவன்...!
ஆத்ம ராகத்தில்
ஆத்மனானவன்...!

ஆசை வேகத்தில்
ஆத்மாவைச் சாய்த்தவன்
ஆடும் ஆட்டத்தில்
ஆளைச் சாய்த்தவன்!

ஆணவம் பேச்சில்
ஆவேசம் வீச்சில்
ஆசுவாசம் கொண்டதோ
ஆத்மியவள் மூச்சில்!

ஆணவன் சதிராட
ஆத்திரம் சதியாக
ஆத்ம ராகத்தில்
ஆனந்தம் புதிராக...
ஆலிலையில் தாலாட்டும் ராமன் - இவன்
ஆவியிலே கோலோச்சும் பரசு ராமன்!

ஆத்மனின் கோபத்தில்
ஆத்மியவள் அலைபாய
ஆற்றுவாரற்ற மகள்
ஆதரவாய் தோள் சாய
ஆத்மனும் வந்துவிட்டால்
ஆத்மராகம் ஆலோலமே!

ஆலோலம் பாடும் முன்னே
ஆதி கதையின் நீதி தேட
ஆத்மாவின் வேகம் காத்திருக்க
ஆத்மராமனின் விவேகத்தில்
ஆத்மார்த்த காதல் கனிந்தாலும்
ஆத்ம துரோகத்தின் ஆரவாரம்
ஆத்ம ராகத்தில் அபஸ்சுவரமே!

வாழ்த்துக்கள் தோழி, ஒரு ஆழமான அழுத்தமான கதையை உங்கள் நடையில், உங்கள் தெளிவில் படிக்க மனம் நிறைந்த மகிழ்ச்சி. நன்றி தோழி.
 
Last edited:
Top