All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

💖உன்னுள் தொலைந்தேனே 💖-கதை திரி

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖 உன்னுள் தொலைந்தேனே💖

அத்தியாயம் 10

ஊரில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு வாடகை வண்டி ஏற்பாடு செய்திருந்தார் ராஜவேலு. அரவிந்த் மறுத்தும் அவர் கேட்கவில்லை. பின் ஒரு வழியாக சரி என்ற அரவிந்த் வாடகை பணத்தை நான் தான் தருவேன் என்று முடிவாக சொல்லிவிட்டான். அதற்கு ராஜவேலு மறுப்பு சொல்லவில்லை மாப்பிள்ளை மீது பெருமை கொண்டார்.

முதலில் தமயந்தி ஏறிக்கொண்டார் பின்னர் பிரியா மற்றும் அரவிந்த் அமர்ந்தனர். முன்பக்கம் தங்கதுரை அமர்ந்துகொண்டார்.

சிறிது தூரம் சோகமாகவே வந்த பிரியாவை தமயந்தி சமாதானப்படுத்தினார். "ஏன்மா கவலைப் படுறே இந்த அத்தை வீட்டுக்கு தானே வர, அத்தை மேல நம்பிக்கை இல்லையா " என்றார்.

அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் அவர் தோளில் சாய்ந்து கொண்டாள். தோளில் சாய்ந்த அவளை லேசாக தட்டி கொடுத்து அவள் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் .

அரவிந்தனும் தங்கதுரையும் அவளைப் பார்த்திருந்தனர்.
சற்று தூரம் சென்றதும் அவள் கண் மூடி தூங்கி விட்டாள். அவளை பார்த்த தமயந்தியும் நன்றாக உட்கார்ந்து அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.

கொஞ்ச தூரம் சென்றதும் காரை ஒரு டீ கடையை பார்த்து நிப்பாட்ட‌ சொன்னார். கடை வரவும் தமயந்தி பிரியாவை எழுப்பினார். முதலில் புரியாமல் விழித்தவள் பின் தெளிந்தாள்.

அவளை டீ சாப்பிட கூப்பிட, "வேனாம்" என்று சொல்லிவிட்டாள்.


" நான் அவளை பார்த்துக்கிறேன்மா ,நீங்க டீ குடிச்சிட்டு வாங்க" என்று அனுப்பி வைத்தான்.

அவர் சென்றதும் ப்ரியாவிடம் வந்து "ஏன் டீ வேணாம்னு சொல்லிட்ட, குடிக்க மாட்டியா" என்றான் .

பிரியாவோ "இல்ல எனக்கு கார்ல போகும் போது ஏதாவது சாப்பிட்டா ஒத்துக்காது , அதான் வேண்டாம்" என்றாள்.

" சரி இரு வரேன் " என்று கடைக்கு சென்று அவளுக்கு இரண்டு புளிப்பு மிட்டாய், பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்து கொடுத்தான்.

அதை வாங்கி கொண்ட பிரியா அவனை அதிசயமாய் பார்த்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்து "காலையில் சாப்பிட்டது தூங்கி எந்திரிச்சிருக்க கொஞ்ச நேரம் கழிச்சி ஏதாவது சாப்பிடனும் போல இருக்கும் . அப்ப பிஸ்கட் சாப்பிட்டுக்கோ. வாந்தி வர மாதிரி இருந்தா புளிப்பு மிட்டாய் போட்டுக்கோ" என்றான்.

ப்ரியாவும் " அண்ணன் வரும்போதே கையில நாலு புளிப்பு மிட்டாய் கொடுத்துதான் விட்டுச்சு , அது இருக்கு" என்றாள்.

" உங்க அண்ணன் கொடுத்தது வச்சுக்கோ இப்போ இதை சாப்பிடு" என்றான். அவளும் சரி என்று வாங்கி வைத்துக் கொண்டாள்.

தங்கதுரையும் தமயந்தியும் டிரைவருக்கும் டீ குடித்துவிட்டு காருக்கு வந்தனர். அங்கே அரவிந்தும் பிரியாவும் இருப்பதை பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அடுத்து கார் மதுரையை நோக்கி சென்றது. கொஞ்ச தூரம் சென்றதும் அரவிந்தன் சொன்னது போலவே பிரியாவிற்கு பசித்தது . ஆனால் எடுத்து சாப்பிட கூச்சப்பட்டு அமைதியாக வந்தாள். அவள் பிஸ்கட்டையே பார்த்துக் கொண்டு வருவதைப் பார்த்த அரவிந்த் தனக்குள் சிரித்துக்கொண்டு, " பிஸ்கட் சாப்பிறீங்களாமா " என்று தமயந்தியிடம் கேட்டான் .

தமயந்தியும் "இப்பதானே டீ குடிச்சோம் எனக்கு வேண்டாம்" என்று கார் கண்ணாடியில் சாய்ந்து தூங்கி விட்டார்.

ப்ரியாவிடம் இருந்து பிஸ்கட்டை வாங்கிய அரவிந்த் பெயருக்கு ஒன்று மட்டும் எடுத்துக்கொண்டு பாக்கெட்டை அவளிடம் நீட்டி," இந்தா சாப்பிடு" என்றான் .

ப்ரியாவும் பசியில் இருந்ததால் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டாள்.

மாலை ஆறு மணி போல் தங்கதுரையின் குடுக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அப்போது அங்கே தமயந்தியின் உறவுக்காரப் பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர்.

உள்ளே நுழைந்ததும் தமயந்தி பிரியாவை பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே விளக்கேற்றி சாமி கும்பிட்டனர்.

அப்போது நீலவேணி தமயந்தி வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் பிரியா "வாங்க" என்று அழைத்தாள்.

அவர் தமயந்தியிடம் இரவு நந்தினிக்கு சடங்கு செய்யனும் கொஞ்சம் பிரியாவை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறியா என்று கேட்டார். ஆமாம் இன்று பிரசாத் நந்தினிக்கு முதலிரவு.

அதற்கு தமயந்தியும் " சரி அண்ணி அனுப்பி வைக்கிறேன்" என்றார்.

அதை பிரியாவிடம் சொன்னபோது அவள் அரவிந்தனை பார்த்தாள்.

அரவிந்தனும் ,'இவ எதுக்கு இப்போ நம்மள பார்க்கிறா' என்று அமைதியாக இருந்தான்.

நீலவேணியும் தமயந்தியும் வெளியே சென்றனர் .அவர்கள் சென்றவுடன் அரவிந்த் பிரியாவிடம் , "ஏன் என்ன பார்த்த" என்று கேட்டார் .

"ஏன் பாக்க கூடாதா சும்மாதான் பார்த்தேன்" என்றாள்.

" சரி நான் பெரியம்மா வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா" என்று கேட்டாள்.

முதல் முறையாக அவள் அப்படி கேட்டதும் என்னவோ போல் இருந்தது ஏனென்றால் பிரியாவின் குணம் இது இல்லை.

"அதை ஏன் என்கிட்ட கேட்கிற அம்மாதான் சொன்னாங்களே போயிட்டு வா" என்றான்.

நீலவேணி சென்றதும் அவர்களிடம் வந்த தமயந்தி," இரண்டு பேருக்கும் சுடு தண்ணி வைக்கிறேன். வண்டில வந்தது அலுப்பாக இருக்கும். குளிச்சிட்டு பிரசாத் வீட்டுக்கு பிரியாவை அழைச்சிட்டு போ" அரவிந்த்

" நான் எதுக்கு மா இவளை மட்டும் அனுப்பி வைக்க வேண்டியதுதானே" என்றான்.

"டேய் என்னடா சொல்ற அவளுக்கு நம்ம வீடே புதுசு, பிரசாத் வீட்டில் யாரையுமே சரியா தெரியாது , அவ மட்டும் தனியா எப்படி போவா , ஒழுங்கா சொல்றதைக் கேளுங்கடா ரெண்டு பேரும் குளிச்சுட்டு போய்ட்டு கொஞ்ச நேரம் இருந்திட்டு நீங்களும் சீக்கிரமே வீட்டுக்கு வந்து சேருங்க" என்றார்.

" சரிமா கூட்டிட்டு போயிட்டு வரேன்" என்றான்.

இருவரும் கிளம்பி வெளியே வரவும் தமயந்தி பிரியாவின் தலை நிறையா மல்லிகை பூவை வைத்து வழி அனுப்பி வைத்தார்.

" இந்த தெரு முனையில் தான் வீடு நடந்து போலாமா இல்ல வண்டியில போலாமா" என்றான் அரவிந்த்.

" உங்க இஷ்டம் " என்றாள்.

சரி வா நடந்தே போகலாம் என்று இருவரும் நடந்தனர் போகும் வழியில் அமைதியாகவே இருவரும் சென்றனர்.

அந்த அமைதியை அரவிந்தே கலைத்தான் . அன்று குலதெய்வ கோவிலில் பொங்கல் வைக்கும் போது அவனிடம் வந்த சிறுவர்கள் " பிரியாக்கா மாங்காய் பறிக்க வரல தான் சொன்னுச்சி நாங்கதான் வற்புறுத்தி கூட்டிட்டு போனோம் .அதுக்காக நீங்க ப்ரீயாக்காவ கோச்சுக்காதீங்க மாமா" என்று சொன்னதை அவளிடம் சொன்னான்.

பிரியாவும் "ஆமா முதல்ல நான் வரலைன்னு சொன்னேன் அவங்கள தான் கூட்டிட்டு போனாங்க அன்னைக்கு நான் போகாம இருந்திருந்தா தேவையில்லாம அந்த பாண்டிகிட்ட மாட்டி இருக்க மாட்டேன். என்றாள்

" சரி விடு அதான் ஒன்னும் நடக்கலையே இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இரு" என்றான்.

பிரசாத்தின் வீடு வந்ததும் அவனின் நண்பர்கள் வாசலில் நிற்பதை பார்த்ததும் " நீ உள்ள போய் அத்தைட்ட பேசிக்கிட்டு இரு நான் வரேன்" என்று உள்ளே அனுப்பி வைத்தான்.


நண்பர்கள்அவனைப் பார்த்ததும் என்னடா திருவிழாவுக்கு போறேன்னு சொல்லிட்டு கல்யாணத்தை முடிச்சுட்டு வந்துட்ட என்று கிண்டல் செய்தனர்.

" ஏன்டா கிண்டல் பண்றீங்க , போன இடத்துல சத்யன் மகா விஷயம் தெரிஞ்ச வேலு மாமா அப்பாகிட்ட பொண்ணு கேட்கவும் அப்பாவும் சரினு சொல்லிட்டாரு.


என்ன நினைத்தாரோ மாமா பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கலாம்னு சொல்லவும் அப்பாவுக்கும் நண்பன் கேட்டதும் ஒரே மகிழ்ச்சி சரி ஒத்துக்கிட்டாரு" என்றான்

"அப்போ தங்கச்சிய பிடிக்காம உங்க அப்பா விருபத்திற்காக கல்யாணம் பண்ணிக்கிட்டியா " என்றான் ஒருவன்.

அதற்கு அரவிந்த் "தெரியலடா ஆரம்பத்தில் பிடிக்காமல் தான் இருந்தது. ஆனா இப்ப என்னவோ என் கண்ணுக்கு வித்தியாசமா தெரிகிறாள்" என்றான்.

மஞ்சள் கயிறு மேஜிக் அவர்கள் வாழ்க்கையிலும் வேலை செய்தது.

அரவிந்த் ப்ரியா பற்றி ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்

அரவிந்த் ப்ரியா சத்யன் மகா பிரசாத் நந்தினி சபரி விமலா என்று இவர்கள் சிறுவயதிலிருந்து திருவிழா மற்றும் விசேஷங்களில் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள்.

விவரம் தெரியத் தெரிய இவர்களின் நட்பு வட்டாரம் சுருங்கிவிட்டது.

பிரியாவிற்கு 12 வயது இருக்கும்போது ஒரு பையன் அவள் ஜடையை பிடித்து இழுத்தான் என்று அவனைக் பக்கத்தில் இருந்த கிணற்றில் தள்ளி விட்டு ஓடி விட்டாள் . அப்போது அங்கே இருந்த அரவிந்த் மாட்டிக் கொண்டான்.

அந்தப் பக்கமாக சென்ற ஒரு பெரியவர் பிரியாவை பார்க்காமல் அரவிந்த் மட்டும் பார்த்துவிட்டு அரவிந்தன் தான் தள்ளி விட்டான் என்று எல்லோரிடமும் சொல்லி தங்கதுரை அவனை வெளுத்து வாங்கிவிட்டார்.

விவரம் தெரிஞ்ச அரவிந்த் வாங்கிய கடைசி அடியும் அதுதான் அப்பாவிடம். பிரியா வால் தான் அடி வாங்கினான் என்று அவள் மேல் கோபமாக இருந்தான்.

அந்த சமயத்தில்தான் தமயந்தியின் அப்பா இறந்ததும் மதுரைக்கு வந்து விட்டனர்.

அதன் பிறகு ஊருக்கு சென்றாலே ப்ரியாவைப் பார்த்தால் வெறுப்பான்.

இந்த விஷயம் அவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் அரவிந்துக்கு சப்போர்ட் செய்து பிரியாவை திட்டினர். அதிலிருந்து பிரியாவிற்கு அவன்மேல் கோபம்.

இந்த சமயத்தில்தான் பிரியா பெரிய மனுஷி ஆனாள். பாவாடை சட்டையில் பார்த்த அவளை முதல் முறையாக தவணை பாவடையில் பார்த்ததுமே அரவிந்தன் அவள் அழகில் மயங்கிவிட்டான். ஆனால் எப்போதும் போல முறைத்து பார்ப்பது போலவே சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

நாட்கள் செல்ல செல்ல எப்போதும் கோபமாக இருக்கும் அரவிந்தை வம்பிழுக்கும் பொருட்டு மாமா மாமா என்று அவனை கடுப்பேற்றுவாள்.

இவள் மாமா என்று அழைப்பது அவனுக்கு பிடித்தாலும் கோவமாக "என்ன மாமான்னு கூப்பிடாத எனக்கு பிடிக்கல " என்று திட்டி விட்டான்.

சிறுவர்களோடு கதை பேசிக்கொண்டே பாவாடையை இடுப்பில் தூக்கி சொருகி மரத்தின் மேல் ஏறினாள். அந்த வாண்டுகளும் "அக்கா பார்த்து ஜாக்கிரதை" என்று கீழே நின்று குரல் கொடுத்தார்கள் . இவளும் மரத்தில் ஏறி மாங்காய் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது கிளையில் ஒரு பாம்பு வரவும் மக்கள் பயந்து ஐயோ பாம்பு என்று வேகமாக கீழே குதிக்க போய் கால் தவறி அந்த பக்கமாக வந்த அரவிந்தன் மீது மோதி இருவரும் உருண்டனர்.

முதலில் சுதாரித்த அரவிந்த் முதலிலிருந்து ஆவலில் அவளை எழுப்புவதற்காக கை நீட்டினான் முதலில் தயங்கிய பிரியா பெண் அவன் கையைப் பற்றி எழுந்தாள்.

அரவிந்திற்கு கோபம் வந்தாலும் அவளின் முதல் தொடுகையை ரசித்தான். அதனால் அவன் அமைதியாக இருந்தான் . அந்த அமைதியை பயன்படுத்தி எங்கே திட்டிவிடுவானோ என்ற பயத்துடன் வேகமாக வீட்டிற்கு சென்று விட்டாள். இந்த சம்பவத்திற்கு பிறகு பிரியாவுக்கு அவன் மீது சிறு சலனம் ஏற்பட்டது.

அந்த முறை திருவிழா முடிந்து ஊருக்கு செல்லும் முன் பிரியாவிடம் தன் காதலை சொல்ல எண்ணினான் அரவிந்த் . அப்போது அவன் நண்பன் சபரி அவனிடம் வந்து, " தான் பிரியாவை விரும்புவதாக சொன்னான்" அதைக் கேட்டதும் அரவிந்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

" உன் காதலை பிரியா கிட்ட சொல்லிட்டியா என்று கேட்டான்". சபரியோ காதலின் மேல் உள்ள நம்பிக்கையில் "பிரியாவிற்கு என்னை பிடிக்கும் . கண்டிப்பா என் காதலை ஏத்துக்க வா" என்றான்.

அரவிந்திற்க்கும் சபரியை பிரியாவிற்கு பிடிக்குமோ என்ற எண்ணம் இருந்தது. அதனால் அவன் காதலை சொல்லாமலே அந்த வருடம் ஊருக்கு சென்றான். மறுவருடமும் தங்கதுரையின் குடும்பம் ஊருக்கு வர முடியாத காரணத்தினால் சபரி பிரியாவிடம் சொன்ன காதலுக்கு பதில் தெரியாமலேயே போனது அரவிந்திற்கு.

சென்னைக்கு வேலைக்கு சென்ற சபரி அங்கு வேலை செய்த இடத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். அவன் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர் அவனை ஊர் பக்கம் வர அனுமதிக்கவில்லை.

இந்த விஷயம் தெரிந்து அரவிந்திற்க்கு ஒரே குழப்பம் அவன் பிரியாவை விரும்பிறேனு சொன்னான். திடீர்னு சென்னையில் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான். அவன் கேட்டதுக்கு பிரியா என்ன பதில் சொல்லி இருப்பாள் என்ற பல கேள்விகள் மற்றும் குழப்பங்கள் அவன் மனதில்.


( இதுதாங்க அரவிந்த் பிரியா பற்றிய பிளாஷ்பேக். கொஞ்சம் மொக்கையா தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க இனி கதைக்கு போவோம்.)


பிரியாவை விழுந்து விழுந்து காதலித்துவிட்டு நண்பர்களிடம் பிடிக்கல , பிடிக்கல என்று சொல்லி காதலை வளர்த்திருக்கிறான். கடைசில அப்பா சொன்னதற்காக கல்யாணம் பண்ணி கேட்டேன் என்று பில்டப் வேறு . பாவம் அவன் நண்பர்களும் அரவிந்திற்கு பிரியாவை பிடிக்காது என்று நம்பினர். நம்ம பய ஆக்டிங் அப்படி.

அங்கு நீலவேணியின் வீட்டிற்குள் சென்ற பிரியாவை அவர் வரவேற்றார் . "எங்கம்மா அரவிந்த் வரலையா "என்றார் .

"வந்திருக்காங்க பெரியம்மா அவங்க பிரெண்ட்ஸ்களோட பேசிட்டு இருக்காங்க" என்றாள் .

"சரி மா நீ போய் கொஞ்சம் நந்தினிக்கு உதவி பண்ணு "என்றார்.

சரி என்று பிரியா நந்தினியைப் பார்க்க சென்றாள். அங்கு நந்தினியும் கொஞ்சம் பதட்டத்துடனே இருந்தாள்.

நந்தினிக்கு ப்ரியாவை பார்த்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.

ப்ரியாவின் கையை பிடித்து "என்னவோ தெரியல டி கொஞ்சம் பதட்டமாக இருக்கு " என்றாள்.

"என்னடி பயம் உனக்கு தான் பிரசாத் அண்ணா ரொம்ப பிடிக்கும்ல அப்புறம் ஏன் பயப்படுற பயப்படாம உள்ள போ" என்று தைரியம் சொன்னாள்.

ஒருவழியாக நந்தினியை பிரசாத்தின் அறைக்குள் அனுப்பிவிட்டு இவள் வெளியே வந்தாள். அப்போது நீலவேணி அரவிந்த் மற்றும் பிரியாவை சாப்பிட அழைத்தார் . வேண்டாம் என்று மறுத்தும் கேட்காமல் சாப்பிட்டுவிட்டு தான் போகணும் தமயந்திகிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன் என்றார்.

சரி என்று இருவரும் சாப்பிட்டு விட்டு அவர்கள் வீட்டை நோக்கி சென்றனர்.

எங்க பிரசாத்தின் அறைக்குள் நந்தினி மெதுவாக உள்ளே சென்றாள்.

உள்ளே வந்த நந்தினியை பிரசாத் அவன் கைகளில் ஏந்தினான்.

முதலில் பயந்த நந்தினி பின் வெட்கம் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள்.

மூடிய அவள் இமையின் மீது முதல் முத்தத்தை பதித்தான்.

பின் இருவருக்கும் பேச்சின்றி மௌனத்தில் கரைந்தது. அவளை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றான் பிரசாத்.

இங்கே வீட்டிற்கு வந்த அரவிந்த் மற்றும் பிரியாவை தமயந்தி சாப்பிட அழைத்தார். "பெரியம்மா வீட்டில் சாப்பிட்டு தான் வந்தோம், சொன்னாலும் கேட்கலை கட்டாயபடுத்தி சாப்பிட்டு வச்சுட்டாங்க." என்றாள்.

" சரி ரெண்டு பேரும் இருங்க, பால் எடுத்துட்டு வரேன், குடிச்சிட்டு போய் படுங்க" என்று தமயந்தி சமையலறைக்குச் சென்றார்.

அவர் சென்றதும் ப்ரியாவும் அவருடனே சமையல் அறைக்குச் சென்றாள். அரவிந்த் அவளை பார்த்து விட்டு தன்னுடைய ரூமிற்கு சென்றான்.

பாலை பிரியாவிடம் கொடுத்த தமயந்தி " போமா நீயும் குடிச்சிட்டு அரவிந்திற்கும் கொடு " என்றார்.

அவள் பாலை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். ஹாலில் அவனைக் காணாமல் ரூமிற்கு சென்றாள் . அங்கே சேரில் அமர்ந்து அரவிந்த் ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான்.

அவனிடம் பாலை கொடுக்க வாங்கிவிட்டு ,"நீ போய் படு நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்" என்று அனுப்பி வைத்தான். ப்ரியாவும் சரி என்று போய் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

அவள் தூங்கியதும் சிறிது நேரம் அவளை பார்த்தான். அவள் தூக்கம் கலையாத வண்ணம் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு "ஐ லவ் யூ டி என் பொண்டாட்டி " என்று சொல்லிவிட்டு பக்கத்தில் படுத்து கண்ணயர்ந்தான்.

தொடரும்........
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்




💖உன்னுள் தொலைந்தேனே💖 அத்தியாயம் 10 கொடுத்துள்ளேன்.. சென்ற அத்தியாத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல 🥰🥰🥰

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்👇👇👇👇

 

Attachments

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11

மறுநாள் காலை நீலவேணியுடன் நந்தினி‌ சமையலறையில் உதவி செய்து கொண்டிருந்தாள்.

அப்போது நீலவேணி நந்தினியிடம் "பிரசாத் எழுந்துடுவான் இந்த காபியை கொண்டு போய் அவன் கிட்ட குடுத்துட்டு வா "என்றார்.

அப்போது நந்தினிக்கு , முதல் முதலில் அவள் வீட்டில் அவனுக்கு காபி எடுத்துக்கொண்டு போகும்போது பிரசாத் செய்த சேட்டைகளும் நேற்று நடந்ததும், நினைவில் வந்து வெட்கப்பட்டுக் கொண்டே " சரி" என்று சொல்லி வாங்கி சென்றாள்.

அவளின் வெட்கத்தை பார்த்த நீலவேணியோ மனதில் நிறைவாக உணர்ந்தார்.

கண் விழித்த பிரசாத்தோ பக்கத்தில் மனைவியை தேடி இல்லாத ஏமாற்றத்தோடு திரும்ப, அவளோ கையில் காபியுடன் உள்ளே வந்தாள். அவள் வருவதை பார்த்து தூங்குவது போல் நடித்தான். அவன் தூங்குவதை சற்று நேரம் பார்த்துவிட்டு பின் அவனை எழுப்ப கொண்டுபோன கையை இழுத்து அவன் மேல் போட்டுக் கொண்டான்.

நந்தினியோ " நீங்க தூங்கலையா நடிச்சீங்களா" என்று அவனை முறைத்தாள்.

" என்னடி நேத்து வரைக்கும் பயந்துகிட்டு இருந்த இப்போ என்னடான்னா முறைக்கிற " என்று வம்பிழுத்தான்.

"அதெல்லாம் அப்படித்தான். அத்தை என்னை கூப்பிடுவாங்க நான் போகணும் நீங்க சீக்கிரம் குளிச்சிட்டு கீழே வாங்க" என்றாள்.

"சரி நான் விடுறேன் அதுக்கு ஒரு கண்டிஷன் ஒரே ஒரு முத்தம் கொடுத்துட்டு போ" என்றான்.

" அதெல்லாம் முடியாது நான் போறேன் விடுங்க" என்று எந்திரிக்க முயற்சி செய்தாள் , ஆனால் அவன் விடவில்லை .

"சரி கண்ண மூடுங்க தரேன்" என்றாள். அவன் கண்ணை மூடவும் அவன் கன்னத்தை கடித்து விட்டு கிடைத்த கேப்பில் எழுந்து அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு ஓடிவிட்டாள்.

" நீ மறுபடி இங்க தானே வரணும் அப்போ உன்னை கவனிச்சிக்கிறேன் என்று செல்லும் அவளையே சிரித்தபடி பார்த்துகொண்டிருந்தேன்.



இங்கு அரவிந்த் வீட்டிலோ தமயந்தி பிரியாவிடம் காப்பியைக் கொடுத்து அனுப்பினார். நந்தினி காப்பியுடன் அறைக்கு வரவும் அரவிந்த் லேசாக கண் விழித்து பார்த்து எப்பவும் வரும் கனவு என்று நினைத்துக்கொண்டு கண்மூடிக் கொண்டான்.

பிரியாவோ 'இப்போ முழிச்சி நம்மள பாத்தாரு திரும்ப தூங்குறாரு' என்று குழம்பினாள். தூங்குறாரே எப்படி எழுப்புவது என யோசித்தவள் தன் கையில் உள்ள கண்ணாடி வளையல் மூலம் சத்தம் எழுப்பினாள்.

அந்த சத்தத்தில் எழுந்தவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே காபியை வாங்கிக் கொண்டான். அவன் சிரிப்பை பார்த்து குழம்பினாள்.

அவளுக்கு எப்படி தெரியும் தினமும் கனவில் வரும் நிகழ்வு என்று.

காபியை குடித்து கொண்டே" நீ குடிச்சிட்டியா" என்றான். அவனின் கேள்வியில் ஆச்சிரியமாக அவனை பார்த்தபடி "ஆம்" என்று தலையாட்டினாள்.


" இன்னைக்கு அத்தை நம்மல கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க" என்று தயக்கத்தோடு நிறுத்தினாள் எங்க திட்டிவிடுவானோ என்று

"ஆமால நான் மறந்துட்டேன் கிளம்பி இரு நான் கொஞ்சம் வெளில வேலை இருக்கு முடிச்சிட்டு வந்து கூட்டிட்டு போறேன்" என்றான்.

அரவிந்த் சென்றதும் தமயந்தியிடம் வந்தவள் சமையலில் உதவி செய்து கொண்டிருந்தாள்.

தமயந்தியும் "இதெல்லாம் நான் பாத்துக்குறேன்மா நீ கோவிலுக்கு கிளம்புமா" என்றார்.

சற்று நேரத்தில் பிரியாவின் அறைக்கு வந்த தமயந்தி ஒரு புடவையை கையில் கொடுத்து " உனக்கு புடிச்சிருந்தா இந்த புடவையை கட்டிக்கோ" என்றார்.

அந்தப் புடவை பிரியாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. ரொம்ப அழகா இருக்கு அத்தை.

போன தீபாவளிக்கு அரவிந்த் எடுத்துக் கொடுத்த புடவைமா. ஆனால் எனக்கு தான் இத கட்ட மனசே வரல ஏன்னா இது ரொம்ப அழகா இருந்தது அதை விட சின்ன பிள்ளைங்க கற்ற மாதிரி இருக்கு . என்னனு தெரியல இந்த புடவைய மகாவுக்கு கொடுக்கவும் மனசில்ல. அரவிந்த்க்கு வர போற பொண்ணுக்கு குடுக்கனும் ஆசையா இருந்தது .


அத்த அப்படின்னா இன்னைக்கு கோவிலுக்கு நான் இந்த புடவை கட்டிட்டு போறேன்.

உனக்கு பிடிச்சா கட்டிக்கோமா . நான் போய் சமையல் வேலை பாக்குறேன் அரவிந்த் வந்ததும் சாப்பிட்டு சீக்கிரம் வெயிலுக்கு முன்ன போயிட்டு வாங்க.

வெளியே சென்ற அரவிந்த் வீட்டிற்குள் வரும்போது இன்பமாக அதிர்ந்தான் . அந்த புடவையில் பிரியா தேவதையாக ஜொலித்தாள். ((அவள் எப்படி இருந்தாலும் தேவதை மாதிரி தான் அவன் கண்ணுக்கு தெரிவாள் அது வேற விஷயம்))

அவளை ஒரு நிமிடம் நன்றாக சைட் அடித்துவிட்டு சாப்பிட சென்றான்.

அவன் வருவதை பார்த்த தமயந்தியும் பிரியாவை அழைத்து அவனுக்கு பரிமாறு என்று சொல்லிவிட்டு சமையல் அறையில் இருந்து கொண்டார். பிரியாவும் அமைதியாக பரிமாறினாள்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினர் அப்போது உள்ளே வந்த தங்கதுரை மகனையும் மருமகளையும் பார்த்து" பத்திரமா போயிட்டு வாங்க மருமகளைப் பார்த்து ஜாக்கிரதையாக அழசிட்டு போயிட்டு வாடா " என்று அரவிந்திடம் சொல்லி வழியனுப்பினார்.

அவர்கள் சென்றதும் தமயந்தியிடம் வந்த தங்கதுரை "என்ன தமயந்தி மருமக தலைல பூ இல்லாமல் அனுப்பி
விட்ருக்க "

"இதே அக்கரை உங்க மகனுக்கு இருந்தா அவன் வாங்கி தரட்டும் "

_____________________________________________-------------------------------------------------. இங்கு ஊரில்..

ராஜவேலு அன்று வீட்டிற்கு வரும்போதே லட்சுமியை அழைத்து கொண்டே வந்தார்.

லஷ்மி " நாளைக்கு ஊருக்கு போறதுக்கு ஏற்பாடு பன்னிடியா ப்ரியாக்கு பிடிச்ச பலகாரம் எல்லாம் பன்னிட்டியா".


"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் நீங்க அரவிந்த்க்கு பைக் வாங்கனும்னு சொன்னீங்க வாங்கியாச்சா"

"அத நம்ம சத்யன்கிட்ட சொல்லிருக்கேன் மதியம் சாப்டதும் போறேன்னு சொன்னான்".

"எங்க லஷ்மி மகாவ காணோம்".

"இப்போ தான் சமையல் வேலை முடிஞ்சது அதான் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க சொன்னேன்".

(( இங்கே மகாவிற்கு வேலை அதிகம் தான். காலைல எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு மாட்டு கொட்டாய் கூட்டி மாட்டுக்கு தண்ணி வைத்து காலை மதியம் சமையல் செய்து பாத்திரம் கழுவி துணி துவைக்க எல்லாம் மகா மற்றும் லஷ்மி இரண்டு பேரும் சேந்து தான் செய்தாலும் மகாவிற்கு கொஞ்ச நேரத்தில் சோர்வு வந்துவிடும் லஷ்மி வேண்டாமா நான் பாத்துக்கிறேனு சொன்னாலும் கேக்காமல் எல்லா வேலையும் செய்வாள்)).

அப்போது உள்ளே வந்த சத்யனிடம் ராஜவேலு அரவிந்திற்கு பைக் வாங்க பணம் கொடுத்தார். அதை வாங்கியவன் மகாவையும் தன்னுடன் அழைத்து செல்வதாக கூறினான்.

"கூட்டிட்டு போடா, மகாக்கும் இங்க வேலை இருந்துட்டே இருக்கு இந்த இருளாயி திருவிழாக்கு விருந்தாளி வந்துருக்காங்கனு ஒரு வாரமா வேலைக்கு வரல "என்றார் லஷ்மி .

"விடு லஷ்மி நாளைக்கு ஊருக்கு போனால் இரண்டு நாள்‌கழிச்சி தான் வருவோம் வந்ததும் வரட்டும் அதான் இன்னைக்கு எல்லா வேலையும் முடிச்சில்ல சரிடா நீ மருமவள கூட்டிட்டு போ வெரசா போயிட்டு பொழுது சாயரதுக்குள்ள வாந்திருங்க".

"சரிப்பா".

உள்ளே அவர்கள் அறைக்கு வந்த சத்யன் அசதியில் தூங்கும் மனைவியை பார்த்தான். சத்தம் செய்யாமல் மெதுவாக அவள் பக்கத்தில் படுத்து கொண்டான் . அவன் படுத்ததும் முழித்து கொண்டாள்.

"வந்து ரொம்ப நேரம் ஆச்சா. நான் இப்பதான் கண்ணு முடினேன். அசந்து தூங்கிட்டேன்".


"பரவால்ல டி கொஞ்ச நேரம் தூங்கு, பகல்ல வீட்ல வேலை நைட்ல நானும் உன்னை தூங்க விட மாட்டேங்குறேன்" .

அவன் அப்படி சொல்லவும் வெட்க பட்டுக்கொண்டே "நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க".

அவளை போகவிடாமல் தடுத்து "அதலெல்லாம்‌ பொறுமையா சாப்பிடலாம் இன்னைக்கு அப்பா அரவிந்திற்கு பைக் வாங்க பணம் கொடுத்தார். நீயும் நானும் போயிட்டு வருவோம் கிளம்பு " .

பைக் வாங்கனும்னு சொன்னதும் மகாவோ " அண்ணனுக்கு புல்லட் பிடிக்காது அதுனால splender வாங்கலாம்"

"பிரியாவுக்கும் புல்லட் பிடிக்காது". எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா பிரியாக்காக நான் வாங்கல.

" அண்ணனும் அண்ணியும் எதுல ஓத்துபோறாங்களோ இல்லையோ இதுல ஒத்து போறாங்க ". என்றாள்.

"சரி சரி வா பொழுது சாயரதுக்குள்ள திரும்பி வரனும்".


இருவரும் சாப்பிட்டுவிட்டு showroom ku சென்றனர்.

அங்கே வண்டியை தேர்வு செய்துவிட்டு அதை நாளை அரவிந்த் வீட்டு விலாசத்திற்கு அனுப்பும் படி சொல்லிவிட்டு துணி கடைக்கு சென்றனர்.

அரவிந்த் பிரியா மற்றும் பிரகாஷ் நந்தினி இருவருக்கும் துணி எடுத்துவிட்டு சத்யன் மகாவிடம் ஏதாவது சாப்பிடுறீயா என்று கேட்டான்.

"காபி மட்டும் குடிச்சிட்டு கிளம்புவோம் ".

சரி என்று இருவரும் காபி குடித்து விட்டு கிளம்பினர்.

_____________________
-----------------------

இங்கு அரவிந்த் மற்றும் பிரியா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.

கோவில் உள்ளே செல்லும்போது தான் பார்த்தான் பிரியாவின் தலையில் பூ இல்லாததை.

"நீ பூஜைக்கு தேவையானது வாங்கு நான் வரேன்". என்று அவள் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு பூ கடைக்கு சென்றான்

பிரியாவும் தேவையானதை வாங்கிவிட்டு அரவிந்திற்காக காத்திருந்தாள்.

5நிமிடம் கழித்தும் வராததால் கொஞ்சம் பயந்து எங்க போனாரு ஒன்னுமே சொல்லாமல் என்று கோவமாக இருந்தாள்.

மேலும் ஐந்து நிமிடம் காக்க வைத்து வந்தான். கோவமாக திட்ட வந்தவள் அவன் கையில் இருந்த பூவை பார்த்ததும் அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

பூவை அவளிடம் கொடுத்தான் அதை வாங்கி தலையில் வைக்க பின் இல்லாமல் வைக்கபோக அவன் ஹேர்பினும் வாங்கி வந்ததை கொடுக்கவும் மயக்கமே வந்துவிட்டது அவளுக்கு.

இருவரும் ஒருவித அமைதியான மனநிலையில் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

அங்கே அர்ச்சகர் குங்குமம் தரவும் அதை பிரியா அவன் முன்னே நீட்டவும் முதலில் புரியாமல் பார்த்தவன்‌ பின் அவள் கையில் இருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்து விட்டான் .

இருவரும் மனதளவில் தங்களை கணவன் மனைவியாக உணர்ந்தனர்.




தொடரும்..........
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends

உன்னுள் தொலைந்தேனே அத்தியாயம் 11 கொடுத்துள்ளேன்.

ரொம்ப நாள் கேப் விடவும் கொஞ்சம் சொதப்பிட்டேன். இனி ரெகுலரா யூடி தரேன்.

கேப் விட்டதால் கொஞ்சம் சின்ன‌ யூடி தான் கொடுத்திருக்கேன்.

யூடி கேட்டு மெசேஜ் பன்னவங்களுக்கு ரிப்ளே பன்ன முடியல லாக்டௌன்ல பயங்கர வேலை அதான் டைப் பன்ன முடியல சாரி பிரண்ட்ஸ் இனி ரெகுலரா வரேன்.

கதையின் கருத்துக்களை இங்கே கூறவும்👇👇👇👇👇👇👇

 
Top