ThilagamArul
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1. மனிதம்
ட்ரிங் ட்ரிங்......
பச் இது ஒன்னு வேலைக்கு நடுவுல......
ஹலோ சொல்லுப்பா....
குழந்தையோட ஆட்டோகாரர் தவறிட்டாராம் மா...
அட கடவுளே ....அப்போ குழந்தையை யார் கூட்டிகிட்டு வருவது?????
***********************************************************************************
2. அனுபவம்
என்னங்க குழந்தைக்கு உடம்புல அங்கங்கே கட்டி இருக்கு பக்கத்தில இருக்க டாக்டர் சின்ன வயசுனாலும் நல்லா பாக்குறாராம் பிளாட்ல எல்லாரும் சொல்ராங்க கொஞ்சம் போய் காமிச்சுட்டு வாரீங்களா?
சரி என்று பாப்பாவுடன் கிளம்பினேன்..அங்கே பெரிய கியூ , டோக்கன் வாங்கி 2 மணி நேரம் காத்திருந்து உள்ளே நுழைந்தேன்.
டாக்டர் குழந்தைக்கு இந்த மாதிரி சூடு கட்டி வருது கைல பெருசா இருக்கு பாருங்களேன்....
ம்ம் ....ஒரு மினி ஆபரேஷன் பண்ணி இந்த கட்டிய எடுத்துடலாம். அனெஸ்தீஸியா கொடுக்கணும், அதுக்கு ஸ்பேசியலிஸ்டு வரவைக்கணும், நம்ம கிளினிக்ல ஆபரேஷன் தியேட்டர் வசதி இல்ல அதுனால எனக்கு தெரிஞ்ச ஹாஸ்பிடல் பேசி நீங்க ஓகே சொன்ன பிறகு தேதி பிக்ஸ் பண்ணலாம். செலவு ஒரு 40 லிருந்து 50 ஆயிரம் ஆகும். சீக்கிரம் ஒரு தேதி சொல்லுங்க ரொம்ப நாள் தள்ளாதீங்க கட்டி பெருசா இருக்கு பாப்பாக்கு கஷ்டம் என்று முடித்தார் டாக்டர்.
இரண்டரை வயசு குழந்தைக்கு ஆப்பரேஷனலாம் வேணுமா டாக்டர்...மருந்து இன்ஜெக்ஷன்ல சரி பண்ண முடியாத??
எனக்கு தெரிஞ்சு இதுதான் சிம்பிள் வழி....என்று முடித்து கொண்டார்
consultation பீஸ் 200 செலுத்திவிட்டு மனவருத்தத்துடன் வீட்டிற்கு வந்தேன்.
என்னங்க உங்களுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது....ஊர்ல இருந்து போன் பாட்டிக்கு ரொம்ப உடம்பு முடியல உடனே கிளம்புங்க என்றவுடன் மற்றது மறந்து கிளம்பினோம்.
ஊரில் நாங்கள் போய் சேர்வதற்குள் பாட்டி ஓரளவு தேறிவிட்டார். சூழ்நிலை சற்று சரியானவுடன் குழந்தை ஞாபகம் வந்தது. என்ன கண்ணு பாட்டி ரொம்ப படுத்துறேனா ரொம்ப வாடி தெரியுற என்றார் பாட்டி வாஞ்சையுடன்.
அதெல்லாம் இல்ல பாட்டி பாப்பாவுக்கு சூடு கட்டி உடம்புல அங்ககங்க இருக்கு கைல கொஞ்சம் பெருசா இருக்கு அதோட வேர் எடுக்க ஆபரேஷன் பண்ண சொல்லி டாக்டர் சொல்லறாரு அதுதான் பயமா இருக்கு என்றேன்
அட இதுதானா என்பது போல பார்வை பார்த்தவர் குழந்தையை கூப்பிட்டு மஞ்சள் வேப்பிலை அரைத்து உடம்பில் போட்டு விட்டார்.
கைல இருக்குற கட்டி பெருசா இருக்கு சாயங்காலம் நம்ம 50 ரூபா டாக்டர் பாத்துட்டு வந்துடு ரொம்ப கைராசிகாரரு..இதுக்கெல்லாம் வெசனப்படாத அப்பு எல்லாம் சரி ஆகிடும்..
டாக்டர் போய் பார்க்காமல் பாட்டியிடம் தப்பிக்க முடியாது இன்னும் அம்மா அப்பாவே பாட்டி சொல் படி தான் நடக்கிறார்கள். சரி சும்மா பாத்துடுவோம் இல்ல பாட்டி கிட்ட பேச்சு வாங்க முடியாது.
என் நல்ல நேரம் டாக்டரிடம் கூட்டம் சற்றே குறைவாக இருந்தது.
டாக்டருக்கு எப்படியும் 70 வயதிற்கு மேல் இருக்கும், சாந்தமான முகம், கூரிய பார்வை, நரைத்த முடி என்று ஒரு டாக்டரின் அனைத்து லட்ஷணத்துடன் இருந்தார்.
உள்ளே நுழைத்தவுடன்...வாப்பா பாட்டி சுகமா? அப்புறம் என்ன ஆச்சு குழந்தைக்கு? என்றார்.
நானும் பிரச்சனையை கூறினேன்...உடனே பக்கத்தில் இருந்த டேபிள் மீது குழந்தையை படுக்க வைக்க சொன்னார், உதவியாளரை அழைத்து தேவையான உபகரணங்களை எடுத்து வர சொல்லி குழந்தையிடம் பேச்சு கொடுத்தார்...
பாப்பா என்ன படிக்குறீங்க??
இன்னும் ஸ்கூல் போகல என்றேன்.
சரி குழந்தையை இறுக்கி அசையாம பிடிச்சுக்கோங்க என்றார்.
ம்ம்ம் அப்போ சரி பாப்பாவுக்கு மிக்கி மௌஸ் பிடிக்குமா? டோரா பிடிக்குமா?
குழந்தை யோசித்து கொண்டிருக்கும் போதே கையை பிடித்து கட்டியை கீறி வேறை எடுத்து விட்டார், வீறிட்டு அழுத குழந்தையை அதற்கேற்றார் போல் பேசி சமாதானம் செய்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் முடித்து விட்டார், உதவியாளர் தயாராக வைத்திருந்த உபகரணங்களை வைத்து சுத்தம் செய்து கட்டு கட்டி விட்டார்.
அவ்ளோ தான் பாப்பா ஹாப்பி....டாக்டர் ஹாப்பி என்று இருவரும் ஹை பை கொடுத்து கொண்டனர்.
பீஸ் என்றேன் தயக்கமாய் 50 ரூபா கொடுப்பா என்று சந்தோசமாக திருப்தியாக வாங்கி கொண்டார்.
சரிப்பா முடிஞ்சது கிளம்பு என்றார்.

3. நம்பிக்கை
டாக்டர் சார்... குழந்தைக்கு நாலு நாளா காய்ச்சல் கை வைத்தியம் எதுவும் கேக்கல உங்க கை பட்டாலே சரி ஆகிடும் அது தான் தூக்கிட்டு வந்தேன் ...
வெள்ளந்தியாய் தாய் கூறியதை கேட்டு கொண்டே குழந்தையை பரிசோதித்து முடித்து மருந்து கொடுத்து அனுப்பினேன்.....'ஒண்ணுமில்லமா சீசன் மாறுதுல்ல அது தான்'.....சரிங்கய்யா உங்க கிட்ட வந்தா சரியாகிடும் அது இந்த ஊருக்கே தெரியுமே ...
வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவி...என்னங்க குழந்தைக்கு சின்ன மரு இருக்கு முருகருக்கு உப்பு மிளகு கொட்டினா சரி ஆகிடும் உடனே கோவிலுக்கு கிளம்புங்க...
************************************************************************
4. அக்கரை பச்சை
காலையில எழுந்து சமைத்து, குழந்தைகளை பள்ளி அனுப்பி, மூச்சு விட நேரம் இல்லாம நடுநடுவில் போன் பார்த்து (eeee இப்போ இந்த வேலையும் நமக்கு சேந்துடுச்சு ) வீட்ல அக்கடான்னு உட்கரலாம்னு பார்த்தா இன்னைக்குன்னு எங்கயோ பேங்க் போகணும் நீயும் வான்னு இம்சை (இம்சை சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க ......ரொம்ப நல்லவர் ......என் புருஷனில்ல அதனால இனிய இம்சை....)
இதோ அவரோட பைக் ல கிளம்பியாச்சு இந்த வெயில்ல பைக்ல சென்னைல போறதும் அதுல சிக்னல் ல நிக்குறது எவ்ளோ கொடுமைன்னு தமிழ் கூறும் நல்லுலகம் அறியும் மக்களே....அப்படி நிற்கும் போது ஒரு சைரன் வச்ச வண்டி அதுல ஒரு பெண் ஆஃபீஸ்ர் சும்மா கெத்தா உட்கார்ந்து இருக்காங்க.....எனக்கு ஒரே பீலிங் ஆயிடுச்சு நாமளும் ரொம்ப நல்லா படிக்கலானாலும் ஓரளவு படிச்சோம் நல்லா முயற்சி செய்து படிச்சு இருந்தா இவங்கள மாதிரி இல்லனாலும் ஒரு நல்ல வேலைல இருந்து இருக்கலாம் வாழ்க்கை இன்னும் நல்லா இருந்திருக்குமோ......ஒரே பீலிங்......
அதே நேரம் காருக்குள் இருந்த ஆஃபீஸ்ர்....இந்த மீட்டிங் டைம் ஆச்சு ஒருத்தனுக்கு அதைபத்தி கவலை இருக்காது நாம போய் ஆரம்பத்தில இருந்து இவங்களுக்கு விளக்கி இவங்களுக்கு புரிய வச்சு வேலை வாங்கி......கடவுளே ஒரு லட்சியத்தோடு படிச்சுட்டு ஏதாவது செய்யலாம்னு வேலைக்கு வந்தா..... புருஷன் குழந்தைங்க கூட நேரம் செலவிட முடியாம கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு, பேசாம படிச்சு வேலைக்கு எல்லாம் போகாம வீட்ல இருந்து புருஷன் குழந்தைன்னு பாத்துக்கிட்டு இருந்து இருக்கலாமோ . இதோ இந்த பெண் போல புருஷன் கூட பைக்ல போய் இருக்கலாமோ...வாழ்க்கை நல்லா இருந்திருக்குமோ ......ஒரே பீலிங்
************************************************
5. வசதி
என் வீடு கிரஹப்பிரவேசம்...
பங்களா மாதிரி வீடு, நீச்சல் குளம், வீட்டை சுற்றி தோட்டம், காலை நடை பயிற்சிக்கு தனி இடம், நிறைய செடிகள், பார்த்து பார்த்து கட்டிய வீடு வாழ்நாள் கனவு...
அப்பாவின் நிலம் விற்று, மனைவி குழந்தைகளை தனியே விட்டு வெளிநாடு சென்று நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சேர்த்து இன்று நிறைவேற்றி விட்டேன் எனது கனவை .....மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் .........வீட்டை சுற்றி வரும் பொழுது......என் தந்தையின் நண்பர்களின் உரையாடல்:
ஏலேய் வீடு நல்லா இருக்குல்ல....
ம்ம் நல்லா இருக்கு ஆனா யோசிச்சு பாரேன் நம்ம சின்ன வயசுல நம்ம ஊரே இந்த வீடு மாதிரி தானே இருந்தது....நமக்குன்னு சுத்தமான குளம், நம்ம கோவில், நம்ம சாமி, நம்ம நிலம், நம்ம பயிர், நம்ம வீடு , நம்ம தோட்டம், நம்ம காய்கறி, நல்ல விளையாட்டு, சுத்தி சொந்தங்கள் சந்தோஷமா இருந்தோம் .....
நம்ம குழந்தைகளை நாம தனியா நினைச்சதே இல்ல .....நிறைய நாளு நான் உன் புள்ளய வேலை வாங்கி இருக்கேன் அதுங்களும் எந்த விகல்பமும் இல்லாம நமக்கு வேலை செய்யுங்க
எல்லாமே பொதுவுல இருக்கும் நாம சந்தோஷமா பகிர்ந்துக்கிட்டோம்
இப்போ எல்லாரும் படிச்சுட்டாங்க ......எல்லாமே தனியா கேக்குறாங்க...
யாரோடையும் ஒத்து போக முடியல........
படிப்பு அப்படித்தான் இவங்களுக்கு சொல்லி கொடுக்குது போல.....நல்ல வேலை நாம படிக்கலை..
அவ்வளவு நேர மகிழ்ச்சி காணாமல் போக உண்மை நெஞ்சை சுட விக்கித்து நின்றேன்.
***********************************************************