நீங்கள் படிக்கும்போது தவறாக புரிந்துகொண்டீர்களா தெரியவில்லை ஜீன். இதில் எந்த மதத்திற்கும் எதிராக எந்த தகவல்களும் படிக்கிறப்படவில்லை என்பதை நான் கூறி கொள்ள ஆசைப்படுகிறேன். சென்டினல் தீவு மக்களிடையே மதம் பரப்ப முயன்றவர்கள் கொல்லப்பட்டார்கள். இது நடந்த உண்மை. அது தவிர, ஒரு மதத்தை அழிப்பதற்காக யுத்தம் நடப்பது இப்போது நடந்து வரும் ஒன்று. அதுமட்டுமில்லை இந்தியாவில் மதவெறி இல்லை என்று உங்களால் கூற முடியுமா. இந்த கதை மூலம் நாம் கூற வருவது ஒன்றுதான்... மதம் என்பது அவர் அவர் தனிப்பட்ட உரிமை. அதை தவறென்று ஏளனம் செய்வதும், தமது மதம் பெரிதென்று அதை பிறரிடம் திணிப்பதும் தவறு.. இந்த மதம் உள்ள நாட்டில் வேறு மதம் இருப்பது தவறு என்று சொல்வதும் மா பெரும் தவறு. என் மதமே உண்மைமதம் என்று பிறரின் மதத்தை இழிவு செய்வதும் தவறு. இங்கே நாம் பதிந்த மதம் சார்ந்த செய்திகள், நேற்று நடந்தவை, இப்போது நடனத்துக்கொண்டிருப்பவை, நாளை நடக்கப் போபவை... அந்த ஆதங்கம்தான் இந்த எழுத்தின் வெளிப்பாடு. தவிர படிக்க வரும் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எழுதிய 16 பேரிலும் எல்லா மதமும் உண்டு என்பதை உங்களுக்கு அறியத்தருகிறேன். அத்தோடு உங்கள் மனதில் பதிந்ததை தெளிவாக எடுத்துக்கூறியமைக்கு மிக மிக நன்றி... நீங்கள் எழுதியதில் தவறொன்றுமில்ல்லை. உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினீர்கள். அதற்க்கான விளக்கம்தான் இது.
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. சென்டினல் தீவு ஒரு உண்மை சம்பவம் என்பதை இந்த கதைனூடாக தான் தெரிந்துக் கொண்டேன்.