#Priyakutty_Review
கதை : மகிழ்மதியின் அரசன்
ஆத்தர் : Swathi Lakshmi Tamil Novels
துருவ் நக்ஷத்திரன் யதுவீர் சாம்ராட் /
துருவ்
நம்ம ஹீரோ...
மகிழ்மதி ஹரிகிருஷ்ணா
நம்ம ஹீரோயின்....
துருவ்...
ராஜ குடும்பத்தை சேர்ந்த பல்லாயிரம் கோடிகளுக்கு வாரிசு. யதுவீர் குரூப்ஸ்ஸோட M.D...
ஆனா மென்மையானவர், அன்பானவர், ஒழுக்கமானவர்.
இவர் கேரக்டரைசேஷன் எனக்கு ரொம்ப பிடிச்சது.
மகிழ்மதி...
தைரியமான, ஸ்டராங்கான, கெத்தான நல்ல பொண்ணு.
பிஸ்னஸ் சம்மந்தமா லீகல் அட்வைஸ் பண்ணுற லாயர்...
அவங்க attitude...
ராஜபரம்பரையை சேர்ந்த நம்ம துருவ், அரியணையில உட்கார வைக்கப்பட சின்ன வயசுல இருந்து நெறய விஷயம் கத்துக்கிட்டு அதுக்காகவே உருவாக்கப்படறாரு அவங்க அம்மாவால்...
ஆனா அவர் கம்பெனிக்கு லீகல் அட்வைஸ் பண்ண வர மகிழ் மேல காதல் வயப்படுறாரு.
இரண்டு பேரும் அழகா, ஆழமா காதலிக்குறாங்க.
இது அவர் அம்மா வசுந்தர தேவிக்கு தெரியவர, அவங்களுக்கு புடிக்கல.
ராஜ பரம்பரைய சேர்ந்த பொண்ண கட்லனா பையனுக்கு அரச பதவி கிடைக்காம போய்டும்னு
பல சதி வேலை பண்றாங்க.
எல்லாத்தையும் தாண்டி நம்ம துருவ் மகிழ் எப்படி சேரறாங்க இதுதான் மகிழ்மதியின் அரசன். ❤
ராயல் அண்ட் எலிகண்ட் பீல் படிக்குமோது கண்டிப்பா வருது...
அவங்க காதல் படிக்க ரொம்ப அழகா இருந்துச்சு dr...
❤
அவரோட "பேபி", "ஹாப்பி" என்ற அழைப்பும்...
அவங்களோட "யது", "ஹல்க்" என்ற அழைப்பும்...
மைத்ரேயி குமாரி/ ரே... துருவ்வோட கசின். அவங்களும் ஒரு bold ஆனா பொண்ணு.
அவங்க கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சது.
அபிநவ்... துருவ் P.A...
லைப்ல நெறய struggle பண்ணி ஒரு பொசிஷன்ல இருக்காரு.
நல்ல பையன். அவர் மைண்ட் வாய்ஸ்க்கு நான் பெரிய விசிறி...
❤
யவனராணி துருவ் பாட்டி (அஜ்ஜிமா),
ருக்மணி... ரே அம்மா, ஹரிகிருஷ்ணா... மிதிலா - மகிழ் parents, ருத்ரன், ஆலிவர், விக்ரம், வசுந்தரா, பலராம், யசோதா, ஹேமந்த், வேதநாயகம் மற்றும் பலர் வராங்க.
ஆத்தர்ஜியோட 1st ஸ்டோரியோட ஹீரோ, ஹீரோயின் பொண்ணுதான் நம்ம மகிழ். அந்த கதை படிக்காட்டாலும் இது புரியும்.
ஆரம்பத்துல லவ், ரொமான்ஸ்னு அழகா நகருர அவங்க காதல் வசு செய்த சாதியால என்னாச்சு? அந்தம்மா என்னலாம் வேலை பண்ணுச்சு அவங்கள பிரிக்க? இது எல்லாத்தையும் தாண்டி அவங்க சேர்ந்தங்களா?
அது எப்டினு படிச்சு தெரிஞ்சிக்கோங்க. நான் சொல்லமாட்டேன்.
சஸ்பென்ஸ் போய்டும்.
வில்லன் ரோல்க்கு நல்லா ஸ்பேஸ் கொடுத்து அவங்க பண்றத பாத்துட்டு, ஐயோ அடுத்து என்னாகுமோனு நாம பயப்படுற அளவு வெயிட்டா கொடுத்துருக்காங்க. அது நைஸ்...
கதையில கண்டிப்பா எமோஷனல் பார்ட் நம்மள கண்கலங்க வைக்கும்.
நாம எல்லாம் வசு மேடத்துக்கு அத்தனை பொங்கல் வைப்போம்.
தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை, பிரச்சனைய தாண்டி எல்லாம் சரியாகுறது எல்லாம் நிறைவா இருக்கு.
நான் விராட் பேன். சீரியஸ்ஸா கவர் பிக் பாத்து பிடிச்சி போய் 5 எபில இருந்து ongoing ல படிக்க ஆரம்பிச்சேன்.
இப்போ 91 epis மேல வந்துட்டு.
ஒரு இடத்துல கூட சலிப்பா பீல் பண்ணல. கதையை அழகா சுவரஸ்யமா நகர்த்திக் கொண்டு போயிருக்காங்க.
பாராட்டுக்கள் dr...
காதல், பாசம், நட்பு, துரோகம், வஞ்சம்னு, வலி, கண்ணீர், பிரிவு, சேர்வதுனு எல்லா உணர்வும் கொண்ட உணர்வுப்பூர்வமான பயணம்... ❤
மேலும் மேலும் பல கதை எழுதி எழுத்துலகில் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் dr...
One week தான் லிங்க் இருக்கும். எபிலாக் வரும்னு சொன்னாங்க.
அதால இப்போவே ரெவியூ போட்டுட்டேன்.
ராயல் அண்ட் எலிகண்ட்டா... ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் equal இம்போர்ட்டண்ஸ் கொடுத்து... ஒரு ரொமான்டிக் லவ் ஸ்டோரி படிக்கணும்னு நெனைக்கறவங்க கண்டிப்பா ட்ரை பண்ணுங்க drs...
❤
கதையின் லிங்க்...