ஸ்ரீகுட்டி என்ன சொல்லறதுனே தெரில..
I'm speechless....
உணர்வுகளால் பார்த்து, பேசி, காதலித்து, கோபித்து,
அழுது, பிரிந்து, அன்பு செலுத்தி, நிதானித்து, அரவணைத்து,, மன்னித்து என்று நவரசங்களையும் பேச்சின்றியே உன்னுடைய எழுத்தை கருவியாக்கி ஒற்றை திவலையை ஆழிப்பேரலையாக்கிய உன் திறமையை என்ன சொல்ல..
ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் உணர்வுகளின் உச்சம் தொட்டது மனநிறைவு.
ராணி எப்பேர்ப்பட்ட பெண் என பிரமிப்பிலாழ்த்துகிறார். எப்பேர் பட்ட துரோகம் வர்ணா செய்தது அதை எப்படி ராணி எதிர்கொள்வார் என்ற எங்கள் எதிர்பார்ப்பிற்கு சரியான தீனியாய் அமைந்தது ராணியம்மாவின் வர்ணாவுடனான பேச்சு வார்த்தைகள்..தப்பு தப்பு எங்கே பேச்சு இருந்தது..உணர்வுகளின் விளையாட்டை தவிர
விஷ்ணு வர்ணாவின் தவிப்புடன் கூடிய காதல் அட்டகாசம்.. விஷ்ணுவின் நிதானமான செயல்பாடு மனதை நிறைக்கிறது.
வர்ணா ராணியம்மாவின் பாசத்திறகும் விஷ்ணுவின் காதலுக்கும். இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் தவிப்பு நம் கண்ணில் நீர்திவலையை நிறைக்கும் வண்ணமாய் வர்ணமாய் வர்ணாவாய் நிறைத்தது.
தேவகி வேந்தன் ஈஸ்வர் வள்ளி என எல்லா கதாப்பாத்திரமும் சரியான விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வள்ளியின் கலகலப் பேச்சு கதையின் கனத்திலிருந்து சற்று மீட்டெடுப்பதாய் இருந்தது...
மொத்தத்தில் இப்படி ஒரு உணர்வுகளின் தொகுப்பாய் ஒரு கதையை செதுக்கியதிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Last but not least.
ஈஸூவ டீல்ல விட்டுட்டியேடி கல்நெஞ்சகாரி