அம்முமா...இந்த கதைய படிக்கும் பொழுது 'வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற வரிகள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருது..
சாதிக்க வயது தடையில்லை...நெஞ்சில் வைரக்கியமும் ...மனதில் தைரியமும் ...தடைகளை தவிடுபொடியாக்கும் தன்னம்பிக்கையும் இருந்தா....தடைகற்களெல்லாம் தானே படிகற்களாகுமா...ஆகுமென நிருபித்து காட்டியுள்ளாள் நாயகி..
அவள் கடந்து வந்த பாதை கலங்கி தான் போக வைக்கிறது...
ஆனால் அவளுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் கொல்லன் பட்டறை இரும்பாய் தாங்கி நின்றதால்...அழகான அற்புதமான...காண்பவர்கள் உள்ளமும் அகமும் அண்ணாந்து பார்த்து அதிசயத்து தான் போகிறது...
அவள் அதரா...அவள் குடும்பத்தினர்க்கு ஆதரவா...ஏய்த்தவர்களுக்கோ ....துச்சமாக துடைத்தயெரிய துணந்தவய்களுக்கோ தகிக்க இயலா அதரா...
அவள் செய்த தவறு தான் என்ன...
வருமைக்கு மகளாக பிறந்தது தவறா..
துயில் கொள்ளாது துஞ்சாது ...
உத்தி ஒன்றே புத்தியாய் கொண்டு...
ஏற்றமொன்றை குறியாய் கொண்டது என்தவறா...
இயற்கையின் விதியில் இதயத்தை இடற விட்டது அவள் fireகுற்றமா...
எதற்கு இந்த தண்டனை...
பணமில்லாதவர்கள் போனதால் மனமில்லாதவர்கள் செய்தது சரியாகுமா...
வீழ்வேன் நினைத்தார்களோ...
மீள் வருவேன் என்று நினத்திருக்க மாட்டார்களோ...
நான் அதரா....
அனைத்தையும் என்னுள் இட்டு பொசுக்கி ...
மேலும் மேலும் உயர உயர..
நான்கு புரமும் என் நாக்கை(வாக்கை)சுழல விடவேன் அறியாமல் விட்டாகளோ...
தணலாய் அனலாய் தகிப்பேன்...
எரிதழல் தணலாய்...என்னுள்ளே நானே புகைநதாலும் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பேன் அனைத்தையும் என்னுள் விழுங்கி...
நான் அதரா..