அருமையாக முடித்திருக்கீங்க சிஸ். வீணா தெளிந்து நெப்போலியன் ஸார்க்கு நிம்மதி அளித்து விட்டாள். புகழ் -இன்பா செல்ல சண்டைகள் அருமை. இனியனை ஜாமீனில் எடுக்கக்கூடாது குறித்து இன்பா வாயிலாக சொன்ன கருத்து அருமை. ஆதி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருந்தால் தான் நாம் அதிசயிக்க வேண்டும், அவளை தொலைத்து விட்டு அவன் பட்ட வேதனையும், வலியும், தவிப்பும் மிக அதிகமாயிற்றே. அந்த கதவில் எழுதிய வாசகம் குறித்து தீபி கேட்கையில், அதற்கு ஆதி கூறும் அனைத்தும் அவன் காதலின் ஆழத்தை தெரியப்படுத்துகிறது. புகழ் ஆதிக்கு அந்த கைகடிகாரத்தை கொடுத்து அதன் முக்கியத்துவத்தை சொல்லும் தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் நிகழ்த்தியது அருமை. இனியன் மற்றும் அமுதனின் அம்மாக்கள் அவர்களை பார்க்க மறுப்பது அருமை. இதை விட பெரிய தண்டனை வேறெதுவும் இல்லை. இரு ஜோடிகளும் மகிழ்ச்சிகரமாக தங்கள் வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள். மாறன் குறித்து பின்குறிப்பில் சொல்லியிருந்தீங்க, அவன் தன்னையே சுட்டு கொண்டது எனக்கு வருத்தமே, அவன் செய்த பாவங்களுக்கு தண்டனை இன்னும் கடுமையாக கிடைத்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். மாறன் வரலாம் என்று சொல்லி இருக்கீங்க திரும்ப வந்தால் தண்டனை கொடியதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
மிகவும் திருப்திதரும் கருத்து உங்களது
அதிலும் குறிப்பிட்டு சொன்ன இடம் , ' இன்பா புகழிடம் அந்த தண்டனை பற்றி பேசுவது ' நான் விரும்பி வைத்த வசனம்...அது கவனிக்க பட்டதில் மிக்க மகிழ்ச்சி
ஆதி என்பவன் ஆழம் என்னும் அளவு பதிந்ததில் சந்தோசம் sis
மாறனுக்கு தண்டனை இந்த கதையில கடுமையாக கொடுக்காததற்கு காரணம் ,தண்டனை தந்திருந்தால் கதை முடிந்து விட்டிருக்கும்....
கதை தாண்டிய ஆதங்கம் உங்கள் மனதில் விதைக்க விரும்பினேன்....எங்கோ என்றோ இப்படி புகழ் போல ஒருவன் பாதிக்கப்பட்டதை செய்தியில் பார்த்தால், அதனை நொடியில் கடந்து விடாது , இதற்கு பின் மாறன் என்பது போன்று யாரேனும் இருப்பார்களோ என சிந்திக்க வைக்க தான் இந்த முடிவு....
கதையில் இப்படி முடித்தது சரியா என தெரியவில்லை , ஆனால் என் சிற்றறிவு என்னை இப்படி தான் வழி நடத்தியது.....
மாறன் வரலாம் என்பது ஒரு suspense முடிவிற்கு மட்டும் தான் sis
நேரம் ஒதுக்கி இத்தனை திருத்தமான கருததுகளை பகிரும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்