Special thanks to my dear friends @J .வாசுகி &
@Varu thulasi @fathima nuhasa
i am so so happy with your friendship
Thank for being in all my ups and down mindset
இருந்தாலும் ஒரு ப்ரோமோகாக என்னைய இப்படி பயம் காட்டிருக்க கூடாது
மீ பாவம் green sand
என் நண்பர்கள் எனக்காகவும் என் கதை மாந்தர்காகவும் என்னை மிரட்டி எழுதய கதையின் பாதி பகுதி
பகுதி 1 :
விழிகள் இரண்டும் மருண்டு பயத்தை கக்க.. கைகளோ சன்னமாய் நடுங்கிட.. "யாராவது இங்கு வந்து தன்னை காப்பாற்ற வரமாட்டார்களா" என ஏங்கிக் கொண்டிருந்தாள் ஸ்ரீஷா... (அட ஆமாங்க நீங்க நினைக்குற அந்த பக்கிப்பய புள்ள தான்)
அது ஒரு பாழடைந்த காடு! அங்கு வந்து இதுவரைக்கும் யாரும் திரும்பியதாய் அவள் கேள்விப்பட்டதே இல்லை எனலாம்! இரவாக இருந்தாலும் சரி பகலாக இருந்தாலும் சரி ஒரு விதமான இருட்டு அந்த காட்டை சூழ்ந்திருக்கும்... "ஊஊஊ" என மிருகங்களின் காதைப்பிளக்கும் சத்தம்! இரவைத்தொடும் வேளையில்....
இப்போது மாலை மங்கும் நேரம்.. அவள் வயிற்றில் புளியைக்கரைத்தது...! மரங்கள் வேறு ஏதோ ராட்சத மனிதர்களாய், அவளைப்பற்றி தங்களுக்குள் பேசிச்சிரிப்பது போலொறு தோற்றம் அவளுள்! பத்தாதற்கு அந்த காட்டிற்கு பின்னால் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பழைய கட்டிடம் இருக்கிறது. ஆனால் தற்போது அது சேவையில் இல்லை. முந்தைய காலங்களில் அது சேவையில் இருக்கும் போது நடுராத்திரியில் அங்குள்ள நோயாளிகள் பல பேர் ஓடி வந்து காணாமல் போய்.. அவர்களை தேடிக்கொண்டு போனவர்களையும் காணவில்லை இன்று வரை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் போலும் அவர்களை பற்றிய விவரமும் தெரியவில்லை.....
முன்னே பின்னே செத்தா தான சுடுகாடு தெரியும் அப்டீங்குற மாதிரி அவளும் இந்த காட்டிற்குள் இப்போது தான் வந்துள்ளாள். அதுவும் வழி தவறி... (பின்னே அவளுக்கு எப்படித் தெரியும் காட்டைப்பற்றி என்று தானே யோசிக்கிரீர்கள்...??) சிறு வயதில் அவளின் பாட்டி சொல்லக்கேட்ட கதைகள் தான் இவ்வளவும்! இப்படி வந்து மாட்டிக்கொள்வோம் என நினைத்திருக்கவில்லையே...?
எங்கோ பேச்சுக்குரல்கள் கேட்பது போல இருந்தது.. ஒரு வேளை ஆவிகளாய் இருக்குமோ....?
"அய்யயோ... அதுங்க கண்ல நான் பட்டேன்... அப்றோம் நானும் ஆவியாதான் சுத்தனும். கூட துணைக்கு இந்த பாத்தி லூசயாவது கூட்டிட்டு வந்திருக்கலாம்... அது கூட சேர்ந்தாவது ஆவியா சுத்திகிட்டு இருந்து இருக்கலாம்... கடவுளே காப்பாத்துப்பா" என வேண்டிக்கொண்டாள். அவளின் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதோ என்னவோ....? நொடியில் அவள் கண்கள் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் கண்கள் மின்னியது...!
ஆம் அங்கே புகழும் ஆதியும் வந்துகொண்டிருந்தனர். இவ்வளவு நேரமாய் மரத்தோடு ஒண்டிக்கொண்டு நின்றவள்... இருவரையும் காணவும் வேகமாக ஓடினாள் அவர்களை நோக்கி....
"ஆதி...., புகழ்..., எப்படி இங்க வந்தீங்க..... ரொம்ப தேங்க்ஸ்... என்ன எப்படியாவது இங்க இருந்து கூட்டிட்டு போங்க ப்லீஸ்" என கெஞ்ச... ஒரு நொடி இருவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு.... " என்ன லந்தா" எனக்கேட்க... அப்போது தான் ஆதியின் கைகளில் இருந்த அரிவாளை கவனித்தாள் ஸ்ரீஷா....
அவன் கோவத்தையும் இருவரின் கைகளில் இருந்த அரிவாளையும் கட்டையையும் கண்டவள் நொடியில் சுதாரித்து "அடேய்ய்ய்ய்! ஏண்டா ரெண்டு பேரும் இப்டி கொலவெறி பிடிச்சி அலயுறீங்க.... உங்களால்லாம் பேமஸாக்கி விட்டதுக்கு எனக்கு இதுதான் கிப்ட்டா..." என ஓடத்தொடங்கினாள்.
அதற்கு புகழோ, "அடிங்... மரியாதையா வாய மூடிடு.... பொண்ணா இருக்கியேன்னு பார்க்கிறேன். இல்லேன்னா அசிங்கசிங்கமா திட்டுவேன். என்ன நினைச்சு இப்டில்லாம் பண்ண நீ?" என ஓடிக்கொண்டிருந்தவளின் முன்னே வந்து நிற்க... மூச்சிரைக்க மாட்டிக்கொண்டு நின்றாள்.
ஸ்ரீ, " புகழ் நீ கூட என்ன புரிஞ்சிக்கலயா? புகழ் இன்பா தான் லீட்னு சொன்னப்போ.. எல்லோரும் ஆதிய தான் கேட்டாங்க... அவன் லவ் அ தான் சிறப்பா பேசுனாங்க... அவங்க எல்லாருகிட்டயும் உனக்காக பேசி இதுவரைக்கும் நான் வைக்காத ரொமான்ஸ் பார்ட் எல்லாம் உனக்கு வைச்சேனே! என்னய போயா... அடிக்க கட்டய தூக்கிட்டு வர்ர...." என பாவமாய் கேட்டாள்.
" ஓய் என்ன சொன்ன... என்னோட பேன்ஸ் கிட்டலாம் இவனுக்காக பேசுனியா....???? என்ன தைரியம் உனக்கு? ஆமா போன கதைல தான் என்னய ஹீரோவா போடல... இதுல போடுவன்னு பார்த்தா இதுலயும் என்னய வில்லனா ஆக்கபார்க்குர? இது எல்லாத்தையும் கூட நான் மன்னிச்சுருவேன். என் தீபிய சாகடிச்சுருக்க.... இத நான் மன்னிக்கவே மாட்டேன் அவ சாக முன்னாடி இவன அவளுக்கு முத்தம் கொடுக்க வைச்சு இருக்க! இதுக்காகவே உன் மண்டைய புளக்குறேன் இரு.... டேய் புகழ் என்னடா வேடிக்கை பார்த்துட்டு நிற்கிர... அந்த கட்டைய இங்க குடுடா இப்டில்லாம் யோசிக்குற இந்த மண்டைல நாலு போட்டதான்... இது திருந்தும்...."
"என்ன ஆதி இது... கைல அருவாவ வைச்சிட்டு சின்னப்பிள்ளைத்தனமா கட்டய கேட்டுட்டு இருக்க.... ஒரே போடா போட்டு முடிச்சுடு.... இன்னியோட இது அட்டகாசம்லாம் முடிஞ்சிடும்.... தீபி எப்டியும் உயிரோட தான் இருப்பா... நாம கண்டு பிடிப்போம். முடியலயா... இவளயும் தீபிய இவ அனுப்புன இடத்துக்கே அனுப்பிடலாம்..."
இவர்களின் பேச்சைக்கேட்ட ஸ்ரீ.... "நிறுத்துங்கடா எருமைங்களா.... உங்களுக்கு மனசாட்சியே இல்லடா... அடேய் ஆதீ!! போன கதைல ஹீரோ உன் அண்ணன் தான்... ஆனா எத்தன் பேர ஆதி பிடிக்கும்னு சொல்ல வைச்சிருக்கேன். அது மட்டுமா காஞ்சி போட்ட மாதிரி விறப்பா சுத்திகிட்டு இருந்த உனக்கு... போனா போகட்டும் பாவம்னு தீபிய உனக்கு pair பன்ன்னனும்னு நினைச்சேன்... அவ லவ்ல எவ்ளோ ஜாலியா இருந்த... அதுக்கு என்னிக்காவது எனக்கு தேங்க்ஸ் சொல்லிருக்கியாடா பன்னிப்பயலே... இப்போ மட்டும் என்னய வெட்ட வர்ர... என்னடா பிரச்சனை உனக்கு.... நான் நினைக்கலன்னாலும் உனக்காக தீபிய கொண்டு வரேன்னு சொல்லிருக்கேன்ல. கொஞ்சம் கூட பொறுமையே இல்லையா உனக்கு?
எங்க அந்த இன்னொரு எரும...அடேய் போக்ஸர் பன்னாட உனக்கென்னடா கேடு... ஒண்டிக்கட்டயா திரிஞ்சிட்டு இருந்த உனக்கு இன்பான்னு ஒருத்திய கொடுத்தேன்ல.. அவள வைச்சு ஒழுங்கா குடும்பம் நடத்தாம் என்ன போட்டு தள்ள அவனுக்கு சொல்லிக்கொடுக்குறீயா?"
இங்கு இப்படி ஸ்ரீ பேசிக்கொண்டிருக்க... சிங்கப்பெண் போல் என்ட்ரி கொடுத்தாள் பாத்தி... தனியே அல்ல மனிதியுடன்...!!!
To be continued
இவர்களுடன் எனது எழுத்துகளுக்கு கருத்தளித்து என்னை எப்போதும் ஊக்குவிக்கும்
@Chitra Balaji @Sudha RK @Samvaithi007 mera sisters ,,,,,nandrigal
Thank you