//எதை நான் கேட்பின் உனையே தருவாய்!!!❣
இந்த தலைப்பில் தான் எத்தனை எத்தனை உணர்வுகள்...அர்த்தங்கள் ஏக்கங்கள் தவிப்புகள்...!!!
ஒரு எல்லையில் வரையறுக்க முடியா காதலைதான் இத்தலைப்பு உள்ளடக்கியுள்ளது ஶ்ரீ!!!//
எனக்கு இந்த பாட்டு, அதுவும் இந்த வரி ரொம்ப பிடிக்கும் அம்மு, கதைக்கு தலைப்பு யோசிக்கும் போது ,இது தான் தோணுச்சு. இப்போலாம் பாட்டு வரியை வைக்க வேண்டாம்னு யோசிச்சாலும் இந்த கதைக்கு வேற எதுவும் சரியா வராதுனு வைக்கல .
//ஒரு தலைப்பு மிகச் சரியாக கூறினால் ஒரே ஒரு வாக்கியம்...ஐந்து வார்த்தைள்..பதினைந்து சொற்கள் இவைகளை கொண்டு காதலை கூறிவிட முடியுமா என்று முன்பு கேட்டிருந்தால் கண்டிப்பா இல்லை என்று தான் சொல்லியிருப்பேன்..
ஆனால் இப்போது கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்வேன்...ஏனென்றால் உன்தலைப்பு உணர்த்தியுள்ளது....
இந்த தலைப்பில் அவ்ளோ அழகா காதலின் ஆழம் வெளிப்பட்டிருக்கு...
உண்மையா மணம் தொட்டு சொல்றேன்..என் மனசுக்கு அவ்ளோ நெருக்கமாகிருச்சு இந்த தலைப்பு....❣(தலைப்பு புராணம் போயிக்கிட்டே இருக்கும்...சரி அத உட்டுருவோம்)//
எனக்கும் மனசு நெருக்கமான தலைப்பு டா உனக்கு இத்தனை பிடித்ததில் உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் நான் ❣
//கதைக்குள் வருவோம்...
காதலோட ஆழத்தை சொல்லனும்னா அதுக்கு காதலர்கள் இடையே பெரிய பிரச்சனை இருக்கனும்...
அவர்களுக்கிடையில் பெரிய பிரிவு ஏற்பட்டிருக்கனும்.... இல்லனா கதாநாயகன் பெரிய தவறு செஞ்சிருக்கனும்...
அதை எல்லாம் மறந்து கதாநாயகி காதலை புரியவைச்சிருக்கனும்னு இருந்த கதைகளின் மத்தியில் இருந்த கருத்தை முற்றிலுமாக மாற்றி குடும்ப சூழ்நிலையோடும் நடைமுறை வாழ்க்கையோடும் ஒன்றிப்போகும் மூன்று காதல் ஜோடிகளை முன்வைத்து காதலின் ஆழத்தை மிக மிகத் தெளிவாகப் புரியவைச்சுட்ட ஶ்ரீ...அதற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்....
//
என்ன டா பேபி கதைகளின டெம்ப்ளேட் எல்லாம் சொல்லி வச்சிருக்க
எனக்கு இந்த எந்த வகையிலும கதை வராது .நான் இன்னும் வளரலையோ மிக்க நன்றி டா ❣
//மூன்று ஜோடிகள்
மூன்று வேறு மாதிரியான காதல்கள்..
மூன்று வகையான உணர்வுகள்...
இத்தனையும் வேறுப்படுத்தியாகனும் ஒரு இடத்தில் சரிக்கினாலும் ஒன்றுபோல் தெரிந்துவிடும்...
ஆனா அந்த மாதிரியான உணர்வு ஒரு இடத்துல கூட எங்களுக்கு வரல..
காரணம் உன்னோட வார்த்தை உபயோகம்...//
இது நிஜம் .prefinal போடும் போது ,போச்சு அதோட கதை காலி nu Kai nadungi போச்சு
நல்லவேளை எனக்கு பிடிச்ச மாதிரி எல்லாருக்கு பிடிச்சிருக்கு சொல்லிட்டாங்க
இதை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி டா
//உண்மையாலுமே மிகப்பெரிய வியப்புதான்...
உன்னோட இந்த திறமையை பார்த்து...
என்னமாதிரியான வார்த்தை உபயோகம்!!!!!....
அப்படியே கதைக்குள்ள எங்களை இழத்து வேறு ஒரு உலகத்திற்கு எடுத்து சென்றுச்சுனுதான் சொல்லனும்.....//
அப்படியா சொல்ற ! நம்மகிட்ட இருக்கா ? Ryt ryt அடுத்து பேய் கதை எழுதி உங்களை உள்ள கூட்டிட்டு போறேன்..
These things apart..my lines are just of words.it's become an emotion only with your way of understanding and appreciation
//சில கதைகளில்தான் நாம் கதாபாத்திரமாகவே மாறுவோம்....இந்த கதையை படித்த அனைவருமே....கண்டிப்பாக மாறியிருப்பாங்க..
(கல்யாண் ஜூவல்லரி ஆட்ல கூட வருமே... கல்யாணில் நான் அம்மாவா மாறினேன் அப்படினு....அதே மாதிரிதான் நாங்களும் உன்கதையில் கதை மாந்தர்களாயினோம்)//
எனக்கும் கதை எழுதும் போது ,ஒவ்வொரு இடத்தில இதுக்கு நீங்க எப்படி react பண்ணுவீங்க என்று இருக்கும் அதிலையும் samyu baby scenes எழுதும் போது, பாவம் அவங்களை மட்டும் kashtapaduthuroam nu sogamaa irukku.antha அளவு நீங்க தான் character nu fix aagitu
//இடைஇடையே உன்னோட கவிதைகள் மனதை
குழுமைப்படுத்திய குளிரூட்டிகள்...
இதப்படித்திய இதமூட்டிகள்....
செம்மைபடுத்திய செம்மையூட்டிகள்...
சிலிர்க்கவைத்த சிலிர்ப்பூட்டிகள்....
கதையோடு ஒன்றிப்போகுக மற்றொரு காரணம் உன் கவிதையாடல்களே!!!!❣ //
டேய் அம்மு...! செம்மயா எழுதியிருக்க..
குளிரூட்டி கள், இதமூட்டிகள், செம்மையூட் டிகள் ,சிலிர்ப்பூட்டிகள்
Pinradaaa
//கதைகளின் கதாபாத்திரம் யாவுமே வாழ்வியல் கருத்துக்களை எடுத்துக்கூறி இல்லற பாடங்களை இன்பமாக எங்களுள் புகுத்தின...
சூழ்நிலைச் சார்ந்த பாடங்களையும் பல சூழல்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாக தெளிவுப்படுத்தின....இதற்கு மிகப்பெரிய நன்றி ஶ்ரீ...!!!!!
//
எனக்கும் இந்த சப்ஜெக்ட் புதுசு தான் அம்மு..இப்படி குடும்ப கதை எழுதியது இதான் டா முதல் முறை.உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி
//அன்புக்காதலனாக விக்ரமும்,
அழுத்தக்காதலனாக கௌதமும்,
ஆர்ப்பரிக்கும்காதலனாக கார்த்திக்கும்,//
எனக்கு என்னமோ நீ ரைடர் ஆக poranu தோணுது
வார்த்தை உபயோகிப்பு அருமை டா
//அக்கறை காதலின் குவியலாக அதிதியும்,
உணர்வு காதலின் குவியலாக உதயாவும்,
குறும்பு காதலின் குவியலாக சைத்துவும்,//
Perfect and I am filled ❣
//தனித்தனியாக மனம்கவர்ந்தவர்களாயினும்
அன்பு-அக்கறை
அழுத்தம்-உணர்வு
ஆர்ப்பரிப்பு-குறும்பு
தம்பதிகளாக மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டனர்...//
Wowwwwwwww...u r awesome da .perfect matching
//அதிலும் கார்த்திகை சைத்துவ ரொம்ப பிடிச்சுபோச்சு....சைத்து உபயோகிக்கும் நிறைய வார்த்தைகள் நான் உபயோகிச்சது...பல இடங்களில் சைத்து என்னோட பிரிதிபலிப்பா தெரிஞ்சா ஶ்ரீ...
முதல் டீஸர்லையே கண்டுபிடிச்சுட்டேன்...
அதான் அப்படியே நைசா நான் சைத்து ஆகிட்டேன்
//
அடிப்பாவி நீ சும்மா தான் எல்லாருக்கும் சொல்லி, அது அவங்களுக்கு பொருந்தி போச்சுன்னு நினைசோம்..செம்ம நீங்க சைத்து வா ? கார்த்திக் மாதிரி பையன் வந்தா அடிதடி தான்
//மூன்று ஜோடிகளை தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களும் அருமை....//
நன்றியோ நன்றி டா❣❣
//இப்படியொரு கதை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி......ஶ்ரீ
இந்த கதை கண்டிப்பா உன்னோட மைல்கல்லா அமைச்சிருக்குனு நினைக்கிறேன்....//
கண்டிப்பா டா..உங்க எல்லா ரோட அன்பு தான் என்னை வழி நடத்தியது
//முழுமையா பயணிக்க முடியல அதுக்கு ரொம்ப சாரி ஶ்ரீ மா......//
Its ok da..work first
//உன் மேல எதிர்பார்ப்புகள் ரொம்ப ஜாஸ்தியாகிருச்சு.....
அதை நீ கண்டிப்பா நூறு சதவீதம் பூர்த்தி செய்வ அதில் எந்த சந்தேகமும் இல்ல....
அடுத்தடுத்த கதைகளுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
//
நன்றி டா பேபி..நிறைய மன தடைகள், அழுததங்கள் உடன் எழுதிய கதை..இதை சரியா செஞ்சீன் என்றால் உங்களது அன்பு மட்டுமே காரணம்..நன்றி
//எதை நான் கேட்பின் உனையே தருவாய்!!!
எதில் நான் தொலைந்தால் நீயே வருவாய்!!!
எதில் நான் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்!!!
எதை நீ கேட்டாலும் அன்பையே கொடுப்போம்!!!!❣❣//
செம்ம செம்ம..
அருமையான விமர்சனம்.
நிஜமா கதையின் தலைப்பு யாருக்கும் புரியலனு பயந்துட்டேன்..
உன்னோட தெளிவில் நான் ஹாப்பி..
அப்புறம் உன்னோட மொழி நடை அவளோ அருமை..
விரைவில் கதை எழுதவும்
Thank youuuuuuu so much ammukutty ❣