கெளதம் இப்போது தான் பேசி முடித்தேன் என்றவுடன் கார்த்தி, என்ன 2மணிநேரமா
இதுவே விக்ரமாக இருந்தால் 5நிமிடத்தில் காலில் விழுந்து பேசியிருப்பான் ( அவங்க இந்த மாதிரி மனம் திறந்து பேசாதது தான் பிரச்னைக்கே காரணம் கார்த்தி, அது தெரியாம நீ வேற
) என சொன்னவுடன் விக்ரம் உதயாவின் பொருட்டு அவனை அடக்குவது அருமை
அவர்கள் இருவரின் பிணக்கு அனைவரும் அறிவர் என்றும், திட்டம் வகுத்து தான் தன்னை அழைத்து வந்திருக்க்கிறார்கள் என்றும் அறிந்தவுடன் கண் கலங்கி விடுகிறாள் உதி . ஆனால் இப்போது அவள் உணர்வுகளை கெளதம் சரியாக படித்து அவளுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கிறான். தன் இயல்பு குறித்தும், அவளின்றி அவனில்லை என்பதையும் தெள்ள தெளிவாக அவளுக்கு உணர்த்துகிறான்
( அவளின் எதிர்பார்ப்பும் இது தானே )
மன்னிப்பில் தொடங்கி அவள் உணர்வுகள் ஒவ்வொன்றையும் சொல்ல தெரியலை, சொல்ல முடியலை என்றே அனைத்தையும் அவனுக்கு அழகாக உணர்த்திவிட்டாள்
அவனை விலகி அவளாலும் இருக்க முடியாது என அவனுக்கும் தெளிவுபடுத்தி விட்டாள்.முதன் முதலில் அவன் வாங்கிக்கொடுத்த அலைபேசி அவனுடைய ப்ரத்யேக பரிசு என்று அறிந்தவுடன் அவளின் கலக்கம் முற்றிலும் நீங்கிவிட்டது. (அவளின் பிரச்சனையின் தொடக்கமே அதிலிருந்து தானே) இத்தனை நாள் பேசாததற்கெல்லாம் சேர்த்து வைத்து இருவரும் மனம் விட்டு பேசி தாங்கள் தொலைத்த இனிமையான நிமிடங்களை மீட்டெடுத்து விட்டார்கள்
என்னைக்காவது நான் உன் மௌனத்தை படிக்கணும் கெளதம், உன்னை முழுசா எனக்கு மட்டும் புரியனும். அப்போ தான் உனக்கான என் காதல் உட்சம் பெறும்
அற்புதமான வரிகள்அதே போல் அவள் மனமோ, அவனில் துவங்கி, அவனில் கலந்து, அவனாக மட்டுமே மாறி போயிருந்தது
வீட்டு பத்திரத்தை நம் ஆதியிடமிருந்து மீட்கும் போது தம்பிகளுடன் இணைந்து விக்ரம் வாங்க நினைப்பது அவர்களின் ஒற்றுமையும், பாசத்தையும் காட்டுகிறது
தந்தையின் கைப்பிடித்து உள்ளே சென்ற வீடு, ஒரே நாளில் தந்தையும் தூக்கி தந்து, வீட்டையும் தூக்கி தந்த நிமிடங்கள்
ஹப்பா இந்த வரிகளில் தான் எத்தனை வலிகளும் வேதனைகளும் உள்ளடகங்கியிருக்கிறது அவன் உணர்வுகளை மிக ஆழமாகவும் அற்புதமாகவும் சொல்லிட்டீங்க சிஸ்
அவர்களின் திருமணநாளன்றே அவர்கள் கூடு சேர்ந்தது அருமை மொட்டை மாடியில் அனைவரும் சேர்ந்து உண்பது
நமக்கே நமக்கான இடத்தில், நம்முடைய உயிரில் கலந்த உறவுகளுடன் உயிர்ப்பாய் வாழ்வது சுகமல்லவா?
ஆம் சுகம் தான்.
செழியன் கல்லூரியை கொடுக்க முன்வந்தும் இவர்கள் அதை வாங்க மறுத்தது 'ஜோ' பிரிவு அவள் தந்தையின் பாவத்திற்கு கிடைத்த தண்டனை. அவளின் நல்ல மனதிற்கு அவள் ஏதோ ஒரு இடத்தில் நன்றாக இருப்பாள் என நம்புவோம்.
சைத்து ஆசைப்பட்டு கார்த்தி செய்யாமல் இருப்பானா? அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியை குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்து, அவரின் ஆசிப்பெற்ற அவர்களுக்கு இனி என்றும் இன்பம் தான்
எதை நான் கேட்பின் - எனில்
அன்பையே கேளுங்கள் !
அன்பால் வெல்வோம்
என எங்கள் அனைவரையும் அன்பால் இணைத்து, அன்பால் நிறைத்து அற்புதமாக முடித்திருக்கீங்க சிஸ்
நிறைவான நிறைவு பகுதி