All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
சென்ற பதிவில், தந்தையின் ஈமக்காரியத்தை முடித்து அவர் உடலை எடுத்து செல்லும் போது கார்த்தியின் கதறலும், அவனை தாங்கி பிடித்த அண்ணன்கள் என தனயன்கள் மூவரும் கட்டியணைத்து ஒருவருக்ககொருவர் ஆறுதல் போல் அணைத்து நின்ற காட்சியை கண்டு அவர் உடல் பிரிவது போல் காட்டியது 😭😭 அவர்கள் உணர்வுகளை அப்படியே உங்கள் வரிகள் நமக்கு கடத்திவிட்டது. அடுத்த தின பிரிவை எண்ணி அவர்கள் வருந்துவது அதனுடன் சேர்த்து இந்த அதிபுத்திசாலியான சைத்து தானும் வருந்தி கார்த்தியையும் வருத்துவதென ஒரே சோகம் தான் 😔😔 போங்க சிஸ் 😔ஒரே ஆறுதல் நம் ஆதி அவர்களுக்கு உதவுவது. இணைப்பு தகவல் வழக்கம் போல் அருமையாக இருந்தது சிஸ் 😍.


பிரிவு துயர் அக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் வாட்டி வதைக்கிறது. அதிதி விக்ரமிற்கு ஆறுதல் சொல்ல போய் பின் அவனிடமே அவள் ஆறுதல் தேடியது தான் விந்தை இங்கே 😍
" கொள்ளையிட்ட அழகை தன் மேனி முழுதும் பூசிக்கொண்ட நீலநிறத்தழகி, தனதழகை
இன்னும் மினுக்க செய்ய, சிமிட்டும் நட்சத்திரங்களை தன்னில் பதித்துக் கொண்டவளின் கர்வம் "
மிக அழகான வர்ணனை 👌😍
வெறுமையான மனநிலையில் உதயா இருக்கிறாள். முதன்முறையாக தன் தயக்கம் துறந்து நேரிடையாகவே அவனிடம் கேட்டுவிட்டாள். ஆனால் பதில் உரைத்தவனோ ஏற்கனவே குழம்பிய குட்டையாக இருந்த அவள் மனதில், பதில் என்ற பேரில் எதிர்கேள்வி கேட்டு இன்னும் குழப்பி விட்டுவிட்டான் 🙄🙄 அவளுக்கு எந்த கவலையும் வேண்டாமென நினைப்பவன் அறிந்திருக்கவில்லை அவள் கவலையே அவன் மனம்விட்டு பேசாதது தான் என்பது....
என்னை பிடிவாத காதல்
செய்யடி பெண்ணே !!
உன் காதலின் சுவாசத்தில்
நொடி நொடியும் புதிதாய்
உயிர்த்தெழுந்து காதல் மோட்சம் பெறுகிறேன் !!!
👌👌 அருமையான வரிகள் 😍😍

சைத்து சைத்து..... அலைபேசியை பார்த்திருந்த நேரத்தில் அவனுக்கு அழைத்திருக்கலாம் அல்லவா !! ஆனால் கார்த்தி அப்படியில்லை தோன்றியவுடன் அழைத்து விட்டான். அதுக்கும் அவனுக்கு திட்டு தான். வருகிறாயா என்று கேட்டு இவள் பதில் சொல்ல தாமதித்ததால் அவளுக்கு விருப்பம் இல்லை என நினைத்து வைத்துவிட்டான். ஆனால் சைத்து அவன் கேட்ட விதத்தில் மனம் கேளாமல் உடனே புறப்பட்டு விட்டாள் 👌😍 அதிதி..... நீங்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருந்தால் மட்டும் தான் சைத்து தொந்தரவு செய்வாளா, எங்கிருந்தாலும் கார்த்தி - சைத்து அவர்கள் வேலையை ( தொந்தரவு ) சரியாக செய்வார்கள் 😜😜 அலைபேசியில் வருத்தம் தோய்ந்த குரலில் பேசிவிட்டு இப்போது இவர்கள் வீட்டிற்குள் நுழைந்தது கூட தெரியாமல் தூங்கும் கார்த்திஈஈஈஈ...... நமக்கே கோவம் வரும்போது சைத்துக்கு வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம். இதுல நடுஇரவில் எழுந்து ஆவி என்று அலறல் வேற.......😂🤣 பசி என்றவுடன் இரவு சாப்பிடாமல் உறங்கிவிட்டானோ என நினைத்தால்.. விழித்ததால் வந்த பசியாம் 😅😅 அவன் தாயின் இழப்பை பார்த்ததால் தான் பழைய வீட்டிற்கு செல்லவில்லை என சொல்லும் போது ஒரு தாய் போல அவள் ஆறுதல் படுத்தும் அடுத்த நொடியே திரும்ப பசி வந்து படுத்துகிறது....... அப்போதும் அவனை தாய் போல தான் கைபிடித்து அழைத்து செல்கிறாள். கார்த்தி - சைத்து சண்டை பிடித்துக்கொண்டாலும் அருகருகில் இருந்தால் தான் பதிவே களைகட்டுகிறது. தயவு செய்து சென்ற பதிவை போல் அவர்களை பிரித்து வைக்காதீர்கள் சிஸ்.... அவர்கள் இருவரின் காட்சி வருவதற்கு முன் 😔🙄😔😔 வந்த பின் 🤣🤣🤣 🤣🤣🤣🤣🤣🤣
 
Top