அழகான தலைப்பு. அருமையான நகைச்சுவை உணர்வு கலந்த ஒரு கதை. சித் ஆளுமை, வீரம் மற்றும் துணிவு அதிரடி முடிவு என ஆரம்பமே அட்டகாசம் . சித்தாரங்கா அழகு, அன்பு மற்றும் குறும்புதனத்துடன் கூடிய கலாட்டா அழகு. பாட்டி, தாத்தா மற்றும் மில்கி, கழுதைப்பையா ஜோடிகளின் காதல், கலாட்டா ரொம்ப அருமை. கதை ஆரம்பித்தலிருந்து முடியும் வரை என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சில இடங்களில் மனம் வலிக்க செய்கின்றது. கஸ்தூரி தாயாக இருந்தும் சித்திற்கும் செய்த கொடும் செயலால் காலம் பூராகவும் அவன் நினைவுகளை இழந்து தவிப்பதும், அதனால் அவன் படும் வேதனைகளும், மன வருத்தங்களும், கஸ்தூரி
மனைவியாக ராகவனுக்கு செய்த துரோகம் என வரும் பகுதிகள் அழுத்தமானது. மில்கியின் காதல், குறும்பு மற்றும் கலாட்டா அனைத்தும் சித்தை மிசினின் உதவி இல்லாமல் வாழ வழிவகுப்பதும் போல அமைந்த நிலை அழகு. கதையின் முடிவு மன நிறைவாக உள்ளது. ஒவ்வொரு பாத்திர படைப்பையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்