S J
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear Kannamma" ஒன்றுபட்ட இதயமே - 11 "< உருக்குகிறேன் பேர்வழி என்று உருவேற்றிக் கொண்டிருந்தான் ராஜன்>
வாடி வதங்கிய மலரை மீட்டெடுக்க, பாடலில் மலரை அழைத்தவன்; உண்மையில் அவன் வாழ்வை மீட்டெடுத்தானா? என்பது தெரியவில்லை.
ஆனால், இளைப்பாற கொடுக்கப்பட்ட இடைவெளியில் இளம் தென்றலாய் வீசிய கானத்தில் லயித்து, சோர்வு நீங்கி புதித்தாய் பூத்த மலர் போல் மலர்ந்த முகத்தோடு விகசித்தாள் மங்கையவள். (யம்மா நீ அப்படி கொஞ்சம் இப்படி கொஞ்சம் இருந்தாலும், பயபுள்ளைய கம்ப்ளீட்டா டீல்ல விடமாட்டனு தெரிது, ஏதோ பார்த்து போட்டு செஞ்சி கொடுமா).
தன்னவள் முகத்தில் புத்துணர்ச்சியை கண்டவன் 'தனக்கு தானே தோள் தட்டி சபாஷ்' போட்டுக் கொண்டான். (அப்பு பாதி கிணறு இல்ல ஜஸ்ட் கால தான் எடுத்து வெச்சி முத அடி வச்சிருக்க, பயணம் தெடங்கவே இல்ல அதுக்குள்ள சபாஷா)
அவளால் இன்னும் கொஞ்ச நேரம் தாக்கு பிடிக்க முடியும் என்று தெரிந்தவன் அவளை பார்த்து சம்மதம் கேட்க அவளும் அவனின் நிலை உணர்ந்து துரிதமாய் தன்னை நிலைபடுத்திக் கொண்டாள்.
எல்லாம் சரி என்று உறுதி படுத்திக் கொண்டு வரவேற்பு மேடையை அடைந்த ராஜன், மீதி நிகழ்வை கேலியும் கிண்டலுமாய் கழித்து ஒரு வழியாய் முடிவை நெருங்கினர். (அப்புடியே விட்டுட்டா விதின்னு ஒன்னு நான் இருந்து என்ன பிரயோஜனம் களம் இறங்கியது).
வசந்த், சரவணன், அரசி, ரட்சன்யாவுடன் சேர்ந்து சில இளவட்டங்கள் அவர்களை வம்பிழுக்க திணறி தான் போயினர். கடைசியாக "மாமா நீங்க பாடி கலக்கிட்டீங்க, இப்போ நீங்களும் உங்க கிழத்தியும் சேர்ந்து சில அசைவுகளை செய்தால் நாங்கள் சந்தோஷப் படுவோம்" என்றது மட்டும் அல்லாமல் தன் அல்லக் கைகளை ஜைஞ்ஜப் அடிக்க "ஆமா தானே செல்லங்களா" எனவும்,
அவர்களும் தாளம் தப்பாமல், "ஆமா ஆமா" என்று கோரஸ் போட்டனர்.
அப்பொழுதும் முழித்து கொண்டு இருந்த ராஜனையும் ராணியையும் பார்த்து விட்டேனா கேளு என்று
"மாமா, மாமா"
"ராஜா, ராஜா"
"ராணி, ராணி" என்று உந்துதல் அளிக்க தொடங்கினர்.
ராஜனுக்கு என்ன கசக்கவா போகுது, ஆனா களத்துல கால வெச்சிட்டு ராணி வரல-னா??? அந்த தவிப்பிலையே அடக்கி வாசித்தான்.
மற்றவர்களின் உந்துதலில் தன் வருத்தத்தை தள்ளி வைத்தவள், தயங்கினாலும் விருப்பமின்மையை தவிர்த்து இணக்கமான அசைவில் தன் சம்மதம் தெரிவிக்க, இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டான் ராஜன்
"மச்சான் உன் காட்டுல மழைதான்" என்று காது கடித்தான் வசந்த்
அதில் கனவில் மிதக்க தொடங்கியவனின் கரங்களை பிடித்து "ராசா நீ ட்ரீம்-ல சாங்க்கு போயிட்டு வரர்துக்குள்ள இங்க உன் ராணி நிஜத்துல ஆட வரமாட்டாப்பா, எப்படி வசதி" எனவும் அவசர அவசரமா ட்ரீம் சாங்க கேன்சல் பண்ணிட்டு நிஜத்துல டான்ஸ் ஆட தயார் ஆனான்.
" அன்பில் அவன் "
பாடல் தொடங்கவும் வரிகளை உணர்ந்து ஆடினான் ராஜன் என்றால் ராணியின் துக்கத்தை கிளப்பி விட்டது அதே வரிகள்தான் என்றால் அது மிகையல்ல.
அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே
உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே
நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே
நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று எங்கு அதை பயின்றோம்
பூமீ வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு
நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே
காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே
ஆடிக் கொண்டிருந்தவள் ஆடும் மும்முரத்தில் தன் மனத் தாங்கல்களை மறந்து சுழன்றாட பாடலின் முடிவில் அவன் அவளை தாங்கி பிடிக்க ஒற்றைக் காலை தரையில் ஊன்றி மறு காலை மூட்டில் மடக்கி உடலை சாய் கோபுரமாய் சாய்த்து கண்களில் கவிநயம் பேசியவளை அவன் கைகளில் சரித்து தானும் அவளின் ஆழ்மனதில் குடிகொண்டிருப்பவனை மீட்டெடுப்பேன் எனும் விதம் கண்ணோடு கண் பேசி உறைந்தனர். (உங்களுக்கு உங்க உலகம் ஃப்ரீஸ் ஆயிருச்சுங்கிறதுக்காக எங்களுக்கு எல்லாமுமா ஃப்ரீஸ் ஆகும் உங்க ஃபிலீம ஓட்டுனது போதுஉம், கல்யாணத்துக்கு வந்தவங்கள ஒரு வாய் சாப்பிட்டியானு கேக்க நாதியில்ல, கல்யாணமாம் கல்யாணம். ஒரு பிடி சோறுண்டா, தம்மா துண்டு லெக் ஃபீஸ் உண்டா, அதவிடுங்க சார், ஒரு ஸ்வீட், ஐஸ்கீரீம், ஹும்ஹூம் இவங்க படத்த மட்டுமே ஓட்டிட்டு வெறும் வயத்தோடயே அனுப்பிச்சுடுவாங்க போல).
ஆடிக் களைத்தவர், ஓட்டி சளைத்தவர்கள், கடமை முடித்தவர்கள் என அனைவரும் உணவு உண்ண செல்ல (அப்பா சோறு போடுறாய்ங்க).
பஃப்ஃபேயில் பிடித்தவையை எடுத்துக் கொண்டு தம்பதியராய் அமர்ந்த ராஜனுக்கும் ராணிக்கும் அடுத்து வந்த சோதனை அன்பு பறிமாறல்கள். ஆம் அன்பானவர்கள் அன்பை பொழிந்து விட்டு விலக மேசையில் வைத்திருந்த தட்டில் இருந்த பலகாரம், உணவு வகைகளை பார்த்து மலைத்து விட்டாள். விரும்பி அவளே எடுத்தவை தான் ஆனாலும் வேண்டாம் என்று தடுத்தும் அன்பில் அவரவர் வந்து ஒரு வாய் ஒரு வாய் தான் என ஊட்டி விட அன்பு பறிமாறலிலேயே வயிறு நிறைந்தவளின் தட்டில் எடுத்து வந்தது எப்படியோ அப்படியே இருந்தது. அவர்களின் அன்பை குறை கூற முடியாது தான்; ஆனால் அதே சமயம் அவள் வயிற்றில் கொள்ளும் அளவு தானே அவள் சாப்பிட முடியும். வேண்டாம் என்றால் விட்டுவிட்டும் சென்று விடலாம், ஆனால் அதிலும் ஒரு சிக்கல் (யம்மா நீ எனக்கு விக்கல் வர வைக்காம விடமாட்ட போலயே).
அன்றைய தினத்தின் ஃபோக்கஸே அவர்கள் தான் எனும் போது அரங்கின் அத்தனை பேருடைய பார்வையும் அவர்கள் இருவர் பேரில் தான் நிலைத்திருக்கிறது. தட்டில் எடுத்ததை சாப்பிடவே இல்லை என்றால்? எனவே என்ன செய்வது என்று தெரியாமல் முழி முழி என முழித்துக் கொண்டு செய்வதறியாமல் கொறித்து கொண்டிருந்தவள், சூழ்ந்திருந்தோரின் கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டே பிடி சோறு உண்க ருசி வேறுபாட்டில் தட்டை பார்த்தாள். அதுவோ காலிதட்டாக மட்டுமே இருந்தது. என்ன மாயமடா இது என திகைத்து திரும்ப, அருகிலிருந்தவன் தன் தட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்தவள் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி படுத்திக் கொண்டு அவன் புறம் சாய்ந்து “ அது என்னோட தட்டு” என்று ரகசியம் பேசினாள் ராஜனின் காதில்.
கேட்டவனோ "ஆம்" என்னும் விதமாக தலை ஆட்ட
அதில் கண்களில் குளம் கட்டி நின்ற விழி நீரை உள்ளடக்கி "அது இந்த குட்டச்சியின் எச்சில், உங்களுக்கு தான் வாந்தி வந்திடுமே, சோ கொட்டிட்டுங்க" என்று வார்த்தையை கொட்டி விட்டு விறுவிறுவென எழுந்து சென்றுவிட்டாள்.(இப்ப என்னம்மா ஆச்சி).
என்னில் நீயடி உன்னில் நானடி
இரண்டற கலந்தவர்கள் நீ நான் என்னும் நாமடி
அதில் எப்படி உந்தன் மிச்சம் எனக்கு எச்சம் ஆகும்…
ஒன்றுபடும்.....
What happened you are sad??